அறிவியல் மன்றத் தலைவராக மணவை முஸ்தபா நியமனம்
சென்னை, செப். 11: அறிவியல் தமிழ் மன்றத் தலைவராக மணவை முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை முதலமைச்சர் கருணாநிதி, செய்திக் குறிப்பொன்றில் வெளியிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
“”அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகள் பலரால் பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை அனைத்தையும் ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் அறிவியல் தமிழ் மன்றம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக மணவை முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். பிற உறுப்பினர்கள் விவரம்:
- பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியம் –துணைத் தலைவர்;
- ஆர். கற்பூர சுந்தர பாண்டியன் (தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர்) -உறுப்பினர் செயலர்.
உறுப்பினர்கள்:
- கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன்,
- மு. மேத்தா,
- பேராசிரியர் சுப. வீரபாண்டியன்,
- டாக்டர் காந்தராஜ்,
- சாரதா நம்பி ஆரூரன்,
- டாக்டர் சாமுவேல் ரைட்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.