புதுச்சேரி ஹோட்டல்களில் நடன நிகழ்ச்சி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை, அக்.13: புதுச்சேரி ஹோட்டல்களில் நடன நிகழ்ச்சியை நடத்த லைசன்ஸ் வழங்கலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
சில ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்டிருந்த லைசன்ûஸ புதுச்சேரி அரசு புதுப்பிக்க மறுத்துவிட்டது. புதிய லைசன்ஸ் கேட்போரின் விண்ணப்பத்தையும் நிராகரித்துவிட்டது.
இதை எதிர்த்து ஹோட்டல் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.
புதுச்சேரி அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதை எதிர்த்து புதுச்சேரி அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது. நீதிபதிகள் பி.சதாசிவம், எஸ்.மணிகுமார் ஆகியோர் இந்த அப்பீல் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
தீர்ப்பு விவரம்:
பாரம்பரிய நடனம் உள்பட இந்திய நடன நிகழ்ச்சிகளை முழுவதுமாக தடை செய்வது சட்ட விரோதம். அரசமைப்புச் சட்டத்தின் 19 (1) பிரிவுக்கு இது எதிரானது. அதே நேரத்தில் நடன நிகழ்ச்சிகள் ஆபாசமானதாக இருந்தால் அதை போலீஸôர் அனுமதிக்கக் கூடாது.
ஒரு சில இடங்களில் ஆபாச நடனம் நடத்தப்பட்டதால், அனைத்து நடன நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கக் கூடாது. இது போன்று தடை விதிக்க சட்டம் இயற்றப்படாத நிலையில், அதிகாரிகளே இத்தகைய உத்தரவை பிறப்பிக்க முடியாது. நடன நிகழ்ச்சி நடத்தும் லைசன்ûஸ யாராவது தவறாக பயன்படுத்தினால் அந்த லைசன்ûஸ போலீஸôர் ரத்து செய்யலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.