புதிய கோளுக்கு பெயர் சூட்டப்பட்டது
![]() |
![]() |
புதிய கிரகம் |
சூரிய மண்டலத்தின் புதிய கோள் ஒன்றுக்கு சண்டைக்களுக்கான கிரேக்க பெண் தெய்வமான இரிஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகளால் கடந்த ஆண்டு முதன் முதலாக இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்ட நாள் தொடக்கம், உலக வானியல் நிபுணர்கள், தமக்குள் சண்டையிட்டு, விவாதங்களில், கோள்கள் என்றால் அதில் என்னென்ன இடம்பெற்று இருக்க வேண்டும் என்று விவாதித்தனர்.
இரிஸ் புளூட்டோ வினை விடப் பெரியது, ஆதலால் இவை இரண்டையும் கோள் என அழைப்பதா அல்லது கோள்களே அல்ல என முடிவெடுப்பதா என விஞ்ஞானிகள் குழப்பம் அடைந்து இருந்தனர்.
இறுதியில், இரண்டையுமே “குள்ளக் கிரகங்கள்”என்று விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர்.