Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Memoirs’ Category

Parimalam – Adopted son of late TN CM Arinjar Annadurai: Ira Sezhiyan

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

பரிமளத்தைப் பறிகொடுத்தோம்

இரா. செழியன்

அறிஞர் அண்ணாவின் மகன் பரிமளம் திடீரென மறைந்தது என்னைப் போன்றோர்க்கு சோகம் மிக்க தாங்கொணாத அதிர்ச்சியைத் தந்துள்ளது.

1944இல் அண்ணாவுடன் நான் முதலில் காஞ்சிபுரம் சென்றபொழுது பரிமளம் மூன்று வயதுச் சிறுவனாக இருந்தான். அவனுடைய தம்பிமார்களாக இளங்கோவன், கௌதமன், பாபு ஆகியோர் இருந்தனர். பரிமளம் அண்ணாவினாலும், எங்களாலும் “பரி’ என்று அன்புடன் அழைக்கப்பட்டான். உற்சாகமான, பொறுப்புள்ள மகனாக, மாணவனாக, பிறகு மருத்துவராக பரிமளம் வளர்ந்தான். அண்ணா ஈடுபடும் ஒவ்வொரு காரியத்திலும், “திராவிட நாடு’ இதழாக இருந்தாலும், நூல் வெளியீடாக இருந்தாலும், அண்ணாவின் நாடகமாக இருந்தாலும், ஒவ்வொன்றிலும் பரிமளத்தின் பங்கு இல்லாமல் போகாது.

மலேசியா, சிங்கப்பூர், கிழக்கு நாடுகளுக்கு அண்ணாவுடன் நானும் சென்றிருந்தபொழுது, அங்கிருந்து அவனுக்காக ஒரு “ஸ்டெதாஸ்கோப்’ வாங்கி வந்தோம். பரிமளம் அப்பொழுது மருத்துவக் கல்லூரியில் மாணவன். அவன் டாக்டராக ஆவதில் அண்ணாவுக்குப் பெரும் மகிழ்ச்சி. பரிவும், பண்பும், பாசமும், நேசமும் உள்ள ஒருவராகவே பரிமளம் வளர்க்கப்பட்டார். அவரும் வளர்ந்து வந்தார்.

அண்ணாவின் காலத்திலேயே பரிமளம் அரசியல் கட்சியில் நேரடியாக ஈடுபாடு காட்டவில்லை. அண்ணாவும் அந்த முறையில் அவரை வளர்க்கவில்லை. அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு கூட நான்கு மாதங்கள் கழித்துத்தான் சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள அண்ணாவின் அறைக்குப் பரிமளம் சென்றார். அரசாங்க நிர்வாகத்திலும், அதிகாரிகளிடமும் எந்த வகையிலும் அவர் தொடர்பு கொண்டதில்லை.

அண்ணா மறைந்த பிறகு, ஓரிரு ஆண்டுகள் அண்ணாவின் பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய நிகழ்ச்சிகளின்பொழுது, நானும் கடற்கரைக்கு மற்ற கழகத் தலைவர்களுடனும், தோழர்களுடனும் சென்று அண்ணாவின் சமாதி முன் அஞ்சலி செலுத்துவதுண்டு. ஆனால், வர வர சமாதிக்குச் செல்லும் ஊர்வலத்தில் முந்திச் செல்வதற்கும், முன் நிற்பதற்கும் நடைபெறும் நெருக்கடியை என்னால் ஈடுகொடுக்க முடியாமல் அவ்வாறு செல்வதை நான் தவிர்த்துக் கொண்டேன். ஆனால், ஒவ்வோராண்டும் அண்ணாவின் பிறந்த நாள் – நினைவு நாள் அன்று அண்ணி ராணி அம்மையாரைக் காண பரிமளம் அல்லது இளங்கோவன் இல்லங்களுக்குச் சென்று வருவேன். அண்ணா வாழ்ந்த இடத்தில் அவர்களுடன் இருந்தவர்களைக் காண்பதில், அண்ணாவைப் பற்றிப் பேசுவதில் ஒருவகை ஆறுதல் இருந்தது.

ராணி அம்மையார் மறைந்த பிறகு, ஆண்டுதோறும் அண்ணாவின் பிறந்த நாள், நினைவு நாள் அன்று நுங்கம்பாக்கம் அவென்யு சாலையிலுள்ள அண்ணாவின் தாயகத்திற்குத் தவறாமல் சென்று பரிமளத்தையும், அவர் குடும்பத்தினரையும் நான் காண்பது வழக்கம். பரிமளம் ஒரு முறை கூறினார்: “”நான் கூட அண்ணா சமாதிக்கு இப்பொழுது செல்வதில்லை.”

அண்ணாவின் கட்டுரைகள், கதைகள் ஆகியவற்றில் பல வெளியிடப்படாமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அவற்றையெல்லாம் சேகரித்து வெளியிடுவதில் பரிமளம் ஈடுபட்டிருந்தார்.

புதைந்து கிடக்கும் வரலாற்றுச் சான்றுகளைத் தேடி எடுக்கும் அகழ்வாராய்ச்சியாளர்களைப் போல, மறைந்து கிடக்கும் அண்ணாவின் இலக்கியப் படைப்புகளை வெளிப்படுத்துவதில் அரிய அகழ்வாராய்ச்சியாளராக பரிமளம் விளங்கினார். அதன் விளைவாக, இதுவரை மறைந்து கிடந்த அண்ணாவின் பல கட்டுரைகள், பேச்சுகள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன.

சென்ற மாதம் அண்ணா நினைவு நாளன்று வழக்கம்போல் அவரது இல்லத்தில் பரிமளத்தைச் சந்தித்தேன். அப்பொழுதும் இதுவரை வெளிவராமல் உள்ள அண்ணாவின் கட்டுரைகளைத் திரட்டி வெளியிடுவது பற்றி ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் அவர் பேசினார்.

அண்ணாவின் குடும்பத்துடன் கலந்திருந்த நம்மில் பலருக்கு பரிமளத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அன்னாரைப் பிரிந்து துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Posted in Anjali, Anna, Annadurai, Biosketch, Faces, Foster, Memoirs, Parimalam, people, Sezhiyan, Son | Leave a Comment »

Aadhimoolam – Anjali by Ku Pugazhendhi

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஆதிமூலம் – ஓவியர் கு. புகழேந்தி

ஓவியர் ஆதிமூலம் ஒரு சிறந்த மனிதர், சிறந்த கலைஞர். நவீன ஓவியம் தமிழ்ச் சூழலில் பரவலாக, அதாவது இதழ்களில் வெளிவருவதற்கு அவருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. “எழுத்து’ போன்ற சிற்றிதழ்களில் அவருடைய ஓவியங்கள் வெளிவந்தது, தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

அதேபோல் வணிக இதழ்களில், கதை, கவிதை, கட்டுைர போன்றவற்றிற்கான ஓவியங்கள், விளக்க ஓவியங்களாக மட்டும் வந்து கொண்டிருந்த நிலையில், அதை மட்டுமே வெளியிட்டு வந்த இதழ்களும், அதுபோன்ற ஓவியங்களை மட்டுமே பார்த்துப் பழகிப்போன வாசகர்களும் நவீன ஓவியத்தைப் பார்க்க, பயன் படுத்தத் தொடங்கி னார்கள் என்றால் அதைத் தொடங்கி வைத்தவர் ஆதிமூலம் அவர்கள்தான்.

ஒரு ஓவியம் கதை, கவிதைக்கான விளக்கப்படம் என்ற நிலையிலிருந்து, அந்தக் கவிதை, கதையின் ஒட்டுமொத்த சாரத்தை, ஓவியத்தில் வெளிப்படுத்தி, ஓவியத்தை தனித்துவமான படைப்பாக நிலைநிறுத்தியவரும் ஆதிமூலம் அவர்கள்தான். அவர் ஓவியங்கள் வாசகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் அதன் மூலம் நல்ல அடித்தளமும் போடப்பட்டது.

அந்த அடித்தளம் தான் என்னைப் போன்றவர்களை வணிக இதழ்கள் துணிந்து பயன்படுத்தியதற்கு துணை புரிந்தது.

அவருடைய கோடுகளுக்குத் தனி அடையாளம் இருக்கிறது. அவருடைய கோடுகள் வலிமையானவை, வீரியமானவை, அழுத்தமானவை. அவற்றை அவருடைய கருப்பு வெள்ளை ஓவியங்களில் நாம் பார்க்கலாம். தமிழ்த் தொன்மங்கள் என்று சொல்லக் கூடிய அய்யனார் போன்ற நாட்டுப்புற வடிவங்களை கோட்டோவியங்களில் வெளிப் படுத்தியவர். அவருடையக் கோட்டோ வியங்கள் தனித்துவமானது. பார்ப்பவர் களை எளிதில் ஈர்க்கக் கூடியது.

நடிகர்களுடைய நடிப்பைப் பார்க்கும் போது “சிவாஜியைப் போன்று’ நடிப்பு இருக்கிறது என்று சொல்வது போல, சில ஓவியர்கள் எப்படி வரைந்தாலும் அதில் “ஆதிமூலம் போன்று’ இருப்பதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவருடைய ஓவியங்கள் தனி அடையாளத்தோடு விளங்குகின்றன.

அதேபோல் அவருடைய அரூப வெளிப்பாடான வண்ண ஓவியங்களும், தனித்துவமான அடையாளத்தோடு விளங்குகிறது. சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற ஓவியரான அவர், புதிய தலைமுறைக் கலைஞர் களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர். நெருக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பவர்.

என்னுடைய “உறங்காநிறங்கள்’ ஓவியக்காட்சி நடைபெற்ற பொழுது அழைப்பு அனுப்பியிருந்தேன். அவர் ஊரில் இல்லை. வந்ததும் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது நான் அவரிடம் “ஓவியங்களின் ஒளிப் படங்களை ஒரு நாள் உங்களிடம் எடுத்து வருகிறேன்’ என்றேன்.

“”இல்லை, வேண்டாம் அந்த நிலையை நீங்கள் கடந்து விட்டீர்கள். வாய்ப்புக் கிடைக்கும் போது நானே வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்” என்றார்.

பணிச்சுமை, காலமாற்றம் இவை களால் இல்லத்திற்குச் சென்று சந்திப்பது குறைந்துவிட்டது. இலக்கிய அரங்குகள், சில கண்காட்சிகள், பொது நிகழ்ச்சிகள் என்று ஒரு சிலவற்றில் சந்திப்பதும் குறைந்துவிட்டது.

அவ்வப்போது தொலைபேசி உரையாடல்கள். அப்படி ஒருநாள் அவைரத் தொலைபேசியில் அழைத்து மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தேன். “இல்லை புகழேந்தி, நான் வெளியில் எங்கும் வருவதில்லை, இனிமேல் நீங்கள் எல்லாம் தான் அவைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்றார்.

அவர் வெளியில் வராமல் இருந்தாலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தாலும், அவர் ஓவியங்கள் செய்வதில் இயங்கிக் கொண்டே இருந்தார். 2008 சனவரி 27 ஞாயிறு அதிகாலை அவருடைய இயக்கம் நின்று விட்டது. ஆனால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரது படைப்புகளாலும் பலரது நினைவுகளிலும் தமிழ்க்கலை இலக்கிய வரலாற்றில் ஆதிமூலம் அசைக்க முடியாத ஒரு பெயர்.

Posted in Aadhimoolam, Aadhymoolam, Aathimoolam, Adhimoolam, Anjali, artists, Arts, Athimoolam, Faces, Icons, Lit, Literature, Memoirs, Notable, Painters, Paintings, Pugalendhi, Pugazendhi, Pugazhendhi, Pugazhenthi, Sculpture, Works | Leave a Comment »

Former TN Assembly Speaker K Rajaram passes away: Anjali, Memoirs

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 10, 2008

மூத்த அரசியல் தலைவர் க. ராசாராம் காலமானார்

சென்னை, பிப். 8: தமிழகத் தின் மூத்த அரசியல் தலைவர்க ளில் ஒருவரான க.ராசாராம் (82) வெள்ளிக்கிழமை மாலை சென் னையில் காலமானார்.
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகி யோரின் நம்பிக்கையையும், நன்ம திப்பையும் பெற்றவராக ராசா ராம் திகழ்ந்தார்.

ஆரம்பகாலத்தில் பெரியாரின் செயலாளராக இருந்தார்.

தமது கடுமையான உழைப்பால் சட் டப் பேரவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும், சட்டப் பேரவைத் தலைவராக வும், மாநில அமைச்சராகவும், தில்லியில் தமிழக அரசின் சிறப் புப் பிரதிநிதியாகவும் நிலை உயர்ந்தார்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவைகளில் இடம் பெற் றிருந்தார். தாம் சார்ந்திருந்த கட் சியினரிடம் மட்டுமின்றி, அனைத்துக் கட்சியினரிடமும் அன்புடன் பழகி, நல்லுறவு கொண்டிருந்தார். வட மாநிலத் தலைவர்கள், பல்வேறு துறைப் பிரமுகர்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தார்.
ஆத்தூரில் 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி பிறந்தார். பி.ஏ. பட்டம் பெற்றார்.

1962 முதல் 1967 வரையிலும், 1967 முதல் 1971 வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1971 முதல் 1976 வரை திமுக ஆட்சியிலும், 1985 முதல் 1989 வரை அதிமுக ஆட்சியிலும் அமைச்சராகப் பதவி வகித்தார்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 1980 முதல் 1984 வரை சட்டப் பேரவைத் தலைவராக இருந் தார்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில், 1978 முதல் 1979 வரை தில்லியில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநி தியாகச் செயல்பட்டார் ராசா ராம். அப்போது, மாநில அரசுக் கும், மத்திய அரசுக்கும் இடையே பாலமாகத் திகழ்ந் தார். 1991-ல் ஜெயலலிதா முதல் வரானபோது, குறுகிய காலம் அமைச்சராக இருந்தார் ராசா ராம்.

தீவிர அரசியலில் இருந்து… அதன்பின்பு, தீவிர அரசியலில் இருந்து விலகி இருந் தார். ஆன்மிக -சமூகப் பணிக ளில் ஈடுபட்டு வந்தார். இலக்கி யம் தொடர்பான நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந் தார்.

சமீபகாலமாக, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந் தார். வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.

எம்.ஜி.ஆருக்கு ஆறுதல் தந்தவர்

சென்னை, பிப். 8: 1980 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. படு தோல்வி அடைந்தபோது எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய ஆறு தலை அளித்தவர் ராசாராம்.
அந்தத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகு திகள், புதுவை மக்களவைத் தொகுதி ஆகிய 40 தொகுதிகளில் இரண்டே தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. வென்றது. மற்ற தொகுதிகளில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.

மக்களவைத் தேர்தலுடன் இணைத்து பனைமரத்துப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்த லில் அ.தி.மு.க. வேட்பாளரான ராசாராம் வென்றார். அதன்மூ லம் எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய ஆறுதலை அளித்தார்.
மக்களின் நம்பிக்கையை அ.தி.மு.க. இழந்து விட்டது என்று தி.மு.க. அணி விமர்சித்தபோது, அதை எதிர்கொள்ள ராசாரா மின் வெற்றியைக் கேடயமாக அ.தி.மு.க. பயன்படுத்தியது.

“மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் இடம் பெற்ற அணியை ஆதரித்து மக்கள் வாக்களித்தனர். ஆனால், சட்டப் பேரவை இடைத் தேர்தலைப் பொருத்தவரை அ.தி.மு.க.வையே மக்கள் ஆதரித்து உள்ளனர்.

அ.தி.மு.க.வுக்கே மக்களின் ஆதரவு தொடருகிறது’ என அ.தி.மு.க.வினர் அப்போது வாதிட்டனர்.


ரகுபதி ராகவ ராசாராம்!
இரா செழியன்

சென்னை, பிப். 8: நான்கு வாரங்க ளுக்கு முன்னர் க. ராசாராமை தற் செயலாகச் சந்தித்தபொழுது, எப் படி இருக்கிறீர்கள் என்று நான் கேட்டேன். உடனே, “நாமெல்லாம் ஆயிரம் பிறைகளைத் தாண்டியவர் கள், இன்னமும் எவ்வளவு பிறை கள் நமக்கு தோன்றுமோ தெரிய வில்லை!’ என்று வேடிக்கையாகச் சொன்னார் என்று ராசாராமைப் பற்றிய மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் மூத்த நாடா ளுமன்றவாதி இரா. செழியன்.

இளம் வயதில் இருந்தே அவருக் குப் பொது வாழ்வில் பிடிப்பு உண் டாகியிருந்தது. அவருடைய தந் தையார் கஸ்தூரிபிள்ளை நீண்ட காலமாக ஜஸ்டிஸ் கட்சியில் தீவிர மாக விளங்கியவர். பெரியாரும் மற்ற பெருந்தலைவர்களும் சேலம் வந்தால், கஸ்தூரிபிள்ளையின் வீட்டில்தான் தங்குவார்கள். அண் ணாவுடன் சேலம் வட்டாரத்தில் சுற்றுப்பயணம் செய்தால், நிச்சய மாக ராசாராம் வீட்டில்தான் தங்கு வோம். எங்களுடன் சுற்றுப் பய ணத்தில் ராசாராம் இருப்பது கலக லப்பாக இருக்கும்.
1962-ல் கிருஷ்ணகிரியில் திமுக வேட்பாளராக ராசாராம் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். அடுத்தப டியாக, 1967-ல் சேலத்தில் நின்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1962-ல் அண்ணா மாநி லங்களவை உறுப்பினராக வந்து விட்டார். அப்போது மக்களவை யில் இருந்த 8 திமுக உறுப்பினர்க ளும் எப்போதும் அவரைச் சூழ்ந்த படி இருப்போம். ராசாராமைப் பார்த்தால் அண்ணா, “ரகுபதி ராகவ ராசாராம்’ என அழைக்கத் தொடங்கிவிடுவார்.

சபையில் ராசாராம் உற்சாகமா கப் பணியாற்றக்கூடியவர். ஒரு பிரச்னை என்று வந்துவிட்டால், கடுமையாக வாதிடுவார், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று உரத்த குரலில் தமது கருத்தைச் சொல்லத் தயங்கமாட்டார். நாடா ளுமன்ற மைய மண்டபத்தில் அவ ரின் குரல் பலமாக ஒலித்தபடி இருக்கும்.

உதவி என்றால், ராசாராம் உடன டியாக முன்வந்துவிடுவார். கட்சி சார்பில் ஏதாவது பொறுப்பு கொடுக்கப்பட்டால், அதை முனைந்து நின்று நிறைவேற்று வார். மக்களவையில் கட்சி மாறு பாடு இல்லாமல் எல்லோரிடமும் நட்பும் பரிவும் அவருக்கு இருக் கும். ஆனால், பொது மேடையி லும், நாடாளுமன்றம், சட்டப்பேர வைக் கூட்டங்களிலும் தாம் சார்ந்த கழகக் கொள்கைகளுக்காக வும் திட்டங்களுக்காகவும் தீவிரமா கப் பேசுவார்; போராடுவார்.

திமுகவில் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை யில் அவர் இடம் பெற்றிருந்தார்.

பின்னர் அதைவிட்டு விலகி அதிமு கவில் சேர்ந்தபொழுது எம்.ஜி.ஆர். காலத்தில் சட்டப் பேரவைத் தலைவராகவும், அமைச் சராகவும் பணியாற்றினார். அதன் பிறகு ஜெயலலிதா அமைச்சரவை யிலும் ராசாராம் இடம் பெற்றிருந் தார்.

தில்லியில் இருந்த காலத்தில் “நார்த் அவென்யு’வில் காலையில் தவறாமல் ராசாராம் நடந்து செல் வதைக் காணலாம். அதேபோல், சென்னையில் கடற்கரை நடையி னர் சங்கத்தின் தலைவராக அவர் இருந்தார்.

நடப்பதில் அவர் செலவழித்த நேரத்தைவிட வழியில் நின்று பேசு பவர்களிடம் செலவழிக்கும் நேரம் தான் அதிகம் இருக்கும். 1940-ல் இருந்து 20 ஆண்டுகளாக அவர் திராவிடக் கழகத்தில் பெரியா ருக்கு உற்ற துணைவராக இருந் தார். வெளிநாடுகளுக்கு பெரியார் பயணம் சென்றபோது ராசா ராமை துணைக்கு அழைத்துச் செல்வார்.
திமுகவை அண்ணா தொடங்கி யதும், அவர் மிகுந்த ஈடுபாட்டு டன் செயல்பட்டார். கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பின ராகவும், சட்டப்பேரவை அவைத் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த போதும் பெரியாரிடத்தில் அவர் வைத்திருந்த மதிப்பும், மரி யாதையும் குறையாமல் இருந்தது.
கொள்கையின் அடிப்படையில் மற்றவர்களுடன் அவர் மாறுபட் டாலும், மனித நேயத்துடன் தலை வர்களை மதிக்கும் பண்பாடு இருந் தது.
சேலத்தில் இரும்பு உருக்கு ஆலை உருவானதில் முக்கிய நப ராக இருந்தவர் ராசாராம்.

1969-க்கு பிறகு காங்கிரஸில் பிளவு ஏற்பட்டதும் பிரதமர் இந்திரா காந்திக்கு திமுக ஆதரவு தந்தது.

1971 பொதுத் தேர்தலிலும் தமிழ கத்தில் திமுகவின் ஆதரவை இந்தி ராகாந்தி பெற்றிருந்தார்.

அந்த காலகட்டத்தில் ராசாராம், இந்திரா காந்தியை அடிக்கடிச் சந் தித்து 1981-ல் சேலத்தில் ஸ்டெ யின்லெஸ் ஸ்டீல் உற்பத்திக்கான இரும்பு உருக்கு ஆலை அமைப்ப தில் முக்கியப் பங்காற்றினார்.

இதில் அவர் ஆற்றிய பணி பாராட் டிற்கு உரியதாகும்.

ராசாராம் நல்ல நண்பர். எப் போதும் சிரித்துப் பேசும் பண்பு உடையவர். சலியாது உழைத்து ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றுபவர். அவருடைய மறைவு தமிழக அரசியலில் ஒரு பெரும் இழப்பு ஆகும். துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத் துக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
——————————————————————————————————————–
எல்லோருக்கும் நல்லவர்

கே. வைத்தியநாதன்


அப்போது க.ராசாராம் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக தில்லியில் இருந்த நேரம். ஒருபுறம் ஆளும் ஜனதா அரசுடன் இணக்கமாக இருக்கவேண்டிய கட்டாயம். மறுபுறம், எதிர்க்கட்சியாக இருந்த இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் நல்லுறவைத் தொடர வேண்டிய சூழ்நிலை.

அவருடன் அந்த காலகட்டத்தில் நான் நெருக்கமாகப் பழகவில்லை என்றாலும், பலமுறை சந்திக்க நேர்ந்தது. இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதால் தில்லியிலுள்ள அத்தனை இடங்களும் அவருக்கு அத்துப்படி. முக்கியமான தலைவர்களும் சரி, அதிகாரிகளும் சரி அவரது நண்பர்களாக இருப்பார்கள்.

ராசாராம் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக இருந்தபோதுதான், ஒரு மிகப் பெரிய முயற்சி நடந்தது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த பிஜு பட்நாயக்கின் விருப்பத்துக்கு ஏற்ப, திமுகவையும் அதிமுகவையும் இணைக்கும் முயற்சிக்குத் துணைபுரிந்தவர் ராசாராம்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த முயற்சியைத் தான் மேற்கொண்டதே, ராசாராம் தனக்குத் துணைபுரிவார் என்கிற நம்பிக்கையில்தான் என்று பிஜுபாபுவே என்னிடம் கூறியிருக்கிறார்.

என் பத்திரிகை நண்பர்களான ராணி மைந்தனும், லேனா தமிழ்வாணனும் அவரிடம் கொண்டிருந்த அளவுக்கு எனக்கு ராசாராமிடம் நெருக்கம் கிடையாது. ஆனால், நான் சாவி வார இதழில் உதவி ஆசிரியராக இருந்தபோது, பல சந்தர்ப்பங்களில் ஆசிரியர் சாவியுடன் அப்போது அமைச்சராக இருந்த ராசாராமை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதிலும் குறிப்பாக அவரது மணிவிழா மலர் ஒன்றை “சாவி’ இதழில் நாங்கள் தயாரித்தபோது அவரை நெருக்கமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஒருவரது மணிவிழா மலருக்குத் திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்த்துரை என்பது நினைத்துப் பார்க்க முடியுமா? முடியும். அந்த நபர் க.ராசாராமாக இருந்தால்.

“”எந்தப் பதவியில் எப்படியிருக்கிற வாய்ப்பினை எந்த முறையில் அவர் பெற்றாலும், அப்பதவியின் காரணமாக என்றுமே அவர் எல்லோரிடமும் எளிமையாக -அன்பாகப் பழகுகிற அந்தப் பண்பாட்டை எப்போதுமே மறந்ததில்லை” என்றும், “”சேலத்து கஸ்தூரிப் பிள்ளைக் குடும்பத்துப் பிள்ளை என்ற சிறப்பும் -பெரியாரிடம் சுயமரியாதைப் பாடத்தையும், அண்ணாவிடம் தமிழின உணர்வையும் பெற்ற பெருமைக்குரியவர் இனிய நண்பர் இராசாராம் அவர்களுக்கு இன்று அவர் ஏற்றுக்கொண்டுள்ள அடிப்படையின் தொடர்பாக “சஷ்டியப்த பூர்த்தி’ நடைபெறுகிறது” என்றும் கருணாநிதியின் வாழ்த்துச் செய்தியில் இருந்த வரிகளைப் படித்து, அதில் இழையோடிய கேலியையும், எதிரணியில் இருந்தாலும் அவரைப் பாராட்ட முன்வந்த பண்பும் என்னைத்தான் கவர்ந்தது என்று நினைத்தேன். அன்று மாலையில் ஆசிரியர் சாவியை சந்திக்கவந்த அமைச்சர் ராசாராம் அதைப் படித்துவிட்டு சிரித்து ரசித்ததையும், “கலைஞரால் மட்டும்தான் இப்படி எழுத முடியும்’ என்று நெகிழ்ந்ததையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எம்.ஜி.ஆரிடம் அவருக்கு எந்த அளவுக்கு நெருக்கம் இருந்ததோ அதே அளவு நெருக்கமும், நட்பும், மரியாதையும் திமுக தலைவர் கருணாநிதியிடமும் இருந்தது என்பதை எங்கள் ஆசிரியர் சாவியின்கீழ் என்னுடன் பணிபுரிந்த சி.ஆர்.கண்ணன், ராணி மைந்தன் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் க.ராசாராமை சந்தித்தபோது, நான் “தினமணி’ ஆசிரியர் பொறுப்பை ஏற்றிருப்பதில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த கையோடு, “எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்துடனும், குறிப்பாக காலம்சென்ற ராம்நாத் கோயங்காவுடன் தனக்கிருந்த நட்பையும் நெருக்கத்தையும் விவரித்தார்.

அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணாவுக்கு அமெரிக்கா செல்வதற்கும், சிகிச்சைப் பெறுவதற்கும் எல்லா உதவிகளையும் செய்தவர்கள் ஜி.பார்த்தசாரதியும், ராம்நாத் கோயங்காவும்தான் என்கிற தகவலை தெரிவித்தார். ராம்நாத் கோயங்காவிடம் அவர் செலவழித்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கச் சென்றபோது, அதை வாங்க மறுத்துவிட்டார் என்றும், அரசு செலவழித்த தொகையை திமுக கட்சி கொடுத்துவிட்டது என்றும் தெரிவித்தார். தனது மருத்துவச் செலவைக்கூட அண்ணா அரசின் தலையில் கட்டவில்லை என்று கூறி நெகிழ்ந்தார் அவர். அதேபோல, ராம்நாத் கோயங்காவின் ஒரே மகன் பகவான்தாஸ் கோயங்கா காலமானபோது, முதல் நபராக ஆஜரானவர் ராசாராம்தான். “”பெரியவர் ராம்நாத் கோயங்காவுக்கு ஆறுதலும் தேறுதலும் அளித்தபோது அதை நான் அண்ணாவுக்கு அவர் செய்த உதவிக்குச் செய்த நன்றிக்கடன் என்று கருதினேன்” என்று கூறினார்.

நகமும் சதையும்போல என்பார்களே, அதுபோல நெருக்கமாக இருந்தவர்கள் ராசாராமும் எனது எழுத்துலக ஆசான் ஆசிரியர் சாவியும். ராசாராமின் பொன் விழா மலர் கட்டுரையில் தனக்கு ஏன் ராசாராமைப் பிடிக்கிறது என்பதற்கு ஆசிரியர் சாவி சொல்லி இருக்கும் காரணம், ராசாராமின் முழுமையான பரிமாணத்தை நமக்கு உணர்த்தும். “”இருபத்து நான்கு மணி நேரமும் “நான் ஓர் அரசியல்வாதி’ என்ற பிரக்ஞையோடு அவர் இல்லாமல் இருக்கும் காரணத்தாலேயே அவரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.”

சினிமாத் துறையில் அவருக்குத் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அவர் பார்க்காத படங்களே இருக்காது. நல்ல திரைப்படமாக இருந்தால் முதல் விமர்சனம் ராசாராமிடமிருந்துதான் வரும் என்பார்கள் அவரது நண்பர்கள். பத்திரிகைத் துறையில் பலர் குடியிருக்கும் வீடுகள் அவரது உதவியுடன் வாங்கியதாக இருக்கும். ஆன்மிகவாதிகள், பகுத்தறிவாளர்கள், இசைக் கலைஞர்கள், இலக்கியவாதிகள் என்று எல்லோருக்கும் நல்லவராக ஒருவர் இருக்க முடியுமா? முடியும். அதை நிரூபித்துக் காட்டியவர் க.ராசாராம்.

Posted in ADMK, AIADMK, Anjali, Assembly, Biosketch, DMK, EVR, Faces, JJ, K Rajaram, Ka Rajaram, Kalainjar, Karunanidhi, KK, Life, Memoirs, MGR, Minister, MK, people, Periaar, Periar, Periyaar, Periyar, Rajaram, Rasaram, Speaker, TN | Leave a Comment »

Chief Minister’s secretary – Ko Shanmuganathan: Biosketch, Memoirs by Mu Karunanidhi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

கோ.சண்முகநாதனை எனது செயலாளராக ஆக்கிக் கொண்டது எப்படி?
கருணாநிதி வெளியிட்ட தகவல்

All in the Family - Prodigal Sons and Daughters of DMK: Mu Karunanidhi, MK Azhagiri, MuKa Stalin, Kanimozhi Karunanidhy
சென்னை, பிப்.4-

கோ.சண்முகநாதனை தனது செயலாளராக ஆக்கிக் கொண்டது எப்படி? என்பது பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கினார்.

திருமண நிகழ்ச்சி

முதல்-அமைச்சர் கருணாநிதியின் செயலாளர் கோ.சண்முகநாதனின் தம்பி கோ.ராமதாஸ்-அமுதா மகள் ரா.மலர்விழி-போரூர் மு.கலைமணி-சுப்புலட்சுமி மகன் மு.க.அருண் ஆகியோரது திருமணமும், சண்முகநாதனின் மைத்துனர் கி.கதிரேசன்-தங்கை மகாலட்சுமி மகன் வ.க.சிவக்குமார்-சென்னை சு.குமார்-சுப்புலட்சுமி மகள் கு.கவிதா ஆகியோரது திருமணமும், சண்முகநாதனின் மைத்துனர் டாக்டர் ம.ராசேந்திரன்-தங்கை மைதிலி மகள் ரா.எழில்-சென்னை ஜா.லெனார்டு மகன் லெ.ஜான் சாலமன் பிரேம்குமார் ஆகியோரது திருமணமும் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயம்- கலைஞர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை ஏற்று திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோபம் வந்தால்

40 ஆண்டு காலமாக என்னோடு சண்முகநாதன் இருக்கிறார். சண்முகநாதன் இன்றைக்கு நீங்களெல்லாம் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல நான்தான் அவர், அவர்தான் நான் என்கின்ற அளவிற்கு பெருமை பெற்றிருக்கிறார். 40 ஆண்டுகாலமாக என்னோடு சண்முகநாதன் இருக்கிறார். அப்படியும் சொல்லலாம். சண்முகநாதனோடு நான் இருக்கிறேன் என்றும் நீங்கள் சொல்லலாம்.

ஏனென்றால் இரண்டும் ஒன்றையொன்று சகித்துக்கொள்வதென்பது சாதாரண காரியம் அல்ல. அனுபவபூர்வமாக நான் சொல்கின்றேன். நீங்கள் அதற்காக சண்முகநாதனை கொடுமையாகக் கருதிவிடக் கூடாது. எனக்கு கோபம் வந்தால் அவருக்குக் கோபம் அடங்கிவிடும். அவருக்கு கோபம் என்று தெரிந்தால் நான் அந்த பக்கமே திரும்ப மாட்டேன்.

இது என்னுடைய வீட்டிலே இருக்கிறவர்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். அப்படிப்பட்ட ஒரு செயலாளர் 40 ஆண்டுகாலமாக அவரோடு நான் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்.

எண்ணி பார்க்கவில்லை

எப்படி சண்முகநாதனை நான் என்னுடைய செயலாளராக ஆக்கிக்கொண்டேன் என்பது ஒரு புதிர். தி.மு.க. இப்பொழுது ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறது. 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி. அண்ணா தலைமையில் எதிர்க்கட்சி, அதற்கு முன்பு பெரியார் தலைமையில் திராவிடர் கழகமாக இருந்தபோதும், திராவிடர் கழகத்தினுடைய பேச்சாளர்களிலே நானும் ஒருவன்.

அந்த நேரத்தில் நான் மாநிலத்திலே எங்கே சென்று பேசினாலும், மாவட்டத் தலைநகரமாக இருந்தாலும், வட்டத் தலைநகரமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும், ஒன்றிய நிலையிலே உள்ள இடமாக இருந்தாலும், அங்கெல்லாம் ஒருவர் உட்கார்ந்து என்னுடைய பேச்சை எழுதிக் கொண்டேயிருப்பார்.

மூன்று வழக்குகள்

என்னுடைய நண்பர் திருவாரூர் தென்னனைப் பார்த்து கேட்டேன், யார் இந்தப் பையன், நான் போகின்ற கூட்டத்திற்கெல்லாம் தவறாமல் வந்து எழுதிக் கொண்டிருக்கிறானே, இவன் யார் என்று கேட்டேன். தென்னன் சொன்னார், இவர் சொந்த ஊர் திருக்கண்ணமங்கை. நன்றாகப் படித்திருக்கிறார். இவர் போலீசினுடைய சுருக்கெழுத்தாளராக இருக்கிறார். அவரை ஸ்பெஷலாக நீங்கள் போகிற இடங்களுக்கெல்லாம் அனுப்புகிறார்கள். உங்களுடைய பேச்சை எழுதி போலீசுக்கு கொடுக்கிறார். நீங்கள் ஏதாவது சர்க்காரைப் பற்றி தவறாகப் பேசியிருந்தால் வழக்கு போடுவதற்கு அந்தப் பேச்செல்லாம் பயன்படும் என்று சொன்னார்.

நான் அதிலிருந்து சண்முகநாதனிடத்திலே ஒரு கண்ணாகவே இருந்தேன். நான் பேசிய பேச்சைப் பற்றி இரண்டு, மூன்று வழக்குகள் அப்பொழுது என்மீது வந்தன. சண்முகநாதன் அந்த பேச்சிற்கு நீதிமன்றங்களுக்கு சாட்சி சொல்ல வருவார் என்றுகூட எதிர்பார்த்தேன். அதற்குள் அரசு மாறிவிட்ட காரணத்தால் அந்த வழக்குகள் நடைபெறவில்லை. சண்முகநாதனை நான் நீதிமன்றத்திலே அப்பொழுது சந்திக்க இயலவில்லை. சட்டமன்றத்திலே சந்திக்க வேண்டும் என்றிருக்கும்போது நான் நீதிமன்றத்திலே எப்படி சந்தித்திருக்க முடியும்.

திறமையானவர்

இப்படி அவர் திறமையாக, எந்தத் தலைவருடைய பேச்சையும் எழுதக்கூடிய ஆற்றல்பெற்றவர் என்று அறிந்தபிறகு, அந்தச் சூழலிலே அண்ணா தலைமையிலே 1967-ம் ஆண்டு ஆட்சி உருவாயிற்று. அண்ணா யார் யார் எந்தெந்த துறைக்கு அமைச்சர் என்று குறித்து வெளியிட்டபிறகு, நான் என்னுடைய துறையை கவனிக்க என்னுடைய செயலாளராக யாரை நியமித்துக் கொள்ளலாம் என்று எண்ணியபோது, சண்முகநாதன் நினைவுக்கு வந்தார்.

ஒரு பையன் உட்கார்ந்து நான் பேசும்பொழுது எழுதுவானே அவனை சுருக்கெழுத்தாளராக வைத்துக் கொண்டால் என்ன என்று யோசித்து சுருக்கெழுத்தாளராக வைத்துக்கொண்டேன். இப்படி 40 ஆண்டுகாலமாக ஒரு போலீஸ் துறைக்கு தி.மு.க.வின் பேச்சுக்களை எழுதிக்கொடுத்து, இதில் ஏதாவது தவறு இருந்தால் மாட்டவிடுங்கள் என்று யார் எழுதிக் கொடுத்தாரோ அவரை நான் என்னுடைய செயலாளராக ஆக்கிக்கொண்டேன்.

அப்படி செயலாளராக வந்தவர்தான் இன்றைக்கு உங்களால் புகழப்படுகிறார்; பாராட்டப்படுகிறார் என்றால் அவ்வளவு பெருமையும் சண்முகநாதனுக்கு அல்ல, அவரை நியமித்துக் கொண்ட என்னைத்தான் அந்த பெருமை சாரும் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

மாதச் சம்பளம்

ஒரு எளிய குடும்பத்தில், சாதாரண, சாமான்ய குடும்பத்திலே பிறந்து, இரண்டு மூன்று சகோதரர்களுடன் பிறந்து, சில உற்றார் உறவினர்கள், அவர்களும் மிட்டா மிராசுகள் அல்ல. அப்படிப்பட்ட ஒரு சாதாரண சூழ்நிலையில் என்னைப் போலவே, என்னுடைய குடும்பத்தாரைப் போலவே இருந்த தம்பி சண்முகநாதன், இன்று என்னோடு இருக்கிறார்.

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, ஆட்சி மாறிய பிறகு நான் இந்த பொறுப்பை ஐந்தாவது முறையாக ஏற்றுக் கொண்ட பிறகு, அவரை அழைத்து நீ என்னோடு இருக்கின்றாயே, மாதச் சம்பளம் எவ்வளவு எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டேன்.

எவ்வளவு வேண்டும், எவ்வளவு தர என்று கேட்கவில்லை. எவ்வளவு எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டேன். நான் உங்களிடத்தில் சம்பளம் வாங்கப் போவதில்லை. கடைசி வரையிலே என்னை உங்களிடத்திலே ஒப்படைத்து விட்டேன் என்று சொன்னார் சண்முகநாதன்.

40 ஆண்டு காலமாக

அப்படி சம்பளமே வேண்டாம் என்று தன்னையே என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிற தம்பியிடத்தில் எனக்கு இருக்கிற அன்புக்கும், பாசத்திற்கும் காரணம் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. அப்படிப்பட்ட தம்பி சண்முகநாதன் சாதாரண, சின்ன குறிப்புகளைக்கூட விடாமல் எனக்கு எழுதித்தந்து, தேடித்தந்து, அப்படிப்பட்ட தேடலுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்து, அவைகள் எனக்கு கிடைக்குமாறு செய்து நான் பேச, எழுத, செயல்பட இந்த 40 ஆண்டுகாலமாக என்னோடு இருந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்.

நான் அரசியல் காரணங்களுக்காக எழுதுவது மாத்திரமல்ல, இலக்கியங்கள்எழுதச் சென்றாலும், மாமல்லபுரத்திற்குச் சென்று எழுதினாலும், கோவாவிற்குச் சென்று எழுதினாலும், வேறு எந்த ஊருக்குச் சென்று எழுதினாலும், அங்கெல்லாம் அமர்ந்து எழுதுவது திருக்குறள் உரையானாலும், குறளோவியமானாலும், தொல்காப்பியப் பூங்காவானாலும் அங்கெல்லாம் அந்தப் பன்முகப் பணிக்கு தானும் அந்தப் பன்முகப் பணியாளரைப் போல விளங்கி எனக்கு உதவி செய்து கொண்டிருப்பவர் தம்பி சண்முகநாதன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னதாக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான அன்பழகன், பொருளாளரும், அமைச்சருமான ஆற்காடு வீராசாமி ஆகியோர் மணவிழாவிற்கு முன்னிலை வகித்து மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.

மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், கனிமொழி கருணாநிதி எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், திராவிட கழக தலைவர் வீரமணி, போட்டி ம.தி.மு.க. அவைத்தலைவர் எல்.கணேசன் எம்.பி., கவிஞர் வைரமுத்து, ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில் மத்திய மந்திரி ராசா, அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், பொங்கலுர் பழனிச்சாமி, வெள்ளக்கோயில் சாமிநாதன், முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், தங்கபாலு எம்.பி., நடிகர்கள் நெப்போலியன், பிரசாந்த், நடிகை மனோரமா, தலைமை செயலாளர் திரிபாதி உள்பட பலர் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

முடிவில் மு.க.அழகிரி நன்றி கூறினார்.

வரவேற்பு நிகழ்ச்சி

முன்னதாக நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:-

மத்திய மந்திரி ரகுபதி, பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ஜனநாயக முன்னேற்றக்கழக தலைவர் ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் கோ.சி.மணி, கே.பி.பி.சாமி, மொய்தீன் கான், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, சுப.தங்கவேலன், `தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான ஜெயந்தி நடராஜன், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சுந்தரதேவன், கால்நடை துறை செயலாளர் லீனா நாயர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆதி சேஷையா, சென்னை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன், சமூகநலத்துறை செயலாளர் என்.எஸ்.பழனிச்சாமி, ஐ.ஏ.எஸ். அதிகாரி அருள்மொழி,

அதிகாரிகள்

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி, கடல்சார் வாரிய இயக்குனர் முத்துக்குமாரசாமி, செய்தித்துறை இயக்குனர் மோகன்தாஸ், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்திரமவுலி, உள்துறை செயலாளர் மாலதி, தமிழ்நாடு கனிம நிர்வாக இயக்குனர் நந்தகிஷோர், திட்டக்குழு உறுப்பினர் லட்சுமிகாந்தன் பாரதி, ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன், வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சக்தி காந்ததாஸ், சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.சேகர், உளவு துறை ஐ.ஜி. ஜாபர்சேட், போலீஸ் ஐ.ஜி. முத்துக்கருப்பன்,

செ.குப்புசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காயத்ரி தேவி, சிவபுண்ணியம், பன்னீர்செல்வம், காமராஜ், டாக்டர் ராமன், நடிகர் கமலஹாசன், இசையமைப்பாளர் கங்கை அமரன், சினிமா பாடகர் மலேசியா வாசுதேவன், கவிஞர் வாலி, கவிஞர் மேத்தா, அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம், சிறுசேமிப்பு துறை துணை தலைவர் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தி.மு.க. இலக்கிய அணி மாநில துணைசெயலாளர் பூச்சி முருகன், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.

Posted in aide, Anna, Anna Arivalayam, Arivalayam, Assistant, associate, Biosketch, Chief Minister, CM, Compatriot, Compensation, DMK, Faces, family, Government, Influence, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Marriages, Memoirs, Minister, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, names, partner, people, Power, Receptions, Salary, Sanmuganadhan, Sanmuganathan, Sanmukanadhan, Secretary, Shanmuganadhan, Shanmuganathan, Shanmukanadhan, Shanmukanathan, Sidekick, Stalin, Wedding | 1 Comment »

Rajaji’s predictions on Independent Indian Politics & Indo-Pak relations: Dr. HV Hande

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

நினைவலைகள்: அன்று சொன்னது… இன்று நடக்கிறது!

டாக்டர் எச்.வி. ஹண்டே

வரலாற்று நூல் ஆசிரியர்களும், அரசியல் மேதைகளும், பல அரசியல்வாதிகளும், ராஜாஜி பற்றி கூறுகின்ற ஒரு கருத்து இது:

“”இந்திய சுதந்திரத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக (1942 – ல்), நாட்டுப் பிரிவினை குறித்த ராஜாஜியின் கொள்கைத் திட்டம் (Rajaji Formula) ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாவது உலக யுத்தத்தில், தோல்வி பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, மகாத்மா காந்திக்கு அன்றைய தினம் மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கும். ஜின்னாவுக்கு அவர்களுக்கு அரசியலில் பிடியே கிடைத்திருக்காது. உக்ரேனும், ரஷ்யாவும், பிரிந்த பிறகும் நட்புமிக்க அண்டைநாடுகளாக வளர்ந்திருக்கின்றன. அது மாதிரி இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த பிறகும் நட்புடன் இருந்திருக்கும். இந்திய நாடு இன்னும் வலிமையுள்ள நாடாக ஆகியிருக்கும். பல இரத்த ஆறுகள் ஓடிய நிலை முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.”

இந்த ஒருமித்த கருத்தைப் பலர் தெரிவிக்கிறார்கள். கடைசியாக ராஜாஜியின் அதே கொள்கைத் திட்டம்தான், மெüண்ட்பேட்டன் திட்டம் என்ற பெயரில், 1947 ஜூன் மாதத்தில் அனைவராலும் ஏற்றுக் கொண்டு, இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.

இதே கருத்தினை ஸ்ரீபிரகாசாவும் கூறுகிறார். ஸ்ரீபிரகாசா சென்னை மாகாணத்தின் கவர்னராக 1952 – 54-ல் இருந்தவர். ராஜாஜி மாகாண முதலமைச்சராக இருந்த கால கட்டம் அப்போது. அதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜாஜியின் 89 வது பிறந்த நாளில், அவரைப் பற்றி ஸ்ரீபிரகாசா இவ்வாறு கூறினார்:

“”ராஜாஜி தொலை நோக்கு படைத்தவர். எந்தப் பிரச்சினை, எப்படி மாற்றமடைந்து வளரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடியவர். பாகிஸ்தான் உருவாகும் என்பதை அவரால் முன்னதாகவே கண்டு கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரையும் இது குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய கருத்து ஏற்றுக் கொள்ளப்படாததால் நிலைமை மோசமடைந்தது. ராஜாஜியின் சொற்களை முதலிலேயே கேட்டு நடந்திருந்தால், கண்ணீர் சிந்த வேண்டிய அவசியமில்லாமல், நியாயமான பாகிஸ்தானை நாம் அண்டை நாடாக அடைந்திருக்கலாம். ஆனால் தீர்க்க முடியாத வடிவில் பிரச்சினைகளைத் தரக்கூடியதொரு பாகிஸ்தானைப் பெற்றோம். நண்பர்களாகத் தொடர்ந்து இருக்க வேண்டிய மக்களிடையே, காழ்ப்புணர்ச்சியும், பகைமையும் வளர்ந்தோங்க வழி வகுத்தோம்.”

இதே போல பொருளாதார வல்லுநர்கள், ராஜாஜி வலியுறுத்தியபடியே போட்டிச் சந்தைப் பொருளாதாரத்தையும் (Market Economy) தனியார்மயமாக்குதலையும் 35 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

1992 இல் பி.வி.நரசிம்மராவ் மற்றும் மன்மோகன்சிங் தலைமையில், அரைகுறை மனதோடு, வேறு வழியின்றி நாட்டுப் பொருளாதாரம் ராஜாஜி வலியுறுத்திய திசையில் திருப்பி விடப்பட்டது.

35 ஆண்டுகள் முன்னதாக 1957 – ல் ராஜாஜி இதே நடவடிக்கைகளுக்காக, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பர்மிட் – லைசென்ஸ் – கோட்டா ராஜை ஒழித்துக் கட்டவேண்டுமென்றும் அறைகூவல் விட்டார்! யாரும் கேட்கவில்லை.

அப்போதே ராஜாஜியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைய இந்தியா வளமிக்க நாடாக விளங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

தென்கொரியாவை விட , மலேசியாவை விட, நம்முடைய நாடு பொருளாதாரரீதியாக ஜப்பான் நாட்டிற்கு ஈடாக வளர்ந்திருக்கும் என்று வேதனை அடைகிறார்கள் பலர்.

ராஜாஜியின் பல்வேறு உன்னதமான கருத்துக்களும் தீர்வுகளும் அவரது காலத்து மக்களில் பலரால் புறக்கணிக்கப்பட்டன. அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டன. ஆனால் பிற்கால நிகழ்ச்சிகள் ராஜாஜியின் கருத்துக்களின் உயர்வை உறுதி செய்யும் வகையிலேதான் அமைந்தன.

எடுத்துக்காட்டாக, ராஜாஜி தன்னுடைய சிறைவாசத்தின் போது 1921 ஆம் ஆண்டில் எழுதிய நாட்குறிப்பிலிருந்து , ஒரு பகுதியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.

“”நாம் ஒருவிஷயத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் வந்துவிட்டால், உடனேயே ஒரு சிறந்த அரசாங்கம் வந்துவிடாது. மக்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைத்துவிடாது. நீண்டகாலத்துக்கு இவை கிடைக்காதென்றே நான் நினைக்கிறேன். தேர்தல்கள், அதையொட்டி ஊழல்கள், அநியாயங்கள், பணக்காரர்களின் பலம், ஆணவம், நிர்வாகத்தினரின் திறமையின்மை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, நமக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் நமது வாழ்க்கையை நரகமாக்கும்.

நீதி, திறமை, அமைதி, நேர்மையான நிர்வாகம் ஆகியவை, சுதந்திரத்துக்கு முன்னால் இருந்த அளவுக்கு இப்போது இல்லையே என்று பலர் எண்ணி வருந்தும் நிலை ஏற்படும். அகெüரவம், அடிமைத்தனம் ஆகியவற்றிலிருந்து நமது இனம் காப்பாற்றுவிட்டது என்பது ஒன்றுதான் நமக்குக் கிடைத்த லாபமாக இருக்கும்.

அனைவருக்கும் பொதுவான முறையில், ஒழுக்கம், தெய்வபக்தி, அன்பு இவற்றைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கக் கூடிய கல்வி ஒன்றுதான் நமது ஒரே நம்பிக்கை. இதில் வெற்றியடைந்தால்தான் நாட்டு சுதந்திரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். இல்லாவிடில் அது பணம் படைத்தோரின் அடக்குமுறைக்கும் அக்கிரமத்துக்கும்தான் நம்மை அழைத்துச் செல்லும்.

ஒவ்வொருவரும் நேர்மையானவராகவும், கடவுளுக்குப் பயப்படுகிறவராகவும், மற்றவரிடம் அன்பு காட்டுவதில் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவப்பூர்வமாக அறிந்தவராகவும் இருந்தால், இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்.

ஆனால் ஒன்று. இந்த இலட்சியத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வருவதானால், அதற்கு, வேறெந்த இடத்தையும் விட, இந்தியாவைத்தான் நம்ப வேண்டும்.”

நாடு சுதந்திரம் அடைவதற்கு 27 ஆண்டுகள் முன்னதாக இப்படி ஒரு கருத்தை அவரால் எப்படி எழுத முடிந்தது? என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்நாட்டு மக்களின் மனப்பான்மை, செயல்திறன் மற்றும் பலஹீனங்களையும் அவர் எவ்வளவு துல்லியமாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.

எது எப்படியிருப்பினும், நம்நாட்டு மக்களிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை இறுதிவரி தெளிவாக்குகிறது. அவரது அச்சங்கள் முழுதும் உண்மை ஆகிவிட்ட நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால் இறுதிவரிகளில் அவர் வெளியிட்டிருக்கும் நம்பிக்கையை உண்மையாக்குவது இக்காலத்து இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.

ராஜாஜி தமது காலத்திற்கு மிகவும் அப்பாற்பட்டு, எதிர்காலத் தொலை நோக்குடன் சிந்தித்தார், செயலாற்றினார். உலகளாவிய சிந்தனை அவருடையது. இவ்வுலகே அவருக்கு சிறியதோர் கோளாகத் தோன்றியது எனலாம். நாடுகளின் எல்லைகளைக் கடந்து மனித இனத்தை முழுவதும் தழுவிய நிலையில் அவர் சிந்தித்தார்.

எழுபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக, இந்நாடு முழுதும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திய மாமனிதராக அவர் விளங்கினார். எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு படிப்பினை மட்டுமல்ல, அவரது வாழ்க்கை வரலாறு. அது நாட்டு மக்களை நன்னெறியில் செயலாற்றுவதற்கு ஊக்கந்தரும் உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பும் கூட.

“வருங்கால இந்தியா வளமான இந்தியாவாக வளர வேண்டுமென்றால், மக்கள் மனதில் பதிய வேண்டிய மாமனிதரின் வரலாறாக ராஜாஜியின் வரலாறு இருக்கிறது’

Posted in Anjali, Bribery, Bribes, Cong, Congress, Congress Party, Corruption, Diary, Forecasting, forecasts, Freedom, Gandhi, Hande, Handey, History, HV Hande, Independence, Independent, India, Indo-Pak, Jinna, Jinnah, kickbacks, Memoirs, MK, Notes, PAK, Pakistan, Politics, Predictions, Rajagopalachari, Rajagopalachariaar, Rajagopalachariar, Rajagopalachariyar, Rajaji, Relations, SAARC, Vision, Voices | Leave a Comment »

MG Ramachandran: Politics, Cinema, Personality – MGR Biosketch by Panruti Ramachandhran

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

மறைந்தும் மறையாத தலைவர்

பண்ருட்டி ராமச்சந்திரன்

எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.

அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.

“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.

நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.

எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற பாட்டு ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.

1984-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா? உணர்வுடன் இருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.

அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார்.

அரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறு விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.

ஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது. அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.

எம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.

எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.

அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.

சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.

இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.

“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.

நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.

உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.

முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!

(கட்டுரையாளர்: அவைத்தலைவர், தேமுதிக)

Posted in Actors, ADMK, AIADMK, Anjali, Anna, Assembly, Biography, Biosketch, Children, Cinema, CM, DMDK, DMK, dynasty, EVR, Films, Food, Free, Freebies, Heartthrobs, Hero, Heroes, Incidents, Indhra, Indira, Indra, Iruvar, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kids, King, KK, Life, Manifesto, Meals, Memoirs, MGR, Midday Meals, Monarchy, Movies, Notes, Nutrition, Panruti, Periyar, Personality, Politics, Poor, PVNR, Ramachandhran, Ramachandran, Ramachanthiran, Ramachanthran, Rao, UN, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Kalki Rajendran on Kalki’s Ponniyin Selvan

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

கல்கியின் சிரசாசனம்
சேந்தன் அமுதனுக்கு சிம்மாசனம்
– கல்கி இராஜேந்திரன்

கல்கி குடும்பத்தின் நலனில் அக்கறை உடைய நெருங்கிய நண்பர் ஒருவர், சென்ற இதழில் வெளியான கட்டுரையைப் படித்து விட்டு (நாவல் பிறந்த கதை) போன் செய்தார்.

“கல்கி சக எழுத்தாளர் ஒருவரின் நாவலைக் குறை வாக மதிப்பிட்டு அலட்சிய மாகப் பேசியதாக எழுதி யிருக்கிறாய். உன் சகோதரி ஆனந்தி, பதிலுக்கு, கல்கி அவர்களின் சிவகாமியின் சபதத்தையே குறைத்து மதிப்பிட்டது போலவும் எழுதியிருக்கிறாய். இதெல் லாம் எனக்கு ஒப்புதலாய் இல்லை’ என்று கருத்து தெரிவித்தார்.

சொன்னவர், கல்கி அவர்களை நன்கு அறிந்தவர். எனவே என் எழுத்தில்தான் ஏதோ குறை இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரைப் போலவே வேறு பலரும் நினைக்கக்கூடும். ‘இதனால் அறியப்படுவது யாதெனில்’ என்று உணர்த்துவதுபோல எழுதுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. இருந்தாலும் சில சமயம் அது அவசியமாகிறது என்று உணர்கிறேன்.

கல்கி அவர்கள் சக எழுத்தாளரை மதிக்காமலில்லை. அப்படி இருந்தால் அவருடைய நாவலைப் படித்தே இருக்க மாட்டார். சிலரது எழுத்தை மதிக்கா விட்டாலும் எழுதியவரை மதிப்பவர் கல்கி. ஆனந்தியிடம் அவர் பேசியது ஒரு வாதத்தைக் கிளறுவதற்காகத்தானே தவிர, சக எழுத்தாளரைக் குறைத்து மதிப்பிடு வதற்காக அல்ல. அதேபோல சகோதாரி அவருக்குப் பதிலளித்தது, எங்களுக்கு அப்பா அளித்திருந்த சுதந்திரத்தின் வெளிப் பாடுதானே தவிர, அவளுடைய அதிகப் பிரசங்கித்தனம் அல்ல. சிவகாமியின் சபதத் துக்கு சிறப்பாயிரம் எழுதக் கூடியவள் ஆனந்தி. விஷயம் என்னவென்றால், கல்கி அவர்களுக்கு விவாதங்களில் நம்பிக்கைஉண்டு. கலந்துரையாடலும் அதில் இடம் பெறக்கூடிய வாதப் பிரதிவாதங்களும், தயிரைக் கடைந்தால் வெண்ணெய் திரள் வதுபோலத் தெளிவை உண்டாக்கும் என்பதை உணர்ந்தவர். ராஜாஜியுடன் அரசியலை விவாதிப்பார்; டி.கே.சி.யுடன் இலக்கியக் கருத்துப் பரிமாற்றங்கள் நடக் கும். ஒரு பொருளாதார விஷயம் பற்றி எழுத வேண்டுமென்றால் அது குறித்த விஷயஞானமுள்ளவரிடம் பேசுவார்; விவாதிப்பார். தொடர்கதை எழுதுமுன்னர் என்னிடமும் சகோதரியிடமும் கதை சொல்லுவார். எங்கள் முக பாவங்களை உற்று நோக்குவார். அதன் மூலமே கதை யின் சுவாரஸ்யத்தை எடை போடுவார்.

சிறு வயதிலேயே கதாகாலட்சேபங் கள் பலவற்றைக் கேட்டுக் கேட்டு, கிராமத்தில், வீட்டுத் திண்ணையில் நின்று, ஊர் மக்களுக்குக் கதை சொல்லி மகிழ் வித்தவர் கல்கி. ஆனந்தியும் நானும் குழந்தைகளாக இருந்தபோது, ஊஞ்சலில் அவருக்கு இருபுறமும் அமர்ந்து ராமா யணம், மகாபாரதம் உள்பட பல கதைகள் கேட்போம். கொஞ்சம் எங்களுக்கு வயதான பிறகு, அவர் எழுதப்போகும் தொடர்கதைகளையே பல்வேறு உணர்ச்சி கள் தொனிக்கச் சொல்வார். கேள்விகளை வரவேற்பார். கதை மேலே தொடரும். சில சமயம் ஒரு கேள்வியின் விளைவாக கதையில் ஒரு புதிய சிந்தனை தோன்றும்; திருப்பம் ஏற்படும்.

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம் எழுதி வருகையில், ஒரு நாள் கல்கி சிரசாசன நிலையில் இருந்தார். நேரம் பார்ப்பது என் வேலை. பாடப் புத்தகமும் கடிகாரமுமாக நான் பக்கத்தில் அமர்ந்திருந் தேன். ஐந்து நிமிஷங்களுக்குப் பதில் மூன்றாவது நிமிஷம் இறங்கிவிட்டார். நான் கவலை அடைந்து, ‘என்ன? என்ன?’ என்று சற்று பதற்றத்துடன் அவரை நெருங்கினேன்.

“ஏண்டா! சேந்தன் அமுதனை சோழ சக்கரவர்த்தியாக்கிவிட்டால் என்ன?’ என்று என்னைக் கேட்டார். சிரசாசன நிலையிலும் அவர் மனம் பொன்னியின் செல்வனில்தான் இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட நான், “லாஜிக் சரியாக அமையுமானால் செய்ய லாம்’ என்று சொன்னேன். “ஒரு ண்தணூணீணூடிண்š ணாதீடிண்ணா இருக்கும்.’

அடுத்து, சவாசன நிலையிலும் அவர் உள்ளம் சேந்தன் அமுதனிடம்தான் இருந்தது. பின்னால் அந்தப் புதிய திருப்பத்தை அவர் விவரித்தபோது கவனமாகக் கேட்டு, கேள்விகளையும் எழுப்பினேன். பதில் கூறும்போதே பிசிறுகளை நீக்கி கதை யோட்டத்தைக் கச்சிதப்படுத்தினார்.

என்னைவிடவும் என் சகோதரிக்கு கொஞ்சம் சலுகையும் அதிகம்; துணிவும் மிகுதி. சிவகாமியின் சப தத்தை உள்ளடக்கிய அவளுடைய ஓர் எதிர் வாதத்துக்காக கல்கி கோபமடையவில்லை என்பதுதான் முக்கியம். மாறாக, ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டார். சாதாரணமாக எல்லா நாவல்களிலுமே கதாநாயகன், கதாநாயகி, வில்லன் அல்லது வில்லி என்று கதாபாத்திரங்கள் அமையும். கல்கி இந்த முக்கோணத்தை உடைத் தெறிந்தார் தமது அலை ஓசை நாவலில் (எப்படி என்பதை சென்ற வாரமே விளக்கி யிருக்கிறேன்). இதை அவர் சாதிப்பதற்கு, ‘ராமாயணத்தின் சாயல் சிவகாமியின் சபதத்தில் படிந்திருக்கிறது’ என்று ஆனந்தி கூறியது ஒரு தூண்டுகோலாக அமைந்தது.

ஆனந்தி அவர் எழுத்தில் குறை கண்டு விமர்சித்த வேறு தருணங்களும் உண்டு. வந்தியத்தேவன், பல்லக்கில் செல்லும் நந்தினியை முதன் முதலாகச் சந்திக்கும் சாட்சி, அலெக்ஸாண்டர் டூமா எழுதிய த்ரீ மஸ்கிடீர்ஸ் நாவலில் வரும் ஒரு காட்சி போலவே அமைந்திருப்ப தாக அவள் சொன்னதை கல்கி ஒரு தார்மிகத்
துணிவுடன் ஏற்றுக்கொண்டார். “சில சமயம் இப்படித்தான் தவிர்க்க முடியாதபடி பாதிப்பு ஏற்படும்; தொடர்ந்து படித்து வா, அப்புறம் சொல்லு’ என்றார். ஆயிரம் டூமாக்கள் வந்தாலும் நெருங்க முடியாத அளவுக்கு பொன்னியின் செல்வன் தன்னிகரற்ற ஓர் இலக்கியச் செல்வமாகத் தமிழனுக்குக் கிடைத்தது.

1954 தீபாவளி சமயம், உடல் பரிசோதனைகளுக்காக கல்கி, ஜி.ஹெச்.சில் சேர்க்கப்பட்டார். மருத் துவமனையில் இருந்தபடியே தீபாவளி மலருக்காக ‘மயில் விழி மான்’ என்ற கதையை எழுதினார். அதைப் படித்த ஆனந்தி, “கதையெல்லாம் பிரமாதம்தான்; ஆனால், இது என்ன மயில் விழி மான் என்று ஒரு தலைப்பு? நீங்கள் தரக்கூடிய தலைப்பாகவே இல்லை. பகீரதன்தான், ‘தேன்மொழியாள்’, ‘குயில் குரலாள்’ என்றெல்லாம் தலைப்பு தருவார்’ என்றாள்.

கல்கி ‘இடிஇடி’ என்று சிரித்துவிட்டு “அப்படியா! பகீரதன் என்னிடமிருந்து கற்றுக்கொள்வதற்குப் பதில் அவனிட மிருந்து நான் கற்றுக்கொள்ள ஆரம் பித்துவிட்டேன் போலிருக்கு!’ என்று கூறி, உடல் உபாதைகளையும் மறந்து மேலும் சிரித்தார்!

Posted in Anandhi, Anandi, Authors, Bageeradhan, Bageerathan, Bagiradhan, Bagirathan, discussion, Faces, Fiction, Kalki, Krishnamoorthy, Krishnamurthy, Literature, Memoirs, Narration, Novels, people, Ponniyin Selvan, Rajendhiran, Rajendiran, Rajendran, Rajenthiran, Story, Vikadan, Vikatan, Writers | Leave a Comment »

La Sa Ra: Lalgudi Saptharishi Ramamirtham: Anjali, Memoirs, Reviews

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

——————————————————————————————————————————————

எழுத்தாளர் லா.ச.ரா. மறைந்தார்

சென்னை, அக். 30: “லாசரா’ என்று அழைக்கப்படும் எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம் (92) சென்னை அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (அக்.30) அதிகாலையில் காலமானார். அவர் இரு தினங்களாக உடல் நலம் இல்லாமல் இருந்தார்.

அவருக்கு மனைவி ஹேமாவதி, எழுத்தாளர் லா.ரா. சப்தரிஷி உள்ளிட்ட நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

பெங்களூரில் 1916-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த லா.ச.ரா.வின் பூர்விகம் லால்குடி.

ஆரம்ப காலத்தில் அவர் எழுதிய 5 கதைகள் “மணிக்கொடி’ இதழில் பிரசுரமாகி சிறப்புப் பெற்றன.

மனித மனத்தின் மெல்லிய பக்கங்களைத் தனக்கே உரித்தான பாணியில் எழுதி, எழுபதாம் ஆண்டுகளில் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்குத் தூண்டுகோலாய் அமைந்த லா.ச.ரா. தனது 92-வது பிறந்த நாளிலேயே மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • லா.ச.ரா. எழுதிய “சிந்தாநதி’ நாவலுக்கு 1989-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
  • உலகக் கவிஞர்கள் மன்றத்தின் கெüரவ விருது (1982),
  • தமிழக அரசின் கலைமாமணி விருது,
  • காஞ்சி சங்கராசாரியார்கள் இணைந்து அளித்த “கதாரஸன் சதுரஹ’ என்ற விருது,
  • இலக்கியச் சிந்தனை விருது (1995),
  • அக்னி அட்சர விருது (1992),
  • 1997-ல் வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விருது ஆகியவை இவருக்குக் கிடைத்த சிறப்புகள்.

17 வயதில் அவர் “தி எலிபென்ட்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய கதைதான் முதலில் பிரசுரமானது.

லா.ச.ரா. எழுதிய 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 புதினங்கள், 6 கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவர் “அமுதசுரபி’ இதழில் “தி பாய் ப்ரெண்ட்’ என்று எழுதியதே அவரது கடைசி கதையாகும்.

மத்திய அரசின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி மேலாளராக ஓய்வு பெற்றவர் லா.ச.ரா.

அவரது மகன் சப்தரிஷியின் வீட்டு முகவரி: ஏ 6, அட்சயா ஹோம்ஸ், சரஸ்வதி நகர், திருமுல்லைவாயல் (சேகர் ஸ்டோர்ஸ் அருகில்), சென்னை -62. தொலைபேசி: 26375470, செல்: 94444 97502.
——————————————————————————————————————————————

சிந்தாநதி சகாப்தம்: – அசோகமித்திரன்

சென்ற திங்கள்கிழமை 29-ம் தேதி மறைந்த லா.சா.ராமாமிர்தம், 1916-ல் லால்குடியில் பிறந்தார். அன்று கீழ்மத்திய வகுப்பினருக்குக் கிடைத்த எளிய படிப்பை வைத்துக் கொண்டே அவர் ஆங்கிலத்தில் எழுத முயன்றார். அன்று அவருடைய பெரிய ஆதரிசம் இளம் அமெரிக்க எழுத்தாளர் ஹெமிங்க்வே. ஆனால், விரைவில் அவருடைய உண்மையான சாதனம் “தமிழ்’ என்று தெரிந்து விட்டது.

அதன்பின் 50 ஆண்டு காலம் லா.சா.ரா. வியந்து ஆராதிக்கத்தக்க தமிழ் எழுத்தாளராக விளங்கினார்.

சிறுகதைகள் எழுதிவந்த அவரை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் “புத்ர’ என்ற நாவல் எழுத வைத்தது. அதன்பின் அவர் இரு நாவல்கள் எழுதினாலும் அவருடைய இலக்கியச் செல்வாக்கு சிறுகதை வடிவத்தில் இருந்தது.

அவருக்கு 1989-ல் “சாகித்ய அகாதெமி விருது’ பெற்றுத் தந்த சுயசரிதை “”சிந்தாநதி” தினமணி கதிரில் தொடராக வந்தது.

ஒரு விதத்தில் லா.சா.ரா. அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அன்பு, சாந்தம், பரிவு, தியாகம் ஆகிவற்றுடன் கோபம், சாபம், ரெüத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை.

தமிழ் வரையில் இந்து மத தெய்வங்களை அவர் போல இலக்கியக் குறியீடாக பயன்படுத்தியவர் எவருமே இல்லை எனலாம். அதேபோல இந்தியத் தத்துவச் சொற்களையும் அவர் போலக் கையாண்டவர் தமிழில் கூற முடியாது. இக் குறியீடுகள் தவிர அவருடைய படைப்புகளில் இறுக்கமான கதையம்சமும் இருக்கும். ஒரு முற்போக்கு விமரிசகர் இவரையும், இன்னொரு எழுத்தாளரான மெüனியையும் இணைத்து மேலோட்டமாகக் குறிப்பிட்டதைப் பலர் திருப்பி எழுத நவீன தமிழ் இலக்கிய உலகில் ஒரு விசித்திரமான பிரிவு ஏற்பட்டது. அது இரு எழுத்தாளர்களுக்கும் நியாயம் இழைக்காததுடன் அத்தகைய விமரிசகர்களுக்குப் படைப்புகளுடன் நேரிடைப் பரிச்சயம் இல்லை என்றும் தெரியப்படுத்தி விடும்.

லா.சா.ரா.வின் சிறுகதைகளைப் பத்திரிகையில் படித்து அவரைத் தேடிப் போய் அவரை நூல் வடிவத்தில் வாசகர்களுக்கு அளித்தப் பெருமை கலைஞன் மாசிலாமணி அவர்களைச் சேரும். சுமார் 7 ஆண்டுகள் முன்பு லா.சா.ரா.வைக் கெüரவிக்கும் விதத்தில் அவருடைய ஆயுட்காலப் படைப்பிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு ரீடர் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. லா.சா.ரா.வுக்கு இருந்த இலக்கியச் செல்வாக்குக்கு இணையாக அவருக்கு பரிசுகள், விருதுகள் அளிக்கப்படவில்லை.” சிந்தாநதி’ என்ற படைப்புக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருது கூட மிகவும் காலம் கடந்து அளிக்கப்பட்ட ஆறுதல் பரிசு.

லா.சா.ரா.வின் படைப்புகள் பல இந்திய மற்றும் அயல் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட “மஹஃபில்’, பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட “நியூ ரைட்டிங் இன் இந்தியா’ செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.சா.ரா.வைக் கருதினார்.

நூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகள் லா.சா.ரா. எழுதியிருந்தாலும் அவருடைய “பாற்கடல்’ என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய “புத்ர’ மற்றும் “அபிதா’ நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் “சிந்தாநதி’ அவருடைய இயல்பானக் குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டிருக்கும். லா.சா.ரா. எழுதிய காலத்தில் உயரிய நவீன தமிழ்ப் படைப்பிலக்கியம் புதுமைப்பித்தன், க.நா.சுப்பிரமணியன், கு.ப.ராஜகோபாலன் என்று ஒரு அணியும் கல்கி, ஜெயகாந்தன், விந்தன் என்றொரு அணியுமாக இருந்தது. இரண்டிலும் அடங்காதது லா.ச.ரா. ஒரு தனிப்பாதையில் எழுதினார். அவருடன் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது.
——————————————————————————————————————————————

தூக்கமே! நீ அதிருஷ்டசாலி! – லா.ச.ராமாமிருதம் :: appusami.com

தூக்கமே, நீ இலாதுபோனால் துக்கங்களுக்கு முடிவு ஏது? மறதி எனும் மருந்து தந்த மாபெரும் மருத்துவம் அல்லவா நீ?

உன் வருகை தெரிகிறது; ஆனால் நீ வந்தது அறியேன்; அறிய நீ விடுவதில்லை.

நான் விழித்திருக்கையிலேயே நீ இழைத்த மருந்தை என் கண் சிமிழில் எப்போது வழித்தாய்? இமைமீது உன் முத்தத்தின் மெத்துதான் இறுதியாக நான் அறிந்தது. என் கண்ணுக்குள் நீ வைத்த மையில் யாவும் மறைந்த இழைவில் நானும் மறைந்தபின் என் கண்ணுக்குள் நீ வந்து புகுந்தது எப்போ? வந்து அங்கு நீ என் செய்கிறாய் என்று நான் அறிய முடியுமா?

உன்முகம் ஆசைமுகம். எப்போதும் மறைவு முகம் எதிர்ப்பட்டு விட்டால் உண்மை உரு தெரிந்துவிடும் என்ற பயமா?

நான் தேடியோ, நீயாக வந்தோ, எப்படியோ நேர்ந்து விடுகிறாய்.

நினைவோடு உன்னை நான் சிந்திக்க நேர்கையில் உன்மை நான் நினைப்பது எப்படி எப்படியோ. தினப்படி உன் மடியில் என்னைத் தாலாட்டு மறுதாய்.

ஆணுக்குப் பெண், பெண்ணுக்கு ஆண், நினைவுக்கு வைப்பாட்டி நீ மானம் அறியாதவரேயில்லை.

மரணத்தின் தன்மையைக் கரணத்தில் ஊட்டும் உபதேச மோனகுரு.

உயிருக்கு காவல். மரணத்தின் தாதி.

என் துயரங்கள் மறக்க உன்னைத் தேடுகிறேன். ஆனால் நீ வந்ததும் உன்மை மறந்து விடுகிறேன். நீ வந்ததும் என்னையே எனக்கு நினைப்பில்லை. உன்னை நினைவில் நிறுத்துவது எப்படி? உன் நன்றி நான் உன்னை மறந்தாலும் என்னை நீ மறப்பதில்லை. இதுவே என் பெருமை, என் வாழ்வு. நன்மையின் தன்மையே இதுதான். இருவர் ஞாபகத்தை அது நம்பியில்லை, ஒருவர் செய்கையில் வேரூன்றி விட்டபின்.

உனை நான் மறந்தாலும், உனக்கு என் நினைவிருக்க, நீ என் சுமைதாங்கி.

நினைவும் மறதியும், விழிப்பும் தூக்கமும் மாறி மாறி இரவு குவிந்த கண் மலரிதழ், செம்முலாம் உன் கண்டு விரிகையில், இன்றைய விழிப்பில் பிறந்த வண்ணங்கள் கூட்டி நேற்றைய நினைப்பில் வரைந்த சித்திரம் ஒளியும் நிழலுமாய் உலகம் தக தக அழகுகள் வீசி காக்ஷ¢ விரியுதம்மா. எல்லாம் இன்பமயம். உடலும் மனமும் லகுவும் லயமுமாய் சிறுத்தையின் சோம்பல் முறித்தெழுகின்றன.

– நன்றி கணையாழி
——————————————————————————————————————————————

லா.ச.ராமாமிர்தம்

– மதுசூதனன் தெ.|பிப்ரவரி 2002

தமிழ்ப் புனைகளத்தில் ‘லா.ச.ரா’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. தமிழ்ச் சிறுகதை மரபு தனக்கான பயணிப்பில் நின்று கொண்டிருந்த போது தனது திறன்கள் மூலம் படைப்புலகில் புதுமைகளை கொண்டு வந்தவர்.

”பொதுவாக ஒரு தத்துவசாரமும் உக்கிரமான ஆத்மதாபமும் என் எழுத்தின் உள்சரடாக ஓடுவதே என் தனித்துவம்” என்று தன்னைப் பற்றிய சுய அறிமுகத்தில் குறிப்பிடுகிறார்.

லால்குடியில் பிறந்த ராமாமிருதம் 1937ல் எழுதத் தொடங்கி தனக்கென தனிப்பாணி ஒன்றை அமைத்துக் கொண்டார். தனது பதினைந்து பதினாறாவது வயதில் எழுத ஆரம்பித்த அவரது வேகம் லாசராவுக்கு ஓர் தனித்தன்மை கொண்ட ஓர் எழுத்துநடையைக் கொடுத்துள்ளது. சிறுகதை, கவிதை, நாவல்கள், கட்டுரைகள் என பல களங்களிலும் இயங்கியவர். ஆனாலும் எழுதிக் குவித்தவர் அல்ல. ஆனால் அவர் எழுதியவை ஆழமும் அழகும் தனிச்சிறப்பும் கொண்டவை.

‘சாதாரணமாகவே நான் மெதுவாக எழுது பவன். ஆனால் சதா எழுதிக் கொண்டிருப்பவன்’ என்ற கொள்கையை வரித்துக் கொண்டிருந்தவர். மேற்கத்திய இலக்கியங்களில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தார். அவரது பாத்திரங்கள் பல அவராகவே ஆகி, வார்த்தையாக, கவிதையாக, துடிப்பும் வெடிப்புமாகப் பேசு கின்றது. பேசிக் களைத்தால் சிந்திக்கின்றது. அதுவும் களைப்பாகும் போது, அடிமனம் விடு விப்படைந்து திசையின்றி ஓடுகிறது. வாசக அனுபவத்தில் பல்வேறு சிதறல்களை மனவுணர்வுகளை, மனநெருக்கடிகளை, புதிய உணர்திறன்களை கிளறிவிடுகிறது.

சூழ்நிலைகளில் பாத்திரவார்ப்புகளில் அவற்றின் உணர்ச்சித் தீவிரங்களில் சொல்லா மலே உணர்த்தும் நளினம் கதை முழுவதும் இயல்பாகவே இருக்கும். நனவோடை, மன ஓட்டம், சுயஅமைவு கதையோட்டத்தின் கூட்டமைவுக்கு உயிர்ப்பாக உள்ளன. வாசகர் களின் கற்பனை அனுபவத்துக்கு அப்பால் புதிய தெறிப்புகளாக புதிய உணர்த்திறன்களாக லா.ச.ரா எழுத்துக்கள் உள்ளன.

லாசராவின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் யாவும் மனிதமனத்துடன் ஆத்மவிசாரணையை வேண்டி நிற்கும் படைப்புகளாகவே உள்ளன. லாசராவின் படைப்புலகு, எழுத்து நடை, தமிழ்ப்புனை கதை மரபின் வளர்ச்சிக்கான ஊக்கிகளாக அமைந்துள்ளன. அன்பு, காதல், தியானம், தியாகம் இவற்றின் அடிசரடாக லாசராவின் உலகம் இயங்கி புதிய வாழ்வியல் மதிப்பீடு களை நமக்கு வழங்கிச் செல்கின்றன.

நானே என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
இதற்கு எழுத்து எனக்கு வழித்துணை
ஒருவனுக்கு அவன் பக்தி
ஒருவனுக்கு அவன் ஞானம்
ஒருவனுக்கு அவன் குரு
அதுமாதிரி எழுத்து எனக்கு வழித்துணை
ஒரு சமயம் அது என் விளக்கு
ஒரு சமயம் சம்மட்டி
ஒரு சமயம் கம்பு
ஒரு சமயம் கத்தி
ஒரு சமயம் கண்ணாடி

இவை லாசாராவுக்கு மட்டுமல்ல அவரது படைப்புகளுடன் பரிச்சயம் கொள்ளும் வாசகர்களுக்கும் நேர்வது.

லாசராவின் சில படைப்புகள்:

சிறுகதைகள்: ஜனனி, தயா, அஞ்சலி, அலைகள், கங்கா

நாவல்கள்: அபிதா, கல்சிரிக்கிறது, புத்ரா

நினைவுகள்: சிந்தாநதி, பாற்கடல்

கட்டுரைகள்: முற்றுப்பெறாத தேடல், உண்மையான தரிசனம்

மதுசூதனன்
———————————————————————————————————————————-

தனிமையின் நிறம்
எஸ். ராமகிருஷ்ணன்
குற்றாலத்தின் தேனருவிக்குப் போகின்ற வழியில் உள்ள ஒரு பாறை இடுக்கில் படுத்துக்கிடந்த வயதானவர் ஒருவரைக் கண்டேன். அழுக்கேறிய உடையும், பிசுக்குப் பிடித்த தலையும், பிரகாசிக்கும் கண்களும் கொண்டவராக இருந்தார். யாருமற்ற மலையின் மீது அவர் எப்படி வாழ்கிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு, ‘‘எப்படித் தனியாக வாழ்கிறீர்கள்? நீங்கள் சாமியாரா?’’ என்று கேட்டேன்.

அவர் சிரித்தபடி, ‘‘நான் சாமி இல்லை. சாதாரண ஆசாமி. இங்கே இருப்பது பிடித்திருக்கிறது. தங்கிவிட்டேன். நான் தனியாக வாழவில்லை. இத்தனை மரங்கள், பறவைகள், அணில்கள், எறும்புகள் என ஒரு பெரிய உலகமே என்னைச் சுற்றி இருக்கிறதே!’’ என்றார். தவறு என்னுடையது என்பது போலத் தலைகுனிந்தேன். அவர் சிரித்தபடியே தொடர்ந்து சொன்னார்…
ÔÔசூரியனையும் சந்திரனையும் போல் தனிமையானவர்கள் உலகில் வேறு யாருமே கிடையாது. மனிதனுடைய பெரிய பிரச்னை அடுத்த மனிதன் தான். கூடவே இருந்தாலும் பிடிக்காது. இல்லாவிட்டாலும் பயம்!ÕÕ

அருவியை விடவும், என்னைச் சுத்த மாக்கின இந்தச் சொற்கள். வாழ்வின் நுட்பங்களை ஞான உபதேசங்களாக வாசிப்பதைவிடவும் வாழ்ந்து கண்டவனின் நாக்கிலிருந்து கிடைக்கும் போதுதான் நெருக்கமாக இருக்கிறது.

தனியாக இருப்பது பயமானது என்ற எண்ணம் குழந்தையிலிருந்தே நம்முள் ஊறத் துவங்கிவிடுகிறது. உண்மையில் தனிமை பயமானதா? நிச்சயமாக இல்லை. தனிமை ஒரு சுகந்தம். அதை நுகர்வதற்குத் தேவை மனது மட்டுமே!

சில நாட்களுக்கு முன், கடற்கரையில் இரவில் அமர்ந்திருந்தேன். குழந்தை விளையாடிப் போட்ட பலூன் ஒன்றை கடல் அலை இழுத்துக்கொண்டு இருந்தது. பலூன் உள்ளே போவதும் கரையேறுவது மாக ஒரு நாடகம் நடந்துகொண்டே இருந்தது. ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு பெரிய கடலால் இந்தச் சிறிய பலூனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. எவ்வளவு பெரிய அலைகளின் கைகளால் நீட்டிப் பிடித்தாலும், பலூன் தண்ணீரில் மிதந்துகொண்டுதான் இருக் கிறது. ஆனால், அலைகள் சலிப்புற்று நிறுத்துவதேயில்லை.

நம் தனிமையும் இந்த பலூன் போல அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும், தன்னியல்பு மாறாமல் இருந்துகொண்டே இருக்கிறது. வீட்டில் யாருமற்றுப் போன நேரங்களில்தான் நாம் தனிமையாக இருப்பதாக உணர் கிறோம். அது நிஜமானது இல்லை. ஒவ்வொரு நிமிஷமுமே நாம் தனிமை யானவர்கள்தான்!

நாம் பார்க்கும் காட்சியை, நாம் பார்த்த விதத்தில் இன்னொருவர் பார்ப்பதில்லையே! சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, படிக்கும் போது, உறங்கும்போது என எப்போ துமே தனிமையாகத்தான் இருக்கிறோம். ஆனால், அதை அறிந்துகொள்வதில்லை. இயற்கையின் முன் மட்டும்தான் தனிமையின் வாசனையை நம்மால் நுகர முடிகிறது. பிரமாண்டமான மலையின் உச்சி யில் நின்றபடி சூரிய அஸ்தமன காட்சியை ஒருமுறை கண்டேன்.

பறவை சிறகடித்துக்கொண்டு இருப்பது போல, மேற்கு வானில் சூரியன் அசைந்து அசைந்து உள்ளே ஒடுங்குவதைக் கண் டேன். பார்த்துக்கொண்டு இருந்த போதே, வெளிச்சம் மறைந்து இருட்டு கசிந்து வரத் துவங்கி, கண்முன் இருந்த பள்ளத்தாக்கும், மரங்களும் காணாமல் போகத் துவங்கின. அதுவரை இல்லா மல், இருட்டின் நெருக்கத்தில்தான் நான் தனியாக இருக்கிறேன் என்ற பயம் எழும்பத் தொடங்கியது. ஆச்சர்யமாக இருந்தது. நம் தனிமையை மறைக்கும் கைகள் சூரியனுடையவைதானா?

தனிமையாக இருப்பது என்றவுடனே மற்றவர்களை விட்டு விலகிப் போய்விடுவது என்று நம் மனதில் தோன்றுகிறது. இரண்டும் ஒன்றல்ல. தனியாக இருப்பது என்பது மாறாத ஒரு நிலை. எத்தனை ஆயிரம் நிறைந்த கூட்டத்திலும்கூட நாம் தனியாள்தானே! கடலில் நீந்துகிறோம் என்றால், கடல் முழுவதுமா நீந்துகிறோம்? ஆறடிக்குள்தானே? அப்படி, வாழ்விலும் பகுதி அனுபவத்தை முழு அனுபவமாக மாற்றிக்கொண்டு விடுகிறோம்.

பௌத்த ஸ்தல மான சாஞ்சியில் ஒரு பிக்குவைச் சந்தித்தேன். அவர் நேபாளத் திலிருந்து நடந்தே வந்திருக்கிறார். அவரது பையில் பௌத்த சாரங்கள் அடங்கிய புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தில் உலர்ந்து போன அரச மர இலை ஒன்றை வைத்திருந்தார். ‘எதற் காக அந்த இலை?’ என்று கேட்டேன்.

அவர் அமைதியான குரலில், ‘ஒரே மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு இலையும் ஒரு வடிவத்தில் இருக்கிறது. ஒரு நேரம் அசைகிறது… ஒரு நேரம் அசைய மறுக்கிறது. ஒரு இலை காற்றில் எந்தப் பக்கம் அசையும் என்று யாருக்காவது தெரியுமா? அல்லது, எப்போது உதிரும் என்றாவது தெரியுமா? இலை மரத்திலிருந்தபோதும் அது தனியானது தான். மரத்திலிருந்து உதிர்ந்த பிறகும் அது தனியானதுதான். உலகில் நாமும் அப்படித்தானே வாழ்கிறோம்! அதை நினைவுபடுத்திக்கொள்ளத்தான் இந்த இலை’ என்றார். மரத்தடியிலிருந்து பிறக்கும் ஞானம் என்பது இதுதானோ என்று தோன்றியது.
ஒரு வெளிநாட்டுக்காரன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக அந்த பிக்குவை அருகில் அழைத்தான். அவர் எழுந்து ஒரு எட்டு நடந்துவிட்டு, மண்டியிட்டு தலையால் பூமியை வணங்கினார். திரும் பவும் மறு எட்டு வைத்துவிட்டு, அதே போல் தலையால் பூமியை வணங்கினார். எதற்காக அப்படி நடந்துகொள்கிறார் என்று எவருக்கும் புரியவேயில்லை.
அவர் சிரித்தபடியே, ‘பூமி எத்தனை பெரிதானது! மனித கால்களால் அதை முழுவதும் சுற்றி நடந்து, கடந்து விட முடியுமா என்ன? அதை விடவும் பேருண்மை என்ன இருக்கிறது? அதை புரிந்துகொண்டதால்தான் இப்படிச் செய்கிறேன்’ என்றார்.

‘இப்படி நடந்தேதான் நேபாளத் திலிருந்து வந்தீர்களா?’ என்று வெள்ளைக் காரன் கேட்க, ‘இதில் ஆச்சர்யப் படுவதற்கு என்ன இருக்கிறது? பத்து வயதிலிருந்து நான் இப்படித்தான் எங்கு போனாலும் நடந்தே போகிறேன். தற்போது எனக்கு வயது எழுபதாகிறது’ என்றார் பிக்கு.
பிக்கு என்னைக் கடந்து போய்விட்ட பிறகும், அவரது புத்தகத்தில் மறைந்திருந்த இலை மனதில் படபடத் துக்கொண்டே இருந்தது. ஒரு இலை காற்றில் எந்த பக்கம் அசையும், எப்போதும் உதிரும் என்பது ஏன் இன்று வரை ஆச்சர்யமாக இல்லை? தனிமையை இதைவிட வும் எளிமையாக விளக்க முடியுமா, என்ன?

புறநானூற்றுப் பாடல் ஒன்றில், இறந்து போன தன் தலைவனைப் பிரிந்த துக்கத்தில் தலைவி, ‘தேர்ச் சக்கரத்தில் ஒட் டிய பல்லியைப் போல அவரோடு வாழ்ந்து வந்தேன்’ என்கிறாள். எத்தனை நிஜமான வார்த்தை! தேர்ச் சக்கரத்தில் ஒட்டிக் கொண்ட பல்லி, தன் இருப்பிடத்தை விட்டு நகர்வதே இல்லை. ஆனாலும், தேரோடு எத்தனையோ தூரம் பயணம் செய்திருக் கிறது. எத்தனையோ மேடு பள்ளங்களைக் கடந்து போயிருக் கிறது. பெண்ணின் தீராத் தனிமையை விளக்கும் கவித்துவ வரிகள் இவை.

தனிமை உக்கிரம் கொள்ளும்போது அதை நாம் எதிர்கொள்ள முடியாமல் எதற்குள்ளாவாவது மூழ்கிக்கொண்டு விடுகிறோம். பெரும்பான்மை குடும்பங் களில் பெண்கள் இருப்பு இப்படித்தான் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் துணை வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டு ஒருவரோடு வாழத் துவங்கி, அந்தத் துணை ஏற்படுத்தும் வலியையும் நெருக்கடியையும் தாங்கிக் கொள்ள முடியாமலும், அதை விட்டு விலகி தனது வாழ்வை எதிர்கொள்ள முடியாமலும் அல்லாடுகிறார்கள்.

ஏதோ சில அரிய நிமிஷங்கள்தான் அவர்களை, தான் யாருடைய மனை வியோ, சகோதரியோ, தாயோ இல்லை; தான் ஒரு தனியாள் என்று உணர்த்து கின்றன. அந்த நிமிஷம் கூடப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே புகையென மறைந்துவிடுகிறது.

வாழ்வு அனுபவங்களை உன்னத தரிசனங்கள் போல, கவிதையின்மொழியில் கதைகள் ஆக்கியவர் லா.ச.ராமாமிருதம். அவரது கதைகள் இசை யைப் போல நிசப்தமும், தேர்ந்த சொற்களின் லயமும் கொண்டவை. சொல்லின் ருசியைப் புரிய வைக்கும் நுட்பம் கொண்டது அவரது எழுத்து. லா.ச.ரா&வின் ‘கிரஹணம்’ என்ற கதை, ஒரு பெண் தன் தனிமையை உணரும் அபூர்வ கணத்தைப் பதிவு செய்துள்ளது.

கதை, சூரிய கிரஹணத்தன்று கடலில் குளிப்பதற் காகச் செல்லும் கணவன்&மனைவி இருவரைப் பற்றியது. மனைவி கடலில் குளிக்கப் பயந்து போய் வரமாட்டேன் என்கிறாள். கணவன் கட்டாயப்படுத்தி அழைத்துப் போகிறான். பயந்து பயந்து தண்ணீரில் இறங்குகிறாள். ஒரு அலை அவள் மேல் விழுந்து கணவன் கையிலிருந்து அவளைப் பிடுங்கிக் கடலினுள் கொண்டு போகிறது.

மூச்சடைக்கிறது. ஒரு நூலளவு மூச்சு கிடைத்தால்கூடப் போதும் என்று போராடுகிறாள். அலை புரட்டிப் போடுகிறது. மூச்சுக் காற்று கிடைக்கிறது. தன்னை யாரோ காப்பாற்றியிருப்பது புரிகிறது. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு யாரோ ஒருவன் சிரித்தபடி நிற்கிறான். யார் அவன், எப்படி இவ் வளவு உரிமையாக கையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறான் என்று யோசிப்ப தற்குள் இன்னொரு அலை வந்து அவளை உள்ளே இழுத்துப் போகிறது.
அவள் தண்ணீருள் திணரும் நிமிஷத்துக்குள், தான் ஒரு பெண்ணாகப் பிறந் ததுதான் இத்தனைத் துயரத்துக்குக் காரணம் என்று அவளுக்குப் புரி கிறது. தனது ஆசைகளை, தாபங்களை மறைத்துக்கொண்டு எத்தனை காலம் வாழ்ந்து வந்திருக்கிறோம், தனது சுயம் வாசிக்கப்படா மல் வீணயின் தந்தியில் புதைந்துள்ள இசை யைப் போல தனக்குள் ளாகவே புதைந்து போய்க் கிடப்பது புரிகிறது.

அதே ஆள் திரும்பவும் அவளைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றுகிறான். அவளது கணவன் சிறு தொந்தி தெறிக்க, பதறி ஒடி வருகிறார். காப்பாற்றியவன் சிரித்தபடியே, ‘இந்த அம்மா சாக இருந் தாங்க. நல்ல வேளை, நான் பார்த்துக் காப்பாற்றினேன்’ என் கிறான். அதுவரை நடந் தது அவளுக்குள் புதைந்து போய், அவள் பயம் கரைந்து வெறிச் சிரிப்பாகிறது. சிரிப்பு காரணமற்ற அழுகை யாக மாறி, ‘என்னை வீட்டுக்கு அழைச்சிட் டுப் போயிடுங்கோ!’ என்று கத்துகிறாள் என்ப தாக கதை முடிகிறது.

கிரஹணம் பிடித்தது போல வாழ்வில் இப்படிச் சில சம்பவங் கள் கடக்கின்றன. ஆனால், இந்த நிமிஷங் கள்தான் வாழ்வின் உண்மையான அர்த்தத் தைப் புரிய வைக் கின்றன.
சில வேளைகளில் தோன்றுகிறது… பிரமாண்டமான கடல் கூட தனிமையாகத் தானே இருக்கிறது! அதுவும் தனது தனி மையை மறைத்துக் கெள்வதற்குத்தான் இப்படி அலைகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இருக் கிறதோ?

‘அலைகளைச் சொல்லிக் குற்றமில்லை, கடலில் இருக்கும் வரை’ என்கிற நகுலனின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!

சாகித்ய அகாடமி பரிசு பெற்ற லா.ச.ராமாமிருதம் தனித்துவமான கதை சொல்லும் முறையும், கவித்துவமான நடையும் கொண்ட அரிய எழுத்தாளர். அவரது கதைகள் இயல்பான அன்றாட வாழ்வின் சித்திரங்களாகும். ஆனால், அதன் அடிநாதமாக மெய்தேடல் ஒன்று இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு சிற்பியைப் போல சொற்களைச் செதுக்கி உருவாக்கும் கவித்துவ சிற்பங்கள் என இவர் கதைகளைச் சொல்லலாம். அபிதா, பச்சைக்கனவு, பாற்கடல், சிந்தா நதி, த்வனி, புத்ரா போன்றவை இவரது முக்கிய நூல்கள். இவரது கதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட பல முக்கிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழ் உரைநடையில் லா.ச.ரா. நடை என தனித்துவமானதொரு எழுத்து முறையை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு. வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற லா.ச.ராமாமிருதம் தற்போது சென்னை, அம்பத்தூரில் வசித்து வருகிறார்.

விகடன் ——————————————————————————————————————————————

லா ச ராமாமிருதம் – கலாச்சாரம் ஒரு கதைச் சிமிழுக்குள்

வெங்கட் சாமிநாதன்

லா ச ரா எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின்பாதியில் இருந்தே இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் வெளியுலகத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. ராமாமிருதத்துக்கு இந்த வட்டத்துக்கு வெளியே உள்ள உலகம் இல்லாத உலகம்தான். அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலத் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள், என்ற குறுகிய உலகின் உள்ளேயே நாம் காலத்தின் பிரவாஹத்தைப் பார்க்கிறோம்.

அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிடம் இருந்து பெறப்பட்டதாகச் சொல்லப் பட்டாலும் ராமாமிர்தம் ஜாய்சின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார்.

டச்சு சைத்ரீகர் வான்கோ தனது சகோதரர் தியோவுக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றில் ஜப்பானிய உக்கியோயி கலைஞர்களைப்பற்றி எழுதுகிறார்: “தன் வாழ்க்கை முழுதும் அவன் ஒரு புல் இதழைத்தான் ஆராய்கிறான்: ஆனால் எல்லா தாவரங்களையும், மிருகங்களையும், பட்சிகளையும், மனித உருவங்களையும் அவனால் வரைந்துவிட ஒரு புல் இதழின் ஆராய்வில் சாத்யமாகிறது. இதற்குள் அவன் வாழ்க்கையே முடிந்து விடுகிறது. அவனுடைய ஆராய்ச்சி மேற்செல்ல முடியாது வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஏனெனில் வாழ்க்கை மிகக் குறுகியது.”

ரவீந்திரநாத் டாகூரின் கவிதை ஒன்றில் உலகத்தைச் சுற்றிக்காணும் ஆசையில் ஒருவன் மேற்கொண்ட நீண்ட பயணத்தில் எண்ணற்ற மலைகள், நதிகள், தேசங் கள் கடந்து கடைசியில் களைப் புற்றுத் தன் வீடு திரும்புகிறான்.

திரும்பியவன் கண்களில் முதலில் பட்டது, அவன் குடிசையின் முன் வளர்ந்திருந்த புல் இதழின் நுனியில் படிந்து இருந்த பனித்துளி. அவன் சுற்றிவந்த உலகம் முழுதையும் அப்பனித்துளியில் கண்டு அவன் ஆச்சரியப் பட்டுப் போகிறான். சுற்றிய உலகம் முழுதும் அவன் காலடியிலேயே காணக்கிடக்கிறது.

லா.ச.ராமாம்ருதம் எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின் பாதியிலிருந்தே, இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. அவர் எழுதியதெல்லாம் அந்த குடும்ப எல்லைக்குட்பட்ட உலகைப்பற்றித்தான், அதன் என்றென்றுமான குடும்ப பாசங்களும், உறவுகளும் குழந்தைகள் பிறப்பும், வீட்டில் நிகழும் மரணங்களும், சடங்குகளும்,பெண்களின் ஆளுமை ஓங்கி உள்ள உறவுகளும்தான் அவரது கதைகளின் கருப்பொருள்களாகியுள்ளன. அம்மாக்களும் மாமியார்களும் நிறைந்த உலகம் அது. அந்த மாமியார்களும் அம்மாக்களாக உள்ளவர்கள்தான்.

ராமாம்ருதத்திற்கு இந்த வட்டத்திற்கு அப்பால் உள்ள உலகம் இல்லாத உலகம்தான். இந்த வட்டத்திற்கு வெளியே சமூகத்தில், வெளி உலகில் நிகழ்ந்துள்ள நிகழும் எதுவும், சமூக மாற்றங்கள், தேசக் கிளர்ச்சிகள், போர்கள், புரட்சிகள், எதையும் ராமாம்ருதமோ, அவர் கதைகளின் பாத்திரங்களோ, கேட்டிருக்கவில்லை போலவும் அவற்றோடு அவர்களுக்கு ஏதும் சம்பந்தமில்லை போலவும் அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலவும் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள் என்ற குறுகிய உலகினுள்ளேயே நாம் காலத்தின் ப்ரவாஹத்தையும் பார்க்கிறோம்.

முப்பதுகளிலிருந்து அவருடைய கதைகளில் திரும்பத் திரும்ப வரும் காட்சிகளும், பாத்திரங்களும் 1890களைச் சேர்ந்தவைகளாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த உறவு களின் உணர்வுகளையும், பாசங்களையும், ராமாம்ருதம் தனது தூரிகையில் தீட்டிவிடுகையில், அவற்றிலிருந்து எழும் மன உலகத் தேடல்களும் தத்துவார்த்த பிரதிபலிப்புகளும் 1990களில் வாழும் நம்மைப் பாதிக்கின்றன. 2090-ல் வாசிக்கக்கூடும் ஒரு வாசகனின் மன எழுச்சிகளும் அவ்வாறு தான் இருக்கும் என்று நாம் நிச்சயித்துக்கொள்ளலாம்.

கண்கள் ப்ரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாம்ருதம் நம்மைக் கேட்கக்கூடும், “ருஷ்ய புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன? அது எம்மாற்றமும் அடைந்ததா? அல்லது பனித் துளிதான் உலகத்தில் நிகழும் எண்ணற்ற மாற்றங்களை, அது செர்னோபிள்ளிலிருந்து கிளம்பிய அணுப்புகை நிறைந்த மேகங்களேயாக இருந்தாலும், தன் பனித்திரைக்குள் ப்ரதிபலிக்கத்தான் தவறிவிட்டதா?” இந்த அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலை வணங்கித்தான் ஆகவேண்டும். இத்தனிமை கலைஞனாக சுய ஆராய்வில் தனது ஆளுமைக்கும் நேர்மைக்கும், ஏற்ப அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டது.

ஏனெனில் ராமாமிர்தம் அவர் காலத்திய சரித்திர நிகழ்வு களோடும் இலக்கிய நிகழ்வுகளோடும் வாழ்பவர். அவர் தனது மத்தியத்தர பிராமணக் குடும்பப் பிணைப்புகளையும் பாசங்களையும் பற்றியே எழுதுபவராக இருக்கலாம். ஆனால் அவர் அறிந்த அவருக்கு முந்திய சமஸ்க்ருத, ஆங்கில, தமிழ்ச்செவ்விலக்கியங்களுக்கெல்லாம் அவர் வாரிசான காரணத்தினால் அவற்றிற்கெல்லாம் அவர் கடமைப் பட்டவர்.

லா.ச.ராமாம்ருதம் பிதிரார்ஜாதமாகப் பெற்ற இந்தக் குறுகிய கதை உலகத்தை அவர் மிகக்கெட்டியாக பற்றிக் கொண்டுள்ள தகைமையைப் பார்த்தால் அதை ஏதோ மதம் என எண்ணிப் பற்றியுள்ளது போல் தோன்றும். அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிட மிருந்து பெறப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், ராமாம் ருதம் ஜாய்ஸின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார். அது போக ஜாய்ஸின் நனவோடை உத்தி துண்டாடப்பட்ட சப்த நிலயில் காண்பதற்கு எதிராக ராமாம்ருததின் நனவோடை உருவகங்களின், படிமங்களின் சப்த பிரவாஹம் எனக் காணலாம். (புத்ர பக். 9-10) க.நா.சுப்ரமண்யம் லா.ச.ராமாம்ருதத்தின் எழுத்துக்களைப் பற்றி விசேஷமான கருத்து ஒன்றைச் சொல்லி யிருக்கிறார்.

அதாவது, ராமாம்ருதம் இவ்வளவு வருஷங்களாக ஒரே கதையைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று க நா.சு. சொல்கிறார். ராமாம்ருதமும் இதைச் சந்தோஷத்துடன் ஒப்புக்கொள்வார். “நான்தான் நான் எழுதும் கதைகள், என்னைப்பற்றித்தான் என இவ்வளவு நாளும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறேன்,” என்பார். சாஹித்திய அகாடமி பரிசு வாங்கிய சிந்தாநதி க்கு இணை என்று சொல்லத்தக்க, அதற்கு முந்திய புத்தகமான பாற்கடல் மிகவும் குறிப்பிடத்தக்க விசேஷமான புத்தகம்.

லா.ச.ராமாம் ருதம் பாற்கடலைத் தன் குடும்பத்தைக் குறிக்கும் உருவக மாகப் பயன்படுத்துகிறார். பாற்கடல்- இல் ராமாம்ருதத்தின் குடும்பத்தினதும் அவர் மூதாதையரதும் மூன்று தலைமுறை வரலாற்றை, வருஷவாரியாக அல்ல, அவ்வப்போது நினைவு கூறும் பழம் சம்பவத் துணுக்குகளாக எழுதிச்செல்கிறார். அதில் அவர் நமக்கு அறிமுகப்படுத்தும் ஆண்கள், பெண்கள் எல்லோரும் நம்மில் வெகு ஆழமாகப் பதிபவர்கள்.

அவர்கள் எல்லோர்களுக்கிடையில் அவரது பாட்டனாரும் விதவையாகிவிட்ட அத்தைப்பாட்டியும்தான் காவிய நாயகர்கள் எனச் சொல்லத்தக்கவர்கள். பாற்கடல் ராமாமிர்தத்தின் வாலிப வயது வரையிலான நினைவுகளைச் சொல்கிறது. இதற்குப் பிந்திய கால நினைவுகளைத் தொகுத்துள்ள சிந்தா நதி ராமாம்ருதம் தன் எல்லா எழுத்துக்களிலும் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினரைப் பற்றியுமே எழுதி வந்துள்ளார் என்பதற்குச் சாட்சிமாக நிற்கிறது. அவர்கள் எல்லோருமே அவரது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள். அவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் பலவும் ஒரு தேர்வில் அதில் இடம்பெறு கின்றன.

இவற்றைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ராமாம்ருதம் பெரும் திகைப்புக்கும் ஆச்சர்யத்துக்கும் உள்ளாவார். நாற்பது வருடங்களாக அவர்களைப் பற்றி, கிட்டத்தட்ட நூறு கதைகளிலும், மூன்று நாவல்களிலும் எழுதிய பிறகும் கூட, இன்னமும் அவர்களைப் பற்றிய அவரது சிந்தனை வற்றிவிடவில்லை, அப்பிரமையிலிருந்து அவர் இன்னும் விடுதலை பெறவில்லை என்றுதான் அவருக்குத் தோன்றுகிறது.

மற்ற எவரையும் விட, அவரது குடும்பத் தெய்வமான பெருந்திரு, அவருடைய தாத்தா, கொள்ளுப் பாட்டி, பின் அவரது பெற்றோர்கள், இவர்க ளனைவரும் அவர் மீது அதிகம் செல்வாக்கு கொண்டுள்ள னர். இவர்கள்தான் அவருக்கு ஆதரிசமாக இருக்கின்றனர். இவர்களிலும் கூட குடும்பத் தெய்வமான பெருந்திருவும் அவருடைய பாட்டியும்தான் அவர் சிந்தனைகளை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். அவரது தாத்தா ஒரு கவிஞராக இருந்திருக்கிறார். அவர்களது குடும்ப தெய்வம் பெருந்திரு பற்றி அவருக்குத் தோன்றியதையெல்லாம் அவர் கவிதைகளாக எழுதி நிரப்பிய நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

அவரைத் தவிர வேறு யாரும் அவற்றைத் தொடுவது கிடையாது. எழுதுவது என்ற காரியம், இன்னொருவருக்குச் சொல்ல என்று இல்லாமல், அதை ஒரு தியானமாகக் கருதுவது, எழுதுவதைக் கவிதைப் பாங்கில் எழுதுவது, சக்தி பூஜையும், வாழ்வையும் மரணத்தையும்கொண்டாடுவது போன்ற ராமாம்ருதத்தின் இயல்புகள் அனைத்தும் அவரது பாட்டனாரிடமிருந்து அவர் பெற்றார் போலும். இதைச் சாதாரணமாகச் சொல்லி விடக் கூடாது. அடிக்கோடிட்டு வலியுறுத்த வேண்டிய விஷயம் இது. ராமாம்ருதத்தின் எழுத்தில் காணும் அனேக விசேஷமான அவருக்கே உரிய குணாம்சங்களை அது விளக்கும். ராமாம்ருதம்தான் எவ்வளவு பக்தி உணர்வுகொண்டவர் என்பதோ, அதை எவ்வளவுக்கு வெளியே சொல்வார் என்பதோ நமக்குத் தெரியாது.

ஆனால் ,அவரது கதைப் பாத்திரங்கள் மற்றவரையும் தம்மையும் உக்கிர உணர்ச்சி வசப்பட்ட வேதனைக்கு ஆட்படுத்துவதிலிருந்தும், ராமாமிருதத்தின் பேனாவிலிருந்து கொட்டும் வெப்பமும், சக்தி மிகுந்த வார்த்தைகளும், குடும்பத்தைத் தாம்தான் தாங்கிக் காப்பது போன்று, அதற்கு உயிர்கொடுப்பதே தாம்தான் என்பது போன்றும், குடும்பத்தின் ஏற்றம் இறக்கங்களுக் கெல்லாம் தாம்தான் அச்சு போன்றும் இயங்கும் பெண் பாத்திரங்களின் ஆக்கிரம சித்தரிப்பும், (ராமாம்ருதம் தன் உள்மன ஆழத்தில், தென்னிந்திய சமூகமே அதன் நடப்பிலும் மதிப்புகளிலும் இன்னமும் தாய்வழிச் சமூகம்தான் என்ற எண்ணம் கொண்டவராகத் தெரிகிறது) திரும்பத் திரும்ப அவர் கதைகளில் காட்சி தரும் புஷ்பங்கள், குங்குமம், சடங்கு வழிப்பட்ட ஸ்னானங்கள், அக்னி, சாபங்கள், ஆசீர்வாதங் கள், நமஸ்காரங்கள், – எல்லாமே சக்தி ஆராதனை சம்பந்தப் பட்டவை – எல்லாமே அவர் எழுத்துக்களில் நிறைந்து காணப் படுவதும், அவரது குடும்பத்தின் தேவி வழிபாடு தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருவதன் இலக்கியவெளிப் பாடுதான் ராமாம்ருதத்தின் எழுத்து என்று எண்ணத் தோன்றுகிறது. அவரது எழுத்துக்களில் மிகச்சக்தி வாய்ந்த தும், பரவலாகக் காணப்படுவதுமான கருப்பொருள் மரணம் தான்.

இந்த சக்தி வாய்ந்த கரு அவரை மிகவும் கவர்ந்துள்ளது போலும். அவர் இந்த விஷயத்திற்குத்தான் தன் எழுத்துக்களில் அவர் திரும்பத் திரும்ப வருகிறார்,. இந்த நித்திய உண்மை அவரை ஆட்கொள்ளும் போதெல்லாம் அவர் தன்னை இழந்தவராகிறார். முரணும் வேடிக்கையும் என்னவென்றால், மரணத்தில்தான் ஒருவன் வாழ்க்கையின் மகத்துவத்தை அறிந்துகொள்கிறான்.

ராமாம்ருதம் கதை சொல்லும் பாங்கே அவருக்கேயான தனித்வம் கொண்டது. அவருடைய பாத்திரங்கள் நிச்சயம் நாம் அன்றாட சாதாரண வாழ்க்கையில் காணும் சாதாரண மனித ஜீவன்கள்தான். ஆனால் ராமாம்ருதம் கதைகளில் அவர்கள் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் கொதிநிலையில் அறிமுகமாகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் வருத்திக் கொண்டு வேதனைப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நேர் எதிர்முனை நிலைகளில்தான் வாழ்கிறார்கள். அது சந்தோஷம் தரும் வேதனை. வேதனைகள் தரும் சந்தோஷமும்தான் அது. பெரும்பாலும் பின்னதே உண்மை யாகவும் இருக்கும்.

எல்லாம் தடித்த கோடுகளில் வரையப் பட்ட சித்திரங்கள். இத்தகைய அறிமுகத்திற்குப் பிறகு ராமாம்ருதம் நம்மை அப்பாத்திரங்களின் அடிமனப் பிரக்ஞைகளின் பாதைகளுக்கு, அவை அகன்ற சாலைகளோ, குறுக்கு ஒற்றையடிப் பாதைகளோ, சந்துகளோ, அவற்றின் வழி அவர்தான் இட்டுச்செல்கிறார். இவை கடைசியில் பிரபஞ்ச விஸ்தாரத்திற்கு இட்டுச்சென்று அவற்றின் இயக்கத்தின் அங்கங்களாகத்தான், மனித ஜீவன்களின் மற்ற உயிர்களின் இயக்கங்களும் சொக்கட்டான் காய்களாக விதிக்கப்பட்டுள்ளன, விதிக்கப்பட்டதை ஏற்று அனுபவிப்பது தான் என்று சொல்கிறார் போலும்.

இந்நிலையில் ராமாம்ருதத்தின் பாத்திரங்களின் உணர்வுகளின் மனச் சலனங்களின் குணத்தையும் வண்ணங்களையுமே பிரபஞ்சப் பின்னணியும் ஏற்பதாகத் தோன்றுகிறது. இதில் எது எதன் பின்னணி, எது எதன் பிரதிபலிப்பு என்று சொல்வது கடினமாகிவிடும். இது ஒரு பிரம்மாண்ட அளவிலான சலனங் களின், உணர்வுகளின் இசைத்தொகுப்பு.

தரங்கிணி என்னும் அவரது ஒரு சிறுகதைத் தொகுப்பை ‘பஞ்சபூதக் கதைகள்’ என்கிறார் ராமாம்ருதம். அதன் ஒவ்வொரு கதையிலும் பிரதானமாக ஒருபெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது, அதன் ஒவ்வொரு முக்கிய திருப்பத்தையும் பின்னிருந்து பாதித்து மறைமுகமாக நடத்திச் செல்வது பஞ்ச பூதங்களில் ஒன்று. ஒவ்வொரு கதையிலும் ஒன்று, நீர், அக்னி, ஆகாயம், பூமி, காற்று இப்படி.

அந்தந்தக் கதையில் திரும்பத் திரும்ப வரும் படிமம்,பெண்ணின் அலைக்கழிக்கும் மன உளைச்சல், வாழ்க்கையின் ஒவ்வொரு அடிவைப்பையும் தீர்மானிக்கும் சக்தி அந்தப் பூதங்களில் ஒன்றாக இருக்கும். இத்தொகுப்பு, ராமாம்ருதத்தின், எழுத்துத்திறனுக்கும், தரிசனத்திற்கும் சிறந்த அத்தாட்சி. ஆனால் இந்தக் குணங்களை ராமாம்ருதத்தின் எல்லா எழுத்துக்களிலும் காணலாம். நினைவலைகள், சொற் சித்திரங்கள், படிமங்கள் எல்லாம் அவருடைய கதை சொல்லும் வழியில் வெள்ளமெனப் பெருக்கெடுக்கும்.

அவை மனித பிரக்ஞை நிலையின் வெவ்வேறு அடுக்குகளில், படிகளில், முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாகப் பாயும். அடிமன நினைவோட்டமாக ஒரு கணம் இருக்கும் ஒன்று அடுத்த கணம் விஷம் கக்கும் சொல்லம்புகளாக பிரக்ஞை நிலையில் உருக்கொள்ளும். அன்றாட வாழ்க்கையின் மனித மன தர்க்கத்திற்கும், காரண காரிய சங்கிலித்தொடர் புரிதலுக்கும், சாவதானமான நின்று நிதானித்த மன ஆராய்வுகளுக்கும் இங்கு இடம் இருப்பதில்லை.

பிரக்ஞை நிலையில் அவர்கள் இரு கோடிகளில் எதிரும் புதிருமாக நின்று வெறிபிடித்துக் கனல் கக்குவதைப் பார்க்கிறோம். ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? ஒரே பதில், அவர்கள் அப்படித்தான் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். கிரேக்கத் துன்பியல் நாடகப் பாத்திரங்களைப் போல. விதிக்கப்பட்ட அந்த முடிவுக்குத்தான் அவர்கள் விரைந்துகொண்டிருப்பார் கள்.

ராமாம்ருதத்தின் உலகம் தரும் அசாதாரண மாயமும் மிகுந்த பிரயாசையில் சிருஷ்டிக்கப்பட்ட வார்த்தைகளுமான உலகில், சாதாரண அன்றாட சம்பவங்கள் கூட வாழ்க்கையின் மிக முக்கியத் திருப்பங்களாகின்றன, வெடித்துச் சிதறும் நாடகார்த்த விசேஷம் கொள்கின்றன. சாதாரண மனிதப் பாத்திரங்கள், காவியரூபம் தரித்துக் கொள்கின்றன. சாதாரண அன்றாட வார்த்தைகள் தெய்வ அசரீரி வாக்கு களாக மயிர் கூச்செரியும் சக்தி பெற்றுவிடுகின்றன. எல்லோருமே ஏதோ பேய் பிடித்தவர்களைப் போலப் பேசு கிறார்கள், நடந்துகொள்கிறார்கள். அம்மன் கோயில்களில் காணும் காட்சிபோல. தலைவிரித்த பெண் கால் சம்மட்டி யிட்டு தரையிலமர்ந்திருக்கும் விரித்த தலையும் உடலும் வெறி பிடித்து ஆடக் காணும் காட்சி.

ஏன், ராமாம்ருதமே கூட, எழுதும் போதும், நண்பர்களுடன் பேசும் போதும், சின்ன கூட்டங்களில் கிட்ட நெருக்கத்தில் பேசும்போதும் அவர் உணர்வு மேல் நிலைப்பட்ட மனிதர்தான். அவர் தன் எழுத்துக்கள் பற்றிப் பேசும் போது கூட அவரிடமிருந்து வரும் வார்த்தைகள் அவர் கதைகளின் பாத்திரங்கள் பேசும் பாணியில்தான் இருக்கும். ஒரே சமயத்தில் பயப்படுத்தும், ஆசீர்வதிக்கும், அன்பு பொழியும், அழகிய சிருஷ்டி மனத்தில் இருக்கும் ஊர்த்துவ தாண்டவம்தான் அது. அட்டகாசமான, உடைகளும் தோற்றமும் கொண்டு தன்னை மறந்து உணர்ச்சி வசப்பட்டு ஆடும் தெய்யம் போல.

அல்லது உயர்த்திப் பிடித்த நீண்ட வாளுடன் தாக்கத் தயாராக வந்தது போன்று கோயில் இருளில் அங்குமிங்கும் பலத்த அடி வைப்புகளுடன் எண்ணெய் விளக்கின் ஒளியில் பகவதி அம்மனின் முன் நடந்து வரும் வெளிச்சப்பாடு போல. வெளித்தோற்றத்தில் பயமுறுத்தும் உடைகளும் ஆட்டமும் கொண்ட தெய்யம்தான் பக்தி கொண்டு சூழும் மக்களை ஆசீர்வதிக்கும் தெய்யம், தாயின் மடியிலிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு கனிவோடு ஆசீர்வதிக்கும்தெய்யமும். உணர்வு திரும்பிய வெளிச்சப் பாடு, பழைய சாதுவான மனிதன்தான். ராமாம்ருதமும் சிரித்த முகத்துடன் மெல்லிய குரலில் பேசும் சாது மனிதர்தான்.

அவர் எழுத்துக்களை மா த்திரம் படித்து மனதில் கற்பனை செய்துகொண்டிருக்கும் மனிதரா இந்த ராமாம்ருதம் என்று வியக்கத் தோன்றும். அவரது குலதெய்வம் பெருந்திருவும் அவரது கொள்ளுப்பாட்டி லOEமியும் இன்னும் அவரைப் பிடித்தாட்டத் தொடங்க வில்லை. இரண்டு உணர்வு நிலைகளில் நாம் காணும் வெளிச்சப்பாடு போலச் சாதுவாக சிரித்த முகத்துடன் காணும் ராமாம்ருதமும்.

என்னதான் உணர்ச்சிகளின் வெப்பங்களும், சில்லிட வைக்கும் படிமங்களும் ராமாம்ருதத்தின் எழுத்துக்களில் நிறைந்திருந்த போதிலும் அவர் எழுத்து அதன் சாரத்தில் மனிதனையும் அவன் தெய்வ நிலைக்கு உயரும் நினைப்புகளையும் கொண்டாடும் எழுத்துத்தான். கடந்த ஐம்பது வருடங்கள் நீண்ட தன் எழுத்து முயற்சிகளில் ராமாம்ருதம் தனக்கென ஒரு மொழியையும் நடையையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளார்.

அது அவரை மற்ற எல்லா எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தும். அவரது கதை ஏதும் ஒன்றின் ஆரம்ப சில வரிகளின், வாக்கியத்தின் சொற்களையும் சொற்றொடர்களையும் படித்த மாத்திரத்தி லேயே அவற்றை எழுதியது யாரென்றுதெரிந்துவிடும். படிப்பவருக்கு ராமாம்ருதத்தைப் பிடிக்கிறதா இல்லையா எனபது ஒரு பிரச்சினையே இல்லை. படிக்கத் தொடங்கிய துமே அவரது நடையும் மொழியும் அவரை அடையாளப் படுத்திவிடும். ஒரு பாரா எழுதி முடிப்பதற்கு ராமாம்ருதத் திற்கு சில மணி நேரமாவது ஆகிவிடும். ஒரு கதை எழுதி முடிக்க சில மாதங்கள்.

ஐம்பது ஐம்பத்தைந்து வருடங்கள் நீளும் அவரது எழுத்து வாழ்க்கையில் இதுகாறும் அவர் எழுதியிருப்பது ஒரு நூறு கதைகளே இருக்கும். ஆனால் அவருக்கென ஒரு வாசகர் கூட்டம், அவரை வழிபடும் நிலைக்கு வியந்து ரசிக்கும் ஒரு வட்டம் அவருக்கு உண்டு. அவருடைய சொல்லாட்சிக்கும் மொழிக்கும் மயங்கி மது வுண்ட நிலையில் கிறங்கிக்கிடக்கும் வட்டம் அது. ராமாம்ருதத்தின் கதைகளை மொழிபெயர்த்தல் என்பது சிரம சாத்தியமான காரியம்தான். அவரது மொழியும் நடையும் அவருக்கே உரியதுதான். எந்தத் திறமைசாலியின் மொழி பெயர்ப்பும் போலியாகத்தான் இருக்கும்.

ராமாம்ருதத்திற்கு மொழி என்பது ஒரு வெளியீட்டுச் சாதனம் மாத்திரம் அல்ல, வெளியீட்டுக் காரியம் முடிந்த பிறகு அது ஒன்றுமில்லாமல் போவதற்கு. அவருக்கு ஒவ்வொரு சொல்லும் ஒரு வடிவம், ஒரு ஆளுமை, கலாசார உறவுகளும் காட்சிப் படிமமும் கொண்ட ஒன்று. அதை ராமாம்ருதம் ‘த்வனி’ என்கிறார். இவ்வளவு சிக்கலும் கலவையுமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ள சொல் எப்படி இன்னொரு மொழியில் பெயர்க்கப்படும்? மொழிபெயர்ப்பில், ராமாம்ருதத்தின் தமிழ்ச்சொற்கள் அதன் மற்ற பரிமாணங்களை, அதன் முழு ஆளுமையை இழந்து நிற்கும். இதன் விளைவு, மொழிபெயர்க்கப்பட்ட ராமாம் ருதம் அதன் சாரத்தில் தமிழர் அறிந்த ராமாம்ருதமாக இருக்கப் போவதில்லை.

ராமாம்ருதத்தின் உரைநடை எவ்வகைப்படுத்தலுக்கும் அடங்காதது. அதை உரைநடை என்று கூறக் காரணம் அது உரைநடை போல் எழுதப்பட்டிருக்கும் காரணத்தால்தான். இல்லையெனில் அதைக் கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அதில் நிறைந்திருக்கும் படிமங்கள், குறியீடுகள், உருவகங்கள்ம் பின் அது இயங்கும் சப்த லயம் காரணமாக அதைக் கவிதை என்று சொல்லவேண்டும். ஆனால் லயம் என்பது சங்கீதத்தின் லயமாகவும் இருக்கக் கூடும்.

ஏனெனில் அனேக சமயங்களில் அவர் சிருஷ்டிக்கும் சூழல் இசை உணர்வை எழுப்பும் அவரது உரை இசையின் லயத்தை உணர்த்திச் செல்வது போல. ஒரு வேளை ராமாம்ருதம் மொழி யந்திரத்தனமாக அர்த்தமற்ற உபயோகத்தினால் நச்சுப்படுத்தப்பட்டதால், அதன் இழந்த அர்த்தச்செறிவையும் உக்கிரத்தையும் அதற்குத் திரும்பப் பெற்றுத் தரும் முயற்சியாகவும் இருக்கலாம். நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போகவேண்டும் என்று கூட அவர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.

திரும்ப பல இடங்களில் அவர் சொற்கள் வேதங்களின் மந்திர உச்சாடனம் போலவும் ஒரு நிலைக்கு உயர்கிறது.

குறிப்பாக ரிக் வேதம். அதன் கவித்வ சொல்லாட்சியும், இயற்கையும் மனிதனும் அதில் கொண்டாடப்படுவதும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான பரஸ்பர பிணைப்பை உணர்த்துவதும், அது தரும் பிரபஞ்ச தரிசன மும், இவை எல்லாவற்றோடும் அதில் முழுதுமாக விரவி யிருக்கும் கவித்வமும். ராமாம்ருதம் சமஸ்கிருதம் அறிந்தவ ரில்லை. பின் இவை அத்தனையையும் அவர் எங்கிருந்து பெற்றார்? நிச்சயமாக அவரது தாத்தாவிடமிருந்து, குடும்பப் பாரம்பரியத்தில் வந்த பிதிரார்ஜிதம்.

ராமாமிருதத்தின் எழுத்துக்களில் புராணங்களும் தொன்மங்களும் நிறைந்திருக்கும். காப்ரியேல் கார்ஸியா மார்க்வேஸின் நாவல்கள், பாப்லோ நெருடாவின் கவிதை, மச்சுப் ப ¢ச்சுவின் சிகரத்திலிருந்து- வில் இருப்பது போல. ஆனால் ராமாம்ருதத்தின் எழுத்தில் அது ரிக் வேத உச்சாடனமாகத் தொனிக்கும்.வெளித் தோற்றத்தில் ஏதோ பாட்டி கதை போலவிருக்கும் ஒன்றில் ஒரு கலாசாரத்தின் பிரவாஹத்தையே கதை என்னும் சிமிழுக்குள் அவரால் எப்படி அடைத்துவிட முடிகிறது! அதுதான் ராமாம்ருதத்தின் கலை செய்யும் மாயம்.

ராமாம்ருதம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு பிடிவாதத்தோடு சொல்லிவரும் இக்கதைகள், ஒரு பாமர நோக்கில் நவீனத்துமற்றதாக, ·பாஷனற்றதாகத் தோன்றலாம். ஆனால் ராமாம்ருதம் இம்மாதிரியான கவலை ஏதும் இல்லாதே தொடர்ந்து எழுதி வருகிறார். சமீப தமிழ் இலக்கியத்தில் பாட்டி கதைகள் என்ற தோற்றம் தரும் ·பாஷன் அற்ற எழுத்துக்களைப் பிடிவாதமாக ஐம்பதாண்டுகள் எழுதிக்கொண்டு, வழிபாடு என்றே சொல்லத்தக்க ஒரு ரசிகர் கூட்டத்தை மது உண்ட கிறக்கத்தில் கிடக்கும் வாசகர் கூட்டத்தை, வேறு எந்த எழுத்தாளரும் பெற்றது கிடையாது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது பற்றி ஆச்சரியப்பட வேண்டியதில்லை. மேற்கத்திய சிற்ப, சித்திர வரலாற்றில் தாயும் குழந்தையும் என்றென்றும் தொடர்ந்து வரும் படிமம். இன்றைய ஹென்றி மூர் வரை. நாம் வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் அதன் தெரிய வந்த ஆரம்பங்களுக்கே கூட, திரும்பிப் போகலாம். ஆ·ப்ரிக்க மரச்சிற்பங்களானாலும் சரி, மொஹஞ்சாதாரோவின் சுதை மண் சிற்பங்களானாலும் சரி. மனித மனத்தின் ஆழங்களில் உறைந்திருக்கும் தாய்த்தெய்வ வழிபாடு எத்தனையோ ரூபங்களில் தொடர்கிறது, 1990 களில் கூட.

(ஆங்கில மூலம்: Cultural Encapsulation, Indian Literature, No. 138, July-August 1990, Sahitya Akademi, New Delhi.)

——————————————————————————————————————————–

Thinnai: “லா.ச.ரா என்கிற கைவினைஞர் :: மலர்மன்னன்”
———————————————————————————————————————————
Thinnai: “லா.ச.ரா. (92) சொற்களின் சூத்ரதாரி :: எஸ். ஷங்கரநாராயணன்”

(லா.ச.ரா. கடந்த 30 அக்டோபர் 2007ல் தமது பிறந்த நாளன்று காலை நான்கு பத்து மணி அளவில் காலமாகி விட்டார். அவரது சிறப்புச் சிறுகதைத் தொகுதியை 1986ல் ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டது. லா.ச.ரா. நூலுக்கு முதன்முதலாய் வெளிநபர் முன்னுரை தந்தது என அமைந்தது இந்த நூலில்தான். அந்த முன்னரையை நான் எழுதினேன். விதவிதமான சாவிகளின் கொத்து என அட்டைப்படம் வடிவமைத்ததும் நான்தான். ஓவியம் திரு சரண். இன்றைய திரைப்பட இயக்குநர்.

சிறப்புச் சிறுகதை இரண்டாம் தொகுதிக்கு அவரது மகன்கள் லா.ரா.கண்ணன், லா.ரா.சப்தரிஷி இருவரும் முன்னுரை தந்தார்கள். இவை தவிர வேறுநபர் முன்னுரை என லா.ச.ரா. அனுமதித்ததேயில்லை. லா.ச.ரா.வுக்கு நன்றி.)


மு ன் னு ரைஇந்தத் தொகுப்பின் முதல் வாசகனாக அமைவதில் எனக்கு நியாயமான மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு.>>

எழுத்தாளர்களில் லா.ச.ரா. வித்தியாசமானவர். தனித்தன்மை மிக்கவர். நனவோடை உத்தியை முதலில் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் லா.ச.ரா.

பொதுவாக இவர் கதைகள் எளிமையானவை அல்ல, இவை எளிமையான கருக்களைக் கொண்டிருந்த போதிலும். லா.ச.ரா. தான் வாழ்ந்த வாழ்க்கையை, தான் உணர்ந்தபடி எழுதுகிறார். அல்லது தான் கண்ட, கேட்ட ஒரு வாழ்க்கையைத் தன் வாழ்க்கையாய் உணர்ந்து எழுதுகிறார். பொதுவாக கற்பனைகளுக்கு உண்மையின் சாயத்தைப் பூசிப் படைக்கிற எழுத்தாளர்கள் மத்தியில், தன் தீட்சண்யம் மிக்க ஞானத்தினால், கலாபூர்வமான ரசனைமிக்க கண்ணோட்டத்தினால், மொழி ரீதியான வளமான அறிவினால், லா.ச.ரா. உண்மையை அதன் தீவிரம் விலகாமல் கற்பனையையொத்த அழகும் மெருகும் சேர்த்து வழங்குவதில் பெருத்த வெற்றி பெறுகிறார்.

இவர் கதைகள் என நினைத்ததும் சட்டென்று ‘வித்துக்கள்’ சிறுகதை ஏனோ நினைவில் குதிக்கிறது. பள்ளிக்கூட நாட்களில் ‘My dog’ என ஒரு கவிதை வாசித்திருக்கிறேன். நல்லதொன்றும் செய்யாத, உதவியொன்றும் செய்யாத, பெரிதும் துன்பங்களையே விளைவித்து வந்த ஒரு நாய்பற்றிய அந்தக் கவிதையில், பத்தி பத்தியாக அந்த நாயின் உபத்திரவங்களையும், அதனால் தான் அனுபவித்த துன்பங்களையும் சொல்லிக்கொண்டே வருகிற கவிஞன் கடைசியில் இப்படிச் சொல்வான் – ‘And though my dog is as bad as bad can be, I cant leave my dog for all the treasures of the sea.’

உலகத்தின் பெரிய செல்வமான அன்பு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாதது. சுயநலமற்றது. லா.ச.ரா.வின் ‘வித்துக்கள்’ மிகுந்த துஷ்டத்தனங்கள் நிறைந்த தன் குழந்தைகளை நேசிக்கிற ஒரு தாயின் கதை. சில வருடங்களுக்கு முன் ‘சாவி’ வார இதழில் (என நினைக்கிறேன்) படித்த கதை, என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

இன்னொரு கதை – தலைப்பு நினைவில் இல்லை. ‘த்வனி’ தொகுதியில் படித்ததாக நினைவு. வங்கியில் இவர் மேனேஜராக இருந்தபோது ‘அலுவல் நேரம்’ முடிந்தபின் ஒரு மனிதன் லாக்கரிலிருந்து நகைகளை எடுத்துச் செல்ல வருகிறான். மரணப்படுக்கையில் தன் மருமகன் இருப்பதாயும், கடைசியாய் இவன் மகளை மிகுந்த அலங்காரங்களுடன் பார்க்க விரும்புவதாகவும் கூறி நகைகளை எடுத்துப் போகிறான். அதன் பிறகான இவர் மன சஞ்சலங்கள், முகந் தெரியாத அந்த மனிதர்கள் மீதான இவர் பரிவு, கவலை… யாவும் செறிவுடன் அமைந்திருந்தன. பிறகு அந்த நகைகளை லாக்கரில் வைக்க அந்த மனிதன் வரவில்லை. அவரும், அவன் வராதிருப்பதே நல்லது, அவன் வந்து ஏதேனும் மோசமான முடிவைச் சொன்னால் தன்னால் தாள முடியாது, என்று நினைக்கிறதாக அந்தக்கதை முடியும். மனிதாபிமானம் மிக்க இந்தச் சிறுகதை, என்னால் மறக்க முடியாத லா.ச.ரா.வின் கதைகளில் ஒன்று.

பிறகு ‘பா ற் க ட ல்.’ ஒரு கூட்டுக்குடும்பத்தின் அழகினை இவ்வளவு சிறப்பாக நான் வேறு யாரிடமும் வாசித்ததில்லை. பல பகுதிகளாகத் தன் கதைகளைப் பிரிக்கிற லா.ச.ரா. இதை ஒரே வீச்சில் அமைத்ததும் கதையோட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை இவருக்குப் பெற்றுத் தந்தது. ஜனனி, இதழ்கள், கங்கா, த்வனி, மீனோட்டம், பச்சைக்கனவு, உத்தராயணம் (காலரீதியான வரிசை அல்ல) என்கிற இவரது தொகுதிகளில் ‘பச்சைக்கனவு’ மிகவும் சிறப்பானதாக நினைக்க முடிகிறது.

இந்தச் சிறப்புச் சிறுகதைகள் லா.ச.ரா.வே தேர்ந்தெடுத்த கதைகள். முதல் தொகுதி இது. இதில் இடம்பெற்றுள்ள எட்டு கதைகளில் ‘குரு-ஷேத்திரம்’ ஒரு பிரமிக்கத்தக்க சாதனை என்று தோன்றுகிறது. ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது இந்தக் கதையின் சில பகுதிகளை இருபது, இருபத்தோரு முறைகள் திருத்தி எழுதியதாய் லா.ச.ரா. என்னிடம் கூறினார்.

‘குரு-ஷேத்திரம்’ ஒரு திருடனின் மனமாற்றம் பற்றிய கதை. வைரங்களை வாரியிறைத்திருக்கிறார் லா.ச.ரா. குறியீடுகளும் சங்கேதங்களும் மிகுந்த கலைநயத்துடன், வார்த்தைகளின் ஓசைநயத்துடன், தத்துவங்களின் தரிசனத்துடன் வெளியாகின்றன.

எத்தனையோ முறை திருடிவிட்டு, திருட்டுக் கொடுத்தவனுடன் சேர்ந்து பொருளைத் தேடுவதாய் நாடகமாடியிருக்கிற திருடன், தான் திருடிய ஒருவன் கோவில் குளத்தில் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு திடுக்கிடுகிறான். மனசாட்சியின் முதல் விழிப்பு. (”எந்த மானத்தைக் காப்பாற்ற இந்தப் பணத்தை நம்பியிருந்தானோ? அந்தப் பணத்தை இழந்ததால், உயிரைத் துறக்கும் அளவுக்கு உயிர்மேல் நம்பிக்கை இழந்தவன். உயிரினும் பெரிதாய் நம்பிக்கை வைத்து, சாவிலும் அவன் வணங்கிய அது எது?” – பக்/83) சிந்தனையின் முதல் உயிரிப்பு.

தன் தாயை, மனைவியை அந்தக் கணத்தில் அவன் நினைத்துப் பார்க்கிறான். அவர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தான் பிரிந்து வந்த தன் தவறை உணர்கிறான்.

கதை முழுதும் யதார்த்தத் தளத்தில் நிகழவில்லை எனினும் படிப்படியான அவன் மனமாற்றங்களை ஊடுசரமாய்ப் பற்றிக்கொண்டே வரமுடிகிறது இடையே அற்புதமான தரிசன வரிகள். ”எதையுமே கொல்லாமல் அனுபவிக்க முடியாதா? ஏன் இப்படி பிள்ளைக்கறி தின்றுகொண்டே இருக்கிறோம்?” – பக்/90. ”உலகம் முழுதும் ஒரு உயிர். ஒரே உயிர்தான். அதன் உருவங்கள்தாம் பல்வேறு.” பக்/91.

வாழ்வின் விஷம்போன்ற பொருளாசையை இவன் இன்னும் துறக்கவில்லை என்கிற விதத்தில், பெட்டியைப் பாம்பு பாதுகாக்கிற கதை கனவாக வருகிறது. மனசாட்சியின் உருவோங்குதலில் ”என் எண்ணங்களை நானே நூற்று, என்மேலேயே பின்னிக்கொண்டு, அவை இன்னதெனக்கூடப் புரியாது அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.” – பக்/99. ”வீட்டில் பெண்டு ஒண்டியாய் இருக்கையில், ஒரு அன்னியன் பேசாமல் உள்ளே புகுந்து, கதவைத் தாழிட்டுக்கொண்டாப்போல் பயம் என் உள்ளத்தில்.” – பக்/101. ”என் வீடு காலியானதும், அதில் என் குரல் எழுப்பிய எதிரொலிகளே என்னை எழுப்பியிருக்கின்றன.” – பக்/101.

அவன் மீண்டும் தன் மனைவியையும், குழந்தையிடமும் சென்றடைவதுவரை கதை ஒரு கவிதையின் நளினத்துடன் அற்புதமாய்ச் செல்கிறது.

‘தாட்சாயணி’ கதையைப் படிக்கையில் இவரது இன்னொரு கதை ‘அபூர்வ ராகம்’ நினைவுக்கு வருகிறது. ”சில விஷயங்கள் சிலசமயம் நேர்ந்து விடுகின்றன. அவை நேரும் முறையிலேயே அவைகளுக்கு முன்னும் பின்னும் இல்லை. அவை நேர்ந்ததுதான் உண்டு. அவை நேர்ந்த விதம் அல்லாது வேறு எவ்விதமாயும் அவை நேரவும் முடியாது. நேர்வது அல்லாமலும் முடியாது.” – பக்/71. இதே தன் கருத்தை ‘அபூர்வ ராகம்’ னகதையிலும் வலியுறுத்துகிறார். சங்கீதம் பற்றிய தன் ஆழ்ந்த ரசனையை இந்தக் கதைகளில் முன்வைக்கிறார் லா.ச.ரா. பாத்திரங்கள் மென்மையும் மூர்க்கமும் ஒருங்கே பெற்று வார்த்தைகளின் சிறப்பில் பொலிகின்றன.

லா.ச.ரா. பெண்களை மிக மதிக்கிறார். படித்தவர்களாக, தெளிவானவர்களாக அவர்களை அவர் சித்தரிக்கிறார். இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தையும், இந்தக் கதைகள் நிகழ்கிற காலத்தையும் வைத்துப் பார்த்தால் லா.ச.ரா.வின் இந்தத் தன்மையின் சிறப்பு புரியும்.

லா.ச.ரா. தன் கதைகளில் உத்திகளை மிகத் திறமையாய்க் கையாள்கிறார். உவமைகளை மிகுந்த லாவகத்துடன் வெளிப்படுத்துகிறார். ”மெத்தைஉறை போன்ற அங்கி அணிந்த பாதிரி” என்பார். ”மழையில் நனைந்ததில் மார்பில் கொலுசு” என்பார். ”இறந்த பிணத்தின் கண்ணில் பளிங்கு ஏறியிருந்தது” என்பார். இவையெல்லாம் எங்கோ படித்திருந்தும் மனதில் தளும்புகின்றன.

இந்தத் தொகுதியில் ”தலையை இளநீர்போல முடிந்தாள்.” – ”வயிற்றில் பசி தேளாய்க் கொட்டிற்று.” – ”கேசுக்கு அலையும் போலிஸ்காரன் கவனிப்பது போல கவனித்தாள்.” – ”கற்கண்டுக் கட்டிகள்போல் நட்சத்திரங்கள்.” ”தலையில் சுருள்சுருளான மோதிரக் குவியல்.” – என்பனபோன்ற ஏராளமான ஜாலங்கள் மனதை நிறைக்கின்றன.

‘இதழ்கள்’, ‘கொட்டுமேளம்’ இரண்டுமே நீண்ட கதைகள். ‘இதழ்கள்’ ஒரு மனிதன் உறவுக்கிளைகள் ஒவ்வொன்றாய் இழப்பதைச் சொல்லி, அவன் தனிமை ஆழப்பட்டு வருவதை விஸ்தரித்து, அவனது நம்பிக்கை சிதையச் சிதைய உடல் வற்றிவருவதை விவரித்து அவன் மரணத்துடன் முடிகிறது. ‘கொட்டுமேளம்’ முழுக்க யதார்த்தத் தளத்தில் அமைந்த கதை. இளம்விதவையான தன் சகோதரியை நேசிக்கிற சகோதரன் கதாநாயகன். கதை சகோதரியின் பார்வை சார்ந்தது. தன் மனைவி அன்புவழிப்பட்ட பொறாமைரீதியாய் அவர்கள் இருவரையும் பற்றி அவதூறாய்ப் பேசிப் பிறந்தகம் செல்கிறாள். ஊரே மூக்கும் காதும் வைத்துப் பேசுகையில் பொறுமையாய் இவர்கள் வெற்றி பெறுகிற கதை. குழந்தை பிறந்ததும் குழந்தையைக் கூட்டிக்கொண்டு மீண்டும் கதாநாயகனின் மனைவி வீட்டுக்குள் வந்து, (”இத்தனை மதில்கள் எழும்பிய இடத்தில் தொங்குவதற்கு இடம்தேடி அலையும் வெளவால் போன்று…” -பக்/86) மன்னிப்பு கேட்கிறாள். பிறகு அந்தக் குழந்தையின் கல்யாணத்தோடு விதவையின் வாழ்வு முடிகிறதாக கதை முடிகிறது.

‘கஸ்தூரி’, ‘மண்’ திருப்பம் சார்ந்த கதைகள். சொல்நேர்த்தியால் சிறப்பு பெறுகின்றன.

‘பச்சைக்கனவு’ ஒரு வித்தியாசமான கதைதான். இளம் வயதில் கண்ணிழந்த ஒரு குருடன் பற்றிய கதை. கண் இருக்கையில் அவன் கடைசியாய்க் கண்ட நிறம் பச்சை. அக்காரணம் பற்றியே அந்த வர்ணம் மனதைக் கெட்டியாய்ப் பற்றிக்கொண்டு விட்டது. (பக்/5) அதிலிருந்து தான் கேள்விப்படுகிற உணர்கிற பொருட்களுக்கெல்லாம் பச்சை வர்ணமே அமைந்திருப்பதாய்க் கற்பனை செய்துகொள்வது இவனுக்குப் பிடிக்கிறது. லா.ச.ரா.வின் சிறப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பாத்திரங்களூடே திடீரென்று வாழ்க்கை பற்றிய தரிசனங்களை மிக நெருக்கமாய் நுணுக்கமாய்த் தெரிவிக்க முடிவதுதான்.

‘பச்சைக்கனவு’ கதையில் குருடனின் நினைவோட்டமாக, ”தூங்குவதற்கும் விழித்திருப்பதற்கும் என்ன வித்தியாசம்? எனக்கு இரண்டும் ஒன்றாயிருக்கிறது. எப்பவும் இருள்தான். வெய்யில் உடலில் உறைத்தால் அது பகலா? அப்புறம் வெய்யிலில்லாது, தெருக் கொறடில் நான் கட்டிலில் படுத்துவிட்டால் அது இரவா? இப்பொழுது நான் தூங்குவதாக அர்த்தமா? தூக்கம் நிஜமா? விழிப்பு நிஜமா?” – பக்/14. என்று அற்புதமாய் இவரால் எழுத முடிகிறது.

‘இதழ்கள்’ கதையில் தன் சகோதரனை இழந்த நோயாளி இப்படி நினைக்கிறான். ”சந்துருவின் அகாலமான திடீர் மரணம் தேவலையா? அல்லது நாளுக்கு நாள் அல்லது ஒரு கணக்கில் மூச்சுக்கு மூச்சு ஒருதுளியாய்ச் சுயநினைவோடு என் பிராணனை நான் விட்டுக்கொண்டிருக்கும் இந்நிலை தேவலையா? இம்மரணத்தில் நோயின் அவஸ்தை ஒருபக்கமிருக்கட்டும். இதில் எங்கோ ஒரு மூலையில் ஒருவிதமான அவமானம் ஒளிந்துகொண்டு ஊமையாய் உறுத்துகிறது.” – பக்/ 139-140.

கொட்டுமேளம் கதையிலும் இப்படி ஓரிடத்தை ரசிக்க முடிந்தது. ஜானாவின் மன்னி, தன் கணவனையும், ஜானாவையும் பற்றி அவதூறு பேசிப் பிறந்தகம் செல்கிறாள். பிறந்தவீட்டில் இவள் கணவனை விட்டுவிட்டு வந்த துக்கம்கூடத் தெரியாமலேயே வளைய வருகிறாள். பிறகு அவளுக்கும் அவள் தாயாருக்கும் முதல்பிணக்கு எப்படி ஏற்படுகிறது தெரியுமா? ஜானாவிடம் யாரோ இதுபற்றி இப்படிச் சொல்கிறார்கள். ”ஏன்டி, மருமான் முழிமுழியாப் பேசறானாமே! நான் கேள்விப்பட்டேன். உன் மன்னிக்குப் புதுசா தங்கை பிறந்திருக்காம். அதிலேருந்து என்னமோ கசமுசப்பாயிருக்காம்.” – பக்/180.

‘தரிசனம்’ இந்தத் தொகுப்பிலேயே தனித்தன்மை வாய்ந்தது. ஏனோ திருமணம் குதிராமல் தடைப்பட்டு வருகிற பெண்களை நினைத்த இவர் சோகம், மிகுந்த கலைநயத்துடனும் கவிதையின் அழத்துடனும் வெளிப்பட்டுள்ளது. ”எதிர்வீட்டில் ஒரு பெண் வயது முப்பத்திரெண்டாம். இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம்… அவளை அவள்பயிலும் வீணையின் இசையாய்த்தான் அறிவேன். தன் ஆவியின் கொந்தளிப்பை வீணையில் ஆஹ¤தியாய்ச் சொரிகிறாள்… நாட்டில் பெண்களுக்குக் குறைவில்லை. பிள்ளைகளுக்கும் குறைவில்லை. ஆனால் தாலிமுடி ஏன் விழுவதில்லை?” – பக்/112. ”கன்யாகுமரி காஷாயினி… காத்திருப்பது என்றால் என்ன? இங்கு இத்தனை அழகும் அங்கு அத்தனை செளரியமும், ஒன்றுடன் ஒன்று ஒன்றாக ஏங்கி, வறட்டுக் கெளரவத்தில் வியர்த்தமாகப் போவதுதானா? கப்பல்களைக் கவிழ்த்த கதைகளைத் தன்னுள் அடக்கிய மூக்குத்தி உண்மையில் கல்யாணம் ஆகாமல் காத்திருக்கும் கன்னிகளின் ஏக்கம் ஒன்றுதிரண்ட கண்ணீர்ச் சொட்டு.” (பக்/117)

லா.ச.ரா.வின் ஒவ்வொரு கதையும் சிறப்புச் சிறுகதைதான். லா.ச.ரா.வின் சொற்செட்டும், கற்பனை அழகும், கவிதை மனமும் மிகுந்த சுவையும், அதேசமயம் கருத்துச் செறிவும் நிரம்பியவை.

எங்களைப்போன்ற இன்றைய இளைய எழுத்தாளர்களுக்கு லா.ச.ரா.வும், ஜானகிராமனும் தவிர்க்க முடியாத ஆதர்சங்கள். இருவரது கதைகளையும் தொடர்ந்து ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டு வருவது மகிழ்ச்சியோடு பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

1) லா.ச.ரா. மரபுரீதியான பழக்கவழக்கங்களை தம் கதைகளில் ஆதரித்தார். எனினும் அவைகளை மரபை உதறிய புது முறைகளில் சொன்னார்.

2) தமிழ்மொழிக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் கட்டுரைகளுக்கு சுந்தர ராமசாமியையும், கதைகளுக்கு லா.ச.ரா.வையும் சொல்லியாக வேண்டும்.

3) லா.ச.ரா. உணர்வுகளின் மைக்ராஸ்கோப். சொற்களின் சூத்ரதாரி. இவர் கதைகள் வார்த்தைகளின் விஸ்வரூபம். லா.ச.ரா.வின் உலகம் குறுகியது என்று கூறுபவர்களால்கூட அது ஆழமானது என்பதை மறுக்க முடியாது.

எஸ். ஷங்கரநாராயணன்
சென்னை 101
10.12.1986
(ஐந்திணை பதிப்பகம் – லா.ச.ரா.வின் சிறப்புச் சிறுகதைகள் – முதல் தொகுதி.)

>>>

லா.ச.ரா.வுடன் நட்பு (அடுத்த இதழில்)
————————————————————————————————————————

By Era Murugan in RKK:
ஒரே கதையைத்தான் லா.ச.ர வெவ்வேறு நடைகளில் எழுதுகிறார் என்று கு.அழகிரிசாமி ஒரு தடவை சொன்னார்

இந்தக் குற்றச்சாட்டு கி.ராஜநாராயணனைக் குறித்தும் உண்டு. பிரபஞ்சன் சொன்னதாக நினைவு.

லா.ச.ராவை ‘அழுகுணிச் சித்தர்’ என்பார் க.நா.சு.

இ.பா சார் சொன்னபடி, அவர் ஒரு தலைமுறையின் கல்ட் ஃபிகர். ‘புத்ர’வும் ‘சிந்தாநதி’யும் அவர் பெயரை எக்காலத்துக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் – கல்ட் பிகர்கள் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துப் போகப்படுவதில்லை என்றாலும்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் (1998 என்று நினைவு) அவரைச் சந்தித்தபோது என்னிடம் சொன்னார் – “கதை நன்றாக வரும்வரை அதை விடாதே. திரும்பத் திரும்ப சோம்பல்படாது எழுது. என் வீட்டுக்கு வா, காண்பிக்கிறேன், புத்ரவுக்கு எத்தனை டிராப்ட் ட்ரங்குப் பெட்டியில் வைத்திருக்கிறேன் என்று”.

அவர் பட்ட கஷ்டம் நாம் படத்தேவையில்லாமல் செய்துவிட்டது டெக்னாலஜி. கம்ப்யூட்டரில் எழுதுவதால், அடித்தலும் திருத்தலும் ஒட்டுதலும் வெட்டுதலும் புதிதாக நுழைத்தலும் நாலே கீபோர்ட் விசைகள் மூலம் நடத்திவிட முடிகிறது. ஆனால் அந்த ‘சிரமத்தை’க்கூட எடுத்துக்கொள்ள எத்தனை எழுத்தாளார்கள் முயல்கிறார்கள் என்பதுதான் கேள்வி.

புத்ர-வை நாவலோடு அங்கங்கே அவர் டூடுல்ஸாகக் கிறுக்கிச் சேர்த்த படங்களுக்காகவும் நினைவு வைத்திருக்கிறேன்.வாசகர் வட்டம் (லட்சுமி கிருஷ்ணமூர்த்தி) கிட்டத்தட்ட ஐம்பது வருடம் முன்னால் நூல் பதிப்பில் செய்த அழகான புதுமை அது.

அன்புடன்
இரா.மு

Thinnai: “லா.ச.ரா.வின் பாற்கடலும் போர்க்களமும் :: பா. உதயகண்ணன்”

Thinnai: “லா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக.. :: மகேஷ்.”

Thinnai: “லா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி :: ம.ந.ராமசாமி”

————————————————————————————————————————————————–

முகங்கள்: எழுத்தையே சங்கீதமாக்க முயற்சித்தவர்!

ந.ஜீவா

“எழுத்து எனது சொந்த ஆத்மார்த்தம்’, “எனக்காகவே நான் எழுதுகிறேன், அதில் பிறர் தன்னை அடையாளம் காண முடிந்தால் அதுவே பெரிய விஷயம்’ என்றெல்லாம் கூறியவர் மறைந்த எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம். கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் நம்மை விட்டுப் பிரிந்த எழுத்தாளர் லா.ச.ரா.வுக்கு வயது 91.

அவரைப் பற்றிய ஓர் ஆவணக் காட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார் இயக்குநர் அருண்மொழி.

அவள் அப்படித்தான், ஏழாவது மனிதன், கருவேலம்பூக்கள், மோகமுள் போன்ற தமிழின் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் பணியாற்றியவர் அருண்மொழி. காணிநிலம், ஏர்முனை ஆகிய படங்களை இயக்கியவர்.

தற்போது எல்.வி.பிரசாத் ஃபிலிம் & டிவி அகாதெமியில் ஆசிரியராகப் பணியாற்றும் அவரைச் சந்தித்தோம்.

லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் எப்படி வந்தது?

நான் லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப் படம் எடுப்பதற்குக் காரணம் அவருடைய எழுத்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய கவித்துவமான நடை என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அவருடைய “கழுகு’ கதையை தொலைக்காட்சிக்காகப் படமாக்க வேண்டும் என்று 1992 இல் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போதிருந்து அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு எனக்கு ஆர்வம் வந்ததற்கு இன்னொரு காரணம் அவரது சொந்த ஊரான லால்குடிக்கு அருகேதான் எனது சொந்த ஊரும்.

அவருடைய “கழுகு’ கதையைப் படமாக்கினீர்களா?

நான் கழுகு கதையைப் படமெடுக்கலாம் என அவரை அணுகிய போது அதற்கு அவர் அனுமதி கொடுக்கவில்லை.

“என் கதையைப் படமெடுக்காதீங்க…என் கதையைப் படமெடுத்து நஷ்டம் அடையாதீங்க’ என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டார். அவருடைய கதை படமாகும்போது மாறிவிடும் என்பதனால் அப்படிக் கூறுகிறாரோ என்று நினைத்தேன். அவரும், “கதையின் ஜீவன் படமாக்கும்போது வீணாகிவிடும்’ என்றார். நான் திரைக்கதையை அவரிடம் காட்டுகிறேன் என்றெல்லாம் கூறிப் பார்த்தேன். அவர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மேலும் எனக்கு அந்த ஆண்டு அந்தக் கதையைப் படமாக்குவதற்கான அப்ரூவல் தூர்தர்ஷனில் கிடைக்கவில்லை.

ஆனால் அந்தக் கதையை வேறொருவர் எடுத்தார். ஆனால் லா.ச.ரா., “அந்தப் படத்துக்கும் தனது கதைக்கும் எந்தத் தொடர்புமில்லை’ என்றார்.

லா.ச.ரா.வுக்கு சினிமாவைப் பற்றிய நல்ல அபிப்ராயங்கள் இருந்தனவா? உங்களைப் படமெடுக்க எப்படி அவர் அனுமதித்தார்?

எனக்கும் எல்லாருக்கும் தெரிந்த லா.ச.ரா. ஓர் எழுத்தாளர் என்பதுதான். ஆனால் அவரைச் சந்தித்துப் பேசிய போது அவர் உலகத்தரம் வாய்ந்த ஏராளமான திரைப்படங்களின் ரசிகர் என்பது தெரியவந்தது. 1940 – 50 காலகட்டங்களில் வெளிவந்த தரமான படங்களின் ரசிகர் அவர். ஃபிராங் காப்ராவின் படங்களை எல்லாம் பார்த்து அணுஅணுவாக ரசித்திருந்தது தெரிய வந்தது.

உலகத்தரம் வாய்ந்த படங்களைப் பார்த்து ரசித்த லா.ச.ரா.விற்கு தமிழ்த் திரைப்படங்களில் அவ்வளவு பரிச்சயமில்லை. லா.ச.ரா. தொலைக்காட்சியில் கூட தமிழ் சினிமா பார்க்கமாட்டார் போலிருக்கிறது. 96 – 98 ஆம் ஆண்டில் கமல்ஹாசனைப் பற்றி அவரிடம் பேசினேன். அதற்கு அவர், “கமல்ஹாசனா? யார் அவர்? என்ன பண்றார்?’ என்று கேட்டார். இத்தனைக்கும் கமல்ஹாசன் லா.ச.ரா.வின் தீவிர ரசிகர். அதற்குப் பின் கமல்ஹாசனோடு அவருக்குத் தொடர்பிருந்ததா என்று எனக்குத் தெரியாது. வயோதிகத்தின் காரணமாக ஒருவேளை அப்படி அவர் பேசினாலும் பேசியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

அவரை ஆவணப்படம் எடுக்கப் போகிறேன் என்று சொன்ன போது, “உங்களுக்காக நான் நடிக்க எல்லாம் முடியாது. வேண்டுமானால் இயல்பா நான் இருக்கறதை படம் எடுத்துக்கங்க’ என்றார்.

லா.ச.ரா.பற்றிய ஆவணப்படத்தில் என்ன காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன?

அதற்குப்பின் பலமுறை க்ருஷாங்கினியுடன் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். டைனிங் டேபிள் முன் உட்கார்ந்து க்ருஷாங்கினிக்கு அவர் அளித்த பேட்டிகளைப் படமெடுத்தேன். அதன்பின் லா.ச.ரா. பங்கெடுத்த ஐந்து இலக்கியக் கூட்டங்களைப் பதிவு செய்தேன். அக்கூட்டங்களில் சிட்டி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றோர் லா.ச.ரா.வைப் பாராட்டிப் பேசிய நிகழ்வுகளைப் படமெடுத்தேன். இதுதவிர வண்ணநிலவன், ஞானக்கூத்தன் ஆகிய இருவரையும் லா.ச.ரா.வின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்து அதையும் படமாக்கியிருக்கிறேன். லா.ச.ரா.வை அவர் வீட்டில் படமெடுக்கும் போதெல்லாம் அவருடைய துணைவியாரும், மகளும் ரொம்ப ஒத்துழைப்புக் கொடுத்துப் படமெடுக்க உதவினார்கள்.

தான் ஓர் எழுத்தாளனாக இருப்பது பற்றி அவர் எண்ணம் எப்படி இருந்தது?

“நான் சம்பாத்தியத்துக்குத் தொழில் வச்சிருக்கேன். எழுத்தை வியாபாரம் பண்ணலை. முத்திரைக் கதையெல்லாம் எழுதமாட்டேன். நான் எழுத்தில் பரிசோதனைகள் பண்றேன்’ என்பார்.

எழுத்தாளர் தி.ஜானகிராமனைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் உடையவராக இருந்தார் லா.ச.ரா. “தி.ஜானகிராமன் சங்கீதக்காரனைக் கதாபாத்திரமாக வைத்து எழுதுகிறார். நான் எழுத்தையே சங்கீதமாக்க முயற்சிக்கிறேன்’ என்பார்.

லா.ச.ரா.விடம் உங்களைக் கவர்ந்த பண்பு?

பணத்தைப் பெரிதாக எண்ணாத மனிதர். 1996 இல் இருந்து 2000 க்குள் அவர் மூன்று வாடகை வீடுகள் மாறிவிட்டார்.

அவர் ஒருவரிடம் ஏதோ பேசணும் என்பதற்காகப் பேசமாட்டார். நாம் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக அவரைப் பார்க்கப் போனால் அது பற்றி மட்டுமே அவர் பேசுவார். அதுபோல அவரின் ரசிகர் யாராவது நம்மோடு வந்து அவருடன் பேச ஆவலாக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் அவர் கண்டு கொள்ளமாட்டார். அவருடன் பேச அவர் இன்னொரு நாள்தான் வரவேண்டும். நேரம் பற்றிய அப்படியொரு விழிப்புணர்வு அவருக்கு இருந்தது.

மேலும் அவரைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லி அவரைப் பாராட்டிவிட முடியாது. வாசகர்கள் யாராவது அவரை அரைகுறையாகப் படித்துவிட்டுப் பாராட்டினால் லா.ச.ரா.கேட்கும் நுட்பமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் விழிக்க நேரிடும்.

பிற எழுத்தாளர்களைப் பற்றி ஆவணப்படம் எதுவும் எடுத்திருக்கிறீர்களா?

நான் லா.ச.ரா.வை மட்டும் ஆவணப்படம் எடுக்கவில்லை. நகுலனைப் பற்றிய ஆவணப்படமும் எடுத்திருக்கிறேன்.

எப்படி லா.ச.ரா.வை நீண்டகாலமாகப் பதிவு செய்து ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறேனோ அதைப் போல பிற எழுத்தாளர்களையும் பதிவு செய்துவருகிறேன்.

கோவை ஞானியை நிறையப் பதிவு செய்திருக்கிறேன். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், இன்குலாப், இலங்கை இலக்கிய விமர்சகர் கா.சிவத்தம்பி ஆகியோரைப் பற்றிய பதிவுகள் என்னிடம் உள்ளன. மேலும் சில காட்சிகளை எடுத்தால் இவற்றையெல்லாம் ஆவணப்படங்களாக மாற்றிவிடலாம்.

கவிஞர் பழமலய், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஆகியோரையும் படமெடுக்க ஆசை உள்ளது.

ந.ஜீவா

Posted in 2437706, Academy, Anjali, Author, Awards, Biography, Biosketch, Blogs, Books, Critic, Critique, dead, Dhinamani, Dinamani, Faces, Fiction, Kadhir, Kathir, La Sa Ra, Lalgudi, Lalkudi, LaSaRa, Life, Literature, Manikkodi, Manikodi, Memoirs, Novels, people, Poems, Poet, Prizes, Puthra, Putra, Raamamirtham, Ramamirtham, Reviews, Sahithya, Sahithya Academy, Sahitya, Sahitya Academy, Saptharishi, Sindhanathi, Sindhanathy, Sinthanathi, Tamil, Tamil Blogs, Thinamani, Writer | 8 Comments »

Ingmar Bergman – Anjali, Memoirs, Movies, Biosketch

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

தனிமையின் இசை: அஞ்சலி – இங்கமர் ப�

குப்பை வலை: பெர்க்மன் காலமானார்.

அனாதை – ரசித்த திரைப்படங்கள்: Wild Strawberries

————————————————————————————————

கடவுளுக்கு ஒரு கேள்வி!

தொலைக்காட்சிக்காக அவர் இயக்கிய “சீன்ஸ் ஃப்ரம் எ மேரேஜ்’ (1973) என்ற ஆறுமணி நேரப் படம் கணவன், மனைவி பிரச்சினையைக் களமாகக் கொண்டு உருவாக்கப் பட்டிருந்தது. அது அவர் இரண்டாம் மனைவியைக் குறித்த படம் என்பார்கள். (பெர்க்மன் ஐந்து முறை திருமணம் செய்தவர். 9 குழந்தைகள்.)

உலக சினிமாவின் கடந்த 100 ஆண்டு சரித்திரத்தில் டாப் டென் படங்களைப் பட்டியலிட்டால் அதில் இங்மார் பெர்க்மனைத் தவிர்க்க முடியாது என்பார்கள். தத்துவார்த்தமான படங்களுக்காக அதிகம் சிலாகிக்கப்பட்டவர் அவர்.

ஸ்வீடன் நாட்டில் லூதரன் கிருஸ்தவ பாதிரியாரின் மகனாக அதிக கண்டிப்புடன் வளர்க்கப்பட்டதாலோ என்னவோ கடவுள் சம்பந்தமான நம்பிக்கைகளில் அவருக்கு ஏராளமான கேள்விகள் இருந்தன. அது அவருடைய படங்களில் அதிகம் பிரதிபலிக்கப்பட்டது. தவிர, மனோரீதியான பிரச்சினைகள், மனித உறவுச் சிக்கல்கள் அவருடைய திரைப்படங்களின் ஆதாரமான அம்சமாக இருந்தன.

மெüனப் படங்களின் காலத்தில் திரைப்படங்கள் இயக்கிய விக்டர் ஜோஸ்ட்ரம் (Victor Sjostrum) இவருடைய முன்னோடி என்று சொல்லலாம். ஆனால் அதற்கு முன்பே இவர் நாடகத் தயாரிப்பில் ஈடுபட்டு இவருடைய தனித்தன்மையை அடையாளப்படுத்தியிருக்கிறார். ஷேக்ஸ்பியர் முதல் ஸ்டெர்ன்பெர்க் வரையான நாடக ஆசிரியர்களின் நாடகங்களை அவர் அரங்கேற்றியிருக்கிறார்.

இவர் முதலில் திரைக்கதை அமைத்த “ஹெட்ஸ்’ என்ற படம் 1944-ல் தயாரானது. 46-ல் தன் முதல் திரைப்படமான “க்ரைசிஸ்’-ஐ இயக்கினார்.

புரிதல் உள்ள கலைஞர்களின் கூட்டணியில்தான் சிறந்த படங்கள் உருவாக முடியும் என்பதில் பெர்க்மன் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். அவருடை நடிப்புக் கலைஞர்கள் பெரும்பாலும் ஒரு சிலரே. மேக்ஸ்வான் சைடோ, குன்னார் பாண்ஸ்டிரான்ஸ், ஈவா டால்பர்க், பிபி ஆண்டர்சன், ஹாரியாட் ஆண்டர்சன், லிவ் உல்மான் போன்றவர்கள் அவருடைய நிரந்தர நடிகர்களாக இருந்தனர். இரண்டு காமிராமேன்களோடு பணியாற்றியிருக்கிறார். குன்னார் ஃபிஷ்ஷர் அதில் முக்கியமானவர். இவரும் பெர்க்மனும் பணியாற்றிய படங்களில் “வைல்ட் ஸ்ட்ராபெர்ரிஸ்’ (1957), “விர்ஜின் ஸ்பிரிங்’ (1960) ஆகியவை பெரிதும் போற்றப்பட்டன. அடுத்தவர் ஸ்வென் நிக்விஸ்ட். இவருடைய பிரதான பங்களிப்பை “க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ்’ படத்தில் பார்க்கலாம். இவர்கள் இருவருமே உலகம் போற்றும் ஒப்பற்ற ஒளிப்பதிவாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள். பெர்க்மனின் படங்களில் மிளிர்ந்த அழகுணர்வும் கட்டமைப்பும் இந்தக் கலைஞர்கள் கூட்டணியை அவர் உருவாக்கியதால்தான் சாத்தியப்பட்டது.

“ஃபேன்னி அண்ட் அலெக்ஸôண்டர்’ (1982) அவருடைய சுயசரிதம் போல அமைந்த படம். இதுவே தன் கடைசி படம் என்றும் அவர் அறிவித்தார். ஆனால் வாழ்க்கையில் எந்தத் தீர்மானங்களும் பெரும்பாலும் நம் கையில் இல்லாமல் போவதைப் போலவே அவருடைய அது அவருடைய கடைசி படமாக இல்லை. அதைத் தொடர்ந்து படங்கள் இயக்கினார். ஆஃப்டர் த ரிகர்ஸல் (1984), சாரா பாண்ட் (2003) போன்ற படங்கள் அதன் பிறகு இயக்கியவைதான்.

தர்ஸ்ட் (1949), சாடஸ்ட் அண்ட் டின்செல் (1953), ஸ்மைல்ஸ் ஆஃப் எ சம்மர் நைட் (1955), செவன்த் சீல் (1957), தி விர்ஜின் ஸ்பிரிங் (1960), த்ரு ஏ க்ளாஸ் டார்க்லி (1961), விண்டர் லைட் (1962), சைலன்ஸ் (1963), பெர்úஸôனா (1966), தி ரைட் (1968), தி மேஜிக் ஃப்ளூட் (1975), ஃபேஸ் டு ஃபேஸ் (1976) போன்ற படங்கள் மனிதனின் மதம் சார்ந்த நம்பிக்கைகள், குரோதம், ஏமாற்றம், உறவுத் தன்மைகள் போன்ற மனிதனின் ஆதாரமான குணங்களை மையப்படுத்தியிருந்தன. பெண்களை மனம் நொறுங்கிய பாத்திரங்களாகப் படைத்திருந்தார் அவர். பெண்களைச் சித்திரிப்புகள் மூலம் பரவலாகப் பேசப்பட்டார். உலகநாடுகளின் பார்வை இவர் மேல் குவியத் தொடங்கியது இவருடைய பெண் பாத்திரங்களால்தான்.

தொலைக்காட்சிக்காக அவர் இயக்கிய “சீன்ஸ் ஃப்ரம் எ மேரேஜ்’ (1973) என்ற ஆறுமணி நேரப் படம் கணவன், மனைவி பிரச்சினையைக் களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. அது அவர் இரண்டாம் மனைவியைக் குறித்த படம் என்பார்கள். (பெர்க்மன் ஐந்து முறை திருமணம் செய்தவர். 9 குழந்தைகள்.)

அறுபதாண்டு சினிமா வாழ்வில் அவர் அறுபது படங்களை இயக்கியிருக்கிறார். சினிமா காமிராவை உள்ளத்தின் கண்ணாகப் பயன்படுத்தியவர் என்று பெர்க்மனை வர்ணிப்பதுண்டு. அதே சமயம், அவருடைய அரசியல் சார்பு வரையறுக்கப்பட்ட ஒன்று என்றும் சமூக ரீதியாக குறுகிய நோக்கம் உள்ளவர் என்றும் அவர் மீது விமர்சனங்கள் உண்டு.

குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்த அரசியல் சார்பும் அவருக்கு இருந்ததில்லை. பலவிதமான கொடூரங்களுக்குப் பிறகும் மனதைத் தேற்றி கலை, ரசனை போன்றவற்றில் மனிதன் தன்னை எப்படிச் செலுத்த முடிகிறது என்ற ஆச்சர்யம் அவருடைய படத்தில் தொனித்தது. அப்படித் தேற்றிக் கொள்வதற்கு கலையும் ரசனையும்தான் காரணமாக இருக்கிறது என்பதுதான் அவருடைய ஆச்சர்யத்தின் அர்த்தம்.

“செவன்த் சீல்’ படத்தில் கதாநாயகன் மரணத்துடன் நடத்தும் யுத்தம் கருத்து உருவாக்கக் காட்சியாகச் சொல்லப்பட்டது. மரணத்துடன் செஸ் ஆடுவான் நாயகன். இறுதியில் மரணம்தான் வெல்லும். 89-வது வயதில் மரணத்தைத் (ஜூலை 30) தழுவியிருக்கும் பெர்க்மன் மரணத்தை வென்ற கலைஞராக இருக்கிறார்.

அதே படத்தில் கடவுளை நோக்கி கதாநாயகன் ஒரு கேள்வி கேட்பான். அதுதான் பெர்க்மனின் வாழ்நாள் கேள்வியாக இருந்தது: “”நம்ப விரும்புகிறோம். ஆனால் முடியவில்லை. எங்களுக்கு என்ன வழி?”

-தமிழ்மகன்

————————————————————————————————
பெர்க்மன் பற்றி…!

கே.பாலசந்தர் (இயக்குநர்)

பலருக்கு விருதுகள் மீது காதல் இருக்கும்; ஆனால் விருதுகளுக்கோ சிலர் மீதுதான் காதல் வரும். அப்படி உலகின் ஒட்டுமொத்த உயரிய விருதுகள் பலவும் மையல் கொண்டு மயங்கி விழுந்தது பெர்க்மனிடத்தில்தான். அதற்கான முழு தகுதியும் அவருக்குண்டு. எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத அவருடையை கலையுணர்வு, சினிமாவுக்கு வர விரும்புவோர் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. அவர் ஒரு பெர்ஃபக்ஷனிஸ்ட். அவருடைய “ஹெட்ஸ்’, “ஸ்மைல்ஸ் ஆஃப் எ சம்மர் நைட்’, “க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ்’ போன்ற படங்கள் என்னை பாதித்தவை.
————————————————————————————————
கௌதம் மேனன் (இயக்குநர்)

பெர்க்மனுடைய படங்களில் எனக்குப் பிடித்தவை “வைல்ட் ஸ்ட்ராபெர்ரிஸ்’, “த செவன்த் சீல்’, “ஆட்டம் சொனாட்டா’ போன்றவை. நான் உதவி இயக்குநராக இருந்த காலகட்டங்களில் நண்பர்களுடன் பல தடவை பெர்க்மனின் படங்களைப் பற்றி டிஸ்கஸ் செய்ததுண்டு. அவருடைய “ஆட்டம் சொனாட்டா’ படத்தைத் தமிழில் எடுக்க வேண்டும் என்று கூட நினைத்திருக்கிறேன். “ஃபீமேல் சைக்காலஜி’யை சினிமாவில் முதன்முதலாகப் பயன்படுத்தியவர். “பூவே பூச்சூட வா’, “கற்பூர முல்லை’ போன்ற படங்கள் கூட அவருடைய சில படங்களின் கருதான்.

————————————————————————————————

கே.வி.ஆனந்த் (ஒளிப்பதிவாளர்} இயக்குநர்)

பெர்க்மன் படங்களில் கேமிராமேனாக பணியாற்றியவர் ஸ்வென் நிக்விஸ்ட். உலகின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர். இவருடைய ஒளிப்பதிவுக்காகப் படங்களைப் பார்க்கும்போதுதான் அந்தப் படத்தை இயக்கியவர் பெர்க்மன் என்று தெரியும். இப்படித்தான் எனக்கு பெர்க்மன் அறிமுகமானார். ரசிகர்களை ஒவ்வொரு ஃப்ரேமிலும் அசத்தி அவர்களை அப்படியே உட்கார வைக்க வேண்டும் என்றுதான் இப்போதைய கமர்சியல் சினி டெக்னீசியன்ஸ் நினைக்கிறார்கள். ஆனால் பெர்க்மன் அப்படி அல்ல. எந்தக்

காட்சிக்கு எது அவசியமோ அதை மட்டுமே பயன்படுத்துவார். அவருடைய படக் காட்சிகளைத் தொடர்ச்சியாக 10 நிமிடங்கள்; 30 நிமிடங்கள் பார்த்தால்தான் கதையின் “வேல்யூ’ புரியும்.
————————————————————————————————
எஸ்.ராமகிருஷ்ணன் (எழுத்தாளர்)

உலகின் “டாப் 10 சினிமா மாஸ்டர்கள்’ யார்? என ஒரு பட்டியலிட்டால் அதில் பெர்க்மனின் பெயரைத் தவிர்க்க முடியாது. பெர்க்மன் சினிமாத் துறைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே “பெர்க்மன் சினிமா’ என ஒரு ஸ்டைலை உருவாக்கினார். அவருடைய படங்களில் 90 சதவீதம் பெண்களுடைய அகவுலகம் பற்றிய விஷயங்களை உளவியல் ரீதியாகக் காட்டியவர். பெண்களுடைய கனவு, ஏக்கம், தனிமை, அப்பாவித்தனம், அறியாமை, ஆளுமை, நட்பு, காதல், காமம் போன்றவற்றை வேறு எந்த இயக்குநரும் பெர்க்மன் அளவுக்கு ஆழமாகக் காட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே! அவருடைய படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது “த விர்ஜின் ஸ்பிரிங்’.
————————————————————————————————
ரேவதி (நடிகை } இயக்குநர்)

பெர்க்மனின் படங்களில்தான் பெண்களின் உலகத்தை முழுமையாகக் காண முடியும். சினிமாவில் ஒரு பெண் இயக்குநரால் கூட இத்தனை அழகாகவும், தத்ரூபமாகவும் பெண்களின் சைக்காலஜியை காட்டுவது சிரமம்தான். “க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ்’, “சீன்ஸ் ஃப்ரம் எ மேரேஜ்’, “வைல்ட் ஸ்ட்ராபெர்ரிஸ்’ போன்றவை என்னுடைய ஃபேவரைட் படங்கள். எனக்குப் பிடித்த ஐந்து வெளிநாட்டு இயக்குநர்களில் ஒருவர்.
————————————————————————————————

Posted in Anjali, Bergman, Biosketch, Cinema, Faces, Films, Ingmar, Memoirs, Movies, people, World | Leave a Comment »

Thi Vai Goplal Iyer passes away – Memoirs & Anjali

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 6, 2007

“ஓயாத தமிழ் அலை ஓய்ந்தது’

“தமிழ்க் கடல்’ என்றும், “நூற்கடல்’ என்றும் போற்றப்படும் பண்டித வித்வான் தி.வே. கோபாலையர் காலமான செய்தி தமிழன்பர்களுக்குத் தாங்க முடியாத அதிர்ச்சி.

ஒரு நடமாடிய தமிழாக வாழ்ந்தவர்; சங்க இலக்கிய இலக்கணங்கள் அனைத்தும் அவர் நினைவில்; மூலமும், உரையும் முழுமையாக மனத்தில் ஏந்திய மனிதக் கணினி; பணம், பதவிகளை விரும்பாத இல்லறத் துறவி.

1964ஆம் ஆண்டு. என்னைப் போன்ற ஆயிரமாயிரம் புலவர்களை உருவாக்கிய திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வராக அவர் வந்தபோது தொடங்கிய அறிமுகம் இறுதிவரை தொடர்ந்தது.

நெற்றியில் திருநீறும், வாயில் வெற்றிலையுமாக தூய வெண்ணிறமான ஜிப்பா, வேட்டியுடன் அவர் நடந்து வரும் கம்பீரத்தை மாணவர்களாகிய நாங்கள் எதிர்நின்று பார்த்து ரசிப்போம். முதல்வர் என்ற செருக்கோ, பெரும்புலவர் என்ற ஆணவமோ அவரிடம் இருந்ததில்லை.

ஒருசமயம் அவரை எதிர்த்தே கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதனையும் அவர் ஒரு புன்முறுவலோடு எதிர்கொண்டார். அவரைக் கண்டித்து எழுதப்பட்ட துண்டறிக்கையை ஒரு மாணவர் அவரிடம் நீட்டியபோது, அமைதியாக வாங்கிப் படித்து அதில் உள்ள பிழைகளைத் திருத்தித் திரும்பக் கொடுத்த பெருந்தன்மையை என்னென்பது! திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்திலும், தஞ்சை தொல்காப்பியர் கழகத்திலும் அவர் தொல்காப்பியத்தைப் பற்றி ஆற்றிய உரைகள் தமிழறிஞர்களையே வியப்பில் ஆழ்த்தின. தொல்காப்பியத்தின் அனைத்து உரைகளையும் ஒப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேல் உரையாற்றினார். அவர் முடித்தபோது அரங்கமே அதிர்ந்தது. தொல்காப்பியம் பற்றி அறியாதவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போதுதான் பலருக்கு தொல்காப்பியமே அறிமுகம் ஆனது.

அவர் வகுப்பில் பாடம் நடத்துவதே ஓர் அறிவார்ந்த அழகு. வகுப்புக்கு வந்ததும் அன்றைக்கு என்ன பாடம் என்று கேட்டுவிட்டு, புத்தகத்தை மூடி வைத்து விடுவார். இலக்கணமாக இருந்தாலும் இலக்கியமாக இருந்தாலும் இனிய குரலில் வாய் விட்டுப் பாடுவார். நச்சினார்க்கினியரும், இளம்பூரணரும், அடியார்க்கு நல்லாரும், பரிமேலழகரும், சிவஞான முனிவரும் வகுப்பு முடியும்வரை வந்து வந்து போவார்கள். முந்தையோர் உரைகளை அவர் விளக்கும்போது ஒரு புதிய பரிமாணம் தோன்றும். அவரது உரைக்கு எதிராக வினாக்கள் தொடுத்தாலும் அந்தக் கடல் கலங்காது; கவலைப்படாது. உரையாசிரியர்களுள் நச்சினார்க்கினியர் அவருக்கு மிகவும் பிடிக்கும். அவரை எதிர்த்துக் கேட்டால் சிரித்துக் கொண்டே கூறுவார்: “”அவன் நச்சினார்க்கே இனியன்…”

அவர் ஏராளமான நூல்கள் எழுதியிருக்க முடியும்; என்றாலும் எழுதவில்லை. அதற்குக் காரணம் அவர் இந்த வெளியுலக விளம்பரத்துக்கு அப்பாற்பட்டவராகவே வாழ விரும்பினார். அவர் நினைத்திருந்தால் விருதுகளையும், பதவிகளையும் வென்றெடுக்க முடியும். ஆனால் அவர் எந்தவித புகழையும், பரிசுகளையும் மதித்ததில்லை. “பரிசும் பாராட்டும் தேடிவர வேண்டும். தேடி அலைவது தமிழுக்கு அவமானம்’ என்று கூறுவார். கல்லூரியிலிருந்து ஓய்வுபெற்றதும் புதுச்சேரி பிரெஞ்சு கலை ஆய்வு நிறுவனம் அவரை அழைத்துக் கொண்டது.

எண்ணிறந்த ஆய்வுக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். அவை தனி நூல் வடிவம் பெறவில்லை. அண்மையில் தமிழ் மண் பதிப்பகம் வெளியிட்ட தொல்காப்பியம் – செம்பதிப்பு 14 தொகுதிகளுக்கும் இவர் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார். புதுச்சேரி இந்தியப் பள்ளியின் ஆய்வு மாணவர்களுக்காக இவரால் பிழைநீக்கிச் செப்பம் செய்யப்பட்ட தொல்காப்பிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு அவை பதிப்பிக்கப்பட்டன. இதுதவிர இவர் அரும்பாடுபட்டுத் தயாரித்த தமிழ் இலக்கணப் பேரகராதி பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

மரபுவழிவந்த தமிழ்ப் புலவர் வரிசையில் இவர் கடைசித் தலைமுறை என்று கூறலாம். எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திருலோக சீதாராமனும், தஞ்சை வழக்கறிஞர் டி .என். இராமச்சந்திரனும் இவரைப் பெரிதும் மதித்து வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்த துணை நின்றனர். எனினும் இந்தக் கடல் எந்த எல்லைக்குள்ளும் அடங்கவில்லை.

இப்போது இந்த ஓயாத தமிழ் அலை ஓய்ந்துவிட்டது; சாயாத தமிழ் மலை சாய்ந்துவிட்டது. ஆயினும் தமிழ் இருக்கும்வரை அவர் பெயர் இருக்கும்; நெஞ்சம் இருக்கும்வரை நினைவிருக்கும்.

Posted in Anjali, Author, Biosketch, Books, History, Memoirs, Notable, people, Persons, Professor, Research, Scholar, Teacher, Writer | 1 Comment »

Journeys with Vallikkannan – Asokamithiran

Posted by Snapjudge மேல் திசெம்பர் 16, 2006

நினைவலைகள்: வல்லிக்கண்ணனுடன் இரு நீண்ட பயணங்கள்

அசோகமித்திரன்

(இடமிருந்து) வல்லிக்கண்ணன், நடராஜன், ஞானக்கூத்தன், சேவற்கொடியோன், அசோகமித்திரன், “தீபம்’ நா. பார்த்தசாரதி (மடியில் அவர் மகன்), மு. மேத்தா.

வல்லிக்கண்ணனைப் பற்றி நினைக்கும்போது தி.க.சி.யைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. தி.க.சி. என்றவுடன் எனக்கு அவருடன் வரும் இன்னும் சிலர் பற்றியும் நினைக்க வேண்டிவரும். ஆ. பழனியப்பன் என்ற மிகச் சிறந்த இலக்கியவாதியும் இலக்கிய ஆராய்ச்சியாளர். இரண்டாவது கந்தர்வன். கடைசியாக என்.ஆர். தாசன்.

தி.க.சி.தான் என்னை வல்லிக்கண்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அன்று வல்லிக்கண்ணன் ராயப்பேட்டை அமீர் மகால் அருகில் ஒரு வீட்டில் குடியிருந்தார். (அதாவது அவருடைய சகோதரர் கோமதிநாயகம் வீட்டில்.) வல்லிக்கண்ணன் நான் எழுதியிருந்த “மஞ்சள் கயிறு’ கதையைப் படித்திருந்தார். அதன் பிறகு அவரை நா. பார்த்தசாரதியின் தீபம்‘ இதழின் அலுவலகத்தில் பலமுறை சந்தித்துப் பேச வாய்ப்பிருந்தது. தி.க.சி. சில விஷயங்களை அடித்துக் கூறுவார். வல்லிக்கண்ணன் புன்னகை புரிவார்.

ஒருமுறை “இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பு சென்னை மத்திய நூலகத்தில் நா. பார்த்தசாரதியின் புதிய நாவல் “ஆத்மாவின் ராகங்கள்’ பற்றி ஒரு விவாதக் கூட்டத்தை நடத்தியது. அந்த நாவலை எழுதி வரும்போது அதன் கதையை பார்த்தசாரதி என்னிடம் கூறினார். அவர் சொன்ன கதை மிகவும் உருக்கமாக இருந்தது. ஆனால் சொல்லுக்கும் எழுத்துக்கும் இடைவெளி உண்டல்லவா? விவாதத்தில் வல்லிக்கண்ணன் சிறிது அழுத்தம் தந்தே பேசினார். ஆனால் எல்லோருமே பக்குவப்பட்ட மனதுடையவர்கள். ஆதலால் உறவுகள் தொடர்ந்தன. நா. பார்த்தசாரதியின் அயராத தூண்டுதலில்லாமல் புதுக்கவிதையின் வரலாறு, சரஸ்வதி காலம் போன்ற தொடர்களை வல்லிக்கண்ணன் எழுதியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.

நா. பார்த்தசாரதிக்கு நிறைய அபிமானிகள் உண்டு. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு அவர் வாய்ப்பு ஏற்படுத்தி விடுவார். கல்கத்தா தமிழ் மன்றம் அதன் வெள்ளி விழாவுக்குச் சென்னையிலிருந்து ஒரு குழுவை அழைத்து வரப் பார்த்தசாரதிக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. வருடம் 1977. “எமர்ஜென்சி’ வந்து சில மாதங்கள் ஆகின்றன. பார்த்தசாரதியுடன் வல்லிக்கண்ணன், ஞானக்கூத்தன், சேவற்கொடியோன் (கோவை), மு. மேத்தா மற்றும் நான் நவம்பர் 27-ம் தேதி காலை கொரமாண்டல் எக்ஸ்பிரஸில் ஏறினோம். வழியெல்லாம் மழை. அடுத்த நாள் பகல் கல்கத்தா அடைந்தோம். அதற்கடுத்த நாள்தான் எங்களுக்குத் தெரிந்தது நவம்பர் 27-ம் தேதி ஒரு மிகப் பெரிய புயல் ஆந்திரக் கடற்கரையை மீது வீசியிருக்கிறது என்று. ரயில் நிலையங்கள் தூக்கி எறியப்பட்டிருந்தன. காவலி என்னும் இடத்தில் கடல் உள்புகுந்து பல கிராமங்களைத் தரை மட்டமாக்கி விட்டிருந்தது. அதன் பிறகு பல நாட்கள் சடலங்களை அகற்றுவது பெரும் பிரச்சினையாயிற்று. ஆந்திர அரசு சில ஆயுள் கைதிகளைப் பயன்படுத்தியது குறித்து நிறையக் கண்டனம் கூறப்பட்டது.

நாங்கள் ஒரு வாரம் கல்கத்தாவில் இலக்கியப் பாராட்டும் இலக்கியக் கண்டனமும் வாரி வழங்கினோம். எங்கள் குழுவின் நட்சத்திரப் பேச்சாளர் சேவற்கொடியோன். வரிக்கு வரி கைதட்டல்.

நாங்கள் ஊர் திரும்பும் நாள் வந்தபோது ரயில் பாதை ஒரு மாதிரி சீரமைக்கப்பட்டிருந்தது. புயலின் சீற்றத்தை விஜயவாடா தொடங்கி ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பார்க்கக் கிடைத்தது.

வல்லிக்கண்ணனும் நானும் இன்னொரு முறை ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. எப்படியெல்லாமோ வற்புறுத்திப் புதுமைப்பித்தனுக்கு புதுதில்லியில் ஒரு தேசியக் கருத்தரங்குக்குக் க.நா.சு. ஏற்பாடு செய்திருந்தார். என் கட்டுரை ஆங்கிலத்தில். வல்லிக்கண்ணன் மற்றும் சா. கந்தசாமி தமிழில் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். அந்தக் கருத்தரங்கில் மேலும் ஆங்கிலத்தில் கட்டுரை அளித்தவர்கள் வலம்புரி ஜான் மற்றும் க.நா.சு. கருத்தரங்கில் நா. பார்த்தசாரதியும் கலந்துகொள்வதாக இருந்தது. இல்லை. அதன்பிறகு அவர் எந்தக் கருத்தரங்கிலும் கலந்துகொள்ள முடியாது போயிற்று. அதற்கடுத்த ஆண்டு க.நா.சுவின் மரணமும் நேரிட்டது.

வல்லிக்கண்ணனின் நீண்ட வாழ்க்கையில் ஏராளமான பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவருக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டதாகத்தான் எனக்குத் தோன்றிற்று. அது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே நடந்துவிட்டது.

அவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்த சமயத்தில் அவருடைய நாவல்களையும் ஒரு பதிப்பாளர் மறுபதிப்பு செய்திருந்தார். ஒரு பழைய மாளிகை பற்றி ஒரு நாவல். அதில் சில இடங்கள் மிகவும் நன்றாக இருந்ததாக எனக்குத் தோன்றிற்று. புனைகதை தொடர்ந்து எழுதத் தேவைப்படும் அனுபவங்களை ஓர் எழுத்தாளர் போற்றி ஏற்க வேண்டும்.

நான் கடைசியாக செப்டம்பர் மாதம் அவரைப் பார்த்தேன். அவர் முடிவு இவ்வளவு அருகில் இருந்தது என்று தெரியவில்லை.

Posted in Anjali, Asogamithiran, Asokamithiran, Asokamithran, Asokamitran, Dheepam, Emergency, Gandharvan, Gomathinaayagam, Gomathynaayagam, Gomathynaayakam, History, Ka Naa Su, Literary, Magazines, Meet, Memoirs, Mu Mehtha, Na Pa, Na Parthasarathy, Naa Pa, Naa Paa, Njaanakkoothan, Njaanakoothan, NR Dasan, Sa Kandhasami, Saa Kandasami, Saa Kandhasamy, Sahithya Academy, Sahitya Academy, Sevarkodiyon, Tamil, Thi Ka Si, Thi Ka Sivasankaran, TK Sivasangaran, Valli kannan, Vallikannan, Vallikkannan, Writings | Leave a Comment »

Tribal Leader Shibu Soren – Biography

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006

மகன் கொலைக்காக போராடிய தாய்: சிபுசோரன் சிக்கியது எப்படி?

புதுடெல்லி,நவ. 29- கொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் மத்திய மந்திரி சிபு சோரன் நேற்று உடனடியாக கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

63 வயதாகும் சிபுசோரனை கம்பி எண்ண வைத்திருக் கும் கொலை வழக்கு தீர்ப்பு 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ளது. இதில் அவர் எப்படி சிக்கினார் என்ற விபரம் இப்போது தெரிய வந் துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

1993-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த பிரதமர் நரசிம்மராவ் பெரும்பான்மை பலம் இல்லாமல் தவிக்க நேரிட்டது. எனவே ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக ஜார்க்கண்ட்முக்தி மோர்ச்சா கட்சித்தலைவர் சிபுசோரனுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது.

லஞ்சப்பணத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்று சிபுசோரனின் உதவியாளர் சசிநாத் ஜா கேட்டார் .அவருக்கு ரூ.15லட்சம் சிபுசோரன் கொடுத்தார். அதன்பிறகு மீண்டும் பணம் வேண்டும் என்று சசிநாத் ஜா கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிபுசோரன் 1994-ம் ஆண்டு மே மாதம் சசிநாத் ஜாவை விருந்துக்கு அழைத்தார். பிறகு அவரை தெற்கு டெல்லியில்இருந்து ராஞ்சிக்கு கடத்திச் சென்றனர். அங்கு சசிநாத்ஜா கொலை செய்யப்பட்டார். இதுபற்றி சசிநாத்ஜா சகோதரர் அமர்நாத் ஜா பாராளுமன்ற போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடந்து வந்தது. ஆனால் அதில் வேகம் இல்லாமல் இருந்தது.

இதையடுத்து சசிநாத்ஜா தாய் பிரியம்வதாதேவி டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் அவர் தன் மகன் கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன்பேரில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விடப்பட்டது.

சி.பி.ஐ. தீவிரவிசாரணை நடத்தி சசிநாத்ஜா கொலை சதி திட்டங்களை வெளிச்சத் துக்கு கொண்டு வந்தது. சிபுசோரனின் தூண்டுதல் பேரில் திட்டமிட்டு கொலை நடந்து இருப்பதையும் கண்டு பிடித்தது. அதோடு சசிநாத்ஜா பிணத்தை தோண்டி எடுத்து சிபிஐ விசாரித்தது.

சசிநாத்ஜா எலும்புக்கூடு பல்வேறு நிலைகளில் டிஎன்ஏ சோதனை மூலம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மண்டைஓடு “சூப்பர் இம்போசிங்” முறைப்படி பரிசோதிக்கப்பட்டது. அப்போது அந்த மண்டை ஓடு சசிநாத் ஜா உடையது என்பது உறுதியானது.

சசிநாத்ஜாவின் எலும்புக்கூடுகளில் நடந்த அதிநுட்ப தடயவியல் சோதனைகள் மூலம் அவர் படுகொலை ஆனதும் உறுதியானது. மண்டை ஓடு, எலும்புக்கூடு ஆகிய இரு சோதனைகளும் சிபுசோரன் சிக்க முக்கிய கார ணமாக அமைந்தது.

இந்த விபரங்களை சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டு கோர்ட்டில் ஒப்படைத்தது. கொலைக்கான வலுவான ஆதாரங்கள் இருந்ததால் சிபுசோரனால் தப்ப இயல வில்லை.

மொத்தம் 47 பேர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்கள் அளித்த சாட்சியங்களும் சி.பி.ஐ. விசாரணை முடிவுகளும் முழு அளவில் ஒத்துப்போனது. இதனால் சிபுசோரன் மீது விழுந்த பிடி இறுகியது.

இந்த வழக்கில்

  • சிபு சோரன்,
  • நந்தகிஷோர்,
  • அஜய்குமார்மேத்தா,
  • சைலேந்திரபட்டாச்சார்யா,
  • பசுபதிநாத், மேத்தா ஆகிய 5 பேர் மீது சி.பி.ஐ. குற்றஞ்சாட்டியது. இவர்கள் 5 பேரும் நேற்றே கோர்ட்டு உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்டனர்.

சிபுசோரனுக்கும் மற்றும் 4பேருக்கும் என்ன தண்டனை வழங்கப்படும் என்பது நாளை தெரிய வரும். அவருக்கு ஆயுள்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“குருஜி” சிபுசோரனின் எழுச்சியும்-வீழ்ச்சியும் 12 ஆண்டுகள் காட்டில் வசித்தவர்

“கொலையாளி” என்று நிரூபிக்கப்பட்டதன் மூலம் இந்திய அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியையும், தலை குனிவையும் ஏற்படுத்தி விட் டார் சிபுசோரன்.

வட மாநில அரசியலில் ரவுடியிசம் என்பது அதிகம்… கொலை, ஆள் கடத்தல் என்பதெல்லாம் அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு “சும்மா” பொரி கடலை சாப் பிடுவது மாதிரி சாதாரண சமாச்சாரம்.

ஆனால் ஒரு கட்சிக்கு தலை வராக இருப்பவர் கொலை, ஆள் கடத்தல், சொத்துக் குவிப்பு என பலதரப்பட்ட வழக்குகளில் சிக்கியது இது வரை கேள்விப்படாத ஒன்று. அந்த சிறுமையை ஏற்படுத்தி இருப்பவர் சிபுசோரன்.

1942ம் ஆண்டு இவர் பீகார் மாநிலம் கஜிரிபாத் அருகே உள்ள சந்தல் எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆசிரியர்கள் மலைவாழ் இனத்தை சேர்ந்த வர்கள்.

சிபுசோரனுக்கு 10 வயது இருக்கும் போது அவர் தந்தை இறந்தார். இது அவரது வாழ்க்கைப் பாதையை புரட் டிப் போட்டு விட்டது.பணக்காரர்கள், ஜமீன் தாரர்களுக்கு எதிராக இவர் ஆயுதம் ஏந்தி போராட தொடங்கினார். 1952-ம் ஆண்டு அவரது இந்த போராட் டம் தொடங்கியது.

ஜார்க்கண்ட் இன மலை வாழ் மக்களின் முன்னேற்றத் துக்காக போராடுவதாக இவர் அறிவித்தார். ஜமீன்தாரர்களை தாக்கி விட்டு காட்டுக்குள் ஓடி விடுவார். 1970-ம் ஆண்டு வரை அவர் வாழ்க்கை இப் படித் தான் கழிந்தது.

அதன் பிறகு ஜார்க்கண்ட் இன மக்களுக்காக ஒரு அமைப்பை தோற்றுவிக்க வேண்டும் என்று சிபுசோர னுக்கு தோன்றியது. 1973-ம் ஆண்டு அவர் வக்கீல் வினோத் பிகாரி மகோதா என்பவருடன் சேர்ந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) எனும் அமைப்பை தொடங்கினார். பிறகு இது அரசியல் கட்சியாக மாறியது.

இந்த நிலையில் ஜே.எம்.எம்.மின் முக்கிய தலைவராக திகழ்ந்த மகோதா படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகே சிபுசோரனின் நடவடிக்கைகள் முழுமையாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியது.

ஜார்க்கண்ட் மக்களுக்காக அவர் பேரணி போன்றவை நடத்தி மக்கள் கவனத்தை கவர்ந்தார். இதனால் பீகா ரில் அவர் வளர்ச்சி தடுக்க முடியாதபடி இருந்தது. மலை வாழ் இன மக்கள் இவரை “குருஜி” என்று அழைத் தனர்.

பெரும்பாலான மலைவாழ் இன மக்கள் வீடுகளில் இவரது படத்தை கடவுள் படங்களுக்கு இÛணையாக வைத்து பூஜித்தனர். இதனால் ஜார்க்கண்டில் இவர் அசைக்க முடி யாத சக்தியாக மாறினார். இவரை எதிர்த்தவர்கள் கடத் தப்பட்டனர். கொல்லப்பட் டனர்.

சரியோ, தவறோ இவரது பெயர் பரபரப்பாக நாடெங் கும் பேசப்பட்டது. 1980ம் ஆண்டு இவரும் இவரது ஆதரவாளர்களும் பாராளு மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவானது. அதன் பிறகு சிபுசோரனின் அரசியல் ஆவேசமும் ஆதிக்கமும் அதி கரித்து விட்டது. அவரது தகாத செயல் களுக்கு சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லாததால் அவர் இதுவரை தப்பித்து வந்தார். ஆனாலும் அவர் மீது தற்போதும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இதில் 2 கொலை வழக்கு கள் சிபுசோரனின் மறுபக்க வாழ்க்கையை தோலுரித்து உலகிற்கு காட்டி விட்டது. 1975-ம் ஆண்டு சிருடி என்ப வரை கொலை செய்த வழக் கில் இவர் சிக்கினார். மந்திரி பதவியையும் ராஜினாமா செய்தார். ஆனால் தண்ட னையில் இருந்து தப்பி விட் டார்.என்றாலும் 1994-ல் தன் உதவியாளர் சசிநாத் ஜாவை கொலை செய்த வழக் கில் அவர் வசமாக சிக்கிக் கொண்டார். சி.பி.ஐ. அதிகா ரிகள் மண்டை ஓட்டை வைத்து நடத்திய திறமையான ஆய்வு சிபுசோரனுக்கு “ஆப்பு” அடித்து விட்டது.

சிபுசோரன் பற்றிய நிஜமுகம் தெரிய வந்ததும் ஜார்க்கண்ட் மக்களும் அவரை வெறுக்கத் தொடங்கி விட்டனர்.
குருஜி என்று மரியாதையாக அழைத்து வந்த மக்கள் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அவரை குப்புற தள்ளி விட்டனர். தன் மகனை எப்படி யாவது ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரி ஆக்கி விட வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் ஜார்க்கண்ட் மக்கள் அவர் மகனை வெற்றி பெற கூட செய்யவில்லை.

இந்த வீழ்ச்சிக்கிடையே தற்போது சிபுசோரன் சிறைக் குள் தள்ளப்பட்டுள்ளார். அரசியலில் இனி அவர் கதை முடிந்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

கொலைகாரன் என்ற தீர்ப்பு காரணமாக பதவி விலகிய முதல் மத்திய மந்திரி என்ற கறை முத்திரையை அவர் பதித்துள்ளார். துடைக்க முடியாத களங்க முத்தி ரையால் சிபுசோரன் மீண்டு எழ முடியுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

நாளை (வியாழக்கிழமை) டெல்லி கோர்ட்டு வழங்கும் தண்டனை தான் சிபுசோரனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். எனவே அந்த தீர்ப்பை ஜார்க்கண்ட் மாநில மக்கள் படபடப்புடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Posted in Bihar, Biography, Biosketch, CBI, Corruption, Jha, JMM, Lifesketch, Memoirs, Murder, Narasimha Rao, Ranchi, Secretary, Shibu Soren, Sibu Soren | Leave a Comment »

G Varalakshmi – Biography

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006

எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்தார்: 9 வயதில் சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி மரணம்

சென்னை, நவ. 27- பழம்பெரும் நடிகை ஜி.வர லட்சுமி சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. வரலட்சுமி ஆந்திராவை சேர்ந்தவர். அங்குள்ள பிரகாசம் மாவட்டத்தில் 27.9.1927-ல் பிறந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 80 படங்கள் நடித்துள்ளார். இவரது முதல் படம் பக்தபிரகலாதா. தனது 9வது வயதில் குழந்தை நட்சத் திரமாக இதில் அறிமுகமானார். கதாநாயகியாக நடித்த முதல் படம் துரோகி. இப்படத்தில் எல்.வி.பிரசாத் கதாநாயகனாக நடித்தார்.

தமிழில் குழந்தையும் தெய்வ மும், நான் பெற்ற செல் வம், அரிச்சந்திரா ஆகிய படங்க ளில் நடித்துள்ளார். குலேபகா வலியில் எம்.ஜி.ஆருக்கு இவர் ஜோடி. அரிச்சந்திராவில் சிவாஜி ஜோடியாக நடித் தார். அரிச்சந்திரா படம் வரலட்சுமியின் சொந்த படம். இது `சென்சார்’ பிரச்சினையில் சிக்கி ரொம்ப நாள் ரிலீசாகாமல் இருந்தது. ரிலீசான பிறகும் சரியாக ஓடவில்லை.

இவர் நடித்த `அண்ணி’ படம் தமிழ், தெலுங்கில் தயாரானது. வளர்ப்புத்தாய் கேரக்டரில் இதில் நடித்தார். இப்படம் இரு மொழிகளில் அதிக நாட்கள் ஓடி சக்கை போடு போட்டது.

வரலட்சுமி இளம் வயதில் மல்யுத்த போட்டி பிரியையாக இருந்தார். அந்த காலத்தில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தினமும் மல்யுத்த போட்டிகள் நடக்கும்.

இப்போட்டியை காண மைதானம் நிரம்பி வழியுமாம். இங்கு நடைபெறும் தாரா சிங், கிங்காங் மல்யுத்த சண்டைக்கு தனி மவுசு உண்டு. இந்த போட்டிகளை காண வரலட்சுமி தினமும் செல்வாராம். தெலுங்கில் ஒரு படத்தை இயக்கவும் செய்துள்ளார்.

பிரபல டைரக்டர் கே.எஸ்.பிரகாஷ்ராவை திருமணம் செய்து கொண்டார். பிரகாஷ் ராவ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத் தக்கது.

குழந்தை நட்சத்திரம், கதா நாயகி, வில்லி கேரக்டர் களில் நடித்த வரலட்சுமியின் கடைசி படம் வேதமனசுலு. அந்த படத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.

இவரது மகன் பிரகாஷ் பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 30வது வயதில் அவர் மரணம் அடைந்தார்.

கடைசி காலத்தில் பெசன்ட் நகரில் உள்ள மகள் கனகதுர்கா வீட்டில் தங்கி இருந்தார். ஒரு மாதத்துக்கு முன் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று மரணம் அடைந்தார்.

பெசன்ட் நகர் மயானத்தில் இன்று மாலை உடல் தகனம் நடக்கிறது.

Posted in Andhra Pradesh, AP, Biosketch, G Varalakshmi, Kollywood, Lifesketch, Memoirs, Tamil Actress, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Telugu Actress, Telugu Cinema | Leave a Comment »

G Varalakshmi passes away – Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

பழம்பெரும் நடிகை வரலட்சுமி காலமானார்

சென்னை, நவ. 27 உடல்நலக் குறைவு காரணமாக பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகை ஜி. வரலட்சுமி (80) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது மகள் கனகதுர்கா வீட்டில் அவர் காலமானார்.

  • அண்ணி,
  • குலேபகாவலி,
  • நான் பெற்ற பிள்ளை,
  • நல்ல தங்காள்,
  • அரிச்சந்திரா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவரது கணவர் கே.எஸ். பிரகாஷ் ராவ் “வசந்த மாளிகை’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Anjali, Biosketch, Lifesketch, Memoirs, Tamil Actress, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Telugu Cinema, Tollywood, Varalakshmi | 1 Comment »

Vallikkannan Memoirs – Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2006

“நவீன இலக்கிய ரிஷி’

சு. நயினார்

எண்ணத்தையும் எழுத்தையும் உயர்வாகப் போற்றிய வல்லிக்கண்ணன் எழுதுவதும் சொல்வதும் போலவே இறுதிவரை வாழ்ந்தவர். இன்றைய ஆரவாரமிக்க உலகில் ஆடாமல் அமைதியான முறையில் ஓர் எழுத்துப் புரட்சியைத் தோற்றுவித்த படிப்பாளியும் படைப்பாளியுமாவார். இவர் சிரிக்காமல் சிந்தித்து தரமிக்க இலக்கியங்களைத் தமிழுலகிற்கு வழங்கியவர். வல்லிக்கண்ணன் தமிழ் இலக்கிய வகைமைகள் பலவற்றினுள் – வசனகவிதை, புதுக்கவிதை, நாடகம், சிறுகதை, புதினம், வாழ்க்கை, இலக்கிய வரலாறு, இதழியல், மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம், கட்டுரை – தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தடம் பதித்தவர்.

கொள்கை – கோட்பாட்டிலிருந்து விலகாத வல்லிக்கண்ணன் எழுபத்தைந்து ஆண்டுகளாக இலக்கிய வாழ்வை மேற்கொண்ட “நவீன இலக்கியரிஷி’. இவர் மண்ணின் மனத்தைப் படைப்புகளாக்கினார். புதுக்கவிதை முன்னோடிகள் நால்வருள் ஒருவரான வல்லிக்கண்ணன், அறிவாளிகள் எதிர்பார்க்கும் உன்னதமான படைப்புகள் பலப்பல படைத்தவர். பணத்தையும் புகழையும் விரும்பாதவர். பாரதியின் பாடல்களை நாட்டுடைமையாக்குவதில் சமூகப் பொறுப்பாளியாகச் செயல்பட்ட இவரை எந்த இயக்கமும் ஒதுக்கியதில்லை எனலாம்.

இருபதாம் நூற்றாண்டு இலக்கிய மேம்பாட்டிற்கு இவர் செய்திருக்கும் பணி வரலாற்றில் சுட்டத்தக்கன. சாதி, மத, இன உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட வல்லிக்கண்ணன் எந்தவொரு நச்சு – நசிவு இயக்கத்திற்காக நின்று இயங்கியதும் – இயக்கியதும் இல்லை. இவர் எழுத்துச் செல்வராக இலக்கிய ரிஷியாக, கவிஞராக, சிறுகதை – புதின ஆசிரியராக, கட்டுரையாளராக, விமர்சகராக, இதழாசிரியராக, வரலாற்றாய்வாளராக, ஒப்பீட்டாளராக, மொழி பெயர்ப்பாளராக… பன்முகத் தன்மையில் தமிழ் இலக்கியப் போக்கினை உணர்த்திய விடிவெள்ளி! பேராண்மை மிக்கவர்! நல்ல நினைவாற்றல் மிக்க இவர் சிறு பத்திரிகைகளின் “தகவல் களஞ்சியம்’ எனில் மிகையன்று! ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு எழுதினாரில்லை! நடப்பியல் உண்மைகளை நயமாக எடுத்துக்காட்டவும் இவர் தயங்கினாரில்லை. நான்கு தலைமுறை எழுத்தாளர்களின் நிலைப்பாடுகளுள் “”வல்லிக்கண்ணனின் ஆளுமை வெளிப்பாடும் விலகல் மனோபாவமும்’ பலருக்கு வியப்பளிக்கும்.

இவருக்கு எவற்றினுள் பற்று ஏற்பட்டதோ அவை இவரது வெளிப்பாடாக மலர்ந்தன. புதுமை இலக்கியம் படைக்கும் எழுத்து, இளம் எழுத்தாளர்களை அரவணைப்பது, வரலாற்று நோக்கு (புதுக்கவிதை, சிற்றிதழ், வாசகர், விமர்சகர்கள் உரைநடை), மறுமலர்ச்சிப்போக்கு, எளிமையை விரும்புதல் போல்வனவற்றுடன் மிகுதியான பற்றுக் கொண்டவர்.

வல்லிக்கண்ணனின் பற்றின்மை: விளம்பரப்புகழ், பணம், மது, குடும்பவாழ்வு, அரசியல் சார்பு, மதம், திரையுலக வாழ்வு, ஜனரஞ்சகப் பத்திரிகை போன்றவற்றில் பற்றில்லாமல் விலகி இருந்த நிலை எண்ணற்குரியது; எவரிடத்தும் இத்தனைப் பற்றின்மைகளைக் காண்பதரிது!

பள்ளியிறுதி வகுப்பை முடித்து 1937-ஆம் ஆண்டில் அரசுப் பணியில் சேர்ந்த இவருக்கு எழுத முடியாத சூழல். அவ்வேலையை உதறித் தள்ளிவிட்டு எழுத்தையே வாழ்க்கையாக்கிக் கொண்ட வல்லிக்கண்ணன் ஒருபோதும் பிற்போக்கு இலக்கியவாதிகளின் தாக்கங்களுக்குட்பட்டு பணம் சம்பாதிக்க வேண்டும்; புகழ் பெற வேண்டும்; வசதியாக வாழ வேண்டும் என்று எண்ணியதோ – செயல்பட்டதோ இல்லை. தனிமரமாக நின்ற வல்லிக்கண்ணன் வறுமையிலே உழன்றாலும் செம்மையாக வாழ்ந்தார். இவர் யாரிடமும் கையேந்தாமல் கொள்கைப் பிடிப்புடன் – வைராக்கியத்துடன் வாழ்ந்த இலக்கியப்பித்தன். பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் இவரும் இடம் பெறத்தக்கவராவார். இவரது முதல் பாகச் சுயசரிதம் பலருக்குப் பயனளிக்கும். இராசவல்லிபுரத்தில் 12-11-1920-இல் பிறந்த வல்லிக்கண்ணன் 10-11-2006-இல் இறந்துவிட்டார். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டி, அவரிட்டுச் சென்ற பணியினைத் தொடருவோமாக.

Posted in Anjali, Biosketch, Lifesketch, Memoirs, Tamil Literature, Vallikkannan | Leave a Comment »