Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Mayavathy’ Category

Question & Answers with CPI(M) – Rich Party, Support for Govt

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

அரசியல்

கேள்வித் திருவிழா: டி.கே.ரங்கராஜன் , சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர்

மத்திய அரசை மிரட்டுகிறோமா?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினை தொடர்ந்து மிரட்டி வரும் இடதுசாரி கட்சிகளின் செயல்பாட்டினை நியாயப்படுத்துகிறீர்களா…?

இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இடதுசாரிகள் எப்போதுமே மிரட்டியது கிடையாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் மக்கள் நலனை உருவாக்குகின்ற சில திட்டங்களை அறிவித்திருக்கின்றன.

அவற்றின் மீது கூடுதலான அழுத்தம் கொடுத்து அவற்றைச் செயல் படுத்துவதன் மூலம், மக்களுடைய எதிர்காலம் செழிப்பாக இருக்கும். வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களை வாழ வைக்க முடியும். எனவே குறைந்த பட்ச செயல் திட்டத்தில் உள்ள மக்களை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றுதான் இடதுசாரிகள் கூறிவருகின்றன.

உதாரணமாக விலைவாசி உயர்வு பிரச்சினை. அதில் முக்கியமானது பெட்ரோல், டீஸல் விலை உயர்வு. இதைத் தடுப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன.

அரசு அடிக்கடிப் போடும் வரிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விலையுயர்வைத் தடுக்கலாம். ஏனென்றால் பெட்ரோல், டீஸல் விலை உயர்வு என்பது சோப்பு, சீப்பு, கண்ணாடி போன்ற பொருள்களில் இருந்து அத்தனை பொருள்களும் விலை ஏறுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

ஆகவேதான் நாங்கள் விலையைக் கட்டுப்படுத்துங்கள் என்கிறோம். இதை மிரட்டல் என்று அருள்கூர்ந்து தாங்கள் பார்க்கக் கூடாது.

இந்திய நாடும் -அமெரிக்காவும் செய்யக்கூடிய அணு ஒப்பந்தம் என்பது தேச முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அமெரிக்கா, தன்னுடைய கட்டுப்பாட்டில் இந்தியாவைக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறது. ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக தன்னுடைய ஆதரவு நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

இது இந்தியாவுக்கு நல்லதல்ல. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது அணிசாராக் கொள்கை. அதன் அடிப்படையில் செயல்படுவதுதான் நமக்கு நல்லது. “சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை’ என்று குறைந்த பட்ச செயல் திட்டத்தில் அறிவிக்கபட்ட பிறகும் அரசு அதிலிருந்து மாறுகிறது.

இதை சுட்டிக்காட்டி மக்களுக்கு விளக்குவதை அரசை நிர்பந்தப்படுத்துவதாகவோ, மிரட்டுவதாகவோ எடுத்துக் கொள்ளக்கூடாது.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் சி.பி.எம். கட்சிக்குத்தான் அதிக அளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது உண்மையா?

எஸ். கணேசன், கடலூர்.

உண்மையில் எனக்குத் தெரியாது. ஆனால் சி.பி.எம். தன்னுடைய கட்சியை நடத்துவதற்கும், மக்களை சந்திப்பதற்கும், கட்சி வளர்ச்சி ஏற்பாடுகளுக்கும் கட்சி இருக்கும் எல்லா மாநிலங்களிலும், மாவட்டங்களிலும், ஒன்றியங்களிலும், சில கிளைகளிலும் கூட அலுவலகங்கள் வைத்திருக்கிறது.

அந்த அலுவலகத்திற்கான நிலம், கட்டிடம் போன்றவற்றை வைத்துக்கொண்டு நாங்கள்தான் அதிகச் சொத்து இருக்கக்கூடிய கட்சியினர் என்று கூறக்கூடாது. ஏனென்றால் அது மக்களுடைய சொத்தே தவிர சி.பி.எம். சொத்து அல்ல.

மற்ற கட்சிகளுக்கும், சி.பி.எம். கட்சிக்கும் ஓர் அடிப்படையான வித்தியாசம் இருக்கிறது. மற்ற கட்சி களில் தலைவர்கள் வளமாக இருக்கிறார்கள். ஆனால் சி.பி.எம். கட்சியில், கட்சி வளமாக இருக்கிறது. அதில் இருக்கும் தலைவர்கள் ஏழ்மையாக இருக்கிறார்கள்.

சி.பி.எம். கட்சியில் ஊழியர்களின் சம்பள விகிதம் எப்படி?

பா.சு. மணிவண்ணன், திருப்பூர்.

சி.பி.எம். கட்சியில் முழு நேர ஊழியர்களின் ஊதியம் மாநிலத்துக்கு, மாநிலம் வித்தியாசப்படும். சி.பி.எம். கட்சியில் இருக்கக்கூடிய முழு நேர ஊழியர்களில் சொந்தமாக குடும்ப வருமான வாய்ப்புகள் இருக்கக்கூடியவர்கள் கட்சியிலிருந்து எந்தவிதமான ஊதியமும் எதிர்பார்க்காமல் பணியாற்றுகிறார்கள்.

கட்சியை மட்டும் நம்பி வாழ்கிறவர்கள், கட்சி கொடுக்கக்கூடிய சிறு அலவன்ûஸ மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். அது கஷ்டமான வாழ்க்கைதான். கட்சியின் ஊழியர்களை எடுத்துக் கொண்டால் 500 ரூபாய் முதல், 4000 ரூபாய் வரை ஊதியம் பெறுபவர்கள் இருக்கிறார்கள். இந்த 4000 ரூபாய் என்பது மாநகரில் மட்டும் அல்ல, வட்டத்திலேயும் உண்டு. இது ஏதோ பதவி அடிப்படையில் என்றெல்லாம் இல்லை.

இரண்டாவது, சி.பி.எம்.மில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் தங்களுடைய சம்பளத்தை கட்சிக்காகவே கொடுத்து விடுகிறார்கள். கட்சி ஏற்கெனவே அவர்களுக்கு எவ்வளவு ஊதியத்தை நிர்ணயித்து இருக்கிறதோ அந்த ஊதியத்தை வழங்கும்.

ஆகவே மந்திரி என்று சொன்னாலோ, சட்டமன்ற உறுப்பினர் என்று சொன்னாலோ, நாடாளுமன்ற உறுப்பினர் என்று சொன்னாலோ அவரையும், அப்படியில்லாதவர்களையும் கட்சி வித்தியாசம் பார்க்காது. முதலமைச்சர் உள்பட அனைவரையும் ஒன்றாகப் பார்க்கும் பாணி எங்கள் கட்சியின் பாணி.

இது தவிர, பகுதி நேர ஊழியர்கள் இருக்கிறார்கள். வேலைக்குச் சென்றுவிட்டு வந்து கட்சி வேலை செய்கிறவர்கள்தான் பகுதி நேர ஊழியர்கள். சிலர் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்துக்கொண்டு சி.பி.எம்.மில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

“ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் உணர்வு செத்துப் போகவில்லை’ என கி. வீரமணி கூறியுள்ளாரே…!

அ. மாணிக்கம், ராமநாதபுரம்.

ஈழத்தில் தமிழ் மக்கள் உறுதியுடன், ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே சி.பி.எம்.மின் நிலை. அங்கு தமிழர்கள் வாழ வேண்டும்; தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டும்; முழு உரிமையும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.

இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், “அது ஒன்றுபட்ட இலங்கையில்தான் நடக்க முடியும்’ என்ற எங்களுடைய கருத்துக்கும், “தனி ஈழம் உருவாக வேண்டும்’ என்கிற கி. வீரமணியின் கருத்துக்கும் அணுகுமுறையில் வித்தியாசம் இருக்கிறது.

பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்ட குஜராத் மாநிலம் கஹோத் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பாபுபாய் கடாரா தனது 3 குழந்தைகளுக்கு 6 பாஸ்போர்ட் வாங்கி வைத்துள்ளதாக வெளியான தகவல் குறித்து…?

வீரராகவன், மன்னார்குடி.

சமீப காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள். வேறு பெண்ணை தன்னுடைய மனைவி என்கிற முறையில் வி.ஐ.பி. பாஸ்போர்ட்டுடன் அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவைகளெல்லாம் நம்முடைய அரசியல் கலாசாரச் சீரழிவிற்குக் காரணம். பி.ஜே.பி. ஒரு வித்தியாசமான கட்சி என்பதை அந்தக் கட்சியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மும்பை குண்டு வெடிப்பில் முன்னாள் சுங்க அதிகாரி சோம்நாத் தாபாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதே…!

என். குமரன், வேளாங்கண்ணி.

நீதிமன்றம் பூரணமாக, வருடக் கணக்காக விசாரித்து இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. முழுத் தீர்ப்பையும் பார்த்துதான் அதைப் பற்றி சொல்ல முடியும். ஆனால் நீதிமன்றம் ஆபத்தானவர்கள் மீது கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பில் ஏதாவது தவறு இருக்குமேயானால் சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய முடியும்.

—————————————————————————————–

டி.கே.ரங்கராஜன் , சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர்

* “”முல்லைப் பெரியாறில் கேரள அரசு அணைகட்டுவதற்கு தி.மு.க. அரசும் மறைமுகமாக உதவி செய்கிறது போலிருக்கிறது…” என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளாரே…!

க. ஜெகன், சிவகங்கை.

நதி நீர் பிரச்சினை என்பது இன்று பல்வேறு மாநிலங்களுக்கிடையே தாவாவை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நமக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுடனும் தாவா உள்ளது. நம்முடைய நியாயத்தை கோரிப் பெற, தி.மு.க. அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

தி.மு.க. அரசு அண்டை மாநிலங்களுடன் இப்படி மோதலற்ற போக்கைக் கடைப்பிடித்து வருவது பாராட்டத் தக்கது.

ஜூலை 26ஆம் தேதியும் டெல்லியில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து பிரதம மந்திரியிடம் பேசியுள்ளார். அவரும் இது குறித்து இரண்டு முதல்வர்களையும் அழைத்துப் பேசுவதாக கூறியுள்ளார்.

முன்னாள் பாரத ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் போன்ற அறிவு ஜீவிகள், நதி நீர் இணைப்பு குறித்து ஒரு கருத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாம் மோதலற்ற போக்கை கடைப்பிடித்தால்தான் வெற்றி பெற முடியும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

இந்த அணுகுமுறை நண்பர் பழ. நெடுமாறனுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக, விவரங்களைத் தெளிவாகப் புரிந்த அவர், முதல்வர் மீது உள்நோக்கம் கற்பிப்பது நமக்கு ஏற்புடையதல்ல.

* ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் கம்யூனிஸ்ட்டுகள் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதாக நினைக்கிறீர்களா?

என். செல்வம், நாகர்கோவில்.

“காம்ப்ரமைஸ்’ என்பது ஒரு தவறான வார்த்தை அல்ல. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோட்பாடு ரீதியான நிலையை மார்க்ஸிஸ்ட் கட்சி எடுத்தது. இடது சாரிகள் அனைவருமே இணைந்து அதே நிலையைத்தான் வலியுறுத்தினோம்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்கக் கூடியவர், அரசியல் நுணுக்கங்களைத் தெரிந்த ஒரு அரசியல்வாதியாக இருக்கவேண்டும். இந்திய அரசியல் சட்டத்தில் அவர் ஓரளவுக்குப் பண்பட்டவராக இருக்க வேண்டும்.

ஆகவே மதசார்பற்ற, அரசியல் சட்டத்தைப் புரிந்திருக்கக்கூடிய, இன்றைய இந்திய நாட்டின் தேவையை உணர்ந்திருக்கக் கூடிய ஒரு நபர் ஜனாதிபதியாக வருவது இன்றைய காலகட்டத்தில் நல்லது என்பதே எங்கள் கருத்து.

அந்தக் கருத்தை நாங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிடமும் சொன்னோம். அவர்கள் நிறுத்திய பிரதீபா பட்டீலை நாங்கள் ஆதரித்தோம்.

முதலில் இந்த நிலையை எடுக்கும்போதே எந்தக் காரணத்தைக் கொண்டும், மார்க்ஸிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளரைக் கோரவுமில்லை; அப்படியொரு எண்ணமும் எங்களுக்கு இல்லை. அதே போன்று ஏனைய இடதுசாரித் தோழர்களுக்கும் ஜனாதிபதி பதவி மீது கண்ணுமில்லை, விருப்பமுமில்லை.

* உங்களைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அல்லாத தலைவர்கள் பற்றி…?

க.நெடுஞ்செழியன், அய்யப்பன்தாங்கல்.

என்னைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில்

  • தோழர் ராமமூர்த்தி,
  • தோழர் ஜீவா,
  • தோழர் கல்யாணசுந்தரம்,
  • உமாநாத்,
  • சங்கரைய்யா போன்றவர்கள்.

இந்தத் தலைவர்கள் சொல்லுக்கும், செயலுக்கும் ஒரே மாதிரியாக இருந்ததை நான் 64க்கு முன்னால் பார்த்தேன். அதற்குப் பின் கட்சி பிரிந்த பிறகு கொள்கைகளில் ஏற்பட்ட மாறுபாடுகளின் விளைவாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

அதன்பிறகு நான் ஏற்கெனவே சொன்ன சில இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கொள்கை ரீதியாக மாறிப்போனார்கள். அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்தவிதமான வருத்தமோ, வேதனையோ எனக்குக் கிடையாது.

மற்றபடி கொள்கையை ஏற்றுக்கொண்டு அதை அமல்படுத்திய விஷயத்திலும், சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமையாக நடந்துகொண்ட விஷயத்திலும் மார்க்ஸிஸ்ட் தலைவர்கள் வரிசையில் எங்களுடைய அகில இந்தியத் தலைவர்கள்

  • இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்,
  • பி.டி.ரனதேவே,
  • சுந்தரைய்யா போன்றவர்களைச் சொல்லலாம்.

இவர்களால் ஈர்க்கப்பட்ட ஓர் ஊழியனாகத்தான் நான் இருக்கிறேன்.
பெண் தலைவர்களில் என்னைக் கவர்ந்தவர்கள்,

  • பாப்பா உமாநாத்,
  • நர்மதா ரனதேவே,
  • விமலாராணி தேவி

ஆகியோர். இவர்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு, இயக்கத்திற்காகப் பாடுபட்டு முன்னுக்கு வந்தவர்கள்.
கம்யூனிஸ்ட் அல்லாத தலைவர்கள் என்று பார்க்கும்போது, மகாத்மா காந்தி, பண்டித நேரு போன்ற தலைவர்களைச் சொல்லலாம். அவர்களுடைய வாழ்க்கை வரலாறும், அவர்கள் ஆற்றியிருக்கக்கூடிய பணிகளும் உண்மையிலேயே என்னைக் கவர்ந்தவை.

தமிழகத்தில் அப்படிப்பட்ட தலைவர்கள் என்று காமராஜர் அவர்கள் மற்றும் கலைஞர் அவர்களைக் கூறலாம். இவர்களுடைய பணி, செயல்பாடுகள், அதிலிருக்கக்கூடிய பல்வேறு நல்ல அம்சங்கள் ஆகியவை என்னைக் கவர்ந்துள்ளன.

* அரசியல்வாதி என்பவர் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாதவர் என்று குற்றம் சாட்டுகிறேன். உங்களது பதில்….? (தயவு செய்து கோவிச்சுக்காதீங்க ஐயா)

பா. ஜெயபிரகாஷ், சர்க்கார்பதி.

எந்தக் கோபமும் இல்லை. உங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணத்தை உருவாக்கியவர் எந்த அரசியல்வாதி என்று எனக்குத் தெரியாது. உங்களுடைய மனதைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு இப்படியொரு அரசியல்வாதி நடந்திருந்தால் உங்கள் கோபம் நியாயமானதுதான்.

* ரஷ்யாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது ஸôர்?

இரா. கண்ணபிரான், சேலம்.

நான் ரஷ்யாவுக்கு சென்றதில்லை.

* “ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாவைத் திருப்பியனுப்பியது மிகவும் கடுமையான சோதனையான காலகட்டம்’ என அப்துல் கலாம் தெரிவித்துள்ளாரே…?

தி. நாகேஷ், கோட்டப்பட்டினம்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிறுவனங்களில் பொறுப்பு ஏதேனும் எடுத்துக் கொள்ளலாமா? அப்படியெனில் அது ஆதாயம் பெறும் பதவி எனக் கொள்ளப்பட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என்பதுதான் பிரச்சினை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கேள்வி எழுந்தது. “எது ஆதாயம் தரும் பதவி?’ என்று அரசியல் சட்டத்தின் 102வது பிரிவு தெளிவாக விளக்கவில்லை. எந்தப் பதவிகளை ஏற்றால் பதவியைப் பறிக்கும் சட்டத்திலிருந்து விலக்கு உண்டு எனத் தீர்மானிக்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உண்டு.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த நிறுவனங்களில் பொறுப்பேற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டிய அவசியமில்லை’ என்று திருத்தச் சட்டங்கள் மூலம் நாடாளுமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என சி.பி.எம். கோரியது; ஆதாயம் தரும் பதவி சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் விவாதித்து முடிவு எடுக்க ஒரு நாடாளுமன்ற துணைக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரியது.

நாடாளுமன்றமும், இருக்கும் சட்டத்திலிருந்து சில விதி விலக்குகளை அளித்து திருத்தச் சட்டம் நிறைவேற்றியது. அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியபோது, அவர் தனக்குரிய உரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி சில கேள்விகள் எழுப்பினார்; சட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டு திருப்பி அனுப்பினார்.

அது மறுபரிசீலனை செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. தேர்தல் ஆணையம் ஒவ்வொரு பிரச்சினையிலும் அதற்குரிய விசேஷ அம்சங்களை கணக்கிலெடுக்காமல் அப்பொறுப்பில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என முடிவு எடுத்ததால் நாடாளுமன்றம் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியம் வந்தது.

பொது மக்கள் சேவையினை கருத்தில் கொண்டு சில அரசு நிறுவனங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் சி.பி.எம்.மின் நிலை. இப்பொழுது உள்ள குழப்ப நிலை நீங்க, தெளிவானதொரு சட்ட விளக்கம் தேவை என எங்கள் கட்சி கருதுகிறது.

* “உயர் சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என்ற உ.பி. முதல்வர் மாயாவதியின் யோசனை பற்றி…?

எஸ். உலகநாதன், திருவாரூர்.

“இட ஒதுக்கீடு யாருக்கு வேண்டும்?’ என்று சொல்வதற்கு முன், அது செயல்படுத்த வேண்டிய அரசியல் பொருளாதார -சமூகப் பின்னணியினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தின் பெரும் பிரிவினர் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்தனர். அவர்களின் வாழ்நிலையை உயர்த்தி, சமூகத்தில் அவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்ற தேவையில் எழுந்ததுதான் அரசியல் சட்ட ரீதியான “இட ஒதுக்கீடு’ முடிவுகள்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது அந்த நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. ஆனால் நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறாத நிலையில் இட ஒதுக்கீடு தொடர வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக அந்தஸ்தும், வாழ்நிலையும் எப்பொழுது முழுமை பெறும்? அவர்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதார அடித்தளம் வலுவாகக் கட்டப்படுவதன் மூலமாகத்தான் அது முடியும்.

கிராமப் புறங்களில் வாழும் இந்தப் பிரிவினரில் பெரும்பான்மையான மக்கள் நலிந்த பொருளாதாரத்தோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதைக் கொடுக்கும் செயல் திட்டம்தான் நிலச் சீர்திருத்த நடவடிக்கையாகும். இதுதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைக் கொடுக்க வல்லது.

இது நாட்டின் இடதுசாரிகள் சொல்கிற கருத்து மட்டுமல்ல…! பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் இதை வலியுறுத்திச் சொல்வதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேரள, மேற்கு வங்க மற்றும் திரிபுரா மாநில அரசுகள், அரசியல் சட்ட வரம்புக்கு உட்பட்டே எடுத்த நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் (நிலத்தைப் பங்கீடு செய்தது) அந்த மக்களுக்கு ஓரளவு பொருளாதார சக்தியினைக் கொடுத்திருக்கின்றன.

அவர்களின் சமூக அந்தஸ்தும் உயர்ந்திருக்கிறது. அதிகார அமைப்பில் அவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது. இதை மண்டல் கமிஷன், மற்றும் திட்ட கமிஷன் கணக்கில் எடுத்துப் பாராட்டியும் உள்ளது.
வேறு ஒரு கோணத்திலிருந்தும் இந்தப் பிரச்சினையினைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை (அரசின் கணக்கின்படி) 26 கோடி பேர். வறுமையில் வாடுவோர் அல்லது பொருளாதார பலம் ஏதுமின்றி வாழ்பவர்கள் சாதி, மதம், மொழி என்ற பண்பாட்டு வட்டங்களைத் தாண்டித்தான் வாழ்க்கை நடத்துகின்றனர்.

அவர்களின் வாழ்நிலையினை உயர்த்துவதற்கும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாயாவதி என்ன நோக்கத்தோடு அந்த யோசனையை முன் வைத்தார் என்று தெரியாது. ஆனால் பிரச்சினையின் ஆழத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. உயர் ஜாதி ஏழைகள் ஒதுக்கப்பட வேண்டிய மனிதர்கள் அல்லர்! நமது கவலைக்குரிய மனிதர்கள்தான்!

Posted in Alliance, Answers, APJ, Bachan, Badhuri, Baduri, Bathuri, Bhachan, Bhadhuri, Bhaduri, Bhardhan, Bhathuri, BJP, Center, Chat, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, DMK, Eezham, Elections, Faces, Finance, Gorbachev, Govt, Integration, Interview, Jaya, Jeya, Kalam, Karat, Leaders, Lenin, LTTE, Manmogan, Manmohan, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Masood, Masud, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, names, National, NDTV, Neta, Netha, Party, Patil, people, Politburo, Politics, Polls, Poor, Power, Prakash, Prathiba, Prathibha, President, Prez, Principles, Putin, Q&A, Questions, Rasheed, Rashid, Rich, River, Russia, Somnath, Sonia, Soviet, Sri lanka, Srilanka, Stalin, support, UP, US, USA, USSR, UttarPradesh, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, Water, Wealthy | Leave a Comment »

Lamenting the corrupt Political Powers – Uttar Pradesh to Tamil Nadu & its Party Leaders

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

கோடிக் கோடி இன்பம் பெறவே…

இரா.சோமசுந்தரம்

“”ரூ. 52 கோடியும் தொண்டர்கள் கொடுத்த பணம்”

உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி இதைச் சொன்னபோது இந்தியாவின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் நெஞ்சமும் குளிர்ந்திருக்கும். சிலர் ஆனந்த நடனமாடியிருப்பார்கள். எங்கும் நிம்மதிப் பெருமூச்சு!.

ஏனென்றால் எல்லாக் கட்சித் தலைவர்களின் சொத்துக் குவிப்பையும் மாயாவதி ஒரே வரியில் நியாயப்படுத்தி விட்டார், எல்லா கறுப்பு பணத்துக்கும் “மஞ்சள் நீர்’ தெளித்து வெள்ளைப்பணமாக மாற்றிவிட்டார்.

இந்த வாதம் எல்லா முதல்வர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தும். எல்லாமும் தொண்டர்கள் கொடுத்தது என்று எளிதாகச் சொல்லிவிடலாம். எல்லாம் அவன் (தொண்டன்) செயல்!

தற்போது கட்சிக்குத் தரும் பணம் மட்டும்தான் யார் கொடுத்தது என்ற கணக்கு வழக்கு இல்லாமல் வந்து குவியும் நிலைமை இருந்து வருகிறது. ஒரு மாநாடு நடத்தி, கட்சி நிதியாக ரூ.5 கோடியை அளித்தால் அது அந்த மாநாட்டில் தொண்டர்கள் தந்ததாக வரவு வைக்கப்படும்.

ஆனால், அமெரிக்காவில் தேர்தல் நிதி திரட்டும் ஒவ்வொரு வேட்பாளரும் கணக்கு காட்ட வேண்டும். 200 டாலர்களுக்கு அதிகமாக நன்கொடை அளித்தவர் பெயர், முகவரி, அனைத்தையும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் அந்த நடைமுறை இல்லை. ஆகவே தொல்லையில்லை.

கட்சி வளர்ச்சி நிதியைப் போலவே, இனிமேல் கட்சித் தலைமை வளர்ச்சி நிதிக்கும் கணக்கு கேட்கக் கூடாது என்பதாக மாயாவதியின் பதில் அமைந்துள்ளது.

ஒரு முதல்வர் பேசியது இப்படி என்றால், பிரதமர் பேச்சு இதற்கு ஒரு படி மேலே.

“”பிரதிபா பாட்டீல் மீது காழ்ப்புணர்ச்சியால் சேறு பூசுகிறார்கள். அவரது சர்க்கரை ஆலை வங்கிக் கடனை (பல கோடி ரூபாய்) “சூழ்நிலை காரணமாகச்’ செலுத்தவில்லை. மகாராஷ்டிரத்தில் இப்படிக் கடனைச் செலுத்தத் தவறிய 72 சர்க்கரை ஆலைகளை ஜனசத்தா நாளிதழ் பட்டியலிட்டுள்ளது” என்று பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறியிருக்கிறார் பிரதமர்.

இதை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சொல்லியிருந்தால் அது வெறும் பதில் என்பதாக மட்டுமே முடிந்துபோகும். ஆனால் நாட்டின் பிரதமர் இத்தகைய பதிலை சொல்வது முறையல்ல.

வங்கிக் கடனைத் திருப்பித் தர முடியாத தொழில் நெருக்கடி இயல்பானது ஒன்றுதான். ஒரு சாதாரண நபர் வங்கிக் கடன் வாங்கி, தொழில் தொடங்கி, நலிந்து போகும்போது பிணையாக வைக்கப்பட்ட சொத்துகள் ஏலத்தில் விடப்படுகின்றன. ஆனால், பிரதிபா பாட்டிலுக்கு இப்போது சொத்து எதுவுமே இல்லை எனச் சொல்ல முடியுமா?

“கடனைத் திருப்பிச் செலுத்தாத 72 ஆலைகளில் பிரதிபா பாட்டீலின் ஆலையும் ஒன்று’ என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்வது, ஒரு தவறை வலிந்து நியாயப்படுத்துவதாக உள்ளது.

மகாத்மா காந்தி சென்ற இடமெல்லாம் பெண்களும், நாட்டுப் பற்றாளர்களும் தங்கள் உடைமைகளையும் பொன்நகைகளையும் அள்ளிக் கொடுத்தனர். அவை அவரிடம் கொடுக்கப்பட்டவை. அவர் மீது நம்பிக்கை வைத்து கொடுக்கப்பட்டவை. அதை அவர் விருப்பம்போல செலவிடலாம் என்ற உரிமையையும் சேர்த்துக் கொடுத்த பொருள்கள்தான். ஆனால் காந்தி அவற்றை தனது சொத்தாக மாற்றிக் கொள்ளவில்லை.

வினோபா பவே இந்தியா முழுவதும் நடையாய் நடந்து பெரும் பணக்காரர்களிடம் பூமிதானம் பெற்றார். அதில் ஒரு சிறு பகுதியைக்கூட அவர் பெயரில் மாற்றிக் கொள்ளவில்லை.

காமராஜர் கை காட்டினால் கொண்டு வந்து கொட்டித்தர ஆட்கள் இருந்தனர். அவரும் கை காட்டினார். ஆனால் அது தனக்காக அல்ல, கட்சிக்காகவும், கட்சித் தொண்டர்களுக்காகவும் மட்டுமே. சத்தியமூர்த்தி பவனும், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானமும் அதற்கு சாட்சி.

அண்ணா துரை முதல்வர் ஆன பின்னரும் எளிய மனிதர்தான். பெரும் சொத்துகளுக்குச் சொந்தக்காரர் அல்லர். அவரது வளர்ப்பு மகன் டாக்டர் என்ற போதிலும் சென்னையில் பெரிய மருத்துவமனையைக் கட்டி, மருத்துவக் கல்லூரியாக மாற்றிக்கொள்ள எந்த ஏற்பாடும் அவர் செய்யவில்லை.

இப்படியான தலைவர்களின் வரிசையில், மாயாவதி தனது சொத்து ரூ.52 கோடிக்கு கணக்கு சொல்லியிருக்கும் விதமும், பிரதீபா பாட்டிலின் சர்க்கரை ஆலைக்குப் பிரதமரின் நியாயப்படுத்தலும் இந்திய அரசியலமைப்பை கேலி செய்வதாக இருக்கிறது. நமது தமிழக அரசியல் கட்சித் தலைவர்களைப் பற்றியும் அவர்களது வாரிசுகளையும், நண்பர் வட்டங்களையும் பற்றி புத்தகமே போடலாம்.

அரசு ஊழியர் ஒருவரோ, பொதுமக்களில் ஒருவரோ தனது வருமானத்துக்கு மீறிய சொத்து குறித்த கேள்விக்கு மாயாவதியின் பதிலைச் சொல்ல முடியுமா? “என் நண்பர்கள் கொடுத்தது’ என்றும், “எனக்குக் கிடைத்த அன்பளிப்புகள்’ என்றும் அவர் சொன்னால் அரசு ஏற்குமா?

ஆனால் அரசியல் கட்சித் தலைவர்களால் சொல்ல முடியும்.

ஏனெனில், இந்தியக் குடிமகன் சட்டத்துக்கு கட்டுப்பட்டவன். ஆனால், இந்திய அரசியல்வாதிக்கு சட்டம் கட்டுப்பட்டது.

எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வல் எழுதிய அரசியல் அங்கதச் சுவை நாவல் “அனிமல் ஃபார்ம்’. இதில் இடம்பெறும் சொற்றொடர் என்றைக்கும் பொருத்தமானது: “”எல்லாரும் சமம். சிலர் மற்றவர்களைவிட கூடுதல் சமம்”. (All are equal. But some are more equal than others).

Posted in abuse, Anna, BJP, Bribes, Camapign, Contributions, Corruption, Finance, Gandhi, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, kickbacks, Law, Mahatma, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, Mulayam, NGO, Order, Politics, Power, Prathiba, Pratiba, Pratibha, Pratibha Devisingh Patil, Pratibha Patil, reforms, Sonia, SP, UP, Vinoba, Vinobha, Yadav | Leave a Comment »

India’s Ruling Coalition Nominates Pratibha Patil for President

Posted by Snapjudge மேல் ஜூன் 14, 2007

பதுமை அல்ல குடியரசுத் தலைவர்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

நாட்டின் 12-ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குடியரசுக்கான அழகுப் பதுமை என்று குறைத்துக் கூறிவிட முடியாது இந்தப் பதவியை!

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இது உறுதி செய்யப்பட்டே வந்திருக்கிறது. கடந்த காலங்களில் பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

விடுதலைக்குப் பின் ராஜாஜியைக் குடியரசுத் தலைவராக்க நேரு விரும்பினாலும் காங்கிரஸ் தலைவர்கள் பலர், ராஜேந்திர பிரசாத்தையே விரும்பினர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியே ராஜேந்திர பிரசாத்தை அறிவிக்க, நேருவும் ஏற்றுக்கொண்டு 12 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இவருக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பு வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை.

ஹிந்து சீர்திருத்த மசோதாவைப் பிரதமர் நேரு கொண்டுவந்தபோது ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார் ராஜேந்திர பிரசாத். மசோதாவில் குறிப்பிட்ட மாற்றத்தை நேரு செய்ய, டாக்டர் அம்பேத்கர் பதவி விலகினார்.

ராஜேந்திர பிரசாத் துவாரகை சென்றபோது மதரீதியாகக் குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று நேரு தடுத்ததும் பிரச்னைகளை எழுப்பின.

டாக்டர் இராதாகிருஷ்ணனும் இந்திரா காந்தியும் பொறுப்பில் இருந்தபொழுது கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. பின் வந்த கல்வியாளர் ஜாகீர் உசேன் இரு ஆண்டுகளே பொறுப்பிலிருந்து மறைந்துவிட்டார்.

1969 இல் நீலம் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து நின்ற வி.வி. கிரி வெற்றி பெற முழு முயற்சிகளை இந்திரா காந்தி மேற்கொண்டார்.

முதன்முதலாக இரண்டாவது விருப்ப வாக்குகள் என்ற அடிப்படையில் கிரி வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது.

கிரிக்குப் பின் இந்திரா காந்தியின் விருப்பத்தின்பேரில் பதவிக்கு வந்தார் பக்ருதீன் அலி அகமது. அவர் காலத்தில்தான் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். உரிமைகள் மறுக்கப்பட்டன.

ஜனதா கூட்டணி ஆட்சிக் காலத்தில் பதவிக்கு வந்த சஞ்சீவ ரெட்டி, பிரதமரான மொரார்ஜி தேசாய்க்கு விரோதமாகச் செயல்பட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது.

ரெட்டிக்குப் பின் ஜெயில்சிங். இவர் காலத்தில் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டு, ராஜீவ் காந்தி பிரதமரானார். இவருக்கும் ராஜீவ் காந்திக்கும் அஞ்சல் துறை மசோதா – 1986 தொடர்பாகப் பிரச்னை ஏற்பட்டது.

ஜெயில்சிங்குக்கு ராஜீவ் அரசு தெரிவிக்க வேண்டிய அரசு பரிபாலனம் சம்பந்தமான செய்திகளைத் தெரிவிக்கவில்லை என்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தை ராஜீவ் காந்தி மீறிவிட்டார் என்றும் மோதல்கள் நடந்தன.

ராஜீவ் மீது போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு, ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சியினர் ஜெயில்சிங்கிடம் வழங்கிய மனு நிலுவையில் இருந்தபோது, பிரதமர் ராஜீவை ஜெயில்சிங் நீக்குவார் என்ற வதந்திகள் எழுந்தன.

சீக்கியரான ஜெயில்சிங் 1984 இல் நடைபெற்ற சீக்கிய கலவரங்களை ஒட்டி அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொண்டது ராஜீவ் காந்திக்குப் பிடிக்கவில்லை.

ஜெயில்சிங்குக்குப் பின் ஆர். வெங்கடராமன். இவர் காலத்தில்தான் வி.பி. சிங்கின் கூட்டணி அமைச்சரவை அமைந்ததும் கவிழ்ந்ததும். அப்போது தேசிய அரசு அமைக்கலாமா என்ற விவாதங்களும் எழுந்தன.

இவர் காலத்தில் சந்திரசேகர் தலைமையிலான குறுகிய கால அரசாங்கம், “அதர்வைஸ்’ என்ற சொல்லைக் கொண்டு பிரிவு 356-ஐ பயன்படுத்தித் தமிழகத்தில் திமுக அரசைக் கலைக்கச் செய்தது.

ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து நரசிம்மராவ் பிரதமர் ஆனார். புதிய பொருளாதாரத் திட்டங்களுக்கு அடிகோலப்பட்டது. சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் எனப் பொறுப்புக்கு வந்தனர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நரசிம்ம ராவ் ஆட்சியைக் கண்டித்தார் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா.

பிகார், உத்தரப்பிரதேச அரசுகளைக் கலைக்கும் வாஜ்பாய் அரசின் தீர்மானங்களைத் திருப்பி அனுப்பினார் கே.ஆர். நாராயணன்.

கலாமின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ல் முடிவடைகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜியும் கலாமும்தான் பதவியிலிருந்து வெளியேறும்போது தங்களுடைய உடைமைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வராதவர்கள் என்பதன் மூலம் தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பவர்களாக இருப்பார்கள்.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்களின் தன்மை என்ன? இதுவரை நடந்த நடைமுறைகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பார்வையிலும் வெறும் “ரப்பர் ஸ்டாம்ப்’ மாதிரி இருந்தாலும், பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் அவர்.

ஐந்து ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ. 50 ஆயிரம் ஊதியத்துடன் வசதியான வாழ்க்கை, சிம்லா, ஹைதராபாதில் அரண்மனை போன்ற பங்களாக்கள் போன்ற சகல வசதிகளுடன், முப்படைகளின் தளபதி, நாட்டின் இறையாண்மையைக் காக்கும் பாதுகாவலர், முதல் குடிமகன் எனப் பல பெருமை.

எனினும், பிரதமர் தலைமையில் இருக்கின்ற அமைச்சரவை வழங்குகின்ற ஆலோசனையின் பேரில்தான் அவர் இயங்குகிறார்.

பல நேரங்களில் நிலையற்ற அரசுகள் மத்தியில் அமையும்போது குடியரசுத் தலைவரின் பங்களிப்பு முக்கியமாகக் கருதப்பட்டது.

ஜனதா ஆட்சி விழுந்தவுடன் சரண்சிங்கைப் பதவி ஏற்க சஞ்சீவ ரெட்டி அழைத்ததும், ’96 தேர்தலுக்குப் பின் வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைத்ததும் அந்தப் பதவியின் அதிகார மேலாண்மையை வெளிப்படுத்தின.

பிரதமர்களான நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்றவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளே குடியரசுத் தலைவர் என்பவர் பதுமை அல்ல என்பதைத் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு விருப்பத்திற்கேற்றவாறு மாநில அரசுகளைக் கலைத்தாலும் நாடாளுமன்றத்தில் யாருக்கு ஆதரவு அதிகம் என்பது போன்ற நெருக்கடியான காலத்தில் சர்வ அதிகாரமிக்கவராக மாறுகிறார் குடியரசுத் தலைவர்.

குடியரசுத் தலைவர் மாளிகை போன்று 200 ஆயிரம் சதுர அடி கொண்ட வசிப்பிடமும், மொகல் தோட்டத்துடன் 13 ஏக்கர் பரப்பளவுள்ள இருப்பிடமும் உலகில் எந்த நாட்டின் அதிபருக்கும் கிடையாது.

ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் மாளிகையின் 350 அறைகளில் ஒரேயொரு அறையைத்தான் பயன்படுத்தினார். (அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில்கூட 132 அறைகள்தான் உள்ளன.) இவ்வளவு வசதிகளையும் பெறப் போகும் 12-ஆவது குடியரசுத் தலைவர் யார் என்பது இன்றைய கேள்வி.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளராக பிரதிபா பாட்டீலை அறிவித்துள்ளது காங்கிரஸ் கூட்டணி.

வெற்றி பெற்றால் நாட்டின் மிக உயர்ந்த பதவியை அலங்கரிக்கப்போகும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெறுவார் இவர்.

எதிரணியில் சுயேச்சை வேட்பாளராகத் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம்.

தேர்தல் சதுரங்கத்தில் வென்று குடியரசுத் தலைவர் மாளிகைக்குக் குடியேறப் போகும் பெருந்தகையாளர், நாட்டின் நலனையும் பன்மையில் ஒருமையான இந்தியாவையும் தொலைநோக்கோடு கொண்டுசெல்ல வேண்டியதுதான் இன்றைய தேவை.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்.)


தேர்தல்களில் தோல்வியே காணாதவர் பிரதிபா பாட்டீல்!புது தில்லி, ஜூன் 15: குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆதரவில் நிறுத்தப்படும் பிரதிபா பாட்டீல் (72) தேர்தல்களில் தோல்வியே அறியாதவர். ஆண்கள் மட்டுமே வகித்துவந்த குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்கப் போகும் முதல் பெண்மணி.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரதிபா எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர். வழக்கறிஞர். கல்லூரி நாள்களில் சிறந்த டேபிள் டென்னிஸ் ஆட்டக்காரர்.ஜல்காவோன் மாவட்டத்தில் 1934 டிசம்பர் 19-ம் தேதி பிறந்தார். எம்.ஏ. எல்.எல்.பி. பட்டம் பெற்றார். படித்து முடித்ததும் அதே நகரில் வழக்கறிஞராகத் தொழில் செய்தார்.மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1985 வரை பதவி வகித்தார். நகர்ப்புற வளர்ச்சி, வீடமைப்பு, கல்வி, சுற்றுலா, சட்டமன்ற நடவடிக்கைகள்துறை, பொது சுகாதாரம், சமூக நலம், கலாசாரத்துறை ஆகியவற்றில் அமைச்சராகப் பணி புரிந்தவர். துணை அமைச்சராக முதலில் அமைச்சரவையில் இடம் பெற்றவர், காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக நியமனம் பெறும் அளவுக்குத் திறமையாகப் பணியாற்றினார்.மகாராஷ்டிர முதலமைச்சராக சரத் பவார் 1979 ஜூலையில் பதவி வகித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் பிரதிபா பாட்டீல்.1985-ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு மாநிலங்களவை துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 நவம்பர் 18 முதல் 1988 நவம்பர் 5 வரை அப்பதவியில் இருந்தார். இதே காலத்தில் நாடாளுமன்றத்தின் உரிமைக்குழு தலைவராகவும் இருந்தார்.1988 முதல் 1990 வரை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார்.1991-ல் அமராவதி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சட்டப் பேரவை, மக்களவை ஆகியவற்றுக்குப் போட்டியிட்டபோதெல்லாம் வெற்றியே கண்டவர் பிரதிபா.மக்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்த பிறகு அரசியலிலிருந்தே ஓய்வு பெற்றவர் போல சற்று ஒதுங்கி இருந்தார். பிறகு தேர்தல் பிரசாரத்தின்போது தீவிரமாக ஈடுபட்டார்.2004 நவம்பரில் கட்சித் தலைமையே அவரை அழைத்து ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமித்தது.குடும்ப வாழ்க்கை: பிரதிபா பாட்டீலுக்கு 1965 ஜூலை 7-ம் தேதி திருமணம் நடந்தது. கணவர் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத். சிறந்த கல்வியாளர். இத் தம்பதியருக்கு ஜோதி ரதோர் என்ற மகளும், ராஜேந்திர சிங் என்ற மகனும் உள்ளனர்.பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத், அமராவதி மாநகராட்சியின் முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விளையாட்டுத்துறையிலும் கல்வித்துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஷெகாவத் 1985-ல் மகாராஷ்டிர பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டில் போட்டி

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் பிரதிபா தேவிசிங் பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி.

பிரதிபா பாடீலை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருப்பது, இந்தியக் குடியரசின் 60-வது ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார் சோனியா.

சட்டத் துறையில் பட்டம் பெற்ற பிரதிபா பாட்டில் 72 வயதானவர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.
மகாரஷ்டிர மாநிலத்தின் காபினட் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும், நாடாளுமன்ற மேலவை துணைத் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.

உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் உள்பட காங்கிரஸ் பரிந்துரைத்த பெயர்களை இடதுசாரிக் கட்சிகள் நிராகரித்ததை அடுத்து, பிரதிபா பாடீலுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கபடுவதற்கான ஒரு துவக்கமாக தான் கருதுவதாக தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார்.


பிரதிபா பாட்டீல், இந்தியப் பெண்களுக்கு கெüரவம்!நீரஜா செüத்ரிஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!இந்தியா சுதந்திரம் பெற்ற 60-வது ஆண்டில், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு “”பெண்ணை”த் தேர்வு செய்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று சோனியா காந்தி வர்ணித்துள்ளார்.நான்கு சுவர்களுக்குள் அடைந்துகிடந்த பெண் இனத்துக்கே பெருமை தேடித்தரும் வகையில், நாட்டின் உயர்ந்த பதவிக்கு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.இத் தேர்வு இப்படி சுபமாக முடிந்திருந்தாலும், காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆகிய முத்தரப்பும் அவரை முதல் விருப்பமாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.யார் யாரின் பெயர்களையோ வரிசையாகச் சொல்லி, இவர்களுக்குப் பிடிக்கவில்லை, அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கழித்துக் கட்டி, கடைசியில் எப்படியோ தேர்வு செய்யப்பட்டவர்தான் அவர் என்பதில் சந்தேகமே இல்லை.”சிவராஜ் பாட்டீலைத்தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்று சோனியா காந்தி கூற, “கூடவே கூடாது’ என்று இடதுசாரிகள் விடாப்பிடியாக எதிர்க்க அவரைக் கைவிட நேர்ந்தது.அப்துல் கலாமை எப்படி தேர்ந்தெடுத்தார்களோ அதே போலத்தான் பிரதிபாவையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.2002-ல் இதே போன்ற சூழலில் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த்தான் குடியரசுத் தலைவர் ஆவார் என்று நம்பப்பட்டது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய்கூட கிருஷ்ண காந்திடமே, “”நீங்கள்தான் வேட்பாளர்” என்று கூறியிருந்தார்.ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே ஒரு பிரிவினர் அவரைக் கடுமையாக நிராகரித்ததால், சர்ச்சைக்கு அப்பாற்பட்டவரான அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். (கிருஷ்ண காந்த் அந்த அவமானத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலேயே சில வாரங்களுக்கெல்லாம் மரணம் அடைந்தார்.)குடியரசுத் தலைவராக வரவேண்டியவரின் நேர்மை, கல்வி, அனுபவம், சேவை, நடத்தை ஆகியவற்றை ஒப்புநோக்கி, விருப்பு, வெறுப்பு இல்லாமல் விவாதம் நடத்தி தேர்வு செய்திருந்தால் பிரதிபாவை கடைசியாகத் தேர்வு செய்ததைக் கூட குறையாகச் சொல்ல முடியாது.ஆனால் கலாமும் சரி, பிரதிபாவும் சரி முதல் தேர்வு அல்ல. இதற்கு மூல காரணம் கூட்டணி அரசு என்ற நிர்பந்த அரசியல் சூழலே.அர்ஜுன் சிங் வேண்டாம் என்று சோனியாவும், சிவராஜ் பாட்டீல், சுசில் குமார் ஷிண்டே, கரண் சிங் வேண்டாம் என்று இடதுசாரிகளும் நிராகரித்த பிறகு, “வேட்பாளர் பெண்ணாக இருந்தால் எப்படி?’ என்று கேட்கப்பட்டது.

அப்போதும்கூட பிரபல காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே, மோஷினா கித்வாய் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக பிரதிபா தேர்வு செய்யப்பட்டார். அவருடைய கணவர் தேவிசிங் ஷெகாவத், சீகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜஸ்தானியர், பைரோன் சிங் ஷெகாவத்தைப் போலவே தாக்குர் சமூகத்தவர் என்றதும் பிரதிபாவுக்கு ஒப்புதல் கிடைத்தது.

சொல்லப் போனால், வேட்பாளராக பிரதிபா தேர்ந்தெடுக்கப்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அல்ல, பைரோன் சிங் ஷெகாவத்தான் காரணம்!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரி கட்சிகள், மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியவற்றின் மொத்த வாக்கு எண்ணிக்கையால் காங்கிரஸ் தேர்வு செய்யும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்றாலும் பைரோன் சிங் ஷெகாவத்துக்கு பிற கட்சி உறுப்பினர்களிடையே இருக்கும் செல்வாக்கு, மரியாதை ஆகியவற்றால் காங்கிரஸ் தலைமை மிகவும் அரண்டு போயிருக்கிறது.

எனவேதான் “”ஷெகாவத்” என்ற பின்னொட்டுப் பெயர் வருகிற பிரதிபாவைத் தேடிப்பிடித்து நிறுத்தியிருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் ஆகியவற்றைச் சேர்ந்த எவராவது மாற்றி வாக்களித்தால்தான் பிரதிபா தோற்பார். அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் பிரதிபா தேர்ந்தெடுக்கப்படுவது நிச்சயமாகிவிட்டது. அவரும் தாக்குர் என்பதால் தாக்குர்கள் அணி மாறி வாக்களிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குகள்தான் சிதறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மராட்டியத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை குடியரசுத் தலைவராகவோ, துணைத் தலைவராகவோ பதவி வகித்ததில்லை, எனவே நம் மாநிலத்தைச் சேர்ந்தவரைத் தோற்கடிப்பதா என்ற கேள்வி சிவ சேனையினரின் நெஞ்சத்திலே கனன்று கொண்டிருக்கிறது.

வலுவான வேட்பாளர் தேவை. எனவே பிரணாப் முகர்ஜியைத்தான் நிறுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் ஆரம்பத்தில் வற்புறுத்திக் கொண்டிருந்தனர். பிரதிபா அப்படி வலுவானவர் அல்ல என்றாலும் இடதுசாரிகள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். “”வலுவானவர்”, “”வலுவற்றவர்” என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஆர்ப்பாட்டம், பந்தா ஏதும் இல்லாமல் பணிபுரிந்தால் அவர் வலுவற்றவரா?

பிரதிபாவின் அரசியல் வாழ்க்கையைப் பார்க்கும்போது நிரம்ப அனுபவமும், அறிவும், பொறுமையும், திறமையும் உடையவர் என்பது புலனாகிறது.

பொதுவாழ்வில் நேர்மை, நன்னடத்தை, அடக்கம் ஆகியவற்றின் சின்னமாகத் திகழ்ந்திருக்கிறார். திறமைக்கேற்ப கிடைத்த பதவிகளை முறையாக வகித்திருக்கிறார்.

பதவிக்காக ஆசைப்பட்டு தன்னை தரம் தாழ்த்திக் கொள்ளாமல் இருந்திருக்கிறார். சமூகப் பணி செய்த பிறகே அரசியலுக்கு வந்திருக்கிறார். இதுவரை அவரைப்பற்றி பரபரப்பாக எதுவுமே பேசப்படவில்லை என்பதே அவருக்குச் சாதகமானது. அவரால் எவருடைய அரசியல் வாழ்வுக்கும் எதிர்காலத்துக்கும் ஆபத்து இல்லை என்பதால் எளிதாகத் தேர்வு பெற்றுவிட்டார்.

பிரதிபா, ஷெகாவத் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று முதலில் சோனியாவிடம் கூறியவரே சரத் பவார்தான். மகாராஷ்டிரத்தில் பவாருக்கு எதிரான காங்கிரஸ்காரர்கள் வரிசையில் பிரதிபாவுக்கு முக்கிய இடம் உண்டு என்றாலும் அவருடைய தகுதிகளை மெச்சினார் பவார்.

இதுவரை பதவியில் இருந்த குடியரசுத் தலைவர்கள் தங்களுடைய சிறப்பான செய்கைகள் மூலம் முத்திரை பதித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

ஆர். வெங்கட்ராமனை “”சட்ட புத்தகத்தில் சொல்லியபடியே நிர்வகிப்பவர்” என்றார்கள்.

அரசியல் ஸ்திரமற்ற தேர்தல் முடிவுகள் வந்து அடுத்த நிர்வாகி யார் என்ற இருள் சூழும்போது, வானில் நம்பிக்கையூட்டும் மின்னல்கீற்று போன்றவர்தான் குடியரசுத் தலைவர் என்று நிரூபித்தவர் ஆர்.வெங்கட்ராமன்.

“”செயல்படும் குடியரசுத் தலைவர்” என்று தன்னை அழைத்துக் கொண்ட கே.ஆர். நாராயணன், வாஜ்பாய் அரசின் பல முடிவுகளைக் கேள்வி கேட்டு திருப்பி அனுப்பினார்.

அப்துல் கலாம் மக்களுடன் ஒன்றிவிட்டவர். மக்களும் அவரைத் தங்களுடையவர் என்று மனதார ஏற்றுக் கொண்டனர். எனவே அவர் “”மக்களின் குடியரசுத் தலைவராக” பெயர்பெற்றுவிட்டார்.

பிரதிபா பாட்டீல் எப்படி பேர் வாங்குகிறார் என்று பார்ப்போம்.

—————————————————————————————

பிரதிபாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

சென்னை, ஜூன் 20: வட இந்தியாவில் ஹிந்துப் பெண்கள், முஸ்லிம் ஆட்சியாளர்கள் காலத்தில்தான் தங்களை காத்துக்கொள்ள தலைக்கு முக்காடு போடும் பழக்கம் வந்தது என்று கூறியதற்காக, பிரதிபா பாட்டீலுக்கு நாடு முழுக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது.

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக காங்கிரஸ் கட்சியால் முன்மொழியப்பட்டுள்ளவர் பிரதிபா பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது.

“குங்கட்’ என்று அழைக்கப்படும் முக்காடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் தெரிவித்த கருத்து காரணமாக எதிர்ப்பு கொழுந்து விட்டு எரியத் தொடங்கி உள்ளது.

தேசியக் கட்சிகளும், மாநில அளவிலான கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் பிரதிபாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சர்ச்சையைக் கிளப்பிய பேச்சு: மகாராணா பிரதாப்பின் 467-வது பிறந்த நாள் நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதிபா பாட்டீல்,””வட இந்தியாவில் ஹிந்துப் பெண்கள் முக்காடு போட்டு முகத்தை மறைக்கும் முறை மொகலாயர்களின் காலத்தில் ஏற்பட்டது. மொகலாய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ளவே பெண்கள் முக்காடு அணியத் தொடங்கினர்” என்றார்.

சுதந்திர இந்தியாவில் இந்த முக்காடு முறை கைவிடப்பட வேண்டும், இதுபோன்ற முறைகள் தொடராமல் தடுத்து நிறுத்துவது நமது கடமை என்றார் அவர்.

“”இந்தியாவில் முக்காடு முறை 13-வது நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மொகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்த முறை தொடங்கப்பட்டது எனக் கூறுவது சரியல்ல” என்று கோல்கத்தாவைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் கௌசிக் ராய் தெரிவித்தார்.

த.மு.மு.க. கண்டனம்: பர்தா அணிவது முஸ்லிம் பெண்களின் கடமையும், உரிமையும் ஆகும். அதை விமர்சிப்பது ஒரு மாநில ஆளுநருக்கு அழகல்ல. இவ்வாறு கூறுவதன் மூலம் சங்கப் பரிவாரின் குரலை அவர் எதிரொலிக்கிறார் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கண்டித்துள்ளார்.

தர்மசங்கடம்: சிறுபான்மையினரின் எதிர்ப்பு வலுத்து வருவது காங்கிரஸின் தலைமைக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
———————————————————————————————–
பிரதிபாவுக்கு எதிரான தகவலுடன் சிறிய புத்தகத்தை வெளியிட்டது பாஜக

புதுதில்லி, ஜூன் 28: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி- இடதுசாரி வேட்பாளராக போட்டியிடும் பிரதிபா பாட்டீலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய சிறிய புத்தகத்தை பாஜக புதன்கிழமை வெளியிட்டது.

இப் புத்தகத்தில் இரண்டு கட்டுரைகளை முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சௌரி எழுதியுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையை ஊழலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தில்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் இப் புத்தகம் விநியோகிக்கப்பட்டது.

கொலையில் தொடர்புடைய சகோதரரைப் பாதுகாத்தார், தான் தலைவராக இருந்த சர்க்கரை ஆலை வங்கிக் கடனை செலுத்தவில்லை, அவரது பெயரில் ஏற்படுத்தப்பட்ட ஏழை பெண்கள் முதலீடு செய்த கூட்டுறவு வங்கி திவலானது என்று பிரதிபா மீது புகார் படலமாக அமைந்துள்ளது புத்தகம்.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக களங்கம் நிறைந்தவரும் ஊழல்பேர்வழியும் வர வேண்டுமா? பெண்களுக்கு அநீதி இழைந்தவர் குடியரசுத் தலைவர் ஆகலாமா என்று கேள்வி எழுப்புகிறது இந்தப் புத்தகம்.

மன்மோகன் கண்டனம்

பிரதிபா பாட்டீல் புகழுக்கு களங்கம் கற்பிக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. ஆனால் அந்த முயற்சியில் அவை வெற்றி பெறாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

பிரதிபாவுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எந்தவித புகாரும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

கலாம் விவகாரம்:

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது உயர் மதிப்பு வைத்துள்ளோம். “வெற்றி உறுதி என்று தெரிந்தால் மீண்டும் போட்டி’ என்று அவர் கூறியதாக வந்த செய்தியின் அடிப்படையிலேயே மத்திய அமைச்சர்கள் பிரியரஞ்சன் தாஷ் முன்ஷி, சரத் பவார் கருத்து தெரிவித்தனர். தேர்தலில் போட்டியிட ஒருவர் விரும்பினால் வெற்றி உறுதி என்று தெரிந்தால் மட்டுமே போட்டி என்று கூறுவது சரியானது இல்லை என்றார் பிரதமர்.

———————————————————————————————–

பிரதீபா பட்டீல் உறவினர்களால் திவாலான பெண்கள் வங்கி: ஊழியர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

ஜலகோன், ஜுன். 28-

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் பிரதீபா பட்டீல் உறவினர்கள் மீது தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை தனது புலனாய்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அதில் கூறப்படுவதாவது:-

பிரதீபா பட்டீல் பெயரில் 1973-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜலகோனில் “பிரதீபா மகிளா சககாரி” என்ற பெயரில் பெண்கள் கூட்டுறவு வங்கி ஆரம்பிக்கப்பட்டது. இந்த வங்கியை நிறுவியர் பிரதீபா பட்டீல் என்றாலும் தற்போது அவருக்கும் இந்த வங்கிக்கும் சம்பந்தமில்லை.

எனினும் இந்த வங்கியில் பிரதீபா பட்டீலின் அண்ணன் திலீப் சிங் பட்டீல் மற்றும் அவரது உறவினர்கள் லட்சக்கணக்கான ரூபாயை கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். இதனால் ரூ.2.24 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு அந்த வங்கி திவாலானது என்று அந்த தனியார் தொலைக்காட்சி தனது புலனாய்வுச் செய்தியில் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் அந்த கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் கோர்ட்டில் திலீப் சிங் பட்டீல் மற்றும் பிரதீபா பட்டீலின் உறவினர்களுக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

“திலீப்சிங் பட்டீல் “பிரதீபா மகிளா சககாரி வங்கியின்” தொலைபேசியின் மூலமாக மும்பையில் உள்ள பங்கு சந்தை தரகர்களுக்கு மணிக் கணக்கில் அடிக்கடி தொலை பேசியில் பேசினர். இந்த வகையில் ரூ.20 லட்சத்தை தொலைபேசி கட்டணமாக வங்கி கட்ட வேண்டியிருந்தது.

கார்கில் வீரர்களுக்கு உதவுவதற்காக ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் சமபளத்தை அளித் தோம். ஆனால் அந்த பணம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போய் சேரவில்லை. இடையில் ஊழல் நடந்துள்ளது. பிரதீபா பட்டீலின் உறவினருக்கு சொந்தமான சர்க்கரை ஆலைக்கு வங்கி பெரும் பணம் கடனாக கொடுத்திருந்தது. ஆனால் அப்பணம் திருப்பித் தரவில்லை. இதனால் வங்கி திவாலானது.

இவ்வாறு பல்வேறு குற்ற சாட்டுக்களை பிரதீபா பட்டீலின் உறவினர்கள் மீது பிரதீபா மகிளா சககாரி வங்கி யின் ஊழியர்கள் தாங்கள் தாக்கல் செய்த மனுவில் குறிப் பிட்டுள்ளனர்.

———————————————————————————————–

பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (2)

ஜலகாம் கூட்டுறவு வங்கி சமூக நீதி காத்த விதம்!

பிரதிபா மகிளா சஹகாரி வங்கியில், “”சமூக நீதி”யை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை ஊழியர்கள் சங்கம் சொல்லியிருப்பது தனிக்கதை.

வங்கியில் ஊழியர்களை வேலைக்குச் சேர்ப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நியதிகளைக்கூட வங்கியின் நிர்வாகிகள் கடைப்பிடிக்கவில்லை. இதனால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு உரிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு தரப்படவில்லை. நிர்வாக இயக்குநர்கள் தங்களுடைய உறவினர்களுக்கே அந்த வேலைகளை வழங்கினார்கள்.

கடனில் வங்கி மூழ்குவதைத் தடுக்க, பிரதிபா பாட்டீல் அவருடைய அண்ணன் திலீப் சிங் பாட்டீல் மற்றும் பிற உறவினர்களின் சொத்துகளை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் சங்கம் தனது மனுவில் கோரியிருந்தது. அவர்களுக்கு எப்படி அவ்வளவு சொத்து குறுகிய காலத்தில் சேர்ந்தது என்று விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தது. மகாராஷ்டிர மாநில அரசின் கூட்டுறவுத்துறையும் இந்த நோக்கில் விசாரணையைத் தொடங்கியது.

அதே சமயத்தில், அந்த வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அனந்த்சிங் பாட்டீல் என்பவர், சங்க லெட்டர் பேடில் பிரதிபா பாட்டீலுக்கு ஒரு கடிதம் எழுதினார். வங்கியின் முறைகேடுகளில் உங்களுக்கு பங்கு ஏதும் இல்லை என்று அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கும் ஒரு படி மேலே போய், சங்கத்தின் சார்பில் பிரதிபாவிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.

பிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்பட்டதை ரிசர்வ் வங்கியும் இதே காலத்தில் விசாரிக்க ஆரம்பித்தது. பிரதிபாவின் நெருங்கிய உறவினர்கள் வாங்கிய கடன்கள் முறைகேடாக தள்ளுபடி செய்யப்பட்டது உண்மைதான் என்று தனது ரகசிய அறிக்கையில் 2002 ஜூன் 18-ல் அது குறிப்பிட்டது. பிரதிபாவின் 3 உறவினர்களின் கடன் ரத்து தொடர்பான குறிப்பிட்ட குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மைதான் என்று அது தனது அறிக்கையில் பதிவு செய்தது. கடன்களை ரத்து செய்வதை பரிசீலிப்பதற்கென்றே ரிசர்வ் வங்கியில் இருக்கும் உதவி துணை மேலாளரை, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி அணுகி ஒப்புதல் பெறவில்லை என்பதையும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஊழியர் சங்கங்களின் புகார் மனுக்கள் கூட்டுறவுத்துறை, ரிசர்வ் வங்கி, மத்திய, மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு மட்டும் அல்லாமல் பிரதிபாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

ஊழியர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் ஆகியோர் 2002 மார்ச் 13-ல் அனுப்பியுள்ள கடிதத்தில், பிரதிபாவின் அண்ணன் திலீப் சிங் பாட்டீல், வங்கியின் தொலைபேசியைச் சொந்த பயன்பாட்டுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதை சுட்டிக்காட்டினர்.

வங்கியின் 224672 என்ற எண்ணுள்ள தொலைபேசியை அவர் தன்னுடைய வீட்டில் வைத்துக்கொண்டு, பங்கு பரிவர்த்தனை வியாபார விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். அவற்றுக்கான டெலிபோன் கட்டணம் ரூ.20 லட்சம். அந்த தொலைபேசியிலிருந்து மும்பையில் உள்ள பங்குத் தரகர்களுடன் பேசியிருப்பதை தொலைபேசி பில் தெரிவிக்கிறது.

இந்த ஆவணங்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஆனால் தொலைபேசியைத் தவறாகப் பயன்படுத்தியதை மறைக்க முடியவில்லை. வங்கியின் நிர்வாக அதிகாரியாக ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட அமோல் கைர்னார், இந்த தொலைபேசி பில்லுக்கு விளக்கம் தருமாறு வங்கி மேலாளர் பி.டி. பாட்டீலுக்கு 2003 பிப்ரவரி 1-ம் தேதி எழுதிய கடிதத்தில் கோரியிருக்கிறார்.

பிரதிபா மகிளா சஹகாரி வங்கி, சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அவ்வப்போது முறைகேடாக கடன் வழங்கியிருப்பதையும் ரிசர்வ் வங்கியின் நோட்டீஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த சர்க்கரை ஆலைதான் கிராமப்புற இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக பிரதிபா பாட்டீல் நிறுவியது. 1999-ல் சோனியா காந்தி இதைத் தொடங்கி வைத்தார்.

பிரதிபா மகிளா சஹகாரி வங்கியைப் போலவே இந்த சர்க்கரை ஆலையும் மூடப்பட்டுவிட்டது. ரூ.20 கோடி மதிப்புக்கு கடனை வாங்கிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் இந்த ஆலை மூடப்பட்டது. ஆனால் அந்த 20 கோடி ரூபாய் மதிப்புக்கு அது எந்த நாளிலும் சர்க்கரையை உற்பத்தி செய்யவே இல்லை என்பதுதான் அதன் சிறப்பு!

சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பங்குகளை வாங்க, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி தகுதியற்றவர்களுக்கெல்லாம் கடன் வழங்கியிருக்கிறது. சர்க்கரை ஆலையும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக பிரதிபாவின் சகோதரர்கள் இப்படித் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கடனை அள்ளி வழங்கினர்.

பொதுமக்கள் தங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்து கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்தால், உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் அதில் புகுந்துகொண்டு இப்படி ஊழல் செய்யும்பட்சத்தில் மக்கள் யாரைத்தான் நம்புவது என்றும் ஊழியர் சங்கம் கேட்டுள்ளது.

“நீங்கள்தான் இந்த கூட்டுறவு வங்கியின் நிறுவன தலைவர். ஆனால், சுயலாபத்துக்காக நீங்களே இந்த வங்கியை அழித்து விட முயற்சிகளைச் செய்து வருகிறீர்கள். 2002 மார்ச்சுக்குள் வங்கியின் நிலைமை மேம்படாவிட்டால் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது.

உங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக, வங்கியில் நிகழ்ந்துள்ள ஊழல்களையும் முறைகேட்டையும் வெளியே தெரியவிடாமல் தடுத்துவிட முடியும். உங்களால் எங்களுக்கும் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் உயிர்களுக்கும் ஆபத்து நேரிட்டிருக்கிறது. ஏற்கெனவே உங்களை நாங்கள் சந்திக்கும்போதே இதை குறிப்பால் உணர்த்திவிட்டீர்கள். உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காக எங்களுடைய உயிரைவிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்செயலாகவோ, வேறு வகையிலோ எங்களுக்கோ, எங்கள் குடும்பத்தவருக்கோ ஏதேனும் நேர்ந்துவிட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு’ என்று வங்கி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

கடன் வாங்கிய “”பெண்கள்” யார் என்பதைச் சொல்லிவிட்டோம். பணம் போட்டவர்கள் யார்? அதை அவர்களே பின்வருமாறு வங்கி நிர்வாகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

“காய்கறி, பழங்கள் விற்பது, குப்பை பொறுக்குவது போன்ற சிறு வேலைகளைச் செய்யும் ஏழைகளான நாங்கள்தான், நல்ல சேமிப்பாக இருக்கட்டும் என்று உங்கள் வங்கியில் முதலீடு செய்தோம். இப்போது நாங்கள் கேள்விப்படும் விஷயங்கள் எங்களுக்குக் கவலை தருவதாக இருக்கின்றன. ஏழைகளுக்கு உதவத்தான் இந்த வங்கியைத் திறந்திருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் சிறுகச்சிறுக சேர்த்த பணத்தையெல்லாம் இதில் முதலீடு செய்துள்ளோம். எனவே நமது வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்களின் முகவரிகளை வெளியிடுங்கள்’ என்று வங்கியில் பணம் போட்டவர்கள் கோரியுள்ளனர்.

மகளிர் முன்னேற்றத்துக்காகவும், ஊரக வளர்ச்சிக்காகவுமே 24 மணி நேரம் உழைக்கத் துடித்துக்கொண்டிருக்கும் பிரதிபா பாட்டீல் வகையறா சமூக சேவகர்கள் இதற்கு அளித்த பதில்தான் என்ன?


பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (3): மறந்துவிடாதீர்கள், கணவரும் உண்டு!அருண் செüரி
மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் உள்ள பிரச்னை என்னவென்றால், “”அதிகாரம் பெறும் மகளிருக்கு கணவர் உண்டு” என்பதை எல்லோருமே மறந்துவிடுவதுதான்!இணையதளத்தில், பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் -“”பிரதிபா மகிளா சஹகாரி வங்கியின் நிறுவனர், தலைவர்” என்று அவரைக் குறிப்பிட்டுள்ளனர். வங்கி பற்றி எழுத ஆரம்பித்ததும், அவருக்கு 1994 முதல் அந்த வங்கியுடன் தொடர்பு ஏதும் கிடையாது என்று திடீரென்று அறிவிக்கின்றனர்.ஜலகாம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர் என்று வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. அந்த ஆலைபற்றி எழுத ஆரம்பித்ததும் அறிவிப்பு வருகிறது -அவருக்கும் சர்க்கரை ஆலைக்கும் சம்பந்தம் இல்லை என்று!கூட்டுறவு வங்கி, சர்க்கரை ஆலை இரண்டிலிருந்தும் விலகிய பிரதிபா, தனது நேரம், உழைப்பு அனைத்தையும் கல்விப்பணிகளிலேயே செலவிட்டிருப்பார் என்று நம்பலாம்.பிரதிபா பாட்டீலும் அவருடைய குடும்பத்தாரும் சங்கம் அமைத்து சில பள்ளிக்கூடங்களை நடத்தினர். அதில் பணியாற்றுகிறவர்கள் நிர்வாகத்தின் மீது மிகுந்த கசப்புணர்வோடு இருக்கின்றனர். அவர்களோடு பணியாற்றிய கிசான் தாகே என்ற ஆசிரியர் எப்படி நடத்தப்பட்டார், அவர் எப்படி தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை ஆவணங்களோடு அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கெல்லாம் பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத்தும் அவருடைய சகாக்களும்தான் காரணம் என்கின்றனர்.ஷெகாவத்துகள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் 1977-ல் கிசான் தாகே பணிக்குச் சேர்ந்தார். உதவி ஆசிரியர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டார். ஊதியம் தராமலும் உரிய மரியாதை கொடுக்காமலும் அவமதிக்கப்பட்ட அவர் 1998 நவம்பர் 15-ல் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்தார். அதுவன்றி ஒரு பத்திரமும் அவரிடம் இருந்தது. போலீஸôர் அவற்றையெல்லாம் கைப்பற்றிக்கொண்டு, பிரேத பரிசோதனை நடத்தினர். தேவிசிங்கும் அவருடைய நண்பர்களும் எப்படி தன்னைச் சிறுமைப்படுத்தினார்கள், ஊதியம் தராமலும், பள்ளிக்கூட சங்கத்துக்குச் சொந்தமான கடன் சங்கத்திலிருந்து கடன்கூட வாங்க முடியாமலும் எப்படியெல்லாம் அலைக்கழித்தனர் என்றெல்லாம் விவரமாக அதில் எழுதியிருந்தார்.கிசான் தாகே உயிரோடு இருந்தபோது பட்ட துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவருடைய மகன், கல்வி உதவித்தொகை பெறுவதற்காக தேர்வு எழுத விண்ணப்ப மனுகூட கிடைக்கவொட்டாமல் தடுத்தனர். வேலைபார்த்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் “உபரி’யாக இருப்பதாகக் கூறி, தொலை தூரத்தில் உள்ள வேறொரு பள்ளிக்கூடத்துக்கு மாற்றினர். அங்கு ஆசிரியர் வேலையே காலி இல்லை என்றதும், விடுதி மேலாளராக வேலைபார்க்குமாறு கூறினர்.

அமராவதி நகரில் உள்ள சமூகநலத்துறை அதிகாரிக்கு இதுபற்றிக் கடிதம் எழுதினார் தாகே. ஆசிரியர் பணியிடமே இல்லாத இடத்துக்கு ஒருவரை மாற்றுவது சட்டவிரோதமான செயல் என்று சமூகநலத்துறை அதிகாரி 1998 ஜனவரி 27-ல் பள்ளிக்கூட நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினார். அந்த மாறுதலுக்கு தன்னுடைய ஒப்புதலைத் தர முடியாது என்றும் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு ஊதியம் தருவதை முற்றாக நிறுத்திவிட்டது நிர்வாகம்.

இதற்கிடையே, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் 1998 ஜனவரி 19-ல் மனு தாக்கல் செய்தார். தன்னைச் சட்டத்துக்குப் புறம்பாக மாற்றியது குறித்து குறிப்பிட்டிருந்தார். அவரை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுமாறும் ஊதியம் தருமாறும் 1998 அக்டோபர் 8-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 1997 ஆகஸ்ட் 25 முதல் அவருக்கு நிலுவை ஊதியத்தையும் தருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டது. அதன் பிறகும் ஊதியம் பெற அவர் நிர்வாகத்திடம் நடையாய் நடந்தார். இந்த கட்டத்தில் அவருடைய உடல் நலிவடைய ஆரம்பித்தது. டாக்டர் அளித்த சான்றுடன் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார். அதையும் நிர்வாகம் ஏற்கவில்லை. தாகேயின் பரிதாப நிலை கண்டு சக ஆசிரியர்கள் மிகவும் வருந்தினர். அவர்களால் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.

இதற்கிடையே வீட்டில் உள்ள பண்ட, பாத்திரங்களையும் மனைவியின் நகைகளையும் விற்றுத்தீர்த்துவிட்டதால் இனி வேறு வழியே இல்லை என்ற நிலையில், தற்கொலை முடிவை எடுத்து நிறைவேற்றிவிட்டார் தாகே. தாகேவின் மனைவி மங்கள்பாய் போலீஸில் புகார் செய்தார். போலீஸôர் பாராமுகமாக இருந்துவிட்டனர்.

மங்கள்பாயின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், “தாகேவைச் சிறுமைப்படுத்தியது, வேலையே இல்லாத இடத்துக்கு மாற்றியது, பிறகு ஊதியம் தராமல் நிறுத்தியது, மருத்துவ விடுப்பைத் தர மறுத்தது, உயர் நீதிமன்றம் ஆணையிட்டும் அதை எதிர் மனுக்கள் மூலம் தாமதம் செய்தது’ என்று எல்லாவற்றையும் நீதிமன்றமே சுட்டிக்காட்டியது. இதில் முதல் நோக்கில் தவறு யார் மீது என்று தெரிகிறது, போலீஸôர் உரிய வகையில் வழக்கைப் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. 2000 அக்டோபர் 6-ம் தேதி அந்த ஆணை வெளியானது. அதற்குள், ஊதியம் இல்லாமல் 3 ஆண்டுகள், தாகேவே இல்லாமல் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த ஆணையையும் எதிர்த்து கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் ஏ.ஏ. நந்தகாவோன்கர் அளித்த தீர்ப்பு, பள்ளிக்கூட நிர்வாகத்தை, கன்னத்தில் அறைந்தாற்போல இருந்தது. தேவிசிங் மீதும் அவருடைய சகாக்கள் மீதும் மனுதாரர் செய்த புகார்கள் உண்மையானவை என்பது நடந்த சம்பவங்களிலிருந்தும் கிடைத்துள்ள ஆவணங்களிலிருந்தும் தெரிகிறது, எனவே இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 306, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அது 2005 ஜூலை 22-ல் வெளியானது.

அதன் பிறகாவது சட்டம் தன் வேலையைச் செய்திருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கவிருக்கும் இந்த நாட்டின் முதல் குடிமகளின் கணவர் அவ்வளவு லேசுப்பட்டவரா என்ன? அந்த ஆணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.

சமூக நலத்துறை அதிகாரி, உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு அடுத்தபடியாக, இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்த நீதிபதியும், கன்னத்தில் அறைந்தாற்போல ஒரு தீர்ப்பை அளித்தார். இந்த தற்கொலை வழக்கில், சந்தர்ப்ப சாட்சியங்களும், ஆவணங்களும் தற்கொலைக்குத் தூண்டியது யார் என்பதை சந்தேகமற தெரிவிக்கின்றன; அப்படியிருக்க அவர்களுடைய மனுக்கள் பரிசீலனைக்கே ஏற்றவை அல்ல என்று கூறி தள்ளுபடி செய்தார். இந்த ஆணை 2007 பிப்ரவரி 7-ம் தேதி வெளியானது. தாகே 1998 நவம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இன்னும் இந்த வழக்கில் விசாரணையே ஆரம்பமாகவில்லை!

ஆதரவற்ற அப்பாவியான தாகே இறந்துவிட்டார்; அநாதையாகிவிட்ட அவருடைய மனைவி மங்கள்பாய் இனி அங்கும் இங்கும் அலைய முடியாதபடிக்குச் சோர்ந்துவிட்டார். இந்த விஷயத்தில் முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தேவிசிங் ஷெகாவத், குடியரசுத் தலைவர் மாளிகையில் நுழைவதற்குத் தயாராகிவிட்டார். தேவிசிங் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டீர்களா?

——————————————————————————————-

பிரதிபா பற்றிய எல்லா தகவல்களும் தலைமைக்குத் தெரியும்! – பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (5)

அருண் சௌரி

ரஜனி பாட்டீல் தில்லி செல்கிறார், சோனியா காந்தியை 2006 ஜனவரியில் சந்திக்கிறார். தனது கணவர் எப்படி கொல்லப்பட்டார், யாரால் கொல்லப்பட்டார், ஏன் கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் அனைத்தையும் தெரிவிக்கிறார். அகமது படேல், சுசீல் குமார் ஷிண்டே, மார்கரெட் ஆல்வா போன்ற தலைவர்களையும் சந்திக்கிறார்.

அவர்கள் யாரும் சுட்டு விரலைக்கூட ரஜனிக்காக அசைக்கவில்லை. மாறாக, இந்தக் கொலைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் 2 பேர் மீதான முதல் தகவல் அறிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இந்தக் கொலை வழக்கு விசாரணையை முதலில் உள்ளூர் போலீஸôரிடமிருந்து எடுத்து மாநில சி.ஐ.டி. போலீஸôரிடம் ஒப்படைத்து, பிறகு அவர்களிடமிருந்தும் எடுத்து சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். இந்த வழக்கை ஏற்பது குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்கவே 3 மாதங்கள் ஆனது.

“எங்களுக்கு பணிப்பளு அதிகம், இந்த வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, சர்வதேச அளவில் விசாரிக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை எனவே எங்களுடைய விசாரணை இதற்கு அவசியம் இல்லை’ என்று சி.பி.ஐ. பதில் அளித்தது.

வழக்கு விசாரணையை ஊனப்படுத்தவும் தொடர்புடையவர்களைத் தப்பவைக்கவும் நடந்ததே இந்த நாடகம். ரஜனி பாட்டீல் உயர் நீதிமன்றத்தின் ஒüரங்காபாத் பெஞ்சில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார்.

“இந்த வழக்கில் விஷ்ராம் பாட்டீலின் அரசியல் எதிரிகள்தான் இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை’ என்று சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ரஜனி பாட்டீலின் குற்றச்சாட்டே அதுதான்; முக்கிய எதிரிகள் என்று குறிப்பிடப்படுகிறவர்களைப் போலீஸôர் அழைத்து விசாரிக்கவே இல்லை, கைது செய்யப்பட்டவர்களிடமும் இந்தக் கோணத்தில் விசாரணை நடைபெறவில்லை.

ராஜு மாலி, ராஜு சோனாவானே ஆகியோர் 3.1.2006-ல் எழுதிய கடிதத்துக்கும் அந்த அதிகாரி பதில் அளிக்கவில்லை. “”எங்களை நிர்பந்திக்கிறார்கள்; குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளியுங்கள் இல்லாவிட்டால் விஷ்ராம் பாட்டீலுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் என்று எங்களை மிரட்டுகிறார்கள்” என்று அந்தக் கடிதத்தில் மராத்தியில் இருவரும் எழுதியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று சி.பி.ஐ. அளித்த பதிலை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் 2007 பிப்ரவரி 23-ல் நிராகரித்தது. “உங்களுடைய பணிப்பளுவும், இந்த வழக்கின் தன்மையும் எங்களுக்குத் தெரியும். இருதரப்பு வழக்கறிஞர்களின் உதவியோடு ஆவணங்களைப் பரிசீலித்ததில் இது வித்தியாசமான வழக்கு என்பதைப் புரிந்து கொண்டோம். எனவே சி.பி.ஐ. இதை விசாரிப்பதே சரியானது’ என்று நீதிமன்றம் ஆணையிட்டது.

2007 மார்ச் 5-ம் தேதி ரஜனி பாட்டீல் மீண்டும் ஒருமுறை வழக்கு பற்றிய குறிப்புகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினார். எனது குடும்பமே கொல்லப்படும் என்று அஞ்சுகிறேன் என்று கூட அதில் குறிப்பிட்டிருந்தார். சோனியாவிடமிருந்து பதிலே வரவில்லை.

பிறகு இதையெல்லாம் மீண்டும் ஒருமுறை தொகுத்து, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் மனு அளித்தார். பிறகு எதுவும் நடைபெறாததால், “”பிரதிபா பாட்டீல்தான் மும்பை, தில்லியில் உள்ள தனது அரசியல் செல்வாக்கு காரணமாக அண்ணன் டாக்டர் ஜி.என். பாட்டீலைக் கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றி வருகிறார்” என்று குற்றஞ்சாட்டினார்.

எதிர் குற்றச்சாட்டு: பிரதிபா பாட்டீலுக்கு இணையான தகுதி படைத்த வேட்பாளர் தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் பாரதீய ஜனதா தவறான பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

பிரதிபா பாட்டீல் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய கட்சிக்காரர்கள் அளித்த பேட்டிகள், வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்திலும், போலீஸôரிடமும், தில்லியிலும், மும்பையிலும் அவர்கள் அளித்த புகார் மனுக்கள் அம்பலப்படுத்துகின்றன. இவை பாரதீய ஜனதாவின் மூளையில் உதித்த கட்டுக்கதைகள் அல்ல. இது பொய்ப் பிரசாரம் என்றால் “”ஆஜ்-தக்” ஒளிபரப்பிய பேட்டி பற்றி என்ன சொல்கிறீர்கள்?

இத்தனை நாள்கள் விட்டுவிட்டு, பிரதிபாவை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த பிறகு ஏன் இதையெல்லாம் சொல்கிறீர்கள் என்பது அவர்களின் அடுத்த கேள்வி.

எல்லா மாவட்டங்களிலும் இதைப்போல ஆணவத்தோடு நடந்துகொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களில் எவரும் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறவரோ, அல்லது அவருடைய உறவினரோ அல்ல. எனவே நாட்டின் உயர் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறவரின் தகுதியை ஆராய்வதிலும் ஆட்சேபம் தெரிவிப்பதிலும் என்ன தவறு? இந்த மோசடிகளை இப்போது அம்பலப்படுத்தாவிட்டால் பிறகு எப்போதுதான் இவை வெளியே வரும், அதனால் என்ன பலன் இருக்கும்?

சோனியாவுக்கு எதுவுமே தெரியாதா? சோனியாவுக்கு பிரதிபா குறித்து எதுவுமே தெரியாது, அதனால் தேர்வு செய்துவிட்டார் என்று மட்டும் கூறாதீர்கள். மகாராஷ்டிரத்தில் ஒரு மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ஒரு முறை அல்ல -3 முறை இருந்தவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுபற்றி அவருடைய மனைவியும் கட்சித் தலைவர்களும் அலையலையாக தலைமைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள், பேட்டி தருகிறார்கள். உள்ளூர் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது எதுவுமே தெரியாது என்று சொல்லும் அளவுக்கு, இது “”சகஜமான” விஷயமா?

அப்படியானால் சோனியாவுக்கு பிரதிபா குறித்து எல்லாம் தெரிந்துதான் அவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தாரா? ஆமாம் -அதில் சந்தேகமே வேண்டாம்.

அரசியலில் செல்வாக்கு இல்லாத மன்மோகன் சிங்கைப் பிரதமராக பதவியில் அமர்த்தினார். அவருக்கு அரசியல் சாதுரியம் இல்லாவிட்டாலும், இன்னமும் கறைபடியாத கரத்துக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். நாளையே அவர், சோனியா சொன்னபடி கேட்காமல் சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டால் பிரச்னையாகிவிடும்.

எனவே காங்கிரஸ் கட்சித்தலைவரின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், குடியரசுத் தலைவராக வருகிறவரும் சொந்த செல்வாக்கு இல்லாதவராக இருக்க வேண்டும்; அது மட்டும் போதாது, “”தலைமையின் தயவில்தான்” அவருடைய பதவியே நீடிக்க வேண்டும். இதற்குப் பிரதிபாவைவிட வேறு நல்ல வேட்பாளர் கிடைப்பாரா?

———————————————————————————–

கூட்டுறவு வங்கி ஊழல்: பிரதீபா பட்டீலுக்கு பா.ஜ.க. 3 கேள்வி

புதுடெல்லி, ஜுலை. 5-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் பிரதீபா பட்டில். வருகிற 19-ந் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. பிரதீபா பட்டீல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரதீபாபட்டீல் உறவினர்கள் மீது எழுந்துள்ள கூட்டுறவு வங்கி ஊழல் குற்றச்சாட்டுக்களை கையி லெடுத்து அவருக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.

தனக்கும் அந்த கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உள் நோக்கம் கொண்டவை என்றும் பிரதீபாபட்டீல் அறிக்கை விடுத்திருக்கிறார்.

பிரதீபா பட்டீலுக்கும் திவாலான பெண்கள் கூட்டுறவு வங்கிக்கும், அதில் நடந்த ஊழலுக்கும் தொடர்பு உண்டு என்று கூறி அது சம்பந்தமாக மூன்று கேள்விகளை பிரதீபாபட்டீல் முன்பு எழுப்பி யுள்ளார் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்களில் ஒருவர். அந்த மூன்று கேள்விகள் வருமாறு:-

பிரதீபாபட்டீலின் உறவினர்களுக்கு கடன் கொடுத்ததால் திவாலாகிப்போன பிரதீபா பெண்கள் கூட்டுறவு வங்கியை தான் நிறுவவில்லை என்று பிரதீபாபட்டீலால் கூற முடியுமா?

1990-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி அந்த வங்கியின் இயக்குனர்கள் கூடி பிரதீபாபட்டீலின் உறவினர்களுக்கு கடன் கொடுக்க சவுகர்யமான தீர்மானத்தை எடுத்துள்ளனர். இந்த தீர்மானத்தில் பிரதீபாபட்டீல் கையெழுத்திட்டுள்ளார். இதை அவரால் மறுக்க முடியுமா?

கடந்த 2002-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி வங்கியின் இயக்குனர்கள் குழு ஒன்று கூடி வங்கியின் தலைமை செயல் அலுவலரை நியமிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதை உங்களால் மறுக்க முடியுமா?

மேற்கண்ட மூன்று கேள்விகளை பா.ஜ.க. பிரதீபாபட்டீல் முன்பு வைத்துள்ளது.

வங்கியில் நடந்த முறை கேடுகளுக்கு பிரதீபா பட்டீலே பொறுப்பு என்று கூறும் பா.ஜ.க. அது சம்பந்தமான ஆதாரங்களை புத்தகமாக வெளியிட்டு பிரதீபா பட்டீலுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.

——————————————————————————————————-

எம்.பி. தொகுதி நிதி ஒதுக்கீட்டில் பிரதிபா விதிமீறல்

புதுதில்லி, ஜூலை 8: குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரதிபா பாட்டீல் எம்.பி.யாக இருந்த போது அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி. தொகுதி நிதியிலிருந்து ரூ.36 லட்சம் ஒதுக்கியதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி உயர் தலைவர்கள் சனிக்கிழமை மனு அளித்தனர். விதிமுறைகளைப் புறக்கணித்து குடும்ப அறக்கட்டளைக்கு எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து பிரதிபா பாட்டீல், நிதி ஒதுக்கிய விவகாரத்தை நாடாளுமன்ற உரிமைக் குழு அல்லது நெறிமுறைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறும் அவர்கள் மக்களவைத் தலைவரிடம் வலியுறுத்தினர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மக்களவையில் பாஜக துணைத் தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா மற்றும் ஷாநவாஸ் ஹுசைன், கே.எஸ்.சங்வன், ரக்பீர் சிங் கௌசல் உள்ளிட்டோர் மக்களவைத் தலைவரை அவரது அலுவலகத்தில் சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்தனர். மகஜரில் அவர்கள் கூறியிருந்தாவது:

மகாராஷ்டிரத்தின் அமராவதி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக பிரதிபா பாட்டீல் 1991-1996-ம் ஆண்டுகளில் இருந்தார். அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஏற்படுத்திய அறக்கட்டளை “வித்யா பாரதி சிக்ஷான் சன்ஸ்தா’. இதற்கு ஒரு கல்லூரி அருகே விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.36 லட்சத்தை 1995-ம் பிரதிபா பாட்டீல் அளித்தார். சம்பந்தப்பட்ட இடம் அறக்கட்டளைக்கு சொந்தமானதாக இல்லாத நிலையில் அங்கு விளையாட்டு வளாகம் கட்ட உள்ளூர் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

எம்.பி.க்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடைய சங்கத்துக்கோ, அறக்கட்டளைக்கோ எம்.பி. தொகுதி நிதியிலிருந்து நிதி அளிக்கக்கூடாது என்று வழிகாட்டு விதிமுறையை பிரதிபா மீறி செயல்பட்டுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதிபா போட்டியிடுகிறார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இப்போது இந்த மிக மோசமான முறைகேடு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனிடையே, மகாராஷ்டிர மாநில அரசு அந்த அறக்கட்டளைக்கு கல்லூரி அருகே 25,000 சதுர அடி இடத்தை கடந்த ஏப்ரலில் வழங்கியது. பிரதிபா பாட்டீல் 12 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கிய ரூ.36 லட்சத்தை பயன்படுத்தி அங்கு விளையாட்டு வளாகம் கட்டவும் அடுத்த மாதமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிவிட்டது.

பிரதிபா பாட்டீல் 1996 வரை எம்.பி.யாக இருந்தார். அவர் எம்.பி.யாக இருந்த போது ஒதுக்கி பயன்படுத்தப்படாத நிதியை 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில் இப்போது பயன்படுத்த எவ்வாறு அனுமதிக்கலாம்?.

விதிமீறல் தொடர்பாக பிரதிபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகஜரில் குறிப்பிட்டுள்ளனர். மகஜரை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தங்களிடம் உறுதி அளித்ததாக பாஜக மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

“ஊழல், கிரிமினலை பாதுகாத்தல், எம்.பி.யாக இருந்தபோது நிதி ஒதுக்கீட்டில் விதிமீறல் போன்ற புகாரில் பிரதிபா பாட்டீல் சிக்கியுள்ளார். அவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா என்பதை வாக்களிக்க உரிமை பெற்ற எம்.பி., எம்.பி.க்கள் மனசாட்சி அடிப்படையில் சிந்தித்து செயல்பட வேண்டும்’ என்றும் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டார்.

—————————————————————————————————

From Unmai Online:

மகளிருக்கு மரியாதை

முதல் பெண் குடியரசுத் தலைவர்

மனித சமூகத்தின் சரிபகுதி பெண்ணினம் எல்லாத் துறைகளிலும் கால் பதிப்பதற்கு போராட்டத்தைத்தான் மேற்கொள்ள வேண்டி-யிருக்கிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்-கத்தில் தென்னகத்திலிருந்து பெரியாரின் குரல் மட்டும்தான் பெண்ணுக்கு நீதி வழங்கும் என்று உரத்து ஒலித்தது.

நீதி, நிருவாகம், சட்டமியற்றுதல், காவல், ராணுவம், அரசியல், அறிவியல், தொழில்-நுட்பம் என பல்துறைகளிலும் பெண்கள் மெல்ல மெல்ல கால்பதித்து சாதனை படைத்-திருந்தாலும் நாட்டின் உச்சபட்ச பொறுப்புக்கு ஒரு பெண் இப்போது தான் வரப்போகிறார்.

அறுபதாண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் குடிமகனாக (ளாக) bஙுவூகு. ðபூகுðட் ðட்ஙீர்™ ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்-படுவதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது.

அதுவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு பெண் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும். இந்தத் தேர்வில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் பங்கு முதன்மையாக இருந்தது எனும்போது வரலாறு இன்னொரு முறை கலைஞரின் மூலமாக பெரியாரைப் பதிவு செய்து கொள்கிறது எனலாம்.

குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படப் போகும் திருமதி பிரதிபா பாட்டில் அவர் ஒரு பெண் என்பதற்காக மட்டுமே தேர்வா-கவில்லை. மகாராஷ்டிரா அரசியலில் நுழைந்த நாள் முதல் தோல்வியே காணாத வெற்றியாளராக அவர் இருந்து வந்துள்ளார்.

அவருடைய தனித்தன்மையைப் பற்றி கூறும் பலரும், “தன்னை பிரபலமாக்கிக் கொள்ளாத விளம்பரத்தை விரும்பாத அரசியல் வாதி” என்றே கூறுகின்றனர். 1962ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல்-முறையாக வெற்றி பெற்ற பிரதிபா பாட்டில் இப்போது தனது 71ஆம் வயதில் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராகப் போகிறார்.

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை வலுவாக ஒலித்து வரும் காலகட்டத்தில் பிரதிபா பாட்டில் இந்தியக் குடியரசுத் தலைவராக வரப்போகிறார் என்பது வரவேற்க வேண்டிய செய்தி. ஆனால் இதற்குச் சில பெண்களே எதிர்நிலை எடுப்பதும் அவதூறு பரப்புவதும் எத்தகைய அருவருக்-கத்தக்கது என்பதையும் இந்திய வரலாறு பதிவு செய்தே வருகிறது. என்றாலும், “சுதந்திர இந்தியாவின் 60 வருட காலத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்” என்று சோனியா காந்தி கூறியுள்ளது முற்றிலும் பொருத்தமானது ஆகும்.

1947-இல் அந்நியர் ஆட்சி அகன்று 60 ஆண்டுகளுக்குப் பின்பு, முதன்முறையாக இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு பெண் வருகிறார் என்பது பாலியல் நீதி. அப்பெண் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்-தவர் என்பது சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி; பிரதிபா பிறந்த சோலங்கி ஜாதி ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியாகும். இதற்கு முன் இருந்த 11 குடியரசுத் தலைவர்களில் ஒவ்வொரு முறை மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அப்பத-வியை வகித்துள்ளனர்; 110 கோடியுள்ள இந்திய மக்களில் இவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 90 கோடிக்கு மேல் ஆகும்.

1934 டிசம்பர் 19-இல் பிறந்த பிரதிபா எம்.ஏ; மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர்; மகாராஷ்டிராவின் வடக்கில் உள்ள ஜல்-கோயன் எனும் ஊரில் வழக்குரைஞர் தொழில் செய்தார். அங்கு பொறியியல் கல்லூரியை ஏற்படுத்திக் கிராமத்து மாணவர்களுக்குப் பயன்தரும் வகையில் நடத்துகிறார். பார்-வையற்றோருக்கு அந்நகரில் தொழில் பயிற்சி பள்ளியையும், ஏழை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குப் பள்ளி ஒன்றையும் நடத்துகிறார்.

கிராமியப் பொருளாதார மேம்பாட்டிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் தனி அக்கறை செலுத்துகிறார். பெண்கள் கூட்டுறவு வங்கியை ஜல்கோயன் நகரில் உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு என மும்பை, மற்றும் டில்லியில் தனி விடுதிகளை நடத்துகிறார்.

பள்ளி, கல்லூரியில் பயிலும்பொழுது விளையாட்டுப் போட்டிகளில் கலந்து-கொண்டு பரிசுகள் பெற்ற பிரதிபா பாட்டில், 1962-இல் சீன ஆக்கிரமிப்பின்போது துணைக் காவல் படையின் தளபதியாக இருந்தார்.

1966-இல் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் எனும் வேதியியல் பேராசிரியரை, ஜாதி மறுப்பு மணம் செய்து கொண்டார்; இது பெற்றோர் ஏற்பாட்டில் நடந்த திருமணம். ஒரு மகனும் மகளும் இவர்களுக்குப் பிள்ளைகள். தேவிசிங் ஷெகாவத், வித்யபாரதி மகாவித்-யாலயா எனும் கல்வி நிறுவனத்தை, மகாராஷ்-டிரத்தின் வடகிழக்கில் விதர்பா பகுதியைச் சேர்ந்த அமராவதி நகரில் நடத்துகிறார். அதே நகரில் உழவர் அறிவியல் மய்யம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு மழலையர் (நர்சரி) பள்ளியை பிரதிபா அம்மையார் நடத்துகிறார்.

பிரதிபா அம்மையாரின் துணைவர் தேவிசிங் கூறும் செய்தி ஒன்று கவனத்தில் கொள்ளத்தக்கது. ராஜ°தான் மாநிலத்தில் இருந்து விதர்பா பகுதியில் குடியேறியுள்ள அவர் குடும்பம், மகாராஷ்டிர அரசியலில் செல்வாக்காக இருந்ததில்லை. ஆனால், அவருடைய துணைவியாரின் (பிரதிபாவின்) பெரிய தந்தையார் வழக்கறிஞராகவும், அப்பொழுதைய பம்பாய் மாகாண சட்டப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்த, தோங்கர்சிங் பாட்டில் ஆவார். அவர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திவான் பகதூர் விருது பெற்றவர்.

திவான் பகதூர் தோங்கர்சிங் பாட்டில், சிவசேனாவின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின் தந்தை பிரபோதன் தாக்கரேயுக்கு மிக நெருங்கியவர் எனத் தெரிவிக்கிறார். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பிரபோதன் தாக்கரே பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தில் மிக ஈடுபாடு காட்டினார் என்பதும், பார்ப்பனீயத்தை மறுத்தவர் என்பதும்தான். அவருக்கு `மிக நெருக்கமாக’ இருந்த பிரதிபாவின் பெரிய தந்தையார் பார்ப்பனர் அல்லாதவர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டி-ருந்தார் என்பது பெறப்படுகிறது.

இன்னொரு முக்கியச் செய்தியை, பிரதிபா பாட்டிலின் துணைவர் தருகிறார். மண்டல் ஆணையம் நிறைவேற்ற ஆணை வந்த பொழுது, மகாராஷ்டிரத்தில் கலவரத்தைத் தூண்டப் பெரு முயற்சி நடந்தது. ஆனால், நாக்பூரில் கூடிய மகாராஷ்டிரச் சட்டப் பேரவையில் சுமார் மூன்று மணி நேரம் புள்ளி விவரங்களுடன் பேசி அக்கலவர முயற்சியை முறியடித்து, அமைதியை நிலை நாட்டினார், பிரதிபா பாட்டில்.

இந்தப் பின்னணியில் பார்க்கும்பொழுது தான் 1962 முதல், மாநிலக் காங்கிரசின் தலைவராக, சட்டப் பேரவை உறுப்பினராக, அமைச்சராக, நாடாளுமன்ற மாநிலங்களவைத் துணைத் தலைவராக, மக்களவை உறுப்-பினராக, பல்வேறு நாடுகளில் நடந்த பல-வகைப் பன்னாட்டு அரங்குகளில் பங்கேற்ற-வராக, ஒரு மாநிலத்தின் ஆளுநராக, அப்பழுக்-கற்ற பொது வாழ்வினராக, மதச் சார்-பற்றவராக, சிறந்த நிர்வாகி என மெய்ப்-பித்தவராக உள்ள ஒருவரைப் பார்ப்பன ஏடுகள் ஏன் பரிகசிக்கின்றன என்பது தெரியவரும்.

——————————————————————————————————

திருமதி. பிரதிபா பாட்டில்
வாழ்க்கைக் குறிப்பு

தந்தை பெயர்: நாராயணராவ்

பிறந்த தேதி: டிசம்பர் 19, 1934

பிறந்த இடம்: மகராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன்

துணைவர் பெயர்: டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத்

குழந்தைகள்: பிரதிபா-ஷெகாவத் தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கல்வித் தகுதி: எம்.ஏ. எல்.எல்.பி. கற்று வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார்.

பொது வாழ்வில் ஈடுபட்டு சமூகப் பணியாற்றி வந்த பிரதிபா பாட்டில் 1962 முதல் 1985 வரை தொடர்ந்து 23 ஆண்டுகள் மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் துணை அமைச்சராகவும் பின்னர் அமைச்சராகவும் பொறுப்பேற்றுப் பணிபுரிந்துள்ளார். குடிமைப் பொள் வழங்கல், மக்கள் நலவாழ்வு, சுற்றுலா, வீட்டுவசதி, சமூக நலம், ஊரக வளர்ச்சி, மதுவிலக்கு, மறுவாழ்வு மற்றும் பண்பாடு, கல்வித் துறை என பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பணியாற்றியுள்ளது சிறப்பான தகுதிகளாகும்.

1985 முதல் 1990 வரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங் களவைத் துணைத் தலைவராகப் பணியாற்றி யுள்ளார்.
1991இல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு பணியாற்றினார்.

கடந்த 2004ஆம்ஆண்டு ராஜ°தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

சமூக மற்றும் பண்பாட்டுத் துறைகளில் பெண்கள் நலம், பணியாற்றும் மகளிருக்கு விடுதிகள் ஏற் படுத்துதல், கிராமப்புற இளைஞர் நலன், பார்வை யற்றோருக்கான பள்ளிகள் போன்றவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துதல், பெண்கள் நலனை மேம்படுத்துதல் ஆகியவைக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுவது தனது விருப்பம் என்பது பிரதிபாட்டிலின் கருத்து ஆகும்.

பல்வேறு உலக நாடுகள் சுற்றி வந்த பிரதிபா பாட்டில் சமூக நலம் குறித்த உலக அளவிலான மாநாடுகளில் பங்கேற்றுள்ளதுடன் பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மகளிர் மாநாட்டில் பங்கேற்றார்.
——————————————————————————————————

பதவியின் கௌரவத்தைக் குலைப்பது யார்?

எஸ். குருமூர்த்தி
“”எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரசாரமானது நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைப்பதாக இருந்துவிடக் கூடாது” -இப்படிக் கூறி இருப்பவர், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்த அளவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் பேசப்பட்டதன் காரணமே, அத்தனை விவகாரங்களில் பிரதிபா பாட்டீல் சம்பந்தப்பட்டிருப்பதும், அவை தொடர்பாக நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் வழக்குகளும் முதல் தகவல் அறிக்கைகளும் பதிவாகியிருப்பதால்தான்.

இவையெல்லாம் வெறும் புகார்கள்தானா? இந்த குற்றச்சாட்டுகளைக் கூறியவர்கள் யார்? தேசிய ஜனநாயக கூட்டணியா, பாரதீய ஜனதாவா? பரபரப்புக்காக செய்தி ஊடகங்களே அவற்றைப் பரப்பிவிட்டனவா?

பேராசிரியர் வி.ஜி. பாட்டீல் என்பவரின் கொலைக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்டவர் பிரதிபா பாட்டீலின் சகோதரர் ஜி.என். பாட்டீல் என்று குற்றம் சாட்டியவர் ரஜனி பாட்டீல். அவர்தான் வி.ஜி. பாட்டீலின் மனைவி; ஜலகாமைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை.

வி.ஜி. பாட்டீல், ஜி.என். பாட்டீல் இருவருமே சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஜலகாம் மாவட்டப் பிரமுகர்கள். பேராசிரியர் வி.ஜி. பாட்டீல், ஜி.என். பாட்டீலை ஜலகாம் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் தோற்கடித்தவர். சுனாமி நிவாரணத்துக்காகவும், பிரதிபா பாட்டீல் ராஜஸ்தான் மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாடுவதற்கும் லட்சக்கணக்கான ரூபாய்களைத் திரட்டி, அதை உரிய வகையில் செலவழிக்காமல் பிரதிபாவும் அவரது சகோதரர் ஜி.என். பாட்டீலும் ஏமாற்றியதை அம்பலப்படுத்தப் போவதாக எச்சரித்தார் அவர். “”உங்களைக் கொல்ல, அடியாள்களை ஏவிவிட்டுள்ளனர்” – வி.ஜி. பாட்டீலுக்கு 3 எச்சரிக்கைக் கடிதங்கள் வந்தன.

கிரிமினல் சட்டப்படி, ஒருவர் ஒரு கொலையைச் செய்தாலோ, செய்யத் தூண்டினாலோ அதில் அவருக்கு ஒரு தனிப்பட்ட ஆதாயம் இருக்க வேண்டும். இந்த வழக்கில் அது பிரதிபா பாட்டீலை நோக்கியே இருந்தது.

இந்த ஆதாரம் சரியில்லை என்று கருதினாலும்கூட, 2005 செப்டம்பரில் வி.ஜி. பாட்டீலைக் கத்தியால் குத்திக் கொன்றவர்களில் ஒருவன், சிறைச்சாலையிலேயே உண்ணாவிரதம் இருந்தான். “”இந்தக் கொலையில் நீங்கள் அடியாள்கள்தான் என்றால் உங்களை ஏவிவிட்டவர்கள் யார்?” என்று கேட்டபோது அவர்கள், “”ரஜனி பாட்டீல் யார் யார் மீது குற்றஞ்சாட்டுகிறாரோ அவர்கள்தான்” என்று பதில் அளித்தான். பின்னர் அந்த “”சாட்சியமும்” மறைந்துபோனது. சிறையில் போலீஸôரின் காவலிலேயே அந்தக் கைதி மர்மமாக இறந்தார்.

பிரதிபாதான் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிற்கப்போகிறார் என்று யாரும் கற்பனை செய்துகூட பார்த்திராத அந்த நாளில் வி.ஜி. பாட்டீலின் கொலையையும், அதில் தொடர்புள்ளதாகக் கருதப்படும் ஜி.என். பாட்டீலும் அவருடைய அரசியல் சகாவும், அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களால் சட்டத்தின் பிடியில் சிக்கிவிடாமல் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள் என்று “ஆஜ்-தக்’ டி.வி. நிருபர் படம்பிடித்துக் காட்டினார்.

ஜலகாமிலிருந்து 2 முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவராக பிரதிபா இருந்திருந்தும் மாவட்ட காங்கிரஸ் தலைவரான வி.ஜி. பாட்டீல் படுகொலை செய்யப்பட்டது தெரிந்தும் அவருடைய மனைவியான ரஜனியிடம் அனுதாபம் தெரிவித்துக் கூட பிரதிபா ஒரு வார்த்தைகூட பேசியதே இல்லை என்பது ஆச்சரியமாக இல்லை?

2005 தொடக்கத்திலும் 2007-ம் ஆண்டிலும், காங்கிரஸ் கட்சி என்ற பெரிய குடும்பத்தின் தலைவரான சோனியா காந்திக்கு தனது கணவரின் படுகொலை குறித்து 2 முறை கடிதம் எழுதினார் ரஜனி. ஜி.என். பாட்டீலை அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்கள் காப்பாற்றுகிறார்கள் என்று இருமுறை நேரில் சந்தித்தும் முறையிட்டார். சோனியாவின் மனம் இளகாததால் உயர் நீதிமன்றத்தின் ஒüரங்காபாத் கிளையில் புகார் மனு தாக்கல் செய்தார்.

பிரதிபா உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடங்கிய அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ. தான் விசாரிக்க வேண்டும் என்று 2007 பிப்ரவரியில் உத்தரவிட்டது.

குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறவரின் சகோதரர் இப்போது சி.பி.ஐ.யின் பார்வையில். சகோதரர் செய்த கொலைக்கு பிரதிபா எப்படி பொறுப்பாவார் என்று கேட்கலாம். சந்தேகத்துக்கு உரியவரை அவருடைய சகோதரியே காப்பாற்றுகிறார் என்று நீதிமன்றமே கூறியிருக்கிறதே, அதற்குப் பிறகும் இந்த விஷயத்தில் நாம் எப்படி பிரதிபாவை சந்தேகப்படாமல் இருக்க முடியும்?

பிரதிபா குடியரசுத் தலைவர் ஆகிவிட்டால் அவருடைய சகோதரரை சி.பி.ஐ.யால் எப்படி விசாரிக்க முடியும்? நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைக்க முயல்வது யார்? கொலை விசாரணையிலிருந்து சகோதரரைக் காப்பாற்றியவரா? பொதுமக்களிடம் அதை அம்பலப்படுத்தியவர்களா?

1973-ல் பிரதிபா பாட்டீல் தனது சொந்தப் பெயரில், தன்னையே நிறுவனர் தலைவராகவும் தனது உறவினர்களை இயக்குநர்களாகவும் கொண்டு கூட்டுறவு வங்கியொன்றை தொடங்கினார்.

சில ஆண்டுகள் கழித்து அந்த வங்கி -காய்கறி விற்பவர்கள், வீட்டு வேலை செய்கிறவர்கள், தினக்கூலிகள் மற்றும் இவர்களைப் போலவே கடுமையாக உழைத்து சம்பாதிப்பவர்களிடமிருந்து ரூ.760 லட்சத்தை டெபாசிட்டாகத் திரட்டியது. 1990-ல் அந்த வங்கி, பிரதிபாவின் உறவினர்கள் உள்பட பலருக்கும் கடன் வழங்கியது. பெண்களுக்கு மட்டும்தான் கடன் தர வேண்டும் என்பது அந்த வங்கியின் முக்கியமான விதி. ஆனால் பயன்பெற்றவர்களில் பிரதிபாவின் உறவினர்கள் பலர் இருந்தனர். அத்தனை பேரும் ஆண்கள் என்பதுதான் வேடிக்கை.

பிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடனுக்கான வட்டித் தொகை ரூ.33 லட்சம் ரத்து செய்யப்பட்டது; இந்த குறிப்பைப் புரிந்துகொண்ட அவர்கள், அசல் ரூ.225 லட்சத்தையும் திருப்பித் தராமல் தங்களிடமே வைத்துக் கொண்டனர்.

பிரதிபாவின் மற்றொரு சகோதரர், வங்கிக்கு உரிய தொலைபேசியை வீட்டுக்கு எடுத்துச்சென்று பங்குச் சந்தை தரகர்களுடன் அன்றாடம் பேசி 20 லட்ச ரூபாய் பில் வருமாறு சமூகத்துக்கு சேவை செய்தார்.

இதைப்போன்ற முறைகேடுகளும், சுரண்டல்களும் வங்கியின் நிதியில் 37%-ஐ கரைத்துவிட்டன. வேறு வழியில்லாமல் வங்கி நொடித்து விழுந்தது. ஏழை முதலீட்டாளர்கள் தங்களுடைய சேமிப்பு, வட்டி எல்லாவற்றையும் இழந்தனர். பிரதிபாவின் உறவினர்களோ அவர்களுடைய இழப்பிலிருந்து லாபம் பார்த்துவிட்டனர்.

2002-ல் அந்த வங்கியின் நிதி நிர்வாகத்தை ஆழ்ந்து ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி, வங்கியின் உரிமத்தை 2003-ல் ரத்து செய்தது. இனி இந்த வங்கியைத் தொடர்ந்து இயங்க அனுமதிப்பது மக்களின் நலனுக்கு எதிரானது என்ற முடிவுக்கு அது வந்தது. 2002 ஜூன் 18-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரகசிய அறிக்கையில், உறவினர்களுக்கே கடனும் சலுகையும் வழங்கியிருப்பது பெரும் மோசடியே என்று சாடியிருக்கிறது. பிரதிபா உள்ளிட்ட நிர்வாகிகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

வங்கி ஊழியர்களில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகளை சட்டப்படி குறிப்பிட்ட எண்ணிக்கையில் இட ஒதுக்கீட்டின்படி நியமிக்காமல், முழுக்க தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்களையே நியமித்துவிட்டனர். வங்கி நிர்வாகத்துக்கும் பிரதிபாவுக்கும் தொடர்பே இல்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் 2002 ஜனவரி 22-ல் நடந்த இயக்குநர்கள் கூட்டத்தில்கூட, தலைமை நிர்வாகியை நியமிக்கும் அதிகாரத்தை பிரதிபாவுக்கு வழங்கியிருக்கின்றனர்.

இவையெல்லாம் குற்றச்சாட்டுகள் அல்ல, உண்மைகள். வங்கியை இப்படி முறைகேடாக நிர்வகித்ததற்காக விசாரணை நடத்தினால் பிரதிபா உள்பட அனைத்து இயக்குநர்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப்படும். பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசியல் சட்டம் 361 (2) பிரிவின்படி அவர் மீது வழக்கு தொடுக்க முடியாது.

சந்தேகத்துக்குரிய குற்றவாளி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பதவியில் அமர்ந்தால் அதனால் அந்தப் பதவிக்கு கெüரவம் அதிகரிக்கும் என்பதுதான் பிரதிபாவின் வாதம் போலிருக்கிறது. தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் உள்ள வங்கியில் முறைகேடான செயல்களை அனுமதிக்கிறவர் குற்றவாளியா, அல்லது அதை வெளி உலகுக்குத் தெரிவித்து வாக்களிக்கப் போகும் மக்கள் பிரதிநிதிகளையும், நாட்டின் குடிமக்களையும் முன்கூட்டி எச்சரிப்பவர்கள் குற்றவாளிகளா?

——————————————————————————————————————-
Part II

பிரதிபாவின் பெயரில் தொடங்கிய வங்கி மட்டும் திவாலாகவில்லை; அவர் தன்னையே நிறுவனராகவும் முதன்மை ஊக்குவிப்பாளராகவும் கொண்டு தொடங்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலையும் அதேபோல நொடித்துப்போனது. மகாராஷ்டிர மாநிலத்தின் கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை 1999-ல் சோனியா காந்தியால் தொடங்கப்பட்டது. அதிக அளவு சர்க்கரையை உற்பத்தி செய்யாமலேயே ஆலை நொடித்தது. பிரதிபாவின் வங்கி உள்பட சில வங்கிகள் சேர்த்து அளித்த ரூ.20 கோடி திரும்ப வராமலேயே நஷ்டமாகிவிட்டது. ஊரக வளர்ச்சிக்காக நாட்டு மக்கள்தான் இந்த நஷ்டத்தையெல்லாம் ஏற்று ஈடுகட்ட வேண்டும். சர்க்கரை ஆலையின் தலைவரும், முதன்மை ஊக்குவிப்பாளருமான பிரதிபாவுக்கும் அந்த ஆலைக்கும் தொடர்பு கிடையாது என்று இப்போது அவருடைய நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள மிக உயர்ந்த பதவியின் கெüரவத்தைக் குலைப்பது யார்? பொதுமக்களின் 20 கோடி ரூபாயை விழுங்கிய கூட்டுறவு ஆலையா அல்லது அதை நாட்டுக்கு அம்பலப்படுத்திய எதிர்க்கட்சிகளா?

சகோதரருடன் கூட்டு சேர்ந்து கூட்டுறவு வங்கியையும் சர்க்கரை ஆலையையும் நடத்தினார். கணவர், மகள்களின் உதவியோடு கல்வி நிலையங்களையும் உழைக்கும் மகளிருக்கான விடுதிகளையும் நடத்தினார். பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத் செய்த சாதனைகளைத்தான் பாருங்களேன்! கிசான் தாகே என்ற ஏழை பள்ளிக்கூட ஆசிரியரை, உரிமையை வலியுறுத்தினார் என்ற ஒரே காரணத்துக்காக சம்பளம் கொடுக்காமலும், வேலையே இல்லாத தொலைதூர கிராமப் பள்ளிக்கு மாற்றியும் அலைக்கழித்தார். வேதனை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குக் காரணம் தேவிசிங்தான் என்று அவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்தார்.

ஆனால் போலீஸôர், தாகேவின் மரணம் தொடர்பாக தேவிசிங் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்யக்கூட மறுத்துவிட்டனர். பேராசிரியர் பாட்டீல் கொலை வழக்கில் எப்படி பிரதிபாவின் அண்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்தனரோ அப்படியே இந்த வழக்கிலும் போலீஸ்காரர்கள் நடந்து கொண்டனர். இந்த வழக்கிலும் நீதிமன்றம் ஒரு முறையல்ல, 3 முறை தலையிட்டது. சந்தர்ப்ப, சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது தேவிசிங்தான் முதல் குற்றவாளி என்று அது திட்டவட்டமாகக் குறிப்பிட்டது.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். உயர்ந்த பதவிக்கு இழுக்கு என்று பிரதிபா எதைக் கூறுகிறார்? அவருடைய கணவரின் கிரிமினல் நடவடிக்கைகளையா? அல்லது அவற்றை மக்கள் அறிய அம்பலப்படுத்தும் பத்திரிகைகளையும் எதிர்க்கட்சிகளையுமா?

அடுத்தது அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமான சில அறக்கட்டளைகளின் அளப்பரிய சேவைகளைப் பற்றியது. ஷ்ரம் சாதனா டிரஸ்ட் (எஸ்.எஸ்.டி.), மகாராஷ்டிர மகிளா உதயம் டிரஸ்ட் (எம்.எம்.யு.டி.) என்ற அந்த இரண்டுக்குமே பிரதிபா பாட்டீல்தான் தலைவர், அவருடைய மகள் ஜோதி ரதோர்தான் நிர்வாக அறங்காவலர். இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து 5 உழைக்கும் மகளிர் விடுதிகளையும், 2 பள்ளிகளையும், ஜலகாமில் ஒரு பொறியியல் கல்லூரியையும் நடத்துகின்றன.

அவர்களுடைய உழைக்கும் மகளிர் விடுதி ஒன்று மும்பை-புணே நெடுஞ்சாலையில் பிம்ப்ரி என்ற இடத்தில், அரசு கொடுத்த நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த விடுதிகள் மத்திய, மாநில அரசுகள் தந்த மானியங்களில்தான் கட்டப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் ரூ.16,000-க்கு மேல் சம்பாதிக்காத ஏழைகளுக்குத்தான் இந்த விடுதியில் இடம் தர வேண்டும் என்பது முதல் விதி. ஆனால் அங்கு தங்கியுள்ள மகளிரில் பலர் தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த, அதிக வருவாய் உள்ள பெண்கள். தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்படும் 22.5% இடங்களும் கூட மற்றவர்களுக்கே வழங்கப்படுகின்றன. ஆக இந்த அறக்கட்டளையின் நோக்கம் “”அறம்” அல்ல, எல்லாவற்றிலும் “”லாபம் தேடு” என்பதுதான். இந்த விவகாரத்தில் பிரதிபாவின் நடத்தையால் அந்த உயர்ந்த பதவியின் மாண்பு குலைகிறதா அல்லது அதை அம்பலப்படுத்தும் ஊடகங்களாலா?

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, அதாவது 2007 ஏப்ரல் 26-ல், மகாராஷ்டிர மாநில அரசு 25 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பை பிரதிபாவின் கணவருடைய கல்விச் சங்கத்துக்கு அளித்தது. அங்கு விளையாட்டு அரங்க வளாகத்தைக் கட்டுவதற்காக அந்த நிலம் தரப்பட்டது. அதற்கு ரூ.36 லட்சம் தரப்பட்டது. 1996-ல் தனக்கு தரப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இத் தொகையை பிரதிபா வழங்கினார். உறவினர்கள் அறங்காவலர்களாக இருக்கும் அறக்கட்டளைகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அளிக்கக்கூடாது என்று அரசு விதி குறிப்பிடும் நிலையிலும் இந்த முறைகேடு நடந்திருக்கிறது.

தொகுதி மேம்பாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய பிரதிபாவின் செயலால் உயர் பதவியின் கெüரவத்துக்கு இழுக்கா அல்லது அதை அம்பலப்படுத்திய பத்திரிகைகளின் நடவடிக்கையால் இழுக்கா?

தனியார் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று எல்லா மாநில அரசுகளும் சட்டம் இயற்றுகின்றன. இந் நிலையில் பிரதிபாவின் குடும்பத்துக்குச் சொந்தமான இரு அறக்கட்டளைகளும் சட்ட விரோதமாக கூடுதல் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, அதை நன்கொடை என்ற கணக்கில் எழுதிக்கொண்டன. இந்த முறைகேட்டை வருமான வரித்துறை கண்டுபிடித்து, வரி போட்டது.

இதில் எது உயர் பதவியின் மாண்பைக் குறைக்கிறது? கூடுதல் கல்விக் கட்டணத்தை நன்கொடை என்ற பெயரில் மறைத்து வரி ஏய்ப்பு செய்ததா அல்லது அதை பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் அம்பலப்படுத்தியதா? இன்னும் பல ஊழல்கள் இருந்தாலும் எழுத இடம் போதாது என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.

குடியரசுத்தலைவர் பதவியின் மாண்பை, அந்தப் பதவிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிபா பாட்டீல்தான் குலைக்கிறாரே தவிர, அதை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளோ இதர செய்தி ஊடகங்களோ அல்ல. வேட்பாளர் என்று அவரை அறிவித்தபோதே இத்தனை ஊழல்களும் அணிவகுத்து முன் நிற்கிறதே, அவர் குடியரசுத்தலைவராகவே ஆகிவிட்டால் அப்புறம் என்னவெல்லாம் நடக்கும்?

தேர்தலுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவி என்பதே கேலிக்குரியதாகிவிடும். குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களைப் பற்றி பேசாதீர்கள் என்று பிரதிபா வேண்டுகோள் விடுப்பதன் மூலம், பதவியின் மாண்பைக் காப்பாறிவிட முடியாது! தேர்தலுக்குப் பிறகும் இந்த விவகாரங்கள் பேசப்படும். நீதிமன்றத்தில் இது வழக்காக வந்தால், கேலி இன்னமும் உச்சத்துக்குப் போகும். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் உடன்பாட்டுக்கு வந்தால்கூட, இத்தனை முறைகேடுகளைச்செய்துள்ளதால் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முடியாது.

சுயநல நோக்கில் அவர் விடுத்துள்ள இந்த வேண்டுகோளே, அவர் குற்றம் செய்ததை நிரூபிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். இந்தப் பதவிக்குரிய கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று பிரதிபா உண்மையிலேயே விரும்பினால் போட்டியிலிருந்து அவர் விலகுவதுதான் ஒரே வழி.

———————————————————————————-
இந்தியக் குடியரசும் இங்கிலாந்து முடியரசும் ஒன்றா?

இரா. செழியன்

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்களைப் பரிசீலித்து, தகுதியற்றவைகளை நிராகரித்த பிறகு பிரதிபா தேவிசிங் பாட்டீல், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோர் மட்டுமே இப்போது களத்தில் நிற்கின்றனர்.

பிரிட்டனில் அமலில் உள்ள “வெஸ்ட்மினிஸ்டர்’ பாணி அரசியல் அமைப்பு முறையே நமக்கும் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியல் நிர்ணய சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால், மத்திய அமைச்சரவை எடுக்கும் முடிவுகளின்படி செயல்பட வேண்டிய -அடையாளச் சின்னமாக மட்டும் -நாட்டின் தலைவரான குடியரசுத் தலைவர் பதவி இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதிலும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதிலும் மட்டும் ஓரளவுக்கு இவர் சுதந்திரமாகச் செயல்படுகிறார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வரைவு வாசகத்தை, அப்போதைய அரசியல்சட்ட ஆலோசகர் பி.என். ராவ் வடித்திருந்தார்.

நேருஜி அதை ஏற்கவில்லை. “இது எளிமையாக இருக்கும் என்பது உண்மையே, ஆனால் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சி அல்லது குழுவின் ஆதிக்கத்தில் இருக்கும். அப்போது அந்தக் கட்சி அல்லது குழு தங்களைச் சேர்ந்த ஒருவரை மட்டுமே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடும். இதுவே அலங்காரப் பதவிதான், மிகக் குறைந்தவர்கள் தேர்ந்தெடுத்தால் இது அப்பட்டமான “”கைப்பாவை” பதவியாகிவிடும். குடியரசுத் தலைவரும் மத்திய அமைச்சரவையும் ஒரே எண்ணங்களைப் பிரதிபலிப்பார்கள்’ என்று சுட்டிக்காட்டினார்.

அதன் பிறகு, அரசியல் சட்ட நிர்ணய சபையில் மீண்டும் இது விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும், சட்டமன்றங்களின் எல்லா உறுப்பினர்களும் சேர்ந்து வாக்களிக்க வேண்டும், மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் வாக்குகளுக்கு மதிப்பு போடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் அரசர் எப்படியோ இந்திய ஜனநாயகத்தில் குடியரசுத் தலைவரும். சம்பிரதாயமான தலைவர்தான்! ஆயினும், பிரதமர் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரின் தலைவராகவே இந்தியாவில் குடியரசுத் தலைவர் பார்க்கப்படுகிறார். நாடு சுதந்திரம் அடைந்தது தொடங்கி முதல் 20 ஆண்டுகளுக்கு பாபு ராஜேந்திர பிரசாத், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசேன் போன்ற பழுத்த அனுபவம் வாய்ந்த திறமைசாலிகள் அந்தப் பதவியை அலங்கரித்தனர்.

1969-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்குள் } தலைவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட கலவரத்தாலும், மனசாட்சிப்படி வாக்களிப்பது என்ற கருத்தை பிரதமரே கையாண்டதாலும் அந்தப் பதவிக்குரிய கெüரவமும், கண்ணியமும் பாதிப்படைந்தது. குடியரசுத் தலைவர் என்ற பதவி வெறும் பொம்மை போன்றதாக இருக்கும் என்ற அச்சம், நிஜமாகிவிட்டது.

இப்போது நடைபெறவுள்ள 12-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தலைப் பொருத்தவரை, இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதி வாய்ந்த பலர் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்றனர்.

முதலில், பிரணாப் முகர்ஜியை எடுத்துக் கொள்வோம். திறமை, அனுபவம் ஆகிய இரண்டும் கலந்த அவரைவிடத் தகுதி வாய்ந்தவர் யாரும் இல்லை. அவர்தான் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், “”அவர் இல்லை -அவர் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் தேவைப்படுகிறார்” என்ற அறிவிப்பு கட்சி மேலிடத்தால் வெளியிடப்பட்டது.

மிகுந்த திறமைசாலி என்பதை கட்சித் தலைமையே ஒப்புக்கொண்டது பெருமைக்குரிய விஷயம்தான் என்றாலும், மத்திய அமைச்சராக இருப்பதற்குத்தான் தகுதி தேவை, குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்படி எதுவும் அவசியம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கருதுவதுபோலத் தெரிகிறது. பொது வாழ்வில், “”தகுதியே” தகுதிக்குறைவாகவும் இதைப்போல, ஆகிவிடுவது உண்டு.

அதன் பிறகு பலருடைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அதே வேகத்தில் நிராகரிக்கவும்பட்டன. எதைச் செய்வது என்று புரியாமல் ஒரு குழப்பத்தில், ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரதிபா பாட்டீலை நிறுத்துவது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும்- இடதுசாரி கட்சிகளும் ஒப்புக்கொண்டன.

இதில் தவறு ஏதும் இல்லை. 1950-களில் குடியரசுத் தலைவர் பதவி என்பதை மிகுந்த மரியாதைக்குரிய, பெருமைக்குரிய பதவியாகக் கருதினார் ராஜேந்திர பிரசாத். கட்சியிலோ, மத்திய அமைச்சரவையிலோ வகிக்கும் பதவியைவிட குடியரசுத் தலைவர் பதவி பெரிது என்று அவர் நினைத்தார். மெதுவாக அந்த நிலைமை மாறி, ஆளுங்கட்சித் தலைவர் பதவி என்பது பிரதமர், குடியரசுத் தலைவர் பதவிகளைவிட சக்திவாய்ந்தது என்று இப்போது ஆகிவிட்டது.

பிரதிபா பாட்டீல் மீது உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் கமிஷனிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதிபா மட்டும் அல்லது அவர்களுடைய உறவினர்களின் செயல்கள் குறித்தும் புகார்கள் செய்யப்படுகின்றன. வேட்பாளர்களின் சொத்து, கடன் விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்குநாள் வலுத்து வருகிறது.

சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்குப் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருப்பவர்களும் -“”அரசியல் சட்டத்துக்கு விசுவாசமாக இருப்பேன், நாட்டின் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் கட்டிக்காப்பேன்” என்று உறுதி அளிக்க வேண்டும் என்று “”தேசிய ஒருமைப்பாடு-பிராந்தியவாதம்” தொடர்பாக ஆராய 1962-ல் நியமிக்கப்பட்ட சர் சி.பி. ராமஸ்வாமி ஐயர் கமிட்டி பரிந்துரை செய்தது.

ஆனால், 16-வது திருத்தச்சட்டம் என்ற புதிய அரசியல் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதை அந்த நாளில் திமுகவுக்கு எதிரான சட்டம் என்றே அழைத்தார்கள். மக்களவை, சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கட்டிப்போட அந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

2003 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவின்படி, மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய படிப்பு, சொத்து, கடன், தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், விசாரணையில் உள்ள வழக்குகள் போன்ற விவரங்களை உரிய படிவங்களில் தெரிவிக்க வேண்டியவர்களானார்கள். இதை எல்லாப் பதவிகளுக்கும் கட்டாயமாக்குவது நல்லது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சிவசேனை ஆகியவற்றுக்கு உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் பிரதிபா பாட்டீல்தான் வெற்றி பெறுவார்; 1969-ல் கடைப்பிடிக்கப்பட்ட மனசாட்சிப்படி வாக்களிக்கும் உத்தி கடைப்பிடிக்கப்பட்டால் இந்த முடிவு மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அரசியல் ஆதரவைவிட பிரதிபா பாட்டீலுக்கு ஆன்மிக ஆதரவு இருக்கிறது. பிரம்ம குமாரிகள் சங்கத்தை நிறுவிய பாபா லேக்ராஜின் பரிபூரண ஆசி (1969-ல் அவர் இறந்துவிட்டார்) பிரதிபாவுக்கு இருக்கிறது. மவுண்ட் அபுவில், பிரம்ம குமாரிகள் சங்கத் தலைவருடன் சமீபத்தில் பேசியபோது, “”மிகப்பெரிய பொறுப்பை ஏற்க நீ தயாராக இருக்க வேண்டும்” என்று பாபா லேக்ராஜ் கூறியிருக்கிறார். அதன் பிறகே, கட்சித் தலைவர் சோனியா காந்தியிடமிருந்து அவருக்கு அந்த இனிய அழைப்பு போயிருக்கிறது, குடியரசுத் தலைவர் தேர்தலில் நீங்கள்தான் வேட்பாளர் என்று.

பிரிட்டிஷ் வரலாற்றைப் படித்தவர்களுக்கு ஞாபகம் இருக்கும், முதலாவது ஜேம்ஸ் என்ற மன்னன், கடவுள் தன்னிடம் பேசி தனக்களித்த ஆசியினால், “”தெய்வீக உரிமையோடு” மக்களை ஆள்வதாக அறிவித்தார்.

பிரிட்டனில் மன்னர் எப்படி தேசத்தின் அடையாளத் தலைவரோ, அப்படி குடியரசுத் தலைவர் இங்கு அடையாளத் தலைவராகப் பதவி வகிக்கிறார். அதற்காக இங்கிலாந்து மன்னரைப்போலவே தனக்கும் “”தெய்வீக உரிமை” இருப்பதாகக் கூறி மக்களைத் தொல்லை செய்யாதிருப்பாராக!

(கட்டுரையாளர்: முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்.)

————————————————————————————————————

மிஸ்டர் பிரதிபா பாட்டீல்…
Prathibha patil husband devisingh shekawath

குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீலின் வருகைக்காக தனது இல்லம் முன்பு காத்திருக்கும் கணவர் தேவிசிங் ஷெகாவத்.

புது தில்லி, ஜூலை 23: இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல் இனி தனது குடும்பத்திற்கும் தலைவியாக செயல்படுவார் என அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் கூறினார்.

குடும்பத் தலைவி மட்டுமில்லாது எங்களின் குலத்தலைவியாகவும் அவர் இருப்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில் அவர் இதை நகைச்சுவையாக குறிப்பிட்டார். ஜூலை 25 முதல் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு குடிபுக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் தங்களின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களை தங்களின் மகன்களில் ஒருவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் நிர்வகித்து வந்தார். தற்போது அதில் அவர் தலையிடுவது இல்லை என்றார்.

குடியுரசுத் தலைவரின் கணவராக இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்கையில், தான் ஒரு சாதாரண மனிதன் தான் என அவர் தெரிவித்தார்.

Posted in Abdul Kalam, Abdulkalam, abuse, Accusations, Accused, Advani, Akbar, Allegation, Alliance, APJ, Attorney, Aurangazeb, Babar, Bajpai, bank, BJP, Bribe, Bribes, BSP, Burqa, candidate, Chandrasekar, Chandrasekhar, Chezhiyan, Co-operative, Condemn, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Cooperative, Corrupt, Corruption, CPI, CPI(M), Dalit, Desai, Devisingh, DMK, Elections, Emergency, Fakhruddin, Fakhrudheen, Fakruddin, Fakrudheen, Fakrudhin, Fakrudin, Female, Finance, Giri, Governor, Governor-general, Gurumoorthy, Gurumurthy, Hindu, Hinduism, History, Hussain, Hussein, Independence, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Islam, Issues, Jailsingh, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JD, Kalaam, Kalam, kickbacks, KR Narain, Lady, Law, Lawyer, Loans, Lok Saba, Lok Sabha, LokSaba, maharashtra, Mahila Sahakari Bank, Manmohan, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MLA, Mogals, Moghuls, Moguls, Moraarji, Morarji, Moslem, MP, Mukhals, Muslim, Narain, Narayan, Narayanan, NDA, Neeraja, Neeraja Choudhri, Neeraja Choudhry, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Nehru, nexus, Nomination, Order, Party, Patil, Pilani, PM, Polls, Post, Power, Pradhiba, Pradhibha, Pradiba, Pranab, Pranab Mukherjee, Pranav, Prathiba, Pratiba, Pratibha, Pratibha Devisingh Patil, PRATIBHA MAHILA BANK, PRATIBHA MAHILA SAHAKARI BANK, Pratibha Patil, President, Prez, Propaganda, Purqa, Radhakrishnan, Raj, Rajaji, Rajasthan, Rajeev, Rajeev Gandhi, Rajendra, Rajendra Prasad, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Rajya Saba, Rajya Sabha, Rajyasaba, Rajyasabha, Rashtrapathi, Rashtrapathy, Reddy, Religion, Republic, SAHAKARI BANK, Sanjeev, Sanjeev Reddy, Sanjeeva reddy, Sarma, Scam, Scandal, SD Sharma, Sezhiyan, Shankar Dayar Sharma, Sharma, Shekavat, Shekavath, Shekawat, Shekawath, Shinde, Shivraj, Shivraj Patil, Shourie, Sikhs, Speaker, Speech, support, Sushil Kumar Shinde, TMMK, UPA, Vajpayee, Vajpayi, Veil, Venkatraman, vice-president, Victory, Vote, VP, VP Singh, Winner, Women, Zail singh, Zailsingh, Zakir | 6 Comments »

Mayavathi’s corruption supported by TR Balu with Congress Blessings – Presidential Elections

Posted by Snapjudge மேல் ஜூன் 11, 2007

அரசியல் பேரமா, அதிகார துஷ்பிரயோகமா?

மத்தியில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை என்கிற நிலைமை 1989-ல் எழுந்தது முதல் அரசியல் என்பது தினசரிப் பேரங்களுக்கு உட்பட்ட வியாபாரமாகிவிட்டது என்பதுதான் யதார்த்த நிலைமை. அமைச்சர் பதவியைப் பெறுவது முதல் எந்தவொரு விஷயத்திலும் எனக்கு இவ்வளவு, உனக்கு இவ்வளவு என்கிற வகையில்தான் ஆட்சியில் அமரும் கூட்டணிக் கட்சிகள் செயல்படுகின்றன என்பது ஊரறிந்த உண்மை.

உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறி இருப்பது இந்த வியாபார நாடகத்தில் மற்றுமொரு காட்சி. முதல்வர் மாயாவதியின் மீது வழக்குத் தொடர மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாநில ஆளுநர் ராஜேஸ்வர் அனுமதி மறுத்திருப்பது வேடிக்கையாக இருந்தாலும், அது ஒரு வாடிக்கையான விஷயம்தான் என்றுதான் கொள்ள வேண்டும். குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தரப்பட்டிருக்கும் விலைதான் இது என்பது பள்ளிக் குழந்தைக்குக்கூடத் தெரியும்.

இந்தியாவின் புராதன சரித்திரச் சின்னங்களாகக் கருதப்படும் இடங்களைப் பாதுகாக்க 1958-ல் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம், புராதனச் சின்னங்களாகக் கருதப்படும் கட்டடங்களைச் சுற்றிலுமுள்ள நூறு மீட்டர் தூரத்திற்கு எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. அந்த சரித்திரச் சின்னங்கள் சிதைந்து விடாமல் இருக்கவும், அதன் அழகு கெட்டுவிடாமல் இருக்கவும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது. இந்தச் சட்டத்தை முறையாக அமல் நடத்தும் பொறுப்பு இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்திடமும் (Archeaological Survey of India), மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்திடமும் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் அப்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த மாயாவதி, தாஜ் கலாசார வணிகவளாகம் (Taj Heritage Corridor்) என்கிற பெயரில் தாஜ்மஹாலைச் சுற்றியும் ஆக்ரா கோட்டையைச் சுற்றியும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வணிக வளாகம் அமைத்து மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் திட்டம் ஒன்றைத் தீட்டினார். சுமார் 175 கோடி ரூபாய் முதலீட்டில் நிறைவேற்றப்பட இருந்த இந்த வணிக வளாகத்துக்கு, அன்றைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர். பாலு அனுமதியும் வழங்கினார் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.

மத்திய அரசு தனது பங்குக்கு முதல் தவணையாக சுமார் 17 கோடி ரூபாயை இந்த வணிக வளாகத் திட்டத்திற்கு வழங்கியது. அதுவும் எப்படி? முறையாக எந்தவிதத் திட்ட வரைமுறைகளும் மத்திய அரசுக்கு அனுப்பப்படாமல், சுற்றுச்சூழல் அமைச்சரகமும் எந்தவொரு சோதனைகளையும் நடத்தாமல், மாயாவதியின் நிர்பந்தத்தின் பேரில் பணம் தரப்பட்டு, வேலையும் தொடங்கியது. தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் எச்சரிக்கைகள் சட்டை செய்யப்படவில்லை.

இந்த நிலையில் விஷயம் உச்ச நீதிமன்றத்தை அடைந்தது. தாஜ்மஹாலின் அழகைக் கெடுக்கும் வண்ணம் அந்த நினைவுச் சின்னத்தைச் சுற்றி வணிக வளாகம் எழுப்பப்படுகிறது என்று சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட, இந்தத் திட்டத்தில் முறைகேடுகள் ஏதாவது நடந்திருக்கிறதா என்று உச்ச நீதிமன்றம் மத்திய ஊழல் தடுப்புக் கமிஷனை விசாரிக்க, அதன் விளைவாகத்தான் இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கை மூடி மறைக்க மத்தியப் புலனாய்வுத் துறை 2005-ல் முயன்றும் அது முடியாமல் போய்விட்டது. இப்போது, மாயாவதியின் மீதும், அவரது அன்றைய அமைச்சரவை சகா நஜீமுதீன் சித்திக் மீதும் எத்தகைய குற்றமும் தனக்குத் தென்படவில்லை என்று கூறி, இந்த விசாரணையை மேலும் தொடரவோ, வழக்குப் போடவோ மத்தியப் புலனாய்வுத் துறைக்கு அனுமதி வழங்க ஆளுநர் ராஜேஸ்வர் மறுத்திருக்கிறார்.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சிக்கு ஆளுநர் துணை போயிருக்கிறார். ஆளுங்கட்சியின் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளரை ஆதரிக்க சோனியா காந்திக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதிக்கும் இடையே நடைபெற்றிருக்கும் இந்தப் பேரத்தில் களங்கப்பட்டிருப்பது ஆளுநரின் மரியாதை.

அதிகார துஷ்பிரயோகம் என்று வரும்போது அது ஆளுநராக இருந்தால் என்ன ஆட்சியாளர்களாக இருந்தால் என்ன? அரசியல் பேரத்தில் இதுவும் ஒரு பரிணாமம் என்று கருதி நம்மை நாமே தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!

———————————————————————————————-

கட்சித் தொண்டர்கள் வழங்கிய பணத்தில் சேர்ந்தது எனது ரூ. 52 கோடி சொத்து: உ.பி. முதல்வர் மாயாவதி

லக்னெü, ஜூன் 28: தன்பேரில் உள்ள ரூ. 52 கோடி சொத்து பகுஜன் சமாஜ் கட்சித்தொண்டர்கள் நன்கொடையாக அனுப்பிய பணத்தில் சேர்க்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி.

தனக்கு ரூ. 52 கோடி சொத்து இருப்பதாக மாநில சட்ட மேலவை உறுப்பினர் பதவி தேர்தலுக்கான வேட்பு மனுவில் அளித்த தகவலில் முதல்வர் மாயாவதி கூறியது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இந்த விளக்கத்தை தந்துள்ளார் மாயாவதி.

நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது: இதற்கு முன்னர் தொண்டர்கள் நன்கொடையை கட்சிக்கு அனுப்பினார்கள். இப்போது என்னிடம் பணம் இல்லை என்று கருதி எனக்கு நேரடியாக அனுப்புகிறார்கள். அந்த பணத்தை முதலீடு செய்யலாம். அல்லது தில்லியில் பங்களா கூட கட்டலாம். அந்த அளவுக்கு எனக்கு அவர்கள் சுதந்திரம் தந்துள்ளனர்.

நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. வரி அனைத்தையும் கட்டி வருகிறேன். எல்லா விவரமும் வருமான வரிக்கணக்கில் உள்ளன. வருமான வரி விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள நான் அப்பீல் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஆதாரம் இல்லாதது.

முலாயம் அரசில் நடந்த தானிய விநியோக ஊழல் பற்றி விசாரணை: முலாயம் சிங் தலைமையிலான முந்தைய அரசில் நடந்த தானிய விநியோக ஊழல் பற்றி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 28 மாவட்டங்களில் இந்த ஊழல் நடந்துள்ளது. இதை சிறப்பு விசாரணைக் குழு ஆராயும். இந்த முறைகேடு பற்றி 3 மாதங்களில் அந்த குழு அறிக்கை தாக்கல் செய்யும்.

ஊழலில் போக்குவரத்து காண்ட்ராக்டர்களுக்கு தொடர்பு இருந்ததா? வேறு மாநிலங்களுக்கு உணவு தானியங்கள் திருப்பிவிடப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணைக் குழு ஆராயும்.

அமைச்சர் மிஸ்ரா விலகுகிறார்: மாநில அமைச்சரும் கட்சியின் பொதுச்செயலருமான எஸ்.சி.மிஸ்ரா அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார். 2009-ல் மக்களவைக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில் நாடு முழுவதிலும் உள்ள உயர் சாதியினரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஈர்க்கும் பணியில் மிஸ்ரா ஈடுபடுவார்.

அமைச்சர் பதவியில் அவருக்கு நாட்டம் இல்லவே இல்லை. நான் அவரை கட்டாயப்படுத்தி அமைச்சர் பதவி வழங்கினேன். இன்னும் சில மாதங்கள் மட்டுமே அவர் அமைச்சர் பதவியில் இருப்பார். ஆரம்பத்தில் அவரிடம் இருந்து சட்ட ஆலோசனைகள் உள்பட பலதரப்பட்ட ஆலோசனைகள் எனக்கு தேவைப்படுகிறது.

மிஸ்ரா குடும்பத்தாருக்கு நான் எந்த சலுகையும் காட்டவில்லை. இது பற்றி பத்திரிகைகள் தவறான தகவல்களை வெளியிடுகின்றன.

கஷ்டமான கால கட்டத்தில் எனக்கு உதவியுள்ளார் மிஸ்ரா. அவரது சகோதரிக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் பதவியும், மைத்துனருக்கு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியும் அளித்ததில் தவறில்லை. அவர்களின் தியாகத்துக்கு நான் தந்த வெகுமதி அது.

மிஸ்ரா எனக்கு எதிரான வழக்குகளில் ஆஜரானபோது, அவரது தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு உறுதுணையாக இருந்து இருவரும் அவரை கவனித்துக் கொண்டதால் எனக்கு எதிரான வழக்கில் மிஸ்ரா ஆஜராக முடிந்தது. அதற்கு வெகுமதியாக அந்த இருவருக்கும் பதவி அளித்தேன். இதில் தவறு இல்லை.

மேலும் பதவி நியமனம் என்பது எனக்கு உள்ள சிறப்புரிமை. இதில் எனக்கு ஆணையிட பத்திரிகைகளுக்கு என்ன உரிமை உள்ளது என்றார் மாயாவதி.

Posted in abuse, Alagiri, Alakiri, Alliance, APJ, Archeaological Survey of India, ASI, Azagiri, Azakiri, Azhagiri, Baalu, Balu, Bribery, Bribes, Business, CBI, Coalition, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corruption, DMK, Environment, Governor, Interrogation, Investigation, Kalam, kickbacks, Law, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, nexus, Order, Party, Pollution, Power, President, support, Taj Heritage Corridor, Taj mahal, Tajmahal, TR Balu, UP, Uttar Pradesh, UttarPradesh | Leave a Comment »

Pranabh or Sushil Kumar Shinde or Karan Singh – First Among Equals?

Posted by Snapjudge மேல் மே 14, 2007

மாயாவதியின் மகத்தான வெற்றியால் குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய வியூகம் அமைக்கும் இடதுசாரிகள்: பிரணப் முகர்ஜிக்கு வாய்ப்பு கிடைக்கும்?

புதுதில்லி, மே 14: உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பெரும்பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய வியூகம் அமைக்க இடதுசாரி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது.

இந்நிலையில் எந்த ஒரு கட்சியும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் பெயரை திட்டவட்டமாக அறிவிக்க முடியாத நிலையில் உள்ளது.

இதற்கிடையே குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக தேர்தல் கமிஷன் எந்த நேரத்திலும் அறிவிக்கை வெளியிடக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

உ.பி. தேர்தல் முடிவுக்காக காத்திருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இப்போது பொது வேட்பாளரை நிறுத்த முயன்றுவருகின்றன.

இடதுசாரிகளைப் பொருத்தவரையில் இரண்டாவது முறையாக கலாமை பதவியில் நீடிக்கச் செய்வதிலும், துணைக் குடியரசுத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத்தை வேட்பாளராக நிறுத்தச் செய்வதற்கும் விருப்பமில்லை.

இந்நிலையில், அரசியலிலும் ஆட்சியிலும் நீண்டகால அனுபவம் பெற்றுள்ள வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் பரிந்துரைக்கும்பட்சத்தில், அதை ஏற்றுக்கொள்ள இடதுசாரிகளுக்கு நெருடல் எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது.

இடதுசாரிகளுடனான பேச்சின்போது மத்திய அமைச்சர்கள்

  • பிரணப் முகர்ஜி,
  • சுஷில் குமார் ஷிண்டே,
  • முன்னாள் மத்திய அமைச்சர் கரண் சிங் ஆகியோரின் பெயர்களை பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

மாயாவதி தற்போது மேல்சாதியினர் ஆதரவையும் பெறுவதில் குறியாக இருப்பதால், குடியரசுத் தலைவர் தேர்தலில் தலித் வேட்பாளரை மட்டும் தான் ஆதரிப்பார் என்று கூற முடியாது.

உ.பி. முதல்வர் மாயாவதியின் ஆதரவில்லாமல் குடியரசுத் தலைவர் தேர்தலை சுமுகமாக நடத்த முடியாது என்பதில் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது.

முக்கிய எதிர்க்கட்சியான பாஜக, கலாமை மீண்டும் வேட்பாளராக நிறுத்தலாம் என்று கடந்த ஆண்டு வெளிப்படையாக கூறி வந்தது. ஆனால் இடதுசாரிகள் எதிர்ப்பு காரணமாக மவுனமாக இருந்து வருகிறது.

தற்போதைய நிலையில் இடதுசாரி கட்சிகள் காங்கிரஸýடன் பேரம் செய்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி வேட்பாளரை ஆதரிப்பது எனவும், பதிலுக்கு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜிக்கு ஆதரவைப் பெறுவது எனவும் இடதுசாரிகள் திட்டமிடக்கூடும்.

—————————————————————————————————–

குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளர் யார்?

நீரஜா சௌத்ரி

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கை வெளியிட ஒரு மாதத்துக்கும் குறைவான அவகாசமே இருக்கும் இந்த நிலையில்கூட, அந்தப் பதவியை அலங்கரிக்கப் போகிறவர் யார் என்பதைத் தேர்வு செய்ய முடியாத அரசியல் குழப்ப நிலைமை காணப்படுவது நமது துரதிருஷ்டம்தான்!

“”கூட்டணி அரசுகள்தான் இனி” என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டதால், நமது அரசியல் முறைமையிலேயே ஒரு நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுவிட்டது. எந்த முக்கிய முடிவென்றாலும் அதை முதலில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் ஏற்க முதல் கட்டத்திலும், எதிர்க்கட்சிக் கூட்டணி ஆதரிப்பதற்கு அடுத்த கட்டத்திலும் காய்களை நகர்த்த வேண்டியிருக்கிறது.

முன்பெல்லாம், குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணி -அப்பதவி முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவும், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணி -6 மாதங்களுக்கு முன்னதாகவும் தொடங்கிவிடும் என்று அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர்.

1987 ஜூலையில் குடியரசுத் தலைவரான ஆர்.வெங்கட்ராமனுக்கு அவர்தான் அடுத்து அந்தப் பதவிக்கான வேட்பாளர் என்பதை 1986 அக்டோபர் 4-ம் தேதியே தெரிவித்துவிட்டார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. பிரதமர் முதலில் எதிர்க்கட்சியினரையும் பிறகு தன் கட்சியினரையும் ஆலோசனை கலந்துவிட்டு கட்சியின் ஆட்சிமன்றக் குழுவில் தெரிவித்து ஒப்புதல் வாங்கியது அந்தக் காலம்.

ஆந்திர முதலமைச்சராகப் பதவி வகித்தபோது தன்னுடைய அரசைக் கலைத்தவர்தான் சங்கர் தயாள் சர்மா என்ற வருத்தம் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்கு இருந்தபோதிலும், குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் அவர்தான் என்பதை குடியரசு துணைத் தலைவர் பதவி வகித்த சர்மாவிடம் முன்கூட்டியே தெரிவித்தார் நரசிம்ம ராவ்.

கே.ஆர். நாராயணன்தான் குடியரசு துணைத் தலைவராகப் போகிறார் என்பதும் அவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்தான், “”பதவி கிடைக்கட்டும் அதுவரை எதுவும் நிச்சயம் இல்லை” என்று உள்ளூர அவநம்பிக்கையுடன் இருந்தார்; அதற்குக் காரணமும் உண்டு. 1991-ல் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு கே.ஆர். நாராயணனைத்தான் நரசிம்ம ராவ் தேர்வு செய்திருந்தார். ஆனால் கே. கருணாகரன் அதை விடாப்பிடியாக தடுத்து நிறுத்தினார். கருணாகரன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த சமயம் பார்த்து, குடியரசு துணைத் தலைவராக கே.ஆர். நாராயணனைத் தேர்வு செய்துவிட்டார் நரசிம்ம ராவ்.

அப்போதெல்லாம் ஒரு கட்சி ஆட்சிதான் நடந்தது; தனது அரசியல் உதவியாளர்கள் தயாரித்த 4 அல்லது 5 பேர் கொண்ட பட்டியலிலிருந்து ஒருவரை குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்வது பிரதமருக்கு எளிதாக இருந்தது. இப்போது அப்படி செய்ய முடியாதே?

இப்போதைய கூட்டணி அரசில் பிரதமரால் மட்டும் எதையும் தீர்மானிக்க முடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிகூட தீர்மானிக்கும் நிலையில் இல்லை. இந்தக் கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்; அடுத்து மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவையும் பெற வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தேர்வு செய்யும் வேட்பாளரை ஆதரிக்கும் மன நிலையிலேயே மாயாவதி இருக்கிறார் என்பது நிம்மதி தரும் விஷயமாகும்.

குடியரசுத் தலைவர் பதவிக்கு பைரோன் சிங் ஷெகாவத் போட்டியிட்டால், தங்களுடைய கூட்டணியில் இருப்பவர்கள்கூட அணி மாறி வாக்களித்துவிடுவார்களே என்ற கவலை காங்கிரஸ் தலைவர்களுக்கு இருக்கிறது. அவர் எல்லா கட்சியினராலும் விரும்பப்படுகிறவர் என்பது மட்டும் காரணம் அல்ல, அவர் நிறுத்தப்பட்டால் எல்லா கட்சிகளிலும் உள்ள தாக்குர்கள் அவருக்கே வாக்களித்துவிடுவார்கள்.

இதனால்தான்

  • அர்ஜுன் சிங்,
  • பிரணாப் முகர்ஜி,
  • சுசீல்குமார் ஷிண்டே,
  • நாராயண் தத் திவாரி,
  • சிவராஜ் பாட்டீல் என்று பல பேர்கள் அடிபடுகின்றன. இதில் இடம்பெறாத யாராவதுகூட கடைசி நேரத்தில் வேட்பாளராகிவிடலாம் என்றும் பேசப்படுகிறது.

ஷெகாவத்தைச் சமாளிக்கும் அளவுக்கு அரசியல் செல்வாக்கு படைத்தவர் பிரணாப் முகர்ஜி. ஆனால் அவர் குடியரசுத் தலைவர் ஆன பிறகு ஆளும் கூட்டணித்தலைமை விரும்புகிறபடிதான் எப்போதும் நடப்பார் என்று சொல்ல முடியாது. அதுமட்டும் இல்லாமல் ஆளும் கூட்டணியில் 40-க்கும் மேற்பட்ட அமைச்சரவைக் குழுக்களில் இடம் பெறும் அளவுக்கு அவர் முக்கியமான நிர்வாகி. அவருடைய அனுபவமும் வழிகாட்டலும் ஆளும் கூட்டணிக்குத் தொடர்ந்து தேவைப்படுகிறது.

ஷிண்டேவையோ சிவராஜ் பாட்டீலையோ நிறுத்த சோனியா காந்திக்கு விருப்பம் அதிகம். ஆனால் இவ்விருவருக்கும் மாற்றுக் கட்சிகள், அணிகளிலிருந்து வாக்குகள் கிடைப்பது அரிது.

தலித்துகளின் தேசியத் தலைவராக உருவாகிவரும் மாயாவதி, இன்னொரு தலித்தை (ஷிண்டே) தேசத்தலைமைப் பதவியில் அமர்த்துவதை எப்படி வரவேற்பார் என்ற சந்தேகம் இருந்தது. அவரோ காங்கிரஸ் தேர்வு செய்கிறவருக்கு என் ஆதரவு உண்டு என்று குறிப்பால் உணர்த்திவிட்டார். எனது கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களை ஆலோசனை கலந்துவிட்டு முடிவைத் தெரிவிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் யாரை ஆதரிப்பார்கள் என்பது அடுத்து முக்கியமானது. எனவேதான் தயாநிதி மாறனுக்குப் பிறகு மத்திய அமைச்சரவையில் திமுக விரும்பிய மாற்றங்களை உடனுக்குடன் செய்து தந்தனர் சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும்.

கட்சிகளுக்குள் உள்ள போட்டிகள், கூட்டணிக்குள் காணப்படும் இழு-பறிகள், இருவேறு கூட்டணிகளின் பலம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றுவிட்டதால் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் உள்பட எந்த முக்கிய முடிவையும் எடுப்பது எளிதாக இல்லை. எனவே இந்த முயற்சிகளை வெகு சீக்கிரமாகவே தொடங்கிவிட வேண்டும். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி சமீபத்திய அனுபவத்திலிருந்துகூட பாடம் கற்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது!

தமிழில்: சாரி.

Posted in BJP, BSP, Byron Singh Shekawat, Chatterjee, Communist, Congress, CPI, CPI(M), Dalit, Elections, Kalam, Karan, Karan Singh, KR Naraian, KR Narayan, Marxist, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, Naraiyan, Narasimha Rao, Narasimma Rao, Narasmha Rao, Narayan, NDA, Polls, Pranab, Pranab Mukarjee, Pranab Mukerjee, Pranab Mukerji, Pranab Mukharjee, Pranab Mukherjee, Pranabh, President, PV Narasmha Rao, PVNR, Rajasthan, Rao, Sarma, SD Sharma, Shankar Dayal Sharma, Sharma, Shekavat, Shekavath, Shekawat, Shekawath, Shinde, Somnath, Somnath Chatterjee, SP, Speaker, Sushil, Sushilkumar, Sushilkumar Shinde, Thakur, UP, UPA, vice-president, VP | 1 Comment »

Mayawati takes Uttar Pradesh – Biosketch

Posted by Snapjudge மேல் மே 11, 2007

உ.பி.யில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி: பள்ளி ஆசிரியையாக பணி புரிந்தவர்

லக்னெü, மே 12: இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி (51).

இவர் பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி) நிறுவிய கான்சி ராமின் நிழலில் வளர்ந்தவர். அவரிடம் இருந்து அரசியல் பாடம் கற்றவர். எதிரிகளின் கூட்டணியை தனி ஆளாக நின்று சமாளித்தவர்.

உ.பி. சட்டப் பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பிராமண வகுப்பைச் சேர்ந்த 94 பேருக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு தந்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தனிப்பெரும்பான்மையுடன் அவர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.

முந்தைய மூன்று முறையும் கூட்டணி ஆட்சியை நடத்திய மாயாவதி, தற்போது அசுர பலம் பெற்று கூட்டணி தயவு தேவை இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார்.

தில்லியில் தபால்-தந்தி துறை ஊழியரின் மகளாக பிறந்த மாயாவதி, உ.பி.யின் முதல்வராக 1995-ல் அரியணை ஏறினார். அப்போது அவரால் 4 மாதமே பதவியில் நீடிக்க முடிந்தது. சமாஜவாதி கட்சியின் முலாயம் சிங்குடனான கூட்டணி திடுமென முடிந்ததே அதற்கு காரணம்.

பின்னர் இரண்டாவது முறையாக 1997-ல் முதல்வரானார். இம்முறை 6 மாதங்களுக்குத் தாக்குப்பிடித்தார். அப்போது பாஜகவுடன் “விரும்பத்தகாத’ ஒப்பந்த அடிப்படையில் ஆட்சி பொறுப்பேற்றார். ஒப்பந்தம் முறிவுக்கு வந்ததால் மாநிலத்தில் அரசியல் குழப்பமே மிஞ்சியது.

ஊழல் வழக்கில் சிக்கியதால் ராஜிநாமா

மூன்றாவது முறையாக 2002-ல் முதல்வரானார். பாஜகவின் ஆதரவுடன் 18 மாதங்கள் ஆட்சி செய்தார். இருப்பினும் தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கில் சிக்கி உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானதை அடுத்து 2003-ல் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் மாயாவதிக்கு ஏற்பட்டது.

மாயாவதிக்கு 6 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர். பள்ளி பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு சிறு வயது முதலே இருந்தது.

தில்லியில் 1977 முதல் 1984வரை பல்வேறு அரசு பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். அப்போதே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஊழியர் கூட்டமைப்பின் செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.

1984 முதல் தீவிர அரசியல்

1984-ம் ஆண்டு தனது ஆசிரியைப் பணியை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினார். கான்சி ராம் தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, 1984 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு நடைபெற்ற 2 இடைத் தேர்தல்களிலும் தோற்றார்.

இருப்பினும் மனம் தளராமல் 1988-ல் மூன்றாவது முறையாக பிஜ்னூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவைக்குள் நுழைந்தார். 1994-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காக உரக்க குரல் கொடுத்தார்.

கல்லூரி நாள்களில் மேல்சாதி மாணவர்கள் அவரை ஏளனமாக நடத்தியதாக கூறப்படுகிறது. இதனாலேயே அவருக்கு தாழ்த்தப்பட்டவர்கள், பலவீனப் பிரிவினருக்காக போராட வேண்டும் என்ற வேகம் பிறந்ததாம். தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த மாயாவதி, சட்டப்படிப்பையும், பின்னர் மீரட் பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பையும் முடித்தார்.
———————————————————————-
வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் – ஊழல், குற்றம், அச்சம் அடியோடு ஒழிக்கப்படும்: மாயாவதி

லக்னெü, மே 12: உத்தரப் பிரதேசத்தில் ஊழல், கிரிமினல்கள் அடியோடு ஒழிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள மாயாவதி, லக்னெüவில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

மக்கள் அச்சமின்றி வாழவும், ஊழல், குற்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்காத வகையில் புதிய அரசு ஆட்சி புரியம். அதேசமயம் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் முன்னுரிமைத் தரப்படும். இத்தேர்தலில் உயர்சாதியினரும், முஸ்லிம்களும் பகுஜன் சமாஜுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இம்முறை முஸ்லிம்கள் அதிக அளவில் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் பகுஜன் சமாஜுக்கு வாக்களித்துள்ளனர். மாஃபியா, தீவிரவாத மற்றும் காட்டு ராஜாக்களின் ஆதிக்கம் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகவில்லை. தேர்தல் ஆணையம் சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்தியுள்ளது என்றார்.

சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை

உ.பி.யில் சமாஜவாதி ஆட்சியில் இருந்தபோது நடந்த அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று மாயாவதி தெரிவித்தார்.

இது அரசியல் ஆக்கப்படமாட்டாது; எதிரிகள் மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையும் அல்ல. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையே நாங்கள் நிறைவேற்ற உள்ளோம். வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஆசாம் கான், தனது அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் அழித்துவிட்டதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார். முலாயம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, “ஏற்கெனவே அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இறந்தபோனவரை மீண்டும் கொல்லமுடியாது. மக்கள் அவருக்கு தண்டனை வழங்கிவிட்டனர்’ என்றார்.
———————————————————————————-

உத்தரப் பிரதேச முதல்வரானார் மாயாவதி: 50 உறுப்பினர்களுடன் அமைச்சரவை பதவிஏற்பு

லக்னௌ, மே 14: உத்தரப் பிரதேச முதல்வராக மாயாவதி (51) பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருடன் 50 உறுப்பினர்கள் கொண்ட மிகப் பெரிய அமைச்சரவையும் பதவி ஏற்றது.

உ.பி. முதல்வராக நான்காவது முறையாக பதவி ஏற்றுள்ள மாயாவதி, இம்மாநிலத்தின் 40-வது முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழா, ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. மாயாவதி உள்பட அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஆளுநர் டி.வி. ராஜேஸ்வர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், மாநில காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட அக் கட்சித் தலைவர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பதவி ஏற்பு முடிந்ததும் மாயாவதி தனது பெற்றோரை ஆளுநருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு பிராமணர்களின் ஆதரவைப் பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்த அக் கட்சியின் பொதுச் செயலர் சதீஷ் சந்திர மிஸ்ர மட்டும் பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது மேடையில் மாயாவதியுடன் அமர்ந்திருந்தார்.

பகுஜன் சமாஜ் தேசிய செயலர் சித்திக், மாநிலத் தலைவர் லால்ஜி வர்மா, மூத்த தலைவர்கள் சுவாமி பிரசாத் மெüர்யா, முன்னாள் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது.

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலம் பெற்று, 14 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி கட்சிகளின் தயவை நாடாத தனி ஒரு கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளார் மாயாவதி.

தேர்தலில் மேல்சாதியினருக்கும் வாய்ப்பளித்து வெற்றிக்கொடி நாட்டிய மாயாவதி, அமைச்சரவையில் மேல்சாதியினர் பலருக்கும் இடம் அளித்துள்ளார்.

7 பிராமணர்கள், 6 தாக்கூர்கள், 5 முஸ்லிம்கள், யாதவ குலத்தைச் சேர்ந்த இருவருக்கும் அமைச்சரவையில் இடமளித்துள்ளார்.

50 பேர் கொண்ட மிகப்பெரிய அமைச்சரவையில் 19 பேர் கேபினட் அந்தஸ்துடையவர்கள்; 21 இணை அமைச்சர்களுக்கு தனிப்பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது; 9 பேர் இணை அமைச்சர்கள்.

மாநிலத்தின் 40-வது முதல்வர்

1993-ல் உ.பி. முதல்வராக மாயாவதி பொறுப்பேற்ற போது இந்தியாவின் முதல் தலித் முதல்வர் என்ற சிறப்பைப் பெற்றார். நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் முதல்வர் பதவி ஏற்கும் 40-வது முதல்வர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.

என்.டி. திவாரிக்கு இணையாக..

உ.பி.யில் காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரி 4 முறை முதல்வர் பதவியை வகித்துள்ளார். அவருக்கு இணையாக மாயாவதியும் 4-வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மாயாவதி, இன்னும் 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகவோ மேல்சபை உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, பகுஜன் சமாஜ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக சனிக்கிழமை ஒருமனதாக மாயாவதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து அவரை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்.

403 உறுப்பினர்களைக் கொண்ட உ.பி. சட்டப்பேரவையில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 206 இடங்கள் கிடைத்துள்ளன.

———————————————————————————————————

ஆட்டம் போட்டவர்கள் கொட்டம் அடங்கியது

லக்னோ:உ.பி.,யில் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்ட அதிகாரிகளின் கொட்டம் அடக்கப்பட்டது.

முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பந்தாடினார் மாயாவதி. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள உயர் வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

உ.பி., முதல்வராக நேற்று பதவியேற்ற உடன் மாயாவதி, நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  • உ.பி., சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முலாயம் சிங் தலைமையிலான அரசு எடுத்த நிர்வாக முடிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
  • இதில், ஜாகர் பல்கலைக் கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து அளித்தது,
  • அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்ய உத்தரவு பிறப்பித்தது,
  • ஷாபி கிராமத்துக்கு (முலாயமின் சொந்த கிராமம்) ரூ.10 கோடி ஒதுக்கியது ஆகிய நிர்வாக முடிவுகள் உட்பட பல முடிவுகள் ரத்து செய்யப்படும்.
  • மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கும். கிரிமினல்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகிறது.
  • முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட துப்பாக்கி லைசென்சுகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்படுகிறது.

எனது அரசு, அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கவில்லை. மாநிலத்தின் நலனே அனைத்திலும் முதன்மையானது.

  • சமாஜ்வாடி பொதுச்செயலர் அமர் சிங் தலைமையிலான உ.பி., மேம்பாட்டு கவுன்சில் கலைக்கப்படுகிறது.
  • அம்பேத்கர் பூங்காவை முறையாக பராமரிக்காத இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.
  • உயர் வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.

இவ்வாறு முதல்வர் மாயாவதி கூறினார்.உ.பி., மேம்பாட்டு கவுன்சில் மூலம் தான் நடிகர் அமிதாப் பச்சன், மாநிலத்தின் விளம்பர மாடலாக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும், பல கலாசார நிகழ்ச்சிகள் பல கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்டிருந்தன. தற்போது, இதற்கு மூடு விழா காணப்பட்டுள்ளது.

இந்த கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து அமர் சிங் நேற்று முன்தினமே ராஜினாமா செய்து விட்டார். பதவியேற்ற முதல் நாளே பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றி முதல்வர் மாயாவதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முலாயம் சிங்கின் நண்பரும், தொழிலதிபருமான அனில் அம்பானியின் தாத்ரி மின் திட்டம் தொடருவது குறித்து முதல்வர் மாயாவதி எதிர்ப்பாக எதுவும் கூறவில்லை. “இப்போது தான் பதவியேற்றுள்ளேன். இது குறித்து பதிலளிக்க இப்போது முடியாது’ என்று கூறி விட்டார்.

அதுபோல, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். “இப்போது தான் முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளேன். இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முடிவு எடுக்கப்பட்ட பின், உங்களிடம்(நிருபர்கள்) கண்டிப்பாக கூறுவேன்’ என்று மாயாவதி தெரிவித்து விட்டார்.

நிருபர்களுக்கு பேட்டி அளித்து முடித்த உடன், உ.பி.,யில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் பி.பி.எஸ்., அதிகாரிகளை அதிரடியாக இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்டவர் கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தரப் பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தவிர கேபினட் செயலர் என்ற புதிய பதவியையும் மாயாவதி உருவாக்கியுள்ளார்.

எம்.எல்.ஏ., தாராளம்:

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ., சுபாஷ் பாண்டே. இவர், தனது எம்.எல்.ஏ., பதவிக்கான சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தையும் பதவிக்காலம் முடியும் வரை புற்றுநோய் மற்றும் பிற கொடிய நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக அளிக்க முன்வந்துள்ளார். “தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று கடவுளிடம் உறுதி கூறியிருந்தேன். அதன்படி இப்போது அறிவிப்பு செய்துள்ளேன்’ என்று சுபாஷ் பாண்டே கூறினார்.
————————————————————————————————–

மாயாவதிக்கு சாதனை, காங்கிரஸýக்கு சோதனை

நீரஜா செüத்ரி:

தமிழில்- ஜி.கணபதி

மாயாவதி பிறரது ஆதரவு இன்றித் தனித்து நின்றே வெற்றி பெற்றுள்ளார். இது இந்தியா முழுவதும் உள்ள தலித்துகளை உற்சாகமூட்டித் தட்டி எழுப்பப் போகிறது.

சமூகத்தில் நசுக்கப்பட்ட தலித் இனத்தைச் சேர்ந்த மாயாவதி, இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைக் கட்டி ஆளப்போகிறார்.

இது அரசியல் அம்சங்களையும் சமூக உறவையும் மாற்றப் போகிறது. மாயாவதிக்குக் கிடைத்த வெற்றி இந்திய அரசியல் இனி என்ன வடிவத்தை எடுக்கும் என்பதை நிர்ணயிக்கக் கூடியது.

தலித்துகள், பிராமணர்களை உள்ளடக்கி மாயாவதி அமைத்த வெற்றிக் கூட்டணியில் முஸ்லிம்களும் மிகவும் பிற்பட்ட வகுப்பினரும் இணைந்தனர். இத்தகைய கூட்டணி புதிது அல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் இருந்துள்ளது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக நிருபர்களிடம் பேசும்போது, தனக்கு உறுதுணையாக இருந்த

  • சதீஷ் சந்திர மிஸ்ர (பிராமணர்),
  • நசீமுதீன் சித்திக்கி (முஸ்லிம்),
  • பாபு சிங் குஷ்வஹா (மிகவும் பிற்பட்ட வகுப்பு) ஆகியோருக்குத் திறந்த மனதுடன் வெளிப்படையாக நன்றி தெரிவித்தன்மூலம் இது பல வண்ணக் கூட்டணி என்பதை மாயாவதியே ஒப்புக்கொண்டுள்ளார். பேட்டியின்போது அவர்களைத் தனக்குப் பக்கத்திலும் அமரச் செய்திருந்தார்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் வசம் பிராமணர்கள் ஈர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் சாதி கண்ணோட்ட அடிப்படையில் அது அமையவில்லை.

அயோத்தி இயக்கம் உச்சகட்டத்தில் இருந்தபோது தம் பக்கமாக பிராமணர்கள் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தபோதிலும் உயர்சாதி உணர்வை வெளிப்படையாகத் தட்டி எழுப்பி ஆதாயம் தேட பாஜக முயற்சி செய்யவில்லை.

ஆனால் இப்போதுதான் பிராமணர்கள் வகுப்பு அடிப்படையில் வெளிப்படையாக ஈர்க்கப்பட்டுள்ளனர். பிராமணர்கள் மாநாட்டை, மாவட்ட நிலையில் நடத்திய மாயாவதி லக்னெüவில் மாபெரும் மாநாடு ஒன்றையும் நடத்தினார்.

இப்போதைய முக்கிய கேள்வி இதுதான். பாஜகதான் பிராமணர்களின் புகலிடமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த உயர் சாதியினர், மாயாவதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனரே? இது ஏன் என்பதே.

பாஜகவை விட்டு விலகி உயர்சாதியினர் நீண்ட தொலைவு சென்று விட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இல்லையெனில் பாஜகவின் 2002 தேர்தல் வெற்றி முடிவுடன் ஒப்பிடுகையில் தற்போதைக்கு அதன் வெற்றிக் கணக்கு பாதியாகக் குறைந்திருக்காதே.

சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மேல்சாதியினர் விரும்பினர். மேலும் அந்தக் கட்சிக்கு மாற்றாக மாயாவதியைக் கருதினர். உயர்சாதியினரை அலறவைத்த குண்டர்கள் ராஜ்ஜியம், பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளை நன்கு புரிந்துவைத்திருந்தார் மாயாவதி.

ஆரம்பம் முதலே முலாயம், அமர்சிங் ஆகியோரைக் கடுமையாகச் சாடி வந்தார் மாயாவதி. ஆனால், பாஜகவோ சமாஜவாதி மீது மெத்தனம் காட்டியது. இதை பாஜக தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

2003-ல் முலாயம்சிங் தலைமையில் ஆட்சி அமைய உதவியது, பகுஜன் சமாஜ கட்சி இரண்டாக உடைந்தபோது அதை அப்போதைய சட்டப்பேரவைத் தலைவரான கேசரிநாத் திரிபாதி (பாஜக) அங்கீகரித்தது ஆகியவை உயர்சாதியினர் மத்தியில் சந்தேகம் எழ வைத்தது. உள்ளுக்குள் சமாஜவாதி கட்சியுடன் பாஜக ரகசிய உறவை வைத்துக்கொண்டதோ என்ற கண்ணோட்டம் ஏற்படச் செய்தது. தாங்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் பலவீனப்படுத்தப்படுவதாகவும் அநீதி இழைக்கப்படுவதாகவும் பிராமணர்கள் வேதனைப்பட ஆரம்பித்தனர்.

தலித்துகள், ஜாட் வகுப்பினர், யாதவர், குர்மிஸ் ஆகிய எல்லா வகுப்பினருக்குமே அரசியல் புகலிடம் உள்ளது. சமாஜவாதியின் அமர்சிங், வெளிப்படையாகவே, தாக்குர் வகுப்பினர் நலனுக்காகப் பாடுபட்டார். ஆனால் பிராமணர்கள் பற்றி யாரும் வாய் திறந்ததில்லை. அதைத் தமக்கு ஆதரவாகப் பயன்படுத்திய மாயாவதி “சர்வஜன சமாஜ்’ பற்றிப் பேச ஆரம்பித்தார்.

இந்நிலையில், பிராமணர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தலைவராக சதீஷ் சந்திர மிஸ்ர உயர்ந்தார்.

வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் சிறந்த பிராமணத் தலைவராகக் கருதப்பட்ட வாஜபேயியையும் மிஞ்சினார் மிஸ்ர.

மாயாவதியுடனான அவரது நெருக்கம், செல்வாக்கு ஆகியவற்றால் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது மாநிலத்தை ஆட்சி செய்ய வழி கிடைத்துள்ளது என்ற எண்ணம் பிராமணர்கள் மத்தியில் ஏற்பட்டது.

தாக்குர் இனத்தைச் சார்ந்த ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கும் பாஜகவைவிட விரும்பப்பட்டவரானார் மாயாவதி. லோத் இனத்தைச் சேர்ந்த கல்யாண் சிங்கை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது பாஜக.

2007 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு சாதி அடிப்படையில் அரசியல் சமூகம் மண்டல் மயமாகி உள்ளதை முழுமையாகப் பிரதிபலிக்கிறது. பிராமணர்களும் வைசியர்களும் சிறந்த வியூகத்துடன் வாக்களித்துள்ளனர்.

சில வழியில் வகுப்புவாத கண்ணோட்டத்துக்கு சாதி நோக்கம் வலிமை சேர்த்துள்ளது என்று கூறலாம். முஸ்லிம் விரோத பிரசார சி.டி. அல்லது அப்சல் குரு விவகாரம் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கலக்கி ஆதாயம் பெற முயன்றது பாஜக. ஆனால் பலன் இல்லை. என்றாலும் ஹிந்து மத உணர்வைத் தூண்டுவதன் மூலம் பலன் கிடைக்காது என்ற முடிவுக்கு வருவது சரியானதல்ல.

இந்த ஆண்டு பிற்பகுதி வாக்கில் குஜராத்தில் நடக்கவுள்ள தேர்தலில் இது தெரிந்துவிடும்.

மாயாவதியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது மக்கள் நாடித்துடிப்பை அறிந்து சமூக சக்திகளை ஒன்றிணைத்து அவர் வகுத்த கூட்டணி.

வெற்றி பெற்றாக வேண்டும் என்ற மனோதிடமும் அவரிடம் ஓங்கிக் காணப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்பே பிரசாரத்தைத் தொடக்கிய அவர் நன்கு திட்டமிட்டு தொகுதி, தொகுதியாகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

இத்தகைய நடவடிக்கைகளில் பாஜகவும் காங்கிரஸýம் தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்புதான் இறங்கின. மேலும் வேட்பாளர்கள் தேர்வைப் பிறரைவிட முன்கூட்டியே முடித்துவிட்டார் மாயாவதி.

பாரம்பரியமாகத் தமக்கு ஆதரவு தந்து வந்தவர்களின் மன கண்ணோட்டம் பற்றித் தப்புக்கணக்கு போட்டது பாஜக. தனக்கு ஆதரவாக ஹிந்துக்களை அணி திரள வைக்கவும் அது தவறிவிட்டது. கணிசமான முஸ்லிம்கள் முலாயம் நோக்கி அலறி அடித்து ஓடும் வகையிலும் செயல்பட்டது. இவை, முலாயமின் வேகமான வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த உதவியுள்ளன.

மாயாவதி பெற்றுள்ள வெற்றி இதர மாநிலங்களில் குறிப்பாக, 2008ல் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களில் தீவிர தொடர்விளைவை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது.

தில்லியில் பகுஜன் சமாஜ கட்சி வேர் விட்டுள்ளது. அங்கு அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதன் செயல்பாடு சிறப்பாக அமைந்ததே காங்கிரஸ் தோல்வியடைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஜூலையில் நடக்கவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வேட்பாளரை மாயாவதி ஆதரவுடன் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. என்றாலும் மாயாவதியின் வளர்ச்சி நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸýக்கு தொல்லை தரக்கூடியதுதான்.

———————————————————————————————-

.மாயாவதி வெற்றியின் பின்னணியில் மூன்று முகங்கள்!

உ.பி., சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பெற்ற பிரமாண்டமான வெற்றிக்கு மூன்று பேர் முக்கிய தளபதிகளாகச் இருந்துள்ளனர். இவர்களின் உதவியுடன் பிராமணர்கள், வைசியர்கள் செயல்பட்டதால் கருத்துக் கணிப்புகளை முறியடித்து மாயாவதி வெற்றியை அள்ளிக் குவித்து விட்டார்.

எஸ்.சி.மிஸ்ரா: உ.பி.,யில் சீனியர் வக்கீலாக இருப்பவர் எஸ்.சி.மிஸ்ரா. பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு அரசியல் அனுபவம் சிறிதும் கிடையாது. முன்பு 1976ல் எச்.என்.பகுகுணாவிடம் தேர்தல் மேலாளராக சிறிது காலம் பணியாற்றியுள்ளார். உ.பியில் பகுகுணா செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் தலைவர். பின் நீண்ட இடைவெளக்குப் பின் 2004ல் மாயாவதி முதல்வர் பதவியை துறந்த போது, அவரது கட்சியுடன் தன்னை இணைத்து கொண்டார் மிஸ்ரா.

இது குறித்து மிஸ்ராவிடம் கேட்ட போது “தாஜ்மகால் வழக்கில் மாயாவதியை பா.ஜ., மிரட்ட தொடங்கியது. ஆனால், அதற்கு மாயாவதி அடிபணியவில்லை. அவரது போராட்ட குணம் எனக்கு பிடித்து விட்டது. எனவே தீவிர அரசியலில் இறங்கிவிட்டேன்’ என்றார்.

இந்த தேர்தலில் பிராமணர்களின் ஓட்டுகளை கட்சிக்கு பெற்று தரும் பணி மிஸ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான களப்பணியை 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேரணி ஒன்றை நடத்தி மிஸ்ரா முதலில் துவக்கினார். “பா.ஜ., “கமண்டல’த்தை விட்டு விட்டு “மண்டல்’ பிரச்னையை கையில் எடுத்து விட்டது. எனவே மாற்று கட்சியை பிராமணர்கள் தேட தொடங்கினர். அவர்களின் எண்ணத்தை நான் பூர்த்தி செய்தேன்’ என்று மிஸ்ரா இப்போது கூறுகிறார்.

அந்த ஆண்டில் மட்டும் பிராமணர்கள் பங்கேற்ற 21 பேரணிகளை நடத்தினார். இது தவிர ஒவ்வொரு தொகுதியிலும், பிராமணர்கள் மற்றும் ஆதிதிராவிட மக்கள் அடங்கிய கமிட்டியையும் உருவாக்கினார். அவரது செயல்பாட்டை அப்போது பலரும் கிண்டல் அடித்தனர். ஆனால், இறுதியில் மிஸ்ரா வெற்றி பெற்று காட்டி விட்டார். இதற்கு பரிசாக மிஸ்ராவை அட்வகேட் ஜெனரலாக, மாயாவதி நியமிக்க உள்ளார்.

“பிராமணரான என்னை இப்பதவிக்கு தேர்ந்தெடுத்தது ஏன்?’ என்று மிஸ்ராவே வினோதமாகக் கேட்கிறார். அதற்கு மாயாவதி பதிலாக “நான் ஜாதியை பார்த்து பதவியை தருவதில்லை. தகுதியை பார்த்து தான் தருகிறேன்’ என்று கூறி விட்டார்.

நசீம்முதீன் சித்திக்: மாயாவதியின் தீவிர விசுவாசி நசீம்முதீன் சித்திக். அரசியல் உலகை தவிர வெளியுலக தொடர்பே இவருக்கு இல்லை. பத்திரிகையாளர்களை பார்த்தால் ஓடி விடுவார். ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்.இந்த தகுதிகளின் காரணமாகவே மாயாவதியின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்குகிறார். சித்திக்.

“பேகன்ஜி'(மாயாவதி) சொல்வதை மட்டுமே செய்வார். மாயாவதி 1980ம் ஆண்டுகளில் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு அறிமுகமானவர் சித்திக். மாயாவதியை பாதுகாக்கும் பொறுப்பு அப்போது அவருக்கு வழங்கப்பட்டது. அது முதல் மாயாவதியின் நிழல் போலவே இருந்து வருகிறார்.

இந்த தேர்தலில் முஸ்லிம்களை கட்சிக்கு பெற்று தரும் பொறுப்பு சித்திக்கிடம் வழங்கப்பட்டது. இதற்காக கட்சியின் முஸ்லிம் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். முஸ்லிம் உலாமாக்களை சந்தித்து பேசி, அவர்களின் ஆதரவை பெறும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது போன்ற பெரிய பணியை சித்திக் ஏற்பது இதுவே முதல் முறை. இருப்பினும், அதை சிறப்பாகவே செய்தார். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சிறு சிறு கூட்டங்கள் நடத்தி ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக செயல்பட்டார். இந்த முயற்சி இறுதியில் அவருக்கு மட்டும் அல்ல, மாயாவதிக்கு வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது.

சுதீர் கோயல்: உ.பி.,யில் உயர் ஜாதி வகுப்பை சேர்ந்த தலைவர் சுதீர் கோயல். ஜெய்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் முதலில் தொடர்பு கொண்டவர் . பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த, முதல் உயர் ஜாதி வகுப்பு தலைவர் என்ற பெருமைக்கு உரியவர். கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மற்றும் தலைவர் மாயாவதிக்கு மிகவும் நெருக்கமானவர்.

டில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தேர்தலில் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுதீர் கோயல் பணியாற்றினார். பத்திரிகையாளர்களுடன் நெருங்கிப் பழகி, பிற கட்சிகளின் தகவல்களை அறிவது இவரது பணி. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியின் தகவல்களை சிறிது கூட கசிய மாட்டார். அந்த அளவுக்கு உஷார் பேர்வழி சுதீர் கோயல். இது தவிர உ.பி.,யில் ஓரளவுக்கு பெரும்பான்மையாக உள்ள வைஸ்ய சமுதாயத்தினருடன் நெருங்கி பழகும் படி சுதீர் கோயல் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

இந்த சமுதாயத்தினரில் ஒரு பகுதியினர் சமாஜ்வாடி கட்சிக்கும், மற்றொரு பகுதியினர் பாரதிய ஜனதாவுக்கும் ஆதரவு அளித்து வந்தனர். மாநிலம் முழுவதும் இதே நிலை தான் காணப்பட்டது. மாநிலம் முழுவதும் சுதீர் கோயல் பயணம் செய்து வைஸ்ய சமுதாயத்தினரின் ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சியின் பக்கம் திருப்பினார்.

குறிப்பாக அலகாபாத் மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பெற்ற வெற்றிக்கு வைஸ்ய சமுதாயத்தினர் அளித்த ஆதரவே காரணம் . “மாயாவதி மட்டுமே தங்களை பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் வைஸ்ய சமுதாயத்தினரிடம் ஏற்பட்டு விட்டது’ என்று இதற்கு சுதீர் கோயல் விளக்கம் அளித்துள்ளார். இதற்காக கோயலை கேபினட் அமைச்சராக்கியுள்ளார் மாயாவதி.

———————————————————————————————–

“மனுவாதி-மாயாவாதி’ உடன்பாடு!

எஸ். குருமூர்த்தி

“”பத்திரிகைகளை அந்த அம்மா மதிப்பதே இல்லை” என்று நிருபர்கள் புலம்புகின்றனர். உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனியொரு கட்சியாகவே பெரும்பான்மையைப் பெற்றுவிட்ட பிறகும் அதே நிலைதான்!

பேட்டி தருமாறு கோரி பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் விடுத்த அழைப்புகளை ஏற்று பதில்கூட தரவில்லை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. அந்த நிறுவனங்கள் தன்னைப் பேட்டி காண அழைப்பு விடுக்காதா என்று ஏங்கும் அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர்; ஆனால், மாயாவதி அப்படியல்ல.

“”தேர்தல் அறிக்கை என்று எதையுமே அந்த அம்மா வெளியிடவில்லையே” என்பது சிலரின் அங்கலாய்ப்பு! தேர்தல் களத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், வாக்காளர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏதாவதொரு வாக்குறுதியை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தன. ஆனால் தன்னைத் தலைவியாக ஏற்றுக்கொண்ட ஏழை மக்களுக்கு, 2 வேளை சாப்பாடு, வறுமைக் கோட்டிலிருந்து விடுபட உற்ற வழி என்ற குறைந்தபட்ச அத்தியாவசியத் தேவைகள் இருந்தபோதிலும் மாயாவதி எந்தவித இலவச அறிவிப்பையும் வெளியிடவில்லை.

“”ஆட்சிக்கு வந்தால், இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, புடவை, வேஷ்டி, இலவச கேஸ் ஸ்டவ், கடன் தள்ளுபடி” என்று எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இந்த எல்லாச் சலுகைகளும் தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள்தான் அவருடைய ஆதரவாளர்கள்.

மற்றவர்கள் இலவசங்களை அறிவித்து ஆசை காட்டினாலும் அந்தப் பக்கம் போக விரும்பாத அளவுக்கு அவர்கள் ஏன் அவருக்குப் பின்னே நின்றார்கள்?

இதற்கான விடை, பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி.) வரலாற்றில் இருக்கிறது. மாயாவதியின் அரசியல் குருவான கான்ஷிராம், சமூகப் படிநிலையில் 5-வது, 6-வது இடத்தில் இருந்த சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் கொண்டு கட்சியை நிறுவினார். தங்களையும் ஏறெடுத்துப் பார்க்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஏக்கம் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. அவர்களுடைய அந்த ஏக்கமே தன்னுடைய கட்சியின் ஆன்மாவாகத் திகழ்வதை கான்ஷிராம் உறுதி செய்தார். பகுஜன் சமாஜத்தின் ஆன்மாவை இலவச டி.வி.க்கள் மூலமோ, புடவைகள் மூலமோ பிற கட்சிகளால் வாங்கிவிட முடியாது.

அது அவர்களுக்கு வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல; சமூகத்தின் படிநிலையில் முதல் 3 இடங்களில் உள்ள பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோருக்கு எதிரான வெளிப்படையான, வலிமை மிகுந்த ஆயுதமாகும். இந்த 3 சாதியினரையும் மாயாவதி வெளிப்படையாகவே “”மனுவாதிகள்” என்று சாடி வந்தார்.

“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்பதுதான் பி.எஸ்.பி.யின் போர் முழக்கமாகவே இருந்தது. சாதிய அமைப்பு முறையையே ஒழித்துக் கட்டுவேன் என்று கான்ஷிராம் சபதம் செய்தார். கடைசியில், ஒரு பிரிவு சாதிக்கு எதிராக மற்றொரு பிரிவு சாதியினரைக் கொண்டு வலுவான அரசியல் கட்சியை உருவாக்கிவிட்டார்.

சாதிகளை ஒழிக்கப் புறப்பட்ட எல்லா சீர்திருத்த இயக்கங்களுமே இப்படித்தான் கடைசியில் சாதிய அடையாளங்களுடன் முடிந்துள்ளன.

“”கீழ்ச் சாதியினர் ஒற்றுமையாகச் செயல்பட்டுத் தங்களை வலுப்படுத்திக் கொண்டு மேல்நோக்கி முன்னேறுவதற்கு சாதி என்பது ஜனநாயகத்தில் ஒரு தடையல்ல, ஒரு வாகனம்” என்று அவர் முதலில் உணர்ந்தார். ஜனநாயகம் இல்லாத சமூகங்களில்தான் சாதிய அடையாளம், முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.

இப்படித்தான் கோபத்திலும் வெறுப்பிலும் பகுஜன் சமாஜ் கட்சி பிறந்தது. அது வளர்ந்தபோது அதன் கோபமும் வளர்ந்தது. வெகுவிரைவிலேயே பகுஜன் சமாஜ் அபார வெற்றி கண்டு, அதன் ஆதரவு சக்திகளிடையே அபார செல்வாக்குப் பெற்றது. ஆனால் பெரும்பான்மை என்ற இலக்கைத் தொட அதற்கு ஒரு பாலம் தேவைப்பட்டது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற, வெளியில் யாரிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்று அது பார்த்தது.

“”லட்சியத்தை நிறைவேற்றப் பேயுடனும் கூட்டு சேர்ந்தாக வேண்டும்” என்பதுதான் ஜனநாயகத்தின் பாலபாடம். பகுஜன் சமாஜ் விஷயத்தில், இதுநாள்வரை அது பேயாகக் கருதிய, தனது எதிரியான “”மனுவாதிகளோடு” கூட்டு சேர வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டது. இது காரியசாத்தியமில்லாத விஷயமாகவே கருதப்பட்டது. ஆனால் மாயாவதி இதை வெகு எளிதாகச் செய்து முடித்துவிட்டார்.

“”மனு”வாதிகளுக்கும் “”மாயா”வாதிகளுக்கும் உள்ள பொதுவான வேராக ஹிந்து மதம் திகழ்வதை அவர் வலியுறுத்தினார். மேல்சாதியினருக்குக் கடவுளைப் பற்றிய சிந்தனை, பேச்சு எல்லாம் “”போதை தரும் விஷயம்” என்ற பலவீனத்தை அவர் புரிந்துகொண்டார்.

“”பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் வெறும் யானை அல்ல, கணேசப் பெருமான்தான்” என்று ஒரே போடாகப் போட்டார். இணைப்புக்கு ஒரு கடவுள் போதவில்லை, எனவே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் (சிவன்) என்ற மூவரையும் உடன் சேர்த்துக் கொண்டார்.

“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்று ஒரு காலத்தில் சொன்னதால் மனுவாதிகளுக்கு ஏற்பட்ட மனப்புண்ணுக்கு ஒரே ஒரு செயல்மூலம் மருந்து போட்டுவிட்டார். மனுவாதிகளுக்கும், மாயாவாதிகளுக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட கடவுளர்கள், மத்தியஸ்தர்களாக இருந்தனர்.

மாயாவதியின் இச்செயல் பிராமணர்களை முதலில் திருப்திப்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தில் 14% வாக்குவங்கியான பிராமணர்களை முதலில் வசப்படுத்தியது மாயாவதியின் மிகப் பெரிய வெற்றி.

உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் “”பிராமண மகாசபை” கூட்டங்களை நடத்தி, ஹிந்துக் கடவுளர்கள் மீது தங்களுக்கிருக்கும் மரியாதையை அவர் வெளிப்படுத்தினார். இப்படித்தான் மனுவாதி-மாயாவாதி (பிராமணர், தலித்) கூட்டணி உருவானது.

பிராமணர்களுக்கு 80 தொகுதிகளையும் பிற மேல்சாதியினருக்குக் கணிசமான தொகுதிகளையும் கூட்டணியில் ஒதுக்கியிருப்பதை ஒவ்வொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் மறக்காமல் அவர் கூறினார். இப்படியெல்லாம் கூறவோ, செயல்படவோ காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகளால் கனவிலும் முடியாது. மாயாவதியால் மட்டுமே அப்படிச் செய்யவும் முடியும், அதை பகிரங்கமாகச் சொல்லவும் முடியும்.

இப்படித்தான் பகுஜன் சமாஜின் முக்கிய எதிரிகளாகத் திகழ்ந்த மனுவாதிகள், அவர்களுடைய கூட்டாளிகளானார்கள். தீவிர எதிர்ப்பாளராக இருந்த மாயாவதியை அரவணைக்கும் தலைவராக ஜனநாயகம்தான் மாற்றியது.

உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை இது கட்சிகளின் கூட்டணி இல்லை, சாதிகளின் கூட்டணி. “”குறைந்தபட்ச பொது செயல்திட்டம்” (சி.எம்.பி.) அல்ல, கடவுளர்கள்தான் இங்கு இணைப்புப் பாலமாகச் செயல்பட்டுள்ளனர். மனுவாதிகளும் மாயாவாதிகளும் செய்துகொண்ட தொகுதி உடன்பாடு அரசியல்ரீதியாக லாபகரமான பலன்களைத் தந்தது.

நீதி: உத்தரப்பிரதேசத்தில் மனுவாதி-மாயாவாதிகள் இடையிலான கூட்டணி ஜனநாயகத்தால் உருவானது, கடவுளர்களால் இணைக்கப்பட்டது. அது கடைசியில் மகத்தான வெற்றியையும் பெற்றுவிட்டது. மனுவாதிகளைத் தீவிரமாக எதிர்த்துவந்த பகுஜன் சமாஜ், மிதவாத கட்சியாக மாறிவிட்டது; இனி அது எந்தக் காலத்திலும், பழையபடி “”அனல் கக்கும்” மனுவாதிகள் எதிர்ப்பாளராக மாறவே முடியாது.

———————————————————————————————

கங்கா தீரமும் காவிரி ஓரமும்…

செ.கு. தமிழரசன்

இந்தியாவின் ஒட்டுமொத்தப் பார்வையும் இன்று உத்தரப் பிரதேசத்தை நோக்கியே திரும்பியுள்ளது.

இழுபறி அமைச்சரவைதான் ஏற்படும், குதிரை பேரம் நடக்கும், விரைவில் மறுதேர்தலும் வரலாம் என்ற ஐயப்பாடுகளுக்கு எல்லாம் சற்றும் இடம்தராமல், கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, மக்கள் திரளின் மகத்தான ஆதரவுடன், பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் பெரும்பான்மை பலத்துடன், ஒரு கட்சி ஆட்சியை நிறுவியுள்ளார் தலித் சமூகத் தலைவி மாயாவதி. இது ஒரு பாராட்டத்தக்க செயல்பாடுதான், சந்தேகமில்லை.

இந்த அளவிற்கு அனைத்து அரசியல் சக்திகளையும், திறனிழக்கச் செய்யக் காரணம் மாயாவதி கையாண்ட தேர்தல் சாதுர்யம்தான் என்று எல்லா ஊடகங்களும் அடையாளப்படுத்துகின்றன. எனவே அவர் அப்படி என்னதான் புதிய வழிமுறையைத் தேர்தல் வியூகமாக வகுத்தார் என்று பார்த்தாக வேண்டும். ஏனெனில் இன்று மாயாவதியின் வெற்றியை மற்ற மாநிலத் தேர்தலுக்கும் முன்னுதாரணமாக்கும் போக்கு வலுக்கிறது.

பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கை வழியில், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கும் தலித் மக்களும், கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி நிற்கும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒருங்கிணைந்தால், நமது ஆட்சியை நிலைநாட்ட முடியும் என்ற கான்ஷிராமின் சித்தாந்தம், உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரையில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் அவரது “பகுஜன் சமாஜ் கட்சி’ ஒரு மாற்று அரசியல் சக்தியாகப் பரிணமித்தது.

கான்ஷிராமின் அரசியல் பார்வையின் அடிப்படையிலேயே முந்தைய தேர்தல் கூட்டணிகள் அமைந்தன. 1993 தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி கண்ட மாயாவதி 1996-ல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தார். பின்னர் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியையும் அரங்கேற்றிப் பார்த்தார்.

ஆனால் ஒவ்வொரு முறையும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் தனக்கும், கட்சிக்கும் நம்பிக்கைத் துரோகமிழைத்துவிட்டு, எதிர் அணிக்குத் தாவி தங்களது சாதிய சுயரூபத்தை வெளிப்படுத்தினார்கள். தனது முதுகில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் குத்திய வலியை அவரால் மறக்க முடியவில்லை. தலித் – பிற்பட்டோர் ஒற்றுமை என்பது, ஆட்சித்தலைமைத் தேர்வின்போது, நல்ல குதிரைபேர வியாபாரத்திற்கே வழிவகுக்கிறது என்ற அப்பட்டமான உண்மை வெட்ட வெளிச்சமாகியது.

எனவே, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு மாற்றுவழியைத் தேட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார் மாயாவதி. பார்ப்பன, க்ஷத்ரிய, பனியாக்களை செருப்பால் அடிக்க வேண்டுமென்ற அவரது முழக்கம், ஆட்சி அதிகாரப் பகிர்வின்போது, தன்னிடமே செய்முறை விளக்கப் பயிற்சி பெறுவதை உணர்ந்தார். இனி பிற்படுத்தப்பட்டவரை நம்பிப் பயனில்லை என்ற முடிவிற்கே வந்துவிட்டார்.

இதுவரை மேல்மட்ட வர்க்கத்தை மட்டந்தட்ட வேண்டிய எதிரிகளாகவே பாவித்த மாயாவதியின் போக்கில், ஒரு மாறுதல் தோன்றியது. அவர்களையும் அரவணைக்கும் எண்ணம் உதயமாயிற்று.

இதற்கேற்றபடி, பிராமணர், வைசியர், தாக்கூர் ஆகிய இந்து இனச் சமூகங்கள் பெரிதாக நம்பிக் கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சியோ, மத்தியில் வலுவிழந்து, மாநிலத்தில் மரியாதையிழந்து, அவ்வப்போது இந்துத்துவா, ராமர் கோயில் என்று ஈனஸ்வரத்தில் முனங்கிக் கொண்டிருந்தது.

காங்கிரஸ் கட்சியோ, காந்தியின் காலத்திலிருந்து தனது வாக்குவங்கியாக வைத்திருந்த இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஓட்டுகளை பெரும்பாலும் இழந்து கட்சியும் கரைந்துவிட்டிருந்தது.

ஆகவே மேல்தட்டு வர்க்கமான பிராமண, வைசிய, தாக்கூர் சாதியினர் எங்கே போவது, யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்திற்கு இயல்பாகவே வந்துவிட்டனர். இந்தச் சூழ்நிலையில் மாயாவதியின் மனமாறுதல் அவர்களை பகுஜன் சமாஜ் கட்சியை நெருங்கச் செய்தது.

மாயாவதியும் பிற்படுத்தப்பட்ட மாயையிலிருந்து விடுபட்டு முற்படுத்தப்பட்டவர்களை ஆதரிக்க முன்வந்தார்; வரவேற்று 83 பேரை வேட்பாளர்களாக்கினார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பயன்களை, யாதவ் மற்றும் குர்மி சாதியினர் மட்டுமே அனுபவிப்பதைப் பார்த்துப் பொருமும் ஏனைய பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் மாயாவதியின் பின்னால் அணிவகுக்க முற்பட்டனர்.

ஆக, பகுஜன் சமாஜ் கட்சிக்குரிய வாக்கு வங்கியான தலித் மக்கள், புதுவிருந்தாளியான மேல்தட்டு வர்க்கம், இதோடு இஸ்லாமிய சமூகம் மற்றும் யாதவ், குர்மி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகிய புதிய ஐக்கியம் தேர்தலில் பதியமிட்டது. நல்லாட்சி அமைகிறதோ இல்லையோ, ஒரு ஸ்திரமான ஆட்சி, அதாவது ஐந்தாண்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மையோடு நடைபெறும் ஆட்சி அமைய வேண்டும். அதற்கான ஒரு கட்சியைத் தேர்ந்தெடுத்தே தீர வேண்டுமென்ற உறுதியான எண்ணம் மக்களிடையே பரவிக் கிடந்தது. அதற்கு கண்முன் நிற்கும் சாட்சியாக “பகுஜன் சமாஜ் கட்சி’ காட்சியளித்தது. மக்கள் வாக்களித்தனர். மாயாவதி வெற்றி பெற்றார்.

அண்ணல் அம்பேத்கரின் பெயரை உச்சரித்தபடியே ஒரு கட்சி, தன் ஆட்சியை நிறுவியுள்ளது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் இது நிலைத்து நீடிக்குமா?

மாயாவதியின் வெற்றியைக் கண்டு மற்ற மாநிலத்திலுள்ள அம்பேத்கரிய இயக்கவாதிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுவது இயல்புதான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், உத்தரப் பிரதேசத் தேர்தல் பரிசோதனை எடுபடுமா?

இங்கு “”தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர்” ஐக்கியம் என்ற சிந்தனை உருவாக்கம் பெற்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிறது. அந்த அடிப்படையில்தான் இங்கு 40 ஆண்டுகாலமாக ஆட்சியே நடைபெறுகிறது. ஆனால் என்ன ஒரு வேறுபாடு என்றால், தாழ்த்தப்பட்டோரும் முதல்வராக வந்ததில்லை. பிற்படுத்தப்பட்டோரிலும், பெரும்பான்மைச் சமூகங்களைச் சார்ந்த எவரும் முதல்வராக வந்ததில்லை. தமிழகத்தில் பெரும்பாலான சாதிகள் (70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், முற்பட்ட மக்கள் பலம் மிகவும் குறைவு. எனவே, உ.பி. பாணியில் தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் – அந்தணர் ஐக்கியம் எந்த மாற்றத்திற்கும் வித்திட்டு விடாது. ஏமாற்றத்திற்கே இலக்காகும்.

மேலும், மாயாவதியின் “வெற்றிசூட்சுமம்’ ஏதோ அவரால் மட்டுமே கண்டுபிடித்து கையாளப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு மாயை என்பதை முதலில் புரிந்துகொண்டாக வேண்டும்.

அகில இந்திய அளவில், காந்திதான் இந்து – முஸ்லிம் – ஹரிஜன் முக்கூட்டு ஒற்றுமையை வலியுறுத்தி அதற்கான வழியமைத்தவர். இந்தத் தளத்தில்தான் காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாகத் தேர்தலைச் சந்தித்து இந்தியா முழுமையையும் தன் ஆட்சிக்குள் வைத்திருந்தது. ஆக, காந்தியின் இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஐக்கியம், தலித் தலைவியான மாயாவதியால் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

ஆனால் இதற்கு மாயாவதி கொடுத்துள்ள விலை அதிகம் என்பதைக் காலம் விரைவில் உணர்த்தும். அதற்கான அடையாளங்கள் இப்போதே தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டன.

அண்ணல் அம்பேத்கரின் கொள்கைவழியில் தோன்றியதாகத் தென்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, இன்று அதே அண்ணலின் எதிர்நிலையான இந்துத்துவாவை தூக்கிச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உருவாக்கப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி, இனி எல்லா இனமக்களுக்குமான சர்வஜன சமாஜ் கட்சியாகச் செயல்படும் என்று பொய் வேடம் புனைய வேண்டிய நிலைக்கு மாயாவதி ஆளாகியுள்ளார். முதல்வராகப் பதவியேற்றவுடன் புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத் தந்த சமூகரீதியான இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கும் இடஒதுக்கீடு என்று மாயாவதி அறிவித்ததன் மூலம், சமூகநீதியையே வஞ்சித்துவிட்டார்.

மேலும் ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் மாயாவதியின் 206 எம்.எல்.ஏக்களில் ஒரு தலித் எம்.எல்.ஏ.கூட பொதுத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதுதான் தலித் – பிராமண ஐக்கியத்தின் லட்சணம். இத்தகைய நிலையில், இங்கு தமிழ்நாட்டில் மாயாவதியின் சூத்திரத்தை அமல்படுத்த முயற்சிக்கலாமா என்று சிந்திப்பதே ஆரோக்கியமானதல்ல என்றே தோன்றுகிறது.

மாயாவதியின் வெற்றி மகத்தானதுதான். அது, உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை. அதைத் தமிழ்நாட்டிலும் பொருத்திப் பார்க்க நினைத்தால் எதையோ பார்த்து எதுவோ சூடுபோட்ட கதையும், எதையோ பார்த்து எதுவோ ஆடவந்த கதையும்தான் அரங்கேறும்.

(கட்டுரையாளர்: இந்திய குடியரசுக் கட்சியின் தேசியப் பொதுச் செயலர், அதன் தமிழ் மாநிலத் தலைவர்.)

—————————————————————————————
உ.பி. முதல்வர் மாயாவதிக்கு ரூ.52 கோடி சொத்து

லக்னெü, ஜூன் 26: உத்தரப்பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.52 கோடி என தெரியவந்துள்ளது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட மாயாவதி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவர் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.

ரூ.12.88 கோடியை பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கியல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரூ.51 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.52.27 லட்சம் ரொக்கம், ரூ.15 லட்சம் விலை மதிப்பு உள்ள ஓவியங்கள் ஆகியவை தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுதில்லியில் தனக்கு சொந்தமாக 3 வணிக வளாகங்கள், 2 வீடுகள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.37.82 கோடி என்றும் தனக்கு சொந்தமாக விவசாய நிலங்களும் வாகனங்களும் இல்லை என்றும் அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
—————————————————————————————
உ.பி.யில் இடைத்தேர்தல்: மாயாவதி வேட்புமனு தாக்கல்

லக்னெü, ஜூன் 26: உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 2 சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

இதில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்காக அந்த மாநில முதலமைச்சர் மாயாவதி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் பி.ஆர்.வர்மா, சமாஜவாடி கட்சி உறுப்பினர் விக்ரமாதித்ய பாண்டே ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.

இதையடுத்து வர்மாவின் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மாயாவதி தாக்கல் செய்தார். அவரது மனுவை 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன்28-ந் தேதி கடைசி நாளாகும்.

மாயாவதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதால், அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
—————————————————————————————

Kumudam Reporter – Solai

08.07.07

இனி, மையத்திலும் மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சிதான். இந்திய அரசியல் இப்படி புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது என்று அரசியல் விற்பன்னர்கள் அறிவித்தார்கள். ஆனால், இருபது ஆண்டுகளுக்கு மேலாக, கூட்டணி ஆட்சி கண்ட உத்தரப்பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருக்கிறது. எப்படி?

அந்த மாநிலத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சிதான் என்று அனைத்து அரசியல் ஆரூடக்காரர்களும் சொன்னார்கள். ஆனால், கூட்டணி அமைப்பதில் மாயம் செய்த மாயாவதி, தனிப் பெரும்பான்மை பெற்று, தனித்து ஆட்சி அமைத்திருக்கிறார். என்ன காரணம்?

நாடு விடுதலை பெற்றாலும் தலித் மக்களுக்கு விடுதலை இல்லை. அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளெல்லாம் அவர்கள் வீட்டு வாசலை எட்டிப் பார்த்ததில்லை. எனவே, அந்தச் சமுதாயத்தின் எழுச்சிக்காக அண்ணல் அம்பேத்கர் பாடுபட்டார். அதன் வழியில் தலித் மக்களுக்காக கன்ஷிராம், பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கினார். அந்தக் கட்சியில் அவருக்கு அடுத்த தலைவராக மாயாவதி உயர்ந்தார். டெல்லி மின் வாரியத்தில் லைன் மேனாகப் பணி செய்த ஒரு தலித்தின் புதல்விதான் அவர்.

தமிழகத்தில் எப்படி பிராமண சமுதாயத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதே போல் உத்தரப்பிரதேசத்துப் பிராமண சமுதாயத்தையும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்வா அமைப்புகளையும் எதிர்த்துத் தொடங்கப்பட்டதுதான் பகுஜன் சமாஜ் கட்சி.

உத்தரப்பிரதேச வாக்காளர்களில் பிராமணர்களும் இதர முற்படுத்தப்பட்ட வகுப்பினர்களும் 30 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். எனவே, இவர்களைப் பகைத்துக்கொண்டு இவர்களுக்கு எதிராக அரசியல் நடத்தினால் ஆட்சி என்பது கனவாகத்தான் இருக்கும் என்பது மாயாவதியின் கணிப்பு.

எனவே, அந்தச் சமுதாயத்தினரின் நம்பிக்கையைப் பெறுவதில் மாயாவதி நாட்டம் கொண்டார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராக சதீஷ் சந்திர மிஸ்ரா என்ற பிராமணரை மாயாவதி நியமித்தார். அவர் சட்டமேதை. உத்தரப்பிரதேச அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்தவர். அவர்தான் இன்றைக்கு மாயாவதிக்கு அரசியல் வழிகாட்டி.

ஒரு காலத்தில் உத்தரப்பிரதேச அரசியல், அலகாபாத் நேரு பவனத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. பிராமணர்களே காங்கிரஸ் முதல்வர்களாக வந்தனர். இஸ்லாமிய மக்களும் தலித் மக்களும் காங்கிரஸ் அரசுகளின் காவலர்களாக இருந்தனர்.

இப்போது பிராமண சமுதாய மக்களும் இஸ்லாமிய மக்களும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் அரணாக மாறியிருக்கின்றனர். இவைதான் மாயாவதி செய்த மாயம்.

‘தலித் மக்களுக்கான கட்சி பகுஜன்’ என்றால் மாயாவதிக்கே கோபம் கொப்புளிக்கிறது. ‘சர்வ சமூகத்தினருக்கான கட்சி என்று சொல்லுங்கள்’ என்கிறார்.

தலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன தனி ஒதுக்கீடு? முற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் பொருளாதார ரீதியாக தலித்துகளை விடப் பின்தங்கியவர்கள் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களை விட, முற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் அழுந்திக் கிடக்கின்றவர்கள் இருக்கிறார்கள் என்று அவர் கண்டுபிடித்திருக்கிறார். அந்த வாதம் முற்படுத்தப்பட்ட சமுதாய மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து எந்த அளவிற்கு மாயாவதி இறங்கிப் போக முடியுமோ, அந்த அளவிற்கு இறங்கி வந்து அதிகார அரசியலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு சக்தியாக இருந்தது. அடுத்து பி.ஜே.பி. ஒரு சக்தியாக உருவானது. அந்தக் கட்சி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த பின்னர், அந்த வலிமையைப் பெற்றது. அதனைத் தடுக்க மையத்தில் இருந்த காங்கிரஸ் அரசு தவறியது. எனவே, இஸ்லாமிய மக்கள் காங்கிரஸ் உறவைக் கத்தரித்துக் கொண்டது மட்டுமல்ல; கடுங்கோபமும் கொண்டனர். அதனை, இன்னொரு சக்தியாக எழுந்த முலாயமின் சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது.

காங்கிரஸ் மீது இஸ்லாமிய மக்கள் கோபம் கொண்டது போல தலித் மக்களும் ஆவேசம் கொள்ளவே செய்தனர். தங்கள் சமுதாயத்தை வாக்கு வங்கியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அந்தக் கட்சி தங்களைக் கரம் கொடுத்துத் தூக்கி விடவில்லை என்று அவர்களுக்கு ஆதங்கம் ஏற்பட்டது.

இந்தச் சூழலில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்த பிரதமர் வி.பி.சிங் முன்வந்தார். அந்த அறிக்கையை ஆதிக்க சமூகங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் ஆயுதமாக சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது. அதே சமயத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும் எழுச்சி பெற்றது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸைப் போல் பி.ஜே.பி.யும் பெரிய சரிவைச் சந்தித்தது. ஒருமுறை தனியாகவும் இருமுறை கூட்டணியாகவும், அரசு கண்ட பி.ஜே.பி., பிற்படுத்தப்பட்ட மக்களைத் திருப்தி செய்வதிலேயே கவனம் செலுத்தியது. ஆகவே, முப்பது சதவிகிதமாக இருக்கும் முற்படுத்தப்பட்ட சமூகம் அதனை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டது. அவர்கள் இன்றைக்கு மாயாவதியை நம்புகிறார்கள்.

அதே சமயத்தில், இதற்கு முன் பிருந்த முலாயம் சிங் ஆட்சி ஊழலின் உறைவிடம் என்று முத்திரை பெற்றுவிட்டது. அந்தக் கட்சியை அரியணைக்கு அழைத்துச் சென்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் விழி பிதுங்கி நின்றனர். மாநில அரசே முலாயம் சிங் குடும்பத்தின் மொத்தக் குத்தகையானது.

இந்தச் சூழலில், தலித் அரசியலைப் பரண் மீது வைத்து விட்டு, ஜாதி வாரியாக மாயாவதி மாநாடுகளை நடத்தினார். மாவட்டம் தோறும் பிராமணர் மாநாடு, வைசியர் மாநாடு என்று ஆரம்பித்து அனைத்து ஜாதியினருக்கும் மாநாடு நடத்தினார்.

முற்படுத்தப்பட்ட சமுதாயம் (30 சதவிகிதம்), தலித் சமுதாயம் (21 சதவிகிதம்), இஸ்லாமிய சமுதாயம் (17 சதவிகிதம்) என்று எழுதப்படாத அணி உருவானது. சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளையும் இதே அளவில் பிரித்து அளித்தார்.

வெற்றிக்குப் பின்னர் அவர் வெளியிட்ட அமைச்சர்களின் பட்டியலைப் பாருங்கள். விகிதாச்சாரப்படி அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். பி.ஜே.பி. ஆட்சியில் கூட இவ்வளவு பேர் இடம் பெற்றதில்லை. அதே சமயத்தில், தலித் சமுதாயத்தைத் திருப்திப்படுத்த 19 பேர் அமைச்சர்களாகி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 11 பேரும் இஸ்லாமியர்கள் ஐவரும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.

இப்படி தேர்தல் வெற்றிக்கு ஜாதிகளின் சங்கமத்தைப் பயன்படுத்திக் கொண்ட மாயாவதி, ஜாதிகளுக்குமேல் உயர்ந்திருக்கிறார் என்று சொல்லலாமா? வீழ்ந்து வந்த சமூக ஆதிக்க சக்திகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாமா? இப்படி மாயாவதியின் வெற்றி ரகசியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர், மாயாவதி முதன்முதலாக நிருபர்களைச் சந்தித்தார். ‘பிராமணர்களில் ஏழைகள் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்’ என்றார் பி.ஜே.பி.கூடத் துணிந்து இப்படிக் கேட்டதில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அவர் மயானத்திற்கு அனுப்பி விட்டார். உறங்கிய உண்மைகளைத் தட்டி எழுப்பிவிட்டதாகக் கூறுகிறார்.

‘டி.வி. சுந்தரம் அய்யங்கார் பிறப்பால் முற்படுத்தப்பட்டவர்தான். அவர்களது பிள்ளைகள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள்தான். ஆனால், அவர்கள் வீட்டில் காரோட்டும் சங்கர அய்யர் எப்படி? பிறப்பால் முற்பட்டவர்தான். பொருளாதார வசதியில்…? தலித்துகளின் நிலைதான் அவரது நிலையும்’ என்கிறார் மாயாவதி.

இத்தகைய வாதங்கள் அரசியலில் பெரும்புயலைக் கிளப்பியிருக்கின்றன. கசப்பான உண்மைகளைக் கூறுகிறார் என்பதா? பகுஜன் சமாஜ் கட்சி முற்போக்கு சமுதாயங்களின் முரசமாகிவிட்டது என்று சொல்வதா?

எதிர்கால அரசியல் ஜாதிக் கூட்டணிகளுக்குத்தான் என்று சொல்வதா? அடுத்து மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்குப் பெரும் செல்வாக்கு இல்லைதான். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் அமைத்த ஜாதிக் கூட்டணியை அமைக்க மாயாவதி முயற்சிப்பார். ஏனெனில், அவருடைய இலட்சியம் மாநில முதல்வர் என்பதல்ல; நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதுதான்!

——————————————————————————————-

உத்தரபிரதேசம் முழுவதும் மாயாவதி சிலைகள்: கன்சிராம் விருப்பம் நிறைவேறுகிறது

லக்னோ, ஆக. 6-

உத்தரபிரதேசத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார். கன்சிராமின் கொள்கை கள், திட்டங்கள் அனைத் தையும் நிறைவேற்ற முதல்- மந்திரி மாயாவதி ஏராள மான திட்டங்களை அறிவித் துள்ளார்.

கன்சிராம் பற்றி ஆய்வு செய்து கட்டுரை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. “கன்சிராம் மாணவர் சுவா பிமான் விருது” என்ற பெயரில் ரூ.2.5 லட்சம் பரிசு வழங் கப்படும் என்று மாயாவதி கூறி உள்ளார்.

கன்சிராம் பெயரில் மிகப் பெரிய மருத்துவம் மற்றும் வீட்டு வசதி திட்டத்தையும் மாயாவதி அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப் பெரிய மருத்துவமனை கட்டப்படும். அங்கு 40 சதவீத ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

வீட்டு வசதி திட்டங்கள் “கன்சிராம் நகர்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து சாதி யினருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

4 ஆண்டுகளுக்கு முன்பு, மரணம் அடைவதற்கு முன்பு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய கன்சிராம், உத்தரபிரதேசம் முழுவதும் என் சிலை அருகில் மாயாவதியின் சிலைகளும் நிறுவப்பட வேண்டும்” என்று கூறி இருந்தார். அவரது இந்த ஆசையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள ஆயிரக் கணக்கான கன்சிராம் சிலை கள் அருகில் மாயாவதி சிலைகள் வைக்க மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு கோடிக் கணக்கில் பணம் செலவிடப்பட உள்ளது. லக்னோவில் கன்சிராம் நினைவிடத்தில் மாயாவதி சிலை நிறுவப்படும்.

—————————————————————————————————————————–
“சோனியாவை விட நானே பெரிய தலைவர்’
புதுதில்லி, ஜன.16: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விட நான்தான் பெரிய தலைவர் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான் பிரதமர் பதவியை அடைய ஆசைப்படுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

“எனது போராட்டமும் பகுஜன் சமாஜ் கட்சியின் பயணமும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையில் இதுபற்றி கூறியுள்ளார். சுமார் 1000 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தை தனது 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டார். ஹிந்தியில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ.1100.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு புத்தகம் எழுதி தனது பிறந்த நாளன்று கட்சித் தொண்டர்களுக்காக வெளியிடுவேன் என்றார் அவர்.

சோனியா காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை விட நான் உயர்ந்த தலைவர் என்று மாயாவதி தனது புத்தகத்தில் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

2006-ம் ஆண்டிலிருந்து சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேசத் தேர்தல் வரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு சோதனைக் காலம் ஆகும். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் உத்தரப் பிரதேசத்தில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய ஆதரவு தருவதாக 2003 ல் பா.ஜ.க. உறுதி அளித்தது. அப்போது பொதுத்தேர்தலை முன் கூட்டியே நடத்த பா.ஜ.க. திட்டமிட்டது. உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளில் 60 தொகுதிகளை பா.ஜ.க. கேட்டது. இதுதான் எனக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய சதியின் ஆரம்பம் என்று தனது புத்தகத்தில் மாயாவதி கூறியுள்ளார்.

அரசியல் மற்றும் சமூகப் பொறுப்புகளை ஏற்று நடத்தும் பல பெண்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் நான் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்து, அந்த சமுதாயத்தின் சுயமரியாதை போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வருகிறேன். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்து, மக்களுக்கு சமூக மாற்றத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் தர வேண்டும் என்பது என் நோக்கமாகும்.

நியூஸ்வீக் பத்திரிகை வெளியிட்ட, பெரிய பொறுப்பில் உள்ள உலகின் முக்கிய 8 பெண்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இத்தகைய கெüரவம் கிடைப்பது மிகவும் அரிது. எனக்கு எதிரான சதியை அச்சமின்றி எதிர்கொண்டது, நானும் என் இயக்கமும் வளர உதவியது.

நாம் வாக்களிக்க மற்றவர்கள் ஆட்சி செய்யும் முறை, இனிமேல் நடக்காது. நாம் நாடாளுமன்றத்தைத் தேர்தல் மூலம் கைப்பற்றி நாமே ஆட்சி செய்ய வேண்டும் என்று சாதாரண மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அம்பேத்கரின் சிலை, நாடாளுமன்றத்தை நோக்கி கையைக் காட்டுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மேல்ஜாதியில் ஏழைகளாக இருப்போர், கிளர்ந்தெழுந்து, வாக்குப் பெட்டிகள் மூலமாக ஆட்சியைப் பிடித்து, தங்களது அடிமைத் தனத்தை உடைத்து, தங்கள் சொந்த முயற்சியால் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அம்பேத்கர் சிலை நமக்கு உணர்த்தும் பாடம் ஆகும்.

காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும், தற்போதுள்ள சமூக நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்பும் கட்சிகள் ஆகும். அக்கட்சிகளின் கோட்டையாகத் திகழ்ந்த உத்தரப்பிரதேசத்தில் அரசியல் நிலையை மாற்ற நான் காரணமாக இருந்திருக்கிறேன் என்று தனது சுயசரிதையில் மாயாவதி கூறியுள்ளார்.

———————————————————————————————————————————————————
உத்தரபிரதேச மாநிலத்தை 3 ஆக பிரிக்க ஆதரவு
பிறந்தநாள் விழாவில் முதல்-மந்திரி மாயாவதி அறிவிப்பு

புதுடெல்லி, ஜன.17-

உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதியின் 52-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவர், உத்தரபிரதேச மாநிலத்தை 3 மாநிலங்களாக மத்திய அரசு பிரித்தால் ஆதரவு அளிக்க தயார் என்று அறிவித்தார்.

பிரமாண்ட கேக்

உத்தரபிரதேச முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் 52-வது பிறந்தநாள் விழா, லக்னோவில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. முதல்-மந்திரியாக மீண்டும் பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் பிறந்தநாள் விழா என்பதால் ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. லக்னோ நகரமே, அவரது கட்சி கொடியின் நிறமான நீல வண்ணம் பூசியது போல இருந்தது.

நகரம் முழுவதும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. பிறந்தநாளை முன்னிட்டு தயாரிக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான `கேக்’கை மாயாவதி வெட்டினார். அவருடைய தந்தை, குடும்பத்தினர், கட்சியின் மூத்த தலைவர்கள், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., உட்பட மாநில அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அனல் மின்திட்டம்

பிறந்த நாளுக்காக பல்வேறு திட்டங்களையும் மாயாவதி தொடங்கி வைத்தார். குறிப்பாக, சர்ச்சைக்குரிய ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நொய்டா-பாலியா விரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ரூ.1,600 கோடி மதிப்பிலான நிவாரண திட்டங்களை அறிவித்தார்.

இது தவிர, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு இலவச சுகாதார காப்பீடு, மாநில அரசு ஊழியர்களுக்கான பயிற்சி மையம் ஆகியவற்றையும் அவர் அறிவித்தார். மேலும் லலித்பூர் என்ற இடத்தில் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இதற்கிடையே, மாயாவதி பிறந்தநாளுக்காக செய்யப்படும் பிரமாண்டமான செலவு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து மாயாவதி கூறியதாவது:-

இது தலித் சமுதாயத்துக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் செய்துவரும் அவதூறு பிரசாரம் ஆகும். பிறந்தநாளுக்கு அரசு பணம் எதையும் செலவழிக்கவில்லை. பிறந்தநாள் `கேக்’ கூட பணம் கொடுத்து வாங்கியதுதான். பொதுத்துறை மற்றும் மின்சார துறைக்கு கட்சியில் இருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளது.

3 மாநிலங்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்பட்ட போதிலும், இன்னமும் உத்தரபிரதேசம்தான் பெரிய மாநிலமாக இருந்து வருகிறது. எனவே, இதை பூர்வாஞ்சல், பண்டல்கண்ட், ஹரித் பிரதேசம் என 3 மாநிலங்களாக பிரிப்பதற்கு பகுஜன்சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும்.

சிறிய மாநிலங்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு சம்மதித்தால், இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். எனவே, இந்த விவகாரத்தில் முடிவு காண்பது, மத்திய அரசு கையில்தான் உள்ளது.

இவ்வாறு மாயாவதி கூறினார்.

மத்திய அரசு ஆதரவு

ஆனால், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான திக் விஜய்சிங் கூறுகையில், `உத்தர பிரதேசத்தை சிறிய மாநிலங்களாக பிரிப்பது தொடர்பாக முதலில் மாநில அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றட்டும்’ என்று தெரிவித்தார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பிறகு மாயாவதி, டெல்லி சென்றார். அங்கு மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து கேட்டபோது, `தற்போது, எனக்கு அதிக அலுவல்கள் இருக்கின்றன. எனவே, இது குறித்து முடிவு எடுப்பதற்காக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை கட்சித்தலைவர்கள் விரைவில் கூட்டுவார்கள்’ என்று பதிலளித்தார்.

இதற்கிடையே, மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய நேரடி வரித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கு குறித்து பதிலளித்த மாயாவதி, `கட்சியினர் கொடுத்த பணம்தான் என்னிடம் உள்ளது’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Posted in abuse, Action, Aiswarya, Allahabad, Alliance, Allocations, Amar Singh, Amarsingh, Ambani, Amitab, Amitabh, Anil, Assembly, Assets, Ayodhya, Ayodya, Bachan, Bahuguna, Bahujan Samaj Party, Biosketch, BJP, Brahmin, Brahmins, Bribes, BSP, Caste, Casteism, CM, Congress, Constituency, Corrupt, Corruption, Creamy, Creamy Layer, Dalit, Delhi, Disproportionate, Economic, Election, Elections, Faces, Free, Goel, Govt, Gujarat, Guru, Gurumoorthy, Gurumurthy, Health, Healthcare, Hindu, Hinduism, Hindutva, Homes, Hospitals, Hosuing, IAS, IPS, Islam, Jaiprakash, Jaiprakash Narain, Jats, JP, Kanshi, Kanshi ram, Kanshiraam, Kanshiram, Kansi ram, Kansiraam, Kansiram, kickbacks, Kurmis, Land, Lucknow, Mandal, Manifesto, Manu, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MBC, medical, Medicine, Mishra, Misra, Moslem, Mulayam, Muslim, Naseemuddin, Naseemudhin, Nasimuddin, Nasimudhin, New Delhi, OBC, Op-Ed, people, Plan, Planning, Poll, Polls, Power, PRO, promises, Property, Rajnath, Rajnath Singh, Ramjenmabhoomi, Ramjenmabhumi, Ramjenmaboomi, Ramjenmabumi, Reliance, Religion, Reservation, Reservations, Reserved, Rowdy, Rule, Sathish Chandra Mirs, SathishChandra Miras, SC Mishra, Siddik, Siddiq, Sidhik, Sidhiq, Slum, SP, Statue, Students, Study, Sudhir, Sudir, Taj, Taj mahal, Thakur, Thakurs, UP, Uttar Pradesh, Vaisya, Vajpayee, Vajpayi, Varanasi, Yadavs | 2 Comments »

Tamil Nadu to set up electronics export center, TIDEL-III Park

Posted by Snapjudge மேல் மே 9, 2007

மேலும் 3 ஐ.டி. பூங்காக்கள்: முதல்வர் அறிவிப்பு

சென்னை, மே 9: தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ரூ. 1,400 கோடியில் தமிழகத்தில்

  • சென்னை தரமணி,
  • ஸ்ரீபெரும்புதூர்,
  • அம்பத்தூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காங்கள் அமைக்கப்படுகின்றன.

இதுபற்றிய தகவல்களைப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்தபோது முதல்வர் கருணாநிதி அறிவித்தார். விவரம்:

மூன்றாவது டைடல் பூங்கா: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காகச் சென்னை தரமணியில் மூன்றாவது டைடல் பூங்கா ரூ. 800 கோடியில் அமைக்கப்படும்.

ஏற்கெனவே அறிவித்தபடி, தரமணியில் 2-வது டைடல் பூங்கா அமைக்கும் பணி நடந்துவருகிறது. தற்போது சர்வதேச கருத்தரங்கு மையம், தங்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்சார் சேவைகளுக்கான 3-வது டைடல் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

தரமணியில் 25 ஏக்கரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான ஏற்றுமதி மையமாக இது செயல்படும். 21 லட்சம் சதுர அடி பரப்பில், தனியாருடன் கூட்டு முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் 12 ஆயிரம் மென்பொருள் வல்லுநர்களுக்கு வேலை கிடைக்கும்.

சென்னை கோட்டூரில் தமிழ் இணைய பல்கலைக்கழகத்துக்கு 2 ஏக்கரில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

தரமணி டைசல் உயிரியல் பூங்கா, ரூ. 250 கோடியில் விரிவுபடுத்தப்படும். இதனால் கூடுதலாக 2 ஆயிரம் உயிரியல் தொழில்நுட்ப -மருந்துத் துறை விஞ்ஞானிகளுக்கு வேலை கிடைக்கும்.

  • காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர்,
  • பெரும்பாக்கத்தில் 213 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பவியல் நகர் அமையும்.
  • கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 33 ஏக்கரிலும்
  • சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் 100 ஏக்கரிலும்
  • திருச்சி மாவட்டம், நவல்பட்டு கிராமத்தில் 50 ஏக்கரிலும்
  • மதுரையில் வடபழஞ்சி, கிண்ணிமங்கலத்தில் 50 ஏக்கரிலும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் அமையும்.
  • நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 100 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். மேலும் 400 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகம் நிறுவப்படும்.

தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம்: தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடத்திட்ட மேம்பாடு, பயிற்றுநர் உருவாக்கம், கல்விசார் சாதனங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக மாணவர் பொதுத் திறன் பயிற்சியளிக்கும் பொருட்டும் தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம் நிறுவப்படும்.

ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 500 கோடி பூங்கா: சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் ரூ. 500 கோடியில் உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (பயோ ஐ.டி. பார்க்) அமைக்கப்படும்.

இந்திய மென்பொருள் தொழில் பூங்கா, சிங்கப்பூரில் உள்ள அசெண்டாஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இந்தப் பூங்காவை 100 ஏக்கரில் அமைக்கும்.

இத்திட்டத்துக்கான முதலீட்டில் 11 சதவீதம் பங்கேற்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்குத் தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக அமைகிறது என்ற சிறப்பை இந்த உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பெறும். இதனால் 8000 பேருக்கு வேலை கிடைக்கும்.

ரூ. 80 கோடியில் அம்பத்தூர் பூங்கா: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்குச் சொந்தமான காலியிடத்தில் 4 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ. 80 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.

காகித நிறுவனத்தால் அமைக்கப்படும் இந்த பூங்காவின் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்” என்றார் கருணாநிதி.

———————————————————————————–

புதிய ஜமீன்தார்கள்!

கல்கி – Kalki 10.06.2007 (தலையங்கம்)

நந்தி கிராமில் டாடா நிறுவனத்துக்கு விவசாய நிலங்களை ஒதுக்கித் தந்து, பலத்த எதிர்ப்புக்கு உள்ளாயிற்று மேற்கு வங்க அரசு. கலவரம், உயிர்ச் சேதம் என்று பிரச்னை வளர்ந்து, கடைசியில் திட்டம் ரத்தாயிற்று.

உ.பி.யில் அதே விதமான நில ஒதுக்கீட்டை ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக முலாயம்சிங் அரசு செய்திருந்தது. மாயாவதி ஆட்சிக்கு வந்ததும் அதை ரத்து செய்துவிட்டு, “தொழிலதிபர்கள் வேண்டுமானால் சந்தை விலைக்கு நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளட்டும்; அரசு கையகப்படுத்தி சலுகை விலையில் அவர்களிடம் விற்காது” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

ஆனால், தமிழ்நாட்டில் விஷயம் நேர்மாறாக இருக்கிறது.

இராணிப்பேட்டையில் இரண்டு கொரிய நிறுவனங்களுக்கு ஆற்காடு வீராசாமி நூறு ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக வாக்களித்திருக்கிறார். இதற்காக அரசு மக்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தும்! காஞ்சிபுரம் அருகே ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ, ஒரு துபாய் நிறுவனம் ஒன்று, 350 ஏக்கர் நிலம் வாங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது!

ஐம்பதாயிரம் பேருக்கு இந்த மண்டலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்கிறார்கள். ஆனால், அதற்கு 350 ஏக்கர் நிலம் என்பது மிக மிக அதிகம். ஐ.டி. சார்ந்த தொழிலகங்கள் ஐம்பது ஏக்கர் நிலத்தில் மட்டுமே அமைக்கப்படும் என்றும் மீதி நிலம் வாழிடம், பள்ளி, ஷாப்பிங் மால் போன்றவற்றுக்கு என்றும் விவாரிக்கிறார்கள்!

பெரிய தொழிலதிபர்கள் சலுகை விலையில் அரசிடமிருந்து நிலம் பெறும் ஏற்பாட்டை இரு தரப்பினரும் துஷ்பிரயோகம் செய்வது வழக்கமாகிவிட்டது. அதிகார வர்க்கம் இலஞ்ச – ஊழலில் ஈடுபடுகிறது. தொழிலதிபர்களோ, தேவைக்கதிகமான நிலத்தை வாங்கிக்கொண்டு, பிற்காலத்தில் அதன் விலை உயரும்போது, லாபம் சம்பாதிக்கிறார்கள். நிலத்தின் விலை கட்டுக்கடங்காமல் உயரவும் இவர்கள் காரணமாகிறார்கள். இது ஏழைகளையும் சராசாரி மக்களையும்தான் வதைக்கிறது.

‘உணவு உற்பத்தி, விவசாயப் பெருக்கம் நோக்கி அரசின் திட்டப் பணிகள் திசை திரும்ப வேண்டும்’ என்று தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், தமிழகத்தில் என்ன செய்கிறார்…? விவசாயம் சார்ந்த பகுதியில், அதற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு தொழில்நுட்ப நிறுவனம் கிளை பரப்ப வழி செய்து, பொருளாதார ஏற்றத்தாழ்வுக்குப் பலமான அஸ்திவாரம் அமைக்கிறார்.

ஒரு குடிசை அமைத்துக்கொள்ளக்கூட நிலமின்றி அவதிப்படும் இலட்சக்கணக்கானோர் வாழும் நாடு இது. இங்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலம் பொதுமக்களின் சொத்து. அதைக் கண்ணை மூடிக்கொண்டு உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழிலதிபர்களுக்கு வாரி வழங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! தனியார் நிலமாயினும் பெரிய தொழிலதிபர்கள் 300 ஏக்கர் 500 ஏக்கர் என்று தேவைக்கு அதிகமாக வாங்கி, வளைத்துப் போட அனுமதிப்பது பெரும் அநீதி!

பெரிய தொழிலதிபர்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஏராளமான வேறு பல சலுகைகளையும் பெறுகிறார்கள். மொத்தத்தில், விவசாய ஜமீன்தாரி முறையையும் பெரிய மிராசுதாரர்களையும் ஒழிக்கப் போராடி சட்டமும் இயற்றிய நமது ஆட்சியாளர்கள், இன்றைக்குப் புதிய சலுகைகள் மூலம் நவீன ஜமீன்தாரி தொழிலதிபர்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

Posted in 3, Ambathur, Ambattoor, Ambattur, Biotech, Chennai, Coimbatore, College, computers, Development, Education, Electronics, Employment, Export, Factory, Industry, InfoTech, IT, ITES, Jobs, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanjipuram, Karunanidhi, Kottoor, Kottur, Kovai, Madras, Madurai, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MNC, multinational, Nellai, Orgadam, Paper, Perumpakkam, Research, Salem, Science, scientist, SEZ, SIPCOT, Software, Special, Sriperumputhoor, Sriperumputhur, Students, Tamil Nadu, TamilVU, Tax, Tech, Technology, Tharamani, Thiruchi, Thiruchy, Thirunelveli, Three, Thruchirappalli, TIDEL, TIDEL-III, TN, Trichirappalli, Trichy, University, Virtual, Virtual University, VU | Leave a Comment »

Uttar Pradesh Elections – Anlaysis: BSP, BJP, Congress, SP

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

உ.பி. மாநிலத் தேர்தல்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. எனினும் இம் மாநிலத்தில் கட்சிகளிடையே பெரிய கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு பிரதானக் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரியாகக் கருதுவதே இதற்குக் காரணம். மிஞ்சிப் போனால் இக் கட்சிகள் மாநில அளவிலான சிறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம்.

பாஜக இந்த வகையில் ஏற்கெனவே நடவடிக்கையில் ஈடுபட்டு அப்னா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடுகளைச் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அப்னா தளம் என்பது அடிப்படையில் “குர்மிக்கள்’ எனப்படும் பிரிவினரின் கட்சியாகும். மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும் மத்திய பகுதியிலும் இப் பிரிவினர் பெருவாரியாக உள்ளனர். வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த சிறு கட்சியுடனும் பாஜக தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பினரின் கட்சி என்ற முத்திரையைத் தாங்கிய பாஜக, இந்த ஏற்பாடுகள் மூலம் பிற்பட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற முடியும் என்று கருதுகிறது. 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 88 இடங்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது.

மற்றொரு அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ், உ.பி. தேர்தலில் யாருடனும் கூட்டணி சேரும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் அக் கட்சி அதே மூச்சில் தொகுதி உடன்பாட்டுக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ஒருவேளை வி.பி.சிங்கின் ஆதரவு பெற்ற ஜனமோர்ச்சாவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம். அஜீத் சிங்கின் கட்சி, லாலு கட்சி ஆகியவற்றுடனும் இவ்விதம் தொகுதி உடன்பாடு காணப்படலாம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 25 இடங்களை அதாவது மொத்த இடங்களில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களையே பெற்றது. இந்தத் தடவை காங்கிரஸýக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்ல முடியாது.

இப்போது ஆளும் கட்சியாக உள்ள சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் இம் மாநிலத்தில் இரு பெரும் சக்திகளாக விளங்குகின்றன. இந்த இரு கட்சிகளுமே ஒன்றையொன்று பரமவைரிகளாகக் கருதுகின்றன. யாதவ் சமூகத்தினரிடையே செல்வாக்குப் பெற்ற முலாயம் சிங் அண்மைக்காலமாக மற்ற பல சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் முனைப்புக் காட்டி வந்துள்ளார். மாநிலத்தில் “வாட்’ வரித் திட்டம் அமலாக்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக முலாயம் சிங் கட்சியின் தோழமைக் கட்சியாக விளங்கி வந்த மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் முலாயம் சிங்குக்கு எதிரான எந்தக் கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும்.

மாயாவதியின் கட்சியானது தலித்துகளின் கட்சி என்று அறியப்பட்டதாகும். ஆனால் அண்மைக் காலமாக மாயாவதி தமது கட்சியானது அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். உயர் வகுப்பினர் பலரைத் தமது கட்சியில் சேர்த்துக் கொண்ட அவர், இப்போதைய தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் தமது கட்சி சார்பில் உயர் வகுப்பினரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது அவரது நோக்கமாகும்.

உ.பி. மாநிலம் மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் நிலையான ஆட்சி நிலவியதாகச் சொல்ல முடியாது. 2002 தேர்தல் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. இப்போதைய தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிவுகள் மே மாத இரண்டாவது வாரத்தில்தான் தெரிய வரும்.

===========================================================
உ.பி.யில் மாயாவதி போட்டியில்லை; மேல் சாதியினருக்கு அதிக தொகுதிகள்

லக்னெü, மார்ச் 14: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 பேரவைத் தொகுதிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேல் சாதியினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடையே மாயாவதி கூறியது:

உ.பி.யில் எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.

நான் போட்டியிட்டால் சுற்றிலும் உள்ள தொகுதிகளில் இருக்கும் தொண்டர்கள் அங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். இதனால் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நான் இப்போது போட்டியிடப் போவதில்லை. கட்சி வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு உறுப்பினர் எனக்காக விட்டுக்கொடுப்பார். பின்னர் இடைத்தேர்தல் மூலம் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார்.

அவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின்படி

  • 139 தொகுதிகள் மேல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்
  • 86 தொகுதிகள் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
  • 110 தொகுதிகள் பிற்பட்ட வகுப்பினருக்கும்,
  • 93 தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும்,
  • 61 முஸ்லிம்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது இறுதி செய்யப்பட்ட பட்டியலாகும். அதே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை பிற கட்சிகள் நிறுத்தினாலும் எங்கள் வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்காது. எங்கள் கட்சி பெரும்பான்மை பலம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.

முலாயம் சிங் போட்டியிடுவார் என கருதப்படும் குன்னார் தொகுதியில் முகம்மது ஆரிப் என்பவரை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

================================================

உ.பி.யில் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு அலசப்படுகிறது: தேர்தல் கமிஷன் சிறப்பு நடவடிக்கை

புது தில்லி, ஏப். 2: உத்தரப் பிரதேசத்தின் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு தொகுக்கப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கள்ள வாக்கு போடச் சொல்வது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுப்பது, வாக்குச் சாவடிக்குள் புகுந்து வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களையும், தேர்தல் அலுவலர்களையும் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி இஷ்டப்படி கள்ள வாக்குப் போடுவது என்று அனைத்துவித தேர்தல் முறைகேடுகளையும் தொகுதி வாரியாக பட்டியலிட்டுத் தருமாறு மத்திய தலைமை தேர்தல் ஆணையும் உத்தரப்பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் இப்போது முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. இக் கட்சி பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே தோழமைக் கட்சியாக இல்லை.

இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தியே தீருவது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்மானித்துவிட்டதையே இந்தப்புதிய நடவடிக்கை தெரிவிக்கிறது.

403 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி வாரியாக பல தகவல்களைத் திரட்டுமாறு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

பணம்-பொருள் கொடுத்து வாக்கு சேகரிக்கப்படும் வாக்குச் சாவடிகள், பிற மத, சாதிக்காரர்களை அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுக்கும் வாக்குச் சாவடிகள், தேர்தல் அதிகாரிகளையும் வாக்குச் சாவடி முகவர்களையும் மிரட்டிவிட்டு தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் வாக்குச் சாவடிகள் என்று முந்தைய வரலாற்றின் அடிப்படையில் அடையாளம்காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சராசரி வாக்குப்பதிவைவிட 15% அதிகம் வாக்குகள் பதிவாகும் தொகுதிகள், சராசரியை விட 15% குறைவாக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிகள் போன்றவற்றை அடையாளம் காணவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வழக்கமான தேர்தல் நடைமுறைகளைவிட இவையெல்லாம் புதுமையாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில்கூட முறைகேட்டை அனுமதிக்காமல் தடுப்பது என்ற உறுதி தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுவிட்டதைப் போலத் தெரிகிறது. தேர்தல் நாள் நெருங்க, நெருங்கத்தான் இதையெல்லாம் தேர்தல் கமிஷனால் சாதிக்க முடிந்ததா என்று தெரிந்து கொள்ளமுடியும். இப்போதைக்கு இது ஆரம்பம்தான்.

தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மத்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக மிகப் பெரும் பொறுப்புகளை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.

=================================================================
ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி: முலாயம் சிங் தேர்தல் வாக்குறுதி

எட்டா, ஏப். 3: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் வாக்குறுதி அளித்தார்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மைன்புரி, பெரோஸôபாத், எட்டா ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணிகளில் பங்கேற்று முலாயம் சிங் பேசியதாவது:

சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு எதிராக பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டு சேர்ந்து நிற்கின்றன.

சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பட்ட மேற்படிப்பு வரை மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

அதிகாரிகளை கூண்டோடு மாற்றியதுதான் லக்னெü, கான்பூர் வன்முறைக்கு காரணம்: தேர்தல் ஆணையம், மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரிகளை கண்மூடித்தனமாக கூண்டோடு இடமாற்றம் செய்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு அந்தந்தப் பகுதிகளின் நிலவரமே இன்னும் தெரியவில்லை.

லக்னெüவிலும், கான்பூரிலும் முஸ்லிம்களில் இரு பிரிவினருக்கு இடையிலான வன்முறையை அதிகாரிகளால் தடுக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.

முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவி செய்ய வேண்டும் என்றார் முலாயம் சிங்.
=================================================================
அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கீடு: உ.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி

லக்னெü, ஏப். 3: உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படும்; பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் 50% பதவிகள் பெண்களுக்கே தரப்படும் என்று அக் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பெண்கள், முதியோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நல திட்டங்களை கட்சி அறிவித்துள்ளது.

சட்டம், ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும், விலைவாசி உயராமல் கண்காணிக்கப்படும், பதுக்கல், கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் நடமாடமுடியாதபடி “பொடா’வுக்கு இணையான பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்படும், வங்கதேசத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஊடுருவியவர்கள் கண்டுபிடித்து அகற்றப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

கட்சியின் அனைத்திந்திய துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மாநிலத் தலைவர் கேசரிநாத் திரிபாடி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

“கிரிமினல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு முறிக்கப்படும். மாநிலத்தில் “சிமி’, “ஐஎஸ்ஐ’ ஆகியவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.

பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.30,000 வளர்ச்சிப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். 21 வயதுவரை அப் பெண்குழந்தையின் படிப்புச் செலவுக்கு அதிலிருந்து பணம் எடுத்துதரப்படும்.

அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கப்படும்.

விதவையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.

மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும்.

அரசு இடங்களில் உள்ள வீட்டு மனை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

சுகன்யா விவாஹ யோஜனா, கன்யாதான் யோஜனா போன்ற திருமண திட்டங்கள் தொடரும்.

அங்கன்வாடி (பெண்) ஊழியர்களின் பணி வரன்முறைப்படுத்தப்படும்.

வேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி அளிக்கப்படும்.

இளைஞர் நலனுக்காக தனி கமிஷன் ஏற்படுத்தப்படும்.

மகளிர் சுய உதவி குழுக்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் பெண்கள் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

முதியோருக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சலுகைக் கட்டணத்தில் அவர்கள் பயணம் செய்யலாம். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம். எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் கட்டித்தரப்படும்.

விலைவாசியைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர், கள்ளச் சந்தையில் விற்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக முறை வலுப்படுத்தப்படும்.

பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம், வந்தே மாதரம் ஆகியவை கட்டாயமாக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

பாஜக வெற்றி பெற்றால் கல்யாண் சிங் முதல்வர் பதவியை ஏற்பார் என்று இரு தலைவர்களும் நிருபர்களிடம் அறிவித்தனர்.

=================================================================

Posted in abuse, Alliances, Allocation, Amar Singh, Amitabh, Anlaysis, Apna Dal, Apna Dhal, Assembly, Ayodhya, Backgrounder, BJP, booth capturing, Boothcapturing, Brahmins, BSP, candidates, Caste, Chief Minister, CM, Communist, Congress, Corruption, CPI, EC, Elections, Electorate, Employment, FC, Females, Filmfare, History, Janata Dal, Jats, Jobs, Kalyan, Kalyan Singh, Kanshiram, Lucknow, Manifesto, Marxist, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MLA, Mulayam, Mulayam Singh Yadav, Muslim, Natwar, OBC, Opinion, Party, pension, Perspectives, Polls, Religion/Politics, Reservation, Samajvadi, Samajwadi, SC, School, seats, Sonia, SP, ST, Surya Namaskar, Tiwari, UP, Uttar Pradesh, Vajpayee, Vande Mataram, Vandhe Mataram, Varanasi, VAT, voters, Votes, VP Singh, Women, Yadav, Yoga, Yogasana, Youth | Leave a Comment »

Congress performance in Punjab, Uttarakhand, Manipur Elections

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2007

பதில் வராத கேள்வி

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசிய சுருக்கமான பேச்சில், கட்சி தன்னைத் தானே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

ஆத்ம பரிசோதனை என்பது மகாத்மா காந்தி அடிக்கடி பயன்படுத்திய சொல். இதற்கு இப்போதைய அரசியல் உலகிலும் ஒருவகை மதிப்பு இருக்கவே செய்கிறது.

கட்சி தன்னை ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடும்போது, கட்சித் தலைமையும் கட்சியின் உயர் பொறுப்பில் உள்ளவர்களும் தங்கள் நடவடிக்கைகளை, தாங்கள் செய்து முடித்த காரியங்களை ஒருமுறை எண்ணிப் பார்க்க வேண்டும். அதைவிட முக்கியமாக, தனது செயல்களில் குறைபாடு இருப்பதாகத் தனது “ஆத்மாவின் குரல்’ சொல்லுமானால், அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், சத்தியத்தின் பாதையில் மீண்டும் உறுதியுடன் நடக்கவும் முன்வர வேண்டும் என்பதுதான் ஆத்ம பரிசோதனையின் நோக்கம்.

உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்குக் காரணம் விலைவாசி உயர்வு என்று முதல்முறையாக, வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார் சோனியா.

அப்படி ஒப்புக் கொண்டபோதிலும்கூட, அதற்கான காரணங்களை, காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றுள்ள தவறுகளை ஒப்புக் கொள்ளவோ, அதற்கு மாற்றுவழி காண்பது குறித்துப் பேசவோ அவர் விரும்பவில்லை. “இந்தியப் பொருளாதாரத்தை உயர்ந்த வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறது நமது அரசு’ என்று சோனியா சமாளிக்கும்போது ஆத்ம பரிசோதனை முழுமையடையாமல் போகிறது.

சோனியா இதைக் குறிப்பிட்ட அதே நாளில், “விலைஉயர்வுக்கு உணவுப்பொருள் தட்டுப்பாடு காரணமல்ல, மாறாக அவற்றை நிர்வகிப்பதில் ஏற்பட்ட குறைபாடு” என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்றத்தில் கூறியது தவறான தகவல் என்று பொருளாதார வல்லுநர் அர்ஜுன் சென்குப்தா (சுயேச்சை உறுப்பினர்) கடுமையாக விமர்சித்தார். பருப்பு தட்டுப்பாடு இருந்தபோதிலும் 40 ஆயிரம் டன் பருப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது ஏன்? என்று பாஜகவும் தன் பங்குக்கு விவாதத்தைக் காரசாரமாக்கியது.

விலைவாசி உயர்வு காங்கிரஸின் தோல்விக்கு ஒரு காரணம் என்றாலும், பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் கூட்டணி ஆட்சி நடத்தும் காங்கிரஸ், தன் கூட்டணிக் கட்சிகளின் விருப்பங்களுக்கெல்லாம் வளைந்து கொடுத்துப் போவதும் அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்துள்ளது என்பதை சோனியா புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி. ஒவ்வொரு மாநிலப் பிரச்சினையிலும் சரியான அணுகுமுறையை மேற்கொள்வது மிகமிக அவசியம் என்பதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

கேரளம் – தமிழ்நாடு இடையே முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையிலும், தமிழ்நாடு – கர்நாடகம் இடையே காவிரிப் பிரச்சினையிலும், ஆந்திரத்தில் தெலங்கானா விவகாரத்திலும், தற்போது உ.பி. அரசில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் முலாயம் சிங் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையில் உள்ள பலவீனங்கள் அம்பலமாகியுள்ளன.

சிமெண்ட் விலையைக் குறைக்காவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று ப. சிதம்பரம் கூறிய பிறகும் விலை இறங்கவே இல்லை. அப்படியானால் அந்த அரசுக்கு பொதுமக்களிடத்தில் எத்தகைய வரவேற்பு இருக்கும்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய சோனியா, “சமுதாயத்தில் பல்வேறு மக்களின் உணர்ச்சிகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் கட்சிக்கு இருக்கிறதா?’ எனக் கேட்டுள்ளார். அவரிடம், அதே கேள்வியைத்தான் நமக்கும் கேட்கத் தோன்றுகிறது!
===========================================

காங்கிரஸ் தனது உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும்!

நீரஜா செüத்ரி

காங்கிரஸ் கட்சி தனது உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையே பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

தில்லி மாநகரத் தேர்தல், குஜராத் உள்ளாட்சிமன்றத் தேர்தல் ஆகியவற்றிலும் காங்கிரஸýக்கு எளிதான வெற்றி கிட்டிவிடவில்லை. ஜார்க்கண்ட் மாநிலமும் பிரச்சினைக்குரிய களம்தான். உத்தரகண்டில் ஏற்பட்ட முடிவுகள் உத்தரப்பிரதேசத்திலும் எதிரொலிக்கும். மேல் சாதியினர் பாஜக பக்கமும் தாழ்த்தப்பட்டவர்கள் மாயாவதி பக்கமும் போகக்கூடிய அறிகுறிகள் தெரிகின்றன.

பஞ்சாபிலும் உத்தரகண்டிலும் பாஜகவுக்கு புத்துயிர் கிட்டியிருப்பதால் முஸ்லிம்கள் கலக்கம் அடைந்து, இதை எதிர்கொள்ளக்கூடிய உறுதியான ஒரே தலைவர் முலாயம்தான் என்று அவர் பக்கம் சாயக்கூடும்.

பாஜகவிடமிருந்தே காங்கிரஸ் கட்சி சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். “இந்தியா ஒளிர்கிறது’ என்று பேசி வீணாகிப்போன பாஜக பாதையிலேயே காங்கிரஸ் இப்போது போவது போலத் தெரிகிறது.

2004 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்த சாமான்ய மனிதனை (ஆம்-ஆத்மி) விட்டு கட்சி விலகிச் செல்கிறது. விலைவாசி உயர்ந்துவிட்டது என்று ஒப்புக்கொள்வது மட்டும் போதாது. பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு நிற்காமல் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் சோனியா முயற்சிக்க வேண்டும்.

அடுத்தபடியாக, முடிவுகளை எடுக்கும் முறையை காங்கிரஸ் மாற்றிக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியின் அல்லது அரசின் சிலர் மட்டும் கூடி முடிவுகளை எடுக்காமல், பலர்கூடி விவாதித்து முடிவுகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுடைய உணர்வுகளுக்கு எதிரான முடிவுகளைத் தவிர்க்க முடியும்.

இப்போது நடந்து முடிந்த தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அம்சம், “”மதம் சார்ந்த” உணர்ச்சிகரமான பிரச்சினைகளைப் பேசி எந்தக் கட்சியும் வாக்கு கோரவில்லை. ஹிந்துத்துவாவைப் பற்றிப் பேசுவதைக் கைவிட்டு விலைவாசி உயர்வை மட்டும் அதிகம் வலியுறுத்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது. அகாலிதளமும் சீக்கியமார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை அரசியல் மேடையில் விவாதிக்கவில்லை.

விதிவிலக்காக, காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் சோனியா காந்தியும் பாஜகவின் மதவாதத் தன்மையைப் பற்றி பொதுக்கூட்டங்களில் பேசினர். பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த ஹிந்துக்கள்தான் பஞ்சாப் நகர்ப்புறங்களில் பெரும்பான்மையினராக வசிக்கின்றனர். அவர்களிடம் போய் “”மதச்சார்பின்மை, சிறுபான்மையினருக்கு ஆபத்து” என்ற விஷயங்கள் எல்லாம் எடுபடுமா என்று யோசித்திருக்க வேண்டும்.

3 மாதங்களுக்கு முன்னால் பாஜகவின் தலைமையே கவலையோடு இருந்தது, “”பஞ்சாபில் நம்முடைய கட்சியை வெற்றிபெற வைக்க, பிரபலமான முகங்களே இல்லையே?” என்று. காங்கிரஸின் ஹிந்துத்துவ எதிர்ப்புப் பிரசாரமே பாஜகவுக்கு பஞ்சாபிலும் உத்தரகண்டிலும் அதிக வாக்குகளைப் பெற்றுத்தந்தது என்றால் மிகையில்லை. பஞ்சாபின் மால்வா பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை ஆதரவு அதிகம் கிடைத்தும், ஆட்சி போனது துரதிருஷ்டவசமானது. இந்த இடம் அகாலிகளின் கோட்டை என்றே கருதப்பட்டுவந்தது.

லூதியானாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய பொதுக்கூட்டத்துக்கு சில ஆயிரம் பேர்களே வந்தது, பிரசாரத்தின் விறுவிறுப்பையே குறைத்துவிட்டது.

அதேசமயம், அத்வானி, வாஜபேயி ஆகியோரின் செல்வாக்கை ஒரேயடியாக நிராகரித்துவிட முடியாது என்பதை அவர்களுடைய தேர்தல் பொதுக்கூட்டங்கள் சுட்டிக்காட்டின.

சோனியா காந்தி கட்சித் தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்ட புதிதில் தினமும் நாட்டு நடப்புகளை கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் விவாதித்தார். அதனால் அனைத்து தரப்பினரின் கருத்துகளும் தலைமைக்குக் கிடைத்து வந்தது. இந்த எண்ணிக்கை குறைந்ததால், வெகுஜனங்களைவிட்டு தலைமை தனிமைப்பட்டு போக ஆரம்பித்துவிட்டது. அப்படியொரு ஆலோசனை நடந்திருந்தால், உத்தரப்பிரதேசத்தில் முலாயம் ஆட்சி கலைப்பு நிச்சயம் என்ற பரபரப்பும், அதனால் காங்கிரஸýக்கு கெட்ட பெயரும் ஏற்பட்டிருக்காது.

காங்கிரஸ் காரியக்கமிட்டி என்பது மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பாக அது வலுப்படுத்தப்பட வேண்டும். வேறு எந்தப்பதவியும் கொடுத்து திருப்திப்படுத்த முடியாத பிரமுகர்களுக்கான ஓய்வில்லம் போல அதை நடத்தக்கூடாது. சமீபத்திய தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்தும் மிக முக்கிய பாடம் இதுதான்.

தமிழில்: சாரி.

Kalki Editorial (March 9, 2007 )

கட்டெறும்பு காங்கிரஸ்!

பஞ்சாப் தேர்தலில் அம்மாநில நிதியமைச்சராக இருந்த சுரிந்தர்
சிங்க்லா, பா.ஜ.க. வேட்பாளர் சித்துவிடம் தோற்றுப் போயிருக்கிறார். இத்தனைக்கும் சித்து மீது கொலை வழக்குத் தொடரப்பட்டு, அவர் அக்குற்றத்துக்காக தண்டனையும் விதிக்கப் பெற்றவர்!

பஞ்சாப் மக்களுக்கு காங்கிரஸிடமும் அதன் பொருளாதாரக் கொள்கையிடமும் சிறிதும் நம்பிக்கை இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.

பஞ்சாபிலும் சரி, உத்தரகாண்டிலும் சரி, காங்கிரஸ் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போயிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் தேசிய கட்சியாக, நாட்டின் நான்கு திசைகளிலும் வலுவாக இருந்த காங்கிரஸ், இன்றைக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய மாநிலங்களில்தான் ஆட்சியில் இருக்கிறது.

இதற்கான காரணங்களை ஆராய்ந்து சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், கட்டெறும்பாகத் தேய்ந்து போயிருக்கும் காங்கிரஸ், சில ஆண்டுகளுக்குள் காணாமலே போய்விடும்.

நேரு குடும்பத்தினரின் தலைமைக்காக மட்டுமே இனிமேல் வோட்டு
விழாது என்பது தெளிவாகிவிட்டது. கட்சியின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சோனியா காந்தி, இவ்வுண்மையை ஏற்று, கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவதுடன், அதன் கொள்கைகளையும்
மறுபரிசீலனைக்குட்படுத்தி, மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

பஞ்சாப் முதல்வராக விளங்கிய அமரிந்தர் சிங், ‘எடுத்தேன்
கவிழ்த்தேன்’ என்று ஆட்சி நடத்தியிருக்கிறார். பழிவாங்கும் நடவடிக்கை, அண்டை மாநிலத்துடனான நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுதல் என்று ஆட்சிக்கும் கட்சிக்கும் அவப்பெயர் தேடிக் கொண்டிருக்கிறார். உத்தரகாண்ட் முதல்வரோ, தமக்கு
வயதாகிவிட்டது; ஆட்சிப் பொறுப்பில் நீடிப்பது கஷ்டம் என்று
வெளிப்படையாகவே புலம்பியிருக்கிறார்!

காங்கிரஸ் தலைமை, உட்கட்சி ஜனநாயகத்தைக் கடைப்பிடித்து சட்டமன்றத் தலைவரைத் தேர்ந்தெடுத்திருந்தால், இதுபோன்ற குளறுபடிகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு. கட்சித்
தலைமையின் ஆசி மட்டும் இருந்து, தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பு இல்லையென்றால், ஒரு முதல்வர்
சிறப்பாகச் செயல்பட முடியாது. தனிநபர் ஆளுமைக்குத் தரப்படும் வெற்று முக்கியத்துவத்தைக் களைந்து, உட்கட்சி ஜனநாயகத்தை காங்கிரஸ் ஏற்றாக வேண்டும்.

மாநில அளவில் மட்டுமின்றி மத்திய ஆட்சி அளவில் எடுக்கப்படும் முடிவுகளும் கடைபிடிக்கப்படும் கொள்கைகளும்கூட காங்கிரஸின் வெற்றி வாய்ப்புகளைப் பாதித்துத் தோல்விக்கு வழிவகுத்துள்ளன. காங்கிரஸ் தரப்பில் இதை அவசரமாக மறுத்தாலும், நாடு தழுவிய
விலைவாசி உயர்வுதான் அதன் இமேஜை மிக அதிகமாகக் காயப்படுத்தியிருக்கிறது.

‘‘பண வீக்கம் மிக அதிகமாக இருப்பது கவலை தருகிறது. அதைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்’’ என்று மத்திய நிதியமைச்சரே பேசி என்ன பயன்? ‘ஒரு கண்ணுக்கு வெண்ணெய், மறு கண்ணுக்குச் சுண்ணாம்பு’ என்பதுபோல், மத்திய அரசு ஐ.டி. கார் உற்பத்தித் துறைகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள், வரி விலக்குத் தந்துவிட்டு, பிற
நிறுவனங்களுக்கு வரிச் சுமையை ஏற்றுகிறது. வரி கூடுவதால் வரி ஏய்ப்பும் கூடி, கறுப்புப் பணப் புழக்கத்துக்குக் காரணமாகிறது. ஐ.டி. துறையின் சம்பள விகிதங்களும் அதில் குவியும் லாபமும் ஏகப்பட்ட பணப் புழக்கத்துக்குக் காரணமாகின்றன. இதனால், ஒரு பிரிவினர் மட்டுமே வசதி கூடி ராஜபோகமாய் வாழ, பிறர் அன்றாடச் செலவுகளைச் சரிக்கட்டவே அவஸ்தைப்படுகின்றனர்.

இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் மேற்கொண்டுள்ள விவசாயத் தொழில் மீதும் அதைச் சார்ந்த பிற தொழில்கள் மீதும் கவனம் திருப்பி, ஆதரவு அளித்து, அவை பெருகி உணவுப் பற்றாக்குறையும்
வேலையில்லாத் திண்டாட்டமும் தீர வேண்டும். காங்கிரஸின் கொள்கையும் செயல்பாடும் இத்திசை நோக்கித்
திரும்பினாலேயழிய அக் கட்சிக்குக் கதிமோட்சம் இல்லை!
Congress TV – Kalki

வாசனும், இளங்கோவனும் இணைந்து விட்டதாகக் கிசுகிசுக்கிறது தமிழக காங்கிரஸ் வட்டாரம். வாசனுக்கு எதிராக அணி திரள முதலில் கிருஷ்ணசாமிக்கு ஓகே சொன்னார் இளங்கோவன். ஆனால், காலப்போக்கில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்ட கிருஷ்ணசாமி, இளங்கோவன் தரப்புப் பிரமுகர்களைத் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டாராம். அதுதான் இளங்கோவன் கோபத்துக்குக் காரணம். ஆனால் ப. சிதம்பரம் மிகவும் உறுதியாகத் தன்னை ஆதரிப்பதால், தன் பதவிக்கு ஆபத்து இருக்காது என்று நம்புகிறார் சாமி!

காங்கிரஸ் கட்சியும் தமக்காக ஒரு டி.வி. சேனல் துவங்க ஏற்பாடு செய்து விட்டதாம்! காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், வியாபாரப்
பிரமுகருமான வசந்தகுமார், தமது பெயரிலேயே துவங்கும் சேனல் காங்கிரஸார் ஆசையைத் தீர்த்து வைக்கப் போகிறது. இதற்காக, தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘இமயம்’ என்ற சேனலை
வாங்கிவிட்டார்களாம்!

தி.மு.க.வை காங்கிரஸிடமிருந்து பிரிப்பதற்கு விடுதலைப்புலிகள்
விவகாரம்தான் சரி என்ற அணுகுமுறையை ஜெயலலிதா
கையிலெடுத்திருக்கிறார். சமீபத்தில் புலிகளின் ஆயுதக் கப்பல்
பிடிபட்டது, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ‘புலிகள் சென்னையில் பங்கு மார்க்கெட் நிறுவனங்கள் வைத்திருக்கிறார்கள்’ என்று சொன்னது ஆகியவற்றை காங்கிரஸின் டெல்லிப் பிரமுகர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று ‘பிரிக்கும்’ வேலையில் ஈடுபட, அ.தி.மு.க.வின் ராஜ்ய சபா உறுப்பினர்கள்
முடுக்கிவிடப்பட்டிருக்கிறார்கள்.

தமிழக அரசியல்வாதிகள் தங்கள் கல்விச் ‘சேவை’யை நம்
மாநிலத்துக்கு வெளியேயும் விஸ்தரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தங்கபாலு ஜம்முவில் மருத்துவக் கல்லூரி ஒன்றைத் துவக்க
இருக்கிறாராம்!

சைதை துரைசாமி ஆண்டொன்றுக்கு நூறு மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

============================

Dinamani – March 13, 2007

காஷ்மீரில் துணிச்சலான முடிவை எடுக்குமா காங்கிரஸ்?

நீரஜா செüத்ரி

காஷ்மீர் அரசியலில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

ஆளும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸýக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான உறவில் புதிய உரசல்கள் ஏற்பட்டிருக்கின்றன; உறவை உடைக்கும் அளவுக்கு அந்த உரசல் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

எனவே, அது தொடர்பாகப் பேச வருமாறு முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவருமான முப்தி முகம்மது சய்யீதை தில்லிக்கு அழைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். தனக்கு உடல்நலம் சரியில்லாததால், தனது மகளும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தியை தில்லிக்கு அனுப்பினார் சய்யீத்.

காஷ்மீரின் பல பகுதிகளில் காவல் பணியில் இருக்கும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய தலைவர்களிடம் நேரில் வலியுறுத்துவதற்காக மெஹ்பூபா அனுப்பப்பட்டார். அதோடு, தமது கருத்துகள் அடங்கிய கடிதத்தையும் அனுப்பி வைத்தார் சய்யீத். எனினும், படை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டார் பிரதமர்.

ஜம்மு ~ காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக பாகிஸ்தான் அதிபர் முஷாரப் முன்மொழிந்துள்ள யோசனைகளில் ஒன்று, காஷ்மீரை ராணுவம் இல்லாத பகுதியாக அறிவிப்பதாகும். இந்த யோசனையைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர், ஜம்மு ~ காஷ்மீர் முதல்வரான குலாம் நபி ஆசாத்.

“காஷ்மீரில் இருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்வது என்பது வேறு; மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் பணியில் உள்ள படைவீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது வேறு. ராணுவமில்லாப் பகுதியாக அறிவிப்பது என்றால், எல்லையில் இருந்தும் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோருவதாகும். இதை நாங்கள் கோரவில்லை. மாநிலத்தில் நிலைமை மேம்பட்டுள்ளதால், பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவமனைகள், தனியார் இல்லங்கள் போன்ற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைவீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை’ என்று மக்கள் ஜனநாயகக் கட்சி வாதிடுகிறது.

உண்மையில், “”காஷ்மீரில் கூட்டு நிர்வாகம்” என்பதுதான் முஷாரபின் அமைதித் திட்டத்தில் சர்ச்சைக்குரிய அம்சமாகும். “”கூட்டு நிர்வாகம்” என்பது காஷ்மீர் மீதான இந்தியாவின் இறையாண்மையைக் காவுகொடுப்பதாக அமைந்துவிடும் என்று பிரதமரை பாரதீய ஜனதா தலைவர்கள் ஏற்கெனவே எச்சரித்துள்ளனர்.

ஆனால், “”கூட்டு நிர்வாகம்” என்ற யோசனையல்ல; மாறாக, “படை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது’ என்ற யோசனையே, ஜம்மு ~ காஷ்மீரில் ஆளும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸýக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவிட்டது.

இந்தியா ~ பாகிஸ்தான் இடையிலான சமாதான முன்முயற்சிகளின் வேகம் தற்போது குறைந்துள்ளது; காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிகளின் வேகமும் குன்றியிருக்கிறது. இதற்கும் நாட்டின் அரசியல் நிலைமைக்கும் தொடர்பு உண்டு என்பது அனைவரும் அறிந்ததுதான்.

தேசியப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையில் எங்காவது தவறாக ஓர் அடியை காங்கிரஸ் எடுத்து வைத்துவிட்டால் போதும்; அதற்கும் சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பூர்வீகத்துக்கும் முடிச்சுப் போட்டு, அதைப் பெரும் பிரச்சினையாக்கிவிட எதிர்க்கட்சியான பாஜக காத்துக் கொண்டிருக்கிறது என்பதை காங்கிரஸ் அறிந்தே இருக்கிறது. அதனால்தான் மிக மிக எச்சரிக்கையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் சோனியா.

சியாச்சின் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஓர் உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அதிகாரிகள் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால், அதில் ராணுவத்துக்கு ஆட்சேபம் இருப்பதால், சியாச்சின் பனிச்சிகரப் பகுதிகளில் இருந்து இந்தியப் படைகளை வாபஸ் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் சோனியாதான் என்று கூறப்படுகிறது.

சியாச்சின் பகுதியில் இருந்து இந்தியப் படைகளைத் திரும்பப் பெற்றவுடன் பாகிஸ்தான் படை அதை ஆக்கிரமித்துவிட்டால், மீண்டும் அதைக் கைப்பற்றுவது மிகக் கடினமான செயலாகிவிடும் என்று அரசிடம் தெளிவுபடுத்திவிட்டனர் ராணுவ அதிகாரிகள்.

பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இல்லாமலே, வெளியுறவு விவகாரங்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளும் அளவுக்கு அந்த அமைச்சகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார் அமைச்சர் பிரணப் முகர்ஜி.

பாகிஸ்தானுடன் நல்லுறவு, காஷ்மீர்ச் சிக்கலுக்குத் தீர்வு ஆகிய பிரச்சினைகளில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்காமல், படிப்படியாக முன்னேறிச் செல்வதையே அவரும் விரும்புகிறார்.

ஆனால் காஷ்மீரைப் பொருத்தவரை காலம் கரைந்து கொண்டிருக்கிறது. ராணுவத்துடனான மோதல்களில் பலியானவர்கள் என்று கூறப்படுவோரின் சடலங்கள் அண்மையில் காஷ்மீரில் தோண்டி எடுக்கப்பட்டன; அப் பிரச்சினை மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது கவலை அளிக்கும் அறிகுறி. புதிய முன்முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மக்கள் மத்தியில் தமக்கு இருக்கும் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே என்ற பதற்றம் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜம்மு ~ காஷ்மீரில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் நோக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் வாதத்திலும் நியாயம் இல்லாமலில்லை. ராணுவ ரீதியிலான தீர்வு இல்லை என்றாகிவிட்டது; மாநிலத்தின் அமைதிச் சூழலிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவமனைகள் போன்ற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் மத்திய அரசின் மீதான நல்லெண்ணம்தான் அதிகரிக்கும் என்று அக் கட்சி கூறுகிறது.

நிலைமை மோசமாக இருந்தபோது பாதுகாப்புப் படைகள் வந்தன; நிலைமை மேம்பட்டவுடன் அவை திரும்பப் பெறப்படுகின்றன என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும்; இது, அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்; காங்கிரஸýக்கும் இது ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இருக்கும்.

தமிழில்: லியோ ரொட்ரிகோ.

Posted in ADMK, Agriculture, Aklai Dal, Amitabh, BJP, BSP, Chaari, Chidambaram, Coalition, Commerce, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Delhi, DMK, Economy, Elangovan, Elankovan, Elections, Finance, Ghulam, Gujarat, Gulam, Gulam Nabi Azad, Ilangovan, Ilankovan, Inflation, Jammu, JJ, Kalki, Kashmir, Kisukisu, Krishnasami, Krishnasamy, LTTE, Manipur, Manmohan, Manmohan Singh, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, Mehbooba, Mufthi, Mufti, Mulayam, Muslims, Neeraja, Neeraja Chowdhry, News, Pakistan, Punjab, Results, Rumor, Rumour, Sayeed, Sayid, Siachen, Sonia, Srinagar, Thangabalu, UP, Uttar Pradesh, Uttarkand, Uttarkhand, Vambu, Vasan, Vasanth & Co, Vasanthakumar | Leave a Comment »

Mulayam Singh Yadav – UP Political Calculations : Congress, Mayavathy, BJP, BSP MLAs

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

முலாயம் ஆட்சியைக் கவிழ்ப்பது நல்லதா, கெட்டதா?

நீரஜா செüத்ரி

உத்தரப் பிரதேசத்தை யாருடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பதற்கான போர் தொடங்கிவிட்டது. காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் ஆகிய மூன்றுமே குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்கின்றன.

உ.பி. சட்டப் பேரவை பொதுத்தேர்தல் நடைபெறும்போது, மாநிலத்தை யார் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பதில்தான் இப்போது கடும் போட்டி.

ஏப்ரலில் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடக்கும்போது மாநிலம் நம் கையில் இருக்க வேண்டும் என்று முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியும், காங்கிரஸýம் நினைக்கின்றன.

பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி முலாயம் சிங்கை ஆதரித்த 13 சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது; எனவே முலாயம் சிங் அரசே அரசியல் சட்டத்துக்கு முரணாகவும் சட்டவிரோதமாகவும் பதவியில் இருக்கிறது என்பது காங்கிரஸ் கட்சியின் வாதம்.

முதல்வர் பதவியிலிருந்து மாயாவதி ராஜிநாமா செய்ததும், அவருடைய கட்சியிலிருந்து முதலில் வெளியேறிய இந்த 13 உறுப்பினர்களின் ஆதரவை பேரவைத் தலைவர் செல்லும் என ஏற்றுக்கொண்டதால்தான், முலாயம் சிங்கால் மாற்று ஆட்சியை அமைக்க முடிந்தது என்று சுட்டிக்காட்டுகிறது காங்கிரஸ்.

இதே அடிப்படையில், பிறகு சேர்ந்த 24 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் பதவியையும் பறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோருகிறது. இந்த 37 பேரையும் ஒரே தொகுதியாக உச்ச நீதிமன்றம் கருதவில்லை. மாயாவதி ஆட்சியில் இருந்தபோது பேரவையில் அக்கட்சிக்கு மொத்தம் 109 உறுப்பினர்கள் இருந்தனர். 37 பேரும் ஒரே சமயத்தில் கட்சியிலிருந்து விலகி வந்திருந்தால் அதை “”மூன்றில் ஒருபங்காக”க் கருதியிருக்க முடியும், எனவே இதை கட்சிப்பிளவு இல்லை, தாவல்தான் என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது.

எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பு, உத்தரப் பிரதேசத்துக்கு பொருந்தவே பொருந்தாது என்கிறார் மத்திய அமைச்சரும் சட்ட நிபுணருமான கபில் சிபல். ஓர் அரசுக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறதா இல்லையா என்பதை சட்டப் பேரவையிலும் மக்களவையிலும்தான் சோதித்துப் பார்க்க வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. ஆனால் முலாயம் அரசோ, பதவிக்கு வந்த முதல் நாளிலிருந்தே சட்டவிரோத அரசாகத் திகழ்கிறது என்கிறார் கபில் சிபல்.

உச்ச நீதிமன்றம் 24 எம்.எல்.ஏ.க்கள் பதவிபறிப்பு குறித்து ஏதும் கூறவில்லை; உத்தரப் பிரதேச அரசு சட்டவிரோதமாகப் பதவி வகிக்கிறது. அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றும் கூறவில்லை. எனவே பேரவையில்தான் வலுவை நிரூபிக்குமாறு கூற வேண்டும் என்று சமாஜவாதி கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் வலியுறுத்துகின்றன.

உ.பி. ஆளுநர் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டார். ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டு வருமாறு அவர் பரிந்துரை செய்துள்ளார் என்று தில்லியில் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது முடிவு மத்திய அரசின் கையில் இருக்கிறது.

முலாயம் சிங் ஆட்சியில் நீடித்தால் சட்டப் பேரவைத் தேர்தல் முறையாக நடக்காது என்பது காங்கிரஸ், பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் கருத்தாகும்.

குடியரசுத் தலைவர் ஆட்சியில் தேர்தல் நடந்தால் காங்கிரஸýக்கு 50 முதல் 60 இடங்கள் வரை கிடைக்கும், அதைக்கொண்டு மாயாவதியுடன் கூட்டு சேர்ந்து உ.பி.யில் மீண்டும் கால் ஊன்றலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் முலாயம் சிங். ஆனால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்தால், காங்கிரஸ் கட்சிக்கு அது ஆபத்தாகவும் முடியலாம். மக்களின் கோபத்துக்கு உள்ளாகவும் நேரிடலாம். காங்கிரஸ் கட்சியை வெளியிலிருந்து ஆதரிக்கும் திமுக, லாலு கட்சி போன்றவையும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதை ஆதரிக்காமல் போகக்கூடும்.

மக்களவையில் இடதுசாரிகளுக்கு 61 இடங்களும் முலாயம் கட்சிக்கு 40 இடங்களும் உள்ளன. காங்கிரஸின் செயலால் கோபம் அடைந்து இவர்கள் இணைந்தால் மக்களவையில் மூன்றாவது அணி ஏற்பட்டுவிடக்கூடும். அது காங்கிரஸýக்கு நல்லதல்ல.

எல்லாவற்றையும்விட முக்கியம், முஸ்லிம் வாக்காளர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்? “”பாஜகவும் காங்கிரஸýம் ரகசியமாக கைகோர்த்து என்னைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டன, நான் முஸ்லிம்களுக்கு நண்பன் என்பதால்தான் இந்தத் தண்டனை” என்று முலாயம் பிரசாரம் செய்யக்கூடும். அது ஒருவேளை எடுபட்டால், காங்கிரஸýக்கு முஸ்லிம்களிடையே உள்ள ஆதரவும் போய்விடும்.

முலாயம் சிங் ஆட்சியை இழந்துவிட்டால் அவர் மீது அனுதாபம் பொங்கலாம். அதையே அவர் பயன்படுத்தி மீண்டும் தேர்தலில் வென்று இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம். மாநில அரசைக் கவிழ்த்த பிறகு கெட்ட பெயர் மட்டும்தான் காங்கிரஸýக்கு மிஞ்சும் என்றால் அதனால் என்ன பயன்?

ஆட்சியைப் பிடிப்பதற்காக முலாயம் சிங் செய்ததும், காங்கிரஸ் கட்சி செய்ய நினைப்பதும் நமது ஜனநாயகத்தை மேலும் பலவீனப்படுத்தத்தான் உதவும் என்பதை மறுக்க முடியாது; நமக்கு ஜனநாயக அமைப்புகள் மீதே நம்பிக்கை இல்லை என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

தமிழில்: சாரி.

முலாயம் அரசுக்கு நெருக்கடி

உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக்கூடும் என கடந்த சில நாள்களாகச் செய்திகள் அடிபடுகின்றன.

மாநில ஆளுநர் இதற்குச் சாதகமாக ஏற்கெனவே மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். தங்களுக்குப் பிடிக்காத அரசை டிஸ்மிஸ் செய்வது என்பது காங்கிரஸ் கட்சிக்கு கைவந்த கலை. மத்தியில் காங்கிரஸýக்கு தனிப் பெரும்பான்மை பலம் இருந்த காலத்தில் இந்த ஆயுதம் பல தடவைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் மத்தியில் இப்போது காங்கிரஸýக்குப் பெரும்பான்மை பலம் இல்லை. அந்த நிலையில் முலாயம் சிங் அரசை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி பகிரங்கமாகவே எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் தனது சுருதியை மாற்றிக் கொண்டு முலாயம் சிங் அரசு பதவி விலக வேண்டும் என்று கோர ஆரம்பித்துள்ளது. கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உ.பி. சட்டமன்றத்தில் முலாயம் சிங் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டார் என வாதிக்க முற்பட்டுள்ளது. 2003-ஆம் ஆண்டிலிருந்து முலாயம் சிங் அரசு சட்டவிரோதமாக ஆட்சியில் இருந்து வந்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது.

“தைரியமிருந்தால் என்னை டிஸ்மிஸ் செய்து பாருங்கள்’ என முலாயம் சிங் சவால் விடுத்துள்ளார். வருகிற 26-ம் தேதி சட்டமன்றத்தில் தமக்குள்ள பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஓராண்டில் அவர் ஆறு தடவை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த மாதம் நடந்த வாக்கெடுப்பின்போது முலாயம் சிங் அரசுக்கு அவரது கூட்டணியின் உண்மையான பலத்தைவிட கூடுதலாகவே வாக்குகள் கிடைத்தன. ஆகவே வருகிற 26-ம் தேதியன்று வாக்கெடுப்பில் அவர் வென்றாலும் வியப்பில்லை.

இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஓரிரு மாதங்களில் உ.பி. சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்குள் எப்படியாவது முலாயம் சிங் தலைமையிலான அரசை அகற்றி விட வேண்டும் என்பது காங்கிரஸின் நோக்கம். தேர்தலின்போது முலாயம் சிங் அரசு பதவியில் நீடித்தால் அதிகாரிகள் மாற்றம் உள்பட பல வகைகளிலும் அவர் தமது கட்சிக்கான சாதக நிலையை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று காங்கிரஸ் அஞ்சுகிறது. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினால் தேர்தலின்போது ஆளுநர் மூலமாக காங்கிரஸ் அதே வழிகளைப் பின்பற்ற முயலும்.

முலாயம் சிங் அரசை பதவிநீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜகவும் கூறுகிறது. இது தொடர்பாக பின்னர் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும்போது அதை ஆதரித்து வாக்களிக்கவும் தயார் என பாஜக கூறுகிறது. தோழமைக் கட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சியான பாஜகவின் ஆதரவு இருக்கிறது என்ற நினைப்பில் காங்கிரஸ் ஒருவேளை முலாயம் சிங் அரசை டிஸ்மிஸ் செய்யத் துணியலாம்.

முலாயம் சிங் மீது இப்போது மிகத் தீவிரமாகக் குறி வைக்கிற இதே காங்கிரஸ் கட்சிதான் கடந்த மாதம் வரை அவரது அரசுக்கு முட்டுக்கொடுத்து நின்றது என்பதை மறந்துவிடலாகாது. தவிர கடந்த தேர்தலில் நான்காவது இடத்தைப் பிடித்த காங்கிரஸôல் வரப்போகிற தேர்தலில் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் முலாயம் சிங் அரசை அகற்றுவதன் மூலம் கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ள காங்கிரஸ் ஏன் விரும்புகிறது என்பது புரியவில்லை.

புதிது புதிதாகப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்குப் பதில் 26-ம் தேதி உ.பி. சட்டமன்றத்தில் பலப்பரீட்சை நடைபெற அனுமதிப்பதே ஜனநாயக முறையாகும்.

 Dinamani Editorial (Feb 23, 2007)

முந்தியது தேர்தல்

உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்று கடந்த சில நாள்களாக நீடித்து வந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது தேர்தல் கமிஷனின் அறிவிப்பு.

முலாயம் சிங்குக்கு ஆதரவு அளித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்களின் பதவியை கட்சி மாறல் தடைச் சட்டத்தின் கீழ் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து முலாயம் சிங் பதவியில் நீடிக்கும் தார்மிக உரிமையை இழந்து விட்டார்; அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் பாரதீய ஜனதாவும் இதற்கு ஆதரவு அளித்தன. ஆனால் மத்தியில் கூட்டணி அரசுக்கு ஆதரவாக உள்ள மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரிகளை இணங்க வைக்க காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகளுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கவில்லை.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 14ம் தேதியுடன் முடிகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 7 தொடங்கி மே 8 வரை ஏறக்குறைய ஒரு மாதம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான இங்கு லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. எனவே, தேர்தல் நடத்த நீண்ட அவகாசம் தேவைப்படுகிறது என்று தேர்தல் கமிஷன் விளக்கியுள்ளது.

மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி அதன் மூலம் ஆளுநர் செல்வாக்கால் தனக்குச் சாதகமாக முடிவை மாற்ற காங்கிரஸ் முயற்சி செய்வதாகக் கூறிவந்தார் முதல்வர் முலாயம் சிங். இதற்கிடையில், தமது அரசைக் கலைக்க பாரதீய ஜனதாவுடன் கைகோர்த்துச் செல்வதாகக் கூறி மத்திய அரசுக்கு தாம் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக புதன்கிழமை அதிரடியாக அறிவித்தார். சமாஜவாதி கட்சிக்கு மக்களவையில் 38 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 16 பேரும் உள்ளனர். ஆதரவு வாபஸ் காரணமாக மத்திய அரசுக்கு ஆபத்து இல்லையென்றாலும் காங்கிரஸின் போக்குக்குப் பதிலடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

வரும் 26ம் தேதி பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரப்போவதாக அவர் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இச் சூழ்நிலையில் பேரவையைக் கலைத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு நீதிமன்றம் செல்லும் சூழ்நிலை ஏற்படும். பெரும்பான்மையை நிரூபிக்க பேரவைதான் சரியான இடம் என்று ஏற்கெனவே எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல்சாசன பெஞ்ச் தீர்ப்பளித்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது முறையாக இருக்காது என்று பல்வேறு தரப்புகளிலும் கருத்து கூறப்பட்டது.

ஆட்சியில் முலாயம் தொடர்ந்தால் அரசின் சாதனங்களைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இனி நிர்வாகத்தில் எத்தகைய மாற்றங்களையும் அவர் செய்ய இயலாது. மேலும், மக்களைக் கவரப் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது.

தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் இத்தகைய தேவையற்ற சர்ச்சைகளைக் கட்சிகள் தவிர்த்திருக்கலாம். சில மாதங்களில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களுக்குச் சாதகமான ஒருவரைத் தேர்வு செய்ய உ.பி. ஆதரவு தேவை என்பதால் அங்கு ஆட்சியைப் பிடிப்பதில் காங்கிரஸ் கண்ணும் கருத்துமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

மக்கள் நலனே தங்களின் குறிக்கோள் என்று கூறும் அரசியல் கட்சிகள் மறைமுக வழிகளில் தங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளும் போக்குக்கு முடிவு கட்ட வேண்டும். எத்தகைய தீர்வையும் மக்கள் மன்றத்திடமே விட்டுவிட வேண்டும். இதுவே ஆரோக்கியமான ஜனநாயக வழிமுறையாகும்.

Posted in Amar Singh, Amitabh, BJP, BSP, CM, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Elections, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, Mulayam, Mulayam Singh, Mulayam Singh Yadav, Neeraja Chowdhry, Polls, UP, Uttar Pradesh | Leave a Comment »

CPI hails CPI(M) stand not to associate with Mulayam

Posted by Snapjudge மேல் திசெம்பர் 8, 2006

முலாயம் அரசுக்கு எதிராக வி.பி.சிங் 5 நாள் பிரசாரம்

மசூரி, டிச. 8: உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் ஆட்சிக்கு எதிராக 5 நாள் பிரசாரத்தை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் வியாழக்கிழமை துவக்கினார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அவர் இந்தப் பிரசாரத்தைத் தொடக்கியுள்ளார். ஜன் மோர்ச்சா கட்சி தலைவரும், நடிகருமான ராஜ் பாப்பரும் இந்தப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். சமாஜ்வாதி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஜன் மோர்ச்சாவை ஆரம்பித்து அதற்கு தலைவராகி உள்ளார் ராஜ்பாப்பர்.

5 நாள் பிரசார யாத்திரையில், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

உ.பி.சட்டசபை தேர்தல்: முலாயம்சிங்கை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம்

புதுடெல்லி, டிச.6- பாராளுமன்ற வளாகத்தில் நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா டெல்லி சென்றுள்ளார்.

அங்கு அவர் உத்தரபிரதேச முதல்-மந்திரி முலாயம்சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தேசிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கிடையே இன்று நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அமர்சிங்கை நிருபர்கள் சந்தித்து ஜெயலலிதா-முலாயம்சிங் சந்திப்பு குறித்து கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த அமர்சிங் “உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு பிரசாரம் செய்யவரும்படி ஜெயலலிதாவை அழைத்தோம். அவர் எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டார். எனவே எங்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்வார்” என்றார்.

Posted in AB Bardhan, ADMK, AIADMK, Assembly elections, BSP, Communism, Communist, Communist parties, Communists, CPI, CPI (M), CPI(M), Dalit, Indian Justice Party, Indian Muslims, Jan Morcha, Jayalalitha, Mayavathi, Mayavathy, MGR, Mulayam Singh Yadav, NCP, Rahul Gandhi, Raj Babbar, Raj Bappar, Rajinder Sachar committee report, Samajwadi Party, UP, Uttar Pradesh, Uttaranchal, VP Singh, Women's Reservation Bill | Leave a Comment »