வீரப்பன் பற்றிய டிவி தொடருக்குத் தடை
சென்னை, பிப்.13:சந்தனக் கடத்தல் வீரப்பன் பற்றி தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பக் கூடாது என்று தமிழன் டிவிக்கு சென்னை சிவில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தொடர்ந்த வழக்கில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
“மாவீரன்‘ என்ற தலைப்பில் வீரப்பனின் கதையை படமாக்கி பிப்ரவரி 14 முதல் ஒளிபரப்ப தமிழன் டிவி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. என் அனுமதியில்லாமல் என் கணவரின் கதையை தொலைக்காட்சியில் ஒளிபரப்பக் கூடாது. அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை 8-வது சிவில் நீதிமன்றத்தில் முத்துலட்சுமி வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிப்ரவரி 13-ம் தேதி வரை தமிழன் டிவிக்கு இடைக்காலத் தடை விதித்தது. அன்றைய தினம் இவ்வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்.