Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Marunkapuri’ Category

Marungapuri MLA Elections – Court declares in favor of ADMK: Salma loses

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2007

மருங்காபுரி தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது செல்லும்
தி.மு.க. வழக்கு தள்ளுபடி

சென்னை, ஆக.23-

மருங்காபுரி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லும் என்று, சென்னை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேர்தல் வழக்கு

கடந்த சட்டமன்ற தேர்தலில் மருங்காபுரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சி.சின்னசாமி போட்டியிட்டார். இவரை எதிர்த்து ரொக்கையா மாலிக் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் 2 ஆயிரத்து 532 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வேட்பாளர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ஊழல் புகார்

அ.தி.மு.க. வேட்பாளர் சின்னசாமி கிராமநல குழு தலைவராக இருந்து வந்தார். இந்த குழு தரிசு நில மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வந்தது. இந்த திட்டத்தில் ஊழல் புரிந்ததாக சின்னசாமி மீது புகார் கூறப்பட்டது.

இது தொடர்பான வரவு-செலவு கணக்கை தேர்தலுக்கு முன்பாக முழுவதுமாக அவர் காட்டவில்லை. இவர் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. ஆனால், இந்த திட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், இந்த திட்டம் முடிந்துவிட்டதாகவும் அவர் வேட்பு மனுவில் தவறான விவரங்களை கூறியுள்ளார்.

உண்மைக்கு மாறாக விவரங்களை கூறி வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதால், சின்னசாமி வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

தள்ளுபடி

இந்த வழக்கை நீதிபதி சி.நாகப்பன் விசாரித்தார். இந்த வழக்கை விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்ய வேண்டுமென்று சின்னசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதை ஏற்று இந்த தேர்தல் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து சின்னசாமி வெற்றி பெற்றது செல்லும் என்று நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டுகளுக்கு தக்க ஆதாரங்களை காட்டவில்லை என்றும், ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஓட்டு விவரம்

மருங்காபுரி தொகுதியில் கிடைத்த ஓட்டுகள் விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டுகள்-1,87,542

பதிவான ஓட்டுகள்- 1,13,038

சின்னசாமி (அ.தி.மு.க.)- 57,910

ரொக்கையா மாலிக் (தி.மு.க.)- 55,378

பி.டி.குமார் (பா.ஜனதா)- 9,503

Posted in Marungaburi, Marungapuri, Marunkaburi, Marunkapuri, Salma | Leave a Comment »