ஐம்பதினை எட்டும் நவரடிலோவோ ஐம்பது ஒன்பது பட்டங்களுடன் விடைப்பெற்றார்
![]() |
![]() |
59 கிராண்ட் ஸ்லம் பட்டங்களை வென்றுள்ளார் மார்டினா நவரடிலோவோ |
டென்னிஸ் உலகின் மிகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான மார்டினா நவரடிலோவா அவர்கள், ஃபுரபஷனல் போட்டிகள் அதாவது தொழில் ரீதியான போட்டிகளில் இருந்து ஒய்வுபெற்றுள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் கலப்புப் பட்டத்தினை வென்ற பின் மார்டினா நவரடிலோவா ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் ஐம்பது வயதினை எட்டவுள்ள அமெரிக்கரான நவரடிலோவா, தனது சக நாட்டவரான பாப் பிரையனுடன் இணைந்து செக் குடியரசினை சேர்ந்த ஜோடியினை நேர் செட்களில் வெற்றி கொண்டார்.
அமெரிக்க ஒப்பன் கலப்பு இரட்டையர் பட்டத்தினை வென்றதன் மூலம் தன்னுடைய ஐம்பத்தி ஒன்பதாவது கிராண்ட் ஸ்லம் பட்டத்தினை வென்ற மார்டினா நவரடிலோவா பிராகுவே நாட்டில் பிறந்தவர்.
தொழில் ரீதியான முதல் டென்னிஸ் பட்டத்தினை 1974 ஆம் ஆண்டு மார்டினா நவரடிலோவோ வென்றார். இதன் பின்னர் அமெரிக்காவிற்கு சென்ற அவர் பின்னாளில் அமெரிக்க பிரஜை ஆனார்.
![]() |
கிராண்ட் ஸ்லம் பட்டங்கள் பதினெட்டு ஒற்றையர் பட்டங்கள் நாற்பத்தியொரு இரட்டையர் பட்டங்கள் |
தொடர்ந்து டென்னிஸ் ஆட்டங்களில் சோபித்த அவர், பதினெட்டு கிராண்ட் ஸ்லம் ஒற்றையர் பட்டங்களையும், நாற்பத்தியொரு இரட்டையர் பட்டங்களையும் வென்றார்.
தன்னுடைய சுறுசுறுப்புத்தன்மை மற்றும் விளையாடும் திறனால், பெண்கள் பங்கேற்கும் டென்னிஸ் போட்டிகளை ஒரு புதிய கட்டத்திற்கு மார்டினா நவரடிலோவோ அழைத்து சென்றார்.
ஆனால் அவருடைய டென்னிஸ் வாழ்க்கையில் முக்கியமான குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், ஒரு வீராங்கனையாக அவர் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வரும் காலம் தான்.
அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டிகளின் போது, மார்டினா நவரடிலோவோ விற்கு ஆதரவாக ஆர்ப்பரிக்கும் கூட்டத்தினர் பலர், அவர் விளையாடும் போது பிறந்திருக்க கூட மாட்டார்கள்.
ஆண் பெண் சரிநிகர்சமம் என்பதினை வலியுறுத்தியவராகவும், ஒரினச் சேர்க்கையாளர்களுக்கு ஒரு உதாரணமாகவும் அவர் பார்க்கப்பட்டார். ஆனால் இவை எல்லாவற்றினையும் விட, தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனையாகவே அவர் என்றும் கருதப்படுவார்.