Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Magazines’ Category

Media distortion of News by Dinamalar & Thinamani: Viduthalai

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2008

நாட்டு நடப்பு: சோ – மோடி – பார்ப்பன ஏடுகள்

தினமலர்

பொதுத்தொண்டில் மிக நீண்ட காலம் பணியாற்றி பல்வேறு தியாகத் தழும்புகளைப் பதக்கங்களாக ஏற்றுப் பொலிவுறும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அம்பேத்கர் விருது வழங்கியிருப்பதானது அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், தினமலர் பார்ப்பனப் புத்தி அதனை எப்படி பார்க்கிறது? எப்படி செய்தி வெளியிடுகிறது?
நல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருது என்று மற்ற ஏடுகள் எல்லாம் தலைப்புக் கொடுத்திருக்க, தினமலர் எப்படி செய்தியை வெளியிடுகிறது? நல்லகண்ணுக்கு தமிழக அரசு ரூ.ஒரு லட்சம் என்று தலைப்புக் கொடுக்கிறது.
விருதையும், அண்ணல் அம்பேத்கரையும் பின்னுக்குத் தள்ளி, பணத்தை முன்னுக்கு வைக்கிறது தினமலர்!

செத்து சுடுகாடு போன பிறகும் ஆண்டுதோறும் திதி என்ற பெயரால் பணம் பறிக்கும் கருமாதிப் புத்தி தினமலரைவிட்டு எப்படிப் போகும்? அது அவர்களின் ரத்தத்தில் ஊறிய விஷயமாயிற்றே!


தினமணி

சோ ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஒன்றில், குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி பங்கு கொள்கிறாராம். அது சென்னை – காமராசர் அரங்கில் நடைபெறுகிறதாம். மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை எப்படி வாடகைக்கு விடலாம் என்ற பிரச்சினைபற்றி எழுத வந்த தினமணியின் வைத்தியநாத அய்யர்வாள் சந்தடி சாக்கில் கந்தகப்பொடி தூவும் தம் நச்சு வேலையின் கொடுக்கைத் துருத்திக் காட்டியிருக்கிறார்.

பெரியார் திடலில் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த அனுமதிப்பதுபற்றி சொல்லிவிட்டு, திராவிடர் கழகத்தைப்போல காங்கிரஸ் கட்சி வியாபார நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்று சில காங்கிரஸ்காரர்கள் சொன்னதுபோல செய்தியாக வெளியிடுகிறது தினமணி.

அறிவு நாணயம் தினமணிக்கு இருக்குமானால், அப்படி சொன்னவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாமா?
துக்ளக் பேக்கரியில் தயாரிக்கப்பட்ட இந்தப் பார்ப்பன ரொட்டியான வைத்தியநாதய்யர் தினமணியின் ஆசிரியராக வந்ததுமுதல் துக்ளக்கின் மறுபதிப்பாகவே தினமணியை மாற்றிக் காட்டிவிட்டார். தன்னுடைய அந்தரங்க வெறுப்பை காங்கிரஸ் பேரால் ஏற்றிக் கூறுகிறார்.

மெமோரியல் ஹாலில் தந்தை பெரியார் பேசுவதற்கு இடம் தர முடியாது என்று சொன்ன நேரத்தில், யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளைத் தாராளமாகக் கூறக்கூடிய பொதுமன்றம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று கருதிய தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டதுதான் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம். இது திராவிடர் கழகத்தின் கொள்கை உறுதியையும், எந்தக் கருத்தையும் எதிர்கொள்ளும் துணிவையும் பறைசாற்றும். கடவுளையும், பக்தியையும் வியாபாரப் பொருளாக்கிய கூட்டம் அல்லவா? அதனால்தான் எதையும் வியாபாரக் கண்கொண்டு பார்க்கிறது.

இதுபற்றிப் பல தடவை விளக்கிக் கூறப்பட்ட பின்னரும், வைத்தியநாத அய்யர்கள் தங்கள் பூணூல் தனத்தைக் காட்டிக்கொண்டு இருப்பது அவாளின் பிறவிக்கோணல்புத்தி என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
சோவை அனுமதிப்பவர்கள் மோடியை அனுமதிப்பதில் என்ன தயக்கம்? சோவைப்போல் மோடியைத் தூக்கி வைத்து ஆடுபவர்கள் யாராவது இருக்கிறார்களா?

பார்ப்பனீய – இந்துத்துவா வெறியில் மோடி விஷம் என்றால், திருவாளர் சோ ராமசாமி அந்த விஷத்தின் ஊற்றாயிற்றே!

குஜராத்தில் சிறுபான்மை மக்களை வேட்டையாடிய மோடியை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு சோ கொஞ்சியதுபோல, வேறு யாராவது அவ்வளவுப் பச்சையாக வெறித்தனமாக நடந்துகொண்டது உண்டா?
ஆற அமரச் சிந்தித்தால் இதன் ஆழமும், அகலமும் நன்கு புரியுமே!

Posted in Ambedkar, BJP, Cho, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Community, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dhinamalar, Dhinamani, Dinamalar, Dinamani, distortion, DK, Gujarat, Journals, Magazines, Magz, Media, Modi, MSM, Nallakannu, News, Newspapers, papers, RSS, Thinamalar, Thinamani, Veeramani, Vidudhalai, Viduthalai, Vituthalai, Zines | Leave a Comment »

Masked men burn ‘Anti government’ Sunday Leader newspaper office – Military Aided Press Attack?

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2007

 

எரிக்கப்பட்ட பத்திரிகை அச்சகம்
எரிக்கப்பட்ட பத்திரிகை அச்சகம்

இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தீக்கிரை

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான இரத்மலானை பகுதியில் அமைந்திருக்கும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவொன்று, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அச்சு இயந்திரங்களுக்கு தீவைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களையும், செய்திகளையும் வெளியிட்டுவரும் இந்த பத்திரிகை நிறுவனத்திலிருந்து சண்டே லீடர், மோர்னிங் லீடர் மற்றும் இரிதா பெரமுன என்ற சிங்களமொழி வார இதழ்கள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பான பத்திரிகையாகப் பரவலாகக் கருத்தப்படும் இந்தப் பத்திரிகை நிறுவனத்துக்குள், இன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த முகமூடியணிந்த ஆயுததாரிகள் சுமார் 15 பேர், அங்கு அச்சிடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்களை உட்கார்ந்து இருக்கும்படி உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்த அச்சிடும் இயந்திரங்களுக்கும், ஏற்கனவே இன்றைய வெளியீட்டிற்காக அச்சிடப்பட்டிருந்த மோர்னிங் லீடர் பத்திரிகை இதழ்களுக்கும் பெற்ரோல் ஊற்றி எரியூட்டியதாக அந்த நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.

அத்துடன் இந்த சம்பவம் மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இரத்மலானை விமானப்படைத்தளத்துக்கு அண்மையில் அமைந்துள்ள அலுவலக வளவினுள்ளேயே இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவை குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இதுவரை எவரையும் இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்ததாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட இதேமாதிரியானதொரு சம்பவம் இந்த நிறுவனத்துக்கு, இதே இடத்தில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


ஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு

அகதிகள் முன்னர் மீளக்குடியமரச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம்
அகதிகள் முன்னர் மீளக்குடியமரச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்.

அண்மையில் தமது பகுதிகளில் ஏற்பட்ட சில சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாகவே தாம் இவ்வாறு மீண்டும் இடம்பெயர நேர்ந்ததாக அவர்களில் சிலர் கூறியுள்ளனர்.

ஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்களை மீண்டும் முகாம்களில் பதிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவை குறித்து இடம்பெயர்ந்த சிலரது கருத்துக்கள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கருத்துக்கள் அடங்கலான செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன்
வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன்

வவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

இந்த இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணையின்போது, அவர்களது உறவினர்கள், இராணுவத்தினர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று மாலை 6 மணியளவில் வேப்பங்குளம் இராணுவ முகாமில் தன்னை இராணுவத்தினர் வைத்திருப்பதாகத் தொலைபேசியில் தெரிவித்ததாக இறந்தவரின் மனைவி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

மேலும் 3 இளைஞர்களை இராணுவத்தினர் குறிப்பிட்ட இராணுவ முகாமினுள் சம்பவ தினத்தன்று கொண்டு சென்றதைக் கண்டவர்கள் மூலமாகத் தாங்கள் அறிந்ததாகவும் இறந்தவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பின்னணியில் வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 15 இராணுவத்தினரின் துப்பாக்கிகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

ஐந்து இளைஞர்களும் சடலங்களாகக் காணப்பட்ட இடத்திலிருந்து பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ள 16 வெற்றுத் தோட்டாக்களும், இந்த துப்பாக்கிகளுடன் ஒத்து இணங்குகின்றனவா என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மாவட்ட நீதிபதி, இன்றைய வழக்கு விசாரணையின்போது, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக இரத்துச் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான தனியார் விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராகிய திலீபனின் உருவச்சிலை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தவேளை, திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம், யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் என்பன கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன.


Posted in Airforce, Arms, Asia Tribune, Attack, Blasts, Bombs, Burnt, Colombo, dead, Death, Deface, defence, Defense, Democracy, Dhileepan, Displaced, Editor, Eelam, Eezham, equipment, Extremism, Extremists, Fire, Freedom, Govt, HSZ, IDP, Independence, Irudina, Jaffna, Journal, journalism, journalist, Karuna, Lasantha, Law, Leader, LTTE, Mag, magazine, Magazines, Magz, Media, Military, Morning Leader, News, Newspaper, Office, Opposition, Oppression, Order, owner, paramilitary, Passport, Pillaiaan, Pillaian, Pillaiyaan, Pillaiyan, Police, Press, Propaganda, Rajapaksa, Rajapakse, Rajasingam, Rajasingham, Rajasinkam, Ransack, Rathmalana, Ratmalana, Rebel, Refugees, Reporter, Samarasinghe, Security, Sinhala, Sonali, Statue, Sunday, Sunday Leader, Suppression, Terrorism, terrorist, Terrorists, Thamilselvan, Thileepan, Triconamalee, triconmalee, Vavuniya, wavuniya, Weapons, Wikramatunga | Leave a Comment »

‘Thisai Ettum’ awards Translators & Nalli Kuppusamy Birthday

Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007

பத்து மொழி பெயர்ப்பாளர்களுக்கு விருது

சென்னை: நல்லி, “திசை எட்டும்’ எனும் காலாண்டு இதழ் இணைந்து நுõல் மொழி பெயர்ப்பாளர்கள் 10 பேருக்கு விருது வழங்கிப் பாராட்டியது. சென்னையில் நேற்று நடந்த இவ்விழாவில் துõர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் வரவேற்று பேசினார்.

“திசை எட்டும்’ இதழின் ஆசிரியர் குறிஞ்சிவேலன் விருது பெறுபவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என் பது பற்றி பேசினார். விருதுகளை வழங்கி நல்லி குப்புசாமி பேசுகையில், “”பொது மக்கள் நுõல்களைப் படிக்க ஆர்வமாக உள்ளனர். மொழி பெயர்ப்பு நுõல்களை வழங்குவதற்கான ஆக்கப்பூர்வ பணிகளை நாம் செய்ய வேண்டும்,” என்றார்.

வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர் சிவசங்கரி பேசுகையில், “” ரவீந்திர நாத் தாகூருக்குப் பிறகு நிறைய ஜாம்பவான்கள் வாழ்கின்றனர். அவர்களது இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும். மொழி சிறந்த தொடர்பு சாதனம். நேரடி மொழி மாற்றம், இணையான மொழி மாற்றம், இருந்ததை புதிதாக சொல்லும் மொழி மாற்றம் என மூன்று வகைகளில் மொழி பெயர்ப்பு அமைந்துள்ளது. மொழி பெயர்ப் பாளருக்கும் மூல ஆசிரியருக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும். மொழி பெயர்ப்பு நுõல் என்ற எண்ணம் படிக்கும் வாசகருக்கு வரக்கூடாது,” என்றார்.

சிறப்பு விருந்தினரான டி.ஜி.பி., ராஜேந் திரன் பேசுகையில், “”மொழி பெயர்ப்பாளருக்கு நல்லதொரு சிறப்பை செய்துள் ளீர்கள். இது மாதிரியான சேவைகளால் தான் நாட்டில் மழை பெய்கிறது. இந்த சேவை தொடர வேண்டும்,” என்றார்.

தமிழிலில் இருந்து பிறமொழி மற்றும் பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்த தலா ஐந்து பேர் என பத்து பேருக்கு விருது வழங்கப்பட்டது.

 • ஆங்கில மொழி பெயர்ப்பாளர் பி.ராஜ்ஜா,
 • மலையாள மொழி பெயர்ப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும்
 • சரவணன்,
 • நிர்மால்யா,
 • இறையடியான்,
 • சாந்தா தத்,
 • புவனா நடராஜன்,
 • மந்திரி பிரகடசேஷாபாய்,
 • நவநீத் மத்ராசி,
 • பத்மாவதி

ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

விழா முடிவில் நல்லி குப்புசாமி பிறந்த நாளை முன்னிட்டு மேடையில் கேக் வெட்டிக் கொண்டாடினர். முன்னதாக சுதா ரகுநாதன் குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடந்தது.

Posted in Authors, Awards, Birthday, Cake, Events, Function, Journals, Kuppusami, Kuppusamy, Kurinjivelan, Kurinjvelan, Literature, Mag, Magazines, Mags, Magz, Nalli, Prizes, Sivasankari, Thisai Ettum, ThisaiEttum, Translation, Translators, Works, Writers | 2 Comments »

75 Years: Indian Express Group of Publications Anniversary

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 5, 2007

எக்ஸ்பிரஸ் ’75: நன்றியுடன் வாசகர்களுக்கும் நலம் நாடுவோருக்கும்…

இன்றைக்குச் சரியாக 75 ஆண்டுகளுக்கு முன், 1932, செப்டம்பர் 5-ம் தேதி “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பிறந்தது. இத்தனை ஆண்டுகால கொந்தளிப்பான வரலாற்று வழித்தடத்தில், “எக்ஸ்பிரஸ்’ சந்தித்ததைப்போல வெற்றிகளையும் வேதனைகளையும் மகிழ்ச்சிகளையும் சோதனைகளையும் இந்தியாவில் வேறு எந்த நாளிதழும் சந்திக்கவில்லை. அத்தனையையும் நாம் கடந்து வந்திருக்கிறோம்; அதற்கு, இந்தியாவில் வேறு எந்த நாளிதழுக்கும் கிடைத்திராத வகையில், வாசகர்களின் அன்பும் ஆதரவும் எக்ஸ்பிரஸýக்குக் கிடைத்ததே காரணம் என்பதைப் பணிவுடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளபடியே, இந்த நாளிதழைக் கட்டியெழுப்பிய முன்னோடிகள், இதை மக்களின் நாளிதழாகவே உருவாக்கினர். கடந்த 75 ஆண்டுகளாகவும் அதே தடத்தில்தான் எக்ஸ்பிரஸ் பயணம் செய்துகொண்டிருக்கிறது. அந்த வரலாற்றின் மைல் கல்லை, வரும் வாரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதன் வாயிலாகக் கொண்டாடவிருக்கிறோம்; பாதுகாக்கப்பட வேண்டிய சிறப்பு இணைப்பையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்.

முதன்முதலாக சென்னை வாசகர்களின் கரங்களில் எக்ஸ்பிரஸ் தவழ்ந்தபோது, காலனியாதிக்கத்தின் பிடியில் இந்தியா இருந்தது. சுதந்திரப் பாதையில் இந்தியா காலடி எடுத்து வைத்தபோது எக்ஸ்பிரஸýக்கு வயது 15. முதலில் பிரிட்டிஷ் ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடியது எக்ஸ்பிரஸ்; சுதந்திரத்தால் துளிர்த்த நம்பிக்கைகள், அரசியல் ஊழல்களால் நொறுக்கப்பட்டபோது, சுதேசி ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடியது எக்ஸ்பிரஸ். 1975-ல் நாட்டின் மீது “நெருக்கடி நிலை’ என்ற கருமேகங்கள் கவிந்தபொழுது, வெற்றிக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று தெரியாத நிலையிலும் அதை எதிர்த்துப் போராடியது எக்ஸ்பிரஸ். ஆனால், மக்களின் அமோகமான ஆதரவின் காரணமாக, அந்தக் காலகட்டத்தின் கெடுபிடிகளையும் வெற்றிகண்டது எக்ஸ்பிரஸின் எழுச்சி. எக்ஸ்பிரûஸப்போல வாசகர்களுடன் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கும் வேறு எந்த நாளிதழும் இந்தியாவில் இல்லை.

அண்மை ஆண்டுகளாக வேறுவிதமான யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. நாட்டின் தெற்கில் நாம் “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆகியிருக்கிறோம். அதே நேரத்தில் பதிப்பகத் துறையைச் சந்தைச் சக்திகள் தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து கொண்டிருக்கின்றன. செய்திகள் பண்டமயமாக்கப்படுவது தவிர்க்க முடியாதது போலத் தோன்றும் சூழலிலும், பத்திரிகை தர்மம் அதற்கு வளைந்து கொடுத்துவிடாமல் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். அதில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பரந்து விரிந்த எக்ஸ்பிரஸ் வாசகர் குடும்பத்தின் ஆதரவு மீண்டும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தளராது உழைத்துக்கொண்டிருக்கிறோம். எது நடந்தாலும் சரி, தயக்கமின்றி என்னால் ஒன்றைக் கூற முடியும்: நாங்கள் எப்படிப் பிறந்தோமோ அப்படியே என்றும் இருப்போம். ஆம், மக்களின் செய்தித்தாளாக.

அனைவருக்கும் நன்றி.

மனோஜ் குமார் சொந்தாலியா

தலைவர்

Posted in 75, Anniversary, Daily, Dinamani, Dinmani, Express, IE, jubilee, Magazines, Magz, Media, MSM, News, Newspaper, Newspapers, Paper, Platinum, weekly | Leave a Comment »

Reading e-books in Cell phone – Mobile Technology for Tamil

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

இது புதுசு: செல்போனில் கலந்த “செம்புலப் பெயல்நீர்’!

அருவி

“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங் கலந்தனவே’

-“குறுந்தொகை’ பாடலான இதில் வரும் “செம்புலப் பெயல்நீர்’ என்கிற உவமைநீர் தரும் ஈரம் மட்டும் இன்னும் காய்ந்தபாடில்லை. வற்றாத ஜீவநதியாய் ஊற்றெடுத்து பலவற்றோடு கலந்து ஓடிக்கொண்டே இருக்கிறது.

இலக்கியவாதிகளின் இதயங்களோடு கலந்து, கட்டுரை, கவிதை எனப் பலவற்றிலும் ஓடி, இப்போது கலந்திருப்பது செல்போனில்!

சங்கப் பாடல்களைப் படித்துப் புரிந்தவர்கள் பலாச்சுளையைச் சுவைத்ததுபோல மகிழ, புரியாதவர்கள் ஊமத்தங்காயைச் சாப்பிட்டதுபோல வருந்தி நிற்பதுதானே இன்றைய நிலை?

இது சற்று பெரிய அரிய விஷயம்தான். ஆனால் ஒன்றும் புரியாத விஷயமில்லை. செல்போனிலும் புத்தகங்கள் படிக்கிற வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது “மொபைல்வேதா’ நிறுவனம். கோயமுத்தூர் உடுமலைபேட்டையைச் சேர்ந்த கே.ஆர்.கணேஷ்ராம்தான் இதன் நிறுவனர். முதலில் சங்கப் பாடல்களை எல்லாம் தொகுத்து புத்தகமாகக் கொடுத்து இருக்கிறார்கள். போகப் போக வாரஇதழ், மாத இதழ், நாளிதழ், நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் என எல்லாப் புத்தகங்களையும் வெளிக்கொண்டு வரவும் இருக்கிறார்கள்.

இதைப்பற்றி முழுவிவரத்தையும் சொல்கிறார் கணேஷ்ராம்:

“பி.காம் படித்திருக்கிறேன். முதலில் கோவை பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்புகளை மட்டும் தெரிவிக்கும் வெப்சைட் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் வேலைவாய்ப்பு வெப்சைட்டைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டேன். இந்தத் தருணத்தில்தான் வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் புதுமை தொழில்நுட்ப ஆய்வுகளைக் கண்டறியும் முகாம் ஒன்றை நடத்தியது. இருநூறுக்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்துகொண்டோம். இதில் பதினைந்து பேரின் ஆய்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. வெப்2.0 மற்றும் செல்போன் தொடர்பாக நான் செய்த ஆய்வும் தேர்ந்தெடுக்கப்பட்டது. வெப்சைட்டில் வெப்1.0-தான் இப்போது இருக்கிறது. இதற்கு மாற்றாக வெப்2.0-வெர்ஷனை அமைப்பது குறித்து ஆய்வு செய்திருந்தேன்.

இதனையடுத்து வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் அடைகாப்பு மையம் சார்பில் நாலு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு லோனாகக் கொடுக்கப்பட்டது. இதைக் கொண்டு “மொபைல்வேதா’ நிறுவனத்தைத் தொடங்கினேன். பல்கலைக்கழக வளாகத்திலேயே இது இயங்கி வருகிறது. மொபைல் மதிப்பு கூட்டு சேவைத் துறையில் (value added services) புதிய தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்வதுதான் இந்நிறுவனத்தின் பணி. முதல் பணியாகத்தான் செல்போன் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இந்தச் சிந்தனை முழுக்க முழுக்க எங்களுடையது என்று சொல்ல முடியாது. செல்போன் புத்தகங்கள் ஜப்பான், சீனாவில் அமோக வரவேற்புப் பெற்று, புத்தகங்கள் நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியைப் படித்துப் பார்த்துவிட்டு நான் முயற்சித்தேன். முடிந்தது.

பெரியார் இயக்கத்தைப் பற்றிய ஆங்கிலப் புத்தகத்தைத்தான் முதலில் செல்போனில் வெளியிட்டோம். இதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதனையடுத்து “பெரியாரின் வாழ்க்கை வரலாறு’ என்ற தமிழ்ப் புத்தகத்தை வெளியிட்டோம். இதற்கும் கிடைத்த வரவேற்பையடுத்துதான் சங்க இலக்கியங்களை செல்போன் புத்தகங்களாக மாற்றித் தருகிறோம்.

குறுந்தகவல் சேவை போன்றுதான் இதுவும் என இதனைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. 165 வார்த்தைகள்தான் குறுந்தகவல் சேவையில் இருக்கும். ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்களையும் இதில் கொண்டு வரமுடியும்.

செல்போனில் புத்தகங்களை வடிப்பதற்காக புதிய சாஃப்ட்வேர் எதையும் நாங்கள் கொண்டு வரவில்லை. ஏற்கனவே இருக்கக்கூடிய ஜாவா தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் புத்தகமாக்குகிறோம். செல்போனில் கேம்ஸ் அமைப்பதற்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

சாதாரணமாக நாம் படிக்கிற புத்தகங்களுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அட்டை, அழகான படங்கள் என அனைத்து அம்சங்களும் இருக்கும்.

சங்க இலக்கியத்தை முதலில் நாங்கள் கொண்டு வருவதற்கு முக்கியக் காரணம் பழந்தமிழரின் வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இரண்டாவது, ராயல்டி இல்லாமல் வெளியிடக்கூடிய ஒன்றாக இருப்பதும் ஒரு காரணம். தற்போது சங்க இலக்கியப் பாடல்களுக்குப் பொழிப்புரை தருவதற்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் புத்தகங்களைப் பெறுவது சிரமமான காரியம் ஒன்றுமில்லை. இதற்காகவே www.thinnai.info ் என்ற வலைத்தளத்தை உருவாக்கி இருக்கிறோம். இன்டர்நெட் வசதியுடன் கூடிய செல்போன் வைத்திருப்பவர்கள் அப்படியே செல்லிலேயே இன்டர்நெட் ஓப்பன் செய்து எங்கள் வலைத்தளத்திலிருந்து நேரடியாகவே டவுன்லோடு செய்துகொள்ளலாம். இன்டர்நெட் வசதி இல்லாமல் ப்ளூ டூத், இன்ஃபராரெட், டேட்டாகேபிள் வசதி உள்ளவர்கள் கணிப்பொறியில் எங்கள் வலைத்தளத்திற்குள் நுழைந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இதற்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இலவசமாகவே இதை வழங்கி வருகிறோம். இந்தச் செல்போன் தமிழ்ப் புத்தக வெளியீட்டை கடந்த 22-ந்தேதிதான் தொடங்கினோம். அதற்குள் 250-க்கும் மேற்பட்டோர் சங்க இலக்கியப் புத்தகத்தை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.

இதன் அடுத்தகட்டமாக நாவல், சிறுகதை தொகுப்புகள், கட்டுரை புத்தகங்கள் என எல்லாவகையான புத்தகங்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இதைப்போல பரபரப்பாக விற்கும் வார இதழ், மாத இதழ், நாளிதழ்களையும் கொண்டு வர இருக்கிறோம். இது தொடர்பாக எல்லாப் பத்திரிகை நிறுவனங்களோடும் எழுத்தாளர்களோடும் பேச இருக்கிறோம். இதை இலவசமாக வழங்க முடியாது.

ஓர் உதாரணத்துக்கு “ஹிந்து’ ஆங்கில நாளிதழை அவர்கள் அனுமதியுடன் வெளியிடுகிறோம் என்றால், அதற்கான கட்டணத்தை செல்போன் ரீடர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள திட்டம் வைத்திருக்கிறோம். ஒரு சினிமாப் பாடலை ரிங்டோனாக வைத்துக்கொண்டால் செல்போன் ஆபரேட்டார் அதற்காகும் கட்டணத்தைப் பிடித்துக் கொள்வதுபோல நாளிதழுக்காகும் கட்டணத்தையும் ஆபரேட்டார்களையே பிடித்துக்கொள்ள சொல்லலாம். வார இதழ்கள், மாத இதழ்கள், பெரிய எழுத்தாளர்களின் நாவல் என எல்லாப் புத்தகங்களையும் இந்த முறையில் வெளியிடுவது பற்றி யோசித்து வருகிறோம். எழுத்தாளர்களுக்கு முழுப் பணமும் கிடைக்கும். செல்போன் வழியாக சிற்றிதழ்கள் நடத்த விரும்புகிறவர்களும் நடத்தலாம்.

கம்ப்யூட்டரிலேயே படித்தால் கண் கெட்டுப் போய்விடும் என்ற கவலையும் இல்லாதளவு செல்போனிலேயே “கூல் டெக்ஸ்ட்’ தொழில்நுட்பமெல்லாம் வந்திருக்கிறது. இதனால் கண் கெட்டுப் போகாததுடன், செல்போன் புத்தகமும் தெளிவாகத் தெரியும்” என்கிறார் கணேஷ்ராம்.

செல்போன் புத்தகம் பற்றி பேசியபோது ஒரு கல்லூரி மாணவி சொன்னாள்:

“”ஐ… பரீட்சைக்குப் புத்தகத்தையே செல்போனில் கொண்டு போயிடலாமே”

“”என்ன கொடுமை சார் இது”

Posted in Author, Books, Cellphone, Display, Fonts, iPhone, Magazines, Magz, Mobile, Newpapers, News, Reader, service, SMS, SOA, Software, Tamil, Technology, Tools, Unicode, Utility, Zines | 1 Comment »

Press Freedom, Corruption of the Justice system, Media Exposure – Sting Operations

Posted by Snapjudge மேல் ஜூன் 7, 2007

“உண்மை’யைக் காட்டறீங்களா, கூடவே கூடாது!

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

சில நாள்களுக்கு முன்பு “”பி.எம்.டபிள்யு.” வழக்கு என்ற கொலை வழக்கு தொடர்பாக, அரசுத்தரப்பு வழக்கறிஞரும், பிரதிவாதியின் தரப்பும் சந்தித்துப் பேசி வழக்கைச் சீர்குலைக்க நடத்திய பேரம் பற்றிய ரகசிய காட்சிகளை “”என்.டி.டி.வி.” படம் பிடித்து நேயர்களுக்கு நேரடியாகப் போட்டுக் காட்டியது.

பணம் கொடுத்தால் அரசு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவரைத் தப்ப விடுவார் என்பதை அப்பட்டமாக சுட்டிக்காட்டும் காட்சி அது. அதே நாளில் பத்திரிகையில் மற்றொரு செய்தி கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அது, தனியார் தொலைக்காட்சிகளும், பண்பலை வானொலிகளும் கடைப்பிடிக்க வேண்டிய செய்தி ஒளி-ஒலிபரப்பு தொடர்பான நடத்தை நெறிகளைப் பற்றியது.

அந்த நடத்தை நெறிகள் என்னவென்ற விவரம் என்னிடம் கிடையாது; ஆனால் பத்திரிகைகளில் பிரசுரமானவற்றைப் படித்தபோது, நம்பமுடியாத, வியப்பை ஊட்டுகிற, அடக்குமுறையான கட்டுப்பாடுகள் பல இருப்பதை உணர முடிந்தது.

அதில் முதலாவது, “”நட்பு நாடுகளை விமர்சிக்கக்கூடாது” என்பது. பாகிஸ்தானைக்கூட இப்போது நட்பு நாடு என்றே வகைப்படுத்திவிட்டோம். தென்னாப்பிரிக்காவும் இஸ்ரேலும் நமக்கு வேண்டாத நாடுகளாக இருந்த காலம் மலையேறிவிட்டது. அப்படி என்றால், நாம் எந்த நாட்டையுமே விமர்சனம் செய்யக்கூடாது.

அதாவது, “”இராக்கை எத்தனை அடாவடியாக ஊடுருவினீர்கள் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைப் பாராட்ட வேண்டும்; எங்கள் நாட்டு என்ஜினீயர்களுக்கும் டாக்டர்களுக்கும் “”எச் 1 பி” விசா தர மறுக்கும் உங்களுடைய பண்பாடுதான் என்னே என்று வியக்க வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டையும் நாம் விமர்சிக்கக் கூடாது; இதைவிட கேலிக்குரியவர்களாக நாம் ஆக முடியுமா?

நீதித்துறையின் நேர்மையைச் சந்தேகிக்கவோ, விமர்சிக்கவோ கூடாது என்று நடத்தை நெறி கூறுகிறது. 2006-வது ஆண்டில் இந்தியாவின் கீழ் நீதிமன்றங்களில் ரூ.2,630 கோடி லஞ்சமாகக் கைமாறியது என்று “”டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்” என்ற அமைப்பு வெளியிட்ட தகவலை பத்திரிகைகள் பிரசுரிக்கலாம்; ஆனால் வானொலியோ தொலைக்காட்சியோ பயன்படுத்தக்கூடாது.

(இந்த ரூ.2,630 கோடி என்பதே குறைவு, உண்மையில் இதைப்போல பல மடங்கு லஞ்சமாகக் கைமாறுகிறது என்பதே என் கருத்து!)

வழக்குகளில் சாதகமான தீர்ப்புப் பெற லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது, வழக்கு முடிய நீண்ட காலம் காத்திருக்க நேர்கிறது என்ற தகவல்களால் நீதித்துறையையே சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் அம்சம் அதிகரித்து வருகிறது.

இதைப் பத்திரிகைகள் பிரசுரிக்கலாம்; ஆனால் வானொலி, தொலைக்காட்சிகளில் வரக்கூடாது என்பது எவ்வளவு கேலிக்கூத்தாக இருக்கிறது. பத்திரிகைகளை ஒரு மாதிரியாகவும் வானொலி, தொலைக்காட்சிகளை வேறு மாதிரியாகவும் நடத்துவது அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு அளிக்கும் சுதந்திரத்துக்கே முரணாக அமைந்துவிடும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்லவா என்று கேட்டால் சரி, “”இனி பத்திரிகைகளும் பிரசுரிக்கக்கூடாது என்று கூறி விடுகிறோம்” என்ற பதில் கிடைக்கலாம்.

எவருடைய அந்தரங்க விஷயங்களிலும் தலையிட்டு, அவதூறு கற்பிக்கக்கூடாது என்பது அடுத்த கட்டுப்பாடு. இதைக் கூற இந்த கட்டுப்பாடு அவசியமே இல்லை, இது ஏற்கெனவே சட்டமே கொடுத்துள்ள அதிகாரம். அவதூறாகப் பேசினாலோ எழுதினாலோ நடவடிக்கை எடுக்க சட்டம் இடம் தருகிறது. எது அந்தரங்க வாழ்க்கை, எது பொது வாழ்க்கை என்று பிரித்துப் பார்ப்பது எப்படி?

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் லஞ்சம் வாங்குவதை படம் பிடித்தால், “”அவர் ஏதோ சொந்தச் செலவுக்காக முயற்சி எடுத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்” என்று கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டுமா?

அரசுத் தரப்பு வழக்கறிஞரும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரும் ரகசியமாகச் சந்தித்து, குற்றஞ்சாட்டப்பட்டவரைத் தப்பிக்கச் செய்ய ஏதாவது திட்டம் தீட்டினால், வழக்கறிஞர்களுக்கும் சாட்சிக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம் அது என்று கண்ணை மூடிக்கொண்டு அப்பால் போய்விட வேண்டுமா? தனிப்பட்ட வாழ்க்கையையும் லஞ்ச, ஊழல் நடவடிக்கைகளையும் பிரிக்கும் கோடு எது?

“”உள்ளதை உள்ளபடியே காட்டும் கேமரா” என்று தொலைக்காட்சிகளில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வீதியிலும் பொது இடங்களிலும் அப்பாவிகள், தங்களை ஒரு கேமரா கண்காணிக்கிறது என்று தெரியாமல், பித்துக்குளித்தனமாக நடப்பதைப் படம் பிடித்து ஒளிபரப்புகின்றனரே அதுவல்லவோ, தனிப்பட்ட வாழ்க்கையில் குறுக்கிடும் சம்பவம்! அதை அனுமதித்துவிட்டு மற்றதைத் தடுப்பது எதற்காக? லஞ்சம், ஊழல்களை யாரும் அம்பலப்படுத்திவிடாமல் தடுப்பதற்காகவா?

லஞ்சமும் ஊழலும்தான் அன்றாட வேலைகள் என்றாகிவிட்ட நாட்டில், இந்த நாட்டை ஆள்கிறவர்கள் எப்படிப்பட்ட சுயநலவாதிகள், மோசடிப் பேர்வழிகள் என்பதை மக்களுக்கு அவ்வப்போது நினைவூட்ட, ஊழலை அம்பலப்படுத்தும் இத்தகைய நிகழ்ச்சிகள்தான் உதவுகின்றன.

ஊழல்பேர்வழிகள் தயக்கமின்றிக் கொள்ளையடிக்கவா இந்த கட்டுப்பாடுகள்? அரசின் நடத்தை நெறிகளின் நோக்கமோ அல்லது விளைவோ இதுவாக இருந்தால் அது மிகவும் துயரகரமானது.

நடத்தை நெறியின் மற்றொரு அம்சம் சுவாரஸ்யமானது. தேசியத் தலைவர்கள் அல்லது மாநிலத் தலைவர்களின் உடலமைப்பு பற்றிய காட்சிகளை ஒளிபரப்புவதில் எச்சரிக்கை தேவை என்கிறது.

அதாவது இந்திரா காந்திக்கு முடி நரைத்துவிட்டதையோ, வாஜ்பாய் பேசும்போது திடீரென சில விநாடிகளுக்குத் தொடர்ந்து மெüனமாக இருப்பதையோ காட்டக்கூடாது!

இப்படிப்பட்ட தேசியத் தலைவர்களை இஷ்டப்படி கேலிச்சித்திரமாக வரைந்துதள்ளும் சுதந்திரம் பத்திரிகைகளுக்கு உண்டு, தொலைக்காட்சிகளுக்குக் கிடையாது என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

தாமதப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி என்பது முதுமொழி. ஒவ்வொரு கட்டத்திலும் வழக்கு வாய்தா வாங்குவதே நமது நீதிமன்ற நடைமுறைகளின் தனிச்சிறப்பு. ஜெயலலிதா, லாலு பிரசாத் மீது ஏகப்பட்ட வழக்குகள் இருந்தாலும் அவர்கள் தலைவர்களாக நீடிக்கவும் ஆட்சி செய்யவும் சட்டபூர்வ தடை ஏதும் இல்லை.

இந்த வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடக்கும், அவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள்தானா அல்லது குற்றம் செய்தவர்களா என்பதைத் தெரிவிக்காமலே அவர்களைத் தொடர்ந்து ஆளவிடுவது சரியா? அவர்கள் நல்லவர்கள் என்றோ குற்றவாளிகள் என்றோ நான் கூறவில்லை; ஆனால், அப்படிப்பட்டவர்களின் உண்மையான நிலைமை என்ன என்பது மக்களுக்குச் சந்தேகம் இல்லாமல் தெரிய வேண்டாமா?

அவதூறாகவோ, உள்நோக்கத்துடனோ பேசினால், எழுதினால் தண்டிக்க சட்டங்கள் உள்ளன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்குத் தொடுக்க முன்வருவதில்லை. நீதிமன்ற நடைமுறையால் வழக்கு தாமதம் ஆவது முக்கிய காரணம்.

இந்நிலையில் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் இச்செய்திகள் இடம் பெறுவதைத் தடுப்பதென்பது, பொது மக்களின் கண்களுக்குத் தெரியாமலேயே பல முறைகேடுகள் நடந்து முடிக்கச் சாதகமாக போடும் புகைத் திரையாகவே மாறிவிடும். முறைகேடுகள் வெளியே தெரியக்கூடாது, அவற்றை எதிர்த்து யாரும் வழக்கு போட்டுவிடக்கூடாது என்பது அரசின் நோக்கமாக இருக்காது என்றே நம்புகிறேன்.

அரசு தனது புதிய நடத்தை நெறிகளை வானொலி, தொலைக்காட்சி நிர்வாகிகள் மீது திணிக்க முற்பட்டால், ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் அந்த நெருக்குதல்களை எதிர்க்க முடியாமல் பணிந்து போகக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிடும். வானொலி, தொலைக்காட்சி நடத்தவும் விரிவுபடுத்தவும் மத்திய அரசின் தயவு அவர்களுக்குத் தேவை.

வானொலி, தொலைக்காட்சிக்கான புதிய கட்டுப்பாடுகள் என்பவை அரசுக்கும் தனியார் ஒளி, ஒலிபரப்புக்காரர்களுக்கும் இடையிலே மட்டும் உள்ள ஒரு விவகாரம் அல்லவே? இதில் மக்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. ஒலிபரப்பாவது அனைத்தும் மக்களுக்காகவே. மக்களின் நலன்தான் முக்கியமானது; நடத்தை நெறி என்ற பெயரில் தகவல் பெற மக்களுக்கு உள்ள உரிமையை எந்த வகையிலும் தடுக்கக் கூடாது.

ஜனநாயக நாட்டில் எந்தவொரு அமைப்பும் மக்களின் ஆய்வுக்கு அப்பாற்பட்டது அல்ல.

நாட்டின் முக்கிய நபர்கள் மீதும் அமைப்புகள் மீதும் தொலைக்காட்சி கேமராக்களின் வெளிச்சம் தடையின்றிப் பாயட்டும். அது நீதித்துறையாக இருந்தாலும், சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த சட்டமன்ற, நாடாளுமன்ற அமைப்புகளாக இருந்தாலும், அரசின் பொது நிர்வாகமாக இருந்தாலும் -அது எதுவாக இருந்தாலும் மக்களின் பார்வைக்கும் விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)

Posted in abuse, Advocate, Attorney, Bribery, Bribes, Cartoons, Censor, Censure, Citizen, Collusion, Corruption, Courts, Defamation, Defame, Democracy, Ethical, ezine, FM, Freedom, Govt, HC, Independent, journalism, Journals, Judges, Justice, kickbacks, Law, Lawsuits, Leaders, Magazines, Mags, Media, Moral, MSM, NDTV, News, Newspaper, Order, Party, Police, Politics, Power, Preempt, Press, Prohibit, Radio, Republic, Research, SC, Shackles, Sting, Survey, Television, TI, Transparency, TV | Leave a Comment »

TV Serial Actress stories – Rumor mill gossips from Kumudam Reporter

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

21.01.07  கவர் ஸ்டோரி

‘‘கடந்த டிசம்பர் மாதம் கடைசி நாளன்று, கிழக்கு கடற்கரைச் சாலையில் எங்கள் டீம் ரெய்டு நடத்தியது. அப்போது அங்குள்ள காட்டேஜ்களில் அரைகுறை ஆடைகளுடன் மதுக் கோப்பையும் கையுமாக இருந்த பல இளம் பெண்கள் சிக்கினார்கள். அதில் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள், சின்னத்திரை நடிகைகளாக இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் வேனில் ஏற்றிய எங்கள் டீம், கமிஷனர் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்த வேன் கமிஷனர் அலுவலகம் வருவதற்குள், மத்திய அமைச்சரின் பி.ஏ. முதல் லோக்கல் மாவட்டச் செயலாளர் வரை பல தரப்பினரும் இந்தச் சின்னத்திரை நடிகைகள் மீது புகார் எதுவும் பதியாமல் விட்டுவிடும்படி போனில் வற்புறுத்தினார்கள். பிடிபட்ட ஒவ்வொரு நடிகைக்கும் கிட்டத்தட்ட ஒவ்வொரு அரசியல் பிரபலம் வக்காலத்து வாங்கிப் பேசியதில், எங்கள் மேலதிகாரிகளே மிரண்டு போய், அந்த நடிகைகளை அனுப்பிவிடச் சொல்லிவிட்டார்கள்! அத்தனை ஏன்? ஒரு நடிகையின் சார்பாக சென்னை நகர இணை கமிஷனர் ஒருவரே பேசினார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்றார் நம்மிடம் பேசிய விபசாரத் தடுப்புப் பிரிவு அதிகாரியருவர்.

ஆச்சரியத்துடன் அதைக் கேட்டுக் கொண்ட நாம், அதிகாரி சொன்ன தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சின்னத்திரை வட்டாரத்திற்குள் புகுந்து ஒரு ரவுண்ட் அடித்தோம். அங்குள்ள ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் கொஞ்சம் தயக்கத்தோடு சொன்ன தகவல்களைக் கேட்டு, நமக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.

சின்னத்திரையில் பல காலமாக ஒளிப்பதிவாளராக இருக்கும் ஒருவர், ‘‘டி.வி.யில் நடிப்பதற்கென்று வரும் பெண்கள் எதற்கும் தயாராகத்தான் இருக்கிறார்கள். அதே சமயம், இவர்கள் அடிப்படையில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், பணத்தைக் காட்டி அவர்களை ஏமாற்ற முடியாது. என்றாலும், எங்களைப் போன்ற சீஃப் டெக்னீஷியன்களில் சிலர் செய்யும் சில்மிஷங்களை, அவர்களால் தடுக்கவும் முடியாது!’’ என்று பேச ஆரம்பித்தார்.

‘‘புதுமுகப் பெண்களை நாங்கள் மடக்கும் பாணியே அலாதியானது. அந்தப் பெண்ணை எந்தக் கோணத்தில் எடுத்தால் அழகாக இருக்குமோ, அந்தக் கோணத்தில் எடுக்காமல் ஒட்டுமொத்த யூனிட்டையே அப்செட்டில் ஆழ்த்திவிடுவோம். இந்தப் பெண் தேறாது என்ற பேச்சை உருவாக்கி விட்டு பிரேக் விடுவோம். அந்த நேரத்தில் மேக்கப் ரூம் போயிருக்கும் அந்தப் பெண்ணிடம் எங்களின் உதவியாளர் போய், ‘அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டால் அழகாகப் படம் பிடிப்போம்’ என்பார். அந்தப் பெண் அதைப் புரிந்துகொண்டு சம்மதித்து விடுவார். இது பொதுவான யுக்திதான்’’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி நம்மை அதிரவைத்தார் அவர்.

பிரபலமான சின்னத்திரை இயக்குநர் ஒருவரிடம் பேசிய போது, ‘‘ஷ¨ட்டிங் ஸ்பாட்டில் தொழில் ரீதியாக மட்டுமே பேசிவிட்டு, ரிலாக்ஸாக இருக்கும்போது, ‘இன்று ஒரு பார்ட்டி இருக்கிறது. வருகிறாயா?’ என்று கேட்போம். பெரும்பாலான பெண்கள் அதன் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு கம்பெனி கொடுப்பது வழக்கம். புரியாமல் முரண்டு பிடிக்கும் பெண்களின் கேரக்டரை தொடரில் மட்டுமின்றி, நிஜத்திலும் டேமேஜ் பண்ணி டம்மி ஆக்கிவிடுவோம்!’’ என்று அலட்டாமல் சொன்னார்.

ராஜ உபசாரம், கை நிறையச் சம்பளம், அபரிமிதமான விளம்பரம் என்று சகல விதத்திலும் போதையூட்டும் ஒரு மீடியா சின்னத்திரை. அதில் நடிகைகள் மட்டுமின்றி நடிகர்களும் கொஞ்சம் தடம் மாறித்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

‘‘ஒரு தொடரில் கண்ணியமான கணவன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஒரு நடிகர். அது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோதெல்லாம், ஒரு பெண் அவர் மொபைலில் தொடர்ந்து பேசுவார். சில நாட்கள் கழித்து அந்தப் பெண் அவரை நேரில் சந்திக்க விரும்பி, தன் வீட்டிற்கு வரச் சொன்னார். அவரும் கொஞ்சம் தயக்கத்துடன் அங்கு போனார். போன இடத்தில் அந்தப் பெண்ணின் பின்னணியைத் தெரிந்து பரிதாபப்பட ஆரம்பித்தார். கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த தனக்கு, கணவரால் சுகம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி அவரைக் கட்டிப் பிடித்து அழுத அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்தியிருக்கிறார். பிறகு, அவரே அந்தப் பெண்ணுக்குக் கள்ளப் புருஷன் ஆகிவிட்டார்!’’ என்றவர், ‘‘அந்தப் பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால், மேலும் சிலருக்கும் அவர்தான் இப்போது சுந்தர புருஷன்’’ என்று தனது இயக்கத்தில் நடித்து வரும் ஒரு நடிகரைப் பற்றிய பின்னணியை விளக்கினார் ஓர் இயக்குநர்.

சின்னத்திரை தொடர் தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ‘‘இப்போதெல்லாம் டி.வி.க்கு வந்திருப்பவர்கள் நடிக்கத் தெரிந்தவர்களாக மட்டுமல்ல, வாழவும் தெரிந்தவர்களாக _ வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவர்களாக இருக்கிறார்கள்’’ என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார்.

‘‘ஒரு டி.வி.யில் ஒளிபரப்பான ‘ஜோடி’களின் ஆட்டத் தொடரைப் பார்த்தீர்களா? அதில் ஜோடிகள் இஷ்டத்துக்கு மாறி மாறி ஆடிவிட்டு இஷ்டத்துக்கு முத்தம் கொடுப்பதையும் பார்த்தீர்களா? அந்த ஜோடிகள் ரிகர்சல் என்ற பெயரில் நடத்திய கூத்துக்களையும், சில்மிஷங்களையும் கூட படம் பிடித்திருக்கிறார்கள். அதைப் பார்த்தால் அந்த ஜோடிகளே அவமானத்தில் கூனிக் குறுகிப் போவார்கள். இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய ஹிட்டானதால், இதன் தொடர்ச்சியாக வேறொரு பெயரில் இரண்டாம் பாகமாகத் தயாராகி வருகிறது. முதல் பாகத்தை விட, அதில் பல காட்சிகள் இடம் பெறப் போவதாகச் சொல்கிறார்கள். இந்த ரிகர்சலில் இன்னும் என்னென்ன கூத்துக்களை அரங்கேற்றக் காத்திருக்கிறார்களோ? தாங்கள் செய்வது இன்னதென்றே தெரியாமல் செய்யும் அவர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை!’’ என்றார் வேதனையுடன்.

ஆளாளுக்கு இப்படிச் சொன்னாலும் ‘வாய்ப்பு பறிபோனாலும் பரவாயில்லை. உங்கள் இஷ்டத்திற்கு நான் உட்பட மாட்டேன்’ என்று அடம் பிடிக்கும் நடிகைகளும் சின்னத் திரையில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பல வெற்றித்தொடர்களை இயக்கிய ஒருவர், தனது தொடரில் நடிக்கும் ஒவ்வொரு நடிகையும் தனது இஷ்டத்திற்கு வளைந்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பாராம். அதற்குச் சம்மதம் தெரிவிக்கும் பெண்களுக்கே கதையில் முக்கியத்துவம் கொடுப்பாராம். ஃபீல்டில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் இவரின் கேரக்டர் தெரியும். இந்த நிலையில், இவருடைய புதிய தொடரில், பெரிய திரையில் அறிமுகமாகிப் பிரபலமான, வாசமுள்ள பெயர் கொண்ட நடிகை அறிமுகமானார். அந்த நடிகையையும் இந்த இயக்குநர் வழக்கம்போல மடக்கிப்போட முயல… நடிகை மறுப்புச் சொன்னதோடு, ‘முடிந்தால் தொடரில் இருந்து என்னைத் தூக்கி விடுங்கள்’ என்றும் கூலாகச் சொல்லிவிட்டார். இதில் இயக்குநருக்கு ஷாக்தான்.

இவரை மாதிரியே இந்தத் துறையில் பலரும் இருப்பதாகத் தெரிவித்த ஒரு நடிகை, ‘‘டி.வி.யில் நடிப்பவளை சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் மட்டுமல்ல, அரசியல் பிரபலங்கள் அழைப்பதும் சகஜம். தமிழக அரசியல் வி.ஐ.பி. ஒருவர் கடந்த சில வருடங்களாக வாரந்தோறும் சின்னத்திரை நடிகைகளுக்கெனவே ஒரு காக்டெயில் பார்ட்டி வைப்பது வாடிக்கை. அவருடைய பொருளாதார உதவியுடன் பல தொடர்கள் இங்கு தயாராகி வருவதால், கிட்டத்தட்ட எல்லா நடிகைகளும் அவர் வைக்கும் பார்ட்டியில் கலந்து கொள்வது வழக்கம். பார்ட்டிக்குப் பிறகு என்ன நடக்கும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

அதுபோல், இன்னொரு அரசியல் வி.ஐ.பி., மாதமொரு முறை டிஸ்கொதே நடத்துவது வழக்கம். அதில் கலந்து கொள்ள பல தொழிலதிபர்கள் வருவதால் நாங்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்வோம். அந்த பார்ட்டி முடிந்து திரும்பும்போது ஒவ்வொரு நடிகைக்கும் இரண்டு, மூன்று பவுன் தங்கச்சங்கிலி பரிசாகக் கிடைக்கும்’’ என்று பல விஷயங்களைச் சொல்லிவிட்டு, ‘‘இது போன்ற பெரிய மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை ஏன் இழக்கவேண்டும்? அது மட்டுமின்றி இப்படி ஃப்ரீயாகப் போய் வருவதன் மூலம் தான் எக்கச்சக்கமான வாய்ப்பும் கிடைக்கிறது. அதை ஏன் இழக்க வேண்டும்’’ என்று யதார்த்த நிலையை விளக்கினார் அந்த நடிகை.

‘‘மாடலிங் பெண்களைப் போல எங்களுக்கும் சில நட்சத்திர ஓட்டல்களில் பீர் மற்றும் சிற்றுண்டிகள் இலவசம்தான். அங்கு இதுபோன்ற சில விஷயங்கள் இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக நாங்கள் எதையும் இலவசமாகக் கொடுப்பதில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போது வாழ்க்கையை அனுபவிப்பதுடன் அதிகபட்சம் சம்பாதிப்பதும் முக்கியம் இல்லையா?’’ என்று வெளிப்படையாகவே கேள்வி எழுப்புகிறார் இன்னொரு சின்னத்திரை நடிகை.

ஒரு சீனியர் நடிகைதான் நடிகைகளின் மீடியேட்டராகச் செயல்பட்டு வருகிறார். அவர் வாரத்தில் இரண்டு நாட்கள் யாராவது பணக்காரரின் தயவில் ஒரு காக்டெயில் பார்ட்டி ஏற்பாடு செய்து விடுவார். அதில் கலந்து கொண்டாலே கூச்சமெல்லாம் குறைந்து விடும். அந்தளவுக்கு பார்ட்டியில் ஆபாசம் தலைவிரித்தாடுமாம்!

அதுமட்டுமின்றி, ‘இந்த மீடியாவில் பிரபலமான இரண்டு நடிகைகளின் லெஸ்பியன் விளையாட்டும் ஒவ்வொரு பார்ட்டியின்போதும் பகிரங்கமாக நடக்கும்!’ என்றும் சொல்லி நம்மைத் திடுக்கிட வைத்தார், நீண்ட காலம் சின்னத் திரையில் வலம் வரும் நடிகை ஒருவர்.

இதுபோன்று நடக்கும் பல பார்ட்டிகளில் கலந்துகொண்ட ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது, ‘‘பார்ட்டியில் கலந்துகொள்ள வரும் நடிகைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் பழகுகிறார்கள். நான்கெழுத்து மூத்த நடிகையருவர், தான் சந்திக்கும் பிரபலங்களிடம் கேஷ§வலாக, ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தால் கடனாகக் கொடுங்கள் என்று கேட்பார். ஒரே பார்ட்டியில் நாலைந்து ஆட்களிடம் எதையாவது சொல்லி ஒவ்வொருவரிடமும் பத்தாயிரம் ரூபாய் வாங்கி விடுவார். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கும்போது, ‘என்கிட்டே கேட்கறதுக்கு எவ்வளவோ இருக்கும்போது பணத்தைக் கேட்கலாமா?’ என்று சொல்லி அடுத்த கட்டமாக நேரடியாகவே ‘காட்டேஜ் ஏதாவது போய் வரலாமா?’ என்றும் கேட்டு விடுவார்.

உயரமான இரண்டெழுத்து நடிகையருவர் பேசிக் கொண்டிருக்கும்போது நம்மிடம் கேஷ§வலாக, ‘உங்களுக்கு வலது தொடையில் மச்சமிருக்கிறதா? எனக்கு அங்கே இருக்கிறது’ என்பார். அதிர்ந்து போய் நாம் பார்க்கும்போது, ‘வாருங்களேன். அதை செக் பண்ணிப் பார்ப்போம்!’ என்பார்.

பெரிய கண்ணழகி நடிகையருவர், நம்மிடம் பேசி செல்போன் நம்பரை வாங்கிவிட்டு தாங்க்ஸ் சொல்லி விட்டுச் சென்ற சிறிது நேரத்திற்குள், பலான வாசகங்களுடன் கூடிய எஸ்.எம்.எஸ். செய்திகளை அடுத்தடுத்து அனுப்புவார்.

ஒட்டுமொத்த ஃபீல்டிலேயே உயரம் குறைந்த அந்த நடிகை, பார்ட்டிக்கு வந்திருப்பவர்கள் போட்டிருக்கும் மைனர் செயினின் கனத்தைப் பொறுத்து ஒவ்வொருவர் அருகிலும் உட்கார்ந்து கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவார். அவரது மானரிஸமாம் அது!’’ என்று விலாவாரியாகச் சொன்னதைக் கேட்டு நம்மால் முகத்தைச் சுளிக்கத்தான் முடிந்தது.

இப்படி பலதரப்பினரும் பல்வேறு தகவல்களைக் கூறிய நிலையில், இவற்றை உறுதிப்படுத்திக் கொள்ள சின்னத்திரையின் பிரபல நடிகையான பிருந்தா தாஸைச் சந்தித்துப் பேசினோம்.

அவர், ‘‘இப்போதைய சூழ்நிலையில் இந்தச் சின்னத்திரை ஆரோக்கியமான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறது. படித்தவர்கள் பலரும் இப்போது பங்கெடுத்து வருவதால் போட்டியும், பொறாமையும் அதிகமாக இருக்கிறது.

அதே சமயம், சின்னத்திரைக்கு வரும் பெண்கள் நடிக்க மட்டும்தான் வந்திருக்கிறோம் என்பதையும், இஷ்டப்படி வாழ்வதற்கு அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்திருக்கிறார்கள். இதில் நடித்துக் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்கள் மிகவும் குறைவு. அதனால், பணத்திற்காக தவறான பாதையில் போகும் பெண்களும் குறைவு.

மற்ற தொழிலில் ஈடுபடும் பெண்களுக்குரிய ஆசாபாசங்கள் எங்களுக்கும் உண்டு. சின்னத்திரை நடிகைகளான நாங்களும் எங்களுக்குள் பிறந்த நாள், திருமண நாள் நிகழ்ச்சிகளென்று பார்ட்டி வைத்துக் கொண்டாடுவோம். எங்கள் ‘ஆனந்தம்’ சீரியல் யூனிட்டிற்கு நான்தான் கோ_ஆர்டினேட்டராகச் செயல்படுகிறேன். இதில் ஒன்றும் தப்பில்லையே!

அதே சமயம், எனக்கும் எங்கள் யூனிட்ச் பெண்களுக்கும் மற்ற ஆண்களுடன் பேசிப் பழகுவதில் நாகரிகத்தையும் ஓர் எல்லையையும் கடைப்பிடிப்போம். அப்படியிருந்தும் எங்களைப் பற்றி தப்புத்தப்பாகச் செய்திகள் வருவது வருத்தத்தையே தருகிறது. எங்கள் சின்னத்திரை வாழ்க்கையும் ஸ்போர்ட்ஸ் மற்றும் மாடலிங் துறையினரின் வாழ்க்கையும் திறந்தவெளி அரங்கில் நடப்பதால், சில சிக்கல்களும் அசௌகரியங்களும் இருக்கின்றன.

இந்தத் துறையிலுள்ளவர்கள் தப்புச் செய்தாலும் தவறிப் போனாலும் ஒட்டுமொத்த மீடியாவுக்கும் தெரிந்து விடும். அப்படியிருக்கும்போது யாரும் பாதை மாறிப் போக மாட்டார்கள் என்பதை நீங்களாவது புரிந்து கொள்ளுங்கள். சின்னச் சின்ன சில்மிஷங்கள் இங்கு சகஜமான விஷயம். அது இங்கே மட்டும் நடக்கிற ஒரு விஷயமில்லையே?’’ என்றார்.

‘‘எங்கள் துறையின் இளைய தலைமுறை இஷ்டத்துக்கு ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என்று இருக்கிறார்கள் தான். அதைத் தப்பு என்று அவர்களே புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் எங்களுக்கும் வேதனையாக இருக்கிறது.

சின்னத்திரையின் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பாதை மாறி பணத்திற்காக எதையும் செய்யும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போன்ற பெண்கள் சின்னத்திரையில் மட்டும்தானா இருக்கிறார்கள்?

ஆனாலும் இவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்தி சின்னத்திரையை ஆரோக்கியமாக்கிக் காட்டுவதே எங்கள் லட்சியம்!’’ என்றார் சின்னத்திரை கலைஞர்கள் சங்கத் தலைவரான வசந்த்.

அவர் சொன்னபடி சின்னத்திரை கலாசாரம் நேர்வழியில் பயணப்பட வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும், ஆதங்கமும்!

படங்கள் : நாதன்
 வி. குமார்

Posted in Actress, Gossip, Kumudam Reporter, Life, Magazines, Party, Rumor, Serials, Sex, TV | 1 Comment »

Journeys with Vallikkannan – Asokamithiran

Posted by Snapjudge மேல் திசெம்பர் 16, 2006

நினைவலைகள்: வல்லிக்கண்ணனுடன் இரு நீண்ட பயணங்கள்

அசோகமித்திரன்

(இடமிருந்து) வல்லிக்கண்ணன், நடராஜன், ஞானக்கூத்தன், சேவற்கொடியோன், அசோகமித்திரன், “தீபம்’ நா. பார்த்தசாரதி (மடியில் அவர் மகன்), மு. மேத்தா.

வல்லிக்கண்ணனைப் பற்றி நினைக்கும்போது தி.க.சி.யைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. தி.க.சி. என்றவுடன் எனக்கு அவருடன் வரும் இன்னும் சிலர் பற்றியும் நினைக்க வேண்டிவரும். ஆ. பழனியப்பன் என்ற மிகச் சிறந்த இலக்கியவாதியும் இலக்கிய ஆராய்ச்சியாளர். இரண்டாவது கந்தர்வன். கடைசியாக என்.ஆர். தாசன்.

தி.க.சி.தான் என்னை வல்லிக்கண்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அன்று வல்லிக்கண்ணன் ராயப்பேட்டை அமீர் மகால் அருகில் ஒரு வீட்டில் குடியிருந்தார். (அதாவது அவருடைய சகோதரர் கோமதிநாயகம் வீட்டில்.) வல்லிக்கண்ணன் நான் எழுதியிருந்த “மஞ்சள் கயிறு’ கதையைப் படித்திருந்தார். அதன் பிறகு அவரை நா. பார்த்தசாரதியின் தீபம்‘ இதழின் அலுவலகத்தில் பலமுறை சந்தித்துப் பேச வாய்ப்பிருந்தது. தி.க.சி. சில விஷயங்களை அடித்துக் கூறுவார். வல்லிக்கண்ணன் புன்னகை புரிவார்.

ஒருமுறை “இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பு சென்னை மத்திய நூலகத்தில் நா. பார்த்தசாரதியின் புதிய நாவல் “ஆத்மாவின் ராகங்கள்’ பற்றி ஒரு விவாதக் கூட்டத்தை நடத்தியது. அந்த நாவலை எழுதி வரும்போது அதன் கதையை பார்த்தசாரதி என்னிடம் கூறினார். அவர் சொன்ன கதை மிகவும் உருக்கமாக இருந்தது. ஆனால் சொல்லுக்கும் எழுத்துக்கும் இடைவெளி உண்டல்லவா? விவாதத்தில் வல்லிக்கண்ணன் சிறிது அழுத்தம் தந்தே பேசினார். ஆனால் எல்லோருமே பக்குவப்பட்ட மனதுடையவர்கள். ஆதலால் உறவுகள் தொடர்ந்தன. நா. பார்த்தசாரதியின் அயராத தூண்டுதலில்லாமல் புதுக்கவிதையின் வரலாறு, சரஸ்வதி காலம் போன்ற தொடர்களை வல்லிக்கண்ணன் எழுதியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.

நா. பார்த்தசாரதிக்கு நிறைய அபிமானிகள் உண்டு. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு அவர் வாய்ப்பு ஏற்படுத்தி விடுவார். கல்கத்தா தமிழ் மன்றம் அதன் வெள்ளி விழாவுக்குச் சென்னையிலிருந்து ஒரு குழுவை அழைத்து வரப் பார்த்தசாரதிக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. வருடம் 1977. “எமர்ஜென்சி’ வந்து சில மாதங்கள் ஆகின்றன. பார்த்தசாரதியுடன் வல்லிக்கண்ணன், ஞானக்கூத்தன், சேவற்கொடியோன் (கோவை), மு. மேத்தா மற்றும் நான் நவம்பர் 27-ம் தேதி காலை கொரமாண்டல் எக்ஸ்பிரஸில் ஏறினோம். வழியெல்லாம் மழை. அடுத்த நாள் பகல் கல்கத்தா அடைந்தோம். அதற்கடுத்த நாள்தான் எங்களுக்குத் தெரிந்தது நவம்பர் 27-ம் தேதி ஒரு மிகப் பெரிய புயல் ஆந்திரக் கடற்கரையை மீது வீசியிருக்கிறது என்று. ரயில் நிலையங்கள் தூக்கி எறியப்பட்டிருந்தன. காவலி என்னும் இடத்தில் கடல் உள்புகுந்து பல கிராமங்களைத் தரை மட்டமாக்கி விட்டிருந்தது. அதன் பிறகு பல நாட்கள் சடலங்களை அகற்றுவது பெரும் பிரச்சினையாயிற்று. ஆந்திர அரசு சில ஆயுள் கைதிகளைப் பயன்படுத்தியது குறித்து நிறையக் கண்டனம் கூறப்பட்டது.

நாங்கள் ஒரு வாரம் கல்கத்தாவில் இலக்கியப் பாராட்டும் இலக்கியக் கண்டனமும் வாரி வழங்கினோம். எங்கள் குழுவின் நட்சத்திரப் பேச்சாளர் சேவற்கொடியோன். வரிக்கு வரி கைதட்டல்.

நாங்கள் ஊர் திரும்பும் நாள் வந்தபோது ரயில் பாதை ஒரு மாதிரி சீரமைக்கப்பட்டிருந்தது. புயலின் சீற்றத்தை விஜயவாடா தொடங்கி ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பார்க்கக் கிடைத்தது.

வல்லிக்கண்ணனும் நானும் இன்னொரு முறை ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. எப்படியெல்லாமோ வற்புறுத்திப் புதுமைப்பித்தனுக்கு புதுதில்லியில் ஒரு தேசியக் கருத்தரங்குக்குக் க.நா.சு. ஏற்பாடு செய்திருந்தார். என் கட்டுரை ஆங்கிலத்தில். வல்லிக்கண்ணன் மற்றும் சா. கந்தசாமி தமிழில் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். அந்தக் கருத்தரங்கில் மேலும் ஆங்கிலத்தில் கட்டுரை அளித்தவர்கள் வலம்புரி ஜான் மற்றும் க.நா.சு. கருத்தரங்கில் நா. பார்த்தசாரதியும் கலந்துகொள்வதாக இருந்தது. இல்லை. அதன்பிறகு அவர் எந்தக் கருத்தரங்கிலும் கலந்துகொள்ள முடியாது போயிற்று. அதற்கடுத்த ஆண்டு க.நா.சுவின் மரணமும் நேரிட்டது.

வல்லிக்கண்ணனின் நீண்ட வாழ்க்கையில் ஏராளமான பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவருக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டதாகத்தான் எனக்குத் தோன்றிற்று. அது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே நடந்துவிட்டது.

அவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்த சமயத்தில் அவருடைய நாவல்களையும் ஒரு பதிப்பாளர் மறுபதிப்பு செய்திருந்தார். ஒரு பழைய மாளிகை பற்றி ஒரு நாவல். அதில் சில இடங்கள் மிகவும் நன்றாக இருந்ததாக எனக்குத் தோன்றிற்று. புனைகதை தொடர்ந்து எழுதத் தேவைப்படும் அனுபவங்களை ஓர் எழுத்தாளர் போற்றி ஏற்க வேண்டும்.

நான் கடைசியாக செப்டம்பர் மாதம் அவரைப் பார்த்தேன். அவர் முடிவு இவ்வளவு அருகில் இருந்தது என்று தெரியவில்லை.

Posted in Anjali, Asogamithiran, Asokamithiran, Asokamithran, Asokamitran, Dheepam, Emergency, Gandharvan, Gomathinaayagam, Gomathynaayagam, Gomathynaayakam, History, Ka Naa Su, Literary, Magazines, Meet, Memoirs, Mu Mehtha, Na Pa, Na Parthasarathy, Naa Pa, Naa Paa, Njaanakkoothan, Njaanakoothan, NR Dasan, Sa Kandhasami, Saa Kandasami, Saa Kandhasamy, Sahithya Academy, Sahitya Academy, Sevarkodiyon, Tamil, Thi Ka Si, Thi Ka Sivasankaran, TK Sivasangaran, Valli kannan, Vallikannan, Vallikkannan, Writings | Leave a Comment »

Infant Dead in Police Station – West Bengal Government questioned by Human Rights organization

Posted by Snapjudge மேல் திசெம்பர் 9, 2006

பச்சிளம் குழந்தை சாவு: மேற்கு வங்க அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

புதுதில்லி, டிச. 10: மேற்கு வங்க மாநிலம், ஹெளரா போலீஸ் நிலையத்தில் தாயிடம் விசாரணை நடத்தியபோது குழந்தை இறந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில அரசை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி ஹெளரா போலீஸ் நிலைய போலீஸôர் அந்த தாயிடம் விசாரணை நடத்தியபோது குழந்தை அழுதது. ஆனால் போலீஸôர் அந்தக் குழந்தைக்கு பால் கொடுக்க விடாமல் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினராம். இதனால் குழந்தை இறந்தது.

இது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதையடுத்து இதுபற்றி இரண்டு வாரங்களுக்குள் பதில் அனுப்புமாறு மாநில தலைமைச் செயலர், போலீஸ் டிஜிபி ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Posted in Calcutta, Child, Government, Howrah, Human Rights, Infant, Law, Magazines, Media, MSM, Order, Police Station, WB, West Bengal | Leave a Comment »

Indian Journalists Association – Officebearers

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 19, 2006

இந்திய பத்திரிகைகள் சங்கத் தலைவராக ஹொர்முஸ்ஜி தேர்வு

பெங்களூர், செப். 19: இந்திய பத்திரிகைகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவராக ஹொர்முஸ்ஜி என். கமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய பத்திரிகை உரிமையாளர்கள் சங்கத்தின் 67-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதுவரை இச்சங்கத் தலைவராக இருந்த ஜேகப் மாத்யூ (மலையாள மனோரமா) பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து புதிய தலைவர் தேர்தல் நடைபெற்றது.

இதில் 2006-07-ம் ஆண்டுக்கான பத்திரிகை அதிபர்கள் சங்க புதிய தலைவராக ஹொர்முஸ்ஜி என். கமா (பாம்பே சமாச்சார் வாரப் பத்திரிகை-மும்பை) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத் தலைவர்களாக

 • பஹுபாலி எஸ். ஷா (குஜராத் சமாச்சார்)
 • பரேஷ் நாத் (உமன்ஸ் எரா),

கெüரவ பொருளாளராக சுனில் டங்க், செகரட்டரி ஜெனரலாக தீபக் எஸ். ராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.செயற்குழு உறுப்பினர்கள் விவரம்:

 • மனோஜ் குமார் சொந்தாலியா (தினமணி),
 • டாக்டர் பி.எஸ்.ஆதித்தன் (வாராந்திர ராணி),
 • விவேக் கோயங்கா (இந்தியன் எக்ஸ்பிரஸ், மும்பை),
 • விஜய் தர்டா (லோக்மாத்),
 • மேமன் மாத்யூ (மலையாள மனோரமா),
 • விஜய்குமார் சோப்ரா (பஞ்சாப் கேசரி, ஜலந்தர்),
 • பிரதீப் ஜி.பவார் (சாகல்),
 • சேகர் குப்தா (இந்தியன் எக்ஸ்பிரஸ், புதுதில்லி), உள்பட பலர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Posted in Association, Daily, Elections, India, Journalists, Journals, Magazines, Media, Monthly, Newspaper, Officebearers, Tamil, Vaaranthari Rani, weekly | Leave a Comment »

State of Public & School Libraries in Tamil Nadu

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 31, 2006

தூங்கும் நூலகங்கள்

அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக புத்தகங்களின் வெளியீடு பெருகியது. புத்தகங்களைப் படிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. தொலைக்காட்சியின் தாக்கம் அதிகரித்து வரும் இன்றையச் சூழ்நிலையிலும் மக்களிடம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்கு நூலகங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதை வாங்கும் நிலையில் பலருக்குப் பொருளாதார வசதி இருப்பதில்லை. எனவே மக்களின் அறிவுத் தாகத்தைத் தணிப்பதில் நூலகங்களின் பங்கு முக்கியமானது. மாணவர்கள் தங்களது பள்ளிப் பாடப்புத்தகங்களைத் தாண்டி பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் நூலகங்கள் முக்கிய வாய்ப்பாகத் திகழ்கின்றன. ஒருகாலத்தில் பட்டிதொட்டிகளெங்கும் தொடங்கப்பட்ட படிப்பகங்கள் சாமானிய மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஊட்டின என்பதை மறக்க முடியாது. வீட்டுக்கு ஒரு நூலகம் வேண்டுமென்றார் அண்ணா. அது சாத்தியமில்லாத பெரும்பாலான மக்களுக்கு அறிவுச்சுடர் ஏற்றி வைக்க உதவியாக இருப்பவை பொது நூலகங்களே.

பொது நூலகங்களில் நூல்கள் போதிய பராமரிப்பின்றி இருப்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். அடிப்படை வசதிகளுக்கே அல்லாடிக் கொண்டிருக்கும் பல அரசுப் பள்ளிகளிலும் மாநகராட்சிப் பள்ளிகளிலும் நூலகங்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. பெரும்பாலான பள்ளிகளில் இந்த நூல்களை மாணவர்களுக்குப் படிக்கக் கொடுப்பது கூட இல்லை. மாணவர்களும் ஆசிரியர்களும் படிப்பதற்குப் பயன்படாமல் அலமாரிகளில் புத்தகங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்த நிலைமை நிலவுவதை சமீபத்திய பத்திரிகைச் செய்தி படம்பிடித்துக் காட்டியது. இதுபோன்ற நிலைமை மேலும் பல பள்ளிகளில் இருக்கக்கூடும். சில நல்ல ஆசிரியர்களின் பொறுப்புணர்வால் இதற்கு விதிவிலக்கான சில பள்ளிகளும் உண்டு. மாணவர்கள் படிப்பதற்கு நூலகங்களில் போதிய புத்தகங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இருக்கின்ற புத்தகங்களை மாணவர்களுக்குப் படிப்பதற்குக் கொடுக்காமல் இருப்பது என்ன நியாயம் என்று புரியவில்லை.

இதுபோன்ற பள்ளி நூலகங்களில் மிகக் குறைவான புத்தகங்களே இருக்கலாம். அதனால் தனி நூலகர்கள் யாரும் இருப்பது கிடையாது. ஆசிரியர்களில் யாராவது ஒருவர் பொறுப்பேற்று இதனைப் பராமரிக்கும் நிலை இருக்கும். புத்தகங்கள் தொலைந்துபோகாமல் கணக்குச் சரியாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, யாருக்கும் புத்தகங்களைக் கொடுக்காமல் இருப்பதுதான் என்ற எண்ணத்தில் இதுபோல புத்தகங்களை அலமாரிக்குள்ளேயே சிறைவைக்கும் போக்கு நடைபெறுகிறது. இந்த நிலைமையைச் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அத்துடன் பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் என்ற பெயரில் தேவையற்ற, பயனற்ற புத்தகங்களை வாங்கிக் குவிப்பதை விட்டுவிட்டு மாணவர்களுக்கு உண்மையிலேயே பயன்படும் புத்தகங்களை மட்டும் வாங்கச் செய்வதும் முக்கியம். பொது நூலகங்கங்களுக்கு வாங்கப்படும் புத்தகங்கள் பற்றியும் இதேபோல கடுமையான விமர்சனங்கள் இருந்து வந்திருக்கின்றன. தற்போது பொது நூலகங்களுக்கு ஆயிரம் பிரதிகள் வீதம் புத்தகங்களை வாங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பொதுமக்கள் பணத்தில் வாங்கப்படும் இந்த நூல்கள் அனைத்தும் அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுவனவாக இருக்க வேண்டும்.

பொது நூலகத் துறைக்கும் பள்ளி நூலகங்களுக்கும் பணம் ஒதுக்கீடு செய்வதுடன் நின்று விடாமல் அவை சிறப்பாகச் செயல்படுவதற்கு அரசு தகுந்த கண்காணிப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். தற்போதைய கணினி யுகத்தில், உயர்கல்வி நிலையங்களில் உள்ள நூலகங்கள் டிஜிட்டல் நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படுகின்ற வேளையில், பள்ளி நூலகங்களை அவல நிலையில் வைத்திருக்கக் கூடாது.

Posted in Books, India, Lend, Library, Magazines, Member, Memberships, Op-Ed, Reader, Students, Tamil, Tamil Nadu, TN | 1 Comment »

Naarana Duraikannan – Biosketch : 100th Anniversary

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 23, 2006

“உயிரோவியம்’போல் உயர்ந்த மனிதர்

உதயை மு. வீரையன்

ஒருவரே தேசியவாதிகளுக்கும், திராவிட இயக்கத்தவர்க்கும் தோழமையாக இருக்க முடியுமா? சிறந்த பத்திரிகையாளரே ஒரு சமுதாய சீர்திருத்தவாதியாகவும் திகழ முடியுமா? நல்ல நாவலாசிரியரே நல்ல நாடக ஆசிரியராக விளங்க முடியுமா?

“முடியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவரே நாரண. துரைக்கண்ணன். இவரது புனைபெயர் “ஜீவா’.

இவரது காலம் சுதந்திரப் போராட்டக் காலம்; தேசபக்தர் பரலி சு. நெல்லையப்பர் மூலம் “லோகோபகாரி‘ வாரப் பத்திரிகையில் உதவி ஆசிரியராக அறிமுகம். அந்தக்காலத்தில் பத்திரிகைகளுக்கும் அற்ப ஆயுள்தானே! அதன்பின் தேசபந்து, திராவிடன், தமிழ்நாடு எனத் தொடர்ந்தது. இறுதியாக 1932 ஆம் ஆண்டு “பிரசண்ட விகடன்‘ ஆசிரியர் பொறுப்பினை ஏற்றார். 1934-ல் “ஆனந்த போதினி‘யின் ஆசிரியர் பொறுப்பும் வந்தது.

இவர் பத்திரிகையாளராக மட்டும் இருந்துவிடாமல் மிகச் சிறந்த படைப்பாளராகவும் இருந்தார். ஆரம்ப காலத்தில் தமிழ்ப் பத்திரிகை உலகில் நாவலுக்கென ஓர் இடம் பெற்றுத் தந்தவர்கள் கல்கியும், நாரண. துரைக்கண்ணனுமே! ஆனந்த விகடன் மூலம் கல்கியும், பிரசண்ட விகடன் மூலம் “ஜீவா‘ என்ற புனைபெயரில் நாரண. துரைக்கண்ணனும் தமிழ் எழுத்துலகில் புதிய மாற்றத்தினை உருவாக்கினர்.

இவர் எழுதிய “உயிரோவியம்’, “நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?’, “தாசி ரமணி’ முதலிய பெண்ணுரிமை பற்றிய புதினங்கள் படித்தவரைச் சிந்திக்கத் தூண்டின. “தீண்டாதார் யார்?’ என்னும் சமுதாயப் புரட்சி நாடகமும், “காதலனா? காதகனா?’ என்னும் மாணவர் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டும் நாவலும், “இலட்சிய புருடன்’ என்னும் அரசியல் புதினமும், வேலைக்காரி, நடுத்தெரு நாராயணன் முதலிய சமூக சீர்திருத்தக் கதைகளும் என இவர் எழுதிய நூல்கள் 130-க்கும் மேல். இந்தப் பட்டியலில் இவரது கவிதைகளும், கட்டுரைகளும், ஆராய்ச்சிகளும், மொழியாக்கங்களும் அடங்கும்.

டி .கே.எஸ். சகோதரர்கள் நடத்திய நாரண. துரைக்கண்ணனின் “உயிரோவியம்’ நாடகத்தைப் பார்த்துவிட்டு, “”காதலைப் பற்றி மிகத் தூய்மையாகவும், மேன்மையாகவும், புனிதமாகவும் சித்திரித்துள்ள நாடகம்…” என்று பாராட்டி தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் எழுதி அனுப்பிய கட்டுரையே “உயிரோவியம்’ நாடக நூலில் முன்னுரையாக அச்சிடப்பட்டது.

இவர் எழுத்தாளர் மட்டுமல்ல, எழுத்தாளர்களின் உரிமைக்கும் போராடியவர். பாரதியார் பாடல்களுக்குத் தனியொருவர் உரிமை கொண்டாடுவது சரியல்ல, அவை நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் என்று உரிமைக்குரல் எழுந்தது. அதற்காக “பாரதி விடுதலைக் கழகம்‘ அமைக்கப்பட்டது. அதன் தலைவர் நாரண. துரைக்கண்ணன் – செயலாளர்கள் “சிவாஜி’ ஆசிரியர் திருலோக சீதாராம் மற்றும் வல்லிக்கண்ணன்.

அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார். அவரது உதவியை நாடியபோது, பாரதியார் மனைவியான செல்லம்மாள் பாரதியிடமிருந்து ஓர் இசைவுக் கடிதம் வாங்கி வந்தால் ஆவன செய்வதாகக் கூறிவிட்டார்.

செல்லம்மாள் பாரதியும் ஒப்புதல் கடிதம் தந்தார். பின்னர் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முயற்சியால், ஏ.வி.எம். செட்டியார் மனமுவந்து பாரதி பாடல்கள் மீதிருந்த உரிமையை விட்டுக் கொடுத்தார். பாரதியார் பாடல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.

செல்லம்மாள் பாரதியைச் சந்திக்கும் நெல்லைப் பயணத்தின்போது நாரண. துரைக்கண்ணனின் மகன் நோய்வாய்ப்பட்டிருந்தவர் இறந்து போனார். அந்தச் சோகத்தையும், இழப்பையும் சுமந்து கொண்டு, வெளியில் காட்டாமல் கருமமே கண்ணாக இருந்தார் என்பது அவரது தன்னலமற்ற தொண்டுகளுக்குச் சிகரமாகும்.

சென்னை மயிலாப்பூரில் 1906 ஆகஸ்ட் 24 அன்று இவர் பிறந்தார். தந்தையார் நாராயணசாமி; தாயார் மீனாம்பாள். இவரது இளமைக்கல்வி திண்ணைப் பள்ளியிலும், திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும்!

பட்டம் பதவிகளுக்கு அப்பாற்பட்டவராகவே வாழ்ந்தார். தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும், சென்னை கம்பர் கழகச் செயலாளராகவும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவராகவும், தென்னிந்திய பத்திரிகையாளர் பெருமன்றத்தின் துணைத் தலைவராகவும், தமிழ்க் கவிஞர் மன்றத் தலைவராகவும் பணியாற்றியதும்கூட தவிர்க்க முடியாத தேவையின் காரணமாகவே.

1952-இல் உலக மொழிகளில் நடத்தப்பட்ட நாடகங்களில் தலைசிறந்ததெனப் பிரெஞ்சு நாட்டு ஏடொன்று இவரது “உயிரோவிய’த்தைத் தேர்வு செய்து பாராட்டியது.

மனிதனுக்கு உயிர்; மனித சமுதாயத்துக்கு உயிரோவியம். இவர் படைத்த “உயிரோவியம்’போல் இவரும் உயர்ந்த மனிதரே!

(இன்று நாரண. துரைக்கண்ணன் நூற்றாண்டு தினம்).

Posted in Anandha Vikatan, Anniversary, Biosketch, Jeeva, Journals, Magazines, Memoirs, Naarana Duraikannan, Prasanda Vikadan, Tamil, Vikadan | Leave a Comment »