Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Local Body Polls’ Category

District Collectors: Sales Tax vs Income Tax – Loopholes, Corruption, Kickbacks in Local Administration

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2008

புன்னகைக்கும் பொய் ரசீதுகள்

இரா. சோமசுந்தரம்

சில நாள்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா அலுவலகம் சென்றபோது, அங்கே ஒரு வட்டாட்சியரிடம் ஒருவர் கடுமையான கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தார்.

ஆனால் அந்த வட்டாட்சியரோ, “”ஒண்ணும் ஆயிடாதுங்க” என்று சமாதானம் செய்து, பேசுபவரின் குரலை மட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இருந்தும்கூட, அடக்கமுடியாத கோபமும் அச்சமுமாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த அந்த நபர், “”இன்னும் எந்தெந்த டிபார்ட்மென்ட்லிருந்து எனக்கு என்கொயரி வருமோ? என் ரசீது புஸ்தகத்தை கொடுங்கய்யா” என்று கேட்டும் கிடைக்காததால், மறுபடியும் திட்டிக்கொண்டே வெளியேறினார்.

சுமார் அரைமணி நேரத்துக்கு அந்த அலுவலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இச்சம்பவம் குறித்து விசாரித்ததில் தெரியவந்தது இதுதான்:

2006-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது, இந்த தாலுகா அலுவலகம் சில படிவங்களை அச்சிட்டதாக சுமார் ரூ.80 ஆயிரத்துக்கு ரசீதுகள் செலவுக் கணக்கில் காட்டப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தணிக்கைத் துறை அலுவலர்கள் இதனைத் தணிக்கை செய்தபோது, யாரோ ஒரு நேர்மையான அலுவலர், இந்த செலவுக்கு ஆட்சேபக் குறிப்பை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் – “”எல்லா படிவங்களும் தேர்தல் ஆணையம் அச்சிட்டுத் தரும்போது, தாலுகா அளவில் எத்தகைய படிவம் அச்சிடப்பட்டது என்பதற்கான சான்றுகள் அளிக்கப்படவில்லை. வாக்காளர்களுக்கு அறிவுரை என்ற நோட்டீஸ் அச்சிடப்பட்டதாக கூறப்பட்டபோதிலும், அதற்கு ரூ.2000-க்கு மேல் செலவாகியிருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே இந்தச் செலவினத்தை ஆட்சேபிக்கிறேன்” என்று அந்தக் குறிப்பில் அவர் எழுதியுள்ளார்.

உள்ளாட்சித் தணிக்கைத் துறையின் அறிக்கைகள் வழக்கமாக உயர்அதிகாரிகளுக்கும் அரசுக்கும் அனுப்பப்படும் என்பதோடு, தலைமை கணக்கு தணிக்கை (ஏ.ஜி.) அலுவலகத்துக்கும் ஒரு நகல் அனுப்பப்பட வேண்டும்.

அப்படி அனுப்பப்பட்ட இந்த ஆட்சேபக் குறிப்பை கண்ட, தலைமை கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரி ஒருவர், “”சுமார் 15 நாள்களில் ரூ.80 ஆயிரத்துக்கு அச்சிடும் இத்தகைய அச்சகம், ஓராண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கக்கூடும்! இந்த அச்சகம் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்யலாம்” என்று மற்றொரு குறிப்புடன் வருமான வரித்துறைக்கு அனுப்பிவிட்டார்.

வருமான வரித்துறை இத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு, மொத்தக் கணக்குகளுடன் நேரில் வரவும் என்று அச்சக உரிமையாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

வட்டாட்சியரிடம் கடும் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவர் அச்சகத்தின் உரிமையாளர். அந்த அச்சகமோ அந்த நகரத்திலேயே மிகச் சிறிய அச்சு இயந்திரத்தை வைத்து, கல்யாணப் பத்திரிகை அச்சடித்து வருவாய் ஈட்டும் மிகச் சிறிய அச்சுக்கூடம். வருமானத்துக்கே திண்டாடும் அவருக்கு வருமான வரித்துறையின் நோட்டீஸ் வந்தால் எப்படி இருக்கும்?

இச்சம்பவம் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தது. நியாயம் செத்துப்போவதில்லை. உண்மைகள் கொஞ்ச காலம் உறங்கலாம். ஆனால் அது ஒரு நாள் விழிக்கவே செய்கிறது. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது’. ஆனால் அப்போதே, உடனே அல்ல. சரி, வாழ்க்கையொன்றும் திரைப்படம் அல்லவே, உச்சக் காட்சியில் நொடியில் தர்மம் வெற்றிபெற!

இது குறித்து மேலும் விசாரித்தபோது இன்னொரு தகவலும் தெரியவந்தது. இத்தகைய ரசீதுகள் தொடர்பான ஆட்சேபக் குறிப்புகளை, விற்பனை வரிப்பிரிவினர்தான் முதலில் கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் வருமான வரித்துறை கையில் எடுத்திருப்பதைப் பார்க்கும்போது, மாநில அரசு, விழிப்புடன் இல்லை என்றாகிறது.

இத்தகைய போலி ரசீதுகள் உள்ளாட்சி முழுவதிலும் அதிக அளவில் இருக்கின்றன. விற்பனை வரித் துறை அதிகாரிகள் விசாரித்தால், பல பூதங்கள் வெளிக்கிளம்பும் என்கிறார்கள்.

உள்ளாட்சித் துறைகளில் ரசீதுகள் மூலம் பல கோடி ரூபாய் திசைமாறுகிறது. இதற்கு அடிப்படையான காரணம் மாவட்ட ஆட்சியர் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட விலைப்பட்டியல்தான்.
அரசுக்குத் தேவையான பொருள்கள் வாங்கும்போது கூட்டுறவுத் துறை நிறுவனங்கள் நீங்கலாக அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்கள் எவை, அவற்றில் எந்தெந்த பொருள்களுக்கு என்ன விலை என்று மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கும் இந்த விலைப்பட்டியலை ஆதாரமாக வைத்துத்தான் தணிக்கை செய்யப்படுகிறது.

நிறுவனம் பட்டியலில் உள்ளதா, விலை சரியா என்பதை மட்டுமே தணிக்கை அலுவலர்கள் சரிபார்க்க முடியும். இந்த நிறுவனம் வெறும் “”ரசீது நிறுவனமா” என்பதை ஆய்வு செய்ய இயலாது.

பொதுச்சந்தையில் ஒரு பொருள் விற்கப்படும் விலையைக் காட்டிலும் குறைந்தது 10 சதவீதம் கூடுதல் விலையே இந்த அங்கீகரிக்கப்பட்ட விலைப் பட்டியலில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதில் சந்தேகம் இருக்குமானால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரூ.10 செலுத்தி, அந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்தால் நிறுவனங்களும் விலைகளும் வெளிச்சமாகிவிடும் என்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத்தான் போறேன். வர்றீங்களா?

Posted in Administration, administrative units, Audit, Bribery, Bribes, Circle Inspector, Collections, Collector, Collectorate, Corruption, Departments, Dept, District, District Collectors, Elections, Govt, IAS, Income, Inefficiency, Inspection, Inspectors, Investigations, IT, kickbacks, local, Local Body, Local Body election, local body elections, Local Body Polls, Local Civic Body, Local Elections, Local Polls, Local self Governance, Loopholes, Notices, officers, Politics, Polls, revenue collection, Revenue District, Revenues, Reviews, sarkeel, Somasundaram, Somasundharam, Somasuntharam, ST, Tahsil, Taluk, Taluka, Taluq, Tax, Union, zilla collector | Leave a Comment »

Hema Malini rubs north Indians the wrong way

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

வட இந்தியர்கள் பற்றிய ஹேமமாலினியின் கருத்துக்கு பலத்த கண்டனம்

மும்பை, ஜன. 26: நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி (படம்), வட இந்தியர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.

இதுகுறித்த விவரம்:

மும்பை உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஹேமமாலினியிடம்

“மும்பையில் வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம், திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பது குறித்த உங்கள் கருத்து என்ன’ என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு ஹேமமாலினி

“அவர்களுக்குப் பிரச்சினை என்றால் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்’

என பதிலளித்திருந்தார். ஹேமமாலினியின் இந்த பதிலால் பல தரப்பிலிருந்தும் அவருக்குக் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஹுசைன் தல்வாய் வியாழக்கிழமை கூறியுள்ளதாவது:

ஹேமமாலினி முதலில் தான் ஒரு பொறுப்புள்ள எம்.பி. என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகுதான் அவர் நடிகை. அவருடைய கணவர் -நடிகரும், எம்.பி.யுமான தர்மேந்திரா வட இந்தியர்தான்; அவருடைய மகள்களும் பாதி வட இந்தியர்கள்தான். இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து ஹேமமாலினி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரிலிருந்து குடியேறிய வட இந்தியர்கள்தான் மும்பை மக்கள் தொகையில் ஏராளமானோர் என்பதும், ஹேமமாலினி தமிழில் அறிமுகமாகி இந்தித் திரையுலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வட இந்தியர்கள் பற்றி நான் கூறிய கருத்து பத்திரிகைகளில் திரித்துக் கூறப்பட்டுள்ளது: ஹேமமாலினி

மும்பை, ஜன. 27: வட இந்தியர்கள் குறித்து தான் கூறியதாக தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் திரித்துக் கூறப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி.யும் நடிகையுமான ஹேமமாலினி தெரிவித்தார்.

தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், தொலைக்காட்சி நிருபர்கள் சிலர், வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு அவர், அவர்களுக்கு பிரச்சினை என்றால் சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்’ என்று பதிலளித்தார். ஆனால் இதற்கு பல தரப்பிலும் பலத்த கண்டனம் எழுந்தது.

இதையடுத்து இந்த சம்பவத்துக்கு மறுப்பு தெரிவித்து அவர் கையெழுத்திட்ட அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியானது. அதில் கூறியுள்ளதாவது:

வட இந்தியர்கள் குறித்து நான் தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் தவறாக திரித்துக்கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விஷயம் ஊதி பெரிதாக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தபோது, சில தொலைக்காட்சி நிருபர்கள் என்னை அணுகி கருத்து கேட்டனர். அப்போது மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு சத்தமாக இருந்ததால் தொலைக்காட்சி நிருபர்கள் கேட்ட கேள்வி எனக்கு சரியாக கேட்கவில்லை. இருப்பினும் அந்த சமயத்தில் நான் சிரித்துக்கொண்டேதான் அவர்களுக்கு பதிலளித்தேன்’ என்றார்.

வட இந்தியர்களை அளவுக்கதிகமான மரியாதையுடன் உயரிய இடத்தில் வைத்துள்ளேன். மும்பையை விட்டு அவர்களை வெளியேற சொல்லவோ அல்லது அவர்களுக்கு ஆலோசனைக் கூறும் அதிகாரமோ எனக்கில்லை.

இதற்குமேலும் அரசியல் கட்சிகள் நான் கூறியதாக தெரிவித்த கருத்தை அரசியலாக்க வேண்டாம் என்றார்.

Posted in Bharatiya Janata Party, BJP, Bombay, Brihanmumbai Municipal Corporation, Civic Polls, Elections, Hema Malini, Hemamalini, India, Local Body Polls, Mumbai, north India, Polls, Quote, racism, Racist, Rajya Sabha | Leave a Comment »

Centre considering Mulayam Govt.’s dismissal: Jaiswal

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

உள்ளாட்சி தேர்தலில் வன்முறை; முலாயம்சிங் அரசை டிஸ்மிஸ் செய்வோம்: மத்திய மந்திரி மிரட்டல்

புதுடெல்லி, நவ. 13-

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

அங்கு சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 12 மாநக ராட்சியில் பாரதீய ஜனதா 8 மாநகராட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் 3 மாநகராட்சி யையும், சமாஜ்வாடி ஒரு மாநகராட்சியையும் கைப் பற்றியது.

உள்ளாட்சி தேர்தலில் நடந்த வன்முறை தொடர்பாக முலாயம்சிங் அரசை டிஸ்மிஸ் செய்வோம் என்று மத்திய உள் துறை இணை மந்திரி ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உத்தரப்பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வகையில் வன்முறை சம்பவம் நடந்தது. இதனால் முலாயம்சிங் அரசை டிஸ்மிஸ் செய்வது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

மத்திய அரசு இந்த விஷயத்தில் பார்வையாளர்போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அரசியல் சாசனப்படி நடந்து கொள்ளும்.

உள்ளாட்சி தேர்தலில் நடந்த வன்முறை தொடர்பாக உத்தரப்பிரதேச அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அனைத்து எதிர்க் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன. இது தொடர் பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. தேர்தல் கமிஷன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அப்படி இருக்கும்போது வாக்குச் சாவடிகளை கைப்பற்றும் சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கூறும்போது, `தேர்தல் வன்முறை தொடர்பாக முலாயம்சிங் அரசை கண்டித்து வருகிற 20-ந்தேதி ஜெயில் நிரப்பும் போராட்டம் நடத்துகிறோம்’ என்றார்.

முலாயம்சிங் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பாரதீய ஜனதா தெரிவித்தது. அதற்குள் தற்போது மத்திய மந்திரி மிரட்டி உள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும் என்றால் பாராளுமன்றத்தின் இரு சபையிலும் ஆதரவு தேவை. இதற்காக பாரதீய ஜனதாவின் உதவி தேவை. ஆனால் இது விஷயத்தில் பா.ஜனதா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆதரிக்குமா என்பது சந்தேகம்தான்.

உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தற்போது ஆட்சியை கவிழ்க்க ஆதரித்ததால் தங்களது செல்வாக்கு பாதிக்கப்படுமோ என்று பாரதீய ஜனதா பயப்படுகிறது.

Posted in booth capturing, Congress(I), Elections, Local Body Polls, Mulayam Singh Yadav, rigging, Salman Khurshid, Sriprakash Jaiswal, UP, Uttar Pradesh | Leave a Comment »

Mayors announced by M Karunanidhi

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006

சென்னை மேயர் மா.சுப்பிரமணியம்: கருணாநிதி அறிவிப்பு 

சென்னை, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய நான்கு மாநகராட்சி மேயர், துணை மேயர் பெயர் விவரங்களை முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று மதியம் அறிவித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

சென்னை

மேயர்-மா.சுப்பிரமணியம்
துணை மேயர்-ஆர்.சத்தியபாமா

மதுரை
மேயர்-தேன்மொழி கோபிநாதன்
துணை மேயர் – பி.எம்.மன்னன்

நெல்லை
மேயர்-ஏ.எல். சுப்பிரமணியம்
துணை மேயர்-கா.முத்துராமலிங்கம்

சேலம்
மேயர்-ரேகா பிரியதர்ஷினி
துணை மேயர்-பி.பன்னீர் செல்வம்

கோவை
துணை மேயர்-ந.கார்த்திக்

திருச்சி
துணை மேயர்-மு.அன்பழகன்

Posted in candidates, Chennai, civic elections, Coimbatore, Deputy Mayors, DMK, Kovai, Local Body Polls, M Karunanidhi, Madras, Madurai, Mayors, Nellai, Salem, Tamil Nadu, Thiruchirappalli, Thirunelveli, Trichy | 1 Comment »

‘DMK Alliance victory is Asurargal’s victory’ – Thol Thirumavalavan

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

விடுதலை சிறுத்தைகள் இணைந்ததால் தி.மு.க. கூட்டணியின் வலிமை கூடியிருப்பது நிரூபணம்: திருமாவளவன் அறிக்கை

சென்னை, அக்.20-

விடுதலை சிறுத்தைகள் பொது செயலாளர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலிலும் 31 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இது கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்-அமைச்சர் கூறியிருப்பது அவருடைய பெருந்தன்மையான – முதிர்ச்சியான தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறது.

கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும் அவரது இயல்பான அணுகுமுறைகளே தி.மு.க. கூட்டணியின் இந்த அமோக வெற்றிக்கு அடிப்படையாகும். விடுதலை சிறுத்தைகளின் வரவால் தி.மு.க. கூட்டணியின் வலிமை மேலும் கூடியிருக்கிறது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தேர்தலுக்கு முன்பே வெளிப்படையாக அறிவித்தது, இந்த அமோக வெற்றியின் மூலம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடைசி நேரத்து வரவால் விடுதலை சிறுத்தைகளுக்கு பெரிதும் பயனில்லை என்றாலும், போட்டியிட்ட குறைவான இடங்களில் கணிசமான வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம்.

குறிப்பாக

  • கடலூர் மாவட்டத்தில் 3 நகராட்சி கவுன்சிலர்கள், 4 பேரூராட்சி கவுன்சிலர்கள்,
  • விழுப்புரம் மாவட்டத்தில் 2 நகராட்சி கவுன்சிலர்கள், 2 பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒரு ஊராட்சி மன்ற தலைவர்,
  • தர்மபுரி மாவட்டத்தில் 2 நகராட்சி கவுன்சிலர்கள், 3 பேரூராட்சி கவுன்சிலர்கள், 5 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர்,
  • பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு பேரூராட்சி கவுன்சிலர்,
  • வேலூர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி கவுன்சிலர், 2 பேரூராட்சி கவுன்சிலர்கள், 8 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒரு ஒன்றிய கவுன்சிலர்,
  • சேலம் மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

அத்துடன், தி.மு.க. கூட்டணியின் அமோக வெற்றிக்கு மிகப்பெருமளவில் பயன்பட்டிருக்கிறோம் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த தீபாவளி நரகாசுரனை கொன்றதற்காக அல்ல; நரகாசுரனும், நரகாசுரனின் வாரிசுகளும் வென்றதற்காக கொண்டாடப்படும் தீபாவளி ஆகும். தி.மு.க. கூட்டணியின் தேர்தல் வெற்றி அசுரர்களின் வெற்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Posted in Alliance, Asurar, civic elections, Dalit Panthers, DMK, Local Body Polls, Tamil Nadu, Thirumavalavan, Thol Thirumaa, Thol Thirumavalavan, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal | Leave a Comment »

Mulayam Singh Yadav – UP Political Calculations : Freebies, Alliances

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 4, 2006

ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வாரா முலாயம்?

நீரஜா சௌத்ரி

தமிழில்: சாரி.

இலவசங்களை அள்ளி வழங்க, மீரட்டுக்குக் கடந்த வாரம் சென்றிருந்தார் உத்தரப் பிரதேச முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்.

  • வேலை இல்லாத இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் ஆறாயிரம் ரூபாய்,
  • இன்டர்மீடியட் வரை படித்த பெண்களுக்கு இருபதாயிரம் ரூபாய் என்ற இரட்டைச் சலுகையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறார் முலாயம்.

யாதவர்கள், முஸ்லிம்களையும் தாண்டி பிற வகுப்பினரிடையேயும் தனக்கு வாக்கு வங்கிகள் ஏற்படும் என்று அரசியல் ஆதாயக் கணக்கு போடுகிறார் முலாயம்.

அத்துடன், தனது பழைய சோஷலிஸ்ட் சகா ஜார்ஜ் பெர்னாண்டஸ் சேர்த்துக் கொள்ளவும் முற்பட்டிருக்கிறார். ராம் மனோகர் லோகியாவிடம் அரசியல் பாலபாடம் பயின்று மது லிமாயே, கர்ப்பூரி தாக்கூர், சரண் சிங் ஆகியோரிடம் குருகுலவாசம் செய்த முலாயம் சிங் சமீபத்திய காலத்தில் அமிதாப் பச்சன், சுபவிரத ராய், அனில் அம்பானி ஆகிய செல்வச் சீமான்களிடம் நட்பு கொண்டார். சட்டப் பேரவைக்கு பொதுத்தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் ஜானேஸ்வர் மிஸ்ரா, வேணி பிரசாத் வர்மா போன்ற “”மறக்கப்பட்ட சமதர்ம சகாக்களை” மீண்டும் தோளோடு தோள் சேர்க்க ஆரம்பித்துள்ளார்.

மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) என்ற அமைப்பிலிருந்து, தனது நண்பரும் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மத குருவுமான ஜாவத் கல்பேயை விலக்கி, மீண்டும் தன் பக்கம் அழைத்துவந்துவிட்டார்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே உத்தரப் பிரதேசத்தில் அரசியல் அரங்கு சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ், பாரதீய ஜனதா இரண்டும் வலுவிழந்த நிலையில் இருப்பதால், அவற்றின் வசம் இருந்த நகராட்சிகளை சமாஜவாதி கட்சி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதே சமயம், எங்கும் எதிலும் ஊழல், சட்டம்-ஒழுங்கு நிலையில் சீர்குலைவு போன்றவற்றால் நடுத்தர வர்க்கம் சமாஜவாதி கட்சிக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. எல்லா வேலையும் யாதவர்களுக்குத்தான் தரப்படுகிறது, எங்கும் முலாயமின் உறவினர்கள் ஆதிக்கமே அதிகரித்து வருகிறது என்ற எண்ணமும் மக்களிடையே பரவி வருகிறது.

ஈரான் அணுசக்தி நிலையங்களை ஐ.நா. குழு பார்வையிடத் திறந்துவிட வேண்டும் என்று கூறியதாலும், அமெரிக்காவுக்கு ஆதரவாக வெளியுறவுக் கொள்கையில் விட்டுக்கொடுப்பதாலும் முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்காமல், தன்னையே முழு மூச்சாக ஆதரிப்பார்கள் என்று கருதுகிறார் முலாயம்.

ராஜபுத்திரர்களின் ஆதரவு நீடிக்கிறது என்பது முலாயமுக்கு மகிழ்ச்சியான விஷயமாகும். ராஜபுத்திரர்களும் பிராமணர்களும் என்றைக்கும் ஒரே அணியில் இருந்தது கிடையாது. இந்த முறை பிராமணர்கள், மாயாவதியை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.

அஜீத் சிங் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக தளம் கட்சி யாருடன் கூட்டு சேரப் போகிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். கடந்த பேரவைத் தேர்தலில் அக்கட்சி மேற்கு மாவட்டங்களில் 15 இடங்களை எளிதாகக் கைப்பற்றியிருக்கிறது. இப்போது ஆளும் கூட்டணியில் இடம் பெற்றாலும், தேர்தல் நேரத்தில் யாருடனும் அக் கட்சி கூட்டுசேர வாய்ப்பு இருக்கிறது.

இந்த முறை தேர்தல் முடிவை நிர்ணயிக்கப்போகிற முக்கிய சக்தி வி.பி. சிங்தான். அவரைப் பற்றித்தான் முலாயம் மிகவும் கவலைப்படுகிறார். இரண்டு நாளைக்கு ஒருமுறை சிறுநீரக சுத்திகரிப்பு செய்துகொள்ள வேண்டிய மோசமான உடல் நிலையுடன் உள்ள வி.பி. சிங்கின் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் தாங்களாகவே பெரும் எண்ணிக்கையில் வருகின்றனர். அவருடைய விவசாயிகள் ஆதரவு, ஏழைகள் ஆதரவு பேச்சுகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு விவசாயிகள் இடையே பலத்த எதிர்ப்பு இருக்கிறது என்று உணர்ந்து கொண்டதால் இப்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.

முலாயம் சிங் யாதவுக்கு ஆதரவாளர்கள் யாரோ, அவர்களே வி.பி. சிங்குக்கும் ஆதரவாளர்களாக உள்ளனர். வி.பி. சிங்குக்கு பதவி ஆசை கிடையாது என்பது அவருக்குக் கூடுதல் பலம். வி.பி. சிங் அமைத்துள்ள ஜன மோர்ச்சா என்ற கதம்பக் கூட்டணியில்

  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
  • தேசியவாத காங்கிரஸ் கட்சி,
  • ராஷ்ட்ரீய ஜனதா தளம்,
  • ராம்விலாஸ் பாஸ்வானின் லோக ஜனசக்தி,
  • உதித் ராஜின் நீதிக்கட்சி,
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்),
  • பாரதீய கிசான் யூனியன்,
  • மக்கள் ஜனநாயக முன்னணி,
  • ராஜ் பப்பரின் ஜன மோர்ச்சா ஆகிய சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆட்சியைப் பிடிக்கிறதோ இல்லையோ, இக் கூட்டணி முலாயம் சிங் யாதவுக்கு எதிரான உணர்வை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இதனால்தான் முலாயம் சிங் கலக்கம் அடைந்திருக்கிறார்.

இந்தமுறை பேரவைத் தேர்தல் முலாயமுக்கு மிகப்பெரிய அக்னிப் பரீட்சையாக அமையக்கூடும். அவர் மட்டும் அல்ல, மற்றவர்களும் நம்பிக்கையோடு இல்லை. இம் முறையும் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு “”குதிரை பேரம்தான்” தலைதூக்கும் என்று தெரிகிறது.

Posted in Ajith Singh, Amitabh Bhachan, Anil Ambani, BDP, BJP, BSP, Congress (I), CPI-ML, Jaaneswar Mishra, Local Body Polls, Mayawathi, Mulayam Singh Yadav, Neeraja Chowdhry, Ram Vilas Paswan, Samajwadi Party, Shia, Tamil, Uttar Pradesh, Veni Prasad, VP Singh | Leave a Comment »