Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Laldenga’ Category

Rajiv Gandhi Anniversary

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 21, 2006

18 வயதானவர்களுக்கு வாக்குரிமை: ராஜீவ் முடிவை எதிர்த்த அமைச்சர்கள்: மத்திய அமைச்சர் தகவல்

புது தில்லி, ஆக. 21:வாக்களிக்கும் வயதை 18 ஆக குறைத்தால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என அப்போதைய அமைச்சரவை சகாக்கள் எதிர்த்தனர். ஆனால் அதையும் மீறி தனது முடிவை அமல்படுத்தினார் ராஜீவ் என மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.

மும்பை பிரதேச காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது:

வாக்களிக்கும் வயதை 18 ஆக குறைப்பது தொடர்பாக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிவரை இந்த விவாதம் நடைபெற்றது. “ஜென்டில்மேன்’ என அழைக்கப்பட்ட ஒரு அமைச்சர் இந்த முடிவை கடுமையாக எதிர்த்தார். அவருடைய பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. அவர் இப்போது உயிருடனும் இல்லை.

வாக்களிக்கும் வயதைக் குறைத்தால் காங்கிரஸ் கட்சி தோற்றுவிடும் என அவர் எச்சரித்தார். அதற்கு பதிலளித்த ராஜீவ் காந்தி நாம் தோற்றாலும் எதிர்கால தலைமுறை வெற்றிபெறும் எனக் கூறினார்.

தனது முடிவில் பிடிவாதமாக இருந்து வாக்களிக்கும் வயதை 18 ஆக குறைத்தார்.

மிஜோரம் மாநிலத்தில் தீவிரவாதம் உச்சத்திற்கு சென்றபோது லால்டெங்காவை சரணடையச் செய்தது ராஜீவின் தந்திரமாகும். அப்போது மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்தவரை விலகச் சொல்லிவிட்டு லால்டெங்கா முதல்வராக வழி ஏற்படுத்திக் கொடுத்தார் என்றார் பிரியரஞ்சன்.

இந்தியா இப்போது ஜி-8 உச்சி மாநாடு வரை சென்றுள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக விரைவில் இந்தியா அங்கம் வகிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Posted in 18, 21, Congress, Congress(I), Laldenga, Mizoram, Priyaranjan Das Munshi, Rajeev Gandhi, Rajiv Gandhi, Tamil, Vote | Leave a Comment »