சு. திருநாவுக்கரசர் பாஜக செயலர்; ஆட்சிமன்றக் குழுவிலிருந்து மோடி நீக்கம்
புது தில்லி, ஜன. 30: பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சு. திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டிருக்கிறார். குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கட்சியின் உயர் அதிகார அமைப்பான ஆட்சிமன்றக் குழுவில் இம் முறை இடம் பெறவில்லை. முன்னாள் பிரதமர் வாஜபேயியின் சகோதரி மகளான கருணா சுக்லா கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அத்வானியை வெளிப்படையாக விமர்சித்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆபாச சி.டி.யில் இடம் பெற்றதாக பத்திரிகைகளிலும் மொபைல் எஸ்எம்எஸ்களிலும் பிரபலமான சஞ்சய் ஜோஷி கட்சியின் பொதுச் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்.
கட்சித் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்நாத் சிங் நிர்வாகிகள் குழுவில் பெருத்த மாற்றங்களைச் செய்திருக்கிறார். புதிய நிர்வாகிகள் விவரம் வருமாறு:
கட்சியின் தேசிய துணைத் தலைவர்கள்:
- கல்யாண் சிங்,
- பாளாசாஹேப் ஆப்தே,
- சாந்தகுமார்,
- சாஹிப்சிங் வர்மா,
- யஷ்வந்த் சின்ஹா,
- முக்தார் அப்பாஸ் நக்வி,
- ஜுயல் ஓரம்,
- கைலாஷ் மேக்வால்,
- கருணா சுக்லா.
பொதுச் செயலாளர்கள்:
- அருண் ஜேட்லி,
- அனந்த குமார்,
- கோபிநாத் முண்டே,
- வினய் கட்டியார்,
- தாவர்சந்த் கெலோட்,
- ஓம்பிரகாஷ் மாத்துர்,
- ராம்லால்,
- ஜகதீஷ் ஷெட்டிகர்,
- அனில் ஜெயின்,
- ஹுகும்தேவ் நாராயண் யாதவ்,
- ராஜீவ் பிரதாப் ரூடி,
- காந்த நளவாடே.
தேசிய செயற்குழு உறுப்பினர்கள்:
- அடல் பிகாரி வாஜபேயி,
- லால் கிருஷ்ண அத்வானி,
- ஜஸ்வந்த் சிங்,
- முரளி மனோகர் ஜோஷி,
- வி. வெங்கைய நாயுடு,
- கே. ஜனா கிருஷ்ணமூர்த்தி,
- பங்காரு லட்சுமணன்,
- சுஷ்மா ஸ்வராஜ்,
- விஜய்குமார் மல்ஹோத்ரா,
- ஜே.பி. மாத்துர்,
- சி.பி. தாக்குர்,
- நஜ்மா ஹெப்துல்லா,
- சுமித்ரா மகாஜன்,
- பி.சி. கந்தூரி,
- அருண் செüரி,
- சத்ருகன் சின்ஹா,
- மேனகா காந்தி,
- கல்ராஜ் மிஸ்ரா.