வருகிறது சங்கீத சீசன்!
“”இன்னும் சீசன் டிக்கட்டுகள் கூட அச்சாகி வர வில்லை. அதற்குள் பணத்தைக் கொடுத்து விட்டு தங்கள் சீட்டுகளை உறுதி செய்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் ரசிகர்கள்!” என் றார் பிரபல சபாவின் செயலர்.
“”போன வருடம் கொடுத்த அதே சீட்டுதான் வேணும். எப்படியாவது பார்த்துக் கொடுங்க!” என்று சில ரசிகமணிகள் கெஞ்சாத குறையாகக் கேட்பதை யும் பார்க்க முடிந்தது.
இந்த நிலைமை- அக்டோபர் முதல் தேதி கூட விடி யாத, செப்டம்பர் இரண்டாம், மூன்றாம் வார நிலவரம்.
“”யார் பாடப் போகிறார்கள், என்னென்ன நாடகங் கள், யாருடைய நடனங்கள் என்று எதுவுமே அவர்க ளுக்குத் தெரியாது. ஆனாலும் டிக்கெட் மட்டும் அவ சியம் அவர்களுக்கு வாங்கி வைத்துக் கொள்ள வேண் டும். டிசம்பர் சங்கீத-நடன-நாடக விழா என்றாலே தனி. மற்ற மாதங்களில் ” ஆல் ஆர் வெல்கம்’ போட் டால்தான் ஹாலுக்குள் கூட்டம் இருக்கும். டிசம்பர் மட்டும் விதிவிலக்கு” என்றார் அந்த சபாக்காரர்.
- சஞ்சய் சுப்பிரமணியம்,
- டி.எம். கிருஷ்ணா,
- சுதா ரகுநாதன்,
- அருணா சாய்ராம்,
- நெய்வேலி சந்தான கோபாலன்,
- டிவிஎஸ்,
- மதுரை டி.என். சேஷகோபா லன்,
- விஜய் சிவா, சௌம்யா,
- அருண்,
- ரவிகிரண்,
- ஜெயஸ்ரீ,
- மாண்டலின் சீனிவாஸ்,
- கதிரி கோபால்நாத்,
- குன்னக்குடி,
- ரமணி
என்று ஒரு சின்ன வட்டத்துக்குள் ளேயேதான் எல்லா பிரபல சபாக்களும் சுற்றிச் சுற்றி வரவேண்டியிருக்கிறது.
- சாகேதராமன்,
- சிக்கில் குருசரண்,
- மாஸ்டர் பாலமு ரளி கிருஷ்ணா(இப்போ இவர் குன்னக்குடி பாலமு ரளி கிருஷ்ணாவாமே?),
- லஷ்மி ரங்கராஜன்,
- நிஷா ராஜகோபால்,
- வசுந்தரா ராஜகோபால்,
- மாம்பலம் சகோதரிகள்
என்று அடுத்த வட்டத்துக்குள் இன் னொரு சுற்று!
- ஜெயந்தி குமரேஷ்,
- காயத்ரி,
- ரேவதி கிருஷ்ணா
என்று வீணைக் கலைஞர்கள் பட் டியலோ மிகச் சுருங்கிப்போய் விட்டது.வயலின் சோலோ அல்லது டூயட்-
- டி.என்.கிருஷ்ணன்,
- எம்.எஸ்.ஜி,
- கணேஷ்-கும ரேஷ்,
- ஜிஜேஆர் கிருஷ்ணன்- விஜயலஷ்மி
என்று இந்தப் பட்டியலும் குறுகிப்போய்விட் டது.நடனம் என்று பார்த்தால் அதிலும் வறட்சி.
- அலர்மேல்வள்ளி மூன்றே சபாக்களில் மட் டுமே ஆடுகிறார்.
- பத்மா சுப்ரமணியம்,
- லீலா சாம்சன் கூட அதிகம் இருக்காது.
இளைய தலைமுறை நடனக் கலைஞர்களில்,
- ஊர் மிளா சத்யநாராயணன்,
- ரோஜா கண்ணன்,
- நர்த்தகி நடராஜ்,
- லாவண்யா அனந்த் (கார்த் திக் ஃபைன் ஆர்ட்ஸின் இந்த வருட “நடன மாமணி’ விருது பெறுபவர்),
பிற்பகல் நிகழ்ச்சியும் மாலை நிகழ்ச்சியும் வழங்க இருப்பதாக ஒரு தகவல்.இந்த இசை-நடன நிகழ்ச்சிகள் ஒரு புறம் இருக்க, காலை ஏழு மணிக்கு நடைபெறும் “திருப்பாவை சொற்பொழிவுகளில், கல்யாணபுரம் ஆராவமுதாச்சா ரியார், வேளுக்குடி கிருஷ்ணன் இரண்டு பேரே ஸ்டார் அந்தஸ்து பெற்று, ஹால் நிரம்ப வைக்கிறார் கள்.
பாரம்பரியமான இந்த இசை-நடன நிகழ்ச்சிகள் எல்லாச் சபாக்களிலும் வெவ்வேறு பக்க வாத்தியக் கலைஞர்களுடன் நடக்கிறபோது, அனிதா ரத்னம் குழுவினர் மட்டும் தனியே “அதர் ஃபெஸ்டிவல்’ என்று நட்சத்திர ஓட்டலில் நடத்தி வருகிறார்கள்.
நிகழ்ச்சிகளின் தலைப்புகளே புருவத்தை உயர்த்தும் வகை என்றால், ஆடியன்சும் “ஹை ப்ரோ’தான்! போன வருடம் மியூசிக் அகடமி, ஜனவரியில் தனியே ஒருவாரத்துக்குக் காலை முதல் மாலை வரை நடன நிகழ்ச்சிகள் நடத்தி வெற்றி கண்டதால், இந்த வருடமும் ஒரு வாரத்துக்கு பிரபல நடனக் கலைஞர்க ளின் லெக்-டெம் உள்பட, பல நடன நிகழ்ச்சிகள் உண்டு என்கிறது தகவல் அறிந்த வட்டாரம். காலை நிகழ்ச்சிகளுக்கு “ஆல் ஆர் வெல்கம்’. மாலை டிக்கட் டுகள் உண்டு. பக்க பலமாக அமெரிக்க நிறுவன ஸ்பான்சர் வேறு!
சென்னை நகரம் முழுக்க மூலைக்கு மூலை இந்த இசை-நடன நிகழ்ச்சிகள் நடந்தாலும், திருவல்லிக்கே ணியின் பரபரப்பான தெரு ஒன்றில் மகாகவி பாரதி யாரின் இல்லத்திலேயே அவர் நினைவைப் போற்றும் வகையில் “வானவில் பண்பாட்டு மையம்’ நாலு நாள் களுக்கு, கச்சேரிகளும், நடனமும், சொற்பொழிவுக ளும், ஜதி பல்லக்குமாக நடத்தும் பாரதி விழாவுக்கும் கூட்டம் குறைச்சலில்லை.
திருமணங்களில் வரவேற்பு நிகழ்ச்சி என்று எல்லா மண்டபங்களிலும் இசைக் கச்சேரி நடப்பது வழக்கம்.
ஆனால் “இலக்கிய வீதி’ இனியவன் அவர்க ளின் நண்பர்கள் வட்டாரத்தில், அவர் தன் அமைப்பின் சார்பாக அறிமுகப்படுத்தியிருப்பது- நடன நிகழ்ச்சி! அவர் நண்பர் ஒருவரின் மகளின் திருமண வரவேற்புக்கு காயத்ரி பாலகுருநாதனின் “ஆண்டாள் திருமணத்து’க்குக் கிடைத்த பாராட்டைத் தொடர்ந்து, அவர் தம் நண்பர் கள் வட்டாரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச் சிகளாக சைவ-வைணவ நடன நிகழ்ச்சிகளை, நாரத கான சபாவின் “நாட்டியரங்கம்’ அமைப் பின் உதவியோடு நடத்தப் போகிறார்! இது திருமண வரவேற்பு நிகழ்வுகளில், வர வேற்கத்தக்க மாற்றம்!
சாருகேசி
சென்ற வருடத்து தினமணிக் கதிர் கட்டுரைகள்:1. SRG Sambhandham & SRG Rajanna – December Carnatic Music Season Special by Dinamani Kadhir
2. Lalkudi Jayaraman – Dinamani Kathir Music Season Special
3. D Sankaran – Malaikottai Govindhasaamy Pillai : Dinamani Kathir Music Season Special
4. Sembai Vaithyanatha Bagavathar, Mani – Dinamani Kathir Music Season Special
7. KV Ramakrishnan’s encounters with Carnatic Vidwans – Dinamani Kathir Music Season Special
9. ‘Cauvery’ Ramaiya – Ramanujam : Dinamani Kathir Music Season Special
10. Sujatha Vijayaraghavan – Amma : Ananthalakshmi : Dinamani Kathir Music Season Special