கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் பதவி: வெங்சர்க்காரை எதிர்த்து 2 பேர் போட்டி
மும்பை, செப். 22- இந்திய கிரிக்கெட் வீரர் கள் தேர்வு குழு தலைவர் கிரண்மோரே பதவி முடி கிறது. அதே போல இதன் உறுப்பினர் தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகர் பதவியும் முடிகிறது. வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் மும்பையில் கிரிக்கெட் சங்க ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடக் கிறது. அதில் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்படுகிறார்கள்.
இதில் தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டன் வெங் சர்க்காரை நிறுத்த மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. அவருக்கு மேற்கு மண்டல கிரிக்கெட் சங்கங்கள் அனைத்தும் ஆதரவாக உள்ளன. வெங்சர்க்காரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட 2 பேர் தயாராகி வருகிறார்கள். இவர்களில் ஒருவர் திராஜ் பிரசன்னா. இவர் 1970-ம் ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று விளையாடினார்.
அதே போல கர்சான் காவ்ரியும் போட்டியிட திட்டமிட்டு உள்ளார். இவர் ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆடி உள்ளார். ஆனால் இவர்கள் இருவருக்குமே அதிக அளவு ஆதரவு இல்லை.
சந்திரசேகருக்கு பதிலாக முன்னாள் இந்திய வீரர் வெங்கடபதிராஜ× தேர்ந்தெடுக்கப்படுகிறார்.