தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 10 ஆயிரம் கோடி வருமானவரி வசூல்: தலைமை கமிஷனர் தகவல்
சென்னை, ஜன. 24-
வருமான வரித்துறை தலைமை கமிஷனர் ரவிச்சந் திரன் நிருபர்களிடம் கூறியதா வது:-
வருமான வரித்துறை ரிட்டன் படிவங்கள் கடந்த நவம்பர் மாதம் வரை 13 லட் சத்து 39 ஆயிரம் வந்துள்ளன. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடும் போது 4.10 சதவீதம் அதிகமாகும்.
ரிட்டன் படிவங்களை ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் 3 லட்சத்து 4 ஆயிரம் படி வங்களை ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. சிறப்பு திட்டம் மூலம் அதிக ஆட்களை வைத்து அவற்றையும் ஆய்வு செய்தோம்.
இன்னும் 1 லட்சத்து 47 ஆயிரம் படிவங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டியது இருக் கிறது. பிப்ரவரி மாதத்துக் குள் இந்த பணிகளை முடித்து திருப்பி கொடுக்க வேண்டிய பணங்களை அனுப்பி விடு வோம். இந்த பணம் `எலக்ட் ரானிக் கிளியர்’ மூலம் பாங்கி களுக்கு அனுப்பப் படும்.
ரூ. 10 ஆயிரம் கோடி
இந்த ஆண்டு இதுவரை ரூ. 10 ஆயிரத்து 47 கோடி ரூபாய் வருமான வரி வசூலிக் கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே நாளை ஒப்பிடும் போது 35.27 சதவீதம் அதிகமாகும்.
இந்த நிதி ஆண்டில் மொத் தம் ரூ. 13 ஆயிரத்து 872 கோடி வருமான வரி வசூலிக்க இலக்கு நிர்ணயித்து இருந்தோம். இப்போது இலக்கை ரூ. 15 ஆயிரத்து 491 கோடியாக உயர்த்தி உள்ளோம். இது கடந்த ஆண்டை விட 43 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு மொத்தமே ரூ. 10 ஆயிரத்து 841 கோடி தான் வசூலாகி இருந்தது.
இவ்வாறு அவர் கூறி னார்.