எட்டரை மணிக்கு என்ன பார்க்கலாம்?
விஜய் டி.வி. அறிமுகப்படுத்தியுள்ள புதிய நிகழ்ச்சியின் பெயர்தான் “8.30 மணிக்கு என்ன பார்க்கலாம்?’. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாள்களுக்கு ஒரு கதை ஒளிபரப்பாகும். ஆறு வாரங்கள் கழித்து எந்தக் கதைக்கு அதிக எதிர்பார்ப்பும், ஆதரவும் உள்ளதோ அந்தக் கதை, மெகா தொடராக விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும். அதே சமயம், இந்த கதைகளைப் பற்றி வெவ்வேறு பார்வையாளர்களுடன் நடிகை சுஹாசினி விவாதிக்கும் பகுதியும் ஒளிபரப்பாகிறது. அத்துடன் பிரபல இயக்குநர்கள் பாலுமகேந்திரா, அமீர், வசந்தபாலன், ராதாமோகன், வசந்த், எழில் ஆகியோரும் நேயர்களுடன் தொடர் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
ஒளிபரப்பாகும் தொடர்கள்:
- ஆயிரம் ஜன்னல் வீடு (01),
- மீண்டும் ஒரு காதல் கதை (02),
- சொல்லத்தான் நினைக்கிறேன் (03),
- மதுரை (04),
- தேவர் கோயில் ரோஜா (05) ,
- மென்பொருள் (06) .
வாக்களிக்கும் முறை: நேயர்கள் தங்களுக்குப் பிடித்த தொடருக்கு எஸ்.எம்.எஸ்., டெலிவோட்டிங் மற்றும் இணையதளம் மூலம் வாக்களிக்கலாம். தொடர் எண் “ஒன்று’ பிடித்திருந்தால் உங01 என்றும், “மூன்று’ பிடித்திருந்தால் உங03 என்றும் டைப் செய்து 7827 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.
இணையதளத்தில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய விரும்புவோர் http://www.indya.com க்கு சென்று வாக்களிக்கலாம். டெலிவோட்டிங் செய்ய விரும்புபவர்கள் 505782727 மற்றும் 12782727 என்ற எண்களுக்குத் தங்கள் மொபைல் மூலம் தொடர்புகொள்ளலாம்.