லாலு மகளுடன் “பிக்னிக்’ சென்ற இளைஞர் மரணம்: விசாரணை ஒத்திவைப்பு
ராஞ்சி, ஜன. 19: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் மகள் ரஜினியுடன் உல்லாசப்பயணம் சென்ற அபிஷேக் மிஸ்ரா மர்மமான முறையில் இறந்து கிடந்தது பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் மனு மீதான விசாரணையை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் பிப். 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
பிட்-மெஸ்ரா கல்லூரி மாணவர் அபிஷேக்கும், லாலு பிரசாத் மகள் ரஜினி உள்ளிட்ட அவரது 3 நண்பர்களும் கடந்த டிச. 8-ம் தேதி டாஸம் அருவிக்கு சிற்றுலா (பிக்னிக்) சென்றனர்.
அங்கு அபிஷேக் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி அபிஷேக்கின் தந்தை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவர் தில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அட்வகேட் ஜெனரல் பி.கடோடியா, வழக்கு தொடர்பான குறிப்புகளை தயாரிக்க அவகாசம் கோரியதை அடுத்து, முதன்மை நீதிபதி எம்.கே.விநாயகம் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணையை பிப்.1-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.