வெனிசூலாவில் அதிபர் தேர்தல் வாக்களிப்பு
![]() |
![]() |
தேர்தல் சுவரொட்டிகள் |
வெனிசூலாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தயங்காமல் பேசும் இடதுசாரி அதிபர் ஹூகோ சவேஸ் அவர்களுக்கு மக்கள் மேலும் ஓர் ஆறாண்டுகால ஆட்சியை வழங்குவார்களா என்பது இதன் முடிவில் தெளிவாகும்.
அவரை எதிர்த்து 6 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் ஒருவரான மாவட்ட ஆளுனரான மனுவேல் றோசாலெஸ் அதிபருக்குக் கடும் போட்டியாக உள்ளார்.
தான் பதவிக்கு வந்தால், நாட்டில் ஜனநாயகம் தழைக்கும், பழுது பட்டுப்போயுள்ள அமெரிக்காவுடனான உறவுகள் மேம்படும் என்கிறார் அவர்.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சிக்கும் அதிபர் சவேசுக்கு நலிந்த பாட்டாளி மக்களிடம் அமோக ஆதரவுள்ளது.
நாட்டின் எண்ணெய் வள நிதியைக் கொண்டு ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த அவர் மேற்கொண்ட நலத் திட்டங்கள் அந்தப் பேராதரவை ஏற்படுத்தின.
தலை நகர் கராகஸ்ஸிலிருந்து வரும் செய்திகள் வாக்களிப்பின் தொடக்கம் சுறு சுறுப்பாக இருந்தது என்று கூறுகின்றன.