இந்திய நட்சத்திரங்களின் நடவடிக்கையால் மலேசிய பத்திரிகைகள் அதிருப்தி
மலேசியா, டிச. 10: மலேசியாவில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நட்சத்திர கலைநிகழ்ச்சியில் இந்திய நடிகர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து மலேசிய பத்திரிக்கைகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
பாலிவுட் நட்சத்திரங்களின் மனநிலை மோசமான திரைக்கதையைப் போல் இருக்கிறது என்று அதிருப்தி தெரிவித்துள்ளது மலேசிய செய்தித்தாளான ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்.
இந்தி திரைப்பட உலகின்(பாலிவுட்)நட்சத்திரங்களான
- சல்மான் கான்,
- ஜான் ஆபிரகாம்,
- பிபாஷா பாசு,
- அர்பாஸ் கான்,
- சோகைல் கான்,
- ஹேமாமாலினி,
- ஈஷா தியோல் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா கோலாலம்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேலும், இந்தித் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கு கொள்ளும் நட்சத்திரத்துடன் ஒரு நாள், பத்திரிக்கையாளர்களுடன் கலந்துரையாடல், சிவப்பு கம்பள வரவேற்பில் மேடை நிகழ்ச்சி ஆகியவைகள் நடத்தவும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் திட்டமிட்டனர்.
2 மணி நேரம் காத்திருந்தனர் இந்த நிகழ்ச்சிக்காக நட்சத்திரங்களை பேட்டி கான மலேசியாவில் உள்ள உள்நாட்டு பத்திரிக்கைகள், தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவைகள் சுமார் இரண்டரை மணி நேரம் ஹோட்டலில் காக்க வைக்கப்பட்டனர்.
மேலும், நடிகர்கள் ஜான் ஆபிரகாம், ரவிசோப்ரா ஆகியோர் பத்திரிக்கையாளர்களிடம் ஆத்திரத்துடன் நடந்துகொண்டதும், நடிகர் சல்மான் கான் 2 நிமிஷத்தில் வந்து விடுவார் எனக் கூறி 20 நிமிஷத்தில் வந்ததும் மலேசிய பத்திரிக்கைகளை அதிருப்தியின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளன.
“” இந்திய நேரப்படி 2 நிமிஷத்தில் நடிகர் சல்மான் கான் வருவார் என்று கூறினால் 20 நிமிஷங்கள் என்று அர்த்தமா. அவருக்கு விருப்பப்பட்ட நேரத்தில் தான் வருவாரா என்று செய்தி வெளியிட்டுள்ளது ஒரு நாளிதழ்.
மேலும், பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டவுடன் ரவி சோப்ராவின் மொபைல் போன் ஒலித்தது. உடனை அவர் கேள்விக்கு பதில் அளிக்காமல் மொபைல் போனை எடுத்து பேசத்தொடங்கியது அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை வருத்தமடையச்செய்துள்ளது. சிவப்பு கம்பள நிகழ்ச்சிக்காக நட்சத்திரங்களை மேடையில் காண ரசிகர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பொறுமையுடன் காத்திருந்தனர்.
இது போல மோசமாக வேறு எங்காவது நடக்குமா? பாலிவுட்டில் மட்டுமே நடக்கும் என்று ஒரு நாளிதழ் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.