ெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் 34 குழந்தைகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பலி
 |
 |
கானா தாக்குதலில் 34 குழந்தைகள் உட்பட பலர் பலி |
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் குண்டு வீச்சில் 50க்கு மேற்பட்ட பொது மக்கள் பலி. அதில் பாதிக்கு மேல் குழந்தைகள், சிறுவர்கள். கானா என்ற கிராமத்தில் உள்ள 3 மாடிக் கட்டடம் மீது இஸ்ரேலியக் குண்டுகள் வீழ்ந்ததில் அந்தக் கட்டடத்தின் நிலவறைக்குள் தஞ்சம் புகுந்திருந்த கிராம மக்கள் மீது கட்டம் இடிந்து வீழ்ந்து மூடியது.
அது ஹெஸ்புல்லா பயன்படுத்தி வந்த பகுதி என்றும் அங்கிருந்து பொது மக்களை விலகும் படி தாங்கள் அறிவித்திருந்தோம் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் அங்கிருந்து வெளியேற முடியாத அளவுக்கு மக்கள் ஒன்றில் பயந்து போயிருந்தார்கள் அல்லது அங்கிருந்து வெளியேறுவதற்கான வசதிகள் அவர்களுக்கு இல்லாமல் இருந்தது என்கிறார் அப்பகுதிக்குச் சென்ற பி.பி.சி. முகவர்.
இந்தத் தாக்குதலை ஒரு கோரமான படுகொலை என்று வர்ணித்த ஹெஸ்புல்லா இதற்கு பதிலடி கிடைக்கும் என்று கூறுகிறது. எல்லைப்புற இஸ்ரேலிய நகரமான கிர்யத்திலுள்ள நமது இன்னோரு முகவர் அப்பகுதி மீது ஹெஸ்புல்லா அடித்த பல கட்டூஸா ஏவுகணைகள் இன்று வந்து வீழ்ந்தன என்கிறார்.
கானாவில் நடந்த தாக்குதலுக்கு இஸ்ரேலிய பிரதமர் வருத்தம்
 |
 |
இஸ்ரேலிய பிரதமர் எஹுத் ஆல்மர்ட் |
கானாவில் பொது மக்கள் கொல்லப்பட்டு இருப்பதற்கு இஸ்ரேலிய பிரதமர் எகுட் ஒல்மர்ட் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் சண்டை நிறுத்தத்தினை அறிவிக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அவரது அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
குண்டுத்தாக்குதல் தொடர்பான செய்தி பரவிய உடன், லெபனானுக்கு செல்ல திட்டமிட்டு இருந்த அமெரிக்க அரசுத்துறை செயலர் கொண்டலீசா ரைஸ் தனது பயணத்தினை ரத்து செய்துள்ளார்.
உடனடியாக, எந்தவிதமான நிபந்தனைகளும் அற்ற போர் நிறுத்தம் ஏற்படாமல், தான் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபட போவதில்லை என லெபனான் பிரதமர் ஃபவுட் சினியோரா அறிவித்துள்ளார்.
ஜெருசேலத்தில் இருக்கின்ற அமெரிக்க அரசுத்துறை செயலர் கொண்டலீசா ரைஸ், அப்பாவி மக்கள் கொடூரமாக இறந்துள்ளதற்கு தனது வருத்தத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் குண்டு வீச்சில் 50க்கு மேற்பட்ட பொது மக்கள் பலி. அதில் பாதிக்கு மேல் குழந்தைகள், சிறுவர்கள்.
கானா என்ற கிராமத்தில் உள்ள 3 மாடிக் கட்டடம் மீது இஸ்ரேலியக் குண்டுகள் வீழ்ந்ததில் அந்தக் கட்டடத்தின் நிலவறைக்குள் தஞ்சம் புகுந்திருந்த கிராம மக்கள் மீது கட்டம் இடிந்து வீழ்ந்து மூடியது.
அது ஹெஸ்புல்லா பயன்படுத்தி வந்த பகுதி என்றும் அங்கிருந்து பொது மக்களை விலகும் படி தாங்கள் அறிவித்திருந்தோம் என்றும் இஸ்ரேல் கூறுகிறது.
ஆனால் அங்கிருந்து வெளியேற முடியாத அளவுக்கு மக்கள் ஒன்றில் பயந்து போயிருந்தார்கள் அல்லது அங்கிருந்து வெளியேறுவதற்கான வசதிகள் அவர்களுக்கு இல்லாமல் இருந்தது என்கிறார் அப்பகுதிக்குச் சென்ற பி.பி.சி. முகவர்.
இந்தத் தாக்குதலை ஒரு கோரமான படுகொலை என்று வர்ணித்த ஹெஸ்புல்லா இதற்கு பதிலடி கிடைக்கும் என்று கூறுகிறது.
எல்லைப்புற இஸ்ரேலிய நகரமான கிர்யத்திலுள்ள நமது இன்னோரு முகவர் அப்பகுதி மீது ஹெஸ்புல்லா அடித்த பல கட்டூஸா ஏவுகணைகள் இன்று வந்து வீழ்ந்தன என்கிறார்
இஸ்ரேலுக்கு உலக நாடுகள் கண்டனம்
 |
 |
கானா நகரில் தாக்கப்பட்ட கட்டிடம் |
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு உலகின் பல பாகங்களிலிருந்து கண்டனங்கள் வந்துள்ளன.
அந்த நாட்டுடன் ராஜதந்திர உறவு கொண்டுள்ள மிகச் சில அரபு நாடுகளுக்குள் ஒன்றான ஜோர்டனின் மன்னர் அப்துல்லா இந்தத் தாக்குதலை ஓர் அசிங்கமான குற்றச் செயல் என்றும், சர்வதேச சட்டதிட்டங்களைக் கண்மூடித்தனமாக மீறிய நடவடிக்கை என்றும் கூறியுள்ளார்.
லெபனானிலுள்ள ஐ.நா. பிரதிநிதி உடனடியாக ஒரு விசாரணை தேவை என்றுள்ளர். அரபு லீக் அமைப்பும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைகளுக்குப் பொறுப்பான தலைவர் கவியே சொலனோ அவர்கள் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை எந்தக் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது என்றார்.
பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் பொது மக்களைக் கொல்வது சகிக்க முடியாத ஒன்று என்றதுடன் இஸ்ரேலை பொறுப்பாகச் செயற்படும் படி மீண்டும் விலியுறுத்தினார்.
பிரெஞ்சு அதிபர் ஜக் சிராக், பாலஸ்தீன அதிபர் மஃமுத் அப்பாஸ், எகிப்திய அதிபர் ஹொஸ்னி முபாரக் மற்றும் போப்பாண்டவர் ஆகியோர் உடனடியாகப் போர் நிறுத்தம் தேவை என்று அறை கூவியுள்ளனர்.