2-வது சி.டி. ஆதாரம் வெளியீடு
பெங்களூர், செப். 14: கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி மீதான ரூ. 150 கோடி லஞ்சப்புகாருக்கு ஆதாரமாக 2-வது விடியோ காஸட் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் குமாரசாமி, உள்துறை அமைச்சர் எம்.பி.பிரகாஷ், வனத்துறை அமைச்சர் சி.சென்னிகப்பா ஆகியோர் மீது 150 கோடி லஞ்சப் புகாரை சட்ட மேலவை பாஜக உறுப்பினர் ஜனார்த்தன ரெட்டி கூறியிருந்தார். இதற்கு ஆதாரமாக ஒரு சி.டி. காஸட்டை கடந்த மாதம் ஜனார்த்தன ரெட்டி வெளியிட்டார்.
ஆனால் அந்த காஸட்டில் ஜனார்த்தன ரெட்டி புகார் கூறிய யாரும் இல்லை. இந்நிலையில் புதன்கிழமை இந்த லஞ்சப்புகார் தொடர்பான சி.டி.காஸட் புதன்கிழமை தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இதில் வனத்துறை அமைச்சர் சென்னிகப்பா காணப்படுகிறார்.
ஆனால் தெளிவாக இல்லை. அவரது குரலும் தெளிவாக இல்லை. சென்னிகப்பாவுக்கு எதிரே அமர்ந்துள்ள உள்ள நபரும் தெரியவில்லை. அதே சமயத்தில் அவருக்கு முன் மேஜையில் பணம் கட்டுக்கட்டாக கிடக்கிறது. இதுபோதாது இன்னும் வேண்டும் என்று சென்னிகப்பா கூறுவது கேட்கிறது. ஆனால் குரல் தெளிவாக இல்லை.