Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Groups’ Category

‘Arundhathi caste needs separate reservation quota’ – Thol Thirumavalavan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007

அருந்ததியர் இனத்துக்கு தனி இட ஒதுக்கீடு: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை துவக்க விழாவில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் . உடன் சட்டப் பேரவை உறுப்பினர் செல்வ பெருந்தகை, மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை செயலர் கோவிந்தராஜ், பொருளாளர் நந்தகோபால், பொதுச் செயலாளர் பாபு நாயுடு, மாநிலத் தலைவர் முத்துவேல்ராஜ் மற்றும் புரவலர் சி.எம்.கே. ரெட்டி.

சென்னை, பிப். 5: அருந்ததியர் இனத்துக்கு தனி இட ஒதுக்கீடு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் வலியுறுத்தினார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை துவக்க விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் கூறியது:

தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கான ஒதுக்கீட்டுடன் சேர்த்து அருந்ததியினர் இனத்துக்கும் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக அருந்ததியினர் இனத்துக்கு தனி ஒதுக்கீடு கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

தாழ்வு மனப்பாண்மையால் ஒரு மொழி அழிந்துவிடக் கூடாது. இதற்காகவே தமிழைப் பாதுகாப்பதில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் பங்கெடுத்து வருகிறது.

இதனால் மற்ற மொழிகளுக்கு இந்த இயக்கம் எதிரிகள் கிடையாது.

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதே விடுதலை சிறுத்தைகளின் முதல் குறிக்கோளாகும். ஆதிக்கம், அடக்குமுறை மற்றும் சுரண்டல் ஆகிய மூன்றையும் ஒழித்தால்தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும். இதனடிப்படையில்தான் தற்போது மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை துவக்கப்பட்டுள்ளது.

மொழியின் வழியில் மக்களை ஒருங்கிணைத்து வளம் பெறச் செய்யும் உயர்ந்த நோக்கத்துக்காக துவக்கப்பட்டுள்ள இந்தப் பேரவைக்கு விடுதலை சிறுத்தைகளின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்றார் திருமாவளவன்.

விழாவில்

  • அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தலைவர் சி.எம்.கே. ரெட்டி,
  • ஹைதராபாத் ஹனுமந்தராயா கல்வி அறக்கட்டளை செயலாளர் பி. பாலாஜி,
  • தமிழ்நாடு மகாஜன சங்க மாநிலத் தலைவர் சி. வெங்கடசுப்பு,
  • பி. முத்துராஜ்,
  • எஸ். பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மொழிச் சிறுபான்மையினர் நலத்துக்கென தனி வாரியம் ஒன்றை அரசு அமைத்திடவேண்டும்.

விடுதலைக்கு முழக்கமிட்டு உயிர்நீத்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்கவேண்டும். மாமன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாளை மீண்டும் அரசு விழாவாக அறிவிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் விழாவில் நிறைவேற்றப்பட்டன.

மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை: தமிழகத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, சௌராஷ்டிரம் உள்ளிட்ட தமிழல்லாத பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டோருக்கான பாதுகாப்புப் பேரவை தொடங்கப்பட்டுள்ளது.

மொழி சிறுபான்மையோருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். இந்தப் பேரவையின் புரவலராக சி.எம்.கே. ரெட்டி, மாநிலத் தலைவர் பி. முத்துவேல்ராஜ், பொதுச் செயலராக பாபு நாயுடு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

—————————————————————————————————————————-
அருந்ததியர் உள் ஒதுக்கீடு: நியாயமும் அவசியமும்

பிரபஞ்சன்


தலித்துகளில் ஒரு பெரும் பிரிவான அருந்ததியர்கள், தலித்துகளுக்கான 18 சதம் இட ஒதுக்கீட்டில், தமக்கு ஆறு சதம் உள் ஒதுக்கீடு வேண்டுகிற இயக்கம் மேலெழுந்திருக்கிறது. அறம், மற்றும் நியாயம் சார்ந்ததுமான கோரிக்கை இது. தமிழக அரசும், உள் இட ஒதுக்கீடு தொடர்பான பரிசீலனையைத் தொடங்கி இருக்கிறது. பரிசீலனையின் முடிவு அருந்ததியர்களுக்கு நியாயம் வழங்குவதாகவே இருக்கும். இருக்க வேண்டும்.

மிகுந்த கொந்தளிப்புகள் நிறைந்த சூழ்நிலையில், அருந்ததியர் பக்கம் உள்ள அனைத்து நியாயங்களையும் எடுத்துச் சொல்லும் ஆவணங்கள் போல, வரலாற்றுச் செறிவோடு இரண்டு அறிவார்ந்த வெளியீடுகள் வந்திருக்கின்றன. ஒன்று, சிறந்த கவிஞரும் எழுத்தாளருமான ம. மதிவண்ணன் எழுதிய உள் ஒதுக்கீடு சில பார்வைகள் எனும் புத்தகம். மற்றது, “சுவடு -ஐனவரி 2008′ மாத இதழில் வெளிவந்திருக்கும், தமிழக மனித உரிமைக் கழகத்தின் தலைவரும் சிறந்த சிந்தனையாளருமான அரங்க.குணசேகரனின் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான, ஆழம் கொண்ட மிகச் சிறந்த நேர்காணல்.

மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பெரும் கவனம் பெற்றுள்ள அருந்ததியர் எழுச்சி, இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. 1920-ம் ஆண்டு எல்.சி. குருசாமியால் அருந்ததிய மகாசபை தோற்றுவிக்கப்பட்டது. 1942-ல் அருந்ததியர் ஊழியர் சங்கம், சமத்துவ சமாஜம், 1958-ல் அருந்ததியர் முன்னேற்ற சங்கம் என்று ஒரு தொடர்ச்சி இயக்கமாக அது இருக்கிறது.

1993 முதல் உள் ஒதுக்கீடுப் போராட்டம் தீவிரம் அடைகிறது.

1996-ல் ஆதித் தமிழர் பேரவை உள் ஒதுக்கீடுக் கோரிக்கையை முன் எடுத்து, எழில் இளங்கோவன் எழுதிய “அடுக்குமுறை இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்குச் சமூக நீதி’ என்ற முக்கியமான நூலை வெளியிடுகிறது. 4.8.1995-ல் தினமணியில் வெளியான பெருமாள் ராஜின், “கடையனுக்குக் கடையன் கதி என்ன?’ என்னும் கட்டுரை பொதுமக்கள் கவனத்தைக் கவர்ந்தது.

23.4.2000-ம் நாள் சென்னையில் பெருமாள் ராஜை முதன்மை ஆலோசகராகவும், வழக்கறிஞர் சேகரை அமைப்பாளராகவும் கொண்டு அமைக்கப்பட்ட “அருந்ததியர் தனி இட ஒதுக்கீடு போராட்டக் குழு’ , அக்காலத்து முதல் அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கைகள் இச்சமயத்தில் முக்கியமாகக் கருதத்தக்கவை. சாத்தியமான கோரிக்கையும் அதுவே.

முதல் கோரிக்கை: அருந்ததியர்க்கு ஆறு சதவீத தனி இடஒதுக்கீடு.

இரண்டாம் கோரிக்கை: தமிழ்நாடு ஷெட்யூல்ட் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 78 சாதிப் பெயர்களில் உள்ளவற்றில், குலத் தொழில் மற்றும் செய் தொழில் முறையை அடிப்படையாகக் கொண்டு கீழ்காணும் பிரிவுகளாகப் (குரூப்) பிரிக்கலாம்:

குரூப் (அ)

  • அருந்ததியர்,
  • சக்கிலியர்,
  • மாதாரி,
  • மாதிகா,
  • பகடை,
  • செம்மான் முதலானவர்கள்.

குரூப் (ஆ)

  • பறையர்,
  • சாம்பவார்,
  • மாலா,
  • சம்பன்,
  • தோட்டி,
  • வெட்டியார்,
  • வள்ளுவர் முதலானவர்கள்.

குரூப் (இ)

  • தேவேந்திர குலத்தார்,
  • பள்ளர்,
  • காலாடி,
  • பண்ணாடி.

குரூப் (ஈ)

  • குரவன்,
  • தொம்பர்,
  • சித்தனார்,
  • நாயாடி,
  • புத்திரி,
  • வண்ணார்,
  • மற்ற பட்டியல் சாதிகளில் மேலே சொல்லப்படாதவர்கள்.

இந்த “குரூப்’ வகை அடிப்படையில் விகிதாச்சார அளவுப் பிரிப்பு சாத்தியமான யோசனையாக அமைந்தது. இதுபோன்ற ஒரு பிரிப்பு, ஆந்திராவில் நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது. சுமார் மூன்று ஆண்டுகள், இம்முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு மாதிகாக்கள் என்கிற அருந்ததியர் வேகமான வளர்ச்சி பெற்றனர்.

தாழ்த்தப்பட்டவர்களிலேயே தாழ்த்தப்பட்டவர்களாகவும், அடித்தள மக்களிலேயே அடித்தள மக்களாக வைக்கப்பட்டவர்களாகவும், கண்ணியமற்ற பணிகளிலேயே ஈடுபடுத்தப்பட்டவர்களாகவும், முன்னேற்ற வெளிச்சம் என்பதையே இதுவரை காணாத மக்களாகவும், மிகச் சாதாரண வாழ்க்கைக்கும் கூட போராட வேண்டியவர்களாகவும் வாழ்கின்ற அருந்ததியர் இன மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு ஈரமற்ற அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் இல்லை. முக்கியமான அடித்தள மக்கள் அரசியல் தலைவர்கள் எல்லோருமே, உள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையில் இப்படிக் குறிப்படப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில், அருந்ததியர் தொகை கணிசமாக இருப்பதால், ஆந்திராவில் உள்ளதுபோல இம்மக்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தனி இட ஒதுக்கீடு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் (2006) அறிக்கையில் தாழ்த்தப்பட்டோரில் சாதி வாரி இட ஒதுக்கீடு எனும் தலைப்பில் தரப்பட்ட வாக்குறுதி:

அருந்ததியர் கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் உரிய பங்கினைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையை மாற்றிட, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தனித்தனியான மக்கள் தொகை அடிப்படையில், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதே ஏற்ற வழியாகும்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, உள் ஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்துகிறார். தமிழக மனித உரிமைக் கழகத் தலைவர் அரங்க குணசேகரன், எப்போதுமே அருந்ததியர்களை ஆதரித்தும், உள் இட ஒதுக்கீட்டை ஒப்புக்கொண்டும் வந்திருக்கிறார்.

ஆக, அருந்ததியர் சகோதரர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கிடைப்பதில் பெருந்தடை ஏதும் இல்லை என்பது மகிழ்ச்சி தருகிறது.

என்றாலும், உள் இட ஒதுக்கீட்டுக்கு மிகச் சிலரால், ஐயம் காரணமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ எதிரான ஓரிரண்டு கருத்துகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை இவை:

அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கோருவதால் தலித்துகளின் ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படாதா?

அரங்க குணசேகரன், “சுவடு’ இதழில் முன்வைத்த பதிலில் இருந்து சில பகுதிகள், அக்கேள்விக்குச் சிறந்த தெளிவைத் தரும்.

“”1931-ல் வட்ட மேசை மாநாட்டில் தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை, தனி வாக்காளர் தொகுதிகள் கேட்டு டாக்டர் அம்பேத்கர் பிரிட்டிஷாரிடம் கோரியபோது, அதை மறுத்த காந்தி, இது இந்துக்களின் ஒற்றுமையைச் சிதைத்துவிடும் என்றார்.

1980-ல் தொடங்கி 1990-ஐயும் தாண்டி முற்போக்குத் திசைவழியில் கருக்கொண்டு உருவான தலித் இயக்கங்கள் கிராமங்களில் சாதித் தமிழர்கள் அல்லது சாதி இந்துக்கள் என்பவர்கள் தலித்துகள் மீது தொடுக்கின்ற அடக்குமுறைகள் குறித்து, தமிழின, தமிழ்த்தேச அரங்குகளில் விவாதத்தைக் கிளப்பியபோது, இத்தகைய கேள்விகள் தமிழின ஒற்றுமைக்கு எதிரானது என்று சில தலைவர்களால் விமர்சிக்கப்பட்டது.

நிறைவாக உள் இட ஒதுக்கீடு பெறுவதால் தலித் ஒற்றுமை கெட்டுவிடுமானால் கெட்டுவிட்டுப் போகட்டும். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு பெறமுடியாத அவல நிலை தொடர்வதால் தலித் ஒற்றுமை பாதுகாக்கப்படுமானால் அந்த ஒற்றுமையைத் தூக்கிக் கடலில்தான் போடவேண்டும்.”

உள் இட ஒதுக்கீடு தொடர்பாக, மற்றுமொரு முக்கியமான கேள்விக்கு அரங்க குணசேகரன் சொன்ன பதில் வருமாறு: “”மொத்தப் பரப்பான 18 விழுக்காட்டில் தங்கள் பங்கைப் பெற முடியாமல்தான் இவர்கள் ஆறு விழுக்காடு கேட்கிறார்கள். 18 விழுக்காட்டில் பறையர், பள்ளர்களுக்கு இணையாக அருந்ததியர் தங்கள் பங்கைப் பெற்றிருந்தால் உள் இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையே எழுந்திருக்காதே. போட்டித் தேர்வுகளில், பள்ளி, கல்லூரி மதிப்பெண்களில் பறையர், பள்ளர் அளவுக்கு உரிய மதிப்பெண் குறியீட்டை எட்ட முடியாமல்தான் இவர்கள் பின்தங்கிக் கிடக்கிறார்கள். இதே காரணங்களுக்காகத்தான் பார்ப்பனர்களிடமிருந்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களிலிருந்து மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மீண்டும் பிற்படுத்தப்பட்டவர்களிடமிருந்து இன்று இசுலாமிய, கிருத்துவர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.”

அருந்ததியர், தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டில் ஆறு சதம் உள் ஒதுக்கீடு கோருவதில் எந்தத் தவறும் இல்லை. சகல நியாயங்களும் அவர்கள் பக்கமே இருக்கின்றன.

தமிழக முதல்வரின் மேசை மேல் இருக்கும் இக் கோரிக்கை துரிதமாகச் செயல் உருப்பெற ஒருங்கிணைந்த பிரசாரம் மிக அவசியம். தலித்துகள் மட்டுமல்ல, தலித்துகள் அல்லாதோர்கள் அருந்ததியர் பக்கம் திரள வேண்டும். மனிதர்கள், தாங்கள் மனிதர்கள்தாம் என்று நிரூபித்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. மனிதர்களாக இருந்து சிந்திப்போம். செயல்படுவோம்.

Posted in Arundhathi, Arunthathi, Babu Naidu, Caste, Chennai, CMK Reddy, Communities, Community, Dalit, Govindharaj, Govindhraj, Govindraj, Groups, Language, Languages, Madras, Muthuvelraj, Nandhagopal, Organizations, Reservation, SC, Scheduled Caste, Scheduled Tribe, ST, Telugu, Thiruma, Thirumavalavan, Thol Thiruma, Thol Thirumaa, Thol Thirumavalavan, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal | 6 Comments »

Local Body Elections – Kirishnasaamy announces District based Congress Decision Leaders

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட வாரியாக காங். தேர்தல் குழு- கிருஷ்ணசாமி அறிவிப்பு

சென்னை, செப். 23-

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் இட பங்கீடு குறித்து பேசி முடிவு எடுக்க வும் காங்கிரஸ் சார் பில் போட்டியிட விரும்பு கிறவர்களிடம் மனுக்களை வாங்கவும் மாவட்டம் தோறும் காங்கிரஸ் தேர்தல் குழுவை கிருஷ்ணசாமி அமைத்துள்ளார்.

அந்த தேர்தல் குழு விவரம் வருமாறு:-

சென்னை

ஜெயந்தி நடராஜன், கே.விஜயன், கராத்தே தியாகராஜன், எம். ஜோதி, ஆர்.தாமோதரன், பொன். கிருஷ்ணமூர்த்தி, கே.சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் மங்கள் ராஜ், மாவட்டத் தலைவர் மனோ, மாவட்ட தலைவர் எம்.கோவிந்தசாமி.

திருவள்ளூர்

டி.சுதர்சனம் எம்.எல்.ஏ., இ.எஸ்.எஸ்.ராமன் எம்.எல்.ஏ., வி.ஆர்.பகவான், கீழானூர் ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் கொப்பூர் பி.விஜய குமார், மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.கே.மனோகரன், பூதூர் வேணுகோபால், டி.செல்வம், தளபதி பாஸ்கர்.

காஞ்சீபுரம்

டி.யசோதா எம்.எல்.ஏ., முன் னாள் எம்.எல்.ஏ. பலராமன், டாக்டர் காயத்ரிதேவி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் வி.அண்ணா துரை, மாவட்ட தலைவர் கே.சக்கர பாணி ரெட்டியார், ஜெ.பிராங்க் ளின் பிரகாஷ்.

வேலூர்

முன்னாள் எம்.பி. அன்பரசு, சி.ஞானசேகரன் எம்.எல்.ஏ., அருள் அன்பரசு எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் பாலூர் சம்பத், மாவட்ட பொறுப்பாளர் ஆற்காடு பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜா அசேன்.

திருவண்ணாமலை

போளூர் வரதன் எம்.எல்.ஏ., டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் விஜயகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் ராஜாபாபு.

கடலூர்

முன்னாள் எம்.பி.க்கள் வள்ளல்பெருமான், பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், மாவட்ட தலைவர் சச்சிதானந்தம், மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், சந்திரகோதண்டபாணி, விஜயசுந்தரம், ஜி.சவுந்தரபாண்டி யன்.

விழுப்புரம்

முன்னாள் எம்.எல்.ஏ. டி.என். முருகானந்தம், எஸ். சிவராஜ் எம்.எல்.ஏ., சங்கரா புரம் கே.சீனிவாசன், மாவட்ட பொறுப்பாளர் ஜெய அண் ணாமலை, முன் னாள் எம்.எல்.ஏ. துரை.முத்துசாமி, எஸ்.காமராஜ், டி.வி.தட்சிணாமூர்த்தி, வக்கீல் பார்த்தசாரதி, எஸ்.சீத்தாராமன்.

கிருஷ்ணகிரி

கே.வி.தங்கபாலு எம்.பி., கே.கோபிநாத் எம்.எல்.ஏ., மாவட்டத் தலைவர் காசிலிங் கம், முன்னாள் எம்.எல்.ஏ. ஒசூர் மனோகரன், அகா.கிருஷ்ண மூர்த்தி, முன்னாள் எம்.பி., எஸ்.நரசிம்மன், குமரேசன், நெடுங்கல் எஸ்.சுப்பிரமணியம்.

தருமபுரி

ஜி.ஏ.வடிவேலு, மாவட்ட தலைவர் பி.பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. பி.தீர்த்தராமன், ராஜாராம் வர்மா, வக்கீல் மோகன்.

நாமக்கல்

டாக்டர் கே.ஜெயக்குமார் எம்.எல்.ஏ., கே.ராணி எம்.பி., மாவட்ட பொறுப்பாளர் செல்வ ராஜ், வி.பி.வீரப்பன், டாக்டர் செழியன், ஜி.ஆர்.சுப்பிரமணி, முன்னாள் சேர்மன் ஆர்.நல்லதம்பி.

சேலம்

கே.வி.தங்கபாலு எம்.பி., மாவட்டத் தலைவர் எஸ்.டி.பன் னீர்செல்வம், மாவட்ட தலைவர் ஆர்.தேவதாஸ், மாவட்ட தலைவர் ஆர்.ஆர்.சேகரன், என்ஜினீயர் மாரியப்பன், எம்.பி.எஸ்.மணி, முகமது அம்சா, எம்.ஆர்.ராதா கிருஷ்ணன்.

ஈரோடு

மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மாவட்ட தலைவர் பழனிச்சாமி எம்.எல்.ஏ., விடியல் சேகர் எம்.எல்.ஏ., மாவட்ட பொறுப்பாளர் கல்லுப் பட்டி பாலசுப்பிரமணியம், என்.ஆர்.திருவேங்கடம், பிரகாஷ் ஜெயின்.

நீலகிரி

முன்னாள் எம்.எல்.ஏ. ராஜு, மாவட்டத் தலைவர் கோபால் எம்.எல்.ஏ., ஜே.பி.சுப் பிரமணியம், கோஷி பேபி,
ஆர்.கணேஷ்குமார்.

கோவை

ஆர். பிரபு எம்.பி., முன் னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், மாவட்ட தலைவர் கோவை தங்கம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.லட்சுமணன், எம்.என்.கந்தசாமி, தாராஷபி, மாவட்டத் தலைவர் குனியமுத்தூர் ஆறுமுகம், மாவட்டத் தலைவர் பி.வி.மணி, கோவை முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், எம்.ராமானுஜம், மணிகண்டபிரசாத், வேடப்பட்டி தங்கவேல், ஏ.ஆர்.சின்னையன், எம்.ராமானுஜம்.

திண்டுக்கல்

எஸ்.கே.கார்வேந்தன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.பொன்னம்மாள், மாவட்ட தலைவர் தண்டபாணி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் வி.திருஞானசம்பந்தம், சிவசக்திவேல் கவுண்டர், வி.எஸ்.மனோகரன், சலீம்சேட், எம்.மாடசாமி.

விருதுநகர்

முன்னாள் எம்.பி. குமரிஅனந்தன், மாவட்ட தலைவர் ஜி.கணேசன், ராஜலிங்கராஜா, ஆர்.குருசாமி, எஸ்.எஸ்.மோகன்.

தேனி

ஜே.எம்.ஆரூண் எம்.பி., மாவட்ட தலைவர் கே.எஸ்.எம்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், என்.ஆர்.அழகர்ராஜா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஈஸ்வரதாஸ், தேனி பரமராஜ், முபாரக்.

மதுரை

என்.எஸ்.வி.சித்தன் எம்.பி., முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு, மாவட்ட தலைவர் ஏ.தெய்வநாயகம், ஜி.தேவராஜன், மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.ராம்குமார் மாவட்ட தலைவர், கோவிந்தராஜ் ஐ.என்.டி.யு.சி., சுந்தரராஜன், விஸ்வநாதன், மேலூர் சந்தானம், ஜெய்ஹிந்த்புரம் முருகன்.

பெரம்பலூர்

ஜி.ராஜேந்திரன், மாவட்ட தலைவர் டி.அமரமூர்த்தி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாசிலாமணி, ஆண்டிமடம் தங்கராஜ்.

கரூர்

முன்னாள் எம்.பி.க்கள் என்.அப்துல்காதர், கே.நாட் ராயன், மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம், சிவசுப்பிரமணி யம் எம்.எல்.ஏ.

திருச்சி

முன்னாள் எம்.பி. அடைக் கலராஜ், மாவட்டத் தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், எம்.ராஜசேகரன் எம்.எல்.ஏ., எம்.கணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. லோகாம்பாள், சுப.சோமு, டால்மியா ஜெயப்பிரகாஷ், போட்டோ சரவணன்.

தஞ்சாவூர் மாவட்டம்

மத்திய மந்திரி ஜி.கே.வாசன், ஜி.ரங்கசாமி மூப்பனார், கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட தலைவர்கள் என்.ராஜாங் கம், நாஞ்சி கே.வரத ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. பேராவூரணி சிங்காரம், முன்னாள் எம்.எல்.ஏ. கட்டாரம் மாரிமுத்து,
டி.ஆர்.லோகநாதன்.

திருவாரூர்

முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. டாக்டர் பத்மா, மாவட்ட பொறுப்பாளர் துரைவேலன், மன்னை
மதியழகன்.

நாகப்பட்டினம்

மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர், எஸ்.ராஜ்குமார் எம்.எல்.ஏ., பொன்.பழனிவேல், எஸ்.ஜெய பால்.

புதுக்கோட்டை

பி.எஸ்.ஞானதேசிகன் எம்.பி., ஏ.சுப்புராம் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் டி.புஷ்பராஜ், சத்தியமூர்த்தி.

சிவகங்கை

மத்திய மந்திரி ப.சிதம்பரம், என்.சுந்தரம் எம்.எல்.ஏ, கே.ஆர்.ராம சாமி எம்.எல்.ஏ , எம்.ராஜ ரத்தினம், முன்னாள் எம்.பி. சுப.உடையப்பன், கே.கே.காசி லிங்கம்.

ராமநாதபுரம்

சுதர்சன நாச்சியப்பன் எம்.பி., ராம்பிரபு எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, அசன் அலி எம்.எல்.ஏ., செல்லத்துரை அப்துல்லா, மகேந்திர பாண்டியன், செந் தாமரைக் கண்ணன்.

திருநெல்வேலி

எஸ்.பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., பி.வேல்துரை எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் கொடிக் குறிச்சி முத்தையா , மோகன் குமாரராஜா, எஸ்.சுந்தர ராஜ பெருமாள், வேணுகோபால்.

தூத்துக்குடி

ஏ.பி.சி.வி.சண்முகம், ராணி வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஊர்வசி செல்வராஜ் எம்.எல்.ஏ., மாவட்டத் தலைவர்கள் எஸ்.ஜஸ்டின், பி.கதிர்வேல்.

கன்னியாகுமரி

முன்னாள் எம்.பி. டென் னிஸ், மாவட்ட தலைவர்கள் எஸ்.ஜெயபால் எம்.எல்.ஏ., ஜே.ஜி.பிரின்ஸ், ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ., ஜி.கே.தாஸ், டி.கே.ஜோஸ், டாக்டர் மோசஸ்.

இந்த மாவட்ட தேர்தல் குழு வினர் அந்தந்த மாவட்டத்திற் கான தி.மு.க. தேர்தல் குழுவோடு இட பங்கீடு குறித்து பேசி முடிவெடுப்பார்கள்.

மேலும் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கும் காங் கிரஸ் சார்பில் போட்டி யிட விரும்புவோரிடம் இருந்து மனுக்களைப் பெற்று ஏற்கனவே மாவட்ட தலைவர்கள் வாங்கி உள்ள மனுக்களையும் சேர்த்து அவற்றை தலைமை அலுவல கத்தில் ஒப்படைப்பார்கள்.

பரிசீலனைக்குப் பிறகு வேட்பாளர்களை தலைமை அலுவலகம் அறிவிக்கும் என்று கிருஷ்ணசாமி கூறி உள்ளார்.

Posted in Cong(I), Congress (I), Districts, Elections, Factions, Groups, Kirishnasaamy, Krishnasamy, Krishnaswamy, Leaders, Local Body, Polls, Tamil, Tamil Nadu | Leave a Comment »

North East Separatist Splinter Groups – Nagaland Marxist-Leninists

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006

பெருகும் தீவிரவாத இயக்கங்கள்

சோம. நடராஜன்

இந்தியத் துணைக்கண்டம் சுதந்திரம் அடைந்த பின்னர், பல அண்டை நாடுகள் விடுதலை அடைந்தன. பாகிஸ்தான் நம்மை முந்திக் கொண்டு ஒருநாள் முன்னதாகவே சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டாடியது. திபெத், நேபாளம், பூடான், பர்மா, மலேயா, சிங்கப்பூர், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் என்ற கடிகாரச் சுற்றில் உள்ள எல்லாப் பிரதேசங்களும் இந்திய விடுதலையை ஒட்டியே சுதந்திரம் பெற்றன.

இவை அனைத்திலுமே குடியரசாட்சி நடைபெறுகிறதா என்பது கேள்விக்குரியதே! ஆனால் நம்மால் மட்டும் உலகின் மிகப்பெரிய குடியரசு என்ற பெயரைப் பெற்று விட முடிகிறது. இது எப்படிச் சாத்தியமாயிற்று? முதலில் வயது வந்தோர்க்கு வாக்குரிமை (ADULT FRANCHISE) என்ற அடிப்படையில் நம் ஜனநாயகம் கட்டமைக்கப்பட்டது. அந்த வாக்குரிமையின் மூலம் நடத்தப்படுகின்ற தேர்தல் முறையும், அதன்மூலம் அமைக்கப்படுகின்ற நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் உலகப் புகழ் பெற்றுத் திகழ்கின்றன.

நாம் மிகப்பெரிய குடியரசு நாடாக இருக்கின்றபோதும், நம் மக்கள் எல்லாரும் பூர்ண சுதந்திரத்துடன் வாழ்கின்றோம் என்கிற மனநிறைவுடன் இருக்கிறார்களா என்றால் உறுதியாகவும் முழுமையாகவும் அப்படிச் சொல்ல முடியவில்லை. தங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு தாங்கள் அடக்கி ஆளப்படுவதாக நம் நாட்டின் ஒரு சில பிராந்தியங்கள் அதிருப்தியுடன் உள்ளன. இவற்றுள் வடகிழக்குப் பகுதியில் உள்ள பிரதேசங்களில், இந்த அதிருப்திக் குரல்களும், அறிவிக்கப்படாத போர்களும் மலிந்து கிடக்கின்றன.

இதில் மிகப்பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ள பிரதேசம் நாகாலாந்து ஆகும். நாகாலாந்து என்று அறியப்படுகின்ற அந்நாளைய ட்வின் சவுத் (Twin South), பாகிஸ்தானைப் போலவே தன்னைத் தனி சுதந்திர நாடாக, அதே ஆகஸ்ட் 14, 1947ல் அறிவித்துக் கொண்டது என்பது பரவலாக அறியப்படாத செய்தி. இந்திய அரசுடன் தாங்கள் இணையவில்லை என்று கூறி, நாகா சமஷ்டி அரசு (NAGA FEDERAL GOVERNMENT) என்ற போட்டி அரசையும், நாகா சமஷ்டி ராணுவம் (NAGA FEDERAL ARMY) என்ற ராணுவத்தையும் அவர்கள் கட்டமைத்துக் கொண்டனர். இதற்குக் காரணகர்த்தாவாக இயங்கியவர் ஏ.இஸட். பீúஸô (A.Z. PHIZO) என்பவராவார். இவர் உருவாக்கிய நாகா தேசியக் கட்சி (NAGA NATIONAL CONGRESS) தான் நாகாலாந்தில் போட்டி அரசு அமைக்கக் காரணமாக இருந்த இயக்கம். ஆனால் இவரின் செயல்பாடுகள் இந்திய அரசால் முடக்கப்பட்டதால் நாகா தலைவர் பீúஸô கிழக்குப் பாகிஸ்தானிலும் (இன்றைய பங்களாதேஷ்) இங்கிலாந்திலும் அடைக்கலம் தேடிப் போய் இறுதியில் இங்கிலாந்தில் காலமானார்.

என்றாலும், பீúஸôவின் மகன் அடினோ பீúஸôவின் தலைமையில், என்.என்.சி. இன்னும் இயங்கிக் கொண்டுதான் உள்ளது. இவர்கள் இன்னும் ஆகஸ்ட் 14ஆம் நாளைத்தான் விடுதலை நாளாகக் கொண்டாடிக் கொண்டுள்ளனர். இப்போதைய நாகாலாந்துடன், சீனா, மியான்மர் ஆகியவற்றின் சில பகுதிகள் உள்ளடங்கிய அகண்ட நாகாலாந்தைத் தனி நாடாக உருவாக்க வேண்டும் என்றே இவர்கள் இன்றும் கூறி வருகின்றனர்.

நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (NATIONAL SOCIALIST COUNCIL OF NAGALAND – NSCN) என்கிற அமைப்பு 1970களிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பும் அதே அகண்ட நாகாலாந்தை உருவாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டதுதான். இந்த அகண்ட நாகாலாந்தை அவர்கள் “நாகாலிம்’ என்று குறிப்பிடுகின்றனர். நாகாலிம் என்ற பெயரில் என்எஸ்சிஎன் இயக்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தேச வரைபடத்தில் அசாம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், பர்மாவின் ஒரு பகுதியும் சேர்த்து ஒரு “”பேரகண்ட நாகாலாந்தை” உருவாக்கிட முயற்சித்துள்ளனர்.

வழக்கம்போலவே எல்லாத் தீவிரவாத, போராளிக் குழுக்களிலும் முளைவிடும் பங்காளிக் காய்ச்சல், பதவிச்சண்டை என்.எஸ்.சி.என். இயக்கத்திலும் முகிழ்த்தது. இதன் விளைவாக என்எஸ்சிஎன் இரண்டு இயக்கங்களாகப் பிளவுபட்டது. இஸôக் ச்சிசிஸ்பூ, துயின் கெலாங் முய்வா தலைமையில் இந்த இயக்கம் என்.எஸ்.சி.என் (இசாக்-முய்வா) NSCN(I-M) என்ற பெயருடன் செயல்பட்டது. இன்னொரு பிளவு இயக்கத்துக்குத் தலைமை தாங்கியவர் எஸ்.எஸ். கப்லாங் என்பவர். அது என்எஸ்சிஎன் (கப்லாங்) NSCN(K) என்று குறிக்கப்பட்டது.

இதில் என்.எஸ்.சி.என். (ஐ.எம்) தன்னை வளர்த்துக் கொள்வதற்கு நாகாலாந்தை 11 பிரிவுகளாகப் பிரித்து தனித்தனி நிர்வாகிகளை நியமித்துள்ளது. ஒரு முழுமையான அரசாங்கக் கட்டமைப்புடன் இயங்குகிறது. ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டங்களைத் தாக்கல் செய்கிறது. ராணுவம், உள்துறை, நிதித்துறை, ஏன் வெளியுறவுத்துறை என்றுகூட ஒரு தனி நாட்டுக்குரிய நிர்வாகக் கட்டமைப்புடன் இயங்குகிறது. கவர்ன்மெண்ட் ஆப் தி பீப்பில்ஸ் ரிபப்ளிக் ஆப் நாகாலாந்த் – GPRN என்று பெயர் சூட்டி ஆட்சி நடத்துகிறது. வெளிநாடுகளுடன் உறவாடி நிதியாதாரங்களைப் பெருக்கிக் கொள்கிறது. GPRN என்ற அரசு முத்திரையுடன் அயல்நாடுகளுக்குச் சென்று வர தனி விசா, பாஸ்போர்ட் போன்றவற்றை வழங்குகிறது. வெளிநாடுகளிலிருந்து செயல்படும் இயக்கங்களுடனும் தீவிரவாத அமைப்புகளுடனும், அயல்நாட்டு ஊடகங்களுடனும் உறவாடித் தங்களுக்கு ஆதரவையும் நிதியையும் திரட்டிக் கொண்டிருக்கிறது என்.எஸ்.சி.என் (ஐ.எம்). அத்துடன் போதைப் பொருள் கடத்தல், வங்கிக் கொள்ளை, வர்த்தக மற்றும் தோட்ட அதிபர்களை மிரட்டி “வரி’ வசூலித்தல் என்று பலவகையான வழிமுறைகளைப் பின்பற்றி தங்கள் நிதியாதாரங்களைப் பெருக்கிக் கொள்கிறது.

இந்த இயக்கத்துக்கு அமெரிக்கா, சீனா, பர்மா ஆகிய நாடுகளின் தீவிரவாத இயக்கங்கள் உதவி வந்தன. ஆனால் 1980க்குப் பின் இந்த உதவிகள் தடைபட்டுப் போயின. ஆனால் இன்றுவரை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ஆதரவு இதற்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது. நிதி ஆதாரங்களுடன் ஆயுதச் சேகரிப்பிலும் என்எஸ்சிஎன் (ஐ.எம்) தன்னுடைய அமைப்பைப் பலப்படுத்திக் கொண்டுள்ளது.

இப்போது தவிர்க்க முடியாத தீவிரவாத இயக்கமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ள என்.எஸ்.சி.என். (ஐ.எம்) பிரிவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முயன்று கொண்டுதான் இருக்கிறது. 1997 முதல் பேச்சுவார்த்தை, போர் நிறுத்த உடன்பாடு என்று இன்றுவரை சமாதான முயற்சி தொடர்கிறது.

2006 ஜூலையில் தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரில் மூன்று நாள்கள் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்திய அரசின் சார்பில் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ், இணை அமைச்சர்கள் எஸ். ரகுபதி, பிரிதிவிராஜ் சௌஹான் ஆகியோர் கலந்து கொண்டனர். என்எஸ்சிஎன் (ஐ.எம்) சார்பில் அதன் பொதுச் செயலர் முய்வா பங்கேற்றார். இரு பிரிவுகளுக்கும் இடையில் சண்டை நிறுத்தம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

இது பெயரளவுக்கான சண்டை நிறுத்தம்தான் என்பதை இரு தரப்புமே அறியும்.

இதற்கிடையில் அசாமின் “உல்பா’ பிரச்சினை இப்போது அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாகாலாந்து பாணியில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை உல்பா தீவிரவாத அமைப்புடன் மேற்கொள்ள அரசு திட்டமிட்டு வருகிறது.

மாவோயிஸ்ட் உள்ளிட்ட நக்சல்பாரி இயக்கங்களும் பேச்சுவார்த்தைக்கு உரியனவாக உள்ளன. இவையன்றி இன்னும் பல உள்நாட்டுத் தீவிரவாத இயக்கங்கள் உள்ளன.

  • அசாமில் உல்பாவுடன் சேர்த்து 16 இருக்கின்றன.
  • மணிப்பூரில் 13;
  • திரிபுராவில் 3;
  • மேகாலயாவில் 3;
  • அருணாசலப் பிரதேசத்தில் 1;
  • நாகாலாந்தில் மொத்தம் 3;
  • மிசோரமில் 1;
  • பஞ்சாபில் 12 மற்றும்
  • நாடு முழுதும் உள்ள பிற மாநிலங்களில் 11 என்று தீவிரவாத இயக்கங்களின் பட்டியல் பெருகுகிறது. எதிர்காலத்தில் இவை அனைத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண இந்தியா தயாராக இருக்க வேண்டும்.

Posted in Assam, Fight, Fighters, Freedom, Groups, Independence, India, Leninist, Maoist, Marxist, Nagaland, North East, NSCN, PHIZO, Revolutionary, Splinter, Tamil, Terrorism | Leave a Comment »