Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Gossips’ Category

VIP – Prabhudeva: Gossips, Change of Directors, Rani Mukherjee Smoking

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2008

திரைப்பட வரலாறு 886
பிரபுதேவா நடித்த “வி.ஐ.பி”
2 டைரக்டர்கள் மாற்றப்பட்ட பின்னணி

பிரபுதேவா நடித்த “வி.ஐ.பி” படத்தை தாணு தயாரித்தார். இதற்கு 2 டைரக்டர்கள் பரிசீலிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் அவர்கள் மாற்றப்பட்டு, எஸ்.டி.சபா டைரக்ட் செய்தார்.

திரையுலக அனுபவங்கள் பற்றி தாணு தொடர்ந்து கூறியதாவது:-

பாரதிராஜாவுக்கு மரியாதை

“கிழக்குச் சீமையிலே படம் வெற்றி பெற்றால், படத்தின் டைரக்டர் பாரதிராஜாவுக்கு நிச்சயமாக ஏதாவது செய்வேன் என்று சித்ராலட்சுமணனிடம் நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன் அல்லவா? இப்போது படம் வசூலைக் குவித்ததால், பாரதிராஜாவின் புதுவீடு கிரகப்பிரவேசத்தன்று திடீரென அவர் வீட்டுக்கு போனேன். தங்க நகைகளையும், கரன்சியையும் ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் குவித்து வைத்து கொடுத்தேன். இதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத பாரதிராஜா கண்கலங்கி விட்டார்.

தமிழனின் பெருமையை, திரைவழியே பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றவர், பாரதிராஜா. தமிழர் பண்பாடு, கலாசாரத்தை நிலைக்க வைத்தவர். கிராமத்தின் மண்வாசனையை திரையில் கமழச் செய்தவர். தமிழ் மண் மணக்க வந்த `தரு’ அவர். என்றும் என் போற்றுதலுக்குரியவர் என்பதை என் அன்பினால் வெளிப்படுத்திவிட்டு வந்தேன்.

இதைத்தொடர்ந்து, படத்துக்கு அற்புதமாக பாடல்கள் எழுதிய கவிஞர் வைரமுத்து வீட்டுக்குப் போனேன். சூட்கேசில் எடுத்துப் போயிருந்த 50 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன். கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஆனந்த அதிர்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. அப்போது அவர், “பாரதிராஜா படத்துக்கு பாட்டுக்காக நான் பணம் வாங்குவது இல்லை. இதுதான் முதல் முறை. அதுவும் படத்தின் இமாலய வெற்றியை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் நீங்கள் வழங்கும் இந்த சன்மானம், உங்கள் உயரிய பண்பை என் உள்ளத்தில் என்றென்றும் தேக்கி வைத்திருக்கும். கொடுப்பதில் நீங்கள் ஒரு குட்டி தேவர்” என்றார் வைரமுத்து.

அவரோடு நின்று விடாமல் படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் என் அன்பளிப்பு தொடர்ந்தது.

ரஜினி நடித்த `வீரா’ படத்தின் வெற்றி விழா மேடையில் ரஜினியின் பேச்சு, “கிழக்கு சீமையிலே” படம் பற்றியதாகவே இருந்தது. “ஒரு படத்துக்கு பிரமாண்டம் என்பது கதைதான். கதை பிரமாண்டமாக இருந்தால், பெரிய வெற்றி நிச்சயம் என்பதற்கு சமீபத்தில் வந்து சாதனை படைத்த “கிழக்குச் சீமையிலே” படம் ஒரு உதாரணம். நண்பர் தாணு தயாரிப்பில் வந்த இந்தப் படத்தை பார்த்தபோது படத்தின் வெற்றிக்கு கதைதான் முதுகெலும்பு என்ற உண்மை புரிந்தது” என்றார்.

ரஜினி இப்படி பாராட்டியதை, மறுநாள் பத்திரிகையில் விளம்பரமாக கொடுத்தேன். அதோடு `எழுத்துச்சிற்பி’ என்று கதாசிரியரையும், `கலைச்சிற்பி’ என்று பாரதிராஜாவையும் அடைமொழி கொடுத்து விளம்பரத்தில் போட்டேன்.”

இவ்வாறு தாணு கூறினார்.

வி.ஐ.பி.

தாணு தயாரிப்பில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்த `வி.ஐ.பி’ படத்துக்கு, முதலில் இரண்டு டைரக்டர்கள் பேசப்பட்டு மூன்றாவது டைரக்டர் சபா, படத்தை இயக்கினார். இதுபற்றி தாணு கூறியதாவது:-

“ஜென்டில்மேன் படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாடிய பிரபுதேவா, பிரமாதமான டான்ஸ் மாஸ்டர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவர் `காதலன்’ படத்தில் கதாநாயகனாகவும் நடித்தபோது, நடிப்பாற்றல் கொண்ட நடிகர் என்பதையும் நிரூபித்தார்.

அந்தப்படம் வெற்றி பெற்ற நேரத்தில் சினிமா உலகமே பிரபுதேவா வீட்டில் காத்திருந்தது. தமிழில் புதிதாக ஒரு கதாநாயகன் கிடைத்திருக்கிறார் என்று நான் நினைத்த நேரத்தில், எதிர்பாராமல் ஒரு நாள் பிரபுதேவாவின் தந்தையும், பிரபல டான்ஸ் மாஸ்டருமான சுந்தரம் என்னை பார்க்க வந்தார். அப்போது அவர் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். காவி வேட்டி, காவி சட்டை அணிந்து வந்திருந்தார்.

“வாங்க மாஸ்டர்” என்று அவரை வரவேற்றேன். கொஞ்ச நேரம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தவர், “பிரபு (தேவா) உங்க பேனர்ல நடிக்க ஆசைப்படறான்” என்றார்.

நான் அதுவரை தயாரித்த என் படங்களில் சுந்தரம் மாஸ்டரையோ, அவரது மகன்கள் ராஜ× சுந்தரத்தையோ, பிரபுதேவாவையோ வைத்து நடனம் அமைத்ததில்லை. அப்படிப்பட்ட நிலையிலும் “வெற்றிகரமான ஹீரோ” என்ற அடையாளத்துடன் வெளிப்பட்டிருக்கும் தனது மகன் பிரபுதேவாவை, எனது படத்தில் நடிக்க வைக்க அவர் விரும்பியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

நான் மகிழ்ச்சியுடன் “நிச்சயமாக பண்ணலாம் மாஸ்டர்! ஒரு நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு வருகிறேன்” என்றேன்.

மறுநாளே நல்ல நாளாக இருந்தது. சுவீட் பாக்சுடன் பிரபுதேவா வீட்டுக்குப் போனேன். அதுவரை பிரபுதேவாவை நான் நேரில் பார்த்தது இல்லை. பார்க்க ரொம்ப சிம்பிளாக காணப்பட்டார். சுவிட் பாக்சுடன் அட்வான்ஸ் பணம் கொடுத்தேன்.

டைரக்டர் வசந்த்

தயாரிப்பது உறுதியானதும் படத்தை டைரக்டர் வசந்த் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி பிரபுதேவாவே என்னிடம் வசந்த்தை அழைத்து வந்தார்.

நான் வசந்த்திடம், “பிரபுதேவா பண்ணின படங்களிலேயே பெரிய படம், வசூலிலும் சாதனைப் படம் என்ற பெயர் ஒரு தயாரிப்பாளராக இந்தப்படத்தில் எனக்கு உங்கள் மூலமாகக் கிடைக்கவேண்டும்” என்றேன்.

“கண்டிப்பா அப்படியே பண்றேன் சார்” என்று வசந்த்தும் உற்சாகமாய் கூறினார். அதோடு, “உங்க பேனரில் ஒரு படம் டைரக்ட் பண்ணுவது எனக்கும் ஒரு லட்சியமாக இருந்தது” என்றார்.

நான் டைரக்டர் வசந்த்துக்கு அட்வான்ஸ் கொடுக்க முடிவு செய்தேன். அவரிடம் “படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்தால் நல்லது என்று பிரபு (தேவா) சொல்கிறார். ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் அல்லவா” என்று கேட்டேன்.

நான் இப்படிக் கேட்டதும், “சார்! ரிலீஸ் தேதியை மட்டும் தயவு செய்து முன்கூட்டி தீர்மானிக்காதீர்கள்” என்றார்.

“சரி. எப்பத்தான் படம் முடியும்னு சொல்லுங்க” என்றேன்.

“எப்பன்னு முடிவு பண்ணவேணாம் சார்” என்றார், வசந்த்.

நான் விடவில்லை. “ஒரு தயாரிப்பாளருக்கு படத்தின் ரிலீஸ் தேதி முக்கியம். அதை கருத்தில் கொண்டுதான் படத்தின் வியாபார விஷயங்கள் பேசமுடியும்” என்றேன்.

கொஞ்சம் யோசித்தவர், “நாளைக்கு சொல்றேன்” என்றார்.

சொன்னபடி மறுநாள் வந்தார். “சார்! நீங்க சொன்னது பற்றி யோசனை பண்ணினேன். எனக்கென்னவோ படம் எப்ப ரிலீஸ் ஆகும் என்பதை இப்போது முடிவு பண்ண வேண்டாம் என்றே தோணுது” என்றார்.

அப்போதும் நான், “அப்படீன்னா ரிலீஸ் தேதியை ஏப்ரலுக்கு பதிலா ஆகஸ்ட்டுன்னு வெச்சுக்குவோமா?” என்று கேட்டேன்.

டைரக்டர் வசந்த் இந்தக் கேள்விக்கும் யோசிப்பது தெரிந்தது. பதில் தாமதமானதால், நான் “அப்படீன்னா தீபாவளிக்கு?” என்று கேட்டேன்.

அப்போதும் வசந்திடம் இருந்து ரிலீஸ் தேதி வரவில்லை. சரி, படத்தை ரசிச்சு எடுக்க விரும்புகிறார் என்ற எண்ணத்தில் “சரி வசந்த்! படம் ஆரம்பிச்சு சரியா ஒரு வருஷத்தில் ரிலீஸ் தேதி வெச்சுக்கலாமா?” என்று கேட்டேன்.

ரிலீஸ் தேதி சொல்லாமல் நான் விடமாட்டேன் என்பதை ïகித்துக் கொண்டவர், “நாளைக்கு வரேன். அப்ப சொல்றேன்” என்றார்.

டைரக்டர் வசந்த் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி முன்கூட்டியே தீர்மானிக்க முடியாத நிலையில் இருப்பதைப்பற்றி பிரபுதேவாவிடம் பேசினேன். பிரபுதேவா என்னிடம், “சார்! நாளைக்கு ஒருநாள் பாருங்க. நாளைக்கும் அவர் ரிலீஸ் தேதி சொல்லலைன்னா, வேறு முடிவெடுப்போம்” என்றார்.

மறுநாளும் வசந்த் வந்தார். அப்போதும் ரிலீஸ் தேதியை அவரால் உறுதி செய்யமுடியவில்லை.

அன்று மதியம் பிரபுதேவாவை பார்த்து, விஷயத்தை சொன்னேன். “அப்ப வேற டைரக்டரை பார்க்கலாம்” என்றார்.

கதை சொல்ல வந்தவர்

இந்த நேரத்தில்தான் சசி அருண்டேல் என்ற இளைஞர் என்னிடம் கதை சொல்லவேண்டும் என்று வந்தார். `கவிதை’ என்ற பெயரில் ஒரு கதை வைத்திருக்கிறேன்” என்றார். சொல்லச் சொன்னேன்.

கதையை கேட்டு முடித்தபோது “கிழக்குச் சீமையிலே” கதை மாதிரி இதுவும் என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றே பிரபுதேவாவையும் கதை கேட்க வைத்தேன். அவருக்கும் பிடித்துவிட்டது.

நான் சசியிடம், “இந்தக் கதையை சினிமாவுக்கேற்ற விதத்தில் தயார் செய்யுங்கள்” என்று சொன்னதோடு, சென்னை அண்ணா நகரில் உள்ள திரு.வி.க. பார்க் அபார்ட்மெண்ட்டில் ஒரு பிளாட் வாடகைக்கு எடுத்து, அதில் சசியை தங்கவைத்தேன். அட்வான்ஸ் கொடுத்து திரைக்கதை தயார் செய்யச் சொன்னேன்.

நாற்பதே நாளில் செலவு அதிகம் பண்ணாமல் திரைக்கதையை பிரமாதமாக உருவாக்கி முடித்திருந்தார், சசி.

அதோடு அவரே படத்துக்கு பிரபுதேவா தலையை போட்டு ஒரு டிசைனும் உருவாக்கி கொண்டு வந்தார். அதில் `சசி அருண்டேல்’ என்று மேலே போட்டு, அதற்குக்கீழே `கவிதை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

வழக்கமாக நான் தயாரிக்கும் படங்களில் தாணுவின் “கூலிக்காரன்” தாணுவின் “நல்லவன்”, தாணுவின் “புதுப்பாடகன்” என்றுதான் பெயர் இடம் பெறும். இப்போது சசி செய்திருந்த டிசைனில் சசி அருண்டேல் என்ற தனது பெயரை மேலே போட்டு, அதற்கு கீழே `கவிதை’ என்று போட்டிருந்தார். சசி அருண்டேல்க்கு கீழே `கலைப்புலி’ தாணு என்று குறிப்பிட்டு இருந்தார்.

புது இளைஞர்! ஆர்வத்தில் இப்படி செய்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு, அவர் விருப்பப்படியே விட்டுக் கொடுத்தேன். நமது பேனரில் ஒரு படத்தின் விளம்பரம் இப்படியும் வரட்டுமே என்று எண்ணி, “நல்லா இருக்கு தம்பி” என்று சொல்லி அனுப்பினேன்.

விபரீதம்

ஆர்வக்கோளாறு என்பது சில நேரங்களில் விபரீத விளைவையும் ஏற்படுத்தி விடும். சசி என்ன செய்தார் தெரியுமா? என்னிடம் டிசைனை காட்டிய அதே வேகத்தில் பிரபுதேவாவிடமும் போய் காட்டியிருக்கிறார். டிசைனை பார்த்த பிரபுதேவா எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல், “நல்லா இருக்கு. போய் உடனே தாணு சாரை பாருங்க” என்று சொல்லியனுப்பி இருக்கிறார்.

சசியை அனுப்பி வைத்த கையோடு, உடனே எனக்கு போன் செய்த பிரபுதேவா, “சார்! நீங்க எவ்வளவு பெரிய தயாரிப்பாளர்! அதைப் புரிந்து கொள்ளாத இந்த டைரக்டர் இயக்கும் படத்தில் நான் நடிக்கமாட்டேன்” என்றார்.

எடுத்த எடுப்பில் பிரபுதேவா இப்படிச் சொன்னதும், என்ன நடந்திருக்கும் என்பது புரிந்து விட்டது. “பிரபு! சசி உங்களிடம் டிசைனைக் கொண்டு வந்து காட்டினாரா?” என்று கேட்டேன். “பார்த்தேன் சார்! பார்த்துட்டுத்தான் உடனே உங்ககிட்ட பேசறேன். வேற டைரக்டரை பார்த்துக்கலாம்” என்றார்.

நான் விடவில்லை. “பிரபு! ஆர்வக்கோளாறில் அவர் பண்ணின விஷயம் இது. தன்னோட பேரை பெரிசா, முதல்ல போட்டுக்கணுங்கற ஆர்வத்தில் இப்படி நடந்திருக்கு. நான் இதை சகஜமா எடுத்துக்கிட்டேன். நீங்களும் `பீல்’ பண்ணாதீங்க” என்று சொல்லிப்பார்த்தேன்.

“இல்லை சார்! உங்க மாதிரி ஒரு தயாரிப்பாளரையே சரியா புரிஞ்சிக்காதவரின் டைரக்ஷன்ல படம் பண்ண விரும்பலை” என்றார் உறுதியான குரலில்.

நான் சசியை அழைத்து, “உங்களை யாரு அந்த டிசைனை பிரபுதேவாகிட்ட காட்டச் சொன்னது?” என்று கேட்டேன்.

இதற்குள் சசிக்கு விஷயம் புரிந்து விட்டது. “சார் ஒரு ஆர்வத்திலே…” என்று ஆரம்பித்தவரை, மறுபடியும் பிரபுதேவாவிடம் அனுப்பி வைத்தேன். அவரும் “சாரி” சொல்லி திரும்பியிருக்கிறார். ஆனாலும் பிரபுதேவா மனம் மாறவில்லை. என்னிடம் பேசியவர், “சார்! எத்தனை தடவை வந்தாலும் அந்த புது டைரக்டர் டைரக்ஷனில் படம் பண்ணக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா நல்ல கதை. அதை மிஸ் பண்ணாமல் வேற ஒரு ஹீரோவை போட்டு நீங்க படம் தயாரிச்சாலும் எனக்கு சந்தோஷமே” என்றார்.

பிரபுதேவா இப்படி பிடிவாதமாக பேசினாலும், ஒரு தயாரிப்பாளருக்கு அவர் கொடுத்த மரியாதைதான் என் முன் நின்றது.

இதன் பிறகு பிரபுதேவா சிபாரிசு செய்த டைரக்டர்தான் எஸ்.டி.சபா.”

திரைப்பட வரலாறு 887
தாணு தயாரித்த “வி.ஐ.பி”
சிம்ரன் அறிமுகம்


கலைப்புலி தாணு தயாரித்த “வி.ஐ.பி” படத்தின் மூலம், தமிழ்ப்பட உலகுக்கு சிம்ரன் அறிமுகமானார்.

“வி.ஐ.பி” படம் தொடங்கப்பட்டது முதல், ரிலீஸ் ஆகும்வரை பல திருப்பங்களை தாணு சந்தித்தார்.

அதுபற்றி அவர் கூறியதாவது:-

“டைரக்டர் சசி உருவாக்கிய கதையில் பிரபுதேவா நடிக்க மறுத்த பிறகு, மனதளவில் சசி ரொம்பவும் உடைந்து போனார். நான்தான் அவரை சமாதானப்படுத்தி, நான் வாடகைக்கு பிடித்திருந்த அறையிலேயே கதை விவாதம் பண்ண வைத்தேன்.

இந்த நேரத்தில், பிரபுதேவா டைரக்டர் சபாவை என்னிடம் சிபாரிசு செய்தார். “பரதன்” பட ஷூட்டிங்கின்போது விஜயகாந்தை பார்க்கப்போன இடத்தில், அந்தப் படத்தை டைரக்ட் செய்த சபாவை பார்த்திருக்கிறேன். எனக்கும் அவருக்குமான அறிமுகம் அந்த அளவில்தான் இருந்தது.

என்றாலும் பிரபுதேவாவே விரும்பி சிபாரிசு செய்ததால் `சபா’ டைரக்டர் ஆனார். தாமதமின்றி கதை விவாதம் தொடங்கிவிட்டார்.

ஏவி.எம். பொன் விழா படம்

கதை விவாதம் முடிவுக்கு வந்து படத்துக்கான திரைக்கதை வடிவம் கிடைத்த நேரத்தில், பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டர் என்னைப் பார்க்க வந்தார். வரும்போதே முகத்தில் ஏதோவொரு கோரிக்கை தெரிந்தது.

நான் அவரை வரவேற்று பேசிக்கொண்டிருந்த நேரத்தில், “உங்ககிட்ட ஒரு உதவி கேட்க வந்திருக்கிறேன்” என்றார்.

“சொல்லுங்க சார்!” என்றேன்.

“ஒண்ணுமில்லை சார்! நேற்று ஏவி.எம்.சரவணன் சார் திடீரென என்னிடம் போனில் பேசினார். ஏவி.எம்.மின் பொன் விழா ஆண்டையொட்டி ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் பிரபுதேவா கால்ஷீட் வேண்டும் என்றும் கூறினார். படத்தை ராஜீவ்மேனன் டைரக்ட் பண்றார். ஏ.ஆர்.ரகுமான் மிïசிக் பண்றார் என்றும் சொன்னார். எனக்கு ஒண்ணுமே ஓடலை. நான் யோசிப்பது தெரிந்ததும், “என்ன விஷயம்னாலும் சொல்லுங்க” என்று வெளிப்படையாக கேட்டார். `பிரபுதேவாவோட கால்ஷீட் இல்ல. தாணு சார் கிட்ட இருக்கு’ என்றேன். `அப்படீன்னா தாணு சார்கிட்டே கேட்டுக்குங்க. அவர் பிரபுதேவா கால்ஷீட்ஸ் எங்களுக்கு தர்றதா இருந்தா, படம் பண்றோம்’ என்றார். இந்த விஷயத்துல முடிவெடுக்கிறது தாணு சார் உங்க கையில்தான் இருக்கு” என்றார் மாஸ்டர்.

நான் மாஸ்டரிடம், “ஹெல்ப்னு கேட்டுட்டீங்க. அதனால் பிரபுதேவா முதலில் ஏவி.எம். படமே பண்ணட்டும். அவங்க படம் முடிஞ்ச பிறகு நான் பண்ணிக்கிறேன்” என்றேன்.

“என்ன பெருந்தன்மை சார் உங்களுக்கு!” என்று நெகிழ்ச்சியாக சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனார், சுந்தரம் மாஸ்டர்.

பிரபுதேவா கால்ஷீட்டை நான் விட்டுக்கொடுத்த விஷயத்தை ஏவி.எம்.சரவணனிடம் சுந்தரம் மாஸ்டர் சொன்னதும் அவரும் “தாணுவுக்கு என் நன்றியை சொல்லிடுங்க” என்று கூறியிருக்கிறார். இதற்குள் விஷயம் தெரிந்த பிரபுதேவா என்னிடம், “என்ன சார்! விட்டுக் கொடுத்திட்டீங்களாமே” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

“ஆமா பிரபு! ஏவி.எம். பொன் விழா ஆண்டில் படம் எடுக்கிறாங்க. அதுல நீங்க நடிப்பதால், உங்களுக்கும்தானே பெருமை”

என்றேன்.ஏவி.எம். எடுத்த அந்தப்படம் “மின்சாரக்கனவு.”

அந்தப்படத்தை பிரபுதேவா முடித்துக் கொடுத்ததும், எனது “வி.ஐ.பி” படத்தில் நடித்தார். இந்தப் படத்தின் பூஜையை மாலையில் நடத்தினேன். படப்பிடிப்பு நடந்த ஏவி.எம். வளாக வாசல் முகப்பில் வி.ஐ.பி. என்ற பிரமாண்ட ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு பாதை உருவாக்கினேன். அதாவது “ஐ” எழுத்து வழியாக, விழாவுக்கு வந்தவர்கள் அரங்கினுள் வரும்படிபாதை உருவாக்கப்பட்டிருந்தது. இது, விழாவுக்கு வந்த பிரமுகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ரூ.40 லட்சத்தில் அரங்கு

வி.ஐ.பி. படத்தின் பாடல் காட்சியில் தமிழ் சினிமாவில் அதுவரை யாரும் செய்யாத ஒரு புதுமையை செய்தேன். படத்தில் இடம் பெறும் 3 நிமிட பாடல் காட்சிக்காக 40 லட்சம் ரூபாய் செலவில் ஏவி.எம். ப்ளோரில் செட் போட்டேன். இந்த செட் விஷயம் பட உலகில் பிரமிப்பாக பேசப்பட்ட நிலையில், பிரபல இந்தி, தெலுங்கு தயாரிப்பாளர்கள் என்னை அணுகி, “நீங்கள் இந்த செட்டை பயன்படுத்தி முடித்ததும் எங்களுக்கும் படப்பிடிப்புக்கு தந்தால், நீங்கள் கேட்கிற வாடகையைத்தர தயாராக இருக்கிறோம்” என்றார்கள்.

நான் அவர்களிடம், “இப்படியொரு பிரமாண்ட செட் போட்டது என் படத்துக்காகத்தான். என் படத்தின் பாடல் காட்சிக்காக மட்டுமே இந்த செட்டை பயன்படுத்துவேன். மற்ற தயாரிப்பாளர்களின் படங்களுக்கு இந்த செட்டை வாடகைக்கு விடும் நோக்கம் எனக்கு இல்லை” என்று சொல்லி அனுப்பினேன். 14 நாட்கள் தொடர்ந்து பாடல் காட்சி படமாக்கி முடிந்ததும், அந்த செட்டை பிரித்து விட்டேன்.

சிம்ரன் அறிமுகம்

“வி.ஐ.பி” படத்தில் பிரபுதேவா ஜோடியாக சிம்ரன் நடித்தார். தமிழில் சிம்ரன் அறிமுகமான முதல் படம் இதுதான்.

இந்தப் படத்தில் முதலில் சிம்ரன் நடிப்பதாக இல்லை. லைலாவைத்தான் `புக்’ செய்திருந்தேன். படத்தின் பூஜைக்கும் லைலாதான்

வந்திருந்தார்.தாமதமாக வந்ததுடன், தயாரிப்பு நிர்வாகிக்கு உரிய மரியாதை கொடுக்கத் தவறியது என் கவனத்துக்கு வந்தது.

எனவே, படத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

பிறகு, பூஜா என்ற பெண்ணை “கேமரா டெஸ்ட்” எடுத்துப் பார்த்தோம். `டெஸ்ட்’ திருப்திகரமாக இல்லாததால் அவரையும்

அனுப்பிவிட்டோம்.

ராணி முகர்ஜியின் “புகை வளையம்”

இதனால், மும்பைக்குப்போய் கதாநாயகியை தேர்வு செய்வோம் என்று டைரக்டர் சபாவுடன் புறப்பட்டு சென்றேன். ராணி முகர்ஜியைப் பார்த்தோம். அவர் அப்போதுதான் இந்திப் படத்தில் அறிமுகமாகிறார் என்றார்கள். நான் அவரைப் பார்த்த நேரத்தில் எங்கள் முன்னால் கால்மேல் கால் போட்டுக்கொண்டு சிகரெட் புகைத்தபடி இருந்தார். அந்த புகை வளையத்துக்குள்ளேதான் அவரிடம் பேசவேண்டி இருந்தது! இது எனக்கு அருவறுப்பைத் தர, அப்போதே அங்கிருந்து புறப்பட்டு வெளியேறிவிட்டோம்.

அப்போது மும்பையில் `தேரே மேரே சப்னே’ என்று ஒரு இந்திப்படம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருந்தது.

இதே பெயரில், பல ஆண்டுகளுக்கு முன் தேவ்ஆனந்தும் ஒரு படம் எடுத்திருந்தார். புதிய படத்தில் புதுமுகமாக நடித்தவர்தான் சிம்ரன். அவரது போட்டோவைப் பார்த்ததும், `இவர் நமது படத்துக்கு பொருத்தமாக இருப்பார்’ என்று தோன்றியது.

அதே நேரத்தில் சென்னையில் இருந்து முனுசாமி என்பவர் என்னுடன் போனில் பேசினார். “சார்! நான் புதுமுக நடிகை சிம்ரனின் மானேஜர். உங்க படத்தில் சிம்ரனை நடிக்க வைக்க விரும்புகிறேன்” என்றார்.

இதுபற்றி பிரபுதேவாவிடம் நான் சொன்னபோது, அவரும் சிம்ரன் படத்தைப் பார்த்துவிட்டு, “ஓ.கே.சார்” என்றார்.

இதன் பிறகு சென்னை வந்த நாங்கள் சிம்ரனை முனுசாமி மூலம் சென்னைக்கு வரவழைத்தோம். உடனே 2 படங்களுக்கு அவரை புக் செய்தேன்.”

Posted in Abbas, AVM, Barathiraja, Bharathiraja, Cinema, Dhaanu, Directors, Films, Gossips, Kilakku Seemaiyiley, Kizhakku Cheemaiyile, Lalila, Movies, Mukherjee, Prabhudeva, Prabudeva, Ramba, Rani, Rumba, Sasi, Simran, smoking, Thaanu, Vasanth, VIP | Leave a Comment »

Mu Ka Azhagiri & State-owned Arasu Cable TV Corporation Ltd: Multi System Operator (MSO) – Television network for Chennai

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2008

கேபிள் டி.வி. எம்.எஸ்.ஓ. தொடங்குகிறார் அழகிரி?

சென்னை, பிப். 14: முதல்வர் கரு ணாநிதியின் மகன் அழகிரி, சன் டி.வி.யின் “எஸ்.சி.வி.’ நிறுவனத் தால் பாதிக்கப்பட்ட கேபிள் ஆப ரேட்டர்களுடன் முக்கிய ஆலோ சனை நடத்தினார்.

இதையடுத்து, அழகிரி கேபிள் டி.வி. எம்.எஸ்.ஓ. தொடங்கக் கூடும் என்று யூகங்கள் எழுந்துள்ளன.

இந்தக் கூட்டத்தில், கலைஞர் டி.வி. நிர்வாகிகள் சரத்ரெட்டி, அமிர்தம், தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்க நிர்வாகி கள், கேபிள் ஆபரேட்டர்கள் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

சன் “டி.டி.எச்.’, எஸ்.சி.வி.யால் பாதிக்கப்பட்ட கேபிள் டி.வி. ஆப ரேட்டர்களை அழகிரி அணி சேர்ப்பதையடுத்து, அவர்களை வைத்து புதிதாக எம்.எஸ்.ஓ தொடங்குவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

எஸ்.சி.வி.க்கு போட்டியாகவே தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், அந்த நிறுவனத் துக்காக எம்.எஸ்.ஓ.க்களைக் குத்த கைக்குக் கோருவதில், தகவல் தொடர்பு சட்டத்தின்படி சிக்கல் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் சென்னையில் எம்.எஸ்.ஓ. தொடங்கும் பணிகள் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், மற்ற இடங்களில் அரசு நேரடியாகவே கேபிள் டி.வி. இணைப்பு வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எஸ்.சி.வி.யால் பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்களை அழ கிரி அணி சேர்க்கத் தொடங்கியி ருக்கிறார். அழகிரி, கலைஞர் டி.வி. நிர்வாகிகள், கேபிள் டி.வி. ஆபரேட்டர் கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட் டம் இதன் பின்னணியில் முக்கியத் துவம் பெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதலாவ தாக பேசிய அழகிரி, “கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் முக்கிய கோரிக்கைகளைத் தெரிவிக்கு மாறு’ கூறியுள்ளார்.

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் முதல்வர் கருணா நிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் வைத்த கோரிக்கை களை நிறைவேற்றினால் போதும் என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர் கள் தரப்பில் பதில் கூறப்பட்டுள் ளது. அதில் முக்கியக் கோரிக்கை என்ன என்று அழகிரி கேட்ட தற்கு, “கேபிள் டி.வி. தொழிலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்!’ என்று கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதுகுறித்து முதல்வரிடம் பேசு வதாகவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதாகவும், பதிலுக்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் எங்க ளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றும் அழகிரி கேட் டுக்கொண்டதாகக் கூறப்படுகி றது. சென்னை அடையாறில் உள்ள “எஸ்தெல்’ ஹோட்டலில் மாலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே அழகிரி பங்கேற்றுள்ளார்.

அதன் பிறகு, அழகிரியும், அமிர் தமும் புறப்பட்டுச் சென்றுள்ள னர். கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி சரத்ரெட்டி தலைமையில் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. சென்னையைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்க ளில் கேபிள் ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களில் அழ கிரி பங்கேற்க உள்ளதாகத் தெரிகி றது. சில நாள்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த கேபிள் டி.வி. விவகாரம், இந்தக் கூட்டத்தைய டுத்து மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

————————————————————————————————————————-

கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டுவதுதான் போலீஸôரின் வேலையா?: தயாநிதி மாறன்

சென்னை, பிப். 16: “எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’யுடன் சேருமாறு மிரட்டுவதுதான் போலீஸôரின் வேலையா?’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

கேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்படுவது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவை சனிக்கிழமை அளித்தார்.

அதன் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:

தென் சென்னை போலீஸ் இணைக் கமிஷனர் துரைராஜ் தலைமையில் எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை, “ஹாத்வே’ (எம்.எஸ்.ஓ நிறுவனம்) நிறுவனத்துக்கு மாற வேண்டும் என்று போலீஸôர் மிரட்டி வருகின்றனர்.

இதற்காக வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 20-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்களை போலீஸôர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இதனால் அவர்கள் குடும்பத்தினர் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் போலீஸôர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளிப்பதற்காக வந்தேன். ஆனால் கமிஷனர், கூடுதல் கமிஷனர் யாரும் இங்கு இல்லை.

கேபிள் ஆபரேட்டர்கள் நள்ளிரவில் கைது செய்யப்படும் சம்பவம் முதல்வர் கருணாநிதிக்கு தெரியாமல் நடக்கிறது. தெரிந்தால் இதுபோன்று நடப்பதற்கு அவர் அனுமதிக்கமாட்டார்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டம்: சென்னையில் இரண்டு தினங்களுக்கு முன்பு “ஹாத்வே’ நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக, சென்னை போலீஸôர் இதுபோன்ற மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு துரைராஜ் தலைமையில் போலீஸôர் கைது மற்றும் மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

“ஹாத்வே’யுடன் சேரவில்லையென்றால் பொய் வழக்கு போடுவதாக அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’யுடன் சேருமாறு மிரட்டுவதுதான் போலீஸôர் வேலையா?

இதன் பின்னணியில் யார் உள்ளது என்பது தெரியும். ஆனால் பெயரை வெளியிட விரும்பவில்லை. தவறு செய்யும் அதிகாரிகள் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார் தயாநிதி மாறன்.

————————————————————————————————————
அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன பயன்?: சரத்குமார்

சென்னை, பிப். 18: “அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விளக்க வேண்டும்’ என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’ நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படும்படி மிரட்டுவதும், அதற்கு காவல்துறையைப் பயன்படுத்துவதும் கடந்த சில நாள்களாக நடந்து வருகிறது.

எஸ்.சி.வி., ஹாத்வே என்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்குள் தொழில் போட்டி இருக்கலாம். இதில் ஆளும் கட்சி, ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட நினைப்பது தவறு.

தனியார் நிறுவன போட்டிகளால் பொதுமக்களுக்கும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்காக, அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் விரைவில் கேபிள் இணைப்புகள் கொடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை தமிழகத்தில் அனைத்துத் தொழில்களிலும் கடைப்பிடிக்கப்படுமா?

அரசு கேபிள் டி.வி. நிறுவனம் குறிப்பிட்ட மாநகராட்சிகளில் மட்டும் தொடங்கக் கூடாது. அது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு எதிரானதாக மாறிவிடும். தமிழகம் முழுவதும் தொடங்கப்பட வேண்டும்.

பிற தனியார் நிறுவனங்களில் இணைந்துள்ள கேபிள் ஆபரேட்டர்களை, அரசு கேபிள் நிறுவனத்தில் இணைப்புகள் பெறுமாறு மிரட்டக் கூடாது.

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள், சலுகைகள் கிடைக்கும் என்பதை அரசு தெளிவாக விளக்க வேண்டும்.

—————————————————————————————————————-
ஜூனில் அரசு கேபிள் டிவி

சென்னை, பிப். 19: புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் எம்.எஸ்.ஓ. சேவையை வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.

தமிழகத்தின் கேபிள் ஆப்பரேட்டர்கள் சங்கத்தினரும் கேபிள் டி.வி. கார்ப்பரேஷனும் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்திய கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டது.

எம்.எஸ்.ஓ. (மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர்) முறை என்பது செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தொலைக்காட்சி அலைவரிசை சேவையைப் பெற்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு விநியோகிப்பதாகும்.

இந்த சேவை உள்ள இடத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை இருக்கும். அதற்கு உபகரணங்கள் தேவை.

எம்.எஸ்.ஓ. சேவை முதல் கட்டமாக கோவை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தஞ்சை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும்.

பின்னர் படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் இச்சேவை விரிவு செய்யப்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் எம்.எஸ்.ஓ. சேவை திருநெல்வேலி, திருவண்ணாமலை, கோவை, தஞ்சை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரையில் இச்சேவையை கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடங்குவது குறித்த அறிவிப்பு இல்லை.

ஏற்கெனவே, தனியார் அலைவரிசை சேவையை வழங்கும் உரிமையை முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரிக்கு வழங்குவதற்கு வசதியாக இச்சேவையை கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் மதுரையில் தொடங்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. மு.க. அழகிரி ராயல் கேபிள் விஷன் என்ற பெயரில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

“”சென்னையில் இச்சேவையைத் தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது” என்று அரசு தெரிவித்துள்ளது.

“”கட்டுப்பாட்டு அறைக்குத் தேவையான உபகரணங்கள், இதர தளவாடங்களை வாங்குவதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்ட்டன. அந்த நடைமுறைகள் மார்ச் 12-ம் தேதி பூர்த்தியாகிவிடும். ஜூன் மாதம் சேவை தொடங்கும்” என்று தமிழக கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கத் தலைவர் ஷகிலன் தெரிவித்தார்.

கேபிள் டி.வி. சேவையில் இருப்போரின் வரிச் சுமையைக் குறைக்கவேண்டும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை அச்சுறுத்துவதாக வந்த புகார்கள் குறித்து பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.அத்துடன், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. கூட்டத்தில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவர் பிரஜேஷ்வர் சிங், உள்துறச் செயலர் எஸ்.மாலதி ஆகியோர் பங்கேற்றனர்.

ஷகிலன், பொதுச் செயலர் கோகுல்தாஸ் உள்ளிட்டோரும் தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்கத் தலைவர் காயல் ஆர்.இளவரசு, பொதுச் செயலர் பாலசுப்பிரமணியன் ஆகியோரும் பங்கேற்றனர்.

——————————————————————————————————-

———————————————————————————————————————-
“சன்’னை முடக்க “சன்’னால் முடியுமா?

நமது சிறப்பு நிருபர் – Dinamani

சென்னை, பிப். 24: அரசியல் செல்வாக்கால் அவ்வப்போது ஊட்டம் பெறும் எம்.எஸ்.ஓ.க்கள், கேபிள் ஆபரேட்டர்களை விடாமல் துரத்துகின்றன.

பல இடங்களில் அதிகார வர்க்கத்தால் தங்களுக்கு மிரட்டல் வருவதாகக் கூறும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் மிரட்டல் பாணி முறையை தற்போது “ஹாத்வே’ கையில் எடுத்துள்ளதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.

“மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்’ (எம்.எஸ்.ஓ.) என்ற முறையை சென்னையில் முதல் முதலில் “சிட்டி கேபிள்’ நிறுவனம் 1998-ல் அறிமுகப்படுத்தியது.

வந்தது “ஹாத்வே’:

1999-ல் எம்.எஸ்.ஓ. உலகில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. வியாபார ஆங்கில வார இதழ் நடத்தும் நிறுவனத்திடம் இருந்து எம்.எஸ்.ஓ. நிறுவனத்தை வாங்கியது “ஹாத்வே’. இது வட இந்தியாவைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்குச் சொந்தமானது.

“90 சதவீதம் கேபிள் ஆபரேட்டர்கள் தங்களிடம் இருப்பதாகவும், மீதி பத்து சதவீதத்தை விரைவில் பிடித்து விடுவோம்’ என்றும் கேபிள் ஆபரேட்டர்களிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

சிதைந்து போன “ஹாத்வே’:

1999-களில், “சன்’ நெட்வொர்க் நிறுவனம் டி.வி. தொழிலில் புகழ் பெற்று விளங்கினாலும், எம்.எஸ்.ஓ. தொடங்கும் திட்டம் என்பது அவர்கள் மூளையில் உதித்தது அல்ல.

ஆட்சி, அதிகாரம் என அனைத்தும் கைவசம் இருக்க, எம்.எஸ்.ஓ. தொழிலில் இறங்கியது “சன் நெட்வொர்க்’. தன்னுடைய கட்டுப்பாட்டு அறையின் ஜாகையை சென்னையின் மையப்பகுதிக்கு மாற்றியது. மேலும், தமிழகத்தின் முக்கிய நகரங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கட்டுப்பாட்டு அறையை வேகமாக அமைத்தது.

ஆட்சி, அதிகாரங்களின் ஆசியோடு, 1999-ம் ஆண்டின் இறுதிக்குள் சுமங்கலி கேபிள் நிறுவனம் வேரூன்றி, அசைக்க முடியாத ஆலமரமாக மாறியது. வெறும் மிரட்டலோடு இருக்காமல், தொழில்நுட்ப ரீதியாகவும் சுமங்கலி தன்னை பலப்படுத்திக் கொண்டது.

வந்தார் பாஸ்கரன்:

2001-ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம், கேபிள் டி.வி. தொழிலிலும் எதிரொலித்தது. சுமங்கலி கேபிள் நிறுவனத்தில் இருந்தவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் பாஸ்கரன். இவர், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஆசி பெற்றவர், சசிகலாவின் உறவினர்.

“”ஹாத்வே’ நிறுவனத்திடம் இருந்து பிரிந்து போனவர்களை மீண்டும் இழுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். சில சமயங்களில் சுமங்கலி கேபிள் நிறுவனத்தினர் மேற்கொண்ட பாணியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார். மீண்டும் ஆட்சி, அதிகாரம் வேறொரு ரூபத்தில் வந்து தாக்க வேறு வழியின்றி சுமங்கலியிடம் இருந்து பலர் “ஹாத்வே’-க்குச் சென்றனர். கோபத்தால் சிவந்த சுமங்கலி தனது சேனல் பேக்கேஜை நிறுத்தியது” என்றார் தென் மாவட்ட கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.

தொடர் நாடகங்களால் மக்கள் மனதில் நிலைத்து விட்ட சன் டி.வி. தங்கள் இல்லங்களில் தெரியாமல் போனால் இல்லத்தரசிகள் சும்மா இருப்பார்களா? கேபிள் ஆபரேட்டர்களை நச்சரிக்கத் தொடங்கினர். இதனால், வேறு வழியின்றி மீண்டும் சுமங்கலி நிறுவனத்திடம் சரண்டர் ஆயினர் கேபிள் ஆபரேட்டர்கள்.

அதற்குள்ளாக, தடம் மாறிய கேபிள் ஆபரேட்டர்களுக்கு “செக்’ வைக்கும் வகையில் அந்தப் பகுதிகளில் மாற்றாரை கொம்பு சீவி விட்டது சுமங்கலி கேபிள் நிறுவனம்.

“”அதையும் சகித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் சுமங்கலியிடமே வந்து சேர்ந்தோம். இந்த நிலையில், “ஹாத்வே’ நிறுவனத்தில் ராஜாவாக இருந்த பாஸ்கரன் ஒரு கட்டத்தில் அதைக் கைப்பற்ற நினைத்தார். அதற்குள் அரசியல் நெருக்கடி காரணமாக கட்சியிலிருந்தும், அதிகாரத்தில் இருந்தும் தூக்கி எறியப்பட்டார். இதனால், “ஹாத்வே’யில் அரசியல் சாயம் சற்று மறைந்தது” என்றார் சென்னையைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.

இதன் பிறகு, மூன்று முதல் நான்கு சதவீத கேபிள் ஆபரேட்டர்கள் மட்டுமே “ஹாத்வே’யிடம் இருக்கின்றனர்.

அன்று அவர்…இன்று இவர்…

வளர்த்த கடா மார்பில் பாய்வதா…? என சிலிர்த்து எழுந்துள்ள ஆளுங்கட்சி தரப்பு, சுமங்கலிக்கு எதிரான வேலைகளைத் தொடங்கி விட்டது.

“ஒன்றுக்கு தீனி போட்டு வளர்த்தால், மற்றொன்று தானாக அழியும் என்கிற ரீதியில் சுமங்கலியை ஒடுக்க “ஹாத்வே’ நிறுவனத்தை வளர்த்துவிடும் பணியில் ஆளும் கட்சி தரப்பு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

இதை நிரூபிக்கும் வகையில், சென்னையில் கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வரின் மகன் அழகிரி.

அந்தக் கூட்டத்தில் கேபிள் ஆபரேட்டர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் பேசுவதாகவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கேபிள் ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சிக் காலத்தில், ஹாத்வே நிறுவனத்தை வளர்த்துவிடும் பணியில் பாஸ்கரன் ஈடுபட்டார். தற்போது,சுமங்கலியை ஒடுங்குவதற்காக, அழகிரி அந்த வேலையை கையில் எடுத்துள்ளதாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வட்டாரத்தில் தகவல் பரவிக் கிடக்கிறது.

முடக்கும் வேலை சாத்தியமா?:

“ஹாத்வே’ கேபிளில் சன் டி.வி. தெரியாதபோது தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லையே என மக்கள் ஏங்கிய காலம் உண்டு. ஆனால், தற்போது அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. சன் டி.வி.யின் ஜெராக்ஸ் காப்பி போன்று செயல்படுகிறது கலைஞர் டி.வி.

நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என அனைத்தும் “புத்தம் புதிய காப்பி’ வகைகள்தான். எனவே, சன் டி.வி. தெரியாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது கலைஞர், விஜய், ஜெயா, ராஜ் டி.வி.க்கள். பெரும்பாலான மக்கள் அவற்றுக்கு மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது.

அதே சமயம், வீடுகளுக்கு நேரடி கேபிள் ஒளிபரப்பு முறையும் (டி.டி.எச்.) பிரபலமாகி வருகிறது. கேபிள் டி.வி. யுத்தத்தில் மக்கள் வெறுப்படைந்தால் டி.டி.எச். முறைக்கு மாற வாய்ப்பு உண்டு. அப்படி மாறினால் அங்கு “சன் நெட்வொர்க்’ வெற்றி பெறும். இதற்குக் காரணம், டி.டி.எச். வசதியை “சன்’ நிறுவனமும் மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.

“ஹாத்வே’யுடன் கடந்த முறை நடைபெற்ற போட்டியில் கேபிள் வயர்களை அறுத்து பல உள்ளடி வேலைகளில் ஈடுபட்டது சுமங்கலி கேபிள் நிறுவனம். தற்போது, அதிகார பலத்தோடு “ஹாத்வே’ களமிறங்கி, சுமங்கலியின் கேபிள் வயர்களை அதன் பாணியிலே அறுத்தெறிய முற்பட்டால் சுமங்கலி கேபிள் நிறுவனமோ, சன் டி.வி.யோ பெரிய பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பில்லை. சன் டி.வி.யின் நேயர்கள் டி.டி.எச்.க்கு மாறிவிடுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

எதிர்க்கட்சிகளின் ஆசியோடு “ஹாத்வே’ கேபிளையும், அந்த நிறுவனத்தையும் காலி செய்யும் வேலையில் “சுமங்கலி’ இறங்கினால், பெரும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு அது வழிவகுக்கும்.

இதற்கெல்லாம் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் முற்றுப்புள்ளி வைக்குமா என்பதே அனைவரது மனதிலும் எழுந்துள்ள கேள்வி.

Posted in ADMK, AIADMK, Alagiri, Alakiri, Arasu, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, cable, Chennai, Dayanidhi, Gossips, hathway, Jaya, Jeya, JJ, Kalainjar, Kalanidhi, Kanimozhi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Maran, Media, MK, MSO, MuKa, Multi System Operator, network, Rumors, Sasikala, satellite, SCV, Stalin, Sumangali, Sun, Telecom, telecommunications, Television, TV | 1 Comment »

Tamil Cinema 2007 – Incidents, Gossips, Kisu Kisu, People, Movies, Flashback, Stars: Dinamalar

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

2007ம் ஆண்டில் தமிழ் சினிமா உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள், சாதனைகளின் தொகுப்பு வருமாறு :

ஜனவரி

112007 : தமிழக தியேட்டர்களில் அரசின் டிக்கெட் கட்டணம் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.

312007 : நடிகர் பிரசாந்திடம் மாதம் ரூ.1 லட்சம் ஜீவானாம்சம் கேட்டு அவருடை<ய மனைவி கிரகலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.

812007 : கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கவிருப்பதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்தது.

* நடிகர் பிரசாந்த் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிரசாந்த்தும், கிரகலட்சுமியும் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் முடிவு எதுவும் ஏற்படவில்லை.

912007 : பண மோசடி வழக்கில் சிக்கிய நடிகை குஷ்பு முன் ஜாமீன் வழங்க சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாம். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

1012007 : நடிகர் பிரசாந்தின் மனைவி கிரஹலட்சுமி தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

* கோ<யம்பேட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்காக எங்கள் திருமண மண்டபத்தை இடிக்கக்கூடாது என்று தே.மு.தி.க தலைவர் விஜ<யகாந்த் மனைவி பிரேமலதா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

* ரூ.1 லட்சம் மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் பாண்டி<யன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

2012007 : கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் கதை தொடர்பான வழக்கில் அப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. (தசாவதாரம் படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் உரிமை கொண்டாடினார்).

2412007 : நடிகர் விஜயகாந்தின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினார்கள்.

* கிராபிக்ஸ் மூலம் எனது முகத்துடன் வேறு பெண்ணின் உடலை இணைத்து புளூ பிலிம் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று போலீஸ் கமிஷனரிடம் கவர்ச்சி நடிகை பாபிலோனா புகார் கொடுத்தார்.

2612007 : சென்னைக்கு வந்த ஸ்ரீ சத்ய சாய்பாபாவிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்தோடு நேரில் சென்று ஆசி பெற்றார்.

* கவிஞர் வாலிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று மத்தி<ய அரசு அறிவித்துள்ளது.

* சூப்பர் ஸ்டார் ரஜினியில் சிவாஜி பட சூட்டிங் திருநள்ளாறில் நடந்தது. நடிகை ஸ்ரேயா எண்ணெய் தேய்த்து நளதீர்த்த குளத்தில் குளித்தார். சூட்டிங்கிற்கு ரஜினி வந்திருப்பதாக தகவல் பரவியதால் ரசிகர்கள் திரண்டு விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பிப்ரவரி

122007 : தனது வீட்டில் வருமான வரி ரெய்டு நடத்த காரணம் முதல்வர் கருணாநிதிதான் என்று பேட்டியளித்த விஜயகாந்த் மீது தி.மு.க. சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

222007 : பத்மஸ்ரீ விருது பெற்ற கவிஞர் வாலி, அந்த விருதுடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.

322007 : தமிழ் திரைப்பட விருது தேர்வுக்குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நடந்தது.

522007 : கிரீடம் பட சூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடந்தது. சண்டைக்காட்சியில் நடித்த நடிகர் அஜித்தின் முதுகில் பலமான அடிபட்டது. இதை<யடுத்து அவர் படப்படிப்பு ரத்து செய்யப்பட்டது

* காரில் சென்றபோது நடிகை கிரண் விபத்தில் சிக்கினார். அவரது கை எலும்பில் முறிவு ஏற்பட்டது. 20 தை<யல்கள் போடப்பட்டன.

1522007 : ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. அமெரிக்காவில் நடந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினி சென்னை திரும்பினார்.

2122007 : டைரக்டர் அமீர் இ<யக்கி<ய பருத்திவீரன் படத்தின் சிறப்பு காட்சியை முதல்வர் கருணாநிதி பார்த்தார். அவர் புதுமுக நடிகர் கார்த்தியை பாராட்டினார்.

2222007 : மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷார்காந்தி எழுதி<ய லெட்ஸ் கில் காந்தி என்ற நூலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

மார்ச்

0232007 : பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை தேவிபிரியா மற்றும் அவரது காதலன் ஐசக்குடன் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

0732007 : முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எழும்பூர் கோர்ட்டில் ஆஜரானார்.

1632007 : கணவர் முகேஷிடம் இருந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருந்த நடிகை சரிதா குடும்ப நல கோர்ட்டில் ஆஜரானார்.

2532006 : தசாவதாரம் படப்பிடிப்பில் ரஜினிகமல் இருவரும் சந்தித்தார்கள். சுமார் ஒரு மணிநேரம் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

2632007 : சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடிகர் முகேஷ்சரிதா இருவரும் ஆஜரானார்கள். ஏப்ரல் 23ந் தேதி அவர்கள் இருவரும் மீண்டும் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

2832007 : ஒன்றரை மாதங்களாக காணாமல் போயிருந்த நடிகை ப்ரீத்திவர்மா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். பெற்றோர் விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றதால் வீட்டை விட்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.

* தசாவதாரம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் நடிகர் கமல் பதில் மனு தாக்கல் செய்தார்.

ஏப்ரல்

01042007 : இயக்குனர் சங்கர் தயாரித்த வெயில் திரைப்படம் கேன்ஸ் உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டது.

09042007 : :நடிகை மும்தாஜ் நடித்த மோனிஷா என் மோனலிசா படத்துக்காக வழங்கப்பட்ட உத்தரவாதப்படி ரூ.31 லட்சத்தை தர தயாரிப்பாளர் விஜய ராஜேந்தருக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

10042007 : :நடிகர் கமலஹாசன் நடிக்கும் தசாவதாரம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் நீக்கியது.

19042007 : டப்பிங் பேச நடிகர் தனுஷ் மறுத்ததால் பரட்டை என்கிற அழகுசுந்தரம் படம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

2042007 : முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும், பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் மும்பையில் திருமணம் நடந்தது.

* பரட்டை என்கிற அழகுசுந்தரம் பட நிறுவனம் தரவேண்டிய சம்பள பாக்கித் தொகையை கேட்டு சென்னை சிவில் கோர்ட்டில் நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்தார்.

21042007 : சம்பள பாக்கித் தொகை கேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நடிகர் தனுஷ் வாபஸ் பெற்றார்.

2442007 : நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை ஜோதிகாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

27042007 : அருணாசலம் படத்துக்கு பிறகு ரசிகர்களை நேரில் சந்திக்காமல் இருந்த ரஜினி, திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னையில் சந்தித்தார். ரஜினியுடன் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

மே

02122007 : பொது மேடையில் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு கியர் முத்தமிட்டு சர்ச்சை ஏற்படுத்திய விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகுமாறு நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

0652007 : தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் கவிஞர் பா.விஜய் எழுதி<ய பத்து நூல்கள் வெளியிடப்பட்டன.

09052007 : விவாகரத்து வழக்கு தொடர்பாக நடிகர் பிரசாந்த், கிரகலட்சுமி இருவரும் வரும் 30ம் தேதி ஆஜராக சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது.

10052007 : நடிகர்கள் சிம்பு, ஜெயம் ரவி, நடிகைகள் த்ரிஷா, நவ்யா நாயர், கவிஞர் பா.விஜய் உட்பட 60 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது.

14052007 : முத்தம் தொடர்பாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.

17052007 : போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகை மோனிகா பேடிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது.

18052007 : வீட்டின் முன் சிலர் டீக்கடை நடத்தி இடையூறு செய்வதாக நடிகை ஷோபனா சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தார்.

21052007 : சிவாஜி படத்தில் ஸ்ரேயாவின் கவர்ச்சி நடன காட்சியையும் விவேக்கின் இரட்டை அர்த்த வசன காட்சியையும் சென்சார் போர்டு அதிகாரிகள் கட் செய்தனர்.

22052007 : நடிகை ராதிகா தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். தனது தந்தை எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அப்போது முதல்வருக்கு ராதிகா அழைப்பு விடுத்தார்.

28052007 : ரஜினி நடித்த சிவாஜி படத்தின் டி.வி. உரிமை மூன்று வருடங்களுக்கு பிறகு ஒளிபரப்ப வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கலைஞர் டிவி’க்கு விற்கப்பட்டிருப்பதாக ஏவி.எம்.சரவணன் தெரிவித்தார்.

ஜுன்

0562007 : வருமான வரித்துறை சார்பில் நடிகை வெண்ணிறாடை நிர்மலா மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் விடுதலை செய்<யப்பட்டார். ஆனால் அவருக்கு அபராதமாக 4 லட்சத்து 65 ஆயிரம் விதிக்கப்பட்டது.

* சிவாஜி படத்துக்கு முழு வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

10062007 : நடிகர் ரஜினிகாந்தின் சிவாஜி பட டிக்கெட் முன்பதிவு துவங்கியது. முதல் நாளிலேயே ஒரு வாரத்திற்கான டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவாயின.

* தமிழக முதல்வர் கருணாநிதி தன் குடும்பத்தினருடன் ரஜினி நடித்த சிவாஜி படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்தார். ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள திரை<யரங்கத்தில் இந்த படம் திரையிடப்பட்டது.

13062007 : அழகிய தமிழ் மகன் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் நீக்கியது.

14062007 : ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த நடிகர் ரஜினி விமான நிலையத்தில் அளித்த பேட்டியின்போது சொன்னா அதிருதுல்ல என்று சிவாஜி பட வசனத்தை பேசி காட்டி அசத்தினார்.

15062007 : இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் உலகம் முழுவதும் ரீலிஸ் ஆனது. படத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ரஜினி கட்அவுட்டுக்கு பீர், பால் அபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். ஆந்திராவில் 350 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. மதுரையில் மட்டும் தியேட்டர் பிரச்னையால் சிவாஜியை திரையிட கோர்ட் தடை விதித்தது.

* நானும் வந்தனாவும் பதிவு திருமணம் செய்து கொண்டாலும், கணவன்மனைவியாக வாழ்ந்தது கிடையாது. இப்பிரச்னையை சட்டப்படி சந்திப்பேன் என நடிகர் ஸ்ரீகாந்த் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

* எனது மனைவி ஏற்கனவே திருமணமானவள். திருமணமான பெண்ணை ஏமாற்றி என் தலையில் கட்டி விட்டனர், என நடிகர் பிரசாந்த் தனது மனைவி கிரகலட்சுமி மீது திடுக்கிடும் புகார் தெரிவித்தார்,

19062007 : :மதுரையில் சிவாஜி சினிமாவை கூடுதல் தியேட்டர்களில் வெளியிடக் கூடாது எனக் கோரி முதன்மை சப் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

* செக்ஸ் விழிப்புணர்வு குறித்து அரசின் கருத்துகளையே நான் தெரிவித்தேன். அரசியல் கட்சிகள் மூலம் எனக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நடிகை குஷ்பூ பேசினார்.

* நீதித் துறையை விமர்சித்ததற்காக பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என நடிகை குஷ்புக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

2062007 : நடிகர் ஸ்ரீகாந்த்வந்தனா திருமண பிரச்சனையில் ஸ்ரீகாந்த், வந்தனா ஆகியோருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. ஸ்ரீகாந்த்தின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

23062007 : திருமணம் செய்ய நினைப்பவர்கள் முன்கூட்டியே நன்றாக விசாரித்து அதன்பிறகு திருமணம் செய்யுங்கள். இல்லாவிடில் எனக்கு ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படும் என்று சென்னையில் நடந்த நிழ்ச்சியில் பேசிய நடிகர் பிரசாந்த் அறிவுரை கூறினார்.

24062007 : தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக நடிகை ராதிகா சரத்குமார் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

25062007 : சந்திரமுகி திரைப்படத்தின் 804வது நாள் வெற்றி விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்று பேசிய முதல்வர் கருணாநிதி, நடிகர் ரஜினி மிகப்பெரிய வெற்றி பெற்று, புகழுடன் விளங்குவதற்கு காரணம் அவருடைய அடக்கம்தான் என்று பாராட்டினார்.

* வாழ்க்கையில் சில நேரங்களில் செவிடர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் வாழ்க்கை வீணாகி விடும், என்று சந்திரமுகி விழாவில் நடிகர் ரஜினி பேசினார்.

ஜீலை

13072007 : பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனுக்கு கலை மற்றும் கலாச்சார விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் விருது அளிக்கப்பட்டது.

26072007 : சினிமாதுறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலி<யல் கொடுமைகளை தடுக்க பாதுகாப்பு குழு அமைக்க இருப்பதாக அனைத்திந்தி<ய ஜனநா<யக மாதர் சங்கம் அறிவித்தது.

30072007 : டில்லியில் நடந்த திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது பருத்திவீரனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ப்ரியாமணிக்கும் கிடைத்தது.

ஆகஸ்ட்

02082007 : ஆந்திர தொழிலதிபரை மயக்கி வலையில் விழ வைத்து ஆபாச படம் எடுத்து ரூ.10 கோடி கேட்டு மிரட்டிய நடிகை பத்மா உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

03122007 : கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட தசாவதாரம் படத்தின் கதை தொடர்பாக நடிகர் கமலும், தயாரிப்பாளரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

08082007 : பெரியார் திரைப்பட 100வது நாள் விழா கலைவானர் அரங்கில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைப்பெற்றது.

* நடிகர் ரஜினி நடித்து வெளியாகிய சிவாஜி படத்தை டப்பிங் செய்யவும், பிற மொழிகளில் எடுக்கவும் தடை விதிக்கக் கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

10082007 : நடிகை ஜோதிகாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

13082007 : நடிகர் ஸ்ரீகாந்த்  வந்தனா இடையே சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ முடிவு எடுத்தனர்.

18082007 : செங்கல்பட்டு அருகேயுள்ள பாலூர் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியை நடிகர் சூர்யா தத்தெடுத்தார்.

22082007 : தமிழில் பெ<யர் கொண்ட கோரிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டது. தமிழ்திரைப்பட பெ<யர்களை ஆரா<ய தமிழக அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டது.

* நடிகர் சரத்குமார் அகில இந்தி<ய சமத்துவ மக்கள் கட்சியை துவங்கினார்.

24082007 : தேசிய கீதத்தை அவமதித்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

* சாதனையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை மனோரமா, கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் உட்பட 9 பேருக்கு ராஜிவ்காந்தி, மூப்பனார் நினைவு விருதுகள் வழங்கப்பட்டன.

28082007 : பைனான்சியர் மாதேஷ் வழக்கு தொடர்ந்ததையடுத்து டைரக்டர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விக்ரம், த்ரிஷா நடிக்கும் பீமா படத்தை திரையிட சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

செப்டம்பர்

04092007 : நடிகை லட்சுமியின் தாயார் நடிகை ருக்மணி தனது 84வது வயதில் காலமானார்.

06092007 : சொந்த கட்சி துவங்கி<யதைத் தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் பதவியை சரத்குமார் ராஜினாமா செய்தார்.

07092007 : பருத்திவீரன் பட வழக்கிலிருந்து நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

* நடிகர் ஸ்ரீகாந்த்  வந்தனா திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது.

10092007 : சிவாஜி திரைப்பட வெற்றிக்காக நடிகர் ரஜினிகாந்த் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.

15092007 : தமிழக முதல்வர் கருணாநிதியின் கலைஞர் டிவி ஒளிபரப்பை துவங்கி<யது.

17092007 : மோசர் ப<யர் நிறுவனம் தமிழகத்தில் ரூ.2000 கோடி செலவில் டிவிடி தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவவிருப்பதாக அறிவித்தது.

21092007 : தமிழ் எம்.ஏ திரைப்பட பாடல் உரிமையை எடுத்த நிறுவனம் வணிகப் படுத்தாததை கண்டித்து சென்னையில் போராட்டம் நடந்தது.

அக்டோபர்

02102007 : பெரியார் திரைப்படத்தை தொடர்ந்து திருப்பூர் குமரன் திரைப்படத்திற்கும் அரசு சலுகைகள் அளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

06102007 : :நடிகர் ஆர்யா நடித்த, ஓரம்போ படத்தை வெளியிட சென்னை சிவில் கோர்ட் இடைக்கால தடை விதித்தது.

16102007 : தமிழக அரசின் திரைப்பட விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார். சிறந்த நடிகருக்கான விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது.

17102007 : கதாநாயகி பத்மப்பிரியாவின் கன்னத்தில் டைரக்டர் சாமி அறைந்தால் நிறுத்தப்பட்ட மிருகம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது.

21102007 : நடிகை பூமிகா தன் காதலன் யோகா மாஸ்டர் பரத் தாகூரை திருமணம் செய்தார்.

* கலைஞர் வெள்ளித்திரை நிறுவனம் தயாரிக்கும் தாய்காவி<யம் திரைப்பட விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். திரைப்பட பாடலாசிரி<யர் பா.விஜய் இத்திரைப்படத்தில் கதாநா<யகனாக நடிக்கிறார்.

23102007 : ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் தன் எதிர்வீட்டில் நாயை சுட்டுக்கொன்றதாக சென்னை மதுரவாயல் காவல் நிலை<யத்தில் புகார் செய்<யப்பட்டது.

27102007 : எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் திரைப்படத்திற்கு தடையை நீக்கி சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் படம் ரிலீஸானது.

நவம்பர்

01112007 : தனியார் பல்கலைக்கழகங்கள் நடிகர் , நடிகைகளுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி பல்கலைக்கழக கல்வியின் கவுரவத்தை குறைத்துவிட்டார் என தமிழக உ<யர்கல்வி மன்ற துணைத்தலைவர் ராமசாமி தெரிவித்தார்.

* நடிகை ஐஸ்வர்யாராய் தன் பிறந்த தினத்தை ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலில் கொண்டாடினார்.

02112007 : நடிகர்திலகம் சிவாஜிகணேசன் மனைவி கமலாம்மாள் சென்னையில் காலமானார்.

03112007 : பாலிவுட் நடிகை மோனிகாபேடி மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது.

* சிவாஜிகணேசன் மனைவி கமலாம்மாள் உடல் தகனம் நடந்தது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.

07122007 : தசாவதாரம் கதை குறித்த உதவி இயக்குனரின் புகாரை போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தாம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது.

09112007 : திரைப்படத்துறையை வளர்க்க தங்கர்பச்சனின் 9 ரூபாய் நோட்டு திரைப்படம் தமிழகம் முழுவதும் காலை 11 மணி காட்சி இலவசமாக திரையிடப்பட்டது.

12112007 : நடிகர் பிரபுதேவாவின் தம்பியும், நடிகருமான நாகேந்திர பிரசாத்துக்கும், மைசூரை சேர்ந்த ஹேமலதாவுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

14122007 : சென்னை வளசரவாக்கம் ஒயிட் அவுசில் நடந்த அரசாங்கர் பட சூட்டிங்கின்போது தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

15112007 : காமெடி நடிகர் பாண்டு மகன் பிரபுவுக்கும் பிரி<யதர்ஷினிக்கும் கோவையில் திருமணம் நடந்தது.

17112007 : நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் திருப்பதியில் சாமி கும்பிட்டார்.

19112007 : ஆஸ்திரேலி<ய பட விழாவில் தமிழக படத்துக்கு முதல் பரிசு.

21112007 : நடிகர் ஜீவா சுப்ரியா திருமணம் டில்லியில் நடந்தது.

* நடிகை ஆர்த்தி அகர்வால், அவரது உறவினர் உஜ்வல் குமார் திருமணம் ஐதராபாத்தில் நடந்தது.

23112007 : திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நடிகர் அர்ஜூன், குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். மனைவியுடன் மாலை மாற்றி தோஷ நிவர்த்தி செய்தார்.

* நடிகர் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி, நடிகர் மாதவனுடன் புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

28112007 : வல்லமை தாராயே பட பூஜையின்போது இந்து தெய்வங்களை அவமதித்த நடிகை குஷ்பு மீது குற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணியினர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

டிசம்பர்

01122007 : நடிகர் ஜீவா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. முதல்வர் கருணாநிதி நேரில் சென்று வாழ்த்தினார்.

05122007 : ஆபாசமாக படத்தை வெளியிட்டதாக மேக்ஸிம் பத்திரிகைக்கு எதிராக நடிகை குஷ்பு அளித்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.

06122007 : விவாகரத்து தொடர்பாக நடிகை காவேரியும், கேமராமேன் வைத்தியும் இரண்டாவது கட்டப் பேச்சு வார்த்தை நடத்த சென்னையில் உள்ள தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தில் ஆஜராகினர்.

* கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததற்கான 18 ஆவணங்களை நடிகர் பிரசாந்த் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

12122007 : ரஜினியின் 58வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. முதல்வர் கருணாநிதி தொலைபேசி மூலம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

14122007 : ரஜினிகாந்த் நடித்து, 1980களில் சக்கை போடு போட்ட பில்லா படத்தின் ரீமேக் அஜித் நடிப்பில் வெளியானது. ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாரா முதன் முறையாக நீச்சல் உடையில் நடித்து அசத்தினார்.

ஐந்தாவது சென்னை உலகத் திரைப்பட விழா சென்னையில் துவங்கியது. இதில் 42 நாடுகளை சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட்டன.

17122007 : நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலட்சுமியிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது முதல் கணவர் நாராயணன் வேணுபிரசாத் தாக்கல் செய்த மனு விசாரணை, பிப்ரவரி 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

20122007 : நேரம் கிடைத்து, கால்ஷீட் ஒத்து வந்தால் தமிழ் படங்களில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என்று சென்னை வந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்தார்.

21122007 : கோலாலம்பூரில் தமிழ் சினிமா 75 என்ற பெயரில் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சி நடந்தது.

23122007 : சிங்கப்பூரில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.

Posted in 2007, Cinema, Dinamalar, Films, Flashback, Gossips, Incidents, Kisukisu, Movies, people, Stars | Leave a Comment »

Gossips: ADMK Internal Politics – Sasikala Natarajan vs Ilavarasi

Posted by Snapjudge மேல் திசெம்பர் 16, 2007

ஜெ., அதிரடி… நடராஜன் அதிர்ச்சி…

நடராஜன் ஆதரவாளர்களாக இருந்துவரும் அ.தி.மு.க.,வினர் மீது சில தினங் களாக கத்தி பாய்ந்து வருகிறது. கரூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சமீபத்தில் நீக்கப்பட்டனர். அதை தொடர்ந்து திருச்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நுõற் றாண்டு விழாவில் நடராஜனுடன் கலந்து கொண்ட அ.தி.மு.க.,வினர் 12 பேர் நீக்கப்பட்டனர்.

நடராஜனின் நிழலாக இருக்கும் சினிமா பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் நீக்கப்பட் டுள்ளனர். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும் “நம்பர் 2′ என்றழைக்கப்படும் சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் இடத்தை அவரது அண்ணி இளவரசி கைப்பற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

நடராஜனுக்கு அ.தி.மு.க.,வில் மறைமுகமாக செல்வாக்கு இருந்து வருவதால் அவரைப் பிடித்து கட்சியில் முக்கிய பதவிகளை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க.,வினர் அவருடன் தொடர்பு வைத்து வருகின்றனர். அவர் மூலம் பதவிகள் வாங்கியவர்களும் உண்டு. அந்த வகையில் தொடர்பு வைத்தவர்கள் தற்போது நீக்கப்பட்டு வருவதால் அ.தி.மு.க.,வினர் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்

. ராஜன் செல்லப்பா மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கே நடராஜனும் ஒரு காரணமாக இருந்தார் என்று அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். நடராஜன், மதுரையில் நடைபயணம் சென்றபோது அவருக்கு ராஜன் செல்லப்பா முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதன் எதிரொலியாக நடராஜன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக ஒருதரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால், தற்போது அவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நீக்கப்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வினர் செய்வதறியாது திகைக்கின்றனர்.

“அவருடன் தொடர்பு வைக்காததால் சிலரது பதவி காலியாகிறது. தொடர்பு வைத்ததால் சிலரது பதவி காலியாகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை’ என்று அ.தி.மு.க.,வினர் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியில் ஏற்பட்டுவரும் அதிரடி மாற்றங்களால் நடராஜன் தனது ஆதரவாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். அதே சமயம் மிகவும் நெருக்கமானவர்களிடம் தொலைபேசி மூலம் பேசி தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Posted in ADMK, AIADMK, Elavarasi, Gossips, Ilavarasi, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Natarajan, Sasikala | Leave a Comment »