Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Generation’ Category

Pension will exceed the Salaries – Government Job retirees pension income

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007

ஊதியத்தை மிஞ்சும் ஓய்வூதியம்

புதுதில்லி, டிச. 9: அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது.

2006-07 நிதியாண்டில் 39,074 கோடி ரூபாயை ஓய்வூதியமாக வழங்கியுள்ளது மத்திய அரசு.

இதே நிதியாண்டில் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு 40,047 கோடி ரூபாய் ஊதியம் வழங்கியுள்ளது மத்திய அரசு.

இதேநிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் ஊதியத் தொகையை விட ஓய்வூதியத்தொகை பலமடங்கு அதிகரித்து விடும் என்று கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தொகை ஆண்டுக்கு 5.47 சதவீதமாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஓய்வூதியத்தொகை ஆண்டுக்கு 16.20 சதவீதமாக அதிகரித்து வருகிறது.

இந்தியர்களின் ஆயுள்காலம் அதிகரிப்பு, ஓய்வு வயதை அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் ஓய்வூதியத்துக்கான செலவு அதிகரித்து கொண்டே செல்வதாக கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2001 புள்ளி விவரப்படி மத்திய அரசு நிறுவனங்களில் 38 லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றினர். இந்த எண்ணிக்கை 1995-ல் 39 லட்சத்து 82 ஆயிரமாக மட்டுமே உயர்ந்தது.

ஆனால் 1999-2000 நிதியாண்டில் 38 லட்சத்து 3 ஆயிரமாக இருந்த ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை, 2006-07-ல் 45 லட்சத்து 5 ஆயிரமாக அதிகரித்தது.

இந்நிலையில், ஓய்வூதிய செலவைக் குறைப்பது குறித்து ஆராய 6-வது ஊதிய கமிஷன் சிறப்புக் குழுவை நியமித்துள்ளது.

இக்குழு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தனது பரிந்துரைகளை சமர்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Posted in 401(k), 58, 65, Babyboomers, Budget, Economy, employee, Employment, Factor, family, Finance, Forecasting, Generation, Govt, Impact, Income, Inflation, Jobs, Monetary, Money, Multiply, pension, Poor, Projection, Reduction, Retirement, Rich, Rupees, safety nest, Salary, Savings | Leave a Comment »

Electricity Distribution and Power Generation in Tamil Nadu – Energy Crisis and its Impacts

Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2007

கண்ணாமூச்சி ஆடும் மின்சாரம்

எஸ். ஜெய்சங்கர்

உலகமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு, வெளிநாடுகளுக்கு நமது சந்தையைத் திறந்துவிட்டாகிவிட்டது. வெளிநாட்டு முதலீடுகள் ஏராளமாகக் குவிகின்றன. தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொருளாதார ரீதியில் நமது நாடு 9 சதவீத முன்னேற்றத்தை எட்டியுள்ளது என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் நம் நாட்டு வணிகர்கள் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதில், அனைத்து வசதிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்ட இந்திய நிறுவனங்கள் மட்டுமே உற்பத்திச் செலவைக் குறைத்து, உலகச் சந்தையில் காலூன்ற முடிகிறது.

சிறு, குறு நிறுவனங்களின் இன்றைய நிலையோ பரிதாபமாக உள்ளது. தொழிலை மிகுந்த லாபகரமாக நடத்தவும் முடியாமல், அதை விட்டு விலகவும் முடியாமல், புலி வாலைப் பிடித்த கதையாகிவிட்டது. இதில் தொழிலை நசுக்க, முன்னறிவிப்பற்ற மின்தடை எனும் இம்சை வேறு இவர்களை வாட்டத் தொடங்கிவிட்டது.

மின்சாரத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொள்ளும் இந்த சிறு, குறு தொழிற்சாலைகள், தினசரி பல முறை ஏற்படும் மின்வெட்டால் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டுள்ளன.

வேலையே நடக்காதபோது, தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியாமல் தாற்காலிக விடுமுறைகளும் அறிவித்துள்ளன. மிகப்பெரிய தொழில் துறை நிறுவனங்களாக இருந்தாலும், ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி, உற்பத்திச் செலவை அதிகரிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறு, நடுத்தர தொழிற்சாலைகளின் தொகுப்புகள் கொண்ட தொழிற்பேட்டை பகுதிகள், நகர்ப்பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மின்தடையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இவை அமைந்திருப்பது கிராமப் பகுதிகளிலா? நகரப் பகுதிகளிலா? என்பது நிச்சயம் அரசுக்குத் தெரியாமல் இருக்காது.

தமிழகத்தின் மின்தேவை தினசரி 8,500 மெகாவாட். இதுபோக, வெளிமாநிலத்துக்கு 500 மெகாவாட் மின்சாரத்தை விற்பனை செய்து வந்துள்ளது தமிழகம். ஆனால், இன்றைய நிலையில் மின் உற்பத்தி குறைந்து போனதால், வெளி மாநிலத்துக்கு விற்பனை செய்யப்பட்ட மின்சாரம் நிறுத்தப்பட்டு, தமிழகத்துக்கு 7,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தினசரி வழங்கப்படுகிறது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தினசரி 1,500 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துபோய்விட்டது. காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என விளக்கம் அளிக்கிறது தமிழக அரசு.

உண்மையில், தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், தனியார் காற்றாலைகள், தனியார் தொழிற்சாலைகளில் இருந்து 10,500 மெகாவாட் மின்சாரத்தை தினசரி உற்பத்தி செய்ய முடியும். ஆனால், 7,500 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தியாகிறது. எங்கு தவறு நடக்கிறது என்பது அரசுக்குத் தெரியும்.

இதனால், மாநகராட்சிப் பகுதிகளான சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மின்தடை ஏற்படுகிறது.

கிராமப்புறங்களில் மின் தடை ஏற்பட்டால், சிறிது நேரம் வீட்டுக்கு வெளியே காற்றாட இருக்க முடியும். தீப்பெட்டிகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியது போன்ற குடியிருப்புகளில் வசிக்கும் நகர்ப்புற மக்கள், மின்தடையால் தங்களுக்கு ஏற்படும் “புழுக்கத்தை’ தீர்க்க எங்கு செல்வது? ஆனால், நகரில் மின்தடையே இல்லை என்கிறார் மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி.

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் செயல்படும் துணை மின் நிலையங்களில், தினசரி எத்தனை முறை, எவ்வளவு நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது என்ற விவரங்கள் நிச்சயம் அரசுக்குத் தெரிந்திருந்தும், “தமிழக நகரப் பகுதிகளில் மின்தடை இல்லை, கிராமப்பகுதிகளில் மட்டுமே மின்தடை’ எனும் பதிலைக் கூறியிருக்கிறது அரசு.

அரசின் கூற்றுப்படியே கிராமப் பகுதிகளில் மட்டும் மின்தடை என்றாலும், அங்கும் பாதிப்புகள் அதிகம் உள்ளன. இலவச மின்சாரம், மானிய விலையில் மின் மோட்டார் தந்த அரசு, அதை இயக்கத் தேவையான மின்சாரத்தைச் சரியாகத் தருவதில்லை. ஆற்றுப் பாசனம் அற்ற பகுதிகளில் கிணற்றுப் பாசனம் ஒன்றே வழி. இந்த விளை நிலங்களில் மோட்டார்களை இயக்க முடியாமல், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

கிராமப் பகுதிகளை ஒட்டிய ஆற்றுப் படுகைகளில் இருந்து, பெரிய மின் மோட்டார்கள் மூலம் நகருக்குக் கொண்டு வரப்படவேண்டிய குடிநீர் விநியோகமும் தடைப்படுகிறது.

தொடர்ந்து 24 மணி நேரமும் மோட்டார் இயங்கினாலே, நகர்ப்புற குடிநீர்த் தேவையைத் தீர்க்க முடியாத நிலையில், இந்த மின் துண்டிப்பால் 13 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டிய அவலநிலை. இது அரசுக்குப் பொதுமக்களிடையே அவப்பெயரைத் தேடித் தருகிறது.

இந்நிலை ஓரிரு நாள்களில் சரியாகும் எனத் தொடர்ந்து இரு மாதங்களுக்கும் மேலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.

சென்னை, மேட்டூர், குந்தா, தூத்துக்குடி, உடன்குடி ஆகிய இடங்களில் புதிய மின்னுற்பத்தி நிலையங்களை அமைத்து, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் தமிழகத்தின் எதிர்காலப் பற்றாக்குறையைத் தீர்க்கலாம்.

மக்கள் படும் துயரங்களைச் சுட்டிக்காட்டும்போது, அதை ஏற்றுத் தீர்வு காணும் மனோதிடம் அரசுக்கு தேவை. முன்னறிவிப்பற்ற மின்தடை பிரச்னைக்கு தற்போதைய தேவை உடனடித் தீர்வு மட்டுமே. அரசின் மறுப்பறிக்கையும் விளக்கமும் அல்ல.

————————————————————————————————————
மின்வெட்டா, மின்னல் வெட்டா?

தொழில்துறையிலும் விவசாயத்திலும் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் தொடர்ந்து விளங்குவதற்குக் காரணமே மின்சாரத்துறை என்றால் அது மிகையாகாது. அந்தத் துறைக்கு அமைச்சராக இருக்கும் ஆர்க்காடு என். வீராசாமி பழுத்த அரசியல்வாதி, நிர்வாகத்தின் நெளிவு சுளிவுகள் தெரிந்தவர்; எல்லாவற்றுக்கும் மேலாக முதலமைச்சரின் நிழல் போன்றவர், முதல்வரின் மனம் அறிந்து செயல்படுபவர்.

இத்தனை பீடிகைகள் போடுவதற்குக் காரணமே, சமீப மாதங்களாக எல்லா மாவட்டங்களிலும் விவசாயிகள் முதல் தொழிலதிபர்கள் வரை வேதனையோடு பேசிவரும் அறிவிக்கப்படாத மின்சார வெட்டைக் குறைக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லையே என்ற கவலைதான்.

தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தித் திறன் 10,098 மெகாவாட். மின்தேவையின் உச்சபட்ச அளவு 8,800 மெகாவாட். ஆனால் இப்போது உற்பத்தி ஆவதோ 7,500 மெகாவாட்தான். எனவே அன்றாடம் சுமார் 2 மணி முதல் 8 மணி நேரம்வரை மின்சாரத் தடை ஏற்படுகிறது. சராசரியாக 4 மணி நேரத்துக்கு மின்சாரம் தடைபடுகிறது.

காற்றாலைகளிலிருந்து கிடைத்துவந்த மின்சாரம் குறைந்துவிட்டதால் 1,500 மெகா வாட் அளவுக்கு மின்சாரவரத்து குறைந்துவிட்டதாகவும், மத்திய தொகுப்பிலிருந்து இப்போது 1,000 மெகாவாட் கிடைக்காததாலும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக மாநில அரசு தெரிவிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் மின்சாரத் தேவை 4,000 மெகாவாட் அதிகரித்த நிலையில், மின்னுற்பத்தியோ 531 மெகாவாட் அளவுக்கு மட்டுமே அதிகரித்திருப்பதாக அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவிக்கிறார்.

புதிய தொழில்பிரிவுகளால் ஆண்டுக்கு 600 முதல் 700 மெகாவாட் வரை மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது என்று இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

மின்சார பற்றாக்குறையால் ஜவுளி ஆலைகளால் முழுத் திறனில் இயங்க முடியாமல் போனதாகவும் இதனால் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள காற்றாலைகளில் கிடைக்கும் மின்சாரத்தைத் தொகுப்பாகப் பெற, மாநில மின்சார வாரியம் நல்ல கட்டமைப்பு வசதிகளைச் செய்துகொண்டால் 3,686 மெகாவாட் மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று அத்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அறிவிக்கப்படாத மின்சார வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கோயமுத்தூர் மாவட்டமும் பின்னலாடைத் தொழில் கேந்திரமான திருப்பூரும்தான். கோயமுத்தூர் மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உயர் அழுத்த மின் இணைப்புகளாகும். கோவை மாவட்டத்தில் மட்டும் மின்நுகர்வு அளவு 1,200 மெகாவாட் ஆகும். இது மாநிலத்தின் மின் உற்பத்தியில் 13.5%.

இப்போதைய பிரச்னை மின்சார வெட்டு மட்டும் அல்ல, மின்வெட்டு எப்போது ஏற்படும் என்பது நிச்சயமாகத் தெரியாததும் ஆகும். இதனால் ஆலைகளில் உற்பத்தியைத் திட்டமிட முடிவதில்லை.

ஒரு நாளைக்கு 7,000 கிலோ நூல் இழை உற்பத்தி செய்த ஒரு ஜவுளி ஆலையில் இப்போது 600 கிலோ முதல் 1,000 கிலோ வரைதான் அதிகபட்சம் உற்பத்தி செய்ய முடிகிறது. 500-க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகளில் 40% அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு நூற்பாலை சங்கத் தலைவர் ஏ.பி. அப்பாகுட்டி வேதனையோடு தெரிவிக்கிறார்.

மின்வெட்டு காரணமாக டீசல் பம்புகள், ஜெனரேட்டர்கள் விற்பனை 100% அதிகரித்திருப்பது இந்த பிரச்னையின் பரிணாமத்தை இன்னொரு கோணத்தில் உணர்த்துகிறது.

அமைச்சரின் அறிக்கைகளும் புள்ளிவிவரங்களும் அந்தநேரச் சமாதானத்துக்கு வேண்டுமானால் பயன்படலாமே தவிர, பிரச்னையை தீர்க்க உதவாது. நடுநிலைமையுடன் ஆலோசனை கூறக்கூடிய நிபுணரை நியமித்து, உரிய பரிந்துரையைப் பெற்று, அதை மின்னல் வேகத்தில் செயல்படுத்துவது ஒன்றே தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

—————————————————————————————————————————————————

தமிழகத்தை வாட்டும் மின்வெட்டு!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

பொன்விழா கொண்டாடிய தமிழ்நாடு மின்சார வாரியம், ஒரு காலத்தில் தேவைக்கு அதிகமாக மின்உற்பத்தி செய்து பிற மாநிலங்களுக்கு விற்று லாபம் ஈட்டியது. இன்றைக்குத் தமிழகம் தனக்குத் தேவையான மின்சாரம் கிடைக்காமல் அல்லல்பட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மின் வெட்டாலேயே மக்களுக்கு ஷாக் அடிக்கிறது. விவசாயிகள் மட்டுமல்ல, ஆலைத் தொழிலாளிகள், தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் எனச் சகலரும் பாதிக்கப்படுகின்ற நிலை. விவசாயிகள் எந்த நேரம் மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு தங்களுடைய பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச தூக்கமும் உணவும் இல்லாமல் பம்ப்செட் அருகே காத்துக் கிடக்கின்ற நிலைமை. இரவு நேரங்களில் மின்சாரம் வந்தாலும் பாம்புகளுக்கும், நட்டுவாக்களிகளுக்கும் பயப்படாமல் கடும் இருட்டிலும் பாடுபடுகின்ற நிலையில் இன்றைக்கு விவசாயிகள் இருக்கின்றனர். வியர்வை சிந்தி வியர்வையை அறுவடை செய்யும் விவசாயிக்குப் பலமுனைத் தாக்குதல்கள். விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு விலை இல்லை. உரத்தட்டுப்பாடு. இதற்குமேல் மின்வெட்டு. தலைநகர் சென்னையில் மின்சாரம் கிடைத்தாலும் மற்ற பகுதிகளில் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இதற்கு மேல் அரசுப் பரிவாரங்கள் பகலில் ஆலையை இயக்காமல் இரவில் ஆலைப் பணிகள் நடக்கட்டும், வாரத்திற்கு ஒரு நாள் ஆலையின் இயந்திரச் சக்தியை நிறுத்திவிடுங்கள் என்று கூறும் ஆலோசனைகள். இதெல்லாம் ஆலைகளில் பணியாற்றிவரும் தொழிலாளிகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் பெரும் கேடு ஏற்படுத்தும்.

தமிழகத்தில் 10,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 55 சதவீதம் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும், 28 சதவீதம் மத்திய அரசு உற்பத்தி நிலையங்களில் இருந்தும், 11 சதவீதம் தனியார் மூலமும், 3.5 சதவீதம் வெளிமாநிலங்களில் இருந்தும் கிடைக்கிறது. காற்றாலையின் மூலம் 3,000 மெகா வாட் தற்பொழுது கிடைக்கிறது.

இப்படி இருக்க, மின்வெட்டு, மின் தட்டுப்பாடு ஏன் என்று தெரியவில்லை. அதற்குக் காரணம் தமிழக அரசின் மெத்தனப் போக்கே ஆகும். பல ஆண்டுகளாக மின் உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் சரிசெய்யப்படவில்லை. பழுதுபட்ட இயந்திரங்களைத் திரும்பத் திரும்ப ஓட்டுவது, இயந்திரங்கள் பராமரிப்பில் சரியான கட்டுப்பாடு இல்லாதது, இந்தப் பணியில் நிரப்பப்பட வேண்டிய பொறியாளர்கள், பணியாளர்கள் நிரப்பப்படாமல் இருப்பது, இதற்குமேல் பல்துறை பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்துக்குப் படையெடுத்ததனால் மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தகவல், தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்குத் தடையின்றி மின்சாரம் வழங்க பல ஒப்பந்தங்கள் தொடர்ந்து கையொப்பமிடப்படுகின்றன. அதற்கேற்ப உரிய திட்டங்கள் இல்லை. 120 தொழிற்பூங்காக்களுக்கு மட்டுமே 700 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட குளறுபடிகளால்தான் இந்தத் தட்டுப்பாடு.

சில ஆண்டுகளுக்கு முன்னால் 0.4 சதவீத மின் உற்பத்தி தனியாரிடம் இருந்தது. தற்பொழுது தனியார் உற்பத்தி 28.18 சதவீதமாக உயர்ந்து விட்டதால் இதற்கான கட்டணங்களும் பன்மடங்கு உயர்ந்துவிட்டன. ஆண்டுக்கு ஒருமுறை மின்சாரத்தை வாங்க 12,016 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்து தமிழக அரசு கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளது. விவசாயம் மட்டும் இல்லாமல் நெசவுத் தொழிலும், விசைத்தறிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டம் போன்ற பகுதிகளில் சாதாரண நெசவாளிகள் தத்தளிக்கின்றனர். திருப்பூர் பின்னல் ஆடைதொழில்கூட ஓரளவுதான் ஜெனரேட்டர்களைக் கொண்டு இயங்க முடிகிறது. விசைத்தறி நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மின்தடையால் உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கொங்கு மண்டலத்திலுள்ள ஆலைகள், நூற்பாலைகளில் எட்டு மணிநேரம் மின்வெட்டு உள்ளது என்று செய்திகள் வருகின்றன. திருப்பூரில் மட்டும் மின்வெட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். மின்சாரப் பாதிப்பால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. தாமிரபரணியில் இருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் செயல்படாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல் இழந்து உள்ளன.

1991-இல் மின்துறையில் தனியார் மற்றும் அன்னிய மூலதனம் 25 சதவீதத்தை எட்டியது. அதில் ஐந்து மாநிலங்கள் குறிப்பிடும் அளவுக்கு ஆர்வத்தைச் செலுத்தின. மகாராஷ்டிரம் முதலிடமும் தமிழகமும் கர்நாடகமும் அதற்கு அடுத்த இடங்களையும் பிடித்தன. தமிழ்நாட்டில் மட்டும் இதற்காக முடக்கப்பட்ட மூலதனத்தின் பங்கு 8 சதவீதம்.

1995இல் ஒரிசா மாநிலத்திலும் 1998இல் ஆந்திர மாநிலத்திலும் மின்சாரக் கட்டுப்பாடு குழுமங்கள் அமைக்கப்பட்டன. இவை மின் விநியோகத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து அவற்றைத் தனியாருக்கு விற்கின்ற திட்டங்கள் தொடங்கப்பட்டன. இது தொடர்பான தனியார் அன்னிய மூலதனம் போன்றவற்றில் மின்துறை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஒழுங்குபடுத்தும் சட்டத்தை 2006 மார்ச் மாதம் மத்திய அரசின் மின் அமைச்சகம் கொண்டு வந்தது. தமிழகம் இன்று சுமார் 17 கோடி குறைந்த அழுத்த மின் பயனீட்டாளர்களையும், சுமார் 6,000 உயர் அழுத்த மின் பயனீட்டாளர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 45 லட்சத்து 22 ஆயிரம் பேர் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழ்நாடு மின் வாரியத்தின் மொத்தத்தில் 58 சதவிகிதத்தை வழங்குபவர்களாக இருக்கிறார்கள். மகாராஷ்டிரத்தை அடுத்து மின்வாரியத்தில் பணியாற்றுகிறவர்கள் இங்குதான் அதிகம். 94 ஆயிரம் பேர் மின்வாரியத்தில் பணியாற்றுகிறார்கள்.

2003 – 2004 மின் கட்டுப்பாடுக் கழகத் தகவலின்படி யூனிட் விற்பனை கீழ்க்கண்டவாறு உள்ளது.

புனல் மின்சாரம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 0.59, தமிழ்நாடு மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.09, மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இருந்து அவசரத்திற்கு வாங்கிய மின்சாரம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.17, மத்திய அரசின் அனல் மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.22, பி.பி.என். பவர் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.56, தனியார் காற்றாலை யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.70, அணுமின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.71, கரும்புச் சக்கை யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.87, தமிழ்நாடு மின்வாரியத்தின் எரிவாயு மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 3.09, தனியார் அனல்மின் நிலையம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 3.99, தனியார் எரிவாயு மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 4.65

2003 – 2004இல் வசூல் கட்டணம் ரூ. 10,545 கோடி. மானியமும் ஏனைய வருமானங்களும் மொத்தத்தில் ரூ. 477 கோடி. அந்த ஆண்டின் இழப்புத் தொகை ரூ. 2,743 கோடி. இதனால் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரைகள் எழுந்தன. அந்த ஆண்டின் இழப்பை ரூ. 663 கோடியாகக் குறைக்க வேண்டும் என்பதற்காக மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் மின்வாரியம் மின்சாரம் வாங்குவதற்கு 49 சதவீதமும், எரிபொருளுக்கு 24 சதவீதமும், வட்டிக்கு 7 சதவீதமும், பராமரிப்புக்கு 12 சதவீதமும் ஏனைய மற்ற செலவுகள் 8 சதவீதமுமாக மின்வாரியத்தில் செலவுக் கணக்கு இருந்தது.

தனியார்மயத்தில் 2007 வரை ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்டு இன்றைக்கு பல தனியார்கள் மின் உற்பத்தித் துறையில் தங்கள் கால்களைப் பதிக்க அரசிடம் அணுகி உள்ளனர். 2003 – 2004 கணக்கின்படி ஒரு யூனிட்டுக்கு தனியாரிடம் இருந்து பெற்ற மின்சாரத்தின் விலை, தமிழ்நாடு மின் வாரியத்துக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் தயாரித்த மின்சாரத்தின் விலையைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்காக இருந்தது. இப்படித் தேவையில்லாமல் அதிகப்படியான செலவுகளை அரசு தனது தவறான அணுகுமுறையால் செய்ய வேண்டியுள்ளது. 1999-வது ஆண்டின்படி 2,564 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய தனியாருக்கு அனுமதி கொடுக்கலாம் என்ற நிலை வந்தால் தமிழக மின்வாரியம் கடனாளியாகி, திவாலாகி கதவைச் சாத்த வேண்டிய நிலைக்குத்தான் தள்ளப்படும் என்ற பரிந்துரையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும் அரசு மெத்தனமாக இருந்துள்ளது. 2001-ஆம் ஆண்டில் தனியார் மின்நிலையங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 2.25-க்கு மேல் தரமுடியாது என்று அரசு அறிவித்ததற்கு தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் கடுமையாகப் போராடின.

இவ்வாறு பல எச்சரிக்கைகள், அறிக்கைகள் மூலம் தனியார் மயமாக்கப்படுவது சரியில்லை என்று தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்பட்டும் பாராமுகமாக இருப்பது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு மின்சாரக் கட்டுப்பாடுக் கழகத்தை எதிர்த்து இரண்டு வழக்குகள் தொடுத்தார். தனியார் நிறுவனங்களான பன்னாட்டு நிறுவனத்துக்கு நிதியமைச்சரின் துணைவியார் நளினி சிதம்பரம் வாதாடினார். இறுதியில் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மின்சார விலையைக் குறைக்க வேண்டும் என்பதே தீர்ப்பாக அமைந்தது.

தனியார் புகுந்ததால் பல சிக்கல்கள் ஏற்பட்டன. நெய்வேலியை ‘ஞ’ யூனிட் நடத்தி வரும் எஸ்.டி.சி.எம்.எஸ்., சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏசியா பிரௌன் பொவேரி, அமெரிக்காவின் சி.எம்.எஸ். போன்ற பன்னாட்டு மின் உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபத்துக்கு விற்கத் திட்டமிட்டாலும் முடியாமல் 2007-இல் ஒரு சில நிறுவனங்களை அபுதாபி நேஷனல் எனர்ஜி என்ற அமைப்புக்கு விற்றுவிட்டன. மகாராஷ்டிரத்தில் என்ரான் போன்று கொள்ளை அடிக்க முடியவில்லை என்ற விரக்தியில் ஒரு சில நிறுவனங்கள் விட்டுவிட்டு ஓடிவிட்டன. இப்படிப் பல நிறுவனங்கள் கால் வைத்ததும், மின்துறையில் நமக்கு ஏற்பட்ட பாதகங்களாக அமைந்துவிட்டன.

உத்தேசிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டதுதான் இந்தப் பற்றாக்குறைக்கு ஒரு காரணம்.

அத்திட்டங்கள்:

1. தூத்துக்குடியின் தமிழ்நாடு மின்சார வாரியமும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து 1,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க திட்டங்கள் இருந்தபொழுதும் அதை நிறைவேற்றக்கூடிய வகையில் விரைவான செயல்பாடுகள் இல்லை.

2. ஜெயங்கொண்டான் தமிழ்நாடு மின்வாரியம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இணைந்து 500 மெகா வாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

3. குந்தாவில் 500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய அளவில் திட்டங்கள் இருந்தபொழுதும் தமிழ்நாடு மின்சார வாரியம் அதைக் கவனிக்காமல் இருக்கிறது.

4. நெல்லை மாவட்டம் உடன்குடியில் 1,500 மெகா வாட் உற்பத்தி செய்யும் நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டுகிறது.

5. வடசென்னை மின்உற்பத்தி நிலையத்தில் இருந்து மேலும் 600 மெகா வாட் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் இருந்தும் அதற்கான செயல்பாடுகள் இல்லை.

6. இதேபோன்று மேட்டூரிலும் 500 மெகா வாட் மின் உற்பத்தி அதிகரிக்கக்கூடிய சூழல் இருந்தும் தமிழ்நாடு அரசு பாராமுகமாக இருக்கிறது.

7. கோயம்பேடில் அன்றாடம் கிடைக்கின்ற காய்கறிக் கழிவில் இருந்து மரபுசாரா எரிசக்தி மூலம் 550 மெகா வாட் கிடைக்கக்கூடிய அளவுக்கு மின்உற்பத்தி செய்யலாம் என்ற திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.

8. தமிழகத்தில் உள்ள காற்றாலைகளுக்குத் தேவையான காற்று வீசவில்லை என்ற காரணத்தால் உரிய உற்பத்தி இல்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டாலும், இத்துறை தனியார் வசம் இருப்பதால் அதற்குத் தேவையான வசதிகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு செய்யாததால் காற்றாலைகள் மின்உற்பத்தி பின்தங்கியுள்ளன.

9. சூரியவெப்பம், கடல் நீர், நிலக்கடலைத் தோல் போன்றவற்றில் இருந்து மின் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளை அறிய வேண்டும்.

காற்றாலைகள் மூலம் 3626 மெகாவாட், சர்க்கரை ஆலைக் கழிவுகள் மூலம் 213 மெகாவாட், தாவரங்கள் மூலம் (பயோமாஸ்) 99 மெகாவாட், குப்பைகள் மூலம் 4.25 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று திட்டமிடப்பட்டது.

மரக்காணத்தில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நீர்மின் குழுமம் மூலம் காவிரி புனல்மின் திட்டம், ஓகேனக்கல் புனல்மின் திட்டம் அமைக்கவும் இதன்மூலம் 390 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. காவிரிப் பிரச்னையைப் போல் இதிலும் கர்நாடகம் மூக்கை நுழைக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூரில் அமைக்க இருந்த மின் உற்பத்தித் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட்டுவிட்டது.

பல அணைகள் நிரம்பி இருந்தபொழுதும் மின்உற்பத்தி எப்படி முடங்கியது என்று தெரியவில்லை. அதைச் சரிசெய்ய அரசு கவனம் செலுத்தவில்லை.

தொலைநோக்குப் பார்வை இல்லாமல் மின்துறை சீரழிவை நோக்கிச் செல்கிறது.

Posted in Agriculture, Arcot, Commerce, Consumption, Distribution, DMK, Economy, Electricity, energy, Exports, Farmers, Farming, Finance, Fuels, Generation, Generators, Govt, Impact, Impacts, Industry, Inefficiency, Inverters, Kalainjar, Karunanidhi, Megawatts, MK, Motors, MW, NLC, Power, Power cut, Power Cuts, Powercut, Powercuts, Production, SEZ, Stalin, Sufficiency, Veerasamy, Water | 1 Comment »

Nuclear Power – India’s Right

Posted by Snapjudge மேல் மார்ச் 20, 2007

அணுசக்தி: இந்தியாவின் உரிமை

அணு உலைகளில் எரிபொருள்கள் எரிந்து தீர்ந்த பின்னர் அவற்றை எடுத்துச் சுத்தப்படுத்தி உபயோகமான கதிரியக்கப் பொருள்களைத் தனியே பிரித்து எடுப்பதற்கான உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை அணுசக்தி கமிஷனின் தலைவர் அனில் ககோட்கர் எடுத்துக் கூறியுள்ளார்.

ஆக்கப்பணிகளுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதில் இந்தியாவுடன் அமெரிக்கா ஒத்துழைப்பது தொடர்பாகக் கடந்த ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தில் இந்தியா குறித்த சில நிபந்தனைகள் உள்ளன. இது அமெரிக்கச் சட்டம் என்பதால் அவை இந்தியாவைக் கட்டுப்படுத்தாது. இந்தியாவுக்கு அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்திக்கான அணு உலைகளை விற்கலாம் என அனுமதி வழங்குவதே அச் சட்டத்தின் பிரதான நோக்கமாகும். மற்றபடி அணுசக்தி ஒத்துழைப்பு பற்றி “123′ ஒப்பந்தம் இந்தியா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டாக வேண்டும்.

இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகுதான் அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் இந்தியாவுக்கு மின் உற்பத்திக்கான அணு உலைகளை விற்க ஆரம்பிக்கும். நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு இவ்வித அணுமின் நிலையங்கள் நிறையத் தேவைப்படுகின்றன. இந்த அணு உலைகள் மட்டுமன்றி இவற்றில் பயன்படுத்துவதற்கான யுரேனிய எரிபொருளும் வெளிநாடுகளிடமிருந்து பெறப்படும்.

எந்த ஓர் அணுஉலையானாலும் அதில் யுரேனிய எரிபொருள் எரிந்து தீர்ந்த பின்னர் மிஞ்சும் யுரேனியத்திலிருந்து புளுட்டோனியம் என்ற பொருளை மிக நுட்பமான முறையில் தனியே பிரித்தெடுக்க முடியும். அந்தப் புளுட்டோனியத்தைப் பயன்படுத்தி அணுகுண்டு தயாரிக்க முடியும். ஆகவேதான் மின்உற்பத்திக்கான அணுஉலைகளை விற்கும்போது இவ்விதம் பிரித்தெடுக்கிற முறையைக் கைக்கொள்ளக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்படும். அதற்கான கண்காணிப்பு முறைகளும் அமல்படுத்தப்படும். அணு ஆயுதங்களைப் பெற்றிராத நாடுகள் மீது இத்தகைய நிபந்தனைகளை விதிப்பதில் அர்த்தமிருக்கிறது.

ஆனால் அமெரிக்காவில் சில தரப்பினர் இந்தியா மீதும் அவ்வித நிபந்தனைகளை விதிக்க விரும்புகின்றனர். ஏற்கெனவே அணுகுண்டுகளைத் தயாரித்து வெற்றிகரமாக அவற்றை வெடித்துச் சோதித்துள்ள இந்தியா மீது இவ்வித நிபந்தனைகளை விதிக்க முற்படுவது வீண் எரிச்சலை உண்டாக்குவதாகவே இருக்கும். தவிர ஏற்கெனவே அணுஆயுத வல்லரசு நாடாகிவிட்ட இந்தியா மீது இவ்வித நிபந்தனைகளை விதிப்பது பாரபட்சமான செயலாக இருக்கும். ஏனெனில் இப்போது அணுகுண்டுகளைப் பெற்றுள்ள வல்லரசு நாடுகள் மீது இவ்விதத் தடை கிடையாது.

இந்தியா இனிமேல் அணுகுண்டுகளை வெடித்துச் சோதிக்கலாகாது என்றும் இந்தியா மீது தடை விதிக்க ஒரு முயற்சி உள்ளது. இதுவும் பாரபட்சமானதே. ஏனெனில் வல்லரசு நாடுகள் மீது இவ்விதத் தடை கிடையாது. 1998-ல் நிலத்துக்கடியில் ஒரேசமயத்தில் பல அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்த இந்தியா இப்படிப்பட்ட சோதனையை மேற்கொண்டு நடத்த உத்தேசம் கிடையாது என்று தெரிவித்தது. இந்தியா தானாக இப்படி சுயகட்டுப்பாட்டை விதித்துக் கொள்வது என்பது வேறு; வல்லரசு நாடுகள் இந்தியா மீது இவ்விதத் தடையை விதிப்பது என்பது வேறு.

இவையெல்லாம் ஒன்றைக் காட்டுகின்றன. இந்தியா முழு அளவில் அணு ஆயுத வல்லரசு ஆகிவிட்டது என்பது உறுதியாக்கப்பட்டுவிட்டது. அப்படியும்கூட வல்லரசு நாடுகளுக்கு இந்தியா பெற்றுவிட்ட அந்த அந்தஸ்தை ஏற்க மனம் இல்லை.

===================================================

தெரியுமா..?: அச்சுறுத்தும் உண்மை

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் மூன்றாவது தூண் எனக் குறிப்பிடப்படும் அம்சம், “ஆக்கப் பணிகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தும் உரிமை’. அணு ஆயுதத்தைப் பெற்றிராத உறுப்பு நாடுகள், நடைமுறையில் இந்த உரிமையைக் கூட அனுபவிக்க முடியாத நிலையில்தான் உள்ளன.

இந்த அம்சத்தைப் பொருத்தவரையில், அணு உலைகளில் பயன்படுத்துவதற்கு யுரேனியத்தைச் செறிவூட்ட உரிமை உண்டு என பொருள் கொள்ளப்படுகிறது. ஆக்கப் பணிகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்துவது இறையாண்மை பெற்ற அரசுகளின் பிரிக்க முடியாத உரிமை என ஒப்பந்தம் வரையறுக்கும் அதே சமயம், உறுப்பு நாடுகள் செறிவூட்டல் நடவடிக்கையில் ஈடுபடுவது, ஒப்பந்தத்தின் முதலிரண்டு அம்சங்களோடு முரண்படுகிறது. அணு உலையில் எரிபொருளாக பயன்படுத்துவதற்கு யுரேனியத்தைச் செறிவூட்டும் அரசுகளின் திறனும், அணு ஆயுதத் திட்டங்களுக்கு யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனும் ஒப்பந்தத்தில் தெளிவாக வேறுபடுத்தப்படவில்லை. இது ஒப்பந்தத்தின் பலவீனமான அம்சம்.

ஆக்கப் பணிகளுக்கு பயன்படுத்த, ஒன்று, யுரேனியத்தை உறுப்பு நாடுகள் தாமே செறிவூட்ட வேண்டும் அல்லது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேசச் சந்தையில் வாங்கியாக வேண்டும். ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்த யுரேனியத்தைச் செறிவூட்டுவதாக வடகொரியா முன்னர் கூறியது. ஆனால் அதைப் பயன்படுத்துவதற்கான அணு உலை அதனிடம் இல்லை என்பதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இப்போது ஈரானின் முறை. இடையில் லிபியா ரகசிய அணு ஆயுதத் தயாரிப்புத் திட்டத்தைத் தொடங்கி பின்னர் டிசம்பர் 2003-ல் கைவிட்டது.

இதுவரை வெளியாகி உள்ள விவரங்களின்படி 13 நாடுகள் யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனைப் பெற்றுள்ளன. அணு ஆயுதங்களைப் பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நாடுகள் 8. இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ளது. எனினும் அதை உறுதிப்படுத்த மறுத்து வருகிறது. இந்த தகவல்கள் ஒருபுறமிருக்க, சர்வதேச அணுசக்தி ஏஜென்சி தலைவர் முகமது எல்பரேடி கூற்றுப்படி விருப்பப்பட்டால் 40 நாடுகள் அணுகுண்டுகளைத் தயாரிக்க முடியும். உண்மையிலேயே உலகை அச்சுறுத்தும் உண்மை இது.

=========================================================================
அணுமின் நிலைய பாதுகாப்பை கண்டிப்புடன் கடைப்பிடித்தால் இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை: ஆஸ்திரேலியா அறிவிப்பு

மெல்போர்ன், ஏப். 3: தன் நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களை சர்வதேச அணுவிசை ஏஜென்சியின் கண்காணிப்புக்கு உள்படுத்த இந்தியா அனுமதிக்க வேண்டும்; அணுசக்தி நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு ஒப்புக்கொண்டால், இந்திய அணுமின் நிலையங்களுக்குத் தேவையான யுரேனிய எரிபொருளை ஆஸ்திரேலியா சப்ளை செய்யத் தயாராக இருக்கிறது என்று அந் நாட்டுப் பிரதமர் ஜான் ஹோவர்ட் கூறியுள்ளார்.

இந்தியா ~ அமெரிக்கா இடையிலான, ஆக்கபூர்வ அணுசக்தித் திட்ட ஒத்துழைப்பு உடன்பாட்டை அங்கீகரிக்கவும் ஆஸ்திரேலியா தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இத் தகவலை “தி ஏஜ்’ என்னும் ஆஸ்திரேலிய நாளிதழ் தெரிவித்துள்ளது.

அணுசக்தித் தொழில்நுட்பம் மற்றும் அணுமின் நிலைய எரிபொருள் சப்ளை செய்யும் நாடுகள் அமைப்பில் ஆஸ்திரேலியாவும் இடம்பெற்றுள்ளது.

இந்தியா ~ அமெரிக்கா இடையிலான உடன்பாட்டை அந்த அமைப்பு ஏற்றுக்கொண்டால், அதில் இடம்பெற்றுள்ள நாடுகள், அணுமின் நிலையத்துக்குத் தேவையான சாதனங்கள், யுரேனிய எரிபொருள் ஆகியவற்றை இந்தியாவுக்கு சப்ளை செய்ய முன்வரும்.

எனினும், சர்வதேச அளவிலான, அணுசக்தித் தொழில்நுட்ப பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்பிடி) கையெழுத்திடும் நாடுகளுக்குத்தான் அணுமின் நிலைய எரிபொருளை ஆஸ்திரேலியா சப்ளை செய்யலாம் என்று அந்த நாட்டுச் சட்டம் கூறுகிறது. ஆனால், என்பிடி-யில் இந்தியா கையெழுத்திடவில்லை.

இந்தியா ~ அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு ஆதரவு திரட்டும் நோக்கத்தில், இந்திய அரசின் சிறப்புத் தூதராக சியாம் சரண், ஆஸ்திரேலியா வந்துள்ளார். அவர், கான்பெர்ரா நகரில் பிரதமர் ஜான் ஹோவர்டை சந்திக்கவுள்ளார். இந்திய அணுமின் நிலையத்துக்கு யுரேனிய எரிபொருளை ஆஸ்திரேலியா வழங்க வேண்டும் என்றும் அவர் ஹோவர்டிடம் கோரிக்கை விடுப்பார்.

இந் நிலையில், மேற்கண்ட நிபந்தனையை முன்வைத்துள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர்.

அதே நேரத்தில், “”இந்தியாவைப் பொறுப்புணர்வுள்ள நாடாக நாங்கள் கருதுகிறோம். அதனுடனான எங்களது உறவு வளர்ந்துவருகிறது. இந்தியா விஷயத்தில் வேறுபல அம்சங்களையும் நாங்கள் கருத்தில் கொள்வோம்” என்றும் அவர் கூறியிருக்கிறார். எனவே, இந்தியாவைப் பொருத்தவரை, “என்பிடி’ உடன்பாட்டில் கையெழுத்திட்டிருக்க வேண்டும் என்னும் நிபந்தனையை ஆஸ்திரேலியா தளர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
=========================================================================
இந்தியாவும், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தமும்

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, நேட்டோ நாடுகளுக்கிடையே ரகசிய அணு ஆயுதப் பகிர்வு ஒப்பந்தம் இருந்தது. இதன்படி, அமெரிக்கா பிற நேட்டோ நாடுகளில் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. போர் தொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் ஒழிய, அணு ஆயுதங்களின் மீதான கட்டுப்பாடு நேட்டோ நாடுகளுக்கு மாற்றித் தரப்படாது என அமெரிக்கா கூறி வருகிறது என்றாலும், இது ஒப்பந்தத்தை மீறுகிற செயலாகும்.

அமெரிக்காவுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் இடையிலான இந்த ரகசிய ஒப்பந்தம் பற்றி சோவியத் யூனியன் போன்ற சில நாடுகளுக்கு தெரியும் என்றாலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பல நாடுகளுக்கு இந்த விவரம் தெரியாது.

2005-ம் ஆண்டு கணக்குப்படி, பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அணுகுண்டுகளை வழங்கியுள்ளது. இதுவும் ஒப்பந்தத்தை மீறுகிற செயலாகும்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் பற்றி மறுபரிசீலனை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை அமெரிக்கா தனது நோக்கங்களைச் சாதித்துக் கொள்ளத்தான் பயன்படுத்துகிறது. சான்றாக, மே 2005-ல் நடைபெற்ற 7-வது பரிசீலனை மாநாட்டில் அமெரிக்காவுக்கும், பிற நாடுகளுக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிற நாடுகள், அதிகாரபூர்வ அணு ஆயுத நாடுகள் ஆயுதக் குறைப்பு செய்வதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தின. ஆனால் அமெரிக்காவோ ஈரானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கவனப்படுத்துவதில் முனைப்பு காட்டியது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளின் முக்கியமான வாதம் இதுதான்: ஒப்பந்தமானது அணு ஆயுதங்களைப் பெற்றுள்ள மிகச்சில நாடுகள், அணு ஆயுதங்கள் இல்லாத பல நாடுகள் என இருபிரிவாக உலகைப் பிரிக்கிறது. அதாவது 1967-க்கு முன்னர் அணு ஆயுதச் சோதனை நடத்திய நாடுகள் எல்லாம் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்படுகிறது. எந்த அறநெறிகளின் அடிப்படையிலும் இது சரி அல்ல. இந்த அடிப்படையில்தான் இந்தியா அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது.

இந்தியா அணு ஆயுதங்களைப் பெற்றுள்ளபோதும், எக்காரணம் கொண்டும் முதலில் அதைப் பயன்படுத்துவதில்லை என தானே முன்வந்து உறுதி வழங்கியுள்ளது.

=========================================================================
இந்தியாவுக்கு யுரேனியம்

இந்தியாவுக்கு யுரேனியம் அளிக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவார்டு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். இந்தியாவில் அணுமின் நிலையங்கள் மூலம் மின்சார உற்பத்தியைப் பெருக்குவதற்கு இந்த யுரேனியம் உதவியாக இருக்கும்.

இந்தியா 1998-ல் நிலத்துக்கடியில் அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்தபோது இந்தியாவை மிகக் கடுமையாகக் கண்டித்த ஒருசில நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும். அப்போதிலிருந்து இந்தியாவுடன் அணுசக்தி விஷயத்தில் எந்த ஒத்துழைப்பும் கூடாது என்று ஆஸ்திரேலியா சில ஆண்டுகாலம் கூறி வந்தது. எனினும் அண்மைக்காலமாக ஆஸ்திரேலியாவின் போக்கில் பெரிய மாறுதல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே கடந்த சில ஆண்டுகளாக உறவுகள் நெருக்கமாகியுள்ளது ஒரு காரணமாகும். இதல்லாமல் இந்தியா – அமெரிக்கா இடையில் ஏற்பட்ட அணுசக்தி உடன்பாடு அதைவிட முக்கியக் காரணமாகும்.

உலகில் மொத்த யுரேனிய உற்பத்தியில் பாதி கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் உற்பத்தியாகிறது. உலகிலேயே மிகப்பெரிய யுரேனிய சுரங்கம் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது. அங்கு யுரேனிய உற்பத்தியை இரட்டிப்பாக்குவது பற்றி ஆஸ்திரேலிய அரசு ஆராய்ந்து வருகிறது. மேலைநாடுகளில் புதிதாக அணுமின் நிலையங்களை அமைப்பது நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் இந்தியா, சீனா, தென்கொரியா போன்ற நாடுகளில்தான் புதிதுபுதிதாக அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அண்மைக்காலமாக உலகில் யுரேனியத்தின் விலை ஏறுமுகமாக உள்ள நிலையில் யுரேனிய ஏற்றுமதி மூலம் கூடுதல் வருமானம் பெற ஆஸ்திரேலியா விரும்புகிறது. இப் பின்னணியில்தான் ஆஸ்திரேலியாவிடமிருந்து யுரேனியம் பெறுவது தொடர்பாக இந்தியாவின் சிறப்புத் தூதர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பேச்சு நடத்தியுள்ளார்.

வருகிற ஆண்டுகளில் நாட்டில் பெருகி வரும் மின்சாரத் தேவையை அணுமின் நிலையங்கள் மூலமே பூர்த்தி செய்ய முடியும் என இந்திய அரசு முடிவு செய்து, அதற்கான வழியில் ஈடுபட்டுள்ளது. அணுசக்தி தொடர்பான இந்திய – அமெரிக்க உடன்பாடு அதற்கான முதல்கட்டமாகும். அமெரிக்காவுடன் மேலும் விரிவான உடன்பாடு கையெழுத்தாக உள்ளது. இதுதான் பச்சைக்கொடி காட்டுகிற உடன்பாடாக இருக்கும். அதாவது உலகில் யுரேனியத்தை உற்பத்தி செய்கின்ற நாடுகளும் அணு உலைகளை உற்பத்தி செய்கின்ற முன்னேறிய நாடுகளும் தங்களுக்குள்ளாக கூட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. பரஸ்பரம் விவாதித்து முடிவு எடுத்தாலொழிய எந்த நாட்டுக்கும் இவற்றை விற்கலாகாது என்பது இவற்றின் இடையிலான உடன்பாடாகும்.

அணுமின் நிலையங்களில் யுரேனியத்தைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்ற அதேநேரத்தில் சிறப்பு முறைகள் மூலம் அணுகுண்டுகளையும் செய்ய முடியும் என்பதே இதற்குக் காரணம். ஆகவேதான் இதுவிஷயத்தில் பல கட்டுப்பாடுகள்.

இந்தியாவுக்குத் தேவையான அணுஉலைகளையும் அத்துடன் யுரேனியத்தையும் தங்கு தடையின்றி பெறுவதற்கு இன்னும் பல நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டியாக வேண்டும். ஆனால் இச் சிக்கல்கள் பெரிய தடையாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஏனெனில் இந்தியாவுக்கு யுரேனியத்தை அல்லது அணு உலைகளை விற்பதில் நாடுகளிடையே போட்டாபோட்டி மூளும்போது இவை இயல்பாக அகன்றுவிட வாய்ப்பு உள்ளது.

இந்தியாவுக்கு அணுஉலைகளை விற்க பிரான்ஸ் ஏற்கெனவே தயாராக உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பல பெரிய நிறுவனங்களும் தீவிர அக்கறை காட்டி வருகின்றன. தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் அணுமின் நிலையங்களை அமைத்துக் கொடுக்கும் ரஷியாவும் மேலும் பல அணு உலைகளை விற்கத் தயாராக உள்ளது. ரஷியாவில் ஓரளவுக்கு யுரேனியம் கிடைக்கிறது.

இந்தியாவில் நமது தேவையைப் பூர்த்தி செய்கின்ற அளவுக்கு யுரேனியம் கிடைப்பதில்லை என்பதால்தான் இவ்வளவு பாடு.

=========================================================================

Posted in America, Atomic, Australia, Bombs, defence, Electricity, Enrichment, Generation, Industry, infrastructure, Lignite, Melbourne, Military, NPT, Nuclear, Op-Ed, Plants, Power, Proliferation, Security, Superpower, Treaty, UN, Uranium, USA | 1 Comment »

Russia can help India meet its N-power needs – Koodankulam Electricity Generation

Posted by Snapjudge மேல் ஜனவரி 22, 2007

கூடங்குளம் விரிவாக்கம்

தமிழகத்தில் மின் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் விரிவாக்கப்படலாம் என்ற தகவல் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ரஷிய அதிபர் புதின் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரும்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம்.

கூடங்குளத்தில் இப்போது தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இரு அணுமின் நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான பணிகள் முடிவடையும் கட்டத்தில் உள்ளன. முதல் யூனிட்டின் அணு உலைப் பணிகள் இந்த ஆண்டு கடைசியில் நிறைவடைந்து, அடுத்த ஆண்டு மார்ச் வாக்கில் மின் உற்பத்தியைத் தொடங்கும். இரண்டாவது யூனிட்டும் அடுத்த ஆண்டில் மின் உற்பத்தியில் ஈடுபடலாம்.

கூடங்குளம் திட்டம் 2002-ம் ஆண்டில் தொடங்கப்பட்டபோதே அங்கு மொத்தம் எட்டு யூனிட்டுகளை நிறுவுவதற்கான வகையில் வசதிகள் அமைக்கப்படலாயின. நாட்டில் அணுசக்தி மூலம் மின் உற்பத்தியைப் பெருக்குவதில் முனைப்புக் காட்டி வரும் மத்திய அரசு, கூடங்குளத்தில் மேலும் நான்கு மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ விரும்பியது. அந்த வகையில்தான் இப்போது உடன்பாடு கையெழுத்தாக இருக்கிறது. புதிதாக நான்கு யூனிட்டுகள் நிறுவப்படும்போது தமிழகம் நல்ல பலன் பெறும். முதல் இரு யூனிட்டுகளும் உற்பத்தி செய்ய இருக்கும் 2,000 மெகாவாட் மின்சாரத்தில் தமிழகத்தின் பங்காக 1,200 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். மேலும் நான்கு யூனிட்டுகள் நிறுவப்படும்போது தமிழகத்துக்கு கூடுதலாக மின்சாரம் கிடைக்கும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் இந்தியாவின் அணு மின்துறையில் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைப்பதாகக் கூறலாம். இந்தியாவில் ஏற்கெனவே 16 அணுமின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் நான்கு நீங்கலாக மீதி அனைத்தும் இந்தியா சொந்தமாக உருவாக்கி, அமைத்துக் கொண்டவை. ஆனாலும், இவற்றில் பெரும்பாலானவை தலா 220 மெகாவாட் அளவுக்குத்தான் மின்சாரத்தை உற்பத்தி செய்பவை. கூடங்குளம் அணுமின் நிலையம் ஏற்கெனவே கூறியதுபோல, தலா 1000 மெகாவாட் திறன் கொண்டது. தவிர, இவை செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்தும்.

கூடங்குளத்தில் சோவியத் யூனியனின் உதவியுடன் அணுமின் நிலையங்களை நிறுவ, 1988-ம் ஆண்டிலேயே உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் ரஷிய அதிபர் கொர்பச்சேவும் கையெழுத்திட்டனர். ஆனால் சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்ததால் இத் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. 1999-ல் இத் திட்டம் புத்துயிர் பெற்று 2002-ல் பணிகள் தொடங்கின.

நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில் அணுமின் நிலையங்களின் பங்கு இப்போது மூன்று சதவீதமாக, அதாவது சுமார் 4 ஆயிரம் மெகாவாட் அளவில் உள்ளது. இதை 2030-ம் ஆண்டுவாக்கில் 40 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் அணுசக்தி தொடர்பாகச் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் இதற்கு வழிவகுக்கலாம். இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அணுஉலைகளையும் அணுசக்தி எரிபொருள்களையும் அளிப்பது தொடர்பான பல கட்டுப்பாடுகள் அகற்றப்படலாம். அக் கட்டத்தில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க முன்வரும். ஏற்கெனவே பல வெளிநாட்டு நிறுவனங்கள் இவ் விஷயத்தில் அக்கறை காட்டி வருகின்றன. இது ஒருபுறமிருக்க, அணுமின் நிலையங்களை அமைக்க இந்தியாவின் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்படலாம் என்பதற்கான குறிப்புகள் உள்ளன. இந்தியாவும் ரஷியாவும் கூட்டாகப் புதிய வகை அணு உலைகளை வடிவமைத்துத் தயாரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

—————————————————————————————-

ரூ. 2,176 கோடியில் புதிய அனல் மின் நிலையம்

சென்னை, ஜூலை 27: சென்னை அருகே ரூ. 2,176 கோடியில் 500 மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா எண்ணூர் கிராமத்தில் உள்ள வடசென்னை அனல்மின் நிலைய வளாகத்தில் இந்த புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து வடசென்னை அனல்மின் நிலையத்தின் தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) என். சங்கமேஸ்வரன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

வடசென்னை அனல்மின் நிலையம் (நிலை-1) தற்போது தலா 210 மெகாவாட் திறனுள்ள 3 பிரிவுகள் மூலம் ஆண்டுக்கு 1.5 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்து வருகிறது. இதன்மூலம் சென்னையின் 60 சதவீத மின் தேவை நிறைவேற்றப்படுகிறது.

தற்போது இதே வளாகத்தில் 500 மெகாவாட் திறனுள்ள புதிய அனல்மின் நிலையம் (நிலை-2) ரூ. 2,716 கோடியில் 180 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது.

தமிழக மின் வாரியத்தின் சார்பில் இத் திட்டத்துக்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. வரும் ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் இந்த ஒப்பந்தப்புள்ளிகள் முடிவு செய்யப்படும்.

இதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். நவீனத் தொழில்நுட்ப அடிப்படையில் சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் இந்த அனல் மின்நிலையம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அமைக்கப்படும்.

தேசிய மின் கழகம் இதற்கான இடத்தை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கியுள்ளது.

புதிய அனல்மின் நிலைய வளாகத்தில் நிலக்கரி தூசுக்களை சுற்றுச் சூழல் மாசுபடாத வகையில் நீரில் படியும் முறையில் அகற்ற தனிப் பிரிவு அமைக்கப்படும்.

வரும் 2011-ல் மின் உற்பத்தி தொடக்கம்: இப் பணிகள் நிறைவடைந்த பின் வரும் 2011-ம் ஆண்டில் இருந்து புதிய அனல் மின் நிலையம் தனது மின் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 1.2 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இந்த அனல்மின் நிலையம் மூலம் சுமார் 1,500 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.

தற்போது அனல் மின் நிலையங்களில் ஒரு யூனிட் மின் உற்பத்திக்கு தலா ரூ. 2.30 செலவிடப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மூலம் சூழல் பாதிப்பு மிகக் குறைவாக உள்ளது என்றார் சங்கமேஸ்வரன்.

—————————————————————————————

5 புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டம்

சென்னை, ஜூலை 27: தமிழகத்தில் மேலும் 5 புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகம் தற்போது 10,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. இதில் வடசென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி ஆகிய அனல்மின் நிலையங்கள் மூலம் 2,970 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

சென்னை பேசின்பிரிட்ஜ், ராமநாதபுரம் அருகே வழுத்தூர், மன்னார்குடி அருகே கோயில்களப்பால், குத்தாலம் ஆகிய இடங்களில் எரிவாயு மின் நிலையங்கள் மற்றும் நீர் மின் நிலையங்கள், கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந் நிலையில் மேட்டூரில் கூடுதலாக 500 மெகாவாட் மின் நிலையமும், தூத்துக்குடியில் 1,000 மெகாவாட் மின் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எண்ணூர் மின் நிலையத்தின் மின் உற்பத்தித் திறன் 300 மெகாவாட் அளவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து எண்ணூரில் கூடுதலாக 500 மெகாவாட் மின் நிலையம் கட்டப்பட உள்ளது.

இதே போல நெல்லை அருகே உடன்குடியில் 800 மெகாவாட் திறனுள்ள 2 அனல்மின் நிலையங்கள் அமைக்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளன.

இதுதவிர குந்தாவில் 500 மெகாவாட் திறனுள்ள நீர் மின் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

Posted in 1000 MW, Atomic Power, Capacity, Chennai, Electricity, Energedar, Ennore, Ennur, Environment, Generation, Gorbachev, India, Jobs, Kanyakumari, Koodankulam, Madras, Megawatt, Mikhail Gorbachev, MW, Nuclear, PCIL, Plans, Pollution, Ponneri, Power, Power Corporation of India Ltd, Power Plants, Putin, Rajeev Gandhi, Rajiv Gandhi, Russia, Thiruvalloor, Thiruvallur, Vladimir Putin, VVER-1000, Warming | Leave a Comment »

Rs 16,000-crore thermal power plant at Cheyur by March next

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

செய்யூர் அருகே 2000 ஏக்கர் பரப்பில் ரூ.16000 கோடியில் அனல் மின் நிலையம்

காஞ்சிபுரம், நவ. 2: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 2000 ஏக்கர் பரப்பில், 4000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையத்துக்கு வரும் 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்படும் என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.

செய்யூரில் அவர் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது:

மறைந்த மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் காலத்தில் இத்திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டது. பின்னர் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இத்திட்டம் குறித்து மத்திய அரசுக்கு எடுத்துரைத்தோம். தற்போதைய மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மீண்டும் இத்திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

செய்யூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய பகுதியில் இதற்காக ஏற்கெனவே 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அனல் மின் நிலையம் அமைக்கப்படும்.

தேசிய அனல் மின் கழகம்

தேசிய அனல் மின் கழகம் இத்திட்டத்தை ரூ.16 ஆயிரம் கோடியில் செயல்படுத்துகிறது. இத்திட்டத்துக்கு எந்த வரியும் விதிக்கப்படாது. நாட்டிலேயே முதன் முறையாக மெகா அனல் மின் நிலையம் இம்முறையில் அமைக்கப்படுகிறது.

வரும் 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் இத்திட்டத்துக்கு மத்திய மின்சார அமைச்சர் ஷிண்டே அடிக்கல் நாட்டுகிறார். இரண்டரை ஆண்டுகளில் திட்டம் முடிவடையும்.

இதன் மூலம் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் அவர்களுக்கு தேவையான குடியிருப்புகள், அலுவலகங்கள் நெய்வேலியை போன்றே ஏற்படுத்தப்படும். இத்திட்டம் முடிந்தால் செய்யூர் பகுதி மிகுந்த வளர்ச்சி பெறும் என்றார்.

Posted in Arcot N Veerasamy, Cheiyoor, Cheyur, Electricity, Generation, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Mohan Kumaramangalam, National Thermal Power Corporation, Neyveli, NTPC, Power plant, Seiyoor, Shinde, thermal power plant, TNEB | Leave a Comment »

Triconamalee Lignite Factory – Moothur or Samboor

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006

திருகோணமலையில் நிலக்கரி அனல் மின் நிலையம்

நெய்வேலியில் இருக்கும் நிலக்கரி அனல்மின் நிலையம்
இந்தியாவின் ஒத்துழைப்புடன் நிலக்கரி அனல்மின் நிலையம்

இலங்கை திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்குப் பிரதேசத்தின் சம்பூர் பகுதியில் இலங்கையின் இரண்டாவது நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக எரிபொருள் மின்சக்தி அமைச்சு கூறியுள்ளது.

இந்த திட்டம் இந்தியாவின் உதவியுடன் செயற்படுத்தபடுவதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை மின்சக்தி அமைச்சர் ஜான் சேனவிரத்ன அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, இத்திட்டம் தொடர்பாக தாங்கள் பல மாத காலமாக ஆராய்ந்து வருவதாகவும், இது தொடர்பாக இந்தியாவில் இருந்து ஒரு குழு இலங்கை வந்ததாகவும், இலங்கையில் இருந்து ஒரு குழு இந்தியா சென்றதாகவும், அவர்கள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடத்துவதாக கூறினார்.

சமீபத்தில் இந்தப் பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில், சம்பூர்ப் பகுதியில் திட்டம் செயற்படுத்தபடுவது குறித்து அமைச்சரிடம் கேட்கப்பட்ட போது, தற்போது அந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதிகள் இல்லை என்றும், தாங்கள் இது தொடர்பாக கடற்படைத் தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், அதன் போது அங்கு பயங்கரவாதிகள் இல்லை என்று அவர்கள் தெரிவித்ததாகவும், இதனால் இத்திட்டம் அங்கு செயற்படுத்தபடலாம் என கூறினார்.

இது தொடர்பாகவும், நிலக்கரி அனல் மின் நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் தொடர்பான கேள்விகளுக்கும் அமைச்சர் வழங்கிய பதில்களை நேயர்கள் தமிழோசையில் கேட்கலாம்.

Posted in Electricity, Factory, Generation, India, Lignite, LTTE, Moothoor, Moothur, Power, Samboor, Sambur, Sri lanka, Tamil, Thirukonamalai, Triconamalee | Leave a Comment »

Literarature for the Web Generation – Hyper Stories

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

இலக்கியத்தின் இன்னொரு அவதாரம்!   விஷ¨வல் கிராபிக்ஸ்!

ஆர்.வெங்கடேஷ்

எழுத்தாளர்கள் என்றாலே கன்னத்தில் கைவைத்துக் கொண்டு மற்றொரு கையில் பேனாவைப் பிடித்தபடி போஸ் கொடுப்பதைதான் தொடர்ந்து பார்த்து  வந்திருக்கிறோம். நோபல் பரிசை எப்படியும் தமிழுக்குத் தட்டிக்கொண்டு வந்துவிட வேண்டும் என்ற தாங்கொண்ணாத ஆர்வம் பலரின் கனவு விழிகளில் தென்படும். தாங்கள் ஏதோ பெரிதாக படைத்துவிட்ட திருப்தியில், எல்லாவற்றைப் பற்றியும் கருத்துச் சொல்லிக்கொண்டு ‘கருத்து கந்தசாமி’களாகப் பலர் உலா வருவதையும் பார்த்திருக்கிறோம்.

அவர்கள் என்னதான் தலைகீழாக நின்று எழுதினாலும், அதைக் கறுப்பு வெள்ளையில்தான் வடிக்க வேண்டும். பேனாவால் பேப்பரில் எழுதி, அதைப் பத்திரிகை அல்லது புத்தகம் என்ற மற்றொரு பேப்பரில் அச்சடிக்க வேண்டும். கொஞ்சம் வண்ணம், கொஞ்சம் ஓவியங்கள் மட்டும் எக்ஸ்ட்ராவாக அவர்களின் படைப்புக்கு மெருகூட்டும், அவ்வளவுதான்.

பொதுவாக மரபான படைப்புகளில் ‘விஷ¨வல் எலிமென்ட்’ என்பதற்கு இடமில்லை. படைப்புகளில் ‘விஷ¨வல் எலிமென்ட்’ என்பது முழுவதும் எழுத்துக் குள்ளேயே அடங்கியிருப்பது. அதைத்தான் உத்தி, ஸ்டைல், அணி, நயம் என்று வேறுவேறு வார்த்தைகளில் சொல்கிறோம். ஒருவகையில் இது பெரிய தடை. படைப்பாளிகளின் கற்பனை என்பது முப்பரிமாண வடிவம் கொண்டது. ஆனால், ஒற்றைப் பரிமாணத்தில் அதை வடிக்கிறார்கள். எப்படி வர்ணித்தாலும் தேர்ந்த எழுத்தாளராலேயே ஒரு ரோஜாவின் மணத்தை எழுத்தில் கொண்டுவருவது கஷ்டம். பக்கம் பக்கமாக எழுதினாலும், ஒரு அறையை முழுமையாக கண்முன் கொண்டுவந்துவிட முடியுமா?

இதை உடைக்கப் பல எழுத்தாளர்கள் முயற்சித்திருக்கிறார்கள். உதாரணமாக, சுஜாதா அவரது ஆரம்பகால கதைகளில்,

&&ற

&&&&&&ங்

&&&&&&&&&கி

&&&&&&&&&&&&னா

&&&&&&&&&&&&&&&&&&ன்

என்று எழுதுவார்.

Ôஆனந்த விகடன்Õ இதழில் வெளியான ‘மடிசார் மாமி’ தொடரில், ஸ்ரீவித்யாவின் புகைப்படத்தோடு, ஓவியம் இரண்டறக் கலந்திருக்கும். இதெல்லாம் ஒருவகையில் எழுத்தின் மெத்தனத்தை உடைக்கும் முயற்சிகள். ஆனால், பெரும் பாய்ச்சல் ஏற்பட்டது, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளரத் தொடங்கிய பின்தான்.

இன்று ‘டிஜிட்டல் இலக்கியம்’ (ஞிவீரீவீtணீறீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ) என்று ஒரு தனிவகை எழுத்துப் பாணியே உருவாகியிருக்கிறது.

ஒருகாலத்தில் எழுத்தாளர்களுக்கு நல்ல கற்பனை வளமும் தேர்ந்த அனுபவமும் நல்ல நோக்கமும் இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைய நிலை அப்படி இல்லை. கணினி வல்லுநர்கள் எழுத்தாளர்களாக ஆகியிருக்கிறார்கள். கிராபிக்ஸ் டிஸைனர்கள், படைப்பாளிகள் ஆகியிருக்கிறார்கள். முழுநேரமும் மென்பொருள் எழுதுபவர்கள், பகுதி நேரமாகக் கதையும் எழுதுகிறார்கள். கூடுதல் திறமையும் நவீன தொழில்நுட்ப அறிவும், அவர்களின் எழுத்திலும் தெரியத்தானே வேண்டும். தொழில்நுட்ப சாத்தியங்களை எல்லாம் இவர்கள் கதை எழுதப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

மிகவும் எளிய விஷயத்தில் இருந்து ஆரம்பிப்போம். இணையத்தில், ஒரு வலைப்பக்கத்தில் இருந்து இன்னொரு வலைப்பக்கத்துக்கு இணைப்பது என்பது, இருப்பதிலேயே மிகவும் எளிதான வேலை. இதற்கு ‘ஹைப்பர் லிங்க்’ என்று பெயர். ஒரு கதைக்குள்ளேயே ஓராயிரம் லிங்க்குகளை இதுபோல் இவர்களால் வழங்க முடியும். அந்த லிங்க் என்பது, மற்றொரு கிளைக் கதையாக வளரலாம். மற்றொரு புகைப்படமாக இருக்கலாம். அல்லது ஒரு பாடலாக இருக்கலாம். அல்லது வீடியோ காட்சியாக இருக்கலாம். அல்லது ஏதோ ஒரு பழைய ஆவணமாக இருக்கலாம்.

உதாரணமாக, நீங்கள் தென்திருப்பேரை ஸ்தலத்தைக் களமாக வைத்துக் கதை எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் வர்ணிக்க வேண்டாம். மகரநெடுங்குழைக்காதர், தாமிரவருணி, தெந்திரிப்பேரி கூட்டு என்று எல்லாவற்றையும் விஷ¨வலாகக் காட்டிவிடலாம். இனிமேல் ஒரு கதை என்பது எழுத்தில் மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்தக் கதை இன்னும் விரிவு பெற்றுக்கொண்டே போகலாம். அதேபோல், நீங்கள் ஒருவரே கதை எழுதவேண்டும் என்ற அவசியமும் இல்லை. மேலே சொன்ன உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம். மகரநெடுங்குழைக்காதர் பெருமாள் பற்றி நன்கு அறிந்த வல்லுநர் ஒருவர், அந்தச் சொல்லுக்கு ‘ஹைப்பர் லிங்க்’ செய்து தனக்குத் தெரிந்த சரித்திர, புராணத் தகவல்களையெல்லாம் எழுதலாம். ‘தெந்திரிப்பேரி கூட்டு’ செய்யத் தெரிந்த மாமியருவர், அதை ‘ஹைப்பர் லிங்க்’ செய்து சமையல் ரெசிபி வழங்கலாம். ஒரு கதைதான்… ஆனால், ஓராயிரம் பேரின் பங்களிப்போடு வளரும்!

Ôஹைப்பர்டெக்ஸ்ட் நாவல்Õ (பிஹ்ஜீமீக்ஷீtமீஜ்t ழிஷீஸ்மீறீ) என்றே இதற்குப் பெயர். ஒரே நாவலுக்குள் உள்ள பல்வேறு லிங்க்குகளை, வாசகனின் விருப்பப்படி தேர்ந்தெடுத்துப் படிப்பதின் மூலம், வாசகன் தனக்கான ஒரு கதையை உருவாக்கிக்கொள்கிறான். இந்த வரிசையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இந்த நாவலில் கிடையாது. வாசகனின் முழு சுதந்திரம்தான் முக்கியம். 1987&ல் இருந்தே இதுபோன்ற ‘ஹைப்பர் டெக்ஸ்ட் நாவல்Õ புழக்கத்தில் இருக்கிறது என்றாலும், இப்போது இதன் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

அடுத்து, கிராபிக் டிஸைனர்கள் நிறைய பேர் கவிதை எழுதுகிறார்கள். இவர்கள், கவிதை மட்டும் எழுதுவதில்லை. கவிதைக்குப் பின்னே, பொருத்தமாக ஓவியங்களை வரைந்து, சேகரித்து, தொகுத்து, லைவ்வாக ஓடவிடுகிறார்கள். கவிதையின் மூடுக்கு ஏற்ப காட்சிகள், வண்ணங்கள், தோற்றங்கள். இதை மின்கவிதை, அதாவது இ&பொயட்ரி (ணி-றிஷீமீtக்ஷீஹ்) என்றே அழைக்கிறார்கள். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, சர்வதேச டிஜிட்டல் கவிதைத் திருவிழா நடத்துகிறார்கள்.

அதேபோல், இன்ட்ராக்டிவ் பொயட்ரி (மிஸீtமீக்ஷீணீநீtவீஸ்மீ றிஷீமீtக்ஷீஹ்). மிகவும் சுவாரஸ்யமான பகுதி இது. படிக்கும் வாசகன், வெறுமனே படித்தால் மட்டும் போதாது. அவனும் அந்தக் கவிதை அனுபவத்தில் பங்குபெற வேண்டும். ஈடுபட வேண்டும். வாசகனையும் உள்ளே இழுத்துக்கொண்டு முன்னேறும் கவிதை வகை இது. இதிலேயே இரண்டு வகை இருக்கிறது. ஒரே கவிதையைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்துப் போட்டு, வாசகனின் வசதிக்கேற்ப அதை மாற்றிமாற்றி வாசித்துக்கொள்வது ஒன்று. இன்னொன்று, எண்ணற்ற சொற்களை வழங்கிவிட்டு, வாசகனையே, அச்சொற்களின் மூலம் கவிதை புனைய வைப்பது. இதில்லாமல் ‘விஷ¨வல் பொயட்ரி’ என்றொன்றும் இருக்கிறது. நம்ம ஊர் சித்திரக்கவி மாதிரியானது அது.

அடுத்தது, கிராபிக்ஸ் நாவல். பல நாவலாசிரியர்கள் இதுபோல், தங்கள் கதையை ஓவியங்களாக வரைந்து, நிறைய விஷ¨வல் எஃபெக்ட்களைச் சேர்த்து, தொடராகவே இணையத்தில் வெளியிடுகிறார்கள். உதாரணமாக, Ôஅவன் தெருவோரமாக நடந்துகொண்டிருந்தான், பின்னால் வந்த கார், சேற்றை வாரி இறைத்தது, அவன் உடையெல்லாம் நாசமானதுÕ என்று ஒரு கதையில் நீங்கள் எழுதுவீர்கள். கிராபிக்ஸ் நாவலில், அதைச் செய்தே காட்டிவிட முடியும். அதாவது, செயல்கள் அத்தனையையும் விஷ¨வல் ஆக்கிவிட முடியும். கதாபாத்திரத்தின் சிந்தனை மற்றும் பேச்சை மட்டும் நீங்கள் எழுத்தால் எழுதினால் போதும்.

க்ரைம், த்ரில்லர் நாவல்கள்தான் இதுபோன்ற கிராபிக்ஸ் நாவல்களில் எடுபடுகின்றன. சரி, குரல் இல்லாமல் டிஜிட்டல் தொழில்நுட்பமா? கவிதையானாலும் சரி, கதையானாலும் சரி… பொருத்தமான குரல்கள் பின்னணியில் மிகவும் வித்தியாசமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கதைகளை டவுன்லோடும் செய்து கொள்ளலாம். இணையத்தின் பெரிய புத்தகக் கடையான Ôஅமேசான்Õ, தன்னுடைய இணையப் பக்கத்தில் Ôஷார்ட்ஸ்Õ (ஷிலீஷீக்ஷீts) என்றொரு தனிப்பகுதியை இதற்காக வைத்திருக்கிறது. சின்னச்சின்ன கதைகளை இப்படி அவர்கள் விற்பனை செய்கிறார்கள். பணத்தைக் கட்டிவிட்டு, டவுன்லோட் செய்துகொள்ள வேண்டியதுதான். அதேபோல், சி.டி&யிலும் இவ்வகைக் கதைகள் கிடைக்கின்றன.

சரி, இவ்வளவு தூரம் சொல்கிறீர்களே, இந்தக்கதைகளை எல்லாம் படித்தால், புத்தகங்களைப் படிப்பதில் உள்ள நிறைவு கிடைக்குமா?

நியாயமான கேள்வி. படைப்பாற்றல் அப்படியேதான் இருக்கிறது. கற்பனைகள் அப்படியேதான் இருக்கின்றன. படைப்பாளியின் நோக்கமும், தரமும் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால், அவற்றை வெளிப்படுத்த, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வழிகள் பின்பற்றப்படுகின்றன. இங்கே, இலக்கியமும் தொழில்நுட்பமும் இணைந்து முற்றிலும் புதிய அனுபவத்தைக் கொடுக்கின்றன. இந்த அனுபவம், நிச்சயம் புத்தகம் படிக்கும் அனுபவத்தைவிட வேறானது!

Posted in Emerging, Generation, HTTP, Junior Vikadan.com, Literarature, New Age, R Venkatesh, Tamil, Technology, Vikatan.com | Leave a Comment »