Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Free’ Category

Staff strength in government hospitals vs secondary health centres in Tamil Nadu: Healthcare

Posted by Snapjudge மேல் ஜனவரி 6, 2008

இது என்ன விபரீதம்?

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற சேவையில் ஈடுபடுவது தொடர்பான சர்ச்சை இன்னும் முற்றுப்பெறாத நிலையில், ஒரு புதிய சர்ச்சைக்குப் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறார் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

அரசு மருத்துவமனைகளில் தேவைக்குக் குறைவான செவிலியர்கள் இருக்கும்நிலையில், அதற்குப் பரிகாரம் தேடுவதை விட்டுவிட்டு துணை சுகாதார நிலையங்களில் எட்டாயிரம் செவிலியர்களை நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது ஏன் என்பது புதிராக இருக்கிறது.

தமிழகத்தில் 1,417 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 8,683 துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துணை சுகாதார நிலையங்களில், கிராமப்புற மக்களுக்குச் சேவையாற்றுவதற்குத் தனிப்பயிற்சி பெற்ற கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சுமார் 5,000 பேருக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் நியமிக்கப்படும் இந்தக் கிராம சுகாதார செவிலியர்கள்தான், கிராமப்புறங்களில் வீடுவீடாகச் சென்று அரசின் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துபவர்கள். கிராம மக்கள் மத்தியில், குறிப்பாக, அதிகம் படிப்பறிவோ வசதியோ இல்லாத அடித்தட்டு மக்கள் மத்தியில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் தடுப்பூசி போடுதல், பிரசவம் பார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபடுபவர்கள் இவர்கள்தான். இவர்கள் செயல்படும் விதமும் செயல்படும் சூழலும் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களின் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலைமை பாராட்டும்படியாக இருக்கிறதா என்றால் இல்லை. துப்புரவுப் பணியாளர்களில் தொடங்கி மருத்துவமனைப் பணியாளர்கள், ஆய்வகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என்று இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்கள் நிறையவே இருக்கின்றன. ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு அதை ஓட்டுவதற்கு ஓட்டுநர் இல்லாத நிலைமைகூட சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளது.

இது ஒருபுறமிருக்க, அரசு மருத்துவமனைகளில் கடுமையான செவிலியர் பற்றாக்குறை நிலவுகிறது. பல இடங்களில் மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாமல் நோயாளிகள் வேதனைப்படுவது அரசு மருத்துவமனைக்குப் போய் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். பயிற்சி மருத்துவர்களைப் போன்று செவிலியர் படிப்பு முடித்தவர்களைத் தாற்காலிக ஊழியர்களாக அரசு மருத்துவமனைகளில் நியமித்து குறைந்தது இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிப்பது என்று அரசு முடிவெடுத்தால் அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

அதையெல்லாம் செய்யாத மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8,000 செவிலியர்களை ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தச் செவிலியர்கள் கிராம சுகாதார நிலைய செவிலியர்களைப்போல வீடுவீடாக, தெருத்தெருவாக, கிராமம் கிராமமாகச் சென்று பணியாற்றுவார்களா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அனுபவம் இல்லாத ஒப்பந்தப் பணியாளர்களாக செவிலியர்களை நியமிப்பதன் மூலம் கிராமப்புற அடித்தட்டு மக்களுக்குத் தரமற்ற மருத்துவ சேவையை வழங்குவதுதான் அரசின் நோக்கமா என்கிற கேள்வி எழுகிறது.

தாற்காலிகமாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அந்தச் செவிலியர்கள் மீண்டும் மருத்துவத் துறைக்கே சென்று விடுவார்கள் என்கிறார் அமைச்சர். அப்படியானால் அனுபவம் இல்லாத இந்த செவிலியர்களைக் கொண்டு கிராமப்புறங்களில் பிரசவம் பார்க்க அனுமதிப்பது என்பது ஏழை மக்களுக்கு அரசு தெரிந்தே செய்யும் துரோகம் என்று ஏன் கருதக்கூடாது?

இதுபோன்ற முன்யோசனையே இல்லாத, எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகள் மிகப்பெரிய விபரீதங்களுக்கு வழிகோலுமே தவிர, மக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்காது. சேவையைப் பற்றிக் கவலைப்படாமல் செய்யப்படும் தேவையற்ற நியமனங்கள், அரசின் செயல்பாடு பற்றி தேவையில்லாத உள்நோக்கம் கற்பிக்க வழி வகுக்கும் என்பது அமைச்சருக்கு ஏன் புரியவில்லை?

——————————————————————————————————–

ஆரம்ப சுகாதார நிலையங்களில்
1000 செவிலியர்கள் புதிதாக நியமனம்

ஜன.6-இல் முதல்வர் கலைஞர் ஆணை வழங்குகிறார்

சென்னை. ஜன. 5- தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யங்களில் புதிதாக 1000 செவி லியர்கள் நாளை (6-1-2008) நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான நியமன ஆணை களை முதல்வர் கலைஞர் அவர் கள் தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார்.
சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இதனைத் தெரிவித்ததோடு, மேலும் கூறியதாவது:
தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, தமிழ கம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம் படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறைக்குக் கூடு தல் நிதி ஒதுக்கி, வருமுன் காப் போம், கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பு ஆகிய திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கப் புதிதாக மருத்துவர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். பேறுகால மரணத்தைத் தடுக்கவும், கிராமப்புறச் சேவை யைச் சுகாதாரத் தறை மேம் படுத்தியுள்ளது.

அதன் அடிப் படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேலும் 1000 செவிலியர்கள் நியமிக்கப் பட உள்ளனர். கிராமப்புற மக்க ளுக்கு அடிப்படை மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என் பதில் முதல்வர் தீவிரமாக உள் ளதால், கிராமப்புற மருத்துவ சேவையை விரிவு படுத்தி வருகி றோம்.

6 ஆம் தேதி முதல்வர் 5 மருத் துவத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். 10 லட்சம் குழந்தை களுக்கு போலியோ சொட்டு அளிக்கும் திட்டத்தை அன்று காலை தனது இல்லத்தில் அவர் தொடங்கி வைக்கிறார்

11.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பு ஊசித் திட்டம், கிராமப்புற மருத்துவ சேவைக்கு 100 ஆம் புலன்ஸ், புதிதாக 1000 செவிலி யர்கள் நியமன ஆணைகளை வழங்குதல், 1036 ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கு ரூ 5 . 2 கோடி செலவில் கணினி மற் றும் இணையதள வசதி போன் றவற்றை தலைமைச் செயல கத்தில் காலை 10 மணிக்கு முதல்வர் வழங்குகிறார்.
ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு 660 பேரும், அரசு மருத்துவமனைகளுக்கு 340 பேரும் 98 மய்யங்களில் அவசர சிகிச்சைகளுக்காகவும் இந்தப் புதிய செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தவிர 66 சுகாதார ஆய்வாளர்களுக்கு நியமன ஆணைகளையும் வழங்குகிறார். 380 வட்டாரங் களுக்கு மொபைல் ஆம்புலன்ஸ் வழங்கப்படுகிறது. ரூ 6 கோடி செலவில் செயல்படுத் தப்படும் இத்திட்டத்தில் ஒவ் வொரு குழுவிலும் ஒரு மருத் துவர், ஒரு செவிலியர், ஓட்டுநர் ஆகியோர் இடம் பெறுகின் றனர்.

பேறு சாரா மற்றும் குழந்தைகள் நலன் காப்பதற் காக இக் குழுவினர் கிராமங்களுக்குச் சென்று சிகிச்சை அளிப்பார்கள். இதன் முதல் கட்டமாக இன்று 100 வட்டா ரங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங் கப்படுகிறது. பின்னர் படிப் படியாக மற்ற வட்டாரங் களுக்கு வழங்கப்படும்.

——————————————————————————————————————
ஆரம்பமே சுகாதாரமாக இல்லை!

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவதைப் பெரும்பாலான ஏழைகள் கூட தவிர்க்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அதற்கு முக்கியமாக 4 காரணங்கள் கூறப்படுகின்றன. 1. டாக்டர், நர்ஸ், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட ஊழியர்கள் கிராமப்புற மையங்களுக்குச் சரியாக வேலைக்கு வருவதில்லை. 2. அப்படியே வந்தாலும் நோயாளிகளைக் கனிவாகக் கவனிப்பதில்லை. 3. அவசரத்துக்கு இங்கே வந்துவிட்டோம், அருகில் உள்ள நகரத்துக்குச் சென்றிருந்தால் இன்னும் நன்றாகக் கவனித்திருப்பார்கள் என்றே பெரும்பாலான நோயாளிகள் நினைக்கின்றனர், 4. சுகாதார நிர்வாகத்தில் நிலவும் ஊழல் மற்றொரு முக்கியமான காரணம்.

ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல், வியாதி வந்துவிட்டால் உடனே நாடுவது தனியார் மருத்துவமனைகளைத்தான். டாக்டர் இல்லை, மருந்து இல்லை, படுக்கை இல்லை என்றெல்லாம் அவர்கள் திருப்பி அனுப்புவதில்லை. “முதலில் நீ, அப்புறம் உன் பணம்’ என்று தனியார் மருத்துவமனைகளில் அக்கறை காட்டி வசூலித்துவிடுகிறார்கள். எனவே நோயாளிகளும் செலவைப்பற்றி கவலைப்படுவதில்லை.

மேலை நாடுகளில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு மாத ஊதியம் என்ற முறையைக் கைவிட்டு, அவர்கள் எத்தனை நோயாளிகளைப் பார்க்கின்றனர் என்ற கணக்கை வைத்து ஊதியம் தருகின்றனர். எனவே டாக்டர்களும் அக்கறை காட்டுகின்றனர். அதை இங்கேயும் அமலுக்குக் கொண்டுவரலாம்.

சுகாதாரம் என்பது தடுப்பூசி போடுவது, முகாம்களில் கண், பல், காது-மூக்கு-தொண்டையைச் சோதிப்பது மட்டும் அல்ல. கிராமம் ஆனாலும், நகரம் ஆனாலும் சாக்கடைகள் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகள் சேராமல் அகற்றுவது, கொசுக்கள் பெருகாமல் மருந்து தெளிப்பது, அடிப்படைச் சுகாதாரம் குறித்து மக்களுக்குக் கற்றுத்தருவது போன்றவையுமாகும். டாக்டர்கள், நர்சுகள் மட்டும் அல்ல; ஆசிரியர்கள், பொறியாளர்கள், அரசு ஊழியர்கள் சேர்ந்து இயக்கமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை இது.

நம்முடைய ராணுவத்துக்கும், கல்விக்கும் ஒதுக்கும் தொகையைவிட அதிகத்தொகையை சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும்.

பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருள்கள், கைனி, ஜர்தா போன்ற போதை பாக்குகள், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், பீர் போன்ற மதுபானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அனுமதித்துவிட்டு பிறகு சிகிச்சை அளிப்பதென்பது தும்பைவிட்டு வாலைப்பிடிக்கிற கதை. மக்கள் நலனில் அக்கறை உள்ள, நலவாழ்வை நாடும் முற்போக்கு ஜனநாயக அரசுகள் இவற்றுக்குத் துணிச்சலாக தடை விதித்து மக்களின் சுகாதாரத்துக்கே முன்னுரிமை தர வேண்டும். வருமான இழப்பை ஒரு பொருட்டாகவே கருதக்கூடாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, வயதுவந்த எல்லோரும் மருத்துவ இன்சூரன்ஸ் செய்துகொள்வது கட்டாயம் என்று சட்டம் இயற்றி, மிகக் குறைந்த பிரீமியத்தை வசூலிக்க வேண்டும். இதனால் திரளும் கோடிக்கணக்கான ரூபாயில் ஏழை நோயாளியின் சிகிச்சைக்குக்கூட எத்தனை லட்சம் செலவானாலும் அதை இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்கும் நிலை வேண்டும். அப்படிச் செய்தால்தான் அனைவருக்கும் மருத்துவ வசதி என்பது வெறுங்கனவாக நிற்காமல் நனவாக முடியும்.

நகர்ப்புறங்களில் பெரிய மருத்துவமனைகளில் வேலைபார்ப்பது டாக்டர்களுக்கு மன மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. அத்துடன் தங்களுடைய குழந்தைகளின் எதிர்கால படிப்புக்கும், எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் பொழுது போக்கவும் நகரமே ஏற்றது என்று டாக்டர்கள் கருதுகின்றனர். இதனாலேயே கிராமங்களுக்குச் செல்லத் தயக்கம் காட்டுகின்றனர். இந்தநிலை மாற கிராமப்புற சேவைகளுக்கு பண ஊக்குவிப்பு முதல், பதவி உயர்வு வரை பலவிதமான சலுகைகளை அளிப்பதே விவேகமான வழிமுறையாக இருக்கும்.

வளமான நாட்டின் சொத்து, வலிமையான அதன் மக்கள்தான். இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்ல நம்முடைய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும், சுகாதார அமைச்சர் அன்புமணியும். எனவே வரும் பட்ஜெட்டில், ஏழைகளுக்கும் முதியோருக்கும் 100% பலன் கொடுக்கும் எளிமையான மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அறிவிப்பை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Posted in Anbumani, Awareness, Birth, Care, Chennai, Child, Childbirth, Children, City, Contract, Contractors, DMK, Doc, Docs, doctors, Employment, Experience, Free, Full-time, GH, Govt, Health, Healthcare, Hospital, Hygiene, Immunization, Jobs, Kids, Labor, Labour, M.R.K.Paneerselvam, Madras, medical, Medicine, Metro, MRK Paneerselvam, newborns, Nurses, Pamphlets, Paneerselvam, Panneerselvam, Pannirselvam, Part-time, PMK, Policy, Polio, Poor, Pregnancy, Prenatal, Ramadoss, Rural, service, Shortage, TN, vaccinations, Vaccines, Villages, Work, workers | 1 Comment »

MG Ramachandran: Politics, Cinema, Personality – MGR Biosketch by Panruti Ramachandhran

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

மறைந்தும் மறையாத தலைவர்

பண்ருட்டி ராமச்சந்திரன்

எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.

அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.

“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.

நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.

எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற பாட்டு ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.

1984-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா? உணர்வுடன் இருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.

அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார்.

அரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறு விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.

ஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது. அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.

எம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.

எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.

அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.

சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.

இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.

“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.

நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.

உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.

முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!

(கட்டுரையாளர்: அவைத்தலைவர், தேமுதிக)

Posted in Actors, ADMK, AIADMK, Anjali, Anna, Assembly, Biography, Biosketch, Children, Cinema, CM, DMDK, DMK, dynasty, EVR, Films, Food, Free, Freebies, Heartthrobs, Hero, Heroes, Incidents, Indhra, Indira, Indra, Iruvar, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kids, King, KK, Life, Manifesto, Meals, Memoirs, MGR, Midday Meals, Monarchy, Movies, Notes, Nutrition, Panruti, Periyar, Personality, Politics, Poor, PVNR, Ramachandhran, Ramachandran, Ramachanthiran, Ramachanthran, Rao, UN, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Vidya Sagar – Community Mental Health and Development (CMHD): mental illness – Schizophrenia

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

சேவை: மனம் இருந்தால் “மார்க்’ உண்டு!

மன வளர்ச்சி குன்றியோர் காப்பகங்கள் பல உருவாகியுள்ளன. ஆனால் அவர்களை அவர்களே காத்துக் கொள்வதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படும் அமைப்புகள் அவற்றில் சிலவே.

இத்தகையவர்களுக்காகக் கடந்த 22 ஆண்டுகளாக சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கி வந்த ஸ்பாஸ்டிக் சொûஸட்டி ஆஃப் இந்தியா அமைப்பு, இப்போது “வித்யாசாகர்’ என்ற பெயரில் இயங்கத் தொடங்கியிருக்கிறது. ஏன் இந்தப் பெயர் மாற்றம் என்று அவர்களிடம் காரணம் கேட்ட போது, “”பெயரில்கூட அவர்களின் மன வளர்ச்சியை நினைவுபடுத்தி காயப்படுத்த வேண்டாம் என்பதால்தான்” என்கிறார் ஜெயந்தி நடராஜன். இந்த அமைப்பின் விற்பனை மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவைச் சேர்ந்தவர் இவர். இத்தகையவர்களுக்கான வேலைவாய்ப்புகளுக்காகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

“”கடந்த 22 ஆண்டுகளாக மூளை முடக்குவாதம் சம்பந்தமான ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்காகவும் மாணவர்களைப் பயிற்றுவிக்கவும் பாதுகாக்கவும் செயல்பட்டு வந்த நாங்கள் இப்போது அவர்களுக்கு இலவசமாகத் தொழிற் பயிற்சிகள் அளிக்கவும் ஆரம்பித்திருக்கிறோம்.

எந்தப் பணி இடத்திலும் ஆங்கிலத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதற்கான பயிற்சியை அளிக்கிறோம். கணினி சம்பந்தமான குறைந்தபட்ச திறன் இப்போது எல்லா துறைகளிலும் தேவையாகிவிட்டது. அதற்கான பயிற்சியையும் “பிஹேவியரல் ஸ்கில்’ எனப்படும் நடத்தைத் திறனுக்கான பயிற்சியையும் அளிக்கிறோம். இவையாவும் இரண்டு மாத இலவச பயிற்சித் திட்டங்களாகும். நடத்தைத் திறன் என்பது உளவியல் ரீதியாக அவர்களை செழுமைப்படுத்துவதாகும். பழகும் தன்மை, செய்தியை விளங்க வைக்கும் திறமை போன்றவை சம்பந்தமானது.

18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட உடல் ஊனமுற்ற யாவரும் இதில் சேரலாம். உடல் ஆரோக்கியத்துடன் எல்லா திறமையும் இருந்தும் போட்டியை எதிர் கொள்வதற்கான மனோ தைரியம் இல்லாதவர்கள் இருக்கும் சூழலில் எங்களிடம் பயிற்சி பெறுபவர்களின் கண்களில் தெரியும் நம்பிக்கை ஒளி உண்மையில் பிரமிக்க வைக்கிறது” என்கிறார் அவர்.

மனசுகள் முடங்காதவரை எதுவும் யாரையும் எதுவும் முடக்கிவிடமுடியாதுதானே? மனம் இருந்தால் “மார்க்’ உண்டு!

Posted in Behavioral, Challenged, CMHD, cure, Development, Disabled, Disease, Free, Health, Illness, Mental, Phsychological, Schiz, Schizophrenia, service, Skills, Spastic, Students, Teach, Teachers, Vidhyasagar, VidiyaSagar, Vidya Sagar, Vidyasagar, VithiyaSagar, VithyaSagar | Leave a Comment »

Tamil Language & Medium of Instruction – No Exam Fees

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 18, 2007

ஆவலுடன் தமிழ்த்தாய்!

தமிழினியன்

இன்னொரு “இலவச’ உத்தரவு! தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு – தேர்வுக் கட்டணம் இல்லை. தமிழை மேம்படுத்துவதுதான் இச் சலுகையின் நோக்கமென்றால், அது தவறு. பொதுவாக தமிழ்நாட்டில் எதை வளர்க்கிறோமோ இல்லையோ, இலவசங்களை வளர்த்துக்கொண்டே போகிறோம்.

தேர்தலின்போது, வாக்காளர்களுக்குத்தான் எத்தனை இலவசத் திட்டங்கள்! அவை சரியா, இல்லையா, நிலைக்குமா, நிலைக்காதா என்ற கேள்விகளுக்கு அப்பால்~ ஆட்சி அமைக்க அத் திட்டங்கள் அடிகோலியது மட்டும் என்னவோ மறுக்க முடியாத உண்மை.

ஆனால், தமிழ் வளர்ச்சி என்ற சாக்கில் தமிழ்வழிக்கல்வி மாணவர்களுக்கான இச் சலுகை தமிழையும் வளர்க்காது; மாணவர்களுக்கும் பயன் தராது. மாறாக, மாணவர்களிடையே அடுத்த தேர்வில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மெத்தனப் போக்கைத்தான் ஏற்படுத்தும். இலவசமாகப் படி என்பதாலோ இலவசமாகத் தேர்வு எழுது என்பதாலோ தமிழை வளர்க்க முடியும் என்பது நடைமுறையில் பயன் தராத கற்பனை.

ஏனென்றால், இலவசங்களுக்கு ஆசைப்பட்டுக் கற்கக்கூடிய மொழி அல்ல தமிழ். அப்படி ஒரு நிலைமை தமிழ்நாட்டில் தமிழுக்கு இருக்குமானால் அதைவிட வெட்கக்கேடு வேறில்லை. செம்மொழி என்ற சிகரத்தைத் தொட்டிருக்கும் தமிழை இதுபோன்ற இலவசத் திட்டங்களால் கொச்சைப்படுத்தலாகாது.

தமிழ்வழிக்கல்வியை முழுமையாகக் கொண்டு வருவதற்கான ஒரேவழி, தமிழைத்தான் படிக்க வேண்டும் என்ற சூழலைத் தமிழ்நாட்டில் உருவாக்குவதுதான். இத்தகையச் சூழலை, கேரளத்திலோ, கர்நாடகத்திலோ, ஆந்திரத்திலோ அல்லது மத்தியப் பிரதேசத்திலோ உருவாக்க முடியாது. தமிழ் மண்ணில் மட்டும்தான் அத்தகைய நிலைப்பாட்டை ஏற்படுத்த இயலும்.

அதற்கான ஆக்கப்பணிகளை இப்போதே தொடங்கினால்தான் வரும் கல்வியாண்டில் இருந்து தமிழ்வழிக் கல்வியை அமல்படுத்த முடியும். அதுதான் தமிழ் வளர்ச்சிக்கு நாம் ஆற்றும் உண்மையான தொண்டு.

ஏற்கெனவே மாணவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள். உதாரணமாக, இலவசப் பேருந்துப் பயணம். இது சலுகைதானா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறி. எழுத்தறிவு, கண்ணொளிக்கு சமம். கண்ணில்லாவிட்டால் எப்படி உலகத்தைப் பார்க்க முடியாதோ, அதைப்போல் கல்வி இல்லாவிட்டால் உலகத்தை அறிய முடியாது.

எனவேதான் உணவு, உடை, உறையுள் ஆகிய அத்தியாவசியத் தேவைகளில் நான்காவதாகச் சேர்க்கப்பட்டுள்ளது கல்வி. எனவேதான் பட்டிதொட்டிகளில் எல்லாம் இன்று பாடசாலைகள் உள்ளன. இருந்தும் ஓர் ஊரில் உள்ள மாணவர்கள் இன்னோர் ஊரில் போய் படித்து வரும் நிலை நீடிக்கிறது.

நடுநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி நிலையங்கள் உள்ளூரில் இல்லை என்று வேற்றூர் போவோர் ஒருசாரார். கல்விக்கூடம் சரியாக இல்லை என்பதும் கற்றுத் தருவார் யாருமில்லை என்பதும் இன்னொரு காரணம்.

முதலாவது காரணத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால் இரண்டாவது காரணத்துக்காக மாணவர்கள் வெளியூர் செல்வதைத் தவிர்க்க முடியும். கட்டட அமைப்புகளையும் பராமரிப்பையும் முறையாகச் செய்து, ஆசிரியர் நியமனங்களையும் தேவைக்கேற்ப செய்து முறைப்படி கல்வி நிறுவனங்களை நிர்வகித்தால் இரண்டாவது காரணத்தைத் தவிர்ப்பது சாத்தியம்.

இன்னொரு தேவையற்ற காரணமும் இருக்கிறது. இலவசப் பயணத்தை அனுபவிப்பதற்காகவே சில மாணவர்கள் (சிறுவர்கள்தானே) ஊர்விட்டுஊர் செல்கிறார்கள். அவர்களிடையேயும் கல்விபால் நாட்டத்தை ஊட்ட வேண்டும்.

இலவசப் பயணத்தின் எதிர்விளைவுகளைக் கவனிப்போம்:

மனிதநேரம் மதிப்பிட முடியாதது. ஒரு தொழிலாளி ஒருமணி நேரம் உழைக்க இயலாமல்போனால், உற்பத்தி குறையும். அதைப்போல் படிப்பதற்கு ஏற்ற அருமையான காலைப்பொழுதில், பேருந்துப் பயணம் மேற்கொள்வதால் “மாணவர் நேரம்’ விரயமாகிறது. தவிர புத்தக மூட்டையைத் தோளில் சுமந்து கொண்டு அவர்கள் பேருந்து நெரிசலில் படும் அவதி இருக்கிறதே… சொல்லும் தரமன்று. அத் தொல்லைக்கு உள்ளாகும்போது மாணவன் தன் சக்தியை இழந்து விடுகிறான். களைத்தும் சோர்ந்தும் வகுப்பறைக்கு அவன் செல்கிறான். அந்தப் பரிதாப நிலையில் அவனுக்குப் பாடம் கேட்கத் தோன்றுமா? தூக்கம்தான் வரும்.

அரசு மனது வைத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் இந்த இடையூறுகளைத் தவிர்க்க அல்லது குறைக்க நிச்சயமாக முடியும். ஆனால் இப்பணியில் ஒரு தயக்க நிலையே இன்னும் இருக்கிறது. அதனால்தான் இலவசச் சலுகைகளைக் காட்டி அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

பத்து ஆண்டுகள் படித்து, பத்தாவது ஆண்டு முடிவிலோ அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் பயின்று, பன்னிரண்டாம் ஆண்டு முடிவிலோ, இலவசத்தேர்வு எழுத முடியும் என்பதற்காக தமிழ் படிக்க மாணவர்கள் முன்வருவார்கள் என எதிர்பார்ப்பது பேதைமை.

அடிப்படைக் கல்வி அவசியம் என்றுதான் ஆரம்பக்கல்வியை இலவசமாக்கினோம். ஆறாம் வகுப்பிலிருந்து கட்டணம் செலுத்தி படிக்கும் நிலைமை ஐம்பதுகளில் இருந்தது. அப்போது அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழே பயிற்று மொழியாக இருந்தது. அப்போது இந்தப் பயிற்றுமொழிப் பிரச்னை எழவே இல்லை. தமிழில்தான் அனைவரும் உயர் கல்வி பயின்றார்கள். பட்டப்படிப்பு முடித்து, வேலையும் கிடைத்து வாழ்க்கையில் உயர்ந்தார்கள். நிலைத்தார்கள்.

ஆனால் அறுபதுகளின் ஆரம்பத்தில் அத் தவறு நேர்ந்துவிட்டதே. ஆமாம்: உயர்கல்வியும் இனி இலவசம் என்ற சட்டம் வந்தது அப்போதுதான்.

மேலோட்டமாகப் பார்த்தால் அரசின் தாராளமானபோக்காக அது தோன்றும். உண்மையும் அதுதான். ஏனெனில் வசதிக்குறைவான மாணவர்களும் தவறாமல் உயர் கல்வி பெற வேண்டும் என்ற பரந்த நோக்கத்தைக் கொண்டதல்லவா அத்திட்டம். எனவே அதற்கு பெருத்த வரவேற்பு கிடைத்ததில் நியாயம் உண்டு.

ஆனால் அதன் தாக்கம் எதிர்விளைவாகி ஒரு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது.

உயர்கல்வி இலவசமானதும் கல்வியின் தரம் குறைந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் இருதரப்பிலும் இலவசக் கல்வியை “பத்தியக்கஞ்சியாக’ பார்க்கத் தலைப்பட்டார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு தாக்கம்~ சமூகப் பார்வையிலானது.

நடுத்தர மக்களும் மேல்தட்டுவாசிகளும் இலவசக் கல்வி தரக்குறைவு என்பதோடு கௌரவக் குறைவு என்றும் கருதினார்கள். இத் தருணத்துக்கென்றே காத்திருந்த வியாபாரக் கல்வியாளர்கள் தங்கள் பணியைத் தொடங்கிவிட்டனர். கட்டணத்துடன் தமிழ்க்கல்வி என்றால் கவர்ச்சி இருக்காதே, ஆகவே கட்டணத்துடன் ஆங்கிலக் கல்வி என்று கடைவிரித்தார்கள். வியாபாரம் சூடு பிடித்தது. ஆங்கிலம் களைகட்ட, தமிழ் களைஇழந்தது.

இதிலிருந்து, ஆங்கிலக் கல்வி, தேவை அடிப்படையில் ஏற்பட்டது அல்ல; தற்செயலாக நேர்ந்த விபத்து என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் தாய்த் தமிழ்நாட்டில் தாய்த்தமிழை இலவசமாகவேனும் படியுங்கள் என்பது கேவலமாகத் தோன்றுகிறது. தமிழின் பெயரால் கொண்டுவரும் சலுகை எதுவாயினும், அது தமிழுக்குப் பின்னடைவே தவிர, தமிழ் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாது.

சமச்சீர் கல்வி பற்றி பேசப்படுகிறது. இதன் சாராம்சம் உயர்கல்வி வரை தமிழ்தான் சகலருக்கும் பயிற்று மொழி என்று இருக்குமானால் – மாநில அரசும் அதை முழு மனதுடன் அமலாக்கத் துணியுமானால், தமிழ்நாட்டில் தமிழ் மீண்டும் அரியணை ஏறும்.

அந்த இனிய திருநாள் வாய்க்குமா? தமிழ்த்தாய் ஏக்கத்துடன் எதிர்பார்க்கிறாள்!

Posted in Cho, Education, English, Exam, Examination, Fees, Free, Freebies, Hindi, HSC, Instruction, Language, Necessity, Passion, Schools, Students, Survival, Tamil, Teachers, Test | Leave a Comment »

Distribution of Free Colour TVs by DMK Alliance – Namakkal grabs first place

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2007

வண்ண தொலைக்காட்சிப் பெட்டி: நாமக்கல் முதலிடம்

30 ஆகஸ்ட் 2007
15:16 IST

தமிழக அரசின் ஏழை மக்களுக்கான இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்குவதில், மாநிலத்திலேயே நாமக்கல் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அம்மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தர மூர்த்தி கூறியிருக்கிறார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவமனை புதுப்பித்தல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ரத்தசேமிப்பு வங்கி அறை மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 55 லட்சமும், ராசிபுரம் மருத்துவமனையில் பல்வேறு பணிகளுக்கு ரூ. ஒரு கோடியே ஆறு லட்சத்து 25 ஆயிரமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனை சுமார் 2 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் ஆயிரத்து 333 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் வெள்ளியன்று பங்கேற்கும் விழாவில், ஆயிரத்து 174 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது என்றார்.

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பொறுத்தவரை 54 ஆயிரத்து 955 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தில் மாநிலத்திலேயே நாமக்கல் மாவட்டம் முதலிடம் வகிப்பதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

—————————————————————————————————————————————————–

தேவை மறுபரிசீலனை

அரசு தரும் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பயனாளிகளிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

அரசு தரும் ஒரு பயனுறு பொருளை ஒருவர் ஏன் குறைந்த விலைக்கு விற்க வேண்டும்? அதற்கான அவசியம் என்ன? இலவச தொலைக்காட்சி பெற்றவர்களிடம் ஏற்கெனவே ஒரு தொலைக்காட்சி பெட்டி இருக்கிறது என்பதும், மிகச் சில வீடுகளில் வறுமையாலும் பணநெருக்கடியாலும் விற்கிறார்கள் என்பதுமே காரணமாக இருக்க முடியும்.

இலவச தொலைக்காட்சிப் பெட்டி, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, இலவச நிலம் ஆகியவற்றைப் பெறுவதற்கு அடிப்படைத் தகுதி அவர்கள் பெறப்போகும் பொருள் அவர்களிடம் இருக்கக்கூடாது என்பதும், அவரிடம் குடும்ப அட்டை இருக்க வேண்டும் என்பதும்தான். குடும்பத்தின் ஆண்டு வருமானம் கவனம் பெறுவதில்லை.

பயனாளிகள் தேர்வு என்பது அந்தந்த பஞ்சாயத்து அளவில் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் பரிந்துரைக்கும் பெயர் பட்டியல்தான் பயனாளிகள் என்பது அனைவரும் அறிந்தவொன்று.

பயனாளியிடம் ஏற்கெனவே டிவி இருக்கக் கூடாது என்ற நிபந்தனை, 90 சதவிகிதம், சரியாக பின்பற்றப்படுவதில்லை. ஏற்கெனவே தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருக்கும் குடும்பத்துக்கே மீண்டும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி கிடைக்கிறபோது அதை பயன்பாடின்றி வீட்டில் வைத்திருப்பதைவிட, குறைந்த விலைக்கு விற்று விடுவதையே விரும்புகின்றனர்.

உண்மையிலேயே வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள பயனாளிகளில் பெரும்பாலோர் நிச்சயமாக மாதச் சம்பளம் பெறுபவர்களாக இருப்பதில்லை. அன்றாடத் தொழிலாளர்களான இவர்களுக்கு கேபிள் டிவி கட்டணம் என்பது நாள்கூலியைவிட அதிகமானது. ஆகவே டிவியை விற்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.

இதே நிலைதான் இலவச எரிவாயு இணைப்பிலும்! இந்த திட்டத்தின் பயனாளிகளில் பெரும்பாலோர் அன்றாடத் தொழிலாளிகள். அன்றைய பொழுதின் ஊதியத்தை அன்றைய சமையலுக்குச் செலவிடுபவர்கள். 300 ரூபாயை மொத்தமாகக் கொடுத்து சிலிண்டர் வாங்குவது என்பது இவர்களுக்கு இயலாத விஷயம். இவர்களுக்கு மண்ணெண்ணெய் அளவும் 3 லிட்டராக குறைக்கப்படுகிறது.

இந்த அவல நிலையை இடைத்தரகர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எரிவாயு இணைப்பை அடமானமாகப் பெற்று, வீட்டுப்பயன்பாடு சிலிண்டர்களை வணிக நிறுவனங்களுக்கு இரட்டிப்பு விலையில் விற்கிறார்கள். இதற்காக அந்த ஏழைக் குடும்பத்துக்கு ஒரு சிறிய தொகை தரப்படுகிறது.

மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து அதைக் கொடுக்கும்போதுதான் அவர்கள் அதை மகிழ்ச்சியுடனும் நன்றியோடும் ஏற்றுக்கொள்வார்கள். தேவை இல்லாதது அல்லது சக்திக்கு மீறியது கொடுக்கப்பட்டால், அதை தங்களுக்குத் தேவைப்படும் பொருளாக மாற்றும் முயற்சியில் ஈடுபடவே செய்வார்கள் என்ற அடிப்படை உண்மை கூட ஆட்சியாளர்களுக்கு ஏன் தெரியவில்லை என்பது நமக்குப் புரியவில்லை.

பயனாளிகளைச் சரியாகத் தேர்வு செய்வதும் தொடர்ச்சியாக அதைப் பயன்படுத்தும் நிதிநிலைக்கான வாய்ப்பு உள்ளதா என்பதை அறிந்துகொண்டு இலவசங்களை வழங்குவதும்தான் இத் திட்டத்தை பயனுள்ளதாக மாற்றும். கள்ளச்சந்தையும் தவிர்க்கப்படும்.

தேர்தல் வாக்குறுதி என்பதால், ஆட்சிக்கு வந்தவுடன் ஆர்வத்தினால் சில விஷயங்கள் கவனத்தில் கொள்ளாமல் விடப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த ஆர்வமே பல தவறுகளுக்கு வழிகோலும்போது, திட்ட அமலாக்கத்தில் நிதானத்தை கடைப்பிடித்து, தகுதியுள்ள பயனாளிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளது.

“வருமுன் காப்பவன்தான் புத்திசாலி, அது வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி’ என்பதுதான் “வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்’.

Posted in Bribery, Bribes, Color, Colour, Corruption, Distribution, DMK, Election, first, Free, Govt, Karunanidhi, Manifesto, Namakal, Namakkal, place, Poll, Promise, Stalin, Television, Televisions, TV, TVs | Leave a Comment »

Ignoring the sports development opportunity in Southern TN: Why only Chennai & why just cricket?

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 9, 2007

தெரிந்தே செய்யும் தவறுகள்

தமிழகத்தைப் பொருத்தவரை விளையாட்டு அரங்கத்தில் நமது பங்களிப்பு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அகில இந்திய ரீதியில் கிரிக்கெட், ஹாக்கி, செஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் நமது வீரர்கள் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்துவந்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் அரசு தரும் ஊக்கம் என்பதைவிட, நமது இளைஞர்கள் மத்தியில் காணப்படும் ஆர்வம்தான்.

விளையாட்டுத் துறைக்கான தனி ஆணையம் செயல்படுவதுடன், கணிசமான அளவு நிதி ஒதுக்கீடும் மாநில அரசாலும் மத்திய அரசாலும் விளையாட்டுக்காக ஒதுக்கவும் செய்யப்படுகிறது. இத்தனை இருந்தும், கிராமப்புற நிலையிலிருந்து முறையாக விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து அகில இந்திய அளவில் எல்லா விளையாட்டுகளிலும் நமது வீரர்களை முன்னணியில் நிறுத்த இன்னும் ஏன் முடிவதில்லை என்கிற கேள்விக்கு, அரசும் விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆணையமும்தான் பதில் சொல்ல வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகக் குற்றம்சாட்ட, அதற்கு பதிலளிக்கும் முகமாக, ஒரு கோடி ரூபாய் செலவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைய இருப்பதாகவும், அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

விளையாட்டுத் துறையைப் பற்றிய மிகப்பெரிய குறைபாடு, சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கங்களும் பயிற்சிக்கூடங்களும் சென்னையில் மட்டுமே அமைந்திருக்கின்றன என்பதுதான். நெல்லையில் அமைய இருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம்போல, உலகத் தரம் வாய்ந்த தடகள மைதானங்கள், கிரிக்கெட் மைதானங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து மற்றும் ஹாக்கி மைதானங்கள் போன்றவை தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் அமைய வேண்டியது அவசியம்.

விளையாட்டு என்பதே சென்னையை மட்டுமே மையமாகக் கொண்ட விஷயமாகி விட்டது. ஆனால், விளையாட்டு வீரர்களோ, மாவட்டங்களிலிருந்துதான் அதிகமாக உருவாகிறார்கள். பள்ளிக் கல்விக்கும் சுற்றுலாவுக்கும் தரப்படும் முக்கியத்துவம் விளையாட்டுத் துறைக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தனியார் கல்வி நிலையங்கள் பல, முறையான விளையாட்டுப் பயிற்சியாளர்களோ, மைதானமோ இல்லாமலே செயல்படுகின்றன என்பது அரசுக்குத் தெரிந்தும், இந்த விஷயத்தில் அரசு கண்மூடி மௌனம் சாதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.

இளைஞர்கள் மத்தியில், கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. குக்கிராமம் வரை கிரிக்கெட்டின் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது. ஆனால், சென்னையைத் தவிர வேறு எந்த நகரிலும் சென்னையில் இருப்பதுபோல கிரிக்கெட் ஸ்டேடியம் இல்லையே, ஏன்?

சென்னையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த மைதானம் சர்வதேசத் தரத்திலான மைதானம் என்பதும் உலகறிந்த உண்மை. அப்படி இருக்கும்போது, பழைய மகாபலிபுரம் சாலையில் கருங்குழிப்பள்ளம் கிராமத்தில் இன்னொரு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க 50 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகளுக்கான குத்தகைக்குத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குத் தமிழக அரசு வழங்க ஒப்புதல் அளித்திருப்பது ஏன்?

கோடிக்கணக்கில் பணமிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு அரசு நிலம் அளித்து உதவியதற்குப் பதிலாக, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை அல்லது சேலத்தில் ஏன் ஒரு நல்ல கிரிக்கெட் மைதானத்தை அரசின் பராமரிப்பில் கட்டக் கூடாது? வேட்டி கட்டிய தமிழக முதல்வரால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குள் நுழைய முடியாது என்பதாவது அவருக்குத் தெரியுமா? தெரிந்துமா இப்படியொரு தவறு நடந்திருக்கிறது?

——————————————————————————————————————————

விளையாட்டு ஆணையத்தின் கவனத்துக்கு…

வி. துரைப்பாண்டி

தமிழகத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் “உருவாக்கம்’ அரிதாகிவருவது, விளையாட்டு ஆர்வலர்களிடம் மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“சாம்பியன்ஸ்’ மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு- எஸ்டிஏடி) இளம் வீரர்களை உருவாக்குவதிலும், அதற்கான பயிற்சியாளர்களை நியமனம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

“கேட்ச் தெம் யங்’ (இளமையில் தெரிந்தெடுத்தல்) எனும் பெயரில் முன்னர் செயல்பட்டுவந்த திட்டம் தற்போது இல்லை. அந்த குறைபாட்டால்தான் என்னவோ அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து வீரர், வீராங்கனைகளை கல்லூரிகள் “இறக்குமதி’ செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் எழுகிறது.

வீரர், வீராங்கனைகளின் உருவாக்கம் குறைந்துபோனதற்கு நமது கல்வி முறையின் வளர்ச்சிகளைக் காரணமாகக் கூறும் அதிகாரிகளும் ஆர்வலர்களும், சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா தோற்கும்போது “என்ன மோசமப்பா இது’ என ஆதங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் வீரர், வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் களமாக பெரும்பாலும் தலைநகரம் திகழ்கிறது. பெரும்பாலான போட்டிகள் இங்குதான் அரங்கேறுகின்றன. போட்டிகளை நடத்தும் கட்டமைப்பு வசதிகள் இருப்பது முக்கியமான காரணம் என்றாலும், அவற்றை சிறப்பாக நடத்துவதற்கு ஆதரவு (ஸ்பான்சர்கள்) அளிக்கும் முக்கிய நிறுவனங்களும் சென்னையில்தான் அதிகம் உள்ளன. ஆனால் லயோலா உள்ளிட்ட சென்னையில் உள்ள கலைக் கல்லூரிகளில் வீரர், வீராங்கனைகளுக்கான அட்மிஷன், தேக்கத்தை அல்லவா சந்தித்து வருகிறது?

கூடைப்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஜாம்பவானாகத் திகழ்ந்த லயோலா, இன்று பொறியியல் கல்லூரிகளிடம் உதை வாங்கும் பின்னடைவைப் பெற்றுள்ளது. சென்னையிலேயே இப்படி என்றால் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை போன்ற நகர்களில் உள்ள கலைக் கல்லூரிகளின் நிலைமை நிச்சயம் பரிதாபமாகத்தான் இருக்கும். இதற்கு அப் பகுதியில் உள்ள கல்லூரிகளைக் குறை சொல்ல முடியாது. சிறுவயதிலேயே இனம்கண்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து விளையாட்டு ஆர்வத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

திறமையான வீரர், வீராங்கனைகளுக்கு ஊட்டிவிடாத குறையாக போட்டி போட்டுக்கொண்டு என்னவெல்லாம் கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் இலவசமாகக் கொடுத்து தங்களைப் பிரபலப்படுத்தி வருகின்றன பொறியியல் கல்லூரிகள். சென்னையில் இது மாதிரியான தாக்கம் அதிகம். சில கல்லூரிகள் கேரளத்திலிருந்து நேரடியாக வீரர், வீராங்கனைகளை வரவழைத்து “திறமை’யை வெளி உலகுக்கு காட்டுகின்றன.

இதனாலேயே தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன. அனைத்திலும் ஓர் அதிகாரியின் கீழ் விளையாட்டு மன்றங்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் போதுமான மைதானங்களோ, பயிற்றுநர்களோ இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். பின்னர் எப்படி இளைஞர்கள் இத் துறையை தேர்ந்தெடுக்க முடியும்?

முறையாகத் தொடங்கப்படும் திட்டங்கள், இடையில் தேக்கத்தை எட்டினால் அதைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, திட்டத்தையே கைவிடுவது எவ்விதத்திலும் நல்லதல்ல. அம் மாதிரி கருதப்படும் திட்டங்களில் ஒன்றுதான் “கேட்ச் தெம் யங்’. அது செயல்பாட்டில் இல்லாததால்தான் கலைக் கல்லூரிகள், போதுமான வீரர், வீராங்கனைகள் இல்லாமல் இன்று விளையாட்டுக் கலையுணர்வு இழந்து போயுள்ளன.

வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி அவர்களைத் தயார்படுத்தும் உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி ஊக்குவிக்க 2003-04-ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்து, அதற்கு “முதலமைச்சர் விருது’ எனப் பெயரிட்டது. ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கியது அந்த விருது.

அத் திட்டத்துக்கு உயிரூட்டும்விதமாக தற்போதைய அரசும் தகுதியானவர்களிடமிருந்து ஆண்டுதோறும் தனது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கக் கோரி வருகிறது. ஆனால் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை யாருக்கும் அவ்விருது வழங்கப்படவில்லை. முதலாம் ஆண்டு விருதுக்குரியவர்கள் யார் என்பதுகூட முடிவாகி, ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கடுத்த ஆண்டுக்கும் உரியவர்களை அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு இனம்கண்டுள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காகவோ இதுவரை விருதுகள் வழங்கப்படவில்லை.

வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளிக்கு அந்த வியர்வை காயும் முன்பு கூலியைக் கொடுக்க வேண்டும். இல்லையேல், அது விழலுக்கு இரைத்த நீராகத்தான் இருக்கும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

அதேபோல, பயிற்சியாளருக்கான என்.ஐ.எஸ். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்) பயிற்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். என்.ஐ.எஸ். பயிற்சி முடித்தவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக தவம் கிடக்கின்றனர். தமிழகம் முழுவதும் விளையாட்டு மன்றங்களில் போதுமான பயிற்சியாளர்கள் இல்லாத குறையைப் போக்க அவர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?

மொத்தத்தில் இது போன்ற பின்னடைவுகளால் பாதிக்கப்படுவது – எல்லோராலும் ரசிக்கப்படும் விளையாட்டுத் துறைதான். தேவை – எஸ்டிஏடி கவனம்.

Posted in 600028, Allocation, Asiad, Asset, athlete, athletics, Badminton, Basketball, Budget, Capital, Cars, Chennai, Chepauk, Chess, City, Clubs, CM, Corp, Corpn, Corporation, Cricket, Development, Districts, DMK, Economy, Football, Free, Funds, Game, Govt, Hockey, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, Kaniakumari, Kanniakumari, Kanniyakumari, Kanyakumari, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kovai, Land, League, MAC, Madras, Madurai, match, Matches, MCC, Metro, Needy, Nellai, Olympics, Op-Ed, Play, Players, Poor, Property, Rich, Salem, seat, Seating, Soccer, Sports, Stadium, Suburban, Tamil Nadu, TamilNadu, Tennis, Thiruchirapalli, Thiruchirappalli, Thirunelveli, TN, TNCC, Tour, Tourist, Track, Travel, Traveler, Trichy, Villages, Visit, Visitor, Voleyball, Watch, Wealthy | 1 Comment »

Compulsory rural service required for Doctor graduation – Medical Education

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

State of MBBS – Analysis on Medical education « Tamil News


கட்டாய கிராமப்புற மருத்துவ சேவைஜி.ஆர்.ரவீந்திரநாத்

“கிராமப் பகுதிகளில் பணியாற்ற டாக்டர்கள் மறுக்கிறார்கள் என்ற காரணத்தைக் கூறி’ எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவுடன் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் கட்டாய சேவைசெய்ய வேண்டுமென மத்திய அரசு சட்டம் கொண்டு வரவுள்ளது. இந்தச் சேவையை முடித்த பிறகுதான் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு தொழில் செய்ய முடியும். இதற்கேற்ப எம்பிபிஎஸ் படிப்புக் காலத்தை ஐந்தரை ஆண்டுகளில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தவும் மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.இச்சட்டம் இளம் டாக்டர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதோடு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்கள் மருத்துவம் பயில்வதைத் தடுத்துவிடும். நமது மருத்துவக் கல்வி, மருத்துவத் துறை, மக்கள் நல்வாழ்வுக் கொள்கை ஆகியவற்றில் உலக வங்கியின் விருப்பங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களிலும் 70 சதவீத மருத்துவர்கள் நகர்ப்புறங்களிலும் இருப்பது வருந்தத்தக்கது. இதற்கு நமது சமூகப் பொருளாதார நிலைமைகளே காரணம். இந்தியாவில்

  • 3,043 சமுதாய மருத்துவ மையங்களும்
  • 22,842 ஆரம்ப சுகாதார மையங்களும்
  • 1, 37, 311 துணை மையங்களும்

உள்ளன என்று 2003-ம் ஆண்டு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

  • ஆரம்ப சுகாதார நிலையங்களில் 13.3% மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

சமுதாய மருத்துவமனைகளில்

  • 48.6% அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள்,
  • 47.9% மகப்பேறு மருத்துவர்கள்,
  • 46.1% பொது மருத்துவர்கள்,
  • 56.9% குழந்தை மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கிராமப் புறங்களில்

  • 75% அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும்
  • 73% மகப்பேறு மருத்துவர்களும்
  • 86% குழந்தை மருத்துவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.

காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுகள் அக்கறை காட்டாததும் பணி நியமனத் தடை ஆணையும்தான் இந்த நிலைக்குக் காரணம்.
நிரந்தர வேலைவாய்ப்பை வழங்காமல், ஒப்பந்த அடிப்படையில் தாற்காலிகமாக மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் மருத்துவர்களை நியமிப்பதால் மருத்துவர்கள் அரசுப்பணிகளில் சேரத் தயங்குகின்றனர்.

கிராமப்புற மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தாததும் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் தங்க குறைந்தபட்ச வசதிகளைக்கூட செய்து கொடுக்காததும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. பல சமுதாய மருத்துவ மையங்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சொந்தக் கட்டடமே இல்லை. நூற்றுக்கணக்கான மையங்களில் கழிப்பிட வசதியே இல்லை.

கிராமப்புற மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்க கட்டாய கிராமப்புற சேவைதான் தீர்வு என்கிறது அரசு. கட்டாய கிராமப்புற சேவை பயனளிக்காது என்பதோடு, மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடும் என்பதுதான் இளம் மருத்துவர்களின் எதிர்வாதம்.

மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் வெறும் 0.9% மட்டும் ஒதுக்கப்படுகிறது. உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மிகக் குறைவாக நிதிஒதுக்கீடு செய்யும் நாடு இந்தியாதான். மொத்த உற்பத்தியில் 5% ஒதுக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், ஊரகப்புற மருத்துவமனைகளுக்கு அதிகநிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருத்துவம் தனியார் மயம் ஆவதும், பெரிய நிறுவனங்களாவதும் மருத்துவர்களை நகரங்களிலேயே குவியச் செய்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

1980-களில் 57% ஆக இருந்த தனியார் மருத்துவமனைகள் 2000-ல் 73% ஆக உயர்ந்துள்ளது. 1980களில் மக்களின் ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் அரசின் பங்களிப்பு 22% ஆக இருந்தது. இன்று 16% ஆகக் குறைந்துவிட்டது.

மருத்துவர்களை நிரந்தர ஊழியர்களாகப் நியமித்து கிராமப்புறங்களில் 2 ஆண்டு கட்டாய சேவை செய்த பின்னரே பணிவரன்முறை செய்யப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வரவேண்டும். டாக்டர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. டாக்டர்களின் ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும்.

கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றுவோருக்குக் கூடுதல் சம்பளமும் பதவி உயர்வில் முன்னுரிமையும் இதர சலுகைகளும் வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவம் பயில நுழைவுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். மிகவும் பின்தங்கிய மலைப்பகுதிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கலாம். இத்தகைய மருத்துவமனைகளில் மருத்துவர்களை பணியமர்த்த தனியாகவே சிறப்புப் பணி நியமன முறையைக் கையாளலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இடமாறுதல் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் உள்ளூர் மருத்துவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கலாம். ஒழுங்காகப் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.

ஊழல் முறைகேடுகளை ஒழிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். கட்டாய கிராமப்புறச் சேவையில் எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்களை பணியாற்ற வைப்பதால் மக்களுக்கு பெரிய அளவில் பயனில்லை. அரசின் புள்ளிவிவரப்படியே மகப்பேறு, குழந்தைகள்நல, பொது மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களின் பற்றாக்குறையே கிராமப்புறங்களில் உள்ளது. இதற்கு முதுநிலை படிப்பு படித்த டாக்டர்கள்தான் கிராமப் பகுதிகளுக்கு அதிகம் தேவைப்படுகின்றனர்.

இக்குறைபாட்டைப் போக்க இப்படிப்புக்கான இடங்களை அதிகப்படுத்த வேண்டும். எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களுக்கு குறிப்பிட்ட துறைகளில் பயிற்சியளித்து அவர்களைப் பயன்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் பட்டயப் படிப்பு படிக்கும் தனியார் மருத்துவர்களை ஓராண்டு காலம் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் முழு ஊதியத்துடன் பணியாற்றச் செய்ய வேண்டும். சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டதும் இந்தக் கட்டாயச் சேவையைக் கூட ரத்து செய்ய வேண்டும்.

தற்சமயம் ஆண்டுதோறும் இந்தியாவில் 29, 500 டாக்டர்கள் படித்து முடித்து வெளிவருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் ஆகஉயர்ந்துவிடும். ஒவ்வோராண்டும் இவர்களைக் கட்டாய கிராமப்புறச் சேவையில் தாற்காலிகமாகப் பணியமர்த்தினால் அது 40 ஆயிரம் டாக்டர்களுக்கான பணியிடங்களை நிரந்தரமாக ஒழித்துக் கட்டிவிடும். மேலும் இந்த திட்டத்துக்கான எம்பிபிஎஸ் படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவது சரியல்ல. ஒரு நபர் எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்கி எந்தவிதமான தடங்கலும் இன்றி எம்சிஎச், டிஎம் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர்ச்சியாகப் படித்து முடிக்க குறைந்தபட்சம் 13 ஆண்டுகளாவது அவசியம்.

எம்பிபிஎஸ் படிப்பு காலத்தை ஆறரை ஆண்டுகளாக உயர்த்தினால் அது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் மருத்துவம் பயிலும் ஆர்வத்தைக் குறைத்துவிடும். திருமணம் போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பெண்களை மருத்துவ படிப்புக்கு அனுப்பத் தயங்குவர். பணபலம் உள்ள ஆண்கள் மட்டுமே படிக்கும் துறையாக மருத்துவக் கல்வி மாறிவிடும்.

தற்பொழுது பிளஸ்2வில் உயிரியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இவ்வாண்டு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்த பலர், பொறியியல் படிப்புக்கு மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் வேலைவாய்ப்பை, உரிமைகளைப் பாதிக்காத வகையில் கிராமப்புற மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய ஆக்கப்பூர்வமாக அரசு முயலவேண்டும்.

(கட்டுரையாளர், சமூக சமதுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலர்.)

——————————————————————————————————-
மாறட்டும் மருத்துவமனை நடைமுறைகள்!

இரா. சோமசுந்தரம்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களில் பெரும்பாலானோர், வெளியிடத்தில் “தனி ஆலோசனைகள்’ வழங்குவதும், தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகள் செய்வதும் நடைமுறையில் உள்ளன. இதனால் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் அறுவைச்சிகிச்சைகள் மூன்று வகையாக நடைபெறுகின்றன.

அவை: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கேயே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, ஓரளவு குணமாகும்வரை தங்கி, பின்னர் வீடு திரும்புவோர். அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று, அதே அரசு மருத்துவர் ஆலோசனையின்பேரில் தனியார் மருத்துவமனையின் அறுவைக்கூடத்தில் சிகிச்சை முடித்துக் கொண்டு, தொடர் மருத்துவத்துக்கு அரசு மருத்துவமனை படுக்கைக்குத் திரும்புகிற அல்லது புறநோயாளியாக வந்து மருந்து பெற்றுச் செல்வோர். அரசு மருத்துவமனைக்கே வராமல், அரசு மருத்துவரின் தனிஆலோசனையைப் பெற்று, அவர் சொல்லும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை முடித்து வீடு திரும்புவோர்.

எந்தவொரு மருத்துவச் செலவையும் ஏற்கும் சக்தி இல்லாத பரம ஏழைகள்தான் முதல் வகை சிகிச்சை பெறுகின்றனர்.

“கார்ப்பரேட்’ மருத்துவமனைகளில் ரூ.50 ஆயிரம் செலவழிக்க வசதியில்லாமல், ரூ.20 ஆயிரத்தில் சிகிச்சையை முடித்துக் கொள்ள விரும்புவோர் மூன்றாவது வகையைத் தேர்வு செய்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை குறைவு.

நடுத்தர வருவாய்க் குடும்பத்தினர்தான் இரண்டாவது சிகிச்சையை மிக அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களால் மருத்துவத்துக்குத் தனியாக செலவு செய்யும் சேமிப்புகள் ஏதுமில்லை. நோய்வந்த பிறகே அந்த நோய்க்கான சேமிப்பு அல்லது செலவுத் தொகை ஒதுக்கப்படுகிறது. கார்ப்பரேட் மருத்துவமனை வாசலைக்கூட இவர்களால் மிதிக்க முடியாது. தனியார் மருத்துவமனைகளில் ஆலோசனை பெற்று, மருந்து வாங்கும் சக்தி இருந்தாலும், அறுவைச்சிகிச்சை, ஒரு வாரம் படுக்கையில் இருப்பது ஆகிய செலவுகள் அவர்களது ஓராண்டு வருமானத்தை விழுங்கக்கூடியவை. இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதே நேரத்தில் அறுவைச்சிகிச்சையை மட்டும் தரமான இடத்தில் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இந்த நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு இருக்கிறது.

அரசு மருத்துவமனையை நாடவும், அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தில்லாத சிகிச்சையை விரும்பவும் செய்யும் நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் இந்த தற்காப்பு முயற்சியை அரசு ஏன் சட்டப்படி முறைப்படுத்தக்கூடாது?

தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவ வசதிகள் கொண்ட அறுவைக்கூடங்கள் உள்ளன. இவற்றில் நவீன துணைக் கருவிகளைக் கொண்டுள்ளவை மிகச் சிலவே.

தாலுகா அளவில் உள்ள மருத்துவமனைகளில் பல கோடி ரூபாய் செலவழித்து எவ்வளவு நல்ல எக்ஸ்-ரே கருவிகள், ஸ்கேன் கருவிகள் வாங்கி வைத்தாலும், அவை சில மாதங்களில் நிச்சயம் பழுதாகிவிடுகின்றன.

ஆகவே, எல்லா நகரங்களிலும் பரவலாக உள்ள தனியார் மருத்துவமனைகளின் அறுவைச் சிகிச்சைக்கூடங்களைப் பயன்படுத்திக் கொள்ள சரியான அணுகுமுறையை அரசு உருவாக்கினால் பயனுள்ளதாக அமையும்.

தனிஆலோசனையின்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, என்டோஸ்கோபி, ஈசிஜி, எக்ஸ்-ரே, மருந்துகள், அறுவைக்கூடம் வாடகை எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் 15 சதவிகிதம், ஊக்கத்தொகையாக மருத்துவருக்கு அவர்களால் வழங்கப்படுவது என்பது ஊர் அறிந்த ரகசியம். இந்த ஊக்கத் தொகையை அரசு சட்டப்படி வழங்க முன்வந்தால், மருத்துவத்தில் பட்டுப்போன மனிதாபிமானம் மீண்டும் தளிர்க்கும்.

அரசு மருத்துவமனை மருத்துவர்களும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புவது குற்றமல்ல. அவர்கள் திறமையானவர்களாக இருந்து அவர்களைத் தேடிவரும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகரிக்கும்போது அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தனியார் மருத்துவமனை அறுவைக்கூடங்களுக்கு செலுத்தப்படும் கட்டணத்தில் 20 சதவிகிதத்தை சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும், 20 சதவிகிதத்தை மருத்துவமனைக்கும் அளிக்க வகை செய்யலாம்.

வருமான வரி ஏய்ப்பு குறித்த தகவலைத் தருபவருக்கு, கண்டுபிடிக்கப்பட்ட வரிஏய்ப்புத் தொகையில் ஒரு பங்கை அரசாங்கமே அளிக்கும்போது, உயிரைக் காக்கும் மருத்துவருக்கும் அரசே சட்டப்படி கமிஷன் கொடுத்தால் என்ன தவறு?

தற்போது அரசு மருத்துவமனையில் பணியாற்ற திறமையான மருத்துவர்கள் தயங்குவதன் காரணம், அவர்களுக்கு வெளியில் நிறைய வருவாய் கிடைக்கிறது என்பதுதான். அந்த வாய்ப்பை அரசு மருத்துவமனையிலேயே ஏற்படுத்திக் கொடுத்தால் தவறில்லை; பணிபுரிய நிறைய மருத்துவர்கள் முன்வருவார்கள்.

விபத்து, தற்கொலை, வெட்டு, குத்து என்றால் முதலில் அரசு மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்ற நிலைமை இப்போது இல்லை. தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று, காவல்நிலையத்தில் வழக்கைப் பதிவு செய்யும் மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

இதேபோன்று தனியார் மருத்துவமனைகளின் அறுவைக்கூடங்களைப் பயன்படுத்தவும், அங்கே அரசு மருத்துவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு சிகிச்சை அளிக்கவும் புதிய மாற்றங்கள் இன்றைய தேவையாக இருக்கிறது.

———————————————————————————————————–
“கருணை’ என்பது கிழங்கு வகை!

இரா. சோமசுந்தரம்
மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் ஓராண்டுக்கு கிராமங்களில் பணிபுரிவதைக் கட்டாயமாக்கும் திட்டத்தை மருத்துவ மாணவர்கள் எதிர்க்கின்றனர். போராட்டங்கள் நடத்துகின்றனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள், “நாங்கள் மக்களுக்கு எதிரியல்ல’ என்ற வசன அட்டைகளைத் தாங்கும்போதும் “குக்கிராமத்திலும் சேவை செய்ய நாங்கள் ரெடி, நிரந்தர வேலைதர நீங்கள் ரெடியா?’ என்ற வசன அட்டையை ஏந்தி நிற்பதைப் பார்க்கும்போதும் மருத்துவக் கவுன்சிலின் மெய்யான நோக்கத்தைப் புரிந்துகொண்ட பின்புதான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்களா என சந்தேகம் வருகிறது.

தற்போது நான்கரை ஆண்டுகள் படிப்பு, ஓராண்டு மருத்துவமனையில் தொழில் பழகுதல் என்ற அளவில் ஐந்தரை ஆண்டுகளாக உள்ள மருத்துவப் படிப்பு, கிராமப்பகுதியில் ஓராண்டு சேவையை வலியுறுத்துவதன் மூலம் ஆறரை ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் மருத்துவம் கிடைக்கச் செய்யும் நோக்கத்தில்தான் இந்திய மருத்துவக் கவுன்சில் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

மருத்துவக் கவுன்சிலின் புதிய நடைமுறைப்படி, இந்த இளம் “மருத்துவர்கள்’ கிராமப்பகுதிகளில் ஓராண்டு பணியாற்றிய பின்னர் அவர்களது மருத்துவப் படிப்புக்கான சான்றிதழ் அளிக்கப்படும். அதன் பின்னரே அவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளை, சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர முடியும்.

மேற்படிப்புக்குத் தடையாக, ஓராண்டு கிராம மருத்துவ சேவை குறுக்கே வந்து நிற்பதை இம்மாணவர்கள் விரும்புவதில்லை. இந்தப் போராட்டத்தின் அடியிழையாக இருப்பது இந்த நெருடலான விஷயம்தான்.

கிராமங்களில் பணியாற்ற மருத்துவர்கள் வருவதில்லை என்பதுதான் அரசின் பிரச்னை. இந்த மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றத் தயார் என்றால் இவர்களுக்கு நிரந்தர வேலை தருவதில் அரசுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும்?

மருத்துவக் கவுன்சில் குறிப்பிடும் ஓராண்டு கால கிராம மருத்துவ சேவைக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த மாணவர்கள் முன்வைத்தால் அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தப் புதிய திட்டத்திலும்கூட ஓராண்டு முழுவதும் கிராமப்புறங்களில் பணியாற்றும் அவசியம் ஏற்படாது. ஏனென்றால் நான்கு மாதங்களுக்கு தாலுகா அளவில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்ற வேண்டும்.

நான்கு மாதங்களுக்கு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். நான்கு மாதங்களுக்கு சமுதாய நலக் கூடங்களில் பணியாற்ற வேண்டும். இதன்படி பார்த்தால், கடைசி நான்கு மாதங்கள் மட்டுமே அவர்கள் போக்குவரத்து வசதிகள் குறைந்த கிராமப்பகுதியில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.

அதிலும் தற்போது மினி பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ்கள் செல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலைமை இருப்பதை மறுக்க முடியாது.

தங்களுடன் சமகாலத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள், நான்காவது ஆண்டிலேயே வளாக நேர்காணல் மூலம் வேலை கிடைக்கப்பெற்று, கைநிறையச் சம்பாதிக்க முடியும் என்றால், மருத்துவர்களுக்கு மட்டும் ஏன் ஆறரை ஆண்டுகள் என்று கேள்வி எழுப்புவது சரியானதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது.

சொல்லப்போனால், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் 5 ஆண்டுகள் படிப்பு மற்றும் ஓராண்டு தொழில் பழகுதல் என 6 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பட்டச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவக் கல்லூரி நீங்கலாக, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மூலம் பட்டம்பெறும் ஒவ்வொரு மருத்துவ மாணவருக்கும் அரசு மறைமுகமாக ஏற்கும் செலவினங்கள் பல லட்சம் ரூபாய் வரை ஆகின்றது என்பது இவர்களுக்குத் தெரியாதது அல்ல.

இவர்களில் 69 சதவிகிதத்தினர் அரசு இடஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்றவர்கள். அரசு தங்களுக்கு அளித்ததை ஈடு செய்யும் வகையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவும் ஓராண்டு மருத்துவ சேவையின்போது தங்கள் மருத்துவ அறிவை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இதனை ஏன் கருதக்கூடாது?.

படிப்பின் குறிக்கோள் பணம் என்றாகிவிட்டது. மாணவர்கள் மட்டுமல்ல } மருத்துவப் பேராசிரியர்களுக்கும்!

அதிக அளவு தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ள ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்றைய சிக்கல் விநோதமானது. கற்பிக்கப் பேராசிரியர்கள் இல்லை.

திறமையானவர்கள் அனைவரும் விருப்ப ஓய்வு பெற்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்காகச் சென்றுவிட்டனர். மிக அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்குப் பாடம் நடத்த பேராசிரியர்கள் இல்லை.

குறைந்த மதிப்பெண்களுடன் பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து சேர்ந்த வசதிபடைத்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க பேராசிரியர்கள் இருக்கிறார்கள்.

ஏழை சொல் அம்பலம் ஏறாது. அத்தோடு, ஏழையின் நோய்க்கு சிகிச்சையும் கிடையாது. புதுமைப்பித்தன் சொன்னதைப்போல, “கருணை’ என்பது கிழங்கு வகையில் சேர்க்கப்பட்டுவிட்டது!

———————————————————————————————————-
மருத்துவம் வெறும் வியாபாரமல்ல!

Dinamani Op-ed Sep 6, 2007/Thursday
படித்தவர்கள் பெரும்பாலும் சுயநலத்துடன் செயல்படுகின்றனர் என்பதற்கு இப்போதைய உதாரணம், கிராமசேவை செய்ய மறுக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம். ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பு முடிந்த பிறகு மருத்துவர்கள் ஓராண்டு காலம் கிராமப்புறங்களில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என்கிற திட்டத்தை இவர்கள் எதிர்ப்பது ஏன் என்பது புரியவில்லை. மருத்துவர்களுக்கு சமூகக் கடமை உண்டு என்பதை இவர்கள் உணர மறுப்பது நியாயமில்லை.

நம் நாட்டில் மருத்துவ வசதி நகரங்களில்தான் கிடைக்கிறது, கிராமப்புறங்களில் கிடைப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை. இன்னும் சொல்லப்போனால் பல கிராமங்கள் இப்போதும் நாட்டு வைத்தியத்தையும், முறையாக மருத்துவப் படிப்பு படிக்காத அரைகுறை போலி மருத்துவர்களையும் நம்பித்தான் இருக்கின்றன என்பது அதிர்ச்சி தரும் உண்மை. போதிய மருத்துவ வசதி இன்மையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவையும் ஒப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம் (ரஏஞ). அமெரிக்கா மற்றும் வளர்ச்சி அடைந்த மேலைநாடுகளில் ஆயிரம் பேருக்கு மூன்று அல்லது நான்கு மருத்துவர்கள் என்கிற நிலைமை இருக்கும்போது, இங்கே இன்னும் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமைகூட ஏற்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

ஒரு விஷயத்தை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் குக்கிராமம்வரை ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தி மருத்துவ வசதி கிராமப்புறங்களைப் போய்ச் சேர வேண்டும் என்பதில் நமது மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டன. இதற்காக, நிதிநிலையறிக்கையில் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 1951-ல் வெறும் 725 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தன. இப்போதோ ஏறத்தாழ 2 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் 5,842 பேருக்கு ஒரு மருத்துவர் என்றிருந்த நிலைமை மாறி இப்போது சுமார் 1,500 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்போது, இந்தியாவில் சுமார் 6,50,000 மருத்துவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது மருத்துவக் கழகக் குறிப்பு. ஆனால் இந்த மருத்துவர்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் நகரங்களில்தான் இருக்கிறார்களே தவிர கிராமங்களில் இருப்பதில்லை. தங்களுக்கு வசதியான வாழ்க்கையும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிக்கூடங்களும் கிராமங்களில் கிடைப்பதில்லை என்பதுதான் அவர்களது வாதம்.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 73 விழுக்காடு மக்கள் வாழும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் பலவற்றிலும் மருத்துவர்கள் பெயருக்கு அவ்வப்போது வந்து போகிறார்களே தவிர சேவை மனப்பான்மையுடன் அங்கே தங்கிப் பணியாற்றுகிறார்களா என்றால் இல்லை. பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 11,000. இவர்களில் சென்னை உள்பட நகரங்களில் பணிபுரிபவர்கள்தான் சுமார் 7,500 பேர். அதேபோல, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் சுமார் 35,000 பேர் என்றால் இவர்களில் 21,000 பேர் நகரங்களில்தான் மருத்துவசேவை செய்கிறார்கள். சமூக சேவை, சமுதாயத்துக்குத் தங்களது பங்களிப்பு என்கிற வகையில், அசௌகரியங்களையும் வருமான இழப்பையும் கருதாமல் ஓராண்டு காலம் நமது மருத்துவர்கள் கிராமப்புற சேவையாற்ற முன்வர மறுப்பது, மருத்துவத் துறையின் மகத்தான சேவைக்கே களங்கம்.

மருத்துவப் படிப்பு தனியார்மயமாக்கப்பட்டதன் தொடர் விளைவுதான், “நாங்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற மாட்டோம்’ என்கிற மருத்துவர்களின் பிடிவாதத்துக்குக் காரணம். கிராமங்களில் சேவை செய்தால் வேலை நிரந்தரம் செய்து தர முடியுமா என்கிற எதிர்க்கேள்வி அர்த்தமில்லாததாகத் தெரிகிறது. இந்தியாவையும் இந்தியாவின் பெருவாரியான மக்களையும் அவர்களது அவலநிலையையும் சரியாகப் புரிந்துகொள்ளாத மருத்துவர்கள் இருந்தும் என்னதான் பயன்? இவர்களை உருவாக்க அரசும் சமுதாயமும் தனது வரிப்பணத்தை ஏன் விரயமாக்க வேண்டும் என்று கேள்வி கேட்க யாருமே இல்லை என்பதுதான் அதைவிட வருத்தமான விஷயம்.

ஓராண்டு காலம் கிராமப்புற சேவையாற்றும் திட்டம் என்பது கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார நிலைகளை நமது மருத்துவர்கள் அறிவதற்கு நிச்சயமாக வழிகோலும். வரவேற்கப்பட வேண்டிய இந்தத் திட்டத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு சமூக சிந்தனை இல்லை என்று சொல்வதா, இல்லை சுயநலத்திற்கு அவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள் என்று சொல்வதா? மருத்துவம் வெறும் வியாபாரமல்ல என்பதை மறந்துவிடக் கூடாது!

———————————————————————————————————————————————————————-

தேவை, கிராமப்புற கட்டாய மருத்துவச் சேவை

நள்ளிரவைத் தாண்டிய நேரம்! தஞ்சை ராஜாமிராசுதார் மருத்துவமனையின் வாயிலை ஒரு மாட்டுவண்டி அவசரமாகத் தாண்டுகிறது. அந்த வண்டி மகப்பேறு மருத் துவப் பிரிவை நோக்கி வருகிறது. வண்டியில் ஒரு பெண்ணின் முனகல் சப்தம்.
பயிற்சி மருத்துவர்களாகிய நாங்கள் அவ் வண்டியை நோக்கி ஓடி, வைக்கோலுக்கு நடுவே பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த அந்த கிராமத்துப் பெண்ணை, கைத்தாங்கலாகப் பிடித்து வந்து பிரசவ வார்டில் படுக்க வைத்தோம். பிரசவத் தின்போது தலை வருவதற்குப் பதிலாக குழந் தையின் ஒரு கை வெளியே வந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கொண்டி ருப்பது தெரிந்தது.
உடனே மருத்துவச் சிகிச்சை அளித்தும் – குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிய வில்லை; அதிக உதிர இழப்பு காரணமாக தாயைக் காப்பாற்ற முடியவில்லை; ஏன் முடி யவில்லை? உடனே மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியவில்லை; ஏன் முடியவில்லை? அவர்கள் இருந்த கிராமத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிறப்பு மருத் துவ உதவி இல்லை. அந்தப் பெண் செய்த பாவம் ~ அவள் கிராமத்தில் வாழ்ந்ததுதான்.
இதைப்போல கிராமத்துத் தாய்மார்கள் சரியான சிகிச்சை கிடைக்காமல் இன்றும் மாண்டு போகிறார்கள். தாய்மார்களின் பிர சவ கால உயிரிழப்பை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. அப்படியே பிரசவமானா லும் பச்சிளங்குழந்தைகள் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் இறக்கும் விகிதத்தை நம் மால் கணிசமாகக் குறைக்க முடியவில்லை.
நாட்டின் முன்னேற்றத்துக்கு சுகாதார மேம் பாடும் முக்கியம். நிலைமை வேறாக உள்ளது.
கிராமத்தில் அனைவருக்கும் அடிப்படை மருத்துவ வசதி அத்தனையும் கிடைக்க வேண்டும். கனடா நாட்டிற்கு மேல்படிப்பு பயிற்சிக்காகச் சென்றிருந்தபோது அங்கு நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் அவச ரமாகக் கொண்டு வருவதைக் கண்டு வியந்து போனேன். நம் நாட்டில் அவசர சிகிச்சைப் பிரிவு அடித்தளத்தில் இயங்குவது போல் டொரண்டோ நகரில் 20-வது மாடியின் மேல் தளத்தில் குழந்தைகள் மருத்துவமனை இயங் குவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
அங்கே கனடா மக்களின் உயிரைக் காக்க உல கத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளை காப் பீட்டு உதவியுடன் அரசுதான் நடத்து கிறது. பச்சிளங் குழந்தைகளின் உயிர் காக்க ஹெலிகாப்டர்கள் விரைந்து வருகின்றன. இங்கே வெள்ளத்தில் எத் தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்பதனைப் பார்க்க அமைச்சர் பெரு மக்களையும் அதிகாரிக ளையும் தான் ஹெலிகாப் டர் சுமந்து வருகிறது.
என்ன வித்தியாசம்! தாஜ்மகாலை உலக அதிசயம் என்று கொண்டாடுகிறோம். ஆனால் அது தன் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய காதல் மாளிகை என்றுதான் பலருக்குத் தெரியும்.
ஆனால் அவரது மனைவியார் பிரசவத்தின் போது இறந்ததையடுத்து அந்த தாஜ்மகால் கட்டப்பட்டது என்பது தனி முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் ஒரு மருத்துவராக அந்த தாஜ்மகாலைப் பார்க்கும்போது எனக்கு அதன் கலைநயம் கண்ணுக்குத் தெரி யாது. பிரசவகால மரணங்களைத் தடுக்கும் ஒரு சின்னமாக இருக்க வேண்டும் என்ற எண் ணமேதான் மேலோங்கும். நமது மருத்துவர் கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அமெரிக்கா வில் மட்டும் இருக்கிறார்கள் என்பது பெரு மையாக இருக்கிறது. அதனால் நம் நாட்டுக் குப் பயனில்லையே.
நம் நாட்டில் ஏறத்தாழ 450 மருத்துவக் கல் லூரிகளில் ஆண்டுக்கு 30,000 மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றும், இன்னமும் கிரா மப் பகுதிகளில் தேவையான மருத்துவர்கள் இல்லை. 75 சதவிகிதம் இந்தியர்கள் கிராமத் தில் வாழ்ந்தாலும், அங்கே பணிபுரிவது வெறும் 20 சதவிகிதம் மருத்துவர்கள் மட் டுமே. போதாக்குறைக்கு அங்கே போலி மருத் துவர்கள் தொல்லை வேறு.
வெளிநாடு சென்ற மருத்துவர்கள் குண் டுக்கு அஞ்சி திரும்பியிருக்கிறார்களே தவிர, தொண்டு செய்வதற்காகத் திரும்பி வருவதில் லையே? 2020-ல் வல்லரசு நாடுகளில் ஒன் றாக நம் நாடு வளர வேண்டும் என்று நாம் கனவு காணும் வேளை யில், மகப்பேறு காலத்தில் தாய்மார் கள் உயிரிழக்கும் பரிதாபம், பெண் சிசுக்கொலை, பச்சிளம் குழந்தைக ளின் மரண விகிதம் போன்றவை இன்னும் நம் நாட்டில் அதிகமாகக் காணப்படுகின்றன. பிர சவ கால உயிரிழப்பை வளர்ந்த நாடுகள் தடுத் துவிட்ட நிலையில் நம் நாட்டில் அது தொட ரும் அபாயம் உள்ளது.
கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக் கடிக்கும், நாய்க் கடிக் கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் உயிரிழப்பு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கி றது. இதுபோன்ற அவல நிலையை அடி யோடு நிறுத்த, மத்திய சுகாதாரத்துறையின் கிராமப்புற சேவைத்திட்டம் வரவேற்கத்தக் கதே. ஆனால் இளம் மருத்துவர்களைப் படித்து முடித்த கையோடு கிராமப்புறத்திற்கு அனுப்பி வைப்பதால் மட்டும் கிராமங்களில் மருத்துவத் தேவைகள் பூர்த்தியாகி விடாது.
கிராமப்புற மருத்துவப் பணிக்கான அடிப்ப டைக் கட்டமைப்பைச் சரி செய்ய வேண்டும்.
பணிமுதிர்ச்சி பெற்று ஓய்வு பெற்ற மருத்து வர்களை, கர்நாடக அரசு செய்வது போல் பணியமர்த்தி அவர்களின் மேற்பார்வையில் இளம் மருத்துவர்கள் கிராமங்களில் பணி யாற்றச் செய்யலாம். அவர்களுக்கான ஊதி யம் 8 ஆயிரம் என்பது இந்தக் காலகட்டத்தில் குறைவு என்பதை அரசு உணர்ந்து அதிகப்ப டியான ஊதியத்தை பணி ஊக்கக் கொடை யாக அளிக்க வேண்டும்.
அவர்கள் பணி செய்யும் இடங்களில் தங்கு மிடம், தொலைபேசி வசதி, வாகனவசதி எல் லாம் செய்து தர வேண்டும். மருத்துவக் கல் லூரிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தத்தெ டுத்து – ஆண்டு முழுவதும் மருத்துவ மாண வர்களை பயிற்சி காலத்திலேயே கிராம சேவைக்குப் பழக்க வேண்டும்.
ஒரு பக்கம் டெலிமெடிசின், மெடிக்கல் டூரி ஸம் என்று பெருமை பேசிக் கொள்கிறோம்.
அதேநேரத்தில் கிராமங்களின் மருத்துவ அவ லங்களை மறக்கவோ, மறைக்கவோ கூடாது.
ஏழை மக்களின் வரிப்பணத்தில் இலவச மருத்துவக் கல்வி பெறும் மாணவர்கள் அவர் களுக்கு நன்றிக் கடனாக சிறிது காலம் சேவை செய்ய மறுத்து வெளிநாடு செல்ல நினைப் பது தவறுதான். இதில் போராடத் தேவை இல்லை. மருத்துவ மாணவர்கள் தங்கள் சமு தாயக் கடமையை உணர வேண்டும்.
கிராம சேவைத்திட்டத்தின் ஆழத்தைப் புரிந்துகொண்டு மருத்துவர்கள் இறைவ னுக்கு அடுத்தபடியானவர்கள் என்ற மக்க ளின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி நடந்து கொள்ள வேண்டும். அரசும் அதற் கேற்ற மாதிரித் திட்டங்களை வகுக்க வேண் டும். தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்க ளையும் இதில் கட்டாயமாக ஈடுபடுத்த வேண்டும்.
ஆசிரியர் தொழிலும் மருத்துவத் தொழி லும் புனிதமான பணிகளாக ஆண்டாண்டு காலமாகப் போற்றப்பட்டவை. எனவே மருத் துவர்கள் தங்களுக்குள் ஓர் ஆத்ம பரிசோ தனை செய்து கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் மருத்துவம் ஒரு சேவைத் துறையாக இருந்தது. தற்போது மருத்துவ மனை சார்ந்த தொழிலாகியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் இளம் மருத்துவ மாணவர்களுக்கு சேவைக்கான நல்வழி காட்ட வேண்டியது அனைவரது கடமை.
மருத்துவச் சேவைக்கான அரிய வாய்ப் பைப் பெற்ற மருத்துவ மாணவர்கள் படித்து முடித்தபின் ஓராண்டு கிராம மக்களுக்கு மருத்துவம் செய்வதைப் பெரும் பேறாகக் கருதி இன்முகத்துடன் ஏற்றுச் செல்ல வேண் டும்.
அங்கே ஏழைகளின் சிரிப்பில் இறைவ னைக் காணலாம். அவர்களை கருணையு டன் தொட்டு வைத்தியம் பார்த்தால் நோய் பறந்து விடும். அங்கேதான் நீங்கள் கடவுளாக மதிக்கப்படுவீர்கள்!

கட்டுரையாளர்: நிறுவனர், பெண்சக்தி இயக்கம்.
———————————————————————————————————————————————————————-
நல்லது நடக்கிறது!

சுதந்திர இந்தியாவில் மருத்துவச் சேவையில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். மருத்துவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளும் சென்னையில் இருக்கும் அளவுக்கு மற்ற பெருநகரங்களில் இல்லை என்றுதான் கூற வேண்டும். அதனால்தானோ என்னவோ, இந்தியா வின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், ஏன் உலகின் பல பாகங்களிலி ருந்தும் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் நோயாளிக ளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது.
தனியார் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும் தமிழக மருத்துவத்துறை, சாமானிய மக்களுக்குப் பயன்படும் அரசுத்துறை யில் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி யாருமே சிந்திப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் சொல்லப்போனால், அரசு மருத்துவம னைகளின் செயல்பாடு தனியார் துறைக்கு எள்ளளவும் குறையாத அளவுக்குத் தரத்திலும், சேவையிலும் இருக்கிறது என்று சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள். காரணம், அரசு மருத்துவமனைகளின் வெளிப்புறத் தோற்றமும், அன்றாடப் பராமரிப்பும்தான்! 29 மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகள்; 156 தாலுகா அரசு மருத்துவமனைகள்; 1418 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; இவையெல்லாம் போதாதென்று 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள். இத்தனை மருத்துவமனைகள் இருந்தும் மருத்துவச் சேவை அனைத்துத் தரப்பு மக்களையும் போய்ச் சேரவில்லை என் றால் அதற்கு முக்கியமான காரணம், மக்கள்தொகைப் பெருக்கம் தான்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியுள்ளவர் கள் கூடுமானவரை அரசு மருத்துவமனைகளை நாடுவதில்லை.
இதற்குக் காரணம் அவர்களது வறட்டு கௌரவம் அல்லது அரசு மருத் துவமனைகளில் சரியான சிகிச்சை கிடைக்காது என்கிற தவறான கண்ணோட்டம் போன்றவை. முடிந்தவரை அரசை நம்பாமல் தனி யார் மருத்துவமனைகளை நோயாளிகள் நாடும்போது, உண்மையி லேயே வசதியற்றவர்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு அரசு மருத் துவமனைகளுக்குக் கிடைக்கிறது என்பதால் அதுவும் ஒருவகையில் நல்லதுதான்.
இப்போதும்கூட, பெருவாரியான நோயாளிகள் மருத்துவச் சிகிச் சைக்கு அரசு மருத்துவமனைகளைத்தான் நம்பி இருக்கின்றனர் என்ப துதான் உண்மை நிலை. விபத்து சம்பந்தப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு மட்டுமே எடுத்துச் செல்லப்பட வேண்டும் என் கிற தவறான கண்ணோட்டம் இப்போதும் இருப்பதால், அவசர சிகிச் சைப் பிரிவுகள் எந்தவொரு நேரத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருக் கும் நிலைமை தொடர்கிறது.

தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் 11.5 லட்சம் பிரசவங்கள் நடைபெறுவதாகவும் இவற்றில் 6.5 லட்சம் பிரசவங்கள் அரசு மருத் துவமனைகளில்தான் நடைபெறுகின்றன என்கிற புள்ளிவிவரத்தை சமீபத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், கிராமப்புற மருத்துவ வசதிக்காகத் தமிழக அரசு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகவும் அறிவித்தி ருக்கிறார்.

இப்போதும், சுமார் அறுபது விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தனியார் மருத்துவமனைக ளில் பெரும் பணம் செலவழித்து சிகிச்சை பெற முடியாத நிலைமை தான். மருத்துவச் செலவுக்குக் கடன் வாங்கி அதனால் வறுமையில் வாடும் கிராமப்புறக் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மருத்துவச் சேவையை ஏழை எளியோரும் பயன்பெறும் வகையில் மாற்ற வேண்டும் என்கிற அரசின் நல்லெண்ணம் கட்டாயமாக வர வேற்கப்பட வேண்டிய விஷயம். இந்த விஷயத்தில், அரசு மருத்துவ மனைகளைத் துப்புரவு செய்தல், அடிப்படை வசதிகளை அதிகரித் தல் போன்றவைகளுக்குத் தன்னார்வ நிறுவனங்களையும், சமூக சேவை நிறுவனங்களையும் ஈடுபடுத்தினால் என்ன? அரசு ஏன்முயற் சிக்கக் கூடாது?

———————————————————————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 நவம்பர், 2007

தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் மீண்டும் தொடங்கியது

மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டுமென்று இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் விதிக்கு எதிராக தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களின் போராட்டத்தினை மீண்டும் தொடங்கியுள்ளார்கள்.

இது தொடர்பில் மருத்துவ மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வெவ்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள். அரசின் இந்தத் திட்டமானது உண்மையான கிராப்புற சேவையல்ல என்பது மாணவர்களின் வாதமாகவுள்ளது.

இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாகவுள்ள நிலையில் மருத்துவப் படிப்பை ஆறு ஆண்டுகளாக அதிகரித்தால் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருவது குறைந்துவிடும் எனவும் மாணவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தியாவில்தான் உலக அளவில் குழந்தைகள் இறப்பு அதிமாக இருக்கிறது என்றும் 73 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்ற காரணத்தினாலும், கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு எண்ணுகிறதாலும்தான் இவ்வாறான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுத்துவருகிறது என்று இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணிசெய்யவேண்டும் என்பது இருந்தது என்றும், காலகட்டத்தில் அது இல்லாமல் போனது என்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் கூட இன்னமும் ஐந்து அல்லது பத்தாண்டுகள்தான் இருக்கும் எனவும் அமைச்சர் அன்புமணி கூறுகிறார்.

இந்த சர்ச்சை குறித்து சுகாதார அமைச்சர், மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களை நியமிக்க கோரி பா.ம.க., போராட்டம்: ராமதாஸ்துõத்துக்குடி: “தமிழகத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் போதுமான டாக்டர்களை நியமிக்கக்கோரி பா.ம.க., போராட்டம் நடத்தவுள்ளதாக’ அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

துõத்துக்குடியில் அவர் கூறியதாவது: முதல்வர் கருணாநிதியை சந்தித்த மருத்துவ மாணவர்கள், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இன்று வரை நுõதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நானும் ஒரு டாக்டர் தான். டாக்டர்கள் நலனுக்கெதிராக செயல்பட மாட்டேன்.

“கடந்த ஆட்சியில் மாதம் எட்டாயிரம் ரூபாயில் தொகுப்பூதியத்திற்கு அரசு டாக்டர்களை நியமித்த’ ஜெயலலிதா, தற்போது கிராமப்புற சேவையை எதிர்த்து போராடுவது கண்டனத்திற்குரியது. மருத்துவ மாணவர்களின் ஓராண்டு கட்டாய கிராமப்புற சேவை, வெறும் பேச்சளவில் தான் உள்ளது. அரசாணையோ, பார்லியில் சட்ட முன்வரைவோ, மசோதாவோ தாக்கல் செய்யப்படவில்லை. பிரச்னை விவாதப்பொருளாகத்தான் உள்ளது.

கட்டாய கிராமப்புற சேவை குறித்து மருத்துவ மாணவர்களிடம் மூன்று மணி நேரம் பேசிய மத்திய அமைச்சர் அன்புமணி, மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் குழு அமைத்தார். எந்த மாநிலத்திலும் இல்லாத போராட்டம் தமிழகத்தில் நடக்கிறது. மத்திய அமைச்சர் அன்புமணி டில்லியில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களும், கிராமப்புற சேவை திட்டத்தை வரவேற்று உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் அதில் கலந்து கொண்டார். கையெழுத்து வேண்டுமானால் அமைச்சர் போடாமல் இருந்திருக்கலாம். தமிழக அமைச்சர் அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது ஏன்?

கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவ மாணவர்களுக்கு கிராமப்புற சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், அவர்கள் அபராதத்தை செலுத்த வேண்டும். நமது நாட்டு மருத்துவமனைகளில் அமெரிக்க தர சிகிச்சை தருவதற்குத்தான், மத்திய அரசு கட்டாய கிராமப்புற சேவை திட்டத்தை கொண்டு வருவதாக கூறியுள்ளது.

இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை துõண்டிவிட்டு அதை அரசியலாக்குகின்றனர். தமிழகத்திலுள்ள ஆயிரத்து 417 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரம் டாக்டர்களின் பணியிடம் காலியாக உள்ளது. நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அங்கு சென்று டாக்டர்கள் பணியாற்றலாம்.

அரசு மருத்துவக் கல்லுõரியில் படிக்கும் ஒரு மாணவருக்கு டாக்டராவதற்கு மக்கள் வரிப்பணம் ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்து 645 டாக்டர்கள் படிப்பு முடிந்து வெளியே வருகிறார்கள்.

கிராமப்புற கட்டாய சேவை குறித்து மருத்துவ மாணவர்களுடன் பேச நானும், மத்திய அமைச்சர் அன்புமணியும் தயாராகவுள்ளோம். அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள டாக்டர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரியும், அங்கு மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த பா.ம.க., முடிவு செய்துள்ளது. அதுகுறித்து வரும் 3ம் தேதி நடைபெறும் கட்சி செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
————————————————————————————————————–

“அன்புமணிக்கு அருகதை இல்லை’: தா. பாண்டியன்

சென்னை, டிச. 14: எங்களைப் பற்றி பேச மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கு அருகதை இல்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பவர்களை, கிராம மக்களின் எதிரிகள் என்று அன்புமணி வர்ணித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸýம் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டை அனைத்துக் கட்சிகள் மீதும் கூறிவருகிறார். இதை இந்திய கம்யூனிஸ்ட் நிராகரிக்கிறது.

சிகிச்சை அளிப்பதால் மட்டுமே கிராம மக்களுக்கு சேவை கிடைத்துவிடும் என்று கூற முடியாது. கிராம மக்கள் சேவை என்றால், அவர்களுக்கு வேலை தரவேண்டும், தகுந்த ஊதியம், உற்பத்தி செய்கின்ற பொருள்களுக்கு நியாயமான விலை, கிராமங்களை இணைக்க தரமான சாலைகள், குடிநீர் வசதி மேலும் அங்குள்ள பள்ளிகளுக்கு சரிவர ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். இதில் கடைசியில் வருவதுதான் மருத்துவ சிகிச்சை.

கேபினட் அமைச்சர் என்ற வகையில் அன்புமணி அங்கம் வகிக்கும் மத்திய சுகாதாரத் துறை, ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆகிய உயர் கல்வித் துறைகளில் இதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடம் ஒதுக்கவில்லை.

கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவராவது இந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளனரா? அல்லது ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளனரா? என்ற விவரத்தை அன்புமணி வெளியிடவேண்டும்.

அதன் பின்னரே கிராம மக்கள் மீது அவர் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கைமீது இதுவரை நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்படவில்லை.

உண்மையில் கிராமப்புற சேவை செய்யவேண்டும் என்றால், மத்திய அமைச்சரவை செய்யத் தவறி இருப்பதை அன்புமணி கண்டித்திருக்கவேண்டும். இதைச் செய்யத் தவறிய அவருக்கு, குறைகளைச் சுட்டிக் காட்டும் எங்களைக் குறித்துப் பேச அருகதை இல்லை.

எம்.ஆர்.எஃப். தொழிலாளர் பிரச்னையை சுமூகமாக தீர்த்துவைத்து, கதவடைப்பை நீக்க நிர்வாகம் முன்வரவில்லை என்றால் அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏரி மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு லட்சம் குடியிருப்புகளை இடிக்கப்போவதாக அறிவித்திருக்கும் பொதுப்பணித் துறையின் எச்சரிக்கையை நிறுத்திவைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் கோவையில் விமான நிலைய விரிவாக்கத்துக்காக, மக்கள் குடியிருக்கும் பகுதிகளை இடிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதை தவிர்க்க மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துவதாக கருணாநிதி தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னையைப் போக்க, அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்து மின் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் தா. பாண்டியன்.
————————————————————————————————————–

Posted in +2, AIIMS, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Biz, Business, Childbirth, Children, City, Clinic, College, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Compulsory, Consumer, Cost, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Critic, Customer, Doctor, Economy, Education, Empty, Engg, Engineer, Engineering, Extortion, facilities, Females, Force, Foreign, Free, GH, GI, Govt, Graduate, Graduation, Health, Healthcare, Higher, Hospitals, HSS, Info, infrastructure, Justice, Law, MBBS, MD, medical, Medicine, Metro, MMC, Money, Moore, Munnabai, Munnabhai, Needy, ObGyn, Op-Ed, Operation, Opportunity, Permanent, PlusTwo, Poor, Postgraduate, Postgraduation, Practice, Pregnancy, Private, Ramachandra, Ramadas, Ramadoss, Rich, Rich vs Poor, Royapettah, Rural, School, seats, service, Sicko, Specialization, Stanley, State, Statistics, Stats, Study, Suburban, surgery, University, Urban, voluntary, Volunteer, Wealthy, WHO, Women | 14 Comments »

Arts club for Mentally disabled in Chennai – Rasa

Posted by Snapjudge மேல் ஜூலை 13, 2007

மனவளர்ச்சி குன்றியோரின் கலைக் குழு: “ரஸா’ அமைப்பு உருவாக்குகிறது
மனவளர்ச்சி குன்றியோரின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையிலும், அந்தத் திறமையின் மூலம் அவர்கள் வருவாய் ஈட்ட உதவும் விதத்திலும் “சிறப்பு கலைக் குழு’வை சென்னையைச் சேர்ந்த “ரஸா‘ (ரமணா சூன்ருத்யா ஆலயா) அமைப்பு உருவாக்குகிறது.

இதற்காக 14 முதல் 30 வயதுக்கு உட்பட்ட மனவளர்ச்சி குன்றிய 15 பேரை வரும் 21-ம் தேதி கலைத்திறன் தேர்வுகளை நடத்தி, தேர்ந்தெடுக்க உள்ளதாக அமைப்பின் நிறுவனர் -இயக்குநர் டாக்டர் அம்பிகா காமேஷ்வர் தெரிவித்தார். 1989 அக்டோபரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கலைத்திறனை வளர்க்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. இங்கு பயிலும் மாணவர்களிடம் எத்தகைய கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.

ரஸா‘ நடத்தும் சிறப்புப் பள்ளியில் மன வளர்ச்சி குன்றிய 100 பேர் தற்போது பயின்று வருகின்றனர். அவர்களுக்கு இசை, நாட்டியம், நாடகம், முக பாவங்களுடன் கதை சொல்லுதல் உள்ளிட்ட கலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வப்போது ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களது திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், முழுக்க முழுக்க மன வளர்ச்சி குன்றியோரை மட்டுமே கொண்ட கலைக் குழுவை உருவாக்க வேண்டும் என்பது “ரஸô’வின் நோக்கம்.

கலைக் குழுவில் இடம்பெறத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இலவச பயிற்சி தரப்படும். பயிற்சிக் காலத்தில் அவர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு “ரஸா, 1/1 அபிராமபுரம் முதல் தெரு, சென்னை -600 018′ என்கிற முகவரியிலோ, 2499 7607, 6528 1970 என்கிற தொலைபேசிகளிலோ தொடர்பு கொள்ளலாம்.

Posted in Arts, Chennai, Dance, Disabled, Drama, Free, Help, Madras, music, Narration, Performance, Rasa, service, Stage, Story, Students, Teach, Theater, Volunteer | Leave a Comment »

State of the Justice System in India (BMW case: NDTV exposes prosecution-defence nexus)

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

வழக்கறிஞர்களுக்கு “தண்டனையே’ கிடையாதா?

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

ஒரு சாலை விபத்து (பி.எம்.டபிள்யூ.) வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரும், எதிரியின் வழக்கறிஞரும் சேர்ந்து சாட்சியத்தைக் குலைப்பது பற்றி பேசிக்கொண்டதை என்.டி.டி.வி. சில வாரங்களுக்குமுன் அம்பலப்படுத்தியதைப் பார்த்திருப்பீர்கள்.

அந்த வழக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னால் தில்லியில் நடந்த சாலை விபத்து பற்றியது. கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் குடிபோதையில் காரை ஓட்டி, பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த சிலரைக்கொன்றது பற்றியது அந்த வழக்கு. அவர் ஓட்டிய கார் பி.எம்.டபிள்யூ. என்ற வெளிநாட்டுக் கார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சி குல்கர்னி என்பவர். அரசுத் தரப்பு ஏதோ காரணத்துக்காக அவரை சாட்சிக் கூண்டில் ஏற்றவே இல்லை!

எதிரியின் வழக்கறிஞர் (பிரபலமான வழக்கறிஞர், காங்கிரஸ்காரரும் கூட), அரசுத் தரப்பு வழக்கறிஞர் (இவரும் பிரபலமான வழக்கறிஞர்தான். ஒரு ரூபாய் கட்டணம் மட்டுமே போதும், குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவேன் என்று தானாக முன்வந்தவர்) இருவரும், முக்கிய சாட்சியுடன் ஏதோ அன்னியோன்னியமாகப் பேசிக்கொண்டிருந்ததை என்.டி.டி.வி.யின் ரகசிய கேமரா படம் பிடித்துக் காட்டியது. அரசுத் தரப்பு வழக்கறிஞர், சாட்சியாக இருப்பவருக்கு “”புளூ லேபிள்” ஸ்காட்ச் விஸ்கியைக் காட்டி, குடிக்கிறீர்களா என்று கேலியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். எதிரியின் வழக்கறிஞரோ, அந்த சாட்சியை ரகசியமாகச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

இந்தக் காட்சிகள் பல வட்டாரங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. வழக்கறிஞர்கள், பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்பதை அவை உணர்த்தின. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொலைக்காட்சியின் கலந்துரையாடலில் கலந்து கொண்ட தில்லி பார் கவுன்சில் தலைவர் மனான் அறிவித்தார். அதெல்லாம் நடக்காது, இரண்டு வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை இருக்காது, எல்லாவற்றையும் பூசி மெழுகிவிடுவார்கள் என்று அதே நிகழ்ச்சியில் நான் முடிவுரையாகத் தெரிவித்தேன். அந்த இருவரையும் சில நாள்களுக்கு மட்டும் “சஸ்பெண்ட்’ செய்து, மீண்டும் பணிக்குச் செல்ல அனுமதித்துவிட்டனர்.

அந்த வழக்கின் முழு விவரமும் என்னிடம் கிடையாது – இரு வழக்கறிஞர்களும் அவர்களுடைய பதவிக்குப் பொருந்தாத எதையும் செய்தார்களா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எதிர்காலத்தில் இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் வரக்கூடும். இப்போது நம்முடைய கவலை இந்த வழக்கு எப்படிப் போகிறது என்பதல்ல.

நம் நாட்டில் எந்தத் தொழில் செய்கிறவர் ஆனாலும் அவர் மக்களால் அலசப்படுகிறார். அரசு அதிகாரிகள், டாக்டர்கள், பொறியாளர்கள் என்று அனைத்து தரப்பாரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மக்களால் விமர்சிக்கப்படுகிறார்கள். அதே போல வழக்கறிஞர்கள் சமூகத்தை யாரும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதில்லை. வழக்கறிஞர்களின் குணாதிசயங்கள், தொழில்நடத்தும் விதம், பொதுவாக அவர்கள் நடந்துகொள்ளும் முறை ஆகியவை குறித்து ஊடகங்களும், பொதுவிஷயங்களில் அக்கறை உள்ள அமைப்புகளும் வெகு நெருக்கத்திலிருந்து ஆராய வேண்டும்; அந்த ஆய்வு முடிவை மக்கள் அறிய வெளியிட வேண்டும்.

என்னுடைய இளவயதில் மாவட்டங்களில் மாஜிஸ்திரேட்டுகளுடன் எனக்கு முதல் பரிச்சயம் ஏற்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் கிராமங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள மக்கள் வழக்கறிஞர்கள் பற்றிச் சொன்னதன்மூலம் பல விஷயங்கள் தெரிந்தன. வட இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் வீடு, நிலம் தொடர்பாக ஏதாவது ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. ராணுவத்திலோ, நகரில் கிடைக்கும் சிறு வேலைகளிலோ கிடைத்த சொற்ப வருவாயை மக்கள் இந்த வழக்குகளுக்காகச் செலவிட்டனர். அதாவது அவை வழக்கறிஞர்களின் பைகளை நிரப்பின.

சாதாரண வழக்குகூட ஆண்டுக்கணக்கில் நீடித்தன, அல்லது நீட்டிக்கப்பட்டன. சில வழக்குகளில் வாதி, பிரதிவாதியின் மறைவுக்குப் பிறகு கூட வழக்குகள் பைசலாகாமல் நீடித்தன. உள்ளூர் போலீஸôர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இவற்றில் பங்கு இருந்தது. நம் ஜனநாயகத்தில் எல்லா துறைகளுக்கும், நடைமுறைகளுக்கும் உள்ள சாபக்கேடு இதற்கும் வந்து சேர்ந்தது, அதாவது பணக்காரர்களுக்குச் சாதகமாகவே நீதிமன்ற நடவடிக்கைகள் அமைந்துவிடுகின்றன.

வழக்குகளில் வாய்தா வாங்குவதிலேயே திறமைசாலியான ஒரு வழக்கறிஞர் குறித்து, வழக்கு விசாரணையின்போது நீதிபதியே சுட்டிக்காட்டினாராம்; அதையே அவர் தனக்கு அளித்த சான்றிதழாகக் கருதி பிற வழக்கு விசாரணையின்போதும் குறிப்பிட்டு வாய்தா வாங்கிவிடுவாராம். இதை அந்த தொலைக்காட்சி கலந்துரையாடலில் பேசிய தில்லி பார் கவுன்சில் தலைவர் குறிப்பிட்டார்.

நம் நாட்டு நீதிமுறை குறித்து எழுதிய புத்தகத்திலும் இதைப்பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். வழக்கறிஞர்கள், நீதிமன்றம் ஆகியவற்றுக்குத் தரப்படும் முக்கியத்துவம் வழக்கில் சம்பந்தப்படும் ஏழைகளுக்குத் தரப்படுவதில்லை.

தில்லி தந்தூர் வழக்கில், முக்கிய எதிரிக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியபோது மக்களிடம் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. கொலை நடந்து 8 அல்லது 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஒரே சாட்சி ஒரு போலீஸ்காரர்தான். அவருக்கு சம்பளம்கூட அதிகம் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு எவ்வளவோ பணத்தாசை காட்டியிருக்க முடியும், அல்லது தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றிவிடுவோம் என்று மிரட்டியிருக்க முடியும். எது எப்படி இருந்தாலும் நீதிக்காக நிலைகுலையாமல் நின்ற அந்த ஒரே சாட்சி காரணமாகத்தான் எதிரிக்கு தண்டனை விதிக்க முடிந்தது. இதில் கேள்வி என்னவென்றால், எப்படி ஒரு சாதாரணமான வழக்கு இத்தனை ஆண்டுகளுக்கு இழுத்துக் கொண்டே போகிறது என்பதுதான்.

அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன் நகரங்கள் மீது பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அரிசோனா மாநிலத்தில் இந்திய சீக்கியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை நடந்து முடிந்து தாக்கியவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது. நம் நாட்டிலும் இப்படி ஏன் விரைந்து வழக்குகளை முடிக்கக் கூடாது? கொலைவழக்காக இருந்தால் ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை ஏற்கிறீர்களா இல்லையா? மூத்த அரசியல்வாதி அல்லது அதிகாரி என்றால் அவர் மீதான லஞ்ச, ஊழல் வழக்கையும் ஓராண்டுக்குள் விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என்பதை ஏற்பீர்களா?

வழக்கறிஞர்களை மேற்பார்வையிடவோ, கண்காணிக்கவோ யாரும் இல்லை என்ற எண்ணமே சில வேளைகளில் தோன்றுகிறது. பார் அசோசியேஷன் என்பது வழக்கறிஞர்களுடன் தோழமை உள்ள அமைப்பு. பார் கவுன்சில் என்பது வழக்கறிஞர்கள் பணி சட்டத்துடன் தொடர்புள்ளது. அது வழக்கறிஞர்களின் வேலையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டுவர எப்போதாவது முயற்சி செய்துள்ளதா? வழக்கறிஞர்களைக் கண்காணிப்பதை நீதிமன்றங்கள் செய்ய முடியும், ஆனால் அவையும் அப்படி எதையும் செய்வதில்லை.

1960கள் வரை நீதித்துறையும் நிர்வாகத்துறையும் தனித்தனியே பிரிக்கப்படவில்லை. அப்போது மாவட்ட நிர்வாகம் வழக்குகளைக் கண்காணித்து வந்தது. எத்தனை வழக்குகள் தாக்கலாகின, எத்தனை விசாரிக்கப்பட்டன, எத்தனையில் இறுதித் தீர்ப்பு வந்தது என்று தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட்டவுடன் நிர்வாகம், கண்காணிப்பு வேலையை விட்டுவிட்டது.

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தியாவில் நீதித்துறையின் கீழ் நிலையில் ஊழல் இருக்கிறது, இதன் மதிப்பு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி என்று தெரிவித்தது.

வழக்கறிஞர் தொழிலில் என்ன நடக்கிறது என்று அக்கறை காட்டப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. இது வழக்கறிஞர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது. சூரிய வெளிச்சம் எங்கு பாயவில்லையோ அங்கு பாச்சைகளும் கரப்பான்களும் பெருகி வளர்கின்றன. சூரிய ஒளி பட்டால் இவையெல்லாம் விலகி அங்கே தூய்மை நிலவும்.

(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)

——————————————————————————————–

தேவை, நீதித்துறை சீர்திருத்தம்

உ .ரா. வரதராசன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் தெரிவித்துள்ள கருத்து ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று.

“”தரக்குறைவாகவும், அவமதிக்கும் வகையிலும் நீதிபதிகளை வசைபாடுவது, சிலரது பொழுதுபோக்காக உள்ளது. இத்தகைய அறிக்கைகள் நீதிமன்றங்களை அவதூறுக்கு உள்ளாக்கி, அவற்றின் எதிர்காலத்தை மதிப்பிழக்கச் செய்ய முற்படுகின்றன; இவற்றை அனுமதிக்கவே முடியாது”, என்று கூறி, சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்ற அவமதிப்பைச் செய்த நபருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனையை அந்த நீதிபதிகள் வழங்கினர். அதே தீர்ப்பில், கண்ணியமான வார்த்தைகளில் ஒரு நீதிமன்றத்தின் கருத்தை நியாயமான முறையில் விமர்சிப்பதைப் பற்றி கேள்வி கேட்க முடியாது என்றும் தெளிவுபடச் சொல்லப்பட்டது.

இந்தத் தீர்ப்பு, நாளிதழ்களில் வெளியான அதே நாளில், உலக ஊழல் அறிக்கை – 2007 என்ற ஓர் ஆவணத்தை இணையதளத்தில் காண நேரிட்டது. சர்வதேச ஊடுநோக்கி ( பழ்ஹய்ள்ல்ஹழ்ங்ய்ஸ்ரீஹ் ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப்) என்ற அமைப்பின் அறிக்கை நீதித்துறையில் உள்ள ஊழலைப் பற்றியது.

உலகில் இன்று நிலவும் ஊழலின் பரிமாணம் மலைக்க வைப்பதாக உள்ளது. உலகம் முழுவதிலும் ஊழலில் கசிந்து விரயமாகும் நிதியைக் கணக்கிட்டால் அது ஆண்டொன்றுக்கு 30 லட்சம் கோடி டாலர்கள் என்ற வரம்பைத் தாண்டுகிறது என்று ஒரு கணிப்பு தெரிவிக்கிறது. இது ஒருவேளை மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடாக இருக்கலாம். ஆனால் உலக நாடுகள் அனைத்திலும் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, நீதி ஆகிய அனைத்துத் துறைகளையும் இந்த ஊழல் கரையான் செல்லரித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை கசப்பானதும் கவலைக்குரியதுமாகும்.

இதில் நீதித்துறையில் ஊழல் என்பது, மற்ற அனைத்துத் துறைகளையும்விட அபாயகரமானது. மற்ற துறைகளில் நிலவும் ஊழலால் பாதிக்கப்படுகிற எவரும், அவற்றுக்கு எதிராக நீதித்துறையின் தலையீட்டையே நாடுவது இயல்பானது. ஆனால், பரிகாரம் தேடிப் போகும் நீதி தேவதையின் சன்னிதானமே ஊழல் கறை படிந்து காணுமானால், வேறு புகலிடம் ஏது?

ஒருவர் தமக்களிக்கப்படும் அதிகாரத்தைத் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தும் எந்த நடவடிக்கையும் ஊழலேயாகும். அந்த ஆதாயங்கள் பணமாகவோ, பொருளாகவோ, வேறுவகைப்பட்டதாகவோ இருக்கலாம். நீதித்துறை ஊழல் என்பது நீதி பரிபாலன முறைமைக்கு உள்ளிட்டு செயல்படும் எவரும், அதன் பாரபட்சமற்ற செயல்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் செல்வாக்கு செலுத்துவதன் சகல அம்சங்களையும் உள்ளடக்கியதே! இதை அளவிட்டு அறிவதற்காக 62 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளே இந்த உலக ஊழல் அறிக்கையில் விரிவாக இடம் பெற்றுள்ளன.

நீதித்துறையில் ஊழல் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று, நீதித்துறையின் செயல்பாட்டில் அரசியல் தலையீடுகளால் நிகழ்வது; மற்றது, நீதித்துறையின் பல மட்டங்களில் புகுந்துவிடும் லஞ்ச லாவண்யம் காரணமாக நடைபெறுவது. நீதித்துறையை அணுகும்போது, நியாயமான பாரபட்சமற்ற தீர்ப்பைப் பெறுகிற அடிப்படை மனித உரிமையை இந்த இருவகை ஊழலும் மறுக்கிறது. எந்த ஒரு நாட்டிலும் நீதித்துறையில் ஊழல் மலிந்தால், அங்கே ஆட்சி அதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுவது தவிர்க்க முடியாததாகி விடும். “”ஊழலா, அது எங்கள் நாட்டில் வாடிக்கையாகிப் போய்விட்ட விவகாரம்” என்று மக்கள் சகித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும்.

தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறவில்லையானால், அங்கே நீதித்துறையில் நாணல்போல் வளைந்து, ஊழலுக்கு இடமளிக்கும் நீதிபதிகள் இடம்பெறுவது இயல்பாகிவிடும்.

நீதிபதிகளுக்கான சம்பளம், ஊதிய நிலைமைகள், பாதுகாப்பற்ற சூழல், இடமாற்றல் அச்சுறுத்தல் போன்றவையும் நீதிபதிகளையும் நீதிமன்ற அலுவலர்களையும் ஊழல் நடைமுறைகளுக்கு இட்டுச் செல்லும்.

தவறிழைக்கும் நீதிபதிகளைத் தண்டனைக்கு உட்படுத்தவோ, பதவிநீக்கம் செய்யவோ உரிய ஏற்பாடுகள் இல்லையென்றாலும், நீதித்துறை ஊழலுக்கு உறைவிடமாகி விடும்; நேர்மையாகச் செயல்படும் நீதிபதிகளை ஆட்சியாளர்கள் விருப்பம்போல் பந்தாடும் சூழலும் அதே நிலைமைக்கே இட்டுச் செல்லும்.

நீதிமன்ற நடவடிக்கைகள் ஒளிவு மறைவு அற்றதாகவும், ஊழல் நடைமுறைகளைக் கண்காணிக்கிற ஏற்பாட்டுக்கு இடமில்லாமலும் அமையும் நிலை, நீதித்துறையை ஊழல் அரிப்பதற்கு வாய்ப்பாகி விடும்.

இந்த நான்கு அம்சங்களிலும், நீதித்துறையில் ஊழல் பரவாமல் தடுக்க, பல்வேறு பரிந்துரைகளை உலக ஊழல் அறிக்கை பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் நீதித்துறை ஊழல் பற்றிய ஓர் ஆய்வும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 2005ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கருத்தாய்வில் வெளிவந்த சில விவரங்களை இந்த அறிக்கை தொகுத்தளிக்கிறது.

“நீதித்துறை ஊழலின்றி செயல்படுகிறதா?’ என்ற கேள்விக்கு “இல்லை’ என்று பதிலளித்தவர்கள் 85 சதவிகிதம் பேர்! நீதித்துறை ஊழல் காரணமாகக் கைமாறும் தொகை ஆண்டுக்கு ரூ. 2,360 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீதித்துறை ஊழலுக்குப் பிரதான காரணங்களாக அமைவது, வழக்கு விசாரணையில் நேரிடும் காலதாமதம், நீதிபதிகளின் எண்ணிக்கைக் குறைவு, சிக்கலான நீதிமன்ற நடைமுறைகளேயாகும்.

2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் 33,635 வழக்குகள்; உயர் நீதிமன்றங்களில் 33,41,040 வழக்குகள்; நீதிமன்றங்களில் 2,53,06,458 வழக்குகள் நிலுவையில் இருந்தன. 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து – “”இனி புதிதாக ஒரு வழக்குகூடப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும்கூட, நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 350 ஆண்டுகள் பிடிக்கும்” என்பதாகும்!

இந்த நிலைமையில் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துவதற்கான குறுக்கு வழியாக ஊழல் இடம்பெற்று வருகிறது.

இந்தியாவில் சராசரியாக பத்து லட்சம் நபர்களுக்கு 12 அல்லது 13 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையிலேயே, நீதித்துறை நியமனங்கள் உள்ளன. இதே பத்து லட்சம் நபர்களுக்கு, அமெரிக்காவில் 107 நீதிபதிகள்; கனடாவில் 75; பிரிட்டனில் 51 என்ற அளவில் உள்ளனர். இதனால் தீர்ப்புகள் தாமதமடைகின்றன. நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

“தாமதித்து வழங்கிடும் நீதி, மறுக்கப்படும் நீதி’. ஆனால், சட்டத்தை மீறுகிறவர்களுக்கும், குற்றங்களைத் தொழிலாகக் கொண்டு செயல்படுபவர்களுக்கும், வழக்குகளின் தாமதம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விடுகிறது! நீதிபதிகளுக்கான “நீதித்துறை நன்னடத்தைக் கோட்பாடுகள்’ சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டது இந்தியாவில்தான்! 2002ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் உருவான இந்தக் கோட்பாடுகள்தான், பின்னர் 2006ஆம் ஆண்டில் ஐ.நா. சபை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், இந்தக் கோட்பாடுகள் நீதிபதிகளின் சுயவிருப்பத்திற்கிணங்கப் பின்பற்றப்பட வேண்டியவை மட்டுமே.

இதுமட்டுமல்ல, நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான குழு அறிக்கைக்கும், நீண்ட நெடிய விவாதங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு அறிகுறியே தென்படவில்லை!

நீதிமன்ற அவமதிப்பு அனுமதிக்கப்பட முடியாததுதான்; ஆனால், நீதித்துறையின் மதிப்பை உயர்த்துவது எப்படி, எப்போது?

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ)

————————————————————————————————–

நீதிதேவன் மயக்கம்
Dinamani – Op-ed (September 05 2007)

“”மக்களுக்கு நீதித்துறையின் மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது என்பது மட்டுமல்ல, தீர்வு காணப்படாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகளால் நீதித்துறை மீதான நம்பிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மக்களுக்கு நீதிபதிகள் மீதும் நீதித்துறையின் மீதும் மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமானால், வழக்குகள் அதிக காலதாமதம் இன்றி விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்”~இப்படி சொல்லியிருப்பது அரசியல்வாதியோ, சமூக ஆர்வலரோ, பத்திரிகையாளரோ அல்ல; நீதிபதிகள்.

வித்தியாசமான, அதேசமயம் மக்களின் மனஓட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு வழங்குவதில் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு நிகர் அவர்தான். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தீர்ப்பு வழங்குபவர் என்கிற பெயர் அவருக்கு எப்போதுமே உண்டு. 1957ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து மேல் முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் மாத்தூரின் முன் விவாதத்துக்கு வந்தபோதுதான் மேற்கண்ட கருத்தை அவர்கள் தெரிவித்தனர்.

அரை நூற்றாண்டு காலம் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தேங்கிக் கிடப்பது என்பது, நமக்கே எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தும்போது, சம்பந்தப்பட்டவர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

நாட்டிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் சுமார் 30 லட்சம் வழக்குகள் தீர்ப்பளிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இரண்டரைக் கோடிக்கும் அதிகமான வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. மிக அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உச்ச நீதிமன்றத்திலும் சரி, நிலைமையில் பெரிய அளவில் மாற்றமில்லை. சுமார் 39,780 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக 2006-ம் ஆண்டு புள்ளிவிவரம் கூறுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 4,06,958. கடந்த ஆண்டு கடைசியில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் இது. தமிழக விசாரணை நீதிமன்றங்களில் சுமார் மூன்றரை லட்சம் கிரிமினல் வழக்குகள் 31 மார்ச், 2007 நிலவரப்படி விசாரணையில் இருப்பதாகவும், இவற்றில் 26,800 வழக்குகள் சிறு குற்றங்கள் தொடர்பானவை என்றும் தெரிகிறது.

வழக்குகள் தேங்கிக் கிடப்பதால் இரண்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குற்றவாளிகள் பலர் தங்களுக்குப் பாதகமான தீர்ப்பு வராமல் வழக்கைத் தள்ளிப்போட்டுத் தப்பிக்க முயல்வது சகஜமாகிவிட்டது. சில வழக்குகளில் குற்றவாளிகள் மரணம்வரை தீர்ப்பு வழங்கப்படாமல் தப்பித்த சரித்திரங்கள் ஏராளம். இதனால், நீதியின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் அவநம்பிக்கை ஏற்படுகிறது.

அதேபோல, நிரபராதிகள் விடுவிக்கப்படாமல், அடிக்கடி நீதிமன்றங்களால் அலைக்கழிக்கப்படும்போது அது தர்மத்துக்கும் நியாயத்துக்கும் எதிரான செயல்பாடு என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. செய்யாத தவறுக்குத் தண்டனை பெறும் அவலநிலைக்கு நிகரானதுதான் இதுபோன்ற அலைக்கழிப்பு. நிரபராதி, தீர்ப்பு வழங்கப்படாமல் குற்றவாளி என்கிற களங்கத்துடன் காலவரையறையின்றித் தொடர்வது என்பது நீதிதேவனுக்கே அவமானம்.

உடனடி நீதி கிடைக்குமேயானால், லஞ்சமும் ஊழலும்கூடப் பெரிய அளவில் குறைய வாய்ப்பிருக்கிறது. ஒரு சராசரிக் குடிமகனுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் மறுக்கப்படும்போது, அவன் நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கேட்க முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டால், காலதாமதமின்றி அதுபோன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் பரிசீலித்துத் தீர்ப்பளிக்குமேயானால், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் பயமும் பொறுப்புணர்வும் ஏற்படும்.

தாமதமாகக் கிடைக்கும் நீதி என்பது கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் செய்கிற கதையைப் போன்றதுதான். பொதுமக்களை மட்டும் வருத்திக் கொண்டிருந்த இந்தப் பிரச்னை இப்போது நீதிபதிகளையும் சிந்திக்கவும் செயல்படவும் வைத்திருக்கிறது என்பது ஆறுதலைத் தருகிறது. நீதிதேவன், மயக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது!

——————————————————————————————————————–
நாட்டின் தேவை 5 ஆயிரம் புதிய கோர்ட் : தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தகவல்

சென்னை : “நாடு முழுவதும் ஐந்தாயிரம் புதிய கோர்ட்டுகளை துவக்கினால் தான் வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்’ என்று இந்திய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை ஜுடிசியல் அகடமி நடத்திய, “உரிய நேரத்தில் நீதி வழங்குவதற்கான தொழில்நுட்பம் மற்றும் கருவிகள்’ குறித்த மூன்று நாள் கருத்தரங்கின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.

தலைமை நீதிபதிபேசியதாவது :

நீதிபதிகள் தங்களுக்கு முன்பாக எந்த மாதிரியான வழக்குகள் வந்துள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடக்காமல், அது போன்றவற்றில் நீதிபதிகளே ஆர்வம் எடுத்து விரைவாக தீர்வு காண வேண்டும். மிகச் சாதாரணமான வழக்குகளை விரைவாக தீர்த்து விட வேண்டும்.

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநில நீதிபதிகள் மிகவும் மதிக்கப்படுவதோடு, தனித்தன்மையுடன் செயல்படுகின்றனர். சமுதாயத்துடன் நாம் செல்ல வேண்டும். வழக்கு தொடருபவர் நேரடியாக நம்மிடம் வருகிறார். அவர்களது பிரச்னையை நாம் அணுக வேண்டும். எவ்வளவு விரைவாக பிரச்னையை தீர்த்து வைக்கிறோமோ, அதற்கேற்ப அவர்கள் மகிழ்ச்சியடைவர். வழக்கு

மூலம் தங்களுக்கு ஏதாவது நிவாரணம் கிடைத்தால் அவர்கள் மகிழ்வர். எனவே, பிரச்னைகளை அறியும் கலையை நாம் தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற கருத்தரங்குகளால் நீதிபதிகள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறவும், அனுபவங்களை பற்றி பேசிக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கிறது. நமக்கு தெரியாமலேயே இதனால் நாம் பயனடைகிறோம்.

தமிழக அரசு 72 புதிய கோர்ட்டுகளை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. பல மாநில அரசுகளிடம் கோர்ட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சில முதல்வர்கள் உறுதியளிப்பர், ஆனால், விரைவில் நடைமுறைக்கு வராது.

புதிய கோர்ட்கள் :

வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பிரச்னையை தீர்க்க வேண்டுமானால் புதிய கோர்ட்டுகளை ஆரம்பிக்க வேண்டும். வேறு எந்த வழியிலும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. இந்தியாவில் 14 ஆயிரத்து 600 கோர்ட்டுகள் உள்ளன. மேலும் ஐந்தாயிரம் புதிய கோர்ட்டுகளை நாடு முழுவதும் அமைத்தால் தான், வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் வழக்குகள் குவிந்து கொண்டு தான் இருக்கும். மக்கள், நீதிபதிகள் மீது தான் குற்றம் சாட்டுவர். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.
மாதத்துக்கு நுõறு வழக்குகள் நீதிபதிகள் உத்தரவாதம் : சென்னை:

“மாதத்துக்கு நுõறு வழக்குகளை முடிப்பதாக நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்’ என்று, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கூறினார்.

நீதிபதிகளுக்கான பயிற்சி கருத்தரங்கில் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பேசியதாவது: நீதிபதிகளுக்கான கற்பித்தல் பணிமனைகளை மாவட்ட வாரியாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். சிறு விவகாரங்களுக்கான நீதிபதிகள் மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சென்னையில் உள்ள விரைவு நீதிமன்ற நீதிபதிகளிடம், வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் சராசரியாக எடுக்கப்படும் கால அளவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. எவ்வாறு இவற்றை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீதிபதிகளிடம் எந்தளவு தங்களது செயல்பாட்டை மேம்படுத்த முடியும் என்று கேட்ட போது, மாதத்துக்கு தற்போது 50 வழக்குகளை முடித்து வருவதற்கு பதிலாக நுõறு வழக்குகளை முடிப்பதாக உறுதியளித்துள்ளனர். ஐகோர்ட்டில் இரண்டு நிரந்தர, “லோக் அதாலத்’கள் அமைக்கப்படும். இதுதவிர, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்க மாதத்துக்கு இரண்டு, “லோக் அதாலத்’கள் தனியாக நடத்தப்படுகின்றன.

கோவை மற்றும் திருப்பூரில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட குறை தீர்ப்பு கூட்டத்தில், 143 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.1.54 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது; இது ஒரு சாதனை. கடந்த ஜூலை 5ம் தேதியில் இருந்து மாலைநேர கோர்ட்டுகள் செயல்படத் துவங்கிய பின், ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஒன்பதாயிரத்து 245 வழக்குகள் முடிக்கப்பட்டன.

ஐகோர்ட்டின் மத்தியஸ்தம் மற்றும் நிவாரண மையம் கடந்த ஜூன் முதல் மிக தீவிரமாக செயல்படுகிறது. இந்த மையத்தில் சென்னையில் 140 மத்தியஸ்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. “ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ்’ வழக்கை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்து முடித்ததற்காக கடந்த ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இரண்டாயிரத்து 196 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ரூ.70 கோடி மதிப்பிலான இந்த வழக்கு தான் இந்தியாவிலேயே மத்தியஸ்தம் மூலம் தீர்க்கப்பட்ட மிகப் பெரிய வழக்கு. இவ்வாறு ஏ.பி.ஷா பேசினார்.

Posted in 5000, AA, abuse, Accident, Alcoholism, Arms, Attorney, Balakrishnan, Blood, BMW, Bribery, Bribes, Capital, case, Congress, Corruption, Courts, dead, Delhi, Driver, Driving, Drunk, DUI, escape, Expose, Free, Guilty, HC, Hit, I U Khan, industrialist, Jail, Jethmalani, Judges, Justice, Launch, Law, Lawyer, legal, MP, Nanda, Nandha, NDTV, New, Order, Party, Police, Politics, Poor, Power, Prison, Prosecution, Punishment, R K Anand, Rich, Sanjeev, Sanjeev Nanda, Sanjiv, SC, Sentence, Sunil Kulkarni, Suspension, testimony, Wealthy, Witness | 1 Comment »

N Vittal – How to bring new synergy into current Agriculture practices: Marketing

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

வேளாண்மையும் “பெருந்தொழிலாக’ வேண்டிய நேரம்!

என். விட்டல்

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “”ரிலையன்ஸ்”, தகவல் தொடர்புத் துறையில் ஜாம்பவானாக உருவெடுத்துவரும் சுநீல் மித்தலின் “ஏர்-டெல்’ போன்ற நிறுவனங்கள் இப்போது வேளாண்மைத் துறையில் பெரும் அக்கறை எடுத்துவருகின்றன.

மிகப் பிரம்மாண்டமான அளவில் உற்பத்தி, விநியோகம், விற்பனை என்ற தங்களுடைய தொழில்துறை வெற்றி உத்தியை, வேளாண்மைத்துறையிலும் புகுத்த முயல்கின்றன.

“மனிதர்கள் காலில் போட்டுக்கொள்ளும் செருப்புகளும் பூட்ஸ்களும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன; வேளாண்துறையில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை மண்டிகளிலும், வெயிலும் தூசும் நிரம்பிய சந்தைகளிலும், வீதிகளிலும் கோணியைப் பரப்பி விற்கப்படுகின்றன’ என்று ஆமதாபாதில் இந்திய நிர்வாகவியல் மாணவர்களிடையே உரை நிகழ்த்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கவலையோடு குறிப்பிட்டிருந்தார்.

மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மூலம், பெருநகரங்களில் உள்ள அங்காடி வளாகங்களில் வேளாண் விளைபொருள்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு, “”பேக்” செய்யப்பட்டு, எடை, தரம், விலை குறியீடுகளுடன் விற்கப்படுமானால் லாலு சுட்டிக்காட்டிய முரண்பாடு மறைந்துவிடும். இது மட்டும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேறினால், இந்திய வேளாண்மைத்துறையில் “”மூன்றாவது புரட்சி” ஏற்பட்டுவிடும்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது கைக்கும் வாய்க்கும் எட்டுகிற நிலைமையில்தான் நமது உணவு தானிய உற்பத்தி இருந்தது. உணவு தானியத் தேவையில் தன்னிறைவு பெற்றவர்களாகக் கூட இல்லை. 1970-களில் அறிமுகப்படுத்தப்பட்ட “”பசுமைப் புரட்சி”யின் விளைவாக நிலைமை தலைகீழாக மாறியது. அதில் பங்கேற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் போன்றவர்கள் “”இரண்டாவது பசுமைப் புரட்சி” இப்போது அவசியம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

வறுமைக் கோட்டுக்குக்கீழே வாழும் ஏழைகளுக்காக இப்போது மீண்டும் கோதுமை, அரிசி போன்றவற்றை இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கிறோம்.

கிராமப்புறங்களில் ஏற்பட்ட இரண்டாவது புரட்சி, பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக நம்மை இடம் பெறச் செய்த “”வெண்மைப் புரட்சி”யாகும். அமுல் நிறுவனத்தின் தந்தையும் தலைசிறந்த நிர்வாகியுமான டாக்டர் வர்கீஸ் குரியனும், சிறந்த காந்தியவாதியும் கைதேர்ந்த கூட்டுறவு இயக்க நிபுணருமான டாக்டர் திரிபுவன்தாஸ் படேலும் இந்தப்புரட்சிக்கு முழுமுதல் காரணகர்த்தாக்கள். குஜராத்தில் மட்டும் எல்லா மாநிலங்களிலுமே பால் பண்ணைகள் பெருக இவர்களின் நடவடிக்கைகள் முன்னோடியாகத் திகழ்ந்தன.

பசுமைப்புரட்சி காலத்தில் உரிய நேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருள்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்தது. பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. வீரிய விதைகள் விநியோகிக்கப்பட்டன.

விவசாயிகள் சாகுபடி செய்யும் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது, சந்தையில் அந்த விலைக்குக் குறைவாக விற்கும் நிலைமை ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் திட்டத்தை இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலம் அமல்படுத்தியது, நெல், கோதுமை, சர்க்கரை போன்றவற்றை போதிய அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்ள கிடங்கு வசதிகளும், அவற்றுக்கு ரயில் பாதை இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.

இப்போது இந்திய வேளாண்மை பற்றிப் பேசினாலே முதலில் நினைவுக்கு வருவது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதுதான். பருத்தி சாகுபடியில் இறங்கியவர்களும், அதிக பொருள் செலவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வயலுக்கு அடித்தவர்களும்தான் அதிகம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதைத் தடுக்க, முதலில் விவசாயிகளை அழைத்து அவர்களின் மனத்தளர்ச்சி, விரக்தி மனப்பான்மை நீங்க, நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேச வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து மிகுந்த நம்பிக்கையோடு இறக்குமதி செய்யப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளும், அதிக விலைக்கு வாங்கப்பட்ட பூச்சிக் கொல்லிகளும் பலன் தராமல் பருவமழை பொய்த்ததால் கடன் சுமை அதிகரித்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அப்படி இறக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ஒரு லட்ச ரூபாயை உதவித்தொகையாகத் தருகிறது.

வறுமை தாளாமல் விவசாயக் கூலிகள் தவிக்கும்போது அவர்களுக்கு அரசின் உதவி உரிய முறையில் கிடைக்காமல் போவதால், நக்சல்களின் நெருப்புப் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு நக்சல்களாக மாறுகின்றனர்.

தற்கொலைக்கு அடுத்தபடியாக இந்திய வேளாண்மையை மிகவும் பாதிக்கும் அம்சம் உற்பத்தித் திறன் ஆகும். நம்மைவிடக் குறைந்த சாகுபடி பரப்பைக் கொண்டுள்ள சீனா, நம்மைவிட அதிக அளவு தானிய விளைச்சலைத் தருகிறது.

நிலத்திலிருந்து விளைவது குறைவாக இருப்பது ஒருபகுதி என்றால், விளைந்த தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையும் அறுவடை செய்து எடுத்து வரும்போது சேதாரப்படுத்துவதன் மூலம் 10 சதவீத உற்பத்தியை வீணாக்குகிறோம்.

எல்லா பருவகாலத்திலும் பூச்சி அரிக்காமல், பறவைகள், எலிகள் பாழ்படுத்தாமல் தானியங்களையும் இதர விளைபொருள்களையும் சேமித்து வைக்க கலன்கள், குதிர்கள், கிடங்குகள், குளிர்பதன வசதி இல்லாமல் 40 சதவீதம் வரை வேளாண் சாகுபடி வீணாகிறது.

ஓராண்டு சாகுபடி பற்றாக்குறையாக இருப்பதும் அடுத்த ஆண்டு உபரியாவதும் தொடர்கிறது. பற்றாக்குறையின்போது பணமே கிடைக்காமல் ஏழ்மையில் மூழ்க நேரிடுகிறது என்றால், உபரியின்போது கொள்முதல் விலை சரிந்து, போட்ட அசலைக்கூட எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 60 சதவீத பங்கைப் பிடிக்கின்றனர்.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தில் நேரடியாக ஈடுபட்டு, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீத அளவுக்கு மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.

இந் நிலையில் பெரிய தொழில்நிறுவனங்கள் இத் தொழிலில் ஈடுபட்டால் நிலங்களை வளப்படுத்துவது, பாசன வசதி அளிப்பது ஆகியவை விரிவான அளவில் நடைபெறும். அடுத்து தரமான விதைகள், விலைகுறைந்த இயற்கை உரங்கள், நவீன சாகுபடி உத்தி ஆகியவற்றைப் பின்பற்ற முடியும்.

திசு வளர்ப்பு மூலம் செடிகளையும் கொடிகளையும் வளர்ப்பது, ஒட்டுச் செடிகளைப் பயன்படுத்துவது என்று வேளாண்மையில் லாப நோக்குடன் புதியவை புகுத்தப்படும். அடுத்தபடியாக விளைபொருள்களைச் சேதம் இன்றி அறுவடை செய்வதும் கிடங்குகளுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் கொண்டு செல்வது சாத்தியம்.

இடைத்தரகர் இன்றி, உற்பத்தியாளருக்கும் கணிசமான தொகை கிடைக்கும் நுகர்வோருக்கும் கட்டுப்படியாகும் விலையில் பண்டங்கள் கிடைக்கும். கூட்டுறவுத்துறை வலுப்பெறும். உற்பத்தி, விநியோகம், விற்பனை போன்றவை விவசாயிகளுக்குச் சாதகமாக மாறும்.

அதன் பிறகு தொழில் நிறுவனங்களின் தலையீட்டால் ஏற்படும் மூன்றாவது வேளாண்மைப் புரட்சியானது “”விவசாயியைச் சார்ந்த வேளாண்மை” என்ற நிலைமையை மாற்றி, “”வேளாண்-வர்த்தகம் சார்ந்த வேளாண் தொழில்” என்ற நிலைமைக்குக் கொண்டு செல்லும்.

(கட்டுரையாளர்: முன்னாள் ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு ஆணையர்.)

——————————————————————————————-

காலச்சுழலில் கழனியும் உழவரும்

 

தமிழக விவசாயி காசி
தமிழக விவசாயி காசி

 

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அறுபது விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் விவசாயத்தையும் அதனைச் சார்ந்த தொழில்களையும் சார்ந்தே வாழ்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும் இப்போது பற்றாக்குறையைப் போக்க உணவு இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், தமிழகத்தில் மாறிவரும் விவசாயச்சூழல் மற்றும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பலவிதமான பிரச்சனைகள் குறித்து அன்பரசன் தயாரித்து வழங்கும் சிறப்புத் தொடர்.

———————————————————————————-

ரிலையன்ஸ் கடைகளுக்கு நிபந்தனை விதிக்க ராமதாஸ் யோசனை
சென்னை, ஜூலை 7: சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்களை விற்கக் கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

ரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட போன்ற பன்நாட்டு நிறுவனங்களும் சில்லறை வணிகத்தில் ஈடுபடத் தொடங்கி இருக்கின்றன. நகரங்கள் தோறும் கடைகளைத் திறந்து வைத்துள்ளன.

இதனால் பாரம்பரியமிக்க சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களும், சில்லறை வணிகக் கடைகளால் வேலை வாய்ப்பு பெற்று வரும் பல லட்சம் தொழிலாளர்களும் நடுத் தெருவுக்கு வரும் ஆபத்து உருவாகி வருகிறது.

இந்த ஆபத்தான நிலைமையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் சென்னை போன்ற நகரங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தாராள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் இந்த கடைகளால் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பல லட்சம் பேர் வேலை இழக்கும் ஆபத்து ஏற்படப் போகிறது.

கேரளத்தில் அனுமதி இல்லை: இந்நிலையில் பக்கத்து மாநிலமான கேரளத்தில் ரிலையன்ஸ் கடைகளுக்கு இனிமேல் அனுமதி வழங்குவது இல்லை என்றும் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அவற்றை ரத்து செய்வது என்றும் அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில் ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்று மிகக் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

கேரளத்தைப் போன்று தமிழகத்திலும் ரிலையன்ஸ் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். இனிமேல் அனுமதி வழங்கக் கூடாது என்று உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கு ஆணையிட வேண்டும். அல்லது மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனையைப் போன்று உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்ற நிபந்தனையாவது விதிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

———————————————————————————————————————————–

உதட்டளவு அக்கறை கூடாது…!

“விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு’ என்று தனது சுதந்திர தின உரையில் பிரதமர் வலியுறுத்தி இருப்பதும், விவசாயிகளுக்குப் பல சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள்.

உலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம், தாராளமயமாக்கல் போன்ற கோஷங்களுடன் இன்றைய பிரதமர், நிதியமைச்சராக இருந்தபோது இந்தியாவுக்கு ஒரு புதிய பொருளாதாரத் திட்டத்தை வகுத்ததுமுதல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ விவசாயிகளும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களும்தான்.

கடந்த 15 ஆண்டுகளில் விவசாயம் மிகக் குறைந்த ஊக்கத்தையும், வளர்ச்சியையும்தான் காண நேர்ந்தது என்பதைப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. கிராமப்புறங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை, நமது பொருளாதாரப் பத்திரிகைகளும் புதிய பொருளாதாரத் திட்ட விற்பனையாளர்களும் உருவாக்க முற்பட்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், விவசாயமும், விவசாயிகளும் இதுவரை சந்தித்திராத ஒரு சோதனையான கட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான்.

சமீபத்தில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமிஷன் ஒன்றின் அறிக்கையின்படி, கடனால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. ஆந்திரத்தில் 82 சதவிகிதம், தமிழகத்தில் 75 சதவிகிதம், பஞ்சாபில் 65 சதவிகிதம் விவசாயிகள், விவசாயத்திற்காக வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தவிக்கின்றனர் என்கிறது இந்த அறிக்கை. சராசரியாக, இந்திய விவசாயி ஒவ்வொருவரின் கடன் சுமையும் ஏறத்தாழ ரூ. 25,985 என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இப்படிக் கடன் சுமையில் சிக்கிக்கொள்ளும் விவசாயிகளில் பலரும், தனியாரிடம் கடன் வாங்கியவர்களாக இருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

லாபகரமாக இல்லாவிட்டால், ஏன் விவசாயம் செய்ய வேண்டும்? அந்த விளைநிலங்களைப் “ப்ளாட்’ போட்டு வீடு கட்டவோ, தொழிற்சாலை அமைக்கவோ பயன்படுத்திவிட்டு, நமக்குத் தேவையான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாமே? இப்படியொரு யோசனையை முன்வைக்கிறார்கள், புதிய பொருளாதாரக் கொள்கையின் விற்பனைப் பிரதிநிதிகள்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விவசாயிகளுக்கு ஏகப்பட்ட மானியங்களை அந்த அரசுகள் வழங்குகின்றன. தங்களது தேவைக்கு அதிகமாக உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கின்றன. நச்சுப் புகையால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை, இந்தியா போன்ற நாடுகளில் நிறுவ ஊக்குவிப்பதும், அவர்களது தேவைக்கான உணவுப் பொருள்களைத் தாங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதும் இந்த நாடுகளின் நோக்கம் என்று நாம் கூறவில்லை. ஆனால், அந்த நாடுகள் விவசாயத்துக்கு அளிக்கும் ஊக்கத்திற்கு என்ன காரணம் என்று யோசிக்கச் சொல்கிறோம்.

நமது விவசாயிகளுக்குத் தரும் விலையைவிட அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யும் போக்கு சமீபகாலமாகக் காணப்படுகிறது. வேண்டுமென்றே இந்திய விவசாயிகளை விவசாயத்தைப் புறக்கணிக்கச் செய்யும் முயற்சி நடைபெறுகிறதோ என்கிற சந்தேகம்கூட எழுகிறது. அது ஆபத்தை விலைகொடுத்து வாங்கும் செயல்.

ஒரு தேசத்தின் பாதுகாப்பு என்பது எல்லைகளைக் காக்கும் ராணுவத்திடம் மட்டும் இல்லை. தனது நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் தன்னிறைவிலும் இருக்கிறது. அடுத்த வேளைக் கஞ்சிக்கு அயல்நாட்டுக் கப்பலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுமானால், அதைவிட பலவீனமான நாடு எதுவும் இருக்க முடியாது. இதை எழுபதுகளிலேயே புரிந்து கொண்டிருந்ததால்தான், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி “பசுமைப்புரட்சி’ என்கிற கோஷத்துடன் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வழி வகுத்தார்.

இந்திரா காந்தியின் மருமகள் தயவால் பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங்கின், விவசாயிகள் மீதான அக்கறை உதட்டளவில் நின்றுவிடாமல் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று நம்புவோம். விவசாயம் சார்ந்த பொருளாதாரமாகத் தொடர்வதுதான் இந்தியாவின் வருங்காலத்துக்கு நன்மை பயக்கும்!

——————————————————————————————————————

இது புதுசு: நலம், நலமறிய ஆவல்!

வயதிலும் இளைமையாய் ஜொலிக்க வேண்டும் என்பது மக்களின் ஆசையாக இருக்கிறது. ஆனால் உலர்ந்த தலைமுடியைப் பராமரிப்பது எப்படி?, எண்ணெய் பிசுக்கான முகத்தைச் சரி செய்வது எப்படி?, சத்தான உணவு எது?…. என்பது போன்ற பல்வேறு தகவல்களையும் ஒரே இடத்தில் பெறுவது எப்படி என்ற கவலையும் கூடவே தொற்றிக் கொள்கிறது.

மக்களின் எந்தத் தேவையையும் உடனுக்குடன் தெரிந்து கொண்டு அதைப் பணமாக்கத் தெரிந்திருப்பதுதான் பிசினஸýக்கு அழகு. இதற்கு உதாரணமாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் மக்களின் இந்த ஆசையையும் பூர்த்தி செய்ய களமிறங்கியிருக்கிறது. ரிலையன்ஸ் வெல்னஸ் என்ற பெயரில் “ஆரோக்கிய வணிக’த்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

பரீட்சார்த்தமாக முதலில் ஆரம்பித்திருக்கும் இடம் ஹைதராபாத். விரைவில் பெங்களூர், சென்னை, மும்பை நகரங்களில் துவங்க இருக்கிறார்கள்.

இது குறித்து ரிலையன்ஸ் வெல்னஸ் நிர்வாக இயக்குநர் நினு கண்ணாவிடம் பேசினோம்.

“”மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஆனால் ஆரோக்கியம் என்பது ஆரோக்கிய உணவு, ஆரோக்கியம் குறித்த மருந்துகள், அது குறித்த புத்தகங்கள்- சி.டி.கள், உடற்பயிற்சி கருவிகள், யோகா பயிற்சி என பலதுறைச் சம்பந்தமுடையதாக இருக்கிறது. அதை ஒருங்கிணைப்பதற்குத்தான் இந்தத் திட்டம்” என்றார்.

இந்தியா முழுதும் 51 நகரங்களில் இப்படி 1200 நிலையங்களை ஆரம்பிக்க இருக்கிறார்கள். 1500 சதுர அடியில் இருந்து 3,500 சதுர அடி பரப்பில் இது அமையும். காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இயங்கும் இந் நிலையத்தில் இலவசமாக ஆரோக்கியம் குறித்த ஆலோசனை வழங்குவதற்கான மருத்துவர் ஒருவரும், கண் பரிசோதனை செய்வதற்கான மருத்துவரும் இருப்பார்கள். “”தோல் பொலிவு, தலைமுடி பராமரிப்பு, உயரம்- உடல் எடைக்கான விகிதம், சர்க்கரை அளவு போன்றவற்றுக்கான டிப்ஸ் தருவது மட்டும்தான் இந் நிலையத்தில் மருத்துவர் இருப்பதற்கான பிரதான நோக்கம். இது கிளினிக் போலவோ, அல்லது மருந்து கடை போலவோ நோயாளிகளைக் குணப்படுத்தும் இடமாக இல்லாமல், நோய் வராமல் தடுப்பதற்கான ஆரோக்கிய கூடமாகச் செயல்படும். இதற்காக மாதந்தோறும் ஹெல்த் புரோக்ராம்கள் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் அவர்.

அதே போல இங்கு பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் உடல்நிலை குறித்த தகவல்களையும் வெப்சைட்டில் தனிப்பக்கம் ஏற்படுத்திப் பதிவு செய்து வைத்திருப்போம். அதற்கான குறிப்பு அட்டை ஒன்றையும் அவர்களுக்கு வழங்குவோம். திடீர் விபத்து நேரங்களில் அவரைப் பரிசோதிக்கும் மருத்துவர், இந்தக் குறிப்பு அட்டை மட்டும் இருந்தால் அவருடைய ரத்த வகை என்ன, எந்த மாதிரியான அலர்ஜி உள்ளவர், முகவரி என்ன போன்ற தகவல்களை அந்த வெப்சைட்டில் சுலபமாகப் பெறமுடியும்” என்கிறார் நினு கண்ணா.

ரிலையன்ஸ் ஃப்ரஸ்ஸýக்கு சில இடங்களில் எதிர்ப்பு ஏற்பட்டது போல இதற்கு எதிர்ப்புகள் ஏற்பட்டதா? என்றோம். சிரித்துக் கொண்டே சொன்னார்.

“”இந்த நிமிடம் வரை எங்கள் நிலையம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது” .

Posted in Advice, Agriculture, Air-tel, Airtel, Ambani, Analysis, BBC, BigBox, BMI, Boom, Channels, Chat, Consultation, Consulting, Consumers, Cultivation, Customers, Diet, Distribution, Doc, Doctor, Drinks, Eat, Economy, Farmer, Farming, Fat, Fertilizer, Free, Freight, Goods, Growth, Health, Herbs, Ideas, Industry, Interviews, Investment, Lalloo, LalooY, Lalu, Luxury, Malls, Management, Manufacturing, Marketing, medical, milk, Mittal, Mktg, Necessity, Need, Nutrition, Op-Ed, Operations, Paddy, PMK, Podcast, Production, Protein, Ramadas, Ramadoss, Reliance, Reliance Fresh, Reliance Industries Limited, retail, Sell, service, Shopping, Shops, Snippets, solutions, Specials, Suggestions, support, Swaminathan, Tablets, Telecom, Tummy, Vendors, Vitamins, Wal-Mart, Walmart, weight, Wellness, Yadav | Leave a Comment »

Slum Clearance Board housing collapses – Daily Routine of the Poor

Posted by Snapjudge மேல் மே 30, 2007

விழுந்து நொறுங்கும் வீடுகள்: அலறும் குடும்பங்கள்

சென்னை, மே 30: 5-ம் வகுப்பு படிக்கும் மீனா, நண்பர்களுடன் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்து நொறுங்கியது. சாப்பாட்டில் மண். அலறியடித்து, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்தச் சம்பவம் சென்னை சாந்தோம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேற்கூரை விழுந்து நொறுங்கும் சம்பவம் அந்தப் பகுதியில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாகி விட்டது என்பதால் யாரும் அவ்வளவு கவலைப்படவில்லை. காரணம், மேற்கூரை இடிந்து விழும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

6 மாதங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் மாதவராஜ் என்பவர் உயிரிழந்தார்.

“”சென்னையில் குடிசைகளை அகற்றி அப்பகுதியில் குடியிருப்புகளை கட்டும் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது நொச்சிக்குப்பத்தில் தான். 786 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், கடந்த 1972-ல் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கால மாற்றங்களால் தற்போது கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன” என்றார் 75 வயதான ஆர்.எஸ்.மணி.

வசதி படைத்தவர்கள் தங்களின் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொள்கின்றனர்.

“”கடந்த 6 ஆண்டுகளாக எங்களின் வீடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. வீடுகளை முற்றிலும் இடித்து விட்டு புதிதாக கட்டித் தருவதாக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகள் பட்டியலை எடுத்தார்கள். அதன்பின்பு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் ஜெயசீலி.

குடிசைப் பகுதி தடையா? நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பை ஒட்டி, நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிப்போரின் வாரிசுகள், குடிசை வீடுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

“”புதிதாக கட்டித் தருவதாக அரசு உறுதி அளித்துள்ள வீடுகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என குடிசைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், அவர்களிடம் ரேஷன் அட்டை உள்ளிட்ட சான்றுகள் இல்லை. இதனால், வருவாய்த் துறை சார்பில் இரண்டு முறை பயனாளிகள் பட்டியல் வெளியிட்ட போதும், அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்” என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சேகர்.

மாற்று இடம் வழங்கப்படவில்லை: “”நொச்சிக்குப்பத்தில் உள்ள சேதமடைந்த வீடுகளை இடிப்பதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், அங்கு இருப்பவர்களை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான மாற்று இடம் வழங்கப்படவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் அங்கேயே குடியிருந்து வருகின்றனர்” என்கிறார் தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பாரதி.

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது,””சேதமடைந்த கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்களை கட்டுவதற்கான வரைபடம் தயாராக உள்ளது. விரைவில் குடியிருப்புகள் கட்டப்படும்” என்றனர். எப்போது என்பதை தெளிவுபடுத்தவில்லை.

——————————————————————————————————————-

குறட்டை விடும் குடிசை மாற்று வாரியம்

எம். மார்க் நெல்சன்

Kalainjar DMK Slum Clearance board abuse power Karunanidhi banner

சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்கள்.

சென்னை, ஜூலை 15: சென்னையில் குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சுவர்கள் வருமானம் ஈட்டித் தருபவையாக மாறி வருகின்றன.

ஆனால், வருமானம் தொடர்பான வரவு -செலவு கணக்குகளைப் பராமரிப்பதில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் இருந்தாலும், கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அங்குள்ள பிளாக் ஹெச்-8 முதல் ஹெச்-15 வரையுள்ள குடியிருப்புச் சுவர்களில் தனியார் விளம்பரங்களும், ஹெச்-5, 6, 7, 16 மற்றும் பிளாக் ஆர் -18, 19 ஆகிய குடியிருப்புச் சுவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களும் இடம்பெற்றுள்ளன.

சுவர் விளம்பரங்களுக்கு ஆண்டுக்கு, சதுர அடிக்கு அதிகபட்சமாக ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விளம்பரப் பலகைகளை வைக்க ஆண்டுக்கு, சதுர அடிக்கு ரூ. 26 வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. பெரும்பாலும், இந்த விளம்பரங்கள் அனைத்தும் 1,200 சதுர அடி அளவில் அமைக்கப்படுகின்றன.

இதன்படி, கோட்டூர்புரம் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆறு விளம்பரப் பலகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சமும், எட்டு சுவர் விளம்பரங்கள் மூலம் ரூ. 1 லட்சமும் அரசுக்கு வருமானம் வருகிறது.

இதே பகுதியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 60 முதல் 70 வரை வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் 1200 சதுர அடி கொண்ட ஒரு விளம்பரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 84 ஆயிரம் வருமானம் தனியாருக்குக் கிடைக்கிறது.

ஆனால், குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

பராமரிக்கப்படாத கணக்குகள்: இந்நிலையில் குடிசைப் பகுதி மாற்று வாரிய அலுவலகக் கணக்குப் பதிவேட்டில் இந்த விளம்பரங்கள் குறித்த சில கணக்குகள் 1-4-2003 வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

விளம்பரக் கட்டணங்கள் வசூலிப்பது, விளம்பரக் காலம் முடிந்ததும், அந்த விளம்பரங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளை கே.கே. நகரில் அமைந்துள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தினரும், எஸ்டேட் அலுவலரும் (ஈ.ஓ.7) செய்து வருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்த கணக்குகளையும், விவரங்களையும் அவர்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு சரிவர தெரிவிக்காததால் கணக்குப் பதிவேட்டில் சரிவர இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதனால் விளம்பரங்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறதா அல்லது வசூலிக்கப்படும் பணம் வேறு வகையில் செலவழிக்கப்படுகிறதா என்பது மர்மமாக உள்ளது.

ஆளுங்கட்சி என்பதால்… அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது.

பொன்விழா முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், அந்த இடங்களில் தனியார் விளம்பர பலகைகளுக்கு அனுமதி அளித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது அதிகாரிகளின் கருத்து.

ஆனால், ஆளுங்கட்சி என்பதால் அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு பயந்து அப்படியே விட்டுவைத்துள்ளனர் அதிகாரிகள்.

ஏற்கெனவே குறைந்த விலைக்கு விளம்பரங்களை வைக்க அனுமதிக்கும் நிலையில், வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களுக்கு முறையாக பணத்தை வசூலிக்காமலும், வசூலித்த பணத்தை சேர்க்கவேண்டிய இடத்தில் சரிவர சேர்க்காமலும் அரசுக்கும், குடிசை மாற்று வாரியத்துக்கும் இழப்பை ஏற்படுத்துவது ஏன் என்பதுதான் கேள்வி.

Posted in 50, Ad, Advt, Affordability, Area, Banner, Board, Celebrations, City, Civil, Clearance, collapses, Construction, Cost, Daily, Disabled, DMK, Dwelling, Education, eligibility, encroachments, Engineering, Eviction, facilities, facility, Flats, Floods, Free, Functions, Government, Govt, Handicapped, Hoardings, Home, Houses, Housing, Huts, Hygiene, improvement, Income, infrastructure, Issues, Jobs, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kottoor, Kottur, Kotturpuram, kutcha, Labor, Labour, Lands, Loss, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maintenance, migration, Mu Ka, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, multistorey, Necessity, NGO, Party, Plots, Politics, Poor, Poster, Power, Problems, Rain, Rehabilitation, Rent, revenue, Routine, Rural, sanitation, Santhome, settlements, shelter, Sleep, Slum, Society, Structure, Tenements, TN, TNSCB, TV, unhygienic, Worker, Youth | 1 Comment »

Madurai Bye-elections – June 26 Polls: Congress, DMK, ADMK, Vijaikanth, Azhagiri

Posted by Snapjudge மேல் மே 26, 2007

மதுரை மேற்கு இடைத்தேர்தல் களத்துக்குத் தயாராகும் அதிமுக- காங்கிரஸ்!

வீர. ஜீவா பிரபாகரன்

மதுரை, மே 26: இடைத்தேர்தல்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துபவை அல்ல. ஆனால், ஆட்சியின் சாதனைகளை அளவிடும் அளவுகோல் என்று கூறுவதுண்டு.

அதுவும் தென்மாவட்டங்களின் அரசில் அளவுகோலாகக் கருதப்படும் மதுரை மாநகரானது, பொதுத் தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகளில் இரண்டாவது இடைத்தேர்தலைச் சந்திக்கிறது.

தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மறைவையடுத்து மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வெற்றி பெற்றது.

தற்போது மதுரை மேற்குத் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் ஜூன் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் வெற்றி பெற்று பின்னர் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த எஸ்.வி.சண்முகம் மறைவை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக- காங்கிரஸ்: மதுரை மேற்கு தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தது. எனவே, கூட்டணியின் அடிப்படையில் இடைத்தேர்தலில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று அக்கட்சியினர் கூறினாலும், திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அக்கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதற்காக, அத்தொகுதியில் சிறப்புக் கவனமும் செலுத்தி வந்தனர். முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் பிறந்த நாளையொட்டி அத்தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்பட்டன. ஏராளமான குடும்பங்களுக்கு எவர்சில்வர் தண்ணீர் குடங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

அரசின் சார்பிலும் இலவச டி.வி., காஸ் அடுப்பு வழங்குவதிலும் இத்தொகுதியில் தனி கவனம் செலுத்தப்பட்டது. மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்பிலிருந்து செல்லூர் பகுதியைக் காப்பதற்கான திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

நெசவாளர் பக்கம் திடீர் கவனம்: மதுரை மேற்குத் தொகுதி, தொழிலாளர்கள் குறிப்பாக நெசவுத் தொழிலாளர் அதிகம் வசிக்கும் தொகுதி. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பே நெசவாளர்களின் கையில்தான் என்றும் கூறுவதுண்டு.

எனவே, வறுமையில் வாடும் மதுரை நெசவாளர்கள் மீது இடைத்தேர்தலையொட்டி அரசின் கவனம் திரும்பியது.

திமுக கூட்டணியினர் சார்பில் நெசவாளர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடுவதில் திமுக -காங்கிரஸ் நிர்வாகிகளிடையே பலத்த போட்டி எழுந்தது.

அதிமுக -மதிமுக கூட்டணியின் சார்பில் இத்தொகுதியை தக்கவைக்க சிறந்த வேட்பாளரை நிறுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டு வந்தது.

தினகரன் ஊழியர்கள் மூவர் பலி: இந்த நிலையில், தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்று தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பால், அந்த நாளிதழ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து, மதுரை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் திமுகவினர் ஆர்வம் குறைந்தது. திமுக கூட்டணியில் தேர்தல் களத்தை காங்கிரஸ் சந்திக்கவுள்ளது.

அந்தக் கட்சியின் சார்பிலான வேட்பாளர் யார் என கட்சி மேலிடத்தில் பரிசீலிக்கப்படுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிமுகவில் பலத்த போட்டி: ஏற்கெனவே, அதிமுக வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாகவும் இடைத்தேர்தலில் அதிமுக -மதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுவதில் அதிமுக நிர்வாகிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

இப்போட்டியில் முன்னணியில் தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் கா.காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, முன்னாள் மாவட்டச் செயலர்கள் செல்லூர் ராஜு, எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் மண்டலத் தலைவர் ஜெயவேலு, மகளிர் பிரிவைச் சேர்ந்த அல்லி ஆகியோரது பெயர்கள் உள்ளன.

காங்கிரஸ்: காங்கிரûஸப் பொருத்தமட்டில் பல்வேறு கோஷ்டியினரும் தங்கள் அணிக்குத்தான் சீட் கிடைக்கும் என்று கூறிவந்தாலும், முன்னணியில் இருப்பது கட்சியின் நிர்வாகிகள் கே.எஸ்.கே.ராஜேந்திரன், தெய்வநாயகம், கவுன்சிலர் ஐ.சிலுவை, கே.எஸ்.கோவிந்தராஜன், ஆர். சொக்கலிங்கம், தொழிலதிபர் தங்கராஜ், முன்னாள் நகர் மாவட்டத் தலைவர் பி.மலைச்சாமி, கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வழக்கறிஞர் பெருமாள் ஆகியோரது பெயர்கள் உள்ளன.

தேமுதிக: இந்த இடைத்தேர்தலில் தேமுதிக நிச்சயம் போட்டியிடும் என அக்கட்சியினர் தெரிவித்தனர். கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக 14,741 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

1967-ல் உருவாக்கப்பட்ட இத்தொகுதியில் இதுவரை

  • கம்யூனிஸ்ட் 2 முறையும்,
  • அதிமுக 4 முறையும்,
  • திமுக,
  • காங்கிரஸ் ஒரே ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதல் முறையாக இத்தொகுதி தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது.

———————————————————————————————————————————

ஜூன் 26 மதுரை மேற்கு இடைத்தேர்தல்

புதுதில்லி, மே 26: மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும்.

தேர்தல் முடிவுகள் ஜூன் 29-ல் அறிவிக்கப்படும்.

தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.

மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம் கடந்த பிப். 5-ம் தேதி காலமானார். அதையடுத்து இத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

தேர்தல் தொடர்பான முறைப்படியான அறிவிப்பு ஜூன் முதல் தேதி வெளியாகும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 8. அடுத்த நாள் பரிசீலனை. வாபஸ் பெற கடைசி நாள் 11.

வாக்குப்பதிவு ஜூன் 26-ல் நடைபெறும். 29-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஜூலை 2-ம் தேதிக்கு முன்னதாக தேர்தல் பணிகள் நிறைவடையும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் அறிவிப்பை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டங்கள் எதையும் தேர்தல் முடியும் வரை அறிவிக்கக் கூடாது.

இடைத் தேர்தலுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கும் ஆவணங்களின் அடிப்படையிலேயே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

——————————————————————————————————————-

மதுரை மேற்கு: கலக்கப் போவது யாரு?

பா. ஜெகதீசன்

சென்னை, மே 28: இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க.வும், காங்கிரஸýம் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளன.

எனினும், தேர்தல் களத்தில் எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி வெற்றி நடைபோடப் போகிறது என்பதில் குழப்பம் நிலவுகிறது. இந்தத் தொகுதியில் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது. எனினும், இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸýக்கு வாய்ப்புத் தரப்பட மாட்டாது. தி.மு.க.வே போட்டியிடும் என்கிற யூகங்கள் கடந்த சில வாரங்களாகவே நிலவின.

தி.மு.க. பின் வாங்கியது ஏன்?

அதற்கேற்ப தொகுதியில் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கான அடித்தளமிடும் பணிகளில் தி.மு.க. முனைப்புடன் ஈடுபட்டு வந்தது. மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகத்தின் மீது நடைபெற்ற கொடூரத் தாக்குதல், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் போன்ற காரணங்களால், இந்த இடைத் தேர்தலில் தங்களது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று தி.மு.க. தலைமை கருதியது.

பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதி இது. இங்கு நடைபெறும் இடைத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தாங்கள் தோற்றால், அது கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் கரும்புள்ளி ஆகி விடும் எனவும் தி.மு.க.வினர் கருதினர்.

காங். நிலை:

இந்நிலையில் இத் தொகுதியை காங்கிரஸýக்கே தி.மு.க. தலைமை அளித்துள்ளது. இதனால், இத்தொகுதியைச் சார்ந்த காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால், இந்த மகிழ்ச்சி நிலை பெறத் தக்க அளவுக்கு காங்கிரஸýடன் தி.மு.க.வினர் ஒருங்கிணைந்து பணியாற்றுவார்களா என்கிற கேள்வி தொகுதியில் எழுந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தங்களுக்கு ஆதரவாக தி.மு.க. செய்யும் பிரசாரம், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி, வெற்றி வாய்ப்பைப் பாதிக்கக் கூடும் என்று காங்கிரஸில் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

அதேநேரத்தில், தொகுதியில் போட்டியிட விரும்பும் காங்கிரஸின் பல்வேறு அணிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை. கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல் வேட்பாளர் தேர்வின்போது வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடைத்தேர்தலின் வெற்றியை இந்தக் கோஷ்டிப் பூசல் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது பிரசாரத்தின்போது தெரிந்து விடும்.

அ.தி.மு.க.வின் பிரச்னை:

இந்தத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டால், அழகிரியின் தலைமையில் தி.மு.க. அணியினர் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்வார்கள். போட்டி கடுமையாக இருக்கும் என்கிற கவலை அ.தி.மு.க.வினரிடையே முன்பு இருந்தது. தற்போது இங்கே காங்கிரஸ் போட்டியிடுவதையடுத்து, அவர்களது கவலை பறந்து போனது.

தேர்தல் களத்தில் எதிர் அணியின் வேட்பாளரை எளிதாக எதிர்கொள்ளலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. இங்கு நிறுத்தும் வேட்பாளரைப் பொருத்தே அந்தக் கட்சியின் வெற்றி வாய்ப்பு கணிக்கப்படும். முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், செல்லூர் ராஜு, காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை போன்றவர்களில் யாராவது ஒருவர் நிறுத்தப்படலாம் என்பது அ.தி.மு.க. வட்டாரத் தகவல்.

கடந்த தேர்தலில் இத் தொகுதியில் 3-வது இடத்தைப் பெற்ற தே.மு.தி.க. 14,527 வாக்குகளைப் பெற்றது. அதற்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும், தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளின் காரணமாகவும் அந்தக் கட்சிக்கு மாநிலம் முழுவதும் வாக்கு வங்கி வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

எனவே, தி.மு.க. தலைமையிலான அணியின் சார்பில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளரையும், தே.மு.தி.க. வேட்பாளரையும் களத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அ.தி.மு.க. உள்ளது.

இந்தத் தொகுதியில் யாதவர், தேவர், செüராஷ்டிர சமுதாயத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். தேர்தல் வெற்றி -தோல்வியில் இவர்களின் பங்கும் முக்கியமானது.

2006 தேர்தலில்…:

2006-ல் நடைபெற்ற தேர்தலில் இங்கு போட்டியிட்ட எஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.) 57,208 வாக்குகளைப் பெற்று வென்றார். அவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் என். பெருமாள் 53,741 வாக்குகளைப் பெற்றார்.

சண்முகம் காலமானதையடுத்து, இந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த தேர்தல்களில்…:

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் வென்றவர்கள், 2-வது இடம் பெற்றவர்கள் விவரம் (ஆண்டுவாரியாக):

1967: என்.சங்கரய்யா (மார்க்சிஸ்ட்) -46,882, எம். செல்லையா (காங்.) -23,012.

1971: கே.டி.கே.தங்கமணி (கம்யூனிஸ்ட்) -40,899, பி.ஆனந்தன் (ஸ்தாபன காங்கிரஸ்) 31,753.

1977: டி.பி.எம். பெரியசாமி (அ.தி.மு.க.) -32,342, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -16,211.

1980: எம்.ஜி.ஆர். (அ.தி.மு.க.) -57,019, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -35,953.

1984: பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) -48,247, எஸ். பாண்டியன் (அ.தி.மு.க.) -45,131.

1989: பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) -45,569, ஆர்.வி.எஸ். பிரேம்குமார் (காங்.) -26,067.

1991: எஸ்.வி.சண்முகம் (காங்.) -59,586, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -32,664.

1996: பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (தி.மு.க.) -61,723, ஆர். முத்துசாமி (காங்.) -17,465.

2001: வளர்மதி ஜெபராஜ் (அ.தி.மு.க.) -48,465, பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (தி.மு.க.) 47,757.

அ.தி.மு.க. தொகுதி என்று கருதப்படும் மதுரை மேற்குத் தொகுதியை அ.தி.மு.க. தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது நழுவ விடுமா என்பது தே.மு.தி.க.வின் வளர்ச்சியைப் பொருத்து இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

—————————————————————————————————

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி: வெள்ளிக்கிழமை மனு தாக்கல்

மதுரை, மே. 30-

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26-ந்தேதி
நடக்கிறது.

இந்த தேர்தலில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் ஓட்டுப்போட
உள்ளனர். இதற்காக தொகுதி முழுவதும் 216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

வருகிற 1-ந்தேதி முதல் தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

பதட்டமான வாக்குச்சாவடிகள், பகுதிகள் கண்டறியப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன. தொகுதி முழுவதும் பொதுக் கூட்டங்கள், ஊர்மவலங்கள் நடத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த, முன்னரே போலீஸ் அனுமதி பெறவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 8-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்து கிறது. இடைத்தேர்தல் என்பதால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.

ஆனாலும்

  • மாவட்ட துணைத்தலைவர் கே.எஸ்.கே.ராஜேந்திரன்,
  • மாவட்ட செயலாளர் ராஜாங்கம்,
  • தொழிற்சங்க தலைவர் கே.எஸ்.கோவிந்தராஜன்,
  • அமைப்புச் செயலாளர் அன்னபூர்ணா தங்கராஜ்,
  • ஆசிரியர் பிரிவு தலைவர் ஆபிரகாம்,
  • கவுன்சிலர் சிலுவை ஆகியோரின் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட லாம் என்று தெரிய வந்துள்ளது.

அ.தி.மு.க. ஏற்கனவே தொடர்ந்து 2 முறை வென்ற தொகுதி என்பதால் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கவும் 50-க்கும் அதிகமான நிர்வாகிகள் மனு செய்துள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை

  • காளிமுத்து மகன் டேவிட் அண்ணாத்துரை,
  • மாணவரணி செயலாளர் உதய குமார்,
  • முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ்,
  • முன்னாள் எம்.எல்.ஏ.ராஜாங்கம்,
  • முன் னாள் மாவட்ட செயலாளர் கள் செல்லூர் ராஜு,
  • எம்.எஸ்.பாண்டியன்,
  • தொழிற் சங்க செயலாளர் எஸ்.டி.கே.ஐக்கையன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப் படலாம் என்று தெரிகிறது. நாளை அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என்ற பரபரப்பும் கட்சி நிர்வாகி களிடையே ஏற்பட்டுள்ளது.

தே.மு.தி.க.வை பொறுத்த வரை முதன்முறையாக கடந்த சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு சுமார் 15 ஆயிரம் வாக்குகள் பெற்றது. எனவே இந்த முறை கணிசமான ஓட்டு களை பெற முடியும் என்ற நம்பிக்கை தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த கட்சியிலும் போட்டியிட பலர் ஆர்வம் தெரிவித்து உள்ளனர். ஆனால்

  • கடந்த முறை போட்டியிட்ட மணிமாறன்,
  • விஜயகாந்த் மனைவி பிரேமலதா,
  • மாநில பொருளாளர் சுந்தர் ராஜன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வருகிற 4-ந்தேதி விஜயகாந்த் அறிவிக்கிறார்.

கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற மூவேந்தர் முன்னணி கழகம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டது. இந்த கட்சி யின் வேட்பாளர் பகவதி 1851 ஓட்டுகள் பெற்றார். தற்போது மூவேந்தர் முன்னணி கழகம் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

மேலும் பாரதீய ஜனதாவும் தனித்து போட்டியிட போவ தாக அறிவித்து இருப்பதால் முதல் முறையாக பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். வருகிற 3-ந்தேதி வேட்பாளரை அறிவிப்பதாக மாநில தலைவர் இல.கணேசன் கூறி உள்ளார்.

ஜனதா கட்சி, பாரதீய ஜனதாவை ஆதரிக்குமாப அல்லது அந்த கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப் படுவாராப என்பது குறித்து ஜனதா கட்சி தலவைர் சுப்பிரமணியசாமி இன்னும் ஓரிரு நாளில் முடிவு அறிவிப்ப தாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். பாரதீய ஜனதா வேட்பாளரை நிறுத்தி னால் ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும் என்றே தெரிகிறது.

எனவே மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகி விட்டது. மேலும் 15-க்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் களத்தில் குதிக்க தயாராகி வரு கிறார்கள். எனவே வருகிற 1-ந்தேதியில் இருந்து மேற்கு தொகுதி தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிடும்.

————————————————————————————-

இடைத்தேர்தல்: அழகிரி பிரசாரம் செய்யலாமா?

மதுரை, ஜூன் 2: மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக மு.க. அழகிரி பிரசாரம் செய்யலாமா என்பது குறித்து காவல் துறையின் உளவுப் பிரிவு ரகசிய அறிக்கை தயாரித்துள்ளது.

சென்னையில் உள்ள காவல் துறைத் தலைமையகத்துக்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் உளவுப் பிரிவு உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

இதில் மேற்குத் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு, அதிமுகவின் தற்போதைய நிலை, தேமுதிக வளர்ச்சி குறித்து பல்வேறு தலைப்புகளில் உளவுப் பிரிவு போலீஸôர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

விலை உயர்வு காரணமாக திமுக கூட்டணி மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

உண்மையிலேயே தகுதி இருந்தும் இலவச கலர் டி.வி. கிடைக்கப் பெறாத பெரும்பாலோனோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுக அனுதாபிகளுக்கே அதிகளவில் டி.வி.கள் வழங்கப்பட்டுள்ளன. இதே நிலைதான் இலவச காஸ் அடுப்பு வழங்கும் முறையிலும் நீடிக்கிறது என்று கூறப்படுகிறது.

இதனால், 19 வார்டுகளிலும் மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

தினகரன் நாளிதழ் அலுவலகம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு, 3 ஊழியர்கள் இறந்த சம்பவத்தால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. இதன் பாதிப்பு இடைத்தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். எனவே, தேர்தலின்போது மு.க. அழகிரியை பிரசாரத்தில் ஈடுபடுத்த வேண்டாம் எனவும் உளவுப் பிரிவு கருத்து தெரிவித்துள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

————————————————————————————-

மதுரை மேற்கு தொகுதி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜு- ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, ஜ×ன். 4-

மதுரை மேற்கு தொகு திக்கு வருகிற 26-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் இடையே 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தின. தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 29 பேர் விண்ணப்ப மனு அளித்து இருந்தனர். இதில் சம்பத் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தவிர்த்து மீதமுள்ள 28 பேரும் நேர்காணலுக்காக நேற்று சென்னைக்கு அழைக்கப்பட்டனர்.

முதல் கட்டமாக அவர்களிடம் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேர்காணல் நடந்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு 28 பேரிடமும் விவரங்களை கேட்டு அறிந்தது. பிறகு அவர்கள் அனைவரும் போயஸ் கார்டனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அவர்கள் அனைவரையும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேரில் அழைத்து பேசினார். ஒவ்வொருவரிட மும் வெற்றி வாய்ப்பு குறித்து விளக்கமாக கேட்டு அறிந்தார். பிறகு அவர் உங்களில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப் படுவார். அவருக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இன்று காலை அ.தி.மு.க. வேட்பாளர் பெயரை ஜெயலலிதா அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். மதுரை மாநகர் மாவட்ட கழக முன்னாள் செயலாளர் செல்லூர் ராஜ× வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவின்படி வருகிற 26.6.2007 அன்று நடைபெற உள்ள மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி. மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மதுரை மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் செல்லூர் கே.ராஜ× தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜு நாளை பகல் 1 மணிக்கு மேற்கு தொகுதி தேர்தல் அதிகாரியான நாராயணமூர்த்தியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

செல்லூர் ராஜுவுடன் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் செல்கிறார்கள்.

அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்லூர் ராஜுக்கு 55 வயது ஆகிறது. பி.எஸ்.சி. பட்டதாரி. இவரது தந்தை பெயர் காமாட்சி தேவர். தாயார் பெயர் ஒச்சம்மாள். செல்லூர் ராஜுவின் மனைவி பெயர் ஜெயரதி. இவர்களுக்கு ரம்யா, சவுமியா என்ற 2 மகள்களும், தமிழ்மணி என்ற மகனும் உள் ளனர்.

செல்லூர் ராஜு 16-வது வட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்து பின்னர் படிப்படியாக கட்சியின் பல்வேறு பதவிகளை பெற்றவர். 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை மதுரை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தார். அதன் பின்பு 2001-ல் மாநகராட்சி மேயர் வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.

2002 முதல் 2004 வரை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றினார். இப்போது மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

—————————————————————————————————–

மதுரை மேற்கு தொகுதியில் 20 பகுதிகள் பதட்டமானவை: போலீஸ் கமிஷனர் தகவல்

மதுரை, ஜுன். 9-

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரசாரத்தின் போதும், ஓட்டுப்பதிவு அன்றும் வன்முறைகள் நிகழாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக மத்திய அதிரடிப்படையினரும் வரவழைக்கப்படுகிறார்கள். வருகிற 18-ந்தேதி மதுரை வரும் அவர்கள் மேற்கு தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இதற்கிடையே மேற்கு தொகுதியில் பதட்டமான பகுதிகள் எவைப வன்முறைகள் அரங்கேறும் இடங்கள் எதுப எங்கெங்கு சமூக விரோதிகள் பதுங்குவார்கள்ப என்பதை கண்டறியும் பணி நடந்தது. நேற்று மத்திய தேர்தல் பார்வை யாளர் அஜித் தியாகியும், தொகுதி முழுவதும் சுற்றி வந்தார். அவருடன் மதுரை நகர போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகளும் இருந்தனர். அவர்கள் பின்னர் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். பதட்டமான பகுதிகள் எவை என்பது குறித்தும் முடிவு செய்தனர்.

இதனை மதுரை போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் வெளியிட்டார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தலையொட்டி மேற்கு தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதுவரை அந்த தொகுதியில் 20 பகுதிகள் வரை மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள் ளது.

1. கோரிப்பாளையம்,
2. தல்லா குளம்,
3. கரும்பாலை,
4. தத்தனேரி,
5. பந்தல்குடி,

6. சின்னகீழத்தோப்பு,
7. மீனாம்பாள்புரம்,
8. ஜம்புரோ புரம்,
9. நரிமேடு,
10. செல்லூர்,

11. 50 அடிச்சாலை,
12. 60 அடி சாலை,
13. பி.டி.புரம்,
14. அருள்தாஸ்புரம்,
15. பெத்தானியாபுரம்,

16. அழகரடி,
17. சிங்கராயபுரம் உள்பட 20 பகுதிகள் பதட்டமானவை என்று கண்டறிந்துள்ளோம்.

இந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். மேலும் இங்கு மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடனும் ஆலோ சனை மேற்கொள்ளப்படும்.

பதட்டமான பகுதிகளில் போலீசார் 4 அடுக்குப் பாதுகாப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in ADMK, Alagiri, Alakiri, Analysis, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Backgrounder, Bye-elections, CB-CID, CBI, Chellur Raju, Chengottaian, Chengottaiyan, CID, Colour TV, Congress, DDMK, Desiya Murpokku Dravida Kalagam, Desiya Murpokku Dravida Kazhagam, Dhinakaran, Dhinamani, Dinamalar, Dinamani, Dist Secy, District, DMDK, DMK, Economy, Elections, Free, History, Inflation, Jagadeesan, Jagadhisan, Jegadeesan, Jegadessan, Jegadhisan, Kalainjar, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Loser, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Madhusoodhanan, Madhusudhanan, Madhusuthanan, Madurai, Madurai West, Manifesto, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, O Paneerselvam, Op-Ed, Opinion, Paneerselvam, Panneerselvam, Pannirselvam, Polls, Predictions, PTR, Rajan Chellappa, Recession, Research, Secretary, Sellur Raju, Sengottaian, Sengottaiyan, Survey, VaiGo, Vaikai, VaiKo, Viduthalai Chiruthaigal, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Winner | 13 Comments »

Mayawati takes Uttar Pradesh – Biosketch

Posted by Snapjudge மேல் மே 11, 2007

உ.பி.யில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி: பள்ளி ஆசிரியையாக பணி புரிந்தவர்

லக்னெü, மே 12: இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி (51).

இவர் பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி) நிறுவிய கான்சி ராமின் நிழலில் வளர்ந்தவர். அவரிடம் இருந்து அரசியல் பாடம் கற்றவர். எதிரிகளின் கூட்டணியை தனி ஆளாக நின்று சமாளித்தவர்.

உ.பி. சட்டப் பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பிராமண வகுப்பைச் சேர்ந்த 94 பேருக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு தந்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தனிப்பெரும்பான்மையுடன் அவர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.

முந்தைய மூன்று முறையும் கூட்டணி ஆட்சியை நடத்திய மாயாவதி, தற்போது அசுர பலம் பெற்று கூட்டணி தயவு தேவை இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார்.

தில்லியில் தபால்-தந்தி துறை ஊழியரின் மகளாக பிறந்த மாயாவதி, உ.பி.யின் முதல்வராக 1995-ல் அரியணை ஏறினார். அப்போது அவரால் 4 மாதமே பதவியில் நீடிக்க முடிந்தது. சமாஜவாதி கட்சியின் முலாயம் சிங்குடனான கூட்டணி திடுமென முடிந்ததே அதற்கு காரணம்.

பின்னர் இரண்டாவது முறையாக 1997-ல் முதல்வரானார். இம்முறை 6 மாதங்களுக்குத் தாக்குப்பிடித்தார். அப்போது பாஜகவுடன் “விரும்பத்தகாத’ ஒப்பந்த அடிப்படையில் ஆட்சி பொறுப்பேற்றார். ஒப்பந்தம் முறிவுக்கு வந்ததால் மாநிலத்தில் அரசியல் குழப்பமே மிஞ்சியது.

ஊழல் வழக்கில் சிக்கியதால் ராஜிநாமா

மூன்றாவது முறையாக 2002-ல் முதல்வரானார். பாஜகவின் ஆதரவுடன் 18 மாதங்கள் ஆட்சி செய்தார். இருப்பினும் தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கில் சிக்கி உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானதை அடுத்து 2003-ல் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் மாயாவதிக்கு ஏற்பட்டது.

மாயாவதிக்கு 6 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர். பள்ளி பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு சிறு வயது முதலே இருந்தது.

தில்லியில் 1977 முதல் 1984வரை பல்வேறு அரசு பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். அப்போதே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஊழியர் கூட்டமைப்பின் செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.

1984 முதல் தீவிர அரசியல்

1984-ம் ஆண்டு தனது ஆசிரியைப் பணியை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினார். கான்சி ராம் தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, 1984 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு நடைபெற்ற 2 இடைத் தேர்தல்களிலும் தோற்றார்.

இருப்பினும் மனம் தளராமல் 1988-ல் மூன்றாவது முறையாக பிஜ்னூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவைக்குள் நுழைந்தார். 1994-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காக உரக்க குரல் கொடுத்தார்.

கல்லூரி நாள்களில் மேல்சாதி மாணவர்கள் அவரை ஏளனமாக நடத்தியதாக கூறப்படுகிறது. இதனாலேயே அவருக்கு தாழ்த்தப்பட்டவர்கள், பலவீனப் பிரிவினருக்காக போராட வேண்டும் என்ற வேகம் பிறந்ததாம். தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த மாயாவதி, சட்டப்படிப்பையும், பின்னர் மீரட் பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பையும் முடித்தார்.
———————————————————————-
வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் – ஊழல், குற்றம், அச்சம் அடியோடு ஒழிக்கப்படும்: மாயாவதி

லக்னெü, மே 12: உத்தரப் பிரதேசத்தில் ஊழல், கிரிமினல்கள் அடியோடு ஒழிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள மாயாவதி, லக்னெüவில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

மக்கள் அச்சமின்றி வாழவும், ஊழல், குற்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்காத வகையில் புதிய அரசு ஆட்சி புரியம். அதேசமயம் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் முன்னுரிமைத் தரப்படும். இத்தேர்தலில் உயர்சாதியினரும், முஸ்லிம்களும் பகுஜன் சமாஜுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இம்முறை முஸ்லிம்கள் அதிக அளவில் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் பகுஜன் சமாஜுக்கு வாக்களித்துள்ளனர். மாஃபியா, தீவிரவாத மற்றும் காட்டு ராஜாக்களின் ஆதிக்கம் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகவில்லை. தேர்தல் ஆணையம் சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்தியுள்ளது என்றார்.

சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை

உ.பி.யில் சமாஜவாதி ஆட்சியில் இருந்தபோது நடந்த அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று மாயாவதி தெரிவித்தார்.

இது அரசியல் ஆக்கப்படமாட்டாது; எதிரிகள் மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையும் அல்ல. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையே நாங்கள் நிறைவேற்ற உள்ளோம். வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஆசாம் கான், தனது அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் அழித்துவிட்டதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார். முலாயம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, “ஏற்கெனவே அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இறந்தபோனவரை மீண்டும் கொல்லமுடியாது. மக்கள் அவருக்கு தண்டனை வழங்கிவிட்டனர்’ என்றார்.
———————————————————————————-

உத்தரப் பிரதேச முதல்வரானார் மாயாவதி: 50 உறுப்பினர்களுடன் அமைச்சரவை பதவிஏற்பு

லக்னௌ, மே 14: உத்தரப் பிரதேச முதல்வராக மாயாவதி (51) பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருடன் 50 உறுப்பினர்கள் கொண்ட மிகப் பெரிய அமைச்சரவையும் பதவி ஏற்றது.

உ.பி. முதல்வராக நான்காவது முறையாக பதவி ஏற்றுள்ள மாயாவதி, இம்மாநிலத்தின் 40-வது முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழா, ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. மாயாவதி உள்பட அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஆளுநர் டி.வி. ராஜேஸ்வர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், மாநில காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட அக் கட்சித் தலைவர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பதவி ஏற்பு முடிந்ததும் மாயாவதி தனது பெற்றோரை ஆளுநருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு பிராமணர்களின் ஆதரவைப் பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்த அக் கட்சியின் பொதுச் செயலர் சதீஷ் சந்திர மிஸ்ர மட்டும் பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது மேடையில் மாயாவதியுடன் அமர்ந்திருந்தார்.

பகுஜன் சமாஜ் தேசிய செயலர் சித்திக், மாநிலத் தலைவர் லால்ஜி வர்மா, மூத்த தலைவர்கள் சுவாமி பிரசாத் மெüர்யா, முன்னாள் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது.

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலம் பெற்று, 14 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி கட்சிகளின் தயவை நாடாத தனி ஒரு கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளார் மாயாவதி.

தேர்தலில் மேல்சாதியினருக்கும் வாய்ப்பளித்து வெற்றிக்கொடி நாட்டிய மாயாவதி, அமைச்சரவையில் மேல்சாதியினர் பலருக்கும் இடம் அளித்துள்ளார்.

7 பிராமணர்கள், 6 தாக்கூர்கள், 5 முஸ்லிம்கள், யாதவ குலத்தைச் சேர்ந்த இருவருக்கும் அமைச்சரவையில் இடமளித்துள்ளார்.

50 பேர் கொண்ட மிகப்பெரிய அமைச்சரவையில் 19 பேர் கேபினட் அந்தஸ்துடையவர்கள்; 21 இணை அமைச்சர்களுக்கு தனிப்பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது; 9 பேர் இணை அமைச்சர்கள்.

மாநிலத்தின் 40-வது முதல்வர்

1993-ல் உ.பி. முதல்வராக மாயாவதி பொறுப்பேற்ற போது இந்தியாவின் முதல் தலித் முதல்வர் என்ற சிறப்பைப் பெற்றார். நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் முதல்வர் பதவி ஏற்கும் 40-வது முதல்வர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.

என்.டி. திவாரிக்கு இணையாக..

உ.பி.யில் காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரி 4 முறை முதல்வர் பதவியை வகித்துள்ளார். அவருக்கு இணையாக மாயாவதியும் 4-வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மாயாவதி, இன்னும் 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகவோ மேல்சபை உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, பகுஜன் சமாஜ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக சனிக்கிழமை ஒருமனதாக மாயாவதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து அவரை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்.

403 உறுப்பினர்களைக் கொண்ட உ.பி. சட்டப்பேரவையில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 206 இடங்கள் கிடைத்துள்ளன.

———————————————————————————————————

ஆட்டம் போட்டவர்கள் கொட்டம் அடங்கியது

லக்னோ:உ.பி.,யில் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்ட அதிகாரிகளின் கொட்டம் அடக்கப்பட்டது.

முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பந்தாடினார் மாயாவதி. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள உயர் வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

உ.பி., முதல்வராக நேற்று பதவியேற்ற உடன் மாயாவதி, நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  • உ.பி., சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முலாயம் சிங் தலைமையிலான அரசு எடுத்த நிர்வாக முடிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
  • இதில், ஜாகர் பல்கலைக் கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து அளித்தது,
  • அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்ய உத்தரவு பிறப்பித்தது,
  • ஷாபி கிராமத்துக்கு (முலாயமின் சொந்த கிராமம்) ரூ.10 கோடி ஒதுக்கியது ஆகிய நிர்வாக முடிவுகள் உட்பட பல முடிவுகள் ரத்து செய்யப்படும்.
  • மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கும். கிரிமினல்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகிறது.
  • முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட துப்பாக்கி லைசென்சுகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்படுகிறது.

எனது அரசு, அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கவில்லை. மாநிலத்தின் நலனே அனைத்திலும் முதன்மையானது.

  • சமாஜ்வாடி பொதுச்செயலர் அமர் சிங் தலைமையிலான உ.பி., மேம்பாட்டு கவுன்சில் கலைக்கப்படுகிறது.
  • அம்பேத்கர் பூங்காவை முறையாக பராமரிக்காத இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.
  • உயர் வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.

இவ்வாறு முதல்வர் மாயாவதி கூறினார்.உ.பி., மேம்பாட்டு கவுன்சில் மூலம் தான் நடிகர் அமிதாப் பச்சன், மாநிலத்தின் விளம்பர மாடலாக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும், பல கலாசார நிகழ்ச்சிகள் பல கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்டிருந்தன. தற்போது, இதற்கு மூடு விழா காணப்பட்டுள்ளது.

இந்த கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து அமர் சிங் நேற்று முன்தினமே ராஜினாமா செய்து விட்டார். பதவியேற்ற முதல் நாளே பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றி முதல்வர் மாயாவதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முலாயம் சிங்கின் நண்பரும், தொழிலதிபருமான அனில் அம்பானியின் தாத்ரி மின் திட்டம் தொடருவது குறித்து முதல்வர் மாயாவதி எதிர்ப்பாக எதுவும் கூறவில்லை. “இப்போது தான் பதவியேற்றுள்ளேன். இது குறித்து பதிலளிக்க இப்போது முடியாது’ என்று கூறி விட்டார்.

அதுபோல, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். “இப்போது தான் முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளேன். இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முடிவு எடுக்கப்பட்ட பின், உங்களிடம்(நிருபர்கள்) கண்டிப்பாக கூறுவேன்’ என்று மாயாவதி தெரிவித்து விட்டார்.

நிருபர்களுக்கு பேட்டி அளித்து முடித்த உடன், உ.பி.,யில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் பி.பி.எஸ்., அதிகாரிகளை அதிரடியாக இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்டவர் கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தரப் பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தவிர கேபினட் செயலர் என்ற புதிய பதவியையும் மாயாவதி உருவாக்கியுள்ளார்.

எம்.எல்.ஏ., தாராளம்:

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ., சுபாஷ் பாண்டே. இவர், தனது எம்.எல்.ஏ., பதவிக்கான சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தையும் பதவிக்காலம் முடியும் வரை புற்றுநோய் மற்றும் பிற கொடிய நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக அளிக்க முன்வந்துள்ளார். “தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று கடவுளிடம் உறுதி கூறியிருந்தேன். அதன்படி இப்போது அறிவிப்பு செய்துள்ளேன்’ என்று சுபாஷ் பாண்டே கூறினார்.
————————————————————————————————–

மாயாவதிக்கு சாதனை, காங்கிரஸýக்கு சோதனை

நீரஜா செüத்ரி:

தமிழில்- ஜி.கணபதி

மாயாவதி பிறரது ஆதரவு இன்றித் தனித்து நின்றே வெற்றி பெற்றுள்ளார். இது இந்தியா முழுவதும் உள்ள தலித்துகளை உற்சாகமூட்டித் தட்டி எழுப்பப் போகிறது.

சமூகத்தில் நசுக்கப்பட்ட தலித் இனத்தைச் சேர்ந்த மாயாவதி, இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைக் கட்டி ஆளப்போகிறார்.

இது அரசியல் அம்சங்களையும் சமூக உறவையும் மாற்றப் போகிறது. மாயாவதிக்குக் கிடைத்த வெற்றி இந்திய அரசியல் இனி என்ன வடிவத்தை எடுக்கும் என்பதை நிர்ணயிக்கக் கூடியது.

தலித்துகள், பிராமணர்களை உள்ளடக்கி மாயாவதி அமைத்த வெற்றிக் கூட்டணியில் முஸ்லிம்களும் மிகவும் பிற்பட்ட வகுப்பினரும் இணைந்தனர். இத்தகைய கூட்டணி புதிது அல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் இருந்துள்ளது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக நிருபர்களிடம் பேசும்போது, தனக்கு உறுதுணையாக இருந்த

  • சதீஷ் சந்திர மிஸ்ர (பிராமணர்),
  • நசீமுதீன் சித்திக்கி (முஸ்லிம்),
  • பாபு சிங் குஷ்வஹா (மிகவும் பிற்பட்ட வகுப்பு) ஆகியோருக்குத் திறந்த மனதுடன் வெளிப்படையாக நன்றி தெரிவித்தன்மூலம் இது பல வண்ணக் கூட்டணி என்பதை மாயாவதியே ஒப்புக்கொண்டுள்ளார். பேட்டியின்போது அவர்களைத் தனக்குப் பக்கத்திலும் அமரச் செய்திருந்தார்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் வசம் பிராமணர்கள் ஈர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் சாதி கண்ணோட்ட அடிப்படையில் அது அமையவில்லை.

அயோத்தி இயக்கம் உச்சகட்டத்தில் இருந்தபோது தம் பக்கமாக பிராமணர்கள் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தபோதிலும் உயர்சாதி உணர்வை வெளிப்படையாகத் தட்டி எழுப்பி ஆதாயம் தேட பாஜக முயற்சி செய்யவில்லை.

ஆனால் இப்போதுதான் பிராமணர்கள் வகுப்பு அடிப்படையில் வெளிப்படையாக ஈர்க்கப்பட்டுள்ளனர். பிராமணர்கள் மாநாட்டை, மாவட்ட நிலையில் நடத்திய மாயாவதி லக்னெüவில் மாபெரும் மாநாடு ஒன்றையும் நடத்தினார்.

இப்போதைய முக்கிய கேள்வி இதுதான். பாஜகதான் பிராமணர்களின் புகலிடமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த உயர் சாதியினர், மாயாவதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனரே? இது ஏன் என்பதே.

பாஜகவை விட்டு விலகி உயர்சாதியினர் நீண்ட தொலைவு சென்று விட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இல்லையெனில் பாஜகவின் 2002 தேர்தல் வெற்றி முடிவுடன் ஒப்பிடுகையில் தற்போதைக்கு அதன் வெற்றிக் கணக்கு பாதியாகக் குறைந்திருக்காதே.

சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மேல்சாதியினர் விரும்பினர். மேலும் அந்தக் கட்சிக்கு மாற்றாக மாயாவதியைக் கருதினர். உயர்சாதியினரை அலறவைத்த குண்டர்கள் ராஜ்ஜியம், பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளை நன்கு புரிந்துவைத்திருந்தார் மாயாவதி.

ஆரம்பம் முதலே முலாயம், அமர்சிங் ஆகியோரைக் கடுமையாகச் சாடி வந்தார் மாயாவதி. ஆனால், பாஜகவோ சமாஜவாதி மீது மெத்தனம் காட்டியது. இதை பாஜக தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

2003-ல் முலாயம்சிங் தலைமையில் ஆட்சி அமைய உதவியது, பகுஜன் சமாஜ கட்சி இரண்டாக உடைந்தபோது அதை அப்போதைய சட்டப்பேரவைத் தலைவரான கேசரிநாத் திரிபாதி (பாஜக) அங்கீகரித்தது ஆகியவை உயர்சாதியினர் மத்தியில் சந்தேகம் எழ வைத்தது. உள்ளுக்குள் சமாஜவாதி கட்சியுடன் பாஜக ரகசிய உறவை வைத்துக்கொண்டதோ என்ற கண்ணோட்டம் ஏற்படச் செய்தது. தாங்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் பலவீனப்படுத்தப்படுவதாகவும் அநீதி இழைக்கப்படுவதாகவும் பிராமணர்கள் வேதனைப்பட ஆரம்பித்தனர்.

தலித்துகள், ஜாட் வகுப்பினர், யாதவர், குர்மிஸ் ஆகிய எல்லா வகுப்பினருக்குமே அரசியல் புகலிடம் உள்ளது. சமாஜவாதியின் அமர்சிங், வெளிப்படையாகவே, தாக்குர் வகுப்பினர் நலனுக்காகப் பாடுபட்டார். ஆனால் பிராமணர்கள் பற்றி யாரும் வாய் திறந்ததில்லை. அதைத் தமக்கு ஆதரவாகப் பயன்படுத்திய மாயாவதி “சர்வஜன சமாஜ்’ பற்றிப் பேச ஆரம்பித்தார்.

இந்நிலையில், பிராமணர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தலைவராக சதீஷ் சந்திர மிஸ்ர உயர்ந்தார்.

வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் சிறந்த பிராமணத் தலைவராகக் கருதப்பட்ட வாஜபேயியையும் மிஞ்சினார் மிஸ்ர.

மாயாவதியுடனான அவரது நெருக்கம், செல்வாக்கு ஆகியவற்றால் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது மாநிலத்தை ஆட்சி செய்ய வழி கிடைத்துள்ளது என்ற எண்ணம் பிராமணர்கள் மத்தியில் ஏற்பட்டது.

தாக்குர் இனத்தைச் சார்ந்த ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கும் பாஜகவைவிட விரும்பப்பட்டவரானார் மாயாவதி. லோத் இனத்தைச் சேர்ந்த கல்யாண் சிங்கை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது பாஜக.

2007 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு சாதி அடிப்படையில் அரசியல் சமூகம் மண்டல் மயமாகி உள்ளதை முழுமையாகப் பிரதிபலிக்கிறது. பிராமணர்களும் வைசியர்களும் சிறந்த வியூகத்துடன் வாக்களித்துள்ளனர்.

சில வழியில் வகுப்புவாத கண்ணோட்டத்துக்கு சாதி நோக்கம் வலிமை சேர்த்துள்ளது என்று கூறலாம். முஸ்லிம் விரோத பிரசார சி.டி. அல்லது அப்சல் குரு விவகாரம் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கலக்கி ஆதாயம் பெற முயன்றது பாஜக. ஆனால் பலன் இல்லை. என்றாலும் ஹிந்து மத உணர்வைத் தூண்டுவதன் மூலம் பலன் கிடைக்காது என்ற முடிவுக்கு வருவது சரியானதல்ல.

இந்த ஆண்டு பிற்பகுதி வாக்கில் குஜராத்தில் நடக்கவுள்ள தேர்தலில் இது தெரிந்துவிடும்.

மாயாவதியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது மக்கள் நாடித்துடிப்பை அறிந்து சமூக சக்திகளை ஒன்றிணைத்து அவர் வகுத்த கூட்டணி.

வெற்றி பெற்றாக வேண்டும் என்ற மனோதிடமும் அவரிடம் ஓங்கிக் காணப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்பே பிரசாரத்தைத் தொடக்கிய அவர் நன்கு திட்டமிட்டு தொகுதி, தொகுதியாகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

இத்தகைய நடவடிக்கைகளில் பாஜகவும் காங்கிரஸýம் தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்புதான் இறங்கின. மேலும் வேட்பாளர்கள் தேர்வைப் பிறரைவிட முன்கூட்டியே முடித்துவிட்டார் மாயாவதி.

பாரம்பரியமாகத் தமக்கு ஆதரவு தந்து வந்தவர்களின் மன கண்ணோட்டம் பற்றித் தப்புக்கணக்கு போட்டது பாஜக. தனக்கு ஆதரவாக ஹிந்துக்களை அணி திரள வைக்கவும் அது தவறிவிட்டது. கணிசமான முஸ்லிம்கள் முலாயம் நோக்கி அலறி அடித்து ஓடும் வகையிலும் செயல்பட்டது. இவை, முலாயமின் வேகமான வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த உதவியுள்ளன.

மாயாவதி பெற்றுள்ள வெற்றி இதர மாநிலங்களில் குறிப்பாக, 2008ல் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களில் தீவிர தொடர்விளைவை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது.

தில்லியில் பகுஜன் சமாஜ கட்சி வேர் விட்டுள்ளது. அங்கு அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதன் செயல்பாடு சிறப்பாக அமைந்ததே காங்கிரஸ் தோல்வியடைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஜூலையில் நடக்கவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வேட்பாளரை மாயாவதி ஆதரவுடன் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. என்றாலும் மாயாவதியின் வளர்ச்சி நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸýக்கு தொல்லை தரக்கூடியதுதான்.

———————————————————————————————-

.மாயாவதி வெற்றியின் பின்னணியில் மூன்று முகங்கள்!

உ.பி., சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பெற்ற பிரமாண்டமான வெற்றிக்கு மூன்று பேர் முக்கிய தளபதிகளாகச் இருந்துள்ளனர். இவர்களின் உதவியுடன் பிராமணர்கள், வைசியர்கள் செயல்பட்டதால் கருத்துக் கணிப்புகளை முறியடித்து மாயாவதி வெற்றியை அள்ளிக் குவித்து விட்டார்.

எஸ்.சி.மிஸ்ரா: உ.பி.,யில் சீனியர் வக்கீலாக இருப்பவர் எஸ்.சி.மிஸ்ரா. பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு அரசியல் அனுபவம் சிறிதும் கிடையாது. முன்பு 1976ல் எச்.என்.பகுகுணாவிடம் தேர்தல் மேலாளராக சிறிது காலம் பணியாற்றியுள்ளார். உ.பியில் பகுகுணா செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் தலைவர். பின் நீண்ட இடைவெளக்குப் பின் 2004ல் மாயாவதி முதல்வர் பதவியை துறந்த போது, அவரது கட்சியுடன் தன்னை இணைத்து கொண்டார் மிஸ்ரா.

இது குறித்து மிஸ்ராவிடம் கேட்ட போது “தாஜ்மகால் வழக்கில் மாயாவதியை பா.ஜ., மிரட்ட தொடங்கியது. ஆனால், அதற்கு மாயாவதி அடிபணியவில்லை. அவரது போராட்ட குணம் எனக்கு பிடித்து விட்டது. எனவே தீவிர அரசியலில் இறங்கிவிட்டேன்’ என்றார்.

இந்த தேர்தலில் பிராமணர்களின் ஓட்டுகளை கட்சிக்கு பெற்று தரும் பணி மிஸ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான களப்பணியை 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேரணி ஒன்றை நடத்தி மிஸ்ரா முதலில் துவக்கினார். “பா.ஜ., “கமண்டல’த்தை விட்டு விட்டு “மண்டல்’ பிரச்னையை கையில் எடுத்து விட்டது. எனவே மாற்று கட்சியை பிராமணர்கள் தேட தொடங்கினர். அவர்களின் எண்ணத்தை நான் பூர்த்தி செய்தேன்’ என்று மிஸ்ரா இப்போது கூறுகிறார்.

அந்த ஆண்டில் மட்டும் பிராமணர்கள் பங்கேற்ற 21 பேரணிகளை நடத்தினார். இது தவிர ஒவ்வொரு தொகுதியிலும், பிராமணர்கள் மற்றும் ஆதிதிராவிட மக்கள் அடங்கிய கமிட்டியையும் உருவாக்கினார். அவரது செயல்பாட்டை அப்போது பலரும் கிண்டல் அடித்தனர். ஆனால், இறுதியில் மிஸ்ரா வெற்றி பெற்று காட்டி விட்டார். இதற்கு பரிசாக மிஸ்ராவை அட்வகேட் ஜெனரலாக, மாயாவதி நியமிக்க உள்ளார்.

“பிராமணரான என்னை இப்பதவிக்கு தேர்ந்தெடுத்தது ஏன்?’ என்று மிஸ்ராவே வினோதமாகக் கேட்கிறார். அதற்கு மாயாவதி பதிலாக “நான் ஜாதியை பார்த்து பதவியை தருவதில்லை. தகுதியை பார்த்து தான் தருகிறேன்’ என்று கூறி விட்டார்.

நசீம்முதீன் சித்திக்: மாயாவதியின் தீவிர விசுவாசி நசீம்முதீன் சித்திக். அரசியல் உலகை தவிர வெளியுலக தொடர்பே இவருக்கு இல்லை. பத்திரிகையாளர்களை பார்த்தால் ஓடி விடுவார். ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்.இந்த தகுதிகளின் காரணமாகவே மாயாவதியின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்குகிறார். சித்திக்.

“பேகன்ஜி'(மாயாவதி) சொல்வதை மட்டுமே செய்வார். மாயாவதி 1980ம் ஆண்டுகளில் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு அறிமுகமானவர் சித்திக். மாயாவதியை பாதுகாக்கும் பொறுப்பு அப்போது அவருக்கு வழங்கப்பட்டது. அது முதல் மாயாவதியின் நிழல் போலவே இருந்து வருகிறார்.

இந்த தேர்தலில் முஸ்லிம்களை கட்சிக்கு பெற்று தரும் பொறுப்பு சித்திக்கிடம் வழங்கப்பட்டது. இதற்காக கட்சியின் முஸ்லிம் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். முஸ்லிம் உலாமாக்களை சந்தித்து பேசி, அவர்களின் ஆதரவை பெறும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது போன்ற பெரிய பணியை சித்திக் ஏற்பது இதுவே முதல் முறை. இருப்பினும், அதை சிறப்பாகவே செய்தார். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சிறு சிறு கூட்டங்கள் நடத்தி ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக செயல்பட்டார். இந்த முயற்சி இறுதியில் அவருக்கு மட்டும் அல்ல, மாயாவதிக்கு வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது.

சுதீர் கோயல்: உ.பி.,யில் உயர் ஜாதி வகுப்பை சேர்ந்த தலைவர் சுதீர் கோயல். ஜெய்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் முதலில் தொடர்பு கொண்டவர் . பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த, முதல் உயர் ஜாதி வகுப்பு தலைவர் என்ற பெருமைக்கு உரியவர். கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மற்றும் தலைவர் மாயாவதிக்கு மிகவும் நெருக்கமானவர்.

டில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தேர்தலில் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுதீர் கோயல் பணியாற்றினார். பத்திரிகையாளர்களுடன் நெருங்கிப் பழகி, பிற கட்சிகளின் தகவல்களை அறிவது இவரது பணி. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியின் தகவல்களை சிறிது கூட கசிய மாட்டார். அந்த அளவுக்கு உஷார் பேர்வழி சுதீர் கோயல். இது தவிர உ.பி.,யில் ஓரளவுக்கு பெரும்பான்மையாக உள்ள வைஸ்ய சமுதாயத்தினருடன் நெருங்கி பழகும் படி சுதீர் கோயல் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

இந்த சமுதாயத்தினரில் ஒரு பகுதியினர் சமாஜ்வாடி கட்சிக்கும், மற்றொரு பகுதியினர் பாரதிய ஜனதாவுக்கும் ஆதரவு அளித்து வந்தனர். மாநிலம் முழுவதும் இதே நிலை தான் காணப்பட்டது. மாநிலம் முழுவதும் சுதீர் கோயல் பயணம் செய்து வைஸ்ய சமுதாயத்தினரின் ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சியின் பக்கம் திருப்பினார்.

குறிப்பாக அலகாபாத் மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பெற்ற வெற்றிக்கு வைஸ்ய சமுதாயத்தினர் அளித்த ஆதரவே காரணம் . “மாயாவதி மட்டுமே தங்களை பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் வைஸ்ய சமுதாயத்தினரிடம் ஏற்பட்டு விட்டது’ என்று இதற்கு சுதீர் கோயல் விளக்கம் அளித்துள்ளார். இதற்காக கோயலை கேபினட் அமைச்சராக்கியுள்ளார் மாயாவதி.

———————————————————————————————–

“மனுவாதி-மாயாவாதி’ உடன்பாடு!

எஸ். குருமூர்த்தி

“”பத்திரிகைகளை அந்த அம்மா மதிப்பதே இல்லை” என்று நிருபர்கள் புலம்புகின்றனர். உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனியொரு கட்சியாகவே பெரும்பான்மையைப் பெற்றுவிட்ட பிறகும் அதே நிலைதான்!

பேட்டி தருமாறு கோரி பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் விடுத்த அழைப்புகளை ஏற்று பதில்கூட தரவில்லை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. அந்த நிறுவனங்கள் தன்னைப் பேட்டி காண அழைப்பு விடுக்காதா என்று ஏங்கும் அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர்; ஆனால், மாயாவதி அப்படியல்ல.

“”தேர்தல் அறிக்கை என்று எதையுமே அந்த அம்மா வெளியிடவில்லையே” என்பது சிலரின் அங்கலாய்ப்பு! தேர்தல் களத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், வாக்காளர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏதாவதொரு வாக்குறுதியை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தன. ஆனால் தன்னைத் தலைவியாக ஏற்றுக்கொண்ட ஏழை மக்களுக்கு, 2 வேளை சாப்பாடு, வறுமைக் கோட்டிலிருந்து விடுபட உற்ற வழி என்ற குறைந்தபட்ச அத்தியாவசியத் தேவைகள் இருந்தபோதிலும் மாயாவதி எந்தவித இலவச அறிவிப்பையும் வெளியிடவில்லை.

“”ஆட்சிக்கு வந்தால், இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, புடவை, வேஷ்டி, இலவச கேஸ் ஸ்டவ், கடன் தள்ளுபடி” என்று எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இந்த எல்லாச் சலுகைகளும் தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள்தான் அவருடைய ஆதரவாளர்கள்.

மற்றவர்கள் இலவசங்களை அறிவித்து ஆசை காட்டினாலும் அந்தப் பக்கம் போக விரும்பாத அளவுக்கு அவர்கள் ஏன் அவருக்குப் பின்னே நின்றார்கள்?

இதற்கான விடை, பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி.) வரலாற்றில் இருக்கிறது. மாயாவதியின் அரசியல் குருவான கான்ஷிராம், சமூகப் படிநிலையில் 5-வது, 6-வது இடத்தில் இருந்த சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் கொண்டு கட்சியை நிறுவினார். தங்களையும் ஏறெடுத்துப் பார்க்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஏக்கம் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. அவர்களுடைய அந்த ஏக்கமே தன்னுடைய கட்சியின் ஆன்மாவாகத் திகழ்வதை கான்ஷிராம் உறுதி செய்தார். பகுஜன் சமாஜத்தின் ஆன்மாவை இலவச டி.வி.க்கள் மூலமோ, புடவைகள் மூலமோ பிற கட்சிகளால் வாங்கிவிட முடியாது.

அது அவர்களுக்கு வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல; சமூகத்தின் படிநிலையில் முதல் 3 இடங்களில் உள்ள பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோருக்கு எதிரான வெளிப்படையான, வலிமை மிகுந்த ஆயுதமாகும். இந்த 3 சாதியினரையும் மாயாவதி வெளிப்படையாகவே “”மனுவாதிகள்” என்று சாடி வந்தார்.

“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்பதுதான் பி.எஸ்.பி.யின் போர் முழக்கமாகவே இருந்தது. சாதிய அமைப்பு முறையையே ஒழித்துக் கட்டுவேன் என்று கான்ஷிராம் சபதம் செய்தார். கடைசியில், ஒரு பிரிவு சாதிக்கு எதிராக மற்றொரு பிரிவு சாதியினரைக் கொண்டு வலுவான அரசியல் கட்சியை உருவாக்கிவிட்டார்.

சாதிகளை ஒழிக்கப் புறப்பட்ட எல்லா சீர்திருத்த இயக்கங்களுமே இப்படித்தான் கடைசியில் சாதிய அடையாளங்களுடன் முடிந்துள்ளன.

“”கீழ்ச் சாதியினர் ஒற்றுமையாகச் செயல்பட்டுத் தங்களை வலுப்படுத்திக் கொண்டு மேல்நோக்கி முன்னேறுவதற்கு சாதி என்பது ஜனநாயகத்தில் ஒரு தடையல்ல, ஒரு வாகனம்” என்று அவர் முதலில் உணர்ந்தார். ஜனநாயகம் இல்லாத சமூகங்களில்தான் சாதிய அடையாளம், முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.

இப்படித்தான் கோபத்திலும் வெறுப்பிலும் பகுஜன் சமாஜ் கட்சி பிறந்தது. அது வளர்ந்தபோது அதன் கோபமும் வளர்ந்தது. வெகுவிரைவிலேயே பகுஜன் சமாஜ் அபார வெற்றி கண்டு, அதன் ஆதரவு சக்திகளிடையே அபார செல்வாக்குப் பெற்றது. ஆனால் பெரும்பான்மை என்ற இலக்கைத் தொட அதற்கு ஒரு பாலம் தேவைப்பட்டது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற, வெளியில் யாரிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்று அது பார்த்தது.

“”லட்சியத்தை நிறைவேற்றப் பேயுடனும் கூட்டு சேர்ந்தாக வேண்டும்” என்பதுதான் ஜனநாயகத்தின் பாலபாடம். பகுஜன் சமாஜ் விஷயத்தில், இதுநாள்வரை அது பேயாகக் கருதிய, தனது எதிரியான “”மனுவாதிகளோடு” கூட்டு சேர வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டது. இது காரியசாத்தியமில்லாத விஷயமாகவே கருதப்பட்டது. ஆனால் மாயாவதி இதை வெகு எளிதாகச் செய்து முடித்துவிட்டார்.

“”மனு”வாதிகளுக்கும் “”மாயா”வாதிகளுக்கும் உள்ள பொதுவான வேராக ஹிந்து மதம் திகழ்வதை அவர் வலியுறுத்தினார். மேல்சாதியினருக்குக் கடவுளைப் பற்றிய சிந்தனை, பேச்சு எல்லாம் “”போதை தரும் விஷயம்” என்ற பலவீனத்தை அவர் புரிந்துகொண்டார்.

“”பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் வெறும் யானை அல்ல, கணேசப் பெருமான்தான்” என்று ஒரே போடாகப் போட்டார். இணைப்புக்கு ஒரு கடவுள் போதவில்லை, எனவே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் (சிவன்) என்ற மூவரையும் உடன் சேர்த்துக் கொண்டார்.

“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்று ஒரு காலத்தில் சொன்னதால் மனுவாதிகளுக்கு ஏற்பட்ட மனப்புண்ணுக்கு ஒரே ஒரு செயல்மூலம் மருந்து போட்டுவிட்டார். மனுவாதிகளுக்கும், மாயாவாதிகளுக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட கடவுளர்கள், மத்தியஸ்தர்களாக இருந்தனர்.

மாயாவதியின் இச்செயல் பிராமணர்களை முதலில் திருப்திப்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தில் 14% வாக்குவங்கியான பிராமணர்களை முதலில் வசப்படுத்தியது மாயாவதியின் மிகப் பெரிய வெற்றி.

உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் “”பிராமண மகாசபை” கூட்டங்களை நடத்தி, ஹிந்துக் கடவுளர்கள் மீது தங்களுக்கிருக்கும் மரியாதையை அவர் வெளிப்படுத்தினார். இப்படித்தான் மனுவாதி-மாயாவாதி (பிராமணர், தலித்) கூட்டணி உருவானது.

பிராமணர்களுக்கு 80 தொகுதிகளையும் பிற மேல்சாதியினருக்குக் கணிசமான தொகுதிகளையும் கூட்டணியில் ஒதுக்கியிருப்பதை ஒவ்வொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் மறக்காமல் அவர் கூறினார். இப்படியெல்லாம் கூறவோ, செயல்படவோ காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகளால் கனவிலும் முடியாது. மாயாவதியால் மட்டுமே அப்படிச் செய்யவும் முடியும், அதை பகிரங்கமாகச் சொல்லவும் முடியும்.

இப்படித்தான் பகுஜன் சமாஜின் முக்கிய எதிரிகளாகத் திகழ்ந்த மனுவாதிகள், அவர்களுடைய கூட்டாளிகளானார்கள். தீவிர எதிர்ப்பாளராக இருந்த மாயாவதியை அரவணைக்கும் தலைவராக ஜனநாயகம்தான் மாற்றியது.

உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை இது கட்சிகளின் கூட்டணி இல்லை, சாதிகளின் கூட்டணி. “”குறைந்தபட்ச பொது செயல்திட்டம்” (சி.எம்.பி.) அல்ல, கடவுளர்கள்தான் இங்கு இணைப்புப் பாலமாகச் செயல்பட்டுள்ளனர். மனுவாதிகளும் மாயாவாதிகளும் செய்துகொண்ட தொகுதி உடன்பாடு அரசியல்ரீதியாக லாபகரமான பலன்களைத் தந்தது.

நீதி: உத்தரப்பிரதேசத்தில் மனுவாதி-மாயாவாதிகள் இடையிலான கூட்டணி ஜனநாயகத்தால் உருவானது, கடவுளர்களால் இணைக்கப்பட்டது. அது கடைசியில் மகத்தான வெற்றியையும் பெற்றுவிட்டது. மனுவாதிகளைத் தீவிரமாக எதிர்த்துவந்த பகுஜன் சமாஜ், மிதவாத கட்சியாக மாறிவிட்டது; இனி அது எந்தக் காலத்திலும், பழையபடி “”அனல் கக்கும்” மனுவாதிகள் எதிர்ப்பாளராக மாறவே முடியாது.

———————————————————————————————

கங்கா தீரமும் காவிரி ஓரமும்…

செ.கு. தமிழரசன்

இந்தியாவின் ஒட்டுமொத்தப் பார்வையும் இன்று உத்தரப் பிரதேசத்தை நோக்கியே திரும்பியுள்ளது.

இழுபறி அமைச்சரவைதான் ஏற்படும், குதிரை பேரம் நடக்கும், விரைவில் மறுதேர்தலும் வரலாம் என்ற ஐயப்பாடுகளுக்கு எல்லாம் சற்றும் இடம்தராமல், கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, மக்கள் திரளின் மகத்தான ஆதரவுடன், பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் பெரும்பான்மை பலத்துடன், ஒரு கட்சி ஆட்சியை நிறுவியுள்ளார் தலித் சமூகத் தலைவி மாயாவதி. இது ஒரு பாராட்டத்தக்க செயல்பாடுதான், சந்தேகமில்லை.

இந்த அளவிற்கு அனைத்து அரசியல் சக்திகளையும், திறனிழக்கச் செய்யக் காரணம் மாயாவதி கையாண்ட தேர்தல் சாதுர்யம்தான் என்று எல்லா ஊடகங்களும் அடையாளப்படுத்துகின்றன. எனவே அவர் அப்படி என்னதான் புதிய வழிமுறையைத் தேர்தல் வியூகமாக வகுத்தார் என்று பார்த்தாக வேண்டும். ஏனெனில் இன்று மாயாவதியின் வெற்றியை மற்ற மாநிலத் தேர்தலுக்கும் முன்னுதாரணமாக்கும் போக்கு வலுக்கிறது.

பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கை வழியில், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கும் தலித் மக்களும், கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி நிற்கும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒருங்கிணைந்தால், நமது ஆட்சியை நிலைநாட்ட முடியும் என்ற கான்ஷிராமின் சித்தாந்தம், உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரையில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் அவரது “பகுஜன் சமாஜ் கட்சி’ ஒரு மாற்று அரசியல் சக்தியாகப் பரிணமித்தது.

கான்ஷிராமின் அரசியல் பார்வையின் அடிப்படையிலேயே முந்தைய தேர்தல் கூட்டணிகள் அமைந்தன. 1993 தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி கண்ட மாயாவதி 1996-ல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தார். பின்னர் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியையும் அரங்கேற்றிப் பார்த்தார்.

ஆனால் ஒவ்வொரு முறையும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் தனக்கும், கட்சிக்கும் நம்பிக்கைத் துரோகமிழைத்துவிட்டு, எதிர் அணிக்குத் தாவி தங்களது சாதிய சுயரூபத்தை வெளிப்படுத்தினார்கள். தனது முதுகில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் குத்திய வலியை அவரால் மறக்க முடியவில்லை. தலித் – பிற்பட்டோர் ஒற்றுமை என்பது, ஆட்சித்தலைமைத் தேர்வின்போது, நல்ல குதிரைபேர வியாபாரத்திற்கே வழிவகுக்கிறது என்ற அப்பட்டமான உண்மை வெட்ட வெளிச்சமாகியது.

எனவே, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு மாற்றுவழியைத் தேட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார் மாயாவதி. பார்ப்பன, க்ஷத்ரிய, பனியாக்களை செருப்பால் அடிக்க வேண்டுமென்ற அவரது முழக்கம், ஆட்சி அதிகாரப் பகிர்வின்போது, தன்னிடமே செய்முறை விளக்கப் பயிற்சி பெறுவதை உணர்ந்தார். இனி பிற்படுத்தப்பட்டவரை நம்பிப் பயனில்லை என்ற முடிவிற்கே வந்துவிட்டார்.

இதுவரை மேல்மட்ட வர்க்கத்தை மட்டந்தட்ட வேண்டிய எதிரிகளாகவே பாவித்த மாயாவதியின் போக்கில், ஒரு மாறுதல் தோன்றியது. அவர்களையும் அரவணைக்கும் எண்ணம் உதயமாயிற்று.

இதற்கேற்றபடி, பிராமணர், வைசியர், தாக்கூர் ஆகிய இந்து இனச் சமூகங்கள் பெரிதாக நம்பிக் கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சியோ, மத்தியில் வலுவிழந்து, மாநிலத்தில் மரியாதையிழந்து, அவ்வப்போது இந்துத்துவா, ராமர் கோயில் என்று ஈனஸ்வரத்தில் முனங்கிக் கொண்டிருந்தது.

காங்கிரஸ் கட்சியோ, காந்தியின் காலத்திலிருந்து தனது வாக்குவங்கியாக வைத்திருந்த இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஓட்டுகளை பெரும்பாலும் இழந்து கட்சியும் கரைந்துவிட்டிருந்தது.

ஆகவே மேல்தட்டு வர்க்கமான பிராமண, வைசிய, தாக்கூர் சாதியினர் எங்கே போவது, யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்திற்கு இயல்பாகவே வந்துவிட்டனர். இந்தச் சூழ்நிலையில் மாயாவதியின் மனமாறுதல் அவர்களை பகுஜன் சமாஜ் கட்சியை நெருங்கச் செய்தது.

மாயாவதியும் பிற்படுத்தப்பட்ட மாயையிலிருந்து விடுபட்டு முற்படுத்தப்பட்டவர்களை ஆதரிக்க முன்வந்தார்; வரவேற்று 83 பேரை வேட்பாளர்களாக்கினார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பயன்களை, யாதவ் மற்றும் குர்மி சாதியினர் மட்டுமே அனுபவிப்பதைப் பார்த்துப் பொருமும் ஏனைய பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் மாயாவதியின் பின்னால் அணிவகுக்க முற்பட்டனர்.

ஆக, பகுஜன் சமாஜ் கட்சிக்குரிய வாக்கு வங்கியான தலித் மக்கள், புதுவிருந்தாளியான மேல்தட்டு வர்க்கம், இதோடு இஸ்லாமிய சமூகம் மற்றும் யாதவ், குர்மி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகிய புதிய ஐக்கியம் தேர்தலில் பதியமிட்டது. நல்லாட்சி அமைகிறதோ இல்லையோ, ஒரு ஸ்திரமான ஆட்சி, அதாவது ஐந்தாண்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மையோடு நடைபெறும் ஆட்சி அமைய வேண்டும். அதற்கான ஒரு கட்சியைத் தேர்ந்தெடுத்தே தீர வேண்டுமென்ற உறுதியான எண்ணம் மக்களிடையே பரவிக் கிடந்தது. அதற்கு கண்முன் நிற்கும் சாட்சியாக “பகுஜன் சமாஜ் கட்சி’ காட்சியளித்தது. மக்கள் வாக்களித்தனர். மாயாவதி வெற்றி பெற்றார்.

அண்ணல் அம்பேத்கரின் பெயரை உச்சரித்தபடியே ஒரு கட்சி, தன் ஆட்சியை நிறுவியுள்ளது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் இது நிலைத்து நீடிக்குமா?

மாயாவதியின் வெற்றியைக் கண்டு மற்ற மாநிலத்திலுள்ள அம்பேத்கரிய இயக்கவாதிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுவது இயல்புதான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், உத்தரப் பிரதேசத் தேர்தல் பரிசோதனை எடுபடுமா?

இங்கு “”தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர்” ஐக்கியம் என்ற சிந்தனை உருவாக்கம் பெற்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிறது. அந்த அடிப்படையில்தான் இங்கு 40 ஆண்டுகாலமாக ஆட்சியே நடைபெறுகிறது. ஆனால் என்ன ஒரு வேறுபாடு என்றால், தாழ்த்தப்பட்டோரும் முதல்வராக வந்ததில்லை. பிற்படுத்தப்பட்டோரிலும், பெரும்பான்மைச் சமூகங்களைச் சார்ந்த எவரும் முதல்வராக வந்ததில்லை. தமிழகத்தில் பெரும்பாலான சாதிகள் (70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், முற்பட்ட மக்கள் பலம் மிகவும் குறைவு. எனவே, உ.பி. பாணியில் தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் – அந்தணர் ஐக்கியம் எந்த மாற்றத்திற்கும் வித்திட்டு விடாது. ஏமாற்றத்திற்கே இலக்காகும்.

மேலும், மாயாவதியின் “வெற்றிசூட்சுமம்’ ஏதோ அவரால் மட்டுமே கண்டுபிடித்து கையாளப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு மாயை என்பதை முதலில் புரிந்துகொண்டாக வேண்டும்.

அகில இந்திய அளவில், காந்திதான் இந்து – முஸ்லிம் – ஹரிஜன் முக்கூட்டு ஒற்றுமையை வலியுறுத்தி அதற்கான வழியமைத்தவர். இந்தத் தளத்தில்தான் காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாகத் தேர்தலைச் சந்தித்து இந்தியா முழுமையையும் தன் ஆட்சிக்குள் வைத்திருந்தது. ஆக, காந்தியின் இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஐக்கியம், தலித் தலைவியான மாயாவதியால் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

ஆனால் இதற்கு மாயாவதி கொடுத்துள்ள விலை அதிகம் என்பதைக் காலம் விரைவில் உணர்த்தும். அதற்கான அடையாளங்கள் இப்போதே தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டன.

அண்ணல் அம்பேத்கரின் கொள்கைவழியில் தோன்றியதாகத் தென்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, இன்று அதே அண்ணலின் எதிர்நிலையான இந்துத்துவாவை தூக்கிச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உருவாக்கப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி, இனி எல்லா இனமக்களுக்குமான சர்வஜன சமாஜ் கட்சியாகச் செயல்படும் என்று பொய் வேடம் புனைய வேண்டிய நிலைக்கு மாயாவதி ஆளாகியுள்ளார். முதல்வராகப் பதவியேற்றவுடன் புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத் தந்த சமூகரீதியான இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கும் இடஒதுக்கீடு என்று மாயாவதி அறிவித்ததன் மூலம், சமூகநீதியையே வஞ்சித்துவிட்டார்.

மேலும் ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் மாயாவதியின் 206 எம்.எல்.ஏக்களில் ஒரு தலித் எம்.எல்.ஏ.கூட பொதுத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதுதான் தலித் – பிராமண ஐக்கியத்தின் லட்சணம். இத்தகைய நிலையில், இங்கு தமிழ்நாட்டில் மாயாவதியின் சூத்திரத்தை அமல்படுத்த முயற்சிக்கலாமா என்று சிந்திப்பதே ஆரோக்கியமானதல்ல என்றே தோன்றுகிறது.

மாயாவதியின் வெற்றி மகத்தானதுதான். அது, உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை. அதைத் தமிழ்நாட்டிலும் பொருத்திப் பார்க்க நினைத்தால் எதையோ பார்த்து எதுவோ சூடுபோட்ட கதையும், எதையோ பார்த்து எதுவோ ஆடவந்த கதையும்தான் அரங்கேறும்.

(கட்டுரையாளர்: இந்திய குடியரசுக் கட்சியின் தேசியப் பொதுச் செயலர், அதன் தமிழ் மாநிலத் தலைவர்.)

—————————————————————————————
உ.பி. முதல்வர் மாயாவதிக்கு ரூ.52 கோடி சொத்து

லக்னெü, ஜூன் 26: உத்தரப்பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.52 கோடி என தெரியவந்துள்ளது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட மாயாவதி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவர் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.

ரூ.12.88 கோடியை பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கியல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரூ.51 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.52.27 லட்சம் ரொக்கம், ரூ.15 லட்சம் விலை மதிப்பு உள்ள ஓவியங்கள் ஆகியவை தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுதில்லியில் தனக்கு சொந்தமாக 3 வணிக வளாகங்கள், 2 வீடுகள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.37.82 கோடி என்றும் தனக்கு சொந்தமாக விவசாய நிலங்களும் வாகனங்களும் இல்லை என்றும் அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
—————————————————————————————
உ.பி.யில் இடைத்தேர்தல்: மாயாவதி வேட்புமனு தாக்கல்

லக்னெü, ஜூன் 26: உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 2 சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

இதில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்காக அந்த மாநில முதலமைச்சர் மாயாவதி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் பி.ஆர்.வர்மா, சமாஜவாடி கட்சி உறுப்பினர் விக்ரமாதித்ய பாண்டே ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.

இதையடுத்து வர்மாவின் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மாயாவதி தாக்கல் செய்தார். அவரது மனுவை 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன்28-ந் தேதி கடைசி நாளாகும்.

மாயாவதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதால், அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
—————————————————————————————

Kumudam Reporter – Solai

08.07.07

இனி, மையத்திலும் மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சிதான். இந்திய அரசியல் இப்படி புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது என்று அரசியல் விற்பன்னர்கள் அறிவித்தார்கள். ஆனால், இருபது ஆண்டுகளுக்கு மேலாக, கூட்டணி ஆட்சி கண்ட உத்தரப்பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருக்கிறது. எப்படி?

அந்த மாநிலத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சிதான் என்று அனைத்து அரசியல் ஆரூடக்காரர்களும் சொன்னார்கள். ஆனால், கூட்டணி அமைப்பதில் மாயம் செய்த மாயாவதி, தனிப் பெரும்பான்மை பெற்று, தனித்து ஆட்சி அமைத்திருக்கிறார். என்ன காரணம்?

நாடு விடுதலை பெற்றாலும் தலித் மக்களுக்கு விடுதலை இல்லை. அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளெல்லாம் அவர்கள் வீட்டு வாசலை எட்டிப் பார்த்ததில்லை. எனவே, அந்தச் சமுதாயத்தின் எழுச்சிக்காக அண்ணல் அம்பேத்கர் பாடுபட்டார். அதன் வழியில் தலித் மக்களுக்காக கன்ஷிராம், பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கினார். அந்தக் கட்சியில் அவருக்கு அடுத்த தலைவராக மாயாவதி உயர்ந்தார். டெல்லி மின் வாரியத்தில் லைன் மேனாகப் பணி செய்த ஒரு தலித்தின் புதல்விதான் அவர்.

தமிழகத்தில் எப்படி பிராமண சமுதாயத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதே போல் உத்தரப்பிரதேசத்துப் பிராமண சமுதாயத்தையும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்வா அமைப்புகளையும் எதிர்த்துத் தொடங்கப்பட்டதுதான் பகுஜன் சமாஜ் கட்சி.

உத்தரப்பிரதேச வாக்காளர்களில் பிராமணர்களும் இதர முற்படுத்தப்பட்ட வகுப்பினர்களும் 30 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். எனவே, இவர்களைப் பகைத்துக்கொண்டு இவர்களுக்கு எதிராக அரசியல் நடத்தினால் ஆட்சி என்பது கனவாகத்தான் இருக்கும் என்பது மாயாவதியின் கணிப்பு.

எனவே, அந்தச் சமுதாயத்தினரின் நம்பிக்கையைப் பெறுவதில் மாயாவதி நாட்டம் கொண்டார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராக சதீஷ் சந்திர மிஸ்ரா என்ற பிராமணரை மாயாவதி நியமித்தார். அவர் சட்டமேதை. உத்தரப்பிரதேச அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்தவர். அவர்தான் இன்றைக்கு மாயாவதிக்கு அரசியல் வழிகாட்டி.

ஒரு காலத்தில் உத்தரப்பிரதேச அரசியல், அலகாபாத் நேரு பவனத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. பிராமணர்களே காங்கிரஸ் முதல்வர்களாக வந்தனர். இஸ்லாமிய மக்களும் தலித் மக்களும் காங்கிரஸ் அரசுகளின் காவலர்களாக இருந்தனர்.

இப்போது பிராமண சமுதாய மக்களும் இஸ்லாமிய மக்களும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் அரணாக மாறியிருக்கின்றனர். இவைதான் மாயாவதி செய்த மாயம்.

‘தலித் மக்களுக்கான கட்சி பகுஜன்’ என்றால் மாயாவதிக்கே கோபம் கொப்புளிக்கிறது. ‘சர்வ சமூகத்தினருக்கான கட்சி என்று சொல்லுங்கள்’ என்கிறார்.

தலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன தனி ஒதுக்கீடு? முற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் பொருளாதார ரீதியாக தலித்துகளை விடப் பின்தங்கியவர்கள் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களை விட, முற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் அழுந்திக் கிடக்கின்றவர்கள் இருக்கிறார்கள் என்று அவர் கண்டுபிடித்திருக்கிறார். அந்த வாதம் முற்படுத்தப்பட்ட சமுதாய மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து எந்த அளவிற்கு மாயாவதி இறங்கிப் போக முடியுமோ, அந்த அளவிற்கு இறங்கி வந்து அதிகார அரசியலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு சக்தியாக இருந்தது. அடுத்து பி.ஜே.பி. ஒரு சக்தியாக உருவானது. அந்தக் கட்சி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த பின்னர், அந்த வலிமையைப் பெற்றது. அதனைத் தடுக்க மையத்தில் இருந்த காங்கிரஸ் அரசு தவறியது. எனவே, இஸ்லாமிய மக்கள் காங்கிரஸ் உறவைக் கத்தரித்துக் கொண்டது மட்டுமல்ல; கடுங்கோபமும் கொண்டனர். அதனை, இன்னொரு சக்தியாக எழுந்த முலாயமின் சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது.

காங்கிரஸ் மீது இஸ்லாமிய மக்கள் கோபம் கொண்டது போல தலித் மக்களும் ஆவேசம் கொள்ளவே செய்தனர். தங்கள் சமுதாயத்தை வாக்கு வங்கியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அந்தக் கட்சி தங்களைக் கரம் கொடுத்துத் தூக்கி விடவில்லை என்று அவர்களுக்கு ஆதங்கம் ஏற்பட்டது.

இந்தச் சூழலில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்த பிரதமர் வி.பி.சிங் முன்வந்தார். அந்த அறிக்கையை ஆதிக்க சமூகங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் ஆயுதமாக சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது. அதே சமயத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும் எழுச்சி பெற்றது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸைப் போல் பி.ஜே.பி.யும் பெரிய சரிவைச் சந்தித்தது. ஒருமுறை தனியாகவும் இருமுறை கூட்டணியாகவும், அரசு கண்ட பி.ஜே.பி., பிற்படுத்தப்பட்ட மக்களைத் திருப்தி செய்வதிலேயே கவனம் செலுத்தியது. ஆகவே, முப்பது சதவிகிதமாக இருக்கும் முற்படுத்தப்பட்ட சமூகம் அதனை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டது. அவர்கள் இன்றைக்கு மாயாவதியை நம்புகிறார்கள்.

அதே சமயத்தில், இதற்கு முன் பிருந்த முலாயம் சிங் ஆட்சி ஊழலின் உறைவிடம் என்று முத்திரை பெற்றுவிட்டது. அந்தக் கட்சியை அரியணைக்கு அழைத்துச் சென்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் விழி பிதுங்கி நின்றனர். மாநில அரசே முலாயம் சிங் குடும்பத்தின் மொத்தக் குத்தகையானது.

இந்தச் சூழலில், தலித் அரசியலைப் பரண் மீது வைத்து விட்டு, ஜாதி வாரியாக மாயாவதி மாநாடுகளை நடத்தினார். மாவட்டம் தோறும் பிராமணர் மாநாடு, வைசியர் மாநாடு என்று ஆரம்பித்து அனைத்து ஜாதியினருக்கும் மாநாடு நடத்தினார்.

முற்படுத்தப்பட்ட சமுதாயம் (30 சதவிகிதம்), தலித் சமுதாயம் (21 சதவிகிதம்), இஸ்லாமிய சமுதாயம் (17 சதவிகிதம்) என்று எழுதப்படாத அணி உருவானது. சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளையும் இதே அளவில் பிரித்து அளித்தார்.

வெற்றிக்குப் பின்னர் அவர் வெளியிட்ட அமைச்சர்களின் பட்டியலைப் பாருங்கள். விகிதாச்சாரப்படி அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். பி.ஜே.பி. ஆட்சியில் கூட இவ்வளவு பேர் இடம் பெற்றதில்லை. அதே சமயத்தில், தலித் சமுதாயத்தைத் திருப்திப்படுத்த 19 பேர் அமைச்சர்களாகி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 11 பேரும் இஸ்லாமியர்கள் ஐவரும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.

இப்படி தேர்தல் வெற்றிக்கு ஜாதிகளின் சங்கமத்தைப் பயன்படுத்திக் கொண்ட மாயாவதி, ஜாதிகளுக்குமேல் உயர்ந்திருக்கிறார் என்று சொல்லலாமா? வீழ்ந்து வந்த சமூக ஆதிக்க சக்திகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாமா? இப்படி மாயாவதியின் வெற்றி ரகசியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர், மாயாவதி முதன்முதலாக நிருபர்களைச் சந்தித்தார். ‘பிராமணர்களில் ஏழைகள் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்’ என்றார் பி.ஜே.பி.கூடத் துணிந்து இப்படிக் கேட்டதில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அவர் மயானத்திற்கு அனுப்பி விட்டார். உறங்கிய உண்மைகளைத் தட்டி எழுப்பிவிட்டதாகக் கூறுகிறார்.

‘டி.வி. சுந்தரம் அய்யங்கார் பிறப்பால் முற்படுத்தப்பட்டவர்தான். அவர்களது பிள்ளைகள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள்தான். ஆனால், அவர்கள் வீட்டில் காரோட்டும் சங்கர அய்யர் எப்படி? பிறப்பால் முற்பட்டவர்தான். பொருளாதார வசதியில்…? தலித்துகளின் நிலைதான் அவரது நிலையும்’ என்கிறார் மாயாவதி.

இத்தகைய வாதங்கள் அரசியலில் பெரும்புயலைக் கிளப்பியிருக்கின்றன. கசப்பான உண்மைகளைக் கூறுகிறார் என்பதா? பகுஜன் சமாஜ் கட்சி முற்போக்கு சமுதாயங்களின் முரசமாகிவிட்டது என்று சொல்வதா?

எதிர்கால அரசியல் ஜாதிக் கூட்டணிகளுக்குத்தான் என்று சொல்வதா? அடுத்து மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்குப் பெரும் செல்வாக்கு இல்லைதான். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் அமைத்த ஜாதிக் கூட்டணியை அமைக்க மாயாவதி முயற்சிப்பார். ஏனெனில், அவருடைய இலட்சியம் மாநில முதல்வர் என்பதல்ல; நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதுதான்!

——————————————————————————————-

உத்தரபிரதேசம் முழுவதும் மாயாவதி சிலைகள்: கன்சிராம் விருப்பம் நிறைவேறுகிறது

லக்னோ, ஆக. 6-

உத்தரபிரதேசத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார். கன்சிராமின் கொள்கை கள், திட்டங்கள் அனைத் தையும் நிறைவேற்ற முதல்- மந்திரி மாயாவதி ஏராள மான திட்டங்களை அறிவித் துள்ளார்.

கன்சிராம் பற்றி ஆய்வு செய்து கட்டுரை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. “கன்சிராம் மாணவர் சுவா பிமான் விருது” என்ற பெயரில் ரூ.2.5 லட்சம் பரிசு வழங் கப்படும் என்று மாயாவதி கூறி உள்ளார்.

கன்சிராம் பெயரில் மிகப் பெரிய மருத்துவம் மற்றும் வீட்டு வசதி திட்டத்தையும் மாயாவதி அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப் பெரிய மருத்துவமனை கட்டப்படும். அங்கு 40 சதவீத ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

வீட்டு வசதி திட்டங்கள் “கன்சிராம் நகர்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து சாதி யினருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

4 ஆண்டுகளுக்கு முன்பு, மரணம் அடைவதற்கு முன்பு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய கன்சிராம், உத்தரபிரதேசம் முழுவதும் என் சிலை அருகில் மாயாவதியின் சிலைகளும் நிறுவப்பட வேண்டும்” என்று கூறி இருந்தார். அவரது இந்த ஆசையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள ஆயிரக் கணக்கான கன்சிராம் சிலை கள் அருகில் மாயாவதி சிலைகள் வைக்க மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு கோடிக் கணக்கில் பணம் செலவிடப்பட உள்ளது. லக்னோவில் கன்சிராம் நினைவிடத்தில் மாயாவதி சிலை நிறுவப்படும்.

—————————————————————————————————————————–
“சோனியாவை விட நானே பெரிய தலைவர்’
புதுதில்லி, ஜன.16: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விட நான்தான் பெரிய தலைவர் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான் பிரதமர் பதவியை அடைய ஆசைப்படுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

“எனது போராட்டமும் பகுஜன் சமாஜ் கட்சியின் பயணமும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையில் இதுபற்றி கூறியுள்ளார். சுமார் 1000 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தை தனது 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டார். ஹிந்தியில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ.1100.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு புத்தகம் எழுதி தனது பிறந்த நாளன்று கட்சித் தொண்டர்களுக்காக வெளியிடுவேன் என்றார் அவர்.

சோனியா காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை விட நான் உயர்ந்த தலைவர் என்று மாயாவதி தனது புத்தகத்தில் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

2006-ம் ஆண்டிலிருந்து சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேசத் தேர்தல் வரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு சோதனைக் காலம் ஆகும். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் உத்தரப் பிரதேசத்தில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய ஆதரவு தருவதாக 2003 ல் பா.ஜ.க. உறுதி அளித்தது. அப்போது பொதுத்தேர்தலை முன் கூட்டியே நடத்த பா.ஜ.க. திட்டமிட்டது. உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளில் 60 தொகுதிகளை பா.ஜ.க. கேட்டது. இதுதான் எனக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய சதியின் ஆரம்பம் என்று தனது புத்தகத்தில் மாயாவதி கூறியுள்ளார்.

அரசியல் மற்றும் சமூகப் பொறுப்புகளை ஏற்று நடத்தும் பல பெண்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் நான் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்து, அந்த சமுதாயத்தின் சுயமரியாதை போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வருகிறேன். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்து, மக்களுக்கு சமூக மாற்றத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் தர வேண்டும் என்பது என் நோக்கமாகும்.

நியூஸ்வீக் பத்திரிகை வெளியிட்ட, பெரிய பொறுப்பில் உள்ள உலகின் முக்கிய 8 பெண்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இத்தகைய கெüரவம் கிடைப்பது மிகவும் அரிது. எனக்கு எதிரான சதியை அச்சமின்றி எதிர்கொண்டது, நானும் என் இயக்கமும் வளர உதவியது.

நாம் வாக்களிக்க மற்றவர்கள் ஆட்சி செய்யும் முறை, இனிமேல் நடக்காது. நாம் நாடாளுமன்றத்தைத் தேர்தல் மூலம் கைப்பற்றி நாமே ஆட்சி செய்ய வேண்டும் என்று சாதாரண மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அம்பேத்கரின் சிலை, நாடாளுமன்றத்தை நோக்கி கையைக் காட்டுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மேல்ஜாதியில் ஏழைகளாக இருப்போர், கிளர்ந்தெழுந்து, வாக்குப் பெட்டிகள் மூலமாக ஆட்சியைப் பிடித்து, தங்களது அடிமைத் தனத்தை உடைத்து, தங்கள் சொந்த முயற்சியால் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அம்பேத்கர் சிலை நமக்கு உணர்த்தும் பாடம் ஆகும்.

காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும், தற்போதுள்ள சமூக நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்பும் கட்சிகள் ஆகும். அக்கட்சிகளின் கோட்டையாகத் திகழ்ந்த உத்தரப்பிரதேசத்தில் அரசியல் நிலையை மாற்ற நான் காரணமாக இருந்திருக்கிறேன் என்று தனது சுயசரிதையில் மாயாவதி கூறியுள்ளார்.

———————————————————————————————————————————————————
உத்தரபிரதேச மாநிலத்தை 3 ஆக பிரிக்க ஆதரவு
பிறந்தநாள் விழாவில் முதல்-மந்திரி மாயாவதி அறிவிப்பு

புதுடெல்லி, ஜன.17-

உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதியின் 52-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவர், உத்தரபிரதேச மாநிலத்தை 3 மாநிலங்களாக மத்திய அரசு பிரித்தால் ஆதரவு அளிக்க தயார் என்று அறிவித்தார்.

பிரமாண்ட கேக்

உத்தரபிரதேச முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் 52-வது பிறந்தநாள் விழா, லக்னோவில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. முதல்-மந்திரியாக மீண்டும் பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் பிறந்தநாள் விழா என்பதால் ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. லக்னோ நகரமே, அவரது கட்சி கொடியின் நிறமான நீல வண்ணம் பூசியது போல இருந்தது.

நகரம் முழுவதும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. பிறந்தநாளை முன்னிட்டு தயாரிக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான `கேக்’கை மாயாவதி வெட்டினார். அவருடைய தந்தை, குடும்பத்தினர், கட்சியின் மூத்த தலைவர்கள், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., உட்பட மாநில அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அனல் மின்திட்டம்

பிறந்த நாளுக்காக பல்வேறு திட்டங்களையும் மாயாவதி தொடங்கி வைத்தார். குறிப்பாக, சர்ச்சைக்குரிய ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நொய்டா-பாலியா விரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ரூ.1,600 கோடி மதிப்பிலான நிவாரண திட்டங்களை அறிவித்தார்.

இது தவிர, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு இலவச சுகாதார காப்பீடு, மாநில அரசு ஊழியர்களுக்கான பயிற்சி மையம் ஆகியவற்றையும் அவர் அறிவித்தார். மேலும் லலித்பூர் என்ற இடத்தில் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இதற்கிடையே, மாயாவதி பிறந்தநாளுக்காக செய்யப்படும் பிரமாண்டமான செலவு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து மாயாவதி கூறியதாவது:-

இது தலித் சமுதாயத்துக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் செய்துவரும் அவதூறு பிரசாரம் ஆகும். பிறந்தநாளுக்கு அரசு பணம் எதையும் செலவழிக்கவில்லை. பிறந்தநாள் `கேக்’ கூட பணம் கொடுத்து வாங்கியதுதான். பொதுத்துறை மற்றும் மின்சார துறைக்கு கட்சியில் இருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளது.

3 மாநிலங்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்பட்ட போதிலும், இன்னமும் உத்தரபிரதேசம்தான் பெரிய மாநிலமாக இருந்து வருகிறது. எனவே, இதை பூர்வாஞ்சல், பண்டல்கண்ட், ஹரித் பிரதேசம் என 3 மாநிலங்களாக பிரிப்பதற்கு பகுஜன்சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும்.

சிறிய மாநிலங்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு சம்மதித்தால், இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். எனவே, இந்த விவகாரத்தில் முடிவு காண்பது, மத்திய அரசு கையில்தான் உள்ளது.

இவ்வாறு மாயாவதி கூறினார்.

மத்திய அரசு ஆதரவு

ஆனால், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான திக் விஜய்சிங் கூறுகையில், `உத்தர பிரதேசத்தை சிறிய மாநிலங்களாக பிரிப்பது தொடர்பாக முதலில் மாநில அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றட்டும்’ என்று தெரிவித்தார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பிறகு மாயாவதி, டெல்லி சென்றார். அங்கு மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து கேட்டபோது, `தற்போது, எனக்கு அதிக அலுவல்கள் இருக்கின்றன. எனவே, இது குறித்து முடிவு எடுப்பதற்காக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை கட்சித்தலைவர்கள் விரைவில் கூட்டுவார்கள்’ என்று பதிலளித்தார்.

இதற்கிடையே, மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய நேரடி வரித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கு குறித்து பதிலளித்த மாயாவதி, `கட்சியினர் கொடுத்த பணம்தான் என்னிடம் உள்ளது’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Posted in abuse, Action, Aiswarya, Allahabad, Alliance, Allocations, Amar Singh, Amarsingh, Ambani, Amitab, Amitabh, Anil, Assembly, Assets, Ayodhya, Ayodya, Bachan, Bahuguna, Bahujan Samaj Party, Biosketch, BJP, Brahmin, Brahmins, Bribes, BSP, Caste, Casteism, CM, Congress, Constituency, Corrupt, Corruption, Creamy, Creamy Layer, Dalit, Delhi, Disproportionate, Economic, Election, Elections, Faces, Free, Goel, Govt, Gujarat, Guru, Gurumoorthy, Gurumurthy, Health, Healthcare, Hindu, Hinduism, Hindutva, Homes, Hospitals, Hosuing, IAS, IPS, Islam, Jaiprakash, Jaiprakash Narain, Jats, JP, Kanshi, Kanshi ram, Kanshiraam, Kanshiram, Kansi ram, Kansiraam, Kansiram, kickbacks, Kurmis, Land, Lucknow, Mandal, Manifesto, Manu, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MBC, medical, Medicine, Mishra, Misra, Moslem, Mulayam, Muslim, Naseemuddin, Naseemudhin, Nasimuddin, Nasimudhin, New Delhi, OBC, Op-Ed, people, Plan, Planning, Poll, Polls, Power, PRO, promises, Property, Rajnath, Rajnath Singh, Ramjenmabhoomi, Ramjenmabhumi, Ramjenmaboomi, Ramjenmabumi, Reliance, Religion, Reservation, Reservations, Reserved, Rowdy, Rule, Sathish Chandra Mirs, SathishChandra Miras, SC Mishra, Siddik, Siddiq, Sidhik, Sidhiq, Slum, SP, Statue, Students, Study, Sudhir, Sudir, Taj, Taj mahal, Thakur, Thakurs, UP, Uttar Pradesh, Vaisya, Vajpayee, Vajpayi, Varanasi, Yadavs | 2 Comments »

Free education & other Tamil Nadu Budget policy analysis

Posted by Snapjudge மேல் மார்ச் 23, 2007

கல்லூரிவரை கல்வி இலவசம்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள பல அறிவிப்புகள், ஏற்கெனவே முதல்வர் கருணாநிதியால் பல்வேறு நிகழ்வுகளில் வாக்குறுதி அளிக்கப்பட்டவை.

உதாரணமாக, மனவளர்ச்சி குன்றியோருக்கும் ஊனமுற்றோருக்கும் உதவித்தொகை, புதிதாக இரு மருத்துவக் கல்லூரிகள், மேலும் 5 லட்சம் குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்க ரூ.100 கோடி, சிறுபான்மையினர் நலன்காக்க தனி இயக்ககம் போன்றவை.

அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் திமுக அரசில் எப்போதுமே உள்ளவை. மற்ற திட்டங்கள் நிர்வாக வளர்ச்சி சார்ந்தவை. இருப்பினும் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு மேலதிகமான கவனம் தரப்பட்டுள்ளது.

அரசுக் கலைக் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஏழைகளுக்கு இலவச உயர்கல்வி இன்றைய இன்றியமையாத் தேவை. இந்தச் சலுகையை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தினால் இத்திட்டம் நிறைவானதாக இருக்கும்.

பிளஸ்2 படிப்பு வரை தமிழ் வழியில் படிப்போருக்கு தேர்வுக் கட்டணம் மிகக் குறைவானது என்றபோதிலும் அதையும்கூட செலுத்த முடியாத ஏழைகள் பலர் கிராமங்களில் உள்ளனர். தற்போதைய கல்விச் சூழலில் அரசுப் பள்ளியும் தமிழ் வழிக் கல்வியும் ஏழைகளுக்காகத்தானோ என்ற நிலைமை உள்ளதால் இந்தத் தேர்வுக் கட்டண ரத்து பயன் தரும்.

கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் சிறப்புப் பயிற்சிக்காக ரூ.1.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், இப் பயிற்சியில் மீண்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கலாம். பதிலாக, சிறப்பாகச் செயல்படும் தனியார் பள்ளி ஆசிரியர்களை இத் திட்டத்தில் பயன்படுத்திக் கொண்டால் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புதிய ஆசிரியர்களின் புதிய பயிற்றுமுறையினால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

பள்ளி, கல்லூரிப் பேருந்துகளுக்கு வரி குறைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. இருப்பினும், பள்ளி, கல்லூரி வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கு இந்த நிர்வாகங்கள் வசூலிக்கும் கட்டணங்கள் அதிகமாக உள்ளன. வரியைக் குறைப்பதுடன் பள்ளி, கல்லூரி வாகனத்தில் செல்லும் மாணவர்களுக்கான கட்டணங்களையும் கணிசமாகக் குறைக்க யோசனை கூறினால் பெற்றோருக்குப் பயன் கிடைக்கும்.

அத்தியாவசியப் பண்டங்களின் மீது வரிக் குறைப்புகள் ஏதும் நேரடியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு பருப்பு, எண்ணெய் வழங்க முடியும் என்று அரசு நம்புகிறது. இது எந்த அளவுக்குப் பயன்தரும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சத்துணவில் அளிக்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. பல நாட்களில் முட்டைகள் சிறியனவாகவும் அழுகியும் இருப்பதாகப் புகார்கள் எழுகின்றன. முட்டைக்குப் பதிலாக சத்துமாவு உருண்டை கொடுக்கலாம். இந்த சத்துமாவு உருண்டைகளை அந்தந்த சத்துணவுக் கூடங்களைச் சேர்ந்த குழந்தைகளின் தாய்மார்களைக் கொண்ட சுயஉதவிக் குழு மூலம் தயாரித்துப் பெறலாம். இந்தத் தாய்மார்களையே கோழி வளர்ப்பின் மூலம் முட்டையையும் வழங்கச் செய்யலாம்.

மருந்துகளின் விலை உயர்வும், தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணமும் நடுத்தர மக்களை மிகவும் பாதிப்பதாக உள்ளன. இதனை ஒழுங்குபடுத்துவதற்கான எந்த முயற்சியும் அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

Posted in Analysis, Budget, College, Commerce, Dean, DMK, doctors, Education, Educators, Engineering, Expenses, Finance, Free, Funds, Government, Govt, Guides, Health, Healthcare, Income, Instruction, Instructors, Karunanidhi, Loss, medical, Medicine, Medium, Op-Ed, Policy, Politics, Private, Professors, Profit, Public, Schools, Students, Tax, Teachers, Technology, TN, University, Votes | 3 Comments »

6000 Indians are imprisoned all over the World

Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007

உலகம் முழுவதும் 6 ஆயிரம் இந்தியர்கள் பல்வேறு சிறைகளில் அடைப்பு

புது தில்லி, மார்ச் 9: உலகம் முழுவதும் 6,277 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தான் சிறைகளைவிட வங்கதேச சிறைகளில்தான் அதிக இந்தியர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். பாகிஸ்தான் சிறைகளில் 655 இந்தியர்கள் உள்ளனர். வங்கதேசத்தில் 893 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சவூதி அரேபியாவில்தான் அதிகபட்சமாக 1,116 இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் (791), மலேசியா (545), பிரிட்டன் (239), அமெரிக்கா (194), குவைத் (106), பஹ்ரைன் (101), செக்கோஸ்லோவேகியா (37), ஸ்லோவேகியா (100) ஆகிய நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காக தண்டனை பெற்று இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக சிறைகளில் உள்ள இந்தியர்களை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் விசாரணையை வேகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு அந்தந்த நாடுகளை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் கைதிகளுக்கு சட்ட உதவிகளை வழங்குவது, கைதிகள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுடன் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்வது, கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவது, சட்டப்பூர்வமாக அவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பெற்றுத்தருவது, விடுதலையாகும் கைதிகளை இந்தியாவுக்கு கொண்டுவருவது ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவிலிருந்து வேலைவாய்ப்புக்காக செல்லும் ஊழியர்களின் உரிமைக்காக வளைகுடா நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள அரசு யோசனை செய்துவருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Ambassador, Bahrain, Bangladesh, Britain, Conuslate, Correctional, Courts, Czech, employee, Employment, England, extradition, Free, Government, Gulf, Immigration, Imprison, India, Indians, Jail, Jobs, Law, London, Malaysia, Order, Pakistan, Police, Prison, Saudi Arabia, Singapore, Slovakia, Statistics, Treaty, UK, US, USA, World | Leave a Comment »