Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Duplicate’ Category

Spurious Drugs – Health of the common citizen: Dinamani Editorial

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

மருந்துகளில்கூட போலியா?

மருந்துகளில்கூட போலியா என்று, விவரம் தெரிந்தவர்கள் கேட்க மாட்டார்கள்; ஆனால் எந்த அளவுக்குப் போலி என்று யாருக்கும் தெரியாது.

உலக சுகாதார ஸ்தாபனம் என்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு (டபிள்யு.எச்.ஓ.) இந்தியாவில் புழங்கும் மருந்துகளில் 35% போலி என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது. இது உண்மைதானா என்று ஆராய மத்திய அரசு தீவிர முடிவெடுத்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருப்பது வயிற்றில் பாலை வார்க்கிறது.

இத்தகைய குற்றச்சாட்டுகளை ஆராயாமல் விடக்கூடாது என்று தீர்மானித்துள்ள அன்புமணி, அதற்காக 5 கோடி ரூபாயைத் தனியே ஒதுக்கியிருக்கிறார். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் தயாரிக்கப்படும், விற்கப்படும் மருந்துகளின் 3 லட்சம் மாதிரிகளை எடுத்து மத்திய, மாநில ஆய்வுக்கூடங்களில் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டிருக்கிறார்.

மருந்துகளின் தரம், விலை ஆகியவற்றை நிர்ணயிக்கவும் கண்காணிக்கவும், “மத்திய மருந்து ஆணையம்’ என்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற மசோதா தயாராகிவிட்டது. இது இப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் இருக்கிறது. இதை நாடாளுமன்றம் ஏற்று சட்டமாகிவிட்டால், எல்லா மருந்து, மாத்திரைகளும் மத்திய, மாநில அரசுகளின் ஆய்வகங்களில் தொடர்ந்து சோதிக்கப்படும்.

கலப்படமோ, தரக்குறைவோ கண்டுபிடிக்கப்பட்டால் மருந்து உற்பத்தியாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். புகாரின்பேரில் போலீஸ்காரரே வழக்குப் பதிவு செய்து மருந்து உற்பத்தியாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றங்களை நிறுவவும் அரசு உத்தேசித்துள்ளது.

இதற்காக மத்திய, மாநில அரசுகளின் ஆய்வகங்களை நவீனப்படுத்தி விரிவுபடுத்தவும், ஆய்வக ஊழியர்களுக்கு நவீன பயிற்சிகளை அளித்து, அதிக எண்ணிக்கையில் பணியில் அமர்த்தவும், மருந்து-மாத்திரைகளைக் கடைகளில் சோதிக்க அதிக எண்ணிக்கையில் மருந்து ஆய்வாளர்களை நியமிக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆர்.ஏ. மஷேல்கர் தலைமையிலான நிபுணர் குழு ஏற்கெனவே இந்த விஷயத்தை ஆராய்ந்தது. இந்தியாவில் உற்பத்தியாகும் மருந்து-மாத்திரைகளில் 10% தரக்குறைவானவை, 1% கலப்படமானவை என்று அந்தக்குழு அறிக்கை அளித்திருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.3,500 கோடிக்கு மருந்து மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

டாக்டர்கள், நுகர்வோர், அதிகாரிகள், மருந்து விற்பனையாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இணைந்து அக்கறையுடன் செயல்பட்டால், வெறும் லாப நோக்கத்துக்காக மருந்து தயாரிப்பில் ஈடுபடும் போலி நிறுவனங்களை விரட்டி விடலாம்.

விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கையின் கீழ் இப்போது 74 மருந்துகள் உள்ளன. இந்த வகையில் மேலும் 354 மருந்துகளைக் கொண்டுவர உரம், ரசாயனங்கள் துறை அமைச்சகம் உத்தேசித்துள்ளது. ஆனால் இதை மத்திய திட்டக்குழுவின் ஓர் பிரிவு எதிர்க்கிறது. இப்படிச் செய்தால் தொழில்முனைவோர் இத்துறையில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள் என்று எச்சரிக்கிறது. எந்த வியாபாரியும் சமுதாய நோக்கிலோ, சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவோ மருந்துகளைத் தயாரிப்பதில்லை என்பது உண்மைதான் என்றாலும், வெறும் லாப நோக்கு மட்டுமே உள்ளவர்களை இந்தத் துறையில் அனுமதிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.

எந்தக் காலத்திலும் ஏழைகளால் வைத்தியச் செலவைத் தாங்க முடியாது என்பதைக் குறிக்க, “”ஏழைக் குடும்பம்-ராஜ வைத்தியம்” என்ற பழமொழியே உண்டு. எனவே தரம், விலை ஆகியவை தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைள் வரவேற்கத்தக்கவை. அதற்கு மக்களுடைய ஆதரவு என்றும் உண்டு.

Posted in Brand, Citizen, City, Criminal, dead, Disease, Doc, Doctor, druggists, Drugs, Duplicate, Fake, Fatal, godowns, Health, Healthcare, Hospital, ingredients, IT, Lab, Law, Manufacturing, Medicine, Metro, Needy, Operation, Order, Overdose, Patient, Pharma, Pharmaceuticals, Pharmacy, Poor, Rich, Rural, Sick, Spurious, Sting, Suburban, Tablets, Today, Village, Wealthy, WHO | Leave a Comment »

More duplicate actress’ videos make cell phones ring

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006

செல்போனில் பரவும் சொர்ணமால்யா ஆபாச படம்: போலீஸ் விசாரணை

சென்னை, அக். 3-

நடிகைகளின் ஆபாச காட்சிகள் அவ்வப்போது இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன. திரிஷாவின் குளியல் காட்சி யென நிர்வாணப்படம் சமீபத்தில் வலம் வந்தது. செல்போன் கேமிராவில் இப்படத்தை எடுத்து இன்டர் நெட்டில் மர்ம நபர் வெளியிட்டு இருந்தான்.

நிர்வாணமாக இருப்பவர் தன்னை மாதிரியுள்ள வேறு பெண் என்று திரிஷா மறுத்தார். போலீசிலும் புகார் செய்தார்.

அதே போல் நடிகை சொர்ணமால்யாவின் ஆபாச படம் தற்போது செல்போன்களில் பரவி கலக்கி வருகிறது. 30 விநாடிகள் இந்த வீடியோ காட்சி ஓடுகிறது.

சொர்ணமால்யா தோற் றத்தில் இருப்பவர் படுக்கை அறை காட்சியில் மேலாடையின்றி அரை நிர்வாணமாக அமர்ந்து இருக்கிறார். திடீரென்று எதிரே ஒருவர் செல்போனில் படம் எடுப்பதை பார்த்து வேண்டாம் என்று தலையசைக்கிறார்.

ஆனாலும் கேமராவில் தொடர்ந்து பதிவாகிறது. தலையணையால் மார்பை மறைக்கிறார். பிறகு குனிந்து மேலாடையை எடுத்து அணிகிறார்.

அதற்குள் அரை நிர்வாணத்தை முழுமையாக படம் பிடித்து விடுகிறது கேமரா.

இந்த ஆபாச காட்சிகள் இ.மெயில் மூலம் உலகம் முழுவதும் பரவி வருகின்றன. தமிழ்நாட்டில் செல் போன்களில் இந்த காட்சி பரவுகிறது.

சென்னை, மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் செல்போன்களில் இந்த காட்சிகள் மின்னல் வேகத்தில் பரப்பப்படுகிறது.

ஆபாச படத்தில் இருப்பது தன்னைப் போன்ற வேறு பெண் என்று சொர்ணமால்யா மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

என்னை கேவலப்படுத்த இது போன்ற வக்கிர செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

நான் அந்த வீடியோ காட்சியை இதுவரை பார்க்கவில்லை. இது மாதிரி கேவலமான காட்சியில் நான் இருக்க மாட்டேன். எனக்கு தெரியாமல் யாரும் வீடியோ எடுக்கவும் முடியாது. என் உருவம் கொண்ட யாரோ ஒருவரை வைத்துத்தான் இந்த படத்தை எடுத்திருக்க வேண்டும்.

இது பற்றி போலீசில் புகார் செய்ய முடிவு செய்துள்ளேன். இது போன்ற ஆபாச படங்கள் என்னை பாதிக்காது என்னைப் பற்றி சுற்றி இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு சொர்ணமால்யா கூறினார்.

இந்த ஆபாச படங்கள் போலீஸ் கவனத்துக்கும் சென்றுள்ளது.

இதை பார்த்த கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் `சைபர் கிரைம் போலீஸ் மூலம் விவாதிக்கப்படும் என்றார். செல்போன் மூலமோ அல்லது இ.மெயில் மூலமோ ஆபாச படங்கள் மற்றும் ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் அனுப்புவது சட்டப்படி குற்றம் என்றும் அது போன்ற காரியங்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆபாச படத்தில் இருப்பது சொர்ணமால்யாதான் என்று உறுதியானால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Posted in Bathroom, Cellphone, Downloads, Duplicate, MMS, Mobile Phone, Porn, Sex, Sornamalya, Tamil, Topless, Trisha, video | 2 Comments »