Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Desi’ Category

US recognizes Ramesh Ganguly for his contributions toward South Asians assimilation

Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007

அமெரிக்க-இந்தியருக்கு “விடுதலை உணர்வு விருது’

சிலிக்கான்வேலி, ஜூலை 2: அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியதற்கான பங்களிப்பை பாராட்டி அமெரிக்க-இந்திய பேராசிரியருக்கு இந்தாண்டுக்கான சிறந்த விருது வழங்கப்படவுள்ளது.

ramesh Ganguly NRI Awardவிருதை பெறப்போகும் பேராசிரியர் ரமேஷ் கங்குலி(72), வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணித மற்றும் இசைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

ரமேஷ் கங்குலி பெங்களூரில் பிறந்து, மும்பையில் வளர்ந்தவர். மும்பை பல்கலைக்கழகத்தில் இளம்கலை பட்டம் பெற்றார். 1957-ம் ஆண்டு உதவித் தொகையை பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தில் சேர்ந்தார்.

முதுகலை பட்டத்தை வெற்றிகரமாக முடித்த அவர், பின்னர் அமெரிக்காவின் மசாசூசெட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பைத் தொடங்கினார். 1961-ம் ஆண்டு “பிஎச்டி’ பட்டத்தை பெற்றார். இதையடுத்து வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

விடுதலை உணர்வை ஏற்படுத்தினார்:

வாஷிங்டனில் பேராசிரியர் பணியைத் தொடங்கியதுமே அமெரிக்காவின் சீட்டேல் பகுதியில் வாழும் இந்தியர்கள் மத்தியில் ரமேஷ் கங்குலி விடுதலை உணர்வை ஏற்படுத்தினார். அவரது இந்தப் பங்களிப்பை பாராட்டித்தான் அவருக்கு தற்போது சிறந்த விருது வழங்கப்படவுள்ளது.

விருது வழங்கும் நிகழ்ச்சி ஜூலை 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் ரமேஷ் கங்குலி தவிர்த்து, புதிதாக அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ள இந்தியர்களும் பாராட்டி கெüரவிக்கப்படுவார்கள். ரமேஷ் கங்குலி 1971-ம் ஆண்டே அமெரிக்க குடியுரிமையை பெற்றுவிட்டார்.

இந்நிலையில் ரமேஷ் கங்குலி கூறும்போது, “தெற்காசியர்களின் கலாசாரத்தை பிறர் அறிந்து கொள்ள இசை ஒரு முக்கியமான ஊடகமாக அமைந்துள்ளது என்று நான் நினைக்கிறேன். எங்குசென்றாலும் இசைக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இசையின் மூலம் மக்கள் தங்களது கலாசாரத்தை மட்டுமல்லாது உணர்வுகளையும் எளிமையாக பகிர்ந்து கொள்ள முடிகிறது என்ற ரமேஷ், 19-ம் வயதில் ரயில் விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்தாலும், தன்னம்பிக்கை என்ற ஆயுதத்தால் இன்று சிறந்த சாதனையாளராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Accident, America, Asia, Asian, Award, Democratic, Desi, Disabled, Expat, Freedom, Ganguly, Immigration, Independence, Maths, music, NRI, Prize, Professor, Ramesh, Recognition, Republic, Seattle, South Asian, US, USA, Washington | Leave a Comment »

Indira K Nooyi becomes CEO of PepsiCo

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

பெப்சி தலைமை அதிகாரியாக இந்திரா நூயி

புதுதில்லி, ஆக. 16: உலகின் முன்னணி குளிர்பான நிறுவனமான பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த இந்திரா கே நூயி (50) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வரும் அக்டோபர் 1-ல் அவர் இப்பதவியை ஏற்கிறார். திங்கள்கிழமை கூடிய பெப்சிகோ நிர்வாக்குழு, அவரது 12 ஆண்டுகால உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) தேர்வுசெய்துள்ளது.

பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள முதல் இந்தியப் பெண்மணி இவர்.

உறுதியும் அனுபவமும் தொலைநோக்கும் மிக்க இந்திராவின் தலைமையின் கீழ் செயல்படுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என பெப்சிகோ நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.

கடும் சர்வதேச போட்டிகளை சமாளித்து, மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளையும், உயர் பதவிகளையும் இந்தியர்கள் கைப்பற்றி வருகின்றனர்.

இந்திரா நூயி-க்கு முன்னரே, அருண் சரின் (வோடஃபோன்), அஜய் பாங்கா (சிட்டி குரூப்), ரஜத் குப்தா (மெக்கின்ஸி), ரானா ஜே தத்தா (யுனைட்டட் ஏர்லைன்ஸ்), வியோமேஷ் ஜோசி (ஹெச்.பி.) போன்றோர் மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளனர்.

Posted in CEO, Desi, Dinamani, Indian, Indira K Nooyi, Indira Nooyi, Indra K Nooyi, Indra Nooyi, MNC, Nooyi, PepsiCo, Tamil, US | Leave a Comment »

Thanga Vettai – American Students are Idiots

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

Being in a foreign country gives you certain rights. Vadivelu exhibited how a person could project himself in ‘Vetri Kodi Kattu’. Here a desi kid from US of A goes on to say that ‘Teachers call us Idiots’.

I am married to a substitute teacher and have seen how the teachers handle the ‘special’ kids with disabilities. Teachers refer it as the ‘I’ word. The person who utters it will be strongly reprimanded. His parents will be summoned to the vice-principal’s office and had to explain, reassure them, that the kid will not repeat it.

If it is a teacher, then it means the end of career for him/her.

The answers used to be dim-witted in Sun Tv’s Thanga Vettai. Now it also hosts the lies and the lying liars who propagate them for no reason.

Hear the snippet:

this is an audio post - click to play

 

Posted in Audio, Desi, English, Idiot, Idiots, Radaan, Radhika, Ramya krishnan, Sun TV, Tamil, Thanga Vettai, USA | 2 Comments »