நடிகை காயத்ரிரகுராம் திருமணம்: நடிகர், நடிகைகள் வாழ்த்து
சென்னை, டிச.8- பிரபல தமிழ் நடிகை காயத்ரி ரகுராம். விசில், ஸ்டைல், சார்லிசாப்ளின்,பரசுராம் உள்ளிட்ட படங்களில்நடித் துள்ளார். இவர் டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள் ஆவார்.
சில வருடங்களுக்கு முன்பு நடிப்புக்கு முழுக்கு போட்டார். அமெரிக்காவில் தொழில் கல்வி படிக்கச் சென்றார். காயத்ரிரகுராமுக்கும் அமெரிக்காவில் கம்ப்ïட்டர் என்ஜினீயராக பணியாற்றும் தீபக்குக்கும் திருமணம் நிச் சயிக்கப்பட்டது.
காயத்ரி ரகுராம்-தீபக் திருமணம் சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் இன்று காலை நடந்தது.
- நடிகர் எஸ்.வி.சேகர்,
- நடிகைகள் குஷ்பு,
- ஸ்ரீபிரியா,
- சுகாசினி,
- டான்ஸ் மாஸ்டர் கலா உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினார்கள்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை அதே மண்டபத்தில் நடக்கிறது.