நொய்டா சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை
இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு அருகே நொய்டா என்னும் இடத்தில் பல குழந்தைகள் உட்பட குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டது குறித்து இந்திய அரசு, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இந்தக் குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறை என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று ஆராயும்.
சாக்கடை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தக் குழந்தைகளின் பிரேத எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே அவர்கள் காணமல் போயிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் வர்த்தகர் ஒருவரும், அவரது வேலைக்காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச பொலிஸாரினால் எடுக்கப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள், போதுமானவை அல்ல என்று, பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் புகார் செய்துள்ளன.