Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Chidambaram’ Category

Economic upliftment for the needy – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஏழைகளின் எதிரி யார்?

“”இந்தியா அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சியால் பணக்காரர்களுக்குத்தான் லாபம் என்று பேசுகிறவர்கள் ஏழைகளுக்கு எதிரிகள்” என்று மதுரையில் ஒரு கல்லூரி விழாவில் பேசுகையில் காட்டமாக விமர்சித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

சிதம்பரம் எப்போதும் வார்த்தைகளை அளந்து பேசுபவர்; மாற்றுக் கருத்துகளை முன்வைக்கும்போதுகூட தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்காமல், தனது கருத்தை ஆழமாகப் பதிவு செய்யும் சொல்லாற்றல் மிக்கவர். அப்படிப்பட்டவர் கோபமாகப் பேசியிருப்பதற்குக் காரணம், பேசியவர்கள் மீது உள்ள கோபம் அல்ல; நல்ல நடவடிக்கைகளை இப்படியே தொடர்ந்து விமர்சித்து, எதிர்த்துக் கொண்டிருந்தால் நாடு முன்னேற வேறு என்னதான் வழி என்ற ஆதங்கம்தான். அப்படி விமர்சிக்கும் “”இடதுசாரிகளை” பெயர் குறிப்பிடாமல்தான் அவர் விமர்சித்தார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

இந்தியாவில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 9% என்ற அளவை நெருங்கிக் கொண்டிருந்தாலும் நாட்டு மக்களில் கணிசமானவர்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த உண்மைகளை அறியாதவர் அல்ல சிதம்பரம். எந்தத் துறை மூலமாவது நாட்டுக்கு வருமானம் கிடைத்தால்தான் அதை வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும், பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த முடியும். இயற்கை வளங்கள் அனைத்தையும் அரசே தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளைத் தீர்மானித்து வழிநடத்துவது கம்யூனிச நாட்டில் சாத்தியம். கலப்புப் பொருளாதார முறைமையே சிறந்தது என்று நம் முன்னோடிகள் தேர்வு செய்துவிட்டதால் அதே பாதையில் நாமும் போயாக வேண்டும்.

ஏழைகளுக்காக, சுரண்டப்படுகிறவர்களுக்காகக் குரல் கொடுப்பதில் இடதுசாரிகள் முன்னே நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், பிரச்னை தீரவும், வளமை பெருகவும் உருப்படியான நல்ல யோசனைகளை அவர்கள் கூறுவதும் இல்லை, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மூலம் மற்றவர்களுக்கு உணர்த்துவதும் இல்லை என்பது மறுக்கப்படாத உண்மை. கேரளத்தில் மத்திய அரசின் உர நிறுவனத்தைத் தவிர அரசுத் துறையிலோ, தனியார் துறையிலோ அமைந்துள்ள மிகப்பெரிய தொழிற்சாலை என்ன?

மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால் நிலச் சீர்திருத்தத்தில் முன்னோடியாக விளங்குகிறது என்பதோடு சரி. மின்னுற்பத்தி, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, பாசன வசதி ஆகிய துறைகளில் அது பின்தங்கியே இருக்கிறது.

தென் மாநிலங்களைப் போல தகவல் தொழில்நுட்பத்தில் மேற்கு வங்கம் வளரவில்லை. மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத் போல தொழில் வளர்ச்சியில் செழிக்கவில்லை. மருத்துவ வசதிகளும் தரமான மருத்துவமனைகளும் இல்லாததால்தான் வங்காளிகளும் வட-கிழக்கு மாநிலத்தவர்களும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்றுத் திரும்புகின்றனர்.

“”ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிலைமை கூடவே கூடாது. அது தொழிலாளர்களின் நிரந்தர வேலையைப் பறித்து, அவர்களை கூலி அடிமைகளாக்கிவிடும், சுரண்டலுக்கு அளவே இருக்காது” என்று இடதுசாரிகள் எதிர்க்கின்றனர். அதில் உண்மை இல்லாமல் இல்லை.

  • மேற்கு வங்கத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கை 19.42%;
  • தனியார் துறையில் அந்த எண்ணிக்கை வெறும் 13.69% தான்.
  • கேரளத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் 7.71%,
  • தனியார் துறையில் 5.39%.
  • தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கை 8.58%,
  • தனியார் துறையில் 11.35%.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது, இடதுசாரிகள் தாங்கள் வலியுறுத்தும் வறட்டு சித்தாந்தங்களைத் தங்களுடைய மாநிலங்களில்கூட அமல் செய்வதில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதே.

இந் நிலையில் நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு அவர்கள் மீது கோபம் வருவது நியாயம்தானே?

Posted in Budget, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dinamani, Economy, Editorial, Finance, GDP, Needy, Op-Ed, Poor, Prices, Rich, Wealthy | Leave a Comment »

India Cuts Taxes as Election Looms, GDP Slows to 8.4%; aids farmers with big rise in social outlay

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 29, 2008

2008-09 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்

நாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி;
கல்விக்கு ரூ.34 ஆயிரம் கோடி
பெண்கள்,குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.72 ஆயிரம் கோடி;
பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவிகிதமாக இருக்கும்!
மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்

புதுடில்லி, பிப். 29- மத்திய நிதிய மைச்சர் ப. சிதம்பரம் இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக் கையில் விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்தார்.

விவரம் வருமாறு:

2008 – 09 ஆம் நிதியாண்டுக் கான பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பொருளாதார வளர்ச்சி விகி தம் 8.8 சதவீதமாக இருக்கும் என அறிவித்தார். மத்திய பட் ஜெட் இன்று தாக்கல் செய்யப் படும் என்று அறிவிக்கப்பட்டி ருந்த் நிலையில், மிகுந்த எதிர் பார்ப்பு மற்றும் பரபரப்புக்கி டையே பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியது.
நிதியமைச்சர் ப.சிதம்ப ரத்தை பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறு சபாநாயகர் சோம் நாத் சாட்டர்ஜி கேட்டுக் கொண்ட அடுத்த வினாடியே, எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஒரு சில பிரச்சினைகளை எழுப்பி கூச்சலிட்டனர்.

பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவிகிதம்
மிகுந்த சிரமத்திற்கிடையே அவர்களை அமைதிபடுத்தி சிதம்பரம் பட்ஜெட்டை தாக் கல் செய்தார். பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவீதமாக இருக்குமென அறிவித்தார். அதேபோன்று பண வீக்கம் கட்டுக்குள் வைக்கப்படும் என் றும் அவர் கூறினார்.
மேலும் பல்வேறு அறிவிப்பு களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.7,200 கோடி
வரும் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.7,200 கோடி ஒதுக்கீடு செய் யப்படுகிறது.
குழந்தைகள் மேம்பாட்டுக் கான ஒதுக்கீடு 24 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி
இன்று தாக்கல் செய்யப் பட்ட மத்திய பொதுபட்ஜெட் டில் சிறிய மற்றும் மிகக் குறைந்த லாபமடையும் விவ சாயிகள் அனைவருக்கும் வேளாண் கடன்கள் முற்றிலும், ஏறக்குறைய ரூ.60,000 கோடி தள்ளுபடி செய்யப்படும் என நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.
இதன் மூலம் 4 கோடி விவ சாயிகள் பயனடைவார்கள்.2 ஹெக்டேர் வரை வைத்துள்ள சிறிய மற்றும் மிகக் குறைந்த லாபமடையும் விவசாயிகள் இந்தப் பயனாளிகள் பட்டிய லில் வருவார்கள். தேசிய வேளாண் காப்பீட்டு திட் டத்திற்கு 644 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
நாடு முழுவதும் மண் பரி சோதனைக் கூடங்கள் அமைக்க 500 சோதனைக் கூடங்கள் அமைக்கப்படும்.
200 மாவட்டங்களில் நட மாடும் மண் பரிசோதனைக் கூடங்கள் ஏற்படுத்தப்படும்.
சொட்டு நீர்ப்பாசன திட் டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக் கீடு செய்யப்படும் 53 சிறு நீர்ப் பாசன திட்டங்கள் அமல் படுத்தப்படும் எனறு சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்புக்கு ஒதுக்கீடு ரூ.1,05,600 கோடியாக உயர்வு
பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.1,05,600 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 10 சதவிகிதம் அதிகமாகும். 2007-08-ம் நிதியாண்டில் நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு ரூ.96 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது. கல்விக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கீடு
2008-09- ஆம் நிதியாண்டுக் கான மத்திய அரசின் பொது பட்ஜெட்டில், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளுக் கான ஒதுக்கீடு 20 சதவிகித அளவில் உயர்த்தப்படுகிறது.
கல்விக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கீடு
அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு 13,500 கோடி ஒதுக்கீடு.
6,000 மாதிரி உயர்நிலைப் பள்ளிகள் அமைக்கப்படும்.
6 ஆயிரம் மாவட்டங்களில் நவோதய வித்யாலயாக்கள்.
410 கிராமங்களில் வித்யா லயாக்கள்.
மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
மதிய உணவுத் திட்டம் நடு நிலைப் பள்ளிகள் வரை நீட் டிப்பு
புதிதாக 16 மத்திய பல் கலைக்கழகங்கள் அமைக்கப் படும் ஆந்திரா, பிகார் மற்றும் ராஜஸ்தானில் புதிய அய்.அய்.டி. கல்வி நிறுவனங்கள்.
அறிவுசார் சமுதாயம் அமைக்க ரூ.85 கோடி.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மத்திய பல்கலை.
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் வீதம் ஒரு மத் திய பல்கலைக்கழகம் அமைக் கப்படும் கல்வி மற்றும் சுகா தாரம் ஆகிய துறைகளுக்கான ஒதுக்கீடு 20 சதவிகித அளவில் உயர்த்தப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு 16 மாநிலங்களில் மத்திய பல் கலைக் கழகங்கள் முதற்கட்ட மாக அமைக்கப்படுகிறது.

சென்னை அருகே ரூ.300 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க ஒதுக்கீடு
அனைவருக்கும் கல்வித் திட் டத்திற்கான ஒதுக்கீடு ரூ.13,500 கோடி.

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான ஒதுக்கீட்டில் 20 சதவிகிதம் உயர்வு.
பாரத் நிர்மாண் திட்டத் திற்கு ரூ.31,250 கோடி ஒதுக்கீடு.
சுகாதாரத் துறைக்கு ரூ.16,534 கோடி ஒதுக்கீடு – 15 சதவிகிதம் உயர்வு.
எய்ட்ஸ் / எச்.அய்.வி. கட்டுப் படுத்த அதிக நிதி ஒதுக்கீடு.
தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்திற்கான ஒதுக்கீட்டில் 15 சதவிகிதம் உயர்வு.
தனி நபர் வருமான வரி – விலக்குக்கான உச்சவரம்பு ரூ.1,10,000-லிருந்து ரூ.1,50,000-ஆக உயர்வு.
பெண்களுக்கு ரூ.1,80,000 ஆக நிர்ணயம்.
மூத்த குடிமக்களுக்கு ரூ.2,25,000 வரை வருமான வரி விலக்கு.
இந்த சலுகை மூலம் வரு மான வரி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் குறைந்தது ரூ.4000 சேமிப்பு.
வருமான வரி விகிதங்கள்:
ரூ.1,50,000 – ரூ.3 லட்சம் வரை 10 சதவிகிதம்.
ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை 20 சதவிகிதம்.
ரூ.5 லட்சத்திற்கு மேல் 30 சதவிகிதம்.
மத்திய அரசு ஊழியர்களின் 6 ஆவது ஊதியக் குழு அறிக்கை மார்ச் 31-க்குள் சமர்ப்பிக்கப்படும்.
காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டிக ளுக்கு ரூ.624 கோடி ஒதுக்கீடு.
ஜவுளி பூங்காக்கள் அமைக்க ரூ.450 கோடி.
மின்துறை சீரமைப்புக்கு ரூ.800 கோடியில் திட்டம்.
ராஜீவ் காந்தி குடிநீர் திட் டத்திற்கு ரூ.7300 கோடி ஒதுக் கீடு.
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ரூ.16,447 கோடி ஒதுக்கீடு.
ஒருங்கிணைந்த குழந்தை கள் மேம்பாட்டுத் திட்டத் திற்கு ரூ.6,300 கோடி ஒதுக்கீடு.
சிறுபான்மையினர் அதிக மாக வாழும் மாவட்டங் களுக்கு ரூ.540 கோடி ஒதுக்கீடு.
மகளிருக்கான தனித் திட்டங்களுக்கு ரூ.11,460 கோடி.
தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியுதவி கழகத் திற்கு ரூ.75 கோடி.
——————————————————————————————————————————–
மேலும் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு காப்பீடு: சிதம்பரம்

புதுதில்லி, பிப். 29: மேலும் ஒரு கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அமைப்பு சாரா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு படிப்படியாக சமூகப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், சாதாரண மக்களுக்கான காப்பீட்டுத் திட்டம், தேசிய காப்பீட்டுத் திட்டம், இந்திரா தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் மேலும் ஒரு கோடி ஏழைக் குடும்பங்கள் பயனடையும். சாதாரண மக்களுக்கு காப்பீடு திட்ட செயலாக்கத்தின் 2 வது ஆண்டிற்காக ஆயுள்காப்பீட்டு நிறுவனத்திற்கு கூடுதலாக ரூ. 1000 கோடி தருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்த போது தெரிவித்தார்.

தேசிய சுகாதார காப்பீடுத் திட்டம் வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு 2008-09 ம் ஆண்டில் ரூ.3343 கோடி ஒதுக்கப்படும்.

இதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை 87 லட்சத்திலிருந்து 1 கோடியே 57 லட்சமாக உயரும்.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரும் கடந்த நவம்பர் 19 ம் தேதியில் இருந்து இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

————————————————————————————————————————————————————————–
சிதம்பரமும் மேற்கோள்களும்

புது தில்லி, பிப். 29: மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, தமிழ் இலக்கியம் மற்றும் மூத்த அறிஞர்களின் மேற்கோள்களை சுட்டிக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். பெரும்பாலும் இவரது பட்ஜெட் உரையில் திருக்குறள் இடம்பெறும்.

வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் வள்ளுவரின் திருக்குறள் வரிகளுடனே தனது 2 மணி நேர உரையை நிறைவு செய்தார் சிதம்பரம்.

“கொடை அளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்

உடையான்ஆம் வேந்தர்க்கு ஒளி.”

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். அத்துடன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மேற்கோளான,””யார் அதிகம் செய்கிறானோ, அதிக தடவை முயல்கிறானோ, அவனே அதைத் திறம்பட செய்யத் தகுதியுடையவன்,” என்பதைச் சுட்டிக்காட்டினார்.

பட்ஜெட் உரையில் குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய அவர், இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினால், ஆம் நம்மால் நிச்சயம் முடியும் என்பதே பதிலாக இருக்கும் என்று குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்து ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டதையும் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.

1996-97-ம் ஆண்டு சிதம்பரம் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில்,

“”இயற்றலும், ஈட்டலும், காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு.”

என்ற குறளை மேற்கோள் காட்டினார்.

2004-05-ம் ஆண்டு பட்ஜெட்டில் டிக்கன்ஸன் நாவலில் வரும் ஒரு கதாபாத்திரத்துடன் தன்னை உவமைப்படுத்தி, “நல்ல காரியங்கள் நற்செயல்களால் விளையும், நற்சொற்களால் அல்ல,” என்று குறிப்பிட்டார்.

அப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் “மேன் ஹுன் நா’ என்றார். அது அப்போது மிகவும் பிரபலமாகும். இறுதியில்

“”அறன்இழுக்காது அல்லவை நீக்கி, மறன் இழுக்கா

மானம் உடையது அரசு.”

என்ற குறளுடன் நிறைவு செய்தார்.

2005-06-ம் ஆண்டு பட்ஜெட்டில்,

“”பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்

அணிஎன்ப நாட்டிற்கு இவ் வைந்து.”

என்ற குறளை சுட்டிக்காட்டினார். அத்துடன் பொருளாதார நிபுணர் அமார்த்தியா சென் தனது புத்தகத்தில் குறிப்பிட்ட,””மேம்பாட்டு நடவடிக்கைகளே உண்மையான சுதந்திரமாகும். இதன்மூலம்தான் மக்கள் மகிழ்ச்சியடைவர்,” என்ற வாசகங்களைச் சுட்டிக்காட்டினார்.

2007-08-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில்,

“”கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்து இவ்வுலகு.”

என்ற குறளை மேற்கோள் காட்டினார் சிதம்பரம்.

அத்துடன் ஹென்றி டேவிட் தோரோவின் வாசகங்களான,””காற்றில் அரண்மனை கட்டினால், அதில் உங்கள் உழைப்பு வீணாகாது.

நீங்கள் எப்படி கட்டவேண்டும் என்று நினைத்தீர்களோ அப்படியே இருக்கும். அதற்கான அடித்தளத்தை தற்போது அமையுங்கள்,” என்று குறிப்பிட்டதைப்போல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வலுவான பொருளாதாரத்துக்கு அடித்தளம் அமைக்கிறது, அதிலிருந்து வரும் தலைமுறையினர் கோட்டையைக் கட்டலாம் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் விவேகானந்தரின் பொன்மொழிகளான, “”எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். நமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கிறோம்.

தற்போது காற்று வீசுகிறது; காற்றின் திசைக்கு எதிர்த் திசையில் சில கப்பலும், காற்றின் திசைக்கேற்ப சில கப்பலும் செல்லும்.

காற்றை பயன்படுத்திக் கொள்ளாததது காற்றின் குற்றமல்ல. அதைப்போல நாம் செல்ல வேண்டிய இலக்கை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்,” என்ற மேற்கோளையும் சிதம்பரம் நினைவுகூர்ந்தார்.

2007-08-ம் ஆண்டு பட்ஜெட்டில்,

“”உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கும் நிலை.”

என்ற திருக்குறளை சுட்டிக் காட்டினார்.

அதிவேகமான பொருளாதார வளர்ச்சி அவசியம். அதன்மூலம்தான் ஏழ்மையை ஒழிக்க முடியும் என்ற நோபல் அறிஞர் டாக்டர் யூனுஸின் மேற்கோளோடு உரையை நிறைவு செய்தார்.

————————————————————————————————————————————————————————–
சிதம்பரத்தின் சலுகைகள் நிறைந்த தேர்தல் பட்ஜெட்: ரூ. 60 ஆயிரம் கோடி விவசாயக் கடன் ரத்து

ரத்து செய்யப்பட்ட கடன் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இதை எந்த வகையில் சமாளிக்கலாம் என்பதை திட்டமிட்டுள்ளோம். }ப. சிதம்பரம்

புது தில்லி, பிப். 29: பல்வேறு சலுகைகள் நிறைந்த தேர்தல் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்தார்.

அனைத்துத் தரப்பினரையும் குறிப்பாக விவசாயிகளை அதிகம் திருப்திபடுத்தும் வகையிலான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

சிதம்பரம் தாக்கல் செய்யும் ஐந்தாவது முழு பட்ஜெட் இது.

2008-09-ம் ஆண்டின் வரி வருவாய் ரூ. 6,02,935 கோடி. செலவு ரூ. 6,58,119 கோடி. வருவாய் பற்றாக்குறை ரூ. 55,184 கோடி.

2008-09-ம் ஆண்டின் திட்டச் செலவு ரூ. 2,43,386 கோடி. இது மொத்த செலவில் 32 சதவீதமாகும். திட்டம் சாரா செலவு ரூ. 5,07,498 கோடி.

ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை ரூ. 1,33,287 கோடி.

விவசாயக் கடன் ரூ. 60 ஆயிரம் கோடி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 கோடி விவசாயிகள் பயனடைவர்.

இதேபோல மாதாந்திர சம்பளதாரர்களுக்கு ஆண்டு வருமான வரி விலக்கு வரம்பு தற்போது ரூ. 1.10 லட்சத்திலிருந்து ரூ. 1.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு வருமான வரிச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி பண பரிமாற்ற வரி விதிப்பு முறை முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.

சிறிய ரகக் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்டவற்றுக்கான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீர் சுத்திகரிப்பு கருவிகள், காலை உணவு, காகிதம், காகித அட்டை உள்ளிட்டவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஃபில்டர் அல்லாத சிகரெட் விலை உயரும்.

உற்பத்தித் துறைக்கு உத்வேகம் அளிப்பதற்காக சென்வாட் வரி 16 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வரிச் சலுகை அளிக்கப்பட்டதால் மறைமுக வரி ரூ. 5,900 கோடி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வங்கி பண பரிமாற்ற வரி கைவிடப்பட்டதை ஈடுகட்டும் வகையில் பொருள்கள் பரிமாற்றக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய விற்பனை வரி 3 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ராணுவத்துக்கான ஒதுக்கீடு ரூ. 1.05 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் காமன்வெல்த் போட்டி 2010-ம் ஆண்டு நடைபெற உள்ளதால் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்கு ரூ. 624 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுவிநியோக உணவுப் பொருளுக்கான மானியத் தொகை ரூ. 32,667 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கனவு திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ. 16 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதான திட்டமான “பாரத் நிர்மாண்’ திட்டத்துக்கு ரூ. 31,280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பப் புரட்சியை கிராமப்பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்காக மாநில தகவல் மையம் ஏற்படுத்தப்படும். இத்தகைய மையத்துக்காக ரூ. 275 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய மையங்களை ஒருங்கிணைக்க ரூ. 450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதியோர் நலனுக்காக ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில் பயிற்சி மையங்கள் 300-ஐ மேம்படுத்த ரூ. 750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடன் சுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதற்காகவும், வேளாண் துறைக்கு உத்வேகம் அளிப்பதற்காகவும் ரூ. 60 ஆயிரம் கோடி சலுகை அளிக்கப்பட்டதை பல கட்சிகள் வரவேற்றுள்ள போதிலும், இது தேர்தலை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

விவசாயக் கடன் தள்ளுபடிக்கான ஒதுக்கீடு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, இதுகுறித்து சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,””இந்தத் தொகை வங்கிகளுக்கு திரும்ப அளிக்கப்படலாம் அல்லது அளிக்காமலும் போகலாம். இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் நிதிச் சுமை மூன்று ஆண்டுகளில் அவற்றுக்கு திரும்ப அளிக்கப்படும்,” என்றார்.

ரத்து செய்யப்பட்ட கடன் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இதை எந்த வகையில் சமாளிக்கலாம் என்பதை திட்டமிட்டுள்ளோம். அந்த நுணுக்கங்களைக் கடைப்பிடித்து அதை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்பதை நம்புங்கள் என்றார் சிதம்பரம்.

“”இது தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட் அல்ல. இந்தியாவில் ஆண்டுதோறும் தேர்தல் நடைபெறுகிறது. இதனாலேயே ஆண்டுதோறும் தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட்,” என்று கூறுவது வழக்கமாக உள்ளது என்றார் சிதம்பரம்.

சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு 300 கோடி

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சென்னை அருகே செயல்படுத்தப்படும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார்-பொதுத்துறை இணைந்து செயல்படுத்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமொன்றுக்கு தமிழக அரசு தற்போது அனுமதி கேட்டுள்ளது. இத்திட்டம் பரிசீலனை செய்யப்படும் என்றார் அவர்.

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இதன் மூலம் ரூ.1000 மாத ஊதியமாக பெற்று வந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். ரூ.500 பெற்று வந்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு ரூ.750 வழங்கப்படும்.

இதன் மூலம் 18 லட்சம் அங்கன்வாடி ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6-வது ஊதிய கமிஷன் மார்ச் 31-ல் அறிக்கை

ஆறாவது ஊதிய கமிஷன் மார்ச் 31-ம் தேதி தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கிறது.

நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஊதிய கமிஷன் அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் என்று தெரிவித்தார்.

சாதா சிகரெட்களுக்கு கடும் வரி உயர்வு

மத்திய பட்ஜெட்டில் சாதாரண சிகரெட்களுக்கான உற்பத்தி வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் இவ் வகை சிகரெட்களின் விலையும் கடுமையாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

அதேநேரத்தில் பில்டர் சிகரெட்களுக்கான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நீளம் குறைந்த (60 எம்.எம்) சாதாரண சிகரெட்டுகளுக்கு உற்பத்தி வரி தற்போது 1000-க்கு ரூ. 168 விதிக்கப்படுகிறது. இது ரூ.819 -ஆக உயர்த்தப்படுகிறது.

————————————————————————————————————————————————————————–

வரிச் சலுகைகள் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும்: சிதம்பரம்

புதுதில்லி, பிப். 29: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் தொழில்துறை வளர்ச்சிக்கு தூண்டுதலாக அமையும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

வரிச் சலுகைகளால் மக்களுக்கு பணம் மிச்சமாகும். கையில் பணம் மிச்சமாகும் போது அதைக் கொண்டு புதிய பொருள்கள் வாங்குவார்கள். இது தொழில்துறை வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் என்றார் அவர்.

வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டதால் மக்களின் கைகளில் பணப் புழக்கம் அதிகரிக்கும். இதனால் நுகர்வு அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

நுகர்வு அதிகரிக்கும் போது தேவை அதிகரிக்கும். குறிப்பாக கார், இரண்டு சக்கர வாகனங்கள் போன்றவற்றின் தேவை அதிகரிக்கும். இது உற்பத்தி பெருக வழிவகுக்கும் என்றார் அவர்.

நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி வீதம் சராசரியாக 8.8 சதவீதமாக இருக்கும்.

இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி வீதம் 9.1 சதவீதத்திலிருந்து 8.4 சதவீதமாக குறைந்துவிட்டது. இந்த சரிவுக்கு தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்ட தேக்கமே காரணம்.

உற்பத்தி வரி 16 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்பட்டது, சில பொருள்களுக்கு சுங்க வரிக் குறைப்பு போன்ற மறைமுக வரிக் குறைப்புகளால் அரசுக்கு ரூ. 5900 வருமான இழப்பு ஏற்படும்.

இந்த பட்ஜெட்டில் தொழில்துறை புறக்கணிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டபோது, அவர்களுக்கு என்ன தேவை இருக்கிறது. அவர்கள் மீது எந்த சுமையையும் சுமத்தவில்லையே என்றார் சிதம்பரம்.

அதற்குப் பதிலாக வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் கார்ப்பரேட் துறை பயன் அடையும் என்றார் சிதம்பரம்.

————————————————————————————————————————————————————————–
4 கோடி விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் பட்ஜெட்

புது தில்லி, பிப். 29: நான்கு கோடி விவசாயிகளின் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்வதாக நிதி அமைச்சர் ப. சிதம்பரம் 2008-09-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தார்.

அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் 2007 மார்ச் 31 வரை அளித்த கடன்கள் அனைத்தும் ரத்தாகிறது. இவை 3 கோடி சிறு, குறு விவசாயிகள் வாங்கியது. வசூலிக்கப்பட முடியாமல் நிலுவையில் இருந்த 50,000 கோடி ரூபாய் இந்த வகையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சிறு விவசாயிகள் என்போர் 1 ஹெக்டேர் முதல் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருப்பவர்கள். குறு விவசாயிகள் என்போர் அதிகபட்சம் ஒரு ஹெக்டேர் மட்டுமே நிலம் வைத்திருப்போர்.

வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடனை பாக்கி வைத்திருக்கும் இதர விவசாயிகள், தாங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையில் 75 சதவீதத்தை அதாவது முக்கால் பங்கைச் செலுத்திவிட்டால், அரசு 25 சதவீதத்தை அதாவது கால் பங்கைத் தள்ளுபடி செய்துவிடும். அப்படி தள்ளுபடியாகக் கூடிய தொகை மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய். இதனால் ஒரு கோடி விவசாயிகள் கடன் நிவாரணம் பெறலாம். அதாவது 30 ஆயிரம் கோடி ரூபாய் கடனை இவர்கள் திருப்பிச் செலுத்தினால் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரத்தாகிவிடும்.

இந்தக் கடன் தள்ளுபடி நடவடிக்கைகள் 2008 ஜூன் 30-க்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துக் கொண்டுள்ளது.

2,80,000 கோடி: சாகுபடிக்கு புதிதாகக் கடன் தேவைப்படும் விவசாயிகள் உடனடியாக வங்கிகளை அணுகலாம். ரூ.2,80,000 கோடி கடன் தொகை தயாராக இருக்கிறது. குறுகிய கால விவசாயக் கடன்களுக்கான வட்டி 7 சதவீதமாகவே தொடரும். விவசாயத்துக்கான வட்டி குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அரசு 2008-09-ம் நிதி ஆண்டுக்கு ரூ.1,600 கோடியை ஒதுக்கியிருக்கிறது.

பாசனத்துக்கு: பாசன வசதிகளை அளிக்க 2008-09-ம் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இது 11,000 கோடியாகத்தான் இருந்தது.

விரைவுபடுத்தப்பட்ட பாசன பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் 24 பெரிய -நடுத்தர திட்டங்களும் 753 சிறு பாசன திட்டங்களும் இந்த நிதியாண்டில் நிறைவேற்றப்படும். இதனால் 5 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதி கூடுதலாகக் கிடைக்கும்.

4 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு சொட்டுநீர், இறைவைப் பாசனம் மூலம் தண்ணீர் வழங்க ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது.

புதிய கார்ப்பரேஷன்: பெரிய, நடுத்தர பாசன திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க புதிய பாசன-நீர்வள நிதி கார்ப்பரேஷன் உருவாக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ஆரம்ப மூலதனமாக ரூ.100 கோடி வழங்கப்படவுள்ளது.

தோட்டக்கலை பயிர்: தோட்டக்கலைப் பயிர் சாகுபடியின் கீழ் மேலும் 2,76,000 ஹெக்டேர் நிலங்கள் வந்திருப்பதால் ஊக்குவிப்பு அடைந்துள்ள அரசு தேசிய தோட்டக்கலை இயக்கத்துக்கு ரூ.1,100 கோடி வழங்குகிறது. தென்னை, முந்திரி, மிளகு ஆகியவற்றில் சாகுபடியை ஊக்குவிக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

2009 மார்ச்சுக்குள் நாட்டின் 250 மாவட்டங்களில் மண் பரிசோதனைக்கான நடமாடும் ஆய்வுக்கூடங்களை நிறுவ ரூ.75 கோடி மத்திய வேளாண் துறைக்கு ஒதுக்கப்படும்.

இதுமட்டும் அல்லாமல் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அரசுத்துறையிலும் தனியார் துறையிலுமாக 500 மண் பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு ஆய்வகத்துக்கும் அரசு ரூ.30 லட்சம் நிதி உதவி அளிக்கும் என்றார் சிதம்பரம்.

————————————————————————————————————————————————————————–
சிறுபான்மையினர் நலனுக்கு நிதிஒதுக்கீடு இருமடங்கு உயர்வு

புதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கான நிதிஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்காக பல்நோக்கு வளர்ச்சித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சிறுபான்மையினர் நல அமைச்சகத்துக்கு 2007-08 ஆம் ஆண்டு ரூ.500 கோடி மட்டுமே நிதிஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2008-09 ஆம் ஆண்டில் இந்த நிதி ஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டு ரூ.1000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 90 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு வசிக்கும் சிறுபான்மையின மக்களின் முன்னேற்றத்துக்காக ரூ.3780 கோடியில் பல்நோக்கு வளர்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் முதல்கட்டமாக ரூ.540 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இதுதவிர மதரஸôக்களை நவீனப்படுத்த ரூ.45 கோடியும் சிறுபான்மையின பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.80 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டங்களில் அரசு வங்கிகளின் 288 கிளைகள் நடப்பு ஆண்டில் கூடுதலாக திறக்கப்படும்.

மத்திய பாதுகாப்புப் படையில் சிறுபான்மை இனத்தவர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.

————————————————————————————————————————————————————————–
ஈரோட்டில் விசைத்தறி மேம்பாட்டுக் கழகம்

புதுதில்லி, பிப். 29: ஈரோட்டில் விசைத்தறி மேம்பாட்டுக்காக மிகப்பெரிய குழுமம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்:

ஜவுளித்துறையில் உள்கட்டமைப்பையும், உற்பத்தியையும் மேம்படுத்துவதற்காக 6 மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகப்பெரிய குழுமங்களாக உருவாக்கப்படவுள்ளன.

விசைத்தறிக்காக ஈரோடு மற்றும் பிவண்டியும், கைத்தறிக்காக வாராணசி மற்றும் சிப்சாகரும், கைவினைக் கலைகளுக்காக நர்சாபூர் மற்றும் மொராதாபாத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுமத்திற்கும் ரூ. 70 கோடி தேவைப்படுகிறது. 2008-09 ம் துவக்க நிதியாண்டில் ரூ.100 கோடியுடன் இத்திட்டதிற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன.

————————————————————————————————————————————————————————–
ஏழைகளுக்கான வீட்டுவசதி திட்டத்துக்கு மானியம் அதிகரிப்பு

புது தில்லி, பிப். 29: பாரத் நிர்மாண் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படும் இந்திரா வீட்டுவசதி திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் மானியத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:

சமவெளி பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கான மானியம் வீடு ஒன்றுக்கு ரூ.25,000-லிருந்து ரூ.35 ஆயிரமாக ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படும்.

மலை மற்றும் சிக்கலான பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு இத்தொகை ரூ.27,500-லிருந்து ரூ.38.500 ஆக அதிகரிக்கப்படுகிறது.

தேசிய வேளான் காப்பீட்டுத் திட்டம்: தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.644 கோடி ஒதுக்கப்படும். இத்திட்டம் தற்போதைய நிலையிலேயே கரீப் மற்றும் ராஃபி பருவங்களிலும் தொடரும். ஐந்து மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சோதனை ரீதியாக செயல்படுத்தப்படவுள்ள தட்ப வெப்ப அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்படும்.

தேயிலைச் செடிகளை மறுநடவு செய்யவும், புத்துருயிரூட்டவும் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட தேயிலை நிதியத்துக்கு ரூ.40 கோடி அளிக்கப்படும். இதே போன்று ஏலக்காய்க்கு ரூ.10.68 கோடியும், ரப்பர் பயிருக்கு ரூ.19.41 கோடியும், காபி பயிருக்கு ரூ.18 கோடியும் நிதியுதவி அளிக்கப்படும்.

ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியம்:: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் தொகுப்பு நிதியை ரூ.14,000 கோடியாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தின் கீழ் கிராமப்புற சாலைகளுக்கான தனிப்பிரிவு ரூ.4,000 கோடி தொகுப்பு நிதியுடன் அமைக்கப்படவுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம்: தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.10,867 கோடியிலிருந்து ரூ.12,966 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம்: தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவைகளின் வளர்ச்சிக்கான ஒதுக்கீடு ரூ.1,500 கோடியிலிருந்து 1,680 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொது சேவை மையங்களுக்கு ரூ.75 கோடியும், சவான் திட்டத்துக்கு ரூ.450 கோடியும், மாநில தகவல் மையங்களுக்கு ரூ.275 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான முதலீடுகளுக்கும் அரசு ஊக்கம்: நடப்பு நிதியாண்டில் இறுதியில் சேமிப்பு விகிதம் 35.6 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 36.3 சதவீதமாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதே போக்கு அந்நிய முதலீட்டிலும் பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 12.7 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் அந்நிய நிறுவன முதலீடு 18 பில்லியன் டாலராகவும் இருந்தது.

அனைத்து விதமான முதலீட்டையும் உள்நாடு, வெளிநாடு தனியார் மற்றும் பொதுத்துறையை ஊக்கப்படுத்துவதே அரசின் கொள்கையாகும்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு பங்குகள் வாயிலாக ரூ.16,436 கோடியும், கடன்கள் வாயிலாக ரூ.3,003 கோடியும் மத்திய அரசு அளிக்கவுள்ளது. இதுவரை 44 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் அதிக நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை மேம்படுத்துவதே அரசின் திட்டம் என்றார் அவர்.

————————————————————————————————————————————————————————–
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ. 22,948 கோடி

புதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு மொத்தம் ரூ. 22,948 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உதவித் திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இதை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார்.

இதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின விமான ஓட்டிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம், உயிரி தொழில்நுட்பத் துறை மூலம் இப் பிரிவினருக்கான உயிரி தொழில்நுட்பத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு ரூ. 3965 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 3,450 கோடி.

இதுதவிர தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான மொத்த நிதிஒதுக்கீடு ரூ. 22,948 கோடி. இதில் ஊனமுற்றோருக்கான நிவாரண திட்டங்கள், இந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களும் அடங்கும்.

————————————————————————————————————————————————————————–
மருத்துவக் காப்பீட்டுக்கு வரிச் சலுகை

புது தில்லி, பிப். 29: பெற்றோரின் மருத்துவ சுகாதாரக் காப்பீட்டுக்கு செலுத்தப்படும் தொகைக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி வழக்கமான வரி சலுகையுடன் கூடுதலாக ரூ.15 ஆயிரத்துக்கு வரிச் சலுகை அளிக்கப்படும். பெற்றோர் மூத்த குடிமக்களாக இருக்கும்பட்சத்தில் ரூ.20 ஆயிரத்துக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நீதிமன்றங்கள் கணினிமயம்: நீதிமன்றங்களுக்கு அடிப்படைக் கட்டுமான வசதிகள் மற்றும் கணினிமயமாக்குவதற்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை நிர்வாகத்துக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் ரூ.108.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2008-09 பட்ஜெட்டில் இது 253.12 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கப்படுவதை விரைவுபடுத்துவதற்காக மாவட்ட மற்றும் கீழ்நீதிமன்றங்களை கணினிமயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவே இந்த ஆண்டு ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு நீதிமன்றங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி இந்த பட்ஜெட்டில் ரூ.2 கோடியிலிருந்து ரூ.13 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அருணாசலப் பிரதேசத்துக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி: அருணாசலப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக சிறப்பு நிதியாக ரூ.500 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநிலத்தில் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய-பாக். எல்லை பணி: இந்தியா -பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.124 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காகும்.

இந்திய -வங்கதேச எல்லையில் முள்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.484.23 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.76.74 கோடி குறைவாகும்.

————————————————————————————————————————————————————————–
ராணுவ ஒதுக்கீடு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது


புதுதில்லி, பிப். 29: பொது பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 5600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 96 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் 92 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.

அதிநவீன ஹெலிகாப்டர்கள் மற்றும் 155 மி.மி. பீரங்கிகள் வாங்கும் பேரம் கடைசி நேரத்தில் ரத்தானதால் ரூ.3500 கோடி செலவழிக்கப்படவில்லை.

முதன்முறையாக பாதுகாப்பு பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டினாலும், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளோடு ஒப்பிடும்போது இந்த நிதி குறைவு என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ராணுவத்துக்கு இரண்டு சதவீதத்துக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 5 சதவீதமும், சீனாவில் 7 சதவீதமும் நிதி ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

————————————————————————————————————————————————————————–
கிராமப்புற சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு


புது தில்லி, பிப். 29: தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்திற்கான ஒதுக்கீட்டை ரூ.12,050 கோடியாக உயர்த்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம்தான் கிராமப்புற மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கான முக்கிய திட்டம்.

சமுதாயமே நடத்தும் பரவலாக்கப்பட்ட சுகாதார கட்டமைப்பை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். இதற்காக 4,62,000 பணியாளர்களுக்கு பயிற்சி தரப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

1,77,924 கிராம சுகாதார மற்றும் கழிப்பிட குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 323 மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்திற்கு ரூ.993 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளம்பிள்ளைவாத நோய் ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.1042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
————————————————————————————————————————————————————————–

கிராமங்களில் கட்டப்படும் மருத்துவமனைகளுக்கு 5 ஆண்டுகள் வரிவிலக்கு

புதுதில்லி, பிப். 29: கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் புதிதாக கட்டப்படும் மருத்துவமனைகளுக்கு பொது பட்ஜெட்டில் ஐந்து ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும், குறிப்பிட்ட சில நகரங்கள் மட்டும் இந்த சலுகையைப் பெற முடியாது என்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இதன்படி 2008 ஏப்ரல் 1 முதல் 2013 மார்ச் 31 வரை வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்ட சுற்றுலாத் தலங்களில், 3 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் கட்டுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வருமான வரிச் சலுகை அளிக்கப்படும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

————————————————————————————————————————————————————————–

கல்வித் துறைக்கு ரூ.34,400 கோடி

புது தில்லி, பிப். 29: பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். கல்வித்துறைக்கு கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட 20 சதவீதம் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கல்வித்துறைக்கு ரூ.28, 674 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ.34,400 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதில் சர்வசிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூ.13,100 கோடியும், மதிய உணவு திட்டத்திற்கு ரூ.8,000 கோடியும், இடைநிலைக் கல்விக்கு ரூ.4,554 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2008-09-ம் ஆண்டின் மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ் 6,000 உயர்தர மாதிரிபள்ளிகள் துவக்கப்படவுள்ளன. இந்த திட்டத்திற்காக ரூ.650 கோடி பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

————————————————————————————————————————————————————————–
வடகிழக்கு பகுதிக்கு சிறப்பு கவனம்

புதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் வடகிழக்கு பகுதிக்கு தொடர்ந்து சிறப்பு கவனமும், அதிக நிதி ஒதுக்கீடும் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்திற்கு ரூ.1445 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பிராந்தியத்திற்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு 2007-08 ல் ரூ.14,365 கோடியாக இருந்தது. 2008-09 ல் ரூ.16,447 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு எல்லைப்புற பகுதிகள் சில பிரத்யேக சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இவற்றை வழக்கமான திட்டங்களின் கீழ் சரி செய்ய இயலாது.

எனவே சிறப்பு ஏற்பாடுகள் மூலம் பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

————————————————————————————————————————————————————————–
பட்ஜெட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திட்டங்கள்: பச்சோரி வரவேற்பு

புதுதில்லி, பிப். 29: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தொழில்நுட்பம், எண்ணங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நிலையான அமைப்பை ஏற்படுத்த பட்ஜெட்டில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதை ஆர்.கே.பச்சோரி வரவேற்றுள்ளார்.

நோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஐ.நா.வின் தட்பவெப்ப மாறுதல் குழுவின் தலைவருமான ஆர்.கே.பச்சோரி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதைத் தெரிவித்துள்ளார்.

அரசின் முக்கியமான கொள்கைகளில் தட்பவெப்ப மாறுதல் தொடர்பான திட்டங்கள் இடம்பெறும் என்பது நிதியமைச்சர் சிதம்பரத்தின் பட்ஜெட் முலம் விளங்குகிறது. இது திருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

————————————————————————————————————————————————————————–

தகவல் ஒலிபரப்புக்கு ரூ. 300 கோடி கூடுதல் நிதி

புதுதில்லி, பிப். 29: தகவல் ஒலிபரப்புத்துறைக்கு 2008 – 09 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரசார பாரதிக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு 95.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டுக்கு ரூ. 326.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 160 கோடி அதிகம்.

சர்வதேச ஒலிபரப்பு மையத்தைத் தொடங்குவதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார். 2010-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பிரசார் பாரதி பெற்றுள்ளது.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கு 79 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2008 – 09 ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 8 கோடி.

கேளிக்கை மற்றும் ஊடகம், சினிமா துறைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

————————————————————————————————————————————————————————–

விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி

புதுதில்லி, பிப். 29: விரைவுபடுத்தப்பட்ட நீர்பாசன திட்டத்திற்கான 2008-09 ம் ஆண்டிற்கான மதிப்பீட்டுச் செலவாக ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் சிதம்பரம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், விரிவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 24 பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசன திட்டங்களும், 753 சிறிய நீர்ப்பாசன திட்டங்களும் இந்த நிதியாண்டியில் நிறைவேற்றப்படுகிறது.

மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீடு ரூ.348 கோடியாகும். மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் குறு நீர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 4 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு பயன்பெறும் என்றார்.

————————————————————————————————————————————————————————–

பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க முயற்சி

புது தில்லி, பிப். 29: பட்ஜெட் தயாரிப்பின்போது 3 வகையான பற்றாக்குறைகளை குறைப்பது அல்லது கட்டுக்குள் வைப்பதில்தான் நிதியமைச்சரின் திறமை இருக்கிறது. இப்படி பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைப்பதை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே “”நிதி பொறுப்பு, பட்ஜெட் நிர்வாகச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.

பட்ஜெட் பற்றாக்குறை, வருவாய் இனத்தில் பற்றாக்குறை, அரசுக்கு வர வேண்டிய நிதி, அரசு செய்ய வேண்டிய செலவு ஆகியவற்றுக்கு இடையிலான பற்றாக்குறை என்று இவை 3 வகைப்படும்.

பொது வரவு செலவில் பற்றாக்குறை என்பது, அரசு தனக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்று கூறுவதற்கும், தனக்கு எவ்வளவு செலவாகும் என்று கூறுவதற்கும் இடையே உள்ள இடைவெளி ஆகும்.

வருவாய் இனத்தில் பற்றாக்குறை என்பது நேர்முக, மறைமுக வரிகள் மூலம் அரசு எதிர்பார்க்கும் தொகைக்கும் உண்மையில் கையில் கிடைக்கும் (இலக்கைவிடக் குறைவாக உள்ள) தொகைக்கும் இடையிலான பற்றாக்குறையாகும்.

மற்றொரு பற்றாக்குறை அரசுக்கு உண்மையிலேயே கிடைக்கும் வருவாய்க்கும், அதுசெய்யும் செலவுகளுக்கும் இடையிலான பற்றாக்குறை எவ்வளவு என்று பட்ஜெட்டிலேயே தெரிவிக்கப்படுவதாகும்.

பொது வரவு-செலவில் பற்றாக்குறை என்பது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி, சேவை மதிப்பில் 3 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான் “நிதி பொறுப்பு, பட்ஜெட் நிர்வாகச் சட்டம்’ விதிக்கும் முக்கிய நிபந்தனையாகும்.

நிதியமைச்சர் ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசின் பட்ஜெட்படியிலான பற்றாக்குறை ரூ.1,33,287 கோடியாக இருக்கிறது. இது மொத்த உற்பத்தி மதிப்பில் 2.5 சதவீதம்தான்.

2007-08 ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிட்டால் இதன் அளவு 3.1% ஆக இருக்கிறது. இதை நிதியமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது சுட்டிக்காட்டினார்.

இந்த பட்ஜெட்டில் சிதம்பரம் அறிவித்துள்ள சலுகைகள், வரிச் சீரமைப்பு காரணமாக அரசுக்கு வரும் வருவாய் சற்று குறையும் வாய்ப்பு தெரிகிறது. எனவே அரசுக்கு வருவாய் கணக்கில் பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிகிறது.

வறுமை ஒழிப்புக்கும், கடன் நிவாரணத்துக்கும், சமூகத்தின் அடித்தள கட்டமைப்பை மேம்படுத்தும் துறைகளுக்கும் இந்த பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இப்போது அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய்க்கும் கிடைத்துக் கொண்டிருக்கும் வருவாய்க்கும் இடையிலான பற்றாக்குறை 1.5% ஆக இருக்கிறது. அடுத்த பட்ஜெட்டில் இது 1% ஆக குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மத்திய அரசுக்கு வருவாய் இனங்கள் மூலம் ரூ.6,02,935 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் செலவு ரூ.6,58,119 கோடியாக இருக்கும்.

வருவாய் கணக்கில் இப்போது நிலவும் பற்றாக்குறையை முழுதாகப் போக்க மேலும் ஓராண்டு பிடிக்கலாம் என்று நிதியமைச்சர் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.

————————————————————————————————————————————————————————–
ரூ.1.50 லட்சம் வரை வருமான வரி இல்லை

புதுதில்லி, பிப். 29: மாத ஊதியம் பெறுவோருக்கான வருமான வரி விலக்கு ரூ.1.10 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.1.50 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மக்களவையில் அறிவித்தார்.

வருமானத்துக்கு ஏற்ப விதிக்கப்படும் வரி விகிதத்தில் சில மாறுதல்களையும் அவர் செய்துள்ளார்.

இதன்படி ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் சுமார் 4000 ரூபாய் வரை பலன் கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ளவர்கள் தற்போதுள்ள வரி விகிதத்தின்படி ரூ.2,49,000 வருமான வரி செலுத்துகின்றனர். இனிமேல் புதிய வரி விகிதப்படி அவர்களது வருமானவரி 2,05,000 ரூபாயாகக் குறையும். அதாவது அவர்களுக்கு அதிகபட்சம் ரூ.44,000 வரி குறையும்.

பெண்களுக்குச் சலுகை

ஆண்டுக்கு ரூ.1.45 லட்சம் வரை வருமானம் உள்ள பெண்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து இதுவரை விலக்கு அளிக்கப்பட்டது. இனிமேல் (2008-2009) ரூ.1.80 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள பெண்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ள பெண்கள் செலுத்த வேண்டிய வருமானவரி 2,45,500 ரூபாயில் இருந்து 2,02,000 ரூபாயாகக் குறையும்.

மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு தற்போதுள்ள ரூ.1.95 லட்சத்திலிருந்து ரூ.2.25 லட்சமாக உயர்த்தப்படும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ள மூத்த குடிமக்கள் செலுத்த வேண்டிய வருமான வரி 2,36,000 ரூபாயில் இருந்து 1,97,500 ரூபாயாகக் குறையும்.

புதிய வரி விகிதம் கணக்கிடப்படும் முறை

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு அவர்களது வருமானத்தில் ரூ.1.50 லட்சம் வரை வருமான வரி கணக்கிடப்படமாட்டாது.

ரூ.1.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15,000 ரூபாயும், ரூ. 3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 40,000 ரூபாயும், ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரியும் கணக்கிடப்படும்.

பழைய வரி விகிதப்படி இந்த வரியானது ரூ.4000, ரூ.35,000, ரூ.60,000, ரூ.1.50 லட்சம் என்று கணக்கிடப்பட்டது. அதே நேரத்தில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் சர்சார்ஜ் 10 சதவீதம் வசூலிக்கப்படுவது தொடரும்.

பெற்றோருக்காக மருத்துவ இன்சூரன்ஸ் தொகை செலுத்துவோருக்கு வருமான வரியில் இருந்து ரூ.15,000 குறைக்கப்படும். வருமான வரிச் சட்டத்தின் 80 சி பிரிவின்கீழ் தற்போதுள்ள சேமிப்பு உச்சவரம்பான ஒரு லட்சம் ரூபாய் தவிர இந்த 15,000 ரூபாய் வரிக்குறைப்பு இருக்கும்.

————————————————————————————————————————————————————————–
தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட போலீஸôருக்கு சிறப்பு பயிற்சி மையங்கள்

புதுதில்லி, பிப். 29: தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட போலீஸôருக்கு சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூ. 12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி மாநில அரசுகள் இந்த சிறப்புப் பயிற்சி மையங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த மையங்களில் போலீஸôருக்கு நவீன பயிற்சி அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் தமது பட்ஜெட் உரையில் கூறினார்.

இது தவிர சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க நேபாளம் மற்றும் பூடான் எல்லைகளில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். இதற்கு ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நக்ஸலைட்டுகள் உள்ளிட்ட தீவிரவாதிகளை ஒடுக்க பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும். பாதுகாப்புப் படையினரின் திறமையை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிரிமினல் குற்றங்கள் மற்றும் கிரிமினல்களை துப்புத் துலக்கும் நெட்வொர்க் முறைக்கு ரூ. 210 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர காவல் நிலையங்களை நவீனப்படுத்தவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

————————————————————————————————————————————————————————–
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ. 22,948 கோடி

புதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு மொத்தம் ரூ. 22,948 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உதவித் திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இதை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார்.

இதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின விமான ஓட்டிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம், உயிரி தொழில்நுட்பத் துறை மூலம் இப் பிரிவினருக்கான உயிரி தொழில்நுட்பத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு ரூ. 3965 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 3,450 கோடி.

இதுதவிர தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான மொத்த நிதிஒதுக்கீடு ரூ. 22,948 கோடி. இதில் ஊனமுற்றோருக்கான நிவாரண திட்டங்கள், இந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களும் அடங்கும்.

————————————————————————————————————————————————————————–

மோடி மஸ்தான் பட்ஜெட்…

“அடேங்கப்பா…’ என்று வாயைப் பிளக்கும்படியான சலுகைகள் – 60,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் ரத்து; வருமானவரி விலக்குக்கான வரம்பு அதிகரிப்பு; மருந்துகள் மீதான கலால் வரி பாதிக்குப் பாதி குறைப்பு; தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், அமைப்புசாரா தொழிலாளர்கள், பெண்கள், முதியோர் என்று அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன், 55 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் நமது நிதியமைச்சர்.

“இது ஒரு விவசாயிகள் பட்ஜெட்’ – என்று பிரமிக்க வைக்கும் இந்த நிதிநிலை அறிக்கையின் தாக்கம் எப்படி இருக்குமோ தெரியாது. ஆனால், நோக்கம் என்னவோ நிச்சயமாகத் தேர்தல்தான் என்று அடித்துச் சொல்லும் அளவுக்கு அப்பட்டமாகத் தெரிகிறது. அது பலமா அல்லது பலவீனமா என்பது இப்போது தெரியாது.

இந்த 60,000 கோடி ரூபாய் கடன் ரத்து, நமது விவசாயிகளின் பிரச்னைகளை எல்லாம் தீர்த்து, விவசாயிகள் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மீண்டுமொரு விவசாயப் புரட்சிக்கு வழிகோலும் என்று யாராவது நினைத்தால், மிஞ்சுவது என்னவோ ஏமாற்றமாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம், இந்தக் கடன் நிவாரணம், பெரும் நிலச்சுவான்தார்களுக்குத்தான் ஆறுதலாக அமையப் போகிறதே தவிர சிறு விவசாயிகளுக்கு அல்ல என்பதுதான் உண்மை.

பொருளாதாரப் புள்ளிவிவர அறிக்கையின்படி, இந்தியாவிலுள்ள மொத்த விவசாயிகளில் 48.6 சதவிகிதம் பேர் கடனில் தத்தளிக்கிறார்கள். அவர்களில் 61 சதவிகிதம் பேர் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாயம் செய்பவர்கள். அதுமட்டுமல்ல, விவசாயிகளின் மொத்தக் கடனில் 57.7 சதவிகிதம்தான் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவைகளிலிருந்து பெறப்பட்டவை.

மீதி 42.3 சதவிகிதம் தனியாரிடமும், வியாபாரிகளிடமும், நிலத்தை ஒத்திக்கு வைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் பெற்ற கடன்கள். இதுபோன்று தனியாரிடம் விவசாயிகள் பெற்ற கடன் தொகை 2003 புள்ளிவிவரப்படி சுமார் 4,800 கோடி. இப்போது வட்டி, குட்டி போட்டு எத்தனை ஆயிரம் கோடிகள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இரண்டு ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் ஏழைகளில் மிகக் குறைந்த சதவிகிதத்தினர்தான் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள். பெரும்பகுதி கிராமப்புற விவசாயிகளும் தனியாரிடம் கடன்பட்டவர்களாக இருப்பதால்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவர்களுக்கு இந்த 60,000 கோடி ரூபாய் நிவாரணம் எந்த வகையில் உதவப் போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

அப்படியே அத்தனை கடன்களும் ரத்து செய்யப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அடுத்த போக விளைச்சலுக்குத் தயாராவார்களா என்றால் அதுவும் இல்லை. அதற்குப் பணம் வேண்டுமே? மீண்டும் கடன் வாங்க வங்கிகளுக்குப் போகப் போகிறார்களா, இல்லை தனியாரிடம் போகப் போகிறார்களா? இனி அடுத்த கடன் தள்ளுபடியை எதிர்பார்த்துக் காலத்தை ஓட்டப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இதேபோலத்தான், இந்த நிதிநிலை அறிக்கையில் வாரி இறைக்கப்பட்ட சலுகைகள் பலவும், குறுகிய கண்ணோட்டத்துடன் செய்யப்பட்டதாகத் தெரிகிறதே தவிர, தொலைநோக்குப் பார்வையுடனும், பிரச்னைகளுக்கு முழுத் தீர்வாக அமையும் விதத்திலும் இருக்கிறதா என்றால் இல்லை. போதாக்குறைக்கு, விலைவாசியை அதிகரிக்கும் விதத்தில் 55,184 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை வேறு.

இந்த நிதிநிலை அறிக்கையைப் பலரும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பட்ஜெட் என்று வர்ணிக்கிறார்கள். தெரிந்து சொல்கிறார்களோ, தெரியாமல் சொல்கிறார்களோ, உண்மையைச் சொல்கிறார்கள். தேர்தலுக்குக் காங்கிரஸ் செலவழிக்க வேண்டிய பணத்தை அரசு கஜானா மூலம் செலவழித்துத் தனது வாக்கு வங்கியை விஸ்தரிக்க முற்பட்டிருக்கும்போது, அதை காங்கிரஸின் தேர்தல் பட்ஜெட் என்று சொல்வதில் தவறே இல்லை.

மோடி மஸ்தான் பாணியில் ஒரு கண்கட்டு வித்தையை, நிதிநிலை அறிக்கை என்கிற பெயரில் அரங்கேற்றி இருக்கிறார் நிதியமைச்சர்

ப. சிதம்பரம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், ஆஹா ஓஹோ… ஆழ்ந்து சிந்தித்தால், ஊஹும்… ஊஹும்…

Posted in Budget, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Economy, Elections, Farmers, Finance, India, Polls | 1 Comment »

Indian Budget 2008 by P Chidhambaram: Finance, Economy, Analysis, Taxes, Exemptions

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2008

குறையுமா வரிச்சுமை?

எஸ். கோபாலகிருஷ்ணன்

புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்நிலையில், பலர் மனதில் எழும் கேள்வி, “”வரிச்சுமை குறையுமா?” என்பதே.

மக்களவைக்கு திடீர் தேர்தல் வரக்கூடும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நேர்ந்திருந்தால், இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க ஒரு “தேர்தல் பட்ஜெட்’ ஆக இருந்திருக்கும். சலுகைகளுக்கும் பஞ்சம் இருந்திருக்காது. ஆனால், நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று! குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நிலைமையை மாற்றிவிட்டன. மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக்காலம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்னர் மக்களவைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இத்தகைய சூழலில் தற்போதைய மக்களவைக்கு மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் வர இருக்கும் பட்ஜெட்டாகத்தான் இருக்கும்.

ஏற்கெனவே, விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்கள், பட்ஜெட் சுமை தங்களை மேலும் வாட்டாமல் இருக்க வேண்டுமே என்று அஞ்சுவது இயல்பு.

இதை மனதில்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை நிதி அமைச்சர் சிதம்பரம் தனது பட்ஜெட்டில் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

அரசியல் தேவைகள் ஒருபுறம் இருக்க, பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையிலும் புதிய பட்ஜெட் சற்று மென்மையாக இருக்க வேண்டும். காரணம், தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டியுள்ளது. நடப்பாண்டில் மட்டுமல்லாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக ஜி.டி.பி. விகிதம் 8.6 சதவீதமாக உள்ளது. வளர்ச்சி, ஏதோ மின்னல்போல் தோன்றி மறையாமல் ஸ்திரமடைந்து வருகிறது.

மற்றொரு சாதகமான அம்சம், கடந்த சில ஆண்டுகளாக வரி வசூல் படிப்படியாக அதிகரித்து, இப்போது கணிசமாகவே உயர்ந்துள்ளது. துல்லியமாகச் சொல்லுவதானால், 2003 – 04ம் ஆண்டில் வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 302 லட்சமாக இருந்தது. 2006 – 07ம் ஆண்டில் வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 320 லட்சமாகப் பெருகியுள்ளது.

வருமான வரியை மட்டும் எடுத்துக்கொண்டோமானால், இதே காலத்தில், வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 235 லட்சத்திலிருந்து, 275 லட்சமாக அதிகரித்துள்ளது.

ஆக, தனிநபர் வருமான வரித்தொகையும் சரி, கம்பெனிகளின் வருமானவரித் தொகையும் சரி, சமீபகாலமாக அபரிமிதமாகப் பெருகி வருகிறது. மொத்தத்தில் வருமான வரியாக வசூலிக்கப்படும் தொகை ஆண்டுக்கு ஆண்டு 45 சதவிகிதம் உயர்ந்து வருகிறது.

இதற்கு பொருளாதார வளர்ச்சியும், நிதி அமைச்சகம் எடுத்துக்கொண்ட முயற்சியும் ஒரு காரணம் ஆகும்.

அத்துடன், வரிவிகிதங்கள் நியாயமாகவும், மக்களின் சக்திக்கு ஏற்பவும் இருக்குமானால், வரி ஏய்ப்பு நிச்சயமாகக் குறையும். அதேநேரம், மக்கள் தானாக முன்வந்து வரி செலுத்துகையில், வரிச்சுமை படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படாமல் போனால், தானாக முன்வந்து வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறையக் கூடும். அரசு இதனைக் கருத்தில்கொண்டு செயல்படுவது அவசியம்.

கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்ததுபோலவே இந்த ஆண்டும், நிதி அமைச்சர் விவசாயம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோருடன் பட்ஜெட் குறித்து ஆழமாகக் கலந்து ஆலோசிப்பார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் இழப்புக்கு ஈடுசெய்யும் வகையில் உற்பத்தி வரி உள்ளிட்ட வரிவிகிதங்கள் குறைக்கப்படக் கூடும். ஏற்றுமதி குறைவதால் வேலைவாய்ப்பும் கடுமையாகக் குறைகிறது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால் ரூ. 53 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சரே அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைத்தியநாதன் குழுவின் பரிந்துரையின்படி விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கலாம்.

இதுதவிர, உணவு மற்றும் உரம் சார்ந்த மானியங்கள், எளிய மக்களைப் பாதிக்காதவண்ணம், திருத்தி அமைக்கப்படக்கூடும் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. இது உலக வங்கியைத் திருப்தி செய்வதற்காக அல்லாமல், உண்மையிலேயே மானியத் தொகை உரியவர்களைச் சென்றடையும் வகையில் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

வருமான வரித் துறையில் அதிகம் கண்டுகொள்ளப்படாத பிரிவினரும் உள்ளனர். உதாரணமாக, மூத்த குடிமக்கள். ஒரு பக்கம் சராசரி வயது உயருகிறது. இன்னொரு பக்கம் விலைவாசி மற்றும் அதிகரிக்கும் மருத்துவச் செலவு. இவர்களுக்குக் கடந்த ஓரிரு ஆண்டுகளில் எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை.

இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், தற்போது வழங்கப்படும் சொற்ப சலுகைகள் நியாயமான அளவு விரிவுபடுத்தப்பட வேண்டும். சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இல்லாத ஒருநிலையில் இது உடனடித் தேவை.

அடுத்து, சிறு முதலீட்டாளர்களுக்கும் கடந்த ஓரிரு ஆண்டுகளில் ஊக்குவிப்பு அளிக்கப்படவில்லை. 80இ பிரிவின்படி, ஒரு லட்சம் ரூபாய்வரை சில குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தால், அந்தத் தொகையை வருவாயிலிருந்து கழித்துக் கொள்ளலாம். இந்தச் சலுகை சிறு முதலீட்டாளர்கள் என்ற பெயரில், பங்குச் சந்தையில் பெரும்பாலும் முதலீடு செய்பவர்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது.

அஞ்சல் அலுவலக முதலீடுகளுக்கும் 5 ஆண்டுகளுக்குக் குறைவான வங்கி முதலீடுகளுக்கும் நீண்டகாலமாக இருந்து வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன என்பதே உண்மை.

5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வங்கி முதலீடுகளுக்கு 80 இ பிரிவின்கீழ் வருமான வரிச்சலுகை அளித்திருப்பது வங்கிகள் டெபாசிட் திரட்டுவதற்கு உதவுகிறது. ஆனால், சிறு முதலீட்டாளர்களுக்கு உதவக்கூடியதாகத் தெரியவில்லை.

அனைத்துக்கும் மேலாக, சிறு முதலீட்டாளர்கள் முக்கியமாக எதிர்பார்ப்பது தற்போதுள்ள E.E.E. (Exempt, Exempt, Exempt) முறை தொடர வேண்டும் என்பதே. அதாவது முதலீடு செய்யும்போது, வரிவிலக்கு. இதைத்தான் ‘E’ (Exempt) என்ற வார்த்தை குறிக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரிவிலக்கு. இதை இரண்டாவது ‘E’ (Exempt) என்ற சொல் குறிக்கிறது. கடைசியாக, முதலீடு முதிர்வடைந்தவுடன் திரும்பப் பெறும்போதும் வரிவிலக்கு கிடைக்கிறது. இதனை மூன்றாவது ‘E’ (Exempt) குறிக்கிறது.

உதாரணமாக, பொது வருங்கால வைப்புநிதி (PPF), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC.) இன்சூரன்ஸ் ஆகிய பெரும்பாலான முதலீட்டுத் திட்டங்கள் EEE. என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன. இது தொடர வேண்டும்.

ஆனால், EET. (Exempt, Exempt, ், Tax) என்ற புதிய முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் சிதம்பரம் முன்னதாக அறிவித்திருந்தார். இந்த உத்தேச முறையின் கீழ், மூன்றாவது கட்டத்தில், அதாவது முதலீடு முதிர்வடைந்தவுடன் திரும்பப் பெறும்போது, அதற்கு வரி செலுத்த வேண்டும். இதைத்தான் T(Tax) என்ற சொல் குறிக்கிறது.

இத்திட்டத்தை கேல்கர் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு கேல்கர் குழுவினர் கூறிய காரணங்கள் விசித்திரமானவை. “”பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கு இடையே நிலவும் பாகுபாட்டை அகற்றுவது என்பது ஒன்று. இரண்டாவது, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் இந்த முறை ஏற்கெனவே அமல் செய்யப்பட்டுள்ளது” என்பதுதான் அது.

நம் நாட்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டால் சிறு முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்தப் பரிந்துரையை நிதி அமைச்சர் ஏற்கலாகாது.

ஏட்டளவில் பணவீக்கம் 3.5 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், வரிச்சுமையாவது குறைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

————————————————————————————————————————————————————

சீனாவின் சவாலை எதிர்கொள்ள…

புது பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் முன்னர் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்த முன்னணி தொழிலதிபர்கள் வழக்கமான வரிச்சலுகைகளுடன் கூடுதலாக ஒரு வரம் கேட்டுள்ளனர். அது, சீனத்திலிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் மீது 150 சதவீத “இறக்குமதி வரி’ விதிக்க வேண்டும் என்பது.

தசரதனிடம் கைகேயி கேட்ட வரம்போல அல்ல என்றாலும் சீனத்துப் பண்டங்களால் இந்தியத் தொழிலதிபர்களின் தூக்கம் கெட்டு வருவதை இது நன்கு உணர்த்துகிறது. பொம்மை, பேட்டரி, சைக்கிள், மோட்டார் சைக்கிள், டெலிவிஷன், செல்போன், காகிதம், அச்சு இயந்திரம், ஆலைகளுக்கான இயந்திரங்கள், உதிரி பாகங்கள் என்று எல்லா துறைகளுக்கும் தேவைப்படும் பொருள்களைத் தயாரித்து அதை மிகக் குறைந்த விலையில் உலகச் சந்தையில் கொண்டுவந்து குவிக்கிறது சீனா.

தனிநபர் வருமான வரிவிகிதத்தை 30%-லிருந்து 25% ஆகக் குறைக்க வேண்டும், வருமான வரி விலக்கு வரம்பை ஒரேயடியாக

5 லட்ச ரூபாய் வரைக்கும் உயர்த்த வேண்டும், கம்பெனிகள் மீதான வரியை இப்போதுள்ள நிலையிலேயே அனுமதித்துவிட்டு, “”சர்-சார்ஜ்” எனப்படும் கூடுதல் தீர்வையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று நமது தொழிலதிபர்கள் கேட்டிருக்கிறார்கள்.

கம்பெனிகள் தாங்களே மேற்கொள்ளும் ஆராய்ச்சி-வளர்ச்சிகளுக்கான செலவுக்குத் தரும் வரிச்சலுகையை, வேறு நிறுவனங்களிடம் ஒப்படைத்து மேற்கொள்ளும் ஆராய்ச்சிப் பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்பதும் அவர்களின் முக்கியமான கோரிக்கையாகும்.

மக்களவைக்குப் பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், தொழிலதிபர்கள் கேட்ட வரங்களில் பெரும்பாலானவற்றை “சிதம்பரசாமி’ அருளக்கூடும். ஆனால் சீனாவின் சவாலை எதிர்கொள்ள என்ன செய்யப் போகிறார்?

சீனாவில், குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்ற ஒரு காரணம் மட்டும் அங்கு உற்பத்திக்குச் சாதகமாக அமைந்துவிட முடியாது. கட்டுப்படுத்தப்பட்ட சோஷலிச முறை உற்பத்தி, விநியோகம் எல்லாம் டெங் சியோ பெங் காலத்திலிருந்து படிப்படியாக நீங்கி, உலக அளவில் போட்டி போடத்தக்க கட்டமைப்பு அங்கே வளர்ந்து வந்திருக்கிறது. சீனத்தின் “பட்டுத் திரை’க்குப் பின்னால் நடந்தவை என்னவென்று உலகம் இதுவரையில் புரிந்து கொள்ளவே இல்லை.

சீனத்திலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இருக்கின்றன. அங்கும் தனியார் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படுகிறது. சொந்த வீடு, நகை, வெளிநாட்டு உல்லாசப் பயணம் என்று சீனர்களால் மெல்லமெல்ல வெளியில் வரமுடிகிறது. சீனத்தில் ஒரே சமயத்தில் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தாராளமயம், உலகமயமாக்கலின் சிற்பி என்று இந்தியாவில் நாம் சிலரை அடையாளம் கண்டு பாராட்டி (அல்லது வசைபாடி) வரும் நிலையில், சீனா உண்மையிலேயே விசுவரூபம் எடுத்து நிற்கிறது.

நம் நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் இன்னமும் பெரும் அளவுக்கு லாபகரமாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கின்றன. அறிவியல், தொழில்நுட்பத்தில் நல்ல படிப்பும் பயிற்சியும் பெற்ற தொழில்நுட்ப நிபுணர்களும், தொழில்திறன் உள்ள தொழிலாளர்களும், தகவல் தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த அறிவும்-ஆங்கிலத்தைச் சிறப்பாகக் கையாளும் திறன் உள்ளவர்களும் ஏராளமாக இருக்கின்றனர். இவர்களைப் பயன்படுத்தி, நமது பொருளாதாரத்தை மேலும் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லாமல், அடுத்தடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தல்களையும், மத்திய பட்ஜெட்டையுமே மையமாக வைத்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதால், நாம் செக்குமாடு போல ஒரே இடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கிறோம்.

சீனாவுக்கு இணையான தொழில்வளத்தை நாமும் அடையத் தடையாக இருப்பது எது என்று ஆராய்ந்து, அதை நீக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் தொடர்ந்து பின்தங்கியே இருப்போம்; சீனா, அமெரிக்காவையே மிஞ்சிவிடும்.

———————————————————————————————————–
சிதம்பர ரகசியம்

விவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்பட வேண்டும், முடிந்தால் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் உலக வங்கியும், சர்வதேச நிதியமும் இந்திய அரசை மீண்டும் மீண்டும் வற்புறுத்தும் விஷயம். இதை மாநிலங்களுக்காகத் தரப்படும் நிதி கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கச் செலவிடப்பட வேண்டும் என்பது அவர்களது அபிப்பிராயம்.

மக்கள் நிர்வாகம், தேச நிர்வாகம் போன்ற விஷயங்கள் வியாபார ரீதியாகச் செய்யப்படுபவை அல்ல. லாப நஷ்டங்களை மட்டும் கணக்கில்கொண்டு அரசு செயல்பட முடியாது. குறிப்பாக, இந்தியா போன்ற விவசாயம் சார்ந்த நாடுகள் வேலைவாய்ப்பை மட்டுமல்லாமல் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வேளாண் தொழிலை நம்பி இருக்கும் நிலையில், விவசாய மானியங்களை அகற்றுவது என்பது, இந்தியாவை சோமாலியா ஆக்கும் முயற்சி. அது விபரீதத்தில் முடிந்துவிடும்.

அதேநேரத்தில், அரசின் மானியங்கள் சேர வேண்டிய விவசாயிகளைப் போய்ச் சேர்கிறதா என்பதும், மானியம் பயனுள்ளதாக அமைந்து விவசாய உற்பத்தி பெருக வழிவகுக்கிறதா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய உர அமைச்சகம் நடப்பு ஆண்டுக்குத் தரப்படும் உர மானியம், அடுத்த நிதியாண்டில் இரட்டிப்பு செய்யப்பட்டு சுமார் 50,000 கோடி ரூபாயாக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறது. நிதியமைச்சகம் இந்தக் கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது வேறு விஷயம்.

யூரியா போன்ற உரங்களுக்கான உற்பத்திச் செலவில் பாதிக்கும் குறைவான விலையைத்தான் விவசாயிகள் தருகிறார்கள் என்றும், தங்களுக்குத் தரப்படும் மானியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் உரத் தயாரிப்பாளர்கள் மத்திய உர அமைச்சகத்தின் மூலம் கோரிக்கை எழுப்பி இருக்கிறார்கள். தற்போது, மானியம் விவசாயிகளுக்கு நேரடியாகத் தரப்படாமல் உர உற்பத்தியாளர்களுக்குத் தரப்படுகிறது. அவர்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்களை வழங்குகிறார்கள். அதனால், ஒரு ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கும், 100 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கும் ஒரே விலையில்தான் உரங்கள் தரப்படுகின்றன.

பெரிய நிலச்சுவான்தார்களுக்கு இந்த மானியத்தின் பயன் சென்றடைய வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி ஒருபுறம் இருக்க, மானியத்தின் பயன் உர உற்பத்தியாளர்களுக்குத்தான் அதிகம் கிடைக்கிறது என்பது அதைவிட வேதனையான விஷயம். தங்களுடைய நிர்வாகச் செலவுகளை அதிகரித்து மானியத்தின் பெரும்பகுதி பயனை உரத் தயாரிப்பாளர்கள் கபளீகரம் செய்து விடுகிறார்கள்.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது, மானியம் நேரடியாக விவசாயிகளைப்போய் சேரும்படியான வழிமுறைகள் செய்யப்படும் என்று நிதியமைச்சர் கொடுத்த உறுதிமொழி, செயல்படுத்தப்படவே இல்லை. உரத் தயாரிப்பாளர்கள் அதைச் செயல்படுத்தவிடவில்லை என்றுகூடக் கூறலாம். அப்படிச் செய்திருந்தால், பெரிய நிலச்சுவான்தார்கள் மானியம் வழங்கும் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டிருப்பார்கள். சுமார் எட்டு கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகள் பயன்பெற்றிருப்பார்கள்.

தற்போது விவசாயிகள் தாங்கள் எந்த உரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அற்றவர்களாக இருக்கிறார்கள். மானிய விலையில் உரத் தயாரிப்பாளர்கள் வழங்கும் யூரியா போன்ற உரங்களைத் தான் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு. மானியம் நேரடியாக அவர்களைச் சேர்கிறது எனும்போது, தங்களது பயிறுக்கு ஏற்ற கலவை உரங்களைப் பெறும் வசதி அவர்களுக்கு ஏற்படும். விவசாய உற்பத்தி பெருகும்.

சிறு விவசாயிகளை எப்படி அடையாளம் காண்பது? அதில் முறைகேடுகள் இல்லாமல் எப்படித் தடுப்பது?~ இதைக்கூடச் செய்ய முடியாவிட்டால் இந்த அரசும், நிர்வாக எந்திரமும், அதிகாரிகளும் எதற்கு?

விவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்படவோ, நிறுத்தப்படவோ கூடாது. மாறாக, முறைப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் பெயரைச் சொல்லி பெரிய உர நிறுவனங்கள் மானியத்தை விழுங்குவது தடுக்கப்பட வேண்டும். சேர வேண்டியவர்களைப்போய் மானியங்கள் சேராமல் இருப்பதற்கு யார் காரணம்? நிதியமைச்சருக்குத்தான் வெளிச்சம்!

————————————————————————————–

நிதியமைச்சரை நம்புவோமாக!

உலகமயமாக்கல், சந்தைப் பொருளாதாரம் என்று இந்தியப் பொருளாதாரம் திசைதிரும்பிய நாள் முதல், பல்வேறு தரப்பிலிருந்தும் எச்சரிக்கைக் குரல் ஒலித்த வண்ணம் இருக்கிறது. பலமான பொருளாதார அடித்தளம் என்பது ஒரு தேசத்தின் அன்னியச் செலாவணி இருப்பும், ஏற்றுமதியும் மட்டுமல்லாமல், அந்த நாட்டின் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தன்னிறைவும்கூட என்பதைத்தான் இந்த எச்சரிக்கைக் குரல்கள் வலியுறுத்தின.

பங்குச் சந்தைப் பொருளாதாரம் என்பது, தனியார்மயம், உலகமயம் போன்ற கொள்கைகளிலிருந்து இணைபிரிக்க முடியாத விஷயம். சந்தைப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய ஆபத்தே, ஒரு சில தனிநபர்களின் அதிபுத்திசாலித்தனம் பங்குச் சந்தையில் பூகம்பத்தை ஏற்படுத்தி அப்பாவி முதலீட்டாளர்களை ஓட்டாண்டிகளாக்கி விடும் என்பதுதான். ஹர்ஷத் மேத்தா மற்றும் யு.டி.ஐ. மோசடிகள் எத்தகைய மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தின என்பதைத் தங்களது சேமிப்புகளை ஒரே நொடியில் இழந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் சோகக்கதைதான் எடுத்துரைக்கும்.

பங்குச் சந்தைப் பொருளாதாரத்தின் இன்னொரு மோசமான பரிமாணத்தை விரைவில் இந்தியா சந்திக்க இருக்கிறது. உலகமயமாக்கலின் விளைவால், உலக அரங்கில் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்களும், பிரச்னைகளும் எந்த அளவுக்கு இந்தியாவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பும் என்பதை நாம் சந்திக்க இருக்கிறோம்.

அமெரிக்கப் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்க இருக்கிறது என்பதை உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் மட்டுமன்றி, அமெரிக்க அரசே உணர்ந்திருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட இருக்கும் பின்னடைவைச் சரிக்கட்ட, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 140 பில்லியன் டாலர் திட்டமொன்றை அறிவித்திருக்கிறார். வரிக்குறைப்பு மூலம் அமெரிக்கப் பொதுமக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதுதான் இதன் நோக்கம். வாங்கும் சக்தி அதிகரிப்பதால் விற்பனையும், அதன் மூலம் உற்பத்தியும் அதிகரிக்கும் என்பதுதான் அதிபர் புஷ்ஷின் எதிர்பார்ப்பு.

பொருளாதாரப் பின்னடைவின் விளைவால், உற்பத்தி குறைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விடும் என்பதுதான் அவர்கள் கவலை. ஏற்கெனவே புஷ் நிர்வாகத்தின்மீது காணப்படும் அதிருப்தி, இதுபோன்ற வேலைக்குறைப்பு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற விஷயங்களால் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவின் தலைவலி அது.

பெரிய அளவில் அமெரிக்காவுக்கு நமது நாட்டிலிருந்து ஏற்றுமதி இல்லை என்பதால் அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு நம்மைப் பாதிக்காது என்று வாதிடுபவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். நமது ஐ.டி. நிறுவனங்களில் முக்கால்வாசிப் பேர் அமெரிக்காவை நம்பித் தொழில் செய்பவர்கள். நமது இந்தியப் பங்குச் சந்தை மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் அன்னிய மூலதனத்தில் பெரும்பகுதி அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, டாலர்களாக வந்தவை என்பதை மறந்துவிடக் கூடாது.

அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு, அங்குள்ள முதலீட்டாளர்களைத் தங்களது மூலதனத்தை இந்தியாவுக்குத் திருப்பவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதுபோன்ற முதலீடுகள் திடீரென திரும்பப் பெறப்படும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் நமது பொருளாதாரத்தையே தகர்த்துவிடும் தன்மையது என்பதால் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவின் விளைவுகள் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாமல், அமெரிக்காவைச் சார்ந்த அத்தனை நாடுகளும் குழம்பிப் போயுள்ளன.

இந்தியப் பொருளாதாரம் பலமாக இருப்பதாகவும், அமெரிக்கப் பின்னடைவு நம்மைப் பெரிய அளவில் பாதிக்காது என்றும் நிதியமைச்சர் ப. சிதம்பரம் உறுதி கூறியிருக்கிறார். நமது அடிப்படைப் பொருளாதாரம் பலமாக இருப்பதாகவும், அதனால் முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் தைரியம் கூறியிருக்கிறார். நல்லது, நம்புவோம். ஆனாலும் சிறு சந்தேகம்.

ஆறு மாதங்களுக்கு முன்னால் அமெரிக்கப் பொருளாதாரமும் பலமாகத்தானே இருந்தது? எல்லா விஷயங்களிலும் அமெரிக்காவைச் சார்ந்து இருக்கிறோமே, அமெரிக்கா ஆட்டம் கண்டால் நாமும் ஆட்டம் காண மாட்டோமா?

—————————————————————————————-

நேர்முகமா, மறைமுகமா?

மத்திய பட்ஜெட் தயாராகி வருகிறது. வழக்கம்போல தொழில்துறையினர், சேவைத்துறையினர், பொருளாதார நிபுணர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் ஆகியோரை நிதியமைச்சர் ப.சிதம்பரம் அழைத்துப் பேசி ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்.

ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், கணினித்துறையில் ஈடுபட்டோர், மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள், மருந்து-மாத்திரை தயாரிப்பாளர்கள், புத்தக பதிப்பாளர்கள், தகவல் தொடர்பில் முதலீடு செய்தோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், கட்டுமானத் துறையில் உள்ளோர், கணக்கு தணிக்கையாளர்கள், மருத்துவத் தொழிலைச் செய்வோர், ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்களை நடத்துவோர் என்று வசதி படைத்தவர்களே பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அதைப் பெறும் நிலையில் இருக்கிறார்கள்.

“”மோரீஷஸிலிருந்து முதலீடு செய்தால் வரி விதிப்பு கிடையாது” என்ற மொட்டையான சலுகையைப் பயன்படுத்தி ஏராளமான தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்று “”சமீபத்தில்தான்” நிதி அமைச்சக அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதைத் தடுக்க இந்த பட்ஜெட்டில் உறுதியான நடவடிக்கை வருமாம். மத்திய பட்ஜெட் என்பதே பணக்காரர்கள், வசதி படைத்தவர்களின் நலனுக்காக ஏழைகள் மீது வரியைச் சுமத்தி கறாராக வசூலிப்பதற்குத்தான் என்று எண்ணத் தோன்றுகிறது.

வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவாரா மாட்டாரா என்பது ஒருபுறம் இருக்கட்டும். குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆண்டு ஊதியம் இருந்தால் எல்லோருக்குமே 30%தான் வருமான வரி என்பது எந்த ஊர் நியாயம்? 20 லட்சம் சம்பாதித்தாலும் 20 கோடி சம்பாதித்தாலும், 200 கோடி சம்பாதித்தாலும் உச்ச பட்சம் 30% தான். வாழ்க மத்திய அரசின் சோஷலிசம்.

ஏழைகள், நடுத்தர மக்களின் குடும்பங்களில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், வயதான பெற்றோர்கள், கவனித்தே தீர வேண்டிய ஊனமுற்ற குடும்ப உறுப்பினர்கள், விதவையர், நிரந்தர நோயாளிகள் என்று பல பிரச்னைகள் உண்டு. சம்பாதிக்கும் பணம் போதாமல் கடன் வாங்குவதே இவர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. வருமான வரிச் சலுகைக்காக வீடு கட்ட ஆரம்பித்தவர்களின் நிலைமை வெளியில் சொல்லும்படியாக இல்லை. நம் நாட்டின் மருத்துவ இன்சூரன்ஸ் லட்சணம் மற்ற எல்லோரையும்விட சிதம்பரத்துக்கே தெரியும். ஆயினும் நடுத்தர வர்க்கத்துக்கு அவர் தரும் நிவாரணம் என்ன?

நடுத்தர வர்க்கத்தின் சேமிக்கும் திறன் வேகமாகக் குறைந்து வருகிறது என்பதை தேசிய புள்ளிவிவர நிறுவனம் சமீபத்திய கணக்கெடுப்பிலிருந்து அறிந்து அரசுக்கு அறிக்கை தந்துள்ளது. இது மிகவும் ஆபத்தான அம்சம். நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பினால்தான் எல்.ஐ.சி. போன்ற நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்று வருகின்றன. அந்தத் தொகையிலிருந்துதான் அரசு, தனக்கு முக்கியச் செலவுகளுக்குக் கடன் பெறுகிறது. விதை நெல்லைப் போன்றதுதான் நடுத்தர மக்களின் சேமிப்பு. அதற்கு வழி இல்லாமல் வருமானம் ஒட்டத்துடைக்கப்படுகிறது என்றால் நிதி நிர்வாகம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம்.

விலைவாசி உயர்வு, ஊதியக் குறைவு, நுகர்வு கலாசாரம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. முதல் இரண்டுக்கும் மத்திய, மாநில அரசுகளும் நம் நாட்டுத் தொழில்துறையும் காரணம். மூன்றாவதற்கு வெளிநாட்டு தனியார் வங்கிகளும் அவர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்கிவிட்ட நம் நாட்டு நிதி நிறுவனங்களும் காரணம்.

உலகமயம், பொருளாதார தாராளமயம் ஆகியவற்றிலிருந்து நாம் ஒதுங்கியிருக்க முடியாது என்று கூறி சுங்கவரி, உற்பத்தி வரி, இறக்குமதி வரி ஆகியவற்றைக் கணிசமாக குறைக்கிறார் நிதியமைச்சர். வெளிநாடுகளிலிருந்து வரும் தேவையற்ற இறக்குமதியைக்கூட தவிர்க்க முடியவில்லை என்று சொல்கிறார். ஆனால் நேர்மையாக உழைத்து, வருமானத்தை மறைக்க முடியாத நிலையில் உள்ள மாதச் சம்பளக்காரர்களுக்கு சலுகை காட்டுவதை, தேவையற்ற செயல் என்று கருதுகிறார்.

வீட்டு வாடகை, மளிகைச் செலவு, வைத்தியச் செலவு ஆகிய மூன்றும் மாதாமாதம் விஷம்போல ஏறிக் கொண்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை; அவர்களுக்குத் தேவையான அளவுக்கு சம்பளத்தை அவர்களே கூட்டிக்கொண்டுவிடலாம். வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகளுக்கு “”அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்” அளவுக்கு இது தீவிர பிரச்னை கிடையாதே? எல்லாம் நம் தலையெழுத்து!

———————————————————————————————————————–
“சிதம்பர’ ரகசியம் எடுபடுமா?

எம். ரமேஷ்

இம்மாத இறுதியில் மத்திய பட்ஜெட் வெளியாக உள்ளது. தொழில்துறையைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்கள் பட்ஜெட்டை ஒரு பொருட்டாகக் கண்டு கொள்வதில்லை.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இது. லீப் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள் வரிசையில் சிதம்பரமும் இடம்பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முழு பட்ஜெட் இது.

பட்ஜெட்டின் இறுதிப் பலன் பெருவாரியான நடுத்தர மற்றும் சாதாரணப் பிரிவு மக்களின் வாழ்க்கையைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதாக அமைவதில்லை. பல சமயங்களில் பட்ஜெட், இருக்கின்ற நிலைமைக்கும் வேட்டு வைப்பதாகத்தான் இருக்கிறது.

பட்ஜெட்டிற்கு முன்பும் பின்பும் விலைகள் உயரும். சராசரி இந்தியனுக்குச் சுமை கூடும். அறிவிப்புகள் நிறைய இருக்கும். ஆனால் அதனால் யாருக்குப் பலன் என்பது மட்டும் புரியாத “சிதம்பர’ ரகசியமாய் இருக்கும்.

கூடுதல் வரிச் சுமையில் சிக்காமல் தப்பித்தால் போதும் என்று நடுத்தரப் பிரிவு மக்கள் நினைக்கின்றனர். நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்ற சலிப்பே அடித்தட்டு மக்களிடம் அதிகம் நிறைந்திருக்கிறது.

பொதுவாக தாராளமயமாக்கலுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அனைத்துமே நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு சுமையாகத்தான் இருந்துள்ளது.

நாடுகளிடையே தங்கு தடையற்ற வர்த்தக உறவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உலகமயமாக்கலின் ஓர் அங்கமான தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 1991-ல் நிதியமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தினார். அவரை அடியொற்றி சிதம்பரமும் பின்பற்றி வருகிறார். அந்த வகையில் தாராளமயம் தொடரும் என்பது உறுதி.

தாராளமயப் பொருளாதாரம் வேளாண் துறையை அறவே ஒதுக்கிவைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் இந்தப் பட்ஜெட்டில் வேளாண்துறை பக்கம் சிதம்பரம் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

இருப்பினும் இந்தப் பட்ஜெட்டை சுமையில்லா பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யவே சிதம்பரம் விரும்புவார். ஏனெனில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலைச் சந்தித்தாக வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

அதேசமயம், சர்வதேச அளவில் அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அதற்கான கூடுதல் செலவினம், 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் முதலாவது ஆண்டுக்கான ஒதுக்கீடு போன்ற பல பிரச்னைகள் சிதம்பரம் முன் நிற்கும் சவால்களாகும்.

வேளாண் துறை வளர்ச்சி தற்போது 2 சதவீதமாக உள்ளது. வேளாண் உற்பத்தியை 4 சதவீதமாக உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் பல நடவடிக்கைகளை சிதம்பரம் எடுத்தாக வேண்டியுள்ளது.

விவசாயக் கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது பல முனைகளிலிருந்து வலுத்து வருகிறது.

அதேபோல வருமான வரி செலுத்தும் மாத சம்பளதாரர்களிடையே வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.

நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 29,200 கோடி டாலர் உள்ளது. அதேபோல பணவீக்கமும் 4.35 சதவீதமாக கட்டுக்குள் உள்ளதும் திருப்திகரமான விஷயம்.

தொழில்துறை வளர்ச்சி 7.6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு 13.4 சதவீதத்திலிருந்து தற்போது குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வளர்ச்சி இரட்டை இலக்கை எட்டவேண்டுமானால் வேளாண் துறைக்குக் கூடுதல் ஒதுக்கீடு அவசியமாகிறது.

முந்தைய பட்ஜெட்டுகளைப் போலவே மூன்று முக்கிய விஷயங்களுக்கு மட்டும் சிதம்பரம் முன்னுரிமை அளிப்பார் என்பது திண்ணம். ஒன்று நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது, இரண்டு, கட்டமைப்புத் துறையை விரிவாக்குதல், மூன்று, வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவையே.

வெறுமனே அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பதிலோ அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை அளிப்பதிலோ பொருளாதார வளர்ச்சியை எட்டிவிடமுடியாது.

கல்வி, இன்றைய நிலைமைக்கேற்ப வேலைவாய்ப்புப் பயிற்சி, ஆய்வு, புத்தாக்கம் உள்ளிட்ட விஷயங்கள்தானே நீண்டகாலத்தில் உண்மையான, உறுதியான வளர்ச்சிக்கு வித்திட முடியும்? வரும் பட்ஜெட்டில் இதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பதே பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பு.

கிராமப்புற வேலைவாய்ப்பு, அடிப்படை வசதி மேம்பாடு, வறுமை ஒழிப்பு, விவசாயத் தொழிலாளர்கள் முன்னேற்றம் போன்றவையெல்லாம் தாராளமய அலையில் எங்கோ தள்ளப்பட்டு விட்டன.

காங்கிரஸ் கூட்டணிக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்வதுடன் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளைத் திருப்திபடுத்த வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் சிதம்பரத்துக்கு உள்ளது.

வேளாண்மை மற்றும் மகளிர்க்கு இந்தப் பட்ஜெட்டில் அதிக சலுகை காட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். எனவே அவரது வார்த்தைகளைப் பூர்த்தி செய்ய சில நடவடிக்கைகளை சிதம்பரம் எடுப்பார் என உறுதியாக நம்பலாம்.

மற்றபடி, கிட்டத்தட்ட இன்னொரு மன்மோகன் சிங் பட்ஜெட்டாகவே இது இருக்கும் என்று நம்பலாம்.

Posted in 2008, America, Analysis, Balance, Budget, Business, Cheap, Chidambaram, Chidhambaram, China, Chithambaram, Commerce, Corporate, Currency, Deflation, Dollar, Economy, Exchange, Exempt, Exemptions, Expenses, Exports, Finance, Imports, Income, India, Industry, Inflation, Loss, Monetary, Profit, Recession, Rupees, sectors, SEZ, Tax, Taxes, US, USA | Leave a Comment »

Don’t rush to cut policy rates: Monetary, fiscal recipe for overheating India

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

வங்கிகளில் அரசு தலையீடு?

எஸ். கோபாலகிருஷ்ணன்

வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.

அதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.

வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.

இந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.

விவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.

வைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

பொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.

நாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

இது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.

அண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.

ரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

முன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.

இந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.

இதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்?

நடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in Agriculture, Assets, Auto, Automotive, Banking, Banks, BOB, Bonds, BSE, Cars, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chit Funds, Chitfunds, Chithambaram, Commerce, Cooperative, Credit, CRR, Deflation, Deposits, Dollar, Economy, Enforcement, Exchange, Farmers, FD, Finance, Financing, fiscal, Govt, HDFC, ICICI, Index, Indices, Inflation, Insurance, Interest, investments, IOB, KVB, Land, liquidity, Loans, markets, Micro-financing, Microloans, Minister, Monetary, Motor, NIFTY, NSE, Overnight, Overnite, Parts, Policy, Property, Rates, RBI, reserves, ROI, Rupee, Rupees, Rupya, SBI, Schemes, Shares, Spare, Stocks, Student, Treasury | Leave a Comment »

Kattumannarkoil District Court – Facilities & Infrastructure issues

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 17, 2007

நீதிமன்றத்துக்கு விமோசனம் எப்போது?

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், அக்.17: சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்கோயில் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ரூ.11,500 வாடகையில் பெரியகுளம் வடக்குத் தெருவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இந்த கட்டடத்தில் போதுமான வசதி இல்லாததால் பொதுமக்களும், வழக்கறிஞர்களும் அவதியுற்று வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் வழக்கறிஞர் சங்கம் இயங்கி வந்த கட்டடம் இடிந்து விழுந்தது. பின்னர் அக்கட்டடம் கட்டப்பட்டது. 3 கழிவறைகளில் இரு கழிவறைகள் இடிந்து விழுந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. நீதிமன்ற வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த இடம் கிடையாது.

பொதுமக்கள் வெயில், மழை ஆகியவற்றுக்கு ஒதுங்கக்கூட இடம் கிடையாது. நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என காட்டுமன்னார்கோயில் வழக்கறிஞர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கோரிக்கை விடுத்னர். அதையடுத்து புதிய இடம் வாங்கி கட்டடம் கட்ட உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதற்காக காட்டுமன்னார்கோயில் உடையார்குடி ரம்சான் தைக்கால் என்னுமிடம் தேர்வு செய்யப்பட்டது.

மேற்கண்ட இடம் சிதம்பரம் – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ளது. சுமார் 100 சென்ட் வரை எவ்வித உபயோகமும் இன்றி உள்ளது. இந்த இடம் ரம்சான் தைக்கால் பள்ளிவாசலுக்கு சொந்தமானது. இந்த பள்ளிவாசல் சொத்து அனைத்தும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் உள்ளது. இந்த சொத்தை வக்ஃப் வாரியத்திடம் இருந்து விலைக்கு வாங்கி புதிய நீதிமன்ற கட்டடம் கட்ட அனுமதி வழங்கி கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு கடந்த 23-06-2006 அன்று சென்னை உயர் நீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஏழை பாமர மக்கள் வசிக்கும் பகுதியான காட்டுமன்னார்கோயிலில் பெண்கள் அதிக அளவில் தங்கள் பிரச்னைகளுக்கு மனுக்கள் கொடுத்து நிலுவையில் இருந்து வருகிறது. பெண் வழக்கறிஞர்கள் இருந்தும் மகளிருக்கான சமரச மையம் இந்த நீதிமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காட்டுமன்னார்கோயில் நகர எல்லைக்குட்பட்ட பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் அரசால் கட்டப்பட்ட திருமண மண்டபம் எந்த உபயோகமும் இல்லாமல் மூடப்பட்டு கிடக்கிறது. அனைத்து வசதிகளும் உள்ள இந்த இடத்துக்கு நீதிமன்றத்தை மாற்றலாம். இல்லையென்றால் தற்போது தாலுகா அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு மாற்றம் செய்யப்படவுள்ளது.

எனவே பழைய தாலுகா அலுவலக கட்டடத்தில் நீதிமன்றத்தை மாற்றலாம் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே 1977 வரை அங்கு நீதிமன்றம் இயங்கி வந்தது. அந்த நீதிமன்றம் பின்னர் பரங்கிப்பேட்டைக்கு மாற்றப்பட்டது.

எனவே காட்டுமன்னார்கோயில் நீதிமன்றக் கட்டடம் கட்ட மாவட்ட ஆட்சியர் இடத்தை விரைவில் தேர்வு செய்து அளித்தால் நீதிமன்றத்துக்கு விமோசனம் கிடைக்கும் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.

Posted in Attorney, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Court, facilities, infrastructure, Judges, Jury, Justice, Kaattumannaarkoil, Kaattumannaarkovil, Kaattumannarkoil, Kaattumannarkovil, Kattumannaarkoil, Kattumannarkoil, Kattumannarkovil, Law, Lawyer, Order, Panchayat, Panchayath, Panjayat, Panjayath, Parangipettai, Parangippettai, Parankipettai, Parankippettai, Thiruchi, Thiruchirapalli, Thiruchirappalli, Thiruchy, Trichy | 1 Comment »

Controlling Inflation & Avoiding Recession – RBI & Stagflation

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

ரிசர்வ் வங்கியின் கை வைத்தியம்!

ரிசர்வ் வங்கிக்கு உள்ள பல கடமைகளில் தலையாய கடமை, பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதுதான் என்பது அதன் சமீபகால நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது எளிதில் புலனாகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5%-க்கும் மேல் இருக்கிறது, பணவீக்க விகிதம் 5%-க்கும் குறைவாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சமீபகாலத்தில் அதிகரித்து சராசரியாக 40 ரூபாயாக இருக்கிறது. வங்கிகளிடம் டெபாசிட் பணம் அபரிமிதமாக இருக்கிறது. இத்தனை இருந்தும் மக்களிடம் நிம்மதியோ, வாங்கும் சக்தியோ குறிப்பிடும்படி இல்லை.

“”மக்கள்” என்று இங்கே நாம் குறிப்பிடுவது பெரும்பாலானவர்களான நடுத்தர, ஏழை மக்களைத்தான். நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்திக்கே சவால் விடுவதைப் போல தங்கத்தின் விலையும், நிலத்தின் விலையும் (வீட்டுமனை) உயர்ந்துகொண்டே வருகின்றன. இந்நிலையில் அவர்களுடைய சேமிப்பைப் பாதுகாக்கவும், அதற்கு சுமாரான வருமானத்தையும் தருவது வங்கிகள் தரும் வட்டிவீதம்தான். ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்த வட்டிவீதத்துக்குத்தான் ரிசர்வ் வங்கி குறிவைக்கிறது என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்.

உலக அரங்கில், இந்தியப் பொருளாதாரத்தின் வலிமைக்கான காரணங்களாக உள்ள அம்சங்களை ஆராய்ந்த வல்லுநர்கள், வருவாயில் ஒரு பகுதியைப் பிற்காலத்துக்காகச் சேமித்துவைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவின் ஏழைகளிடம்கூட இருப்பதையும், அதைச் செயல்படுத்துவதையும் சுட்டிக்காட்டி, பாராட்டியுள்ளனர். ரிசர்வ் வங்கி இந்த சேமிப்புப் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்க முயல வேண்டுமே தவிர, மக்களை விரக்தியின் விளிம்புக்கு விரட்டக் கூடாது.

நஷ்டம் வரக்கூடாது என்று மத்திய அரசே முனைப்புக் காட்டி வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைப்பதும், வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டியைக் குறைப்பதும் நல்லதல்ல. அந்த நடவடிக்கைகளை நடுத்தர, ஏழை மக்களின் சேமிப்பு மீதான “”மறைமுக வரி” என்றே கூற வேண்டும்.

வங்கிகளிடம் மிதமிஞ்சி சேர்ந்துவிட்ட டெபாசிட்டுகளால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உபரிப் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. அதை உறிஞ்சுவதற்காக, வங்கிகளின் ரொக்கக் கையிருப்பை மேலும் 0.5% அதிகரித்து, 7% ஆக்கியிருக்கிறது. இப்படி ரொக்கக் கையிருப்பு விகிதத்தை உயர்த்திய பிறகும்கூட அதிகபட்சம் 16 ஆயிரம் கோடி ரூபாயைத்தான் புழக்கத்திலிருந்து உறிஞ்ச முடியும். வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.4,90,000 கோடியாகும்.

வீடுகட்ட கடன் வாங்கியவர்களும், இனி வாங்க நினைப்பவர்களும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் மனம் தளர்ந்து போய்விட்டார்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி வீதத்தைக் குறைத்து, வீடமைப்புத் திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்வேகத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது பொய்த்துவிட்டது. இனி வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்ந்தாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை.

விலைவாசியைக் கட்டுப்படுத்த, பண அச்சடிப்பைக் கட்டுப்படுத்துவது ஒரு வழி என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்றால் உற்பத்தியைப் பெருக்குவதும், பொது விநியோக முறையை வலுப்படுத்துவதும்தான் உற்ற வழிகள்.

இடைத்தரகர்கள், ஊகபேர வியாபாரிகள், கள்ளச்சந்தைக்காரர்கள், முன்பேர வர்த்தகர்கள் ஆகியோரை ஒடுக்காவிட்டாலும், எச்சரிக்கும் விதத்திலாவது ஓரிரு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தால் சற்று ஆறுதலாக இருக்கும்.

சிக்கனத்துக்கும் சேமிப்புக்கும் பெயர்பெற்ற இந்தியர்களைக் கடன் சுமையில் ஆழ்த்தவே பன்னாட்டு வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் 24 மணி நேரமும் தீவிரமாக உழைக்கின்றன. நம் மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கியாவது செயல்படலாம் இல்லையா? இதனால் சில நூறு கோடி ரூபாய்கள் வருமானம் குறைந்தாலும்கூட அதைப் பெரிய இழப்பாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கருதலாமா?

————————————————————————————————–
கவலைப்பட யாருமே இல்லையா?

Dinamani op-ed (August 7 2007)

வீட்டுக் கடன்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என்று அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். பணவீக்க விகிதம் குறைந்தால் மட்டுமே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என்றும் கூறியிருக்கிறார்.

இருக்க இடம் என்பது, உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் இயற்கையான லட்சியம். ஆனால், சொந்த வீடு என்கிற இந்த கனவு நனவானதுடன் நிற்காமல், ஒரு நிரந்தர நரகமாகவும் ஆகிவிட்டால் எப்படி இருக்கும்? வீட்டுக் கடன் வாங்கிக் கனவு நனவானவர்களின் நிலைமை அதுதான்.

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர், அத்தனை வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வீட்டுக் கடன் வழங்க முன்வந்தன. நகர்ப்புறங்களில் திரும்பிய இடத்திலெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் காளான்கள்போல முளைத்தன.

வாடிக்கையாளர்களிடம் இரண்டு வகையான வீட்டுக் கடன் வசதி முன்வைக்கப்பட்டது. முதலாவது வகை வீட்டுக் கடனில் வட்டி விகிதம் அதிகம். ஆனால், கடன் அடைந்து முடியும்வரை இந்த வட்டி விகிதம் மாறாது என்பதால் திருப்பி அடைக்க வேண்டிய மாதாந்திரத் தவணைத் தொகையும் மாறாது. ஆனால், இரண்டாவது வகை வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், அவ்வப்போது வங்கியின் வட்டிவிகித ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்றபடி மாறும் தன்மையது. இதற்கான வட்டி குறைவு என்பதால், பலரும் இந்த முறையிலான வீட்டுக் கடனையே விரும்பி ஏற்றனர்.

அப்போதிருந்த நிலையில், வங்கிகளின் வட்டி விகிதம் குறைந்து வந்த நேரம். அதனால், மேலும் வட்டி குறையும்போது அதன் பயன் கிடைக்குமே என்கிற நம்பிக்கையில் இந்த முறை வட்டிக் கடனைத் தேர்ந்தெடுத்தவர்களே அதிகம். ஆனால், இப்போது இந்த இரண்டாவது வகை வீட்டுக் கடன் முறையைத் தேர்ந்தெடுத்து வீடு வாங்கியவர்கள் நிலைமை மிகவும் பரிதாபகரமாகிவிட்டது.

வட்டி விகிதம் குறைவதற்குப் பதிலாக, வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி விட்டிருக்கின்றன. அதனால், வீட்டுக் கடன் வாங்கியவர்கள் உடனடியாக தங்களது கடனில் ஒரு பகுதியைத் திருப்பிக் கட்டினால் ஒழிய, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவே முடியாது. இந்தத் தவணைகள் வட்டிக்குத்தான் சரியாக இருக்குமே தவிர அசல் குறையாது. அதாவது, வாழ்நாள் முழுவதும் வட்டி மட்டும் கட்டிக் கொண்டிருக்கலாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது. 6.5 சதவிகிதத்திலிருந்து இப்போது 11 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில், அதிகரித்த வட்டி விகிதத்தை ஈடுகட்ட வங்கிகள் தவணைகளை அதிகப்படுத்தின. இன்றைய நிலையில், தவணைகள் 25 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட்டாலும் கடன் அடைந்து தீராது என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

மாறும் வட்டி விகித முறையில், ஒரு லட்ச ரூபாய்க்கான 20 ஆண்டு வீட்டுக் கடனுக்கு 7.25% வட்டியானால் மாதாந்திரத் தவணை ரூ. 790. இப்போதைய 11.25% வட்டிப்படி கணக்கிட்டால், மாதாந்திரத் தவணைத்தொகை ரூ. 900. ஆரம்ப ஆண்டுகளில், சுமார் ஐந்து ஆண்டு வரை, ஒருவர் அடைக்கும் ரூ. 790 தவணைத்தொகையில் அசலுக்குப் போகும் பணம் வெறும் ரூ. 79 மட்டுமே. அதனால், இப்போது வட்டி விகிதம் அதிகரித்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடன் வாங்கிய பலருடைய அசல் தொகையில் பெரிய அளவு பணம் திருப்பி அடைக்கப்படாத நிலைமை.

வீட்டுக் கடன் வாங்கிய லட்சக்கணக்கான மத்தியதர வகுப்பினர் மனநிம்மதி இழந்து, தூக்கம்கெட்டுத் தவிக்கும் நிலைமை. வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் அழுபவர்கள் பலர். இதற்கெல்லாம் காரணம், சராசரி மனிதனின் உணர்வுகளையும் கஷ்டங்களையும் புரிந்துகொள்ளாத மத்திய நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் வங்கித் துறையும்தான்.

இந்த நிலைமையைப் பற்றிக் கவலைப்பட யாருமே இல்லையா?

Posted in Ahluwalia, APR, Balance, bank, Banking, Biz, Budget, Business, Center, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Commerce, Common, Consumer, Control, Currency, Customer, Deposits, Dinamani, Dollar, Economy, Exchanges, Expenses, Exports, Finance, fiscal, GDP, Governor, Govt, Growth, Homes, Houses, Imports, Industry, Inflation, Insurance, Interest, Land, Loans, Loss, Manmohan, Monetary, Money, Op-Ed, PPP, Profit, Property, Rates, RBI, Real Estate, Recession, Revenues, Rupee, Spot, Stagflation, USD | Leave a Comment »

Seven wonders of Tamil Nadu – Must see tourist spots & places by Kumudham

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

01.08.07 கவர் ஸ்டோரி

குற்றாலம்

பேரருவி, சிற்றருவி, செண்பகா தேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி உட்பட சுமார் ஒன்பது அருவிகள் ஒரே இடத்தில் 170 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்தோடி விழுகின்றன.அதுவும் நோய் தீர்க்கும் மூலிகை களோடு. நயாகரா உட்பட உயரமான பல அருவிகள் இருந்தாலும் அவற்றில் எல்லாம் மக்கள் குளிக்க முடியாது. 170 மீட்டர் உயரமாக இருந்தும் மக்கள் குளிக்கக்கூடிய அருவி என்பது இதன் மற்றொரு சிறப்பு.

மலைக்கோட்டை

நீங்கள் திருச்சி செல்வதாக இருந்தால், அதை அடைவதற்கு பல கிலோமீட்டர் முன்பே உங்கள் முன் கம்பீரமாய் நின்று வரவேற்கும் திருச்சி மலைக்கோட்டை. உச்சிப்பிள்ளையார் கோயில் அமைந்துள்ள இந்த மலை 273 அடி உயரமும் 344 படிகளும் கொண்டது.

மேட்டூர் அணை

தஞ்சை வயல்களுக்கு நீரளித்து விளையவைக்கும் அமுதசுரபி. 1934_ல் கட்டப்பட்ட மேட்டூர் அணையின் நீளம் மட்டும் 1700 மீட்டர். உயரம் 120 அடிகள். 32 மெகாவாட் மின்சாரத்தை வழங்குவதுடன், 1,130 சதுர கிலோமீட்டர் நிலத்தையும் விளைய வைக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோவில்

ஆடல் அரசருக்கு சிதம்பரத்தில் அமைக்கப்பட்ட கம்பீர வீடு. 5_ம் நூற்றாண்டில் இந்தக் கோயிலின் சிற்றம்பலத்தைக் கட்டியது பல்லவ மன்னன் இரண்யவர்மன். அதன் பின் பல மன்னர்களாலும் மாறி மாறி மெருகூட்டப்பட்ட இந்த ஆலயம் தீட்சிதர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

மகாபலிபுரம் சிற்பங்கள்

ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட மகேந்திர வர்ம பல்லவனும், நரசிம்மவர்ம பல்லவனும் தங்கள் சாம்ராஜ்யத்தின் ஒட்டுமொத்த செழிப்பையும் ஒரே இடத்தில் காட்ட தேர்ந்தெடுத்த இடம்தான் மகாபலிபுரம். பஞ்ச பாண்டவர் குகை, கடற்கரைக் கோயில், பாறை முழுதும் சிற்பங்கள் என்று ஒட்டுமொத்த கலை யழகும் கொண்டுள்ள இது சுற்றுலா வரை படத்தில் ‘செவன் பகோடாஸ்’ என்று புகழ்பெற்றுள்ளது.

செட்டிநாட்டு வீடுகள்

சாதாரண வீடுகளைக் கூட கலைக்கோயிலாக மாற்றமுடியும் என்பதற்கு தமிழகம் கொடுத்துள்ள உதாரணம், செட்டிநாட்டு வீடுகள். மர வேலைகளுக்கு பர்மா தேக்குகள், தரைக்கு உள்ளூரிலேயே வடிவமைக்கப்பட்ட ஆத்தங்குடி கற்கள், சுவர் களில் அந்தக் காலத்திலேயே இறக்குமதி செய்யப்பட்ட இத்தாலியக் கற்கள் என்று வாங்கி, முட்டை கலந்த ‘செட்டிநாடு பிளாஸ்டரை’க் கலந்து குழைத்துக் கட்டியிருக்கிறார்கள்.

கானாடுகாத்தானில் உள்ள செட்டிநாட்டு அரண்மனை, காரைக் குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு என்று ஒவ்வொன்றும் நகரத்தாரின் கலைரசனையை எடுத்துச் சொல்கிறது. இங்குள்ள ஒவ்வொரு வீட்டையும் பார்க்க ஒருநாள் போதாது. உலகிலேயே செட்டிநாட்டில் மட்டும்தான் இத்தனை அழகான மாளிகைகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.

கைலாசநாதர் கோயில்

பல்லவர்களின் மற்றொரு பிரமாண்ட படைப்பு. கோயிலின் வாசலில் கம்பீரமாக மண்டியிட்டிருக்கும் நந்தியை வைத்தே கோயிலின் பிரமாண்டத்தை அறிந்துகொள்ளலாம். இந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தையும் அஜந்தா சிற்பங்களுக்கு இணையாகக் கூறுகிறார்கள் வல்லுனர்கள்.

திருவள்ளுவர் சிலை

தமிழகத்தின் கலைவளங்களில் லேட்டஸ்டாகச் சேர்ந்திருக்கும் விஷயம். முக்கடலும் சந்திக்கும் குமரிக்கடலில் வள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு அதிகாரத்துக்கு ஒரு அடி என்று 133 அடிகளில் இங்கே வள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சைப் பெரியகோவில்

பெயரைப் போல நிஜமாகவே பெரிய கோயில் தான். கோயில் மட்டுமல்ல, இங்குள்ள சிவலிங்கம், பிரமாண்ட நந்தி (இதன் எடை மட்டும் 17 டன்), கோபுரம் (70 மீட்டர்) என்று எல்லா விஷயங்களும் பெரியது.

வேலு£ர் கோட்டை

கிருஷ்ண தேவராயரின் தளபதிகள் பொம்மியும் திம்மண்ண ரெட்டியும் எழுப்பிய கோட்டை இது. 16_ம் நூற்றா ண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பல போர்களைச் சந்தித்தது. திப்பு சுல்தான் வீழ்ந்த பிறகு, அவரது வாரிசுகள் சிறை வைக்கப்பட்டது இங்குதான்.

தமிழக அதிசயங்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்க இடங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம். இதிலிருந்து ஏழு இடங்களை வரிசைப்படுத்தி எங்களுக்கு அனுப்புங்கள். இந்தப் பட்டியலில் இடம்பெறாத வேறு ஏதாவது இடங்கள் இருந்தால், அவற்றையும் சரியான காரணங்களுடன் விளக்கி எங்களுக்கு அனுப்புங்கள். கலைநயம், புராதனம், இயற்கை அழகு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக அதிசயங்களை சரியாக வரிசைப்படுத்தி அனுப்பும் 7 வாசகர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் பரிசளிக்கப்படும். உங்கள் அதிசயப் பட்டியலை அஞ்சல் அட்டையில் அனுப்ப வேண்டிய முகவரி:

தமிழக அதிசயங்கள்
பி.எம்.சுதிர்,

Posted in Boating, Chennai, Chettinad, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Classic, Courtralam, Coutrallam, Culture, Dams, Districts, Falls, Forest, Forts, Guide, Heritage, hidamabram, Hidden, Hills, Horseback, Horsebackriding, Irrigation, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanchivaram, Kanjeepuram, Kanjeevaram, Kanjipuram, Kanjivaram, Kanniakumari, Kanniyakumari, Kanyakumari, Kings, Kumudam, Kumudham, Kuthaalam, Kuthalam, Kutralam, Mahabalipuram, Mamallapuram, Mettoor, Mettur, Mountains, Projects, Rulers, Sidamabram, Sidhamabram, Specials, Tamil, Tamil Nadu, Tanjore, Thanchavoor, Thanchavur, Thanjavoor, Thanjavur, Thiruchendhoor, Thiruchendhur, Thiruchendoor, Thiruchendur, Thiruchi, Thiruchirapalli, Thiruchirappalli, Thiruchy, Tips, TN, Tour, Tourist, Travel, Trichirappalli, Trichoor, Trichur, Trichy, Vellur, Velore, Visit, Water, Waterfalls, wonders | 2 Comments »

Cheating the state – Income Tax, Black Money, Business folks

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

வாட்டுது வருமான வரி!

“”வருமானமே போதவில்லை, அதற்கு வரி வேறா?” என்ற அங்கலாய்ப்பு மத்தியதர வர்க்கத்திடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் கேட்டவண்ணம் இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களோ இதையெல்லாம் காதில் வாங்காமல் கருமமே கண்ணாக இருந்து வரி வசூலிப்பைத் தீவிரப்படுத்துகின்றனர்.

மாதச் சம்பளக்காரர்கள், அரசு ஊழியர்களானாலும் தனியார் நிறுவன ஊழியர்களானாலும் அவர்களுடைய அலுவலகத்தாராலேயே பிடிக்கப்பட்டு வரி செலுத்தப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு அதில் சலுகைக்குரிய இனம் ஏதும் இருந்தால் அதை வருமான வரி செலுத்தியவரே கணக்கு கொடுத்து திரும்பப்பெற வேண்டும். இந்த வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவார்கள் என்று ஆண்டுதோறும் நிதியமைச்சரின் பட்ஜெட்டை ஆவலோடு எதிர்பார்த்து, கடைசியில் இலவுகாத்த கிளியாக ஏமாந்து வேறு போவார்கள் மாதச் சம்பளக்காரர்கள். இவர்கள் மீது நிதியமைச்சருக்குக் கரிசனம் வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரி வசூல் அதிகமாகிக் கொண்டே வருகிறது, கிட்டத்தட்ட 3 மடங்காகிவிட்டது என்று தலைமை வருமானவரி ஆணையர் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.

அதாவது ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ரூ.5,336 கோடியாக இருந்த வருமான வரி வசூல் கடந்த ஆண்டு ரூ.17,400 கோடியாக உயர்ந்துவிட்டது. தமிழ் நாட்டில் மட்டும் கடந்த ஆண்டு 3.13 லட்சம் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி செலுத்துகிறவர்களாக இருந்து “ரிடர்ன்’ எனப்படும் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.

உள்நாட்டிலேயே

  • வியாபாரிகள்,
  • தரகர்கள்,
  • சொந்தமாகத் தொழில் செய்யும் டாக்டர்கள்,
  • என்ஜினீயர்கள்,
  • வக்கீல்கள்,
  • ஆடிட்டர்கள்,
  • விமானம், கப்பல் ஆகியவற்றுக்கான டிராவல் ஏஜெண்டுகள்,
  • லாரி உரிமையாளர்கள்,
  • சொந்தத் தொழில் செய்பவர்கள்,
  • வியாபாரிகள்,
  • சேவைத்துறையில் இருப்பவர்கள்

என்று பலதரப்பட்டவர்களும் வரி செலுத்துகின்றனர். ஆனால் அவர்களுடைய வருவாய்க்கும், செலுத்தும் வரிக்கும் பெரும் இடைவெளி இருப்பது நமக்கே தெரிகிறது, ஆனால் என்ன காரணத்தாலோ அரசும் அதிகாரிகளும் அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்.
இந் நிலையில் சமீபத்தில் கூடிய வருமானவரித்துறை தலைமை ஆணையர்களின் மாநாட்டில் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்கவும், வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணவும் புதிய உத்திகளை வகுத்திருப்பதாகத் தெரிகிறது. இவை மனப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டால் வரி வருவாய் பலமடங்கு பெருகும், அரசின் செலவுகளுக்கு அதிக நிதியும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

“”ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு அல்லது அடுக்குமனை வாங்குகிறவர்களின் ஆண்டு வருமானம் ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுடைய வருமான வரி கணக்கைத் தீவிரமாக ஆராய வேண்டும், வீட்டை ரூ.30 லட்சத்துக்கு மேல் விற்பவர்கள் கணக்கில் காட்டும் மூலதன ஆதாயத் தொகையைச் சரிபார்க்க வேண்டும், சொத்துகளை விற்ற வகையில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் நஷ்டம் என்று கணக்கு காட்டினாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ஆணையர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பங்குச்சந்தைத் தரகர்கள், பலசரக்குத் தரகர்கள் ஆகியோரையும் கண்காணிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையில் 12 மாதங்களுக்குள் மூலதன ஆதாயம் ரூ.25 லட்சம் பெற்றதாக கணக்கு காட்டுகிறவர்களின் வருமான வரி “ரிடர்ன்கள்’ இனி தீவிரமாக ஆராயப்படும்.

விவசாய வருமானத்துக்கு வரி போடுவதில்லை என்ற முடிவை அரசு எடுத்திருந்தாலும், சிலருடைய விவசாயக் கழனிகளிலும், தோட்டங்களிலும் மட்டும் -மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் -“”அமோக மகசூல்” ஆகி, அற்புதமாகப் பணம் கொழிக்கும் “”அபூர்வ பசுமைப் புரட்சி” எப்படி சாத்தியம் என்றும் ஆராய முடிவு செய்திருக்கிறார்கள்.

வருமானத்தைக் கணக்கிடுவது மட்டும் அல்ல, அது முறையாக ஈட்டப்படுகிறதா என்பதையும் வருமானவரித்துறை அறிய வேண்டும். இல்லையென்றால் உரிய துறைகளுக்குத் தெரிவித்து தடுக்க வேண்டும். அப்போதுதான் அதன் கடமை முழுமை பெறும்.

———————————————————————————————————

தமிழகத்தில் வருமான வரி மூலம் வருமானம் அதிகரிப்பு: மாநிலப் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஓர் அடையாளம்

சென்னை, ஜூலை 27- கடந்த ஏழு ஆண்டுகளாகப் படிப்-படியாக, வருமான வரி மூலம் மத்திய அரசு பெறும் வருவாய் அதிகரிக்கிறது என்றும், இது தமிழ் நாட்டின் ஒட்டு மொத்-தப் பொருளாதார முன்-னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், சென்னை வருமான வரித் தலைமை ஆணையர் சி.ஆர். ரவிச்சந்திரன் ஜுன் 25+இல் கூறினார்.

2000+2001+இல் இருந்து அதிகரித்து வரும் வரிமான வரி வசூல், கடந்த ஆண்டு மட்டும் 37 விழுக்காடு அதிகரித்-திருக்கிறது.

தமிழ்நாட்டில்

  • 2000+2001+இல் வசூலிக்கப்-பட்ட வருமான வரி ரூ.4,519 கோடி,
  • 2004+05+இல் ரூ.8,344 கோடி,
  • 2005+06+இல் ரூ.10,861 கோடி,
  • 2006+07+இல் ரூ.14,891 கோடி.

இந்த நிதியாண்டான 2007+08+இல் ரூ.17,402 கோடி வசூல் ஆகும் என மதிப்பிடப்-பட்டிருக்கிறது.

செய்தித் தொழில் நுட்பம், மற்றும் பிற தொழில் துறை-களில் முன்னேற்றமும், வரி வசூல் முறைச் சீர்படுத்தமும் வரி வசூல் அதிகரிப்பிற்குக் காரணங்கள் ஆகும்.

———————————————————————————————————

 

Posted in Biz, Bonds, Bribery, Bribes, Budget, Bureaucracy, Business, Cheats, Chidamabram, Chidambaram, Chidhambaram, Commerce, Compensation, Corruption, Economy, Employment, Finance, Govt, Homes, Houses, Incentives, Income, Income Tax, Industry, IT, Jobs, Money, NCC, NSS, PC, Personal, Private, Rajini, Rajni, Sankar, Savings, Shankar, Shivaji, Sivaji, Small scale, SSI, Tariffs, Tax, Work, Worker | Leave a Comment »

Thirumavalavan – Dalits entry into Salem Kanthampatty Temple

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில்
ஆகஸ்டு 6-ந் தேதி ஆலயப் பிரவேச போராட்டம்
திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, ஜுலை.18-

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி தடைகளை தாண்டி உள்ளே நுழையும் ஆலயப் பிரவேச போராட்டம் செய்ய போவதாக திருமாவளவன் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் கிராமப்புற கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களிலும் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கும், வழிபாடு செய்வதற்கும் உரிமை வழங்கி தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுசெயலாளர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான கோவில்கள் இந்து அற நிலையத்துறைக்கு சொந்தமானவை. ஆனால் அந்த கோவில்களில் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத நிலை உள்ளது.

சாமிக்கும் ஜாதி

காந்தியடிகள் காலத்தில் அனைத்து சாதியினரும் கோவிலில் நுழைந்து வழிபடுவதற்கு கோவில்களை திறந்து விட சொன்னது வரலாறு. அப்போது, தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எ.எஸ்.வைத்தியநாத அய்யர் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம் செய்தனர்.

ஆனால் 60, 70 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் கூட, கிராமப்புறங்களில் உள்ள அம்மன், சிவன், அய்யனார், முருகன் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை. சாதீய வன்கொடுமை இன்னும் தலைவிரித்தாடுகிறது.

சேலம் மாநகரத்தில், கந்தம்பட்டியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை தன் வசம் எடுத்துக் கொண்டது. ஆனால் அந்த கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைந்து வழிபாடு செய்ய அனுமதி இல்லை. இந்து மதத்தில் மட்டும்தான் சாமிக்கும் ஜாதி சாயம் பூசுகின்ற கொடுமை நடக்கிறது.

புதிய சட்டம்

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி என்னுடைய தலைமையில் தடைகளை தாண்டி கோவிலுக்குள் நுழைய இருக்கிறோம். ஆயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் இந்த ஆலய பிரவேச போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அந்த நிலைமை ஏற்படாதவாறு அதற்கு முன்னதாக, அனைத்து சாதியினரும் அனைத்து கோவில்களிலும் நுழைந்து வழிபடுவதற்காக புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.

சிதம்பரம் கோவில்

கோவில்களுக்கு சொந்தமான 12 லட்சம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி, நிலமற்ற விவசாயிக்கு 2 ஏக்கர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வழங்கவேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் தமிழில் வழிபாடு செய்ய முடிவதில்லை. தேவாரம் போன்ற திருமறைகள் பாடுவது தடுக்கப்படுகிறது. அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபடும் கட்டாயத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Posted in Caste, CE, Chidamabram, Chidambaram, Chidhambaram, Community, Dalit, Dalits, Dhroupathy, Drowpathy, FC, Fight, God, Hindu, Hinduism, Kandhambatty, Kandhampatty, Kanthambatty, Kanthampatty, Liberation, Metro, Oppression, Panchaali, Panjali, Poor, Ravikkumar, Ravikumar, Religion, Rural, Salem, SC, Sidhambaram, ST, Temple, Thiruma, Thirumavalavan, Thol, Throupathy, Viduthalai, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Viduthalai Siruthaikal, Village, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »

Finance ministry against Govt nominees in Punjab & Sind Bank: Board in open war

Posted by Snapjudge மேல் ஜூலை 1, 2007

வங்கிகளும் அரசியல் தலையீடும்!

அரசியல் தலையீடு அதிகரித்து விட்டது என்கிற மனக்குறை இல்லாத அதிகாரி யாரும் இருக்க முடியாது. பல பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களின் தலையீடுதான் என்று ஆதங்கப்படாத அதிகாரிகளே இருக்க முடியாது.

“எல்லாவற்றையும் முழுமையாக அதிகாரிகளிடமே விட்டுவிட முடியாது. அவர்களுக்கு அடித்தள மக்களின் பிரச்னைகள் எதுவும் தெரியாது’ என்று இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து பதில் வரும். இரு தரப்புக் கூற்றிலுமே ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம், அரசியல் தலையீடு என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

பொதுத்துறை நிறுவனங்களில், அதிலும் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளில் ஆளும்கட்சி அனுதாபிகளை இயக்குநர்களாக நியமிப்பது என்பது வழக்கமாகி விட்டது. இந்த இயக்குநர்களின் சிபாரிசில் பலருக்கும் கடனுதவி வழங்கப்படுவதும், அதில் பெரும்பாலானவை வாராக் கடன்களாக தள்ளுபடி செய்யப்படுவதும் எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வாடிக்கையான விஷயம். அரசியல் தலையீடு தளர்த்தப்படாவிட்டால் இதுபோன்ற வாராக் கடன்களைத் தடுக்க முடியாது என்று நிதியமைச்சகத்திடம் முறையிடாத தேசியமமாக்கப்பட்ட வங்கிகளின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களே கிடையாது.

முதன்முறையாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் இந்தப் பிரச்னையை பொதுமக்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருப்பது வியப்பை அளிக்கிறது. பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர்- மேலாண் இயக்குநர் தான் இந்தப் பிரச்னையை பொது சர்ச்சைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

மாறுபட்ட பொருளாதார சூழ்நிலையில், வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்து வருவதுபோல, வங்கிகளின் செயல்பாடுகளும் புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகளின் செயல்பாடு பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்கள் இயக்குநர்களாக இருப்பதுதான் வங்கிகள் முன்னேற்றத்திற்குத் தேவையே தவிர, எல்லா விஷயத்திலும் அநாவசியமாகத் தலையிடும் அரசியல்வாதிகள் அல்ல. மக்களின் சேமிப்புகளுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவை வங்கிகள். ஆகவே, வங்கியை நிர்வகிக்க வேண்டியவர்கள் வல்லுநர்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல. இதுதான் பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர் கூறியிருக்கும் கருத்தின் சாராம்சம்.

அவரது கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை. மேலும் அவர் கூறியிருப்பதைப்போல வாராக் கடன்களை வசூலிக்க வங்கிகளின் இயக்குநர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால், இந்த விஷயத்தில் வங்கி அதிகாரிகள் அனைவரும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. அரசியல்வாதிகள் இல்லாத நிலையில், வல்லுநர்கள் மட்டுமே பொதுத்துறை வங்கிகளை நிர்வகிப்பது என்பது, கேள்வி முறையற்ற அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்?

ஊழல், அதிகார துஷ்பிரயோகம், வேண்டியவர்களுக்கு தகுதி இல்லாவிட்டாலும் உதவுவது போன்றவை அரசியல்வாதிகள் மட்டுமன்றி அதிகாரிகளிடமும் காணப்படும் குறைபாடு என்பதை மறந்துவிடக்கூடாது. பொதுவாழ்க்கையில் அப்பழுக்கற்ற நபர்களை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவதுதான் அதிகாரிகள் தவறிழைக்காமல் இருக்க உதவும். கட்சி விசுவாசத்துக்குத் தரும் வெகுமதியாக இந்தப் பதவிகள் மாறியிருப்பதுதான் குறையே தவிர அந்தப் பதவியே வேண்டாம் என்பது சரியல்ல.

நிதியமைச்சகத்தின் முன்அனுமதி இல்லாமல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் தலைவர் ஒருவர் இந்த விஷயத்தை பத்திரிகைகளிடம் பகிரங்கப்படுத்தி இருக்க முடியாது. வங்கி நிர்வாகத்தில் வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், பொதுமக்களின் பிரதிநிதிகளும் இயக்குநர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நியாயம். அனால், அந்தப் பிரதிநிதிகள் அப்பழுக்கற்ற பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டுமே தவிர ஆளும்கட்சியின் விசுவாசிகளாக மட்டுமே இருந்தால் அது ஏற்புடையதல்ல.

ஒரு தேவையான சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் பஞ்சாப் சிந்த் வங்கித் தலைவர். தேசிய விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம் இது என்பதில் சந்தேகமில்லை.

Posted in abuse, Assets, Balance, Banking, Bankruptcy, Banks, Benaami, Benami, Board, Bribery, Bribes, Cabinet, Campaign, CEO, CFO, chairman, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, CMD, Commerce, Congress, COO, Corruption, Director, Finance, Financing, Gopalakrishnan, Govt, Influence, kickbacks, Loans, Management, Manmogan, Manmohan, MD, Members, Moopanaar, Moopanar, Mooppanaar, Mooppanar, Nominee, Op-Ed, Options, panel, Penami, Power, Prathiba, Prathibha, Proxy, PSB, Punjab, Punjab & Sind Bank, reconstitution, regulations, SBI, Sind, Sindh, State Bank, Statements, Trading, Trustees, VP | Leave a Comment »

State of Tamil Nadu Congress Party – Internal Politics

Posted by Snapjudge மேல் ஜூன் 15, 2007

காங்கிரஸில் மேலும் ஒரு புதிய கோஷ்டி

சென்னை, ஜூன் 16: ஏற்கெனவே பல்வேறு கோஷ்டிகள் நிறைந்து காணப்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு புதிய அணி உதயம் ஆகிறது.

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் இந்த அணியை உருவாக்கும் தீவிர முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வெள்ளிக்கிழமை இறங்கினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில்

  • மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தலைமையிலான பழைய த.மா.கா. அணி,
  • கட்சியின் மாநிலத் தலைவர் எம். கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் அணி,
  • மத்திய அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அணி,
  • முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர். பிரபு,
  • கே.வீ. தங்கபாலு,
  • ஜெயந்தி நடராஜன் போன்றவர்களின் தலைமையிலான அணிகள் என்று பல அணிகள் இயங்கி வருகின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை: மாநிலங்களவைத் தேர்தல், மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியைக் கட்சியின் அகில இந்திய மேலிடம் சமீபத்தில் மேற்கொண்டது.

அப்போது இந்தக் கோஷ்டிப் பூசல் பூதாகாரமாக விசுவரூபம் எடுத்தது. வாசனின் ஆதரவாளர்களை வேட்பாளர்களாக மேலிடம் தேர்வு செய்துவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் இதர அணிகள் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. போளூர் வரதனின் தலைமையில் ஒன்றுபட்டன. ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தின. வாசன் அணிக்கு எதிராக மேலிடத்தில் புகார்களைத் தெரிவித்தன.

ஆனால், இறுதியில் வாசனின் “கை’யே ஓங்கியது. மாநிலங்களவைத் தேர்தலிலும், மதுரை மேற்கு இடைத் தேர்தலிலும் வாசனின் தீவிர ஆதரவாளர்களுக்கே மேலிடம் வாய்ப்பு அளித்தது.

கட்சிக் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டும், மேலிடத்தின் அறிவுரையை ஏற்றும், வாசன் அணிக்கு எதிரான அணிகளைச் சேர்ந்தவர்கள் தற்போது மதுரை மேற்குத் தொகுதியில் முகாமிட்டு, பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

காமராஜர் இல்லம் அருகே…: இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் காமராஜரின் இல்லத்துக்கு அருகே உள்ள ஓட்டலில் கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் புதிய அணியின் மதிய விருந்து -ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  • மூத்த நிர்வாகி தமிழருவி மணியன்,
  • மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன்,
  • சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் கே.எஸ்.அழகிரி,
  • வி.ராஜசேகரன்,
  • சட்டப் பேரவை உறுப்பினர்கள் திருவாடானை கே.ஆர்.ராமசாமி,
  • காரைக்குடி சுந்தரம்,
  • முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஆ. கோபண்ணா,
  • கிருஷ்ணசாமி வாண்டையார்,
  • சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர். தியாகராஜன் உள்ளிட்ட 20 முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Posted in Analysis, Backgrounders, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Divisions, Elangovan, Elankovan, Elections, Faction, Fights, Ilangovan, Ilankovan, Internal, Jayanthi, Jayanthy, Jeyanthi, Jeyanthy, Kaarthi, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Karthi, Krishnasaamy, Krishnasami, Krishnasamy, Krishnaswamy, Leaders, Madurai, Manmohan, Members, MLAs, MPs, Party, PC, Petty, PMK, Politics, Polls, Sonia, Thangabaalu, Thangabalu, Thankabalu, TMC | Leave a Comment »

Attack Pandi – Sun TV & Dinakaran Madurai office ransacking: How the innocent employees got butchered?

Posted by Snapjudge மேல் மே 9, 2007

நாளிதழ் அலுவலகத் தாக்குதலில் 3 பேர் இறந்தது எப்படி?

மதுரை, மே 10: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் தீயில் சிக்கி 2 பொறியாளர்களும், காவலாளியும் புதன்கிழமை உயிரிழந்தனர்.

கம்ப்யூட்டர் பொறியாளர்கள்

  • வினோத்குமார் (26),
  • கோபிநாத் (25),
  • காவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் அலுவலக அறைகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

அவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

வினோத்குமார்: பொறியாளர் வினோத்குமாரின் தந்தை முருகேசன். தாய் பூங்கொடி. மதுரை வானமாமலை நகர் நேரு தெருவில் வசித்து வருகின்றனர்.

முருகேசன் கட்டடங்களுக்கு மார்பிள் போடும் காண்டிராக்ட் தொழில் செய்துவருகிறார்.

கம்ப்யூட்டர் பிரிவில் பி.இ. பட்டம் பெற்ற வினோத்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தம்பி கார்த்திக்பாண்டியன் கேட்டரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

கோபிநாத்: ராமநாதபும் மாவட்டம், சக்கரைக் கோட்டையைச் சேர்ந்த கோபிநாத், கம்ப்யூட்டரில் பி.இ. பட்டம் பெற்றவர். இவரது சகோதரர் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

இவரது தந்தை கோகுலதாஸ் மின்வாரிய உதவிப் பொறியாளராக உள்ளார். தாயார் கோகுலவள்ளி.

இறந்தது எப்படி?: ஊழியர்கள் இறந்ததை நேரில் பார்த்த ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

கருத்துக்கணிப்பு வெளியானதை அடுத்து கும்பல் கும்பலாக வந்த பலர் எங்கள் அலுவலகத்தின் முன் பத்திரிகை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 10 மணிக்கு வந்த கும்பல் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால் பெண் ஊழியர்கள் பலரையும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம்.

பின்னர் 11 மணியளவில் அட்டாக் பாண்டி தலைமையில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை அலுவலகத்தின் வரவேற்பறை, கணினி அறை, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட 6 இடங்களில் வீசினர். இதனால், தீ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக வரவில்லை. போலீஸ் நடவடிக்கையும் தாமதமாக இருந்தது. இதனையடுத்து அலுவலகம் புகையால் சூழப்பட்டது. பலரும் தப்பி வெளியேறினோம். இந் நிலையில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் கோபிநாத், வினோத்குமார் ஆகியோர் தங்கள் அறையில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர்.

தீயணைப்புத் துறையினர் வந்து நீண்ட நேரத்துக்கு பிறகே 2 பேரையும் மீட்க முடிந்தது. காவலாளி முத்துராமலிங்கம் சடலத்தை மாலையில் தான் மீட்கமுடிந்தது என்றனர்.


பலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுஉதவி: கலாநிதி மாறன்மதுரை, மே 10 மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் தீயில் சிக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கும், தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தெரிவித்தார்.மதுரையில் புதன்கிழமை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்குள்ளான தினகரன் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, தாக்குதலில் இறந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும்வரை போராடுவோம். திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், இச் சம்பவம் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது.இது தனிநபர் மீது நடந்த தாக்குதல் அல்ல. பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.கருத்துக் கணிப்பு தேவையில்லை என்ற நோக்கில் முதல்வர் கருணாநிதியே கூறியுள்ளாரே? எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா? என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம்? எனக் கேட்டதற்கு, நீங்கள் (செய்தியாளர்கள்) நினைப்பதைத்தான் நாங்களும் நினைக்கிறோம் எனப் பதிலளித்தார் கலாநிதி மாறன்.

இச் சம்பவத்துக்கு மு.க அழகிரியின் தூண்டுதலே காரணம் என, சன் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எம். ரமேஷ் தெரிவித்தார்.


மதுரையில் மறியல்} 7 பஸ்கள் உடைப்பு: மேயர், துணை மேயர் உள்பட 200 பேர் மீது வழக்குமதுரை, மே 10: தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்பது தொடர்பாக தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அரசு பஸ்கள் உள்ளிட்ட 7 பஸ்கள் புதன்கிழமை சேதப்படுத்தப்பட்டன.இது தொடர்பாக 7 பேரை போலீஸôர் கைது செய்தனர். மதுரை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் புதன்கிழமை காலையிலிருந்தே மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தினகரன் நாளிதழ்களை எரித்துப் போராட்டம் நடத்தினர்.திமுகவின் 4-ம் பகுதிச் செயலர் எம்.ஜெயராமன் தலைமையில் சுமார் 40 பேர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கூடி அந்த நாளிதழ்களை எரித்தனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 அரசு பஸ்களை கல் வீசியும், கட்டையால் தாக்கியும் சேதப்படுத்தினர்.மேயர் கோ.தேன்மொழி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் அங்கிருந்த பஸ்ûஸ கல் வீசித் தாக்கி சேதப்படுத்தினர். உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற மறியல் சம்பவத்தில் தனியார் பஸ்ûஸயும், அரசு பஸ்ûஸயும் சிலர் சேதப்படுத்தினர்.இதேபோல், மணிநகரத்தில் திமுக பிரமுகர் சரவணன் தலைமையிலும், கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே 1-ம் பகுதிச் செயலர் ரவிச்சந்திரன், மகால் பகுதியில் தொண்டர் அணி அமைப்பாளர் வி.பி.பாண்டி தலைமையிலும், நேதாஜி சிலை அருகே 38-வது பகுதிச் செயலர் கே.பி.செல்வம் தலைமையிலும் மறியலில் ஈடுபட்டனர்.

மதுரையில் முனிச்சாலை, விரகனூர் சுற்றுச்சாலை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடைபெற்றது.

இதனால் ஆங்காங்கே கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மதுரை போலீஸ் கமிஷனர் ஏ.சுப்பிரமணியன் கூறியது: பல்வேறு இடங்களில் நாளிதழ்கள் எரிப்பு மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்ட மதுரை மேயர், துணை மேயர், சில கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்கட்ட நடவடிக்கையாக மதுரை நகரில் 7 பேரையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 பேரையும் கைது செய்துள்ளோம். மேலும், நகரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.


It all started here with Dinakaran – Sun TV Network’s Survey Results from AC Nielsen
கலைஞரின் அரசியல் வாரிசு யார்? கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு தமிழக அளவில் 70 சதவீதம் மக்கள் மு.க.ஸ்டாலின் என்று பதிலளித்துள்ளனர். மு.க.அழகிரி என்று 2 சதவீதம் பேரும், கனிமொழி என்று 2 சதவீதம் பேரும் பதில் அளித்தனர். 20 சதவீத மக்கள் வேறு பெயர்களை பதிலாக தெரிவித்தனர். 6 சதவீதம் பேர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.“ஸ்டாலின்தான் கலைஞரின் அரசியல் வாரிசு’’ என அதிகம் பேர் சொல்லியிருப்பது

  • கோவை பகுதியில்தான். அங்கு 78 சதவீத மக்களிடம் இந்தக் கருத்து காணப்படுகிறது. அதனையடுத்து
  • வேலூர் பகுதியில் 77 சதவீதம் பேரும்,
  • திருச்சி பகுதியில் 71 சதவீதம் பேரும் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். மாநில சராசரியை விட சற்று குறைவாக
  • சென்னையில் 68 சதவீதம் பேர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டனர்.
  • மதுரையில் இந்த சதவீதம் 67 ஆக,
  • புதுச்சேரியில் 65 ஆக உள்ளது.
  • சேலத்தில் 61%.

“அரசியல் வாரிசு அழகிரி’’ என்று கூறியிருப்பவர்கள் எண்ணிக்கை

  • மதுரையை விட நெல்லையில் அதிகமாக இருக்கிறது.
  • மதுரையில் 6 சதவீதம் பேரும்
  • நெல்லையில் 11 சதவீதம் பேரும் அழகிரி பெயரை சொல்லியிருக்கிறார்கள்.
  • புதுச்சேரியில் 2 சதவீதம் பேரும்,
  • வேலூர்,
  • கோவை,
  • திருச்சி,
  • நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தலா 1 சதவீதம் பேரும் அழகிரிதான் கலைஞரின் அரசியல் வாரிசு என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
  • சென்னை மற்றும்
  • சேலத்தில் அதற்கும் குறைவானவர்கள் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.

“கனிமொழியே கலைஞரின் அரசியல் வாரிசு’’ என்று

  • மதுரையில் 5 சதவீத மக்களும்
  • சேலத்தில் 4 சதவீதம் பேரும் கூறியிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை
  • நெல்லையில் 3 சதவீதமாகவும்
  • நாகர்கோவில் பகுதியில் 2 சதவீதமாகவும் இருக்கிறது.
  • சென்னை,
  • வேலூர்,
  • புதுச்சேரி,
  • கோவை பகுதிகளில் தலா 1 சதவீதம் பேர் கனிமொழி பெயரை குறிப்பிட்டனர்.

இந்த மூன்று பேரை தவிர வேறு பெயர்களை சொன்னவர்கள் சென்னையில் அதிகம். 31 சதவீத சென்னைவாசிகள் அத்தகைய கருத்து தெரிவித்தனர். சேலத்தில் 23, வேலூர், கோவையில் தலா 19, நாகர்கோவில் பகுதியில் 18, திருச்சியில் 16, புதுச்சேரி பகுதியில் 15 சதவீதம் மக்கள் இவ்வாறு வேறு பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தவர்களில் 33 சதவீதம் பேர் “அரசியலில் அவர் அனுபவசாலி’’ என்ற காரணத்தால் அவரை குறிப்பிட்டதாக சொல்கின்றனர். வேலூர் (40), புதுச்சேரி (38), கோவை (37) சேலம் (35) பகுதிகளில் மாநில சராசரியை விடவும் அதிகமானவர்கள் ஸ்டாலினின் அரசியல் அனுபவத்தை காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர். சென்னை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் தலா 32 சதவீதம் பேரிடம் இதே கருத்து வெளிப்பட்டது. “கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகளை வகித்திருப்பது ஸ்டாலினுக்குரிய பிளஸ் பாயின்ட்’’ என்று பெரும்பாலானவர்கள் சுட்டிக்காட்டினர்..


சிறப்பாக செயல்படும் மத்திய அமைச்சர்கள் யார்? தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் மிகவும் சிறப்பாக செயல்படுபவர் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

  • தயாநிதி மாறன் என்று தமிழக அளவில் 64 சதவீத மக்கள் கூறியுள்ளனர்.
  • 27 சதவீத மக்கள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.
  • கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு பெயரை 7 சதவீதம் பேர் தேர்வு செய்தனர்.
  • ஒரு சதவீதம் பேர் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பெயரை குறிப்பிட்டுள்ளனர்.
  • வேலூரில் அதிகபட்சமாக 79% பேர் எங்கள் சாய்ஸ் தயாநிதி மாறன் என கூறியுள்ளனர்.
  • சேலம்,
  • கோவையில் தலா 73 சதவீதம் பேரும்,
  • சென்னையில் 61 சதவீதம் பேரும் சிறந்த அமைச்சராக தயாநிதி மாறனை தேர்வு செய்துள்ளனர்.
  • புதுச்சேரியில் 67%,
  • திருச்சி,
  • மதுரையில் தலா 58%,
  • நாகர்கோவிலில் 57%,
  • நெல்லையில் 53% பேர் தயாநிதி மாறன் மிகச் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.

அமைச்சர் சிதம்பரம் நன்றாக செயல்படுகிறார் என்று

  • மதுரையில் 36 சதவீதம் பேரும்
  • சென்னையில் 24 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

டி.ஆர்.பாலுவின் செயல்பாடு நன்றாக இருப்பதாக தெரிவித்தவர்கள்

  • திருச்சி,
  • நாகர்கோவிலில் தலா 12%.
  • சென்னை மக்களில் 11 சதவீதம் பேர் பாலு சிறப்பாக செயலாற்றுவதாக கூறினர்.
  • நெல்லை 9%,
  • சேலம்,
  • மதுரை தலா 4%,
  • புதுச்சேரி 3%.

சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் செயல்பாடு பிடித்திருப்பதாக

  • புதுச்சேரி பகுதியில் 4 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர்.
  • சென்னையில் இந்த கருத்து கொண்டிருப்பவர்களின் சதவீதம் 2.
  • வேலூர்,
  • திருச்சி,
  • நெல்லையில் தலா 1 சதவீதம்.
  • சேலம்,
  • கோவை,
  • மதுரை,
  • நாகர்கோவிலில் யாரிடமும் இக்கருத்து வெளிப்படவில்லை.
  1. ஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் போனில் பேசும் வசதி,
  2. செல்போன் கட்டணங்கள் குறைப்பு,
  3. பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தமிழக வருகை ஆகிய காரணங்களால் தயாநிதி மாறனின் செயல்பாட்டை சிறந்ததென குறிப்பிட்டதாக 73 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
  4. இளமைத் துடிப்புடன் அவர் செயலாற்றுவது தங்களைக் கவர்ந்ததாக 24 சதவீதம் பேர் குறிப்பிட்டனர்.

இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு சரியான வழி காட்டுகிறார் என்று சிதம்பரம் பெயரை வழி மொழிந்தவர்களில் 52 சதவீதம் பேர் கூறினர். நிதித் துறையை அரசியல்வாதி போல் அல்லாமல் நிபுணர்போல அவர் கையாள்வதாக 11 சதவீதம் மக்கள் கருத்து கூறினர்.

அமைச்சர் பாலு பெயரை குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானோர் சேது சமுத்திர திட்டத்தில் அவர் காட்டும் ஈடுபாட்டை காரணமாக கூறினர். சென்னை பகுதியில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவதில் அவரது ஆர்வத்தை சுட்டிக்காட்டினர்.

அமைச்சர் அன்புமணி சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் தங்களை கவர்ந்ததாக தெரிவித்தனர்.


கருணாநிதி பதவி விலக வேண்டும் } விஜயகாந்த்சென்னை, மே 10: மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதலில் மூவர் உயிரிழந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மதுரையில் புதன்கிழமை காலை “தினகரன்’ அலுவலகமும் சன் டி.வி. அலுவலகமும் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் வெளியே வர முடியாமல் மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.அவர்கள் தங்களைக் காப்பாற்ற சொல்லி கூக்குரலிட்டும் யாரும் முன்வரவில்லை. காவல்துறையினர் கைகட்டிக் கொண்டு இருந்தனர். அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களால் மதுரை மாநகரமே வெறிச்சோடி கிடக்கிறது.மதுரை மாநகரில் இவ்வளவு அத்துமீறிய செயல்கள் நடைபெற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அங்கேயே இருந்தும் யாரால் கைகள் கட்டப்பட்டு இருந்தன என்று மக்கள் அறிய விரும்புகிறார்கள்.மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புத் தர வேண்டியது ஒரு அரசின் கடமை ஆகும். தீ பரவாமல் தடுத்திருக்க வேண்டியது தீயணைப்புத்துறையின் கடமையாகும். ஆனால் எல்லாத் தரப்பினரையும் செயலிழக்க வைத்தது எது?

ஏற்கெனவே, மதுரையில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் படுகொலைக்குப் பிறகு மக்கள் நடக்கவே பயப்படுகிறார்கள். இன்றைய வன்முறை வெறியாட்டத்திற்குப் பிறகு மதுரையில் மக்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதோ, அதேபோன்று இந்த படுகொலையிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

தனது குடும்பப் பிரச்சினை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கையைப் போக்க, முதல்வர் கருணாநிதி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: காட்டுமிராண்டித் தனமான இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைத்துறையினருக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன்: மதுரையில் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களின் ஜனநாயக விரோதமான வன்முறை நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையாளர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மு.க. அழகிரி உள்ளிட்டோர் மீது புகார்மதுரை, மே 10: மதுரை தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசி தீவைத்ததில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக முதல்வரின் மகன் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.அழகிரிக்கு ஏற்கெனவே ஒரு வழக்கில் வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்யவேண்டும் என்றும் தினகரன் நாளிதழ் நிர்வாகம் கோரியுள்ளது.முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி 1980 -ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மதுரையில் குடியேறினார். முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனிக்கும் பணியில் ஈடுபட்டார்.இதையடுத்து கட்சியின் தென்மாவட்ட நிர்வாகத்தின் அதிகார மையமாகவும் அவர் விளங்கினார். இந் நிலையில் மூத்த நிர்வாகிகள் சிலருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து மீண்டும் 1984-ல் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றார்.பின்னர் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் மதுரையில் குடியேறிய அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களைத் தொடங்கினார்.இந் நிலையில் தினகரன் நாளிதழில் முதல்வரின் அரசியல் வாரிசு யார்? என வெளியான கருத்துக்கணிப்பில் அழகிரிக்கு 2 சதவிகிதம் மட்டுமே ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இச் செய்தி அவரது ஆதரவாளர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாளிதழைத் தீ வைத்தும், அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக அந் நிறுவனத்தினரே பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.

பத்திரிகை நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலர் மீது ஒத்தக்கடை போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தமிழகத்தில் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் மூன்று பேர் பலி

தமிழகத்திலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் மீது இன்று நடத்தப்பட்டத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து வெளியாகும் தினகரன் நாளிதழின் இன்றைய(புதன்கிழமை) பதிப்பில், தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்த கருத்துக்கணிப்புபின் முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் மதுரையில் 67 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினையும், 6 சதவீதம் பேர் மு.க.அழகிரியையும் குறிப்பிட்டிருந்தனர். இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு மதுரையில் தனது செல்வாக்கை குறைத்துவிட்டதாக அழகிரி அவர்கள் கருதியதாகவும், காலையில் பத்திரிகை வெளியானது முதலே தமது அலுவலகத்திற்கு மிரட்டல்கள் வந்ததாகவும் தினகரன் பத்திரிகையின் மதுரை பதிப்பின் ஆசிரியர் முத்துப்பாண்டியன் தெரிவித்தார்.

ஆர்பாட்டத்தில் ஈடுபடும் மதுரை மேயர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மதுரை மேயர்

இதையடுத்து மதுரை மேயர் தேன்மொழி உட்பட அழகிரி அவர்களின் ஆதரவாளர்கள் தமது அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி நடத்தியத் தாக்குதலில் மூன்று ஊழியர்கள் பலியானதாகவும் அவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரில் இருவர் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், ஒருவர் பாதுகாப்பு ஊழியர் எனவும் அவர் கூறினார்.

ஆனால், தாங்கள் எவ்விதமான தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பத்திரிகைகளை மட்டுமே எரித்ததாக தேன்மொழி கூறுகிறார். வன்முறைகள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது எனவும் அவர் கூறுகிறார். இன்றைய சம்பவங்களில் அழகிரி அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


பத்திரிகைத துறை மீதான தாக்குதல் என்கிறார் தினகரனின் தலைமை நிர்வாகி

எரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள்
எரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள்

சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக் கணிப்பை தினகரன் பத்திரிகைக்காக ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இது பற்றி கருத்து வெளியிட்ட தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ் அவர்கள், ஏ சீ நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பைத்தான் தினகரன் வெளியிட்டது எனக் கூறினார்.

இந்தத் தாக்குதல் தினகரன் பத்திரிகையின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் என்பதனை விட பத்திரிகைத் துறை மீது நடத்தப்பட்டத் தாக்குதலாகத்தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார். மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் எனவும் ரமேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பாக தங்களிடம் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன எனவும் அவர் கூறினார். இந்தியாவில் பல பத்திரிகைகள் கருத்துக் கணிப்பை நடத்தி கருத்துக்களை வெளியிடுவது வழக்கம்தான் என்பதால் இவ்வாறான ஒரு வன்முறை நிகழும் எனத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.

 


தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் கூறுகிறார்

இன்று நடைபெற்ற வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று
இன்றைய வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று

இன்றைய வன்செயல்கள் கருத்து வெளியிட்ட தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி, இன்று காலையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க நடைபெற்ற மூன்று முயற்சிகளின் போது போலீசார் அவர்களை விரட்டியடித்தனர் எனவும் ஆனால் நான்காவது முறையாக தாக்குதலை நடத்தவந்த கூட்டம் அந்த அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் தெரிவித்தார்.

போலீசார் மீது தவறு இருப்பது தெரியவந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வழக்கு விசாரணையில் இருப்பதால் இந்த வன்செயல்களில் யார் ஈடுபட்டிருந்தார்கள் என இப்போது கூறமுடியாது எனவும் முகர்ஜி கூறினார். நான்காவதாக நடைபெற்ற தாக்குதலில் மதுரை மேயர் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான முக்கிய வழக்கில் மூன்று பேர் பிடிபட்டுள்ளதாகவும், வன்முறை தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 25 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதாகியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தெரிவித்தார்.

தற்போது மதுரையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், வழக்கு விசாரணை சுதந்திரமாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


 

தனக்கு யார் வாரிசு என்கிற பேச்சுகே இடமில்லை என்கிறார் கருணாநிதி

தமிழக முதல்வர் கருணாநிதி
தமிழக முதல்வர் கருணாநிதி

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி கண்டனம் வெளியிட்டுள்ளார். இத்தகைய தாக்குதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். பலியான ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

திமுக ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரு கட்சி என்றும், எனவே தனக்கு யார் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் தனது அறிக்கையில் ஒரு இடத்தில் கூட அழகிரியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றத் தவறிவிட்ட திமுக அரசை, மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெ ஜெயலலிதா கோரியுள்ளார். மதுரை போலீசார், முதல்வர் கருணாநிதிக்கு கட்டுப்படாமல் அவரது மகன் மு க அழகிரிக்கே கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

 


 

தினகரன் மீதான தாக்குதலை சி பி ஐ விசாரிக்கும்; கருணாநிதி

தினகரன் நாளிதழ் தாக்குதல் குறித்து சி பி ஐ என்ற மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை தமிழக அரசு கோரும் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்தார்.

கருணாநிதியின் அரசியல் வாரிசு .யார் என்பது பற்றிய கருத்துக் கணிப்பு முடிவுகள் தினகரன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டதை அடுத்து மதுரையில் புதன்கிழமை பிரச்சினை உருவானது. வெறும் 2 சதவீத மக்களே கருணாநிதியின் மகனான அழகிரிக்கு ஆதரவு அளித்ததாக இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டது.

இதனால் கொதிப்படைந்த சிலர், மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தை தாக்கினர். இதில் அங்கு பணிபுரிந்து வந்த 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தப் பிரச்சனையில் தனது குடும்பம் சம்மந்தப்பட்டுள்ளதால், இதை தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு பதிலாக மத்திய அரசின் சி பி ஐ விசாரணை நடத்தும் என்று குறிப்பிட்டார்.

அதே நேரம், தனது யோசனையையும் மீறி தேவையில்லாத கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு தினகரன் நாளிதழ்தான் குழப்பத்துக்கு வழிவகுத்ததாக முதல்வர் தெரிவித்தார்.

தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக கோரியுள்ள நிலையில், அக் கட்சியைச் சேர்ந்த ஜெயகுமார், இது குறித்து பேசுகையில் குடும்பமும், உள் துறையும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.


பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலல்ல – ஞானி

ஸ்டாலினும், அழகிரியும் சில சமயங்களில் இணைந்தும் பல சமயங்கலில் எதிர்எதிராகவும் செயல்பட்டு வந்துள்ளனர்
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஸ்டாலினும், அழகிரியும்

தினகரன் பத்திரிக்கையின் மீதான தாக்குதல் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் அல்ல குடும்பத்துக்குள் நடக்கும் ஆட்சி அதிகாரப் போட்டியின் விளைவு என்று அரசியல் விமர்சகர் ஞானி தெரிவித்தார்.

இதை கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று காட்டுவது, திமுகவின் அதிகார மையங்கள், தங்களின் அதிகாரப் போட்டிக்காக எத்தகைய கருவியையும் கைகொள்ளவார்கள் என்பதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று முதல்வர் மு கருணாநிதி கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்று குறிப்பிட்ட ஞானி, மாவட்ட அளவில் கூட திமுகவினர் தங்களின் வாரிசுகளை பதவிகளுக்கு கொண்டு வருவதாகக் கூறினார்.

மு க ஸ்டாலின் படிப்படியாக கொண்டுவரப்பட்டார் என்றால் தயாநிதி மாறன் எவ்வித அரசியல் கள அனுபவமும் இல்லாமல் நேரடியாக அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு மத்திய அமைச்சராக்கப்பட்டார் என்றும் ஞானி குறிப்பிட்டார்.

திமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை

 

பத்திரிக்கையாளர் ஞானி

இந்தப் பிரச்சனையில் சி பி ஐ விசாரணை என்பது அபத்தமானது என்று கருத்து வெளியிட்ட ஞானி, ஒரு குற்றத்தை யார் செய்தார்கள் என்பது குறித்து புலனாய்வு செய்ய முடியாத நிலையில் இருக்கும் பட்சத்திலோ அல்லது மாநில காவல் துறை நம்பகத் தன்மையை குறைந்து போய்விட்ட நிலையிலோதான் சி பி ஐ விசாரணை கோரப்படும் என்று அவர் கூறினார்.


தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்?: கைதானவர் வாக்குமூலம் மேலூர், மே 11: மதுரை தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணத்தை அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் புதன்கிழமை தாக்கப்பட்ட சம்பவத்தில் கைதான மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த பாட்ஷா (41) போலீஸôரிடம் அளித்துள்ள வாக்குமூலம் விவரம்:”நான் கீரைத்துறையில் வசித்து வருகிறேன். அட்டாக் பாண்டியிடம் மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் டிரைவராகப் பணிபுரிகிறேன்.அண்ணன் அழகிரியிடம் அட்டாக் பாண்டி மிக நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். 9.5.2007-ல் தினகரன் நாளிதழில் மக்கள் மனசு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவும், எங்கள் தலைவருக்கு ஆதரவே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது மிகுந்த வேதனை அளித்தது.

அதனால் அட்டாக் பாண்டியும் நீண்ட மனவேதனை அடைந்தார். தினகரன் பத்திரிகை அலுவலகத்தை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகத்தில் அங்கு சுமோ காரில் சென்றோம். எங்கள் பின்னால் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

அங்கு பெட்ரோல் குண்டுகளை வீசி, அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தோம். வாகனங்களைத் தீயிட்டோம். பின்னர் கூட்டம் திரண்டதால் தப்பி ஓடிவந்து ரிங் ரோடு அருகே மறைந்து இருந்தோம்.

அதற்குப் பிறகுதான் 3 ஊழியர்கள் இறந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு என்ன நடக்கிறது என அறிய ரிங் ரோடு வழியாக காரில் வந்தபோது போலீஸôர் எங்களைக் கைது செய்து காரையும் கைப்பற்றினர்’ என்று போலீஸôரிடம் கூறியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

 


மு.க.அழகிரி பேட்டி:கருத்து கணிப்பில் என் பெயரை சேர்த்திருக்கவே கூடாது. கருத்து கணிப்பில் அமைச்சர்களைப் பட்டியலிட்டனர்; அவர்களின் செல்வாக்கை சொன்னார் கள். அது ஒருவகை ஒப் பீடு. ஆனால், இப்போது தம்பி ஸ்டாலின் அமைச்சராக இருக்கிறார்; நான் அமைச்சராகவா இருக் கிறேன்? இல்லையே!

நான் அவர் இடத்துக்கு வரவேண்டும் என என்றைக் காவது நினைத்திருக் கிறேனா? அதுவும் இல்லை. பதவிக்கு வர ஆசைப்படுபவனல்ல நான். அப்படி ஒதுங்கியிருக்கும் என்னை, ஏன் வீணாக இழுத்திருக்கின்றனர் என்பது தான் என் கேள்வி, ஆதங்கம் எல்லாம்…

 


தினகரன் அலுவலகம் மீது தாக்குதல் செய்தி விவகாரம்
‘தமிழ் முரசு’ மீது உரிமை மீறல்

சென்னை, மே 15: தமிழ் முரசு நாளிதழ் மீது உரிமை மீறல் பிரச்னையை, காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று கொண்டு வந்தனர். இதை உரிமைக் குழுவுக்கு பேரவைத் தலைவர் அனுப்பி வைத்தார்.சட்டப் பேரவையில் தமிழ் முரசு நாளிதழ் மீது, உரிமை மீறல் பிரச்னையை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஞானசேகரன், ஜெயக்குமார், இஎஸ்எஸ்.ராமன், கோவை தங்கம் ஆகியோர் எழுப்பினர்.

இதில், ஞானசேகரன் பேசியதாவது:

பத்திரிகைகளுக்கு நாங்கள் மதிப்பும், மரியாதையும் கொடுக்கிறோம். பேரவையில் சொல்லப்பட்ட கருத்தை அடிபிறழாமல் அப்படியே பத்திரிகையில் போட வேண்டும். சொல்லப்பட்ட கருத்தை திரித்து வெளியிடக் கூடாது.

கடந்த 9ம் தேதி மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த வன்முறையின் போது, தீ வைக்கப்பட்டதில் புகையில் சிக்கி 3 பேர் இறந்தார்கள்.

இது பற்றி அனைத்துக் கட்சியினரும், பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து 10ம் தேதி பேசினர்.
அப்போது முதல்வர் பதிலளிக்கையில்

“இந்த சம்பவத்தில், என் குடும்பத்தையும் சம்பந்தப்படுத்தி இருப்பதால், மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும்”

என்று அறிவித்தார்.

ஆனால், அன்றைய தமிழ் முரசு பத்திரிகையில்

“அழகிரி நடத்திய படுகொலைகள், சிபிஐ விசாரிக்கும், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு”

என்று செய்தி வந்துள்ளது.

அதே செய்தியின் லீடில்

“மதுரை தினகரன் அலுவலகத்தில் அழகிரி ஏவி விட்ட ரவுடி கும்பல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று தெரிவித்தார்”

என்று செய்தி வந்துள்ளது.

இது குறித்து முதல்வர் சொன்ன பதில் மட்டுமே வந்திருக்க வேண்டும். அது திரித்து சொல்லப்பட்டுள்ளது. இதற்கு நீதி வேண்டும். எங்கள் உரிமையையும் பேரவை உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்ற வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஞானசேகரன் பேசினார்.

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், Ôமேலெழுந்த வாரியாக பார்க்கையில் இந்த பிரச்னையில் உரிமை மீறல் இருப்பது தெரிகிறது. எனவே, இதனை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன்Õ என்றார்.

 


அமைச்சர் பொன்முடி பேசியதாவது:என் வீட்டிற்கு இன்று (நேற்று) மதியம் செல்வம் வந்தார். அவர் என்னிடம் “தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் விபரீதம் உண்டாகும். உங்கள் நண்பர் ஸ்டாலினுக்காக கட்சியை விட்டு விடாதீர்கள். தயாநிதி சாதாரணமான ஆள் இல்லை. எல்லா மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க அவர் காரணமாக இருந்தார். அதை யாரும் மறந்து விடக் கூடாது. அவர் மீது தவறான முடிவு எடுத்தால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும். தயாநிதி என்ன தவறு செய்தார். கட்சிக் கட்டுப்பாட்டை அவர் எங்கே மீறினார்.

  • கருத்துக் கணிப்பு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கலாம். ஏன் கலவரத்தை நடத்த வேண்டும்.
  • தி.மு.க.,வில் அழகிரி என்ன பொறுப்பில் இருக்கிறார். கட்சியில் அவர் வட்ட செயலரா? அல்லது மாவட்டச் செயலரா?
  • அவருக்கு எந்த பொறுப்பும் இல்லாத போது அவருக்கு ஏன் கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது’

என்று கேட்டார்.இதுமாதிரியான எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் தி.மு.க., பயப்படாது. தயாநிதியை கட்சியிலிருந்து நீக்குவோம்,” இவ்வாறு பொன்முடி பேசினார்.

 


மதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

மதுரை, ஆக. 7: தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 ஊழியர்கள் இறந்தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக “அட்டாக்’ பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர்.

இவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண்டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.

 


முதல்வர் விருந்து: அதிமுக, மதிமுக பங்கேற்கவில்லைசென்னை, மே 10: சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி புதன்கிழமை இரவு அளித்த விருந்தில், அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.ஆண்டுதோறும் பட்ஜெட் விவாதம் முடிவடையும் போது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் விருந்து அளிப்பது வழக்கம்.இதன் அடிப்படையில், புதன்கிழமை மாலை உறுப்பினர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.இதில் அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

  • காங்கிரஸ்,
  • பாமக,
  • விடுதலைச் சிறுத்தைகள்,
  • இந்திய கம்யூனிஸ்ட்,
  • மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அனைத்துத்துறை செயலர்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.

விருந்தில்

  • சிக்கன் பிரியாணி,
  • மீன் வறுவல் மற்றும்
  • தக்காளி ரசம்,
  • மோர் குழும்பு,
  • பாயசம்,
  • குல்பி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.

Posted in Aavudaiappan, Aavudaiyappan, Aavudayappan, AC Nielsen, ADMK, AIADMK, Alagiri, Alakiri, Anbumani, Approver, Arrest, Attack, Attack Pandi, Azagiri, Azhagiri, Azhakiri, Baalu, Basha, Batcha, Biotech, Bombs, Cabinet, Celebrations, Chargesheet, Chidambaram, Chidhambaram, Cigar, Cigarette, Dayanidhi, Dayanidhy, dead, destroy, Dharmapuri, Dharmapury, Dhinakaran, Dinagaran, Dinakaran, Dinakaran.com, DMDK, DMK, dynasty, employee, employees, Feast, Finance, FIR, Health, Healthcare, InfoTech, IT, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kiruttinan, Law, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maaran, Madurai, Maran, Mayor, Minister, MK Azhagiri, MP, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Murder, Nelson, network, Nielsen, Nielson, Opinion, Order, P Chidambaram, Pa Chidambaram, Paandi, Pandi, Police, Poll, Ramadas, Ramadoss, Ransack, Sethu, Smoke, smoking, Statistics, Sun, Sun TV, Survey, Telecom, Television, Tha Krishnan, Thaa Krishnan, Thayanidhi, Thayanidhy, Thenmoli, Thenmozhi, Thenmozi, Thinagaran, Thinakaran, Thinakaran.com, TR Balu, Transport, TV, Velu, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth, Worker | 12 Comments »

‘There are no plans in the budget to solve the woes of the Farmers’ – Gurumurthy

Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007

விவசாயிகளின் நெருக்கடியைத் தீர்க்க பட்ஜெட்டில் திட்டம் இல்லை: குருமூர்த்தி கோவை, மார்ச் 8: விலைவாசி உயர்வுக்கும் வேளாண் துறை சந்தித்து வரும் நெருக்கடிக்களுக்கும் தீர்வு காணும் திட்டம் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று கட்டுரையாளர் எஸ். குருமூர்த்தி கூறினார்.

இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் கோவையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய பட்ஜெட் குறித்த கூட்டத்தில் அவர் பேசியது:

இந்த பட்ஜெட்டில் தெளிவான அரசியல் பார்வை இல்லை. வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்துள்ளதுபோல நிதியமைச்சர் கூறியுள்ளார். வேளாண் விரிவாக்கத் திட்டங்களுக்குப் புத்துயிர் அளிப்பது போன்ற 7 அம்சங்கள் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இடம் பெற்றுள்ளன.

கடன் சுமையைத் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சினை, வேளாண் துறையில் குறைந்து கொண்டே போகும் மூலதன உருவாக்க விகிதம், வேளாண் துறையில் அரசின் முதலீடு குறைந்து கொண்டே செல்லும் போக்கு, உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை குறித்து பட்ஜெட்டில் முழுமையாக விளக்கவே இல்லை.

நாட்டின் பொருளாதாரத்துக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் பார்க்காமல் வெறும் ஆண்டுச் சடங்காக பட்ஜெட்டை மாற்றிவிட்டார்.

நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. விலைவாசி உயர்வுக்கு நிதியமைச்சர் கூறும் காரணம் ஏற்கக் கூடியதாக இல்லை.

கிராமப்புற சமூக பாதுகாப்புத் திட்டமும் மழைநீர் சேகரிப்புத் திட்டமும் வரவேற்கத்தக்கவை. அதிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டில் தெளிவான திட்டம் எதுவும் இல்லை. குழப்பமே அதிகம் காணப்படுகிறது.

நாட்டில் ரியல் எஸ்டேட் தொழிலில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் 10 சதவீதம் உயர்வு காணப்படுகிறது என்றார் குருமூர்த்தி.

உலகமயமாதல் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல: பத்திரிகையாளர் குருமூர்த்தி பேச்சு

சென்னை, மார்ச் 9: உலகமயமாதல் என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. பன்முகத் தன்மை கொண்டது என்று பத்திரிகையாளரும், ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி குறிப்பிட்டார்.

துரைப்பாக்கம் எம்.என்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரியில் “உலகமயமாதலும் எதிர்கொள்ள வேண்டிய உத்திகளும்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் குருமூர்த்தி ஆற்றிய சிறப்புரை:

உலகமயமாதல் பிரச்சினைக்கு உளவியல், பண்பாடு, அரசியல் எனப் பல பரிமாணங்கள் உண்டு. இப்பிரச்சினையை நிபுணர்களோ, வணிகர்களோ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

நம் நாட்டில் ஏற்பட்ட சில பொருளாதார மாற்றங்களுக்கு உலகமயமாதல்தான் காரணம் என்றும் சித்திரிக்கப்படுகிறது. அது சரியல்ல. உண்மையில் தொழில் நிறுவனங்களின் மீது அரசு கொடுத்த அழுத்தம் தளர்த்தப்பட்டதே காரணம்.

மேலை நாடுகளில் வலிமையான அரசு உண்டு. வலிமையற்ற சமுதாயம் உள்ளது. இந்தியாவில் வலிமையற்ற அரசு இருக்கிறது. ஆனால், நம் சமுதாயம் வலிமையானது.

இந்தியாவில் பண்பாட்டின் அடிப்படையிலான சமுதாயமே உலகமயமாதலை எதிர்கொண்டு வெற்றி பெறப் போகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் தங்கிய இந்தியர்கள் இந்தியாவைப் பழித்துக் கொண்டிருந்தனர்.

போக்ரனில் அணு ஆயுத சோதனையை இந்தியா நடத்தியது உலக நாடுகளை உலுக்கிவிட்டது. அதன் விளைவாக ஜப்பான் உள்பட அனைத்து நாடுகளும் இந்தியாவிலிருந்து பொருளாதார ரீதியில் மிரட்டின.

அதுவரை இந்தியாவைப் பழித்துக் கொண்டிருந்த வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து மொத்தம் 58 லட்சம் டாலர் அளவுக்கு முதலீடு வந்து குவிந்தது.

ஒவ்வொரு நாட்டுக்கும் மென் சக்தி என்றும் வன் சக்தி என்றும் உண்டு. நாட்டின் வளமை, கல்வியறிவு, அறிவியல் வளர்ச்சி ஆகியவை மென் சக்தி. ஆனால், ராணுவ வலிமை, படைபலம் என்பது வன் சக்தி.

மென் சக்தி அபரிதமாக உள்ள ஜப்பானுக்கு உலக அளவில் போதிய மரியாதை கிடைக்காததற்கு வன்சக்தி இல்லாததே காரணம் என்றார் குருமூர்த்தி.

கருத்தரங்கைத் தொடங்கி வைத்த இந்தோ ஜப்பான் தொழில் வர்த்தக சபைத் தலைவர்என்.கிருஷ்ணசாமி: உலகமயமாதல் என்பது நம் நாட்டுக்குப் புதிதல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாகவே “வசுதேவ குடும்பகம்’ என்ற கோட்பாடு இதைத்தான் வலியுறுத்துகிறது.

உலகமயமாதலை எதிர்கொள்ள கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். மாணவர்களுக்குக் கதவுகளைத் திறந்துவிட வேண்டும்.

உலகமயமாதலின் பாதிப்பைத் தவிர்க்க வேண்டுமானால், நாடுகள் நீங்கி, நாம் அனைவரும் உலகப் பிரஜைகளாக வேண்டும் என்றார்.

கருத்தரங்கை ஒட்டி, கல்லூரியின் மேலாண்மையியல் ஆய்வுத் துறை தயாரித்த மலரை கல்லூரிச் செயலர் ஹரிஷ் எல்.மேத்தா வெளியிட்டார். முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீபால் பங்கேற்றார்.

கல்லூரி முதல்வர் வி.கே.ஆர்.ஜெயசிங் தலைமை வகித்தார். மேலாண்மையியல் துறைத் தலைவர் கே.எஸ். மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். துணைப் பேராசிரியர் ரூபி செல்வின் நன்றி கூறினார்.

முரசொலி மாறனின் உறுதி

“”தோஹா மாநாட்டில் உலக வர்த்தக சபை முன் வைத்த தீர்மானங்களை இந்தியாவின் சார்பில் பங்கேற்ற அப்போதைய தொழில் அமைச்சர் முரசொலி மாறன் ஏற்கவில்லை.

அத்தீர்மானத்தை வடிவமைத்தவர் யார் என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்க உலக வர்த்தக சபையினர் திணறினர். வளரும் நாடுகளைப் பாதிக்கும் அத்தீர்மானத்தில் கையெழுத்திட முரசொலி மாறன் உறுதியாக மறுத்து விட்டார்.

இறுதியில் அமெரிக்கா மெüனமாக தீர்மானத்தைத் திரும்பப் பெற்றது. மாறனுடன் எனக்குப் பல சில முரண்பட்ட கொள்கைகள் இருந்தாலும் அவர் காட்டிய உறுதி மிகவும் பாராட்டத்தக்கது. அதுதான் இந்தியாவின் வலிமை” என்றார் குருமூர்த்தி.

வரி விலக்குகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும்: ப.சிதம்பரம் அறிவிப்பு

புதுடெல்லி, மார்ச்.8-

இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய கவுன்சில் சார்பில் மத்திய பட்ஜெட் பற்றிய கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பட்ஜெட் அம்சங்கள் பற்றி பேசினார். அப்போது வரி விலக்குகளை அரசு படிப்படியாக வாபஸ் பெறும் என்று அறிவித்தார்.

அவர் கூறியதாவது:-

வரி விலக்குகள் காரணமாக 2006-007-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 191 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஒவ்வொரு வகைக்கு வழங்கப்படும் வரி விலக்கும் ஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் கூறி இருக்கிறார். எனவே வரி விலக்குகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும். எந்தெந்த வகைக்கு வழங்கப்படும் வரி விலக்குகளை விலக்கிக் கொள்ளலாமோ அந்த வரி விலக்குகளை அரசு வாபஸ் பெறும்.

என்றாலும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, அறிவுசார் துறைகள், மூத்த குடிமக்கள் தொடர்பான வரிவிலக்குகள் நீடிக்கும்.

ஆபத்து மிகுந்த தொழில்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கும் பிரச்சினையில் எந்தெந்த தொழில்கள் மீதான முதலீடு என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது அரசாங்கம்தான்.

வேளாண்மை துறைக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. வேளாண்மை பொருட்களின் இறக்குமதியால் அவற்றின் சப்ளை அதிகரித்து விலை குறையும். என்றாலும் வேளாண்மை பொருட்களின் உற்பத்தியை பெருக்குவதுதான் இதற்கு நீண்டகால தீர்வு ஆகும். எனவே நெல், கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணை ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐ.டி.ஐ. நிறுவனங்களை நவீனப்படுத்துவதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதற்காக ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஐ.டி.ஐ. நிறுவனங்களை நவீனமாக்கும் முயற்சியில் அரசுடன் தொழில் துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

உற்பத்தி வரி மற்றும் சேவை வரியை இணையதளம் மூலம் செலுத்தும் முறையை தொடங்கி வைத்து ப.சிதம்பரம் பேசுகையில் கூறியதாவது:-

பொருளாதார வளர்ச்சி 8.5 முதல் 9 சதவீதம் என்ற அளவில் உள்ளது. உற்பத்தி வளர்ச்சியும் இரு இலக்கமாக உள்ளது. ஆனால் அந்த அளவுக்கு உற்பத்தி வரி வசூல் வளர்ச்சி விகிதம் அமையாதது ஆச்சரியமாக உள்ளது. கம்பெனிகளின் வருமான வரி, சேவை வரி வசூல் அதிகரித்த அளவுக்கு உற்பத்தி வரி வசூல் உயரவில்லை. உற்பத்தி வரி ஏய்ப்பு நடைபெறுவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்த நிலை நீடித்தால் அது நீண்டகால போக்கில் கம்பெனிகளை பாதிப்பதாக அமையும். கம்பெனிகள் உற்பத்தி வரியை குறித்த காலத்தில் முறைப்படி செலுத்த வேண்டும். இது நல்ல தொழில் அணுகுமுறை ஆகும்.

இந்த நிதி ஆண்டில் உற்பத்தி வரி வசூல் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 266 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. உற்பத்தி வரி வசூலில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

“மத்திய விற்பனை வரி 3 ஆண்டுகளில் ரத்தாகும்’

புதுதில்லி, மார்ச் 10: மத்திய விற்பனை வரி (சிஎஸ்டி) விதிப்புமுறையை ரத்து செய்யும் நோக்கிலான மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய விற்பனை வரி 4 கட்டங்களாக மூன்று ஆண்டுகளுக்குள் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

இதையடுத்து “ஒருங்கிணைந்த பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மசோதாவை’, 2010- ஏப்ரல் 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வழியேற்படும்.

“1956 சிஎஸ்டி சட்டத்தை’ திருத்தும் நோக்கில் இந்த வரிவிதிப்பு சட்ட (திருத்த) மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிஎஸ்டி வரிவிதிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி மூன்றிலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்; அதற்கு அடுத்த ஆண்டு (2009) இரண்டிலிருந்து ஒரு சதவீதமாகவும், 2010 மார்ச் 31-ம் தேதி முழுவதுமாகவும் ரத்து செய்யப்படும். மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

சிஎஸ்டி வரிவிதிப்பு முறையை நீக்க வேண்டும் என்ற யோசனை 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பலமுறை கூடி ஆலோசித்து ஒருமித்த கருத்தை எட்டிய பிறகே இதை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பால், எண்ணெய், உரம் விலையை குறைக்க நடவடிக்கை: ப.சிதம்பரம்

புதுதில்லி, மார்ச் 10: நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக, பால், எண்ணெய்வித்துக்கள் மற்றும் உரம் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பணவீக்க விகிதம் 5-5.5 சதவீதமாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆனால், கடந்த பிப்ரவரி 24-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் முந்தைய 6.05 சதவீதத்திலிருந்து 6.10 சதவீதமாக அதிகரித்தது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய உறுப்பினர்களுடனான பட்ஜெட்டுக்குப் பிந்தைய ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் சிதம்பரம் கூறியது:

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தானிய மற்றும் பருப்பு வகைகள் மீது கவனம் செலுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. எண்ணெய்வித்துக்கள் மற்றும் உரத்தின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர்களின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படும்.

பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்றார் அவர்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் விதத்தில், வெண்ணெய் எடுக்கப்பட்ட பால் பவுடர் ஏற்றுமதிக்கு கடந்த மாதம் அரசு தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.

========================================================

விளைநிலம் காப்போம்

சிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றிய அறிவிப்புகளும், இதற்கு விளைநிலங்கள் ஒதுக்கப்படக்கூடாது என்ற எதிர்வினைகளுமாக பரபரப்படைந்திருக்கும் இவ்வேளையில், வேளாண் அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் ஒரு யோசனையை முன்வைத்துள்ளார்: “சிறப்பு வேளாண்மை மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும்’.

வளமான நிலங்களைப் பாதுகாக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் இது அவசியமான ஒன்று. பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களை நகர் விரிவாக்கம் மற்றும் தொழில் வளர்ச்சிக்காக இழந்துவிட்ட இன்றைய நிலையிலும்கூட, காப்பாற்றப்பட வேண்டிய விளைநிலங்கள் இன்னமும் இருக்கவே செய்கின்றன.

சிறப்பு வேளாண்மை மண்டலம் அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனை கொஞ்சம் காலதாமதமானது என்றாலும் மிக அவசியமானது. விவசாய நிலங்களைக் குறைந்த விலையில் வாங்கி, அவற்றை விவசாயப் பட்டியலிலிருந்து நீக்கி, மனைகளாக மாற்றுவதற்கு அங்கீகாரம் பெற்று, பல நூறு மடங்கு லாபம் சம்பாதிக்கும் நிலைமை உள்ளவரையிலும், விவசாய நிலங்களைக் காப்பாற்றுவது எளிதல்ல.

முதல்கட்டமாக, மாவட்ட வாரியாக தற்போது வேளாண்மை நிலம் எவை என்பதை அரசு அறிவிக்க வேண்டும். வேளாண்மை நிலங்கள் குறித்த விவரங்களை மாவட்டம், ஊர், கிராமம், சர்வே எண் விவரங்களுடன் இணைய தளத்தில் வெளியிட்டு இந்த நிலங்கள் குடியிருப்புகளாகவோ தொழிற்கூடங்களாகவோ மாறும் வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இத்தகைய வெளிப்படையான அறிவிப்பு இருந்தால், அரசு அறிவிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கூட விளைநிலத்தில் அமையாத நிலைமை உருவாகும். நகர் விரிவாக்கம் என்ற பெயரில் விளைநிலங்கள் மறையாமல் இருக்க உதவும்.

இந்தியாவில் வேளாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. 60 சதவீதம் பேர் வேளாண்மைத் தொழில்களை நம்பி வாழ்கின்றனர். இருந்தபோதிலும் வேளாண்மை பற்றிய தெளிவு அரசிடம் இல்லை. விவசாயிகளும் ஆர்வம் இழந்தவர்களாக இருக்கின்றனர்.

தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவதற்குத்தான் எந்த அரசும் ஆர்வம் காட்டுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடும் ஆர்வம், அக்கறை வேளாண்மைக்கு காட்டப்படுவதில்லை.

இன்றைய மிகப்பெரிய சோகம், இரண்டு தலைமுறைகளாக பாரம்பரிய விவசாயத்தை முற்றிலுமாக மறந்துவிட்ட இளம் தலைமுறை விழிபிதுங்கிக் கிடக்கிறது. இயற்கை வேளாண்மையில் மீண்டும் ஈடுபட மனத்தளவில் ஆசை இருந்தாலும், பாரம்பரிய விவசாயம் குறித்த அனுபவ அறிவோ, வழிவழித் தகவல்களோ இல்லாமல் இன்றைய இளம் விவசாயிகள் தயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சிறப்பு வேளாண்மை மண்டலங்கள் அமைக்கப்படும்போது அவற்றுக்கு அளிக்கப்படும் சலுகைகள் பாரம்பரிய விவசாயத்தை ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும்.

வேளாண்மை நிலங்கள் வேறு பயன்பாட்டுக்குப் போகாமல் காப்பதுபோலவே, இந்த மண்ணுக்கே உரித்தான பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்து, அவற்றை மீண்டும் பரவலாக விளைவிக்கும் முயற்சிகள் தேவையாக இருக்கின்றன. தாவர விதைகள் மற்றும் செடிகொடிகளைக் கொண்டு எளிய முறையில் பூச்சிவிரட்டிகள் தயாரிக்கும் முறை, எரு தயாரிக்கும் பாரம்பரிய முறைகளை மீண்டும் நம் வயல்களில் புகுத்த வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. அந்தந்த நிலத்தில் விளையக்கூடிய பயிர்களைப் பயிரிடுவதும், அந்த நிலத்திற்கு அருகில் கிடைக்கும் பொருளையே உரமாக மாற்றும் பாரம்பரிய வழிமுறைகளை மேற்கொள்வதும் மட்டுமே இன்றைய வேளாண்மையின் செலவைக் குறைத்து, விவசாயிக்கு ஓரளவாகிலும் வருவாய் கிடைக்கச் செய்யும்.

வானிலை, மண்வளம், பயிர் வளர்ச்சி, நீர் பயன்பாடு என எல்லாவற்றிலும் தகவல்தொழில்நுட்பம் புகுந்துவிட்டது. பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கவும் தகவல்தொழில்நுட்பம் உதவும்.

=================================================
மேலும் 50 உழவர் சந்தைகள்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப். 4: புதிதாக 50 உழவர் சந்தைகள் ரூ. 12.5 கோடியில் இந்த நிதியாண்டில் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

வேளாண் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

உழவர் சந்தைக்கு என நிரந்தரப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் மூடப்பட்ட 28 உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அறுவடைக்குப் பின் விளை பொருளை நேர்த்தி செய்யும் தொழில்நுட்ப பயிற்சி ரூ. 50 லட்சம் செலவில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும்.

வட்டி குறைப்பு: விவசாயிகளுக்கான பொருளீட்டுக் கடன் தொகைக்கு வட்டி 8 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும். பொருளீட்டு கடன் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ. 2.75 கோடியில் 100 உலர் களங்கள் அமைக்கப்படும். சிறு, குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் தோட்டக்கலை மூலிகைப் பயிர்கள் மற்றும் மலைப் பயிர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்ய தனி சந்தைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி மண்டலங்களில் மேம்படுத்தப்பட்ட நாற்றங்கால்கள் அமைக்கப்படும்.

வேளாண் பல்கலையில் ரூ. 50 கோடியில் வசதிகள்: மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 50 கோடி நிதியைக் கொண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த பரிசோதனை ஆய்வுக் கூடம் உள்பட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

சென்னை நந்தனத்தில் வேளாண்மை பள்ளியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்ததை ஆங்கிலேயர்கள் கோவைக்கு மாற்றம் செய்தனர். இவ்வாறு மாற்றப்பட்டு 100 ஆண்டுகள் ஆனதையொட்டி வேளாண் பல்கலைக்கழகத்தில் நூற்றாண்டு கட்டடம் ரூ. 5 கோடியில் கட்டப்படும்.

தருமபுரியில் வேளாண் அறிவியல் மையம்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் 100 சதவீத நிதி உதவியுடன் தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி கிராமத்தில் வேளாண்மை அறிவியல் மையம் ரூ. 1 கோடி 10 லட்சம் செலவில் அமைக்கப்படும். இம் மையத்தில் விவசாயிகள், பண்ணை மகளிர், இளைஞர்களுக்கு வேளாண் தொழில்களில் பயிற்சி அளிக்கப்படும்.

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 560 ஹெக்டேர் பரப்பில் ரூ. 5.56 கோடியில் துல்லிய பண்ணை திட்டம் செயல்படுத்தப்படும்.

தேசிய தோட்டக்கலை திட்டத்தின் மூலமாகவும் நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலமாகவும் 390 ஹெக்டரில் ரூ. 4 கோடியில் துல்லிய பண்ணைத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

ஏற்றுமதிக்கு உகந்த வாழையில் 150 ஹெக்டேர் பரப்பில் ரூ. 2 கோடியில் துல்லியப் பண்ணை அமைக்க தேசிய தோட்டக் கலை வாரியத்தின் மூலம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும்.
=================================================
வேளாண் துறை இரண்டு அடுக்காக மாற்றப்பட்டு சீரமைக்கப்படும்: அமைச்சர்

சென்னை, ஏப். 4: வேளாண் துறையில் மூன்று அடுக்கு முறை மாற்றப்பட்டு இரண்டு அடுக்கு முறை செயல்படுத்தப்படும். அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

வேளாண்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு விரைவில் சென்றடையவும் ஒரே இடத்தில் கிடைத்திடவும் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனைத்துறை, விதைச்சான்று துறை ஆகிய துறைகளின் விரிவாக்கப் பிரிவுகளை ஒருங்கிணைத்து விவசாயிகள் ஒன்றிய அளவில் அனைத்து தகவல்களையும் பெற ஏற்பாடு செய்யப்படும்.

அதன் பொருட்டு தற்போது தாலுகா அளவில் பணியாற்றி வரும் பணியாளர்களின் பணி நிலை பாதிக்காதவாறு ஒன்றிய அளவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

நிர்வாகம் மாவட்ட அளவிலிருந்து ஒன்றிய அளவில் நேரடியாகச் செயல்படும்.

பயணப்படி உயர்வு: வேளாண் துறையில் பணிபுரியும் உதவி வேளாண் அலுவலர்களுக்கு 1996-ம் ஆண்டு முதல் நிரந்தர பயணப்படி மாதம் ஒன்றுக்கு ரூ. 140 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் எரிபொருள் செலவினங்கள் உயர்ந்துள்ள நிலையில் பயணப்படியை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.

அங்கக நடைமுறைகள் கடைப்பிடித்து உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களுக்கு சான்று அளிக்கும் வகையில் தற்சமயம் இயங்கி வரும் வேளாண்மை விதைச் சான்று துறையானது “விதை மற்றும் அங்கக சான்றளிப்பு துறை’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.

அங்கக வேளாண்மை சான்றிதழ் பயிற்சி பெறவும் அதற்கென ஒரு தனிப் பிரிவு தொடங்கவும் தில்லியில் உள்ள அபிடா நிறுவனத்தில் பயிற்சி பெற உயர் அலுவலர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

தரிசு நில மேம்பாடு: சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான பட்டா தரிசு நிலங்களை 50 ஏக்கருக்கு மேல் ஒரு தொகுப்பாக உள்ள இடங்களில் நிலத்தின் உரிமையாளர்கள் கூட்டாகச் சேர்ந்து கோரிக்கை வைத்தால் அரசு தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயத்துக்கு ஏற்ற நிலமாக சீர் செய்து கொடுக்கப்படும்.

அதோடு தேவையான அளவு நிலத்தடி நீரும், சாதகமான புவியியல் நிலையும் இருக்கும் இடங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி கொடுத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்ய மானிய உதவிகள் வழங்கப்படும். நிலத்தடி நீர் போதுமான அளவு இல்லாத தொகுப்பு நிலங்களில் மரப் பயிர்கள் நடவுசெய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

=================================================

வேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு ரூ. 25 ஆயிரம் கோடி திட்டம்: பிரதமர் அறிவிப்பு

புதுதில்லி, மே 30: வேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.

புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் நிறைவுரையாற்றிய போது பிரதமர் மன்மோகன் சிங் இத் திட்டத்தை அறிவித்தார்.

வேளாண்மைத் துறையின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடுத்த 4 ஆண்டுகளில் இந் நிதி வழங்கப்படும் என்றார்.

இது குறித்து அவர் மேலும் பேசியது:

வேளாண்மைத் துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு அடுத்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு இந் நிதியை வழங்கும். இது தொடர்பான திட்டத்தை அடுத்த இரு மாதங்களில் திட்டக் குழு மற்றும் மத்திய வேளாண்மை அமைச்சகம் இறுதி செய்யும்.

வேளாண்மைத் துறை அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னைகளைத் தீர்க்க மாநில அரசுகளை ஊக்குவிக்கும் வகையில் இத் திட்டம் இருக்கும்.

கோதுமை, நெல், தானியங்கள் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் உணவுப் பாதுகாப்பு இயக்கம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. உணவு தானியப் பொருள்களுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் நோக்கிலும் இத் திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.

கடுமையான முடிவுகள் எடுத்து அதை தீவிரமாக அமல்படுத்தினால் மட்டுமே வேளாண்மைத் துறையில் 4 சதவீத வளர்ச்சியை அடைய முடியும்.

தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்க நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

முன்னதாக, தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் கோதுமை உற்பத்தியை 80 லட்சம் டன்களாகவும், நெல் உற்பத்தியை 1 கோடி டன்களாகவும், தானிய உற்பத்தியை 20 லட்சம் டன்களாகவும் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உணவு பாதுகாப்பு இயக்கம்: மன்மோகன் சிங் யோசனை

பற்றாக்குறை காரணமாக அண்மையில் கடுமையாக விலை உயர்ந்த கோதுமை, நெல், தானியங்கள் மற்றும் உணவு எண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க உணவுப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கலாம் என பிரதமர் மன்மோகன் சிங் யோசனை தெரிவித்தார்.

புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த 53-வது தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் இது குறித்து அவர் மேலும் பேசியது:

வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எந்தவகையில் உதவி செய்யலாம் என்பதை வரையறுக்க திட்டக்குழு உரிய பரிந்துரைகள் அளிக்கலாம் என்றார்.

கூட்டத்தில் மத்திய வேளாண்மை அமைச்சர் சரத் பவார், திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்டோர் பேசினர்.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங், நிதி அமைச்சர் ப. சிதம்பரம், திட்டத்துறை இணை அமைச்சர் எம்.வி. ராஜசேகரன், திட்டக் குழு உறுப்பினர் செயலர் ராஜீவ் ரத்னா ஷா, மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

11-வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்கான வேளாண்மைக் கொள்கைகளை வகுப்பது தொடர்பாக இக் கூட்டம் நடைபெற்றது.

—————————————————————————————–
வேளாண்மைத் துறை மானியங்களை குறைக்க வேண்டும்: சரத்பவார் குழு பரிந்துரை

புதுதில்லி, மே 30: வேளாண்மைத் துறையை மேம்படுத்த மானியங்களைக் குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையிலான துணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பரிந்துரையில் மேலும் கூறியிருப்பது:

நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்

வேளாண்மைத் துறைக்கு மாநில அரசுகள் அளித்து வரும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். பாசனத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உணவுப் பதப்படுத்தல் துறையில் உள்ள தடைகளை நீக்க வேண்டும்.

வேளாண் மண்டலங்கள்

வேளாண்மைக் கடன் வசதியை மேம்படுத்தவும், கடன் வசூலை விரைவு படுத்தவும் சிறப்பு மையங்கள் கொண்ட மண்டலங்களை நாடு முழுவதும் அமைக்க வேண்டும். கடன் வசூலிப்பு மையங்களின் தலைவர்களாக சுயேச்சையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். குறிப்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்கலாம்.

இன்சூரன்ஸ் திட்டத்தில் புதிய அணுகுமுû

தற்போது நடைமுறையில் உள்ள பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் புதிய அணுகுமுறைகளை கொண்டு வர வேண்டும். அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பில்லாத பயிர்களை இத் திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.

4 சதவீத வளர்ச்சி

11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் பொருளாதார வளர்ச்சி வீதம் 9 சதவீதமாக இருக்கும் நிலையில், வேளாண்மைத் துறையின் வளர்ச்சி வீதம் 4 சதவீதமாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

மானியங்களை குறைக்க வேண்டும்

உலக வர்த்தக அமைப்பின் வேளாண்மைத் துறை சார்ந்த கொள்கையைப் பின்பற்றி, மானியங்களை குறைக்க வேண்டும். மானியமாக அளிக்கப்பட்டு வரும் நிதியை ஆராய்ச்சி, விரிவாக்கப் பணிகள், அடிப்படைக் கட்டமைப்பு வசதி மற்றும் வேளாண்மை இன்சூரன்ஸ் போன்ற திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.

உற்பத்தி குறைவுக்கு கவலை

கடந்த 10 ஆண்டுகளாக வேளாண்மைத் துறையில் உற்பத்தி குறைந்து கொண்டே வருவது கவலையளிக்கிறது. புதிய விளைநிலங்களை அதிகரிக்கவும் வாய்ப்பு இல்லாத நிலையில், உற்பத்தியும் குறைந்து வருவது நாட்டின் உணவு பாதுகாப்புக்கு ஆபத்தானது.

1980-களில் 3.1 சதவீத வளர்ச்சியில் இருந்த கோதுமை உற்பத்தி 1990-களில் 1.83 சதவீதமாகவும், 2004-05-ம் ஆண்டில் 0.11 சதவீதமாகவும் உள்ளது. அதே போல் அரிசி உற்பத்தியும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்று துணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

————————————————————————————————-

உழவுக்கு வஞ்சனை!
June 1, 2007 Dinamani Editorial

விவசாயத்திலிருந்து நாட்டின் மொத்த உற்பத்திக்கான பங்களிப்பு கடந்த சில ஆண்டுகளாகவே 2%-க்கும் குறைவாக இருப்பதால் இம் முறை அரசின் முழுக் கவனமும் அத்துறை மீது திரும்பியிருக்கிறது. ஏற்கெனவே ஒதுக்கியிருக்கும் நிதியுடன் கூடுதலாக ரூ. 25,000 கோடி ஒதுக்க மத்திய அரசு தயார், மாநிலங்கள் தங்களுடைய சூழல், தேவைகளுக்கேற்ப திட்டங்களைத் தீட்டி எங்களை அணுகினால் போதும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தில்லியில் கூடிய தேசிய வளர்ச்சிமன்றக் கூட்டத்தில் சமீபத்தில் கூறியிருக்கிறார்கள்.

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. விவசாயத்தின் “”உண்மையான பிரச்னைகளை”த் தீர்க்க யாருக்கும் மனது இல்லை. இப்போது விவசாயம் லாபகரமான தொழில் இல்லை. 15 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள்தான் அதிகம். ஜமீன்தாரி முறையை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட நில உச்சவரம்பு சட்டம் இப்போது விவசாய உற்பத்திக்கே உச்சுருக்காக இருக்கிறது. விவசாய நிலங்கள் பாகப்பிரிவினை காரணமாக, பல துண்டுகளாகச் சுருங்குவதால் திட்டமிட்ட வகையிலோ, கட்டுப்படியாகும் வகையிலோ சாகுபடிகளை மேற்கொள்ள முடிவதில்லை. பருப்பு வகைகள், சிறு தானியம், எண்ணெய் வித்துகள் சாகுபடி குறைந்ததற்கு இது முக்கிய காரணம்.

நேரடி நெல் விதைப்புக்கும், நாற்று நடுவதற்கும், அறுவடைக்கும் இப்போது இயந்திரங்கள் வந்துவிட்டன. அவற்றை வாடகைக்கு வாங்கித்தான் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். விவசாய வேலைக்கு இப்போது கூலி ஆள்கள் கிடைப்பதில்லை. அருகில் உள்ள தொழிற்பேட்டையில் மாதம் 1,500 ரூபாய் சம்பளத்துக்கு (ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூலி!) எவர்சில்வர் டப்பாவில் “டிபன்’ எடுத்துச் செல்லும் கலாசாரம் கிராமத் தொழிலாளர்களிடையே பரவி வருகிறது. (தஞ்சை டெல்டா போன்ற பகுதிகள் விதிவிலக்காக இருக்கலாம்.) “”விவசாயத்தை நம்பினால் பிழைக்க முடியாது, இது நிரந்தரமான தொழில் அல்ல” என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது.

கரும்பு பயிரிட்டால் காசு அள்ளலாம் என்பதெல்லாம் பொய்யாய், பழங்கதையாகி வருகிறது. “”சர்க்கரை ஆலையில் கரும்பை வெட்ட அனுமதி தரவில்லை, காய்ந்த கரும்பை விவசாயிகள் தீ வைத்துக் கொளுத்தினார்கள்” என்ற செய்திகள் ஏன் வருகின்றன?

விவசாய இன்சூரன்ஸ் திட்டம் என்பது, விவசாயத்தை மக்கள் அனைவரும் கைவிட்ட பிறகுதான் நல்ல நிலையில் அமலுக்கு வரும் என்று தோன்றுகிறது.

விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எல்லா இடுபொருள்களும் கடன் வசதியும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். விவசாய விளைபொருள்களைச் சேமித்துவைக்க கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றைக் கட்டித்தரும் திட்டம் இன்னமும் ஏட்டளவிலேயே இருக்கின்றன.

உழவர் சந்தை திட்டம் ஓரிரு இடங்களில் மட்டுமே துடிப்பாகச் செயல்படுகிறது. கால்நடை வளர்ப்பு, பால் பெருக்கம் போன்ற திட்டங்கள் மக்களுடைய சுய முயற்சியாலும், ஊக்கத்தாலும் மட்டுமே நடைபெறுகிறது. அரசு தரப்பில் முனைப்பு காணப்படுவதில்லை. தரிசு நிலங்களில்கூட காட்டாமணக்கு, கருவேலம் சாகுபடிதான் கண்ணில்படுகிறது.

விவசாயத்தை வளப்படுத்துவது எப்படி என்று விவசாயிகளைத் தவிர “”நிபுணர்கள்” கூடிப்பேசி முடிவெடுப்பதால் இன்னமும் அந்தத்துறை திணறிக் கொண்டிருக்கிறது.

எதை எடுத்தாலும் இறக்குமதி என்கிற முடிவு எடுப்பதும், வெளிநாட்டிலிருந்து எப்போது கப்பல் வரும், மக்களின் பசி தீரும் என்கிற நிலைமை ஏற்படுவதும் ஒரு நாட்டின் சுதந்திரத்துக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து. உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத எந்தவொரு நாடும் முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாகக் கருத முடியாது. விவசாயத்துக்காகச் செலவிடப்படும் மானியம், நாட்டின் பாதுகாப்புக்காகவும், பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்காகவும் செலவிடப்படும் அடிப்படைச் செலவு என்றுதான் கருத வேண்டும்.

விவசாயத்தை வஞ்சனை செய்து தொழில்வளத்தைப் பெருக்குவது தேசத்துக்கே செய்யும் வஞ்சனை!

Posted in Agriculture, Allocation, Analysis, Biz, BJP, Bonds, Budget, Business, Central Sales Tax, Chidambaram, Commerce, CST, Dharmapuri, Doha, Economy, Exports, Farmers, Farming, Finance, Funds, Garden, Globalization, GST, Gurumurthy, Instructor, Interest, Japan, Loans, Maran, Murasoli, Options, Plan, Planning, Professor, Rates, RSS, Sales Tax, SEZ, Small Biz, solutions, Subsidy, Teacher, University, Water | 1 Comment »

Congress performance in Punjab, Uttarakhand, Manipur Elections

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2007

பதில் வராத கேள்வி

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசிய சுருக்கமான பேச்சில், கட்சி தன்னைத் தானே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

ஆத்ம பரிசோதனை என்பது மகாத்மா காந்தி அடிக்கடி பயன்படுத்திய சொல். இதற்கு இப்போதைய அரசியல் உலகிலும் ஒருவகை மதிப்பு இருக்கவே செய்கிறது.

கட்சி தன்னை ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடும்போது, கட்சித் தலைமையும் கட்சியின் உயர் பொறுப்பில் உள்ளவர்களும் தங்கள் நடவடிக்கைகளை, தாங்கள் செய்து முடித்த காரியங்களை ஒருமுறை எண்ணிப் பார்க்க வேண்டும். அதைவிட முக்கியமாக, தனது செயல்களில் குறைபாடு இருப்பதாகத் தனது “ஆத்மாவின் குரல்’ சொல்லுமானால், அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், சத்தியத்தின் பாதையில் மீண்டும் உறுதியுடன் நடக்கவும் முன்வர வேண்டும் என்பதுதான் ஆத்ம பரிசோதனையின் நோக்கம்.

உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்குக் காரணம் விலைவாசி உயர்வு என்று முதல்முறையாக, வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார் சோனியா.

அப்படி ஒப்புக் கொண்டபோதிலும்கூட, அதற்கான காரணங்களை, காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றுள்ள தவறுகளை ஒப்புக் கொள்ளவோ, அதற்கு மாற்றுவழி காண்பது குறித்துப் பேசவோ அவர் விரும்பவில்லை. “இந்தியப் பொருளாதாரத்தை உயர்ந்த வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறது நமது அரசு’ என்று சோனியா சமாளிக்கும்போது ஆத்ம பரிசோதனை முழுமையடையாமல் போகிறது.

சோனியா இதைக் குறிப்பிட்ட அதே நாளில், “விலைஉயர்வுக்கு உணவுப்பொருள் தட்டுப்பாடு காரணமல்ல, மாறாக அவற்றை நிர்வகிப்பதில் ஏற்பட்ட குறைபாடு” என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்றத்தில் கூறியது தவறான தகவல் என்று பொருளாதார வல்லுநர் அர்ஜுன் சென்குப்தா (சுயேச்சை உறுப்பினர்) கடுமையாக விமர்சித்தார். பருப்பு தட்டுப்பாடு இருந்தபோதிலும் 40 ஆயிரம் டன் பருப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது ஏன்? என்று பாஜகவும் தன் பங்குக்கு விவாதத்தைக் காரசாரமாக்கியது.

விலைவாசி உயர்வு காங்கிரஸின் தோல்விக்கு ஒரு காரணம் என்றாலும், பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் கூட்டணி ஆட்சி நடத்தும் காங்கிரஸ், தன் கூட்டணிக் கட்சிகளின் விருப்பங்களுக்கெல்லாம் வளைந்து கொடுத்துப் போவதும் அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்துள்ளது என்பதை சோனியா புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி. ஒவ்வொரு மாநிலப் பிரச்சினையிலும் சரியான அணுகுமுறையை மேற்கொள்வது மிகமிக அவசியம் என்பதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

கேரளம் – தமிழ்நாடு இடையே முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையிலும், தமிழ்நாடு – கர்நாடகம் இடையே காவிரிப் பிரச்சினையிலும், ஆந்திரத்தில் தெலங்கானா விவகாரத்திலும், தற்போது உ.பி. அரசில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் முலாயம் சிங் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையில் உள்ள பலவீனங்கள் அம்பலமாகியுள்ளன.

சிமெண்ட் விலையைக் குறைக்காவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று ப. சிதம்பரம் கூறிய பிறகும் விலை இறங்கவே இல்லை. அப்படியானால் அந்த அரசுக்கு பொதுமக்களிடத்தில் எத்தகைய வரவேற்பு இருக்கும்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய சோனியா, “சமுதாயத்தில் பல்வேறு மக்களின் உணர்ச்சிகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் கட்சிக்கு இருக்கிறதா?’ எனக் கேட்டுள்ளார். அவரிடம், அதே கேள்வியைத்தான் நமக்கும் கேட்கத் தோன்றுகிறது!
===========================================

காங்கிரஸ் தனது உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும்!

நீரஜா செüத்ரி

காங்கிரஸ் கட்சி தனது உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையே பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

தில்லி மாநகரத் தேர்தல், குஜராத் உள்ளாட்சிமன்றத் தேர்தல் ஆகியவற்றிலும் காங்கிரஸýக்கு எளிதான வெற்றி கிட்டிவிடவில்லை. ஜார்க்கண்ட் மாநிலமும் பிரச்சினைக்குரிய களம்தான். உத்தரகண்டில் ஏற்பட்ட முடிவுகள் உத்தரப்பிரதேசத்திலும் எதிரொலிக்கும். மேல் சாதியினர் பாஜக பக்கமும் தாழ்த்தப்பட்டவர்கள் மாயாவதி பக்கமும் போகக்கூடிய அறிகுறிகள் தெரிகின்றன.

பஞ்சாபிலும் உத்தரகண்டிலும் பாஜகவுக்கு புத்துயிர் கிட்டியிருப்பதால் முஸ்லிம்கள் கலக்கம் அடைந்து, இதை எதிர்கொள்ளக்கூடிய உறுதியான ஒரே தலைவர் முலாயம்தான் என்று அவர் பக்கம் சாயக்கூடும்.

பாஜகவிடமிருந்தே காங்கிரஸ் கட்சி சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். “இந்தியா ஒளிர்கிறது’ என்று பேசி வீணாகிப்போன பாஜக பாதையிலேயே காங்கிரஸ் இப்போது போவது போலத் தெரிகிறது.

2004 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்த சாமான்ய மனிதனை (ஆம்-ஆத்மி) விட்டு கட்சி விலகிச் செல்கிறது. விலைவாசி உயர்ந்துவிட்டது என்று ஒப்புக்கொள்வது மட்டும் போதாது. பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு நிற்காமல் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் சோனியா முயற்சிக்க வேண்டும்.

அடுத்தபடியாக, முடிவுகளை எடுக்கும் முறையை காங்கிரஸ் மாற்றிக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியின் அல்லது அரசின் சிலர் மட்டும் கூடி முடிவுகளை எடுக்காமல், பலர்கூடி விவாதித்து முடிவுகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுடைய உணர்வுகளுக்கு எதிரான முடிவுகளைத் தவிர்க்க முடியும்.

இப்போது நடந்து முடிந்த தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அம்சம், “”மதம் சார்ந்த” உணர்ச்சிகரமான பிரச்சினைகளைப் பேசி எந்தக் கட்சியும் வாக்கு கோரவில்லை. ஹிந்துத்துவாவைப் பற்றிப் பேசுவதைக் கைவிட்டு விலைவாசி உயர்வை மட்டும் அதிகம் வலியுறுத்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது. அகாலிதளமும் சீக்கியமார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை அரசியல் மேடையில் விவாதிக்கவில்லை.

விதிவிலக்காக, காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் சோனியா காந்தியும் பாஜகவின் மதவாதத் தன்மையைப் பற்றி பொதுக்கூட்டங்களில் பேசினர். பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த ஹிந்துக்கள்தான் பஞ்சாப் நகர்ப்புறங்களில் பெரும்பான்மையினராக வசிக்கின்றனர். அவர்களிடம் போய் “”மதச்சார்பின்மை, சிறுபான்மையினருக்கு ஆபத்து” என்ற விஷயங்கள் எல்லாம் எடுபடுமா என்று யோசித்திருக்க வேண்டும்.

3 மாதங்களுக்கு முன்னால் பாஜகவின் தலைமையே கவலையோடு இருந்தது, “”பஞ்சாபில் நம்முடைய கட்சியை வெற்றிபெற வைக்க, பிரபலமான முகங்களே இல்லையே?” என்று. காங்கிரஸின் ஹிந்துத்துவ எதிர்ப்புப் பிரசாரமே பாஜகவுக்கு பஞ்சாபிலும் உத்தரகண்டிலும் அதிக வாக்குகளைப் பெற்றுத்தந்தது என்றால் மிகையில்லை. பஞ்சாபின் மால்வா பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை ஆதரவு அதிகம் கிடைத்தும், ஆட்சி போனது துரதிருஷ்டவசமானது. இந்த இடம் அகாலிகளின் கோட்டை என்றே கருதப்பட்டுவந்தது.

லூதியானாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய பொதுக்கூட்டத்துக்கு சில ஆயிரம் பேர்களே வந்தது, பிரசாரத்தின் விறுவிறுப்பையே குறைத்துவிட்டது.

அதேசமயம், அத்வானி, வாஜபேயி ஆகியோரின் செல்வாக்கை ஒரேயடியாக நிராகரித்துவிட முடியாது என்பதை அவர்களுடைய தேர்தல் பொதுக்கூட்டங்கள் சுட்டிக்காட்டின.

சோனியா காந்தி கட்சித் தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்ட புதிதில் தினமும் நாட்டு நடப்புகளை கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் விவாதித்தார். அதனால் அனைத்து தரப்பினரின் கருத்துகளும் தலைமைக்குக் கிடைத்து வந்தது. இந்த எண்ணிக்கை குறைந்ததால், வெகுஜனங்களைவிட்டு தலைமை தனிமைப்பட்டு போக ஆரம்பித்துவிட்டது. அப்படியொரு ஆலோசனை நடந்திருந்தால், உத்தரப்பிரதேசத்தில் முலாயம் ஆட்சி கலைப்பு நிச்சயம் என்ற பரபரப்பும், அதனால் காங்கிரஸýக்கு கெட்ட பெயரும் ஏற்பட்டிருக்காது.

காங்கிரஸ் காரியக்கமிட்டி என்பது மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பாக அது வலுப்படுத்தப்பட வேண்டும். வேறு எந்தப்பதவியும் கொடுத்து திருப்திப்படுத்த முடியாத பிரமுகர்களுக்கான ஓய்வில்லம் போல அதை நடத்தக்கூடாது. சமீபத்திய தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்தும் மிக முக்கிய பாடம் இதுதான்.

தமிழில்: சாரி.

Kalki Editorial (March 9, 2007 )

கட்டெறும்பு காங்கிரஸ்!

பஞ்சாப் தேர்தலில் அம்மாநில நிதியமைச்சராக இருந்த சுரிந்தர்
சிங்க்லா, பா.ஜ.க. வேட்பாளர் சித்துவிடம் தோற்றுப் போயிருக்கிறார். இத்தனைக்கும் சித்து மீது கொலை வழக்குத் தொடரப்பட்டு, அவர் அக்குற்றத்துக்காக தண்டனையும் விதிக்கப் பெற்றவர்!

பஞ்சாப் மக்களுக்கு காங்கிரஸிடமும் அதன் பொருளாதாரக் கொள்கையிடமும் சிறிதும் நம்பிக்கை இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.

பஞ்சாபிலும் சரி, உத்தரகாண்டிலும் சரி, காங்கிரஸ் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போயிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் தேசிய கட்சியாக, நாட்டின் நான்கு திசைகளிலும் வலுவாக இருந்த காங்கிரஸ், இன்றைக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய மாநிலங்களில்தான் ஆட்சியில் இருக்கிறது.

இதற்கான காரணங்களை ஆராய்ந்து சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், கட்டெறும்பாகத் தேய்ந்து போயிருக்கும் காங்கிரஸ், சில ஆண்டுகளுக்குள் காணாமலே போய்விடும்.

நேரு குடும்பத்தினரின் தலைமைக்காக மட்டுமே இனிமேல் வோட்டு
விழாது என்பது தெளிவாகிவிட்டது. கட்சியின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சோனியா காந்தி, இவ்வுண்மையை ஏற்று, கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவதுடன், அதன் கொள்கைகளையும்
மறுபரிசீலனைக்குட்படுத்தி, மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

பஞ்சாப் முதல்வராக விளங்கிய அமரிந்தர் சிங், ‘எடுத்தேன்
கவிழ்த்தேன்’ என்று ஆட்சி நடத்தியிருக்கிறார். பழிவாங்கும் நடவடிக்கை, அண்டை மாநிலத்துடனான நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுதல் என்று ஆட்சிக்கும் கட்சிக்கும் அவப்பெயர் தேடிக் கொண்டிருக்கிறார். உத்தரகாண்ட் முதல்வரோ, தமக்கு
வயதாகிவிட்டது; ஆட்சிப் பொறுப்பில் நீடிப்பது கஷ்டம் என்று
வெளிப்படையாகவே புலம்பியிருக்கிறார்!

காங்கிரஸ் தலைமை, உட்கட்சி ஜனநாயகத்தைக் கடைப்பிடித்து சட்டமன்றத் தலைவரைத் தேர்ந்தெடுத்திருந்தால், இதுபோன்ற குளறுபடிகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு. கட்சித்
தலைமையின் ஆசி மட்டும் இருந்து, தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பு இல்லையென்றால், ஒரு முதல்வர்
சிறப்பாகச் செயல்பட முடியாது. தனிநபர் ஆளுமைக்குத் தரப்படும் வெற்று முக்கியத்துவத்தைக் களைந்து, உட்கட்சி ஜனநாயகத்தை காங்கிரஸ் ஏற்றாக வேண்டும்.

மாநில அளவில் மட்டுமின்றி மத்திய ஆட்சி அளவில் எடுக்கப்படும் முடிவுகளும் கடைபிடிக்கப்படும் கொள்கைகளும்கூட காங்கிரஸின் வெற்றி வாய்ப்புகளைப் பாதித்துத் தோல்விக்கு வழிவகுத்துள்ளன. காங்கிரஸ் தரப்பில் இதை அவசரமாக மறுத்தாலும், நாடு தழுவிய
விலைவாசி உயர்வுதான் அதன் இமேஜை மிக அதிகமாகக் காயப்படுத்தியிருக்கிறது.

‘‘பண வீக்கம் மிக அதிகமாக இருப்பது கவலை தருகிறது. அதைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்’’ என்று மத்திய நிதியமைச்சரே பேசி என்ன பயன்? ‘ஒரு கண்ணுக்கு வெண்ணெய், மறு கண்ணுக்குச் சுண்ணாம்பு’ என்பதுபோல், மத்திய அரசு ஐ.டி. கார் உற்பத்தித் துறைகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள், வரி விலக்குத் தந்துவிட்டு, பிற
நிறுவனங்களுக்கு வரிச் சுமையை ஏற்றுகிறது. வரி கூடுவதால் வரி ஏய்ப்பும் கூடி, கறுப்புப் பணப் புழக்கத்துக்குக் காரணமாகிறது. ஐ.டி. துறையின் சம்பள விகிதங்களும் அதில் குவியும் லாபமும் ஏகப்பட்ட பணப் புழக்கத்துக்குக் காரணமாகின்றன. இதனால், ஒரு பிரிவினர் மட்டுமே வசதி கூடி ராஜபோகமாய் வாழ, பிறர் அன்றாடச் செலவுகளைச் சரிக்கட்டவே அவஸ்தைப்படுகின்றனர்.

இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் மேற்கொண்டுள்ள விவசாயத் தொழில் மீதும் அதைச் சார்ந்த பிற தொழில்கள் மீதும் கவனம் திருப்பி, ஆதரவு அளித்து, அவை பெருகி உணவுப் பற்றாக்குறையும்
வேலையில்லாத் திண்டாட்டமும் தீர வேண்டும். காங்கிரஸின் கொள்கையும் செயல்பாடும் இத்திசை நோக்கித்
திரும்பினாலேயழிய அக் கட்சிக்குக் கதிமோட்சம் இல்லை!
Congress TV – Kalki

வாசனும், இளங்கோவனும் இணைந்து விட்டதாகக் கிசுகிசுக்கிறது தமிழக காங்கிரஸ் வட்டாரம். வாசனுக்கு எதிராக அணி திரள முதலில் கிருஷ்ணசாமிக்கு ஓகே சொன்னார் இளங்கோவன். ஆனால், காலப்போக்கில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்ட கிருஷ்ணசாமி, இளங்கோவன் தரப்புப் பிரமுகர்களைத் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டாராம். அதுதான் இளங்கோவன் கோபத்துக்குக் காரணம். ஆனால் ப. சிதம்பரம் மிகவும் உறுதியாகத் தன்னை ஆதரிப்பதால், தன் பதவிக்கு ஆபத்து இருக்காது என்று நம்புகிறார் சாமி!

காங்கிரஸ் கட்சியும் தமக்காக ஒரு டி.வி. சேனல் துவங்க ஏற்பாடு செய்து விட்டதாம்! காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், வியாபாரப்
பிரமுகருமான வசந்தகுமார், தமது பெயரிலேயே துவங்கும் சேனல் காங்கிரஸார் ஆசையைத் தீர்த்து வைக்கப் போகிறது. இதற்காக, தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘இமயம்’ என்ற சேனலை
வாங்கிவிட்டார்களாம்!

தி.மு.க.வை காங்கிரஸிடமிருந்து பிரிப்பதற்கு விடுதலைப்புலிகள்
விவகாரம்தான் சரி என்ற அணுகுமுறையை ஜெயலலிதா
கையிலெடுத்திருக்கிறார். சமீபத்தில் புலிகளின் ஆயுதக் கப்பல்
பிடிபட்டது, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ‘புலிகள் சென்னையில் பங்கு மார்க்கெட் நிறுவனங்கள் வைத்திருக்கிறார்கள்’ என்று சொன்னது ஆகியவற்றை காங்கிரஸின் டெல்லிப் பிரமுகர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று ‘பிரிக்கும்’ வேலையில் ஈடுபட, அ.தி.மு.க.வின் ராஜ்ய சபா உறுப்பினர்கள்
முடுக்கிவிடப்பட்டிருக்கிறார்கள்.

தமிழக அரசியல்வாதிகள் தங்கள் கல்விச் ‘சேவை’யை நம்
மாநிலத்துக்கு வெளியேயும் விஸ்தரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தங்கபாலு ஜம்முவில் மருத்துவக் கல்லூரி ஒன்றைத் துவக்க
இருக்கிறாராம்!

சைதை துரைசாமி ஆண்டொன்றுக்கு நூறு மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

============================

Dinamani – March 13, 2007

காஷ்மீரில் துணிச்சலான முடிவை எடுக்குமா காங்கிரஸ்?

நீரஜா செüத்ரி

காஷ்மீர் அரசியலில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

ஆளும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸýக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான உறவில் புதிய உரசல்கள் ஏற்பட்டிருக்கின்றன; உறவை உடைக்கும் அளவுக்கு அந்த உரசல் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

எனவே, அது தொடர்பாகப் பேச வருமாறு முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவருமான முப்தி முகம்மது சய்யீதை தில்லிக்கு அழைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். தனக்கு உடல்நலம் சரியில்லாததால், தனது மகளும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தியை தில்லிக்கு அனுப்பினார் சய்யீத்.

காஷ்மீரின் பல பகுதிகளில் காவல் பணியில் இருக்கும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய தலைவர்களிடம் நேரில் வலியுறுத்துவதற்காக மெஹ்பூபா அனுப்பப்பட்டார். அதோடு, தமது கருத்துகள் அடங்கிய கடிதத்தையும் அனுப்பி வைத்தார் சய்யீத். எனினும், படை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டார் பிரதமர்.

ஜம்மு ~ காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக பாகிஸ்தான் அதிபர் முஷாரப் முன்மொழிந்துள்ள யோசனைகளில் ஒன்று, காஷ்மீரை ராணுவம் இல்லாத பகுதியாக அறிவிப்பதாகும். இந்த யோசனையைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர், ஜம்மு ~ காஷ்மீர் முதல்வரான குலாம் நபி ஆசாத்.

“காஷ்மீரில் இருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்வது என்பது வேறு; மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் பணியில் உள்ள படைவீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது வேறு. ராணுவமில்லாப் பகுதியாக அறிவிப்பது என்றால், எல்லையில் இருந்தும் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோருவதாகும். இதை நாங்கள் கோரவில்லை. மாநிலத்தில் நிலைமை மேம்பட்டுள்ளதால், பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவமனைகள், தனியார் இல்லங்கள் போன்ற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைவீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை’ என்று மக்கள் ஜனநாயகக் கட்சி வாதிடுகிறது.

உண்மையில், “”காஷ்மீரில் கூட்டு நிர்வாகம்” என்பதுதான் முஷாரபின் அமைதித் திட்டத்தில் சர்ச்சைக்குரிய அம்சமாகும். “”கூட்டு நிர்வாகம்” என்பது காஷ்மீர் மீதான இந்தியாவின் இறையாண்மையைக் காவுகொடுப்பதாக அமைந்துவிடும் என்று பிரதமரை பாரதீய ஜனதா தலைவர்கள் ஏற்கெனவே எச்சரித்துள்ளனர்.

ஆனால், “”கூட்டு நிர்வாகம்” என்ற யோசனையல்ல; மாறாக, “படை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது’ என்ற யோசனையே, ஜம்மு ~ காஷ்மீரில் ஆளும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸýக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவிட்டது.

இந்தியா ~ பாகிஸ்தான் இடையிலான சமாதான முன்முயற்சிகளின் வேகம் தற்போது குறைந்துள்ளது; காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிகளின் வேகமும் குன்றியிருக்கிறது. இதற்கும் நாட்டின் அரசியல் நிலைமைக்கும் தொடர்பு உண்டு என்பது அனைவரும் அறிந்ததுதான்.

தேசியப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையில் எங்காவது தவறாக ஓர் அடியை காங்கிரஸ் எடுத்து வைத்துவிட்டால் போதும்; அதற்கும் சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பூர்வீகத்துக்கும் முடிச்சுப் போட்டு, அதைப் பெரும் பிரச்சினையாக்கிவிட எதிர்க்கட்சியான பாஜக காத்துக் கொண்டிருக்கிறது என்பதை காங்கிரஸ் அறிந்தே இருக்கிறது. அதனால்தான் மிக மிக எச்சரிக்கையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் சோனியா.

சியாச்சின் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஓர் உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அதிகாரிகள் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால், அதில் ராணுவத்துக்கு ஆட்சேபம் இருப்பதால், சியாச்சின் பனிச்சிகரப் பகுதிகளில் இருந்து இந்தியப் படைகளை வாபஸ் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் சோனியாதான் என்று கூறப்படுகிறது.

சியாச்சின் பகுதியில் இருந்து இந்தியப் படைகளைத் திரும்பப் பெற்றவுடன் பாகிஸ்தான் படை அதை ஆக்கிரமித்துவிட்டால், மீண்டும் அதைக் கைப்பற்றுவது மிகக் கடினமான செயலாகிவிடும் என்று அரசிடம் தெளிவுபடுத்திவிட்டனர் ராணுவ அதிகாரிகள்.

பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இல்லாமலே, வெளியுறவு விவகாரங்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளும் அளவுக்கு அந்த அமைச்சகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார் அமைச்சர் பிரணப் முகர்ஜி.

பாகிஸ்தானுடன் நல்லுறவு, காஷ்மீர்ச் சிக்கலுக்குத் தீர்வு ஆகிய பிரச்சினைகளில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்காமல், படிப்படியாக முன்னேறிச் செல்வதையே அவரும் விரும்புகிறார்.

ஆனால் காஷ்மீரைப் பொருத்தவரை காலம் கரைந்து கொண்டிருக்கிறது. ராணுவத்துடனான மோதல்களில் பலியானவர்கள் என்று கூறப்படுவோரின் சடலங்கள் அண்மையில் காஷ்மீரில் தோண்டி எடுக்கப்பட்டன; அப் பிரச்சினை மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது கவலை அளிக்கும் அறிகுறி. புதிய முன்முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மக்கள் மத்தியில் தமக்கு இருக்கும் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே என்ற பதற்றம் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜம்மு ~ காஷ்மீரில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் நோக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் வாதத்திலும் நியாயம் இல்லாமலில்லை. ராணுவ ரீதியிலான தீர்வு இல்லை என்றாகிவிட்டது; மாநிலத்தின் அமைதிச் சூழலிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவமனைகள் போன்ற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் மத்திய அரசின் மீதான நல்லெண்ணம்தான் அதிகரிக்கும் என்று அக் கட்சி கூறுகிறது.

நிலைமை மோசமாக இருந்தபோது பாதுகாப்புப் படைகள் வந்தன; நிலைமை மேம்பட்டவுடன் அவை திரும்பப் பெறப்படுகின்றன என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும்; இது, அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்; காங்கிரஸýக்கும் இது ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இருக்கும்.

தமிழில்: லியோ ரொட்ரிகோ.

Posted in ADMK, Agriculture, Aklai Dal, Amitabh, BJP, BSP, Chaari, Chidambaram, Coalition, Commerce, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Delhi, DMK, Economy, Elangovan, Elankovan, Elections, Finance, Ghulam, Gujarat, Gulam, Gulam Nabi Azad, Ilangovan, Ilankovan, Inflation, Jammu, JJ, Kalki, Kashmir, Kisukisu, Krishnasami, Krishnasamy, LTTE, Manipur, Manmohan, Manmohan Singh, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, Mehbooba, Mufthi, Mufti, Mulayam, Muslims, Neeraja, Neeraja Chowdhry, News, Pakistan, Punjab, Results, Rumor, Rumour, Sayeed, Sayid, Siachen, Sonia, Srinagar, Thangabalu, UP, Uttar Pradesh, Uttarkand, Uttarkhand, Vambu, Vasan, Vasanth & Co, Vasanthakumar | Leave a Comment »

Indian Budget 2007-08 : Details, Information, Analysis, Perspectives

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 28, 2007

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, விவசாயம் மற்றும் சுகாதாரத்துக்கு அதிக ஒதுக்கீடு

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறிய இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள், வரவு செலவுத் திட்டத்தில் விவசாய, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளார்.

இந்திய அரசின் 2007-08 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாக தனது பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து வெளியிட்டார்.

விவசாயத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு
விவசாயத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு

இந்த வரவு செலவு திட்டத்தில் விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுகளுக்கான ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. விவசாயத் துறையின் வளர்ச்சியை 2.3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பட்ஜெட் ஏமாற்றமே அளிக்கிறது என கருத்துக்கள் வெளியாகியுள்ளன. மின்சாரம் போன்ற துறைகளில் உற்பத்தியை பெருக்க எந்த திட்டமும் அதில் இல்லை என தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

பணவீக்கத்தை குறைக்க பட்ஜெட்டில் எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என எதிர்கட்சிகள் தெரிவிக்கின்றன.

செல்வந்தர்களிடையே வரிகளைக் கூட்டி கூடுதலான ஆதரங்களை திரட்ட திட்டங்கள் ஏதும் இந்த அறிக்கையில் இல்லை என்றும், தொடர்ந்து நேர்முக வரிகளை அதிகப்படுத்துவதில் அரசுக்கு தயக்கம் இருப்பது தெரிகிறது எனவும் பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஒட்டு மொத்தமாக பொருளாதர வளர்ச்சி அதிகரித்து வருகிறது எனக் கூறினாலும், நாட்டின் ஆதாரமான வேளான் துறையில் பெரிய முன்னேற்றம் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.


BBC Specialஎழுச்சியுறும் இந்தியா

 

எழுச்சியுறும் இந்தியா
எழுச்சியுறும் இந்தியா

இந்திய பொருளாதாரத்தின் அதி வேக வளர்ச்சி குறித்து பிபிசி பல பெட்டகங்களைத் தயாரித்து வழங்குகிறது.

இவை குறித்து தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டகங்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

முதலில் இந்தியா காணும் அதீத பொருளாதார வளர்ச்சி அங்கு கலாச்சார மாற்றங்களுக்கும் இடம் தந்துள்ளது. ஆயினும் திருமணம் என்று வரும் போது, அங்கு பெரும்பாலும் பெரியோர்கள் பார்த்துச் செய்து வைக்கும் மற்றும் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கே அங்கு இன்னமும் முக்கியத்துவம் காணப்படுகிறது.

குடும்பம் நிச்சயிக்கும் திருமணங்கள் குறித்த பெட்டகம்


இன்னும் சில ஆண்டுகளிலேயே இந்தியா பொருளாதார ரீதியில் உலகில் மூன்றாவது இடத்தை எட்டிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 1991ல் அன்றைய பிரதமர் நரசிம்மராவால் தொடங்கப் பெற்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களால் விளைந்துள்ள அசுர வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் சிறப்பானதொரு சாட்சி கோயம்புத்தூர்.

கோயம்புத்தூர் நிலைமைகள் குறித்த பெட்டகம் பாகம் 1

கோயம்புத்தூர் நிலைமைகள் குறித்த பெட்டகம் பாகம் 2


இந்தியாவின் இந்த வேகமான பொருளாதார வளர்ச்சி அதன் அண்டைய நாடுகளிலும் சாதக மற்றும் பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

அந்த வகையில் அது இலங்கையின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.


குறையில்லை; நிறைவுமில்லைபட்ஜெட் என்றவுடன் வரி உயர்வும் வருமான வரிவிலக்கு வரம்பு உயர்வும்தான் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படும் இரு பொது விஷயங்கள்.அண்மைக்காலமாக அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், வருமான வரிவிலக்கு வரம்பும் கூடுதலாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களிடையே இருந்தது.மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட் இத்தகைய எதிர்பார்ப்புக்கு இடம் இல்லாமல் செய்துவிட்டது. இதுவரை ஒரு லட்சம் ரூபாயாக இருந்த வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.1.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் வரி செலுத்துவோருக்கு ரூ.1000 வரை பயன் கிடைக்கும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டாலும், வருமான வரியுடன் செலுத்த வேண்டிய கல்வித் தீர்வை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் நிதியமைச்சர் குறிப்பிடும் பலன் கிடைக்காமல் போகும் வாய்ப்புகளே அதிகம்.வருமான வரிவிலக்கு வரம்பை உயர்த்தாவிட்டாலும்கூட, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள் ஒவ்வொரு தனி மனிதனின் வருமானத்தில் பெரும்பகுதியை விழுங்குவதைக் கருத்தில்கொண்டு, இச்செலவுகளில் குறிப்பிட்ட வரம்பு வரை 20 சதவீத வருமான வரிக் கழிவு அளித்திருந்தால் மாத வருவாய்ப் பிரிவினருக்கு மகிழ்ச்சி தருவதாக இந்த பட்ஜெட் அமைந்திருக்கும்.சந்தை வணிகத்தில் நிரந்தர வருமான வரி எண்ணை (பான்) குறிப்பிட வேண்டும் என்பது இந்த பட்ஜெட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க, வரவேற்புக்குரிய மாற்றம். இதனால் கருப்புப் பணப் புழக்கம் குறையும். இருப்பினும், ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட எந்த வர்த்தகமும் காசோலை மூலமாகவே நடைபெற வேண்டும் என்ற கட்டாய நிலைமையும் ஏற்பட்டால்தான் சந்தையில் கருப்புப் பணத்தின் புழக்கம் முற்றிலும் மறையும்.

இந்த பட்ஜெட்டில் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. வேளாண்மையில் 4 சதவீத வளர்ச்சிக்கு உறுதி கூறப்பட்டுள்ளது. தேயிலை மற்றும் தோட்டப் பயிர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு கவனம் மற்ற வேளாண் பயிர்களுக்கு அளிக்கப்படவில்லை. அரிசி, கோதுமை மீதான முன்ஒப்பந்த பேரங்கள் இனி கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது நடைமுறையில் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே இதன் பயன் அமையும்.

பாசன மேம்பாட்டுக்காக ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், பல பாசனத் திட்டங்களை நடப்பாண்டில் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. கூடுதலாக 24 லட்சம் ஹெக்டேர் நிலத்தை பாசனத் திட்டங்களில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட கூடுதலாக 35 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளதும், மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க 8-ம் வகுப்பு முதலாக கல்வி உதவித்தொகை வழங்கும் முடிவும் மகிழ்ச்சியானவை.

சிகரெட் மீதான வரி வழக்கம்போல உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், புகையிலை இல்லாத பான்மசாலாவுக்கான வரியை 66 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக குறைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். புகையிலையைவிட மோசமானது அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள். இவை புற்றுநோய்க்கு காரணமானவை. “மவுத் ரெப்பிரஷர்’ என்ற பெயரில் இவை மீண்டும் சந்தையில் அதிக அளவில் நுழைவதற்கு தற்போதைய வரிக்குறைப்பு ஆதரவாக அமைந்துவிடும்.

ஜவுளி மேம்பாட்டு நிதியில் கைத்தறியும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கைத்தறிகளில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தவும், அதற்கான கருவிகளை வரியின்றி இறக்குமதி செய்யவும் அதற்கான மானியக் கடன் பெறவும் நெசவாளர்களுக்கு எளிதாக இருக்கும். தமிழக நெசவாளர்கள் இதை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை விளக்கி, பயன்படுத்திக்கொள்ளச் செய்யும் பொறுப்பு தமிழக கைத்தறித் துறைக்கு உள்ளது.

சூரியகாந்தி சமையல் எண்ணெய்க்கு 15 சதம் வரி குறைப்பும் பெட்ரோல் டீசலுக்கான தீர்வையை 2 சதவீதம் குறைத்துள்ளதும் இன்றியமையா பண்டங்களின் விலையைக் குறைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


வருமான வரிஎன்.வி.பாலாஜி (Dinamani Op-Ed pages)அடுத்த நிதியாண்டுக்கான (2007-08) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. பட்ஜெட் என்பது அடுத்த ஓராண்டுக்கான நிதியாதாரங்களை எப்படி பயன்படுத்துவது என்ற திட்டமிடலாகும். இந்தத் திட்டமிடல் அரசு மக்களுக்குத் தெரிவிக்கும் மிகமுக்கியமான சாதனமும் கூட . இது அரசியல் சட்டம் நமக்களித்த மிகப்பெரிய வாய்ப்பு என்றே கூறலாம். ஏனெனில் பட்ஜெட் என்ற ஒன்று இல்லாதபோது அரசு தன் செலவினங்களைக் கூட செய்ய முடியாமல் போகும்.பட்ஜெட்டின் மூலம் அப்படி என்னதான் நிதியாதாரங்கள் வந்து விடுகின்றன? முக்கிய ஆதாரம் மத்திய அரசு விதிக்கும் வரிகள். 2006-07 ஆம் ஆண்டிற்கான மத்திய வரிகள் மட்டும் 4.4 லட்சம் கோடிகள். இதில் தனிநபர் வருமான வரி 76 கோடியாகும். கம்பெனிகளுக்கான வருமான வரி 133 லட்சம் கோடியாகும். ஆக வருமான வரி சட்டத்தின் மூலம் அரசு மக்களிடமிருந்து பெறுவது 210 லட்சம் கோடியாகும். இந்த வருமான வரிக்கும் ஒரு சரித்திரம் உண்டு.சிப்பாய் கலகத்தை அடக்க அரசு அதிக செலவை மேற்கொள்ள வேண்டியிருந்தது. விளைவு, மிகச்சிறிய அளவில் மக்களின் வருமானத்தின் மீது வரி விதிக்கும் சட்டம் வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்டது. முதல் உலகப்போர் காலகட்டத்தில் அது மேலும் விரிவாக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின், வருமான வரிச் சட்டம் (1961) உருவெடுத்தது.இந்த வருமான வரிச் சட்டத்தின் மூலம் ஒருவர் சம்பாதிக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த வருமானங்கள் பல்வேறு பிரிவுகளாக, சம்பளம், வீட்டு வாடகை, தொழில் மூலம் ஈட்டும் லாபம், முதலீட்டிலிருந்து திரட்டும் வருவாய், இதர பிரிவு என தனித்தனியாகக் கணக்கிடப்படுகிறது.இப்படி ஒவ்வொரு பிரிவிலிருந்தும் வரும் வருமானத்துக்கு சில கழிவுகளுக்கும் வகை செய்யப்பட்டுள்ளது. கழிவுகளுக்குப் பின் உள்ள நிகர வருவாய் ஒன்று சேர்க்கப்பட்டு, அந்த வருவாயிலிருந்து பல்வேறு பொதுக் கழிவுகள் பெறுவதற்கான வழி வருமான வரிச் சட்டத்தில் உள்ளது. இந்த நிகர வருமானமே மொத்த வருவாயாகக் கொண்டு அதன் மீது வரி விதிக்கப்படுகிறது.


பயனற்ற மானியம்“ஏறினால் இறங்குவதில்லை’ – (17-2-07) தலையங்கம் படித்தேன்.விலைவாசி உயர்வுக்கு பொதுவான காரணம் பணவீக்கம் என்பதை மறுக்க இயலாது.அதேசமயம் உணவு உற்பத்தி சாராத மற்ற தொழில் பொருள்களின் கொள்ளை லாப விலை நிர்ணயமும் பணவீக்கத்துக்கு முக்கியக் காரணமாகும்.எனவே உற்பத்திச் செலவைக் குறைக்க வழிவகுக்காமல், வேளாண் விளைபொருள்களுக்கு விற்பனை நிலையில் மானியம் வழங்குவதும், பிற பொருள்களுக்கு உற்பத்தி வரி, கூடுதல் வரி ஆகியவற்றில் சலுகை வழங்குவதும் உரிய பயனைத் தராது.சீனாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருப்பதற்கும், பணவீக்கம் குறைவாக இருப்பதற்கும் முக்கியக் காரணமே, அவர்களின் உற்பத்திச் செலவு கட்டுக்குள் அடங்கி இருப்பதுதான்.எனவே, விலைவாசி கட்டுக்குள் இருக்க வெறும் மானியங்களும் வரிக் குறைப்புகளும் உதவாது.

சோம. நடராஜன், கரூர்.


ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: தா. பாண்டியன்திருவாரூர், மார்ச் 2: விவசாயத் துறை மேம்பாட்டுக்குக் குறிப்பிடத்தக்க அறிவிப்பு இல்லாத மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்.திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:விவசாயத் துறையின் சிக்கல்களை தீர்க்கும் விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் விவசாயத் துறைக்குப் போதுமான முக்கியத்துவத்தை தரவில்லை.மத்திய நிதி அமைச்சர் குறிப்பிட்ட விவசாயத் துறைக்கு ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கீடு என்பது, விவசாயத்துக்குக் கடன் அளிக்குமாறு நிதி நிறுவனங்களை வற்புறுத்தும் வழிகாட்டல் மட்டுமே. இந்தக் கடன் முழுமையாக கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சேவை வரியை உயர்த்தி, அதன் மூலம் கிடைக்கும் கூடுதல் தொகை மட்டுமே கல்வித் துறைக்குக் கூடுதல் ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறைக்குக் கடந்த ஆண்டை விட ரூ. 13 ஆயிரம் கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியைக் குறைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி தேசிய விவாதம் மேற்கொள்ள வேண்டும்.

விலைவாசி உயர்வைக் கண்டித்தும், விலைவாசி உயர்வுக்கான மத்திய அரசின் தவறான கொள்கையைக் கண்டித்தும் மார்ச் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார் தா. பாண்டியன்.


அரசின் வரி வருவாய் அதிகரித்ததால் திட்டமிட்டபடி கட்டுப்படுத்தப்பட்டது நிதிப் பற்றாக்குறை: சிதம்பரம்
புதுதில்லி, மார்ச் 2: செழிப்பான பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசின் வரி வருவாய் அதிகரித்தது ஆகிய சாதக அம்சங்களால், நிதிப் பற்றாக்குறையின் அளவை திட்டமிட்டபடி கட்டுப்படுத்த முடிந்துள்ளது என சிதம்பரம் கூறியுள்ளார்.2006-07 நிதியாண்டுக்கு அரசின் நிதிப் பற்றாக்குறையை 3.8 சதவீதமாக கட்டுப்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிடப்பட்டதை விட சிறப்பாக, அது 3.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதேபோல வருவாய் பற்றாக்குறையை 2.1 சதவீதமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. அதுவும் 2 சதவீதமாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம், அடுத்த நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறை மேலும் குறைந்து மொத்த உற்பத்தி மதிப்பில் 3.3 சதவீதமாகவும், வருவாய் பற்றாக்குறை 1.5 சதவீதமாகவும் குறையும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.பற்றாக்குறையின் அளவு குறைவதால், அரசு கடனை நம்பியிருக்க வேண்டிய அளவு குறைகிறது. நடப்பு நிதியாண்டின் முடிவில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.83,436 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் இது ரூ.71,478 கோடியாகக் குறையும். இதேபோல நிதிப் பற்றாக்குறை 1,52,328 கோடியில் இருந்து 1,50,948 கோடியாகக் குறையும் என சிதம்பரம் கூறியுள்ளார்.

2007-08 நிதியாண்டுக்கு செலவு ரூ.6,80,521 கோடியாக இருக்கும், வரவு ரூ.4,86,422 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


நாய்களையும் நாய் வளர்ப்போரையும் தவிர யாரையும் மகிழ்விக்காத மத்திய பட்ஜெட்எஸ். குருமூர்த்தி – தமிழில்: லியோ ரொட்ரிகோநாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கும் வேளாண் துறை சந்தித்துவரும் நெருக்கடிகளுக்கும் தீர்வுகாணும் திட்டம் எதையும் அளிக்காத தனது படுதோல்வியை 2007~08-ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மூடிமறைத்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். சிந்தனை வறட்சியை வார்த்தை ஜாலத்தால் மூடி மறைத்திருக்கும் அந்த பட்ஜெட்டில் தெளிவான அரசியல் பார்வை இல்லை என்பது அதை சாதாரணமாகப் படித்தாலே தெரிகிறது. தனியார் நிறுவன அதிகாரிகள் தமது வரவு ~ செலவுக் கணக்கில் லாபத்தை அதிகமாகக் காட்டுவதற்கு சித்து வேலைகள் செய்வதைப்போலவே, நிதி அமைச்சரும் தனது சாதுர்யத்தைக் காட்டி ஏமாற்றி இருக்கிறார் என்பது பட்ஜெட்டை நுணுக்கமாக ஆராயும்போது தெரிந்துபோகிறது.கவர்ச்சிகரமான வார்த்தைகளையும் திருவள்ளுவரின் குறளையும் பயன்படுத்தி, அது ஏதோ வேளாண்மை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பட்ஜெட் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் நிதி அமைச்சர். வெளிப்படையாக தகவல்களைக் கூறுவதற்குப் பதில், பலவற்றை மூடிமறைத்து தனது சாதுர்யத்தை அவர் காட்டியிருப்பது பட்ஜெட்டை கூர்ந்து நோக்கும்போது தெரிந்துவிட்டது. தனது உரையில் 43-வது பத்தியில் இருந்து 65-வது பத்தி வரையிலான பகுதியில், வேளாண் துறைக்கான 18 அம்சத் திட்டத்தைப் பற்றி அறிவித்துள்ளார். அவற்றில் இரு அம்சங்கள் தொடர்பாகக் கூறுகையில், ஒன்றைப் பற்றிய தகவல்களை எதிர்பார்த்திருக்கிறோம் என்றும் மற்றொன்றைப் பற்றிக் கூறுகையில், வேளாண்மை தொடர்பான அறிக்கையை ஆராய்ந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.பயறு வகை சாகுபடி, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், வேளாண் விரிவாக்கத் திட்டங்களுக்குப் புத்துயிர் அளிப்பது போன்ற 7 அம்சங்கள் வெறும் அறிவிப்பாக மட்டுமே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. மேலும் 7 அம்சங்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பவை; அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன; இரண்டே இரண்டு திட்டங்கள்தான் ~ கிராமப்புற ஏழைகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம், நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்கும் திட்டம் ~ புதியவை. அதிலும்கூட, நீர் சேகரிப்புத் திட்டமானது ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் வெற்றிகரமாக அமல்படுத்திய திட்டமாகும். அதைப் பற்றி நினைவுகூராமல் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் நிதி அமைச்சர்.

உரத்துக்கு அளிக்கப்படும் மானியத் தொகையைக் கழித்துவிட்டுப் பார்த்தால், வேளாண்மைக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தொகை ரூ.50,112 கோடிதான்.

2006~07-ம் ஆண்டு ஒதுக்கீட்டுடன் ஒப்பிட்டால் வெறும் 25 சதவீதமே கூடுதல். ஆனால், தனது வார்த்தை ஜாலத்தின் மூலம் ஏதோ வேளாண்மைக்கான நிதி ஒதுக்கீட்டை வரும் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல மடங்கு அதிகரித்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் அவர்.

அது மட்டுமல்ல; வங்கிகள் வழங்கும் கடன் தொகைகளை பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டுடன் சேர்த்து பெரும் தொகை போலக் காட்டியதன் மூலம், வேளாண்மைக்கு ஏராளமாக ஒதுக்கீடு செய்திருப்பதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் அவர்.

ஏரி, குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர் ஆதாரங்களை மராமத்து செய்து, பராமரிக்க 3 ஆண்டுகளில் பட்ஜெட்டில் அவர் ஒதுக்கீடு செய்த தொகை வெறும் 100 கோடி ரூபாய். ஆனால், தமது உரையின் 47-வது பத்தியில், “”வறட்சியால் பாதிக்கப்பட்ட 4 மாநிலங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.16,979 கோடி செலவில் சிறப்புத் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டுவருகிறது; அதில் ரூ.12,400 கோடியானது நீராதாரம் தொடர்பான திட்டங்களாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், நீராதாரம் தொடர்பான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை வெறும் ரூ.100 கோடி மட்டுமே ஆகும். அதோடு, அது முழுமையாக செயல்படுத்தப்படவும் இல்லை. அதற்கான நிதியை நிதி அமைச்சர் வழங்கப் போவதில்லை; மாறாக உலக வங்கிதான் வழங்கப் போகிறது. அதிலும் தமிழ்நாடுதான் முதலாவதாக உலக வங்கியை அணுகி ரூ.2182 கோடி கடன் தொகையைப் பெறுவதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கிறது. மற்ற மாநிலங்கள் எல்லாம் இன்னும் அதைப் பற்றி விவாதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பட்ஜெட் உரையைப் படித்தால் ஏதோ ரூ.12,400 கோடி பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டின் மூலமாக அந்தச் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும்.

“நபார்டு’ வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் இவ்வாறே பட்ஜெட்டில் காட்டியிருக்கிறார். நிதி அமைச்சரின் உரைக்குக் கீழே புதைந்திருப்பதை ஆராயாமல் யாராலும் இதைக் கண்டுபிடிக்க முடியாது.

தனது பட்ஜெட் உரையில் 15 நிமிடங்களை வேளாண் துறையைப் பற்றிய திட்டங்களுக்கு ஒதுக்கிவிட்டதாக அவரே தனது உரையின் 65-வது பத்தியில் குறிப்பிட்டார். 2004~05-ம் ஆண்டில் வேளாண் வளர்ச்சி விகிதம் அமோகமாக இருந்தது. அந்த ஆண்டிலேயே வேளாண்மைத் திட்டங்களுக்காக தனது உரையில் 1635 வார்த்தைகளை ஒதுக்கி இருந்தார். ஆனால், வேளாண் துறை நெருக்கடியில் சிக்கி இருக்கும் இந்த ஆண்டில், 1899 வார்த்தைகளைத்தான் வேளாண் திட்டங்கள் பற்றி அறிவிக்க ஒதுக்கி இருக்கிறார். அப்பொழுதைவிட 264 வார்த்தைகள்தான் அதிகம்.

கடன் சுமையைத் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் பிரச்சினை, வேளாண் துறையில் குறைந்துகொண்டே செல்லும் மூலதன உருவாக்க விகிதம், வேளாண் துறையில் அரசு முதலீடு குறைந்துகொண்டு செல்லும் போக்கு, உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகிய வேளாண்மைத் துறை தொடர்பான அதிமுக்கியமான பிரச்சினைகளை அவரது பட்ஜெட்டில் முழுமையாக ஆராயவே இல்லை.

2003~04-ல் உணவு தானிய உற்பத்தி 21.2 கோடி டன்களாக இருந்தது. ஆனால், அது 2006~07-ல் 20.9 கோடி டன்களாகக் குறைந்துவிட்டது. 2004~05-ம் ஆண்டு பட்ஜெட் உரையில், “”உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துவிட்டோம்; இனி விவசாயிகள் கோதுமைக்குப் பதில் மலர் சாகுபடி போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்று, தனக்கு முன்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியாளர்கள் கூறியதையே சிதம்பரமும் கூறினார். ஆனால், அடுத்த பதினெட்டே மாதங்களில் கோதுமையைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலைமை நமக்கு ஏற்பட்டுவிட்டது. அதன் விளைவு: விலைவாசிகள் தாறுமாறாக ஏறிவிட்டன.

பணவீக்க விகிதம் அதிகரித்திருப்பதற்கு உலகச் சந்தையில் விலை அதிகமாக இருப்பதே காரணம் என்று கூறுகிறார்கள். உலகிலேயே அதிக அளவு கோதுமையைப் பயன்படுத்தும் நாடு, பல லட்சம் டன் கோதுமையை வாங்குவதற்காக உலகச் சந்தைக்குச் சென்றால் விலை ஏறாமல் குறையவா செய்யும்? விலைவாசிப் பிரச்சினையை நிதி அமைச்சர் வெறுமனே தொட்டுவிட்டுச் சென்றாரே தவிர, ஆழமாக அலசவில்லை.

நிதிச் சந்தையில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கியானது கடந்த 12 மாதங்களில் 4800 கோடி டாலர்களை விலைக்கு வாங்கியது குறித்து ஒரு வார்த்தைகூட அவர் தனது பட்ஜெட் உரையில் கூறவில்லை. ஒரு டாலருக்கு ஈடாக ரூபாயின் மதிப்பை ரூ.45 என்ற அளவில் நிலைநிறுத்தி வைப்பதற்காகவே டாலர்களை விலைக்கு வாங்கும் வேலையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டது. அதன் விளைவாக நிதிச் சந்தையில் பணப் புழக்கம் (ரூபாய்) அதிகரித்தது; இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் விலையும் இதர பொருள்களின் விலைகளும் அதனால் அதிகமாக உள்ளன. வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்தியதன் மூலம் நிதிச் சந்தையில் இருந்து ரூ.14,500 கோடியை ரிசர்வ் வங்கி ஒருபுறம் உறிஞ்சி எடுத்தது. அதே நேரத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை அதே அளவில் வைத்திருப்பதற்காக 700 கோடி டாலர்களை சந்தையில் இருந்து வாங்குவதற்காக ரூ.30,000 கோடியை நிதிச் சந்தையில் இறக்கியது. இப்படிப்பட்ட முரண்பாடான நடவடிக்கைகளால் எவ்வாறு பணவீக்க விகிதம் குறையும்? அதன் ஒட்டுமொத்த விளைவாக விலைவாசிகள் உயர்ந்தன. இதற்கு எல்லாம் காரணமே ஏற்றுமதியாளர் வட்டாரமே ஆகும். அவர்களின் நெருக்குதலால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது போலியாகக் குறைத்து அதாவது ரூ.45 ஆகக் காட்டப்பட்டுவருகிறது. அதாவது 35 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று இருக்க வேண்டியது, 45 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று காட்டப்பட்டுவருகிறது. அதுவே ஒரு டாலருக்கு ரூ.35 ரூபாய் என்ற நிலை இருக்குமானால் பணவீக்க விகிதமும் 5 சதவீதத்திலேயே இருந்திருக்கும்.

ஆக மொத்தத்தில், நாட்டின் பொருளாதாரத்துக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டுவிட்டார் நிதி அமைச்சர். வெறும் ஆண்டுச் சடங்காக நாட்டின் பட்ஜெட்டை மாற்றிவிட்டார் அவர். நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டுவந்த கிராமப்புற வளர்ச்சியும் வேளாண் துறையும் பெரும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டுவிட்டன; விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தவறியதன் பயங்கர விளைவுகளை விரைவிலேயே நாம் அனுபவிக்கப் போகிறோம்.

நாய், பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளுக்கான உணவின் மீதான இறக்குமதி வரியைக் குறைத்திருப்பதால், நிதி அமைச்சரே கூறியதைப்போல, இந்த பட்ஜெட்டால் நாய் வளர்ப்போரையும் நாய்களையும் தவிர வேறு யார் மகிழ்ச்சி அடையப் போகிறார்கள்? ஆனால் முலாயம் சிங் போன்ற அரசியல்வாதிகளுக்குத் தெரியும், நாய் வளர்ப்போர் ஓட்டுப் போடப் போவதில்லை; நாய்களுக்கு ஓட்டே இல்லை என்பது.


மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமானவரி உச்சவரம்பு உயர்வு புதுடெல்லி, பிப். 28-பட்ஜெட்டில் கூறப்பட்டி ருப்பதாவது:-மாதசம்பளம் பெறுவோருக்கான வருமான வரியில் இந்தபட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருமானவரி விதிப்பு மற்றும் விரி விகிதத்தில் மாற்றம் இல்லை. ஆனால்சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமானவரி இல்லை. இந்த வருமான உச்சவரம்பில் மேலும் ரூ. 10 ஆயிரம் உயர்த் தப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி இல்லை.

இந்த வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு பெண்களுக்கு ரூ. 1,45,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்த வருமான வரி விலக்கு ரூ.1,95,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2006-07-ல் 9.2 ஆக இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் இது சராசரியாக 8.6 சதவீதம் இருந்தது. உற்பத்தி வளர்ச்சி விகிதம் 11.3 சதவீதமாக உள்ளது.

சேமிப்பு விகிதம் 32.4 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 33.8 சதவீதமாகவும் தொடர்ந்து நீடிக்கும். 2007-ம் நிதி ஆண்டில் சராசரி பண வீக்க விகிதம் 5.2 முதல் 5.4 சதவீதம் வரையில் இருக்கும். பணவீக்கம் கட்டுப்படுத்தப் படும்.

2006-07 நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் வங்கிக்கடன் விகிதம் 29 சதவீதமாக உயர்ந்ததது. கோதுமை, அரிசி தொடர்பாக எந்த புதிய ஒப்பந்தமும் செய்யப்பட மாட்டாது. கூடுதலாக 24 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பாசன வசதி செய்யப்படும்.

ஊரகப்பகுதிகளில் தொலைபேசியை கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 54 கிராமங் களில் போன் வசதி செய்யப் பட்டுள்ளது. உடல் நலத்துக்கான நிதிஒதுக் கீடு 21.9 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கல்விக்கு 34.2 சதவீதமும் கூடுதல் நிதி ஒதுக்கீடு நடப்பாண் டில் கூடுதலாக 2 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள். 5 லட்சம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.

மேல்நிலைப்பள்ளி கல்விக் கான உதவித்தொகை ரூ. 1837 கோடியில் இருந்து ரூ.3794 கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. ராஜீவ்காந்தி குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.4680 கோடியில் இருந்து ரூ.5850 கோடியாக அதிகரிக் கப்படுகிறது.

பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் புதிதாக 15 லட்சம் வீடுகள் கட்டப்படும். தேசிய ஊரக சுகாதார திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.8207 கோடியில் இருந்து ரூ.9947 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத் துக்கு ரூ. 969 கோடி நிதிஒதுக்கப்படுகிறது.

நாடெங்கும் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்து பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதை தடுக்க தேசிய அளவில் புதிய ஸ்காலர்ஷிப் திட்டம் அமல் படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் படிப்பைத்தொடர தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

போலியோவை முற்றிலு மாக விரட்ட ரூ.1290 கோடி வழங்கப்படும். உத்தர பிரதேசத்தில் 20 மாவட்டங் களிலும், பீகாரில் 10 மாவட்டங்களிலும் போலியோ ஒழிப்புக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும்.

பொது வினியோக முறை கம்ப்ïட்டர்மயமாக்கப்படும். இந்திய உணவுக்கழக செயல் பாடுகள் கம்ப்ïட்டரில் ஒருங்கிணைக்கப்படும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி.க்களுக்கு மட்டுமே வழங்கப்படும் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு ரூ.3271 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி.க்கான உதவித்தொகை நிதி ஒதுக்கீடு ரூ.440 கோடியில் இருந்து ரூ.611 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

சிறுபான்மை இன மாணவ-மாணவிகளுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மெட்ரிக்கில் படிப்பவர்களுக்கு ரூ.72 கோடியும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிப்பவர் களுக்கு ரூ.48 கோடியும் வழங்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.12041 கோடியில் இருந்து ரூ.14365 கோடியாக உயர்த்தப்படுகிறது. அதோடு வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும் மார்ச் 31-ந்தேதிக்குள் புதிய தொழில்கொள்கை தயாரித்து வெளியிடப்படும்.

பெண்கள் மேம்பாட்டுக் கான நிதிஒதுக்கீடு ரூ.22,282 கோடியாக இருக்கும். விவசாயிகளுக்கு ரூ.2,25,000 கோடி பயிர்க்கடன்கள் வழங்க புதிய பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 50 லட்சம் விவசாயிகள் பயன் பெறு வார்கள்.

2006-07-ல் விவசாயி களுக்கு ரூ.1,75,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. இது ரூ.1,90,000 கோடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தேயிலை உற்பத்திக்கு புதிய உத்வேகம் கொடுக்க சிறப்பு நோக்க தேயிலை நிதி உருவாக்கப்படும். இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தேசிய விவசாய இன்சூரன்ஸ் திட்டம் தொடர்ந்து நடை முறைப்படுத்தப்படும்.

மாநில அரசுகளின் உதவியுடன் சமூகநலத்திட்டங் கள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு அங்கமாக 70 லட்சம் குடும்பங்கள் எல்.ஐ.சி. திட்டத்தில் இணைக்கப் படுவார்கள். இவர்களுக்கு 50 சதவீத பிரிமீயத்தொகையாக 200 ரூபாயை மத்திய அரசு வழங்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.16,261 கோடி கடனாக வழங்கும். தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீடு ரூ.9955 கோடியில் இருந்து ரூ.12,600 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. டெல்லி, கொல் கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 முக்கிய நகரங் களை இணைக்கும் தங்கநாற்கர சாலைத்திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை மேம் பாட்டுத்திட்டத்துக்கு ரூ.405 கோடி வழங்கப்படும்.

கைத்தறித்தொழில் மேம்பாட்டு நிதி ரூ.533 கோடியில் இருந்து ரூ.911 கோடியாக உயர்த்தப்படுகிறது. நெசவாளர்களுக்கான சுகா தார காப்பீட்டுத்திட்டம் இதர சிறு தொழில்களுக்கும் விரிவு படுத்தப்படும். இதற்காக நிதி ஒதுக்கீடு ரூ. 241 கோடியில் இருந்து ரூ.321 கோடியாக அதி கரிக்கப்படும்.

கயிறு தொழிற்சாலை நவீனப்படுத்த ரூ. 23.55 கோடி வழங்கப்படும். சுற்றுலாத் துறைக்கான நிதிஒதுக்கீடு ரூ.423 கோடியில் இருந்து ரூ.520 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

நலிவடைந்த பிரிவின ருக்கு கடன் வழங்க ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப் படுகிறது. அவர்களது வீட்டுக் கடனுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5000 கோடியில் இருந்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக் கப்படுகிறது.

தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வராத மாவட்டங்களுக்கு சம்பூர்ணா கிராம வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.800 கோடி ஒதுக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள சொர்ண ஜெயந்தி வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கீடு ரூ.250 கோடியில் இருந்து ரூ.344 கோடியாக உயர்த்தப்படுகிறது. இந்த நிதி ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 12.5 பில்லியன் டாலர்களாக (ரூ.57 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. துறை ரீதியான முதலீடுகள் 6.8 பில்லியன் டாலர்கள் தேசிய மழைநீர் பிடிப்புபகுதி மேம்பாட்டு நிறுவன, திட்டங் களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.

ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.96 ஆயிரம் கோடி யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் மூலதன செலவு ரூ.41,922 கோடியும் அடங்கும். நாட்டு பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நிதிஉதவிகளும் செய்யப்படும்.

பிற்பட்ட மண்டல பகுதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.5800 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும்.

மும்பை நகரை உலகத்தரம் வாய்ந்த நிதி மையமாக மாற்ற உயர் அதிகாரக்குழு ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்.

உடல்ஊனமுற்றோருக்காக 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண இயற்கை மாற்றத்தின் விளைவை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று ஏற்படுத் தப்படும். பல்வேறு துறை களில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.1,72,728 கோடியாக இருந்தது. 2007-2008-ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு ரூ.2,05,100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மத்திய திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ.1,54,939 கோடி.

20 மாநிலங்களுக்கு ரூ.8575 கோடி கடன் பாக்கி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 450 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.1,20,377 கோடியாக இருந்தது.

அடுத்த நிதி ஆண்டு முதல் தேசிய அளவில் பொருட்கள் மற்றும் சேவைவரி திட்டம் அறிமுகம் செய்யப்படும். நடப்பு நிதி ஆண்டில் நிதிபற்றாக்குறை 3.7 சதவீதமாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை 2 சதவீதம். மொத்த செலவு ரூ.6,81,521 கோடியாக இருக்கும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

சேவை வரி விலக்கால் 2 லட்சம் பேருக்குபயன்

மத்திய பட்ஜெட்டில் பல சேவை வரிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத னால் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.

இந்த வரி விலக்கு காரண மாக மத்திய அரசுக்கு ஆண் டுக்கு ரூ.800 கோடி இழப்பு ஏற்படும்.

இதுவரை உயர்தர குடி யிருப்போர் நலச் சங்கங்கள் மீது சேவை வரி விதிக் கப் பட்டிருந்தது. புதிய பட் ஜெட்டில் அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கம்பெனிகளுக்கான கார்ப் பரேட் வருமான வரியில் சர்சார்ஜ் (ரூ.1 கோடிக்கு கீழ் உள்ளவர்களுக்கு) நீக்கப் படுகிறது.

பாங்கிகளில் போடப்பட்ட பணத்தை எடுக்கும் போது பணபரிமாற்ற வரி (பி.சி.டி.வரி) வசூலிக்கப்பட்டு வந்தது. மத்திய, மாநில அரசு களுக்கு இந்த பண பரிமாற்ற வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தனிப்பட்ட ஒருவர் மற்றும் இந்துகூட்டு குடும்பத்தினர் பாங்கியில் பணம் எடுக்கும் போது ரூ.25 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்கும்போது இந்த வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுப்பவர்களுக்கு இந்த பாங்கி பண பரிமாற்ற வரிகிடையாது.


பொது பட்ஜெட் 2007: முக்கிய அம்சங்கள் * சேவை வரி விலக்கால் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.* சிகரெட் மீதான வரி அதிகரிக்கப்படுகிறது.

* தண்ணீர் சுத்திரிக்கும் கருவிகளுக்கு முழு வரி விலக்கு அளிக் கப்படுகிறது.

* பயோ-டீசலுக்கு முழு வரி விலக்கு வழங்கப்படுகிறது.

* சிறு தொழில்களுக்கான சுங்க வரி விலக்கு ரூ.1 கோடியில் இருந்து ரூ.1.5 கோடியாக உயர்கிறது.

* வருமான வரி விலக்கு ஆண்களுக்கு ரூ.1,10,000, பெண் களுக்கு ரூ.1,45,000, மூத்த குடி மக்களுக்கு ரூ.1,95,000 என்ற வகையில் இருக்கும்.

* சூரியகாந்தி எண்ணை மீதான வரி 15 சதவீதமாக குறைக் கப்படுகிறது.

* சமையல் நிலக்கரிக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப் படுகிறது.

* மதிப்பு கூட்டு வரி விதிப்பு காரணமாக மத்திய அரசின் வருவாய் 24.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

* புனேயில் நடைபெற உள்ள காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.

* காமன்வெல்த் போட்டியை நடத்த மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ.150 கோடி வழங்கப்படும்.

* வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை.

* இயற்கை மாற்றத்தை ஆய்வு செய்ய நிபுணர்குழு.

* உடல் ஊனமுற்றோருக்கு 1 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* உலகத்தரம் வாய்ந்த நிதி நகரமாக மும்பை மாற்றப்படும்.

* மத்திய விற்பனை வரியில் 1 சதவீதம் குறைக்கப்படுகிறது.

* விவசாய முதலீடு 2 சதவீதம் அதிகரிக்கும்.

* கிராமத்தில் நிலம் இல்லாத குடும்பங்களுக்கு காப்பீடு திட்டம்.

* ராணுவ செலவுகளுக்கு ரூ.96 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

* தங்க நாற்கரக திட்டம் நிறைவடைகிறது.

* மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வீட்டு வசதி திட்டம்.

* பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.22,282 கோடி.

====================================================
விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்க விவசாயம், தொழில் இரண்டிலும் சமநிலை வளர்ச்சி: பிரணப் வலியுறுத்தல்

கோல்கத்தா, மார்ச் 5: விவசாயம், தொழில் ஆகிய இரு துறைகளிலும் சமநிலையான வளர்ச்சி இருந்தால்தான், விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்கவும், வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் முடியும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி கூறினார்.

மேற்கு வங்கத்தில் சிங்குரிலும், நந்தி கிராமத்திலும் தொழிற்சாலைகளுக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதால் எழுந்துள்ள பிரச்சினையை மறைமுகமாக சுட்டிக் காட்டும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ராஜர்ஹாட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிப் பேசுகையில் பிரணப் முகர்ஜி கூறியதாவது:

கடந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின்போது போதிய முதலீடு இல்லாத காரணத்தால் விவசாயத் துறை இன்று பின்தங்கிக் கிடக்கிறது.

விவசாயத் துறையிலும் தொழில்துறையிலும் சமநிலையான வளர்ச்சியை ஏற்படுத்த இன்னொரு பசுமைப் புரட்சி அவசியம்.

நாட்டில் விவசாயத் துறையில் வளர்ச்சி விகிதம் தற்போது 2 சதவீதமாக இருக்கிறது. தொழில்துறைக்கு நிகராக விவசாயத் துறையைக் கொண்டு வர வேண்டும் எனில், வளர்ச்சி விகிதத்தை குறைந்தபட்சம் 4 சதவீதமாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்க முடியும்.

அதே வேளையில், தொழில்மயம் ஆக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டியதும் அரசின் பொறுப்பு என்றார் பிரணப் முகர்ஜி.

====================================================

வரி விதிப்புகளை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை – வேளாண்மை, சுகாதாரம், ஊரக வளர்ச்சியும் சீர்திருத்த நடவடிக்கைதான்: ப.சிதம்பரம்

புது தில்லி, மார்ச் 5: வேளாண் துறை வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள்தான்; தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாடும் அதில் அடங்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.

மேலும், பட்ஜெட்டில் அறிவித்த வரி விதிப்புகளைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“”ஒரு வரியைத் திரும்பப் பெற்றால், அதற்குப் பதிலாக வேறொரு வரியைத்தான் விதிக்க முடியும். எனவே, ஒருவர் மீதான வரியைத் திரும்பப் பெற்றால் அவர் மகிழ்ச்சி அடைவார். அதையே வேறொருவர் மீது விதிக்கும்போது அவர் வருத்தமடைவார். எனவே, எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

பட்ஜெட் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நாட்டில் அமல்படுத்தப்பட்டுவரும் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளால் தொழில் துறை நிறுவனங்களும் சேவைத் துறை நிறுவனங்களும் பல ஆண்டுகளாக இரண்டு இலக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன.

நிறுவனங்கள் லாபம் மீதான வரி, இதர சலுகைகள் மீதான வரி, லாப ஈவுத் தொகை மீதான வரி ஆகியவற்றின் மூலம் அரசுக்குச் செலுத்துவது மிகக் குறைந்த தொகையே ஆகும். தொடர்ந்து லாபம் ஈட்டிவரும் தொழில் துறையினர், மற்றவர்களின் நன்மைக்காகவும் சிறிது தொகையை அளிக்க வேண்டும். அதனால் புதிய வரிகளை பெரிய சுமையாக அவை கூற முடியாது.

ஆரம்பக் கல்வி, உயர்நிலைக் கல்வியை வழங்கவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உயர்கல்வி அளிக்கவும் பணம் தரப் போகிறார்களா, இல்லையா என்பதே கேள்வி. “ஆம்’ என்றால், தொழில் துறையினர் வரி செலுத்தித்தான் ஆக வேண்டும்.

எச்ஐவி பாதிப்பு, எய்ட்ஸ் நோய், இளம்பிள்ளைவாத நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது, நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்குவது போன்ற பணிகளில் நாம் போதிய கவனத்தைச் செலுத்தாமல் இருந்துவிட்டோம் என்றே கருதுகிறேன்.

நாடு முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட 70 லட்சம் நீர் ஆதாரங்களை சீரமைத்து, பராமரிப்பதும், வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கான பெரும் திட்டங்களும்கூட பொருளாதார சீர்திருத்தங்களில் அடங்கும்.

வருமான வரி விதிப்புக்கான வருமான வரம்பு ஒரு லட்ச ரூபாயிலிருந்து ரூ.1,10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இதுவரை ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் இருந்தவர்கள் செலுத்திவந்த ரூ.5,000 கூடுதல் வரியானது, ரூ.4,120 ஆகக் குறைந்துவிடும். ஆனால், ரூ.5 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்களில் எத்தனை பேர் வரி கட்டுகிறார்கள்?

நாட்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3 கோடி. அவர்களில் 1.20 லட்சம் பேர்தான் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவதாகக் கூறி, வரி கட்டுகிறார்கள்.

பஞ்சாப், உத்தரகண்ட் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே பட்ஜெட் அறிக்கை அச்சாகிவிட்டது. நாலைந்து வார பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டு ஓர் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தயாரிக்க முடியாது; தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்படுவதாகும் பட்ஜெட்.

பணவீக்க விகிதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன; பணவீக்கம் கட்டுக்குள் வந்தவுடன் வட்டி விகிதங்களும் குறையத் தொடங்கும் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.

====================================================
பணவீக்கத்துக்கு மருந்து

இராம. சீனுவாசன்

“”அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சு”. அப்படித்தான் பணமும்.

ஒரு நாட்டில் ஓரளவுக்கு பணவீக்கம் இருந்தால் மட்டுமே உற்பத்தியாளர்களின் லாபம் உயர்ந்து பொருள்கள் உற்பத்தியும் பெருகும். பணவீக்கம் கட்டுங்கடங்காமல் உயரும்போது, பணத்தின் மதிப்பு குறைந்து பொருளாதார உற்பத்தியும் பாதிப்படைகிறது. எனவே, அதிக பணவீக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது என்பது அடிப்படை பொருளாதாரக் கோட்பாடு ஆகும்.

இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 2007-ல் ரிசர்வ் வங்கி, நாட்டின் பணவீக்கம் 2007 – 08ல் 5 சதவீதம் முதல் 5.5 சதவீதமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டது. இதற்கு ஏதுவாக பண அளிப்பின் அளவு 15 சதவீதமாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டது. இதற்கு மாறாக டிசம்பர் 2006 முதல் பணவீக்கம் 5.5 சதவீதத்தைத் தாண்டி உயர்ந்து கொண்டே இருந்தது. தற்போது இது 6.73 சதவீதம் என்ற அளவை பிப்ரவரி 3, 2007 அன்று எட்டியது. உயர்ந்து வரும் பணவீக்கம் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது.

பணவீக்கம் என்பது நாட்டின் பொது விலை மட்டம் உயரும் விகிதம். இது நாட்டில் எல்லாப் பொருள்களின் விலைகளும் சராசரியாக எவ்வளவு சதவீதம் உயர்ந்திருக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது.

இந்தியாவில் பணவீக்கம் ஒவ்வொரு வாரமும் கணக்கிடப்பட்டு, முந்தைய ஆண்டில் அதே வாரத்தில் நிலவிய பணவீக்கத்தோடு ஒப்பிடப்படுகிறது.

பணவீக்கத்தின் காரணம் மக்களிடம் உள்ள அதிக பண இருப்பினால், அவர்களின் தேவையும் உயர்ந்து விலைவாசி உயர்வையும் தூண்டுகிறது என்றும், மக்களின் தேவைக்கேற்ப உற்பத்தி பெருகாமல் இருப்பது பணவீக்கத்தின் காரணம் என்று இரு வேறு காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

அதிக அளவு பண அளிப்பும், தேவையை விட குறைவான உற்பத்தி அளவும் ஆகிய இரண்டு காரணங்களும் பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஒப்புக்கொள்வதுபோல ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

“ரெப்போ’ என்பது, வங்கிகள் போதிய பணம் இல்லாதபோது, தங்களிடம் உள்ள கடன் பத்திரங்களை வைத்து ஒரு சில நாள்களுக்குக் கடன் தொகை பெறுவதற்கு ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமாகும். இதற்காக ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதம் “ரெப்போ ரேட்’ என்று குறிப்பிடப்படும்.

“”ரெப்போ ரேட்” உயரும்போது, வங்கிகள் தாங்கள் கடன் பெறுவதைக் குறைத்து, கடன் கொடுப்பதையும் குறைக்கும். மேலும் வங்கிகள் கொடுக்கும் கடன் மீதான வட்டி வீதம் “ரெப்போ ரேட்டை’விட அதிகமாக இருக்கும்.

“ரிவர்ஸ் ரெப்போ’ என்பது, வங்கிகள் அளவுக்கு அதிகமான பணத்தை, ரிசர்வ் வங்கியிடம் ஒரு சில நாள்களுக்கு வைப்புத் தொகையாகக் கொடுத்து அதற்கான வட்டியைப் பெறும் ஒப்பந்தமாகும். இதற்காக ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி வீதத்துக்குக் குறைவான வட்டியில் வங்கிகள் மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதில்லை.

பண இருப்பு விகிதம்: வங்கி பெறும் வைப்புத் தொகையின் ஒரு பகுதி பணமாக ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட வேண்டும். பண இருப்பு விகித அளவை அதிகப்படுத்தும்போது, வங்கியினால் கொடுக்கப்படும் கடன் அளவு குறைந்து பண அளிப்பும் குறையும்.

பணவீக்கத்தைக் குறைக்க “ரெப்போ ரேட்’ பண இருப்பு விகிதம் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. மேலும் வங்கிகள் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்குக் கடன் கொடுப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு புதிய கட்டளைகளையும் பிறப்பித்தது. இதற்கு அவர்கள் கூறும் முக்கியக் காரணம், இந்த ஆண்டு தொடக்கம் வரை நாட்டின் மொத்த பண அளிப்பு எதிர்பார்த்த 15 சதவீதத்தைக் கடந்து 20 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. அதேபோல் வங்கிகள் கொடுக்கும் கடன் அளவும் 31 சதவீதம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.

எனவே ரிசர்வ் வங்கியின் பார்வையில் பொருளாதாரத்தில் பண அளிப்பு உயர்ந்தது பண வீக்கத்துக்கான மிக முக்கியக் காரணம் என்ற கருத்தை உருவாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கி எடுத்து வந்துள்ள இந்த நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் உண்மை வட்டி விகிதத்தை உயர்த்தும். இதன்மூலம் மக்கள் கடன் பெறும் அளவும் குறைந்து மொத்த பண அளிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகள் உடனடியாக பண அளிப்பைக் குறைக்காது என்று ஒருசில பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதேநேரத்தில் வேறு பலர் தற்போது நிலவி வரும் பணவீக்கத்துக்கு அதிக அளவில் பண அளிப்பு மட்டுமே காரணம் அல்ல, அதைவிட மிக முக்கியமான காரணம் போதுமான அளவிற்கு உற்பத்தி உயராமல் இருப்பதும் காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, பொருளாதாரத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம், உற்பத்தித் திறனை மேலும் குறைப்பதற்கான வழிவகைகளை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

பணவீக்கத்தின் மிக முக்கியக் காரணம் பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப பொருள்களின் உற்பத்தி அளவு இல்லை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக விவசாயப் பொருள்களின் விலைகள் மிக வேகமாக அதிகரித்து வருவது, பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப பொருள்களின் அளிப்பு உயர்வதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டுகின்றது என்பது ஒருசாராரின் கருத்து.

இதை ஒப்புக்கொள்வதுபோல, உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்துவது, இறக்குமதியை ஊக்கப்படுத்துவது, உணவுப் பொருள்கள் ஊக வாணிபங்களை நிறுத்துவது, எல்லா பொருள்களின் உற்பத்திக்கு அடிப்படையாக உள்ள பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைப்பது, சிமெண்ட், அலுமினியம் மீதுள்ள சுங்கத் தீர்வைகளைக் குறைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. ஏனெனில் பொருள் உற்பத்தி மற்றும் அளிப்பினை மிகக் குறுகிய காலத்தில் குறிப்பாக விவசாயப் பொருள்களின் அளவை உயர்த்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. எனவே, பணவீக்கத்தைக் குறைப்பது ஒரு மிக நீண்ட கால முயற்சியாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கை 1991 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கத்தோடு பல கொள்கை முடிவுகள், குறிப்பாக வரி, தொழில் துறை மற்றும் வியாபாரம் தொடர்பான கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பொருளாதாரச் சீரமைப்பில் விவசாயத் துறை பங்கெடுக்கவில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாகும்.

எனவே, வருகின்ற காலங்களில் விவசாயத் துறையை சீரமைத்து விவசாயப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலமே, நீண்ட கால நோக்கில் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

பொருள்களின் தேவைக்கேற்ப உள்நாட்டில் உற்பத்தியை உயர்த்தவும், அதேநேரத்தில் இறக்குமதியை உயர்த்தி மொத்த அளிப்பினை அதிகரிக்கும் நோக்கத்தோடும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

உள்நாட்டில் பொருள் உற்பத்தி அதிகரிக்க வேண்டுமெனில், முதலீடுகள் உயர வேண்டும். இதற்கு வட்டி விகிதம் குறைவாக இருத்தல் வேண்டும். ஆனால் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு, வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இது வருகின்ற காலங்களில் புதிய முதலீடுகளை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருக்கும்.

ரிசர்வ் வங்கி பண அளிப்பினைக் குறைக்க வேண்டுமெனில், மற்ற நாடுகளின் செலாவணியுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு உயர வேண்டும். இதனால் இந்தியாவில் அந்நிய நாட்டுப் பொருள்களின் விலை குறைந்து, இறக்குமதி உயரும். இதனால், ரிசர்வ் வங்கியினுடைய பண அளிப்பும் குறையும். இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் உண்மை வட்டி விகிதம் குறைந்து, முதலீடுகள் உயர்ந்து, பொருள்கள் உற்பத்தி அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

எனவே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, பொருள் உற்பத்தியை உயர்த்துவது மட்டுமே சிறந்த வழிமுறையாக இருக்கும்.

(கட்டுரையாளர்: முழு நேர உறுப்பினர், மாநிலத் திட்டக் குழு, தமிழ்நாடு).


தனியார் போட்டி அதிகரித்துள்ள நிலையில் தபால் துறை, வானொலி, தூர்தர்ஷனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைப்பு

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, மார்ச் 6: மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தபால் துறை, செய்தி ஒலிபரப்பு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள இத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

2007-08-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் புதன்கிழமை தாக்கல் செய்தார்.

இதில் அரசின் அனைத்து துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியிடப்பட்டன.

தபால் துறை: இதன்படி, தயாநிதி மாறன் அமைச்சராக உள்ள தபால் துறைக்கு ரூ. 315 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட ரூ. 104 கோடி குறைவாகும்.

மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளதும், தனியார் போட்டிக்கு இடையே நிதி பற்றாகுறையால் தத்தளிக்கும் துறையாகவும் உள்ள தபால் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல தபால் அலுவலகங்கள் சொந்த கட்டடம் இல்லாமல் வாடகை கட்டடங்களிலும், பழைய தாற்காலிக கட்டடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

இத் துறையில் ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தபால் அலுவலகங்கள் தேர்தெடுக்கப்பட்டு அவற்று சொந்த கட்டடம் கட்டப்படுகிறது.

இன்னும் பல அலுவலகங்களில் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நிதி பற்றாக்குறையே இதற்குக் காரணமாக கூறப்பட்டு வரும் நிலையில் இத் துறைக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது இத் துறை ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் தெரிவித்தனர்.

கூரியர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ்கள் என தனியார்துறையின் போட்டியைச் சமாளிக்க வேண்டிய நிலையில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. போட்டியில் தனியார் துறையினர் முந்திச் செல்ல மறைமுகமாக உதவுவதாக அமையும் என்று ஊழியர் சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.

வானொலி, தூர்தர்ஷன்: தபால் துறைக்கு அடுத்தபடியாக தனியாரின் போட்டியைச் சமாளிக்க வேண்டியுள்ள துறையான அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றை உள்ளடக்கியது செய்தி ஒலிபரப்புத் துறையாகும்.

இத் துறைக்கு ரூ.475 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதை விட ரூ. 63 கோடி குறைவாகும்.

இத் துறையில் ஏற்கெனவே பல பிரிவுகள் நிதி பற்றாக் குறையைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நிதி ஒதுக்கீட்டை குறைத்திருப்பது இத் துறையை ஒட்டு மொத்தமாக மூட வழிவகுப்பதாக அமையும் என இத் துறையில் உள்ள ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விமான போக்குவரத்து துறைக்கு அதிக நிதி: சாதாரண மக்களுடன் அதிக தொடர்புள்ள துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ள மத்திய நிதி அமைச்சர், விமான போக்குவரத்து துறைக்கு ரூ. 12 ஆயிரத்து 347 கோடியை ஒதுக்கியுள்ளார். இது இத் துறைக்கு கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட ரூ. 9 ஆயிரத்து 300 கோடி அதிகமாகும்.

காலம் கடந்து விடவில்லை: பட்ஜெட் நிறைவேறுவதற்கு முன்னர் அல்லது திருத்திய மதிப்பீடுகள் அடிப்படையில் அரசு நினைத்தால் தபால்துறை, வானொலி, தூர்தர்ஷன் உள்ளிட்ட துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.


வருமான வரி

என்.வி. பாலாஜி (nvbalaji@karra.in)

வருமானம் மற்றும் தொழிலில் இருந்து பெறும் லாபத்திற்கான வரி (முதல் பகுதி)

இந்திய வருமான வரி சட்டத்தில் ஐந்து வகை வருமானங்களில் அதிக பிரிவுகளைக் கொண்டது வணிகம் மற்றும் தொழிலிலிருந்து பெறும் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரியே ஆகும்.

ஒருவர் வணிகத்திலிருந்து ஈட்டும் லாபம் மற்றும் தொழிலிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு இந்த பிரிவின் கீழ் வரி விதிக்கப்பட்டு வருகிறது.

வரையறுக்கப்பட்ட செலவுகளை, தொழில்.வணிகத்திலிருந்து ஈட்டும் வருமானத்திலிருந்து கழித்து வரும் தொகை வரிக்கு உட்படுத்த வேண்டிய லாபமாகும்.

இன்று வருமானத்தைப் பற்றி அறிவோம்:

கீழ்க்காணும் வருமானங்கள் இந்த தலைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.

1. ஒரு வணிகர் தன் வணிகத்தில் பொருட்களை விற்று ஈட்டும் வருமானம்.

2. ஒரு தொழிலாளர் தன் தொழில் மூலம் ஈட்டும் வருமானம்.

3. ஒரு வணிகத்தை, தொழிலை மாற்றியமைக்க பெறும் இழப்பீட்டுத் தொகை.

4. ஒருவருக்கு வியாபாரச் சங்கத்தின் மூலம் வரும் வருமானம்.

5. குறிப்பிட்ட ஏற்றுமதியாளர்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் ஏற்றுமதி, இறக்குமதி உரிமத்தை விற்பதின் மூலம் ஈட்டும் வருமானம்.

6. சுங்க வரி மற்றும் கலால் வரி பாக்கி அரசாங்கத்தால் தளர்த்தப்பட்டால் வருமானமாகக் கருதப்படும்.

7. சுங்க வரி மற்றும் கலால் வரி அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டு, பிறகு திருப்பித் தரப்பட்டால் (தங்ச்ன்ய்க்) வணிகத்தில் வருமானமாகக் கருதப்படும்.

8. ஒரு கூட்டாளி, தன் கூட்டாண்மையிலிருந்து பெறும் சம்பளம், லாபம், பங்கு, ஊக்கத் தொகை போன்றவை வருமானமாகக் கருதப்படும்.

9. ஏற்றுமதிக்காக அரசாங்கத்திலிருந்து பெரும் ரொக்கச் சலுகை, மற்றும் இதர சலுகைகள், எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும், வணிகத்தில் வருமானமாகக் கருதப்படும்.

இந்த வருமானங்களுக்கு எதிராக வழங்கப்படும் வரையறுக்கப்பட்ட செலவுகள் பற்றி பிறகு காணலாம்.

வருமானங்கள் மற்றும் லாபங்கள் ஒருவர் தனது கணக்கு புத்தகங்களை சரிவர பராமரித்தால் மட்டுமே கணக்கிடக் கூடும். சிறு தொழிலாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை சரிவர வகுக்க முடியாது. அப்படி உள்ள நிலையில், சிறு தொழிலாளர்கள் தங்களது வருமானம் 40 லட்சத்திற்கு கீழ் உள்ள நிலையில், தங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை லாபமாகக் காட்டி, அதற்கு வரி செலுத்தலாம். இது கீழ் வருபவைகளுக்கு பொருந்தும்.

1. கட்டடம் கட்டுபவர் அல்லது கட்டடம் கட்டுவதற்காக ஆட்களை ஏற்பாடு செய்து தருபவர், தனது மொத்த வருமானத்தில் 8% லாபமாகக் காட்டி வரி செலுத்தலாம்.

2. சில்லறை வியாபாரி, தனது வருமானத்தில் 5% லாபமாகக் காட்டி வரி செலுத்தலாம்.

3. ஒரு வருடத்தில் 10-க்கு மேற்படாமல் சரக்கு வாகனங்கள் வைத்து இயக்குபவர், தனது வருமானத்தை கீழ்வருமாறு கணக்கிடலாம்.

– ஒரு கனரக சரக்கு வாகனத்திற்கு மாதம் ரூ.3,500.

– இதர வாகனங்களுக்கு மாதம் ரூ.3,150.

இவை அனைத்தும் வருமானம் 40 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பிரிவின் கீழ் வரும் நபர், தனது லாபம் இப்படி கணக்கிடுவதை விட குறைவாக இருக்கும் என்று எண்ணினால், அதற்கு தகுந்த புத்தகங்களை சமர்ப்பித்து, குறைந்த லாபத்திற்கு வரி செலுத்தலாம்.


Posted in 2007, 2007-08, Accounting, Agriculture, Allocation, Analysis, Assets, Budget, Chidambaram, Commerce, Communist, Congress, CPI, CPI(M), Deflation, Department, Details, Economy, Education, Expenditure, Finance, Government, Gurumoorthy, Gurumurthy, Healthcare, India, Inflation, Information, infrastructure, Mail, markets, Marxist, Minister, P Chidambaram, P Chidhambaram, Pa Chidambaram, Perspectives, Postal, Private, Projects, Public, Radio, Recession, revenue, S Gurumoorthy, S Gurumurthy, Sector, Shares, Statement, Stocks, Tax, TV | 1 Comment »