Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Cabinet’ Category

Kenya’s elections: A very African coup – Twilight robbery, daylight murder; After a stolen election, ethnic cleansing

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2008

திருடிய வெற்றியும் தொலைந்துபோன அமைதியும்

எம். மணிகண்டன்

இந்தியப் பெருங்கடலையொட்டிய இயற்கை எழில் மிக்க கடற்கரைகள், வண்ண மயமான விளையாட்டு மைதானங்கள் ஆகியவைதான் கென்யாவைப் பற்றி வெளிநாட்டினருக்கு அதிகமாகத் தெரிந்தவை.

Economistரத்த ஆறுகள் ஓடும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சற்று மாறுபட்டது கென்யா. இந்தியாவுக்கு ஒரு நேருவைப் போல, கென்யாவுக்கு ஒரு கென்யாட்டா கிடைத்தார். சாகும் வரை அவர் அதிபராகவும் இருந்தார்.

கென்யாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையிலேயே கழித்தவர் என்பதில் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடத் தகுந்தவர் கென்யாட்டா. வளர்ச்சியை நோக்கிய உள்கட்டமைப்பு, கருணைமிக்க நிலச் சீர்திருத்தம், கரிசனம் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தம் என ஜோமோ கென்யாட்டாவின் பணிகள் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தன.

சூடான் மற்றும் சோமாலிய அமைதி முயற்சிகளில் ஈடுபடும் அளவுக்கு கென்யாவை உயர்த்தியது கென்யாட்டாதான் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்க உண்மை. இவ்வளவு பெருமைக்குரியவரான கென்யாட்டா ஒரு சாத்தானையும் விட்டுச் சென்றார். அதுதான் இனப் பாகுபாடு. உலக நாகரிகத்தின் முன்னோடிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு நாடு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டிய ஒரு நாடு, மிக மோசமான கலவர பூமியாக மாறிக் கொண்டிருப்பது இனக் கலவரங்களால்தான்.

கென்யாவில் 40-க்கும் அதிகமான பழங்குடி இனத்தவர்கள் வசித்து வந்தாலும், கிக்கூயூ இனத்தவரின் எண்ணிக்கை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம். 1960-களில் சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை மூன்றே அதிபர்களைத்தான் கென்யா கண்டிருக்கிறது. அவர்களில் இருவர் கிக்கூயூ இனத்தவர். கென்யாட்டாவும், தற்போதைய அதிபர் கிபாகியும்தான் அந்த இருவர். நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதும், நாட்டின் முக்கிய விவசாய நிலங்களை வைத்திருப்பதும், பெரிய பதவிகளைக் கைப்பற்றுவதும் கிக்கூயூக்கள்தான்.

தூய்மையான நிர்வாகம் என்ற கோஷத்தோடு, கடந்த 2002 தேர்தலில் வென்றவர்தான் கிபாகி. இவரது அதிகார ஆக்கிரமிப்புதான் இப்போது பிரச்னையாகியிருக்கிறது. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கிபாகி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் வன்முறை வெடித்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் பதற்றம் நிறைந்திருக்கிறது.

அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என்பது தமக்கு உண்மையிலேயே தெரியாது எனவும், ஆளுங் கட்சியினரின் நெருக்கடி காரணமாகவே கிபாகி வெற்றி பெற்றதாக அறிவித்ததாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. கிபாகியை எதிர்த்துப் போட்டியிட்ட லூ இனத்தைச் சேர்ந்த ஓடிங்கோ தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

கென்யாவில் கட்சியைப் பார்த்து யாரும் வாக்களிப்பதில்லை. இனம்தான் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நான் உங்கள் இனத்தைச் சேர்ந்தவன்; நீங்கள் தாராளமாக என்னை நம்பலாம் என நேரடியாகவே வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதுதான் தேர்தல் வெற்றிக்கான சூத்திரம். இந்தப் பின்னணியில், ஏற்கெனவே கிக்கூயூ இனத்தவரால் தாங்கள் ஒடுக்கப்பட்டதாகக் கருதும் மற்ற இனத்தவர் இத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறையில் இறங்கிவிட்டனர். எங்கெல்லாம் கிக்கூயூ இனத்தவர் இருக்கின்றனரோ அங்கெல்லாம் படுகொலைகள் நடந்தவண்ணம் உள்ளன.

கென்ய வன்முறைகளுக்கு அந்நாட்டுக்கு நிதியுதவி செய்யும் பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ஆனால் எந்த நாட்டில் சண்டை நடந்தாலும் ஆயுதங்கள் விற்பனையாகும் என்ற எண்ணத்தில் மேலை நாடுகளுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு நாட்டையும் தங்களது வாடிக்கையாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்குத்தான் மேலை நாடுகள் உண்மையிலேயே முயன்று வருகின்றன. அதனால் போர் ஏற்படும்வரை காத்திருந்து ஆயுதங்களை விற்பனை செய்வதுதான் அவர்களின் எண்ணம். எண்ணெய் வளங்களில் முதலீடு செய்திருக்கும் சீனாவும் இப்போதைக்கு உதவிக்கு வருவதுபோல் தெரியவில்லை. எனவே, எந்த நாடு உதவிக்கு வந்தாலும் அது லாப நோக்கத்துடன்தான் இருக்கும்.

ஆக, கென்யா இன்னொரு உகாண்டாவாக மாறாமல் தடுக்கும் பொறுப்பு கிபாகிக்கும் ஓடிங்கோவுக்கும்தான் உள்ளது. 300-க்கும் அதிகமானோர் பலியான பின்னரும் அமைதி முயற்சி எதையும் மேற்கொள்ளாத அதிபர் கிபாகி மீது ஆப்பிரிக்க மக்களின் மொத்தக் கோபமும் திரும்பியிருக்கிறது.

பதவியைத் துறந்துவிட்டு இடைக்கால அரசை நியமித்து புதிதாகத் தேர்தல் நடத்துவது ஒன்றுதான் இப்போதைக்கு கிபாகி முன்னால் இருக்கும் ஒரே வாய்ப்பு. பிரச்னை ஏற்படலாம் என்று தெரிந்தவுடன், அதிகாரத்தைத் தூக்கி எறிந்த நெல்சன் மண்டேலா போல் போற்றுதலுக்குரிய தலைவராக மாற கிபாகிக்கு இது நல்ல சந்தர்ப்பம்.

இல்லையெனில், இராக் ஆக்கிரமிப்புக்கு முன்பு டோனி பிளேர் கூறியது போல், நீதியை நிலைநாட்ட “அடித்துக் கொள்ள’ வேண்டியதுதான்; மேலை நாடுகளுக்குச் சாதகமாக!

 


 

கென்யாவில் வன்முறை காரணமாக 1.80.000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

கென்யாவில் கடந்த வாரம் நடந்த தேர்தலைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் குறைந்தது ஒரு லட்சத்து எண்பதனாயிரம் பேர் இடம் பெயர்ந்திருப்பதாக ஐநாமன்றத்தின் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இவர்களில் சிலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக் கிறார்கள். சிலர் காவல்நிலையங்களிலும், சிலர் தேவாலயங் களிலும் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.

இப்படியான அகதிகள் எல்லோருமே பட்டினியாக இருப்ப தாகவும், பல குழந்தைகள் வெயிலுக்கு பலியாகி இறந்து விட்டதாகவும், இந்த வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்பட்ட கென்யாவின் மேற்கு பிரதேசங்களில் ஒன்றில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கென்யா முழுவதும் சுமார் ஐந்து லட்சம் கென்யர்கள் அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாக, நைரோபியில் இருக்கும் ஐநா மன்றத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


புதிய தேர்தலுக்கு தயார்- ஆனால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் என்கிறார் கென்ய அதிபர் கிபாக்கி

கென்ய அதிபர் கிபாக்கி
கென்ய அதிபர் கிபாக்கி

கென்யாவில் புதிதாக தேர்தல் நடத்தப்படுவதை கொள்கை அடிப்படையில் எதிர்க்கவில்லை, ஆனால் நீதிமன்றம் ஒன்று உத்தரவிடும் பட்சத்தில்தான் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் முவாய் கிபாக்கி விரும்புகிறார் என அந்நாட்டின் அரசு சார்பாகப் பேசவல்லவர் கூறியுள்ளார்.

ரைலா ஒடிங்கா தலைமையிலான ஓ.டி.எம். எதிர்க்கட்சியானது, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் மறுபடியும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், ஆனால் இவ்விவகாரத்தை நீதிமன்றத்திடம் கொண்டுசெல்லப்போவதில்லை, ஏனெனில் நீதிமன்ற முடிவின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்று கூறியிருந்தது.

இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கான புதிய ராஜீய முயற்சிகள் நடந்துவருகின்றன. அதிபர் கிபாகு மற்றும் ஒடிங்கா ஆகியோருடன் நொபெல் பரிசு வென்ற தென்னாப்பிரிக்க பிரமுகர் டெஸ்மண்ட் டுடு பேச்சுநடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் புஷ்ஷின் தூதர் ஜெண்டயி ஃப்ரேஸார் நைரோபி சென்றுகொண்டிருக்கிறார்.

 


தற்போதைய கென்ய அரசியல் நெருக்கடியின் பின்னணி என்ன?

நைரோபியில் தொடர்ந்து பதட்டம்
நைரோபியில் தொடர்ந்து பதட்டம்

தலைநகர் நைரோபி மற்றும் பிற நகர வீதிகளில் அரங்கேறிவரும் அரசியல் நெருக்கடிக்கு, நாட்டின் சக்திவாய்ந்த இரண்டு இனப்பிரிவுகளான – அதிபர் கிபாகியின் ககிகுயு பழங்குடியினத்துக்கும் எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்காவின் லுஒ இனத்துக்கும் இடையில் வரலாற்று ரீதியாயக நீடித்துவரும் பகைமை ஒரு பங்கில் வேராக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.

அதிபர் கிபாகியின் இனப்பிரிவான கிகுயுதான் கென்யாவின் மிகப் பெரிய மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் சக்திவாய்ந்த இனமாகும். இவ்வினத்தார் அதிகம் பேர் நைரோபியைச் சுற்றி வாழ்கிறார்கள். இவ்வினத்தாரின் தலைவர் ஜோமோ கென்யாட்டாதான் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் முதல் அதிபரானவர்.

நாட்டின் மேற்குப் பகுதியில் உகாண்டாவுடனான எல்லைக்கு அருகில் பரவலாக வாழும் லுஒ இனத்தார், பலமுறை அரசுப் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர் என்றாலும் அவர்களில் மிகப் பிரபலமான தலைவர் காலஞ்சென்ற ஒகிங்கா ஒடிங்கா ஆவார். இவரின் மகன் தான் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா.

கிகுயுவுக்கும் லுஒவுக்கும் இடையே நெடுநாளாக அரசியல் போட்டி பகைமை இருந்துவருகிறது என்றாலும் கென்யா பல ஆண்டுகளாக ஒரு அமைதியான நாடாகவே திகழ்ந்துவருகிறது.

சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவுகள் தொடர்பான தற்போதைய அரசியல் நெருக்கடியின் பின்னணி குறித்து எமது உலக விவகார செய்தியாளர் மார்க் டொய்ல் விளக்கும் செய்திக்குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.

 


 

 

Posted in africa, Ancestry, Arms, AU, Autocracy, Autocrats, Britain, Cabinet, China, Citizen, Cleansing, Congo, Constituency, Democracy, Dictators, Dictatorship, Eldoret, Election, Elections, Ethiopia, fraud, Government, Govt, Kenya, Kibaki, Kikuyu, Kingdom, Kings, Kisumu, Kivuitu, Luo, margin, Military, Mombasa, Monarchy, Monitors, Murder, Mwai, Nairobi, Nigeria, Nyanza, Odinga, Opposition, people, Polls, Protest, protesters, Race, Racial, Raila, Re-election, rigging, Robbery, Somalia, Vote, voters, War, Weapons | Leave a Comment »

Public Administration: Accountant General’s Office: IAAS – Indian Audit and Accounts Service

Posted by Snapjudge மேல் திசெம்பர் 13, 2007

தணிக்கை முறையில் தப்புக் கணக்கு!

இரா. செழியன்

இந்தியா கடைப்பிடித்துவரும் நாடாளுமன்ற முறையின் அடிப்படைக் குறிக்கோள் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய பேரவையின் கட்டுப்பாட்டிற்குட்பட்டு அரசு நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதுதான்.

குறிப்பாக, அரசு நிர்வாகத்துக்கும் அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கும் நாடாளுமன்றம் மானியங்களை வழங்குகிறது. அந்த மானியத் தொகைகளைக் குறிப்பிட்ட திட்டங்களுக்காகச் சரியாக, சிக்கனமாக, திறமையாக, அரசு நிறைவேற்றுகிறதா என்பதை நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குக் குழு, மதிப்பீட்டுக் குழு, பொதுத்துறை நிறுவனக் குழு போன்ற கண்காணிப்பு அமைப்புகள் மூலம் ஆராய்கின்றன.

இந்தவகையில், பொதுத்தணிக்கை அமைப்பு என்பது அரசின் வரவு, செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து, அதிலுள்ள குறைபாடுகள் அடங்கிய அறிக்கைகளை குடியரசுத் தலைவர் மூலம் நாடாளுமன்ற அவைகளின் முன் வைக்கிறது.

இந்த வகையில் தலைமைத் தணிக்கை அதிகாரியின் பணி நாடாளுமன்றத்திற்கு மிகவும் முக்கியமானது. இது குறித்து அரசியல்நிர்ணய சபையில் அம்பேத்கர் கூறியதாவது: “”இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மிக முக்கியமான அதிகாரி, தணிக்கைக் குழுத் தலைவர் என்பதுதான் என் கருத்து. இன்னும் கவனித்தால், தலைமை நீதிபதிக்கு இருப்பதைவிட அதிகமான அளவு தணிக்கைக்குழுத் தலைவருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. நீதி அமைப்பு இருப்பதைப் போன்று தணிக்கை அமைப்பும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.”

தணிக்கை அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி நீண்ட விவாதம் அரசியல்நிர்ணய சபையில் 1949, மே மாதத்தில் வந்தது. தணிக்கைத் துறையில் திறமையும், நல்ல பயிற்சியும் உள்ளவர்களைத்தான் தணிக்கை அமைப்பின் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தபொழுது, “”பொதுவாக மாநிலத்தில் கணக்குத் தணிக்கை அதிகாரியாக ( Accountant General) உள்ளவர்களில் தலைசிறந்து விளங்குபவர்களைத்தான் மத்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியாக நியமிப்போம்” என்று அரசமைப்புச் சட்ட ஆக்கக்குழுவின் சார்பில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி உறுதிமொழி தந்தார்.

ஆறாண்டு காலம் அல்லது 65 வயதுவரை இவற்றில் எவை முன்னதாக வருகிறதோ அதுவரையில் பணியாற்ற, தலைமைத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார். அரசியல் நிர்ணயசபையில் தரப்பட்ட உறுதிமொழியின்படி 1948 தொடங்கி 1966 வரை மூன்று கணக்குத் தணிக்கை அதிகாரிகள், வி. நரஹரி ராவ், ஏ.கே. சந்தா, ஏ.கே. ராய் போன்ற இந்திய தணிக்கைப் பிரிவின் உயர் அதிகாரிகள் தணிக்கை அமைப்புத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

ஆனால், அதன்பிறகு கடந்த 42 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 7 தணிக்கைத் தலைவர்களில் ஒரே ஒருவர் மட்டும்தான் இந்திய கணக்குத் தணிக்கை ( IAAS – Indian Audit and Accounts Service) பிரிவில் உயர் அதிகாரியாக இருந்தார். மற்ற 6 தடவைகளில் தணிக்கைக் குழுத் தலைவர் பதவி இந்திய ஆட்சிப் பணியாளர் ( IAS – Indian Administrative Service்) பிரிவைச் சேர்ந்தவர்களுக்குத் தரப்பட்டது. இது சரியானதல்ல.

ஓய்வுபெறும் நிலையிலுள்ள இந்திய ஆட்சிப் பணியாளருக்கு கணக்கு – தணிக்கைத் துறைகளில் எத்தகைய பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், இந்திய கணக்குத் தணிக்கைக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவது நாடாளுமன்ற முறைக்கு மிகவும் முரண்பட்ட ஒன்றாகும்.

உலகில் ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றும் முக்கியமான நாடுகளில் எவற்றிலும் தணிக்கை அதிகாரியை அரசு தன் விருப்பப்படி நியமித்துவிட முடியாது.

இங்கிலாந்து நாட்டில், மக்கள்சபையின் பொதுக்கணக்குக் குழுவின் ஆலோசனைப்படிதான் தணிக்கை அமைப்பின் தலைவரை நியமிக்கும் தீர்மானத்தை பிரதமர் மக்கள்சபையின் முன் வைப்பார். எவ்வித விவாதமுமின்றி பேரவை அதை ஏற்றுக்கொள்ளும்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உள்ள பொதுக் கணக்கு – தணிக்கைக் குழுவின் தீர்மானத்தையொட்டி மத்தியத் தணிக்கைக் குழுத் தலைவர் நியமிக்கப்படுகிறார்.

ஜெர்மன் நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள உயர்நிலை தணிக்கை அமைப்பின் ஆலோசனையின் பேரில்தான் தணிக்கைக் குழுவின் தலைவர் – துணைத் தலைவர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

அமெரிக்காவின் மேல்சபையான செனட்டின் தீர்மானத்தின் மீதுதான் தணிக்கை அமைப்புத் தலைவரை, அந்நாட்டின் அதிபர் நியமிக்க முடியும். அப்படி அதிபர் நியமித்தாலும் தணிக்கைக் குழுத் தலைவரை நீக்கும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. செனட் சபை நிறைவேற்றுகிற குற்றச்சாட்டுத் தீர்மானப்படிதான் அவரை நீக்க முடியும்.

ஆக, மற்ற நாடுகளில் உள்ள முறையைப் போன்று இந்தியாவிலும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை மத்திய அரசு தன்போக்கில் எந்த வகையிலும் நியமிப்பது கூடாது. மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளடக்கிய பாரபட்சமற்ற ஒரு குழு மூலமாகத்தான் அந்தப் பதவிக்கான தலைவர் நியமிக்கப்பட வேண்டும்.

தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பின் முக்கியத்துவம் பற்றி 1950 ஜூலை 21 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பின்வருமாறு கூறினார்: “”இந்தியா ஓர் ஏழைநாடு. இங்குள்ள அரசு மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவில் செலவு செய்யப்படுகிற நிலைமையில், ஒவ்வொரு ரூபாயும் எவ்வாறு செலவாகிறது என்பதைக் கவனிக்கும் பொறுப்பு தணிக்கைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அதிகமாகக் கூறத் தேவையில்லை.”

1954 ஆம் ஆண்டு மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவு ரூ. 1,254 கோடி. தற்போதைய நிலவரப்படி, 2005 – 2006-இல் மத்திய – மாநில அரசுகளின் மொத்த செலவின் அளவு ரூ. 15,92,000 கோடி.

அப்போது இருந்ததைவிட 1,270 பங்கு அதிகமான அரசு செலவுகளைத் தற்போது தணிக்கை பார்க்க வேண்டிய பொறுப்பு பொதுத்தணிக்கை அமைப்புக்கு இருக்கிறது. ஆனால், முன்பிருந்த தணிக்கைத் துறையின் திறமையாளர்கள் தற்போது அரசால் தணிக்கைத் தலைவராக நியமிக்கப்படுவதில்லை.

அரசு நிர்வாகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வீணாக்கப்படுகிறது அல்லது ஊழலில் கரைக்கப்படுகிறது என்றால், அவை அங்குள்ள அதிகாரிகளின் நிர்வாகத்தில்தான் நடைபெறுகின்றன.

அப்படிப்பட்ட அதிகாரி ஒருவரை திடீரென்று அவருக்குப் பின்னணியான பயிற்சியும், திறமையும் இல்லாத நிலைமையில், தணிக்கைத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுவிட்டால் அவர் சம்பந்தப்பட்ட அரசின் செலவு ஒழுங்கீனங்களின் மீது அவருடைய தலைமையின்கீழ் வரும் தணிக்கைத்துறையால் எப்படி வெளிப்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும்?

தணிக்கை முறைக்குக் கட்டுப்பட்டு அரசு நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்குப் பதில், அரசு நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டுத் தணிக்கைத்துறை கொண்டு வரப்படுகிறது.

தற்போதைய தணிக்கைத்துறைத் தலைவர் – அவரும் இந்திய ஆட்சிப் பணி ( IAS) அதிகாரியாக இருந்து இந்தப் பதவிக்கு வந்தவர் – அவருடைய பதவிக்காலம் வருகிற 2008 ஜனவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

தணிக்கைக்குழுத் தலைவராக ஒருவரை நியமிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் இந்தச் சமயத்திலாவது மக்களாட்சி முறையில் நம்பிக்கையுள்ள நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும், அவற்றின் கண்காணிப்புக் குழுவினரும், பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் ஒன்றுபட்டு, பயிற்சிபெற்ற திறமையுள்ள, தணிக்கைக் கணக்குத்துறை பிரிவைச் சேர்ந்த ஒருவரை, பாரபட்சமற்ற முறையில் தேர்ந்தெடுப்பதற்கான கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும்.

சரியானபடி அரசின் செலவு விவரங்கள் கவனிக்கப்படவில்லை என்றால் தணிக்கை முறை வெற்றி பெறாது.

சரியானபடி தணிக்கை முறை இல்லையென்றால் நாடாளுமன்றக் கண்காணிப்பு வெற்றி பெறாது. இந்த நிலைமை வளர்ந்தால் ஜனநாயக முறையில் மக்களின் பணத்துக்குப் பாதுகாப்புத் தரும் நாடாளுமன்றம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

உச்ச நீதிமன்றத்தைவிட முக்கியமான இடத்தை தணிக்கை அமைப்புக்கு அரசமைப்பு ஆசான் அம்பேத்கர் தந்தார். ஆனால் தமது போக்கில் தணிக்கை அமைப்பின் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தொடர்ந்து மத்திய அரசு நியமித்துக்கொண்டே இருந்தால், விரைவில் சட்டப்படிப்பு அறவே இல்லாத ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு பின்வாங்காது.

அதன் பிறகு, நீதிமன்றம், நாடாளுமன்றம், தணிக்கைத்துறை ஆகியவைகளுக்கு உள்ள சுதந்திரமும், தனித்தன்மையும் நீக்கப்பட்டு, எல்லாவற்றுக்கும் ஏகபோக சர்வாதிகாரமாக மத்திய நிர்வாகத்துறை ஆகிவிடும்.

(கட்டுரையாளர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

—————————————————————————————————————————————————————-

பொதுத்துறையில் புதிய பார்வை!

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதுதான் பொருளாதாரச் சீர்திருத்தவாதிகளின் முதல் கோஷமாக இருந்தது. ஏதோ, நல்ல புத்தி தோன்றி, நஷ்டத்தில் இயங்கும் சில நிறுவனங்கள் தவிர மற்ற பொதுத்துறை நிறுவனங்களின்மீது மத்திய அரசு கைவைக்காததன் பலன், இப்போது பல நிறுவனங்கள் லாபகரமாக நடக்கின்றன. இதற்கு, தனியார்மயமாக்கப்படுவோம் என்கிற பயம் காரணமா அல்லது நிர்வாகம் முடுக்கி விடப்பட்டது காரணமா என்று தெரியவில்லை.

தற்போது சுமார் 250 பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவைகளில் 120 நிறுவனங்கள் மட்டும்தான் லாபகரமாக இருந்தன. சமீபத்திய ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்ட 215 நிறுவனங்களில் 157 நிறுவனங்கள் லாபகரமாக நடப்பதாகத் தெரிகிறது. 35 நிறுவனங்களின் தணிக்கை இன்னும் முடிந்தபாடில்லை.

இந்தப் புள்ளிவிவரங்கள் சற்று ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை, தேசத்தின் சமச்சீர் வளர்ச்சியையும், நாட்டின் அடிப்படைத் தேவைகளையும் கருத்தில்கொண்டு நிறுவப்பட்டவை. பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், இந்தியன் ஏரோநாட்டிக்ஸ், செய்ல், ஆயுதத் தொழிற்சாலை போன்றவை, இந்தியாவின் தன்னம்பிக்கையை வளர்த்தன என்பது மட்டுமல்ல, நாம் சுயசார்புடைய நாடாக வளர வழிவகுத்தன என்பதையும் மறந்துவிடக் கூடாது.

சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருப்பதுபோல, பண்டித ஜவாஹர்லால் நேரு இந்தியாவுக்கு அமைத்துத் தந்த கலப்புப் பொருளாதாரத்தின் பலன்தான் இப்போது இந்தியா உலகமயமாகி இருக்கும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்க வழிகோலியிருக்கிறது. அதுமட்டுமல்ல, திருச்சி, ராஞ்சி, போபால், புணே, ரூர்கேலா, நாசிக் போன்ற நகரங்களைத் தொழில் நகரங்களாக உருவாக்க முடிந்ததன் காரணம், அங்கெல்லாம் பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டதால்தான்.

ஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் தொடர்ந்தன என்பதும், லாபம் ஈட்டும் நவரத்னங்கள் என்று அழைக்கப்படும் நிறுவனங்களும்கூட, தங்களது முழுமையான உற்பத்தித் திறனை எட்டவில்லை என்பதும் உண்மை. ஆனால், அதற்குக் காரணம் நிர்வாகச் சீர்கேடும், அரசியல் தலையீடும், தொழிலாளர்கள் மத்தியில் காணப்பட்ட மெத்தனமும்தானே தவிர, அந்த நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்ததால் அல்ல. அதைத்தான், இந்த நிறுவனங்களின் தற்போதைய அதிகரித்த உற்பத்தித் திறனும், லாபமும் நிரூபிக்கின்றன.

இந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், அவைகளின் நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களைப்போல, லாப நோக்குடனும், திறமையின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும் என்பதும், மக்கள் வரிப்பணம் இந்த நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுசெய்ய வீணடிக்கப்படக் கூடாது என்பதும் உறுதி. அதற்கு வழி இந்த நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதல்ல. தனியார் முதலீடுகளை குறிப்பிட்ட அளவு வரவேற்பதும், அரசு அதிகாரிகள் மட்டுமன்றி முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளும் நிர்வாகத்தில் பங்கு பெறுவதும்தான்.

முப்பது அல்லது நாற்பது சதவிகிதம் பங்குகளைத் தனிநபர்களுக்கு பங்குச்சந்தை வழியே விற்பதன் மூலம் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பங்குதாரர்கள் கேள்வி கேட்க முடியும் என்பதும், நிர்வாகத்தில் பங்குதாரர்களின் பிரதிநிதிகள் இயக்குநர்களாகப் பங்கு பெற முடியும் என்பதும், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல, பங்குகளை பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிப்பதால் லாபம் காட்ட வேண்டிய கட்டாயம் நிர்வாகத்துக்கு ஏற்படும். நிறுவனத்தை நவீனப்படுத்த முதலீடும் கிடைக்கும்.

சிறிய அளவில் நமது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள், பங்குச்சந்தை மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது என்பது காலத்தின் கட்டாயம். அப்போதுதான் அவை உண்மையிலேயே மக்கள் நிறுவனமாகச் செயல்படும். அதுமட்டுமல்ல, இந்த நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் அபாயமும் தவிர்க்கப்படும்!

—————————————————————————————

அரசியல்வாதிகளுக்கும் நடத்தை நெறிமுறைகள்

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்


கடந்த வாரம் நமது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட இரு சம்பவங்கள் செய்தி ஊடகங்களில் இடம்பிடித்திருந்தன. ஜம்மு ~ காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவைக் காவலர்களுடன் கடுமையாக மோதும் காட்சியை ~ கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு அவைக் காவலர்களுக்குக் குத்து விடும் காட்சியை ~ தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பின. விளையாட்டு தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்படும் மல்யுத்தப் போட்டி போல இருந்தது அது.

நமது கவனத்தைக் கவர்ந்த மற்றொரு செய்தி, 35-க்கு மேற்பட்ட குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரும் 8 மாதங்களாக, ஆம்; எட்டு மாதங்களாக தான், குண்டர் படைத் தலைவர்போல தலைமறைவாக இருந்துகொண்டிருந்தவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பானதாகும்.

அந்த ஜம்மு ~ காஷ்மீர் எம்எல்ஏவை ஒரு தொலைக்காட்சி சேனல் பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அவரது கேவலமான நடவடிக்கைக்காக ஒரு துளி வருத்தத்தைக்கூட அப்போது அவர் தெரிவிக்கவில்லை. மாறாக, தேவைப்பட்டால் மீண்டும் அவ்வாறே நடப்பேன் என்று திட்டவட்டமாகக் கூறினார் அந்த எம்எல்ஏ. ஒருவகையில் பார்த்தால், சட்டம் ~ ஒழுங்கைப் பராமரிக்கின்ற காவல் துறையினரைப் போன்றவர்கள்தான் சட்டப் பேரவைக் காவலர்களும். அவையின் கண்ணியத்தைக் காக்கவும் அவைக்குள் நன்னடத்தையை உறுதிசெய்யவும் அவைத் தலைவரின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுப்பவர்கள் அவர்கள். எனவே அவைக் காவலரை ஓர் எம்எல்ஏ தாக்குவதென்பது, காவல் துறையைச் சேர்ந்த ஒரு காவலரை பொதுஜனம் ஒருவர் தாக்குவதற்குச் சமமாகும். அப்படிச் செய்திருந்தால் பொதுஜனத்துக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்த எம்எல்ஏவோ எவ்விதத் தண்டனையுமின்றித் தப்பிவிடக்கூடும். எம்.பி., எம்எல்ஏக்களுக்கு ஒரு குற்றவியல் சட்டம், சாதாரண மக்களுக்கு வேறொரு குற்றவியல் சட்டமா அமலில் இருக்கிறது?

8 மாதங்களாகத் தலைமறைவாகி ஓடிக்கொண்டிருந்த அந்த எம்.பி., அலாகாபாதில் உள்ள ஃபூல்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு காலத்தில் பண்டித ஜவாஹர்லால் நேருவைத் தேர்ந்தெடுத்த பெருமைக்குரியது அத் தொகுதி. அதே தொகுதியின் பிரதிநிதியாக இன்று, நாட்டின் பிரச்னைகளை விவாதித்து முடிவெடுக்கக்கூடிய தேசத்தின் மிக உயர்ந்த அமைப்பான நாடாளுமன்றத்துக்கு குற்றப் பின்னணியைக் கொண்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்கிறார் என்றால் அது காலக்கொடுமைதான்.

அரசியல்வாதிகள் மீதும் சாதாரணப் பொதுமக்கள் மீதும் பழிவாங்கும் எண்ணத்தோடு அதிகாரத்தில் இருப்பவர்களால் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. அரசியல் எதிரிகள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்குகள் தொடரப்படுவதும் நடக்காமல் இல்லை.

தனக்கு எதிராக 35-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், ஓர் எம்.பி. தொகுதியின் பிரதிநிதியாகவும் இருக்கக்கூடிய கெüரவத்தை ஒருவர் பெற்றிருப்பதென்றால் அவர் உண்மையிலேயே பெரிய மனிதர்தான்! ஒருவர் எம்எல்ஏயாகவோ, எம்.பி.யாகவோ ஆக விரும்பினால், அவருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைக் காட்டக்கூடியதாகவும் இருக்கிறது இது. ‘கெüரவமான’ நடுத்தர வர்க்கத்தினர், தொழில் நிபுணர்கள் மற்றும் இதைப் போன்ற சமுதாயத்தின் இதர பிரிவினரெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும் அரசியல் களத்துக்குள் ஏன் வர விரும்பவில்லை என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது. சமுதாயத்தின் கணிசமான பகுதியினர் பொதுவாழ்க்கையில் ஈடுபட முடியாத அளவுக்கு ஒரு மோசமான நிலைமையை அரசியலில் உருவாக்கி விட்டார்கள்.

அந்த எம்.பி., எம்எல்ஏவைப் பற்றி அதே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான அதே நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜெயந்தி நடராஜனும் பங்குகொண்டிருந்தார். அச் சம்பவங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘ஒருவர் குற்றவாளி என்பது நிரூபணமானால், சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்தான்’ என்று சாதாரணமாகக் கூறிவிட்டுச் சென்றார் அவர். சாதாரணமாகப் பார்க்கும்போது, அவர் கூறியது நியாயமானதுதான், சரியானதுதான் என்று தோன்றக்கூடும். அரசியல்வாதிகளைப் பொருத்தவரை அதன் அர்த்தம் சரிதானா என்பதைப் பார்ப்போம்.

மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் மீதான எத்தனையோ வழக்குகள் எத்தனையோ நீதிமன்றங்களில், வெவ்வேறு நிலைகளில் பல ஆண்டுகளாக, ஏன் பத்து ஆண்டுகளுக்கு மேலாகக்கூட விசாரணையில் இருந்துகொண்டு இருப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

பிகார் கால்நடைத் தீவன ஊழல் வழக்கை சுமார் 20 ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் குற்றம் சாட்டப்பட்ட மூத்த அரசியல்வாதிகள் அவ் வழக்குகளில் தண்டிக்கப்படவும் இல்லை, அதிலிருந்து விடுதலை ஆகவுமில்லை. இதைப்போல எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

எடுத்துக்காட்டாக சுக்ராம் வழக்கை எடுத்துக்கொள்வோம். அவரது வீட்டிலிருந்து ரொக்கமாகப் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அரசிடம் அத்தனை புலன்விசாரணை அமைப்புகள் இருந்தபோதிலும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை வெற்றிகரமாக நிரூபிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட அரசியல்வாதியோ சட்டையைக் கழற்றி மாட்டுவதைப்போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சிக்குத் தாவிக்கொண்டு சந்தோஷமாகக் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். மிகப் பலவீனமான புலனாய்வு அமைப்புகள், ஓட்டைகளுடன்கூடிய அரசுத் தரப்பு இயந்திரங்கள், மென்மைப் போக்கு கொண்ட (வளைந்து கொடுக்கக்கூடிய என்றுதான் குறிப்பிட நினைத்தேன்) நீதித் துறை இவற்றாலெல்லாம் அரசியல்வாதிகளுக்கு எதிரான எந்த வழக்கையும் விசாரணை நடத்தி, அதை உரிய வகையில் முடிவுக்குக் கொண்டுவர முடியாது.

ஓர் அரசு ஊழியர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டால், உடனடியாக அவர் பணியிடைநீக்கம் செய்யப்படுவது நடைமுறை விதியாக இருந்து வருகிறது. ஒருவேளை அவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த காலத்தில் ~ வருமானம், பதவி உயர்வு போன்ற ~ இழந்தவையெல்லாம் இழந்ததுதான். அதாவது, மக்கள் பணியாளர்களாக, அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்ற வழக்கு விசாரணையில் இருக்கும் பொழுது அவர்கள் அரசுப் பணியை ஆற்றுவதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம். ஆனால், அரசியல்வாதிகள் விஷயத்தில் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமான காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. சொல்லப் போனால், அமைச்சர்களும் எம்எல்ஏ, எம்.பி.க்களும்கூட மக்கள் பணியாளர்கள்தான்; அரசாங்க ஊழியர்களையும்விட கூடுதலாக மக்கள் பணியாளர்கள் அவர்கள். (பலர் தம்மை மாமன்னர்களாகவும் நவாபுகளாகவும் நினைத்துக்கொள்கின்றனர் என்பது வேறு விஷயம்). எனவே, அரசு ஊழியர்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் அதே கொள்கை, அரசியல்வாதிகள் விஷயத்திலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; குற்ற வழக்குகளில் இருந்து விடுதலை ஆகும் வரையில் அரசுப் பதவிகளை அவர்கள் வகிப்பதற்கும், எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கான பணியை ஆற்றுவதற்கும் அவர்களை அனுமதிக்கக் கூடாது. இந்த ஒரே நடவடிக்கை மூலமாகவே சட்ட மன்றங்களும் நாடாளுமன்றமும் குறிப்பிடத் தக்க அளவுக்குத் தூய்மைப்படுத்தப்பட்டுவிடும்.

அரசுப் பதவிகளை வகிப்போர் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க தனி நீதிமன்றங்களையோ, பிரத்தியேக நீதி அமைப்புகளையோ ஏற்படுத்த வேண்டும் என்று பலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. சாதாரணக் குடிமகனாக இருந்தாலும், சமுதாயத்தில் முக்கியமானவர்களாக இருந்தாலும் சட்டம் யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை; எனவே ஒரே மாதிரியான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்னும் வாதம் முன்வைக்கப்படுகிறது. இது சரியானதுபோலத் தோன்றினாலும் உண்மையில் தவறானதாகும்.

முதலாவதாக, சாதாரணக் குடிமகனுக்கும் விரைந்து நீதி கிடைக்க வேண்டியது அவசியம்தான். ஏராளமான வழக்குகள் பல பத்தாண்டுகளாக நீதிமன்றங்களின் விசாரணையில் இருந்துகொண்டு இருக்கின்றன. ஏராளமான விசாரணக் கைதிகள் சிறையில் இருந்துகொண்டு இருக்கின்றனர். கடைசியில் அவர்களில் பலர் வழக்கில் விடுதலை செய்யப்படக்கூடும் அல்லது மிகக் குறைந்த அளவு தண்டனை விதிக்கப்படவும்கூடும்.

இரண்டாவதாக, நமது சமுதாயத்தில் செல்வாக்குடன் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர் புலனாய்வு அமைப்புகள், விசாரணை அமைப்புகள், நீதி நடைமுறைகள் போன்றவற்றின் மீது தமது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்களாவர் என்பதே உண்மை. அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க முடியாமல் இருப்பதற்கு எந்தவிதக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

எடுத்துக்காட்டாக, குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பதவியில் இருக்க அனுமதிப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவேளை பல ஆண்டு விசாரணைக்குப் பிறகு இறுதியில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால், கறைபடிந்த ஒருவரை அரசின் உயர் பதவியில் அமரவும் அதன் மூலம் சமுதாயத்தின் செல்வாக்கு செலுத்தவும் அனுமதித்தவர்களாகிவிடுவோம் நாம். இந்தக் காரணங்களால்தான் அரசியல்வாதிகள், எம்.பி., எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க விரைவு நீதிமன்றங்கள் தேவை என வலியுறுத்தப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கிய முறைகேடு, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி முறைகேடு ஆகிய ‘முன்மாதிரியான’ செயல்களெல்லாம் தண்டிக்கப்பட வேண்டியவை அல்ல என்று இன்றைய அமைப்பு முறை முடிவு செய்துவிட்டது.

இத்தகைய அரசியல்வாதிகளை முறைப்படுத்த நமது அரசியல் அமைப்புச் சட்டச் சிற்பிகள், எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் போனது நமது துரதிருஷ்டம்தான். அரசியல்வாதிகளெல்லாம் தம்மைப்போல நியாயவான்களாக, சுயநலமற்றவர்களாக, சுத்தமானவர்களாக இருப்பார்கள் என்று ஜவாஹர்லால் நேரு நினைத்திருக்கலாம். அன்று அவர்கள் அந்த ஏற்பாட்டைச் செய்யாமல் போனதற்கான விலையை நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின் நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நன்னடத்தை விதிகள்கூட வகுக்கப்படவில்லை. அத்துமீறல்களை நடத்திவிட்டு எவ்விதத் தண்டனையுமின்றி அவர்கள் தப்புவது வாடிக்கையாகிவிட்டது. சொல்லப் போனால், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்தியாவில் ஜனநாயகப் பாரம்பரியம் என்று ஏதும் இருந்ததில்லை. நமது அரசியல்வாதிகளும் தம்மை முகலாயச் சக்கரவர்த்திகளைப்போல் நினைத்துக்கொள்கின்றனர்.

ஜனநாயக உணர்வுகளும் சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்படவும் இல்லை; மாற்றங்களை உருவாக்கும் வகையில் மக்களின் கருத்துகள் நெறிப்படுத்தப்படவும் இல்லை. எனவே, அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நடத்தை நெறிமுறைகள் வகுக்கப்பட்டாக வேண்டியது அவசியமாகும். ஆனால் அதை யார் செய்வதென்பதே கேள்வி.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்.)

Posted in Accountant General, Accounts, Admin, Administration, AGO, Allegations, Arms, Audit, BHEL, Bribes, Cabinet, Capitalization, Collector, Collectorate, Commission, Committee, Corruption, Deficit, Economy, Employment, Finance, financial, Funds, Globalization, Govt, HAL, Hindustan, Hindusthan, IAL, IAS, IMF, Income, Inquiry, Jobs, Lokpal, markets, NLC, parliament, Planning, Poor, Private, PubAd, Pubic, Public Administration, Rich, SAIL, service, SEZ, Shares, Statements, Statistics, Statz, Stocks, Verification, Wages, WB, Wealth, Weapons | Leave a Comment »

Worldwide tentacles of the nexus between Politics, Bribery & Corruption

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2007

லஞ்சத்தில் சிக்கிய தலைவர்கள்

டி. புருஷோத்தமன்
“மக்கள் பணியே மகேசன் பணி’ என்கின்ற நிலைமாறி “பணம் குவிப்பதே குறிக்கோள்’ என்ற பேராசைக்கு அடிமையாகிவிட்டனர் பெரும்பாலான அரசியல்வாதிகள்.

கட்சியை வழிநடத்தவும் அபரிமிதமான தேர்தல் செலவை ஈடுகட்டவும் பதவிபோனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவும் கோடிக்கணக்கில் பணம் தேவை என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த பேராசைதான் லஞ்சஊழலுக்கு அடித்தளமாக அமைகிறது.

சாதாரண அரசியல்வாதிகளில் இருந்து கட்சித் தலைவர்கள் வரை இருந்த லஞ்சஊழல் படிப்படியாக அமைச்சர்கள் அளவிலும் பின்னர் முதல்வர்கள் என்ற நிலைக்கும் முன்னேறியது.

இதன் உச்சகட்டமாக பிரதமர், அதிபர் போன்றோரும் லஞ்சலாவண்யத்தில் சிக்குவது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஊழலும் செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்தான் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களை முன்னேற்ற வேண்டிய அந்நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் சொந்த நலனில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம்.

பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. நாடு சுபிட்சம் அடைந்து நாமும் வளம் பெறுவோம் என வங்கதேச மக்கள் கண்ட கனவு பொய்யாகிவிட்டது.

அந்நாட்டின் அதிபராக இருந்த எர்ஷாத் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஊழல் விவகாரங்களிலும் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலத்தில் இரு சரக்கு முனையங்களைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்க கோடிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக அவருடைய இரு மகன்கள் அராபத் ரஹ்மானும் தாரிக் ரஹ்மானும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலிதா ஜியாவின் குடும்பமே ஊழலில் சிக்கித் திளைத்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் லஞ்ச விவகாத்தில் சளைத்தவர் அல்ல என்பதை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம். இரு தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக அவர் பெற்ற லஞ்சம் ரூ. 6 கோடி.

ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் அரசியல் எதிரிகளை கொலைசெய்யவும் அவர் தயங்கவில்லை. நான்கு எதிரிகளை அவர் படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வங்கதேச உள்துறை அமைச்சராக இருந்த முகம்மது நசீம் என்பவர் தனது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வருமானத்துக்கு முரணான வகையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தையும் அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டது.

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷிண் சினவத்ராவும் அவர் மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். நிலபேர விவகாரத்தில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு முறைகேடாக அவர்கள் வாங்கியிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.

தைவான் நாட்டின் முன்னாள் அதிபர் சென்னும் அவருடைய மனைவியும் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை அவர்கள் சூறையாடியதாக தைவான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நான்கு தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் என்ற பெயரில் பணத்தை தனது கட்சிக்கு லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மற்றும் அவருடைய கணவர் ஜர்தாரி ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான். சுவிஸ் வங்களில் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜர்தானி மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு லஞ்ச வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடு கடத்தப்பட்டார். பலமுறை முயன்றும் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை. இறுதியாக தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.

இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்தோ ஊழலில் திளைத்தவர். ஏழை நாடு என்ற சிந்தனை ஏதுமில்லாமல் மக்களைச் சுரண்டி, சுகபோக வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை சூறையாடினார்.

பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஊழல் புரிவதில் சாதனை படைத்தவர். 20 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சுருட்டிய பணத்தின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். என்னே அவருடைய மக்கள் சேவை! அவர் மனைவி இமெல்டா விலைமதிப்புள்ள மூவாயிரம் ஜோடி செருப்புகளை வைத்திருந்தவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெர்டினண்ட் மார்க்கோஸýக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர்களும் பிரதமர்களும்தான் இப்படி என்றால் ராணுவ ஆட்சியாளர்களின் செயல்பாடு அதைவிட மோசம் என்றே கூறலாம். மியான்மர் நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் கோரி கிளர்ச்சி நடத்திய மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினர்.

இராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க்கு உணவு பேரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.

மக்கள் நலனை மறந்து ஆடம்பர மாளிகையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த சதாமை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றுவிட்டது.

எனவே, மன்னராட்சி, மக்களாட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எந்த ஆட்சியானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமும் ஊழலும் என்ற நிலை உருவாகி விட்டது.

மக்களைக் காக்க வேண்டிய மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், சர்வாதிகாரிகளும் லஞ்ச ஊழலில் திளைத்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.

—————————————————————————————————————————–
லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?

இரா. சோமசுந்தரம்

திருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் என்ற செய்தி!

இந்த நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, இதற்கெல்லாம் மேலான ஓர் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதாவது: “”அட, எல்லாரும்தான் வாங்குறாங்க. இவங்க, வாங்கினத நியாயமா பங்குபோட்டு மேல கொடுக்காம அமுக்கப் பாத்திருப்பாங்க, ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க” என்பதுதான் அந்த விழிப்புணர்வு.

இந்த மனநிலைக்குக் காரணம் அரசு அலுவலகங்களில் இன்று நிலவும் சூழ்நிலைதான்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டுமானால், உண்மைக்கு மாறாக வருமானத்தைக் காட்ட விரும்புபவர் மட்டுமே அரசு அலுவலர்களைக் “கவனிக்க’ வேண்டியிருக்கும். ஏழைகள் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கப்படுவார்களே தவிர, சான்றிதழ் இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது இலவசம்கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மக்களின் இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம்.

அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் காணப்படாத பிரமாண்டம், தமிழக அரசு விழாக்களில் மட்டும் இருக்கிறது. வரம்புக்கு மீறிய, சட்டம் அனுமதிக்காத செலவுகள் நிறைய!

பல அரசு உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் பெயரில் “ரூம்’ மட்டும் போடப்படும். ஆனால் அவர்கள் தங்குவது நட்சத்திர ஓட்டலில். அத்துடன் வேறுசில சொல்லப்படாத செலவுகளும் உண்டு, அந்தச் செலவை உள்ளூர் அதிகாரிகள் ஏற்க வேண்டும்!

சட்டத்தை மீறிய செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு துறையிலும்- வருவாய்த் துறை என்றால் கிராம நிர்வாக அலுவலர் வரை-ஒரு வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.

தேன் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் விடுவானா? ருசி பார்த்த பூனைகளுக்கு சூடு மறத்துப் போகிறது. மனிதம் மறைகிறது.

ஆதலால், வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்தாலும் “டிரைவிங் ஸ்கூல்’ மூலம்தான் உரிமம் பெற்றாக வேண்டும். அதே ஜாதி, அதே சம்பளத்துக்காக சான்றிதழ் கேட்டாலும் “கொடுத்து’தான் பெற முடியும்.

அரசு நிர்ணயிக்கும் நில மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைப்பட்ட ஒரு மதிப்பை தீர்மானிக்கும் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும்போது, குறைக்கப்படும் பெருந்தொகைக்கு ஏற்ப ஒரு சிறுதொகையை இழக்க வேண்டும்.

விபத்துக்காக முதல் தகவல் அறிக்கை எழுதவேண்டுமானால், காவல்நிலையம் சொல்லும் வழக்கறிஞரை ஏற்று, காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம், 30 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.

இலவச கலர் டிவி பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பல நாளிதழ்களில் வந்தாகிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.

அரசு அறிவிக்கும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு பொருளோ, வங்கி வரைவோலையோ தயாராக இருந்தாலும், “ரொக்கத்தை’ கொடுத்தால்தான் அவை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

பொதுமக்களிடம் பெறும் லஞ்சத்தைவிட அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் பல மடங்காக இருக்கிறது.

பல ஏழை விவசாயிகளின் நிலங்களில் மானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பெழுதி, கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் மானியம் ஆண்டுதோறும் “முளை’ காட்டாமல் மறைந்து விடுகிறது.

ஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அவர்களது செலவுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால், தணிக்கைத் துறை அலுவலர்களையே ஏமாற்றுகிற அளவுக்கு பொய் ரசீதுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் சரிபார்ப்பவரை சரிகட்டுவதும் தாராளமாக இருக்கின்றன.

லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுத்தாலும் எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்?

இவை யாவும் மக்கள் ஏற்படுத்திய பழக்கம் என்றும், அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் என்றும் சொல்லப்படும் பொதுவான கருத்து ஏற்புடையதாக இல்லை.

முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, அரசு அலுவலகங்களில் பரவியுள்ள ஊழலை அரசு அலுவலர்களால்தான் தடுக்க முடியும்.

எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்தத் துறை மற்றும் எந்தெந்த அலுவலர் மூலமாக எவ்வளவு தொகை போகிறது என்ற கணக்கெல்லாம்கூட பொதுவாகப் பேசும்போது ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால் அதை ஓர் அறிக்கையாகக்கூட இச் சங்கங்கள் வெளியிட்டதில்லை.

“”அரசு விழாக்களுக்கு செலவாகும் கூடுதல் தொகைக்காக எங்கள் ஊழியரை வசூல் வேட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று எந்த தொழிற்சங்கமும் போர்க்கொடி தூக்கியதில்லை. ஊழல் செய்யும் அமைச்சரின் முகமூடியைக் கிழிப்பதில்லை.

எந்தெந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பது சக ஊழியருக்குத் தெரியும். ஊழியர் சங்கத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும், லஞ்சம் வாங்கும் ஊழியரை இடைநீக்கம் செய்தாலோ, பதவியிறக்கம் செய்தாலோகூட சங்கம் கொதித்தெழுகிறது. அவரைப் பாதுகாக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. சங்கத்தைவிட்டு அவரை வெளியேற்றியதும் இல்லை.

எத்தனை அறிவார்ந்த தத்துவம் பேசும் அரசியல் கட்சியைச் சார்ந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஊழல் அலுவலரை உறுப்பினராக வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.

இப்போது சொல்லுங்கள்…

லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?

Posted in abuse, Allegations, America, Assassinations, Bangladesh, Biz, Blair, Bribery, Bribes, British, Burma, Bush, Business, Cabinet, Campaign, China, Commonwealth, Contribution, Corruption, crimes, Democracy, Dictators, Dictatorship, Dubya, Elections, England, English, Ferdinand, Finance, Food, Freedom, GWB, Haseena, Hasina, Imelda, Independence, India, Indonesia, Iraq, Khaled, Kingdom, Kings, Laundering, Law, Leaders, Lokpal, London, Luxury, Marcos, Military, Minister, MLA, Money, MP, Murder, Mynamar, Nawaz, Needy, nexus, oil, Order, Pakistan, Party, Phillipines, PM, Politics, Polls, Poor, Power, President, Prince, Princes, Princess, Princesses, Queens, Rich, Saddam, Sharif, Sheikh, Shoes, Suhartho, Suharto, Taiwan, Tamil, Thailand, Tony, UK, US, USA, Wealth, Zia | Leave a Comment »

State of the Justice system & Judiciary process in Tamil Nadu – Law & Order perspectives

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

ஏன் இந்த பாரபட்சம்?

மற்ற விஷயங்களில்தான் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது என்றால் நீதித்துறையிலும் தமிழகம் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நீதிநாள் நிகழ்ச்சியில் பேசும்போது, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி. ஷாவே இதைத் தெரிவித்திருக்கிறார் எனும்போது, நமது கோபத்தில் நியாயம் இருப்பது புரியும்.

அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டால்தான் வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க முடியும் என்கிற நிலைமை. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமையிலும் இருக்கும் பிரச்னை என்பதில் சந்தேகமில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனும் இந்த விஷயத்தில் நமது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்தைத்தான் புதுதில்லியில் நடந்த “நீதி நாள்’ விழாவில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒட்டுமொத்த இந்தியாவின் கீழமை நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றம் வரையிலான அத்தனை நீதிமன்றங்களையும் சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை வெறும் 14,477தான். அதிலும் 2,700 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் விரைவில் நீதி வழங்குவது என்பது இயலாத விஷயம் என்று பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனால், நமது மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை?

மற்ற எல்லா துறைகளுக்கும் ஆயிரம் கோடிகளில் நிதி ஒதுக்கித் தரும் மத்திய அரசு, நீதித்துறைக்கு கடந்த பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கித் தந்திருக்கும் நிதி எவ்வளவு தெரியுமா? வெறும் 700 கோடி. அதாவது, மொத்தத் திட்ட ஒதுக்கீட்டில் 0.078 சதவீதம். போதிய நிதி வசதி இல்லாதபோது நீதிபதிகளை நியமிப்பது எப்படி, நீதிமன்றங்களின் செயல்பாடுகளை நவீனப்படுத்துவது எப்படி, தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்குவது எப்படி?

கடந்த பத்து ஆண்டுகளாக, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும்தான் முடிவெடுக்கின்றன என்றாலும், தாங்கள் தேர்ந்தெடுக்கும் பட்டியலை அந்தந்த மாநில முதல்வர்களின் ஒப்புதலுக்கு அனுப்புவது என்கிற வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அரசியல் மனமாச்சரியங்கள் பல தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளின் தலையெழுத்தை மாற்றும் துர்பாக்கியம் எல்லா மாநிலங்களிலும் தொடர்கிறது. இதற்கு யார் முடிவு கட்டுவது என்று தெரியவில்லை.

2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,58,900 முக்கிய வழக்குகளும், 1,27,060 சிறு குற்றங்களுக்கான வழக்குகளும் இருந்ததுபோய், இப்போதைய நிலவரப்படி, 2,05,194 முக்கிய வழக்குகளும், 2,15,736 சிறு குற்றங்களுக்கான வழக்குகளும் நமது தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். இத்தனைக்கும், அகில இந்திய சராசரியைவிட அதிகமான அளவுக்குத் தமிழக நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையான 49 பேரில் தற்போது நியமிக்கப்பட்டிருப்பது என்னவோ 45 நீதிபதிகள்தான். இன்னும் நான்கு நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கின்றனர். பல ஆண்டுகளாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தும் இதுவரை தமிழகத்தைப் பொருத்தவரை நியாயம் கிடைத்தபாடில்லை.

தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் கருத்தில்கொண்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மற்ற உயர் நீதிமன்றங்களைப்போல, சென்னை உயர் நீதிமன்றமும் கோரிக்கை வைத்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 49-லிருந்து 69 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று மத்திய நீதித்துறைக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பரிந்துரைத்தும் எந்தவிதப் பயனும் இல்லை.

மும்பை, தில்லி, அலகாபாத், கேரளம் போன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உடனடி உத்தரவு பிறப்பித்த மத்திய சட்ட அமைச்சகம், சென்னை உயர் நீதிமன்றத்தின் கோரிக்கையை மட்டும் பரிசீலிக்காமல் இருப்பது ஏன்? இத்தனைக்கும் மத்திய அரசில் சட்டத்துறையின் இணையமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அதுதான் வேடிக்கை!

———————————————————————————————————–

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி

கே.வீ. ராமராஜ்

குற்றவியல் நீதி நிர்வாகத்தில் குற்றவாளிகளும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளின் உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை பிரகடனங்களை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம், மனித உரிமைச் சட்டம் போன்றவற்றின் மூலம் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இவ்வளர்ச்சிக்கு இணையாக குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதில் மேம்பாடு அடையாமல், அவர்கள் மறக்கப்பட்ட மக்களாக உள்ளனர் என்று கூறப்படுகிறது.

எனவே பாதிக்கப்பட்டோருக்கு உறுதியாக உதவும் வகையில் குற்றவியல் விசாரணைச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

முதலாவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை காவல்நிலையம், நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் நல்ல முறையில் கவனிப்பதோடு பாதிக்கப்பட்டோருக்கான நீதி எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டோரின் உடைமைகள் கிடைக்கப்பெறுதல் உள்பட எல்லா அம்சங்களிலும் அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும்.

மூன்றாவதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகளிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ இழப்பீடு கிடைக்க வேண்டும்.

நான்காவதாக, மருத்துவ உதவி, பொருள் உதவி, உளவியல் ரீதியில் உதவி உள்ளிட்ட சமூக உதவிகள் கிடைக்க வேண்டும்.

நமது நாட்டைப் பொருத்தவரை குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுப்பவர்களாக, நீதிமன்றத்தில் சாட்சிகளாக மட்டுமே உள்ளனர். அவர்கள் குற்றவியல் விசாரணை நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியாது. இந்திய குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 357-வது பிரிவு குற்றவாளி என தீர்ப்பு செய்யப்படுபவருக்கு விதிக்கப்படும் அபராதத்தின் ஒரு பகுதியை பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடாக வழங்கலாம் எனத் தெரிவிக்கிறது. குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் போகும்போதும் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படும்போதும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை.

குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைச் சிறப்பாக வழங்க மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை 1998-ல் “”பாதிக்கப்பட்டோர் நீதிக்கான கையேடு” ஒன்றையும் அதனை அமலாக்க “”கொள்கைகள் உருவாக்குபவர்களுக்கான வழிகாட்டியையும்” வெளியிட்டது. இதைப் பின்பற்றி பாதிக்கப்பட்டோர் நீதிக்கான கொள்கைகள் இந்தியாவில் வகுக்கப்பட வேண்டும்.

குற்றங்களால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். இதற்கான மாதிரி சட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் இந்திய பாதிக்கப்பட்டோரியல் கழகம் மத்திய அரசிடம் பத்தாண்டுகளுக்கு முன்பே சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே முதன்முறையாக பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆதரவோடு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்டோரியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது.

குற்றம் நிகழும்போது பாதிக்கப்பட்டவர் எவ்வாறு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும்? முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் காவல் துறையினர் தாமதம் செய்தால் என்ன செய்ய வேண்டும்? புலன் விசாரணை செய்வதில் காவல் துறையினர் கவனக்குறைவாகச் செயல்பட்டால் என்ன செய்வது, போன்ற வழிகாட்டுதலை மேற்கொள்ள பாதிக்கப்பட்டோர் உதவி மையம் அமைக்கப்பட வேண்டும்.

காவல் துறையினர் கைப்பற்றிய பாதிக்கப்பட்டோரின் சொத்துகளை அவர்கள் எளிதில் நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெறவும், குற்றவியல் விசாரணை முறைகளைப் பாதிக்கப்பட்டோர் அறிந்து கொள்ளவும், பாதிக்கப்பட்டோரும் சாட்சிகளும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளிப்பதில் உள்ள பிரச்னைகளைக் களையவும் பாதிக்கப்பட்டோர் உதவி மையங்கள் பணியாற்ற வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான நீதிமன்ற விசாரணைகளில் அரசு வழக்கறிஞருடன் பாதிக்கப்பட்டவர் தாமோ அல்லது தமது வழக்கறிஞர் மூலமோ இணைந்து செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்களில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படும்போதும் குறைந்த தண்டனை வழங்கப்படும்போதும் மேல்முறையீடு செய்ய பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்க வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியற்றவர்களுக்கு அரசே வழக்கறிஞரை அமர்த்தித் தர வேண்டும். இதுகுறித்து மாலிமத் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் பரிந்துரைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

தேசிய அளவிலும் மாநில அளவிலும் “”பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியம்” ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் ஆணையாளர் (ஆம்புட்ஸ்மேன்) அலுவலகங்களை அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி, அதன் கீழ் பாதிக்கப்பட்டோர் உதவி மையங்களை ஒருங்கிணைக்க வேண்டும். இவை அனைத்தும் இலவச சட்ட உதவிகள் வழங்கும் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் மேற்பார்வையில் செயல்படலாம்.

மேலை நாடுகளில் குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தன்னார்வ அமைப்புகள் செயல்படுகின்றன. இந்தியாவிலும் இதுபோன்று உதவ தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும்.

Posted in Accused, Allegations, Allocations, Attorney, Bench, Budget, Cabinet, Center, Convicts, Courts, Criteria, Culprits, Economy, Funds, Govt, HC, HR, Judgements, Judges, Judgments, Judiciary, Jury, Justice, Law, Lawyers, Ministry, Numbers, Op-Ed, Order, Perspectives, quantity, rights, SC, selection, Sentence, Sentencing, Tamil Nadu, TamilNadu, Verdicts | Leave a Comment »

Economic Survey: Central Pay Commission Report – Indiscriminate salary raises?

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

ஊதிய உயர்வும் நிதிச் சுமையும்!

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 2008-ல், இந்தியா முழுவதும் மாநில அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களும் அதிகரிக்கும். வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு சிறப்புப் பரிசைப் போல அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்படவிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

1997 வாக்கில் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான 5-வது ஊதியக் கமிஷனின் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டபோது, அப் பணியில் நானும் ஈடுபட்டிருந்தேன். அந்த ஊதிய உயர்வுப் பரிந்துரைகளை அமல்படுத்தியதையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட நிதிச் சுமையை அவை சரிக்கட்டுவதற்கு நான்கைந்து ஆண்டுகளுக்குமேல் ஆனது. வரும் ஆண்டுகளில் அதே நிலைமை மீண்டும் ஏற்படும்.

இன்றைய சூழலில், புதிய ஊதியக் குழு பரிந்துரையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்றே தெரிகிறது. தனியார் துறையில் உள்ள அதிகாரிகளின் ஊதியங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. எனவே தனியார் துறைக்கு இணையாக அரசு அதிகாரிகளுக்கும் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கின்றன.

இதில் முக்கியமான பிரச்னை என்னவென்றால், அரசுத் துறைகளைப் பொருத்தவரை, பெருந்தொகையை ஊதியமாகவும் கொடுத்துக்கொண்டு, பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களையும் வைத்துக்கொண்டு இருக்க முடியாது என்பதுதான். ஏனென்றால், அரசுத் துறைகளில் இப்போது பல லட்சம் பேர் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றனர். அதில் 90 சதவிகிதமாக இருக்கும் சி மற்றும் டி பிரிவுகளில் தேவைக்கு அதிகமாக ஏராளமானோர் பணியில் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடியும். அரசுத் துறைகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதுடன், ஒரே வேலையையே வேறு ஊழியர்கள் திரும்பவும் செய்வதையும் தவிர்த்துவிட்டால், பணித் திறனும் வேகமும் அதிகரிக்கும்.

நவீன தகவல் தொடர்பு முறைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டு வேலைத்திறனைப் பெருமளவில் அதிகரிக்க முடியும். ஆனால், அதற்கான முயற்சி நடைபெறுவதாகத் தெரியவில்லை. அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முன்வராமல், தனியார் துறைக்கு இணையாக அரசு அலுவலர்களின் ஊதிய விகிதங்கள் மட்டும் உயர வேண்டும் என எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை. ஏற்கெனவே, பல மாநில அரசுகளின் நிர்வாகச் செலவினங்கள் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளன. எனவே, அரசு ஊழியர்களின் ஊதியம் இன்னும் அதிகரித்தால் கூடுதல் நிதிச் சுமையை அவற்றால் தாங்கிக்கொள்ள முடியாது. அதற்காக, அரசு ஊழியர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வை வழங்கக் கூடாது என்று இங்கு வாதிடவில்லை; மாறாக, சி மற்றும் டி பிரிவு ஊழியர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கலாம்.

“உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதியம்’ குறித்து அவ்வப்போது பேசப்பட்டுவருகிறது. மத்திய, மாநில அரசுத் துறைகளில் நடைபெற்றுவரும் பல்வேறு விதமான பணிகளைக் கருத்தில் கொண்டால், அவற்றை வகைப்படுத்தி, அந்த ஊழியர்களின் உற்பத்தித் திறனை வரையறுக்க ஒரு திட்டவட்டவமான உத்தியை வகுப்பதென்பது அனேகமாக இயலாத காரியமென்றே தோன்றுகிறது.

எடுத்துக்காட்டாக, காவல் துறை ஆய்வாளரின் உற்பத்தித் திறனை வரையறுப்பது எப்படி? அவர் எத்தனை குற்ற வழக்குகளில் புலனாய்வை முடித்திருக்கிறார் என்பதைக் கொண்டு அவருக்கு ஊதியத்தை வழங்குவதாக வைத்துக்கொள்வோம். அவர் புலனாய்வு செய்த வழக்குகள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வருவதற்குள் 10 ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கும்; வழக்குகளைச் சரியாகப் புலனாய்வு செய்யாததால், நீதிபதியின் விமர்சனத்துக்கும் அவர் உள்ளாகியிருக்கக்கூடும். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே “புலனாய்வுத் திறமை’க்காக அந்த ஆய்வாளர் ஊக்கத்தொகையையும் பெற்று, அதன் காரணமாகவே பதவி உயர்வும் பெற்றுச் சென்றுவிட்டிருப்பார்.

ஒரு மாவட்ட ஆட்சியரின் உற்பத்தித் திறனை எவ்வாறு வரையறுக்க முடியும்? அந்த மாவட்டத்தில் சில விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுவிட்டார்கள்; எனவே அந்த மாவட்ட ஆட்சியரின் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது என்ற முடிவுக்கு வர முடியாது. ஏனென்றால் விவசாயி தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் அவர் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகும்.

தனியார் துறையில் லாபமே நோக்கம். எனவே, அதே அளவுகோலைப் பயன்படுத்தி அரசுத் துறை ஊழியரின் பணியை வரையறுக்க முடியாது.

எடுத்துக்காட்டாக, மத்திய அரசின் பெட்ரோலியத் துறைச் செயலரை எடுத்துக்கொள்வோம். அவர் செய்யும் அதே பணியை தனியார் துறையில் அவர் செய்துகொண்டு இருந்தால், அவரது ஆண்டு ஊதியம் ரூ.5 கோடியாகவோ அல்லது ரூ.10 கோடியாகவோ இருக்கக்கூடும். ஆனால் அரசுத் துறையில் அந்த ஊதியத்தை வழங்குவது குறித்து யோசிக்க முடியுமா?

இங்கிலாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் அரசு ஊழியர்களுக்கு “உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதிய’ முறையை அமல்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறுவது அர்த்தமற்ற வாதம். ஏனென்றால், அத்தகைய வளர்ந்த நாடுகளில் இருந்து, இந்தியவைப் போன்று, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் இடையே வேறு வகையான உறவு நிலவும் நாடுகள் முற்றிலும் மாறுபட்டவை.

நம் நாட்டில், “ஆண்டுதோறும் பணியை மதிப்பிடும் முறை’ ஒன்று ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால் அது இப்போது செயலற்றுப் போய்விட்டதற்கு இன்றைய பணி நிலைமைகளும், அரசுப் பணிகளில் நிலவும் அரசியல் செல்வாக்கும் தலையீடுகளுமே முக்கிய காரணங்கள். எனவே, “உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதிய முறை’யால், இப்போதைய குறைபாடுகளைப் போக்கிவிட முடியாது.

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் என்பது கேடு விளைவிக்கும் யோசனையாகும். 1997-ல் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிய பொழுதே அதை நான் எதிர்த்தேன். ஆனால், அதன் பிறகு புதிதாகப் பொறுப்பேற்ற அரசு, ஊழியர் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்திவிட்டது.

ஊழியர்கள் 2 ஆண்டுகள் தாமதமாக ஓய்வுபெறுவர் என்பதால், அவர்களது வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை (கிராஜுட்டி) போன்றவற்றை இரு ஆண்டுகள் கழித்துக் கொடுத்தால் போதும். எனவே புதிய அரசின் முதல் ஆண்டு பட்ஜெட்டில் நிதிச் சுமை குறைவாக இருக்கும். அது புதிய அரசுக்கு உதவியாக இருக்கும் என்று காரணம் கூறப்பட்டது. இந்த வகையான குறுகியகாலப் பயனைக் கருத்தில் கொண்டு ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்துவது மிகத் தவறானது.

ஓய்வுபெறும் வயது வரம்பு உயர்த்தப்படுவதால், ஏராளமான இளைய வயதினருக்கு பதவி உயர்வுகள் தள்ளிப்போகின்றன. அது அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தும். திறமை குறைந்த ஏராளமான பணியாளர்கள் மேலும் 2 ஆண்டுகளுக்குப் பணியில் தொடரும் நிலை ஏற்படும். அடுத்த நிலையில் இருப்போருக்கு அவர்கள் தடைக்கற்களாகவும் மாறிவிடுவார்கள். எனவே, ஓய்வுபெறும் வயதை உயர்த்தக் கூடாது.

நிர்வாகச் சீர்திருத்தம் குறித்தும் கூறப்படுகிறது. ஆனால், ஊதியக் கமிஷனின் பரிந்துரையில் நிர்வாகச் சீர்திருத்தம் இடம்பெறுமா என்பது தெரியவில்லை. ஆனால் நிர்வாகச் சீர்திருத்தம் என்று கூறும்பொழுது, பெரும்பாலும் அது தொழில்நுட்பம் சார்ந்ததாகவே இருக்கிறதே தவிர, நடைமுறைச் செயல்பாடுகளின் தரத்தை உயர்த்த எந்த வகையிலும் உதவவில்லை. அரசியல்வாதிகள் ~ அதிகாரவர்க்கத்துக்கு இடையிலான உறவுகள்தான் நிர்வாகச் சீர்கேட்டுக்குக் காரணமாகும். அதைக் களையாமல் சீர்திருத்தங்களால் எந்தப் பயனும் விளையாது.

உற்சாக மிகுதியில், மாநில அரசுகளால் தாங்க முடியாத நிதிச் சுமையை ஏற்படுத்தும் அளவுக்கு அபரிமிதமான ஊதிய உயர்வை ஊதியக் குழு பரிந்துரைக்காது என எதிர்பார்ப்போம். அதேபோல, அதை தேர்தலுக்கு முன் கிடைத்த நல்ல வாய்ப்பாகக் கருதி, அரசியல் நோக்கத்தில், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகளை மத்திய அரசும் வாரி வழங்கிவிடாது என்று நம்புகிறோம்; இல்லையெனில், அவை மாநில அரசுகளின் நிதி நிலைமைமீது பெருத்த அடியாக அமைந்துவிடும்.

    (Rs. in crores)

 

Year

Gross Revenue

Interest payment per year
Crore

Net
Receipt Pay

Pay
Allowances

% of net
revenue

 


  Pay Bill Pension Bill

Posted in AG, Allowance, Appraisal, Attorney, Budget, Cabinet, Collector, Commission, Compensation, Economy, employee, Expenditure, Expenses, Finance, Govt, Growth, Increase, Inflation, Jobs, Merit, Pandian, Pay, Performance, Price, PSU, PWD, Raise, Rathnavel, Rathnawel, Ratnavel, Recession, recommendations, responsibility, Rise, Roles, Salary, Tariff, Tax | Leave a Comment »

Law and Order – State of Justice system in India (Opinions & Judgments)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

எண்ணங்கள்: நீதித்துறையின் அதிக�

உயரத்தை உணர்ந்து செயல்படுவதே உசிதம்!

உ .ரா. வரதராசன்

ஐக்கிய முன்னணி ஆட்சியில் பிரதமராக இருந்த தேவ கௌடா பதவி விலக நேரிட்டபோது, அடுத்த பிரதமர் யாரென்ற கேள்வி எழுந்தது; திமுக தலைவர் கருணாநிதியிடம், பத்திரிகையாளர்கள், “நீங்கள் ஏன் பிரதமராக முயற்சி செய்யக்கூடாது’ என்று கேட்டனர். கருணாநிதியோ “என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்’ என்று அர்த்தமுள்ள பதிலைச் சொன்னார்.

உயர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் மட்டுமல்ல, உயர் பதவியில் அமர்பவர்களும், தங்களின் – தங்கள் பதவியின் உயரத்தை உணர்ந்து செயல்படுவது என்பது மிகமிக அவசியம். உச்ச நீதிமன்றத்தின் அண்மைக்காலச் செயல்பாடுகள் இதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.

பொதுப் பதவி எதுவாக இருப்பினும் அது மக்களின் நம்பிக்கைக்குரியதாக அமைய வேண்டும்; நீதித்துறைப் பதவிகளும் இந்தப் பொறுப்பாண்மைக்கு உட்பட்டவையே. இந்திய அரசியல் சட்டத்தின்படி, அரசு நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை இவை மூன்றுமே அவற்றுக்கான பொறுப்புகளைச் சுதந்திரமாக வகிக்க உரிமையுள்ளவை. ஆனால் இவை எல்லாமே அரசியல் சட்டத்துக்கு உட்பட்டவை. அந்த வகையில் நீதித்துறையும் அரசியல் சட்டத்துக்கு மேலான – அல்லது உயர்வான – ஒன்றல்ல.

ஆனால், வழக்கு விசாரணையின்போது, அண்மைக்காலங்களில் சில நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகள் இந்த வரம்பை மீறியதாகவே உணரப்படுவது கவலைக்குரிய ஒன்று.

தலைநகர் தில்லியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள் முதலானோர் குடியிருப்பதற்காக ஒதுக்கப்படும் வீடுகள் பலவற்றில், அவற்றைப் பெற்று அனுபவித்த நபர்கள் பதவிக்காலம் முடிந்த பின்னரும், காலவரையறையற்ற முறையில் தொடர்ந்து வசித்து வருவது தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஒருவர் “அவருக்கு தில்லியில் என்ன வேலை? அவரைத் தூக்கி எறியுங்கள்’ என்று கோபத்தைக் கக்கினார். அந்த “அவர்’ ஒரு முன்னாள் மத்திய அமைச்சர்; அந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நேரத்தில் ஒரு மாநிலத்தின் ஆளுநர்! நீதிபதி ஒருவர், அவரைப் போன்ற உயர் பதவியில் இருந்த ஒருவரை, தூக்கியெறிய உத்தரவிடும் அளவிற்கு அலட்சியமாகக் கருதியது வரம்புக்கு உட்பட்டதுதானா?

இன்னொரு வழக்கு: மத்திய அரசின் பொறுப்பிலுள்ள மருத்துவக் கழகம் மூன்றாண்டுகளாகப் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை. பட்டம் பெற முடியாமல் அவதியுற்ற மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியபோது, நீதிமன்றம் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிக்க ஒரு காலக்கெடு விதித்திருந்தால் போதுமானது. “24 மணி நேரத்துக்குள் பட்டப்படிப்புச் சான்றிதழ்களில் கையெழுத்திடுக’ என்று மத்திய அமைச்சருக்கு உத்தரவிடும் அளவுக்கு நீதிபதி சென்றது சரியான நடைமுறையா?’

நிர்வாகத்தின் தவறுகளை, சட்டமன்ற – நாடாளுமன்றங்களின் அத்துமீறல்களை தயவுதாட்சயண்மின்றிக் கடுமையாகச் சாடும் நீதிமன்றங்கள், நீதித்துறையின் உயர் பதவி வகிப்பவர்களைப் பற்றிய பிரச்னைகள் எழும்போது அதே அளவுகோலைக் கடைப்பிடிப்பதில்லையே!

குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய – மாநில அமைச்சர்கள் போன்ற உயர் பதவிகளில் இருப்போருக்கு எதிராக “பிடி வாரண்ட்’ பிறப்பித்த நகைப்புக்கிடமான செயல்பாட்டில் நீதித்துறையின் ஒரு பிரிவு இறங்கியது, சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்புச் செய்தியானது. அதைவிட அந்தப் “பிடி வாரண்டுகள்’ விலை கொடுத்து வாங்கப்பட்டவை என்றும் தகவல் வெளியானதுதான் அதிர்ச்சியானது!

நீதித்துறையின் ஒரு பிரிவு இதுபோன்ற பேரத்தில் ஈடுபட்டதைப் படம்பிடித்து ஊடகம் ஒன்று வெளியிட்ட நிகழ்வில், தவறு பேரம் பேசியதில் அல்ல; ஊடகம் படம் பிடித்ததுதான் என்று நீதிமன்றம் சினங்கொண்டதையும் நாம் பார்த்தோம்!

நீதிபதி ஒருவர் நேர்மையற்ற முறையில் செயல்பட்டதாக, மும்பை நாளேடு ஒன்று குற்றஞ்சாட்டியதோடு, அதையொட்டிய பின்னணித் தகவல்களையும் சித்திரித்து வெளியிட்டது. அதற்காக நீதிமன்ற அவமதிப்புக் குற்றஞ்சாட்டப்பட்டு அந்த நாளேட்டின் பொறுப்பாளர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது மற்றொரு நிகழ்வு.

நீதிமன்றத்துக்கு வரும் வழியில் ஊர்வலம் ஒன்று குறுக்கிட்டதால் சில மணிநேரம் வழியில் தாமதிக்க நேரிட்ட நீதிபதி ஒருவர், கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் எவருமில்லாமலேயே தானாகவே வழக்கு ஒன்றை சிருஷ்டித்து, “வார (வேலை) நாள்கள் எதிலும் இனி ஊர்வலம் என்பதையே அனுமதிக்கக் கூடாது’ என்று உத்தரவு போட்ட வானளாவிய அதிரடி அதிகாரத்தையும் நாடு கண்டது.

அண்மையில் வெளிச்சத்துக்கு வந்த இரண்டு வழக்குகளில் ஒன்று, 40 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது; இன்னொன்று 50 ஆண்டுகள் நீடித்தது. இவற்றில் தீர்ப்பைச் சொன்ன நீதிபதிகள், “இத்தகைய காலதாமதங்கள் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருக்க வேண்டிய நம்பிக்கையையே தகர்த்துவிடும்’ என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டனர்.

வேறொரு நிகழ்வில் ஒரு நீதியரசர் வேதனையோடு சுட்டிக்காட்டிய விஷயம் – “நீதிமன்றங்கள் வழங்குகிற உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதில்லை; அதிலும் மீண்டும் அவமதிப்பு புகார் மனுவின் மீதோ அல்லது வேறுவகையிலோ நீதிமன்றம் சாட்டையை எடுக்க வேண்டியுள்ளது” என்பதாகும்.

மேற்குறிப்பிட்ட இரண்டுமே, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அப்பாலும் தங்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டியுள்ளது என்ற கசப்பான உண்மையைச் சுட்டுவனவே. இந்த முயற்சிகள் ஜனநாயகப்பூர்வமாக அமைய வேண்டும்; வன்முறை கலவாததாக இருக்க வேண்டும் என்பதில் நீதித்துறைக்கு மட்டுமன்றி, நாட்டு மக்கள் அனைவருக்குமே அக்கறை உண்டு. அந்த ஜனநாயக உரிமைகளுக்கு நீதிமன்றங்களின் சொல்லும் செயலுமே குறுக்கே நிற்பதாக மக்கள் கருத நேரிட்டால், அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் நாளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த “பந்த்’, உயர் நீதிமன்றம் அதைச் சில நிபந்தனைகளுக்கு உட்படுத்தி தடை விதிக்க மறுத்த பின்னணி, ஞாயிற்றுக்கிழமை அவசர அவசரமாக விசேஷ அமர்வு நடத்தி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடைஉத்தரவு, அதை, “பந்த்’துக்கு அழைப்பு விடுத்த அரசியல் கட்சிகள் உண்ணாவிரதமாக மாற்றி அறிவித்தது, நடைமுறையில் கிட்டத்தட்ட முழு அடைப்பாக மாறிக் காட்சியளித்த தமிழ்நாடு, அதையொட்டி எதிரும் புதிருமாக எழுந்த பலமான குற்றச்சாட்டுகள் – இவை, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளால் மிகுந்த பொறுமையோடும் நிதானத்தோடும் கருத்தூன்றிப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.

ஆனால் வழக்கில் ஒருதரப்புக்காக வாதிட்ட வழக்கறிஞர் ஒருவர் கூறியதையே வேதவாக்காக ஏற்று, “அரசியல் சட்டம் நிலை குலைவு’, “மாநில அரசைக் கலைக்க உத்தரவிடுவோம்’, “நீதிமன்ற அவமதிப்பு என்று புகார் மனு கொடுக்கவும்’, “முதலமைச்சரையும், தலைமைச்செயலாளரையும் கொண்டு வந்து நிறுத்துவோம்’ – என்றெல்லாம் நீதிபதி ஒருவர் மனம்போன போக்கில் பொறிந்து தள்ளியது எந்த வகையில் நியாயம்?

நீதித்துறையின் சின்னமே, துலாக்கோலைச் சமன்செய்து தூக்கிப்பிடித்து, கண்கள் மறைக்கப்பட்டு நிற்கும் நீதிதேவதைதான். ஒருபால் கோடாமைக்கும் சார்புநிலைக்கு அப்பால் நின்று செயல்படுவதற்குமான அடையாளங்கள் அவை! நீதித்துறை அந்த அடையாளங்களை இழந்துவிடக் கூடாது.

உச்சத்தில் அமர்ந்தாலும் தன் உயரத்தை உணர்ந்து செயல்படுவதே நீதித்துறைக்கும் உசிதமாகும்.

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)

 

——————————————————————————————————-

மாலை நீதிமன்றங்கள் தீர்வாகுமா?

வெ. ஜீவகுமார்

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய புள்ளிவிவரங்கள், தொலைக்காட்சியிலும் நாளேடுகளிலும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.

கடந்த செப்டம்பர் மாத புள்ளி விவரப்படி, நாட்டிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 30 லட்சம். கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் இரண்டரை கோடிக்கும் அதிகம். உச்ச நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு நிலுவையில் இருந்த வழக்குகளின் எண்ணிக்கை 39,780. கடந்த மார்ச் 31 நிலவரப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தவை 4,06,958. சுமார் மூன்றரை லட்சம் கிரிமினல் வழக்குகளும் 26,800 சிவில் வழக்குகளும் நிலுவையில் இருந்தன.

வழக்குகளை விரைந்து முடிக்க ஒரு தீர்வாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாலைநேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன. அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.

மற்றநாடுகளில் உள்ள மக்கள்தொகை- நீதிபதிகளின் எண்ணிக்கை விகிதாசாரத்திற்கும் நமது நாட்டில் உள்ள விகிதாசாரத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. கனடா நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு நீதிபதிகளின் எண்ணிக்கை 104. ஆனால் 105 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், 10 லட்சம் மக்களுக்கு 12 நீதிபதிகள் என்ற கணக்கில்தான் உள்ளது.

அகில இந்திய நீதிபதிகள் சங்க வழக்கில், 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் என்று எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த விகிதாசாரம் போதுமானதா என்பது ஒருபுறமிருக்க இதுவும்கூட இன்றுவரை அமல்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை.

நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டிலும் குறை உள்ளது. கொரியா நீதித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. சிங்கப்பூரில் நிதி ஒதுக்கீடு 1.2 சதவிகிதம். பிரிட்டனில் நிதி ஒதுக்கீடு 4.3 சதவிகிதம். இந்தியாவிலோ நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீடு 0.2 சதவிகிதம் மட்டுமே. உலக அரங்கில் ஆயுதங்கள் வாங்க மிகுதியாக ஒதுக்கீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. மருத்துவத்திற்கோ கல்விக்கோ, நல்ல குடிநீருக்கோ, மக்களின் ரத்தச்சோகையைப் போக்கவோ, சாலைகளுக்கோ, விவசாயத்திற்கோ இந்திய அரசு எப்போதும் போதிய நிதிஒதுக்கீடு செய்ததில்லை. புறக்கணிக்கப்படும் இந்த பட்டியலில்தான் நீதித்துறையும் இடம்பெறுகிறது.

20 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்களை வாங்கி அவை காலாவதியான நிலையில் தார் பாலைவனத்தில் போட்டுபுதைக்கும் இந்தியா, தனது மக்களுக்கு காலாகாலத்தில் நீதி வழங்குவதைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. குட்டி நாடுகள் தமது பராக்கிரமம், படை பலம் பற்றிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் தராமல், நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கின்றன. உலகிலுள்ள 207 நாடுகளில் சுமார் 60 நாடுகளில் எந்தப் படையும் இல்லை என்று கூறுகின்றனர். எனினும் அங்கெல்லாம் நீதித்துறைக்கு என்று தனி நிதி ஒதுக்கீடு உள்ளது.

இச் சூழ்நிலையில், கடந்த ஜூலை முதல் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்பட 11 மாவட்டங்களில் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை இயங்கும் மாலை நேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டன. அக்டோபரில் மேலும் பல மாவட்டங்களில் மாலை நேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன.

உரியகாலத்தில் முறையாக நீதி வழங்கவேண்டுமென்றால், 105 கோடி மக்களுக்கு 12 ஆயிரம் நீதிபதிகள் என்ற இன்றைய எண்ணிக்கை போதவேபோதாது. தீர்வுகளில் ஒன்றாக இப்போது கிராம நீதிமன்றங்கள் என்ற கோட்பாடும் முன் வைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நீதிமன்றம் இருந்ததாகத் தொல்லியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல்முறையீட்டு வசதிகளும் செய்யப்பட்டிருந்தனவாம்.

14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு அன்னியர் ஆதிக்கத்தின் காரணமாக, கிராம நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பாதிப்படைந்தன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றால் அறிவியல் பூர்வமான தீர்வுகளைத்தான் உருவாக்க வேண்டும். நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதித்துறை ஊழியர்களுக்கும் மேலும் சுமையையும் காலவிரயத்தையும் ஏற்படுத்தக்கூடிய மாலைநேர நீதிமன்றங்கள் மட்டுமே தீர்வாகிவிடாது.

மக்கள்தொகை விகிதாசாரத்திற்கேற்ப நீதிமன்றங்கள் கூடுதலாக உருவாக்கப்பட வேண்டும். நீதித்துறையில் உள்ள அனைத்துக் காலியிடங்களும் பூர்த்தி செய்யப்படவேண்டும். தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும். கட்டமைப்பு வசதிகள் உள்பட நீதித்துறையின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். நிதி ஒதுக்கீடும் போதிய அளவில் இருக்க வேண்டும். வழக்குகள் தேக்கம் நீங்கும்; நீதியும் துரிதமாகக் கிட்டும்!

Posted in Bandh, Bias, Bipartisan, Cabinet, comments, Constituition, Courts, Feedbacks, Govt, HC, Judge, Judgement, Judgements, Judgments, Judiciary, Jury, Justice, Law, Legislative, Media, Minister, MLA, MP, Opinion, Order, Party, Politics, President, SC | Leave a Comment »

Rare Chozha Grain Jacket found near Wallajah

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 7, 2007

வாலாஜா அருகே சோழர்கால அரிய தானிய உறை

வேலூர், ஆக. 8: வேலூர் மாவட்டம், வாலாஜா அருகேயுள்ள அவரைக்கரை-நவ்லாக் அருகில் எழுத்துகளுடன் அரிய சோழர்கால தானிய உறை கிடைத்துள்ளது.

நவ்லாக் அரசு தோட்டப் பண்ணை அருகே செங்கல் சூளைக்காக மண் எடுக்க பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது இந்த உறை 10 அடி ஆழத்தில் காணப்பட்டது.

உறையின் மேல்பகுதி நாலரை அடி சுற்றளவும், கீழ்ப்பகுதி 11 அடி சுற்றளவும், உயரம் 3 அடி கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இது சுடுமண்ணால் செய்யப்பட்டதாகும்.

உறையின் கழுத்துப் பகுதியை சுற்றிலும் அலைவரிகளும், சிறிய மணி வரிகளும் காணப்படுகின்றன. உறையின் விளிம்பில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. விளிம்புக்கு கீழே புடைப்புச் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன.

தற்போது உறையின் பாதி பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. மீதமுள்ள பகுதி பூமியில் புதைந்துள்ளது.

உறையின் 8 செ.மீ விளிம்பைச் சுற்றி சோழர்கால பாணியில் “ஸ்வஸ்திஸ்ரீ கடக்கங் கொண்டான் அகமுடையான் துக்கையாண்டி தன்மம்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

உறையில் காணப்படும் பெயருடையவர் ஊர்ப் பொதுமக்களுக்கோ அல்லது கோயிலுக்கோ இந்த தானிய சேமிப்பு உறையை தானமாக அளித்திருக்கக் கூடும். “அகமுடையான் துக்கையாண்டி’ என்பவர் சோழர் காலத்தில் அப்பகுதி படைத் தலைவராக விளங்கியதும் கல்வெட்டில் இருந்து தெரிகிறது.

உறையில் உள்ள புடைப்பு சிற்பங்கள் 5 தொகுதிகளாகக் காணப்படுகின்றன. முதல் தொகுதியில் அமர்ந்த நிலையில் விநாயகரும், வலப்புறத்தில் மூஞ்சூரும், இடப்புறத்தில் பக்தரின் உருவமும் இடம்பெற்றுள்ளன.

இரண்டாவது தொகுதியில் குதிரை வீரனும், மூன்றாவது தொகுதியில் தோளுடன்தோள் சேர்ந்த மங்கையர் மூவரும். அவர்களில் நடுவில் உள்ள மங்கையை கர்ப்பிணியாகவும் புடைப்பு சிற்பத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. மங்கையருக்கு வலப்புறம் நின்ற நிலையில் மாருதி ஒன்று காணப்படுகிறது.

நான்காவது தொகுதியில் வலப்புறமாக திரும்பி நிற்கும் யானை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 5-வது தொகுதியில் மத்தளம் கொட்டும் ஆடவன், நடனமாடும் மங்கை, தாளம் போடும் பெண் ஆகியன இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் எழுத்துப் பொறிப்புகளுடன் கிடைத்துள்ள முதல் தானிய உறை இதுவே என்கிறார் தொல்லியல் துறை, ஆர்க்காடு அகழ்வைப்பக காப்பாட்சியர் மா. கலைவாணன்.

Posted in Agriculture, Ancient, Anthropology, antiquarian, antique, antiques, archaeologist, Archaeology, Archive, Arts, Avaraikkarai, Brick, Cabinet, Chola, Choza, Chozha, Citizen, Cover, cultures, Dukkaiaandi, Dukkaiandi, dynasty, Elephant, evidence, Farmer, Farming, Ganapathy, Ganesha, Gods, Governor, Grain, Granary, History, Hold, inscriptions, Jacket, Kiln, Kings, Minister, Museum, Navlak, Navlaq, peasant, pottery, Protect, Rare, Recovery, Reside, rice, Rulers, Sand, Stone, Temple, Tools, Vallaja, Vallajah, Vellore, Vellur, Velore, Vinayak, Wallaja, Wallajah, Wheat | Leave a Comment »

Gujarat Elections: BJP & Narendra Modi – Caste Politics & Poll Calculations

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2007

குஜராத்தில் ஜாதி அரசியல் ஆதிக்கம்

ஆமதாபாத், ஆக.4: குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவில் ஜாதி அரசியல் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் ஜாதி அரசியல் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது.

மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா பாஜக என்ற கேள்வியும் குஜராத் அரசியலில் இதனால் எழுந்துள்ளது.

முந்தைய தேர்தல்களில் குஜராத்தில் ஜாதிய அரசியல் முக்கியத்துவம் பெற்றிருந்த போதிலும் அதைக் காட்டிலும் மத ரீதியிலான அரசியல் கடந்த 20 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தியது. இதற்கு முக்கிய காரணம் பாஜக போன்ற கட்சிகளால் உருவான ஹிந்துத்துவா அலையே ஆகும்.

ஆனால் தற்போது அந்த அலை குஜராத்தில் குறைந்து விட்டது என்றே சொல்லாம். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜாதி அரசியலே கோலோச்சும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் வாக்கு வங்கியாக கடந்த 20 ஆண்டுகளாக இருந்து படேல் ஜாதி இருந்து வந்தது என்று கூறலாம். ஆனால் அந்த ஜாதியில் உள்ள லோவா படேல் பிரிவினர் பாஜகவுக்கு எதிராக தற்போது திரும்பியுள்ளனர்.

இப் பிரிவினர் சர்தார் படேல் சமிதி என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக தாலுகா அளவில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். மாநிலத்தில் 102 தாலுகாவில் இதே போன்ற பிரசாரத்தை தேர்தலுக்கு முன்னதாக நடத்தி முடிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். குஜராத் மக்கள் தொகையில் படேல் ஜாதியினர் 20 சதவீதம் உள்ளனர்.

மோடிக்கு எதிரணியில் இருக்கும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கேசுபாய் படேல் லேவா படேல் பிரிவைச் சேர்ந்தவர். அண்மையில் பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 5 பாஜக எம்.எல்.ஏ.க்களும் அதே பிரிவைச் சேர்ந்தவர்கள்தான்.

படேல் ஜாதியில் மற்றொரு பிரிவு கத்வா படேல். இவர்கள் நரேந்திர மோடியை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கோலி ஜாதியினர் குஜராத் மக்கள் தொகையில் 15 சதவீதம் உள்ளனர். இந்த ஜாதியைச் சேர்ந்த பெண் கற்பழிக்கப்பட்டு கடந்த மே மாதம் கொலை செய்யப்பட்டார். குற்றவாளியை இதுவரை போலீஸôர் கைது செய்யவில்லை. இது அந்த ஜாதியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கோலி வகுப்பைச் சேர்ந்தவரான பாஜக எம்.பி. சோம படேல் முதல்வர் நரேந்திர மோடியின் எதிர்ப்பாளராகி விட்டார். முதல்வருக்கு எதிரான பொதுக்கூட்டங்களுக்கு அவர் பகிரங்கமாகவே ஏற்பாடு செய்துவருகிறார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்.பி.யான நளின் பட் பிராமணர்களை பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன் பொருட்டு அவர் விரைவில் கூட்டம் ஒன்றை கூட்ட இருப்பதாகவும் சொன்னார்.

இதனிடையே, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள காங்கிரஸ் கட்சி இப்போதே நடவடிக்கையை தொடங்கிவிட்டது.

தெற்கு, மத்திய குஜார் பிராந்தியத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர். காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்த அவர்கள் கடந்த 2002 தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பழங்குடியினர் வாக்குகளை மீண்டும் பெற காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் பேரணிகள், பொதுக்கூட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை எதிர்கொள்ளும் வகையில் பழங்குடியினருக்கு ரூ.13,000 கோடி அளவிலான திட்டங்களை தடாலடியாக நரேந்திர மோடி அரசு அறிவித்தது. இவ்வாறு பழங்குடியினர் வாக்குகளை கைப்பற்றுவதில் காங்கிரஸ்- பாஜக இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

குஜராத் மக்கள் தொகையில் சிறுபான்மையினர் 14 சதவீதம் பேர் உள்ளனர். அவர்கள் மதச்சார்பற்ற கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸின் வாக்கு வங்கியாக தொடர்ந்து இருந்து வருகின்றனர். சத்ரிய வகுப்பைச் சேர்ந்த சங்கர் சிங் வகேலா காங்கிரஸ் கட்சிக்கு சென்றதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு அந்த வகுப்பினரின் ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளது.

ஜாதி அரசியலின் ஆதிக்கம் குஜராத் அரசியலில் ஆட்சி மாற்றத்தை இந்த முறை ஏற்படுத்தும் வாய்ப்பை மறுப்பதற்கு இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். பாஜக தரப்பில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர். காங்கிரஸ் ஆட்சி குஜராத்தில் மீண்டும் மலரும் என்கின்றனர் அக்கட்சியினர்.

Posted in Assembly, BC, BJP, Brahmins, Cabinet, Caste, Community, Conflict, Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Divide, Elections, FC, forecasts, Gujarat, Mandal, Modi, Narendra, OBC, Party, Patel, Politics, Polls, Religion, SC, Sect, Sectarian, ST, Tribes, Vote, voters | 1 Comment »

Notorious criminal Vellai Ravi & associate killed in encounter

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

Kumudam Reporter – Interview with Don ‘Vellai’ Ravi « Tamil News – வெள்ளை ரவி என்ன சொல்கிறார்?:

07.06.07 – குமுதம் ரிப்போர்ட்டர் :: தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம்.


தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டவர் வெள்ளை ரவிசென்னை, ஆக. 3: சென்னை வியாசர்பாடி சஞ்சய்நகரைச் சேர்ந்த சாமி -மாரியம்மா தம்பதியின் மகன் ரவி (எ) வெள்ளை ரவி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்தவர். இவருக்கு 2 சகோதரிகளும், 2 சகோதரர்களும் உள்ளனர்.1991 முதல் ரவுடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, கடத்தல் வழக்குகள் என மொத்தம் 21 வழக்குகள் உள்ளன.இதில் 5 கொலை வழக்குள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் 5 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்.எச்சரிக்கை: வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி சேராவும், வெள்ளை ரவியும் எதிரெதிர் ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள். 2001-ல் ஷகீல் அக்தர் துணை கமிஷனராக இருந்த போது இருவரையும் அழைத்து சமரசமாக செல்லும்படி எச்சரித்தார். அச்சமயத்தில் இருவரும் சமாதான புறா பறக்கவிட்டனர்.தேர்தலில் போட்டி:2001-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 2,702 வாக்குகள் பெற்றார்.அதன்பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த வெள்ளை ரவி, ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.சென்னை போலீஸ் கமிஷனராக விஜயகுமார் பொறுப்பு வகித்த சமயத்தில் ரவுடிகள் வீரமணி, ராஜாராம், வெங்கடேச பண்ணையர் உள்ளிட்டோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.இதனால் பயந்து போன ரவுடிகள், சென்னையில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மாநிலங்களுக்கு சென்று பதுங்கினர்.

2002 முதல் தலைமறைவாக இருந்த இவர் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மனைவி கமலாவும், மகன், இரண்டு மகள்களும் உள்ளனர்.
————————————————————————————————

அடுத்த குறி யார்?

சென்னை, ஆக. 3: ரௌடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த குறி யார்? என்ற பேச்சு ரௌடிகள் மத்தியில் அடிபடத் தொடங்கியுள்ளது.

ஆள் கடத்தல், கொலை, கொள்ளை, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரௌடி வெள்ளை ரவி, ஓசூரில் புதன்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் சுடப்பட்டார்.

இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ரௌடிகள் மத்தியில் ஒரு வித கலக்கம் ஏற்பட்டுள்ளது.

ரௌடிகள் பட்டியல்:

சென்னை மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ரௌடிகள்

  • மாலைக்கண் செல்வம்,
  • காதுகுத்து ரவி,
  • கேட் ராஜேந்திரன்,
  • நாகேந்திரன்,
  • சேரா,
  • காட்டான் சுப்பிரமணியன்,
  • ஜெர்மன் ரவி,
  • கருப்பு பாலு,
  • ஸ்டாலின்,
  • திண்டுக்கல் பாண்டியன்

என போலீஸின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இவர்களில் ஒவ்வொரு ரௌடிக்கும் 10 முதல் 20 வழக்குகள் வரை உள்ளன. தலைமறைவாக இருக்கும் ரௌடிகளின் நடமாட்டத்தை போலீஸôர் ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர். இதில் நாகேந்திரன் மட்டும் ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மற்ற ரௌடிகளும், அவரது ஆள்களும் ஆக்டிவாக செயல்பட்டு கொண்டிருப்பதாகப் போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
——————————————————————————————————————————–
வெள்ளை ரவி விவகாரத்தில் என் பெயரா?

ஒசூர், ஆக. 3: ரெüடி வெள்ளை ரவியை சுட்டுக் கொன்றச் சம்பவத்தில் என்னுடைய பெயரைப் போலீஸôர் தேவையின்றிப் பயன்படுத்தி களங்கம் ஏற்படுத்தியுள்ளனர் என முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு ஃபேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

நிருபர்களிடம் வெங்கடசாமி அளித்த பேட்டி:

புதன்கிழமை மாலை 7 மணிக்கு மத்திய கப்பல், போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவரை வரவேற்க தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் நின்றிருந்தேன்.

அப்பொழுதுதான் ஒசூரில் போலீஸôர் நடத்திய மோதலில் 2 ரெüடிகளைச் சுட்டுக் கொன்ற விவரம் எனக்குத் தெரிந்தது.

என்னை ஏன் கடத்தப் போகிறார்கள்? என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இது குறித்து டி.ஜி.பி.யிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, “அவர்கள் உங்களை கடத்தப் போவதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால் சென்னையில் இருந்து ஒசூருக்குப் போலீஸ் குழுவினர் வந்தனர்’ எனக் கூறினார்.

என்னைக் கடத்தப் போவதாகக் கூறினால், போலீஸôர் முதலில் எனக்குத் தகவல் தெரிவித்துவிட்டு எனக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்கள் இப்படி பேட்டி கொடுத்தது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி ஃபேக்ஸ் அனுப்பியுள்ளேன் எனக் கூறினார்.

——————————————————————————————-
வெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட குணா சாராய வியாபாரி

ஓசூர், ஆக. 3 –

ஓசூர் அருகே ரவுடி வெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட அவனது கூட்டாளி குணா, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சாராயம் விற்று வந்தவர் என்ற பரபரப்பான தகவல் தெரியவந்து உள்ளது.

உறவினர்கள் வருகை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள ஈச்சங்கூர் பகுதியில் பிரபல ரவுடி வெள்ளைரவியும் அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களது பிணங்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தன.

அவர்களது உடல்களை அடையாளம் காட்டவும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த உடல்களை பெற்றுச்செல்லவும் நேற்று ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வெள்ளைரவி மற்றும் குணா ஆகியோரின் உறவினர்கள் வந்தனர்.

அடையாளம் காட்டினர்

வெள்ளைரவி தரப்பில் அவனது தாய் மாரியம்மா, தம்பி தனசேகர், மைத்துனர் பாபு மற்றும் மோகன் ஆகியோரும், குணா தரப்பில் அவனது மனைவி தமிழ்அரசி, தம்பிகள் சுட்டு, இச்சப்பா மற்றும் ராஜு ஆகியோரும் வந்திருந்தனர். ஆஸ்பத்திரியில் அவர்கள் கதறி அழுதபடி வெள்ளைரவி, குணா இருவரின் உடல்களையும் அடையாளம் காட்டினர்.

ஓசூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு சுட்டுக்கொல்லப்படவர்களின் உறவினர்கள் கூடியதால் அங்கு நேற்று போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

4-வது மகன்

முன்னதாக வெள்ளைரவியின் தாய் மாரியம்மா கூறுகையில் வெள்ளைரவி எனக்கு 4-வது மகன். அவன் சுட்டுக்கொல்லப்பட்டதை டெலிவிஷனில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். `எனது மகனை போலீசார் சுட்டுக்கொன்றது ஏற்கனவே நிர்ணயித்து செய்த சதி’ ஆகும். அவனுக்கு கமலா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர் என்று தெரிவித்தார்.

குணாவின் மனைவி தமிழ் அரசி கூறியதாவது:-

காய்கறி வியாபாரம்

நானும் எனது கணவர் குணசேகர் என்கிற குணாவும் கர்நாடக மாநிலம் பெல்லாரி நகரில் வசித்து வந்தோம். எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாங்கள் பெல்லாரியில் உள்ள கவுல்பஜார் மாரியம்மன் கோவில் அருகே காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.

எனது கணவர் ஒருவரிடம் கூலிக்கு கமிஷன் அடிப்படையில் சாராய வியாபாரமும் செய்து வந்தார். தற்போது சாராய விற்பனைக்கு கர்நாடக அரசு தடைவிதித்து விட்டதால் என்னுடன் சேர்ந்து கணவரும் காய்கறி வியாபாரமே செய்து வந்தார்.

தமிழில் பேசுவோம்

வெள்ளை ரவி தனது மனைவியுடன் பெல்லாரிக்கு வந்து 9 மாதங்களாக தங்கி இருந்தார். அப்போது காய்கறி வாங்க வெள்ளைரவி அடிக்கடி எங்கள் கடைக்கு வருவார். அவர் நன்கு தமிழில் பேசுவார். நாங்களும் தமிழில் பேசுவோம். இதனால் வெள்ளை ரவிக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

அடிக்கடி கடைக்கு வந்து செல்வதால் எனது கணவர் குணாவுக்கும் வெள்ளை ரவிக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவரது மனைவியை நானும் பார்த்து பேசி இருக்கிறேன்.

எனது கணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளை ரவியின் மனைவி தான் டெலிபோன் செய்து என்னிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து தான், நான் பெல்லாரியில் இருந்து ஓசூருக்கு புறப்பட்டு வந்தேன்.

இவ்வாறு தமிழ்அரசி கூறினார்.

——————————————————————————————-

லாட்ஜில் தங்கி இருந்தவரை சமரசத்துக்கு அழைத்துசென்று சுட்டு கொன்றுவிட்டனர்: வெள்ளைரவி அக்காள் பேட்டி

சென்னை, ஆக. 2-

சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி வெள்ளைரவி. ஓசூர் அருகே நேற்று போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். வெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்ததும் சென்னை வியாசர்பாடி பக்தவத்சலம் காலனியில் வசிக்கும் அவரது அக்காள் வாசுகி (54), கதறி அழுதார்.

வெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி வாசுகி கூறியதாவது:-

என் தம்பி ரவி கடந்த சில மாதங்களாக ரவுடி தொழிலை கைவிட்டு திருந்தி வாழ்ந்தான். ஆனால் போலீசார் அவனை நிம்மதியாக வாழவிடவில்லை. ஏதாவது ஒரு வழக்கில் தண்டனை வாங்கி கொடுத்துவிடலாம் என்று நினைத்தார்கள். போலீசாரின் திட்டம் நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்தார்கள்.

எப்படியாவது ரவியை சுட்டு கொன்றுவிட வேண்டும் என்று செயல்பட்டார்கள். ஒரு கட்டத்தில் சமாதானத்துக்கு அழைத்து சென்று தீர்த்துகட்ட பார்த்தார்கள். அதுவும் அவர்களால் முடியவில்லை. செங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் உதவியோடு என் தம்பி மீது புதிதாக ஒரு வழக்கு போட்டார்கள். அதில் அவன் பணத்தை பறித்து சென்றுவிட்டதாக கூறினார்கள்.

அந்த ராஜ்குமார் அசாம் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவன். வெடி மருந்துகள், ஆயுதங்கள் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக போலீசார் எந்த வழக்கும் போடவில்லை. ஆனால் என் தம்பியை சுட்டுக்கொல்ல கங்கணம் கட்டி கொண்டிருந்தார்கள்.

நேற்று முன்தினம் ஓசூரில் உள்ள ஒரு லாட்ஜில் என் தம்பி தங்கி இருந்தான். நேற்று அதிகாலை 2 மணிக்கு அவனது அறைக்கு போலீசார் சென்றுள்ளனர். சமாதானம் பேசி முடித்துவிடுவோம். அதன் பிறகு உனக்கும் பிரச்சினை இருக்காது என்று நைசாக பேசி அழைத்து சென்று இருக்கிறார்கள்.

இதை அறிந்ததும் உறவினர் மூலம் ரவியை எங்கே வைத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டோம். நாங்கள் பிடிக்கவில்லை என்று மாலை வரை போலீசார் மறுத்தனர். திடீரென்று மாலை 5 மணிக்கு போலீசாருடன் நடந்த சண்டையில் சுட்டு கொன்றுவிட்டதாக தகவல் தந்தார்கள்.

அவனை திட்டமிட்டு கொன்று விட்டார்கள். அவனை அழைத்து சென்று பேரம் பேசி இருக்கிறார்கள். அவன் எந்த விதமான பேரத்துக்கும் உடன்பட வில்லை. அதனால் சுட்டு கொன்றுவிட்டார்கள்.

கடந்த 6 மாதமாக இரவு, பகல் எப்போதும் போலீசார் எங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். என் மகன்களையும் பிடித்து சென்று கொடுமை படுத்தினார்கள். அநியாயமாக என் தம்பியை கொன்றவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.
——————————————————————————————-

வெள்ளை ரவி கூட்டாளிகள்: 7 ரவுடிகளை சுட்டு பிடிக்க முடிவு

சென்னை, ஆக. 2-

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவன் வெள்ளை ரவி. பிரபல ரவுடியான இவன் கடந்த 20 ஆண்டுகளாக சென்னையை கலக்கி வந்தான். ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், கொலை- கொள்ளை போன்றவற்றை சர்வ சாதாரணமாக செய்து வந்த இவன், போலீசுக்கு பெரும் சவாலாக விளங்கி வந்தான்.

சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அட்டூழியம் செய்து வந்த ரவுடிகளை போலீசார் தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து போலீசாருடன் நடைபெற்ற மோதலில் ரவுடிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனால் பயந்து போய் சென்னையை விட்டே ஓட்டம் பிடித்த வெள்ளை ரவி ஆந்திரா, கர்நாடகா, போன்ற வெளிமாநிலங்களில் பதுங்கி இருந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தான்.

இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவரை கடத்திச் சென்ற வெள்ளை ரவி, அவரை விடுவிப்பதற்காக ரூ.2 கோடி வரை பேரம் பேசினான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வெள்ளை ரவியின் கொட்டத்தை அடக்க முடிவு செய்தனர். அவனது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்த போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்குன்றம் அருகே வைத்து வெள்ளை ரவியையும், அவனது கூட் டாளிகள் சிலரையும் சுற்றி வளைத்தனர்.

ஆனால் அப்போது போலீஸ் பிடியில் சிக்காமல் வெள்ளை ரவி தப்பி ஓடிவிட்டான். கூட்டளிகளை மட்டும் போலீசார் கைது செய்தனர். வெள்ளை ரவிக்கு அடைக்கலம் கொடுத்த அவனது காதலி சானியாவும் போலீசில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து வெள்ளை ரவியை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்பதற்காக கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர்.

இந் நிலையில் வெள்ளை ரவி ஓசூர் அருகே சொகுசு குடிலில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படையில் இடம் பெற்றிருந்த உதவி கமிஷனர் ஜெயகுமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் ஓசூர் விரைந்தனர்.

பின்னர் வெள்ளை ரவி பதுங்கி இருந்த சொகுசு குடிலை சுற்றி வளைத்தனர். அங்கு வெள்ளை ரவியுடன் அவனது கூட்டாளிகள் 8 பேரும் இருந்தனர். போலீசை கண்டதும் கூட்டாளிகள் 7 பேர் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

ஆனால் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் போலீசில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இருவரையும் பார்த்து போலீசார் சரண் அடைந்து விடுங்கள் என்று எச்சரித்தனர். ஆனால் போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில் வெள்ளை ரவி மற்றும் அவளது கூட்டாளி குணா ஆகியோர் மீது துப்பாக்கி குண்டு கள் பாய்ந்தது. இருவரும் பலியானார்கள்.

இதனையடுத்து தப்பி ஓடிய கூட்டாளிகள் 7 பேருரையும் சுட்டுப்பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஓசூர் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்றது வருகிறது. இதற்கிடையே ரவுடிகள் 7 பேரும் பெங்களூருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அங்கும் தனிப்படையினர் தேடிவருகிறார்கள்.

வெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.

வெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

அவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவனது உறவினர்கள் யாரும் வரவில்லை. அவர்கள் வந்த பிறகுதான் உடல் பரிசோதனை செய்யப்படும்.

காயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்கள். ——————————————————————————————-

சுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு: பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்

ஓசூர், ஆக. 2-

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவன் வெள்ளை ரவி (வயது 42), பிரபல ரவுடியான இவன் சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டபஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை, கொள்ளை மற்றும் தொழில் அதிபர் உள்பட பலரை கடத்தி பணம் பறித்தல் ஆகிய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டான்.

கடந்த 2 மாதத்துக்கு முன்பு சென்னையில் தொழில் அதிபர் ராஜ்குமாரை கடத்தி ரூ.2 கோடி பணம் பறிக்க முயற்சி செய்தான். வெள்ளை ரவியை பிடிக்க போலீசார் முயன்றபோது தப்பி ஓடிவிட்டான்.

கடந்த 2 மாதத்துக்கும் மேலாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த அவன் நேற்று முன்தினம் இரவு ஓசூரை அடுத்த தமிழக -கர்நாடக எல்லையில் பாகலூர் அருகே ஈச்சாங்கூர் என்ற இடத்தில் தனியார் சொகுசு குடிலில் கூட்டாளிகளுடன் தங்கி இருந்தான்.

நேற்று இரவு ஓசூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தவருமான வெங்கடசாமியை கடத்தி ரூ.1 கோடி பறிக்க திட்டமிட்டு இருந்தான்.

இந்த தகவல் கிடைத்தும் சென்னையில் இருந்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் தலைமையில் உதவி கமிஷனர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் நேற்று காலை ஓசூர் வந்தனர்.

வெள்ளை ரவி தங்கிய சொகுசு குடில் அருகே போலீசார் பதுங்கி நின்ற னர். குடிலுக்கு வெளியே பாதுகாப்புக்கு நின்ற வெள்ளை ரவியின் கூட்டாளிகள் 2 பேரும் உள்ளே சென்று போலீசார் வந்து இருப்பதை கூறி விட்டனர்.

இதைத் தொடர்ந்து வெள்ளை ரவியும், அவ னது கூட்டாளிகளும் 2 டாடாசுமோ கார்களில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் துரத்திச் சென்றனர். போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். மேலும் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் திரும்பி சுட்டனர். இதில் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வெள்ளை ரவி சம்பவ இடத்தில் பலியானான். அவனது கூட்டாளி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தான். இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது.

வெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.

வெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப் படைக்கப்படுகிறது.

அவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருக்கும். அவனைப் பற்றிய விவரம் போலீசாருக்கு தெரியாததால் அவனது உறவினர்கள் வந்த பிறகு தான் அவனது உடல் பரிசோதனை செய்யப்படும்.

காயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ் பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று திரும்பினார்கள். அவர்கள் ஓசூரிலேயே தங்கி உள்ளனர்.

வெள்ளை ரவியின் மனைவி- குழந்தைகள் எங்கே?

சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளைரவியின் தாயார் மாரிம்மாள் மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். வெள்ளை ரவியின் மனைவி கமலா மற்றும் அவரது குழந்தைகள் வரவில்லை. அவர்கள் எங்கு தங்கி இருக்கிறார்கள் என்று போலீசார் தேடி வருகிறார்கள். ——————————————————————————————-

வெள்ளை ரவி உடல் அடக்கம்: வியாசர்பாடியில் பலத்த பாதுகாப்பு

பெரம்பூர், ஆக. 3-

சென்னையை கலக்கிய பிரபல தாதா வெள்ளை ரவி ஓசூர் அருகே போலீ சாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

நேற்றிரவு வெள்ளை ரவி உடல் போலீஸ் வேன் மூலம் ஓசூரிலிருந்து சொந்த ஊரான சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவுக்கு கொண்டு வரப்பட் டது. இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல் வந்து சேர்ந்தது.

இதையொட்டி பக்தவச்சலம் காலனி முழுவதும் டிïப் `லைட்’கள் கட்டப்பட்டிருந்தது. அந்த பகுதி மக்கள் வீட்டு முன்பு காத்திருந்தனர். வெள்ளை ரவி உடல் குளிர் சாதன பெட்டியில் வைத்து எடுத்து வரப்பட்டது. அவன் வீட்டு முன்பு போடப்பட்டிருந்த சாமியானா பந்தலில் உடல் வைக்கப்பட்டது.

அவன் உடல் அருகே வெள்ளை ரவி மகள் பாக்கிய லட்சுமி, மகன்கள் கோகுல், நவீன் மற்றும் வெள்ளை ரவி அக்காள் வாசுகி, தாய் மாரியம்மாள் அழுதபடி அமர்ந்திருந்தனர்.

பக்தவச்சலம் காலனி பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வெள்ளை ரவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் வரிசையில் செல்ல வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது.

இன்று பிற்பகல் வெள்ளை ரவி உடல் வியாசர்பாடி முல்லை நகரில் உள்ள இடு காட்டில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதை யொட்டி வியாசர்பாடி பகுதியில் தெரு தெருவாக போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

உதவிக் கமிஷனர்கள் ராஜாராம், விமலா, சந்திரன் ஆகியோர் வியாசர்பாடியில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காணிக்கின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவி மனைவி கமலா கூறியதாவது:-

எனக்கு சொந்த ஊர் மைசூர் அருகில் உள்ள ரெய்ச்சூர் பர்மா காலனி. வெள்ளை ரவி தொழில் காரணமாக அடிக்கடி எங்க ஊர் பகுதிக்கு வருவார். அப்போது எனக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் நடந்தது.

அதன் பிறகு நான் ரெய்ச்சூரில் என் வீட்டிலேயே இருந்தேன். வெள்ளை ரவி மட்டும் சென்னை வந்து செல்வார். நான் ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சென்னை வந்து செல்வேன்.

செங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் அவரது அண்ணன் சேகர் ஆகியோரும் என் கணவ ருடன் சேர்ந்து அசாம் மாநி லத்தில் பொருட்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்கள். சேகருக்கு தொழி லில் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது என் கணவர்தான் உதவிகள் செய்தார்.

பின்னர் சேகரும், ராஜ்குமா ரும் பெரிய பணக்காரர்கள் ஆகி விட்டனர். அசாமில் அவர்களுக்கு பலரோடு தொடர்பு இருக்கிறது. இதனால் அவர்கள் மீது வழக்குகள் உள்ளது.

என் கணவர் சமீப காலமாக ரவுடி தொழிலை விட்டு விட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் என்னோடும், குழந்தை களுடனும் வசித்து வந்தார். ஆனால் என் கணவர் மைசூரில் என்னுடன் தங்கி இருந்த போது ராஜ்குமாரை கடத்தியதாக பொய் வழக்கு போட்டனர்.

எப்படியாவது என் கண வரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர். போலீஸ் தேடலுக்கு பயந்து என் கணவர் என் வீட்டிலேயே தங்கி இருந்தார். அங்கும் போலீசார் வந்து விட்டனர்.

இதனால் அவர் மைசூரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உப்பிலி எனும் ஊரில் இருக்கும் ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார். அவருக்கு தமிழை தவிர மற்ற மொழிகள் தெரியாது. இதனால் துணைக்கு ஒரு வாலிபரை கூடவே தங்க வைத்திருந்தார்.

அப்போது எனக்கு லாட்ஜில் இருந்து அடிக்கடி போன் செய்வார். உப்பிலியில் ஏதாவது ஒரு இடத்துக்கு வரச் சொல்வார். அங்கு நாங்கள் சந்தித்துப் பேசுவோம். அப் போது வீட்டு செலவுக்கு பணம் தருவார்.

அதே போல சுட்டுக் கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்கு எனக்கு போன் செய்தார். காலை 6 மணிக்கு உப்பிலி வந்து விடு என்றார். நானும் அன்று இரவே புறப்பட்டு அதிகாலை உப்பிலி சென்றேன்.

ஆனால் குறிப்பிட்டப்படி அவர் வரவில்லை. அவரிடம் 3 செல்போன்கள் உண்டு. நான் அந்த 3 செல்போன்களுக்கும் தொடர்பு கொண்டேன். 3 சொல்போன்களுமுë சுவிட்-ஆப்” செய்யப்பட்டிரு ந்தது.

அதன் பிறகுதான் இரவோடு இரவாக என் கணவரை போலீசார் பிடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. அன்று இரவே அவரை போலீசார் திட்டமிட்டு சுட்டுக் கொன்று விட்டனர். வேண்டும் என்றே என் கணவரை கொன்று விட்டனர்.

இவ்வாறு வெள்ளை ரவி மனைவி கமலா கூறினார்.

———————————————————————————————————————

வெள்ளைரவி வேட்டைக்கு “ஆபரேஷன் ஒயிட்” பெயர் – நடிகை சானியா தகவல் மூலம் சிக்கினான்

சென்னை, ஆக. 4-

Vellai ravi photoசென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவில் வசித்து வந்தவன் வெள்ளை ரவி. படித்த காலத்தில் ஒழுக்கமானவாக இருந்த இவன் பிறகு தகாத சேர்க்கையால் ரவுடியாக மாறினான். 18 ஆண்டுகளுக்கு முன்பு வடசென்னையை சேர்ந்த இரும்புக்கடை சுப்பையாவை இவன் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்டிக் கொன்றான். வெள்ளை ரவி செய்த முதல் கொலை இதுதான்.

அதன் பிறகு ஆள் கடத்தல், செம்மரம் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, கொள்ளை என்று இவன் பெரிய தாதா ஆகி விட்டான். வீரமணி, பங்க் குமார் உள்பட தற்போது சென்னையில் ரவுடியிசம் செய்யும் பலர் வெள்ளை ரவியால் வளர்க்கப்பட்டவர் களாகும். எனவே தாதா குழு வுக்கு “மூளை”யாக இருந்த வெள்ளை ரவி மீது போலீசார் ஒரு கண் வைத்தப்படியே இருந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவன் ரவுடி தொழிலை விட்டு விட்டு திருந்தி விட்டதாக போலீசாரிடம் கூறினான். 2001ம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுக்கள் வாங்கினான். அதன் பிறகு அவனது பழைய கட்ட பஞ்சாயத்து கொடூரங்கள் மீண்டும் தலை தூக்கின.

இதனால் சென்னை போலீசார் வெள்ளை ரவியை சுட்டுக் கொல்ல முடிவு செய்தனர். முதல் கட்டமாக அவனால் வளர்க்கப்பட்ட வீரமணி, பங்க் குமார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மைசூர், அசாம், பர்மா என்று வெள்ளை ரவி ஓட்டம் பிடித்தான்.

வெள்ளை ரவி தலைமறை வாக இருந்து கொண்டே சென்னையில் உள்ள பல தொழில் அதிபர்களை மிரட்டி காரியம் சாதித்து வந்தான். இதனால் அவனை வேட்டையாடும் பொறுப்பு மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் இந்த “வேட்டைக்குழு”வுக்கு தலைமை தாங்கினார்.

இந்த படையின் வேலைக்கு “ஆபரேஷன் ஒயிட்” என்று பெயரிடப்பட்டது. இந்த படை யினர் தனி தனி பிரிவுகளாக பிரிந்து வெள்ளை ரவிக்கு வலை விரித்தனர். இது வெள்ளை ரவிக்கும் தெரிய வந்தது.

போலீஸ் கைகளில் சிக்கா மல் இருக்க வெள்ளை ரவி கர்நாடகாவுக்கு தப்பிச் சென் றான். இதனால் வெள்ளை ரவியின் தாய் மாரியம்மாள், அண்ணன் தனசேகரன் மற்றும் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில் பலன் கிடைக்கவில்லை.

இதையடுத்து வியாசர்பாடி, செங்குன்றம் பகுதியில் வெள்ளை ரவிக்கு நெருக்க மானவர்களிடம் போலீசார் தகவல்களை திரட்ட முயன் றனர். அவர்கள் வெள்ளை ரவி மூலம் ஏதாவது ஒரு வகையில் பலன் அடைந்திருந்ததால், யாருமே வெள்ளை ரவி பற்றி வாயை திறக்கவில்லை. இதனால் வெள்ளைரவி மறை விடத்தை கண்டு பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவா லாக இருந்தது.

இந்த நிலையில்தான் போலீ சாருக்கு கை கொடுக்கும் வகையில் நடிகை சானியா கிடைத்தார். “சிவாஜி” பட துணை நடிகையான சானியா, வெள்ளை ரவியின் கள்ளக்காதலி ஆவார். கடந்த 2 ஆண்டுகளாக சானியாவை அவன் ஆசை நாயகியாக வைத்திருந்தான்.

சானியா தன் கணவன் சபியுல்லாவுடன் பெரம்பூரில் வசித்து வருகிறாள். வெளிïர்களில் மிகவும் போரடித்து விட்டால் வெள்ளை ரவி மிகவும் ரகசியமாக பெரம்பூர் வந்து சானியாவுடன் இருந்து விட்டுப்போவான். சானி யாவுக்காக அவன் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளான்.

சமீபத்தில் ராஜ்குமார் என்பவரை வெள்ளைரவி ஆட்கள் கடத்தி மிரட்டி பணம் பறித்தனர். இந்த வழக்கில் நடிகை சானியாவும் பிடி பட்டாள். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவள் கடந்த வாரம் விடுதலை ஆனாள்.

அவளை கொத்தி சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீ சார் ரகசிய இடத்தில் வைத்து மிரட்டி விசாரித்தனர்.
அப்போது வெள்ளை ரவி ஹூப்ளியில் உள்ள ஒரு லாட்ஜில் ரகசியமாக தங்கி இருக்கும் தகவலை சானியா கூறி விட்டதாக தெரிகிறது. இதையடுத்தே போலீசார் ஹூப்ளி சென்று வெள்ளை ரவியை பிடித்து வந்து ஓசூர் அருகில் வைத்து “என் கவுண்டர்” செய்திருப்பதாக தெரிகிறது.

ஆனால் வெள்ளை ரவியை சானியா மூலம்தான் பிடித்தனர் என்பதை சானியா தரப்பினர் ஒத்துக் கொள்ள வில்லை. போலீசார் ஏற்கனவே வெள்ளை ரவியை பிடித்து வைத்திருந்தனர். நேரம் பார்த்து போட்டுத் தள்ளி விட்டனர் என்கிறார்கள்.

இதற்கிடையே ஹூப்ளி லாட்ஜில் வெள்ளை ரவியுடன் அசாம் மாநிலத்துக்காரன் ஒருவன் தங்கி இருந்தான். ஒரு வாரத்துக்கு முன்பு ஊருக்கு போய் விட்டு வருவதாக கூறிய அவன் மாயமாகி விட்டான். அவன் மூலம் போலீசார் வெள்ளை ரவியை பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்படியோ போலீசாரின் “ஆபரேஷன் ஒயிட்” சக்சஸ் ஆகிவிட்டது.

—————————————————————–
காசிப்ஸ்: அமைச்சர் உத்தரவால் சரண் அடைந்த தாதா:

வட சென்னையில் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் பிரபல தாதா மாலைக்கண் செல்வம். இவர் ஷாக் அடிக்கும் துறையின் அமைச்சருக்கு வலது கரம். சட்டமன்ற தேர்தலின் போது, விஜயகாந்தே அந்த அமைச்சரின் பெயரைச் சொல்லி, அவர் மாலைக் கண் செல்வத்துடன் வலம் வருவதாக புகார் கூறினார். அவர் மீது வழக்கு போடக் கூடாது என்று அமைச்சர் தலைகீழாக நின்று பார்த்தார். ஆனால் துணை கமிஷனர் முருகன் பிடிவாதமாக இருந்ததோடு, அந்த தாதா, அமைச்சரின் பாதுகாப்பில் இருப்பதாக கமிஷனர் மூலமாக முதல்வருக்கு நோட் அனுப்பிவிட்டார்.

அதோடு, அவரை தீவிரமாக தேட ஆரம்பித்துவிட்டனர். கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட நிலையில் பிடிபட்டால் சுட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் அமைச்சரிடம் ஆலோசனை நடத்திய தாதா, அவர் உத்தரவுபடி கமிஷனரிடம் 8ம் தேதி சரண் அடைந்தான். இதுவரையில் எந்த கமிஷனரும் இது போன்ற தாதாக்கள், ரவுடிகளை சந்தித்ததில்லை. அவர்களை போலீஸ் நிலையத்திலோ, அல்லது கோர்ட்டிலோ சரண் அடைய செய்வார்கள்.

திருந்திவிட்டதாக சொன்ன ரவுடிகள் எல்லாம், போலீசாரின் துப்பாக்கி குண்டுக்குத்தான் பலியாகியிருக்கிறார்கள். ஆனால் நாஞ்சில் குமரன், அமைச்சரின் உத்தரவை ஏற்று தாதாவை சந்தித்து, மோசமான முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 150 ஆண்டு பாரம்பரியமிக்க சென்னை மாநகர காவல் துறைக்கு இது பெரிய அவமானம் என்று ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் புலம்பியிருக்கிறார்.

———————————————————————————————————————
ரௌடி “மாலைக்கண் செல்வம்’ போலீஸில் சரண்!

சென்னை, ஆக. 9: ரவுடி “மாலைக்கண் செல்வம்’ (41) போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் புதன்கிழமை சரண் அடைந்தார்.

ரெüடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தக் குறி மாலைக்கண் செல்வம்தான் என்று போலீஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வந்தது.

இந்நிலையில் மாலைக்கண் செல்வம் தனது வழக்கறிஞர்களுடன் புதன்கிழமை காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். பின்னர் கமிஷனர் நாஞ்சில் குமரனை சந்தித்து தான் சரண் அடையப் போவதாகத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மாலைக்கண் செல்வத்தை வெளியே அழைத்து வந்த கமிஷனர் நாஞ்சில் குமரன், நிருபர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கேள்விகளை கேட்டார்.

எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார் நாஞ்சில்குமரன். அதற்கு மாலைக்கண் செல்வம் 5 பேர் உள்ளதாகத் தெரிவித்தார்.

சாதாரண ஆளாக இருக்கிறாய், உன் மீது எவ்வளவு கொலை வழக்குகள் உள்ளன? முதலில் 3 கொலை வழக்குகள் என்ற மாலைக்கண் செல்வம், இவையெல்லாம் பொய் வழக்கு என்று தெரிவித்தார்.

உடனே கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் குறுக்கிட்டு, 4 கொலை வழக்குகள் உள்ளன என்று பதில் அளித்தார்.

ரெüடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகளை போலீஸôர் எடுத்து வருகிறோம். எனவே, குழந்தைகளை நன்றாக படிக்க வை. இல்லையெனில் போலீஸôர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று நாஞ்சில் குமரன் எச்சரித்தார்.

நான் எதையும் செய்யவில்லை என்று மாலைக்கண் செல்வம் தெரிவித்தார். இதையடுத்து மாலைக்கண் செல்வத்தை கைது செய்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு மாதவரத்தில் செந்தில்குமார் என்பவரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மாலைக்கண் செல்வத்தை கைது செய்வதாக இணை கமிஷனர் எம். ரவி தெரிவித்தார்.

“போலீஸ் பொய் வழக்கு’ ரௌடி மாலைக்கண் செல்வம் மீது போலீஸôர் பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவருக்கும் கொலை வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்றார் மாலைக்கண் செல்வத்தின் வழக்கறிஞர் கிருஷ்ணபிரசாத்.

3 கொலை வழக்குகள்: மாதவரத்தில் மனைவி, 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்த மாலைக்கண் செல்வம் மீது 1988-ல் முதல்முதலாக போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராயபுரத்தில் வசித்து வந்த இவர் அங்கிருந்து வெளியேறி மாதவரம் பால்பண்ணையில் குடும்பத்துடன் குடியேறினார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. மூன்று வழிப்பறி கொள்ளை வழக்குகளும், இரண்டு போதைப் பொருள் வழக்குகள் உள்ளன. இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இறுதியாக மாதவரத்தில் மாலைக்கண் செல்வத்தின் கூட்டாளி நித்யானந்தன் என்பவர் எதிர் கும்பலைச் சேர்ந்த ரவுடி செந்தில்குமாரை கொலை செய்த வழக்கில் மாலைக்கண் செல்வம் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இவர் மூன்று கன்டெய்னர் லாரி வைத்து தொழில் செய்து வந்தார்.

———————————————————————————————–

என்கவுண்டருக்கு பயந்து ரவுடி மாலைக்கண் செல்வம் போலீசில் திடீர் சரண் – கொலைசதி வழக்கில் கைது

சென்னை, ஆக. 8-

சென்னை மக்களுக்கு இடைïறாக இருக்கும் மேலும் 15 ரவுடிகள்
மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் அறிவித்தார்.

போலீசாரின் விசாரணை யில் வடசென்னையில் ரவுடித்தனம் செய்து வந்த செல்வம் என்ற மாலைக்கண் செல்வம் அத்துமீறி செயல்படுவதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவனை சுட்டுப்பிடிக்க போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தர விட்டார்.

அதன் பேரில் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் மற்றும் வடசென்னை இணைக் கமிஷனர் ரவி ஆகியோர் “ஆபரேசன்” நடவடிக் கைகளில் ஈடுபட்டனர். போலீ சார் பல்வேறு சிறு குழுக்களாக பிரிந்து மாலைக் கண் செல்வத்தை தேடும் வேட் டையில் ஈடுபட்டனர்.

கடந்த 2 தினங்களாக மாலைக்கண் செல்வம் எங்கு பதுங்கி இருக்கிறான் என்ற விசாரணை தீவிரப்படுத்தப் பட்டது.

என்கவுண்டர் மூலம் தன்னை தீர்த்துக்கட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதை அறிந்ததும் மாலைக்கண் செல்வம் அதிர்ச்சி அடைந் தான். இனியும் தாமதித்தால் போலீசார் பிடித்து சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று பயந்தான். எனவே போலீசில் சரண் அடைய முடிவு

செய்தான்.இன்று மதியம் 12 மணிக்கு மாலைக்கண் செல்வம் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தான். அவனுடன் வக்கீல் கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில் நாதன், ராஜ்குமார், கிருபா ஆகியோர் உடன் வந்தனர். அவர்கள் முன்னிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்பு மாலைக் கண் செல்வம் சரண் அடைந் தான்.

மாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக் கில் மாலைக்கண் செல்வம் சேர்க்கப்பட்டிருந்தான். அந்த வழக்குக்காக அவன் கைது செய்யப்பட்டான்.

மாதவரம் மில்க் காலனியைச் சேர்ந்த மாலைக்கண் செல்வத் துக்கு 45 வயதாகிறது. சிறு வயதில் இருந்தே இவன் ரவு டித்தனம் செய்து வந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் நெருக்கடி கொடுத் ததும் 3 லாரிகளை வாங்கி தொழில் செய்து வந்தான்.

நல்லவன் போல காட்டு வதற்காக சென்னை துறை முகத்தில் ஒப்பந்ததார ராகவும் இருந்து வந்தான்.

மாலைக்கண் செல்வம் மீது 4 கொலை வழக்குகள் உள் ளன. இது தவிர கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என்று 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. இவனுக்கு பயந்து யாரும் சாட்சி சொல்ல வராததால் இவன் மீதான எந்த வழக்கிலும் இவனது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.

3 தடவை இவனை போலீ சார் கைது செய்தனர். உடனே இவன் விடுதலை ஆகி விடு வான். முக்கிய ரவுடிகளை போலீ சார் வேட்டையாடியதும் இவன் சில மாதங்கள் சென் னையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டான். கடந்த 5 ஆண்டுகளாக தலை மறைவாகவே இருந்து வந்தான்.

சமீபத்தில் மாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் படு கொலை செய்யப்பட்டார். தன் உறவினரை கொன்றதற் காக பழிக்கு பழி வாங்க செந்தில் குமாரை மாலைக்கண் சதி திட்டம் தீட்டி தீர்த்துக் கட்டி இருப்பது போலீஸ் விசா ரணையில் தெரிய வந்தது. எனவே அவன் கொட்டத்தை ஒடுக்க சென்னை போலீசார் 4 தனிப்படை அமைத்தனர்.

அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலை யில் தான் அவனை பற்றிய முழு தகவல்கள் கமிஷனர் நாஞ்சில்குமரனுக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் மாலைக்கண் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்தே அவன் பயந்து போலீஸ் கமிஷனர் முன்பு இன்று சரண் அடைந்து விட் டான்.

பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கமிஷனர் நாஞ் சில் குமரன் விசாரணை நடத்தினார்.

போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் மாலைக்கண் செல்வம் கூறியதாவது:-

எனது பெயர் செல்வம் என்ற மாலைக்கண் செல்வம். நான் எந்த தவறும் இதுவரை செய்யவில்லை. என்னுடன் இருப்பவர்கள் செய்த தவறுக் காக 3 வழக்குகளில் என்னை பிடித்து சென்றனர். என் மீது எத்தனை வழக்குகள் உள் ளன என்பது தெரியாது.

நான் ரவுடியாக வாழ வேண்டும் என்று நினைக்க வில்லை. எந்த குற்றமும் செய்ய வில்லை இருந்தாலும் என்னைப் பற்றி சிலர் போலீசாரிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள் அத னால் போலீசார் என்னை தேடி வருவதாக அறிந்தேன் எனவே இங்கு வந்து சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு கமிஷனர் நாஞ்சில் குமரன் உன்னை பற்றி போலீஸ் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். 1990ல் ரவுடியாக ஆரம்பித்து 92ல் என்னmaalaikkan selvam arcot veerasamy DMK Politics Party affiliations rowdy dada arrest செய்தாய்பயார்-யாரை எல்லாம் கொலை செய்திருக் கிறாய்ப எத்தனை வழக்குகள் உன்மீது உள்ளனப எப்படி யெல்லாம் நீ தப்பித்து கொண் டிருக்கிறாய் என்பதை போலீஸ் துறை நன்கு அறியும்.

சென்னையில் யாரும் ரவுடியிசம் செய்யலாம் என்ற கனவில் திரிய கூடாது அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது தெரிந்து பயந்து போய் எங்களிடம் ஓடி வந்து இருக்கிறாய். இனி மேலாவது திருந்தி வாழ முயற்சி செய். நீ இது போல ரவுடியாக திரிந்தால் உனது குழந்தைகளையும் குடும்பத்தாரையும் யார் மதிப் பார்கள்ப உன்னுடைய குழந் தைகள் என்ன செய்கி றார் கள்ப என்று அவர் கேட் டார்.

அதற்கு பதில் அளித்த மாலைக்கண் செல்வம் எனது மனைவி பெயர் வடிவு. 5 குழந் தைகள் உள்ளனர். மூத்த மகள் பிளஸ்-2 படித்து வருகிறாள். போலீசுக்கு பயந்து மறைந்து வாழ்வதால் அவர்களுக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. அதனால் ரவுடி தொழிலை விட்டு நான் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். நல்ல தொழில் செய்து வாழ் வேன் என் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டாம் என்னை பற்றி பார்த்து பழகியவர்களிடம் கேட்டு பாருங்கள் தவறாக சொல்ல மாட்டார்கள். நான் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறி னான்.

இதனால் கோபம் அடைந்த கமிஷனர் யாரை ஏமாற்ற பார்க்கிறாய் சமீபத்தில் கூட மாதவரத்தில் உனது மைத் துனர் அகஸ்தீஸ்வரன் கொலைக்கு பழிக்குபழியாக செந்தில்குமார் என்பவரை கொலை செய்திருக்கிறாய். திருந்தி வாழ்ந்தால் உனக்கு நல்லது. போலீசாரை ஏமாற்ற நினைத்தால் கடும் தண்டனை நிச்சயம் உண்டு என்றுஹ எச்சரித்தார்.

உடனே மாலைக்கண் செல்வம் கமிஷனரை பார்த்து இருகைகளையும் தூக்கி கும்பிட்டு கண்ணீர் விட்டு அழுதான். இனி திருந்தி வாழ்வேன் என்னை விட்டு விடுங்கள் என்று கதறினான்.

பின்னர் அவனை கோர்ட் டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர்.

———————————————————————————————–
அக்கா மகனை கொன்றதால்
பழிக்கு பழி வாங்கியதாக ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம்
புழல் சிறையில் அடைப்பு

செங்குன்றம், ஆக.10-

அக்கா மகனை கொன்றதால் பழிக்கு பழி வாங்கவே கொலை செய்தேன் என்று சரண் அடைந்த ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சுட்டு பிடிக்க உத்தரவு

சென்னை காசிமேடு புதுமனை குப்பம் முதல் தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 28). மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்த இவர் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு மாதவரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் சரண் அடைந்தனர். 2 பேர் கைதாகினர்.

இதில் ரவுடி மாலைக்கண் செல்வம் முக்கிய குற்றவாளி என்று தெரியவந்தது. இதனால் செல்வம் தலைமறைவானார். அவரை சுட்டு பிடிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் செல்வம் நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.

பரபரப்பு வாக்குமூலம்

செல்வம் கொடுத்த தகவலின் பேரில் காசிமேட்டை சேர்ந்த சரவணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். 2 பேர் மீதும் மாதவரம் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிவு செய்து திருவொற்றிïர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக இந்த கொலை தொடர்பாக மாலைக்கண் செல்வம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

பழிக்கு பழி

கடந்த 6 மாதத்துக்கு முன்பு என்னுடைய அக்கா மகன் அகத்தீஸ்வரனை செந்தில் மற்றும் அவருடைய கூட்டாளிகள் எண்ணூர் அருகே கொலை செய்தனர். இதனால் செந்திலை பழிக்கு பழி வாங்க காத்திருந்தேன். இதை அறிந்த செந்தில் தலைமறைவானார்.

கடந்த மாதம் 23-ந் தேதி செந்தில் அவருடைய குடும்பத்தை பார்க்க காசிமேடு வந்ததாக தகவல் கிடைத்தது. என்னுடைய கூட்டாளிகளை ஏவி விட்டு மாதவரம் புதிய மேம்பாலம் அருகே செந்திலை கொலை செய்தேன். என்னை போலீசார் சுட்டு பிடிக்க முயன்றதால் சரண் அடைந்தேன். இனி திருந்தி வாழ போகிறேன்.

இவ்வாறு செல்வம் கூறினார்.

———————————————————————————————–

Posted in ACP, Akhthar, Akthar, Alcohol, Arcadu, Arcaud, Arcot, Arcot N Veerasamy, Arkadu, Arms, Arrack, Assassin, Assassination, Assembly, Bagalur, Bangalore, BJP, Bombs, Cabinet, Chennai, Cinema, Commissioner, CoP, Crime, Criminal, CSI, Dada, DCP, dead, Election, Electricity, Encounter, Extortion, Faces, gang, Guna, Hide, Hideout, Hijack, Hosoor, Hosur, HR, ICF, Illicit, Karnataka, Kidnap, kidnappping, Kumaran, Law, Leaders, Liquor, Maalaikan, Maalaikkan, Madras, Minister, MLA, Money, Movies, Murder, Murugan, Murukan, N Veerasamy, Nanjil, Nanjil Kumaran, National Highway, Neta, Netha, nexus, NH, Order, Osur, people, Peramboor, Perambur, Police, Poll, Raichoor, Raichur, Rajaram, ransom, Ravi, Rich, rights, Rowdy, Santhapuram, Selvam, Selvaraghavan, Shakeel, Story, TASMAC, Toddy, Veerachami, Veerachamy, Veeramani, Veerasami, Veerasamy, Vellai, Vellai Ravi, Venkatasaami, Venkatasaamy, Venkatasami, Venkatasamy, Venkatesa Pannaiyaar, Venkatesa Pannaiyar, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayakumar, Vijaykumar, Weapons | Leave a Comment »

BSNL tender scam – Allegations, Maran vs Raja: DMK internal squabbling or corruption?

Posted by Snapjudge மேல் ஜூலை 21, 2007

பிஎஸ்என்எல் சர்ச்சை: நடந்தது என்ன?

புதுதில்லி, ஜூலை 21: பிஎஸ்என்எல் டெண்டர் சர்ச்சைக்குப் பிறகு, தற்போது அது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விளக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா.

பிஎஸ்என்எல் மற்றும் அதன் ஊழியர்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, தான் முடிவெடுப்பதாக ராசா அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தனது நடவடிக்கையால், உடனடியாக அரசுக்கு ரூ.6,500 கோடி மிச்சப்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று, மூன்று பக்கக் கடிதத்தை பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ளார். விவரம்:

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஜிஎஸ்எம் மொபைல் சேவை (2ஜி, 3ஜி) டெண்டர் தொடர்பாக அண்மையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் தொடர்பாக இக் கடிதத்தை எழுதுகிறேன்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயல்பாடு குறித்து எனது அமைச்சகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இந் நிறுவனம் சிறந்து விளங்குவதற்கும், தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தவும் அதற்குத் தேவையான ஒத்துழைப்பு மற்றும் தன்னாட்சியை வழங்குவதில் உறுதிபூண்டுள்ளது.

தில்லி உயர்நீதிமன்றத்தில் மோட்டரோலா நிறுவனம் தொடர்ந்த வழக்குக் காரணமாக, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கான ஜிஎஸ்எம் டெண்டரை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

நான் அமைச்சராகப் பதவியேற்றவுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் ஏராளமான புகார்கள் வந்தன. மோட்டரோலா நிறுவனம் எம்டிஎன்எல் நிறுவனத்துக்கு கருவிகளை வழங்கும் விலையை விட, தற்போதைய சந்தை நிலவரத்தைவிட அதிகமான விலைக்கு, பிஎஸ்என்எல் நிறுவனம் ஆர்டர் வழங்க உள்ளதாக புகார் கூறப்பட்டது. மேலும், தொழில்நுட்ப காரணங்களைக் கூறி, சில நிறுவனங்கள் டெண்டரில் இருந்தே விலக்கப்பட்டதாகவும் புகார் வந்தது.

இவை அனைத்தும் மிகவும் கடுமையான புகார்கள். அதனால், அது தொடர்பாக விளக்கம் கேட்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. சந்தேகங்களைப் போக்குமாறு கேட்டேன். எல்லாம் முறையாகவும், வெளிப்படையாகவும் நடக்க வேண்டும் என்ற காரணத்தாலும், கட்டணம் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தாலும், பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து விவரங்களைப் பெற்றேன். அவற்றை ஆய்வு செய்த பிறகு, தொலைத்தொடர்புத் துறை செயலர் மூலமாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு தகவல் அனுப்பினேன்.

எனது கருத்துக்கள் பற்றி விவாதித்து, பிறகு கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்ரமணியத்தின் கருத்தையும் கேட்டு பிஎஸ்என்எல் இயக்குநர் குழு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தது.

அதாவது, தற்போதைக்கு டெண்டர் அளவை 50 சதமாகக் குறைத்து, (2.275 கோடி இணைப்புகள்), டெண்டரில் முதல் இடம் பெற்ற எரிக்ஸன் நிறுவனத்துக்கு 13.125 மில்லியன் லைன்களுக்கு (மதிப்பு ரூ.5,154 கோடி) இணைப்பு வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. மொத்தம் 4.55 கோடி இணைப்புகளுக்கு முதலில் ரூ.22,595 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. அது, ரூ.16,096 கோடியாகக் குறைக்கப்பட்டது. அதாவது, ரூ.6,500 கோடி மிச்சப்படுத்தப்பட்டது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அடுத்த 15 மாதங்களுக்கான தேவைகளை சமாளிக்க, 22.75 மில்லியன் இணைப்புகளும், தற்போது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள ஆர்டர்களும் போதுமானவை. மேலும், வளர்ச்சியை ஆய்வு செய்து, அதற்கு ஏற்றபடி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான தேவைகளைச் சமாளிக்க பிஎஸ்என்எல் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வப்போது நடைபெற்றுவரும் முன்னேற்றங்கள் தொடர்பாக தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் தெரிவிக்குமாறு தொலைத்தொடர்புத் துறைச் செயலரை நான் அறிவுறுத்தியிருக்கிறேன்.

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்பான சர்ச்சையின்போது, தாங்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ராசா குறிப்பிட்டுள்ளார்.
——————————————————————————————————————-

டெண்டர் பிரச்னையால் “பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டம்”
(Idly-Vadai)

பிஎஸ்என்எல் டெண்டர் பிரச்னையால் தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி லாபமும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டமும் ஏற்பட்டு இருக்கிறது என்று பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க மாநிலச் செயலர் என்.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கடலூரில் கூறியது:

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஜிஎஸ்எம் 2ஜி மற்றும் 3ஜி கருவிகள் வாங்க டெண்டர் இறுதி செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகியும், கருவிகள் வாங்க ஆர்டர் வழங்காததால் பிஎஸ்என்எல் நிறுவனம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

டெண்டர் பிரச்னையால் மாதம் ஒன்றுக்கு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 65 லட்சம் இணைப்புகளை அளித்து இருக்கும்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் 29 ஆயிரம் செல் இணைப்புகளை மட்டுமே வழங்கி இருக்கிறது. இந்த நிலையில்தான் வேலை நிறுத்தம் என்ற நிலைக்கு பிஎஸ்என்எல் ஊழியர்களும் அலுவலர்களும் தள்ளப்பட்டனர்.

அவசர அறிவிப்பின் மூலம் பொய்யான தோற்றத்தை பதிய அமைச்சர் ராசா மேற்கொள்ள, முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் பிஎஸ்என்எல் நலனுக்காக அறிக்கை விடுகிறார். இவர்கள் இருவரும் டெண்டர் பிரச்னையை அரசியல் ஆக்கியதன் மூலம், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 30 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து வருவதுதான் வேதனை.

முன்னாள் அமைச்சர் மற்றும் இந்நாள் அமைச்சரின் அரசியல் சர்ச்சைகளில் சிக்கி, பிஎஸ்என்எல் நிறுவனம் மக்கள் நலன்களை, தனியார் முதலாளிகளிடம் அடகு வைத்துவிடக் கூடாது. எனவே அரசியல் சர்ச்சைகளை உதறித் தள்ளிவிட்டு, பிஎஸ்என்எல் நிறுவனத் தலைவர் அக்கறையுடன் செயல்பட்டு, 15 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் மீண்டும் போராட்டம் தலைதூக்கும்.

——————————————————————————————————————-

Posted in 2G, 3G, Allegation, Bharti, BJP, Bribery, Bribes, broadband, BSNL, Cabinet, CBI, Cellphone, Connection, Corruption, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Dhayanidhi, Dhinakaran, DMK, GSM, InfoTech, Internet, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kickbacks, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maaran, Maran, Mobile, Motorola, MTNL, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, Raja, Rasa, Reliance, RPG, satellite, Scam, Sun, SunTV, Telecom, Telephones, Telephony, tender, TV | Leave a Comment »

Lok Sabha MP of Samajwadi Party, Rasheed Masood is the Third Front Vice-Presidential nominee

Posted by Snapjudge மேல் ஜூலை 16, 2007

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மூன்றாவது அணி வேட்பாளர் ரஷீத் மசூத்

மும்பை, ஜூலை 17: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக மூன்றாவது அணி சார்பில் போட்டியிடுகிறார் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரஷீத் மசூத்.

இத்தகவலை, சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலர் அமர் சிங் மும்பையில் திங்கள்கிழமை நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மசூத் பல சிறப்புகளைப் பெற்றுள்ளவர். மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூர் மக்களவைத் தொகுதியில் 5 முறை போட்டியிட்டு வென்றுள்ளார்.

மத்தியில் வி.பி. சிங்கின் ஜனதா தள அரசில் அமைச்சராக இருந்துள்ளார் மசூத்.

மூன்றாவது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மசூத் வேட்பாளராக தேர்வு பெற்றுள்ளார். இப்பதவிக்கு மேலும் பலரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. அவர்களைக் குறித்து இப்போது குறிப்பிடுவது சரியல்ல.

ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் முக்கியத் தலைவர்களான ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, பாபுலால் மராண்டி உள்ளிட்டோர் முன்னிலையில் மசூத் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார்.

எமது கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும்படி காங்கிரஸ், பாஜக கூட்டணியினரிடம் பேசவில்லை. அவர்களின் ஆதரவை எதிர்பார்க்கவும் இல்லை.

அதேவேளையில் இடதுசாரிகளிடம் மசூத் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவித்துள்ளோம்.

இடதுசாரிகளுடன் எப்போதுமே எங்களுக்கு தொடர்பு உண்டு. இருப்பினும் அரசியல் நிர்பந்தம் காரணமாக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை இடதுசாரிகள் ஆதரிப்பர் என்பது தெரிந்த விஷயம்தான் என்றார் அமர் சிங்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 10-ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர் பெயரை அறிவித்த முதல் அரசியல் அணி என்ற பெருமை ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்துள்ளது.

Posted in ADMK, Amarsingh, Cabinet, candidate, Choice, Congress, Elections, Gandhi, Janatha, JD, JJ, Lok Saba, Lok Sabha, LokSaba, LokSabha, Masood, MP, Mulayam, NDA, Nominee, North, Patil, Polls, Prathiba, President, Rasheed, Rashid, Saharanpur, Samajwadi, Shekavath, Shekawath, Shekhawat, SJP, Sonia, Third, United National Progressive Alliance, UNPA, UP, Uttar Pradesh, UttarPradesh, vice-president, Votes, VP, VP Singh | Leave a Comment »

Joint management of airspace – Defence and the civil aviation ministry

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

வானில் ஓர் எல்லைப் பிரச்னை!

வி. கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவின் வான் பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பு வகிக்கும் பாதுகாப்புத் துறைக்கும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே தற்போது எல்லைப் பிரச்னை எழுந்துள்ளது.

இவை இரண்டும் தனித்தனித் துறைகள்தான் என்றாலும் இரண்டுக்கும் களம் (AIRSPACE) ஒன்றுதான். இமயம் முதல் இந்தியப் பெருங்கடல்வரையும், அரபிக்கடல் முதல் வங்காள விரிகுடாவரையும் பெரும்பாலான வான்பகுதி இந்திய விமானப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதிகளில் பறக்கும் விமானங்கள் அனைத்தும் பாதுகாப்புத் துறையின் அனுமதி இல்லாமல் செல்ல முடியாது. இதுதவிர நாட்டில் பல்வேறு பயிற்சித் தளங்கள் உள்பட சுமார் 60 இடங்களில் தரைத் தளங்கள் விமானப்படையின்கீழ் செயல்படுகின்றன.

இந்த விமானத் தளங்கள் உள்ள பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பல்வேறு பிரச்னைகள் எற்படுகின்றன. உதாரணமாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானில் பெரும் பகுதி, தாம்பரம் விமானப் படைத்தளம் மற்றும் அரக்கோணத்தில் கடற்படையின் விமான தளம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றின் எல்லைகளுக்கு அப்பால் மீதம் உள்ள வான்பகுதியை நம்பியே சென்னை விமான நிலையம் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய வான்பகுதி எல்லைப் பிரச்னை காரணமாக சென்னைக்கு கிழக்கே புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டமே கைவிடப்பட்டது.

நாட்டில் தற்போது 13 சர்வதேச விமான நிலையங்கள் உள்பட 126 விமான நிலையங்கள் உள்ளன. நாட்டின் மொத்த வான்பகுதியில் 28 லட்சம் சதுர கடல்மைல் (நாட்டிக்கல் மைல்) மட்டுமே விமானப் போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தவிர விமான நிலையங்கள் இல்லாத இடங்கள் உள்பட 28 விமானப் படைத் தளங்களில் சிவில் விமானங்களுக்கென தனிப் பகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிறிய விமான நிலையங்கள், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு இல்லாததால் விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டும் தற்போதைய தேவை மற்றும் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டும் விமானப் போக்குவரத்துக்கான புதிய வரைவுக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியது.

இதில், பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல வான்பகுதிகளை சிவில் விமானப் போக்குவரத்துக்கு அளிக்க வேண்டும். நாட்டின் வான் பகுதியில் விமானப் படையின் கட்டுப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில அம்சங்கள் பாதுகாப்புத் துறைக்கும் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே வெளிப்படையான மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

இதுதவிர, விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல், இந்தத் துறையின் செயலர், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் தொடர்ந்து வான் பகுதி தொடர்பான பிரச்னையில் பாதுகாப்புத் துறையை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் இத்தகைய வெளிப்படையான விமர்சனங்கள் பாதுகாப்புத் துறை தரப்பை ஆத்திரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி வரைவு விமானப்போக்குவரத்துக் கொள்கை தொடர்பான ஆட்சேபனைகளைப் பகிரங்கமாகத் தெரிவித்தார். விமானப்போக்குவரத்தில் பல்வேறு நிலைகளில் படிப்படியாகத் தனியார்மயத்தை ஊக்குவித்துவரும் விமானப்போக்குவரத்துத் துறையை நம்பி விதிகளை தளர்த்த முடியாது என்பதே அந்தோனியின் வாதம். பாதுகாப்புத் துறையின் எதிர்ப்பை அடுத்து விமானப் போக்குவரத்துக்கான வரைவுக் கொள்கை இறுதி வடிவம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் இரு முக்கியத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இத்தகைய பிரச்னைக்குத் தீர்வுகாண வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் பல்வேறு துறை அமைச்சர்கள் அடங்கிய உயர் நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 1999-ல் ஏற்பட்ட கார்கில் சண்டைக்குப் பின்னர் வான்பகுதி மேலாண்மைக்கான ஓர் அதிகார அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது. இத்திட்டம் முறையாக நிறைவேறாததே தற்போதைய பிரச்னைக்குக் காரணம்.

1995-ல் ரஷிய விமானங்கள் புருலியாவில் ஆயுதங்களைக் கொட்டின, 2001 செப்டம்பர் 11-ல் அமெரிக்காவில் உலக வர்த்தக மையம், ராணுவத் தலைமையகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த சிறிய ரக பயணி விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, அண்மையில் இலங்கையில் விடுதலைப்புலிகள் வான்தாக்குதலைத் தொடங்கி இருப்பது, சில பயங்கரவாத இயக்கங்கள் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பது ஆகியவை நாட்டின் வான்பாதுகாப்பு தொடர்பான கவலையை அதிகரித்துள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால்தான் நாட்டின் வான்பகுதி எல்லைப் பிரச்னைக்குச் சரியான தீர்வைக் காண முடியும். நாட்டின் பாதுகாப்பா, விமானப் போக்குவரத்து வளர்ச்சியா? என்றால் பாதுகாப்பான விமானப்போக்குவரத்து என்பதே அனைவரின் கருத்தாகும்.

விமானப்படை, விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் அடங்கிய வான்பகுதி மேலாண்மைக்கான ஒழுங்குமுறை ஆணையத்தை ஏற்படுத்துவதே தற்போதைய பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்பதே பல்வேறு தரப்பினரின் கருத்து.

Posted in AAI, Aeronautics, Air, Aircraft, Airforce, Airport, Airports, airspace, AK Antony, Analysis, Antony, ATC, Attacks, aviation, Backgrounder, Boeing, Cabinet, Civil, commercial, Courier, defence, Defense, Domestic, Eelam, Eezham, Fighter, Flights, Fly, Freight, Govt, HAL, IAF, International, Jets, Kargil, LTTE, Management, Marshal, Marshalls, Meenambakkam, MIG, Military, Navy, Op-Ed, Opinion, passenger, Patel, Pilots, Planes, Policy, Praful Patel, Protection, Share, Strategy, Terrorism, Thrisoolam, Trisoolam, World, Zone | Leave a Comment »

Former Prime Minister Chandrasekhar – Biosketch, Anjali

Posted by Snapjudge மேல் ஜூலை 8, 2007

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவு

புதுதில்லி, ஜூலை 9: முன்னாள் பிரதமர் சந்திரசேகர் (80) ஞாயிற்றுக்கிழமை காலை, தில்லியில் காலமானார்.

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சந்திரசேகர், 3 மாதங்களுக்கு முன் தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை காலை மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மறைந்த சந்திரசேகருக்கு 2 மகன்கள் உள்ளனர். சந்திரசேகரின் தில்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

1927-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த இவர், 1950-ல் ஆச்சார்யா நரேந்திர தேவால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் 1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக பிரஜா சோசலிஸ்ட் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1965-ல் காங்கிரஸில் இணைந்து கட்சியில் “இளம் துருக்கியராக’ இருந்தார். பின்னர், நெருக்கடி நிலையின்போது கைது செய்யப்பட்டார்.

ஜனதா கட்சி நிறுவியதில் முக்கிய பங்காற்றியவர். பின்னர், அக் கட்சியின் தலைவரானார். 1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கினார். 1990-ல் பிரதமரானார். சுமார் 6 மாதம் காலம் அவர் பிரதமராக பதவி வகித்தார்.

8 முறை எம்.பி.யாக இருந்தவர்:

அவர் இதுவரை 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். எந்தவொரு மத்திய அமைச்சரவையிலும் அவர் அமைச்சராக பணியாற்றாமலே பிரதமராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த சந்திரசேகரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தில்லியில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஜெயில் சிங், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன் ஆகியோரின் நினைவிடங்களுக்கு அருகில், சந்திரசேகரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

7 நாள் அரசு துக்கம்:

7 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். தில்லியில் திங்கள்கிழமை மதியம் 1 மணி முதல் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.

——————————————————————————————————————-
“கிளார்க் பணிக்கு’ முயற்சித்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர்

பாலியா, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் வயது குறைவால் கிளார்க் பணி வாய்ப்பை இழந்தார் என அவரது குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

சந்திரசேகர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவரின் மாமாவின் நண்பர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்ஷியாக பணியாற்றினார். அவர் மூலம் நீதிமன்றத்தில் கிளார்க் பணியில் சேர சந்திரசேகர் முயற்சித்தார்.

கிளார்க் பணியில் சேர குறைந்தபட்சம் 18-வயது நிரம்பியிருக்க வேண்டும் என விதிமுறை இருந்தது.

ஆனால், சந்திரசேகருக்கு பிற தகுதிகள் அனைத்தும் இருந்தும் அப்போது 18-வயது நிரம்பாததால், கிளார்க் பணி கிடைக்கும் வாய்ப்பை இழந்தார் என்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

அரசியலைப் போல் கலைத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்த சந்திரசேகர், அவரது கிராமத்தில் ராமலீலா பண்டிகை கொண்டாட்டத்தின் போது குரங்காகவும், கரடியாகவும் வேடம் தாங்கி நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

——————————————————————————————————————-

சந்திரசேகர் ~ எனது பேட்டியிலிருந்து…

சென்னை, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு கடந்த 30 ஆண்டுகளில் அளித்த பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்த கருத்துகளில் இருந்து சில பகுதிகள்:

பிரதமர் பதவி:

4 மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றியமைத்துவிட்டதாக நான் கூறிக்கொள்ள முடியாது. ஆனால் அந்த 4 மாதங்களில், நாட்டில் எழுந்த சூடான பிரச்னைகளைத் தணிக்க முயற்சி செய்திருக்கிறேன். நான் பிரதமராக பதவி ஏற்றபோது கிட்டத்தட்ட 80 அல்லது 90 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இரண்டு நாட்களில் (அமைதி ஏற்படுத்தப்பட்டு) ஊரடங்கு உத்தரவுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன.

பெரும்பான்மையான மக்களிடம் பற்றிக் கொண்ட “மண்டல்’ மற்றும் “அயோத்தி’ பிரச்னைகளால் மொத்த தேசமும் கொந்தளிப்பான நிலையில் இருந்தது. அப்போது இருந்த ஒரே கேள்வி பூனைக்கு மணி கட்டுவது யார்? என்பதே. அதற்கு முன் இருந்த அரசு தானே உருவாக்கிவிட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. அப்போதிருந்த ஒரே ஒரு மாற்று தேர்தல்தான்.

அத்தகைய சூழ்நிலையில் நான் ஆட்சி அமைத்தது சந்தர்ப்பவாதம் அல்ல; நாடு தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னர் மக்கள் மத்தியில் இருந்த கொதிப்பு அடங்க வேண்டும் என நான் உறுதியாக நம்பினேன். அதனால்தான் காங்கிரஸ் வெளியிலிருந்து தரும் ஆதரவுடன் ஆட்சி அமைத்தேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

பிரதமர் பதவி பேரங்களுக்கு அப்பாற்பட்டது. என்னைப் பொருத்தவரையில் பிரதமராக இருப்பதே வெற்றி அல்ல. எதுவும் செய்யாமல் அல்லது கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு அதிகாரத்தில் இருப்பதால் என்ன பயன்? ஒரு பிரதமராக, பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக ஒருமுறைகூட நான் சமரசம் செய்துகொண்டதில்லை.

முடிவெடுக்கும் அதிகாரத்தில் சமரசம் செய்துகொண்டு, கொள்கைகளைத் தியாகம் செய்துவிட்டு ஒருவர் அரசாங்கத்தை நடத்த முடியாது; வேண்டுமானால் வெறுமனே பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கலாம். ஒரு அரசியல்வாதி அரசாங்கத்தை நடத்தும் முறைக்காகத்தான் பாராட்டப்பட வேண்டுமே தவிர, பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக அல்ல.

அயோத்திப் பிரச்னை:

பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை எனில் அதன் பிறகு தீர்வுக்கு வழியே இல்லாமல் போய்விடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொறுமைதான் கைகொடுக்கும். விட்டுக்கொடுக்கும் குணம் மற்றும் சரியான அணுகுமுறையைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என எனக்கு எல்லா வகையிலும் நம்பிக்கை உள்ளது.

பிரதமராக இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் இந்தப் பிரச்னைக்கு நிச்சயமாக ஒரு தீர்வு கண்டிருப்பேன் என்பது மட்டும் நிச்சயம். அப்படி ஒரு தீர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் பலருடைய எண்ணமாக இருந்தது.

இடஒதுக்கீடு:

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் எனத் தீர்மானிப்பதற்கு அறிவியல் ஆய்வுமுறை ஏதும் இல்லை என மண்டல் கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் இடஒதுக்கீட்டுக் கொள்கை என்பது சமூக, பொருளாதார அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும்.

கருத்துக்கள்:

சிக்கலான சூழ்நிலைகளில் நான் கருத்துச் சொல்லத் தயங்கியதில்லை. அதே நேரம் மக்கள் மீது எனது கருத்துகளை திணிப்பதில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆலோசனைகளைத்தான் கூற முடியும். அவை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அதை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பிரச்னைகள் எல்லை கடந்து போகும்போது கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.

போஃபர்ஸ்:

1989 பொதுத்தேர்தலில் போஃபர்ஸ் விவகாரத்துக்கு தேவையில்லாத முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவிட்டது. நாம் கவனம் செலுத்த வேண்டிய வேறு முக்கியப் பிரச்னைகள் உள்ளன; அரசியல் கட்சிகளுக்கு இது முக்கிய பிரச்னை அல்ல என நான் அப்போதே எடுத்துக் கூறினேன். சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் போன்ற வெளிநாடுகளின் கையில் சிக்கிக்கொண்டுள்ள பிரச்னை போஃபர்ஸ். பிறகு எந்த அடிப்படையில் போஃபர்ஸ் பேரத்தின் மூலம் லாபம் பெற்றவர்களை அடையாளம் காட்டுவதாக மக்களுக்கு உறுதியளிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

பன்னாட்டு நிறுவனங்கள்: இன்றைய உலகில் எந்த ஒரு நாடும் தனித்திருக்க முடியாது. சில முக்கியமான -முதுகெலும்பு போன்ற -துறைகளில் கூட்டுமுயற்சிகளை நாம் நாட வேண்டும். அதே சமயம் நமக்கான எல்லை எது என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கூட்டணி அரசுகள்:

மாநிலங்களில் கூட்டணி அரசுகள் செயல்படுவது போல், மத்தியில் கூட்டணி அரசுகள் வெற்றிகரமாகச் செயல்பட முடியாது. பிராந்தியக் கட்சிகள் கொடுக்கும் நெருக்கடிகள், கூட்டணி அரசு சந்திக்கும் முக்கியப் பிரச்னையாக இருக்கும். குறைந்தபட்ச செயல்திட்டம், கொள்கைகள் இல்லாமல் ஒரு அரசு பொறுப்பேற்றுக்கொள்வது, நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.

வகுப்புவாதம்:

மத அடிப்படைவாதம் நாட்டின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் என்றால், மத அடிப்படையிலான அரசியல் அதைவிட அபாயகரமானது. மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் அக்கறையில்லாமல், சாதி, மதம், மொழி போன்ற மக்களைக் கொந்தளிக்கச் செய்யும் விஷயங்களை அரசியல்வாதிகள் எழுப்புகிறார்கள்.

ஏழை பணக்காரர்:

இந்த நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்ல உணவு, பாதுகாப்பான குடிநீர், தேவையான மருத்துவ வசதி, உடை, உறைவிடம், கல்வி அளிக்க வேண்டியது அவசியமாகும். ஏழைகளுக்கு இந்த வசதிகள் சென்று சேருவதற்கு, வசதி படைத்தோர் சில தியாகங்களைச் செய்துதான் ஆகவேண்டும்.

உலகிலேயே அரசிடம் வெறும் அடிப்படை வசதிகளை மட்டும் எதிர்பார்க்கும் மக்கள் இருப்பார்களேயானால் அது நமது இந்திய மக்கள் மட்டும்தான். இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு, குடிக்க நீர், அடிப்படை சுகாதார வசதி, ஆரம்பக் கல்வி, தெருவிளக்கு, சாலைகள் இவையெல்லாம் அடிப்படைத் தேவைகள். இதைக்கூட நம்மால் இதுவரை முழுமையாகத் தர இயலவில்லை என்பது வருத்தமான விஷயம்.

ஐனதா அரசு:

மக்களாட்சியை மலரச் செய்யும் நோக்கில்தான் ஜனதா கட்சி உருவானது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை. மக்களின் அதீத எதிர்பார்ப்புகளை ஜனதா அரசால் நிறைவேற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. என்னைப் பொறுத்தவரையில் ஜனதா கட்சியின் சோதனை முயற்சி தோற்றுப்போகவில்லை.

அன்னிய முதலீடு:

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மின் உற்பத்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீடுகள் அனுமதிக்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் நுகர்வோர் சந்தை உள்ளிட்டவற்றில் அன்னிய முதலீடு தேவையில்லாதது. இது இப்படியே தொடர்ந்தால், வர்த்தகர்களாக இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினர், நாட்டை ஆட்சி செய்யும் அளவுக்குப் போனார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.

கார்கில்:

கார்கில் வெற்றியைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் ஏதோ பெரிய சாதனை படைத்ததுபோலக் கூறுகிறார்கள். ஆனால், நமது எல்லைக்குள் இத்தனை தீவிரவாதிகள் எப்படி ஊடுருவினார்கள் என்றோ, முக்கியமான இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள் என்றோ யாரும் கேட்பதில்லை. அரசுக்கும் அரசின் உளவுத் துறைக்கும் ராணுவத்துக்கும் கொஞ்சம்கூட சந்தேகம் ஏற்படவில்லை என்றால் அது அரசின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாடே தவிர வெற்றியல்ல. எல்லையில் ஏற்பட்ட ஊடுருவலைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் ஓர் அரசின் செயல் மன்னிக்கக் கூடியதல்ல.

தங்கத்தை அடமானம் வைத்தது ஏன்?

எனது அரசு நாட்டின் தங்கத்தை எல்லாம் அடமானம் வைத்துவிட்டது, விற்றுவிட்டது என்றெல்லாம் தவறான செய்தியை வேண்டுமென்றே பரப்பினார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நாங்கள் அடமானம் வைத்தது நம்மிடமிருந்த கையிருப்புத் தங்கத்தை அல்ல. வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட தங்கத்தை நமது சுங்க இலாகா பறிமுதல் செய்து வைத்திருந்தது. அந்தத் தங்கம்தான் அடமானம் வைக்கப்பட்டது.

எதற்காக அடமானம் வைக்கப்பட்டது? என்று கேட்பீர்கள். அந்த நேரத்தில் எனது அரசு காபந்து அரசாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். நமது அரசு வாங்கியிருந்த கடன்களுக்கு வட்டி கட்ட வேண்டிய கெடு நெருங்கிவிட்டது. முந்தைய அரசு அதற்கு எந்தவித ஏற்பாடும் செய்யாமல் விட்டுவிட்டது. காபந்து அரசு என்றால் எந்தவிதக் கொள்கை முடிவுகளும் எடுக்க முடியாது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க பட்ஜெட் தாக்கல் செய்யவும் முடியாது. ஏதாவது முடிவு எடுத்து குறித்த நேரத்தில் வட்டியைக் கட்டாமல் விட்டால், உலக அரங்கில் இந்தியாவின் மானம் கப்பலேறி விடும்.

அப்படி ஓர் இக்கட்டான நிலையில், கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தை அடமானம் வைத்து நிலைமையைச் சமாளிப்பது என்று முடிவெடுத்தோம். அந்த முடிவினால் இந்தியாவின் மானத்தை உலக அரங்கில் காப்பாற்றினோம் என்பதை மறந்து, எனது அரசு தங்கத்தை விற்றுவிட்டது என்று அவதூறு சொல்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற முடிந்தது என்று பெருமைப்படுகிறேன்.

ஊழல்:

ஊழல் பெருகிவிட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம். இந்தக் கூக்குரல்களில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இந்தியா ஒரு லஞ்ச ஊழல் மலிந்த நாடு என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் போன்றவர்கள்தான் இந்த லஞ்ச ஊழலில் ஈடுபடுகிறார்களே தவிர, சாதாரண விசவாயியோ, ஏழைத் தொழிலாளியோ, மாதச் சம்பளம் வாங்கும் பணியாளியோ லஞ்சம் பெறுவதுமில்லை, கொடுப்பதுமில்லை. அவர்களது எண்ணிக்கைதான் இந்தியாவில் அதிகம். ஒரு சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதற்காக இந்தியாவே லஞ்ச ஊழலில் மூழ்கிக் கிடக்கிறது என்பது பொறுப்பற்ற பேச்சு.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே லஞ்ச ஊழலை அகற்றிட போராட்டம் நடத்த வேண்டும் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. லஞ்ச ஊழல் இல்லாமல் நிர்வாகம் நடத்துவது அவர்களது பொறுப்பு. இதை எதிர்த்துப் போராடுவது என்றால், அவர்களை எதிர்த்து அவர்களே போராடுவது என்றுதானே அர்த்தம்?

இந்தியாவின் எதிர்காலம்:

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சுதந்திரம் பெற்று ஜனநாயம் சீராக சிறப்பாக செயல்படும் ஒரே நாடு இந்தியாதான். இந்தப் புகழ் இந்திய மக்களின் மேதமையையே சாரும். அரசியல்வாதிகள் தோற்றிருக்கலாம். நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அரசியல்வாதிகளின் தோல்வி இந்த நாட்டின் தோல்வி அல்ல.

நமது மக்களின் திறனில் வைத்துள்ள உறுதி மற்றும் நம்பிக்கையின் மூலம் எல்லாப் பிரச்சினைகளையும் நாம் தீர்க்க முடியும். 1947-ல் நாம் ஒரு ஆணியைக்கூட உற்பத்தி செய்யவில்லை. ஆனால் 1994-ல், உலகின் 13 முக்கிய தொழில்துறை நாடுகளில் நமது நாடும் ஒன்று. கிட்டத்தட்ட நாம் எல்லாவற்றையுமே உற்பத்தி செய்கிறோம். விவசாயத் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளோம்.

இந்தியாவின் மிகப்பெரிய பலம் இந்தியக் குடிமகன்தான். அவன் படிக்காதவனாக இருக்கலாம். ஆனால் புத்திசாலி. நமது அரசியல்வாதிகள் அவனை ஏமாற்றுவதாக நினைத்தால் முதலில் ஏமாறப்போவது அவர்கள்தான். இந்தியாவால் மட்டும்தான் உலகுக்கு வழிகாட்ட முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் இந்தியாவை நோக்கி படையெடுத்தது ஏன்? அது உலகமே பார்த்து பிரமித்த பொருளாதாரமாக இருந்ததால்தான். அதே நிலைமை விரைவிலேயே திரும்பும். நாளைய தலைமுறை இளைஞர்களிடம் இருக்கும் தேசப்பற்று இந்தியாவுக்கு அதன் இழந்த அருமை பெருமைகளை மீட்டெடுத்துத் தரும். இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை நிறையவே இருக்கிறது.

—————————————————————————————————————
சந்திரசேகரின் வாழ்க்கைக் குறிப்பு…

1927-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள இப்ராஹிம்பாடியாவில் பிறந்தார். இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். அலாகாபாத் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோதே, பொதுவுடைமை கருத்துகளால் ஈர்க்கப்பட்டார்.

1950-ம் ஆண்டுகளில் ஆச்சார்யா நரேந்திர தேவின் கருத்துகளால் கவரப்பட்ட சந்திரசேகர், பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பிரஜா சோசலிஸ்ட் கட்சி சார்பில் 1962-ல், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1965-ல் காங்கிரஸில் இணைந்தார். சில ஆண்டுகளில் அவர், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாளித்துவத்தை எதிர்த்து மக்களவையில் குரல் கொடுத்தார் சந்திரசேகர். காங்கிரஸில் “இளம் துருக்கியர்’ என்றழைக்கப்பட்ட அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். இவருடன் மோகன் தாரியா, ராம் தன் உள்ளிட்ட எம்.பி.க்கள் இணைந்து காங்கிரஸின் தலைமையை எதிர்த்து வந்தனர். இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி கூட, இந்த இளம் துருக்கியர் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1975-ல் நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து காங்கிரஸில் இருந்து வெளியேறி ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான இயக்கத்தில் இணைந்து நெருக்கடி நிலையை எதிர்த்தார். இதையடுத்து ஜனதா கட்சி உருவானது. இக் கட்சிக்கு ஏர் உழவன் சின்னம் கிடைத்தது.

1977-ல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்தது.

அதே ஆண்டில், ஜனதா கட்சியின் தலைவராக சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1977-ல் இருந்து அனைத்து மக்களவைத் தேர்தலிலும் (1984-ல் இந்திரா காந்தி மறைவின்போது நடந்த தேர்தலைத் தவிர) வெற்றிப் பெற்றார்.

1980-க்கு முன் ஜனதா கட்சி உடைந்ததும், அக் கட்சியின் தலைவராகவே 1989-வரை நீடித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1983-ல் காஷ்மீரில் தொடங்கி தில்லி வரை பல ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.

1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கி காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்தார். பிரதமராக வேண்டிய வாய்ப்பு கிடைக்காததால் அவர் அமைச்சர் பதவியையும் மறுத்தார்.

1990-ல் மண்டல் கமிஷன் விவகாரத்தால் ஆட்சியை இழந்தார் வி.பி.சிங்.

இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுடன் 1990-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி பிரதமராக பதவியேற்றார்.

6 மாத காலம் பிரதமராக இருந்த சந்திரசேகர் ஆட்சியில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தில்லி வீட்டை சில் போலீஸôர் வேவு பார்த்ததாக எழுந்த விவகாரத்தால் அவரது ஆட்சிக்கு ஆதரவை விலக்கி கொண்டது காங்கிரஸ்.

1991-ம் ஆண்டு மார்ச் 6-ல், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார் சந்திரசேகர். அன்று அவர் நாடாளுமன்றக் கட்டத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தனியாக நடந்து சென்று ராஜிநாமா கடிதத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர், அரசியலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், 2004 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

கடந்த 1-ம் தேதி (1-7-2007) தனது 80-வது பிறந்தநாளை அவர் கொண்டாடினார்.

தேசியத் தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் துணைத் தலைவர்: குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எனக்கு நல்ல நண்பராக இருந்தவர். சோசலிஷ கொள்கையிலும், ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. ஏழைகளின் வாழ்வு உயர இறுதி வரை உழைத்தவர் சந்திரசேகர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன்: காந்தியக் கொள்கையில் தீவிர பற்றுக் கொண்டவர். கிராமப் புற மக்கள், கிராமத் தொழில்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறைக் கொண்டவர்.

பிரதமர் மன்மோகன் சிங்: மதசார்பற்ற தேசியவாதி. மக்களின் தலைவராக மதிக்கப்பட்டவர். சிறந்த அரசியல்வாதியை நாடு இழந்து விட்டது. அரசியலிலும், ஆட்சியிலும் பல புதுமைகளை கொண்டு வந்தவர்.

முன்னாள் பிரதமர் வாஜபேயி: நீண்ட நாள் அரசியல் நண்பர். அச்சற்ற முறையில் எதற்கும் துணிந்து போராடக் கூடியவர். நீதிக்காக குரல் கொடுத்தவர்.

முன்னாள் பிரதமர் குஜ்ரால்: நாடு நல்ல தலைவரை இழந்து விட்டது. அவருடைய அரசியல் வாழ்க்கை துணிச்சல் மிக்கது.

சோம்நாத் சாட்டர்ஜி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில் மிகச் சிறந்தவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகமானவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: அரசியலில் துணிச்சலுடன் போராடியவர். இளம் வயதில் அரசியலில் பங்கேற்று நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். நீண்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.

பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்: தனது கொள்கைகளை என்றைக்குமே அவர் விட்டுக் கொடுத்ததில்லை. பல்வேறு தரப்பு மக்களுக்காக குரல் கொடுத்தவர்.

லாலு பிரசாத்: விடுதலைக்காக போராடிய வீரர். நெருக்கடி நிலைக் காலத்தில் அவரது பங்கு மகத்தானது.

சீதாராம் யெச்சூரி: பல ஆண்டுகளாக இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்தவர் சந்திரசேகர். கூட்டணி ஆட்சிக்கு வழிவகை கொடுத்தவர்.

சரத் யாதவ்: இந்திய ஜனநாயகத்தின் தூணாக விளங்கியவர் சந்திரசேகர்.

————————————————————————————————

Dinamani op-ed

தேசிய இழப்பு!

உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!

சுதந்திர இந்திய வரலாறு பல பிரதமர்களைச் சந்தித்துவிட்டது. சந்திக்கவும் இருக்கிறது. அந்தப் பதவியை அலங்கரித்த ஒவ்வொரு பிரதமருக்கும் ஒரு தனித்தன்மை இருந்தது என்பது மட்டுமல்ல; அந்தப் பதவியில் அமர்ந்தவர்கள், அவரவர் வகையில் சிறப்புகள் சேர்த்தனர். இந்த விஷயத்தில் சதானந்த்சிங் சந்திரசேகர் விதிவிலக்கல்ல.

மிகக் குறைந்த நாள்களே பிரதமராக இருந்தபோதிலும், அவரது பதவிக்காலம் இரண்டு மிகப்பெரிய பிரச்னைகளின் வேகத்தைத் தணித்து, இந்தியாவில் இனக்கலவரம் ஏற்படாமல் பாதுகாத்தது என்று வரலாறு நிச்சயமாக சந்திரசேகருக்குப் புகழாரம் சூட்டும். ஒருபுறம் மண்டல் கமிஷன் அறிவிப்பின் எதிரொலியாக வடமாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த வன்முறைகள்; மறுபுறம், அயோத்திப் பிரச்னையால் ஏற்பட்ட மதக்கலவரங்களும், அதனால் ஏற்பட்ட இனவாத விரோதங்களும்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்த வேளையில், இனியும் ஒரு பிரிவினைக்கால மதக்கலவரச் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று சந்தேகப்பட்ட சூழ்நிலையில் சந்திரசேகரின் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றது. அப்படியொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், ஜாதிக் கலவரங்கள் ஒருபுறமும், மதக்கலவரங்கள் மறுபுறமும் என்று உள்நாட்டுக் கலகமே வெடித்திருக்கும் சாத்தியம் நிலவியது. சந்திரசேகர் பதவியில் தொடர்ந்திருந்தால் அயோத்திப் பிரச்னைக்கு சுமுகமான முடிவு ஏற்பட்டிருக்கும் என்பதுதான் நமது கருத்து.

தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட காரணத்தால் சிலருக்கு சந்திரசேகர் மீது மனவருத்தம் இருக்கலாம். ஆனால், பிரதமர் என்ற முறையில் சந்திரசேகர் எடுத்த எந்தவொரு முடிவுமே பாரபட்சமற்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறு என்று சொல்ல முடியாதது.

பதவியில் இருந்தபோதும் சரி, பதவியை இழந்த பிறகும் சரி, சந்திரசேகர் என்கிற பெயர் தனி அந்தஸ்துடனும், மரியாதையுடனும்தான் வலம் வந்தது. என்னதான் கூச்சலும் குழப்பமும் இருந்தாலும் சந்திரசேகர் பேச எழுந்தார் என்றால் நாடாளுமன்றம் கப்சிப்பென்று நிசப்தமாகிவிடும். பிரதமர் தொடங்கி அத்தனை உறுப்பினர்களும் அவரிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். கட்சி பேதமின்றி எந்த ஓர் உறுப்பினரும் இடைமறித்துப் பேசாத ஒரே ஒரு பேச்சாளர் நாடாளுமன்றத்தில் இருந்தார் என்றால் அது சந்திரசேகர் மட்டும்தான்.

வீம்புக்காரர், முன்கோபி, பிடிவாதக்காரர் – என்ற கோணங்களில் அவரைப் பார்ப்பவர்கள் உண்டு. அத்தனையும் உண்மையும்கூட. அதேசமயம், எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க விரும்புபவர் என்பது மட்டுமல்ல, எதிர்தரப்பு வாதத்தில் நியாயமிருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கு இருந்தது. எந்தவொரு காரணத்துக்காகவும் தனது தன்மானத்தையும் தனக்குச் சரியென்றுபட்ட கொள்கையையும் விட்டுக்கொடுக்காத அவரது பிடிவாதம், சந்திரசேகரை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபட வைத்தது. அவருக்குப் பல எதிரிகளையும் ஏற்படுத்தியது.

“”நான் எத்தனை நாள்கள் பிரதமராக இருந்தேன் என்பதைவிட பிரதமராக எப்படிச் செயல்பட்டேன் என்பதுதான் முக்கியம்”~சந்திரசேகர் தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறும் விஷயம் இது. “”எந்தவொரு காரணத்துக்காகவும் பிரதமர் பதவியின் மரியாதையும் கௌரவமும் குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதற்குக் களங்கம் வரும் விதத்தில் நான் செயல்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு எனது ஒரே பதில் – எனது ராஜிநாமா கடிதம்தான்” – தனக்கு ஆதரவளித்த ராஜீவ் காந்தியிடம் சந்திரசேகர் சொன்ன விஷயம் இது.

அறுபது ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றின் ஏடுகளை யார் புரட்டிப் பார்த்தாலும், சிறிது காலமே பிரதமராக இருந்த சந்திரசேகரின் கருத்துகளும், பிரச்னைகளுக்கு அவர் எடுத்த தீர்வுகளும் ஒவ்வொரு பக்கத்திலும் நிழலாடும். இந்திய ஜனநாயகம் அழிந்துவிடாமல் பாதுகாத்த பெருமைக்குரிய தலைவர்களில் அவரது பங்கு கொஞ்சநஞ்சமல்ல.

இளம் துருக்கியராக, ஜனதா கட்சியின் தலைவராக, பிரதமராக, மூத்த அரசியல்வாதியாக எல்லாவற்றுக்கும் மேலாக கொள்கைப் பிடிப்புள்ள ஒரு தலைவராக, அன்புடனும் பாசத்துடனும் பழகும் மனிதனாக வாழ்ந்து மறைந்துவிட்டார் சதானந்த்சிங் சந்திரசேகர்.

எந்தவொரு விஷயத்திலும் தீர்க்கமான சிந்தனையும், தெளிவான தீர்வும் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவு, ஈடுகட்ட முடியாத தேசிய இழப்பு!

Posted in Agriculture, Allahabad, Alliance, Anjali, Ayodhya, Biography, Biosketch, BJP, Bofors, Bribery, Bribes, Cabinet, Capitalism, Cargil, Caste, Chandrasekar, Chandrasekhar, CharanSingh, Chat, Coalition, Communism, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corrupt, Corruption, Democracy, Economy, Emergency, Faces, Farming, FDI, Feroze, Finance, Freedom, Fundamentalism, Gandhi, Govt, Incidents, Income, Independence, Indhira, Indira, Indra, infrastructure, Inquiry, Interview, investments, Jan Morcha, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JanSakthi, JanSakti, JanShakthi, JanShakti, JP narayan, Kargil, kickbacks, Liberation, Life, LokSaba, LokSabha, Mandal, Manmohan, Marxism, MNC, Morarji, MP, Musharaf, Musharaff, Narain, Narasimha Rao, Narasimharao, Narayan, Nehru, NRI, Opinions, Pakistan, people, PM, Poor, Praja Socialist, PVNR, Rajeev, Rajiv, Rajya Sabha, Rajyasabha, Religion, Republic, Reservations, Rich, Socialism, Sonia, Tax, UP, Uttar Pradesh, UttarPradesh, VP Singh, Wealth | Leave a Comment »

Facts: How Hong Kong has and hasn’t changed – Progress Report under China

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2007

டிராகன் புகுந்த நாடு!

எம். மணிகண்டன்

பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதையொட்டி ஹாங்காங்கில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சிகளில், பிரிட்டன் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஐபிகள் கலந்து கொண்டு பொருளாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் விரிவாகப் பேசினர், ஒன்றைத் தவிர. அந்த ஒன்று, ஜனநாயகம். ஹாங்காங் மக்கள் கேட்கும் முழுமையான “மக்கள் ஆட்சி’.

1997-ல் ஹாங்காங்கின் இறையாண்மையை சீனாவின் கையில் ஒப்படைத்தபோது, அடிப்படை அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. முழுமையான மக்கள் ஆட்சி படிப்படியாக ஏற்படுத்தப்படும் என்பதே அதில் கூறப்பட்டிருக்கும் முக்கிய அம்சம்.

ஹாங்காங்கின் பாதுகாப்பு, அயல்நாட்டு விவகாரம் தவிர வேறு எந்தப் பிரச்னையிலும் சீனா தலையிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் பிரிட்டிஷ் அரசு ஆட்சியை ஒப்படைத்தது. ஹாங்காங்கின் கலாசாரம், நாகரிகம், பொருளாதார அமைப்பு உள்ளிட்ட அடையாளங்கள் அழிக்கப்படக் கூடாது என்பதே இந்த உடன்பாட்டுக்கு முக்கியக் காரணம்.

ஆனால் இந்த எல்லையைக் கடந்து ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் சீனா மூக்கை நுழைக்கிறது என்பதுதான் மக்களாட்சிக்கு ஆதரவானவர்கள் கூறும் குற்றச்சாட்டு. எடுத்துக்காட்டாக அடிப்படை அரசமைப்புச் சட்டப்படி, ஹாங்காங் அரசின் செயல் தலைவர் (பிரதமர்) மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் சீனா நியமிக்கும் ஹாங்காங்கைச் சேர்ந்த 800 பேர் கொண்ட தேர்தல் செயற்குழுதான் செயல் தலைவரைத் தேர்ந்தெடுத்து வருகிறது.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் யாருக்கு ஆதரவாகச் செயல்படுவார் என்பதைக் கண்டுபிடிக்க உளவுத்துறையின் உதவியை நாட வேண்டியதில்லை. இது தவிர ஹாங்காங்கின் 60 உறுப்பினர் சட்டப்பேரவையில் 30 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே மக்களிடம் உள்ளது. மீதி 30 பேருக்கு மறைமுக வாக்கெடுப்பு. இப்படிப் பல்வேறு வழிகளிலும் ஹாங்காங் மீதான பிடியை சீனா இறுக்கியிருக்கிறது.

“ஒரு நாடு, இரு அமைப்பு’ என்ற கொள்கையின் அடிப்படையில்தான் சீனா-ஹாங்காங் இடையேயான உறவுப்பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரு அமைப்புகளும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை. ஒன்று பொதுவுடைமைக் கொள்கைகளைக் கொண்டது. மற்றொன்று முதலாளித்துவ தத்துவத்தை செயல்படுத்தி வருவது. “மக்காவோ’ பகுதியைப் போல ஹாங்காங்குக்கும் சிறப்பு நிர்வாகப் பகுதி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவையனைத்தும் எழுத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்னை.

உலகின் மிகச்சிறந்த விமான நிலையம், பொருளாதாரச் சுதந்திரத்தில் முதலிடம், முதல்தர சரக்குக் கப்பல் தளம் என்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது ஹாங்காங். சீனாவின் தற்போதைய படுவேகமான பொருளாதார வளர்ச்சிக்கு சோதனைக் களமாகப் பயன்பட்டது ஹாங்காங்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சீனாவின் ஷென்சென் நகரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் பேர் வசித்த குக்கிராமமாக இருந்தது. தற்போது அங்கு மக்கள்தொகை 1 கோடியே 30 லட்சம். பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஹாங்காங் தொழிலதிபர்களின் முதலீடுகளால் இன்று அந் நகரத்தின் அபார வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. ஹாங்காங் மீதான பிடியைத் தளர்த்த சீனா யோசிப்பதற்கு இவைதான் முக்கியக் காரணங்கள்.

சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்த 10 ஆண்டுகளில் ஹாங்காங் சில சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டியதாகி விட்டது. ஹாங்காங் பகுதிக்குப் போட்டியாக ஷாங்காய் நகரை சீனா வளர்த்து வருகிறது.

பல்வேறு புதிய நிறுவனங்களை ஷாங்காய் நகருக்குக் கொண்டுபோய், கிட்டத்தட்ட சீனாவின் வர்த்தகத் தலைநகராகவே அதை மாற்றிவிட்டது.

ஹாங்காங்கை விட சீனாவில் தயாரிப்புச் செலவு குறைவு என்பதால் ஹாங்காங் நிறுவனங்கள்கூட தங்கள் கடைகளை சீன நகரங்களில் பரப்பியிருக்கின்றன. பாதி நிறுவனங்கள் சிங்கப்பூரை நோக்கிப் படையெடுத்து வருகின்றன.

இதனால் ஹாங்காங்கின் சிறு தொழில் அதிபர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதால் ஹாங்காங் மக்கள் இதுபோன்ற செயல்களை நேரடியாகக் குறைகூற முடியாது என்றாலும், தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

இவை ஒருபுறம் இருக்க, சீனாவுடன் இணைந்திருப்பதால் ஹாங்காங் பகுதிக்கும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. 2003-ல் ஹாங்காங்கில் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது, சீனாவின் உதவி இல்லாமல் போயிருந்தால் ஹாங்காங் மீண்டு வந்திருக்க முடியாது. சீனாவின் சரக்குகளைக் கையாளுவதால் ஹாங்காங் துறைமுகம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இது தவிர, 1997-க்கு முந்தைய கணக்கை ஒப்பிட்டால் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்காகி இருக்கிறது. சீனாவிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ஹாங்காங் மாறிவிட்டது என்பதை இவை உணர்த்துகின்றன.

சீனாவின் எரிச்சல்களுள் ஒன்றாகக் கருதப்படும் தைவான், சீனாவுடன் சேர்வதற்குத் தயக்கம் காட்டுவதற்குக் கூறப்படும் காரணங்களுள் ஒன்று முழுமையான மக்களாட்சி மறுக்கப்படும் என்பதுதான். எனினும், முன்புபோல் அல்லாமல் மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டங்களை சீனா சகித்துக் கொண்டிருப்பதே மிகப்பெரிய மாற்றம்தான்.

பொருளாதாரத்தில் ஹாங்காங்கை சோதனைக் களமாகப் பயன்படுத்தி நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்திய சீனா, ஹாங்காங்கில் முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவந்து, அதையும் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாமே. செய்வீர்களா தோழர்களே?

Posted in AP, Arts, Arunachal, Autocracy, Beijing, Bejing, Biz, Blair, Britain, Brown, Business, Cabinet, Casinos, Cathay Pacific, CathayPacific, Censor, China, Commerce, Communism, Communist, Communists, Country, defence, Defense, Democracy, Economy, England, Federal, Finance, Freedom, Gordon, Govt, Hongkong, HSBC, Independence, Industry, London, Macau, Manufacturing, Market, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Peking, PM, Politics, Power, Regime, Republic, Ruler, Shangai, Shanghai, Shares, Stocks, Taiwan, Tianamen, Tiananmen, Tianmen, Tibet, UK, World | Leave a Comment »

K Ramamurthy: Politics & Politicians – Plight of the leaders

Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007

அரசியல்வாதிகளும் அரசியல்கட்சிகளும்!

கே.ராமமூர்த்தி

“”அரசியல்” என்ற வார்த்தையையே ஏளனம் தொனிக்கும் வகையில்தான் நாம் பயன்படுத்துகிறோம். அதாவது, அரசியல் என்றாலே ஊழல், முறைகேடு, வேண்டியவருக்குச் சலுகை, அதிகார துஷ்பிரயோகம் என்றே முடிவு கட்டப்படுகிறது. “”சாணக்கியன்”, “”மாக்கியவல்லி” என்று ஒருவரைக் குறிப்பிடும் அடைமொழிகூட, “”அந்த ஆள், இந்த அத்துமீறல்களில் கைதேர்ந்தவர்” என்ற வஞ்சப் புகழ்ச்சியாகவே இருக்கிறது.

மனிதர்கள் முதலில் சமுதாயமாகக் கூடி வாழ ஆரம்பித்தபோது அவர்களுடைய தலைவனின் அதிகாரமும் ஆளுமையும்தான் அவர்களைக் காத்தது. வேளாண்மையும் வர்த்தகமும் சமுதாயத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்க ஆரம்பித்தவுடன், கிரேக்க நாட்டில் போலீஸ், குடிமகன் என்ற வார்த்தைகள் சமூகத்தில் இடம்பெறலாயின. ரோமானியச் சட்டத்துக்கும் சட்டப்படியான ஆட்சிக்கும் மேற்கத்திய நாடுகளில் முக்கியத்துவம் தர ஆரம்பித்தனர். கீழை நாடுகளில் பஞ்சாயத்து, தர்மம் ஆகியவை முக்கிய இடத்தைப் பெற்றன.

மனிதனின் அடிப்படையான வக்கிரபுத்தி, சுயநலன் சார்ந்த எண்ண முரண்பாடுகள், அதிகாரத்தைச் செலுத்தியவர்களின் சமச்சீரற்ற நோக்கு, பரம்பரை அதிகாரம் ஆகியவற்றால் இந்தச் சமுதாயத்தில் மோதல்களும் அமைதியின்மையும் நிரந்தர அம்சங்களாகிவிட்டன.

இப்போது அரசியல்வாதி என்றாலே அனைவரின் கேள்விகளுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவனாகிறான். அரசியல் கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் முழுமை பெறாது. கட்சிகளே இல்லாமல் தேர்தல் நடத்தி நல்லவர்களை, நேர்மையாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்கள்கூட வலியுறுத்தினார்கள். இவையெல்லாம் வெறும் லட்சியங்களாகவே நின்றுவிட்டன.

நவீன அரசியல் பாட ஆசான் ஜே.சி. ஜோஹரி குறிப்பிடுவதைப் போல, அரசியல் கட்சிகள் பங்கு பெறாமல் இப்போதைய ஜனநாயகம் இல்லை; இந்தியா போன்ற பன்முகத்தன்மை உள்ள நாட்டில் வெவ்வேறு குழுக்கள் அரசியல் கட்சிகளுடன் நேரடியாகவோ, ரகசியமாகவோ கூட்டு வைத்துக்கொண்டு தேர்தலில் கூட்டணி அமைத்து தங்களுடைய காரியங்களைச் சாதித்துக்கொள்கின்றன. அரசியல் கட்சிகளுக்குத் தொண்டர்களும் நிதியும் அவசியம். அவற்றை இந்தக் குழுக்கள் அளிக்கின்றன. இந்தக் குழுக்களுக்கு ஒரு திசைவழியும், வழிநடத்திச் செல்ல ஒரு தலைவனும் தேவை. அதை அரசியல் கட்சிகள் தருகின்றன.

இதுவரை நடந்துள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தால், எந்த மாதிரியான அரசு தேவை என்று வாக்காளர்களுக்குப் பாடம் கற்றுத் தருவதும், எந்த மாதிரியான அரசுகள் தங்களுக்குத் தேவை என்று வாக்காளர்கள் அரசியல் கட்சிகளுக்குப் பாடம் கற்றுத்தருவதும் வெகு நேர்த்தியாகவே நடந்துவருவது புலனாகும்.

இந்திய வாக்காளர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல -பல்வேறு வகையான கூட்டணி அரசுகளைப் பார்த்துவிட்டார்கள். தேர்தலில் கூட்டு வைத்து, பிறகு அரசிலும் அப்படியே நீடித்த கூட்டணிகளையும், தேர்தலுக்கு முன்பு கடுமையாகப் போட்டியிட்டு எதிர்த்துவிட்டு பிறகு ஆட்சியமைக்க பெரும்பான்மை இடங்கள் தேவை என்றதும், எந்தக் கட்சியைப் பிரதானமாக எதிர்த்தார்களோ அந்தக் கட்சியையே கூட்டாளியாக்கிக்கொண்ட கூட்டணியையும், ஒரே மாதிரியான சித்தாந்தமே இல்லாமல் “”அவியலாக” உருப்பெற்ற கூட்டணிகளையும் மக்கள் பார்த்துவிட்டார்கள்.

இந்நாட்டு வாக்காளர்களில் பெரும்பான்மையினரான கிராமவாசிகள் குறித்து டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறியது இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது. “”இந்திய கிராமவாசிகளைப்பற்றி நன்கு அறிவேன். அவர்களுக்கு நல்ல பொதுஅறிவும், அனுபவ அறிவும் இருக்கிறது. அவர்களுக்கென்றே உறுதியான ஒரு கலாசாரம் இருக்கிறது. முறையாக விளக்கினால் அவர்கள் தங்களுக்கு எது நல்லது, நாட்டுக்கு எது நல்லது என்று ஆராய்ந்து சரியாக முடிவெடுப்பதில் வல்லவர்கள்” என்றார்.

சமீபத்தில் உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு நடந்த பொதுத்தேர்தல் முடிவுகள், அவர் கூறியது எந்த அளவுக்கு உண்மை என்பதை நிரூபித்துவிட்டன.

அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் ஜனநாயகத்துக்கு மிகவும் இன்றியமையாத அம்சங்கள். ஆனால் நமது அரசியல்சட்டத்தை வகுத்த முன்னோடிகள் அரசியல் கட்சிகளுக்கென்று தனியாக எந்தவித சட்டவிதிமுறைகளையோ கோட்பாடுகளையோ அரசியல் சட்டத்தில் சேர்க்காமல் விட்டுவிட்டனர். சொல்லப்போனால் நமது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறதே தவிர, அரசியல் கட்சிகளைப் பற்றி எதுவுமே குறிப்பிடுவதில்லை. எந்தவித வரைமுறைகளையும் இந்த விஷயத்தில் உருவாக்காமல் விட்டுச் சென்றது வியப்பாக இருக்கிறது. இந்தக் குறையை ஈடுகட்டும் விதத்தில் அரசியல் கட்சிகள் செயல்படுவதற்கான வரம்புகளைக் குறிப்பிட்டு தேர்தல் கமிஷன் இப்போது விளக்கம் அளிக்கிறது. கட்சி மாறுவதைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்காகவே அரசியல்சட்டத்தில் தனிப்பிரிவையே உருவாக்கலாம். அதில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் தெளிவாகக் குறிப்பிட்டுவிடலாம். 1999-ல் இந்திரஜித் குப்தா தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரைகளை இச்சட்டப் பிரிவில் சேர்க்கலாம்.

அரசியல் ரீதியாக எடுக்கப்படும் முடிவுகளுக்கு சட்ட அந்தஸ்து கிடைக்க, அவற்றையும் மத்திய நிர்வாக நடுவர் மன்றத்தின் விசாரணை வரம்பில் கொண்டுவரலாம். உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட தாஜ் வணிக வளாகத் திட்டத்தை உதாரணத்துக்குக் குறிப்பிடலாம்.

சமுதாய நலனில் அக்கறை கொண்டு எடுக்கப்படும் கொள்கை முடிவுகள், கடைசியில் ஒரு சிலருக்கு மட்டும் பயன்படுவதை அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். ஒரு பொது நன்மைக்காகக் குரல்கொடுப்பவர்கள் யார், ஒரு குழு நலனுக்காக மட்டும் செயல்படுகிறவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பது எளிது. ஒட்டுமொத்த சமூகத்தின் நலன் என்று பார்க்காமல் முடிவுகளை எடுப்பது நன்மை தராது. அப்படிப்பட்ட முடிவுகள் எடுப்பது தொடர்பாக நிர்வாகச் சட்டத்தில் விரிவாகக் குறிப்பிட வேண்டும். எனவே தவறு செய்ய வழி இல்லாமல் போகும்.

அப்படி ஒரு சட்டபூர்வ பாதுகாப்பு இல்லாவிட்டால், விவசாயிகளின் கடன்களை ஒட்டுமொத்தமாக ரத்துசெய்வது, கல்வியில் 10-2-3 என்று அடிப்படையை மாற்றுவது போன்ற முடிவுகளை துணிச்சலாக எடுக்க முடியாது. குற்றம் செய்தவர்களைத் தப்புவிக்கும் வழியே இருக்கக் கூடாது. அதேசமயம், முடிவுகளை எடுப்பதில் தொலைநோக்குப் பார்வைக்கும் துணிச்சலுக்கும் பாதுகாப்பு தருவதுடன், ஊக்குவிப்பும் அளிக்க வேண்டும்.

அரசியல்வாதி என்பவருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள்தான் அவகாசம். அதற்குள் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். தாம் செய்த தவறுகளுக்கும் செய்யாமல்விட்ட நன்மைகளுக்கும் மக்களிடம் பதில் சொல்லியே தீர வேண்டும்.

அரசியல்வாதிக்கு தேசபக்தி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த தேசபக்தி எப்படி இருக்க வேண்டும் என்று ராஜாஜி பின்வருமாறு கூறுகிறார்:

“”நம்நாட்டின் கிராமங்களிலும் நகரங்களிலும் வசிக்கும் சாமான்ய மக்களை நீங்கள் நேசிக்கிறீர்களா? அவர்களுடைய மொழியை விரும்புகிறீர்களா? அவர்களுடைய வாழ்க்கை முறையையும் போக்கையும் ரசிக்கிறீர்களா? அவர்களுக்குள்ள தெய்வநம்பிக்கை மீது உங்களுக்கும் நம்பிக்கை இருக்கிறதா, அதை அவர்களுடைய அறியாமை என்று கருதுகிறீர்களா? அவர்களைவிட நமக்கு பரந்த அறிவு இருக்கிறது என்று கருதுகிறீர்களா?

இப்படி அவர்களுடைய வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் நீங்கள் விரும்புகிறவராக இருந்து அதையெல்லாம் தொகுத்தால், அதுதான் தேசபக்தி… அவர்களுடைய குறைகளையும் பார்க்கிறேன், அவர்களிடம் உள்ள மெச்சத்தக்க குணாதிசயங்களையும் பார்க்கிறேன். விரக்தியான அவர்களுடைய மனோபாவத்தை நான் கண்டிக்கிறேன். இப்போது செய்வதைவிட அதிக ஆற்றலுடன் காரியங்களைச் செய்யுமாறு அவர்களைத் தூண்டுவேன். மற்றவர்களிடம் அதிக சகிப்புத்தன்மையுடனும் அன்புடனும் பழகுமாறு அறிவுறுத்துவேன். பொதுநன்மைக்காக மேலும் ஒற்றுமையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்வேன்” என்கிறார் ராஜாஜி.

அரசியல்வாதி என்பவர், ராஜாஜி கூறிய சித்தாந்தப்படி வாழத்தலைப்பட்டால் அவருடைய மற்ற குறைகளையெல்லாம் நமது ஜனநாயக அமைப்பும், அரசியல் சூழலுமே திருத்திவிடும்.

(கட்டுரையாளர்: குஜராத் அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர்.)

Posted in abuse, Alliance, Analysis, Bribery, Bribes, Cabinet, Citizen, Coalition, Constituition, Corruptions, Elections, Govt, Influence, Justice, kickbacks, Law, Leader, NGO, Op-Ed, Order, Party, Perspectives, Policy, Politics, Polls, Power, service, Volunteer, voter | Leave a Comment »