![]() |
![]() |
வன்முறை நடைபெற்ற இரவு “கருப்பு இரவு” என்கிறார் பிரதமர் |
இராஜினாமா செய்ய ஹங்கேரி பிரதமர் மறுப்பு
ஹங்கேரி நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக தலைநகர் புதபெஸ்ட்டில் நேற்றிரவு ஆர்ப்பாட்டங்களும், வன்முறையும் நடைபெற்றுள்ள போதும், தான் பதவியினை இராஜினாமா செய்யப் போவதில்லை என ஹங்கேரி நாட்டு பிரதமர் ஃபெரன்ட்ஸ் ஜுவர்சான்யா கூறியுள்ளார்.
மறுதேர்தலில் வெற்றி பெறுவதற்காக தான் பொய் கூறியதினை பிரதமர் ஒப்புக்கொள்ளும் ஒலிநாடாப் பதிவு ஒன்று வெளியிடப்பட்டதினை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும், வன்முறைகளும் நடைபெற்றன.
பேட்டிகளின் போது, தனக்கும், தன்னுடைய பொருளாதார கொள்கைகளுக்கும், தனது சோசலிஸ கட்சி ஆதரவு கொடுப்பதால், தான் வெளியேறுவதற்கான காரணங்கள் இல்லை என்றார் பிரதமர்.
நூறு காவல் துறையினரும், ஐம்பது ஆர்ப்பாட்டகாரர்களும் காயம் அடைவதற்கு காரணமான சூறையாட்டம் நடந்த குறிப்பிட்ட இரவு, கம்யூனிச ஆட்சி முடிவிற்கு வந்த பிறகு இடம்பெற்ற ஒரு கறுப்பு இரவு என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது புதபெஸ்ட்டின் வீதிகள் அமைதியாக காணப்பட்டாலும், ஒரு அரசியல் சர்ச்சை ஏற்படும் நிலை உணரப்படுவதாக அங்கிருக்கின்ற பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கின்றார். தலைநகரில் ஏற்பட்ட மோதல்களுக்கு வலதுசாரிகளே காரணம் என அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் குற்றம் சாட்டினார்.