மும்பை யூதர்களின் கவலை
![]() |
![]() |
ஹிட்லருக்கும் சுவஸ்திகாவுக்கும் எதிர்ப்பு |
மும்பையில் ஹிட்லர் கிராஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு உணவகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று இந்தியாவில் மிகச் சிறிய எண்ணிக்கையில் வாழும் யூதர்கள் கோரியுள்ளனர்.
இந்தப் பெயர்மட்டுமல்லாது, அங்கு வைக்கப்ப்டிருக்கும் ஹிட்லரின் உருவம் மற்றும் நாசிகளின் ஸ்வஸ்திகா சின்னத்துடன் கூடிய பெரிய சுவரோட்டியும், தங்களை புண்படுத்துவதாகவும் யூதர்கள் கூறுகின்றனர்.
விளம்பரம் தேடுவதற்காக செய்யப்பட்ட ஒரு மலிவான தந்திரம் என சிலர் இதை வர்ணித்துள்ளனர்.
ஆனால் இது அறியாமையால் செய்யப்பட்ட ஒரு செயல் என்றும் வேண்டுமென்றே அவமதிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இது செய்யப்படவில்லை என்றும் இந்திய யூதர்கள் கூட்டமைப்பின் ஜோனாதன் சாலமன் தெரிவித்தார்.
இந்த பெயர் இந்த அளவுக்கு சர்ச்சையை தோற்றுவிக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று இந்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதே சமயம் இப் பிரச்சனை குறித்து புதன்கிழமையன்று கூடி விவாதிப்பதென இந்திய யூதர்கள் முடிவுசெய்துள்ளனர்.