விவசாய தொழிலாளர் நல வாரியம் மீண்டும் அமைக்க அரசு ஆணை: உழவர் திருநாளில் முதல்வர் உத்தரவு
சென்னை, ஜன. 17: விவசாயத் தொழிலாளர் வாரியம் மீண்டும் அமைக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை முதல்வர் கருணாநிதி பிறப்பித்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் இவ்வாரியம் கலைக்கப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி இந்த வாரியம் மீண்டும் அமைக்கப்படுகிறது.
வாரியத் தலைவராக வருவாய் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் விவரம்:
அலுவல் சாரா உறுப்பினர்கள்:
- நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பி. ராமலிங்கம்,
- பூதலூர் கலியமூர்த்தி,
- கீழானூர் ராஜேந்திரன்,
- இல.க. சடகோபன்,
- கே. பாலகிருஷ்ணன்,
- வே. துரைமாணிக்கம்,
- எஸ். செல்லமுத்து,
- பொன்குமார்.
அலுவலர் சார்ந்த உறுப்பினர்கள்:
- வருவாய்த்துறைச் செயலர்,
- நிதித்துறைச் செயலர்,
- வேளாண்துறைச் செயலர்,
- வருவாய் நிர்வாக ஆணையர்,
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவர்,
- சர்க்கரைத் துறை ஆணையர்,
- வேளாண் விற்பனை மற்றும் சந்தைக்குழு ஆணையர்,
- நிலச்சீர்திருத்த ஆணையர்.