டைரக்டர் சூர்யா-நடிகை மீராஜாஸ்மின் திருமணமா?
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை மீராஜாஸ்மின். இவர் தமிழில் `ரன்‘, `சண்டக் கோழி‘, உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தற்போது `திருமகன்‘ என்ற படத்தில் டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மீராஜாஸ்மின் நடித்து வருகிறார். 6 மாதங்களாக இதன் படப்பிடிப்பு தேனி பகுதியில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் காதல் காட்சிகளில் இருவரும் நெருங்கி நடித்துள்ளனர்.
அப்போது மீராஜாஸ்மினுக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும், காதல் ஏற்பட்டது. படப்பிடிப்பு முடிந்ததும் இருவரும் சந்தித்து மனம் விட்டு பேசிக் கொண்டனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப் பதாக வும் தகவல் வெளியாகி உள்ளது.
மீராஜாஸ்மின் ஏற்கனவே மலையாள பட டைரக்டர் லோகிததாசை காதலித்து வந்தார். சமீபத்தில் அவருடனான காதல் முறிந்து விட்டதாக மீராஜாஸ்மின் அறிவித்தார்.
எஸ்.ஜே.சூர்யாவை திருமணம் செய்வதற்காகவே அவர் லோகிததாசுடனான காதலை முறித்துக் கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.
ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. மீரா ஜாஸ்மினும், எஸ்.ஜே.சூர்யாவும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது பெற்றோரும் சம்மதித்து விட்டதாகவும், நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பதில் தெரிவிக்க மறுத்து விட்டார்.