Archive for the ‘Bala’ Category
Posted by Snapjudge மேல் மே 10, 2007
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள்: பாலகுமாரன், இயக்குநர் பாலா, சிம்பு, த்ரிஷா உள்பட 60 பேருக்கு விருது அறிவிப்பு
சென்னை, மே 11: தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் பாலகுமாரன், இயக்குநர் பாலா, நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷா உள்பட 60 பேர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
- கோவைத் தம்பி-திரைப்படத் தயாரிப்பாளர்
- சீமான்-திரைப்பட இயக்குநர்
- சிம்பு-திரைப்பட நடிகர்
- “ஜெயம்’ ரவி-திரைப்பட நடிகர்
- ஜீவா-திரைப்பட நடிகர்
- விஷால்-திரைப்பட நடிகர்
- த்ரிஷா-திரைப்பட நடிகை
- நவ்யா நாயர்-திரைப்பட நடிகை
- கஞ்சா கருப்பு-நகைச்சுவை நடிகர்
- ஆர்த்தி-நகைச்சுவை நடிகை
- வினித்-குணசித்திர நடிகர்
- பாலகுமாரன்-இயற்றமிழ் கலைஞர்
- வண்ணதாசன்-இயற்றமிழ் கலைஞர்
- கவிஞர் கலாப்பிரியா-இயற்றமிழ் கலைஞர்
- சுப.வீரபாண்டியன்-இலக்கியப் பேச்சாளர்
- மரபின் மைந்தன் முத்தையா-இலக்கியப் பேச்சாளர்
- கீதா ராஜசேகர்-இசை ஆசிரியர்
- சஞ்சய் சுப்ரமணியம்-குரலிசைக் கலைஞர்
- ஸ்ரீவத்சவா-மிருதங்கக் கலைஞர்
- சரஸ்வதி ராஜகோபாலன்-வீணைக் கலைஞர்
- டாக்டர் இரா.செல்வகணபதி-சமயச் சொற்பொழிவாளர்
- இறையன்பன் குத்தூஸ்-இறையருட்பாடகர்
- இஞ்சிக்குடி சுப்ரமணியன்-நாதஸ்வர கலைஞர்
- மலைக்கோட்டை எஸ்.சுப்ரமணியன்-தவில் கலைஞர்
- கிரிஜா பக்கிரிசாமி-பரதநாட்டிய ஆசிரியர்
- திவ்யா கஸ்தூரி-பரதநாட்டிய கலைஞர்
- சிந்தூரி-பரதநாட்டிய கலைஞர்
- திருநங்கை நர்த்தகி நடராஜ்-நாட்டிய நாடகக் கலைஞர்
- ஆர்.முத்தரசி-நாட்டிய நாடகக் கலைஞர்
- கவிஞர் இன்குலாப்-நாடக ஆசிரியர்
- பேராசிரியர் இரா.ராஜு-நவீன நாடக இயக்குநர்
- தங்கராஜ் என்ற எம்எல்ஏ தங்கராஜ்-நாடக நடிகர்
- வி.மூர்த்தி-நாடக நடிகர்
- தேவிப்பிரியா என்ற ரமணதேவி-நாடக நடிகை
- வி.ஆர்.திலகம்-பழம்பெரும் நாடக நடிகை
- சி.ஐ.டி.சகுந்தலா-பழம்பெரும் திரைப்பட நடிகை
- பா.விஜய்-திரைப்பட பாடலாசிரியர்
- நா.முத்துக்குமார்-திரைப்பட பாடலாசிரியர்
- கபிலன்-திரைப்பட பாடலாசிரியர்
- இயக்குநர் பாலா-திரைப்பட கதாசிரியர்
- வித்யாசாகர்-திரைப்பட இசையமைப்பாளர்
- மது பாலகிருஷ்ணன்-திரைப்பட பின்னணி பாடகர்
- திப்பு-திரைப்பட பின்னணி பாடகர்
- பாம்பே ஜெயஸ்ரீ-திரைப்பட பின்னணி பாடகி
- எம்.வி.பன்னீர்செல்வம்-திரைப்பட ஒளிப்பதிவாளர்
- விட்டல்-திரைப்பட எடிட்டர்
- நேஷனல் செல்லையா-திரைப்பட புகைப்படக் கலைஞர்
- அதிவீர பாண்டியன்-திரைப்பட பத்திரிகை ஆசிரியர்
- கே.அம்மச்சி விராமதி-நாட்டுப்புற இசைக் கலைஞர்
- ஆக்காட்டி ஆறுமுகம்-நாட்டுப்புற இசைக் கலைஞர்
- டாக்டர் கே.ஏ.குணசேகரன்-நாட்டுப்புற இசை ஆய்வாளர்
- டிராட்ஸ்கி மருது-ஓவியக் கலைஞர்
- சி.ஜெ.பாஸ்கர்-சின்னத்திரை இயக்குநர்
- விடுதலை-சின்னத்திரை கதை வசனகர்த்தா
- வேணு அரவிந்த்-சின்னத்திரை நடிகர்
- போஸ் வெங்கட்-சின்னத்திரை நடிகர்
- மௌனிகா-சின்னத்திரை நடிகை
- தீபா வெங்கட்-சின்னத்திரை குணச்சித்திர நடிகை
- டி.ஜி.தியாகராஜன்-சின்னத்திரை தயாரிப்பாளர்
- அலெக்ஸ்-தந்திரக்காட்சி கலைஞர்
Posted in Actor, Actress, Affiliation, Alex, Announcement, Arasi, Arts, Authors, Award, Awards, Bala, Balakumaran, Balu Mahendira, Balu mahendra, Bombat Jayashree, Bombat Jayashri, Bombat Jayasree, Bombat Jayasri, Bombat Jeyashree, Bombat Jeyashri, Bose Venkat, Campaign, Cinema, CJ Baskar, CJ Bhaskar, Comedian, Culture, Devipriya, Director, DMK, Dratski, Dratsky Maruthu, Financier, Government, Govt, Inquilab, Jayam, Jeeva, Jeyam, Kabilan, Kalaimamani, Kalapriya, Madhu Balakrishnan, Magician, Marudhu, Marudu, Maruthu, Maunika, Movies, music, MV Paneerselvam, Na Muthukumar, Nandha, Narthaki, Narthaki Nataraj, Narthaki Natraj, National Chellaia, National Chellaiah, Navya, Navya Nayar, Pa Vijai, Pa Vijay, Paa Vijai, Paa Vijay, Party, Pithamagan, Pithamakan, Poet, Producer, Radhika, Ravi, Recipients, Recognition, Sanjai Subramaniam, Sanjay Subramaniam, Seeman, Selvi, Serial, Sethu, Silambarasan, Simbu, Soaps, Stars, Suba Veerapandiyan, SubaVee, SubaVeerapandiyan, SubaVi, Sun TV, Tamil Nadu, Television, TG Thiagarajan, TG Thiakarajan, TG Thyagarajan, TG Thyakarajan, Thrisha, Tippu, Tratski, Tratsky, Trisha, TV, Vannadasan, Vannadhasan, Venu Aravind, Venu Aravindh, Venu Aravinth, Vidhyasagar, Vidyasagar, Vineet, Vineeth, Vishaal, Vishal, Vittal, VR Thilagam, Writer | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 23, 2007
இசை: தமிழின் கண்களில் தியாகராஜர் தரிசனம்!
ரவிக்குமார்
கலாச்சாரப் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் “வாய்ஸ் ஆப் அமெரிக்கா’வுக்காக, அமெரிக்காவுக்கு வந்து தங்கியிருந்த பலநாட்டவரும் ஊருக்கு மூட்டை கட்டிக் கொண்டிருந்தார்கள். மூட்டைகட்டிய கூட்டத்தில் பாலாவும் அடக்கம் தான். ஆனால் கட்டிய மூட்டையை உடனே மீண்டும் பிரிக்கவேண்டியிருக்கும் என்று அவர் எண்ணிக் கூடப் பார்க்கவில்லை. “”நீங்கள் இங்கேயே தங்கிவிடுங்களேன்…உங்களின் சேவை..அமெரிக்க வானொலிக்குத் தேவை..” என்று வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஒருவருக்கு குடியுரிமை கிடைப்பதற்கு அவர் தங்கியிருக்கும் மாகாணத் தலைவர் பரிந்துரை கடிதம் வழங்கவேண்டும் என்பதில் தொடங்கி, ஏகப்பட்ட சட்ட, திட்டங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நடைமுறைகளை எல்லாம் ஒரே நாளில் நடத்தி, உச்சகட்டமாக சட்டமன்றத்தில் அந்தத் தமிழரை அமெரிக்க பிரஜையாக்க மசோதாவே இயற்றப்பட்டு, எத்தகைய எதிர்ப்பும் இல்லாமல் அந்தத் தமிழரை அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவராக அறிவித்தனர். அந்தத் தமிழரின் பெயர் டி.என். பாலா. அவரை அமெரிக்காவிலேயே தங்கவேண்டும் என்று விரும்பியவர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடி!
ஏறக்குறைய 29 வருடங்கள் அமெரிக்காவின் ஏபிசி நெட்வொர்க்கில் நிகழ்ச்சி இயக்குனராக, தயாரிப்பாளராக பல பொறுப்புகளை வகித்த டி.என். பாலாவுக்கு தற்போது வயது 80. இவருக்கு வாய்ப்பாட்டும் அத்துப்படி. மதுரை மணி ஐயரின் சீடர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மிருதங்கம், கஞ்சிரா போன்ற வாத்தியங்களை வாசிப்பதும் இவருக்குக் கைவந்த கலை. சாகித்யங்களை எழுதும் திறமையும் பெற்றவர். கர்நாடக இசைத்துறையில் இவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைக்காக 1994-ம் ஆண்டில் கிளீவ்லேண்ட் தியாகராஜ உத்ஸவத்தில் இவர் கெüரவிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்க சாகித்யகர்த்தாக்கள் மன்றம் (American Composers Forum்) என்னும் அமைப்பின் சார்பாக சிறந்த சாகித்யகர்த்தாவுக்கான விருதும் 2004-ம் ஆண்டு இவருக்குக் கிடைத்திருக்கிறது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர். தமிழர் டி.என். பாலாதான். இந்த விருதை இவருக்குப் பெற்றுத் தந்திருப்பது, தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனையின் இசையை அடியொட்டி முருகனின் மீது இவர் பாடியிருக்கும் “முருக பஞ்சரத்னம்’ பாடல்களின் தொகுப்புதான்.
இந்தப் பாடல்களின் தொகுப்பு நூலை சமீபத்தில் சென்னையில் வெளியிட்டார். தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வர் பக்கிரிசாமி பாரதி நூலை வெளியிட்டுப் பேசும்போது, “”முருக பஞ்சரத்னத்தில் வரும், “முருகானந்தஸôகரா திருமாமயூரா க்ருபாகரா…’ என்ற பாடலை மாணவிகள் வகுப்பில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, புறா ஒன்று எங்கோ அடிப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக வகுப்பிற்குள் வந்து விழுந்தது. அதற்கு மாணவிகள் சிறிது தண்ணீர் தந்ததோடு சரி. முருகனின் அனுக்ரகம் இருந்தால் அது பிழைத்துக் கொள்ளும் என்று இருந்துவிட்டனர். இரண்டொரு நாளில் அந்த புறா பழைய நிலைமைக்கு திரும்பியதோடு, ஒவ்வொரு மாணவியையும் ஆசிர்வாதம் செய்வது போல, அவர்களின் அருகே பறந்தபடியும், அமர்ந்தபடியும் சிறிது நேரம் செலவழித்துப் பின் பறந்து சென்றது. இது ஏதோ புராண காலச் சம்பவம் அல்ல. எங்கள் கல்லூரி வகுப்பில் நடந்த சம்பவம். முருக பஞ்சரத்னத்தில் ஒலிக்கும் வார்த்தைகளின் வலிமைதான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்” என்றார்.
“”தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு தியாகராஜர் அன்னியமாகத் தெரியாமல், அவர்களையும் நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான முயற்சியாகத்தான் இதைச் செய்திருக்கிறேன். தமிழின் கண்கொண்டு தியாகராஜ சுவாமிகளைப் பார்க்கும் முயற்சிதான் இது. தமிழையும் முருகனையும்
பிரிக்கமுடியாது அல்லவா? அதனால்தான், என் அப்பனைப் பாடியிருக்கிறேன். இதை யாராவது முறையாக இசை வடிவத்தில் கொண்டு வருவதாக இருந்தாலும் அவர்களுக்கு இதன் உரிமையைத் தருவதற்கு தயாராக உள்ளேன்.” என்றார் கண்கள் பனிக்க டி.என். பாலா.
Posted in ABC, America, Bala, Biography, Biosketch, Broadcast, Carnatic, Dinamani, India, Interview, JFK, John F Kennedy, Kathir, Kennedy, Mani Iyer, Media, MSM, music, network, NPR, NRI, people, Radio, TN Bala, TV, US, USA, VOA, Voice of America | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007
கமல்ஹாசன் நடிக்கும் `தசாவதாரம்’ படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, ஜன.21-
சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த திரைப்பட உதவி
இயக்குனர் சு.செந்தில்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு
தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
நான் `தனுஷ்‘ என்ற திரைப்படத்தில் குருமணி என்ற இயக்குனரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். தற்போது `அப்படியா’ என்ற திரைப்படதëதில் இயக்குனர் தீர்த்தமலை என்பவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறேன்.
தனுஷ் திரைப்படம் பாதியில் நின்று போய்விட்ட நிலையில், அர்த்தனாரி அல்லது குளோன்ஸ் என்ற தலைப்பில் இதுவரை வரலாற்றிலேயே எவரும் கண்டிராத அளவில் ஒரு கதையினை உருவாக்கினேன். அந்த கதையில், கதாநாயகன் 10 முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுவார். அதைச் சுற்றி ஆயிரம் கதாபாத்திரத்தில் கதாநாயகன் ஒருவர் மட்டுமே தோன்றுகின்ற மாபெரும் ஒரு திரைக்கதையை அமைத்திருந்தேன்.
இதில் நடிக்க நடிகர் கமல்ஹாசன் மட்டுமே ஏற்றவர் என்று கருதி அவரிடம் கதையை சொல்ல அனுமதி கேட்டு என் கதையின் தலைப்பின் போட்டோ கார்டை டி.டி.கே. சாலையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தìற்கு பதிவு தபாலில் அனுப்பினேன். அதைப் பார்த்துவிட்டு முரளி என்பவர், கதை சொல்ல வரும்படி கமல்ஹாசன் வரச் சொன்னதாக தொலைபேசியில் கூறினார்.
அதன்படி, நானும், நண்பர் பாலா என்கிற பாலசுப்பிரமணியனும் 8-8-2005 அன்று அந்த அலுவலகம் சென்றோம். என்னை மட்டும் உள்ளே அழைத்து முரளி பேசினார். கதையின் நகலை என்னிடம் கொடுங்கள். அதை நன்கு படித்துவிட்டு, அதை வைத்து நாங்கள் படம் எடுப்பதாக இருந்தால் உங்களுக்கு தொலைபேசியில் சொல்கிறேன். அந்த படத்தில் உங்களை உதவி இயக்குனராக அமர்த்துவதுடன், ஒரு குறிப்பிட்ட தொகையை கதைக்காக கொடுப்போம் என்றும் உறுதி அளித்தார்.
ஆனால், ஒரு வாரம் கழித்து நாளிதழ் ஒனëறில் தசாவதாரம் என்ற பெயரில் கமல்ஹாசன் 10 கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அந்த படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கப் போவதாகவும் செய்தி வெளிவந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
இதுபற்றி முரளியிடம் கேட்டேன். அப்போது அவர் என்னிடம் கூறும்போது, “கமல்ஹாசன் உங்களை இந்த தìரைப்படத்தில் உதவி இயக்குனராக நியமித்துள்ளார். படம் தொடங்கும்போது மறுபடியும் உங்களை அழைக்கிறோம். கவலைப்படாதீர்கள்-உஙëகளுக்கு கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்போம்” என்றார். நானும் அதை நம்பி காத்திருந்தேன்.
18-8-06 அன்று தசாவதாரம் படிப்பிடிப்பு நடப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதையடுத்து முரளியிடம் உடனே தொடர்பு கொண்டு கேட்டேன். அந்த கதை எல்லாம் உன் கதை இல்லை. உன்னிடம் யாரும் போனில் பேசவில்லை. இந்த கதையை நானும், கமல்ஹாசனும் சேர்ந்து உருவாக்கினோம். இனிமேல் இங்கே நீ வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிட்டார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஏமாற்றப்பட்டதை எண்ணி பெரிதும் வருத்தப்பட்டேன்.
தசாவதாரம் கதை என்னுடையது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் வைத்துள்ளேன். அந்த கதையை நான் முறைப்படி பதìவும் செய்துள்ளேன்.
என் கதையை என் அனுமதி இல்லாமல் நடிகர் கமல்ஹாசன் தசாவதாரம் என்று பெயர் மாற்றம் செய்து எனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் என்னை ஏமாற்றியது பற்றி விசாரித்து நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருக்கும் மனு கொடுத்துள்ளேன். எனவே, தசாவதாரம் படத்திற்கான படப்பிடிப்பு நடத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இநëத வழக்கில் நடிகர் கமல்ஹாசன், ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் முன்னிலையில் நேற்று நடந்தது. “தசாவதாரம் படப்பிடிப்பு நடத்தலாம். ஆனால், இந்த படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Posted in Apdiyaa, Appadiyaa, Arthanari, Bala, Balasubramanian, case, Cheat, Clones, Court, Dasavatharam, Dhanush, Dhasavatharam, dialogues, Direction, Gurumani, Intellectual Property, Judge, Justice, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, KS Ravikkumar, KS Ravikumar, Law, Murali, Order, Oscar Ravichandran, Pictures, Producer, Rajkamal, Screenplay, Stolen, Story, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Thasavatharam, Theerthamalai, Theft, TTK Road | 5 Comments »