Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Backgrounders’ Category

How to be successful in the Tamil Film Industry – Tips & Backgrounders: Cinema Express

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

நேர்மை வேண்டும்

புரொடக்ஷன் மேனேஜர் கம் புரொட்யூஸர் பாபுராஜா

“”சினிமா…. ஒரு நல்ல தொழில். மற்ற எல்லா தொழில்களிலும் லாபத்தை மட்டும்தான் எதிர்பார்க்க முடியும். ஆனால் சினிமாவில் மட்டுமே லாபத்துடன் சேர்த்து நல்ல பெயரையும் சம்பாதிக்க முடியும்” என்றார் தயாரிப்பாளரான ஆர்.பி.செüத்ரி.

ஒரு படத்தின் தயாரிப்பாளர் ஆக வேண்டுமெனில் பெருமளவு முதலீடு போட வேண்டியிருக்கும். பணமிருந்தால் புரொட்யூஸராகி விடலாம். ஆனால் அந்த பணத்தைக் கொண்டு வராதவர்களும் கூட தயாரிப்பாளர் ஆகிவிடும் அதிசயம் சினிமாவில் மட்டுமே சாத்தியப்படும்! தொடர்ந்து நான்கு படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக (புரொடக்ஷன் மேனேஜர்) வேலை பார்த்தால் போதும். திறமையும், நேரமும் கூடும்பட்சத்தில் அவர்கள் தயாரிப்பாளர் ஆவது சகஜமானதுதான்.

ஆர்.பி. செüத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸில் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக புரொடக்ஷன் மேனேஜராகவும், ஜெ. ஜெ. குட் ஃபிலிம்ஸின் அதிபராகவும் இருந்து வருபவர் பாபுராஜா.

புரொடக்ஷன் மேனேஜரின் அசிஸ்டெண்ட் ஆக நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி இங்கே நமக்கு வழிகாட்டுகிறார் அவர்.

இந்த இதழில் பாபுராஜா சொல்வதைக் கேட்போம்.

“”நான் உதவி இயக்குனரா வரணும்னு நினைச்சேன். ஆனா வந்த இடத்தில் அப்படி ஆக முடியல. மலேசியா வாசுதேவன் சார் எடுத்த முதல் படமான “நீ சிரித்தால் தீபாவளி’யில் ஆஃபீஸ் பையனா வேலை பார்த்தேன். 1991-ம் வருஷம்னு நினைக்கிறேன். அப்புறம் ஒரு சில படங்கள் வொர்க் பண்ணிக்கிட்டிருந்தேன்.

டைரக்டர் ராஜகுமாரன் சார் மூலமா விக்ரமன் சார் நட்பு கிடைச்சது. அவர் என்னை செüத்ரிசார்கிட்டே அறிமுகப்படுத்தி, “பூவே உனக்காக’ படத்தில புரொடக்ஷன் மேனேஜரா வொர்க் பண்ண வச்சார். என்னோட வொர்க்கைப் பார்த்த செüத்ரி சார், விக்ரமன்கிட்டே, “இவரு இங்கேயே இருக்கட்டும்’னு கேட்டுக்கிட்டார். அதிலிருந்து இருபத்தி அஞ்சு படங்களுக்கு மேல சூப்பர் குட்ல புரொடக்ஷன் மேனேஜரா வொர்க் பண்ணிட்டிருக்கேன்.

“விண்ணுக்கும் மண்ணுக்கும்’ ஷூட்டிங் நடந்துகிட்டிருந்தபோதுதான் சரத்குமார் சாரும், செüத்ரி சாரும் நீங்க புரொட்யூஸர் ஆகிடுங்க’ன்னு சொன்னாங்க. “அரசு’ படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளரா அறிமுகமானேன். அப்புறம் “சத்ரபதி’ தயாரிச்சேன். இப்போ “நினைத்து நினைத்து பார்த்தேன்’னு ஒரு படம் பண்றேன்.

தயாரிப்பு நிர்வாகின்னா ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கும், டைரக்டருக்கும் பாலமா இருக்கிறவர். சினிமாவைப் பொறுத்தவரை எல்லாத்துக்கும் திறமை முக்கியம். இந்த வேலைக்கு மிகமிக முக்கியம் நேர்மை. அது இருந்தால்தான் லாங் லைஃப்பா நீடிக்க முடியும். சரியான உழைப்பும் அவசியம்.

உங்க மேல நம்பிக்கை இருந்தால்தான் நீங்க நிரந்தரமா ஒரு கம்பெனியில வொர்க் பண்ண முடியும். நம்பிக்கை இல்லைன்னா நீங்க யார்கிட்டேயும் வொர்க் பண்ண முடியாது. புரொடக்ஷன் மேனேஜர்னா நடுநிலைமை வகிப்பது நல்லது.

அதாவது நீங்க புரொட்யூசருக்கும் சப்போர்ட் பண்ணக்கூடாது. டைரக்டர், டெக்னீஷியன், ஆர்ட்டிஸ்ட்கள்னு யாருக்கும் சப்போர்ட்டா இருக்கக்கூடாது. ஒரு நடிகருக்கு இவ்வளவுதான் சம்பளம்னா அதை கரெக்ட்டா வாங்கிக் கொடுக்கணும். யாருக்காகவும் ஒருதலைபட்சமா செயல்பட்டால் பேர் கெட்டுப் போயிடும். நடிகர்- நடிகை, டெக்னீஷியன்கள் எல்லார்க்கும் சம்பளம் ஃபிக்ஸ் பண்றதும் நாங்கதான்.

எல்லா விஷயங்களையும் தயாரிப்பாளருக்கு சொல்வோம். ஒரு சில தயாரிப்பாளர்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து பார்ப்பாங்க. செüத்ரி சாரெல்லாம் ஒரு படத்துக்கு அதிகபட்சமே நாலஞ்சு தடவைதான் ஸ்பாட்டுக்கு வந்து பார்ப்பார். úஸô, நாங்க ஒரு தயாரிப்பாளர் மாதிரிதான் அங்கே வொர்க் பண்ணிட்டிருப்போம்.

நாங்க சரியா வொர்க் பண்ணலைன்னா அன்னிக்கு ஷூட்டிங்கே நடக்காதுன்னா பார்த்துக்குங்களேன். எங்களுக்கு அடுத்தபடியா அதிக நேரம் வொர்க் பண்றது டிரைவர்கள்தான்.

ஒரு படத்துக்கு, புரொடக்ஷன் மேனேஜர் மினிமம் மூணுபேரையாவது அசிஸ்டெண்ட்டா வச்சிருப்பார். எல்லார்க்கும் ஒவ்வொரு வேலைகள் இருக்கும். ஒருத்தர் கார் புரோக்ராம் பண்ணுவார். அதாவது ஆர்ட்டிஸ்ட்களுக்கு வண்டி அனுப்பி ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கொண்டு வரவைக்கிறது. அப்புறம் ஷூட்டிங் முடிஞ்சதும் அவங்களை ரூம்ல கொண்டு போய் ட்ராப் பண்ற வொர்க்கை கவனிப்பார்.

இன்னொருத்தர், லொக்கேஷனை பார்ப்பார். அதாவது மறுநாள் ஷூட்டிங்குக்கு… ஹீரோயின் கோவில்ல சாமி கும்பிடுற சீன் இருக்குதுன்னு டைரக்டர் எங்ககிட்டே சொல்லியிருப்பார். நாங்க, அதற்குத் தகுந்த மாதிரி கோவில் தேடி அதை டைரக்டர்கிட்ட காட்டி முதல்ல ஓ.கே. வாங்குவோம். அப்புறம் அது செட் ஆச்சுதுன்னா அங்கே பெர்மிஷன் சரியா ஏற்பாடு பண்ணி வச்சிருப்போம்.

சில நேரங்கள்ல என்னால வொர்க்கைக் கவனிக்க முடியலைன்னா ஆர்ட்டிஸ்ட்களுக்கு புரோக்ராம் சொல்றதிலிருந்து என்னோட வொர்க்கை எல்லாம் மூணாவது ஆள் கவனிச்சிக்குவார். பெரிய பட்ஜெட் படம்னாலும் மூணே மூணு அசிஸ்ட்டெண்ட் போதும்.

டைரக்டர்களுடைய தேவைகள் எல்லாத்தையுமே முழுமையா, அவர் கேட்ட நேரத்தில் அதாவது சரியான நேரங்களில் நடிகர்- நடிகைகளின் தேதிகள், டெக்னீஷியன்களின் தேதிகள், லொக்கேஷன் பெர்மிஷன் என எல்லாவற்றையும் அமைத்துக் கொடுப்பதுதான் எங்களின் வேலை.

ஆனால் டைரக்டர் சொல்வதை மட்டுமே கேட்டு, அதன்படி நடப்பது மட்டுமே வேலையின்னு நினைக்கக் கூடாது. படத்தோட முழுக்கதையையும் நாங்க தெரிஞ்சிருந்தால்தான் டைரக்டர் திருப்திபடக்கூடிய அளவிற்கு எங்களால் வொர்க் பண்ண முடியும்.

உதாரணமா, டைரக்டர் எங்ககிட்டே ஒரு லொக்கேஷன் கேட்கிறார்னா, நாங்க அவர் நினைக்கிற மாதிரியான ஏதாவது ஒரு லொக்கேஷனைத்தான் காண்பிக்க முடியும். ஆனா படத்தோட கதை எங்களுக்கும் தெரியும்போது, சரியான லொக்கேஷனை டக்குன்னு காண்பிச்சிடலாம். இப்ப உள்ள டைரக்டர்கள் யாரும் பாகுபாடு பார்க்கறதில்ல. அதனால எல்லாருமே அவங்களோட படத்தோட முழுக் கதையையும் எங்ககிட்ட சொல்லிடுறாங்க. அப்பத்தானே ஒரு கேரக்டருக்கு இவரை மாதிரி ஒரு ஆள் வேணும்னு டைரக்டர் கேட்கிறப்ப கொண்டு வர முடியும்?

புரொடக்ஷன் மேனேஜர் வேலைங்கறது ஒரு சின்ன வேலை கிடையாது. தயாரிப்பாளர் பணம் போடுறதோட சரி! சிலர் ஷூட்டிங் நடக்கற இடத்துக்கே வரமாட்டாங்க.
காலையில ஏழு மணிக்கு ஷூட்டிங் நடத்தணும்னா நாங்க அதிகாலை மூணு மணிக்கு எழுந்திரிச்சால்தான் அந்த ஷூட்டிங்கை நடத்த முடியும்.

புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ், புரொடக்ஷன் அசிஸ்டெண்ட்ஸ் என நாங்க எல்லாம் மூணு மணிக்கே எழுந்திரிச்சு, எல்லார்க்கும் வண்டிகள் அனுப்பிச்சிடுவோம். நடிகர்- நடிகைகள் எல்லாரையும் ஸ்பாட்டுல அசம்பிள் பண்ண வேண்டியிருக்கும். அப்படி கரெக்ட்டா ஷூட்டிங் ஏழு மணிக்கு தொடங்கிடுச்சின்னா, பல பிரச்சினைகளும் தொடங்க ஆரம்பிக்கும். சில ஆர்ட்டிஸ்ட்டுகள் மதியம் பனிரெண்டு மணிக்கு வரச் சொல்லியிருப்பாங்க.

அவங்களுக்கு தகவல் சொல்லி ரெடி பண்ணனும். அப்புறம் மறுநாள் ஷூட்டிங்கிற்கு தேவையானதையும் ரெடி பண்ணனும். கிட்டத்தட்ட நைட் பதினோரு மணி வரைக்கும் எங்க வொர்க் போயிக்கிட்டு இருக்கும்.

காலையில மூணு மணிக்கு எழுந்திரிச்சதிலிருந்து நைட்டுல பதினோரு மணிக்கு படுக்கப் போறவரைக்கும் நடைமுறை சிக்கல்களாகத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். நிம்மதியான சாப்பாடு சாப்பிட முடியாது. நிம்மதியா தூங்கிட முடியாது. டென்ஷன் இருந்துட்டே இருக்கும்.

டைரக்டர்தான் கேப்டன் ஆஃப் த ஷிப்னு சொல்லுவாங்க. úஸô, படம் ஜெயிக்கணும்ங்கற டென்ஷன்ல டைரக்டர் இருப்பார். ஒரு டைரக்டருக்கு அடுத்தபடியா அத்தனை டென்ஷன்களும் எங்களுக்குத்தான் இருக்கும். சரியான டயத்துல சரியா எடுக்கணுமேங்கற டென்ஷன் அவருக்கு… ஒரு ஆர்ட்டிஸ்ட் வர்றதுக்கு பத்து நிமிஷம் லேட் ஆனாக்கூட டைரக்டருக்கு நாங்க பதில் சொல்லி ஆகணும்.

காலையில உள்ள ஷூட்டிங்கிற்கு வர வேண்டிய நடிகருக்கு நாங்க கார் அனுப்பிச்சிருப்போம். ஆனா அது போய் எங்கேயாவது பிரேக் டவுன் ஆகி நிற்கும். அந்த நடிகர் வரலைன்னு டைரக்டர் எங்க மேல டென்ஷனாயிடுவார். அதுக்கு பதில் சொல்லணும்.

ஒரு லொக்கேஷனை ஃபிக்ஸ் பண்ணி வச்சிருப்போம். அங்கே ஏதோ ஒரு குழப்பத்துல வேற யாருக்காவது அன்னிக்கு அந்த லொக்கேஷனை கொடுத்து வச்சிருப்பாங்க. அதை க்ளீயர் பண்ணி வாங்க வேண்டியிருக்கும். úஸô, எல்லா வகையிலும் எங்களுக்கு டென்ஷன் இருக்கும்.

யூனிட்ல உள்ள யாராவது ஒருத்தர் வர லேட்டானாக்கூட சிரமம்தான். ஒரு படத்துக்கு நூறு பேர் வொர்க் பண்றாங்கன்னா அத்தனை பேரும் ஸ்பாட்டுல இருந்தால்தான் வொர்க் நடக்கும். டைரக்ஷன், எடிட்டிங், கேமரான்னு எல்லாத்தையும் நீங்க இன்ஸ்ட்டியூட்ல படிச்சிட்டு, இல்ல புத்தகங்களை படிச்சு தெரிஞ்சுகிட்டோ வந்திடலாம்.

ஆனா இதுக்கு அப்படி கிடையாது. அனுபவம்தான் அவசியம். இந்த தொழிலுக்கு மெமரி பவர் ரொம்ப முக்கியம். ரொம்பப் பேச வேண்டியிருக்கும். உதாரணமா, நமக்கு தேவைப்படுற லொக்கேஷனுக்கு ரொம்ப அமெüண்ட் கேட்பாங்க. பேரம் பேசி கம்மியான அமெüண்ட்ல அதை முடிக்கணும். செலவை சுருக்கணும்.

டைரக்டர் தன்னோட ஸ்கிரிப்ட் ரெடியானதும், அதை எத்தனை நாள்ல முடிச்சிடலாம்னு ப்ளான் பண்ணிட்டார்ன்னா… அந்த ஸ்கிரிப்ட்டுக்கு எவ்வளவு செலவு பண்ணவேண்டியிருக்கும்னு நாங்க கரெக்டா சொல்லிடுவோம். முன்னாடியெல்லாம் பட்ஜெட் போட்டு, படங்கள் பண்ணினாங்க. ஆனா இப்ப பட்ஜெட்ங்கறது யாரு கையிலேயும் கிடையாது. ஆனா டைரக்டர் நினைச்சா சாத்தியம்.

டைரக்டர் நினைச்சால்தான் பட்ஜெட்டை ஏத்தவோ, இறக்கவோ முடியும். புரொடக்ஷன் மேனேஜர் ஓரளவுதான் செலவுகளை மிச்சப்படுத்த முடியும். பட்ஜெட் அதிகமாகுறதும், கம்மியாகுறதும் டைரக்டர் கையிலதான் இருக்கு. இப்ப யாரும் பட்ஜெட் பத்தி பேசுறதில்ல. டைரக்டர்கிட்டே கதையை கேட்கிறப்பவே, இதை நம்பளால பண்ண முடியுமான்னு புரொட்யூசர்கள் யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க. டைரக்டர் சொன்ன கதைக்கு தகுந்த செலவுகளை பண்ணினால் மட்டுமே குவாலிட்டியை எதிர்பார்க்க முடியும்.

அதனால இப்ப செலவு பண்ணிதான் ஆகவேண்டிய கட்டாயம் இருக்கு. நியாயமா ஒரு படத்தோட கதைக்கு என்னென்ன தேவையோ அதற்கு செலவு பண்ணித்தான் ஆகணும். ஆனால் எங்கே பட்ஜெட்டைக் குறைக்க முடியும்னா…. நெகட்டிவ், அப்புறம் ஷூட்டிங் டேட்ஸ் இதுலதான் செலவை கம்மி பண்ண முடியும்.

அதாவது ஒரு படத்துக்கு பதிமூணாயிரம் அடி ஃபிலிம் போதும். ஆனா சிலர் லட்சக்கணக்கான அடி ஃபிலிமை வீணடிப்பாங்க. ஐம்பது சீன் இருக்கிற ஒரு ஸ்கிரிப்ட், கதையைப் பொறுத்து எழுபது நாளைக்குள்ள மொத்த ஷூட்டிங்கை முடிச்சிடலாம். ஆனா அதுக்கு மேல நாட்கள் போறப்பத்தான் பட்ஜெட்டும் மீறிப்போகுது.

ஒரு ஸ்கிரிப்ட் பக்காவா இருந்து, தேவையில்லாத எதையும் (பாட்டு, சீன்கள்) எடுக்காமல் இருந்தால் படத்தோட பட்ஜெட் பக்காவா குறையும். இந்த கேரக்டருக்கு குறிப்பிட்ட நடிகர்தான் வேணும்னு டைரக்டர் நினைச்சார்னா அந்த நடிகருக்கான சம்பளத்தை கொடுத்துத்தான் ஆகணும். எல்லாமே டைரக்டர் கையில தான் இருக்கு.

ஒரு நடிகருக்கு 5 லட்ச ரூபாய் சம்பளம்னு வச்சுக்குங்க. அதுக்குப் பதில் அவரை போடாமல் புதுமுகம் யாரையாவது நடிக்க வச்சுகூட அந்த அஞ்சு லட்ச ரூபாயை மிச்சப்படுத்துறது டைரக்டர் கையிலதான் இருக்கு. தொடர்ந்து படங்கள் எடுத்து வரும் கம்பெனிகள்ல புரொடக்ஷன் மேனேஜர் இருப்பாங்க.

ஆனா புதுசா படம் பண்ண வர்றவங்ககிட்டே படத்தோட டைரக்டர்தான் புரொடக்ஷன் மேனேஜரை சொல்லுவாங்க. காரணம் டைரக்டர்தான் அந்த புரொட்யூஸரை இண்டஸ்ட்ரிக்குக் கூட்டிட்டு வந்திருப்பார். அதனால யார் நல்லா வொர்க் பண்ணு வாங்கறது டைரக்டருக்குத் தெரியும்.

லொக்கேஷன்கள் சரியா ஃபிக்ஸ் பண்ணனும்னா, ஸ்கிரிப்ட், புரோக்ராம் லிட்ஸ்கள் பக்காவா இருக்கணும். புரோக்ராம் லிஸ்ட் சரியில்லைன்னாத்தான் கொஞ்சம் தடுமாற்றங்கள் இருக்கும். லொக்கேஷன்கள் கிடைக்கிறதில ஒருநாள், ரெண்டு நாள் தள்ளி போகலாம்.

கவர்மென்ட் லொக்கேஷன்கள் எல்லாம் முன்கூட்டியே சொல்லி, பெர்மிஷன் வாங்கணும். ரெயில்வே பெர்மிஷன் எல்லாம் ரெண்டு மாசத்துக்கு முன்பே அப்ளை பண்ணினால்தான் கிடைக்கும். அதை வாங்கி வச்சிருப்போம். ஆனா அன்னிக்கு யாராவது ஒரு ஆர்ட்டிஸ்ட்டோட டேட்ஸ் குழப்பமா வரும்.

úஸô, ஷூட்டிங்கை தள்ளிப்போடமுடியாது. காரணம் அப்ப அந்த லொக்கேஷன் பெர்மிஷனை வேற யாருக்காவது கொடுத்து வச்சிருக்கலாம். இந்த மாதிரி நடைமுறை சிக்கல்கள் வரும். அதே சமயம் பிரைவேட் லொக்கேஷன்னா சரி பண்ணிக்கலாம். ரெயில்வே, ஏர்போர்ட் லொக்கேஷன்கள்னா பெர்மிஷன் வாங்கறது கஷ்டமானது. இதெல்லாம் எங்களோட வேலைகள். இதுல குளறுபடி வந்தா ஷூட்டிங் கேன்சலாகக்கூட ஆயிடும்..

சினிமாவைப் பொறுத்தவரை எதற்குமே கல்வித் தகுதி தேவையில்லைன்னுதான் நான் சொல்லுவேன். அதுக்காக எழுதப் படிக்க தெரியாதுன்னு சொல்லக்கூடாது. தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தில உறுப்பினரா சேர்ந்தால்தான் நீங்க புரொடக்ஷன் அசிஸ்டெண்ட்டாக சேரமுடியும். ஒரு தயாரிப்பாளர் அல்லது டைரக்டரோட சிபாரிசு இருந்தால் மட்டுமே உங்களை புரொடக்ஷன் பாயாகவோ / எக்ஸிகியூட்டிவ்வாகவோ சேர்த்துக் கொள்வார்கள்.

அதாவது அதில் மெம்பரானால்தான் நீங்க படத்துக்கு வொர்க் பண்ண முடியும்.
நாங்க வொர்க் பண்ற படத்தோட அசிஸ்டெண்ட் டைரக்டர் தனியா படம் பண்ணும்போது எங்களை கூப்பிட்டுக்குவாங்க. அதனால எங்களுக்கு தொடர்ந்து வொர்க் பண்றதுக்கான வாய்ப்புகள் வரும். கிட்டத்தட்ட பதினேழு வருஷமா சூப்பர்குட்லதான் நான் வொர்க் பண்றேன்.

ஒவ்வொரு படத்துக்கும் நாங்க சிரமப்பட்டுத்தான் ஆகணும். படத்தோட டெக்னீஷியன்கள் படம் ஆரம்பிக்கிறதுக்கு நாலு நாளைக்கு முன்பிருந்து… படம் முடிஞ்சு, பூசணிக்காய் உடைச்சதுக்கு அப்புறம் போயிடலாம். கேமராமேன்னா ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு பத்து நாளைக்கு முன்பே லொக்கேஷன் பார்க்க அப்படி இப்படின்னு வொர்க் இருக்கும்.

ஆனா எங்க புரொடக்ஷன் வொர்க் எப்படின்னா நாங்க படம் தொடங்கறதுக்கு 3 மாசத்துக்கு முன்பே எங்க வொர்க்கை ஆரம்பிக்க வேண்டியிருக்கும். அதே மாதிரி படம் முடிஞ்சும் போஸ்ட் புரொடக்ஷன் அது இதுன்னு 3 மாசம் வொர்க் இருக்கும். ஒரு தயாரிப்பு நிர்வாகிக்குத்தான் அதாவது எங்களுக்குத்தான் சினிமாவில வேலை ஜாஸ்தி.

நான் சரியா வொர்க் பண்ணினதினாலதான் இன்னிக்கு நான் புரொட்யூஸரா புரொமோஷன் ஆகியிருக்கேன். பெரிய முதலீட்டோட வந்தால்தான் படத்தயாரிப்பாளர் ஆக முடியும். ஆனா என்னை மாதிரி மேனேஜர்கள் தயாரிப்பாளர்கள் ஆகுறதுக்குக் காரணம் எக்ஸ்பீரியன்ஸ்களும், சின்ஸியாரிட்டியும் தான்”.

Posted in Actors, Actress, Backgrounders, Chowdhry, Cinema, Directors, executives, Express, Faces, Films, Industry, Kollywood, Life, Managers, Movies, people, Producer, success, Supergood, Tips | Leave a Comment »

Tamil Nadu Cooperative Elections – Malpractices & Power Abuse (Savithri Kannan)

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

கொள்ளையடிப்பவர்களின் கூடாரமா கூட்டுறவுகள்

நெஞ்சு பொறுக்குதில்லையே :: சாவித்திரி கண்ணன்

குமுதம் 

25.07.07  தொடர்கள்   

வேறு வழியின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன கூட்டுறவு சங்கத் தேர்தல்கள்.

ஆளும் கட்சியினரைத் தவிர, வேறு யாரும் மனுதாக்கல் செய்ய முடியாமை, மீறி போட்டியிட்டால் அடிதடி, வெட்டுக்குத்து, தேர்தல் நடந்த ஒரு சில இடங்களிலும் ஓட்டுச் சீட்டுகளை கிழித்தெறிந்தது, ஓட்டுப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடியது, வாக்கு எண்ணிக்கையில் தகராறு என ஏக களேபரம்.

இரண்டு மாத காலத் தேர்தல் ஏற்பாடுகள், கோடிக்கணக்கான பணம், நேரம், உழைப்பு அத்தனையும் விரயமானது.

கோடிகோடியாய் பணம் ஈட்டிவிட்ட கட்சித் தலைமைகள் எந்த வகையிலாவது கட்சிக்காரர்களுக்குச் சம்பாதிக்கும் வழியை சாத்தியப்படுத்தாவிட்டால் கட்சி நடத்த முடியாதென்று உருவாகிவிட்ட சூழலில், தள்ளிப்போடப்பட்ட தேர்தல் என்பது தாமதப்படும் அநீதியே அன்றி தடுக்கப்பட்ட அநீதியாகிவிடாது.

‘‘சுயக்கட்டுப்பாடு இல்லாத தன்னாட்சியையும், சுதந்திரத்தையும் நினைத்தும் பார்க்க முடியாது’’ என்றார் மகாத்மா காந்தி. நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளையெல்லாம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது இன்றைய அரசியல்.

கூட்டுறவு என்பது என்ன? ஒரு குறிப்பிட்ட தொழிலிலோ, இடத்திலோ வாழும் மக்கள் ஒன்றாக இணைந்து தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்வதற்கு, அவர்களாலேயே அமைத்துக் கொள்ளப்படுவதே கூட்டுறவாகும். இங்கே அரசியல் கட்சிகளுக்கோ, அரசாங்கத்திற்கோ வேலையே இல்லை.

1904ல் கூட்டுறவு அமைப்புகள் உதயமானபோது பிரிட்டிஷ் அரசு, ‘‘அரசாங்கத்தின் அனுசரணை மற்றும் உதவிகள் இருக்குமே தவிர, தலையீடு இருக்காது’’ என்று தெளிவுபடுத்தியது.

கூட்டுறவு என்பது முழுக்க, முழுக்க மக்களின் தன்னிச்சையான கூட்டிணைந்த செயல்பாடு. இதில் அரசு தலையிடாமல் ஆதரவு அளித்தாலே போதுமானது. அது நாட்டை அகில உலக வல்லரசாக்கும் என்பதை விவசாயக் கூட்டுப் பண்ணைகளின் விஸ்வரூப வளர்ச்சியில் நிரூபித்தது சோவியத் யூனியன்! அப்படிப்பட்ட கூட்டுறவைத்தான் தமிழ்நாட்டில் தழைத்தோங்க விடாமல் கழக ஆட்சிகள் மாறி மாறி களங்கப்படுத்திவிட்டன.

கூட்டுறவுத் துறை வளர்ச்சி என்பது சோசலிஷ சமுதாயத்தின் அடித்தளம் என்பதை அறிந்திருந்த ஜவஹர்லால் நேரு, அரசு மற்றும் அரசியல் தலையீடுகளை அடியோடு ஒழித்து, கூட்டுறவு அமைப்புகளை கோயிலாகப் புனிதப்படுத்தினார். இதனால்தான் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி கூட்டுறவுத் துறையின் பொற்காலமாகப் பொலிந்தது. அன்றைய தினம் தமிழக கூட்டுறவு அமைப்புகள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே முன் மாதிரியாய் விளங்கின.

1967ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., கூட்டுறவு அமைப்புகளின் ஆணி வேரையே அசைக்கத் துணிந்தது.

1976ல் கூட்டுறவு அமைப்புகளைக் கலைத்தார் கருணாநிதி. அப்போது கலைத்த கூட்டுறவு அமைப்புகளை இன்றுவரை தட்டியெழுப்ப முடியவில்லை.

‘கூட்டுறவு அமைப்புகள் கட்சிக்காரர்களின் வேட்டைக் களமாக மாறலாகாது’ என்ற பயத்தில் எம்.ஜி.ஆர்., அதிகாரிகளைக் கொண்ட கூட்டுறவுகளை நடத்தினார். இதனால் அரசியல்வாதிகளுக்கு மாற்றாக அதிகாரிகள் ஆட்டம் போட்ட அவலம் அரங்கேறியது! ஜெயலலிதா ஆட்சியிலும் இந்தச் சீர்கேடுகளே தொடர்ந்தது. இவையாவும் வெளியார் தலையீடுகள் கூட்டுறவுக்கு விரும்பத்தக்கவையல்ல என்பதை அப்பட்டமாய் நிரூபித்தன.

89ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ‘அதிகாரிகள் பிடியிலிருந்து கூட்டுறவை விடுவித்து, அதற்கு ஆக்ஸிஜன் ஏற்றி உயிர்ப்பிக்கிறேன்’ எனக் கூட்டுறவுத் தேர்தல்களை அறிவித்தார். கூட்டுறவு அமைப்புகளைக் கொள்ளையடிக்கத் துடித்த கட்சிக்காரர்களின் அளவற்ற பசி அந்தத் தேர்தலையும் அடிதடியில் ஆழ்த்தி அரைகுறையோடு நிறுத்தியது.

1996ல் மீண்டும் கருணாநிதி ஆட்சியில் கூட்டுறவுத் தேர்தல்கள் ரத்தக்களரிகளோடு அரங்கேறின. உடன்பிறப்புகள் உறிஞ்சிக் கொழுக்கும் வேட்டைக்களமாகின கூட்டுறவுகள்.

ஜெயலலிதா அணுகுமுறை, வெளிப்படை சர்வாதிகாரமாயிருந்தது என்றால், கருணாநிதி அணுகு முறை,ஜனநாயகத்தின் பெயரிலான சர்வாதிகாரமாக உணரப்பட்டது.

இதனால் இந்திய அளவில் அரசு மற்றும் அரசியல் தலையீட்டிலிருந்து கூட்டுறவை விடுவிக்கும் சிந்தனைகள் வலுப்பெற்றன. 1987ல் அர்த்தநாரீஸ்வரன் கமிட்டியும், 1990ல் பிரேம்பிரகாஷ் கமிட்டியும் கூட்டுறவுத் துறையை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கக் கோரின. இதன்படி 1991லேயே கூட்டுறவு அமைப்புகளுக்கான மாதிரி சட்டம் வடிவமைக்கப்பட்டது. இன்று ஆந்திரா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் நவீன கூட்டுறவு சட்டத்தின்படி கூட்டுறவு அமைப்புகள் சிறப் பாகச் செயல்படுகின்றன. மத்திய அரசும் மற்ற மாநிலங்கள் இதைப் பின்பற்றவேண்டும் என்றது. இதை அமல்படுத்தினால் கட்சிக்காரர்களின் கை கட்டப்பட்டுவிடும் என்பதால், கருணாநிதியும் இதை இன்றுவரை அமல்படுத்த மறுக்கிறார். வற்புறுத்த வேண்டிய காங்கிரஸோ வாய்மூடி மௌனிக்கிறது. இனியும் அரசியல்வாதிகளின் அதிகார எல்லைகளை வரையறுக்காவிட்டால், ஜனநாயக அமைப்புகள் ஒவ்வொன்றுக்குமே சாவு மணியடிக்கப்பட்டுவிடும். ஆகவே, மத்திய அரசு மற்றும் கூட்டுறவுத் துறையின் தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்தும் தற்சார்பு கூட்டுறவு சட்டம் என்பது தமிழ்நாட்டிற்குத் தவிர்க்க முடியாததாகும்.

நடிப்புச் சுதேசிகள்!

கூட்டுறவுக்கு ஐந்து கட்ட தேர்தல்களை அறிவித்த முதலமைச்சர் கருணாநிதி, ‘‘கூட்டுறவுத் தேர்தல்கள் அரசியல் அடிப்படையில் நடைபெறக்கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு’’ என்றவர் அடுத்த வாக்கியத்திலேயே, ‘‘எனவே தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை ஜனநாயக மரபுப்படி தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி போட்டியிடுவது நல்லது’’ என்றார்.

அந்தந்த மாவட்டத்து அமைச்சர்கள் அதிகாரிகளை, ‘‘சொன்னபடி கேளு, இல்லாவிட்டால் விடுமுறை போட்டு வீட்டுக்குப் போ’’ என்று மிரட்டிய சம்பவங்கள் நடந்தேறின. இதனால் தி.மு.க.வினரின் விண்ணப்ப மனு மட்டுமே ஏற்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்ட 1921 தொடக்க கூட்டுறவுச் சங்கங்களில், 1,338 தொடக்க கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து சுமார் 10,000 பேர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தினசரிகளில், ‘தகுதி படைத்த வேட்பாளருக்கு வேட்புமனு கிடைக்கவில்லை என முதல்வர் கவனத்திற்கு வந்துள்ளது. அப்படிக் கொடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என அரசே விளம்பரம் வெளியிட்டது. 90 சதவிகித இடங்களில் அதிகாரிகள் அராஜகமாக நடந்தபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஜனநாயகத்தின் பெயராலேயே ஜனநாயகத்தைக் கொல்லும் கலை, தி.மு.க.வினரைத் தவிர வேறு யாருக்கு வரும்?.

Posted in abuse, Analysis, Backgrounders, candidates, Coop, Cooperative, DMK, Elections, Electorate, Justice, Kumudam, Kumudham, Law, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Malpractices, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, Op-Ed, Order, Polls, Power, Savithri Kannan, solutions, Tamil Nadu, voters | Leave a Comment »

Female Infanticide – Gender selections & Abortions in India: Law

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

பிறப்பது எங்கள் பிறப்புரிமை!

உ . நிர்மலா ராணி, வழக்கறிஞர்

கருவிலிருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டறிவதற்கான தடையை நீக்க வேண்டும் என்று கோரி மகாராஷ்டிர மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு தம்பதி பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். அம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற தாய், மூன்றாவது ஆண் குழந்தை பெற விரும்புவதில் என்ன தவறு என்று வினவியிருப்பது நாடெங்கிலும் அதிர்ச்சியையும், கண்டனக் குரல்களையும் எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு போடப்பட்ட ஓரிரண்டு தினங்களுக்குள் ஹைதராபாதின் ஒரு பகுதியில் தனது எட்டாவது மகளுக்குப் பிறந்த பெண் குழந்தையைச் சுமையாகக் கருதி அதை, அப்துல் ரஹீம் என்பவர் உயிருடன் மண்ணில் புதைத்த சம்பவம் நடந்திருக்கிறது. புதைக்கப்பட்ட குழந்தையின் கை வெளியே தெரிந்ததைப் பார்த்து, விவசாயி ஒருவர் காப்பாற்ற, அக்குழந்தை அதிசயமாய் உயிர் பிழைத்துக் கொண்டது.

இரண்டாவது சம்பவத்தில் குற்றம் நடந்து விட்டது. முதல் சம்பவத்தில் குற்றம் செய்ய கோர்ட் அனுமதி கேட்கப்படுகிறது. இவை இரண்டிலும் உள்ள பொதுவான அம்சம் என்னவென்றால் – மக்கள்தொகையில் பெண்ணினத்தின் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் வழிவகுக்கும் காரணிதான் அது.

மக்கள்தொகையில் ஆண் பெண் விகிதம் என்பது 103:100 இருக்க வேண்டும். அதாவது 1000 ஆண் குழந்தைகளுக்கு 971 பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஏனென்றால், ஆண் கரு, பெண் கருவை விட பலவீனமானது. உருவான ஓர் ஆண்டுக்குள் வியாதிகளால் இறந்துவிடக் கூடியது. அவ்வாறு இறந்துவிட்டால் ஆண் – பெண் விகிதம் சமநிலையை அடையும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் நமது நாட்டில் மக்கள்தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. 1901-ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 972 பெண் குழந்தைகள் இருந்தன. 1991-ல் 945 ஆக குறைந்து 2001-ல் 927-க்கு சரிந்துவிட்டது. பெண்களுக்கெதிராக இந்நாட்டில் நிலவும் பாரபட்சத்தால் அவர்கள் இறந்து போகிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கான சர்வதேச நிறுவனமாகிய யூனிசெஃப்பும் இதை உறுதி செய்கிறது. இந்தியாவில் இவ்வாறு மாயமான பெண்களின் எண்ணிக்கை 5 கோடியாம்.

“லான்செட்’ என்ற இதழுக்காக இந்திய மற்றும் கனடா ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவிலுள்ள 11 லட்சம் குடும்பங்களில் ஆய்வு மேற்கொண்டதில், ஆண்டுக்கு 5 லட்சம் பெண் குழந்தைகள் கருக்கொலை காரணமாகவும், கருவுறுவதற்கு முன்பே பாலினத்தைத் தேர்வு செய்யும் முறையாலும் அழிந்து போகின்றனர் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

இவ்வாறு பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கொள்ளை நோய்களாகக் கருக்கொலைகளும், சிசுக்கொலைகளும் சமுதாயத்தில் வெகுவேகமாகப் பரவி வருகின்றன. இந்த நோய்களை உற்பத்தி செய்யும் விஷக்கிருமிகள் நமது ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் புரையோடிப் போயிருக்கின்றன.

வரதட்சிணை என்ற பெயரிலும், சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரிலும், பெண்கள், பெற்றோர்களால் ஒரு பொருளாதாரச் சுமையாகவே கருதப்படுகிறார்கள். சொத்துரிமையும் பெற்றோருடனே வாழும் உரிமையும், இறுதிச்சடங்கு செய்யும் உரிமையும், ஆண்களுக்கே அளிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பெண்களைப் புறக்கணிக்கும் போக்கும் ஆண்குழந்தைகளை விரும்பும் மனப்பாங்கும் நியாயப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன.

முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்து, இரண்டாவது கருவும் பெண்ணாக உருவாகிவிட்டால் ஆண் குழந்தை வேண்டி கருக்கொலை செய்வதில் என்ன தவறு என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் முதல் குழந்தை ஆணாக உருவானால் யாரும் பெண் குழந்தை வேண்டி ஆண் கருவை அழிப்பதில்லையே? “லான்செட்’ ஆய்வின்படி, முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்பட்சத்தில் இரண்டாவது பெண் குழந்தைகளின் விகிதம் 759 ஆகவும் மூன்றாவது பெண் குழந்தைகள் விகிதம் 719 ஆகவும் குறைந்து விடுகின்றன. ஆனால் இதுவே முதல் குழந்தை ஆணாக இருந்துவிட்டால் அதன்பிறகு ஆண் பெண் விகிதம் சமமாகவே இருக்கிறது என்று அந்த ஆய்வு பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

பெண் கருக்கொலை, சிசுக்கொலை என்பது ஏதோ படிக்காத பாமர மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் அதிகம் என்பதில்லை. நாட்டின் வளமான மாநிலங்கள் என்று போற்றப்படும் பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், குஜராத்தில்தான் மிகக் குறைந்த பாலின விகிதத்தில் பெண்கள் பிறக்கிறார்கள்.

தனிநபர் வருமானத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ள தில்லியில் பெண்களின் விகிதம் 868. மகாராஷ்டிரத்தில் 1991-ல் 946 ஆக இருந்த விகிதம் இன்று 913 ஆக மாறிவிட்டது. மகாபாரதப் புகழ் குருஷேத்ரத்தில் பாலின விகிதம் 770. எங்கெல்லாம் ஸ்கேன் மையங்கள் அதிகமிருக்கின்றனவோ அங்கெல்லாம் பெண்களின் விகிதம் குறைந்தே காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

“”பிறக்கப்போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் தொழில் நுட்பம் (முறைப்படுத்துதல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதலைத் தடுக்கும்) சட்டம்” 1994-ல் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஸ்கேன் மையங்கள் அரசிடம் பதிவு செய்யப்பட வேண்டும். கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறிந்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. இதைப் பற்றி விளம்பரம் செய்தாலும் அது குற்றம். முதல் 10 ஆண்டுகளுக்கு எவ்வித அசைவுமில்லை. உச்ச நீதிமன்றத் தலையீட்டிற்கு பிறகு ஓரளவு முன்னேற்றம் உள்ளது. இந்நிலையில்தான் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்குப் போடப்பட்டுள்ளது.

“”ஆணும் பெண்ணும் சமம்” என்கிறது அரசியல் சட்டம். ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்கிறது சமூகச் சட்டம். நீதி பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியல் சட்டத்தைத்தான் உயர்த்திப் பிடிக்க வேண்டுமே தவிர சமூகச் சட்டத்தை அல்ல. ஒரு சட்டம் எந்தப் பின்னணியில் யாருக்காக உருவாக்கப்பட்டது என்பதை உணராமல் எதிர்மறையான கருத்துகளைக் கூறும்போது சமூகத்தில் குற்றத்தை நியாயப்படுத்துபவர்களுக்கு அவை ஒரு வழிகாட்டுதலாக அமைந்துவிடும் அபாயம் உள்ளது.

சீனாவிலும் பெண் கருக்கொலைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2020-க்குள், திருமணம் செய்ய முடியாத 3 கோடி ஆண்கள் இருப்பர் என்று கூறப்படுகிறது. அங்கும் பாலினத் தேர்வு தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த “”நாமிருவர் நமக்கொருவர்” போன்ற திட்டங்களைக் கடைப்பிடித்ததில் பெண் கருக்கொலைகள் அதிகரித்துள்ளன.

ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட பாலினத்தை விரும்பும் போக்கு மக்களிடம் இல்லாததால் பிரச்னை இல்லை. கரு உருவாவதற்கு முன்னரே பாலினத்தைத் தேர்வு செய்து உருவாக்கிக் கொள்ளும் முறைப்படி, வர்ஜினியாவில் 11 பெற்றோர்களில் 10 பேர் பெண் குழந்தையைத்தான் தேர்வு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள் பல, பாலினத் தேர்வு செய்யும் முறையைத் தடை செய்துள்ளன.

சமூகவியலாளர், அமித்தாய் எட்ஸியோனி கூறுகிறார்: “”பாலினத் தேர்வு என்பது பாலின விகிதாசாரத்தில் ஒரு கடுமையான அசமத்துவ நிலையை ஏற்படுத்தும். கோடிக்கணக்கான ஆண்களைப் பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளாக்கும் அல்லது பிரம்மசாரிகளாக்கும்.” ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுவாள்; கடத்தப்படுவாள்; மறுத்தால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவாள்.

இந்நிலையில், இந்தியாவில் பெண் குழந்தைகளின் சமூக அந்தஸ்து உயர்த்தப்பட வேண்டும். பாதகமான சமூகப் பழக்கவழக்கங்களை, சடங்கு சம்பிரதாயங்களை நாம் புறக்கணிக்க வேண்டும். பெண் குழந்தைகளைக் காக்க, அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவரை கருவிலே அழிக்கப்பட்டாலும், பூமிக்குள் புதைக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் எழுவோம் – ஃபீனிக்ஸ் பறவைகளாய்!

———————————————————————————————————————————————–

ஆண்டுக்கு 10 லட்சம் பெண் கருக்கள் அழிக்கப்படுகின்றன: மத்திய சமூகநல வாரியத் தலைவி தகவல்

புதுச்சேரி, நவ. 4: இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர் என்று மத்திய சமூக நல வாரியத் தலைவி ரஜனி பாட்டீல் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில சமூக நல வாரியம் சார்பில் பெண் கரு பாதுகாப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை புதுவை முதல்வர் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மத்திய சமூக நல வாரியத் தலைவி ரஜனி பாட்டீல் பேசியது:

21-ம் நூற்றாண்டில் நாம் இதுபோல் ஒரு கருத்தரங்கம் நடத்த வேண்டியிருப்பது வேதனைக்குரியது. இந்தியாவில் பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவது குறித்து மார்ச் 8-ம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பேசப்பட்டது.

இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். கருவில் இருக்கும் பெண் ஆணா, பெண் என்பதை கண்டறிவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வந்தும், அதிலிருந்து தப்பிக்க டாக்டர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர். 2020-ம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் என்று கூறுகின்றனர். பெண் விகிதம் 50 சதவீதம் இல்லாமல் இந்தியா வல்லரசாகி என்ன பயன்? தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் ஓரளவு உயர்ந்துள்ளது. ஆனால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் உயரவில்லை என்றார்.

புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பேசும்போது, புதுச்சேரியில் 1000 ஆண்களுக்கு 1001 பெண்கள் உள்ளனர். பெண்கள் முன்னேற்றத்துக்கு நாங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதுச்சேரியில் பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் பதிவுக் கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. பெண்கள் நிறுவனங்களை நிறுவினால் 25 சதவீதம் மானியம் அளிக்கிறோம். தலித் பெண்களின் முன்னேற்றத்துக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம் என்றார்.

சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி பேசும்போது, பெண்கள் கருவுறும் நாளில் இருந்து இறக்கும் வரை அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு நாளாக அறிவிக்க உள்ளோம். அந்த நாளில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம் என்றார்.

இக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ், எம்எல்ஏ ஆர்.விசுவநாதன், புதுச்சேரி சமூக நல வாரியத் தலைவி ழான் பூரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“பொறுப்பும் செயல்திறனும் கொண்ட தன்னார்வ அமைப்புகளை அரசு தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் பெண் குழந்தை பிறப்பை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். கிராமப் புறங்களில் தன்னார்வ அமைப்புகள் மூலம் பெண் சிசுக்கள் கொல்லப்படுவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிறந்தது முதல் பெண் குழந்தைகளுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டம் இயற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் கல்வியுடன் இணைந்த வாழ்க்கை கல்வியை பள்ளிகளில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியே 8-ம் வகுப்பு முதல் கற்றுத்தர வேண்டும்’ உள்ளிட்ட கருத்துக்கள் இக் கருத்தரங்கில் பரிந்துரைக்கப்பட்டன.

———————————————————————————————————————————————————–

ஆடாமல் நிற்குமா அரசுத் தொட்டில்?

எஸ். ஜெய்சங்கர்

உள்ளாட்சி முதல் உலக அளவில், பல நிலைகளில் பெண்கள் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் எனப் பல துறைகளில் காலடி எடுத்து வைத்துள்ளனர். வர்த்தக நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளனர். பாரத நாட்டின் முதல் குடிமகள் முதல் நாட்டின் பல்வேறு பொறுப்புகளைப் பெண்கள் வகித்து வருகின்றனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்றாலும், பாரதியின் கனவை நனவாக்க, விண்கலமேறி விண்வெளிக்குப் புறப்பட்ட கல்பனா சாவ்லா, திரும்பி வரும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், காற்றோடு கலந்தார். அவரது வரிசையில் சுனிதா வில்லியம்ஸ், தொழில்நுட்பத்தையும் தாண்டி வெற்றி பெற்றார். இந்திய நாடே அவரைப் போற்றுகிறது. இது பெண்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் செய்தி.

அண்டவெளியில், காற்றில்லா இடத்தில், காலடி எடுத்து வைத்து, நடைபழகிய பெண்கள் நம் பாரதப் பெண்கள் என எண்ணி மகிழ்ந்தாலும், தாயின் கருப்பை எனும் இருண்ட பிரதேசத்தில் தோன்றி, வெளிச்சத்தைப் பார்த்தும், பார்க்காமலும் கருகிய மொட்டுகள் நம் தமிழகத்தில் ஏராளம்.

மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில், 1999 ஆம் ஆண்டு 657 பெண் சிசுக்கள் கொல்லப்பட்டன. 2000 ஆம் ஆண்டு 439 பெண் சிசுக்கள் உயிரிழக்க நேரிட்டது. மற்ற மாவட்டங்களிலும் இச்சம்பவங்கள் நிகழ்ந்தன.

தமிழகத்தின் ஆண் -பெண் குழந்தைகளின் விகிதத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாறுதல், பெண் சிசுக்கொலை ஆகியவை தமிழக அரசை கவலையடையச் செய்தது.

இதன் விளைவாக, 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தைகள் திட்டம், முழுவீச்சில் 2001 ஆம் ஆண்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. திட்டம் தொடங்கப்பட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகும், தருமபுரியில் 2001 ஆம் ஆண்டு 178 பெண் சிசுக் கொலைகள் நடந்துள்ளன எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பெண் சிசுவைக் கொல்வோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதை அறிந்த பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து, விரும்பாத பெண் சிசுக்களை அரசுத் தொட்டிலில் போட்டுச் சென்றுவிட்டனர். அக்குழந்தைகளைப் பராமரிக்கும் அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம், விரும்புவோருக்குத் தத்து கொடுக்கிறது.

மேலும், 2-வது பிரசவத்தைக் கண்காணிப்பது, பெண் குழந்தை பிறந்தால் பெற்றோருக்குக் கவுன்சலிங் தந்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சைக்கு அறிவுறுத்துவது போன்றவற்றால் பெண் சிசுக்கொலைகள் படிப்படியாகக் குறைந்தன.

பெண் சிசுக்கொலை குறைந்தாலும், தொட்டிலுக்கு வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறையவில்லை. அண்மையில் 1000-மாவது தொட்டில் குழந்தையைப் பெற்றுள்ளது தருமபுரி அரசுத் தொட்டில் குழந்தைகள் மையம். இதில் சுமார் 120 குழந்தைகள் மட்டுமே ஆண் சிசுக்கள். ஆண் சிசுக்கள் தொட்டிலுக்கு வந்ததற்கும் சமுதாயச் சீர்கேடே காரணம்; தவறான உறவால் பிறந்த குழந்தைகளை வெளிக்காட்ட முடியாமல், அவை தொட்டிலில் போடப்பட்டன.

பெண் குழந்தை விஷயத்தில், அவர்களைப் படிக்க வைத்து, வரதட்சிணை, நகை எனச் செலவு செய்து திருமணம் செய்து வைக்க வேண்டும்; ஆண் குழந்தையாக இருந்தால், மாற்றான் வீட்டுப் பெண் மூலம் குடும்பத்துக்கு வரவு என வரவு- செலவு கணக்கு பார்க்கும் எண்ணம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களிடமும், கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகம். அதனால், பெண் குழந்தை என்றால் வளர்ப்பது கடினம் என்ற சலிப்பு. தொட்டில் குழந்தைகள் மையம் தொடங்கப்பட்டு, தருமபுரியில் மட்டுமே 1000 குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறோம் எனும் தகவல் பெண்ணினத்துக்குப் பெருமை அளிப்பதாக இல்லை. காரணம், பெண் சிசுவைக் கொன்றால் சிறைத்தண்டனை உறுதி என்ற பயம் மட்டுமே, சிசுக்கொலைகளைக் குறைத்து, அவற்றை அரசுத் தொட்டிலில் போடச் செய்திருக்கிறது.

சிசுக்கொலைகளைத் தடுக்கவும்; பெண் குழந்தைகளைத் தத்து பெறவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் முதல்கட்ட நடவடிக்கைகளே. பெண் குழந்தைகளைத் தத்து பெறுவதோடு தனது கடமை முடிந்தது என அரசு ஒதுங்கிக்கொள்ளாமல், அரசுத் தொட்டிலுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான, ஆக்கபூர்வ முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கான அடுத்தகட்ட திட்டங்கள் தேவை.

மேலும், பெண் குழந்தைகளை அரசுத் தொட்டிலில் போடுவதைத் தவிர்க்கும் எண்ணம் பெற்றோருக்கு வர வேண்டும். இதற்கு, சமூக, பொருளாதார மாற்றம் மிக அவசியம். பொருளாதார வசதி கொண்ட எவரும் தங்களது பெண் சிசுக்களைக் கொல்வதும், அரசுத் தொட்டிலில் போடுவதும் கிடையாது. வருவாயற்ற ஏழைகளே பெரும்பாலும் இச்செயலில் ஈடுபடுகின்றனர்.

அரசின் முயற்சியாலும், பொதுமக்களிடையே ஏற்படும் மன மாற்றத்தாலும், “அரசுத் தொட்டிலுக்கு பெண் சிசுக்கள் வருவது நின்று 1000 நாள்களாகின்றன’ என்ற அறிவிப்பு வெளியாகுமானால், அது நிச்சயமாக பெண் சமுதாயத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இருக்கும்.

Posted in Abortion, Analysis, Backgrounders, Birth, Census, Child, Childbirth, Children, Conservative, Culture, Disease, Equal, Female, Feminism, Gender, Growth, Health, Infanticide, Insights, Kids, Law, Liberal, male, Malnutrition, Needy, Op-Ed, Opportunities, Opportunity, Order, parents, Poor, Population, ratio, Rich, rights, Sex, solutions, State, Stats, Statz, Values, Wealthy | Leave a Comment »

Saravana Bhawan Rajagopal Annachi vs Jeevajothi saga – Details, History

Posted by Snapjudge மேல் ஜூலை 24, 2007

IdlyVadai – இட்லிவடை: ஜீவஜோதி, அண்ணாச்சி ப

சற்றுமுன்…: ஓட்டல் அதிபர் ராஜகோ�: ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்பட 6 பேர் மீது நாகை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு: ஜீவஜோதி கடத்தல் வழக்கு

நாகப்பட்டினம், ஜூலை 7: ஜீவஜோதி கடத்தல் வழக்கில் சென்னை சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் மீது நாகை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இது குறித்த விசாரணைக்காக ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் நாகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராயினர்.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் ராஜகோபால் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கணவரை இழந்த ஜீவஜோதி, நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடியில் தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 7.7.2003 -ம் தேதி ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் தேத்தாகுடிக்கு வந்து சாந்தகுமார் கொலை வழக்கில் தங்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்குமாறு ஜீவஜோதியை வற்புறுத்தியுள்ளனர்.

ஜீவஜோதி மறுத்ததால் அவரை கடத்திச் செல்ல முயற்சித்தனர். தடுக்க முற்பட்ட கிராம மக்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியதுடன் தாக்குதலிலும் ஈடுபட்டனர். தன்னை கடத்திச் சென்று கொலை செய்ய முயன்றதாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் ஜீவஜோதி புகார் மனு அளித்தார். கொலைமுயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தது. நீதிபதி தங்கராஜ் இந்த வழக்கை கொலைமுயற்சி பிரிவுக்குப் பதிலாக கொலை மிரட்டல் பிரிவாக மாற்றி விசாரணை மேற்கொண்டார்.

இதனை அரசு தரப்பில் ஆட்சேபித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கொலைமுயற்சி பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றவும் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் இந்த வழக்கு கடந்த ஏப். 27 -ம் தேதி நாகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, நீதிபதி ரவீந்திரன் உத்தரவின் பேரில் இந்த வழக்கை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சேதுமாதவன் விசாரித்து வருகிறார்.

வரும் 23 -ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளதாகவும் அன்றைய தினத்தில் இருந்து சாட்சிகள் விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் நீதிபதி சேதுமாதவன் அறிவித்தார்.

தினமணி

————————————————————————————————————

ஓட்டல் அதிபர் ராஜகோபால் மீதானகொலை முயற்சி வழக்கில் ஜீவஜோதி `திடீர்’ பல்டி

நாகை, ஜுலை.24-

நாகை மாவட்டம் வேதாரண்யம் தேத்தாகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். இவர் கடந்த 2001-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இந்தநிலையில் ராஜகோபால் உள்பட 6 பேர் கடந்த 15.7.2003-ம் தேதியன்று தேத்தாகுடியில் தங்கியிருந்த தன்னை கொலை செய்ய முயன்றதாக வேதாரண்யம் போலீசில் அவர் புகார் செய்தார்.

இதன்பேரில் ராஜகோபால் உள்பட 6 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு 2005-ம் ஆண்டு திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் நடந்தபோது அப்போதைய மாஜிஸ்திரேட்டு கொலை முயற்சி வழக்கிற்கு பதிலாக கொலை மிரட்டல் வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கு அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக் கப்பட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கொலை முயற்சி வழக்காக நடத்த வேண்டும் என்றும், வேறு கோர்ட்டில் விசாரிக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கு நாகை முதன்மை குற்றவியல் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு கடந்த 6-ந்தேதி முதல் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜகோபால் உள்பட 6 பேர் மீதும் 7 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஜுலை 23-ந்தேதி 1 முதல் 10 வரையிலான சாட்சிகள் விசாரணை நடக்கும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபால் உள்பட 6 பேரும் கோர்ட்டில் ஆஜராயினர்.

இதேபோல் சாட்சிகளான ஜீவஜோதி, அவரது தாயார் தவமணி, தம்பி ராம்குமார் தந்தை ராமசாமி மற்றும் கோபால்சாமி, தஞ்சை போலீசார் பாலாஜி, மதிவாணன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் ஜீவஜோதியின் மாமா தசமணி ஆகியோர் ஆஜராகவில்லை. இதனால் தசமணிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

ஜீவஜோதி 9 மாத கர்ப்பிணி யாக உள்ளார். அவரிடம் மாஜிஸ்திரேட்டு விசாரித்தார். அப்போது சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் தினத்தன்று என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. நாகை மாவட்டத்தில் எந்த போலீஸ் நிலையத்திலும் ராஜகோபால் குறித்து புகார் கொடுக்கவில்லை.

புகார் மனுவில் உள்ள கையெழுத்து என்னுடையது தான். ஆனால் அதில் எழுதி உள்ள வாசகங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என கூறினார்.

மேலும் தனக்கு எதுவும் தெரியாது என கூறிய ஜீவஜோதி இந்த வழக்கு குறித்து நாங்கள் சமரசமாக பேசி தீர்வு கண்டு கொள்கிறோம் என கூறி மாஜிஸ்திரேட்டிடம் மனு கொடுத்தார்.

ஆனால் சாட்சி விசாரணை அன்று இதுபோல் மனுதாக்கல் செய்யக்கூடாது எனக்கூறிய மாஜிஸ்திரேட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல் ஜீவஜோதி தம்பி ராம்குமார், தந்தை ராமசாமி உள்பட அனைவரும் ராஜகோபாலுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற சாட்சிகள் விசாரணை இன்று நடக்கிறது.

—————————————————————————————————

ஜீவஜோதி கடத்தல் வழக்கில் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் விடுவிப்பு

நாகப்பட்டினம், ஆக. 1: ஜீவஜோதி கடத்தல் வழக்கில் சென்னை, சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தங்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்குமாறு, வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடியில் தங்கியிருந்த ஜீவஜோதியின் வீட்டுக்கு ராஜகோபால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரில் வந்து வற்புறுத்தினர். ஜீவஜோதி மறுக்கவே அவரை கடத்த முயற்சித்தனராம்.

இது தொடர்பாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் ஜீவஜோதி புகார் அளித்தார். இதன்பேரில் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால், வழக்கறிஞர் ஜி. ராஜேந்திரன், கணேசன் (எ) சகாதேவன், சுப்ரமணியன், கார்த்தீசன், ஸ்ரீநிகநாஜன் ஆகிய 6 பேர் மீது கொலை முயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நாகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதி சேதுமாதவன் தனது தீர்ப்பில், “புகார் கூறிய ஜீவஜோதி மற்றும் அரசுத் தரப்பில் காவல் துறையைத் தவிர அனைத்து சாட்சியங்களும் பிறழ் சாட்சியமளித்ததால் குற்றம் சாட்டப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாகத் தெரிவித்தார்.

Posted in Annaachi, Annachi, Backgrounders, Biosketch, case, Chain, Developments, Eatery, Faces, Franchise, Franchisee, History, Hotel, Inn, Issues, Jeevajothi, Jeevajothy, Jivajothi, Jivajothy, Judge, Justice, Law, Lawsuit, Order, people, Price, Raajagopal, Rajagopal, Restaurant, Rich, Santhakumar, Saravana, Saravana Bhavan, Saravana Bhawan, Society, Stuff, TN | Leave a Comment »

USS Nimitz loaded with hi-tech weapons to dock off Chennai coast – Issues, Details

Posted by Snapjudge மேல் ஜூலை 1, 2007

எண்ணங்கள்: USS நிமிட்ஸ்: தேவையில்லாத ஆர்பாட்டம்
—————————————————————————————————–

“யுஎஸ்எஸ் நிமிட்ஸ்’-சில சந்தேகங்கள்

டி.எம்.விஸ்வநாதன்

யுஎஸ்எஸ் நிமிட்ஸ் சிவிஎன் 68.. அணு உலைகளைக் கொண்டுள்ள, அமெரிக்காவுக்குச் சொந்தமான, போர் விமானங்களைக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல். அது சென்னை துறைமுகத்துக்கு வரவிருப்பது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சிறிய ரக சாதாரண போர்க்கப்பல்கள் இதற்கு முன்னரும் சென்னை துறைமுகத்துக்கு வந்து சென்றுள்ளன. அப்போதெல்லாம் எந்தவிதப் பிரச்னையும் எழுந்ததில்லை. ஆனால் இப்போது என்ன வந்தது இந்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு? இதுவும் வழக்கம்போல அரசியல்தானா என்ற கேள்வி சாதாரண குடிமகனுக்கு ஏற்படுவது சகஜம்.

ஆனால் இந்த விஷயத்தில் வலுவான எதிர்ப்புக்குரல் கொடுத்து தொடங்கி வைத்த அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா தொடங்கி பாஜக, பாமக விடுதலைச்சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனைத்து தலைவர்களுமே பாராட்டுக்கு உரியவர்கள். காரணம் ஒரு மிகப்பெரிய அபாயத்திற்குத்தான் அவர்கள் தடை போட நினைக்கிறார்கள்.

அப்படி “நிமிட்ஸில்’ என்னதான் அபாயம் உள்ளது? இதற்கு விடைகாணும் முன் நிமிட்ஸ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

செஸ்டர் வில்லியம் நிமிட்ஸ். டெக்சாசின் பிரெடிரிக்ஸ்பர்க் நகரில் பிறந்தவர். அமெரிக்க நாவல் அகாதெமியில் தனது பணியைத் தொடங்கிய இவர் அமெரிக்க கப்பற்படைக்காக மாபெரும் சாதனைகளைப் புரிந்தவர். புகழ்பெற்ற பியேர்ல் ஹார்பர் (டங்ஹழ்ப் ஏஹழ்க்ஷர்ன்ழ்) மீதான தாக்குதல் உட்பட பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் கூட அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தவர் நிமிட்ஸ். சென்னைக்கு வரவிருக்கும் கப்பலுக்கு அவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது.

அதுதான் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலும்கூட. 1972-ம் ஆண்டு மே 13-ம் தேதி துவக்கி வைக்கப்பட்ட நிமிட்ஸ் கப்பல் 1975-ல் தனது முழுநேரப் பணியைத் தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை சர்வதேச கடல் பரப்பில் பல்வேறு இடங்களில் போர்ப்பணியாற்றி வருகிறது.

விமானம் தாங்கிப் போர்க்கப்பலான நிமிட்ஸ் அணு சக்தியால் இயங்கக்கூடியது. இதற்கேற்றார்போல் அதில் இரண்டு மென்நீர் (லைட் வாட்டர்) அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே நிமிட்ஸ் அணுசக்தியால் இயங்கக்கூடிய கப்பல் என்பதுதான் இப்போதைய சர்ச்சைக்கே காரணம். இதே கப்பல் இந்து மகா சமுத்திரத்தில் இதற்கு முன்னர் இரண்டு 3 முறை பயணித்துள்ளது. ஆனால் இந்தியாவின் எந்தத் துறைமுகத்திலும் இது நின்றதில்லை. இப்போது வரவேண்டிய அவசியம் என்ன?

ஹென்றி ஜெ.ஹைட் அமெரிக்க-இந்திய அமைதி அணு சக்தி ஒத்துழைப்புச் சட்டம்- 2006-க்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்து சில மாதங்கள்தான் ஆகின்றன. இந்நிலையில் நிமிட்ஸ் அணுசக்தி கப்பல் இந்தியாவுக்கு அதுவும் சென்னைக்கு வருவதுதான் சந்தேகங்களை அதிகப்படுத்துகின்றன.

சென்னைக்கு மிக அருகில் கல்பாக்கத்தில் நமது அணுசக்தி ஆய்வு உலைகளும் மையங்களும் உள்ளன. மேலும் அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இன்னும் 40 அணுஉலைகள் கூடுதலாக அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

அவ்வாறு அமையும் பட்சத்தில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளத்தில் கூடுதலான அணு உலைகள் அமைய வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் நியூக்ளியர் பார்க் அதாவது அணுசக்தி ஆய்வுகள் சார்ந்த அமைப்புகள் ஒரே கூரையின் கீழ் அல்லது ஒரே இடத்தில் அமைவதுதான் நிர்வாகத்திற்கும் போக்குவரத்துக்கும் எளிதானது என்கிற ரீதியில் தமிழகத்தில் கூடுதல் அணு உலைகள் அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இதற்கேற்றார்போல் அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் இந்திய அரசோ அமெரிக்க அரசோ இரு நாட்டு மக்களுக்கும் தெரியும் வகையில் இதுவரை எந்தவித வெளிப்படையான அணுகுமுறையும் கொண்டிருக்கவில்லை. நமது நாடாளுமன்றத்தில்கூட, தேசத்தின் நலன் சார்ந்த இவ்வளவு பெரிய ஒப்பந்தம் இதுரை விவாதிக்கப்படவே இல்லை.

சரி, நாடாளுமன்றத்திற்கு வெளியே கூட இதுபற்றி வெளிப்படையாக விவாதிக்க சில சிக்கல்கள் உள்ளன. இதற்கு நமது மத்திய அரசு சொல்லும் ஒரே காரணம் தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களைப்பற்றி யாரும் கேள்வி எழுப்பக்கூடாது என்பதுதான். இந்திய அணுசக்தி சட்டம் 1962-ன் 18-வது ஷரத்தானது, “”அணுசக்தி திட்டங்கள் அல்லது திட்டமிடப்பட்டுள்ள அணுசக்தி மையங்கள்பற்றி கடந்தகால, நிகழ்கால, எதிர்காலத் தகவல்களை வெளியிடவோ, கேட்கவோ கூடி விவாதிக்கவோ கூடாது” என்கிறது. எனவேதான் அணுசக்தி தொடர்பான விஷயங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்கள் அடக்கியே வாசிக்கின்றன.

இத்தகைய சூழலில் நிமிட்ஸ் சென்னை துறைமுகத்துக்கு அருகே வர அமெரிக்க அரசும், நமது மத்திய அரசும் இத்தனை பிரம்ம பிரயத்தனங்களை எடுப்பதற்கு காரணம் ஒரு வேளை இந்த கப்பலின் “வருகை’ என்பதே இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்குமோ என்பதுதான் விஷயமறிந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இரு நாடுகளுமே பரஸ்பரம் அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டதோ என்ற மற்றொரு சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

சரி, இவையெல்லாம் ஒருபுறம் இருக்க எத்தகைய பாதிப்புகள் நிமிட்ஸôல் எழும் என்றும் பார்க்கவேண்டியுள்ளது. கப்பல் ஏற்படுத்தலாம் எனக்கருதப்படும் கதிர்வீச்சு அபாயம்தான் மிக முக்கியமான பிரச்னையாக தற்போது எழுப்பப்பட்டு வருகிறது. “”ஒருவேளை கதிர்வீச்சு ஏற்பட்டால்” என்பது அவ்வளவு வலுவான வாதமாகத் தெரியவில்லை. ஏனெனில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அக்கப்பலில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். எனவே அவ்வாறு பாதிப்பு இதுவரை ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. அப்படியானால் என்னதான் பிரச்னை என்ற கேள்வி எழுகிறது.

நிமிட்ஸ் கப்பலில் உள்ள இரண்டு அணு உலைகளும் இயங்க வேண்டுமானால் இயக்கத்தின்போது அந்த அணு உலைகளைக் குளிர்விக்க தண்ணீர் வேண்டும். அது கடலில் இருந்து எடுக்கப்பட்டு அணு உலைகள் குளிர்வித்த பின் மீண்டும் கடலுக்குள்ளேயே விடப்பட்டுவிடும்.

கல்பாக்கம், கூடங்குளம் ஆகியவை ஒரே இடத்தில் இருப்பதால் அந்தப் பகுதி மட்டும்தான் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் நிமிட்ஸ் மெரீனா கடற்கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படுவதால் அந்தப்பகுதி பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்லாமல் கப்பலில் உள்ள அணுஉலைகள் உருவாக்கும் அணுக்கழிவுகளை எங்கே கொண்டுபோய் அவர்கள் கொட்டுகிறார்கள்? தெளிவில்லை. ஒருவேளை கடலுக்குள்ளேயே அவற்றைக் கொட்டினால்? விளைவு…மிகவும் விபரீதமானது. ஏனெனில் அமெரிக்காவில் உள்ள பல அணு உலைகள் உருவாக்கிய டன் கணக்கான அணுக்கழிவுகளையே என்ன செய்வது என்று இன்னமும் அந்நாட்டு அணுசக்திக்கு எதிரான, அணுசக்தி ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு எதிரான கோஷம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில் அந்நாட்டில் இதுபோன்ற விஷப்பரீட்சைகளை அமெரிக்க அரசு செய்ய முடியாத நிலையில் உள்ளது. எனவே அணுக்கழிவுகளை, கட்டாயம் ஆள் இல்லாத நடுக்கடலுக்குள் கொட்டியாக வேண்டிய நிலையில் உள்ளது. இதுதான் மிகவும் அதிர்ச்சியான உண்மை என்கின்றனர் அணுசக்தி எதிர்ப்பாளர்களும் ஆராய்ச்சியாளர்களும்.

அப்படிப்பார்த்தால் சர்வதேச கடல்பரப்பில் எத்தனை இடங்களில் அணுக்கழிவுகளை அமெரிக்கா கடலுக்குள் கொட்டியுள்ளதோ என்று எண்ணிப்பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது.

இத்தகைய கழிவுகள் இப்போதைக்கு உடனே பிரச்னையை ஏற்படுத்தாது. இன்னும் சில ஆண்டுகளில் அல்லது கழிவுகளை கடலுக்குள் பத்திரமாக ஒரு பெட்டியில் போட்டு இறக்கியிருந்தாலும் கூட கடலில் ஏற்படும் புவி மாற்றங்கள் காரணமாக அதில் கசிவு ஏற்பட்டால் முதலில் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகும்.

குறிப்பாக மீன்கள். மீன்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதனை உணவாகக் கொள்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதுதான் எதிர்ப்பாளர்களின் வாதமாக இருக்கிறது. இந்த வாதத்தை புறம் தள்ளிவிட முடியாது. ஏனெனில், கல்பாக்கத்திலேயே அங்குள்ள கடல்பரப்பில் மீன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஆனால் இதனை நமது அணுசக்தித் துறை ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை என்பது வேறு விஷயம்).

மேலும் தமிழகத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக கடற்கரை சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ள பகுதியாகவும் உள்ளது. அத்தகைய தருணங்களில் சென்னைக் கடற்கரையோரம் வந்து நிற்கும் நிமிட்ஸ் தனது கழிவுகளை அந்த இடத்திலேயே கொட்டினால் அது கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் வாயிலாகவோ, அல்லது பேரலைகள் வாயிலாகவோ கடற்கரைக்கு கதிர்வீச்சை ஏன் கொண்டு வராது என்பது மற்றொரு வலுவான வாதமாக உள்ளது.

எனவேதான் பல்வேறு அபாயங்களைக் கருத்தில் கொண்டு நிமிட்சை நமது கடல் எல்லைக்குள் அனுமதிக்காமல் இருப்பது நலம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, கல்பாக்கத்தில் மருத்துவராகப் பணியாற்றிவரும் டாக்டர் புகழேந்தி, “இராக் போரின்போது அமெரிக்காவுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய நாடு ஆஸ்திரேலியா. ஆனால்அந்த நாடே நிமிட்ஸ் கப்பலை தங்கள் நாட்டு எல்லைக்குள் அனுமதிக்கவில்லை. அப்படி என்றால் அந்த நாட்டு அரசுக்கும் கப்பற்படை அதிகாரிகளுக்கும் நிமிட்ஸ் கப்பலின் உண்மையான முகம் தெரிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். ஏன் ஆஸ்திரேலியா இக்கப்பலை அனுமதிக்கவில்லை? நாம் ஏன் அனுமதிக்கிறோம்? இதற்கு விடை கண்டாலே விஷயம் புரிந்துவிடும்” என்றார்.

மொத்தத்தில் “நிமிட்ஸ்’ நிமிடத்துக்கு நிமிடம் நமது மக்களின் ஆரோக்கியத்துக்கு உலை வைக்காமல் இருந்தால் சரி.

———————————————————————————————————

யு.எஸ். கப்பலால் அணுக் கதிர்வீச்சு ஏற்படுமா?: 3 இடங்களில் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு – டி.ஆர்.டி.ஓ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத் தலைவர் ஏ.ஆர். ரெட்டி தகவல்
சென்னை, ஜூலை 1: சென்னை துறைமுகத்துக்கு ஜூலை 2-ம் தேதி வரவுள்ள “யு.எஸ்.எஸ். நிமிட்ஸ்’ கப்பலில் இருந்து அணுக் கதிர்வீச்சு வெளியாகிறதா என்பதை மூன்று இடங்களில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத் தலைவர் டாக்டர் ஏஆர். ரெட்டி தெரிவித்தார்.

சென்னை வரவுள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பல் “நிமிட்ஸ்’ குறித்து சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியது:

“நிமிட்ஸ்’ கப்பலில் இருந்து கதிரிவீச்சு வெளியாகிறதா என்பதைக் கண்காணிக்க, அந்தக் கப்பலைச் சுற்றி ரோந்து கப்பல் ஒன்று பணியில் ஈடுபடுத்தப்படும். துறைமுகத்தில் இருந்தபடியும் ஒரு குழு கப்பலைக் கண்காணிக்கும். மேலும் இரண்டு மொபைல் ஆராய்ச்சிக் கூடங்கள் கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இதோடு மண், நீர், காற்று, உணவு ஆகியவற்றிலும் கதிர்வச்சு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தச் சோதனை கப்பல் வருவதற்கு முன், கப்பல் வந்தபின் மற்றும் கப்பல் சென்றபின் என மூன்று முறை நடத்தப்படும்.

“நிமிட்ஸ்’ கப்பல் நிற்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு வேறு கப்பலோ, படகுகளோ அனுமதிக்கப்படாது.

இந்தக் கப்பலில் 190 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. இது கப்பலை இயக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கல்பாக்கத்தில் 220 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் குடியிருப்புகள் உள்ளன. இதனால் எந்த பாதிப்பு ஏற்பட்டதில்லை.

“நிமிட்ஸ்’ கப்பல் துறைமுகத்திலிருந்து 3.7 கிலோ மீட்டர் (இரண்டு கடல் மைல்கள்) தொலைவில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது. இதுவரை 10 வெளிநாட்டு அணு ஆயுதப் போர் கப்பல்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்தக் கப்பல்களால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்றார் அவர். தமிழ்நாடு கப்பல்படை அலுவலர் (பொறுப்பு) வான் ஹால்டன் கூறியது: ஜூலை 2-ம் தேதி வரும் இந்தக் கப்பலில் 450 உயர் அதிகாரிகளும், 5,000 ஊழியர்களும் உள்ளனர். இந்தக் கப்பல் 5-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது.

அரசு அனுமதியின் பேரிலேயே இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வருகிறது. போதுமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

————————————————————————————————-

அமெரிக்க கப்பலில் வந்த போர் வீரர்கள் சமூக சேவை- சென்னை பள்ளியில் குப்பையை அள்ளினார்கள்

சென்னை, ஜுலை. 2-

அமெரிக்கா போர் கப்பல் சென்னை வந்தது. அவர்கள் கடற்கரை ஓட்டல்களில் உல்லாசமாக பொழுதை கழிக்கிறார்கள்.

அமெரிக்காவின் மிகப் பெரிய விமானத்தாங்கி கப்பலான நிமிட்ஸ் வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத் துடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா புறப்பட்டுள்ளது. இதன் பயண திட்டத்தில் சென்னையும் இடம் பெற்று இருந்தது.

இந்த கப்பல் அணுசக்தி மூலம் இயங்க கூடியது. எனவே அணு கசிவு ஆபத்து ஏற்படலாம் என்பதால் சென்னை வர எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் மத்திய அரசு அனுமதித்ததன் மூலம் திட்டமிட்டபடி இன்று காலை 6 மணிக்கு சென்னை வந்தது.

தற்போது சென்னை மெரீனா கடற்கரைக்கு கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் அது நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் கப்பல் பணியாளர் கள், அதிகாரிகள் உள்பட 6 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் சென்னை நகருக்குள் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

இன்செட் வரும் உல்லாசம்

அவர்கள் உல்லாசமாக பொழுதை போக்கி மகிழ்வ தற்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைவரும் படகு மூலம் சென்னை துறை முகத்துக்கு அழைத்து வரப்படு கிறார்கள். முதல் படகு இன்று காலை கரைக்கு வந்தது.

இரவில் அனைவரும் சென்னை ஓட்டல்களில் தங்கு கின்றனர். இதற்காக முக்கிய ஸ்டார் ஓட்டல்கள் சென்னை யில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் அவர்களுக்காக “புக்” செய்யப்பட்டுள்ளன. அங்கு அமெரிக்க சுதந்திர தின விழாவை கொண் டாடுகிறார்கள். அப்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியை அனுபவிக்கும் அதே நேரத்தில் அவர்கள் பல்வேறு சமூக சேவை பணி களிலும் ஈடுபடுகின்றனர். அனாதை இல்லம், மன நல காப்பகம் போன்றவற்றுக்கு சென்று உதவி செய்கிறார்கள்.

நிமிட்ஸ் போர் கப்பல் அணுசக்தி மூலம் இயக்குவதால் அதில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கசிவு ஏற்பட்டால் சென்னை நகரமே அழிந்து போகும் அளவுக்கு ஆபத்தானகும்.

எனவே அணு கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா என் பதை கண்காணிக்க இந்திய அணு விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்திய போர் கப்பல் மூலம் அந்த பகுதிக்கு சென் றுள்ளனர். நிமிட்ஸ் கப்பல் அருகே இந்திய கப்பல் முகா மிட்டுள்ளது. அணு கசிவை கண்டு பிடிக்கும் கருவி அதில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் 24 மணி நேரமும் கண் காணிப்பார்கள். 5-ந்தேதி அமெரிக்க கப்பல் புறப்பட்டு செல்கிறது. அதுவரை விஞ்ஞானிகள் அங்கேயே தங்கி இருப்பார்கள்.

அதே போல 2 வேன்களில் விஞ்ஞானிகள் குழு கடற்கரை யில் சுற்றி வரும். அவர்களும் கருவி மூலம் அணு கசிவை கண்காணிப்பார்கள்.

பொதுவாக அணுசக்தி கப்பலை கடற்கரையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் நிறுத்துவது வழக்கம். ஆனால் சென்னையில் 3 கிலோ மீட் டருக்கு அப்பால் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி துறை பாதுகாப்பு தலைமை அதிகாரி ஏ.கே.ரெட்டி கூறினார்.

கப்பலில் அணு ஆயுதம் எதுவும் எடுத்து செல்லவில்லை என்று அமெரிக்க ராணுவ அதி காரிகள் தெரிவித்தனர்.

இந்த கப்பல் 4 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1092 அடி நீளம், 252 அடி அகலம் உள்ளது. 23 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 65 போர் விமானங்கள் உள்ளன. இவற்றுடன் வீரர்கள் பயணம் செய்யும் விமானம், ஆபத்து நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவையும் உள்ளன. 30 வினாடியில் ஒரு விமானம் கப்பலில் இருந்து புறப்படும் அளவுக்கு வசதி உள்ளது.

1975-ம் ஆண்டு மே 3-ந் தேதி இந்த கப்பல் கட்டி முடிக் கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. 32 வருடமாக பணியில் இருக்கிறது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் பசிபிக் கடல் பகுதி ராணுவ கமாண்டராக இருந்து பெரும் சாதனை புரிந்த ஜெஸ்டர் நிமிட்ஸ் பெயர் இந்த கப்ப லுக்கு சூட்டப்பட்டது.

கப்பலில் 53 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி உள் ளது. அதில் 6 டாக்டர்கள் பணி யாற்றுகிறார்கள். தனியாக 5 பல் டாக்டர்களும் இருக்கின்றனர். இதில் முகமது கமிஸ் என்ற இந்திய வம்சாவளி டாக்டரும் பணியாற்றுகிறார்.

கடல் நீரை நல்ல நீராக மாற்றி பயன்படுத்த அதற்கான தனி தொழிற்கூடம் உள்ளது. இவற்றின் மூலம் தினமும் 4 லட்சம் காலன் நல்ல தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை வீரர்களின் தேவைக் கும் மற்ற பணிகளுக்கும் பயன் படுத்தப்படுகிறது.

உணவு பொருட்களை 70 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகளும் உள்ளன.

கப்பலிலேயே தனி தபால் நிலையம் உள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் கடிதங்களை இது கையாள்கிறது. தினமும் தபால் நிலைய கடிதங்களை பட்டுவாடா செய்யும். இதற்காக தினமும் வேறு கப்பல்கள் மூலமாகவோ அல்லது விமானங்கள் மூலமாகவோ இங்கு கடிதங்கள் கொண்டு வரப்படும்.

வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் வழிபாடு நடத்துவதற்காக 3 வழிபாட்டு தலங்களும் கப்பலில் உள் ளன.

கப்பலில் தேவைக்கு மேல் 50 சதவீதம் ஆயுதங்களை வைத்து கொள்ளவும், விமா னங்களுக்கு தேவையான 2 மடங்கு எரி பொருளை சேமித்து வைக்கவும் வசதி உள்ளது. விமானங்களை உள் பகுதிக்குள் கொண்டு சென்று பழுது பார்க்கும் தனி ஒர்க்ஷாப் உள்ளது.

தனி உணவு கூடம், மாநாட்டு அறை, பொழுது போக்கு கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. மொத்தத் தில் ஒரு சிறிய நகரத்தில் உள்ள அத்தனை வசதிகளும் உள்ளன. இந்த கப்பலை மிதக்கும் நகரம் என்று அழைக்கின்றனர்.

————————————————-
அணுவிசைக் கப்பல்கள்

என். ராமதுரை

அண்மையில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் “நிமிட்ஸ்’ சில நாள்கள் சென்னை துறைமுகம் அருகே நங்கூரம் பாய்ச்சி நின்றது. அது அணுவிசையால் இயங்குவதால் அக்கப்பலை சென்னை துறைமுகத்தில் அனுமதிக்கலாகாது என்று சில வட்டாரங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

விமானம் தாங்கிக் கப்பல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று டீசலில் இயங்குவது. இரண்டாவது வகை அணுவிசையில் இயங்குவது. உலகில் இப்போதைக்கு அமெரிக்காவிடம் மட்டுமே அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன.

பிரான்ஸ் இப்போதுதான் அணுசக்தியால் இயங்குகிற விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இவ்வகையான கப்பலை உருவாக்க சுமார் 7 ஆண்டுகள் பிடிக்கும். நிமிட்ஸ் கப்பலை உருவாக்க ஆன செலவு ரூ. 18,000 கோடி. அமெரிக்காவிடம் அணுவிசையில் இயங்கும் 11 விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன.

வடிவில் மிகப் பெரியதான இவ்வகைக் கப்பல் மெதுவாகச் செல்லக்கூடியது. எதிரி நாடு ஒன்று தாக்க முற்பட்டால் இக் கப்பலினால் எளிதில் அத் தாக்குதலிலிருந்து தப்ப இயலாது. ஆகவேதான் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுடன் அதற்குக் காவலாக போர்க்கப்பல்கள் செல்லும். மிக நவீன ஏவுகணைகள் வந்துவிட்ட இந்த நாள்களில் விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டிக் காப்பது எளிது அல்ல.

அமெரிக்காவிடம், வானிலிருந்து இரவு பகலாகத் தொடர்ந்து கண்காணிக்க வேவு செயற்கைக் கோள்கள் உள்ளன. எதிரி நாட்டின் கப்பல்களை மற்றும் நீர்மூழ்கிகளை அமெரிக்காவால் எளிதில் கண்காணிக்க இயலும். எதிரி விமானங்கள் விஷயத்திலும் இது பொருந்தும். எதிரி நாடு செலுத்தக்கூடிய ஏவுகணைகளை எதிர்கொண்டு நடுவானில் அவற்றை அழிப்பதற்கான ஏவுகணைகளும் அமெரிக்காவிடம் உள்ளன.

உலகின் எந்த நாடாக இருந்தாலும், அந்த நாட்டுக்கு அருகே அணுவிசை விமானம் தாங்கிக் கப்பலை நிறுத்தி, அந்த நாட்டின் மீது கடும் விமானத்தாக்குதலை நடத்துவதற்கு இக்கப்பல் நன்கு உதவும். ஆப்கன் போர், முதல் இராக் போர், இரண்டாம் இராக் போர் ஆகியவற்றின்போது அமெரிக்காவின் இவ்வகைக் கப்பல்கள் முக்கியப் பங்கு பெற்றிருந்தன.

இந்தக் கப்பலை நடமாடும் ராணுவ விமானத் தளம் என்றும் சொல்லலாம். மேல் தளத்தில் நிறைய போர் விமானங்களை நிறுத்த இடம் இருக்கும்; ஓடுபாதையும் இருக்கும். விமானம் தாங்கிக் கப்பலில் நீண்ட ஓடுபாதை அமைக்க முடியாது. ஆகவே “கேட்டபுல்ட்’ மாதிரியில் ஓர் ஏற்பாடு உள்ளது. போர் விமானம் எடுத்த எடுப்பில் 300 கிலோ மீட்டர் வேகம் பெற இது உதவுகிறது.

எல்லாக் காலங்களிலும் விமானங்கள் மேல் தளத்தில் நிறுத்தப்பட மாட்டா. லிப்ட் மூலம் உட்புறத்தில் அமைந்த கீழ் தளங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே நிறுத்தி வைக்கப்படும். தேவையான போது மேல் தளத்துக்குக் கொண்டு வரப்படும்.

சாதாரண விமானம் தாங்கிக் கப்பலில் அடிக்கடி டீசலை நிரப்பிக் கொண்டாக வேண்டும்.

அணுவிசை விமானம் தாங்கிக் கப்பலுக்கு எரிபொருள் பிரச்னையே கிடையாது. அக்கப்பலில் உள்ள அணு உலையானது, தொடர்ந்து பல ஆண்டுகளுக்குக் கப்பல் இயங்குவதற்கான ஆற்றலை அளித்துக் கொண்டிருக்கும். உதாரணமாக நிமிட்ஸ் கப்பல் 1975 ஆம் ஆண்டில் செயலுக்கு வந்தது. புதிதாக எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் இன்றி அது 23 ஆண்டுகாலம் தொடர்ந்து செயல்பட்டது. 1998 வாக்கில் புதிதாக எரிபொருள் நிரப்பப்பட்டது. இனி அது மேலும் சுமார் 25 ஆண்டுகள் செயல்பட்டு வரும்.

இவ்விதக் கப்பலின் அணு உலையில் மிகுந்த செறிவேற்றப்பட்ட யுரேனியம் பல குழல்களில் நிரப்பப்படும். பின்னர் கட்டுகட்டாகப் பல குழல்கள் அருகருகே வைக்கப்பட்டிருக்கும். (செறிவேற்றப்பட்ட யுரேனியம் என்பது குறிப்பிட்ட வகை யுரேனிய அணுக்கள் மிகுதியாக உள்ள யுரேனியமாகும்). யுரேனியம், இயல்பாக நியூட்ரான்களை வெளிப்படுத்தும். இந்த நியூட்ரான்கள் அருகில் உள்ள குழல்களில் அடங்கிய இதர யுரேனிய அணுக்களைத் தாக்கும்போது மேலும் நியூட்ரான்கள் வெளிப்பட்டு மிகுந்த வெப்பம் தோன்றும். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி தோற்றுவிக்கப்படும். இந்த நீராவியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அந்த மின்சாரம் கப்பலின் அடிப்புறத்தில் உள்ள ராட்சத சுழலிகளைச் சுழல வைக்கும்போது கப்பல் நகரும்.

ஒருவகையில் இது அந்தக் காலத்தில் நிலக்கரியைப் பயன்படுத்திய ரயில் என்ஜின் நீராவியால் இயங்கியதைப் போன்றதே ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் கப்பல்கள் அனைத்துமே நிலக்கரி மூலம் இயங்கின. பின்னர் கப்பல்களை இயக்க ராட்சத டீசல் என்ஜின்கள் வந்தன. ஆனால் விமானம் தாங்கிக் கப்பல்களைப் பொருத்தவரையில் அவை மறுபடி நீராவிக்கே வந்துள்ளன. ஒரு முக்கிய வித்தியாசம் – நீராவியைத் தயாரிக்க செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. விமானம் தாங்கிக் கப்பலின் அணு உலைகளில் எவ்வளவு செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது என்பது மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

எந்த ஓர் அணுசக்திப் பொருளிலிருந்தும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய கதிரியக்கம் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். விமானம் தாங்கிக் கப்பல்கள், அணுவிசை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றில் பணியாற்றும் மாலுமிகள் பாதிக்கப்படாதபடி, இவற்றில் அடங்கிய அணு உலைகளிலிருந்து கதிரியக்கம் வெளியே வராதபடி தடுக்க அணு உலையைச் சுற்றிக் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உண்டு.

அணுவிசையில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் உள்ளன.

இந்தியாவிடம் உள்ள இரு விமானம் தாங்கிக் கப்பல்களும் வெளிநாடுகளிடமிருந்து வாங்கப்பட்டவையே. இவை டீசலில் இயங்குபவை. இந்தியா இப்போது இதே மாதிரியில் சொந்தமாக விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டுவதில் ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில் அணுவிசையில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதற்கு ஆயத்தங்கள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்.)

Posted in ADMK, Aircraft, Arms, Atom, Attack, Backgrounders, Ban, Boat, carrier, Coast, Communists, defence, Defense, Details, energy, Fighter, Foreign, Fuel, Govt, Gulf, Harbor, Harbour, International, Iran, Iraq, Issues, Jets, Madras, Navy, Nimitz, Nuclear, Ocean, Pakistan, Party, Politics, Protest, Sea, Ship, Spy, Submarines, Terrorism, US, USA, USS Nimitz, Vessel, warship, Weapons, World | 1 Comment »

State of Tamil Nadu Congress Party – Internal Politics

Posted by Snapjudge மேல் ஜூன் 15, 2007

காங்கிரஸில் மேலும் ஒரு புதிய கோஷ்டி

சென்னை, ஜூன் 16: ஏற்கெனவே பல்வேறு கோஷ்டிகள் நிறைந்து காணப்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு புதிய அணி உதயம் ஆகிறது.

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் இந்த அணியை உருவாக்கும் தீவிர முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வெள்ளிக்கிழமை இறங்கினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில்

  • மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தலைமையிலான பழைய த.மா.கா. அணி,
  • கட்சியின் மாநிலத் தலைவர் எம். கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் அணி,
  • மத்திய அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அணி,
  • முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர். பிரபு,
  • கே.வீ. தங்கபாலு,
  • ஜெயந்தி நடராஜன் போன்றவர்களின் தலைமையிலான அணிகள் என்று பல அணிகள் இயங்கி வருகின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை: மாநிலங்களவைத் தேர்தல், மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியைக் கட்சியின் அகில இந்திய மேலிடம் சமீபத்தில் மேற்கொண்டது.

அப்போது இந்தக் கோஷ்டிப் பூசல் பூதாகாரமாக விசுவரூபம் எடுத்தது. வாசனின் ஆதரவாளர்களை வேட்பாளர்களாக மேலிடம் தேர்வு செய்துவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் இதர அணிகள் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. போளூர் வரதனின் தலைமையில் ஒன்றுபட்டன. ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தின. வாசன் அணிக்கு எதிராக மேலிடத்தில் புகார்களைத் தெரிவித்தன.

ஆனால், இறுதியில் வாசனின் “கை’யே ஓங்கியது. மாநிலங்களவைத் தேர்தலிலும், மதுரை மேற்கு இடைத் தேர்தலிலும் வாசனின் தீவிர ஆதரவாளர்களுக்கே மேலிடம் வாய்ப்பு அளித்தது.

கட்சிக் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டும், மேலிடத்தின் அறிவுரையை ஏற்றும், வாசன் அணிக்கு எதிரான அணிகளைச் சேர்ந்தவர்கள் தற்போது மதுரை மேற்குத் தொகுதியில் முகாமிட்டு, பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

காமராஜர் இல்லம் அருகே…: இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் காமராஜரின் இல்லத்துக்கு அருகே உள்ள ஓட்டலில் கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் புதிய அணியின் மதிய விருந்து -ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  • மூத்த நிர்வாகி தமிழருவி மணியன்,
  • மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன்,
  • சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் கே.எஸ்.அழகிரி,
  • வி.ராஜசேகரன்,
  • சட்டப் பேரவை உறுப்பினர்கள் திருவாடானை கே.ஆர்.ராமசாமி,
  • காரைக்குடி சுந்தரம்,
  • முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஆ. கோபண்ணா,
  • கிருஷ்ணசாமி வாண்டையார்,
  • சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர். தியாகராஜன் உள்ளிட்ட 20 முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Posted in Analysis, Backgrounders, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Divisions, Elangovan, Elankovan, Elections, Faction, Fights, Ilangovan, Ilankovan, Internal, Jayanthi, Jayanthy, Jeyanthi, Jeyanthy, Kaarthi, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Karthi, Krishnasaamy, Krishnasami, Krishnasamy, Krishnaswamy, Leaders, Madurai, Manmohan, Members, MLAs, MPs, Party, PC, Petty, PMK, Politics, Polls, Sonia, Thangabaalu, Thangabalu, Thankabalu, TMC | Leave a Comment »

Madurai West Assembly by-poll: By-election details, campaign strategies, developments

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

ஒரே நாளில் 6 அலுவலர்கள் மாற்றம் ஏன்?

மதுரை, ஜூன் 14 இடைத்தேர்தலுக்காக உயர் அதிகாரிகள் 6 பேர் ஒரே நாளில் மாறுதல் செய்யப்படுவது தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை.

மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான புகார், விதிமீறல்கள் காரணமாக மாவட்ட ஆட்சியர் எஸ்.எஸ். ஜவஹர், மாநகர் காவல்துறை ஆணையர் ஏ. சுப்பிரமணியன், தொகுதி தேர்தல் அலுவலரான கோட்டாட்சியர் அ. நாராயணமூர்த்தி, காவல்துறை துணை ஆணையர் ஆர். ராம்ராஜன், தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.டி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் எம். ராஜேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் முன்பு மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றபோது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் உதவி ஆணையர்கள் எஸ். குமாரவேலு, என். ராஜேந்திரன் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

ஆனால், தற்போது நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின் போது உயர் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக புகார்: தேர்தல் ஆணையப் பார்வையாளர் அஜய் தியாகியிடம் அதிமுக கொடுத்த புகாரில்,” இடைத்தேர்தலின்போது காவல் மற்றும் வருவாய்த் துறையினர் உதவியுடன், திமுகவினர் வன்முறை, விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வரின் மகன் மு.க. அழகிரியின் தேர்தல் பிரசாரத்துக்கு சுழல்விளக்குடன் கூடிய காரில் போலீஸôர் பாதுகாப்புக்குச் செல்கின்றனர்.

மேலும் எங்களுக்குக் கிடைத்த தகவல்படி இத் தேர்தலில் வன்முறையைத் தூண்டவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆளும் கட்சிக்கு துணைபோகும் அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்தப் புகார் மனுவில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தேர்தல் அதிகாரி ஆகியோர் பெயர்கள் இல்லை.

ஆனால், மதுரை மாநகராட்சி ஆணையர் டி.ஜே. தினகரனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இந்த மாறுதல் பட்டியலில் மாநகராட்சி ஆணையர் பெயர் இடம்பெறவில்லை.

வேட்புமனுத் தாக்கலின்போது விதிமீறல் : மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் கடந்த 8-ம் தேதி மனுத் தாக்கல் செய்ய வந்தபோது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் விதிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக முதல்வரின் மகன் மு.க. அழகிரி மற்றும் அவருடன் வந்த பிரமுகர்கள் ஏராளமான கார்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அதிமுக மட்டுமன்றி பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் புகார் தெரிவித்தன. இது அரசு அலுவலர்களின் பணி இட மாறுதலுக்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது.

அரசு அலுவலர்கள் கருத்து : உயர் அதிகாரிகளின் பணியிட மாற்றம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தேர்தல் விதிமீறல் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்ட 30 பேர் மீதும், தேமுதிக வேட்பாளர் உள்ளிட்ட 350 பேர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் தொடர்பாக 450 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் அலுவலர்களை மாற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது’ என்றனர்.

Posted in ADMK, Alagiri, Alakiri, Analysis, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Backgrounders, By-election, by-poll, Campaign, Details, Developments, DMDK, DMK, Elections, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeya TV, Jeyalalitha, JJ, Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Madurai, Madurai West, News, Polls, Predictions, Primer, Strategy, Transfers, Vijaiganth, Vijaikanth, Vijaya T Rajendar, Vijayaganth, Win, Winners | 5 Comments »

Foreign Instituitional Investors – Lucrative opportunities in Emerging Indian markets & sectors

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

முதலீடுகளுக்கு காத்திருக்கும் தொழில்கள்

எஸ். கோபாலகிருஷ்ணன்

சமீபகாலத்தில், பங்குச்சந்தை ஏறினாலும் இறங்கினாலும் எஃப்.ஐ.ஐ.கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இவர்கள் யார்? “ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டார்ஸ்’ என்பதன் சுருக்கம்தான் ஊஐஐ. அதாவது அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்.

இந்த நிறுவன முதலீட்டாளர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் நாட்டில் உள்ளவர்களிடமிருந்து பணம் திரட்டி, அதை எந்த நாட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தேடித் திரிபவர்கள்.

அந்தவகையில், இந்திய பங்குச் சந்தையில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் பங்குகளை வாங்கினால், விலை ஏறுகிறது. விற்றால் விலை குறைகிறது.

இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதன்முதலாக 1994-ல் தான் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. அது முதல் 2005-ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து, எழுபது ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் அதிகம் என்று சொல்லத் தேவையில்லை.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய 500 இந்திய நிறுவனங்களில் அன்னிய நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இது மும்பை பங்குச் சந்தையின் பெரிய 500 நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 35 சதவீதம். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எஃப்.ஐ.ஐ.களிடம் உள்ளது!

ஜனவரி 2007 வரையிலான கணக்குப்படி, 1059 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. எனினும், எச்.எஸ்.பி.சி. மார்கன் ஸ்டான்லி, மெரில் விஞ்ச், கோல்ட்மென் சாக்ஸ், சிட்டி வங்கி போன்றவை தான் முதலீடு செய்வதில் முன்னணியில் உள்ளன. உலகநாடுகள் என்று பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்நிறுவனங்கள் ஏன் இந்தியாவைத் தேடி வருகின்றன? மேலை நாடுகளின் பொருளாதாரம் ஏற்கெனவே நன்கு வளர்ந்துவிட்டது. அதனால், அங்கு முதலீடு செய்யும் பணம், மேலும் பெரிய வளர்ச்சி காண முடியாது. அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்த வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு வந்து கடை விரிக்கின்றன.

அவர்கள் முதலீடு செய்வது பங்குச் சந்தையில்தான். ஆகஸ்ட் 2005-ல் பங்குச் சந்தை குறியீடு எண் (சென்செக்ஸ்) 7816 ஆக இருந்தது. டிசம்பர் 2005-ல் 9020 புள்ளிகளாக உயர்ந்தது. இது 17 சதவீத வளர்ச்சி. மே 2006-ல் 12 ஆயிரம் என்னும் மகத்தான உயரத்தை எட்டியது. இப்போது – அதாவது ஓர் ஆண்டில் – 14,500க்குப் பக்கத்தில் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த வெற்றிக்கதை தொடர்ந்தால் அந்நிறுவனங்கள் இங்கு நிலைகொண்டிருக்கும். தொடராதபட்சத்தில், “”அற்ற குளத்து அருநீர் பறவை” போல் பறந்து போய்விடும். ஆக, இந்த முதலீடுகளால், நம் நாட்டு தொழில்களுக்குக் கிடைத்தது என்ன? எத்தனை ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது?

இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம், வேறு ஒரு தளத்தில் அன்னிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஏராளமான அன்னிய நேரடி முதலீடுகள் செய்கிறார்கள். சுருக்கமாக எஃப்.டி.ஐ. என்கிறோம். பல்வேறு தொழில் துறைகளில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள். இவர்கள் கதை என்ன?

அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில், ஆதஐஇ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உலக அளவில் மிகப்பெரிய நாடுகளாக வளர்ந்து விடும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவின் பல்வேறு தொழில்களுக்கு வரத் தொடங்கியுள்ளன.

அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சில நியதிகளையும், உச்ச வரம்புகளையும் விதித்துள்ளது. உதாரணமாக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகபட்சம் இவ்வளவு சதவீதம்தான் முதலீடு செய்யலாம் என்று உள்ளது. சில துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.

கடந்த 16 ஆண்டுகளாக, அதாவது பொருளாதார சீர்திருத்தம் அறிமுகமானது முதல், அன்னிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், எந்தத் தொழிலில் முதலீடு வந்தால் நமது தொழில் வளம் பெறுமோ, நமக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டுமோ அந்தத் துறைகளில் அன்னிய முதலீடுகள் கணிசமான அளவில் வருவதில்லை.

மாறாக, எந்தத் துறைகளில் முதலீடு செய்தால், உள்நாட்டில் விற்பனை அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பெருகி உடனடி லாபம் காண முடியுமோ அந்தத் துறைகளில்தான் அன்னிய நேரடி முதலீடு வருகிறது.

உதாரணமாக, மோட்டார் வாகனத் தொழில், தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவை. 1991 முதல் 2007 மார்ச் வரை இந்தியா பெற்றுள்ள அன்னிய நேரடி முதலீடு 55 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இதில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 பில்லியன் டாலர் இந்தியாவுக்குள் எப்.டி.ஐ. ஆக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளத்தக்கதும்கூட.

ஆனால், கவலையளிப்பது என்னவெனில், இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிலுக்கு இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அன்னிய நேரடி முதலீடு வெறும் ஆறு கோடி டாலர்தான். இது ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 0.12 சதவீதம்தான். இந்த தோல் தொழிலை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன.

இந்தியாவின் இன்னொரு முக்கியமான பாரம்பரியத் தொழில் ஜவுளி. எட்டு கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் இத் தொழிலை நம்பி உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் ஜவுளியே. இந்த மாபெரும் தொழில் ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 57 கோடியே 50 லட்சம் டாலர்தான். அதாவது மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 1.22 சதவீதமே.

சரி, அப்படியானால் இதுவரை வந்துள்ள அன்னிய முதலீடுகள் எங்கே போகின்றன? மின்சாரக் கருவிகள் சார்ந்த தொழிலுக்கு 800 கோடி 27 லட்சம் டாலர்கள். அதாவது மொத்த முதலீட்டில் 15 சதவீதம்.

அடுத்து, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட சேவைத்துறைக்கு 700 கோடி, 84 லட்சம் டாலர் (14 சதவீதம்); மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தொலைத்தொடர்பு 3 கோடி, 89 லட்சம் டாலர். (7.12 சதவீதம்).

ஆக, தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள துறைகளுக்கு மட்டுமே அன்னிய நேரடி முதலீடு கணிசமாகக் கிடைத்துள்ளது. சீனாவும், தைவானும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் துறைகளான ஜவுளி போன்றவற்றில் அதிக முதலீட்டின் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, சந்தையில் போட்டியிட்டு இந்தியாவை ஓரம் கட்ட முடிகிறது.

இன்னொருபக்கம், வங்கதேசம் தங்கள் நாட்டில் ஊழியர்களுக்கான ஊதியம் மிகக் குறைவு என்று பறைசாற்றி, இதே ஜவுளி மற்றும் தோல்துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டியுள்ளது.

இந்நிலையில் கோட்டா முறை ஒழிந்த பின்னரும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா தனது நியாயமான பங்கைப் பெற இயலவில்லை. இந்தியாவின் இதர துறைகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது ஜவுளித்துறை ஏற்றுமதி குறைவே.

தற்போது ஜவுளித்துறையில் கிடைக்கும் உள்நாட்டு முதலீடுகள் கூட “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் வாயிலாகவே என்றால் மிகை ஆகாது.

இந்நிலையில், நடப்பாண்டில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டுவதற்கான இலக்கு 30 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இலக்கை கடந்த ஆண்டைப்போல் இரண்டு மடங்காக உயர்த்தினால் மட்டும் போதாது.

கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஜவுளி மற்றும் தோல் தொழில்களில் கூடுதல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அதிகபட்ச முனைப்பு காட்டி, முதலீடுகளுக்காக காத்திருக்கும் – தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள – இத் துறைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது

மேலாளர்.)

Posted in Analysis, Auto, Backgrounders, Bonds, Brazil, BRIC, BSE, Bus, Cars, China, Defaltion, Deflation, Diversify, ECE, Economy, EEE, Electrical, Electronics, Emerging, Employment, Exchanges, Exports, FDI, FEMA, FERA, FII, Finance, Funds, GDP, Globalization, Growth, Imports, Index, Industry, Inflation, InfoTech, Instrumentation, investments, job, Leather, Luxury, Manufacturing, markets, Metro, MNC, Model, Motors, NIFTY, NSE, Op-Ed, Opportunities, Options, Outsourcing, pension, Primers, Recession, Retirement, revenue, Risk, Russia, sectors, service, Shares, Stagflation, Stats, Stocks, Taiwan, Tech, Technology, Telecom, Textiles, Trucks | Leave a Comment »

Protecting the farmlands for Food Consumption – Environment, Ethanol, Ethics

Posted by Snapjudge மேல் மே 10, 2007

உணவு தானியத்துக்குப் பாதுகாப்பு

மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. எனவே அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில் அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உற்பத்திப் பொருளுக்குக் கட்டுபடியாகாத விலை, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, வேலைக்குப் போதிய தொழிலாளர்கள் கிடைக்காமை போன்ற காரணங்களால் குறுகிய கால பயிர் அல்லது செலவை ஈடுகட்டும் அளவுக்காவது வருமானம் அளிக்கும் பணப் பயிர்கள் மீது விவசாயிகளின் நாட்டம் அதிகரித்து வருகிறது. பயிர் செய்துவிட்டு காத்திருந்து இயற்கையுடன் போராடி இறுதியில் போட்ட முதலுக்கு ஆதாயம் கிடைக்குமா என்ற நிச்சயமற்ற நிலை காரணமாக வேளாண் துறையில் நுழைய இளைய சமுதாயம் தயக்கம் காட்டுகிறது. இதனால் இப்போது வேளாண்மையில் ஈடுபட்டுள்ளவர்களை நம்பியே எதிர்கால உணவு உற்பத்தி உள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக தாவரங்களிலிருந்து எரிபொருள் பெறுவதற்கான திட்டத்தை அமல்படுத்த உலகம் முழுவதும் முழுவீச்சில் இயக்கம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் காரணமாகக் காடுகள் அழிக்கப்படும். சிறு விவசாயிகள் உணவுதானிய சாகுபடியைக் கைவிட்டுவிடுவார்கள். நிலைமையைச் சரியாகக் கையாளவில்லை என்றால் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும், வறுமை தலைதூக்கும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமாயில், மக்காச்சோளம், கரும்பு, சோயா, ஆமணக்கு போன்ற பயிர்கள் மீது விவசாயிகளின் கவனம் திரும்பியுள்ளது.

உலக வெப்ப நிலை மாறுதலால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க எரிபொருளுக்காக இந்தத் தாவரங்கள் பெருமளவு பயிரிடப்பட வேண்டும் என்று பணக்கார நாடுகள் விரும்புகின்றன. அவற்றின் உற்பத்தி கச்சா எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமன்றி புதிய சந்தையையும் ஏற்படுத்தும். ஏழைகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு நல்ல விலையைப் பெற்றுத் தரும் என்பது அவர்களின் கருத்து. மாற்று எரிபொருள் மூலம் உலக எரிபொருள் தேவையில் 20 ஆண்டுகளில் 25 சதவீதத்தை நிறைவு செய்துவிட முடியும் என்றும் கணித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் பயிரான மக்காச் சோளத்தில் பெருமளவு எரிபொருள் தயாரிக்க அனுப்பப்பட்டது. பிரேசில், சீனா ஆகியன 5 கோடி ஏக்கரில் இப் பயிரைச் சாகுபடி செய்கின்றன. 2020க்குள் மொத்த எரிபொருள் உற்பத்தியில் 10 சதவீதம் தாவரங்களிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் குறிப்பிட்டுள்ளது. இது பெட்ரோல், டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும்போது வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையினால் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாகக் குறையும்.

மேலும் இதன் காரணமாக பெட்ரோலியப் பொருள்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அது ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் ஏற்கெனவே சமையல் எண்ணெய்க்காக பாமாயில் உற்பத்திக்கு காடுகள் அழிக்கப்படுவதால் பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு அது எதிர்பாராத ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பது சுற்றுச்சூழல் நிபுணர்களின் கருத்தாகும். மேலும் இதனால் வன விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படலாம்.

மேலும் எரிபொருளுக்காக காடுகளை அழிக்கும்போது அது மண் அரிப்புக்கும் காரணமாகிவிடும். இது தவிர ஏற்றுமதியை மனதில் கொண்டு மண்வளம் மிக்க நிலங்களே பயிர்ச் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் என்பதால் சாதாரண நிலங்கள் வைத்துள்ள ஏழைகளுக்கு இதனால் பலன் கிடைக்காது என்பது ஒரு தரப்பினரின் வாதம். எனவே, இது நடைமுறைக்கு வந்த பிறகுதான் இதன் விளைவுகளைத் துல்லியமாக மதிப்பிட முடியும்.

—————————————————————————————————–

புவி வெப்பம்: சிக்கல்களும் தீர்வுகளும்

கொ. பாலகிருஷ்ணன்

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற பிரச்னைகளில் பூமி வெப்பமடைதல் மிக முக்கியமானதாகும்.

பூமியைச் சுற்றியுள்ள 8 கி.மீ. தொலைவுக்கு கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ûஸடு மற்றும் குளோரோ புளோரா கார்பன் போன்ற வாயுக்களின் அடர்த்தி அதிகமாவதால் வாயு மண்டலம் சூடாகியுள்ளது.

இவ்வாயுக்களை பசுமைக் கூடார வாயுக்கள் என்று அழைக்கின்றனர். இவ்வாயுக்கள் வாயுமண்டலத்தில் நிலைகொண்டு சூரியனின் ஒளிக் கதிர்களை உள்வாங்கி வெப்பமடைந்து வாயுமண்டலத்தை சூடாக்குகிறது. இவ்வாறு பூமி வெப்பமடைவதை பசுமைக் கூடார விளைவு என்று அழைக்கிறோம்.

இதனால் எதிர்காலத்தில் பூமியின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கலாம், மழை குறைந்து குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் பஞ்சம் பட்டினி ஏற்படலாம்.

பல நோய்கள் உருவாகலாம். மக்கள்தொகை அதிகரிப்பு, காடுகளை அழித்தல், அதிக அளவில் வாகனங்கள், பெட்ரோலியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துதல், குளிர்சாதன உபகரணங்களைப் பயன்படுத்துதல், வளர்ந்த நாடுகளில் தேவைக்கு அதிகமாக தனிநபர் மின் உபயோகம் மற்றும் வரைமுறை இல்லாத இயற்கை வளங்களை ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பசுமைக் கூடார வாயுக்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு பசுமைக் கூடார வாயுக்களே காரணம். இவ்வாயுக்களின் மூலக்கூறுகள் சூரிய ஒளியின் நீள அலைவரிசை ஒளிக்கற்றைகளை ஈர்த்து தன்னகத்தே உள்வாங்கி வெப்பத்தை நீண்ட நேரம் தேக்கி வைப்பதால் வாயுமண்டலம் வெப்பமாகிறது.

கரியமில வாயு பூமியை வெப்பமாக்குவதில் அதிகப் பங்கு வகிக்கிறது. வாயுமண்டலத்தில் கரியமில வாயு இதே அளவில் உயருமானால் 2100-ஆம் ஆண்டில் 540 – 970 பிபிஎம் ஆக உயர வாய்ப்புள்ளது. கரியமிலவாயு உற்பத்தியில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா ஏழாவது இடத்திலும் உள்ளன. நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவு பசுமைக் கூடார வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக இதில் கரியமில வாயுவின் அளவு அதிகம்.

மக்கள்தொகைப் பெருக்கம், தொழில் வளர்ச்சி, காடுகளை அழித்தல், அதிக அளவு பெட்ரோலியம் உபயோகித்தல் போன்ற காரணங்களால் இதன் விளைவு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

கரியமில வாயுக்களின் துகள்கள் சூரிய ஒளியின் வெப்பத்தை உட்கொண்டு நீண்ட நேரம் தன்னகத்தே வைத்துக்கொள்ளும் தன்மையுடையது. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம், சுமார் 50 – 2000 ஆண்டுகளாகும். இது எளிதில் வெப்பத்தைக் கடத்தாது. எனவே, இவ்வாயுவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கும்.

தற்போது மீத்தேனின் அளவு 1783 பிபிபி – யன்களாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 37 பிபிபி-யன்கள் அதிகம். காற்று மண்டலத்தில் சுமார் 10 ஆண்டுகள் வரை தங்கி வெப்பத்தை உண்டாக்கக் கூடியது. வெப்பத்தை உண்டாக்குவதில் கரியமில வாயுவைவிட இருமடங்கு சக்தி அதிகம்.

60 சதவீத மீத்தேன் பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி உபயோகிப்பதாலும் நெல் வயலிலிருந்தும் கால்நடைகளின் கழிவுகளிலிருந்தும் உற்பத்தியாகின்றது. மீதமுள்ள 40 சதவீதம் சதுப்பு நிலம், தண்ணீர் தேங்கி ஈரமான நிலங்களிலும் மற்றும் கரையான்கள் மூலமாகவும் உற்பத்தி செய்கின்றது.

குளோராபுளோரோ கார்பன் என்பது ஒரு சாதாரண ரசாயனப் பொருள். இதில் பல வகை உண்டு. இருப்பினும் இஊஇ 11 மற்றும் இஊஇ 12 ஆகியவை குறிப்பிடத்தக்கவை. குளிர்சாதனம் மற்றும் இதன் சார்புடைய சாதனங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம் 65 – 130 ஆண்டுகள். அதாவது காற்று மண்டலத்தில் பல ஆண்டுகள் தங்கி வெப்பத்தை உண்டாக்கக்கூடியது. இது கரியமில வாயுவைவிட 10 ஆயிரம் மடங்கு வெப்பத்தை உருவாக்கும் சக்தி படைத்தது. மேலும் இது ஓசோன் படத்தை அழித்து புற ஊதாக் கதிர்களைப் பூமியில் விழச் செய்து பாதிப்பை உண்டாக்குகின்றது.

நைட்ரஸ் ஆக்ûஸடு காற்று மண்டலத்தில் உள்ள அளவு 318.6 பிபிபி (டடக்ஷ) யன்களாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டை விட 8 பிபிபி – யன்கள் அதிகம். இது கரியமில வாயுவைக் காட்டிலும் 200 மடங்கு வெப்பத்தை உண்டாக்கும் தன்மையுடையது. வாயுமண்டலத்தில் இதன் ஆயுள்காலம் சுமார் 150 ஆண்டுகள்.

ஓசோன் அளவு சராசரியாக 30 முதல் 50 பிபிஎம் (டடங) வரை இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் இது 50 – 100 பிபிஎம் வரை இருக்கும். 40 – 70 பிபிஎம் அதிகமாகும்போது பயிர்களில் மகசூல் குறையும்.

பூமியிலிருந்து 8 கிலோமீட்டர் வரை உள்ள வாயுமண்டலப் பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. கடந்த 1000 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதிகபட்ச வெப்பம் கடந்த ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளது.

புவி வெப்பம் அதிகரிப்பால் தண்ணீர்ப் பற்றாக்குறையும், அதனால் வேளாண்மை உற்பத்தியில் பாதிப்பும் அதிகமாக இருக்கும். ஏழை நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படலாம்.

புவி வெப்பத்தால் துருவப் பனிப்பாறைகள் 13 ஆயிரம் ச.கிலோமீட்டர் உருகியுள்ளது. 1970-ல் இருந்ததைவிட தற்போது 40 மடங்கு குறைந்துவிட்டது. மேலும், இது 2070-ல் பனிப்பாறைகள் முற்றிலும் உருக வாய்ப்புள்ளன. உலகில் கடல் மட்டம் உயரும்போது வங்கதேசம் மற்றும் மோரிஷஸ் நாடுகளில் அபாயம் ஏற்படலாம், இந்தியா உள்ள 27 நாடுகள் அதிகம் பாதிக்கப்படலாம்.

கடல் மட்டம் உயர்வு சென்ற நூற்றாண்டுகளுக்கு ஒப்பிடும்போது 2 – 6 மடங்கு இந்த நூற்றாண்டில் அதிகரித்துள்ளது. கடல் நீர் உட்புகுவதால் விளைநிலங்கள் பாதிக்கப்படலாம்.

தொடர்ந்து உயரும் கரியமில வாயுவின் அடர்த்தியின் காரணமாக ஒளிச் சேர்க்கையும் பாதிக்கப்படுகிறது. வாயு மண்டலத்தில் கரியமில வாயு அதிகரிக்கும்போது பயிர்களில் இலைத் துளைகள் சிறுத்து வாயுக்களைக் கடத்தும் தன்மை குறைகிறது. இதனால் இலைகளிலிருந்து வெளிவரும் நீராவி குறைகிறது.

மேலும் அளவுக்கு அதிகமாக கரியமில வாயு அதிகரிக்கும்போது இலைத்துளைகள் மூடிக் கொள்ளும். இதனால் இலைகளின் வெப்பம் அதிகமாகி பயிர்களின் நீர்த்தேவையும் அதிகரிக்கிறது.

புவி வெப்பம் 2 – 4 டிகிரி செல்சியஸ் உயரும்போது வெப்பமண்டலப் பயிர்களின் மகசூல் பாதிக்கப்படக்கூடும். பகலில் அதிக வெப்பத்தால் ஒளிச் சுவாசம் அதிகமாகி ஒளிச்சேர்க்கை குறையும். இரவில் இரவுச் சுவாசம் அதிகரித்து பயிர்களின் உலர் எடை அதிகரிக்காது. இதனால் மகசூல் குறையும்.

புவி வெப்பம் அதிகரிப்பதால் நெல் உற்பத்தி பாதிக்கப்படலாம் என பிலிப்பின்ஸில் உள்ள உலக நெல் ஆராய்ச்சி நிலையம் கூறுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் புவி வெப்பம் அதிகரிப்பதால் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு பல லட்சம் மக்கள் உயிர் இழக்க நேரிடலாம்.

கரியமில வாயுவைக் கிரகிக்க அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும். மேலும் காடுகளைப் பாதுகாக்க வேண்டும்.

நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதைவிட இயற்கை வாயுவிலிருந்து மின்சாரம் தயாரிப்பதால் கரியமில வாயுவின் உற்பத்தியைக் குறைக்க முடியும்.

மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காற்றிலிருந்தும் கடலிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

குறைந்த எரிசக்தியில் அதிக தூரம் செல்லக்கூடிய வாகனங்களை உருவாக்க வேண்டும். போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

உயிர்எரிசக்திக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், கரும்பு மற்றும் சர்க்கரைக் கிழங்கு உற்பத்தி செய்வதன் எத்தனாலை மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தலாம். காட்டாமணக்கிலிருந்து பயோடீசல் தயாரிக்க முன்னுரிமை அளிக்கலாம்.

மீத்தேனை ஆக்ஸிடேசன் மூலம் அளிக்கக்கூடிய வேர்களைக் கொண்ட புதிய நெல் ரகங்களை உருவாக்க வேண்டும்.

மக்கள்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

வளர்ந்த நாடுகள் தனது ஆடம்பர வாழ்க்கையில் சிறிது தியாகம் செய்து கரியமில வாயு உற்பத்தியைக் குறைத்து ஏழை நாடுகளைப் பாதுகாக்க வேண்டும்.

மரபுவழி இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

புவி வெப்பமாவதை முற்றிலும் தடுக்க முடியாது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பசுமைக் கூடார வாயுக்களின் உற்பத்தியைக் குறைத்து / இவ்வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்தி இவ்வுலகை வருங்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

(கட்டுரையாளர்: பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, மதுரை.)

Posted in Agriculture, Alternate, Analysis, Backgrounders, Cash, CFC, Consumption, Corn, Crops, Employment, Environment, ethanol, Farming, Food, Fuel, Gas, Gloabal Warming, Grains, Growth, Hunger, Industry, Jobs, Manufacturing, oil, Op-Ed, Paddy, Petrol, Pollution, Poor, Population, Price, rice, Rich, solutions, Swaminathan, Warming, Wealthy, Wheat, workers | 1 Comment »

Municipality power consumption – Self sufficiency, Water Distribution, Alternate Energy

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

கட்டிக் கொடுத்த சோறு

உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண நிலுவை மீதான அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்வதென தமிழக அரசு மேற்கொண்டுள்ள முடிவு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிச் சுமையை ஓரளவு குறைப்பதாக அமையும்.

ஆனால், மின் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலைமைதான் அபராதம் செலுத்தும் நிலைமைக்குக் காரணம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, இந்தப் பிரச்சினை முடிவுக்கு வருமா என்பது சந்தேகமாக இருக்கிறது. கட்டணத்தைச் செலுத்த முடியாத அதே நிலை நீடிக்குமானால், அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்தும் பயன் ஏற்படாது. கட்டிக் கொடுத்த சோறு ஓரிரு வேளைக்கு மட்டுமே உதவும்.

உள்ளாட்சி அமைப்புகள் (பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி) நிலுவை வைத்துள்ள ரூ.204 கோடியை அரசே இப்போதைக்கு செலுத்துவதும், இனிமேல் அவர்களது மின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும்தான் நிரந்தரத் தீர்வாக அமையும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் மின் செலவில் பெரும்பகுதி தெருவிளக்குகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் மூலமாக ஏற்படுகிறது.

தெருவிளக்குகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் கிடைப்பதில்லை. வெறும் செலவு மட்டுமே. ஒவ்வொரு மின்கம்பத்துக்கும் மின்வாரியம் நிர்ணயிக்கும் ஒட்டுமொத்த தொகையை உள்ளாட்சி அமைப்புகள் செலுத்துகின்றன.

இரண்டாவதாக, குடிநீர் விநியோகத்தில் நீரேற்று நிலைய மின்செலவைத் தவிர்க்கவே முடியாது. நீரேற்றும் மின்செலவுக்கும் குடிநீர் கட்டணம், குழாய் வரி மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் பற்றாக்குறை இடைவெளி பெரிதாக உள்ளது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் விநியோகத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலவு போக, சிறிது வருவாய் கிடைத்திருக்கலாம். இப்போது நிலைமை தலைகீழ். விரிந்துவிட்ட நகரின் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் கிடைக்க பல்வேறு இடங்களில் ஆழ்துளை போட்டு தண்ணீர் எடுப்பதால் மின்செலவு மேலும் கூடிவிட்டது. ஆனால் அதற்கேற்ப குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடியவில்லை. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

உள்ளாட்சிகளுக்கான மின்கட்டணத்தை ரூ.5-லிருந்து ரூ.2-ஆகக் குறைக்க வேண்டும் என்பதுகூட, சுமையை இன்னொரு தலைமேல் ஏற்றிவிடுவதாகவே அமையும்.

உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் புதிய வழிகளைக் காண்பதும் புதிதாக குடிநீர் கட்டண முறைகளை வகுத்துக்கொள்வதும்தான் தீர்வாக இருக்கும்.

குடிநீர் இணைப்புகளில் மீட்டர் இருந்தாலும் அவரவர் பயன்படுத்தும் நீரின் அளவுக்கு ஏற்ப (மின்சாரம் கணக்கிடுவதைப்போல) கணக்கிடப்படுவதில்லை. இதனால், உள்ளாட்சி அமைப்புகள் சுத்திகரித்து நீரேற்றம் செய்யும் குடிநீரில் 80 சதவீதம் துணி துவைக்கவும், குளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்படும் நீரின் அளவுக்கு ஏற்ப, அடுக்குமுறையில் (ஸ்லாப் சிஸ்டம்) கட்டணமும் உயரும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டால், பயன்படுத்தப்படும் குடிநீர் அளவு தானாகக் குறையும். மின்கட்டணமும் மிச்சமாகும். உள்ளாட்சிக்கு வருவாயும் கிடைக்கும்.

சூரியஒளி அதிகமாகக் கிடைக்கும் தமிழகத்தில் தெரு மின்விளக்குகள் அனைத்தையும் சூரிய விளக்குகளாக மாற்றிவிட முடியும். நகரங்களில் முக்கிய வீதிகளில் உள்ள மின்விளக்குகளை சூரிய விளக்குகளாக மாற்றும்போது, குறிப்பிட்ட தொகையை அந்தந்தத் தெரு மக்களிடம் பங்கேற்புத் தொகையாகப் பெற்று, பராமரிப்புப் பணிகளை அந்தந்தத் தெருவின் மக்கள் குழுக்களிடமே ஒப்படைத்துவிடலாம்.

====================================================================
தமிழகத்தில் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்த ரூ. 2547 கோடியில் நீர்வள – நிலவளத் திட்டம்: பொதுப்பணித் துறை அமைச்சர்

சென்னை, ஏப். 5: நீர்ப் பாசன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நீர்வள – நில வளத் திட்டம் ரூ. 2547 கோடியில் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் புதன்கிழமை அறிவித்தார்.

பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்க குறிப்பை அவையில் தாக்கல் செய்து அமைச்சர் கூறியது:

நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை நவீனப்படுத்தி கால்வாய்கள், ஏரிகள் ஆகியவற்றைப் புனரமைத்து, நீர் மேலாண்மையை மேம்படுத்துவது அவசியம். அதற்கேற்ப நீர் மற்றும் வேளாண்மையைச் சார்ந்த அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் வண்ணம் நீர்வள – நில வளத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி கடனுதவியுடன் செயல்படுத்தப்படும் இத் திட்டத்தின் மொத்த ஒதுக்கீடு ரூ. 2547 கோடி. இதனை ஆறு ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 63 உப வடிநிலங்களில் அணைகள், கால்வாய்கள், கிளைக் கால்வாய்கள் அவற்றின் கட்டுமானங்கள் ஆகியவை சீரமைத்து மேம்படுத்தப்படும்.

இத் திட்டத்தின் மூலம் 5763 ஏரிகளை புதுப்பித்து புனரமைத்து சீர்படுத்துவதற்காக ரூ. 1068 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செலவில் 75 சதவிகிதம் தமிழக அரசும் 25 சதவிகிதம் மத்திய அரசும் ஏற்கும்.

ஒருங்கிணைந்த நீர்வள – நிலவளத் திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டு 12 உப வடிநிலங்கள் தேர்தெடுக்கப்பட்டு அவற்றில் 9 உப வடிநிலங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ரூ. 399 கோடியில் 71 ஒப்பந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்த நிதியாண்டுக்கு ரூ. 160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதர 3 உப வடிநிலங்களுக்கான விரிவான திட்ட மதிப்பீடு அந்தந்த துறைகளுடன் இணைந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 51 உப வடிநிலங்களுக்கு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.

நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் 6.17 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசன, நீர் உபயோகிப்போர் சங்கங்கள் 2600 அமைக்கப் பெற்று பாசன மேலாண்மையில் பாசனதாரர்களே பங்கேற்க வழிவகை செய்யப்படும்.
====================================================================
காவிரிப் படுகை மாவட்டங்களில் கால்வாய்களைச் சீரமைக்க ரூ. 40 கோடி: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப். 5: காவிரிப் படுகை மாவட்டங்களில் ரூ. 40 கோடியில் சிற்றாறு வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம், கிருஷ்ணகுப்பம் கிராமத்தில் புதிய குட்டை ரூ. 16 லட்சத்தில் அமைக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் ராசசிங்கமங்கலம் கிராமத்தில் உள்ள ஆர்.எஸ். மங்கலம் ஏரி ரூ. 5.5 கோடியில் புனரமைக்கப்படும்.

நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து வருகிறது. செயற்கை முறையில் சிறிய குட்டைகளில் நீரைத் தேக்கி நீர் வளத்தை மேம்படுத்த கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5 குட்டைகள் ரூ. 93 லட்சத்துக்கும், ஈரோடு மாவட்டத்தில் 3 குட்டைகள் ரூ. 63 லட்சத்துக்கும், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு குட்டை ரூ. 12 லட்சத்துக்கும், வேலூர் மாவட்டத்தில் 11 குட்டைகள் ரூ. 1 கோடிக்கும் ஆக மொத்தம் 20 குட்டைகள் ரூ. 2.72 கோடிக்கு நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் இந்த நிதியாண்டில் சீரமைக்கப்படும்.

காவிரிப் படுகை மாவட்டங்களில் உள்ள சிற்றாறுகளையும் வாய்க்கால்களையும் தூர்வாருவதற்கு இந்த அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. தூர்வாரவும் கட்டுமானங்களை புதுப்பிப்பதற்காகவும் ரூ. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ. 1.75 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணாறு தொலைகல்லில் மட்ட சுவர் அமைத்து ரகுநாத காவிரி வாய்க்காலின் பாசன நிலங்களுக்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கீழ்வளம் கிராமத்தின் அருகில் புக்கத்துறை ஓடையின் குறுக்கே ரூ. 45 லட்சத்தில் தடுப்பணை செயல்படுத்தப்படும்.

விழுப்புரம் மாவட்டம் கரடிசித்தூர் கிராமத்தில் உள்ள குமாரபாளையம் வரத்து கால்வாய்க்கு நீர் வழங்க முக்தா நதியின் குறுக்கே ரூ. 25 லட்சத்தில் தடுப்பணை அமைக்கப்படும்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம், கோமல் கிராமத்தில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே தொலைகல் 118 கி.மீ. யில் தரை மட்டச்சுவர் கட்டும் திட்டம் ரூ. 40 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

தஞ்சாவூர் மாவட்டம் சோழகம்பட்டி வாரி குறுக்கே தடுப்பணை ரூ. 20 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம், ரெட்டியாபட்டியில் இருந்து கரிகாலி உத்தன்டாம்பாடி வரையில் உள்ள வழங்கு கால்வாய் மற்றும் உத்திராட்ச கோம்பையில் உள்ள அணைக்கட்டுகளை சீரமைக்கும் திட்டம் ரூ. 1.98 கோடியில் செயல்படுத்தப்படும்.

========================================================================
இணைந்தால் வளர்ச்சி

ஒரு பக்கம் வறட்சி, மறு பக்கம் வெள்ளம். இவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரண உதவிகள். இது, ஆண்டுதோறும் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் ஒரு நிகழ்வாகிவிட்டது. இதற்கு முடிவு கட்ட முக்கிய நதிகளை இணைக்கலாம் என்று பல ஆண்டுகளாகக் கூறப்பட்டுவரும் யோசனை இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. இத் திட்டத்தை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்பதும், பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்டதால் அவற்றுக்கிடையே கருத்தொற்றுமை காண்பதில் உள்ள சிக்கலுமே இதன் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள முக்கிய அம்சங்களாகும்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஓடும் ஆறுகளில் உள்ள தண்ணீர்ப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு சில ஆறுகளை இணைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆறுகளில் மட்டுமன்றி ஏரி, குளங்களில் தொடர்ந்து நீரின் அளவைப் பராமரிக்கவும், பெரும்பாலான மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைப் போக்கவும் இத் திட்டம் உதவும்.

முதற்கட்டமாக கோரையாற்றில் இருந்து அக்னியாறு வரை புதிய கால்வாய், பெண்ணையாற்றை செய்யாற்றுடன் இணைப்பது, தாமிரபரணியில் வெள்ளம் ஏற்படும்போது வரும் நீரை நம்பியாறு, கருமேனியாறு வரை எடுத்துச் செல்வது ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டங்கள் மூலம் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பலன் கிடைக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை நீர்வள ஆதாரத்தில் எப்போதும் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது. இங்கு மேற்பரப்பு நீர் அனைத்தும் ஏறக்குறைய பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் நிலத்தடி நீரை முற்றிலும் நம்பி இருக்க வேண்டியுள்ளது. ஆனால் அதுவும் விவசாயம் மற்றும் பொது உபயோகங்களுக்குத் தொடர்ந்து உறிஞ்சப்படுவதால் காலப்போக்கில் அதற்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆனால் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், மற்றும் ஆந்திரத்தில் கணிசமான நீர் ஆதாரங்கள் உள்ளன. எனவே பற்றாக்குறையைப் போக்க அந்த மாநிலங்களின் உபரி நீரை நம்பியிருக்க வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வு காண தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை ஒரு யோசனை தெரிவித்துள்ளது. உபரி மற்றும் பற்றாக்குறை படுகையைத் தேர்வு செய்து மகாநதியிலும், கோதாவரியிலும் கிடைக்கும் உபரிநீரை கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை மற்றும் குண்டாறு படுகைகளுக்குத் திருப்பிவிடலாம் என்பதே அந்த யோசனையாகும். இதன்படி மகாநதி, கோதாவரியின் உபரி நீர் கிருஷ்ணா மற்றும் பெண்ணாற்றுக்குத் திருப்பி விடப்படும். அங்கிருந்து கல்லணைக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும். இத்தகைய இணைப்புகளை மேற்கொண்டால் அது அந்த நீர் வரும் வழியில் உள்ள மாநிலங்களில் சாகுபடிக்கும் குடிநீருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அரசின் கருத்து. இத்தகைய திட்டத்தினால் நீர்வழிச் சாலையை உருவாக்கலாம் என்று ஒரு நிபுணர் தெரிவித்துள்ள கருத்தும் பரிசீலனைக்குரியது.

இது தவிர ஏரிகளைப் பாதுகாக்கச் சட்டம் கொண்டு வரவும் அரசு உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் விளைநிலங்களும், ஏரிகளும் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் சாகுபடி நிலங்களின் அளவு படிப்படியாகக் குறைந்து ஒரு நேரத்தில் கடும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். இதற்கு முடிவு கட்ட மேற்கண்ட திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
=====================================================================

————————————————————————————————-
தாகம் தணியும் நாள் எந்நாளோ?

உ.ரா. வரதராசன்

வெளிநாட்டுப் பயணம் ஒன்றின்போது, விமானத்தில் படிக்கக் கிடைத்த லண்டன் நாளேடு ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட விளம்பரம் ஒன்று, அதிர்ச்சி அளிக்கும் ஓர் உண்மையைப் பளிச்சென்று பறைசாற்றியது.

“லண்டன் நகரின் ஆடம்பரக் குடியிருப்புகளில் வசிப்பவர்களை விட, குடிதண்ணீருக்கு அதிக விலை கொடுப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள்?’ என்ற கேள்வியை எழுப்பிய அந்த விளம்பரம் அதற்கான பதிலையும் தந்தது: – அது – “”வளரும் நாடுகளின் வறுமைமிக்கக் குடிசைப்பகுதிகளில்தான்!” ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் – 2006-ஆம் ஆண்டின் மனித வளர்ச்சி அறிக்கை தண்ணீர்ப் பிரச்னையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

“உணவு இல்லாமல் பட்டினி கிடக்க நேரிட்டால்கூட, 21 நாள்கள் வரை உடலில் உயிர் ஒட்டிக் கிடக்க முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் 10 நாள்களுக்கு மேல் உயிர் வாழ்வது அரிது; பிராணவாயு இல்லாமல் எட்டு நிமிடங்களுக்கு மேல் உயிர் தாங்காது’, என்பது ஒரு கருத்து. தண்ணீரும், பிராணவாயுவும் இன்றி மக்கள் உயிர் வாழ முடியாது என்பதால்தான், ஐ.நா. சபை 2002-ஆம் ஆண்டில் “தண்ணீர் – ஒரு மனித உரிமை, என்று அறிவித்தது. அந்த தண்ணீர் போதுமானதாகவும், பாதுகாப்பானதாகவும், ஏற்புடையதாகவும், எளிதில் எட்டக் கூடியதாகவும் மற்றும் வாங்கும் சக்திக்கு உட்பட்டதாகவும் – அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியது.

மக்கள்தொகைப் பெருக்கம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட 19-ஆம் நூற்றாண்டின் விஞ்ஞானி தாமஸ் மால்த்தூஸ், உணவுப் பற்றாக்குறை எதிர்காலத்தில் உலக நாடுகளை மிரட்சியில் ஆழ்த்தும் பரிமாணத்தை எட்டிவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். “மால்தூசின் தத்துவம்’ என்றே மக்கள்தொகை பற்றிய அவரது ஆய்வு சுட்டப்படுகிறது. இதே கோணத்தில்தான் தண்ணீர் பற்றிய சர்வதேச அரங்கிலான விவாதங்களில் கருத்துகள் இடம்பெற்று வந்துள்ளன. “மக்கள்தொகை பெருகப்பெருக, தண்ணீர் தேவையும் அதிகமாகிறது; விளைவு – எதிர்காலத்தில், தண்ணீர் பற்றாக்குறை தவிர்க்க முடியாதது” என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

மனித வளர்ச்சி அறிக்கை – 2006 இந்த வாதத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறது. “ஒரு சில நாடுகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு கவலைதரும் பிரச்னையாக இருக்கலாம்; ஆனால் சர்வதேச ரீதியில், பற்றாக்குறையும், நெருக்கடியும் எழுவதாகச் சொல்ல முடியாது. வறுமையும், ஏற்றத்தாழ்வும், அரசியல் அதிகாரம் யாருடைய நலனுக்காகச் செயல்படுகிறது என்பவையே, உலக தண்ணீர் நெருக்கடியின் மையமான பிரச்னைகள்’ என்று ஆய்வின் அடிப்படையிலான ஏராளமான விவரங்களைக் கொண்டு நிலைநாட்ட முற்படுகிறது அந்த அறிக்கை.

உயிர் வாழ்வதற்கான தண்ணீர்ப் பிரச்னை மூன்று அம்சங்களை உள்ளடக்கியது. அவை ~

  1. சுத்தமான குடிநீர் வழங்குவது,
  2. கழிவு நீரை அகற்றுவது,
  3. உடற்கழிவுகளை (சிறுநீர், மலம்) வெளியேற்றுவதற்கான சுகாதாரமான ஏற்பாடு.

மனித வாழ்வின் மேம்பாட்டுக்கு இவை மூன்றும் இன்றியமையாதவை. ஆனால், உண்மையான நிலவரம் என்ன?
வளரும் நாடுகளில் 110 கோடிபேர் போதுமான தண்ணீருக்கு வழியில்லாமல் திண்டாடுபவர்கள்; 260 கோடிபேர் கழிப்பறை வசதிகள் இன்றி அவதிப்படுபவர்கள். இது வளரும் நாடுகளின் மக்கள்தொகையில் பாதிக்குமேல். இது தண்ணீர்ப் பற்றாக்குறையால் நேரிடும் கொடுமையா என்றால், இல்லை.

வீட்டு உபயோகத்திற்காக மட்டும் தேவைப்படுகிற தண்ணீரின் அளவு, உலகளாவிய நீர்வளத்தில் 5 சதவிகிதத்திற்கும் குறைவுதான். அடிப்படையான மனிதத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 20 லிட்டர் தண்ணீர் அவசியமானது. தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாத நிலைக்குக் காரணம் பற்றாக்குறை அல்ல; இன்றைய ஆட்சி அமைப்பும், அரசியல் அதிகாரத்தைச் செலுத்துவோரின் தலைகீழான முன்னுரிமைகளுமே.

உலக நாடுகள் பெரும்பாலானவற்றின் பெருவாரி மக்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகள் மறுக்கப்படுவதன் கோர விளைவுகள் சில வருமாறு:

வாந்திபேதியால் ஆண்டுக்கு 18 லட்சம் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது; அதாவது – நாளொன்றுக்கு 4900 சாவுகள். 1990-களில், ஆயுத மோதல்களில் இறந்தோரைவிட அசுத்தமான குடிநீர், சுகாதாரமின்மை காரணமான நோய்களில் இறந்த குழந்தைகள் எண்ணிக்கை ஆறு மடங்காக உயர்ந்தது.

தண்ணீர்ப் பிரச்னை தொடர்பான உடல்நலப் பாதிப்பு காரணமாக பள்ளிக்குச் செல்ல முடியாத பள்ளி நாள்கள் ஆண்டொன்றுக்கு 44 கோடிக்கு மேல்.

வளரும் நாடுகளின் மக்கள்தொகையில் பாதிக்குமேல் தண்ணீர் – சுகாதாரக் குறைபாடுகளால் ஏதாவதொரு வியாதியால் பீடிக்கப்பட்டு அவதியுறுவது அன்றாட நிகழ்வு. ஒவ்வொரு நாளும், தண்ணீருக்காக லட்சக்கணக்கான பெண்கள் பல மணி நேரம் செலவிட நேரிடுகிறது.

இளமையில் தண்ணீர் – சுகாதாரமின்மை காரணமாக நோய்வாய்ப்பட்டும், கல்வி வாய்ப்பை இழந்தும் பாதிப்புறுகிற லட்சக்கணக்கான குழந்தைகள், வளர்ந்த நிலையில் வறுமையைத் தழுவ நேரிடுகிறது. இவ்வாறெல்லாம் பாதிப்புற்று இழக்கப்படுகிற மனித வள ஆதாரங்கள் காரணமாக, உலக நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார இழப்புகள் அளவிட முடியாதவை.

இந்த நிலைமைகளுக்கு மாற்றமே இல்லையா?

20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஒன்று கூடி 21-ஆம் நூற்றாண்டுக்கான மனித வளர்ச்சி இலக்குகளை வரையறை செய்தனர். 2015-ஆம் ஆண்டுக்குள் வறுமை, பட்டினி, குழந்தை இறப்புகள், கல்வியின்மை, பாலின சமத்துவமின்மை ஆகியவற்றை, சரிபாதியாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. “பாதுகாப்பான குடிநீரும், அடிப்படை சுகாதார வசதிகளும் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெறாத உலக மக்களின் எண்ணிக்கையை 2015-க்குள் சரிபாதியாகக் குறைக்க வேண்டும்’ என்பது திட்டவட்டமான இலக்கு.

ஆனால், இந்த இலக்குகளை எட்ட நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு பத்தாண்டுகளுக்கும் குறைவாகவே உள்ள இன்றைய தருணத்தில், இதற்கான முயற்சிகள் காததூரத்திலேயே உள்ளன என்பதுதான் வேதனையான அம்சம்.

தாகத்தால் நா வறண்டு நிற்கும் மக்களின் தண்ணீர்த் தேவைகளை நிறைவேற்றுவதற்குக் குறுக்கே நிற்பது எது? நிதிப்பற்றாக்குறையா?

குடிதண்ணீர், சுகாதாரத் தேவைகளை மட்டுமல்ல, வளர்ச்சி இலக்குகள் அனைத்தையுமே 2015-க்குள் எட்டுவதற்குத் தேவையான நிதி ஆயிரம் கோடி டாலர்கள். (சுமார் ரூ. 40 ஆயிரம் கோடி)

“ஓ, இவ்வளவு பெரிய தொகையா? என்று மலைக்கத் தேவையில்லை. இது, உலகநாடுகள் ராணுவத்திற்காகச் செலவிடும் தொகையில், ஐந்தே நாள்களுக்கான செலவுக்கு மட்டுமே ஈடான தொகைதான்! பணக்கார நாடுகள் ஆண்டுதோறும் “மினரல் வாட்டருக்காக’ச் செலவிடும் தொகையில் சரிபாதிக்கும் குறைவே! எனவே, இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவது, அவற்றை வரையறுத்த உலக நாடுகளின் தலைவர்களின் உறுதியான நிலைப்பாடு என்ற உரைகல்லைப் பொருத்த விஷயம்தான்.

2015-ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி நிர்வாகம் இன்னோர் இலக்கையும் நிர்ணயித்திருக்கிறது. வியாழன் கிரகத்தின் பனிநிலவுகள் பற்றிய ஆராய்ச்சிக்காக விண்கலத்தை அனுப்பி, அந்த சந்திர மண்டலங்களின் பனிப்படலங்களுக்கு அடியில் உள்ள உப்புநீர் ஏரிகளை ஆய்வு செய்து, அங்கு உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா என்று அறிவது அதன் நோக்கம். அதற்காகச் செலவிடப்படும் ஆயிரம்கோடி டாலர்கள் – அதற்குத் தேவைப்படும் தொழில் நுணுக்கம் – இவற்றோடு ஒப்பிடுகையில், மனித வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான செலவும், முயற்சியும், அற்பசொற்பமானவையே!

உலக மக்களின் தாகம் தணியும் நாள் எந்நாளோ?..

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ)

Posted in Alternate, Analysis, Aquafina, Arms, Backgrounder, Backgrounders, Bathroom, Bills, Bio, Bottled, Budget, Cauvery, Charges, Coke, Crap, Dasani, defecate, Developed, Developing, Diarrhea, Distribution, Drinking, Electricity, energy, Environment, Excrement, Expensive, Exploit, Fights, Finance, Fine, Gold, Govt, Ground, HR, Hunger, Income, Interlink, Interlinking, Kaviri, Local Body, Loss, Municipality, Nations, oil, Op-Ed, Options, Pee, Pepsi, Plans, Pollution, Poop, Power, Private, Privatization, PWD, Restroom, Revenues, River, Sand, Schemes, Shit, Soda, Solar, solutions, Tax, Toilets, Urine, Water, Weapons, World | 4 Comments »

Sethu Bridge – Ramar Palam aka Hanuman Bridge referred in Ramayanam – History, Current state & Backgrounders

Posted by Snapjudge மேல் ஜனவரி 28, 2007

1. காலம்: பார’தீய’ ஜெகதால கட்சி !

2. பொருனைக்கரையிலே: சேது,பாம்பன்,தனுஷ்கோடி -2

http://porunaikaraiyile.blogspot.com/2006/07/1.html

3. பினாத்தல்கள்: எல்லாப்பக்கமும் �

Voice on Wings said…

//சேது சமுத்திரத்திட்டம் கனிமவளம், சுற்றுச்சூழல் ஆகிய காரணங்களைத் தவிர்த்து, வேறெந்தக் காரணங்களாலும் கைவிடப்படக்கூடாது. புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்பது அரசு தரப்பால் தெளிவாக்கப்பட்டபிறகே தொடரப்படவேண்டும், வெள்ளை யானையாக இருந்தாலும் ஈகோவுக்காக தொடரப்படக்கூடாது!//

அகழ்வுப் பணிகளால் இதுவரை அப்பகுதியில் ஐந்தாறு திமிங்கிலங்கள் மரணித்துள்ளன என்று நேற்று CNN IBN நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. பவளப்பாறைகளுக்கும் பேராபத்து என்ற கருத்து நிலவுகிறது. பொருளாதார அடிப்படையிலும் இத்திட்டம் பெரிய அளவில் பலன் தரபோவதில்லை என்ற தகவல்களே கிடைக்கின்றன.

இப்படியிருக்கையில் Ram factor ஒரு அருமையான சந்தர்ப்பம் நம் அதிகார வரக்கத்திற்கு. மூட நம்பிக்கை எதிர்ப்பு என்ற பெயரில் இத்திட்டத்திற்கான ஆதரவைத் திரட்டி, சில தனிநபர்களுக்கு மட்டுமே பயன்படக்கூடிய ஒரு திட்டத்தை அவசர கதியில் முன்னெடுத்துச் செல்கின்றனர் நம் ஆட்சியாளர்கள்.
September 23, 2007 11:08 AM

4. நினைத்தேன் எழுதுகிறேன்: வலைப்ப�

5. Thoughts at random: Rama,Sethu and Mr. Karunanidhi

6. E=mc^2: Where are the Indian Scientists?

7. குப்பைகள்: வராதா? வரக்கூடாதா? – கலைஞர் கடிதம்

8. குசும்பு: சென்னை வந்த ராமன்

9. பங்கு வணிகம்: இந்தியா, இலங்கை, சேது & இராமர் பாலம்

10. வெட்டிப்பயல்: கர்ம வீரர், கலைஞர�

News:
11. தமிழகத்தில் பாஜக, விஎச்பியினர்

12. கண்ணகி கதையை நம்புபவர்கள் ராமர�

13. மத்திய திமுக அமைச்சர்களை டிஸ்ம�

14. பஜ்ரங் தள், VHP, ராமசேனா தொண்டர்கள

15. இராமர் பாலம் – செய்தித் தொகுப்பு

16. சென்னை பஸ் எரிப்பு: கருணாநிதி க�

17. பெங்களூரூ வன்முறை – இராமர் சேது �

18. Ram Sethu controversy: Ambika Soni offers to resign | சற்றுமுன்…

19. இராமர் இருப்பு: அரசு பின்வாங்கி

20. இராமர் பாலம் – ஆதாரங்கள் இல்லை – ம

21. ராமர் பாலத்தை இடிக்க உலகளவில் க

Cartoons:

22. Ramar Sethu issue | சற்றுமுன்…

23. Dinamani’s Mathy on Congress vs BJP in Ramar Sethu Issue | சற்றுமுன்…


ஜெயலலிதா கூறும் ராமர் பாலம் கடலுக்கடியில் 18 மைல் நீளமுள்ளது

விழுப்புரம், ஜன.29: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் உள்ள ராமர் பாலம் வரலாற்று தொன்மைமிக்க பாலமாகும்.

சேது கடல் கால்வாய் அமைக்கும்போது ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்வோம் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இந்தியாவை இலங்கையுடன் இணைக்கும் இந்த பாலத்தை சேது பாலம், ராமர் பாலம், அனுமன் பாலம் என்றழைக்கின்றனர். இந்திய வரைபடத்தில், இந்த பாலத்தை ஆதம் பாலம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கி இலங்கை வரை 18 மைல் தூரத்துக்கு கடலுக்கு அடியில் இப் பாலம் உள்ளதை செயற்கைக்கோள் எடுத்த புகைப்படம் விளக்குகிறது.

பாக் நீரிணைப்பில் உள்ள இப் பாலத்தின் மீது மணல் குவிந்துள்ளதால், சில இடங்களில் மட்டும் இப்பாலம் வெளிப்படுகிறது. இவற்றை திட்டு என்றும் குட்டித் தீவு என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர்.

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இந்த பாலத்தின் வரலாற்று தொன்மையை ஏற்கெனவே விளக்கியுள்ளது. இப்பாலம் 18 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகவும், பிரளயம் ஏற்பட்ட பின்னர் இப்பாலம் கடலுக்கடியில் மூழ்கி விட்டதாகவும் ஆய்வுகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் உள்ள இப்பாலம், கோரல் ரீப் (இர்ழ்ஹப்நற்ர்ய்ங்) என்றழைக்கப்படும் பவளப்பாறைகளைக் கொண்டது. இப்பவளப்பாறை படுகையில் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பல வசிப்பதோடு, இனப்பெருக்கம் செய்கின்றன.

திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கும் இப்பாலத்தின் மீது இப்போதும் சிலர் நடந்து செல்கின்றனர். கடலுக்கடியில் மூழ்கியுள்ள பாலத்தின் மீது நடந்து சென்றால் முழங்கால் அளவுக்கு மட்டும் கடல்நீர் உள்ளது. 5 கி.மீ. தூரம் வரை நடந்து செல்லலாம். படகுகள் கரையிலிருந்து நடுக்கடலுக்கு செல்ல வழி ஏற்படுத்துவதற்காக, இப்பாலத்தில் சில இடங்களில் உடைப்பை மீனவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

கற்கள் மிதக்கும்

அதிசயம்

இப்பாலத்தில் உள்ள கற்களைப் பெயர்த்து எடுத்தால், அவை கடலில் மூழ்காமல் மிதக்கின்றன. இந்த கற்களை ராமேஸ்வரத்தில் சீதா தீர்த்தம் அருகே உள்ள மடத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைத்துள்ளனர். அதிசயமான இக்கற்களை பக்தர்கள் வாங்கிச் சென்று பூஜை அறையில் வைத்து வழிபடுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் இதற்கு ஆதம் பாலம் என்று பெயரிட்டனர். இலங்கையில் இறக்கி விடப்பட்ட உலகின் முதல் மனிதரான ஆதாம், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வர இப்பாலத்தைப் பயன்படுத்தியாகவும், ஆகவே இப்பாலத்துக்கு ஆதம் பாலம் என பெயரிடப்பட்டதாவும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆதாம், ஏவாளுக்கு பிறந்த குழந்தைகளான ஆபில், ஹாபில் ஆகிய இருவரில் ஒருவரின் சமாதி ராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ளது. இஸ்லாமிய குடும்பத்தினரால் பராமரிக்கப்படும் ஆபில்-ஹாபில் தர்ஹாவுக்கு செல்வோரிடம், ஆதம் பாலம் என்பது ஆதாம் நடந்த உலகின் முதற் பாலம் என்று விவரிக்கின்றனர்.

இலங்கை மன்னர் ராவணன் கடத்திய சீதா பிராட்டியை மீட்க, ராமர் தலைமையில் அனுமன் அமைத்த பாலம் இது என்று கூறும் இலங்கை வாழ் மக்கள், இதை அனுமன் பாலம் என்று அழைக்கின்றனர்.

சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாரதியார் இப்பாலத்தைப் பற்றி பாடியுள்ளார். ராமேஸ்வரம் தீவை, தமிழகத்துடன் தரை வழியில் இணைக்க பாம்பன் பாலம் கட்டிய கேமன் இந்தியா என்ற நிறுவனம், ஆதம் பாலத்தை பயன்படுத்தி இலங்கைக்கு தரைவழிப் பாலம் அமைக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே ஆலோசனை வழங்கியிருந்தது.

—————————————————————————————————————————————————————-
ராமர் பாலத்தைக் காப்போம்

இல. கணேசன்

“”ஏலத்துக்குத் தயாராக உள்ள சிற்பம்” குறித்து சமீபத்தில் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியானது. அது ஒரு சிறிய சுண்ணாம்புக் கல் சிங்கச் சிற்பம். அதன் ஏல மதிப்பு 7 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படி அந்த சிற்பம் தயாரான பொருள் விலை உயர்ந்ததா அல்லது கலை வேலைப்பாட்டில் மிகச் சிறந்ததா என்றால், எதுவுமில்லை. அதன் விலைமதிப்பு உயர்ந்ததற்கு ஒரே காரணம், அது 5000 ஆண்டு பழைமையானது என்பதே!

உலகின் எல்லா நாடுகளும் பழைமையைப் போற்றுகின்றன. பாகிஸ்தானில் உள்ள கட்ராஸ் ஆலயத்தின் பின்னணி என்ன? மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது தாகம் மேலிட்டு, ஒரு குளத்தில் நீர் அருந்தச் சென்றனர். அப்போது யக்ஷனது கேள்விக்குப் பதில் சொல்ல முடியாததால், நால்வரும் மடிய, தருமர் சென்று யக்ஷனது கேள்விக்குப் பதில் கூறி நான்கு சகோதரர்களும் உயிர் மீட்ட சம்பவம் நடந்த இடம். அந்த இடத்தில் ஒரு கோயில் உள்ளது. அது சிதிலமடைந்துள்ளது. அதைப் புதுப்பித்துப் பாதுகாக்க பாகிஸ்தான் அரசு ரூ. 10 கோடி ஒதுக்கியுள்ளது.”

இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானின் அரசுக்கு, மகாபாரதத்தின்மீது நம்பிக்கை இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் தன் தேசத்தின் தொன்மைச் சிறப்புடைய பழம்பொருள்களைப் பாதுகாக்கும் அக்கறை அதற்கு உள்ளது. ராமன் இருந்தார் என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் நம்ப மறுக்கலாம். ஆனால் கோடிக்கணக்கான மக்கள் நம்புகின்ற ஒரு வரலாற்றுச் சின்னத்தைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டாமா? அக்கறை செலுத்தாவிட்டாலும் ராமர் பாலத்தைத் தகர்ப்பதையாவது தவிர்க்க வேண்டாமா?

அது ராமர் நடந்த பாலம் என்பது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை; நம்பிக்கைக்கு ஆதாரம் கேட்பது தவறு. வணக்கத்துக்குரிய முகமது நபிகளின் திருமுடி ஒன்றைப் பேழையில் வைத்து ஹஸரத்பால் மசூதியில் போற்றுகின்றார்கள். அது அவர்களது நம்பிக்கை. நாம் அதை மதிக்கிறோம். புத்தரது பல் ஒன்றை வைத்து பௌத்தர்கள் பாதுகாக்கிறார்கள். அது அவர்களது நம்பிக்கை. அதையும் நாம் மதிக்கிறோம்.

இதற்கெல்லாம் ஆதாரம் கேட்டு எவரும் கேள்வி கேட்கக்கூடாது. கன்னியாகுமரியின் பாதம் விவேகானந்தப் பாறையில் பதிந்துள்ளதை நாம் நம்புகிறோம். நிரூபிக்க கைரேகை நிபுணரது சான்றிதழைக் கொண்டுவா என்றா கேட்பது?

ராமேசுவரம் மீனவர்கள் தங்களது படகில், யாத்ரீகர்களை ஏற்றிக்கொண்டு ராமர் பாலத்தைக் காட்டுகிறேன் என அழைத்துச் சென்று, கரையிலிருந்து சிறிதுதூரம் சென்று கடல் நடுவே தண்ணீரில் இறக்கிவிட்டு நடக்கச் சொல்வார்கள். இது பாரம்பரியமாக எத்தனையோ ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. “நாஸô’ படமெடுத்துக் காட்டிய பிறகுதான், அது தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை தொடர்ந்து இருப்பதை உலகம் உணர்ந்தது. சுனாமி வந்தபோது கடல் வெகுதூரம் உள்வாங்கியது. அப்போது இந்தப் பாலத்தை நூற்றுக்கணக்கானோர் நேரில் பார்த்தார்கள்.

அது சரி, ராமர் பாலம் என மக்கள் சொன்னால் போதுமா? வரலாற்று ஆதாரம் வேண்டாமா எனக் கேட்கலாம். சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள அரிய ஆவணங்களில் ஒன்று, ஆங்கிலேயர்கள் 1788 ஜனவரி 1-ல் தயாரித்த வரைபடம். இஸ்லாமிய ஆட்சியின் இறுதிக்காலம் (நன்ழ்ஸ்ங்ஹ் ம்ஹல் ர்ச் ஏண்ய்க்ன்ள்ற்ட்ஹய் ன்ய்க்ங்ழ் ஙர்ஞ்ன்ப் உம்ல்ண்ழ்ங்) தொடர்பானது. அதில் தனுஷ்கோடி – தலைமன்னார் பகுதிக்கு ராமர் பாலம் என்றே பெயரிடப்பட்டுள்ளது.

அதற்கு முன்பு, ஒரு வரைபடம் – நெதர்லாந்து வரைந்தது. அதில் இதே பகுதியை ராமர்கோயில் என எழுதி, ராமர் பாலம் என அடைப்புக்குறியில் குறிப்பிட்டுள்ளனர். ராமன் வாழ்ந்ததே கற்பனை; எனவே, அவர் தெற்கே வந்ததும் கற்பனை எனக் கூறுவோரும் உள்ளனர். அவர்களுக்கு ஒரு கேள்வி. ராமேசுவரம் என்கிற பெயர் எப்படி வந்தது? ராமன், ஈஸ்வரனை அதாவது சிவனைப் பூஜித்த ஸ்தலம் என்பதால்தானே?

அந்தக் கடற்கரைப் பகுதி புனிதமானதாகக் கருதப்படுகிறதே, அது அந்தப் பகுதிக்கு ராமர் வந்த பிறகுதானே? அது சேது சமுத்திரம் என்று பெயர் பெற்றுள்ளதே! சேது தீர்த்தம் என்றும் சொல்கிறார்களே! சேது என்னும் சமஸ்கிருத சொல்லுக்குப் பாலம் என்பது பொருள். தமிழ் அகராதிப்படி செயற்கைக்கரை என்று பொருள். செயற்கையாக அமைந்த பாலம் என்று பெயர். சேது சமுத்திரம் என்பதற்கு, பாலத்தை ஒட்டியுள்ள சமுத்திரம் என்றுதானே பொருள்? அந்தப் பாலத்திற்கு அதிபதி – தலைமன்னார் வரை – சேதுபதி. பாரதத்தின் எல்லையைப் பற்றி குறிப்பிடும்போது சேது முதல் இமயம் வரை – சேது ஹிமாசலம் என்றுதான் குறிப்பிடுவார்கள். இந்திய அரசு 1767-ல் தயாரித்த முதல் நிலஅளவைக் குறிப்பேட்டில் அதன் சின்னத்தைப் பொறித்து கீழே ஆசேது ஹிமாசலம் என்றே எழுதியிருக்கிறார்கள்.

ராமன் கட்டிய சேதுவின் பெயரில்தான் சேது சமுத்திரத் திட்டம் அமைந்துள்ளது. அரசின் திட்டப்படி அது நிறைவேறினால் திட்டம் வெற்றி பெறும். சேது இருக்காது. ராமநாதபுர மாவட்ட விவரச் சுவடிகளை தமிழ்நாடு அரசு 1990-ல் வெளியிட்டது. அதற்கு அன்றைய முதல்வர் எழுதிய முன்னுரையில், ராமநாதபுர மாவட்ட விவரச் சுவடியை வெளியிட்டிருப்பதன் வாயிலாக இம்மாவட்டத்தின் சமூக வரலாற்றை ஆராய்வதற்குப் பயனுடைய பணி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்களுக்கும், நல்ல பணிகளிலும் ஆராய்ச்சி வேலைகளிலும் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இந்த விவரச்சுவடி பெரிதும் பயன்படும் என குறிப்பிட்டுள்ளார்.

வடமொழியில் இது நள சேது என்றும் தமிழில் திருவணை என்றும் சொல்லப்படுகிறது. ராம சேது என்றும் சொல்வர்; ஆதி சேது என்ற பெயரும் உண்டு.” இந்த விவரங்கள் அடங்கிய அரசுப் பதிப்புக்கு முன்னுரை எழுதிய அன்றைய முதல்வர்தான், இன்றும் முதல்வராக உள்ளார்.

இது மக்களுடைய நம்பிக்கைக்குரிய ஒரு தொல்பொருள் என்பது மட்டுமல்ல. இன்றைய தினம் இந்திய அரசு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்துகொள்வதில் பிடிவாதமாக இருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின் பயனாக நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை அணுஈனுலை மூலம் அபரிமிதமாகப் பெறலாம் என்பது எத்தனை காலத்துக்கு? அமெரிக்கா விரும்புகிறவரை மட்டுமே!

ஆனால் இந்த ராமர் பாலத்தையொட்டி (நீங்கள் அதற்கு என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் சரி) சுமார் 400 ஆண்டுகளுக்கு நாடு முழுவதற்கும் தங்குதடையற்ற மின்சாரம் அளிப்பதற்குத் தேவையான அணுசக்தி மூலப்பொருள் மண்டிக் கிடக்கிறதே!

ராமர் பாலம் என்று அழைப்பதற்கு எங்களது பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை என்று கருதுவோர், இந்த அணு மின்சக்தி மூலப்பொருளுக்காகவேனும் சேது திட்டத்தின் வழித்தடத்தை மாற்றலாமே?

சேது சமுத்திரத் திட்டத்தைக் கொள்கைரீதியாக ஏற்று ஆய்வுப் பணிகளைத் துவக்கியது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்தான். வாஜ்பாய் ஆட்சிக் காலத்துக்கு முன்பு இரு வழித்தடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஒன்று மண்டபம் அருகே. இரண்டாவது – பாம்பன் அருகே. முதல் வழித்தடத்தை 1956-ல் பரிந்துரைத்த எ.ஆர். ராமசாமி முதலியார், ஆதாம் பாலத்தை (அதாவது ராமர் பாலத்தை) இடிக்க வேண்டாம் என்று பரிந்துரை செய்துள்ளார்.

வாஜ்பாய் அரசில் 3-வது வழித்தடம் பரிந்துரைக்கப்பட்டது. அது கோதண்டராமர் ஆலயத்தைப் பாதிக்கும் என்பதால் எதிர்ப்பு கிளம்பி கைவிடப்பட்டது.

பிறகு 4-வது வழித்தடம் கோதண்டராமர் கோயிலுக்கும் எஞ்சியுள்ள தனுஷ்கோடி பகுதிக்கும் இடையே உள்ள ஆளில்லா நிலப்பகுதியில் தோண்டப் பரிந்துரைக்கப்பட்டது. இது நேரடியான பாதை. குறைந்த தூரம், குறைந்த செலவு. இரு பகுதியிலும் உள்ள நிலப் பகுதிகள் சுவர்போல அமையும். ராமர் பாலத்துக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.

பக்தியின் அடிப்படையிலும் அறிவியல் முன்னேற்றத்தின் அடிப்படையிலும் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்; ஆனால் அது ராமர் பாலத்துக்குப் பாதிப்பு இல்லாத வகையில் நான்காவது வழித்தடத்தில் அமைய வேண்டும் என்பதுதான் இந்துமதத்தில் நம்பிக்கையுள்ள பெருவாரியான மக்களின் விருப்பம். பெரும்பான்மை விருப்பத்திற்கு மாறாகத்தான் செயல்படுவோம் என்று இவர்கள் மார்தட்டினால், மக்களாட்சித் தத்துவத்தில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் பொருள். அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை மக்கள் மன்றம் தீர்மானிக்கும்.

(கட்டுரையாளர்: மாநிலத் தலைவர், பாரதீய ஜனதா கட்சி).

——————————————————————————————————————————

கடவுள் காப்பாற்றட்டும்

Dinamani Editorial (Sep 21, 2007)

ஏதாவது கேட்டால், கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், வேறு எதையாவது சொல்லி கேள்வியைத் திசைதிருப்புவது என்பது முதல்வர் கருணாநிதியின் வாடிக்கை. ராமர் பற்றி விமர்சித்து இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் நீங்கள், ஏசுநாதர் பற்றியோ, நபிகள் நாயகம் பற்றியோ விமர்சிப்பதில்லையே என்ற கேள்விக்கு, “”ராமர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம்; ஆரிய-திராவிடப் போராட்டத்தின் கதைதான் ராமாயணம்; நேரு சொன்னார், ராஜாஜி சொன்னார் என்று எதைஎதையோ சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் சொல்லி எங்கெங்கோ விஷயத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்.

பகுத்தறிவுவாதம், இறைமறுப்பு என்பன போன்ற விஷயங்கள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விருப்பம். இவையெல்லாம் திராவிட அரசியல் உலகுக்கு எடுத்துரைத்த புதுக்கருத்தல்ல. சொல்லப்போனால் பொதுவுடைமைவாதிகளிடமிருந்து திராவிட இயக்கங்கள் அரைகுறையாகக் களவாடிய விஷயங்கள்தான் இவை. திராவிட இயக்கத்தினரைப்போல ஊருக்குப் உபதேசிக்காமல், பகுத்தறிவுவாதத்தையும் இறைமறுப்பையும் வாழ்க்கைநெறியாகவே கடைப்பிடிப்பவர்கள் பொதுவுடைமைவாதிகள்தான்.

இறைமறுப்பு என்பது இந்து மதத்தின் பல்வேறு தத்துவங்களில் ஒன்று என்பது மட்டுமல்ல, எத்தனையோ ஞானிகளும் சித்தர்களும் சமயக்குரவர்களும் சொல்லிவிடாத பகுத்தறிவுவாதத்தையும் இறைமறுப்பையும் வேறு யாரும் சொல்லிவிடவும் இல்லை. அவர்களைப் பொருத்தவரை அவை தத்துவம். முதல்வர் கருணாநிதியைப் பொருத்தவரை இவை மூன்றாம்தர வாக்கு வங்கி அரசியல்.

வால்மீகி எழுதிய ராமாயணம் என்கிற காவியத்தின் கதாநாயகன்தான் ராமர். “நானும் எத்தனையோ கதைகள் எழுதியிருக்கிறேன். அதில் வரும் கதாநாயகர்களைப்போல ராமனும் ஒரு கதாநாயகன்தான்’ என்கிறார் முதல்வர் கருணாநிதி. இவர் எழுதிய “அவன் பித்தனா, பூமாலை, மறக்க முடியுமா போன்ற படங்களின் கதாநாயகர்களின் பெயர் என்ன என்று கேட்டால் அந்தப் படத்தைப் பார்த்த எத்தனை பேருக்கு இப்போது ஞாபகம் இருக்கும்? களவொழுக்கத்தை மட்டுமே மையப்படுத்தி எழுதப்பட்ட இவரது கதைகளை இப்போது பார்த்தால் யாராவது ரசிப்பார்களா? ஆனால், ஆயிரக்கணக்கான வருடங்களாகத் திரும்பத் திரும்பச் சொல்லியும் எழுதியும் கேட்டும் பார்த்தும் திகட்டாத ஒரு காவியத்தை, இவரது களவொழுக்கக் கதைகளுடன் ஒப்பிடுவது எந்தவிதத்தில் நியாயம்?

ராமாயண காவியத்தில் எத்தனைஎத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் நமது முதல்வருக்குத் தெரியவில்லை. வால்மீகி ராமாயணத்தில் சோமபானம் அருந்தினார் ராமர் என்று ஒரு வரி இருப்பதாகவும் அதை விவாதிக்கத் தயாரா என்றும் கேட்கிறார் முதல்வர். ஏகபத்தினி விரதன் ராமன் என்பதெல்லாம் அவருடைய கவனத்தைக் கவரவில்லை என்றால் எங்கே கோளாறு?

“வேறு பாதையில் அமைந்தாலும் பரவாயில்லை. எந்தப் பாதை என்பதல்ல பிரச்னை. எங்களுக்குத் தேவை சேது சமுத்திரத் திட்டம் என்றும், ராமர் பாலத்தை இடித்தே தீர வேண்டும் என்று தான் வலியுறுத்தவில்லை என்றும் முதல்வர் கூறியிருக்கிறார். நல்லதொரு மனமாற்றம். வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

அப்படியானால் ராமர் பற்றிய சர்ச்சை ஏன்? தேவையில்லாமல் ராமரை முதல்வர் விமர்சிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? தன்னுடைய மூன்றாம்தர களவொழுக்கக் கதாநாயகர்களுடன் காவிய நாயகனான ராமரை ஒப்பிட வேண்டிய அவசியம் என்ன?

முதல்வர் கருணாநிதிக்கு ஒரு ராசி உண்டு. தனது சொந்த பலம், செல்வாக்கைவிட சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவரை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்திருக்கின்றன. ஒவ்வொருமுறை ஆட்சியில் அமரும்போதும், அவருக்குப் பேராதரவு உருவாகும். அவரை விமர்சித்தவர்கள்கூட, அவர் கனிந்துவிட்டார், மாறிவிட்டார் என்றெல்லாம் கூறி புளகாங்கிதம் அடைவார்கள்.

இவையெல்லாம் ஓரிரு ஆண்டுகளுக்குத்தான். பிறகு, தேவையில்லாத எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவார். அவரது ஆட்சி மக்களால் விரும்பப்படாத ஆட்சியாக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துவிடும். அந்த ராசி இந்தமுறையும் வேலை செய்யத் தொடங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது. கடவுள் காப்பாற்றட்டும்.

——————————————————————————————————————
இன்று சேது, நாளை எவரெஸ்ட்?

டி.ஜே.எஸ். ஜார்ஜ்
1920-களில் திராவிட இயக்கத்துக்குத் தூண்டுகோலாக இருந்த சுயமரியாதைக் கொள்கை எங்கே போனது? இன்றைக்கு திராவிட அரசியல்வாதிகளை ஆட்டிப் படைக்கும், தங்களை மட்டும் வளர்த்துக் கொள்ளும் போக்கு எப்படி உருவானது?

“திராவிட நாட்டில்’ அண்மைக்காலமாக எழுந்துள்ள மோதல் போக்குச் சூழல்களால்தான் இக் கேள்விகள் எழுகின்றன. கர்நாடகத்தில், குறிப்பாக பஸ் பயணிகள் எரிப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமான விரோத உணர்வு அரசியலை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

கர்நாடகத்தில் அரசியல்வாதிகளைச் சார்ந்து நின்று செயல்படும் காவல் துறை, இந்த விஷயத்தை மெத்தனமாகக் கையாண்டதால் நிலைமை மேலும் மோசமானது.

பெரும்பாலான மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் இத்தகைய மோசமான சித்து விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். தெலுங்கு- கங்கை, காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்னைகளில் தமிழக அரசு தனது அண்டை மாநிலங்களுடன் மோதல்போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான சர்ச்சையால் வகுப்புவாத உணர்வுகள் தூண்டப்பட்டதால், இந்த மோதல்போக்கு தேசிய அளவில் விரிவடைந்துள்ளது. ஆளும் திமுகவில் அதிகார மையமாகச் செயல்படும் குழுவினர், இந்தப் பிரச்னைகள் அனைத்திலும் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். தாங்கள் சொல்வதுதான் சரி, மற்றவர்கள் சொல்வது சரியல்ல என்பது இவர்களுடைய நிலைப்பாடு. இது சரிதானா?

ஒரு தலைமுறைக்கு முன்னதாக, ராமர்- சீதை கதாபாத்திரங்களைக் கலந்து “”கீமாயணம்” என்ற நாடகத்தை அரங்கேற்றினார் காலஞ்சென்ற நடிகர் எம்.ஆர். ராதா. இன்றைய சூழ்நிலையில் அதை நினைத்துகூடப் பார்க்க முடியாது. அது தேவையற்றதும்கூட.

1852-ல் “”மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன்” என்ற அமைப்பால் வடிவம் கொடுக்கப்பட்ட திராவிடக் கொள்கையில் சில முக்கிய அம்சங்களும் இருந்தன. 1920-களில் திராவிடக் கொள்கையானது மேலும் வலிமை பெற்றது; நீதிக் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு வழிகோலியது.

பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைதான் திராவிடக் கொள்கைக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது. பல்வேறு விஷயங்களில் பெரியார் மாறுபட்ட குணாதிசயங்களுடன் செயல்பட்ட போதிலும், நவீன இந்திய வரலாற்றை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். திராவிட அரசியல் வித்தியாசமாகவே இருந்தது. நீதிக் கட்சி வலுவாக இருந்த காலகட்டத்தில், நிலச் சீர்திருத்தம், பெண்கள் விடுதலை ஆகிய அடிப்படைக் கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அண்ணாவுக்கு, தெளிவான அரசியல் இலக்குகள் இருந்தபோதிலும், பள்ளிகளில் சரியான வரலாற்றைப் போதிப்பதற்காக இயக்கம் நடத்தினார்; 1950-களின் பிற்பகுதியில் சுமார் 20 ஆயிரம் திமுக தொண்டர்கள் பள்ளி ஆசிரியர்களாக மாறினர்.

தற்போதைய திமுக தலைமைக்கு இதுபோன்ற தொலைநோக்குப் பார்வை இல்லை. சிசுக் கொலைக்கு எதிராக பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த 20 ஆயிரம் திமுக தொண்டர்களை கிராமங்களுக்கு அனுப்பலாமே? தமிழகம் முழுவதும் சாதிகளின் பெயரால் நடைபெறும் தொடர் மோதல்களுக்கு முடிவு கட்ட பயிற்சி பெற்ற ஆண்களையும், பெண்களையும் கிராமங்களுக்கு அனுப்பலாமே? இதன்மூலம், சாதிய உணர்வுகளுக்கு முடிவு கட்ட உறுதி ஏற்கலாமே?

இந்தக் கேள்விகளுக்கு வாக்கு வங்கி என்ற தேர்தல் ஜனநாயகத்தில்தான் பதில்கள் பொதிந்து கிடக்கின்றன. வாக்குகளைப் பெறுவதற்கு சாதிதான் குறுக்கு வழி. பெண் சிசுக் கொலை, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை உள்ளூர் விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாமே தவிர, வாக்குகளைக் கவர்வதற்கு அவை எந்தவிதத்திலும் உதவாது.

காவிரி நீர், தமிழகத்துக்கு புதிய ரயில்வே கோட்டங்கள் போன்ற எளிதான உணர்வுப்பூர்வமான விஷயங்கள் மூலம் பெருவாரியான மக்களின் வாக்குகளைக் கவர்ந்துவிட முடியும் என்பதால், மற்றவற்றைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள திமுக அமைச்சர்கள், தமிழகத்துக்கு மட்டுமேயான மத்திய அமைச்சர்களாகத்தான் செயல்படுகின்றனர். சேது சமுத்திரத் திட்டத்துக்காகக் கடலை ஆழப்படுத்துவதற்கு டி. ஆர். பாலுவிடம் ஏராளமான காரணங்கள் இருக்கலாம். ஆனால், இயற்கையின் போக்கை மாற்ற நினைத்தால் பேரழிவு ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

கடற்கரை மணலைத் தோண்டுவதாலும், அலையாத்திக் காடுகளை அழிப்பதாலும் நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு நமக்குக் கற்றுத் தந்த பாடம். இந்த பாடத்தை நாம் கற்றுக் கொண்டோமா?

எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் உயரத்தை சில நூறு அடிகள் வெட்டிக் குறைத்தால், அந்த மலைப் பகுதியில் அதிக லாபம் ஈட்டித் தரும் சுற்றுலா மையங்கள் உருவாகலாம். எவரெஸ்ட் சிகரப் பகுதியை வெட்டுவதற்கு இந்த ஒரு காரணம் மட்டும் போதுமா? எவரெஸ்ட் தமிழகத்தில் இல்லாமல் போனதற்காக நாம் நன்றி சொல்ல வேண்டும்.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

———————————————————————————————————–
“ஒரு மணி 45 நிமிடத்தை மிச்சப்படுத்த ரூ. 4 ஆயிரம் கோடி செலவா?’

சென்னை, செப். 29: சேது சமுத்தி ரக் கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்து மேற்கொள்வதன் மூலம் 1 மணி 45 நிமிடத்தை மட் டுமே மிச்சப்படுத்த முடியும்.
இதற்கு ரூ. 4 ஆயிரம் கோடி செலவு செய்ய வேண்டுமா? என இந்தியக் கப்பல் படையிலிருந்து ஓய்வுபெற்ற கேப்டன் பாலகிருஷ் ணன் கேள்வி எழுப்பினார்.
சேது சமுத்திர கப்பல் கால்வாய் எதிர்ப்பு இயக்கம் சார்பில் சென் னையில் வெள்ளிக்கிழமை சேது சமுத்திரம் குறித்த அறிவியல், பொருளாதார ரீதியான நிலைத் தன்மை குறித்த விவாதம் நடத்தப் பட்டது. இதில் பங்கேற்ற அவர் பேசியது: சேது சமுத்திரக் கால்வாய் திட் டத்தின் மூலம், கோல்கத்தாவிலி ருந்து தூத்துக்குடிக்கு கப்பல் போக்குவரத்துக்கான தூரத்தை 340 கடல் மைல்களாகவும், சென் னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல 434 கடல் மைல்களாகவும் குறைக்க முடியும் என இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள் ளது.
பொதுவாக ஒரு கப்பல் கோல் கத்தாவிலிருந்து இலங்கையைச் சுற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு செல்வதற்கு கடக்க வேண்டிய மொத்த தூரம் 1227 கடல் மைல் கள் ஆகும்.
இதே சேது சமுத்திரக் கால் வாய் மூலம் செல்ல, கடக்க வேண் டிய தூரம் 1098 கடல் மைல்கள் ஆகும். இதன் மூலம் கடக்க வேண்டிய தூரத்தில் 129 கடல் மைல்கள் குறைகிறது.
கப்பல் அதிகபட்சமாக ஒரு மணிக்கு 12 கடல் மைல்கள் வேகத் தில் செல்லமுடியும். இதன்படி கோல்கத்தாவிலிருந்து இலங்கை யைச் சுற்றிக்கொண்டு தூத்துக்கு டிக்குச் செல்ல 102.2 மணி நேரம் ஆகும்.
இதே சேது சமுத்திரக் கால்வாய் வழியாகச் சென்றால் 98.5 மணி நேரம் ஆகும். ஏனெனில், திட்டத் தின்படி, சேது சமுத்திரக் கால் வாய் 12 மீட்டர் அளவுக்குதான் ஆழப்படுத்தப்பட உள்ளது. இது போன்ற ஆழம் குறைந்த பகுதியில் கப்பல் செல்லும்போது, கப்பலின் வேகத்தை 50 சதவீதம் குறைக்க வேண்டும்.
மேலும் கால்வாய் வழியாக பய ணிக்கும் போது கப்பலின் பாது காப்புக்காக ஒரு மாலுமியை பணி யமர்த்தவேண்டும். இவர் கப்ப லில் ஏறி இறங்க குறைந்தது 2 மணி நேரம் ஆகும். இதன் மூலம் சேது சமுத்திரக் கால்வாய் வழியாக செல்ல மொத்தம் 100.5 மணி நேரம் ஆகும். இதன்படி 1 மணி 45 நிமிடங்கள் மட்டுமே குறைகிறது.
மொத்த தூரத்தில் 129 கடல் மைல்கள் குறைந்து, 1 மணி 45 நிமி டம் மிச்சமாவதற்காக ரூ. 4 ஆயி ரம் கோடியை செலவு செய்ய வேண்டுமா? மேலும் சேது சமுத்திரக் கால் வாய் வழியாக கப்பல் செல்லும் போது, அந்த கப்பல் நிறுவனத் துக்கு ரூ. 19 லட்சம் நஷ்டம் ஏற்ப டும். எனவே இந்தத் திட்டத்தால் எந்த பயனும் இல்லை என்றார் அவர்.
முழுமையான ஆய்வு மேற் கொள்ளப்படவில்லை: இந்தியப் புவியியல் ஆய்வுக் கழக ஓய்வு பெற்ற இயக்குநர் கே. கோபாலகி ருஷ்ணன் கூறியது: ஆதம் பாலம் அமைந்துள்ள பாக்.ஜலசந்தி-மன்னார் வளை குடா பகுதியில் பூகம்பம் வருவ தற்கு அதிக வாய்ப்புகள் உள்ள தென பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
அரசு கூறுவதுபோல் ஆதம் பாலம் வெறும் மணல் திட்டுக ளால் மட்டும் உருவாகவில்லை.
பல்வேறு நிலப்பரப்பு மாற்றங்க ளையும், கடலில் ஏற்படும் அதிர்வு களையும் உள்வாங்கி இந்தப் பகுதி ஒரு தடுப்பு அரணாக விளங்கிவரு கிறது.

இந்தப் படிவங்களில் பெரிய பிளவுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பிளவுகள் மூலம் அவ்வப் போது நகர்வுகள் ஏற்படும். இத னால் இதன் மேற்பரப்பில் கட்டப் படும் எந்தக் கட்டுமானங்களும் நிலைத்து நிற்காது.

சேது சமுத்திரக் கால்வாய் திட் டத்துக்காக, இந்தியப் புவியியல் ஆய்வுக் கழகம் மூன்று துளைகள் மட்டுமே போட்டு ஆய்வு செய் துள்ளனர். அதுவும் ஆதம் பாலத் தின் மீது ஒரு துளை மட்டும் போட்டு ஆய்வு செய்துள்ளனர்.

முழுமையான திட்டத்துக்கான ஆய்வு இதுவரை மேற்கொள்ளப் படவில்லை.
பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப் படும்: சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தால் பல்லுயிர் பெருக்கம் பெரிதும் பாதிக்கப்படும்.
ஆதம் பாலம் அமைந்துள்ள பாக்.ஜலசந்தி, மன்னார் வளை குடா கடல் உயிரிகள் வாழ்வதற்கு மிக ஏதுவான சூழ்நிலைக் காணப் படுகிறது. சுத்தமான நீர் உள்ள இந்தப் பகுதியில்தான் மீன்கள் இனப்பெருக்கத்தை மேற்கொள் ளும்.

எனவே ஆதம் பாலத்தின் ஒரு பகுதி தோண்டப்படுவதன் மூலம் அசுத்த நீர் கலந்து மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும்.
மேலும் சூறாவளி, சுனாமி போன்ற பேராபத்துகள் ஏற்படுவ தோடு, மழைப் பொழிவிலும் மாற் றம் ஏற்படும் என்றார் அவர்.

Posted in Anuman Palam, Backgrounders, Current state, Details, Hanuman Bridge, History, India, Islands, Ramar Palam, Ramayan, Ramayanam, Rameswaram, Sethu, Sethu Bridge, Sri lanka, Srilanka | குறிச்சொல்லிடப்பட்டது: , | 11 Comments »

Thanga Vettai compere Actress Vijayalakshmi Suicide – Background Details

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

சின்னத்திரை சீரியல் கதையை விட மகா சோகமானது நடிகை விஜயலட்சுமியின் நிஜக் கதை.

ஃபிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகம். அதன் பிறகு ஒரு சில தமிழ்ப் படங்கள். ஆனால், எதிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி பேர் கிடைக்கவில்லை.

மீண்டும் கன்னட பட உலகிற்குப் படையெடுத்தார். ஆனால், அங்கும் சினிமா வாய்ப்புகள் இவருக்குச் சரிவர கிடைக்கவில்லை. பிறகு, டி.வி. பக்கம் தாவினார். விதி அங்குதான் விளையாடிவிட்டது.

ரேடான் டி.வி. தயாரிக்கும் ‘தங்க வேட்டை’யின் கன்னட மொழி நிகழ்ச்சியின் தொகுப்பாளினி இவர்தான்.

நல்ல உயரம்… சுண்டி இழுக்கும் வடிவம்… முகத்தில் மாறா புன்னகை. கலகலப்பான பேச்சு… இத்தனை இருந்தும், அவரிடம் ஒன்று மட்டும் இல்லை. அது சினிமா உலகின் ‘நெளிவு, சுளிவு’ குணம். திரையுலகில் அட்ஜஸ்ட் என்றொரு வார்த்தை உண்டு. அ ந்த விஷயத்தில்தான் விஜயலட்சுமிக்குப் பிரச்னை. சினிமா உலகில் பிழைக்கத் தெரிந்தவர்களின் தாரக மந்திரமான இந்த விஷயத்தை, அவரால் ஏற்க முடியவில்லை. இதுதான், அவரை தற்கொலைவரை அழைத்துச் சென்றிருக்கிறது.

விஜயலட்சுமி சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பேட்டி எடுக்க முயன்றோம். ஆனால், பலத்த பாதுகாப்பு. டிரிப் கையில் ஏறிக் கொண்டிருக்க, வாடிய கொடிபோல், சுருண்டு படுத்துக் கிடந்தார் விஜயலட்சுமி. முகத்தில் சோகம் அப்பிக் கிடந்தது.

அவரிடம் இருந்து உண்மையான பிரச்னையை எப்படி தெரிந்துகொள்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், நமது தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தோம். ஒரு நடுத்தர வயதுக்காரர். ‘‘என்ன பிரஸ்ஸா?’’ என்றார்.

‘‘ஆம்’’ என்று தலையசைத்தோம். தன் பின்னால் தொடர்ந்து வரும்படி சைகை காட்டினார். ஆஸ்பத்திரியின் ஒதுக்குப்புறத்திற்குச் சென்றபிறகு, ‘‘நான் விஜயலட்சுமியை நன்கு தெரிந்தவன். நல்ல அருமையான பெண். சினிமாக்களில் நடிக்கும்போது நட்சத்திர ஹோட்டல்களில் தங்கினார். சினிமா வாய்ப்பு குறைந்து டி.வி. சீரியலில் தோன்ற ஆரம்பித்த பிறகு, அவருடைய ஆடம்பர வாழ்க்கை மாறி சாதாரண வீட்டில் குடியிருக்க வேண்டிய நிலை.

அப்பா, அம்மா அவருடனே இருந்தார்கள். சமீபத்தில் அவருடைய அப்பா இறந்துவிட்டார். இப்படி விஜயலட்சுமி வாழ்க்கையில் அடி மேல் அடி விழ ஆரம்பித்து விட்டது. இந்த நேரம் டி.வி. நிகழ்ச்சிதான் அவருக்கு ஒரு ஆறுதலாக இருந்தது. அப்போதுதான் ரேடான் நிறுவனத்தின் புரொடக்ஷன் மானேஜர் ரவிராதா மீது விஜயலட்சுமிக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி காதலித்தார்கள். ரவிராதா ராதிகாவுக்கு ஒருவகையில் தம்பி முறை வேண்டும்.

இவர்களுடைய காதல் ராதிகாவிற்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அவர் ஒரு நாள் இவர்கள் இருவரையும் அழைத்து, ‘‘இங்க பாரும்மா… அவருக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆயிடுச்சி, குழந்தையும் இருக்கு… அவரை நம்பி உன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதே’ என்று அட்வைஸ் பண்ணியிருக்கிறார்.

அதிலிருந்து விஜயலட்சுமிக்கும் ரவிராதாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ரவி ராதாவை விட்டு விஜயலட்சுமி விலகிவிட்டார்.

கடந்த இரண்டு மாதமாக இவர்கள் பேசிக் கொள்ளவில்லை, என்பதைப் புரிந்து கொண்ட, இயக்குநர் ரமேஷ், விஜயலட்சுமிக்குக் காதல் தூதுவிட்டுப் பார்த்தார். நடக்கவில்லை. பின்னர் மிரட்ட ஆரம்பித்து விட்டார். அதுவும் நடக்கவில்லை.

நிகழ்ச்சியை ஷ¨ட் பண்ணும்போது விஜயலட்சுமி நன்றாகத் தொகுத்து வழங்கினாலும் ஒன் மோர் ஷாட் என்பார். இப்படி பல முறை ரீடேக் வாங்குவார். ஒரு முறை 20 தடவைக்கு மேல் ஒரே ஷாட்டை ரீ டேக் வாங்கி டார்ச்சர் பண்ணியிருக்கிறார். கேமிராமேனே நல்லா இருக்குது சார். ஓகே என்றாலும், உன் வேலையைப் பாருடா என்பார்.

அந்த டைரக்டர் வைத்ததுதான் சட்டம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கும் எண்ணற்ற பார்வையாளர்கள் மத்தியில், தான் அவமானப்பட்டதாலும், தன் குடும்ப சூழ்நிலையையும் நினைத்துதான் அந்த அப்பிராணி பெண், தற்கொலைக்கு முயன்று விட்டார். உண்மையைச் சொன்னால் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கிறார், பாவம் சார்!’’ என்று கலங்கிய கண்களோடு சொன்னார் அந்த நபர்.

அவர் இப்படி சொன்னதைத் தொடர்ந்து, ராதிகாவிடம் பேச முயற்சித்தோம். முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை இந்த டி.வி. நடிகைகளின் தற்கொலை முயற்சிகள் ஒரு மெகா சீரியல் போல தொடர்ந்து கொண்டே போகிறது. எங்கு முற்றுப்புள்ளி விழும் என்றுதான் தெரியவில்லை.

_ திருவேங்கிமலை சரவணன்

Posted in Actress, Backgrounders, Details, Kannada, radaan tv, radan, Radhika, Ramesh, ravi radha, Suicide, Tamil, Thanga Vettai, Vijayalakshmi | 1 Comment »