Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Backgrounder’ Category

Dawood Ibrahim: India CBI vs Pakistan ISI in US of America’s CIA

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

———————————————————————————————————————–
தாவூத் இப்ராகிம் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு- பாகிஸ்தான் உளவுப்படை முடிவு

இஸ்லாமாபாத், ஆக.8-

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் தன்கூட்டாளிகள் சோட்டா ஷகீல், டைகர் மேமனுடன் பாகிஸ் தானில் பதுங்கி இருக் கிறான்.

இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு அவன் ஆயுத சப்ளைசெய்து வரு வதால் அவனை பிடித்து ஒப்படைக்கும்படி இந்தியா கடந்த 14 ஆண்டுகளாக பல தடவை கேட்டது.

கடந்த சில ஆண்டுகளாக தாவூத் இப்ராகிம் அல்- கொய்தா இயக்கத்துக்கு நிதி உதவி, ஆயுத சப்ளை செய்வதால், அவனை தங் களிடம் ஒப்படைக்க வேண் டும் என்று அமெரிக்க கூறி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தாவூத் இப்ராகிம் சோட்டா ஷகீல், டைகர் மேமன் ஆகிய மூவரையும் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ பிடித்து தன் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே தாவூத் இப்ராகிம் துப்பாக்கி சண் டையில் இடது காலில் காயம் அடைந்து கராச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் வெளியானது. இதனால் தாவூத் இப்ராகிம் பற்றி குழப்பம் ஏற்பட்டது. தாவூத் இப்ராகிம் தன் செல்போனை எடுத்து பேசாததால் அவர் பிடிபட்டு இருக்கலாம் என்று அவரது கூட்டாளிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்திய உளவுத்துறை இது வதந்தியாக இருக்கலாம் என்றது, என்றாலும் நேற்று காலை மத்திய அரசு, “தாவூத் இப்ராகிமை ஒப்படையுங்கள்” என்றும் பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்தது.

தாவூத் இப்ராகிம் பற்றி இந்திய தொலைக்காட்சிகள் வெளியிட்ட பரபரப்பு தகவல்களை வழக்கம் போல பாகிஸ்தான் மறுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்திë தொடர்பாளர் பிரீகேடியர்ஜாபித் இக்பால் சீமா கூறியதாவது:-

தாவூத் இப்ராகிம் என்ற பெயரில் யாரும் பாகிஸ்தானில் இல்லை. அந்த பெயருடைய யாரையும் பாகிஸ்தான் ராணுவமோ, போலீசோ கைது செய்யவில்லை. அவரை நாங்கள் கைது செய்ததாக வெளியான தகவல்களில் சிறி தும் உண்மை இல்லை.

இத்தகைய தகவலை பரப்பி விட்டது யார் என்று தெரியவில்லை. அதிபர்முஷ ரப் ஞாயிற்றுக்கிழமை முதல் கராச்சியில்தான் இருக்கிறார். இதனால் கராச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கராச்சியில் துப்பாக்கி சண்டை நடக்க வாய்ப்பே இல்லை. அப்படி நடந்திருந்தால் இவ்வளவு பெரிய நகரில் அதை எப்படி மூடி மறைக்க முடியும்ப

இவ்வாறு பிரீகேடியர் ஜாவீத் இக்பால் சீமா கூறினார்.

தாவூத் இப்ராகிம்பற்றி வெளியாகி வரும் முரண் பாடான தகவல்கள் துபாய், மற்றும் மும்பையில் உள்ள உறவினர்களையும், கூட் டாளிகளையும் தவிக்க வைத் துள்ளது. தாவூத், டைகர் மேமன், சோட்டாஷகீல் மூவ ரையும் கடந்த 3 தினங்களாக தொடர்பு கொள்ள இய லாததால் நெருங்கிய உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசீனாபர்க்கர் நேற்று குடும்ப உறுப்பினர் களுடன் சேர்ந்துநீண்ட நேரம் தொழுகையில் ஈடுபட்டார். அவர் கூறுகையில் “கடந்த சில தினங்களாக தாவூத்துடன் பேச முடியவில்லை. போன் தொடர்பு துண்டிக்கப்ப ட்டுள் ளது” என்று கவலையுடன் கூறினார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் போலீசார், தாவூத் இப்ராகிம் கைது செய்யப்பட்டுள்ளதை இன்று காலை உறுதி செய்த னர். போலீஸ் அதிகாரி ஒருவர் இது பற்றி கூறுகையில், “தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் ஐஎஸ்.ஐ. கைது செய்துள்ளது. ப.லுசிஸ்தான் தலைநகரான குயட்டாவின் புறநகரில் ஒரு பங்களாவில் அவர்கள் மூவரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

போலீசார் வெளியிட்டுள்ள இந்த தகவல் தாவூத் இப்ராகிம் குடும்பத்திலும் கூட்டாளிகள் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ் தான் வாயை திறந்து உண் மையை வெளியிடாத வரை இந்த விவகாரத்தில் குழப் பமே மிஞ்சும் என்ற நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் காதும் காதும் வைத்தது போல மிக ரகசியமாக அமெ ரிக்காவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் முடிவு செய் துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆப் கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்திடம் அவர்களை பாகிஸ்தான் உளவுத்துறை ஒப்படைக்கும் என்று கூறப்படுகிறது.

இது சாத்தியப்படாதபட் சத்தில் தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், சோட்டாஷகீல் மூவரையும் பாகிஸ்தான் உளவு அமைப்பே சுட்டுக் கொன்று விடும் என்று தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கடுமையான நெருக்கடியால் முஷரப் அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

கடந்த 14 ஆண்டுகளாக இந்தியா கேட்டபோது பாகிஸ் தான் தாவூத் எங்களிடம் இல்லை, இல்லை என்று சாதித்து விட்டது. ஆனால் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம் தாவூத் இப்ராகி மின் அல்-கொய்தா தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபித்தது.

இதனால் நெருக்கடிக்குள் ளான பாகிஸ்தான், தாவூத் இப்ராகிம் தலைவலியாக மாறிவிட்டதால் அவன் கதையை முடித்து விடலாம் என்ற உச்சக்கட்ட முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தாவூத் இப்ராகிமுக்கு சர்வதேச அளவில் பரம எதிரியாக இருப்பவன் சோட்டா ராஜன். இவனும் மும்பை நிழல் உலக தாதாக் களில் ஒருவன் ஆவான். சிங் கப்பூரில் பதுங்கி இருக்கும் இவன் கூறியதாவது:-

தாவூத் இப்ராகிம் பாகிஸ் தானில்தான் இருக்கிறான். அங்கு முகத்தை சர்ஜரி செய்து மாற்றி உள்ளான். அடிக்கடி ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு போய் வருகிறான்.

என் துப்பாக்கி குண்டுகளுக் குத்தான் அவன் சாக வேண் டும். என்னுடைய இந்த லட் சியம் நிறைவேறும் வரை நான் ஓய மாட்டேன்.

இவ்வாறு சோட்டா ராஜன் கூறினான்.
———————————————————————————————————————–
13 ஆண்டுகள் தலைமறைவு- மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுடன் கைது

மும்பை, ஆக. 7-

1993-ம் ஆண்டு 300 பேரை பலி கொண்ட மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு “மூளை” யாக இருந்து சதி திட்டத்தை நிறை வேற்றியவன் தாவூம் இப்ராகிம்.

மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்த இவன் மும்பையில் குண்டுகள் வெடிப்பதற்கு முந்தின நாளே கூட்டாளிகளுடன் துபாய் வழியாக பாகிஸ் தானுக்கு தப்பிச் சென்று விட்டான்.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் அவன் தங்கி இருந்தான். அவனுக்கு தேவையான எல்லா வசதி களையும் பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் உளவுத் துறையும் செய்து கொடுத்தது. பல ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் வைத்துள்ள தாவூத் இப்ராகிம் கடந்த 13 ஆண்டுகளாக கராச்சியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

இதைக்கண்டு பிடித்த இந் திய உறவுத் துறை கராச்சி யில் இருக்கும் தாவூத் இப் ராகிமையும், அவன் கூட் டாளிகளையும் கைது செய்து ஒப்படைக்குமாறு வேண்டு கோள் விடுத்தது. இதை ஏற்க மறுத்த பாகிஸ்தான் அரசு, தாவூத் இப்ராகிம் என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டில் யாரும் இல்லை என்று அறிவித்தது. கடந்த 13 ஆண்டுகளாக தாவூத் இப்ராகிம் பற்றிய எல்லா தக வல்களையும் பாகிஸ்தான் மறுத்தே வந்தது.

கடந்த 2005-ம் ஆண்டு தாவூத் இப்ராகிம் தன் மூத்த மகள் மக்ரூக் இப்ராகிமை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டட்டின் மகன் ஜுனையட் மியான்டட்டுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இதன் மூலம் தாவூத் இப்ராகிம் கராச்சியில் வாழ்வது உறுதி படுத்தப்பட்டது. அப்போதும் பாகிஸ்தான் தாவூத் இப்ராகிமை பிடித்து இந்தி யாவிடம் ஒப்படைக்க முன்வரவில்லை.

இதற்கிடையே உலக அள வில் பின்லேடனின் அல் கொய்தா பயங்கர வாதி களை ஒடுக்க தீவிர நடவடிக் கைகளில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தின் பார்வையில் தாவூத் இப்ராகிம் சிக்கினான். உலகம் முழுக்க “ஹெராயின்” போதை பொருட்களை வினியோகிக்கும் தாவூத் இப் ராகிமின் கும்பல், கடந்த சில ஆண்டுகளாக அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பல வகை களில் மறைமுக உதவிகள் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு தேவை யான ஆயுதங்களையும் வெடிப் பொருட்களையும் ரகசியமாக கடத்தி சென்று ஒப்படைக்கும் படுபாதக செயலை தாவூத் இப்ராகிம் கும்பல் செய்தது. அதோடு அல் கொய்தா இயக் கத்துக்கு அவன் நிதி உதவியும் செய்தான். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, தாவூத் இப்ராகிமை பிடித்து எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கோரிக்கை விடுத்தது.

இதற்கும் பாகிஸ்தான் வழக்கம் போல மழுப்பலான பதிலையே அளித்தது. தாவூத் இப்ராகிமுக்கும், அவனது கும்பலுக்கும் பாகிஸ்தான் அரசே அடைக்கலம் கொடுப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, அவர்களை கராச்சியில் இருந்து விரட் டும்படிமுஷரப்புக்கு நெருக்கடி கொடுத்தது.

இந்த நிலையில் கராச்சியில் உள்ள ரீஜெண்டு கிரவுன் பிளாசா ஓட்டலில் தாவூத் இப் ராகிமுக்கும், பிர்ரா ஜ×தீன் பவீசா என்ப வனுக் கும் இடையே கடந்த வியா ழக்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் தாவூத் இப்ராகிம் இடது காலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியா னது. இது உலகம் முழுக்க தாதா கும்பலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அத்தகைய சம்பவம் எது வும் நடைபெறவில்லை என்று கராச்சி போலீசார் மறுத்தனர்.

இந்த பரபரப்பு ஓய்வதற்குள் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் உளவுபடையிடம் சிக்கி உள்ள தகவல் நேற்றிரவு வெளியானது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ் தான் எல்லையில் உள்ள ஒரு ஊரில் தாவூத் இப்ராகிம் பதுங்கி இருந்த போது ராணுவத்தினரும், உளவுத் துறையினரும் அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர். உளவுத் துறையினர் அவனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

தாவூத் இப்ராகிமுடன் அவனது நம்பிக்கைக்குரிய கூட்டாளி சோட்டா ஷகீல் மற்றும் 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பை முன் நின்று நடத்திய டைகர் மேமனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் குவாட்டா நகரின் புறநகரில் உள்ள ஒரு பங்களாவில் பலத்த பாதுகாப்புடன் உளவுத் துறை வைத்துள்ளது. இது பற்றி சர்வதேச நாடுகள் கேட்டதற்கு வழக்கம் போல பாகிஸ்தான் மவுனம் சாதித்து

வருகிறது.தாவூத் இப்ராகிம் துப்பாக்கி சண்டையில் காயம் அடைந்துள்ளானாப அல்லது அவனை பாகிஸ்தான் உளவு படை பிடித்து வைத்துள்ளதா? என்பன போன்ற எதையும் பாகிஸ்தான் உறுதி செய்யவில்லை. இதில் பதில் கூறினால் தனக்கு நெருக்கடி ஏற்பட்டு விடும் என்று பாகிஸ்தான் அரசு பயப்படுகிறது. எனவே தாவூத் இப்ராகிம் பிடிபட்டுள்ளதை மூடி மறைக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

தாவூத் பற்றி வெளியாகும் தகவல்கள் வெறும் புரளி என்று இந்திய உளவுத்துறை கூறி உள்ளது. தாவூத்தை காப்பாற்ற பாகிஸ்தான் நாடக மாடுவதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.

என்றாலும் தாவூம் இப்ரா கிம் உளவுப்படையிடம் சிக்கி இருப்பதை மும்பை, துபாய், லண்டனில் உள்ள அவன் கூட்டாளிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். தாவூத் இப்ராகிமின் செல்போன்களில் இதுவரை அறிமுகம் இல்லாதவர்கள் பேசுவதால் அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தாவூத் இப்ராகிமின் செல்போனை எடுத்து பேசும் உளவுப் படையினர் மறு முனையில் பேசுபவரிடம் “உங்கள் பெயர் என்னப எங்கு இருந்து பேசு கிறீர்கள்ப சொல்லுங்கள். தாவூத்பாயிடம் சொல்லி விடுகி றோம்” என்றே சொல்கி றார்களாம்.

கடந்த 13 ஆண்டு தலை மறைவு வாழ்க்கையில் தாவூத் இப்ராகிமிடம் இருந்து இப்படி பதில் வந்ததே இல்லையாம். இதனால் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள், தொழில் நண்பர்கள் மிகவும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதற்கிடையே தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா மீண்டும் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து ஆயுத சப்ளை செய்து வருவதால் தாவூத் இப்ராகிம் நடவடிக்கையை முடக்குவதை மிக முக்கிய பணியாக இந்தியா கருதுகிறது.

அது போல உலக அளவில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு உதவுவதால் தாவூத் இப்ராகிமை பிடித்து தண்டிக்க அமெரிக்க ராணுவம் துடி துடித்துக் கொண்டு இருக்கிறது. இந்தியா, அமெரிக்கா இரண்டுமே தாவூத் இப்ராகிமை பெற சர்வதேச போலீஸ் உதவியை நாடி உள்ளன. ஆனால் பாகிஸ்தான் தன் மவுனத்தை கலைத்து தாவூத் இப்ராகிம் பற்றிய மர்மங்களை உலகுக்கு வெளிப்படுத்துமா என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது.
———————————————————————————————————————–

Posted in 1993, 9/11, AK-47, AK47, Al Qaida, Al Quaeda, Al quaida, al-Qaeda, Al-Queda, Al-Umma, America, Arabia, Arms, Arrest, Assets, Backgrounder, Baluchistan, Bharatiya Janata Party, Biosketch, BJP, Blast, Bombay, bombings, Bombs, CBI, Chhota, Chhota Rajan, Chhota Shakeel, Chota, CIA, Clifton, Clifton beach, Clifton Kahakasha, Cocaine, Commerce, Company, Criminal, Currency, Custody, D-company, Dawood, Dawood Ibrahim, dead, Dealer, Death, defence, Defense, Detained, Detainee, Don, Drugs, Dubai, Dutt, Estate, Extortion, extradition, Extremism, Extremist, Extremists, Faces, Fake, Finance, Gulf, Haseena, Haseena Parkar, Hasina, Havala, Hawala, Hindutva, Ibrahim, Illegal, India, Intelligence, Inter Services Intelligence, Interpol, Investigation, Iraq, ISI, Islam, Jama’at ud-Dawa, Justice, Karachi, Kovai, Law, Masjid, Memon, Military, Money, Movies, Mumbai, Murder, Musaraf, Musaraph, Musharaf, Musharaff, Musharaph, Musharraf, Muslim, Narcotics, Navy, NDA, Order, Pakistan, Parkar, people, Pervez, Pervez Musharraf, Police, Property, Quetta, Rajan, RSS, Saudi, Security, Shakeel, Smuggle, smuggler, Smuggling, Terrorism, terrorist, Terrorists, Tiger, Treaty, UAE, Underworld, UPA, US, USA, Weapons, WTC, Yakub, Yakub Memon | Leave a Comment »

Use of minors in wars & extremist forces – Worldwide Analysis & Report

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

போர்முனைக் “கேடயங்கள்’!

எஸ். ராஜாராம்

இலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 லட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் தெரிவிக்கிறது.

  • புரூண்டி,
  • காங்கோ,
  • ருவாண்டா,
  • லைபீரியா,
  • சோமாலியா,
  • சூடான்,
  • உகாண்டா

உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. “18 வயது நிரம்பும்வரை போர்முனைக்கு சிறுவர்களை அனுப்புவதில்லை’ என இந்த ஆயுதக் குழுக்கள் தெரிவித்தாலும் அது நம்பும்படியாக இல்லை.
உகாண்டாவை சேர்ந்த மக்கள் பாதுகாப்புப் படை என்ற ஆயுதக் குழு, 13 வயது நிரம்பிய சிறுவர்களைக்கூட அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் படையில் சேர்த்துக் கொள்கிறது. லத்தீன் அமெரிக்காவில் சுமார் 11 ஆயிரம் சிறுவர்கள் இரண்டு கெரில்லா படைகளில் உள்ளனர்.

ஆசியாவை பொருத்தவரை

  • இலங்கை,
  • ஆப்கானிஸ்தான்,
  • மியான்மர்,
  • இந்தியா,
  • இந்தோனேஷியா,
  • லாவோஸ்,
  • பிலிப்பின்ஸ்,
  • நேபாளம்

உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படையில் சேர்க்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக அனுப்பப்பட்ட 15 வயது சிறுவனை அரசுப் படையினர் பிடித்தனர். அந்தச் சிறுவன் மனித வெடிகுண்டு எனத் தெரியவந்ததும் அதிபர் ஹமீத் கர்சாய் பேரதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், பொது மன்னிப்பு அளித்து அந்தச் சிறுவனை அவனது தந்தையிடம் ஒப்படைத்தார். பாகிஸ்தானின் வரிஜிஸ்தான் பகுதியில் மதரஸôவுக்கு படிக்கச் சென்ற அந்தச் சிறுவனை தலிபான்கள் மனித வெடிகுண்டாக அனுப்பியிருந்தது பின்னர் தெரியவந்தது.

“”சிறுவர்களைப் படையில் சேர்ப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன” என்கிறார் குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி.

கடந்த ஜூன் 15-ம் தேதி கூட்டுப் படைக்கு எதிரான தலிபான்களின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கட்டடங்களும், பள்ளிக் குழந்தைகளும் தீவிரவாதிகளின் இலக்காகிவருவது கவலை அளிக்கும் விஷயம். மனித கேடயமாக சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.

18 வயதுக்கு குறைவான சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கும் வகையில் ஐ.நா. பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுவர்களுக்கு கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் யுனிசெப் உறுதிபூண்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா படையினருக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த மே 11-ம் தேதி கடும் எச்சரிக்கை விடுத்தது. சிறுவர்களைப் படையில் சேர்க்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே படையில் சேர்த்த சிறுவர்களை அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

சூடான் நாட்டில் இயங்கும் சூடான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்புக்கும், யுனிசெஃப்புக்கும் இடையே ஜூன் 11-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தனது படையில் உள்ள சிறுவர்களை விடுவிக்க சூடான் விடுதலைப் படை அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை யுனிசெஃப் வரவேற்றுள்ளது. எத்தனைச் சிறுவர்கள் விடுவிக்கப்படுவர் என உறுதியாகத் தெரியாவிட்டாலும், சுமார் 7000 சிறுவர்களை சூடான் விடுதலைப் படை விடுவிக்கும் எனத் தெரிகிறது.

ஆயுதக் குழுக்கள் ஒருபுறம் சிறுவர்களைச் சேர்ப்பது இருக்க பல நாடுகளில் அரசுகளே 18 வயது நிரம்பாத சிறுவர்களைப் படைகளில் சேர்க்கின்றன. 2004-ம் ஆண்டில் மியான்மர் அரசுப் படைகள் 12-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தன. இங்கிலாந்தில் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

இதுபோல அமெரிக்காவில் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், அவர்கள் 18 வயது நிரம்பும்வரை சண்டையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்தில் ராணுவச் சேவை கட்டாயம் என்பதால், மாணவப் பருவத்திலேயே சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுகின்றனர்.

மொத்தத்தில் ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் எல்லாம் சிறுவர்கள் கடத்தப்படுவதும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்படுவதும் வேதனை தரும் விஷயம். பள்ளி செல்ல வேண்டிய வயதில் சிறுவர்களை ஆயுதம்தாங்கி சண்டையிட அனுப்பும் தீவிரவாதக் குழுக்களை ஐ.நா. இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஐ.நா.வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதைத் தடுக்க வேண்டும்: ஏற்கெனவே தீவிரவாதக் குழுக்களில் இருக்கும் சிறுவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Posted in 18, abuse, Afghan, Afghanistan, Afghanisthan, africa, Age, AK-47, AK47, Ammunitions, Analysis, Arms, Backgrounder, Burma, Burundi, Child, Children, clash, Clashes, Colombo, Congo, Cyanide, Darfur, Data, Delhi, Dinamani, Extremism, Fights, Force, Guerilla, Hamid, Hindu, India, Indonesia, IPKF, Islam, kalashnikov, Karzai, Kids, Laos, Latin America, Leninist, Liberia, LTTE, Marxists, Minors, Moslem, Muslim, Mynamar, Nepal, Op-Ed, Opinion, Pakistan, Phillipines, Prabakharan, Prabhakaran, Protect, Protection, Report, rights, Rwanda, Somalia, Sri lanka, Srilanka, Statistics, Stats, Statz, Sudan, Suicide, Teen, Teenage, Terrorism, Terrorists, Thinamani, Uganda, UN, Underage, UNICEF, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War, Warlords, Weapons, Worldwide, Zaire | 1 Comment »

Director Tharani – Story behind the silver jubilee

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

ஒரு படம் கிடைக்க 18 வருஷம் டைரக்டர் தரணியின் போராட்டக் கதை

எத்தனை போராட்டங் களுக்குப்பிறகு ஒருவர் டைரக்டராக முடிகிறது- உதாரணம் `தரணி’

தில், தூள், கில்லி என மூன்று மெகா ஹிட்’ படங்களை கொடுத்தவர். ஆக்ஷன், கமர்சி யல் என்பது இவரது `ஸ்பெஷாலிட்டி’ என்பது தவிர ஒரு கால் ஊனமுற்றவர். கைப்பிடியுடன் தான் நடக்க முடியும்.

“ஒரு வித வைராக்கியத் தோட உழைச்சுக் கிட்டே இருக்கணும். ஓடி, ஓடி உழைச்சுக்கிட்டே இருக்கணும். என்னைக்காவது ஒரு நாள் அதுக்கு கூலி கிடைக்கும். 60 வயசுக்கு பிறகு பறவை முனியம்மாவுக்கு கிடைக்கலையாப என்கிற டைரக்டர் தரணிக்கு ஒரு படம் கிடைக்க 18 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

தரணி உங்களிடம் மனம் திறந்து பேசுகிறார்.

சின்ன வயசுலியே எனக்கு இந்த கால் ஊனம் வந்துட்டுது. போலியோ அட்டாக். இருந்தாலும் ஒரு கால் இல்லியேன்னு நான் நினைச்சு பார்த்தது கிடையாது. ஓடுவேன், ஆடுவேன் யாராவது பார்த்து “என்ன வரத்து வர்றான்னு” கேட்கிறப்ப தான் ஞாபகத்துக்கு வரும்.

விவரம் தெரிஞ்சப்பவே நான் பாரதிராஜா ரசிகன். ஒரு படம் விடமாட்டேன். அவ ரோட படங்கள் தான் எனக்கு `இன்ஸ்பிரேசன்’.

சினிமாவுல நுழையனும்னா எடிட்டிங், இசை, தொழில் நுட்பம் தெரிஞ்சிருக்கனும். அதுக்காக பிலிம் இன்ஸ்டிïட்ல சேர்ந்து படிச்சேன். மெயினா கத்துக்கிட்டது எடிட்டிங் தான்! செல்வமணி சாரோட முதல் படத்தை எடிட்டிங் செய்தது நான் தான்.

மணிரத்னம், ஆர்.வி.உதய குமார், திருப்பதி சாமின்னு நிறைய பேர்கிட்ட நான் ஒர்க் பண்ணினேன். நமக்கு ஒரு படம் கிடைக்காதான்னு ஒவ்வொரு படக்கம்பெனியா ஏறி, இறங்கினேன். எக்கச்சக் கத்துக்கும் ஏமாற்றம் தான் மிச்சம்.

அசிஸ்டென்ட் டைரக்டராக மட்டுமே 18 வருஷத்துக்கு வேலை பார்த்திருக்கேன். அப்பவெல்லாம் படாத கஷ் டம் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாம எவ்வளவோ திண்டாடி இருக்கேன். கல் யாணம் கட்டிக் கிட்ட மனைவி, கூடவே அம்மா, அப்பா, குடும்பம்னு எப்படியும் வாழ்ந்தாகனுமேப

இதுக்காகவே கீ போர்டு வாசிக்கிறது, மேடையில பாடுறதுன்னு கத்துக்கிட்டு `லைட் மிïசிக்’ ஆரம்பிச்சேன். என்னோட மேடையில தான் உன்னிகிருஷ்ணன், சுரேஷ் பீட்டர் லாம் முதன் முதலா மைக் பிடிச்சது.

ஸ்டேஜ்ல நான் பாடுறப்போ 250 ரூபா சம்பளம் கிடைக்கும். ஏதாவது விளம்பரம் படம் கிடைச்சுதுன்னா அங்க போய் `ஒர்க்’ பண்ணுவேன். இந்த வேலைதான் இல்லை. ஏதாவது கண்ணுக்கு தெரிஞ்சா ஓடிக்கிட்டே இருப்பேன்.

ஒரு வழியா 18 வருஷம் கழிச்சு ஒரு படம் கிடைச்சது. “எதிரும், புதிரும்”. அப்ப கூட நேரம் விடலை. ஆக்சிடென்ட் ஆகி கால் முறிஞ்சு போய், 4 மாசம் படுத்த படுக்கையில இருந்தேன். பிரகாஷ்ராஜ் சாரும், நெப்போலியன் சாரும் அப்ப உதவி செஞ்சாங்க.

இப்படி கால் முறிஞ்சு போச்சே. எங்கே சினிமா கனவு தகர்ந்து போகுமோன்னு நான் நினைக்கலை. உட் கார்ந்துக்கிட்டே `ஸ்கிரிப்ட்’ ஒர்க்” பண்ணலாமேன்னு நினைச்சேன்.

`எதிரும், புதிரும்’ படத்தை பல வருஷமா எடுத்தோம். மாயாவி வீரப்பனோட கதைய வச்சு எடுத்தோம். ஒரு செட்ïல் முடிச்சு வர்றத்துக்குள்ளே வீரப்பன் அடுத்த ஆளை கொன்னுருப்பான். கதையே மாறிடும். இப்படி படாதபாடு பட்டு ஒரு வழியா அந்த படத்துக்கு அரசு விருது கிடைத்தது மிகப் பெரிய ஆறுதல்.

நடக்க முடியாம கையில 2 `கிளட்ச்’ வச்சுக் கிட்டு இருந்த கால கட்டத்துல, என் ப்ரண்ட் ரவி மூலமா லட்சுமி புரொடக்ஷன்ஸ்சில படம் எடுக்க கதை கேட்கிறாங் கன்னு சொல்லி, நான் கதை சொல்லப் போனேன்.

பூர்ணசந்திரராவ், அஜய் குமார், டி.ராமராவ் மூன்று பேருமே எனக்கு தெய்வங்கள். கதை சொல்லப்போன என்னை டைரக்டராகவும் ஆக்கிட்டாங்க. அந்தப் படம் தான் `தில்’.

என்னை மாதிரி ஆளுக்கு 10 ரூபா கடன் தந்தாலே திருப்பித்தர முடியாது. என்னை நம்பி ஒரு படமே தந்தாங்களே!

லயோலா காலேஜ்ல நான் படிக்கும் போது விக்ரம் என் கிளாஸ்மேட். “டேய் நீ ஹீரோவாயிடு. நான் டைரக்டரா வந்துடறேன்’னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அது `தில்’லில் நடந்தது.

அவரும் என்னை மாதிரியே நிறைய போராடினவர். எந்தப் போராட்டத்தையும் நிறுத்த மாட்டார். எதிலும் ஜெயிக்கனும். எவ்வளவு நாளானாலும் சரின்னு நினைப்பார்.

`தில்’லுக்கு பிறகு ஏ.எம்.ரத்தினம் சார் `தூள்’ படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். மீண் டும் விக்ரமும், நானும் கூட்டணி.

எனக்கு ரொம்ப பயம். ஏதோ ஒரு படம் ஓடிருச்சு. இந்தப் படம் எப்படி வரும்னுப நேரா கும்பகோணம் போய் குலதெய்வத்த வேண்டிக் கிட்டு வந்தேன். அப்புறமா `கில்லி’ படம் வந்து அதுவும் அமோக வெற்றி.

எல்லோருமே ஜெயிக்க னும்னு நினைக்கிறவங்க தான். உழைப்பை தேடி ஓடிக்கிட்டே இருக்கிறவங்க தான் அதிர்ஷ் டம்ங்கிறது தானா ஒரு நாள் தேடி வரும் என்கிற தரணி ஆர்.வி.உதயகுமாருடன் `எஜமான்’ படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்த போது ஒரு நிகழ்ச்சி.

அந்தப் படத்தில் ரஜினி அங்க வஸ்திரத்தை ஸ்டைலாக தோளில் போட்டு நடை போட்டு வருகிற ஐடியாவைக் கொடுத்தது இந்த தரணிதான்! அதுவே இன்றுவரை ரஜினிக்கு ஒரு தனி இமேஜ் என்பது விசேஷம்.

Posted in Backgrounder, Barathiraja, Bharadhiraja, Bharathiraja, Biography, Biosketch, Chat, Chennai, Cinema, DFTech, Dharani, Dhil, Dhool, Dil, Editing, Editor, Ejamaan, Ejaman, Esamaan, Faces, Filmmaker, Films, Gilli, Institute, Interview, jubilee, Killi, Kodambakkam, Kollywood, Life, Manirathnam, Maniratnam, Movies, people, Rajini, Rajni, RV Udhayakumar, RV Uthayakumar, Selvamani, Story, Student, success, Technology, Telugu, Tharani, Thil, Thirupathisami, Thirupathysamy, Thool, Tollywood, Vikram | Leave a Comment »

Sakthi Vikadan – Samayapuram Mariyamman Temple: Backgrounder, Details

Posted by Snapjudge மேல் ஜூலை 19, 2007

தலங்கள்.. தகவல்கள்

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

சமயபுரம் மாரியம்மன்


சமயபுரம்& சக்தி திருத்தலங்களுள் குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் தலமாக விளங்குவது.

கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில் பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் மகாசக்தி பீடமாக விளங்குகிறது.

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள சமயபுரத் துக்கு நகரப் பேருந்துகள் அடிக்கடி உண்டு.

பழநிக்கு அடுத்து இரண்டாவதாக அதிக வருமானம் பெறும் தலம் சமயபுரம்.

உரிய காலத்தில் தேவையான& கேட்கும் வரம் தந்து காப்பவள் என்பதால், ‘சமயபுரத்தாள்’ என்பது இந்த அம்மனது அடைமொழி.

சோழ மன்னன் ஒருவன், தன் தங்கையைக் கங்க நாட்டு மன்னன் ஒருவனுக்கு மணம் முடித்து, அவர்களுக்குச் சீதனமாக ஒரு கோட்டையையும் நகரத்தையும் அளித்தான். அதுவே கண்ணனூர். பிற்காலத்தில் பாண்டியர் படையெடுப்பால் கோட்டையும் நகரமும் அழிந்தன. அந்த இடம் பின்னர் வேப்ப மரக் காடாயிற்று.

சமயபுரம் மாரியம்மன், ஆதியில் ‘வைஷ்ணவி’ என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடி கொண்டிருந்ததாகக் கூறுவர். இந்த அம்பாள், கோரைப் பற்கள் மற்றும் சிவந்த கண்களுடன் விளங்கியதால், அங்கு அப்போதிருந்த ஜீயர் சுவாமிகள், இந்த அம்மனை வேறோர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.

அதன்படி, சிலர் அந்தத் திருவுருவை எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கி கிளம்பினர். வழியில் ஓர் இடத்தில் இளைப்பாறினர் (அந்த இடம் தற்போது இனாம் சமயபுரம் எனப்படுகிறது!).

அவர்கள் கண்ணனூர் அரண்மனை மேட்டை அடைந்து, அம்பாள் திருவுருவை அங்கு ஓலைக் கொட் டகை ஒன்றில் வைத்து விட்டுச் சென்றனர். எனவே, அம்மன், ‘கண்ணனூர் அம்மன்’ என்றும், ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்றும் அழைக்கப்பட்டாள்.

இந்த நிலையில் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், தன் படைகளோடு கண்ணனூர் காட்டில் முகாமிட்டார். அப்போது அங்கிருந்த மாரியம்மனை வழிபட்ட மன்னர், போரில் வெற்றி பெற்றால், அம்மனுக்குக் கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார். அதன்படியே அம்மனுக்குத் திருக்கோயில் கட்டிய விஜயநகர மன்னர், பரிவாரத் தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ணசாமியையும் பிரதிஷ்டை செய்து, குடமுழுக்கு விழா நடத்தி, நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

தற்போதைய ஆலயம் கி.பி. 1804&ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.

‘சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோயில் இருந்திருக்க வேண்டும். இது பிந்தைய விஜய நகர மற்றும் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் சிறப்புப் பெற்றிருக்க வேண்டும்!’ என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சமயபுரம் கோயில் கொடி மரத்தை அடுத்துள்ள மண்டபத் தூண்களின் கீழ்ப் பகுதியில் நாயக்க மன்னர்களது உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள் ளன. எனவே, இந்தத் தலம் சுமார் 700 ஆண்டுகளுக்கு மேலாக சக்தித் தலங்களுள் ஒன்றாக விளங்குவதை அறியலாம்.

இந்த மாரியம்மன் கோயிலின் வடக்கே செல்லாயி அம்மன், போஜீஸ்வரன் மற்றும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி முக்தீஸ்வரன் கோயிலும் இடம்பெற்றுள்ளன.

மாயனின் சகோதரியான சமயபுரத்தாள், திருவரங்கத்திலிருந்து வந்தவள் என்பதால், இந்தக் கோயிலின் நிர்வாகமும் பல நூற்றாண்டுகளாக திருவரங்கம் கோயில் வசமே இருந்தது. பக்தர்களது முயற்சியால், 1984&ஆம் ஆண்டு முதல் சமயபுரம் மாரியம்மன் கோயில், தனி நிர்வாகத்துக்கு மாறியது.

பக்தர்களிடம் வசூலித்த பணம் மூலம் கிருபானந்த வாரியார் இந்தக் கோயிலுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தியுள்ளார்.

சமயபுரத்தாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு& மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும் தெற்கு& வடக்காக 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது.

மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோயில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிராகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. 2&ஆம் பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.

இங்கு ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அன்றைய கோயில் நிர்வாகத்தினர், இங்குள்ள அம்பாளின் உக்கிரத்தை தணிக்க, என்ன செய்யலாம் என்று ஸ்ரீகாஞ்சி பெரியவரின் ஆலோசனையை வேண்டினர். அதன்படி நுழைவாயிலின் வலப் புறத்தில், ஒரே சந்நிதியில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங் களாக மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அதன்பின் அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப் பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி 1970&ல் கும்பாபிஷேகம் செய்தனர்.

அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்கு மாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக் கிறார்கள். அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு.

சமயபுரத்தாளின் கருவறை மற்றும் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. இந்தப் பணிக்காக பக்தர்கள் காணிக்கை வழங்கிய தங்கத்தின் எடை 71 கிலோ& 127 கிராம். இத்துடன் 3 கிலோ& 288 கிராம் செம்பு பயன் படுத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.

உள்ளே அம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். அவளின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. இடக் காலை மடித்து வைத்துள்ளாள். கீழே தொங்க விட்டுள்ள வலக் காலின் கீழ் அசுரர்களது தலைகள் காணப்படுகின்றன. இவளின் எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி ஆகிய அலங்காரத்துடன், 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள் புரிகிறாள் சமயபுரத்தாள்.

சிவசக்தி சொரூபமாக வாழ்ந்த ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவியே, மாரியம்மனாக மாறினாள் என்பது கர்ண பரம்பரை கதை.

சிவபெருமான், மன்மதனை எரித்த வெப்பத்தின் அனல் தாங்காமல் தேவர்களும், மனித உயிர்களும் தவித்தனர். எனவே, அவர்கள் பார்வதியை வேண்டினர். அவள் அந்த வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டாள். அந்த சக்தி சொரூபமே சீதளாதேவி என்றும், மாரியம்மன் என்றும் வழங்கப்படுகிறது என்கிறார்கள்.

வசுதேவர்&தேவகி தம்பதியின் எட்டாவது குழந்தையான கண்ணன் யசோதை வீட்டுக்கும், நந்தகோபன்& யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கும் இடம் மாற்றப்படுகின்றனர். அந்தப் பெண் குழந்தையை சிறைக்கு வந்து கம்சன் கொல்ல முயன்றபோது, அவனிடம் இருந்து தப்பித்து வானில் உயர்ந்து, ‘உன்னைக் கொல்லும் எமன் கோகுலத்தில் வளர்கிறான்!’ என்று கூறி மறைந்தது அந்த மாயக் குழந்தை. மாயாதேவி எனப்படும் அந்தக் குழந்தைதான் மாரியம்மன் என்கிறார்கள். அவளே சமயபுரத்திலும் அம்மனாக விளங்குகிறாள் என்பதும் ஐதீகம்.

இந்த மாரியம்மனுக்கு மகமாயி, அகிலாண்ட நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசகி, கௌமாரி, காரண சௌந்தரி, சீதளதேவி, கண்ணபுரத்தாள் ஆகிய பெயர்களும் உண்டு.

சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம்.

கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

கோயிலின் முன் மண்டபத்தில் படுத்து உறங்குபவருக்கு அர்த்த ஜாமத்தில் அம்பாளின் கொலுசுச் சத்தம் கேட்கும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது. அம்மை நோய் தீர்க்கவும், நகர சாந்திக்காகவும் அம்பாள் இரவு நேரத்தில் வலம் வருவதாக ஐதீகம்.

காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

சமயபுரம் கோயிலின் தல விருட்சம், மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப மரம்.

இங்குள்ள பெருவளை வாய்க்கால் சிறப்பு மிகுந்த தீர்த்தமாக விளங்குகிறது. ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருக்குளம் மற்றொரு புண்ணிய தீர்த்தம். இதற்கு ‘மாரி தீர்த்தம்’ என்று பெயர்.

சமயபுரம் கோயிலில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்ட தங்க ரதம் ஒன்று உள்ளது. பக்தர்கள் காணிக்கையாக ரூ.700 கட்டினால், தங்க ரதத்தை இழுக்க அனுமதிக்கப்படுகின்றனர். திருவிழா இல்லாத நாட்களில் மட்டுமே தங்க ரதம் இழுக்க அனுமதிக்கப்படுகிறது. அப்போது அம்பாளுக்கு தங்கக் கவசமும் அணிவிக்கப்படும்.

இங்குள்ள அம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.

இந்த மாரியம்மனை அயோத்தி மன்னன் தசரதன் வழிபட்டதாகவும், அருகில் உள்ள ஓம்கார உஜ்ஜயினி காளி ஆலயத்துக்கு விக்கிரமாதித்ய மகாராஜா வந்து வழிபட்டதாகவும் கதைகள் உள்ளன.

உலகை ஆள்பவள் மாரியம்மன். என்றாலும், கண்ணபுரத்தின் காவல் மற்றும் எல்லை தெய்வம் செல்லாண்டி அம்மன். ஆகையால் இங்கு முதல் பூஜை அவளுக்குக் கொடுத்த பின்னரே ஏற்றுக் கொள்கிறாள் சமயபுரத்தாள்.

இங்கு, அம்பாள் சிவ ரூபமாகக் கருதப்படுவதால் விபூதி விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிற அம்மன் கோயில்களில் பண்டாரத்தார் பூஜை செய்வார்கள். இங்கு மட்டும் சிவச்சார்யர்கள் பூஜிக்கிறார்கள்.

விஜயநகரப் பேரரசின் காலத்தில் ஸ்தல விருட்சத்துக்குக் கீழே உள்ள புற்றில் நாகம் ஒன்று வசித்ததாம். அர்த்த ஜாம பூஜை முடிந்ததும் இந்த நாகம் கருவறைக்குச் சென்று அம்மனை பூஜிக்குமாம். அதனால் அம்மனின் நிர்மால்ய பூக்கள் கருவறைக்குள் சிதறிக் கிடக்கும். இந்தக் காட்சியை மறு நாள் உஷத்கால பூஜைக்கு கருவறைக்குள் நுழையும் அர்ச்சகர்கள் தவறாமல் காண்பது வழக்கமாம். காலப்போக்கில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமானதால், அந்த நாகம் வெளியே வருவதில்லையாம். அந்த இடத்தில் தற்போது கம்பிக் கதவு போட்டிருக்கிறார்கள்.

தைப்பூசத்தின்போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். கொள்ளி டம்தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதை தீர்த்தவாரி விழா என்பர். தை மாத பெருவிழாவின் 2&ஆம் திருநாளிலிருந்து 8&ஆம் நாள் வரை சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், குதிரை ஆகிய வாகனங்களில் அம்மன் உலா வருகிறார். 9&ஆம் நாள் தெப்பத் திருவிழா.

சமயபுரம் மகமாயிக்கு நடைபெறும் முக்கியமான விழாக்கள்: சித்திரை மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும் & தேர்த் திருவிழா, வைகாசி மாதத்தின் முதல் நாளன்று நடைபெறும் பஞ்சப் பிரகார விழா, மாசி மாதத்தின் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் விழா.

பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள்! இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த விரதம் துவங்குகிறது. பூச்சொரிதலின்போது அம்மனுக்கு பூக்கள் வந்து குவியும்.

விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட் களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டும் அதாவது சாயரட்சை பூஜையின்போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதிக்கப்படுகின்றன. இந்தக் காலத்தில் ஊர் மக்களும் அம்மனுடன் சேர்ந்து விரதம் இருப்பது வழக்கம்.

சித்திரை மாதத்தின் கத்தரி வெயிலில் அம்மை& வைசூரி போன்ற நோய்கள் மக்களுக்கு ஏற்படும். அந்த வெப்பத்தைத் தான் ஏற்றுக் கொண்டு, மக்களை குளிர வைக்கும் மாரித்தாயின் உடல் வெப்பத்தை தணிக் கவே, பக்தர்கள் அம்பாளுக்கு பூமாரி பொழிந்து, அவளை குளிரச் செய்கிறார்கள். அப்போது அயல் நாடுகளில் இருந்தும் பக்தர்கள் கூடை கூடையாகப் பூக்களை அனுப்பி வைக்கிறார்கள்.

பூச்சொரிதல் திருவிழாவையட்டி விக்னேசுவர பூஜை, புண்யாகவஜனம் முடித்த பிறகு முறைப்படி மாரியம்மனுக்குக் காப்பு கட்டுகிறார்கள். பிறகு, திருக்கோயிலின் தென்கரையிலுள்ள சுப்ரமணியசுவாமி கோயிலில் சிறப்புப் பூஜை செய்து, மூன்று யானைகள் மீது பூத்தட்டுகள் வைத்து திருக்கோயில் முன்மண்டபத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். தேரோடும் வீதிகள் நான்கின் வழியாகத் தேரடி வந்து, பின்னர் ராஜ கோபுரம் வழியாகப் பிரதட்சணம் செய்து, பூத்தட்டுகள் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

பங்குனி& சித்திரையில் 13 நாட்களுக்கு சித்திரைப் பெரு விழா நடக்கும். சித்திரை மாதம் முதல் செவ்வாய் தேரோட்டமும், அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை தெப்பமும் நடைபெறும். அப் போது முடி காணிக்கை, ஆடு, மாடு, கோழி காணிக்கை, அக்னி சட்டி எடுத்தல் ஆகிய நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப் படும்.

தேர்த் திருநாளில் பக்தர்கள் ஆற்றில் குளித்து ஈர உடையுடன் ஆற்று நீரைச் சுமந்து அம்மனின் பாதத்தில் ஊற்றிக் குளிர வைப்பர். வைசூரி அகலவும், மழை பொழியவும், பால் சுரக்கவும், வறுமை நீங்கவும் இது நம்பிக்கையுடன் செய்யப்படுகிறது. அன்றைய தினம் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

தேர்த் திருவிழாவின் எட்டாம் நாளன்று, சமயபுரத்தாள், இனாம் சமயபுரத்துக்குச் சென்று ஒரு நாள் இரவு தங்குகிறாள். 9&ஆம் நாள் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வருவார். பத்தாம் நாளில் திருவானைக்காவில் அருள் புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரர், மாரியம்மனுக்கு சீர்வரிசை அனுப்பி வைப்பார். அண்ணனிடமும், ஈஸ்வரனிடமும் சீர்வரிசை பெறும் அம்மன் இவள் மட்டுமே!

இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வணங்கிய பின்னரே, கண்ணனூர் சமயபுரம் மாரியம்மனை தரிசிப்பது சுற்றுப்புற கிராம மக்களது வழக்கம்.

சித்திரை மாத இறுதியில் தொடங்கி வைகாசி முதல் தேதி வரை பஞ்சப் பிராகார உற்சவம் நடக்கும்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய அபிஷேகங்கள் ஆடி& தை வெள்ளிக் கிழமைகள், சித்ரா பௌர்ணமி, நவராத்திரி ஆகிய தினங்களில் விசேஷமாகச் செய்யப் படுகின்றன.

புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை அன்று இங்குள்ள அம்மன் முன், புதிய மூங்கில் தட்டு ஒன்றில் பச்சரிசி, தேங்காய், பழம், வெற்றிலை& பாக்கு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து பூஜிக்கிறார்கள். அதன் பிறகு, அவற்றை அந்தணர்கள் அல்லது ஏழைகளுக்கு தானமாக அளிக்கிறார்கள் பக்தர்கள். இதனால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

இங்கு பக்தர்கள் ஈர உடை யுடன் அங்கப்பிரதட்சணம் செய்து, வழிபடுவதுடன், ஆடு, கோழி, தானியங்கள், உப்பு, வெல்லம் ஆகியவற்றுடன் நேர்ந்து கொண்ட வெள்ளியால் ஆன உறுப்புகளையும் தன்னைப் போன்ற மணி பொம்மையையும் காணிக்கை செலுத்துகின்றனர். மேலும், பக்தர்கள் மல்லாந்து படுத்துக் கொண்டு தங்களின் வயிறு மற்றும் கண்களில் மாவிளக்கு தீபம் ஏற்றி வைத்தும் அம்மனை வழிபடுகின்றனர்.

தாலி பலத்துக்காக சுமங்கலிப் பெண்கள் தாம்பூலம், வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை தானம் அளித்தால், அம்பாளே பெண்மணியின் உருவில் வந்து இவற்றைப் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிக்கிறாள் என்பது ஐதீகம்.

குழந்தைப்பேறின்மை, தொழில் பிரச்னை, ராகு&கேது தோஷம் உள்ளவர்கள் சமயபுர மகமாயியை தரிசித்தால், அவள் கண்டிப்பாக பலன் தருவாள் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை.

பிரபல சரித்திர நாவலாசிரியர் கோவி. மணி சேகரனுக்கு பார்வை குன்றியபோது இங்கு வந்து மனமுருகி பிரார்த்தித்தாராம். அதனால் மீண்டும் பார்வை பெற்றார் என்கிறார்கள். சமயபுரம் மாரியம் மனைத் துதித்து பாடல்கள் எழுதியுள்ளார் இவர்.

பார்வை இழந்த சிவந்திலிங்க சுவாமிகள் இந்த அன்னையின் மீது அருட்பாக்கள் பாடி கண்ணொளி பெற்றிருக்கிறார்.

அம்மை நோய் பீடித்தவர்கள் தங்கி குணம் பெற இங்கு தனி மண்டபம் ஒன்று உள்ளது. இந்த நோயாளிகளுக்கு தினமும் அம்மனின் அபிஷேகத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனால் விரைவில் நோய் குணமடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இங்கு உயிர்ப்பலி கிடையாது. அம்மனுக்கு மாவிளக்கும், எலுமிச்சம் பழ மாலையும் விருப்பமானவை.

நமது குறைகளை ஒரு காகிதத்தில் எழுதி, ஸ்தல விருட்சமான வேப்ப மரத்தில் கட்டி விட்டுப் பிரார்த்தித்தால், குறைகள் தீரும். இதற்கான மஞ்சள் காகிதங்களை ஆலய நிர்வாகமே விற்பனை செய்கிறது.

இங்கு ‘கரும்புத்தூளி எடுத்தல்’ என்ற விசேஷப் பிரார்த்தனை பிரசித்தம். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் நேர்ந்து கொள்வது இந்த வேண்டுதல். அன்னையின் அருளால் கருவுற்று, சீமந்தம் முடிந்த பின், சீமந்தப் புடவை& வேஷ்டியைப் பத்திரமாக வைத்திருப்பர். குழந்தை பிறந்ததும் ஆறாவது மாதத்தில் இதைச் செய்கிறார்கள். அன்று பத்திரப்படுத்திய துணிகளை மஞ்சள் நீரில் நனைத்து கரும்புத் தொட்டில் தயார் செய்து அதில் குழந்தையைக் கிடத்துகிறார்கள். அந்தத் தொட்டிலைப் பிடித்தபடி தந்தை முன்னே செல்ல, தாய் பின்தொடர மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனை செலுத்துகிறார்கள். துணிகளைப் பூசாரி எடுத்துக் கொண்டு, கரும்பை பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள்.

சமயபுர மகமாயிடம் அதிக பக்தி கொண்டவர் சூரப்ப நாயக்கர். இவர், ஒரு முறை அன்னையின் ஆசி பெறாமல் புதிய உற்சவர் விக்கிரகம் ஒன்று செய்து பிரதிஷ்டை செய்ய முயன்றார். அதற்குப் பல தடைகள் ஏற்பட்டன. இறுதியில் சூரப்ப நாயக்கர் கண்ணீர் மல்க அன்னையிடம் மன்றாடி மன்னிப்புக் கோரினார். அன்னை மனமிரங்கி அவருக்கு அனுமதி அளித்தாள். இன்றும் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் திருவீதி உலாவின்போது சூரப்ப நாயக்கர் செய்த விக்கிரகம் இடம் பெறுகிறது.

Posted in Backgrounder, Chola, Chozha, Details, Facts, Festival, God, Hindu, Hinduism, Mariamman, Mariyamman, Religion, Sakthi, Samaiapuram, Samaiyapuram, Samayapuram, Temple, Temples, Thiruchi, Thiruchirapalli, Thiruchirappalli, Thiruchy, Trichirappalli, Trichy, Vikadan, Vikatan | 3 Comments »

Sakthi Vikadan – Srivilliputhoor Andal Temple: Backgrounder, Details

Posted by Snapjudge மேல் ஜூலை 19, 2007

தலங்கள்… தகவல்கள்

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோயில்

ஸ்ரீவில்லிப்புத்தூரின் பெருமைகள் வராக புராணம்& ரகஸ்ய காண்டத்தில் ஒன்பது அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவராக அவதாரம் நிகழ்ந்த தலமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் கருதப்படுவதால், இதை ‘வராக «க்ஷத்திரம்’ என்பர். இதையட்டி, இங்கு ஸ்ரீவராகர் சந்நிதி திகழ்கிறது.

மதுரையிலிருந்து 74 கி.மீ. தூரத்திலும், விருதுநகரிலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது ஸ்ரீவில்லிப்புத்தூர்.

ஸீ தமிழக அரசின் அதிகாரபூர்வமான சின்னமாகத் திகழ்வது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆலய ராஜ கோபுரம். இந்தக் கோபுரத்தை தமிழக அரசின் சின்னமாக ஏற்பது என்று அன்றைய சென்னை மாகாண முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது. ‘மதச்சார்பற்ற நாட்டில் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்த கோயில் கோபுரத்தை அரசு சின்னமாக அறிவிக்கக் கூடாது!’ என்று சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போதைய பிரதமர் நேருஜி இது குறித்து ஓமந்தூராரி டம் விளக்கம் கேட்டார். ‘இந்தக் கோபுரத்தை சமயச் சின்னமாகப் பார்க்காமல், திராவிடக் கட்டடக் கலையின் எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்!’ என்று விளக்கம் அளித்தார் ஓமந்தூரார். இதன் பின் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் அரசின் சின்னமாக ஏற்கப்பட்டது.

வைணவ திவ்ய தேசங்கள் நூற்றியெட்டில் முதலாவது ஸ்ரீரங்கம். இது ஆண்டாளின் புகுந்த வீடு. கடைசித் தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர். இது அவளது தாய் வீடு. எனவே, ‘108 திவ்ய தேசங்களையும் மாலையாக அணிந்தவள்’ என்ற பெருமை ஆண்டாளுக்கு உண்டு.

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வார், குரோதன ஆண்டு, ஆனி மாதம், வளர்பிறை ஏகாதசியில், சுவாதி நட்சத்திரத்தில் ஞாயிற்றுக் கிழமை அன்று இங்கு அவதரித்தார். நள வருஷம், ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தசியில் பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய்க் கிழமை அன்று இங்கு அவதரித்தவள் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள். தவிர, வில்லிபாரதம் அருளிய வில்லிப்புத்தூரார், தருமபுரம் ஆதீனத்தை நிறுவிய குரு ஞானசம்பந்தர் ஆகியோரும் அவதரித்த புண்ணியத் திருத்தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர்.

சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு, பெரியாழ்வார் புஷ்ப கைங்கரியம் செய்யும் தனது நந்தவனத்தில் துளசி பாத்திக்கு அருகில், சர்வ லட்சணங்களும் பொருந்திய குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தார். குழந்தைக்கு கோதை என்று பெயர் சூட்டினார்.

பெருமாள் வழிபாட்டுக்காக தினமும் பெரியாழ்வார் தொடுத்து வைக்கும் மலர் மாலையை முதலில் கோதை சூடி மகிழ்வது வழக்கம். ஒரு முறை அதைக் கண்டு கோபம் கொண்ட ஆழ்வார் மகளைக் கடிந்து கொண்டார். அன்று இரவில் அவர் கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே எமக்கு உகந்தது!’ என்றருளினார். அது முதல் கோதைக்கு, ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி!’ என்று பெயர் உண்டாயிற்று.

திருமண வயதடைந்த ஆண்டாள், ‘அரங்கனைத் தவிர வேறு எவருக்கும் மாலையிட மாட்டேன்!’ என்றாள். பெரியாழ்வார் குழம்பினார். மீண்டும் அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் தெய்வப் பிறவி. அவளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று அருளி மறைந்தார். அதன்படி ஸ்ரீரங்கம் வந்த கோதை, காவிரிக் கரையை அடைந்ததும் காணாமல் போனாள். பெரியாழ்வார் கலங்கினார். கோதை தனக்குத் திருவடிச் சேவை செய்வதை பெரியாழ்வாருக்குக் காட்டினார் பெருமாள்.

ஆனால், ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்துதான் கோதையை மணம் முடிக்க வேண்டுமென்று பெரியாழ்வார் வேண்டினார். அதன்படி ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி ஒரு பங்குனி உத்திர நன்னாளில் கோதையை திருமணம் செய்து கொண்டார் பெருமாள் என்கிறது தல புராணம். இப்படி கோதை ஆண்டவனை ஆட்கொண்டதால் ஆண்டாள் எனச் சிறப்பிக்கப்பட்டாள்.

இப்போதும் சித்ரா பௌர்ணமி அன்று மதுரை தல்லாகுளத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர், ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் பரிவட்டங்களை அணிந்த பிறகே வைகையில் இறங்குகிறார்.

மு. ராகவையங்கார், ஆண்டாளது காலத்தைக் கணிக்க உதவும் அபூர்வமான வானியல் நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

வெள்ளி எழுதலும், அதே சமயம் வியாழன் உறங்குதலும் அபூர்வ நிகழ்ச்சி. 8&ஆம் நூற்றாண்டில் இம்மாதிரி நிகழ்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 731 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி அதிகாலை 3.50 மணி முதல் 4.00 மணிக்குள் அந்த மார்கழி பௌர்ணமியே திருப்பாவை தோன்றியதாக கூறப்படுகிறது. கி.பி.716 ஆம் ஆண்டு திரு ஆடிப்பூரத்தில் ஆண்டாள் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. தன் பதினைந்தாம் வயதில் (கி.பி.731) ஆண்டாள் திருப்பாவை இயற்றினாள் என்பர்.

ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் உள்ள வாரணமாயிரம் என்று தொடங்கும் முதல் பாடல் உட்பட 11 பாடல்களையும் கன்னியர் தினமும் பக்தியுடன் பாடினால் விரைவில் திருமணம் நிகழும்.

திருமலை ஐயங்கார் தன் அண்ணா வேங்கடம் ஐயங்காருடன் இணைந்து பெரியாழ்வாருக்குத் தனியே பெரிய சந்நிதி ஒன்றைக் கட்டினார். பெரியாழ்வாரின் திருமேனி சிதிலம் அடைந்தபோது அப்போதைய திருப்பதி ஜீயரது ஆணைப்படி பெரியாழ்வாரின் திருமேனியில் தங்கக் கவசம் சாற்றியவரும் திருமலை ஐயங்கார்தான். இதை இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.

இது இரட்டைக் கோயிலாக அமைந்துள்ளது. வட கிழக்கில் மிகப் பழைமையான வடபத்ரசாயி கோயில். மேற்கில் ஆண்டாள் திருக்கோயில். இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதே பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம். இங்கு ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்றும் அதன் முன்புறம் துளசி மாடம் ஒன்றும் உள்ளது. இங்கிருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாலோ, சிறிதளவு எடுத்துச் சென்று வீட்டில் பத்திரப்படுத்தினாலோ திருமணத் தடை நீங்கி செல்வம் சேரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மாடத்தின் அடியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

பெரியாழ்வார் ஸ்ரீஆண்டாளுடன் வாழ்ந்த வீடு ‘வென்று கிழியறுத்தான் வீதி’யில் உள்ளது. கி.பி. 14&ஆம் நூற்றாண்டில் மாவலி பாணாதிராயர் என்பவரால் இந்த வீடு திருக்கோயிலாக மாற்றப்பட்டது (ஆண்டாள் கோயிலின் கருவறை உட்பட அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றையும் மாவலி பாணாதிராயர் கட்டி யதாக கல்வெட்டுத் தகவல் கூறுகிறது). இதன் கருவறையில் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரங்க மன்னார் மற்றும் கருடாழ்வார் எழுந்தருளி உள்ளனர்.

11 நிலைகளுடன் 11 கலசங்கள் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜ கோபுரம், 196 அடி உயரமுடையது.

ஆண்டாளின் திருக்கோயில் முழுதும் கருங்கற்களால் ஆனது. கருவறை விமானத்தில் திருப்பாவை பாசுரங்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கல்யாண மண்டபம், துவஜஸ்தம்ப மண்டபம், ஏகாதசி மண்டபம் ஆகியன சிற்ப வேலைப்பாடு மிகுந்தவை.

ஒரே கல்லாலான பெரிய தூண் துவஜஸ்தம்பம். இதன் இரு பக்கங்களிலும் வேணுகோபாலன், ஸ்ரீராமர், விஸ்வகர்மா, நடன தாரகை, சூர்ப்பணகையைத் தாக்கும் லட்சுமணன், சரஸ்வதி, அகோர வீரபத்திரர், ஜலந்தரர், மோகினி, சக்தி ஆகிய சிற்பங்கள் உள்ளன.

ராஜ கோபுரத்தின் வடபுறம் ஏகாதசி மண்டபம், பரமபத வாயில் ஆகியவை உள்ளன. ஏகாதசி மண்டபத்தில் கர்ணன், அர்ஜுனன், குகன், சாத்தகி, ஊர்த்துவமுக வீரபத்திரன், நீர்த்தமுக வீரபத்திரன், ரதி, மன்மதன் ஆகிய சிற்பங்கள் கலை நயம் மிக்கன.

கோயில் ராஜ கோபுரத்தின் முன்புறம் இருப்பது பந்தல் மண்டபம். உள்ளே இடப் பக்கம் திருக்கல்யாண மண்டபம். இதில் ராமாயண நிகழ்ச்சிகளை விளக்கும் ஓவியங்கள் உள்ளன. அடுத்துள்ள அறை அணி மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம் காணப்படுகின்றன.

உட் பிராகாரத்தில் தேக்குமர வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது மாதவிப் பந்தல். அடுத்து மணி மண்டபம். இங்கு கம்பம் ஒன்றில், ஆண்டாள் முகம் பார்த்த வெண்கலத் தட்டு (கண்ணாடி) காணப்படுகிறது. இதை தட்டொளி என்பர்.

மகா மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற ‘வெள்ளிக் கிழமை குறடு’ என்ற மண்டபம் ஒன்று உள்ளது. இதன் தூண்களில் திருமலை நாயக்கர் மற்றும் அவரின் மனைவியர் இருவரது சிலைகள் உள்ளன.

அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற மஞ்சத்தில் இடக் கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் ரங்க மன்னார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார். கருவறையில் ஆண்டாள்& ரங்க மன்னார், கருடாழ்வார் (பெரிய திருவடி) ஆகியோர் சேவை சாதிக்கிறார்கள். திருவரங்கன், திருமணக் கோலத்தில் ராஜகோபாலனாக செங்கோல் ஏந்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூல விக்கிரகங்களுக்கு முன்னால் தங்கத்தாலான கோபால மஞ்சத்தில் உற்சவர்களாக இந்த மூவரும் எழுந்தருளி உள்ளனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் உற்சவர்& ரங்கமன்னார், ராஜ மன்னார் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில், இவர் மாப்பிள்ளைக் கோலத்தில் காட்சி தருகிறார். அப்போது அந்தக் கால நிஜார் மற்றும் சட்டை அணிவார். அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஆண்டாள்.

‘மன்னாருக்கு தொடை அழகு’ என்பர். ஆண்டாளின் மாலையை (தொடை& மாலை) அணிந்து கொண்டு அவர் காட்சி அளிப்பது உலகப் பிரசித்தம்.

ஸ்ரீநாச்சியார் திருக்கோயிலின் முதல் பிரகாரம் பெரியாழ்வாரது நெஞ்சகச் சுவராகக் கருதப்படுகிறது.அதில் 108 திவ்ய தேச மூர்த்திகளது திருவுருவம் வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. இதன் தென்கிழக்கு மூலையில் பெரியாழ்வார் வழிபட்ட ‘ஸ்ரீலட்சுமி நாராயணர்’ உள்ளார்.

2&ஆம் பிராகாரத்தில் மகாலட்சுமியும், அனுமனும் அருள் பாலிக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று இதன் வடக்கு வாசல் வழியே சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெரிய பெருமாள் சந்நிதியின் வடபுறம் சேவை நடைபெறும். இங்குள்ள கலைமகள் சிற்பத்தில் நாசியும், கால் பெருவிரல் நுனியும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது சிற்பக் கலையின் சிறப்புக்கு உதாரணம்.

நந்தவனத்துக்கும் வடபெருங் கோயிலுக்கும் இடையில் சக்கரத்தாழ்வார் சந்நிதி உள்ளது.

அந்நிய படையெடுப்பால் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க ஒரு முறை ஆண்டாள் திருவுருவை திருவனந்தபுரத்துக்கு எடுத்துச் சென்றனராம். அதுவரை அங்கு உக்கிரமாக விளங்கிய சக்கரத்தாழ்வார், ஸ்ரீஆண் டாள் வந்ததும் சாந்தம் அடைந்தாராம். பிறகு ஸ்ரீஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூர் திரும்பியபோது சக்கரத்தாழ்வாரும் உடன் வந்ததாகக் கூறுவர். ஸ்ரீசக்கரத்தாழ்வார் மூன்று கண்கள் மற்றும் 16 கைகளுடன் திகழ்கிறார். இவரின் பின்புறம் யோகநரசிம்மர் விளங்குகிறார். ஸ்ரீசக்கரத்தாழ்வார் கிரக தோஷங்களைப் போக்குபவர்.

வடபத்ரசயனர் கோயிலின் தரைத் தளத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அருள் பாலிக்கிறார். ஒரு காலத்தில் செண்பக வனத்தின் அடையாளமாக இங்கு விளங்கிய புற்றுக்கோயில், புனர் அமைப்பின்போது நீக்கப்பட்டு விட்டது. முதல் தளத்தின் கருவறையில் பள்ளி கொண்ட பெருமாள் அருள் பாலிக்கிறார். அவருடன் ஸ்ரீதேவி& பூதேவி, நாபிக்கமல பிரம்மா மற்றும் திருமாலின் திருப்பாதத்தின் அருகே வடபெருங்கோயிலை எழுப்பிய வில்லியும் கண்டனும் இடம்பெற்றுள்ளனர்.

கொடிமரத்துக்கும் ராஜ கோபுரத்துக்கும் இடையில் பெரியாழ்வார் மற்றும் ராமானுஜரின் சந்நிதிகள் உள்ளன.

தண்ணீர் பஞ்ச காலத்திலும்கூட இந்தத் திருக்கோயிலின் முன்புறமுள்ள நூபுர கங்கையில் நீர் வற்றுவது இல்லை. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பதை அறியவும் முடியவில்லை.

கருவறையில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி& பூதேவி சமேதராக உள்ள வடபத்ர சாயியை மூன்று வாசல்களின் வழியாக தரிசிக்கலாம். தலைமாட்டில் பிருகு முனிவரும், கால்மாட்டில் மார்க் கண்டேயரும் வணங்கி நிற்கின்றனர். மேலும் பஞ்ச மூர்த்திகள், தும்புரு, நாரதர், சனத்குமாரர், கின்னரர், சூரியன், சந்திரன், மது& கைடபர் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

சம்ஸ்கிருதத்தில் வடபத்ரம் எனப்படும் ஆலிலையில் பள்ளி கொண்ட பரமன் ஆதலால், இவர் ‘வடபத்ர சயனர்’ எனப்படுகிறார்.

கள்ளழகருக்கு நூறு குடம் வெண்ணெயும், அக்கார வடிசலும் சமர்ப்பிப்பதாக தனது விருப்பத்தை ஆண்டாள் பாடினாள். அதை ஸ்ரீராமானுஜர் நிறைவேற்றினார். பின்னர் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தபோது ‘என் அண்ணன் அல்லவோ!’ என்று அசரீரி ஒலியுடன் ஆண்டாள் விக்கிரகம் முன்னோக்கி நகர்ந்து ஸ்ரீராமானுஜரை வரவேற்றது.

தினமும் விடியற் காலையில் பிராட்டியின் சந்நிதியில் காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் திருப்பார்வை காரம்பசுவின் பின்புறம் விழும். தேவி தினமும் கண் விழிப்பது இப்படித்தான்.

ஆண்டாள் சூடிய மாலைக்குத் தனி மகத்து வமே இருக்கிறது. வேங்கடாசலபதியே இந்த மாலையை ஆசையுடன் அணிகிறாரே! வேங்கடேசன் மீது அளவற்ற பக்தி கொண்ட ஆண்டாள், அவரைத் துதித்து நாச்சியார் திருமொழியில் பாடினாள். இதனால் மகிழ்ந்த வேங்கடேசன், ஆண்டாள் அணிந்த மாலையை அன்புடன் ஏற்றுக் கொள்கிறார் என்கிறது புராணம். திருப்பாவையில் முதல் பத்தில் ‘அவன் திருநாமத்தைச் சொல்லு’ என்றும், இரண்டாவது பத்தில், ‘உயரியதான அவன் திருவடியை அர்ச்சனை செய்’ என்றும், கடைசி பத்து பாட்டுக்களில் ‘அவன் திருவடியில் உன்னை அர்ப்பணி’ என்றும் வலியுறுத்துகிறாள் ஆண்டாள்.

ஆண்டாளின் திருமணத்துக்கு பெருமாளை விரைவாகச் சுமந்து வந்தவர் கருடன். அதனால் அவர் இங்கு மாப்பிள்ளைத் தோழனாக பெருமாளின் அருகிலேயே இருக்கிறார்.

ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்கு சாத்தப்படுகிறது.

இங்கு ஆண்டாள் உலா வரும்போது, ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம்’ பாடப்படுகிறது. செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத் தோளில் கிளி. அன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீஆண்டாளுக்கு& இடத் தோளில் கிளி. இதைப் பிரசாதமாகப் பெறுவோர் பெரும் பாக்கியசாலிகள். இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளி மூக்கு& மாதுளம் பூ; மரவல்லி இலை& கிளியின் உடல்; இறக்கைகள்& நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்; கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்; கட்டுவதற்கு வாழை நார்; கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன். இப்படித் தயாராகிறது ஆண்டாள் கிளி. இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது.

ஆண்டாளின் கிளிக்குச் சொல்லப்படும் கதை: ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.

தான் அணிந்து கொண்ட பூமாலையுடன், கோதை இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம். அதனால் இங்குள்ள கிணறு ‘கண்ணாடிக் கிணறு’ என அழைக்கப்படுகிறது.

ஸ்ரீஆண்டாள் கோயிலின் திருக்குளம், கோயிலில் இருந்து சில தெருக்கள் தாண்டி வாழைக்குளத் தெரு முனையில் அமைந்துள்ளது. இதன் மேற்கு கரையில் எண்ணெய்க் காப்பு நீராடல் உற்சவ மண்டபமும், கிழக்குக் கரையில் தீர்த்தவாசி மண்டபமும் உள்ளன.

காலநேமி எனும் அசுரனை அழித்ததால், மகா விஷ்ணுவின் சக்ராயுதம் களங்கம் அடைந்தது. அதைத் தூய்மையாக்க கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் தங்களது தீர்த்தத்தை சக்ராயுதத்தின் மீது சொரிந்து புனிதமாக்கின. ஆண்டாள் நோன்பு இருந்தபோது உதவிய கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிப்பதால் இது ‘திருமுக்குளம்’ எனப்படுகிறது.

திருவிழாவின்போது ஆண்டாள் தைலம் தயாரிக்கப்பட்டு ஆண்டா ளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தப்படுகிறது.நல்லெண்ணெய், பசும் பால், தாழம்பூ, நெல்லிக்காய், இளநீர் போன்றவற்றுடன் சுமார் 61 மூலிகைகளை உள்ளடக்கிய இந்தத் தைலத்தைக் காய்ச்ச 40 நாட்கள் ஆகின்றன. இரண்டு பேரால் காய்ச்சப்படும் இதன் கொள்ளளவு சுமார் 7 படி. இதை ‘சர்வ ரோக நிவாரணி’ என்பர்.

சித்திரை& நீராழி மண்டப விழா, வைகாசி& வசந்த சேவை, ஆனி& பெரியாழ்வார் உற்சவம், ஆவணி& திருப்பவித்ர விழா, புரட்டாசி& பிரம்ம உற்சவம், ஐப்பசி& தீபாவளி, கார்த்திகை& சொக்கப்பனை, தை& கம்பர் விழா, மாசி& தெப்பத்திருவிழா என்று ஆண்டு முழுவதும் ஸ்ரீஆண்டாளுக்கு விழாக் கோலமே!

சித்திரையில் நெசவாளர் தரும் புடவையை ஆண்டாளுக்குச் சாற்றுவர். அன்று, நெசவாளர்கள் ஆண்டாளை சேவிப்பர். சித்ரா பௌர்ணமி அன்று வாழைக்குளத் தெருவில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில், நெசவாளர்கள் வந்து தொழுவர்.

மார்கழி& எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் போது ஸ்ரீஆண்டாள், தினமும் காலையில், பல பெருமாள்களின் திருக்கோலத்தில் நீராட்ட மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.

அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது. மார்கழி உற்சவத்தன்று முக்குலத்தோர் வீதி வழியே இரவுப் புறப்பாடு நடக்கும். அன்று, ஆண்டாள் வாழைக்குளத் தெரு மண்டபத்திலிருந்து வந்த வழியே திரும்பிச் செல்வது வழக்கம்.

ஸ்ரீஆண்டாளின் மடியில் ஸ்ரீரங்க மன்னார் படுத்திருக்கும் ‘சயன உற்சவம்’ அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலிலும், ஸ்ரீகிருஷ்ணரின் சயன உற்சவம் ஆண்டாள் கோயிலிலும் நடைபெறும்.

ஸ்ரீரங்கம் தலத்தில் நடப்பது போலவே இங்கும் ‘அரையர் சேவை’ நடைபெறுகிறது. அப்போது ஆழ்வார் பாசுரங்களைப் பக்தி சிரத்தையுடன், பாவம், லயம், இசை, சந்தத்துடன் பாடுகிறார்கள்.

மார்கழியில் சாற்று மறையின்போது ஆண்டாள் முன்பாக பதிமூன்று தீர்த்தக் காரர்களும், அரையர்களும், திருப்பள்ளி யெழுச்சி பாடக் காத்திருப்பர். மற்றொரு பக்கம் வேதபிரான் பட்டர்கள் நிற்பர். அப்போது அரையர்கள், தொண்டரடிப் பொடியாழ்வாரது பத்துப் பாசுரங்களைப் பாடித் திருப்பள்ளி எழுச்சி செய்கின்றனர். தொடர்ந்து பெரியாழ்வாருக்கும், சுவாமிக்கும் திருமஞ்சன சேவை நடைபெறுகிறது. பூசணிக்காய் மசியலும், பாசிப் பருப்புப் பொங்கலும் சுவாமிக்கு நிவேதனம் ஆகிறது.

மந் நாத முனிகள் பரம்பரையில் வந்த அரையருக்கு கோஷ்டி சேவா காலம் முடிந்த பிறகு, தீர்த்தம் வழங்கப் படுவது மரபு. அதன் பின்னரே அடியவர்களுக்குத் தீர்த்தமும், பிரசாதமும் வழங்குவர்.

மார்கழி மாதத்தில் 23&ஆம் நாளன்று வடபத்ரசாயிப் பெருமாள் முன்னால் திருப்பாவைப் பாசுரம் பாடி அரையர் சேவை துவங்குகிறது. ஆண்டாளைப் போலவே பாசுரம் பாடி அதன் பொருளை அபிநயத்தில் நடித்துக் காட்டுவர் அரையர். முதல் நாள் உற்சவத்தைப் பிரியாவிடை உற்சவம் என்பர். அதாவது பாவை நோன்பு நோற்க ஆண்டாள் விடை கேட்கிற மாதிரி அமைந்தது அது.

ஆடி ஐந்தாம் நாள் உற்சவம். அன்று இரவில் ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீரங்க மன்னார், ஸ்ரீநிவாசர், ஸ்ரீசுந்தர்ராஜன், திருத்தண்கால் அப்பன் ஆகிய ஐந்து பெருமாள்களும் அன்று கருட வாகனத்தில் எழுந்தருள்வர். அப்போது ஆண்டாளும், பெரியாழ்வாரும் அன்ன வாகனத்தில் எழுந்தருள்வர்.

ஸ்ரீஆண்டாளின் அவதார தினமான ஆடிப் பூரம் அன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராகக் கருதப்படும் இதில், சுமார் 1000 தேவ&தேவியர், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரது உருவங்களுடன் மகாபாரதம், ராமாயணக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தத் தேரை வடம் பிடித்து இழுக்க 3,030 ஆட்களாவது வேண்டுமாம். பெரிய தேர், ஆலயக் கோபுரத்தின் உயரத்திலிருந்து முக்கால் பங்கு உயரம் உள்ளது. வானமாமலை ஜீயரால் வழங்கப்பட்ட இந்தத் தேர் நவாம்சம் பொருந்தியது.

தேர்த் திருவிழாவன்று ஸ்ரீஆண்டாளும், ஸ்ரீரங்கமன்னாரும் இந்தத் தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். திருத்தேர், நிலையை அடைந்ததும் கோயில் முகப்பில் இருக்கும் சிங்கம்மாள் குறட்டுக்கும் பின்னர் நந்தவனத்தில் உள்ள திருப்பூர மண்டபத்துக்கும் எழுந்தருள்வார்கள். அங்கு அவர்களுக்கு திருமஞ்சனம், திருஆராதனம் ஆகியவை நடைபெறுகின்றன.

ஆடிப்பூர உற்சவத்தின் ஏழாம் நாள் அன்று ஸ்ரீஆண்டாள் ஒரு காலைக் கிடத்தி, மறு காலை மடக்கி அமர்ந்திருப்பாள். அவள் மடியில் தலை சாய்த்துப் படுத்திருக்கும் கோலத்தில் ஸ்ரீரங்கமன்னார் நமக்கு சேவை சாதிப்பார்.

இந்தத் தேரைத் தவிர மேலும் இரண்டு தேர்கள் இங்கு உள்ளன. ஆடிப்பூர உற்சவத்தின் முதல் நாள்& பதினாறு கால்கள் கொண்ட சப்பரத் தேர் வீதி உலா வரும். தஞ்சையிலிருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பனையோலை குருத்துக்களால் வடிவமைக்கப்படும் இந்த தேர், பக்தர்களுக்கு பதினாறு வகையான செல்வங்களையும் வழங்கக் கூடியது என்பது ஐதீகம்.

அடுத்தது& செப்புத்தேர். இதை ‘கோ ரதம்’ என்றும் அழைப்பர். பங்குனி மாதம் ஆண்டாள் திருக்கல்யாணம், ஆனி மாதம் பெரியாழ்வார் உற்சவம், புரட்டாசி மாதம் பெரிய பெருமாள் உற்சவம் ஆகிய நாட்களில் இந்தக் கோரதம் பவனி வருகிறது.

இந்த ஆலயத்தில் நடக்கும் பத்தாம் நாள் திருவிழா அன்று, ‘முத்துக் குறி’ எனப்படும் விசேஷமான நிகழ்ச்சியின்போது ஆண்டாளின் பிறந்த நாள் பலாபலன்களைச் சொல்வர்.

பங்குனி உத்தரத்தன்று ஸ்ரீரங்கமன்னார்& ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதன் ஐந்தாம் நாளன்று பஞ்ச கருட சேவை நடைபெறும். ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீநிவாசன், சுந்தரராஜன், திருத்தண்கால் அப்பன் ஆகியோர் ஆண்டாளை திருமணம் செய்யப் போட்டி இடுவர். இவர்களுடன் ஸ்ரீரங்கநாதரும் போட்டியில் கலந்து கொள்வார். முதலில் வரும் ஸ்ரீரங்கநாதரையே ஆண்டாள் திருமணம் முடிப்பாள். ஆண்டாளை திருமணம் முடிக்க வருபவர்களை பெரியாழ்வார் உபசாரம் செய்வதே பஞ்ச கருட சேவை.

பங்குனி திருக்கல்யாணத் தின்போது, திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதி கோயிலிலிருந்து பரிவட்டமும் (பட்டு), ஆடிப்பூரத் தேரோட்டத்துக்கு, மதுரை அழகர் கோயில் கள்ளழகர் திருக்கோயிலிருந்து பட்டுப் புடவையும் அனுப்பி வைக்கப்பட்டு ஆண்டாளுக்கு சாத்துப்படி செய்வது வழக்கம்.

பெரியாழ்வார் இந்த ஆலயத்தின் முதல் தர்மகர்த்தாவாகப் போற்றப் படுகிறார். அவர் தர்மகர்த்தாவாக இருந்த போது, ஸ்ரீஆண்டாளிடம் வரவு& செலவை ஒப்புவிப்பாராம்! இந்த நிகழ்ச்சி, வருடம்தோறும் ஆடி மாதம் 7&வது நாளில் ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தில் ‘நெல் அளக்கும்’ வைபவமாக நடைபெறுகிறது.

ஆண்டாளுக்கும் ஸ்ரீரங்கமன்னாருக்கும் திருமஞ்சன நீராட்டின்போது கட்டியம் கூறும் உரிமையை நிரந்தரமாகப் பெற்றுள்ளவர்களை ‘வேத பிரான் பட்டர்’ என்கிறார்கள். பெரியாழ்வாரின் சகோதரர் ஆதிகேசவரின் அபிமான புத்திரரான நாராயணதாசரின் வழிவந்தவர்கள் இவர்கள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் விசேஷம் அரவணைப் பிரசாதம். பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் இரவில் படைக்கப்படும் இதில் வடை, தேன்குழல் (முறுக்கு) அப்பம், புட்டு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பால் ஆகிய ஏழு வித பதார்த்தங்கள் இடம்பெறுகின்றன.

வடபத்ரசாயி கோயிலுக்கு அருகில் தெற்கு ரத வீதியில், திருமலை மன்னர் எழுப்பிய அரண்மனை ஒன்று உள்ளது. அதில் இன்று அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

ஸ்ரீஆண்டாள் நாச்சியார் குறித்து ஸ்வாமி வேதாந்த தேசிகன் இயற்றிய ‘கோதா ஸ்துதி’யில் 29 பாசுரங்கள் உள்ளன. 30 பாசுரங்களைக் கொண்ட ஆண்டாளின் திருப்பாவைக்கு இணையாக அமையக் கூடாது என்பதற்காக ஸ்வாமி வேதாந்த தேசிகன் இவ்வாறு அமைத்தாராம்.

திருமலை நாயக்கர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் நைவேத்திய நேரத்தைத் தெரிந்து கொள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை வரை ஒவ்வொரு மைல் தோறும் ஒவ்வொரு மணி மண்டபம் அமைத்திருந்தார். ஒவ்வொரு மண்டபத்திலும் இருக்கும் மணிகள் ஒலித்து நைவேத்திய நேரத்தை திருமலை நாயக்கருக்குத் தெரியப்படுத்தினவாம். அவற்றில் ஒன்று, மதுரை& ஸ்ரீவில்லிப்புத்தூர் சாலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது.

நாடகக் குழுவை நடத்தி வந்த கன்னையா, கடன் சுமை தாங்காமல் தற்கொலை முடிவுக்கு வந்தார். அவர் ஸ்ரீஆண்டாளை தரிசிக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தார். அன்றிரவு கனவில் தோன்றிய ஆண்டாள், தனது கதையை நாடகமாக்குமாறு அருளி மறைந்தாள்.

அப்படியே செய்தார் கன்னையா. அந்த நாட கத்தைக் கண்டு மகிழ்ந்த ஒருவர், நாடகக் குழுவைச் சிங்கப்பூர் அழைத்துச் சென்றார். கன்னையாவுக்குப் பொருளும் புகழும் சேர்ந்தது. இதற்கு நன்றிக் கடனாக யானை, ஒட்டகம் மற்றும் அபிஷேகத்துக்குத் தங்கக் குடம் என்று பல காணிக்கைகளைச் செலுத்தினார் கன்னையா. அவர் அளித்த குடம், ‘கன்னையா குடம்’ என்றே குறிப்பிடப்படுகிறது.

கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. ‘நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர்.

உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்?’’ என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?’ எனக் கேட்டனர். கம்பர், ‘‘திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!’’ என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.

Posted in Andaal, Andal, Backgrounder, Details, Facts, Hindu, Hinduism, Madurai, Periyaalvaar, Periyaalvar, Periyaalwar, Periyaazhwar, Periyaazwar, Periyalwar, Periyazhwar, Religion, Srirangam, Srirengam, Srivilliputhoor, Srivilliputhur, Temple, Temples, Thirupathi, Thirupathy, Tips, Tour, Tourist, Tower, Travel, Vaishnava, Vikadan, Vikatan, Villiputhoor, Villiputhur, Virudhunagar, Virudunagar, Viruthunagar | 4 Comments »

Joint management of airspace – Defence and the civil aviation ministry

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

வானில் ஓர் எல்லைப் பிரச்னை!

வி. கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவின் வான் பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பு வகிக்கும் பாதுகாப்புத் துறைக்கும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே தற்போது எல்லைப் பிரச்னை எழுந்துள்ளது.

இவை இரண்டும் தனித்தனித் துறைகள்தான் என்றாலும் இரண்டுக்கும் களம் (AIRSPACE) ஒன்றுதான். இமயம் முதல் இந்தியப் பெருங்கடல்வரையும், அரபிக்கடல் முதல் வங்காள விரிகுடாவரையும் பெரும்பாலான வான்பகுதி இந்திய விமானப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதிகளில் பறக்கும் விமானங்கள் அனைத்தும் பாதுகாப்புத் துறையின் அனுமதி இல்லாமல் செல்ல முடியாது. இதுதவிர நாட்டில் பல்வேறு பயிற்சித் தளங்கள் உள்பட சுமார் 60 இடங்களில் தரைத் தளங்கள் விமானப்படையின்கீழ் செயல்படுகின்றன.

இந்த விமானத் தளங்கள் உள்ள பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பல்வேறு பிரச்னைகள் எற்படுகின்றன. உதாரணமாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானில் பெரும் பகுதி, தாம்பரம் விமானப் படைத்தளம் மற்றும் அரக்கோணத்தில் கடற்படையின் விமான தளம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றின் எல்லைகளுக்கு அப்பால் மீதம் உள்ள வான்பகுதியை நம்பியே சென்னை விமான நிலையம் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய வான்பகுதி எல்லைப் பிரச்னை காரணமாக சென்னைக்கு கிழக்கே புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டமே கைவிடப்பட்டது.

நாட்டில் தற்போது 13 சர்வதேச விமான நிலையங்கள் உள்பட 126 விமான நிலையங்கள் உள்ளன. நாட்டின் மொத்த வான்பகுதியில் 28 லட்சம் சதுர கடல்மைல் (நாட்டிக்கல் மைல்) மட்டுமே விமானப் போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தவிர விமான நிலையங்கள் இல்லாத இடங்கள் உள்பட 28 விமானப் படைத் தளங்களில் சிவில் விமானங்களுக்கென தனிப் பகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிறிய விமான நிலையங்கள், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு இல்லாததால் விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டும் தற்போதைய தேவை மற்றும் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டும் விமானப் போக்குவரத்துக்கான புதிய வரைவுக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியது.

இதில், பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல வான்பகுதிகளை சிவில் விமானப் போக்குவரத்துக்கு அளிக்க வேண்டும். நாட்டின் வான் பகுதியில் விமானப் படையின் கட்டுப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில அம்சங்கள் பாதுகாப்புத் துறைக்கும் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே வெளிப்படையான மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

இதுதவிர, விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல், இந்தத் துறையின் செயலர், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் தொடர்ந்து வான் பகுதி தொடர்பான பிரச்னையில் பாதுகாப்புத் துறையை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் இத்தகைய வெளிப்படையான விமர்சனங்கள் பாதுகாப்புத் துறை தரப்பை ஆத்திரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி வரைவு விமானப்போக்குவரத்துக் கொள்கை தொடர்பான ஆட்சேபனைகளைப் பகிரங்கமாகத் தெரிவித்தார். விமானப்போக்குவரத்தில் பல்வேறு நிலைகளில் படிப்படியாகத் தனியார்மயத்தை ஊக்குவித்துவரும் விமானப்போக்குவரத்துத் துறையை நம்பி விதிகளை தளர்த்த முடியாது என்பதே அந்தோனியின் வாதம். பாதுகாப்புத் துறையின் எதிர்ப்பை அடுத்து விமானப் போக்குவரத்துக்கான வரைவுக் கொள்கை இறுதி வடிவம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் இரு முக்கியத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இத்தகைய பிரச்னைக்குத் தீர்வுகாண வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் பல்வேறு துறை அமைச்சர்கள் அடங்கிய உயர் நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 1999-ல் ஏற்பட்ட கார்கில் சண்டைக்குப் பின்னர் வான்பகுதி மேலாண்மைக்கான ஓர் அதிகார அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது. இத்திட்டம் முறையாக நிறைவேறாததே தற்போதைய பிரச்னைக்குக் காரணம்.

1995-ல் ரஷிய விமானங்கள் புருலியாவில் ஆயுதங்களைக் கொட்டின, 2001 செப்டம்பர் 11-ல் அமெரிக்காவில் உலக வர்த்தக மையம், ராணுவத் தலைமையகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த சிறிய ரக பயணி விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, அண்மையில் இலங்கையில் விடுதலைப்புலிகள் வான்தாக்குதலைத் தொடங்கி இருப்பது, சில பயங்கரவாத இயக்கங்கள் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பது ஆகியவை நாட்டின் வான்பாதுகாப்பு தொடர்பான கவலையை அதிகரித்துள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால்தான் நாட்டின் வான்பகுதி எல்லைப் பிரச்னைக்குச் சரியான தீர்வைக் காண முடியும். நாட்டின் பாதுகாப்பா, விமானப் போக்குவரத்து வளர்ச்சியா? என்றால் பாதுகாப்பான விமானப்போக்குவரத்து என்பதே அனைவரின் கருத்தாகும்.

விமானப்படை, விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் அடங்கிய வான்பகுதி மேலாண்மைக்கான ஒழுங்குமுறை ஆணையத்தை ஏற்படுத்துவதே தற்போதைய பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்பதே பல்வேறு தரப்பினரின் கருத்து.

Posted in AAI, Aeronautics, Air, Aircraft, Airforce, Airport, Airports, airspace, AK Antony, Analysis, Antony, ATC, Attacks, aviation, Backgrounder, Boeing, Cabinet, Civil, commercial, Courier, defence, Defense, Domestic, Eelam, Eezham, Fighter, Flights, Fly, Freight, Govt, HAL, IAF, International, Jets, Kargil, LTTE, Management, Marshal, Marshalls, Meenambakkam, MIG, Military, Navy, Op-Ed, Opinion, passenger, Patel, Pilots, Planes, Policy, Praful Patel, Protection, Share, Strategy, Terrorism, Thrisoolam, Trisoolam, World, Zone | Leave a Comment »

Sex, Pornography & Glamor in Tamil Cinema – TP Rajalakshmi to Sneha

Posted by Snapjudge மேல் ஜூலை 7, 2007

ஆபாசம் காட்டும் புதுமுகங்களுக்கு மத்தியில் கவர்ச்சி காட்டாமல் சாதனை படைத்த நடிகை: `சினேகா’ ஒரு சிறப்பு பார்வை 

1931-ல் முதன் முதலாக தமிழ் சினிமா பேசத் தொடங்கியது. படம்: “காளிதாஸ்”.

கண்ணையா கம்பெனி மூலம் முதன் முதலாக நாடக நடிகையாக ரசிகர்கள் முன்பு தோன்றிய டி.பி. ராஜலட்சுமிதான் தமிழ் சினிமா விலும் முதல் கதாநாயகி.

இதற்கு முன்பான காலகட்டத்தில் எல்லாம் ஏ.பி.நாகராஜன், வீராச்சாமி என பல ஆண்கள்தான் நாடகங்களில் பெண் வேடமேற்று நடித்துக் கொண்டிருந்தார்கள்.

“காளிதாஸ்” படத்தில் டி.பி. ராஜலட்சுமி அறிமுகமான போதே “மன்மத பானமடா… மார்பினில் பாயுதடா” என்ற பாடலுக்கு நெஞ்சை நிமிர்த்திக்காட்டி, காமிரா வழியாக ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்தார்.

இவரைப் போலவே தவமணிதேவி என்ற நடிகை பிராவே அணியாமல் தொள, தொள ஜாக்கெட்டுடன் மூடி மறைக்காமல் நடித்து “கவர்ச்சி பாம்” என்று பெயர் எடுத்தவர்.

கே.எல்.வி.வசந்தா என்ற நடிகைக்கு “ஒன்சைடு நடிகை” என்ற பெயரே உண்டு. புடவைத்தலைப்பால் ஒரு பக்கத்தை மூடி, மறுபக்கத்தை திறந்தே போட்டிருப்பதுதான் இவரது “ஸ்டைல்”.

இந்தக்கால கட்டத்தில் நடித்த டி.ஆர்.ராஜகுமாரி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, கே.பி. சுந்தரம்பாள், பத்மினி, விஜயகுமாரி, தேவிகா, அஞ்சலி தேவி என பல நடிகைகளை விட்டுவிட்டு இன்றைய நடிகைகள் அனைவருமே தவமணி தேவிகளாகவே காட்சி அளிக்கின்றனர்.

ஒருஜாண் டவுசரும், அரைஜாண் ஜாக்கெட்டும் தான் இவர்களது பிரதான “காஸ்ட்ïம்”கள்.

“உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் மேற்படி காஸ்ட்ïம் களை அறிமுகப்படுத்தி, தொடை காட்டி, பெயர் எடுத்து, பிள்ளையார்சுழி போட்டவர் நடிகை ரம்பா.

ஜோதிலட்சுமி, ஜெய மாலினி, சில்க் சுமிதா, டிஸ்கோ சாந்தி என கவர்ச்சி களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நடிகைகளை `கடாசி’விட்டு இப்போது கதாநாயகிகளே ஆடைகுறைப்பிற்கு தயாராகி விட்டார்கள்.

ஆபாசம் என்பது புதிய சினிமாக்களின் சாபம் போலவே ஆகிவிட்டது.

இத்தனைக்கும் இடையில் தமிழ் சினிமாவில் காவியத்துவ மான ஒரு நடிகை இருக்கிறார். பெயர்: சினேகா.

பெயருக்கு ஏற்றாற் போலவே வேறெந்த நடிகைக் கும் இல்லாத அளவுக்கு ரசிகர்களுக்கு இவர் மீது தனி சினேகம் உண்டு.

பெயர் வாங்குவதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் “இன்னமும் உடையை குறைத்துக்கொள்ள வேண்டுமாப” என்று கேட்கிற ஏராளமான நடிகைகளுக்கு மத்தியில், கதைக்கு தேவை என்று அடம்பிடித்தால்கூட கவர்ச்சி காட்டமாட்டேன் என்கிற தமிழ் கவுரவம் இன்றைய தேதியில் சினேகாவிடம் மட்டுமே!

இந்த ஒரே காரணத்தினால் சினேகாவின் கையை விட்டுப்போன படங்கள் ஏராளம். அதற்காக அவர் தனது நிலையை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவில்லை.

சினேகாவை இன்ன மும் நிருபர்கள் கேட்டுக் கொண்டுதான் இருக் கிறார்கள்.

“நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா?”

நானும் அதை விரும்ப வில்லை என்று. என் ரசிகர்களும் அதை எதிர்பார்க்க வில்லை” என்கிற பதில்தான் சினேகாவிடம்.

சினேகா பிறந்து வளர்ந்தது துபாயில் என்றாலும், பூர்வீகம் நம்ம “பண்ருட்டி”தான். அப்பா ராஜாராம். அம்மா பத்மாவதி.

ஷார்ஜாவில் உள்ள இந்தியன் ஹைஸ்கூலில் படித்து வந்த “சுகாசினி” “எங்கன நிலா பட்சி” என்ற மலையாளப் படம் மூலம்தான் சினேகாவாக சினிமாவுக்கு வந்தார். கதாநாயகன் “குஞ்சாக்கோ கோபன்”.

சினேகாவின் முதல் தமிழ்ப்படம் சுசி.கணேசன் இயக்கிய “விரும்புகிறேன்”. இந்தப்படம் சொன்ன தேதியில் ரிலீசாகி இருக்குமானால் முதல் படத்திலேயே சினேகா பரபரப்பாக பேசப் பட்டிருப்பார். அத்தனை யதார்த்தமான நடிப்பு!

சினேகாவை ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பிடிக்க வைத்த படம் “லிங்குசாமி”யின் “ஆனந்தம்”. இதில்வரும் “பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்” என்ற பாடலில் சினேகாவைப் பார்த்து முதன் முதலாக ரசிகர்கள் பரவசமடைந்தனர்.

என்னவளே, காதல் சுகமானது, பார்த்தாலே பரவசம், புன்னகைதேசம், பம்மல் கே.சம்பந்தம், உன்னை நினைத்து, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, கிங், ஏப்ரல் மாதத்தில், வசீகரா, பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என எந்தப் படத்திலும் சினேகா டூ பீஸ் உடையில் வரவில்லை. மனம் கிளுகிளுக்கும்படியாக மாராப்பையோ, தொப் புளையோ, தொடையையோ காட்டவில்லை.

இத்தனைக்கும் சினேகா “பார்த்திபன் கனவு” படத்தில் “சத்யா” என்ற 2-வது வேடத்தை முற்றிலும் மேக்அப்பே இல்லாமல் நடித்திருக்கிறார்.

சினேகாவின் மிகப்பெரிய பிளஸ் அவரது வசீகர “ஹேதம்லி” புன்னகைதான்.

சினேகா படத்தை குடும்பத் தோடு கண்டுகளிக்கலாம் என்ற வகையில் தான் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

தொடக்க காலங்களில் சரோஜாதேவி, சாவித்திரி போன்றவர்களும், இடைப்பட்ட காலங்களில் ரேவதி, சுகாசினி போன்றவர் களும்தான் தமிழ் சினிமாவில் கலாச்சார கவுரவம் சேர்த்திருக்கிறார்கள்.

இன்றைய தமிழ் சினிமாவில் “அவிழ்த்து எறிவதில் யார் சிறந்தவர்ப” என்று நடிகைகள் போட்டி போட்டு “துண்டு துணி” அளவுக்குவந்துவிட்ட நிலையில் சினேகா ஒரு வீரம் விளைஞ்ச நடிகையாகவே தெரிகிறார்.

Posted in Actress, Actresses, Backgrounder, Cinema, Films, Glamor, Heroines, Movies, Pornography, Sex, Snega, SNEHA, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, TamilNadu, Taminadu | 26 Comments »

Raman Raja – Rain… Rain Go away! (Dinamani Kathir)

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

நெட்டில் சுட்டதடா…: மழையைத் திருடிய மனிதர்கள்!

நடிகர் கமல்ஹாசன் நல்ல கவிஞரும்கூட என்பது அவருடைய ரசிகர் வட்டத்திற்குள் மட்டும் தெரிந்த விஷயம். அவருடைய கவிதைகளில் நான் ரசித்த ஒன்று இது:

பெய்யெனப் பெய்யுமா மழை?
மழைக்குமெனில், உன் தாயிடம் சொல்;
நாடு நனையட்டும்.

திருவள்ளுவர் காலத்தில் மழையை ஆணையிடுவதற்குப் பத்தினிப் பெண்களே போதுமானதாக இருந்தார்கள். கிரேக்கர்கள் மழை வேண்டுமென்றால் ஜீயஸ் கடவுளுக்கு லஞ்சம் கொடுத்துப் பார்த்தார்கள். பிறகு அமிர்தவர்ஷிணி ராகம், கழுதைக்குக் கல்யாணம் என்று பல உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டும் ஒன்றும் பலனில்லை. ஆனால் தற்போதைய விஞ்ஞானத்தின்படி, சில வேதிப் பொருட்களை மேகத்தில் செலுத்திச் செயற்கையாக மழை பெய்விக்க முடியும். செயற்கை மழை என்றால் செயற்கையாக மேகத்தை உற்பத்தி செய்வது அல்ல. (அவ்வளவு தண்ணீரைக் காய்ச்சவல்ல அடுப்பு கிடையாது!) இருக்கும் மேகத்தை, நம்ம ஊருக்கு நேர் மேலே வரும்போது கப்பென்று பிடித்துக் கொண்டு கையிலிருப்பதைக் கொடுத்துவிட்டுப் போ என்று சொல்ல முடியும். cloud seeding மேக விதைப்பு முறைகளை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்து வருகிறார்கள். விமானத்தில் பறந்து போய் மேகத்தின் அருகில் வெள்ளி அயோடைடு குச்சிகளைக் கொளுத்தி தீபாராதனை காட்டுவார்கள்; நீராவி குவிந்து மழைத் துளியாக மாறிக் கீழே வரும். சென்ற ஆண்டு சீனாவில் பயங்கரமாகப் புழுதிப் புயல் அடித்து நகரங்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தன. கீழே இருந்தே ராக்கெட் மூலம் சிகரெட் சைஸ் வெள்ளி அயோடைடு குச்சிகளை விண்ணில் செலுத்தி மழையைக் கொண்டு வந்து பெய்ஜிங் நகரத்தையே சுத்தமாக அலம்பிவிட்டார்கள்.

சீனாவின் வட பகுதிகளில் பஞ்சம் போக்கவும், காட்டுத் தீயை அணைக்கவும் தேவைப்பட்ட போதெல்லாம் மழை பெய்விக்க ஓர் அரசாங்க டிபார்ட்மெண்ட்டே இயங்குகிறது. சில சமயம் வெறும் உப்பு, சில சமயம் உலர்ந்த பனி இப்படி எதையாவது மேகத்தில் தூவி மழைபெய்ய வைக்கிறார்கள். (உலர் பனி என்பது கார்பன் டை ஆக்ûஸடை அமுக்கி சுருக்கப்பட்ட பனிப் பொடி. அதை மேகத்தின் மேல் தூவினால் மேகத்துக்கு உச்சி குளிர்ந்துவிடும்.!)

ஆனால் இதெல்லாம் உண்மையிலேயே வேலை செய்கிறதா என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன. சிலர் செயற்கையை நம்ப மறுத்து, “”இயற்கையாக மழை பெய்யும் போதெல்லாம் அதிகாரிகள், தங்கள் முயற்சியால்தான் பெய்தது என்று வருண பகவானின் பி.ஏ. மாதிரி அறிக்கை விட்டுவிடுகிறார்கள். வடக்கு சீனாவில் விவசாயத்துக்குக் கன்னா பின்னாவென்று தண்ணீரை உபயோகிப்பதால் ஆறுகள் வறண்டு கோபி பாலைவனம் வேகமாகப் பரவி கொண்டிருக்கிறது. அதை மறைக்கத்தான் செயற்கை மழை என்று பிலிம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

இயற்கையுடன் விளையாட ஆரம்பித்தால் அது என்ன மாதிரியெல்லாம் திருப்பம் எடுக்கும் என்பதுதான் யாருக்குமே தெரியாத புதிர். 1952 -ம் ஆண்டு நம்ம ஆகஸ்ட் 15-ம் தேதி பிரிட்டனில் உள்ள எக்ஸ்மூர் நதியில் கடும் மழை காரணமாக வெள்ளம். குறுகிய பள்ளத்தாக்கின் வழியே ஒன்பது கோடி டன் தண்ணீர் சீறிப் பாய்ந்து ஓடியது. பாறாங்கற்களையெல்லாம் அடித்துப் புரட்டிக் கொண்டு வந்த வெள்ளத்தின் வழியில் மாட்டிக் கொண்டது, டெவான் என்ற சிற்றூர். நிமிட நேரத்தில் வீடுகள் கடைகள் பாலங்கள் எல்லாம் இடிந்து விழ, முப்பத்தைந்து பேர் பலியானார்கள். “”கடவுளின் வினோத விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. ஆமென்” என்று அவசர அவசரமாகக் கேûஸ மூடி விட்டது அரசாங்கம்.

இதற்கு ஐம்பது ஆண்டுகள் கழித்து பி.பி.சி. ரேடியோவிடம் சில ரகசிய ஆவணங்கள் கிடைத்தன. அப்போது முற்றிலும் வேறு கதை விரிந்தது. வருடா வருடம் பெய்வதைப் போல 250 மடங்கு மழை திடீரென்று அன்று பெய்ததற்குக் காரணம், ராயல் விமானப்படை செய்த ஒரு சிறு திருவிளையாடல். ஆபரேஷன் க்யுமுலஸ் என்று பெயர் வைக்கப்பட்ட அந்த செயற்கை மழைப் பரிசோதனையில் பங்கு கொண்ட ஒரு விமானி சொன்னார்: “”மேகக் கூட்டத்துக்கு மேலே குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து உலர்ந்த பனியைத் தூவினோம். கொஞ்ச நேரம் கழித்து மேகத்துக்குக் கீழே வந்து பார்த்தால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டிக் கொண்டிருக்கிறது! எங்கள் தலைமையகத்திற்குத் திரும்பி உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் ரேடியோவில் வெள்ளம், உயிர்ச் சேதம் பற்றிய நியூஸ் சொன்னார்கள். உடனே அத்தனை பேரும் கப்சிப் என்று கற்சிலை மாதிரி ஆகிவிட்டோம்….”

பருவ நிலையைச் சீண்டி விளையாடுவதில் அமெரிக்க ராணுவத்துக்கு என்றுமே ஆர்வம் உண்டு. “”உலகத்தின் தட்பவெப்ப நிலை என்பது காட்டுக்குதிரை மாதிரி கட்டுக்கடங்காததோடு, எல்லாருக்கும் பொதுச்சொத்தாக வேறு இருக்கிறது. அதை முழுவதும் நம் கண்ட்ரோலில் கொண்டு வந்துவிட்டுத்தான் மறுவேலை” என்று கோடிக்கணக்கில் செலவழித்தார்கள். அலாஸ்கா மாநிலத்தில் ஹார்ப் ( HAARP ) என்று மாபெரும் ரேடியோ ஆன்டெனா வயல் ஒன்று அமைத்தார்கள். சக்தி வாய்ந்த ரேடியோ அலைகளை அனுப்பி வானத்தில் இருக்கும் அயனோஸ்பியர் என்ற மின்சாரப் போர்வையை மெல்லச் சூடாக்கி, என்ன ஆகிறது என்று பார்க்கும் ஆராய்ச்சி இது. மைக்ரோவேவ் அடுப்பில் நெருப்பில்லாமல் உருளைக்கிழங்கு வேக வைப்பது போலத்தான்; ஆனால் அவர்கள் சமைத்தது, வானத்தை! அந்தச் சூட்டில் அயனோஸ்பியர் போர்வையை ஒரு மாபெரும் பபிள் கம் மாதிரி உப்பிக் கொண்டு டன் கணக்கில் காற்றை உள்ளிழுக்கும். இந்த ஆயுதத்தை வைத்துக்கொண்டு எதிரி நாட்டின் ஏவுகணைகளையும் விமானங்களையும் அப்படியே உறிஞ்சித் துப்பிவிடலாம்; விண்ணையே மின்சார விரிப்பினால் மூடி, எதிரியின் சாட்டிலைட் செய்தித் தொடர்புகளைத் துண்டிக்கலாம் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். பிறகு ஹார்ப்புக்கு என்ன ஆயிற்று என்பதை அறிய, இன்னும் ஐம்பது வருடம் காத்திருப்போமாக.

இருபதாம் நூற்றாண்டின் நடுவில் அமெரிக்காவின் கிழக்குக் கரையை அடுத்தடுத்துப் பல புயல்கள் தாக்கிப் பலத்த சேதம். “”விஞ்ஞானிகள் எல்லாம் தண்டச் சம்பளம் வாங்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே, இந்தப் புயல் பயலை அடக்க ஏதாவது செய்யக்கூடாதா?” என்று எரிச்சல்பட்டார் ஜனாதிபதி ஐசன்ஹோவர். அப்படித்தான் ஆரம்பித்தது அமெரிக்காவின் புயல் பரிசோதனைகள். விஞ்ஞானி லாங்ம்யூர் என்பவர் தைரியமாகப் புயலின் கண்ணில் புகுந்து புறப்பட்டு உலர் ஐûஸத் தூவினார். புயலில் உள்ள தண்ணீரையெல்லாம் வடிய வைத்துவிட்டால் அதன் வீரியம் குறைந்துவிடும் என்று நினைத்தார். ஆனால் கடலில் மையம் கொண்டிருந்த புயல், ஒரு டைவ் அடித்துத் திசைமாறி ஜியார்ஜியாவைப் போய்த் தாக்கியது! பக்கத்து வீட்டுக் கண்ணாடியைப் பந்தடித்து உடைத்த சிறுவன்போல, வீட்டுக்கு ஓடிப் போய்ப் போர்த்திப்படுத்துவிட்டார் லாங்ம்ப்யூர்.

ப்ராஜெக்ட் புயல் வெஞ்சினம் ( storm fury ) என்று அறுபதுகளில் ஆரம்பித்து, ஓர் இருபது வருடம் புயல்களுடன் மல்லாடினார்கள் அமெரிக்கர்கள். ஆனால் இவர்கள் செய்யும் ஆராய்ச்சிகளுக்கு ஏதாவது பலன் இருக்கிறதா, அல்லது தானாகவேதான் புயல் பலவீனமடைந்துவிட்டதா என்பதைக் கடைசி வரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சில தடவை புயலடைத்தது; சில சமயம் பிசுபிசுத்தது. கடைசியில் இதெல்லாம் கதைக்குதவாது என்று ஆர்வம் இழந்துவிட்டார்கள். ஆனால் சீனா, ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகள் மட்டும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சீனாவில் விவசாயிகள் ஆடிப் பட்டம் தேடி விதைத்துவிட்டு, தண்ணீருக்கு விமான எதிர்ப்பு பீரங்கிகளை நாடுகிறார்கள். அவற்றில் கெமிக்கல் குண்டுகளை நிரப்பி, மேகங்களை அடித்துக் கீழே வீழ்த்த முடியுமா என்று முயற்சிக்கிறார்கள். இதில், “”எங்க ஊருக்கு வர இருந்த மழையை உங்க ஊரிலேயே தடுத்துத் திருடி விட்டீர்களே” என்று ஒரு பேட்டைக்கும் மற்றொரு பேட்டைக்கும் சண்டை நடக்கிறது. ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் சண்டை நடக்கிறது. (வேறு எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை?)

மழையைக் கொண்டு வருவது ஒரு புறமிருக்க, கிரிக்கெட் மாட்ச்சுக்கு ஐநூறு ரூபாய் தந்து டிக்கெட் வாங்கியிருக்கும் நாட்களில் மழையை வராமல் தடுக்கவும் வழிகள் யோசித்திருக்கிறார்கள். ரஷ்யாவில் விளையாட்டுப் போட்டிகள், வி.ஐ.பி பொதுக்கூட்டங்களின் போது மழையை முளையிலேயே கிள்ளுவதற்கு ஏற்பாடுகள் இருக்கின்றன. 2008-ல் சீனாவில் ஒலிம்பிக்ஸ் நடக்கப்போகிறது. மழை பெய்து ஆட்டத்தைக் கலைத்து விடக்கூடாதே என்பதற்காக இப்போதே ஓர் அரசாங்க இலாகா அமைத்து ஆள் படைகளுக்கெல்லாம் சம்பளம் கொடுத்து உட்கார்த்தி வைத்திருக்கிறார்கள். ஆனாலும், என்னதான் மனிதன் முயன்றாலும், “”நமக்கு மேலே இயற்கைன்னு ஒண்ணு இருக்கில்லே?” என்றுதான் சொல்கிறார்கள் அந்த அதிகாரிகள்.

ஆர்.கே. லட்சுமணனின் புகழ் பெற்ற கார்ட்டூன் ஒன்று; பார்த்தவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. மழை நிறைந்த காலை நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் ஏழெட்டு பேர் குடை, ரெயின் கோட்டுடன் நிற்கிறார்கள். ஒரே ஒருவர் மட்டும் குடையில்லாமல் சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு நிற்கிறார்.

“”அட, ஆமாம் நான் வானிலை இலாகாவிலேதான் வேலை செய்யறேன். எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

————————————————————————————————————————————————

மக்களும் மழைநீரும்!

கி. சிவசுப்பிரமணியன், அறிவியல் ஆய்வாளர்


சூரியனால் வெளிப்படுத்தப்படும் வெப்பம் சுமார் 6,000 டிகிரி சென்டிகிரேட். இதில் ஒரு சிறு பகுதியே பூமிக்கு கிடைக்கிறது.

இந்த வெப்பநிலையே கடல்நீரை ஓரளவு ஆவியாக்கி மேகங்கள் மூலம் நமக்கு மழையாகக் கிடைக்க உதவுகிறது. இந்த வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும்பொழுது பருவகால மாற்றம் ஏற்படுகிறது. எனினும் எந்த ஆண்டிலும் மழையே இல்லாமல் அறவே பொய்த்துப் போவது இல்லை. இதுவே இயற்கை.

தமிழகம் தவிர இந்தியா முழுமையும் தென்மேற்குப் பருவகாலத்தில் ஏறத்தாழ 80 சதவிகித மழை கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் வடகிழக்குப் பருவகாலத்தில் அதிக அளவு மழை கிடைக்கிறது. இது இயற்கையின் நியதி.

தமிழகத்தின் சராசரி மழையளவு ஏறத்தாழ 960 மி.மீ. இதில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மழை இரு முக்கிய பருவ காலங்களான தென்மேற்கு (332 மி.மீ) மற்றும் வடகிழக்கு (465 மி.மீ) பருவகாற்றினால் கிடைக்கிறது.

வடகிழக்குப் பருவமழை (அக்டோபர் – டிசம்பர்) இந்த ஆண்டு தமிழகத்தில் அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கியது. ஆண்டின் மொத்த மழையில் பாதியளவு இம்மூன்று மாத காலத்திலேயே பெய்துவிடுகிறது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் இப்பருவ மழையின்போதுதான் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவு அதிகரிக்கிறது.

எனவே, இக்குறுகிய காலத்தில் எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு மழைத்துளியையும் மிகச்சிறந்த முறையில் நிலத்திலும் (குளம், குட்டை, ஏரி போன்றவை) மற்றும் நிலத்திற்கு கீழும் (கசிவுநீர்க் குட்டைகள், மழைநீர் அறுவடை, கிணறுகள் போன்றவை) சேமிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

“மகேசனை நம்பலாம் ஆனால் மழையை நம்ப முடியாது’. இது கிராமப்புற மக்களின் கூற்று. நகர்ப்புறங்களில் மழை குறைந்தாலும் பாதிப்புகள் அதிகம் இல்லை. ஆனால் விவசாயத்தையே நம்பியுள்ள கிராமங்களுக்கு மழையே உயிர் மூச்சு. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை சென்னைக்கு மிக அதிக அளவு மழையை அளித்துள்ளது. ஆனால், வடகிழக்குப் பருவமழை அந்த அளவுக்கு சிறப்பாகப் பெய்யவில்லை.

எனினும், அடைமழைபோல் அவ்வப்போது தூறலுடன் பெய்த தொடர் சிறுமழை நிலத்தடிநீர் மேம்பாட்டிற்கு மிகவும் உகந்ததாகும்.

பெய்கின்ற சிறுதூறல் மழையில் பெரும்பகுதியை பூமி நிதானமாக உள்வாங்கி மண்ணுக்கு அடியில் எங்கெல்லாம் துவாரங்கள் உள்ளதோ அங்கெல்லாம் நீரைப்புகுத்தி நிலத்தடி நீர்மட்டம் மேம்பட அடிப்படையாக அமைய வழிவகுத்தது இந்த சிறுதூறல் மழையே. இக்கருத்தின் வெளிப்பாடே “சிறுதுளி பெருவெள்ளம்’ என்பதாகும்.

உதாரணமாக, சென்னையில் அக்டோபர் மாதத்தின் சராசரி மழையளவு 270 மி.மீ. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 15 நாள்களில் 257 மி.மீ. மழை பெய்தது. ஆனால் ஒரே நாளில் மட்டும் (அக்டோபர் 28) 140 மி.மீ மழை பெய்துள்ளது. எனவே மீதமுள்ள இந்த ஒருமாதத்தில் பெய்கின்ற மழைநீரைச் சிறப்பாகச் சேமிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.

தமிழகத்தின் பெருவாரியான மாவட்டங்களில் அமைந்துள்ள மழைநீர் சேமிப்பு அமைப்புகளான ஏரிகள் மூலம் ஓரளவுக்கு மேல் பெய்கின்ற பெருமழைநீரைத் தேக்கினால் அது மழையற்ற கோடைகாலத்திற்கு பெரிதும் உதவும்.

எக்காரணத்தைக் கொண்டும் ஏரிகளை எவரும் ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது. அவை எதிர்காலத்தின் நீர் ஆதாரங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

நகரங்களில் வீடுகளுக்கு மழைநீர் சேகரிப்பு எவ்வளவு கட்டாயமோ அவ்வளவு கட்டாயம் கிராமங்களில் மழைநீர் சேகரிப்பதும் ஆகும். எனவே கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளையும், குளங்களையும் மராமத்து செய்து அவற்றின் முழு கொள்ளளவுக்கு தயார் செய்வது அரசு மற்றும் அனைத்து மக்களின் இன்றியமையாத கடமையாகும். ஆனால் இவைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டாலும், செயல்பாடுகள் மிகவும் குறைவே. இதுவே ஒட்டுமொத்த நீர்ப்பற்றாக்குறைக்கு அடிப்படைக் காரணமாகும்.

ஆண்டுதோறும் கிடைக்கின்ற மழை நம் தேவைக்கும் அதிகமாகவே கிடைக்கிறது. ஆனால் அதை உரியமுறையில் சேமித்துவைக்க நாம் தவறிவிடுகிறோம் என்பதே உண்மையாகும்.

“காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப கிடைக்கின்ற மழைநீரை உரிய முறையில் சேகரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

பருவகாலங்களில், மிகக் குறுகிய நாள்களில் அளவுக்கு அதிகமாக பெருமழை பெய்து, பேரளவு வெள்ளம் வீணாகக் கடலில் கலக்கிறது. இப்படி அதிகமாகப் பெய்யும் மழைநீரை முடிந்தவரையில் சேமித்து, அதை வறட்சி மற்றும் பற்றாக்குறைக் காலங்களில் பயன்படுத்திக்கொள்ளும் முறையே நீர் மேலாண்மையின் அடிப்படையாகும்.

இக்கருத்து விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீர் சேமிப்பிற்கும் பொருந்துவதாகும். இம்மழைநீரைப் பயன்படுத்திக்கொள்ள மழைநீர் தேங்கும் இடங்களில் சிறிய குளம், குட்டைகளை அமைக்க அரசும், மக்களும் முயற்சிக்க வேண்டும். இவற்றையே கசிவுநீர்க் குட்டைகள் என்கிறோம்.

இக்குட்டைகளுக்கு மழைநீர் வரத்தொடங்கியதும் நிலத்தால் அது உறிஞ்சப்படுகிறது. எங்கெல்லாம் நீர் பூமியில் வேகமாக உறிஞ்சப்படுகிறதோ அங்கெல்லாம் நிலத்தடி நீர் வளம் அதிகமாக உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு அதன் உவர்நீர்த் தன்மையும் மாறி நன்னீர் பெறத் துணைபுரிகிறது. இக்கருத்துகளின் அடிப்படையில் மழைநீர் சேமிப்பின் அவசியத்தை மக்களும், அரசும் முழுமையாக உணர்ந்து ஆக்கபூர்வ வழியில் செயல்பட வேண்டும்.

ஆண்டுதோறும் நமது தேவைக்கு அதிகமாகவே மழைநீர் கிடைக்கிறது. ஆனால் அதை நாம் சரிவர பயன்படுத்திக் கொள்வது இல்லை. உதாரணமாக, ஒரு கிரவுண்டு (2400 சதுர அடி) நிலத்தில் 1 மி.மீ. மழை பெய்தால் அது 223 லிட்டர் நீருக்குச் சமம்.

சென்னையில் ஆண்டுதோறும் சராசரியாக 1300 மி.மீ. மழை பெய்கிறது. இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை 677 மி.மீ. மழையும் அக்டோபர் முதல் நவம்பர் வரை 354 மி.மீ. மழையும் பெய்தது. டிசம்பர் மாதம் 150 மி.மீ. மழை பெய்தது.

எனவே எதிர்காலத்தில் ஒவ்வொரு தனிமனிதரும் தத்தம் வீடுகள் மற்றும் நிலங்களில் இயன்ற அளவு மழைநீரைச் சேமித்து பூமிக்குள் செலுத்த வேண்டியது முக்கிய கடமையாகும். மேலும் பொது இடங்களில் கிடைக்கும் பேரளவு மழைநீரைச் சேமிக்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆண்டுதோறும் தவறாமல் இத்தகைய செயல்பாடுகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டால் நமது நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்துக்கே இடமிருக்காது.

Posted in Agriculture, Backgrounder, cloud seeding, Clouds, Cyclones, Disaster, Drought, Dry, Environment, Facts, Farming, Floods, groundwater, History, Monsoon, Pollution, Rain, River, storms, Thunderstorms, Tsunami, Twisters, Warming, Water | Leave a Comment »

Global Warming – Alternate Perspectives due to Farming Shortage Crisis

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

உயிர் எரிசக்தி மாயை-ஓர் அபாயம்!

ஆர்.எஸ்.நாராயணன்

உயிர் எரிசக்தி அதாவது தாவரங்கள் மூலம் பெறப்படும் எரிசக்தி, இன்று நிலவும் கச்சா எண்ணெய் எரிபொருள் நெருக்கடிக்குரிய சரியான தீர்வாகவும் பூமி வெப்பமடைதலைத் தணிக்கவல்லது என்றும் ஒரு தவறான எண்ணம் தலைதூக்கியுள்ளது.

புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமே வல்லரசு நாடுகளின் வரம்பற்ற எரிசக்திப் பயன்பாடு. இதனால்தான் நச்சுப்புகைகளின் பசுமையக விளைவு ஏற்பட்டு ஓசோன் மண்டலம் ஓட்டையாகிறது. வல்லரசுகளான வடக்கு நாடுகளுடன் ஒப்பிடும்போது வளரும் நாடுகளின் எரிசக்திப் பயன்பாடு 10 சதத்திற்கும் குறைவுதான்.

வல்லரசுகள் தங்களின் எரிசக்திப் பயன்பாட்டின் அளவைக் குறைத்துக் கொள்வதற்கு முன்வராமல் இருக்கவே “”தாவர எரிசக்தி- உயிர் எரிசக்தி” என்ற மாயையைத் தோற்றுவித்து சுகம் பெறுகின்றன. வளரும் நாடுகளோ இந்த உயிர் எரிசக்தியை ஏற்றுமதிக்குரிய சந்தைப்பொருளாக மதித்து ஆர்வம் காட்டிவருகின்றன.

உயிர் எரிபொருள் எவை? இன்று அதிகபட்சம் உயிர் எரிசக்தியாக பயோ எத்தனால் பயன்படுகிறது. பின்னர் தாவர எண்ணெய் மூலம் பெறப்படும் பயோ டீசல். உணவுப் பொருள்களான பல்வேறு புஞ்சைத் தானியங்களின் மாவைப் புளிக்கவைத்தும், சர்க்கரைச்சோளம் என்ற பயிரின் தண்டைப் பிழிந்து சாறெடுத்தும் கரும்புச் சாற்றிலிருந்தும் பயோ எத்தனால் எடுக்கப்பட்டு அது பெட்ரோலில் கலந்து பயன்படுத்தப்படுகிறது.

உணவாகப் பயன்படக்கூடிய மக்காச் சோளமும் எத்தனாலாகிறது. சோயா மொச்சை, கடுகு, எண்ணெய்ப்பனை போன்ற எண்ணெய் வித்துப் பயிர்களும் பயோ டீசலுக்குப் பயனாகிறது. பசிபிக் தீவுகளில் தேங்காய் எண்ணெய், ஆப்பிரிக்க நாடுகளில் எண்ணெய் காட்டாமணக்கும் அடக்கம்.

தாவர எண்ணெய்களை எரிபொருளாகப் பயன்படுத்துவது புதிய விஷயமல்ல. ஆமணக்கு எண்ணெயின் பெயரே விளக்கு எண்ணெய்தான். மன்னராட்சிக் காலத்தில் இலுப்பை மர வளர்ப்புக்கு தேவதானம் (கோயில் மானியம்) வழங்கப்பட்டதைச் சோழர்காலத்துச் செப்போடுகள் கூறும்.

தீவட்டி, தெருவிளக்கு, கோயில் தீபம் எல்லாவற்றுக்கும் பயன் தர இலுப்பை மரங்கள் இருந்தன. ஏழைகளுக்கும் பழங்குடிகளுக்கும் வாழ்வளித்தன. இன்றோ இலுப்பை மரமே அரிதாகிவிட்டது.

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றாகத் தாவர எண்ணெய்களைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. இதன்மூலம் ஏழை விவசாயிகளுககும் பழங்குடி மக்களுக்கும் வருமானம் கிடைக்கும். ஆனால், இந்த அடிப்படையில் மாற்று எரிசக்தி திட்டம் அணுகப்படவில்லை. கச்சா எண்ணெய் எரிபொருள்களை மிக அதிகமாகப் பயன்படுத்தும் வடக்கு நாடுகள் அற்பவிலை கொடுத்து உயிர் எரிபொருள்களை ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொண்டு தங்களுடைய நுகர்வுத் திட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்யத் தயாராக இல்லை. அதேசமயம், ஏழைநாடுகளில் உள்ள பணக்காரர்கள் உலக வர்த்தகத்தில் உயிர் எரிபொருள் அங்காடியில் தங்கள் பங்கை வளர்த்துக்கொள்ளும் போட்டியில் இறங்கிவிட்டனர்.

இந்தப் போட்டா போட்டியின் விளைவுகள் அபாயகரமானவை. ஒரு மாயவலை பின்னப்படுகிறது. “” உயிரி எரிபொருள்கள் சுற்றுச்சூழலின் காவலர்கள்” என்றும் இவை பசுமையக (எழ்ங்ங்ய் ஏர்ன்ள்ங்) விளைவுகளான நச்சுப் புகைகளைக் கணிசமாகக் குறைக்கும்” என்றும் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த மாற்று உயிர் எரிபொருள் திட்டமே வடக்கு நாடுகளின் சதித்திட்டம் என்பதை ஏழை நாடுகள் எள்ளளவும் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

இதனால் நிகழப்போகும் அபாயங்கள் எவை?

சர்வதேச உயிர் எரிபொருள் அங்காடியில் பலியாகும் உணவுப் பயிர்களில் முக்கியமானவை மரவள்ளிக்கிழங்கு, சோயா மொச்சை, மக்காச்சோளம், மணிலாப் பயிறு, கரும்பு, எண்ணெய்ப் பனை, ரேப்சீட் என்ற கடுகுவகை போன்றவை. ஆகவே உயிர் எரிபொருள் அங்காடி வலுப்பெற்றால், உணவுப் பயிர்களின் வழங்கல் பாதிப்புறலாம். முன்பு கவனிக்கப்படாமல் இருந்த எண்ணெய் காட்டாமணக்கு, புங்கன் இன்று கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால், வேம்பு, இலுப்பை, சால் உரிய கவனம் பெறவில்லை.

உயிர் எரிபொருள் உற்பத்தியில் வல்லரசுகளின் கவனம் திரும்பிவிட்டதால் விவசாய நிலம், தண்ணீர் நெருக்கடி வலுப்பெறும். இப்போது மொத்த விவசாய நிலத்தில் சுமார் 30 சதம் உயிர் எரிபொருள் உற்பத்திக்கு என்று திட்டமிடப்படுகிறது. இந்தியாவில் காட்டாமணக்கு ஜூரம் தலைக்கேறி விட்டது. தமிழ்நாட்டில் வாழை, நெல், பயிரிட்ட இடங்களில் காட்டாமணக்கு நட வங்கி உதவி, மானியம் கிட்டுகிறது. காட்டாமணக்கு புஞ்சைப் பயிர் அல்ல . வாழை, கரும்புக்குப் பாயும் நீரைவிட அதிகம் பாய்ச்சினால்தான் நிறைய விதைகள் கிட்டி நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.

ஆப்பிரிக்க மக்களுக்கு மக்காச்சோளம் முக்கிய உணவு. அடுத்து மரவள்ளிக்கிழங்கு மாவு. இன்று மக்காச்சோளத்தின் சர்வதேச விலை உயர்ந்துவிட்டது. உயிரி எரிபொருள் பயனுக்கு என்றே ஆப்பிரிக்கச் சோளம் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு டாலர், யூரோ நோட்டுகளைப்பெற ஏற்றுமதி தொடங்கிவிட்டது. இதனால் உள்ளூரில் மக்காச்சோள விலை உயரும்போது மக்களின் உணவுப் பிரச்னைமட்டுமல்ல; மாடு, கோழிகளின் உணவுப் பிரச்னையும் ஏற்படும். மக்காச்சோளம் மாவு கால்நடைகளின் திட உணவும் கூட. கோழிகளுக்கும் மக்காச்சோளம் பிரதான உணவு.

எண்ணெய்ப்பனை அதிகம் விளையும் மலேசியாவும் இந்தோனேசியாவும் இணைந்து தங்களின் பாமாயில் உற்பத்தியில் 40 சதவீதத்தை பயோடீசலுக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளன. அதாவது, அமெரிக்க- ஐரோப்பிய ஏற்றுமதியால் பாமாயில் விலை உயர்ந்தால் முதல் பாதிப்பு இந்தியாவுக்கே.

ஏற்கெனவே சர்க்கரை விலை உயர்ந்துவருகிறது. உலகிலேயே கரும்புச் சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில் சர்க்கரை மலிவாக விறகப்படவில்லை. இந்தியாவுக்கு இணையாக கரும்பு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் பிரேசிலில் சுமார் 50 சதம் எத்தனால் உற்பத்திக்குச் செல்கிறது. கூடிய விரைவில் இந்தியாவும் பிரேசிலைப் பின்பற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது. பயோடீசலை விட பயோ பெட்ரோலிய எத்தனாலின் பயன்பாடு நடைமுறை சாத்தியமானது. எத்தனாலுக்குக் கரும்புச்சாறு அல்லது மாவுப்பொருள் புளித்த காடி போதும். இவை உணவு அல்லவா? மொலசஸ் என்ற சர்க்கரைப் பாகுக் கழிவும் கால்நடை உணவுக்குப் பயனாகிறது.

முக்கிய உணவுப்பொருள்களை பயோ பெட்ரோலாக மாற்றும் தொழில் வளர்ந்து வரும் சூழ்நிலையில், வருங்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படும் என்பதுதானஅ நிதர்சன உண்மை. விளைபொருள் விலைகள் கட்டுப்படியாகாமல் நிலத்தை விற்றுக்கடனை அடைக்கும் விவசாயிகள் ஒரு கட்டத்தில் தொழிலைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். அடிமட்டத்து மக்கள் ரொட்டித்துண்டுக்கு அலையும் பைரவர்களாவார்கள்.

மேலைநாடுகள் விவசாயத்துக்கு மானியம் வழங்க அவரவர் நாட்டு விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்றுவதுடன், உணவு உற்பத்தியில் தன்னிறைவும் ஏற்றுமதிக்கான உபரி உற்பத்தியும் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றன. இந்தியா போன்ற நாடுகள் உணவுப் பற்றாக்குறை நாடுகளாகும்போது அந்த மேலை நாடுகளை எதிர்பார்த்து வாழ வேண்டிய அபாயம் ஏற்படும்.

அடுத்த 50 வருடத்தில் நமது உணவுத்தேவை 75 சதவீதம் உயரும். உணவு உற்பத்தியைப் பாதிக்காத அளவில் உயிர் எரிபொருள் உற்பத்தியை உயர்த்துவதுதான காலத்தின் கட்டாயம். இதை முறையாக திட்டமிட்டு நமது அரசு செய்யத் தவறினால் அடுத்த வேளைச் சோறுக்கு அந்நிய நாட்டுக் கப்பலை எதிர்நோக்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுவோம்.

———————————————————————————————

பசுமை இல்ல வாயுக்கள்: புகாருக்கு இந்தியா பதில்

நியூயார்க், ஆக. 3: காற்று மண்டலத்தை மாசுபடுத்தும் பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற வளர்ந்த நாடுகளின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.

பசுமை இல்ல வாயுக்களால் (கார்பன் டை ஆக்ûஸடு, நைட்ரஸ் ஆக்ûஸடு, மீத்தேன்) தட்பவெப்ப நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து விவாதிக்க ஐக்கிய நாட்டு பொதுசபையின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை கூட்டப்பட்டது. அதில் பங்கேற்ற ஐநாவுக்கான இந்தியத் தூதர் நிருபமா சென், இந்தியா மீதான வளர்ந்த நாடுகளின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.

ஐநா சபையில் மேலும் அவர் பேசியது:

தற்போது காற்றுமண்டலத்தில் நிலைகொண்டுள்ள பசுமை இல்ல வாயுக்களும், அதனால் தட்பவெப்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றமும் கடந்த ஓர் நூற்றாண்டில் வளர்ந்த நாடுகளால் உமிழப்பட்ட பசுமை இல்ல வாயுக்களின் விளைவே ஆகும்.

மறுக்கவில்லை:

அதேவேளை, பசுமை இல்ல வாயுக்களை இந்தியா வெளியிடவே இல்லை என்று கூறவில்லை. பசுமை இல்ல வாயுக்களை அதிகமாக உமிழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதைத்தான் மறுக்கிறோம். இந்தியாவில் 17 சதவீத மக்கள்தான் பசுமை இல்ல வாயுக்கள் உருவாவதற்கு காரணமாக உள்ளனர்.

காற்று மண்டலத்தில் நிலைகொண்டுள்ள பசுமை இல்ல வாயுக்களின் மொத்த அளவில் 4 சதவீதத்திற்குதான் இந்தியா பொறுப்பாகும். இந்த அளவையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் தொழிற்சாலைகள் அதிகரித்து அதற்குத் தேவையான எரிபொருள் அளவும் அதிகரித்துள்ளது.

இருப்பினும், இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகளால் காற்று மண்டலம் மாசுபடக்கூடாது என்பதில் இந்தியா கவனமாக உள்ளது. இந்தியாவில் பெட்ரோலியம், டீசல் உள்ளிட்ட மரபுசார் எரிபொருள்கள்தான் அதிகம் பயன்பாட்டில் உள்ளன.

இந்த எரிபொருள்கள் எரிந்து கழிவாக வெளியேறும் போது காற்று மண்டலத்தை சீர்கெடுப்பவையாக உள்ளன. இதனால் இவற்றிற்கு மாற்று எரிபொருள்களை கண்டுபிடிப்பதிலும் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.

வளர்ந்த நாடுகள் முன்னிலை:

பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதில் வளர்ந்த நாடுகள்தான் முன்னிலை வகிக்கின்றன. இந்த விஷயத்தில் வளர்ந்த நாடுகளோடு வளரும் நாடுகளை எந்தவிதத்திலும் ஒப்புமைபடுத்தக் கூடாது என்பதை எங்கள் நாட்டு பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண அறிவியல் ரீதியான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பசுமை இல்ல வாயுக்களின் அறிகுறிகள் என்ன என்பதை விவாதிப்பதை விட்டு, அது உருவாவதற்கு காரணம் என்ன என்றும், அதை தடுப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் ஒரு வழியாக வளர்ந்த நாடுகள் தங்களது தொழில்நுட்பத்தை வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றார் நிருபமா சென். ஐநா சபையின் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் சுற்றுச்சூழல் அமைச்சர் முக்டூம் பைசல் ஹாயத், பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு “கியோடோ புரோட்டோகால்’ ஒப்பந்தத்தின் படி வளர்ந்த நாடுகளுக்கு உண்டு என்றார்.

Posted in Agriculture, Alternate, Analysis, Backgrounder, Brazil, Corn, Crisis, Deforestation, Diesel, Earth, Electricity, energy, Environment, ethanol, Farming, Food, Forest, Fuel, Gas, Greenhouse, Gulf, Harms, Imports, Kyoto, Land, Ozone, Perspectives, Petrol, Pollution, Power, Prices, Property, Rich, solutions, Soy, soybean, Warming | 2 Comments »

President polls: Shekawat contest as independent – Biosketch

Posted by Snapjudge மேல் ஜூன் 26, 2007

ஷெகாவத்தின் வாழ்க்கை வரலாறு: போலீஸ்காரராக இருந்து புகழேணியின் உச்சிக்கு…

புது தில்லி, ஜூன் 26: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் (84) கடுமையான உழைப்பு, விடா முயற்சி மூலம் வாழ்க்கையில் முன்னேறியவர்.

ஏழைக் குடும்பம்: ராஜஸ்தான் மாநிலத்தின் சீகர் மாவட்டத்தில் உள்ள கச்ரியாவாஸ் என்ற இடத்தில் ஏழை ராஜபுத்திர விவசாயக் குடும்பத்தில் ஷெகாவத் பிறந்தார்.

இளவயதிலேயே தந்தையை இழந்தார். எனவே குடும்பப் பொறுப்பைச் சுமக்க நேர்ந்தது. பள்ளிப் படிப்பை முழுமையாக முடித்தார், ஆனால் கல்லூரிப் படிப்பை முடிக்க முடியவில்லை. ராஜஸ்தான் மாநில காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்தார். சில ஆண்டுகள் பணி புரிந்த பிறகு பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டார்.

3 முறை ராஜஸ்தான் மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார். மொத்தம் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார். அந்தியோதயா, வேலைக்கு உணவு போன்ற வறுமை ஒழிப்புத் திட்டங்களை அமல் செய்தார்.

அரசியல் பிரவேசம்: 1952-ல் பாரதீய ஜனசங்கக் கட்சியில் சேர்ந்தார். அது முதல் 1972 வரை ராஜஸ்தான் சட்டப் பேரவை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1974 முதல் 1977 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார். குடியரசு துணைத் தலைவராக 2002 ஆகஸ்டில் பதவியேற்றார்.

  • 1977 முதல் 1980 வரை,
  • 1990 முதல் 1992 வரை,
  • 1993 முதல் 1998 வரை என்று மூன்று முறை மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

1980-ல் இந்திரா காந்தி மீண்டும் பிரதமராகப் பதவியேற்றதும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுகளைக் கலைத்தார். அப்போது ஒரு முறையும், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் ஷெகாவத்தின் அரசை மத்திய அரசு கலைத்தது.

ஷிண்டேவைத் தோற்கடித்தார்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ்காரரான சுசீல் குமார் ஷிண்டே, பிற எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டார். அவரை ஷெகாவத் தோற்கடித்தார். ஆனால் அவர் சார்ந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருந்த வாக்குகளைவிட 40 வாக்குகள் அதிகமாக அவருக்கு விழுந்தன. அவை மாற்றுக் கட்சிகளிலிருந்து அவர் மீது உள்ள அன்பு, மரியாதையால் போடப்பட்ட வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்ற ஆதரவு குடியரசுத் தலைவர் தேர்தலிலும் தனக்குக் கிடைக்கும் என்று ஷெகாவத் நம்புகிறார்.

குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் மாநிலங்களவைத் தலைவராக அவையை நடத்திச் செல்ல முற்பட்டார் ஷெகாவத். அப்போது காங்கிரஸýம் அதன் தோழமைக் கட்சிகளும் அங்கே பெரும்பான்மை பலத்துடன் இருந்தன. ஆனால் ஷெகாவத் தனது பொறுமை, திறமை காரணமாக அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் இல்லாமல் நடத்திக்காட்டினார். பாரதீய ஜனதா உறுப்பினர்கள் ரகளை செய்தாலும் கடுமையாகக் கண்டித்து திருத்தினார். கேள்வி நேரம் முக்கியம் என்று கருதியதால் அதற்கு இடையூறு செய்யாமல் பார்த்துக் கொண்டார்.

கிராமப்புற மக்களின், குறிப்பாக விவசாயிகளின் துயரங்களை நன்கு அறிந்தவர். மத்திய, மாநில அரசுகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதையும் அனுபவபூர்வமாக உணர்ந்தவர்.

ராஜஸ்தானில் சிறுபான்மைச் சமூக மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் பலன்களை அளித்தவர்.

எல்லா கட்சிகளிலும் நண்பர்களைக் கொண்டவர். ஜாதி, மத வித்தியாசம் பாராது பழகுகிறவர்.
——————————————————————————————–
ஷெகாவத் வேட்பு மனு தாக்கல்: பாஜக அணி தலைவர்களுடன் நட்வர் சிங்கும் வருகை

புதுதில்லி, ஜூன் 26: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட குடியரசு துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் திங்கள் கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜக உயர் தலைவர்களுடன், காங்கிரஸ் கட்சியில் இருந்த நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நட்வர் சிங்கும் இருந்தார்.

மக்களவைச் செயலரும் குடியரசுத் தலைவர் தேர்தல் அதிகாரியுமான பி.டி.டி. ஆச்சாரியின் அறைக்கு பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் 7 மாநில முதல்வர்கள் புடைசூழ ஷெகாவத் காலை 11.30 மணிக்கு வந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அங்கு 11.12 மணிக்கே வந்திருந்தார். தனித்தனியாக இரு வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரியிடம் ஷெகாவத் அளித்தார். அவற்றில் 128 எம்.பி.க்கள், 138 எம்.எல்.ஏ.க்கள் ஆக மொத்தம் 266 பேர் கையொப்பமிட்டிருந்தனர்.

வேட்புமனு தாக்கலின்போது

  1. எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி,
  2. பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்,
  3. பாஜக மூத்த தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ்,
  4. ஜஸ்வந்த் சிங்,
  5. முரளி மனோகர் ஜோஷி,
  6. கூட்டணித் தலைவர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,
  7. சரத் யாதவ்,
  8. பி.கே.திரிபாதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்

7 முதல்வர்கள்:

  1. நரேந்திர மோடி (குஜராத்)
  2. வசுந்தரா ராஜே சிந்தியா (ராஜஸ்தான்),
  3. நவீன் பட்நாயக் (ஒரிசா),
  4. பி.சி.கந்தூரி (உத்தரகண்ட்),
  5. ரமண் சிங் (சத்தீஸ்கர்),
  6. சிவராஜ் சிங் சௌஹான் (மத்தியப் பிரதேசம்),
  7. பிரகாஷ் சிங் பாதல் (பஞ்சாப்) ஆகிய மாநில முதல்வர்களும் வேட்புமனு தாக்கலின் போது இருந்தனர்.

பாந்தர் கட்சி ஆதரவு: ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் காங்கிரஸýடன் உறவை முறித்துக் கொண்ட பாந்தர் கட்சித் தலைவர் பீம் சிங்கும் வந்திருந்தார். குடியரசுத் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமான தலைவர் ஷெகாவத் என்று அவர் சொன்னார்.

ஆதரவு கோஷம்: ராஜஸ்தானிலிருந்து ஏராளமான பாஜக தொண்டர்கள் தில்லி வந்திருந்தனர். அவர்கள் ஷெகாவத், தேர்தல் அதிகாரி அலுவலகத்தை அடைந்த போதும், அவர் மனு தாக்கல் செய்து விட்ட போதும் “ராஜஸ்தானின் ஒரே சிங்கம் பைரோன் சிங்’ என்று முழக்கமிட்டனர். “ஹிந்துஸ்தானத்துக்கு ஒரே சிங், அவர் பைரோன் சிங், பைரோன் சிங்’ “ஜெய் ஸ்ரீ ராம்’ என்றும் சிலர் கோஷமிட்டனர்.

திரிணமூல், சிவசேனை ஆப்சென்ட்: ஷெகாவத் வேட்புமனு தாக்கலின்போது பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணமூல் மற்றும் சிவசேனை கட்சியினர் வரவில்லை.

“திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி பெயரும் ஷெகாவதுக்கு ஆதரவளிப்போர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. திரிவேதி தில்லி வரும் விமானம் தாமதம் காரணமாக அவரது கையொப்பத்தைப் பெற முடியவில்லை. மற்றொரு வேட்புமனு ஷெகாவத்துக்காக தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் திரிவேதி உள்ளிட்டோர் கையொப்பம் இடம்பெறும்’ என்று சுஷ்மா ஸ்வராஜ் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

“வேட்புமனு தாக்கலின்போது நட்வர் சிங் வந்துள்ளதும் அவர் முன்மொழிந்து கையொப்பம் இட்டுள்ளதும் காங்கிரஸ் தரப்பிலிருந்தும் வாக்குகள் கிடைக்க வழிவகுக்கும்.

“குடியரசுத் தலைவர் தேர்தல் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரதிபா பாட்டீல்- சுயேச்சை வேட்பாளர் பைரோன்சிங் ஷெகாவத் இடையிலான நேரடி போட்டியாக இருக்கும். வெற்றியாளராக ஷெகாவத்தே இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

“மனசாட்சிப்படி வாக்குகளிக்குமாறு கேட்டுக் கொள்வதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. காங்கிரஸின் அதிகாரப் பூர்வ வேட்பாளாரைத் தோற்கடிக்க அந்த வார்த்தையைப் பயன்படுத்தி அதற்கு இழிவான பெயரை தேடிக் கொடுத்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் வாக்களிக்கும்போது கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதை ஷெகாவத் தவிர்த்து விட்டார். ஷெகாவத்தின் வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு “தேர்தல் களத்தில் இப்போதுதான் குதித்துள்ளோம்’ என்றார் வாஜ்பாய்.

—————————————————————————————

தன்மீதான குற்றச் சாட்டுகளுக்காக
ஷெகாவத் போட்டியிலிருந்து விலகிவிடுவாரா?
`அவுட்-லுக்’ இதழ் அம்பலப்படுத்துகிறது

சென்னை, ஜூலை 5- “பிரதிபா பாட்டில் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை யில் அவரை காங்கிர° கட்சி வாப° பெறவேண்டும்; அல் லது பிரதிபா பாட்டிலே போட் டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்” என்று திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார் ஜெயலலிதா!

“இது ஒரு வெட்கக்கேடான சூழ்நிலை” என்றும் அங்க லாய்த்திருக்கிறார் அவர்!
பிரதிபா பாட்டில் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை – ஆதாரமற்றவை என்று உச்சநீதிமன்றமே தள்ளு படி செய்த அதே தினத்தில் தான் ஜெயலலிதா இப்படிப் பேசியிருக்கிறார் செய்தியாளர் களிடம். இதனை அறியாமை என்பதா? அகம்பாவம் என் பதா?

பிரதிபா பாட்டிலை வெல்ல முடியாது; பா.ஜ.க.,வின் ‘சுயேச்சை வேட்பாளர்’ தோற் பது உறுதி என்ற நிலையில் விரக்தி, ஏமாற்றம் எரிச்சலுக் காளான பா.ஜ.க.,வினர் யார் யாரையோ கிளப்பிவிட்டு பிர திபா பாட்டிலுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் என்ற பெய ரில் சேற்றை வாரி இறைத்த படியே இருக்கிறார்கள்.

பா.ஜ.க.,வினரால் பகிரங்க மாக ஆதரிக்கப்படுபவரும், ஜெயலலிதாவின் மறைமுக ஆதரவு பெற்றவருமான ஷெகா வத் மீது இந்த மாதிரி குற்றச் சாட்டுகள் கூறப்பட்டால் – அவரை போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வைத்து விடு வார்களா இவர்கள்? அல்லது ஷெகாவத்தான் தாமாகவே போட்டியிலிருந்து விலகிக் கொண்டு விடுவாரா? இரண் டுமே நடக்காது; நடக்கவே நடக்காது.

ஷெகாவத் மீது குற்றச் சாட்டு எதுவுமில்லையா? அவர் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற் பட்டவரா?

9-7-2007 தேதியிட்ட ‘அவுட் லுக்’ ஆங்கில வார ஏடு – ஷெகாவத் மீதும் பல ஊழல் -லஞ்சம் – முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்று ஒரு பட்டியலையே வெளியிட்டுள்ளது.

1947-இல் ஷெகாவத் ஒரு சாதாரணப் போலீ°காரராக இருந்தார். அப்போதே அவர் லஞ்சம் வாங்கினார் – நடத்தை கெட்டவர் என்று குற்றஞ்சாட் டப்பட்டு பணியிலிருந்து ச° பெண்ட் செய்யப்பட்டார்.

1990-இல் அவர் ராஜ°தான் முதல்வராக இருந்தார். அப் போது அவர் தனது மருமகன் செய்த நில மோசடிக்கு முட் டுக்கொடுத்து – மருமகனைப் பாதுகாக்க அதிகார துஷ்பிர யோகம் செய்தார் என்று பத் திரிகைகளில் பரபரப்பாக செய்தி வெளியிடப்பட்டது.

ஷெகாவத்தின் மாப் பிள்ளை நர்வத்சிங் ரஜ்பி. (இவர் இப்போது ராஜ°தான் பா.ஜ.க., அமைச்சரவையில் தொழில் அமைச்சராக பதவி யில் இருக்கிறார்).
ஷெகாவத் முதல்வராவதற்கு முந்தைய காங்கிர° ஆட்சியில் பிகானீர் மாவட்டத்தில் இந் திரா காந்தி பெயரால் பாசனம் – குடிநீருக்காக ஒரு கால்வாய் வெட்டப்பட்டது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட போது “கையகப்படுத்தப்பட்ட நிலப் பகுதியில் 650 ஏக்கர் நிலம் எனக்கு சொந்தமானது.

ஆகவே அதற்குரிய நஷ்டஈடு தர வேண்டும்” என்று கோரினார் ஷெகாவத்தின் மாப்பிள்ளை.

அது அவருக்குச் சொந்த மான நிலமல்ல; போலி ஆவ ணங்கள் – மோசடியான ஆதா ரங்களைக் காட்டி நிலம் தன் னுடையது என்று தில்லு முல்லு செய்கிறார் அவர் என்று அப்போது அவர் மீது குற்றச் சாட்டுகள் எழுந்தன – சட்ட மன்றத்திலும் இந்த விவகாரம் வெடித்துக் கிளம்பியது. சுரேந் திர வியா° என்ற காங்கிர° உறுப்பினரின் இடைவிடாத முயற்சி காரணமாக – இந்த விவகாரத்தை விசாரிக்க – வருவாய்த்துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், ஷெகாவத் தின் மாப்பிள்ளை சொல்வது உண்மைக்கு மாறானது; அவ ருக்குச் சொந்தமல்ல அந்த நிலங்கள்.

அப்போது, ஷெகாவத்தின் சம்பந்தியும், மாப்பிள்ளையின் தகப்பனாருமானவர் தாசில் தாராக உத்தியோகத்திலிருந் தார். அவர் தனது மகனுக்கு ஆதரவாக செயல்பட்டு – போலி ஆவணங்கள் மூலமாக நிலங்களை மகன் ரஜ்பி பெய ரில் பதிவு செய்து விட்டார். இதிலே அவரையும் அறியாமல் அவர் செய்துவிட்ட தவறு – ரஜ்பி பிறப்பதற்கு முன் தேதி யிட்டு பதிவு செய்திருந்ததினால் – இது முழுக்க முழுக்க மோசடி என்பது அம்பலமாகி விட்டது.

அதே காலகட்டத்தில் முதல் வர் ஷெகாவத்துக்கு மிகவும் நெருக்கமானவரான ஷாலினி சர்மா – மாநில சமூகநல வாரி யத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்! சில காலத் துக்குப் பிறகு விபசாரத் தொழி லில் ஈடுபட்டதாக ஷாலினியும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டார்கள் – இரண்டு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்து நீதிமன்றம் தண்டனை வழங்கியது!

அப்போது அவர் ஏற்கெ னவே பா.ஜ.க., அமைச்சரவை யிலுள்ள முக்கிய அமைச்சர் களுக்கு இந்த மாதிரி விஷயங் களுக்கு சப்ளையர் ஆக இருந் தவர் என்ற திடுக்கிடும் தகவ லும் வெளிவந்தது. ஷெகாவத் – அவரது மருமகன் ரஜ்பி ஆகிய இரண்டு பேருமே ஷாலினியின் உயர்வுக்குப் பாடுபட்டவர்கள் என்பதை பத்திரிகைகள் பத்தி பத்தியாக எழுதின!

1992-இல் ஷெகாவத் அரசு குத்தகைதாரர் சட்டத்தில் திருத்தம் செய்து ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. “இந்த மசோதா ஷெகாவத்தின் உற வினர்கள் சிலரை நில மோசடிக் குற்றத்திலிருந்து காப்பாற்றுவ தற்கென்றே கொண்டு வரப் பட்ட மசோதா” என்று அப் போதே சுரேந்திர வியா°-மத்திய உள்துறை அமைச்சர் எ°.பி.சவானுக்குக் கடிதம் எழுதி – ஷெகாவத்தின் உறவி னர்கள் அரசு ஆவணங்களில் செய்த நில மோசடியைப் பாது காக்கும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

2002-2003-இல் ஷெகாவத் துணை ஜனாதிபதி பதவியில் இருக்கும்போதே – 16 முறை டில்லியிலிருந்து தனது சொந்த மாநிலமான ராஜ°தானுக்கு அரசாங்க செலவில் விமானத் தில் பறந்தார். எதற்காக?

அது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டம். பா.ஜ.க., வேட்பாளர்களைத் தேர்வு செய்ய – பரிந்துரை செய்ய இப்படி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து 16 முறை விமானப் பயணம் செய் தார் ஷெகாவத்.

ஷெகாவத் முதல்வராக இருந்த காலகட்டத்தில் பெண் கள் மீதான பாலின பலாத் காரம் தொடர்பான அக்கிர மங்கள் முந்தைய காலகட் டத்தைவிட எட்டு மடங்கு அதிகரித்தன. இதுபற்றிக் கருத் துக் கூறிய ஷெகாவத், “அங்கே ஒன்று இங்கே ஒன்று என்று நடைபெறும் கற்பழிப்புச் சம்பவங்களை பெரிதுபடுத்து வதா?

இதற்குப் போய் இவ் வளவு ஆர்ப்பாட்டங்களை பெண்கள் நடத்துவது ஏன்” என்றார்!

இவர் ஆட்சியில் இருந்த காலகட்டங்களில் எல்லாம் ராஜ°தானை ஒரு இந்துத்வா கோட்டையாக மாற்றிட அரும்பாடு பட்டார். “உங்கள் ஆட்சியில் மு°லிம்கள் கொடு மைகளுக்கு ஆளாக்கப்படுகி றார்களே; சிறுபான்மை மக் கள் ஒடுக்குமுறைக்கு ஆளாக் கப்படுகிறார்களே” என்ற கேள்வி எழுந்தபோது, “தொடர்ந்து காங்கிர° கட்சி மு°லிம்களைத் திருப்திப்படுத்த முயன்று கொண்டே இருக்கு மானால் – ராஜ°தானும் இன் னொரு குஜராத் ஆகிவிடும்” என்று கொக்கரித்தார் ஷெகா வத்!

இப்படி `அவுட்-லுக்’ வார ஏடு ஷெகாவத் மீதான லஞ்சம் – மோசடி -மதத் துவேஷம்பற்றி குற்றச்சாட்டுகளை அடுக்கடுக் காகப் பட்டியலிட்டு இருக் கிறது!
இப்படி பா.ஜ.க.,வினர் நிறுத் தியுள்ள வேட்பாளரின் ‘யோக் கியத்தன்மை’ வெட்ட வெளிச் சத்துக்கு வந்துள்ள நிலையில், பிரதிபா பாட்டிலைப் பற்றி குற்றச்சாட்டுகளைக் கூற இவர் களுக்கு என்ன அருகதை இருக் கிறது? குறிப்பாக ஜெயலலிதா இதுபற்றி வாய் கிழியப் பேச என்ன யோக்கியதை இருக் கிறது?

(நன்றி: `முரசொலி’ 5-7-2007)

——————————————————————————————-

சொத்து விவரங்களை வெளியிட்டார் ஷெகாவத்

13 ஜூலை 2007 – 19:39 IST

குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் பைரோன்சிங் ஷெகாவத் தனது சொத்து விவரங்களை இன்று வெளியிட்டார்.

இதன்படி ஷெகாவத்தின் வங்கி கணக்கில் ரூ. 25.60 லட்சமும், கையிருப்பாக ரூ. 1 லட்சமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெகாவத்தின் மனைவி சூரஜ் கன்வாரின் வங்கிக் கணக்கில் ரூ. 25.86 லட்சமும், கையிருப்பாக ரூ. 1.25 லட்சமும் உள்ளது. இதுதவிர சூரஜ் சேமிப்புக் கணக்கில் ரூ.5,849 ரொக்கம் உள்ளது.

பைரோன்சிங் ஷெகாவத்துக்கு என ரூ. 1 லட்சம் மதிப்புடைய நகைகள் உள்ளன. இதிலும் ஷெகாவத்தை மிஞ்சியுள்ளார் அவரது மனைவி சூரஜ். அவரிடம் ரூ. 5.25 லட்சம் மதிப்புடைய நகைகள் இருக்கின்றன.

இதுதவிர ரூ. 3.90 லட்சம் மதிப்புடைய வெள்ளி பொருட்களையும் அவர் வைத்துள்ளதாக சொத்துக் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மூதாதையர் சொத்தாக ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் ஷெகாவத்துக்கு சொந்தமாக உள்ளது. அவரது மனைவியின் பெயரில் ஜெய்பூர் மாவட்டத்தில் 6.28 ஹெக்டேர் நிலம் உள்ளது.

கணவன் மனைவி இருவர் பெயரிலும் எந்த வங்கியிலோ அல்லது அரசு துறைகளிலோ எவ்வித தொகையும் நிலுவையில் இல்லை.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் சொத்துக் கணக்கு காட்டவேண்டிய கட்டாயம் இல்லை. எனினும் ஐமுகூ வேட்பாளர் பிரதீபா பாட்டீல் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து பிரதீபா பாட்டீல் தனது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வலியுறுத்தின.

இந்நிலையில் ஒரு முன்மாதிரி நடவடிக்கையாக தேஜகூ ஆதரவு பெற்ற ஷெகாவத் தனது சொத்து விவரங்களை வெளிட்டுள்ளார்.

———————————————————————————————————–

வருவாய்த் துறை ஊழல் வழக்கிலிருந்து மருமகனைக் காப்பாற்றிய ஷெகாவத்: காங்கிரஸ் தாக்கு

லக்னெü, ஜூலை 16: வருவாய்த் துறை ஊழல் வழக்கில் இருந்து தனது மருமகனைக் காப்பாற்றியவர்தான் ஷெகாவத் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்.

மேலும் அவர் கூறியது:

பிரதிபா மீதான பாஜகவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஷெகாவத்தை நிறுத்துவது தொடர்பாக பாஜக தலைவர்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இது அவர்களுக்கிடையேயான பிரிவைக் காட்டுகிறது.

இன்னொரு வகையில், கட்சிக்குள் ராஜ்நாத் சிங்குக்கும், அத்வானிக்கும் இடையே நிலவும் பனிப்போர் மீதான கவனத்தை திசை திருப்பும் நோக்கிலும் அவர்கள் பிரதிபா மீதான குற்றச்சாட்டை கையில் எடுத்துள்ளனர்.

பாஜக தலைவர்களான அருண்ஜேட்லியும், ரவிஷங்கரும் பிரதிபா மீது குற்றம்சாட்டினர். இதற்கு ஷெகாவத்தின் தூண்டுதலே காரணம். குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்த போது, யாரையும் விமர்சனம் செய்யப்போவதில்லை, விமர்சனங்களையும் காதில் வாங்கிக் கொள்ளப் போவதில்லை என்று ஷெகாவத் தெரிவித்தார்.

ஆனால், அவரது தூண்டுதலின் பேரில்தான் தற்போதும் பாஜக தலைவர்கள் பிரதிபா மீது ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தி வருகின்றனர்.

ஷெகாவத் தோல்வியுற்றவர்: தனது இதுவரையிலான அரசியல் வாழ்க்கையில் தேர்தலில் தோல்வி என்பதே கிடையாது என்று ஷெகாவத் சமீபத்தில் கூறியிருந்தார். இதை நான் மறுக்கிறேன். குஜராத் காந்திநகர் மக்களவைத் தொகுதித் தேர்தலில் ஒரு தடவையும், ராஜஸ்தான் கங்காநகர் சட்டப்பேரவைத் தொகுதித் தேர்தலில் ஒரு தடவையும் ஷெகாவத் தோல்வியைத் தழுவியுள்ளார்.

தற்போது மதச்சார்பின்மையை குறித்து பேசிவரும் ஷெகாவத், குஜராத் இனக் கலவரத்துக்கு பிறகு, ராஜஸ்தானையும் குஜராத் போல மாற்றுவோம் என்று கூறியவர்தான்.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே பிரதிபா பாட்டீல் தனது ஆளுநர் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்தார். அதுபோல, ஷெகாவத்தும் துணைக் குடியரத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்து தனது துணிச்சலை நிருபிக்க வேண்டும்.

பிரதிபா தனது நீண்டகால அரசியல் வாழ்வில் அப்பழுக்கற்றவர். அவர் மீது எப்போதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததில்லை என்றார் கெலாட்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பை புறக்கணிக்கப் போவதாக மூன்றாவது அணி எடுத்துள்ள முடிவு குறித்து கேட்டபோது, வாக்களிப்பை புறக்கணிப்பதைவிட நாட்டின் உயர்ந்த பதவிக்கு போட்டியிடும் ஒரு பெண்மணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருக்கலாம் என்றார் கெலாட்.

————————————————————————————–

தினமலரில் வந்த தகவல்.

ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட தகுதி உள்ளவர்கள்:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மாநில சட்டசபைகள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா

ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ஒவ்வொரு மாநிலமும், அந்த மாநிலத்தில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சாரப்படி பிரதிநிதித்துவம் பெறுகிறது. ஒவ்வொரு மாநிலமும் அதன் மொத்த எம்.எல்.ஏ.,க்களின் மூலம் பிரதிநிதித்துவம் பெறுகிறது.

ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் ஓட்டு மதிப்பு உண்டு. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையை ஆயிரத்தால் வகுத்தால் வரும் தொகைக்கு இணையாக இருக்கும். இந்த தொகையை மாநிலத்தின் மொத்த எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும்.

உதாரணம்:

ஆந்திர மாநிலம்

மொத்த மக்கள் தொகை 43,502,708: ஆயிரத்தால் வகுத்தால் வருவது 43,502.708 , மொத்த எம்.எல்.ஏ.,க்கள் 129, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,யின் ஓட்டு மதிப்பு: 43,502.708 ஐ 129 ஆல்வகுக்க வேண்டும் 147.96 = 148

மிக அதிகபட்ச மற்றும் மிகவும் குறைந்தபட்ச ஓட்டு மதிப்பு கொண்ட மாநிலங்கள்

உத்தர பிரதேசம் 208: சிக்கிம் 7

ஒவ்வொரு மாநிலத்தின் மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது?

* மாநில சட்டசபையில் உள்ள மொத்த சீட்களின் எண்ணிக்கையை ஒரு எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்புடன் பெருக்கி கொள்ள வேண்டும்.

*ஒவ்வொரு ஓட்டின் மதிப்பும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விடுவதால், மாநில வாரியாகவே ஓட்டுக்கள் எண்ணப்படும்.

ஓட்டு எண்ணிக்கை:

* பதிவான மொத்த ஓட்டுக்களில் பாதியளவுக்கு அதிகமான ஓட்டுகளை வேட்பாளர் பெற வேண்டும்.

* ஒவ்வொரு வேட்பாளரும் முன்னுரிமை ஓட்டு மூலம் எவ்வளவு ஓட்டுகள் பெற்றார் என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார். தேவையான அளவுக்கு ஓட்டுகள் பெற்று விட்டால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இல்லாவிடில் இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கை துவங்கும்.

* முன்னுரிமை ஓட்டில் மிகவும் குறைந்த ஓட்டு பெற்ற வேட்பாளர்கள் இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கையில் இருந்து விலக்கப்படுவர். அவர் பெற்ற ஓட்டுகள் மீதியுள்ள வேட்பாளர்களுக்கு, இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கையின்படி பிரித்து கொடுக்கப்படும்.

* இந்த முறையும், தேவையான அளவுக்கு ஒரு வேட்பாளர் ஓட்டுகளை பெற்றுள்ளாரா என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி தான் முடிவு செய்வார். அதன்படி ஓட்டுகள் பெற்று இருந்தால், வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

2007ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்

மொத்த ஓட்டுகளின் மதிப்பு . 5,49,408: அனைத்து ஓட்டுகளும் பதிவானது என்று எடுத்து கொண்டால் ஒரு

வேட்பாளர் வெற்றி பெற 5,49,408ஐ 2 ஆல் வகுக்க வேண்டும்.அதில் வரும் தொகையுடன் 1 ஐ கூட்ட

வேண்டும். இதன்படி ஒரு வேட்பாளர் 2,74,705 ஓட்டுக்களை பெற வேண்டும்.

பதவிக்காலம்

* ஐந்து ஆண்டு காலத்துக்கு ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார்.

ஓட்டுச் சீட்டு

* ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுச்சீட்டில் எவ்வித அடையாளகுறியீடுகளோ, சின்னங்களோ இருக்காது. வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தான் இருக்கும்.

* ஒவ்வாரு வாக்காளரும் தனது முன்னுரிமை ஓட்டு குறித்து ஒவ்வொரு வேட்பாளருக்கு எதிராகவும் குறிப்பிட வேண்டும்.

* குறிப்பிட்ட வேட்பாளருக்கு தன்னை பொறுத்தவரை முன்னுரிமை பெற்றவர் என்பதை குறிக்க அந்த வேட்பாளருக்கு எதிராக “1′ என்று குறிப்பிட வேண்டும். இரண்டாவது முன்னுரிமை பெற்ற வேட்பாளருக்கு எதிராக “2′ என குறிப்பிட வேண்டும்.

Posted in Backgrounder, Bhairon Singh Shekhawat, Biography, Biosketch, BJP, Elections, Faces, History, Independent, Info, Information, NDA, Patil, people, Polls, Pratiba, Pratibha, Pratibha Patil, President, Prez, Raj, Rajasthan, Reference, RSS, Shekavat, Shekavath, Shekawat, Shekawath, Veep, VP | 1 Comment »

Education: Master of Arts in Dance (Interview & Introduction)

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

கல்வி: எம்.ஏ.நாட்டியா!

அஞ்சலி

தமிழகத்தில் நாட்டியக் கலைக்குப் பட்ட மேற்படிப்பு பயிற்றுவிக்கும் ஒரே கல்லூரி என்ற சிறப்பு அடையாறு ஜானகி- எம்.ஜி.ஆர். கலை அறிவியல் கல்லூரிக்கு மட்டுமே உண்டு. எம்.ஏ. நாட்டியா என்ற அந்த ஐந்தாண்டு படிப்பின் துறைத்தலைவராக இருப்பவர் ராஜஸ்ரீ வாசுதேவன். அவரைச் சந்தித்தோம்.

“”இந்த நாட்டியப் படிப்பில் நடனம், இசை, நாடகம் மற்றும் யோகா முக்கியப் பாடங்களாகப் போதிக்கப்படுகின்றன. வரலாறு, தத்துவம், இலக்கியம் ஆகியவை துணைப்பாடங்களாக உள்ளன. உதாரணத்துக்கு சிலப்பதிகாரத்தில் நாட்டியம், இசை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ள பகுதிகளை இலக்கியப் பாடங்களாக வைத்திருக்கிறோம். அதே போல தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் கற்பிக்கிறோம். அதில் மெய்ப்பாடு பகுதி நவரசங்களையும் சொல்வதாக இருக்கிறது. வரலாறை எடுத்துக் கொண்டால் சோழ, சேர, பாண்டிய, பல்லவ, விஜயநகர கலைநுட்பங்களைச் சொல்லித் தருகிறோம். தத்துவப் பிரிவில் சைவ சித்தாந்தம், வேதகாலம் ஆகியவற்றில் மிளிரும் கலாபூர்வமான தத்துவக் கோட்பாடுகளைக் கற்பிக்கிறோம். நாட்டிய நாடகங்கள் குறித்த வகுப்புகளும் இருப்பதால் சிறந்த நடிகர்களின் வீடியோ கிளிப்பிங்க்ஸ் காட்சியின் மூலமாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அனிதாரத்னம் போன்றோர் அவர்கள் நடத்தும் நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு அழைப்பார்கள். அது எங்கள் மாணவிகளுக்குச் சிறந்த நேரடி பயிற்சி அனுபவம். இம் மாதிரி நாட்டிய நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவரும் மாணவர்கள் நிகழ்ச்சியைப் பற்றிய விமர்சனம் எழுதித் தரவேண்டும். அது மாணவர்களின் இன்டர்னல் மதிப்பெண் பட்டியலில் சேர்க்கப்படும்.

நாட்டுப்புறக் கலைகளுக்கும் இதில் முக்கியத்துவம் தரப்படுகிறது. தப்பாட்டம் போன்ற கலைகளும் பயிற்றுவிக்கிறோம்.

எம்.ஏ. படிப்பில் நிகழ்ச்சியை நடத்த தேவையான அரங்க ஏற்பாடுகள், லைட்ஸ், ஆடியோ பற்றியும் பாடங்கள் உள்ளன. இப்போதே எங்கள் கல்லூரி மாணவிகளுக்கு டி.வி., ரேடியோ நிகழ்ச்சிகளில் பங்கு பெற அழைப்புகள் வருவது எங்களுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம். இக் கலைத்துறைப் படிப்புக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. வெளிநாட்டில் பல கல்லூரிகள் எங்கள் மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கவும் தயாராக இருக்கின்றன” என்கிறார் ராஜஸ்ரீ.

இப் படிப்புக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஒப்புதல் வாங்கி நடைமுறைப்படுத்தியவர் லதா ராஜேந்திரன். எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளியின் முதல்வராகவும் இக் கல்லூரியின் தாளாளராகவும் செயல்பட்டுவரும் அவரிடம் மேலும் விவரங்களுக்காக அணுகினோம்.

* நாட்டியத்துக்காக இப்படி ஒரு பட்ட மேற்படிப்பை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

நான் பத்மாசுப்ரமணியத்தின் நாட்டிய மாணவி. கலாஷேத்ராவில் டிப்ளமோ பயிற்சி நடப்பதுபோல் பட்டப்படிப்பை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். இதை ஐந்தாண்டு இன்டகரேட்டட் பட்ட மேற்படிப்பாக நடத்துவதற்கான முன்வடிவை பத்மாசுப்ரமணியம் உள்ளிட்ட நாட்டியக் கலைஞர்களிடம் விவாதித்தோம். சென்னை பல்கலைக் கழகத்தின் இசைத்துறை தலைவர் ப்ரமிளா குருமூர்த்தியின் ஆலோசனையின் பேரில் சிலபûஸ செழுமைப்படுத்தினோம். இப்படியாக இந்த நாட்டியப் படிப்பு முழுவடிவம் பெற்றது.

* சிலபஸ் தயாரானவிதம் எப்படி?

சென்னை பல்கலைக் கழகத்தின் போர்ட் ஆஃப் ஸ்டடீஸ் மூலம் நாட்டியத் துறையைச் சேர்ந்தவர்கள், நாடகம் வரலாறு, தத்துவவியல், தமிழ்த்துறை, சமஸ்கிருதத்துறை அறிஞர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றனர். ஐந்தாண்டு படிப்பாக இருந்தாலும் மூன்றாண்டு படிப்புக்குப் பிறகு பி.ஏ. இளங்கலையோடும் நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் வேறு துறையில் பி.ஏ. முடித்தவர்கள் நாட்டியாவில் முதுநிலை (எம்.ஏ.) தொடர முடியாது.

* எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளியில் படிப்பவர்களுக்கு ஜானகி- எம்.ஜி.ஆர். கல்லூரியில் வாய்ப்பளிக்கிறீர்களா?

கண்டிப்பாக. எங்கள் பள்ளி மட்டுமன்றி மற்ற வாய் பேச

முடியாத, காது கேளாத மாணவர்களுக்கும் வாய்ப்பு தருகிறோம். நாட்டியப் படிப்பில் அவர்கள் பயில்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. மற்ற துறைகளில் பயில்கிறார்கள். சென்ற ஆண்டில் மட்டும் இது போன்றவர்கள் 15 பேர் கல்லூரியில் சேர்ந்தனர்.

* உங்களுக்கும் மறைந்த எம்.ஜி.ஆருக்கும் என்ன உறவு?

என் கணவர் ராஜேந்திரன், ஜானகி அம்மாளின் தம்பி.

Posted in Analysis, Anita, Anita rathnam, Anita ratnam, Anitha, Anitha rathnam, Anitha ratnam, Arts, Bachelors, Backgrounder, Culture, Dance, Degree, Education, Graduate, Heritage, Interview, Introduction, M&A, MGR, Padma Subramaniam, Padmasubramaniam, School, Student, Study, Syllabus | Leave a Comment »

A tourist in Himalayas – Urbanization, Environment protection, Traveler

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

இமயமலைப் பகுதி மாநிலங்கள் வளமானவையா?

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில், இமயமலைப் பகுதியில் உள்ள சிறு நகரான சக்ரதா என்ற இடத்தில் சமீபத்தில் சில நாள்கள் தங்கினேன். அது ராணுவ கன்டோன்மென்ட் பகுதி.

கடல் மட்டத்திலிருந்து 7,200 அடி உயரத்தில் இருக்கிறது. டேராடூன் நகரிலிருந்து ஜீப்பில் போக மூன்றரை மணி நேரம்.

தில்லியின் கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க சக்ரதாவுக்குச் சென்றேன். வனத்துறையின் ஓய்வில்லத்திலிருந்து அந்த மலையைப் பார்க்க பார்க்கப் பிரமிப்பாக இருந்தது.

டோன்ஸ் நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியான அங்கு மரங்கள் அடர்ந்த காடு நேர்த்தியாக இருந்தது. பருவநிலை மிக அற்புதமாக, ஆரோக்கியத்துக்கு ஏற்றதாக இருந்தது. சொர்க்கத்துக்கு அருகிலேயே வந்துவிட்டதைப் போன்று உணர்ந்தேன்.

உத்தரப் பிரதேசத்தின் மலைப்பகுதி வளர்ச்சியில் அக்கறை செலுத்தப்படவில்லை என்பதால் தனியாகப் பிரிக்கப்பட்ட மலை மாநிலம் இது. இமாசலத்தை ஒட்டியிருக்கிறது. இம் மாநிலம் உதயமாகி 8 ஆண்டுகள் இருக்கும். அதற்குள் அதன் வளர்ச்சி அல்லது நிர்வாகம் குறித்துக் குறை கூறுவது சரியல்ல. ஆனாலும் மாநிலத்தின் வளர்ச்சி எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்பது தவறல்ல.

ராணுவத்தின் தரைப்படைப் பிரிவின் கட்டுப்பாட்டில் சக்ரதா இருக்கிறது. இங்கு வெளிநாட்டவர் வரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியின் தலைவாயிலான கல்சி என்ற இடத்திலிருந்து சக்ரதா வரையுள்ள பகுதிக்குச் செல்வதாக இருந்தால் ராணுவத்தின் அனுமதியோடுதான் செல்ல முடியும்.

கல்சி என்ற இடத்தில்தான் டோன்ஸ் நதி, யமுனையில் சேர்கிறது. இந்த இடத்தில் மாமன்னர் அசோகர் பற்றிய பாறைக் கல்வெட்டு இருக்கிறது. இதை இந்தியத் தொல்லியல் துறை பராமரிக்கிறது. 19-வது நூற்றாண்டில் ஒரு ஆங்கிலேயர்தான் இதைக் கண்டுபிடித்தார். இந்தியாவின் இதுபோன்ற தொல்லியல் சின்னங்களையும், கலாசாரத்தையும் வெள்ளைக்காரர்கள்தான் ஆர்வமுடன் கண்டுபிடித்துள்ளனர், நம்மவர்கள் அந்த அளவுக்குக் கண்டுபிடிக்காதது ஏன் என்று தெரியவில்லை.

இப்பகுதியின் பாதி வனப்பகுதியை வனத்துறை நேரடியாகவும் மற்றதை சிவிலியன்களும் நிர்வகிக்கின்றனர். இந்த பாகுபாட்டை அங்கு வளர்ந்துள்ள மரங்களிலிருந்தே அறியலாம். வனத்துறையினர் பராமரிக்கும் பகுதியில் காடு நன்றாக செழித்து வளர்ந்திருக்கிறது.

இந்தப் பிராந்தியம் முழுவதிலும் வன விலங்குகளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காட்டு மான் அல்லது பன்றி மட்டுமே எப்போதாவது கண்ணில்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். குஜ்ஜர்கள் வளர்க்கும் காட்டெருமைகளும் பசுக்களும்தான் கண்ணில்பட்டன. சில ஒப்பந்ததாரர்கள் மட்ட குதிரைகளை சரக்கு எடுத்துச் செல்வதற்காக வைத்துள்ளனர்.

இப்பகுதியில் ஜெüன்சார்-பப்பார் பழங்குடிகள் வசிக்கின்றனர். இவர்கள் பஞ்ச பாண்டவர்களின் வழித் தோன்றல்கள். ஹிந்து பண்டிகைகளை இவர்கள் தங்களுக்கென்றுள்ள தனி பஞ்சாங்கப்படி கொண்டாடுகின்றனர். மிகவும் அமைதியானவர்கள். இப்பகுதியில் கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நிகழ்வதில்லை. மாடு மேய்வது தொடர்பான சிறு புகார்கள் அதிகம்.

வனப்பகுதியில் சில ஓய்வில்லங்கள் உள்ளன. சில மிகவும் வசதியாக, அழகாக உள்ளன. சில பராமரிப்பின்றி மோசமாக இருக்கின்றன. ஆனால் அற்புதமான வனத்துக்கு நடுவே இவை உள்ளன.

பிரிட்டிஷ்காரர்களின் ரசனையே அலாதி. இங்குள்ள ஒரு ஓய்வில்லத்தில் லேடி எட்வர்ட்ஸ் என்ற பெண்மணி 3 நாள்கள் தொடர்ந்து தங்கியிருந்திருக்கிறார். தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து 7 ஆயிரம் மைல்கள் தள்ளி வந்த நாட்டில், ஆளரவமே இல்லாத மலைப்பகுதி காட்டில் இயற்கையை ரசிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல!

காட்டிலே ஒரு கிளையைக்கூட வெட்டக்கூடாது என்று 1996-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது வன வளத்தைக் காக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு.

ஆனால் காடுகளை அறிவியல்ரீதியாக பராமரிப்பதென்றால், அவ்வப்போது மரங்களை வெட்டி அல்லது கிளைகளைக் களைத்து சீர்படுத்த வேண்டும். பழைய மரங்களை வெட்டிவிட்டு புதிய கன்றுகளை நட வேண்டும். “”காடுகளைப் பாதுகாக்க வேண்டியவர்கள்” அதில் அக்கறை காட்டாததால்தான் நீதித்துறை தலையிட நேர்ந்தது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

உத்தரகண்ட் மலைப்பகுதிக்கு கடந்த 40 ஆண்டுகளாகப் பலமுறை சென்று வந்துள்ளேன். குமான், கர்வால் என்ற இருவகை மலைப் பகுதிகளிலும் அதிகம் பயணம் செய்துள்ளேன்.

அப்பகுதியில் கிராமங்களும் சிற்றூர்களும் எந்த மாறுதலும் இல்லாமல் அப்படியே இருக்கின்றன. சாலை வசதி மட்டும் ஓரளவுக்கு மேம்பட்டிருக்கிறது. கிராமங்களில் செல்போன், ஜீன்ஸ் பேண்ட், கோக-கோலா மட்டுமே புதிய நாகரிகச் சின்னங்களாகக் கண்ணில்படுகின்றன. பெரும்பாலான மக்கள் பட்டினி இல்லாமல் ஏதோ ஒரு வேளையோ இரு வேளையோ சாப்பிடுகிறார்கள் என்பதைத் தவிர எந்தப் பொருளாதார முன்னேற்றமும் இல்லை.

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. கிராமங்களிலிருந்து ஒரு மைல் சுற்றளவுக்குள் ஆரம்பப்பள்ளிக்கூடம் இருக்கிறது. ஆனால் கல்வியின் தரம் உயர்வாக இல்லை. பல குடும்பங்களில் சிறுவர்களை அதிகம் படிக்க வைப்பதில்லை.

அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் மூன்று.

1. கல்வி பயில போய் வரும் போக்குவரத்துச் செலவு கட்டுப்படியாவதில்லை.

2. படிக்கப் போய்விட்டால் குடும்பச்செலவுக்கு வருவாய் குறைகிறது.

3. படித்து முடித்ததும் வேலையா கிடைக்கப்போகிறது?

ஓரளவு படித்த இளைஞர்கள் வேலைதேடி சமவெளியில் உள்ள நகரங்களுக்குச் செல்கின்றனர். அங்கு வீட்டு வேலை செய்கின்றனர் அல்லது ராணுவத்தில் சேர்கின்றனர்.

வனப்பகுதியில் காண்ட்ராக்டர் வேலையைச் செய்கிறவர் மட்டும் வியாபாரி போல, கொஞ்சம் காசு பார்க்கிறார். ஆனால் அதற்கு பொறுமையும், புத்திசாலித்தனமும் அவசியம்.

குடி தண்ணீர் இல்லாமல் மக்கள்படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. நல்ல தண்ணீருக்காக பெண்களும் குழந்தைகளும் குடங்களைத் தூக்கிக்கொண்டு 3 அல்லது 4 மைல்தூரம் கூட செல்கின்றனர். எல்லா கிராமங்களுக்கும் குடிநீர் தரும் திட்டம் 1980-களில் வெகு ஆடம்பரமாக தொடங்கப்பட்டது. ராஜீவ்காந்தி குடிநீர் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இன்னும் இக் கிராமங்களை அத்திட்டம் எட்டவில்லை.

தொழில் வளர்ச்சியும் அதிகம் இல்லை. காடுகளில் கிடைக்கும் பழம், இலை, பூ, மூலிகைகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் ஆலை எதுவும் ஏற்படவில்லை. டேராடூன் நகர்ப் பகுதியில் மட்டும் பெயருக்கு சில தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன.

சுற்றுலாப் பயணிகள் மலையின் அழகை ரசித்தபடியே சிலநாள்கள் தங்கிவிட்டுச் செல்ல கூடாரங்களை நிறுவலாம்; அங்கு சாலை, குடிநீர், கழிப்பிடம் போன்ற குறைந்தபட்ச வசதிகளை மட்டும் செய்துதரலாம் என்று இப்போது யோசனை கூறப்பட்டிருக்கிறது.

மலையேறும் சாகசத்தை நிகழ்த்த நினைப்பவர்களை ஈர்க்க இந்த சுற்றுலாத் திட்டம் பயன்படும். ஆனால் இதனால் நிரந்தர வருவாய் கிடைக்காது.

நாடு சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் ஆனபிறகும், விவசாயியோ, கிராமவாசியோ தான் பிறந்த மண்ணிலிருந்துகொண்டே வளர்ச்சியின் பலனை அனுபவிக்கும் சூழலை ஏற்படுத்தத் தவறிவிட்டோம்.

முன்னேற வேண்டும் என்றால் சொந்த ஊரிலிருந்து வெளியேறி நகரங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற நிலைமையை நாடு முழுவதும் ஏற்படுத்திவிட்டோம்.

தேசியக் கொள்கைகளை வகுப்பதில் நாம் அடைந்துள்ள தோல்விக்கு இது நல்ல உதாரணம்.

மாநிலத்தின் அதிகாரிகளும் வனத்துறை அதிகாரிகளும் திறமையானவர்கள், நல்லவர்கள். மாநில முதல்வர் நாராயண் தத் திவாரி நல்ல அனுபவம் பெற்ற தேர்ந்த நிர்வாகி. அப்படியும் மாநிலத்தின் வளர்ச்சி சமச்சீரானதாகவோ, மெச்சத்தகுந்ததாகவோ இல்லை.

இந்த மாநிலத்தில் 70 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், ஆனால் 80 வளர்ச்சிக் கோட்டங்கள் உள்ளன. இதனால் எம்.எல்.ஏ.க்களுக்கும் கோட்டங்களின் தலைவர்களுக்கும் இடையே, வருவாயைப் பகிர்ந்துகொள்ள போட்டி ஏற்படும். இது இப்பகுதி வளர்ச்சிக்கு உகந்ததல்ல. வளர்ச்சி கோட்டங்களையும் பேரவைத் தொகுதிகளுக்குச் சம எண்ணிக்கையில் இருக்குமாறு முதலிலேயே பிரித்திருக்க வேண்டும்.

மக்களின் வளர்ச்சிக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கினாலும் அவற்றைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் போக்கு எங்குமே இல்லை. மக்கள் இன்னமும் விழிப்படையாமலேயே இருக்கின்றனர் என்பது உண்மையே.

எனவே ஆட்சியாளர்கள் இந்த நிலைமையை மாற்ற நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும். எல்லாம் வழக்கம்போலவே நடப்பதால் முன்னேற்றம் வந்துவிடாது. முன்னேற்றம் இல்லாவிட்டால் மோசமாகப் போய்விடும்.

(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)

———————————————————————————————————

வன வளம் காப்போம்!

ஆர்.எஸ். நாராயணன்

கடந்த இரு நூற்றாண்டுகளில் வன வளம் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகிறது. தாவரங்கள் மட்டுமன்றி, விலங்கினங்களும் கணிசமாக அழிந்து வருகின்றன. இவற்றுக்கெல்லாம் மனிதர்களே காரணம்!

அரசு தரும் ஒரு புள்ளிவிவரப்படி 1875-லிருந்து 1925 வரை 80 ஆயிரம் புலிகள், 1 லட்சத்து 50 ஆயிரம் சிறுத்தைகள், 2 லட்சம் ஓநாய்கள் வேட்டையாடிக் கொல்லப்பட்டன. 1925-க்குப் பின் இன்றுவரை கொல்லப்பட்டவை எவ்வளவு?~வனங்கள் சுத்தமாகிவிட்டன. பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்த வேட்டையை விட இன்றைய ஆட்சியில் வேட்டையின் விளைவால் காடுகளில் சிங்கம், புலி, நரி போன்ற விலங்குகளின் எண்ணிக்கை, கவலை தரும் அளவுக்குக் குறைந்துவிட்டது. ஐம்பதாண்டு முதிர்ந்த தேக்கு, சந்தனம், செஞ்சந்தனம், கருங்காலி, ரோஸ்வுட் எதுவும் இல்லை. ஒருகாலத்தில் காட்டில் ஒரு வீரப்பன் இருந்தான். இப்போது நாட்டில் இருந்து கொண்டே பல வீரப்பர்கள் வனத்தை அழித்து வருகிறார்கள். வனக்காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் மரவியாபாரிகளுக்கு வைரம் பாய்ந்த மரம் கிடைக்கும். பன்மடங்கு வனச் செல்வங்கள் கொள்ளை போகும்போது, ஒருபக்கம் பழியை வனத்தில் வாழ்வுரிமை கேட்கும் பழங்குடிகள் மீது சுமத்தப்பட்டு வருகிறது.

இப்போது ஒரு புதிய பசி வந்துள்ளது. அதன் பெயர் “வளர்ச்சி’. வளர்ச்சி என்ற போர்வையில் வனத்தைச் சுரண்ட புதிய வரையறையைப் பெரும் பொருள்செலவில் கண்டுபிடித்துள்ளனர். மத்திய அரசின் வனம் மற்றும் சூழலியல் அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பு “”வனம் என்றால் என்ன?” என்ற கேள்விக்கு ஒரு வரையறை விளக்கத்தை வழங்கும்படியும், இந்தியச் சூழ்நிலைக்கு ஏற்ப சட்ட நெளிவுசுளிவுகளிலிருந்து தப்பும் ஆலோசனைகளை வழங்கும்படியும், அதற்குரிய கட்டணத்தையும் கேட்டு பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு கோரிக்கைவிட்டிருந்தது. பதில் அனுப்பியிருந்த பல ஆய்வு நிறுவனங்களில் மிகக் குறைந்த கட்டணத்திற்கு அசோகா அறக்கட்டளை முன்வந்தது. அப்பணி முடிவுற்று அது தொடர்பான முடிவுக்கூட்டம் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்தது. அதில் “வனத்தின் வரையறை’ முன்வைக்கப்பட்டது.

வனம் என்றால் என்ன? இதற்கு ஐ.நா. அமைப்புகள் வழங்கும் அறிக்கைகள் உள்ளன. வனம் பற்றிய வரையறை வகைகள், பணிகள், நிர்வாகம், பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை அறிக்கைகள் வனம் – மற்றும் சூழலியல் அமைச்சக நூலகத்தில் நிறையவே உள்ளன. இவ்வளவு இருந்தும் புதிய வரையறை இப்போது தேவைப்படுகிறது. ஓட்டைகள் பல போட்டு ஒழுகும் பானையில் மேலும் ஓர் ஓட்டை போட ஆலோசகர்களும் அலுவலர்களும் முயல்வது ஏன்? அவர்கள் அப்படி என்ன வரையறுத்தார்கள்?

“”வனம் என்பது அரசின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதி. உயிர்ச்சூழல், பல்லுயிர்ப் பாதுகாப்பு அடிப்படையில் சட்டரீதியாக வனம் என்று பதிவு செய்யப்பட்ட நிலம். இப்படிப்பட்ட நிலப்பிரிவு எல்லைகளுக்குட்பட்ட ஏரி, குளம், நதி போன்ற நீர்நிலைகள், மரங்கள், புல்வெளிகள், நன்செய், புன்செய் நிலங்கள், பாலைவனம், மண்ணியல் ஆய்விடம், பனி மண்டலங்கள்…..”

இந்தியாவின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக – நீர் மின்திட்ட அணைகள், ராணுவக் கட்டுமானம், சுரங்கம், குடியிருப்பு மாற்றம், நெடுஞ்சாலை.. போன்ற திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக – பல்வேறு நீதிமன்றங்களில் சுமார் 1300 வழக்குகள் – வளர்ச்சிக்கு வனங்களை ஒதுக்கிக் கொள்ள முடியாமல் உள்ளனவாம். இப்போது புரிகிறதா? நாட்டில் உள்ள நரிகள் ரொம்பவும் பொல்லாதவை. வளர்ச்சி என்ற போர்வையில் வனங்களைச் சுரண்ட பெரு முதலாளிகளுக்குப் பல புதிய வாய்ப்புகள் வழங்கவும், காலம்காலமாக வனமே வாழ்வு என்று வனங்களை நம்பி வாழும் ஆதிவாசிகளுக்குப் பச்சைத் துரோகமும் செய்ய இப் புதிய வரையறை உதவும்.

வழக்கில் சிக்கியுள்ள பகுதி 6 லட்சத்து 57 ஆயிரம் ஹெக்டேர்தான். இன்று மரம்வெட்டுவதற்காக வனம் என்று ஒதுக்கப்பட்ட காடுகளின் பரப்பு 3.1 கோடி ஹெக்டேர், காப்பிடம் என்று பதிவான நிலப்பரப்பு 1.5 கோடி ஹெக்டேர். ஆக மொத்தம் 4.6 கோடி ஹெக்டேர் நிலத்தின் சொந்தக்காரர், ஒரு மகாநிலப்பிரபுவாகத் திகழ்ந்துவரும் அரசு, 8 கோடி வனவாசிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருவாய்த்துறைக்குக் கட்டுப்பட்ட புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அனுபவப் பாத்தியதைக் கொண்டாடி சொந்தமாக்கிக் கொள்ளும் தந்திரம் நாட்டு நரிகளுக்கு உண்டு. அந்த உரிமை காட்டு நரிகளுக்கு இல்லை. டன் டன்னாக மரம் வெட்டிக் கொள்ளை அடிக்கப்படுவது ஒருபுறம். பாவப்பட்ட வனவாசிகள் தங்கள் ஆடு, மாடுகளை வனங்களுக்கு ஓட்டிச் சென்று மேய்க்க அவர்களுக்கு உரிமை இருந்தும் உரிமை மறுக்கப்படுகிறது. வனவாசிகள்தான் வனத்தை அழிப்பதாகப் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. காடுகளில் உலர்ந்து விழும் விறகைப் பொறுக்குவதும், விதை, பழம் பொறுக்குவதும் மரங்களை வெட்டுவதும் ஒன்றாகிவிடுமா?

1970-களில்தான் காடுகளில் வனவிலங்குகள் காணாமல் போனதைக் கண்டுபிடித்தார்கள். மரக்களவுபற்றி கண்டுகொள்ளவில்லை. 1972-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வனவிலங்குப் பாதுகாப்பு சட்டம் காரணமாக தேசியப் பூங்காக்கள், சரணாலயங்கள் உருப்பெற்றுக் காட்டு விலங்குகளை அவற்றின் இயல்பான சூழலில் காப்பாற்றி இனப்பெருக்கம் செய்யப்பட்டது. இப்படி வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டதைப்போல் வனவாசிகளின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவில்லை. இந்தக் காலகட்டத்தில்தான் உத்தராஞ்சல் மாநிலத்தில் தாசோலியில் வனவாசிகள் ஒன்றுகூடி சிப்கோ இயக்கத்தை உருவாக்கினர். இதை சர்வோதய இயக்கத்தைச் சேர்ந்த காந்தியவாதி சாந்தி பிரசாத் பட் தொடங்கிவைத்து தலைமையேற்று நடத்தினார்.

இமயமலைக் காடுகளில் சட்டபூர்வமாக மரங்களை வெட்ட வந்த ஒப்பந்தக்காரர்களை மரங்களை வெட்ட முடியாதபடி மரத்தை இரு கரங்களால் அணைத்துக் கொண்டு, “”முதலில் எங்களை வெட்டிவிட்டு மரங்களை வெட்டுங்கள்” என்று வனவாசிகள் கூறினர். மலைக்காடுகளில் மரங்களை வெட்டும்போது நிலச்சரிவும் வெள்ளமும் உருவாகும் என்ற உண்மை வனவாசிகளுக்கு நன்கு தெரியும். 1972, 73 ஆண்டுகளில் “சிப்கோ’ இயக்கம் தீவிரமானபோது சுற்றுச்சூழல் காப்பு இயக்கத் தலைவர்கள் சுந்தர்லால் பகுகுணா, வந்தனா சிவா ஆகியோர் அதில் பங்கேற்றனர். அதுபோன்ற இயக்கம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருப்பெறவில்லை. குறிப்பாக கொடைக்கானல் அமைந்துள்ள பழனிமலைக்காடுகளில் வன அழிவு காரணமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாகும்போது ஆண்டுதோறும் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்படுகிறது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மீது எவ்வளவோ குற்றச்சாட்டுகள் உண்டு. அவர் கொண்டுவந்த நெருக்கடிகால ஆட்சி இந்திய ஜனநாயகத்தின் பொற்காலம் எனலாம். 1980-ல் நெருக்கடிகால வனப்பாதுகாப்புச் சட்டம் வந்தது. மாநில அரசுகள் தன்னிச்சையாகச் செயல்பட்டு வனத்துறை ஊழல்கள் – மரம் கடத்தல் – மலிந்திருந்த காலகட்டத்தில், மத்திய அரசு அனுமதி இல்லாமல் வனங்களில் மாநிலங்கள் கைவைக்க இயலவில்லை. பின்னர் ராஜீவ்காந்தி காலத்திலும் பழனிமலைப் பாதுகாப்பு உள்பட வனப்புனர் வாழ்வுக்கு நிறைய நிதி உதவிகள் வழங்கப்பட்டன. காலம் செல்லச் செல்ல நிதி உதவிகள் நிறுத்தப்பட்டன. வனவாசிகளின் வாழ்வுரிமை மேலும் மேலும் மறுக்கப்பட்டே வந்துள்ளது. வனத்தை வரையறை செய்யும்போது, வனவாழ் மக்களின் உரிமை அன்று சற்று கவனம் பெற்றது. இன்று முற்றிலும் மறுக்கப்படுகிறது. வனவிஷயத்தில் மட்டுமாவது வருவாய் நோக்கை மறந்துவிட்டு, உயிர்ச்சூழல் – சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு முதல் மரியாதை வழங்க வேண்டும். வனத்திலே பிறந்து, வனத்திலே வளர்ந்து, வனத்திலே வாழ்ந்து மடியும் வனவாசிகளை வெளியேற்றும் ஒரு பாவச்செயலை இனியும் தொடர வேண்டாம்.

“”இந்தப் பிரபஞ்சம் ஒரு மகாசக்தியின் படைப்பு. இப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் அவற்றின் நலன்களுக்காகவே இயற்கை என்னும் மகாசக்தி படைத்துள்ளது. எந்த உயிரினமும் அடுத்த உயிரின உரிமைகளைப் பறிப்பது பெரும்பாவம்” என்று ஈசோபநிஷதம் கூறுகிறது. காட்டில் உள்ள நரி ரொம்ப நல்லதுங்க. அதைக் காப்பாற்றுங்க!

——————————————————————————————————————————-
முசௌரி உணர்த்திய பாடம்!

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

கடந்த வாரம் முசௌரி சென்றிருந்தேன். பிரிட்டிஷ்காரர்கள் இந்நாட்டுக்கு வந்தபோது, அவர்கள் விரும்பிக் குடியேறிய மலைவாசஸ்தலத்தில் முசௌரியும் ஒன்று. தில்லிக்கு வடக்கே 350 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊருக்கு டேராடூனிலிருந்து ஒரு மணி நேரத்தில் காரில் செல்லலாம்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான தேசிய பயிற்சி மையம் இங்குதான் இருக்கிறது. இதர மத்திய அரசு அதிகாரிகளுக்கு நிர்வாகத்தில் அடிப்படைப் பயிற்சி அளிக்கும் நிலையமும் இங்கு இருக்கிறது. இதை மலைகளின் ராணி என்றும் அழைக்கின்றனர்.

1998-ல் ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்ற அதிகாரிகளுக்கு, நிர்வாகச் சீர்திருத்தம் குறித்து உரை நிகழ்த்த சென்றிருந்தேன். 160 அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்களில் பாதிப்பேர் நேரடியாக ஐ.ஏ.எஸ். ஆனவர்கள். மற்றவர்கள் வெவ்வேறு மாநில அரசுகளால் ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறத் தேர்வு செய்து அனுப்பப்பட்ட அனுபவம் வாய்ந்த அதிகாரிகள். அமெரிக்காவைச் சேர்ந்த டியூக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் ஒருவராக நான் அங்கு சென்றிருந்தேன். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பயிற்சி தர டியூக் பல்கலைக்கழகத்தின் உதவியை இந்திய அரசு நாடியிருந்தது.

டேராடூனிலிருந்து காரில் சென்றேன். “”அடடா, சுற்றுச்சூழல் எவ்வளவு பச்சைப் பசேல் என்று பார்க்க ரம்மியமாக இருக்கிறது” என்று அகாதெமியின் காரை ஓட்டிவந்த டிரைவரைப் பார்த்துக் கூறினேன். அவர் சொன்ன பதில் மிகவும் சுவாரசியமாக இருந்தது. 1980-களில் லக்னெüவில் உயர் பதவியில் இருந்த ஓர் அதிகாரி, முசௌரியில் மரங்களை வெட்டவோ, நகராட்சிக்குள் புதிய கட்டடங்களைக் கட்டவோ அனுமதிக்கவே முடியாது என்று கண்டிப்பாகக் கூறி அமல்படுத்தியதால் இந்தப் பிரதேசம் பிழைத்தது என்றார். அவர் சொன்ன அந்த அதிகாரி நான்தான்.

நைனிதாலிலும் முசௌரியிலும் மரங்களை வெட்டுவதிலும் கட்டடங்களைக் கட்டுவதிலும் கண்மூடித்தனமான வேகத்தில் சிலர் இறங்கிவிட்டனர் என்று எனக்குத் தகவல் வந்தது. உடனே அந்த தடை உத்தரவைப் பிறப்பித்தேன். நைனிதால், முசௌரியில் யாரும் மரங்களை வெட்டக்கூடாது, முசௌரி மலையில் யாரும் பாறைகளை வெட்டவோ, இதர கனிமங்களைச் சேகரிக்கவோ கூடாது என்று உத்தரவிட்டேன்.

“”மலைப்பகுதியின் வளர்ச்சியைத் தடுக்கிறேன், மக்களுக்கு நன்மை செய்ய முடியாமல் தடையாக இருக்கிறேன்” என்றெல்லாம் என்னைப்பற்றி குற்றம்சாட்டி எனக்கு எதிராக பலத்த எதிர்ப்பு எழுந்தது. நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னைப் பலர் மிரட்டினார்கள். அதில் கொலை மிரட்டலும் உண்டு. முதலமைச்சரைக்கூட தங்கள் பக்கம் இழுக்கப் பார்த்தார்கள். ஆனால் அவர் உறுதியாக என்னை ஆதரித்தார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு நான் போட்ட உத்தரவினால் ஏற்பட்டுள்ள நல்ல பலன்களை நானே பார்த்து பூரித்துப் போனேன்.

காலாகாலத்துக்கும் மக்கள் என்னை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தற்பெருமையாக இதை நான் கூறவில்லை. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நல்ல முடிவில் அதிகாரிகள் உறுதியாக இருக்கவேண்டும் என்பதற்காகக் கூறுகிறேன். ஊழல் அரசியல்வாதியும் முதுகெலும்பில்லாத அதிகாரிகளும்தான், மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக நல்ல முடிவுகளிலிருந்து பின்வாங்குகிறார்கள். இதை மேலும் ஒரு நல்ல உதாரணம் கொண்டு விளக்க விரும்புகிறேன்.

1960-களில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. 1970-களின் பிற்பகுதியில் அதுவே சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்குத் தமிழகம்தான் முன்னோடி. தரக்குறைவான அரிசி, தானியங்களைப் பயன்படுத்துவார்கள், கணக்கில் தில்லுமுல்லு செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்வார்கள் என்றெல்லாம் இத் திட்டங்களை எதிர்த்தவர்கள் கூறினார்கள். ஆனால் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உறுதியாக இருந்ததால் இத்திட்டம் வெற்றிகரமாக அமல் செய்யப்படுகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் பலனை மாநிலம் அனுபவித்து வருகிறது. சத்துணவு காரணமாக தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் உடலும் – அறிவும் திடமாக இருக்கிறது. தகவல் தொழில்நுட்பப் படிப்பில் தமிழகம் முன்னிலையில் நிற்கிறது.

தமிழக அரசின் சிறந்த நிர்வாகத்தால் எத்தனையோ நன்மைகள் மாநிலத்துக்குக் கிடைத்தாலும் சத்துணவுத் திட்ட பலன் அவற்றில் முதன்மை பெறுகிறது. ஒரு கொள்கை முடிவால் சில ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கக்கூடிய நல்ல பலன்களை ஊகித்து மதிப்பிட முடியாது; ஆனாலும் சில நல்ல நிர்வாகத்துக்கு சில கடுமையான, உறுதியான முடிவுகள் மிகமிக அவசியம்.

ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனத்தின் காரை ஓட்டிய அந்த டிரைவர், அந்த அகாதெமி மாணவர்களிடையே மிகவும் பிரபலமான குதிரைப் பயிற்றுனர் நவல் கிஷோர் என்பவரின் உறவினர். அதை அவர் சொன்னபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பழைய விஷயங்கள் நினைவுக்கு வந்ததால் சிரிப்பும் பொத்துக்கொண்டு வந்தது. “என்னப்பா, இப்போதும் பயிற்சி மாணவர்கள் குதிரையை ஓட்ட ஆரம்பித்து கீழே விழுகிறார்களா?’ என்று கேட்டேன். ஆமாம் சார், ஆனால் ஒரு வித்தியாசம், பழைய மாணவர்களைப் போல இப்போதுள்ள இளைஞர்களுக்கு எலும்பு உறுதியாக இல்லை, அதிக நாள்கள் மருத்துவமனையில் படுத்துவிடுகிறார்கள் என்றார் அதே உற்சாகத்துடன்.

அந்தக் காலத்தில் மாணவர்கள் பழைய சாதம் சாப்பிட்டுவிட்டு தொலைவில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு நடந்தோ, சைக்கிளிலோ போனார்கள். வீட்டு வேலைகளையும் தோட்ட வேலைகளையும் செய்தார்கள். கிணற்றிலிருந்து நீர் இறைத்துத் தந்தார்கள். இப்போது நொறுக்குத் தீனி தின்றுவிட்டு பஸ்ஸிலோ, மோட்டார் சைக்கிள்களிலோ பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள். எனவே உடலில் வலு இல்லை. பள்ளிக்கூடத்தில் சத்துணவைப் போட்டு ஊருக்கே உரம் ஊட்டிய அந்த நாள் எங்கே, வீட்டிலேயே சாப்பிட்டு வலுவில்லாமல் இருக்கும் இந்த நாள் எங்கே?

எல்லோருக்கும் வரும் சந்தேகம் எனக்கும் வந்ததால் பயிற்சி அகாதெமியின் இயக்குநர் ருத்ர கங்காதரனிடம், “”இப்போதைய மாணவர்களின் தரம் எப்படி?” என்று கேட்டேன். “நான் கடந்த ஆறு ஆண்டுகளாக இயக்குநராக இருக்கிறேன்; இப்போது பயிற்சிக்கு வருகிறவர்கள், பழைய மாணவர்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாது உலக ஞானத்திலும் அவர்களுடைய பாடத்திலும் சிறந்து விளங்குகின்றனர். கடுமையான பயிற்சிகளைக்கூட எளிதாக முடிக்கின்றனர். நகர்ப்புற, மேல்தட்டு மாணவர்களைக் காட்டிலும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது’ என்று பதில் அளித்தார்.

நான் ஏற்கெனவே கூறியபடி, டியூக் பல்கலைக்கழகம் சார்பில் சென்றிருந்தேன். என்னுடன் வந்த இதர பேராசிரியர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களே. இந்த பல்கலைக்கழகம் ஹார்வர்ட், ஸ்டேன்ஃபோர்டு, யேல் பல்கலைக்கழகங்களுக்கு நிகரானது. இங்கு மட்டும் அல்ல, உலகின் முன்னணி பல்கலைக் கழகங்கள் பலவற்றில் இந்தியர்கள்தான் இப்போது பேராசிரியர்களாகவும் மாணவர்களாகவும் புகழ் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த அளவுக்கு அறிவில் சிறந்தவர்கள் இந்த நாட்டில் இருந்தும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் வறுமையில் உழல்வதும், அரசியல்வாதிகள் அப்பட்டமான சுயநலத்தில் மிதப்பதும், அதிகாரவர்க்கம் அவர்களுக்கு அடிபணிவதும் தாளமுடியாத வருத்தத்தைத் தருகிறது. நிர்வாகச் சீர்திருத்தம் எந்த அளவுக்கு அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.

முசௌரியில் பார்த்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவர்கள். சாலைகளில் வாகன நெரிசல் அதிகம். முன்பைவிட கடைகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகமாகியிருக்கிறது. ஒவ்வொரு நூறு அடிக்கும் ஒரு தென்னிந்தியச் சிற்றுண்டியகமும் உடுப்பி ஓட்டலும் கண்ணில்பட்டன. தென்னாட்டு இட்லி, வடை, சாம்பார், மசாலா தோசை வட இந்தியர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்)

Posted in Adventure, Analysis, Animals, Archeology, Ashoka, Ashokar, ASI, Asoka, Asokar, Backgrounder, Cantonement, City, dead, Deforestation, Dehradoon, Dehradun, Delhi, Economy, Education, Environment, Finances, Forests, Fox, Ganga, Ganges, Govt, Growth, guns, Haridwar, Hiking, Hills, Himachal, HP, Hunt, Hunting, Industry, infrastructure, Jobs, Kill, Kulu, Lives, Manali, Metro, Military, Mountains, Mussoori, Mussouri, Nature, Pollution, Protect, Protection, Rafting, Rishikesh, River, Rural, Sandalwood, Shot, Sports, State, Statistics, Stats, Tour, Tourism, Tourist, Transport, Traveler, Tree, Trees, Trekking, Tribals, UP, Urbanization, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Uttrakand, Veerappan, Village, Water, Welfare, Wild, Wolf, Wolves | Leave a Comment »

iRama Srinvasan – Economic Improvements does not guarantee Poverty Abolishment: Statistics, Analysis

Posted by Snapjudge மேல் ஜூன் 8, 2007

பொருளாதார முன்னேற்றமும் வறுமை ஒழிப்பும்

இராம. சீனுவாசன்

அரசின் தலையீடு, பங்களிப்பு ஆகியவற்றைக் குறைத்து சந்தையின் செயல்பாட்டை விரிவுபடுத்துவது புதிய பொருளாதாரக் கொள்கையின் மையக் கரு.

இப் புதிய பொருளாதாரக் கொள்கை செயல்பாட்டின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சி அடைந்து வறுமையும் குறைந்துள்ளதாக அரசும், இக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அறிஞர்களும் கூறுகின்றனர்.

இதற்குச் சான்றாகக் குறிப்பிடப்படுவது வறுமை விழுக்காடு

  • 1993 – 94ல் 36 சதவீதம் இருந்தது,
  • 2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.

வறுமைக் கோட்டை நிர்ணயிக்கும் முறையும், வறுமை விழுக்காட்டை அளவிடும் முறையும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. “வறுமைப் புள்ளிவிவரங்களை’ அறிந்துகொள்வது பொருளியல் கூறுகளை ஆய்ந்தறிய உதவும்.

வறுமைக் கோட்டை அளவிடும் முறையை அறிவது அவசியமாகும். வறுமை என்பதற்கு எளிய இலக்கணம் ஒன்றை வரையறை செய்ய முடியாது. இதுபோல் வறுமையை அளவிடும் முறையும் மிகக் கடினமானது.

தனிநபர் அல்லது குடும்ப வருமானத்தின் அடிப்படையில் வறுமையை அளவிடும் முறை எல்லோரும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

வருமானப் பகிர்வு அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் 40 சதவீத மக்கள் வறுமையில் இருப்பவர்கள் என்று 1970-களில் உலக வங்கி கூறியது. இதே காலகட்டத்தில் தான்டேக்கர்-ரத் என்ற இரண்டு இந்தியப் பொருளியல் அறிஞர்கள் மக்களின் நுகர்வு-செலவின் அடிப்படையில் “வறுமைக்கோட்டை’ நிர்ணயம் செய்யலாம் என்று ஆய்ந்து கூறினர். இதனை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகள் இந்தியாவிலும் மற்ற வளரும் நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன.

1993ல், மத்தியத் திட்டக் குழு வறுமைக் கோட்டைக் கணக்கிடும் முறையை வரையறை செய்தது. இந்தியாவில் தனி நபர் வருமானத்தை அளவிடுவது மிகக் கடினம். ஏனெனில், பல வழிகளில் வருமானம் பெறுவது, வருமானத்தின் ஒரு பகுதியை பொருளாகப் பெறுவது, உண்மை வருமானத்தைக் கூற மறுப்பது என பல காரணங்களைக் கூறலாம். இதனால், தனி நபர் நுகர்வுச் செலவு அடிப்படையில் “வறுமைக் கோடு’ நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஒருவர் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஒரு மாதத்திற்குச் செய்ய வேண்டிய நுகர்வுச் செலவைக் கண்டறிந்து அதனை “வறுமைக் கோடு’ எனலாம்.

  • 1973 – 74ல் நகர்ப்புற வறுமைக் கோடு ரூ.56, இதனை நகர்ப்புறத் தொழிலாளர் பணவீக்கக் குறியீடு கொண்டு ஆண்டுக்காண்டு அதிகரித்து
  • 2004 – 05ல் வறுமைக்கோடு ரூ.538 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வறுமைக்கோட்டை வரையறை செய்வதில் உள்ள சிக்கல்களை பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் நுகர்வுச்செலவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மக்களின் மொத்த நுகர்வுச் செலவில் உணவுச் செலவு குறைந்து மற்ற உணவு அல்லாத (கல்வி, சுகாதாரம்) நுகர்வுச் செலவு உயர்ந்துள்ளது.

ஆனால், 1973ல் இருந்து நுகர்வுச் செலவு கணக்கெடுப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. உணவுப் பொருள்களின் விலைகளும், மற்ற பொருள்களின் விலைகளும் வெவ்வேறு அளவில் உயர்ந்துள்ளன. ஆனால், ஒட்டுமொத்த பணவீக்கம் மட்டுமே “வறுமைக்கோட்டை’ அளவிடுவதில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

வறுமை என்பது சொந்த நுகர்வுச்செலவு அளவை மட்டுமே பொருத்தது அல்ல. பொதுச் சொத்துகளை மக்களின் ஒரு பகுதியினர் பயன்படுத்த முடியாது (உதாரணமாக நீர், விறகு) என்ற நிலை ஏற்படும்போது அவர்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனையும் வறுமைக்கோடு வரையறை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

இப்போது உள்ள “வறுமைக்கோடு’ செலவு மனிதனுக்கு எல்லா சக்திகளையும் அளிக்கக்கூடிய முழுமையான உணவுச் செலவுக்கு போதுமானதா என்ற ஐயப்பாட்டையும் பலர் முன்வைக்கின்றனர். இக் குறைகளை எல்லாம் நீக்கி புதிய அணுகுமுறையில் வறுமைக்கோட்டை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை பலரால் முன்வைக்கப்படுகிறது.

வறுமை விழுக்காடு கணக்கிடும் முறையையும் அறிந்துகொள்வது அவசியமாகும். மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் செயல்படும் ஒரு துறை “தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையம்’ ஆகும்.

இந்த மையம் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நுகர்வுச் செலவினங்களைத் துல்லியமாக அளவிட வேண்டுமெனில், நீண்ட கேள்விப் பட்டியல் தேவை. இதை புள்ளியல் துறை தயாரிக்கிறது.

1973 – 74, 1977 – 78, 1983, 1987 – 88, 1993 – 94, 1999 – 2000, 2004 – 05 ஆகிய ஆண்டுகளில் மக்களின் நுகர்வுச் செலவு மாதிரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.

கணக்கெடுப்பு நடத்தும்போது, ஒருவர் உணவுக்காக கடந்த 30 நாள்களில் எவ்வளவு செலவு செய்தார்; கல்வி, சுகாதாரம், துணி, படுக்கை, காலணி, மற்ற பொருள்களுக்குக் கடந்த ஓர் ஆண்டில் எவ்வளவு செலவு செய்தார் என்றும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் ஒருவரின் ஒரு மாத நுகர்வுச் செலவு கணக்கிடப்படுகிறது.

மாத நுகர்வுச் செலவை பல தொகுதிகளாகப் பிரித்து (உதாரணம் 0- 225, ரூ. 225 – 255) ஒவ்வொரு தொகுதியில் எவ்வளவு மக்கள் உள்ளனர் என்று பகுக்கப்படுகிறது. இந்த பகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதிலும் கிராமப்பகுதி, நகரப்பகுதி எனத் தனித்தனியாகக் கொடுக்கப்படுகின்றன. இதனைக் கொண்டு வறுமைக் கோட்டின் கீழ் எவ்வளவு பேர் உள்ளனர் என்று கணக்கிடப்படுகிறது.

வறுமை விழுக்காடு குறைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். வறுமை விழுக்காடு 2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.

1993 முதல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கு அதிகமாக இருந்ததால் வறுமை விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா 9 சதவீத வருடாந்திர வளர்ச்சியை அடைந்தால் வறுமை விழுக்காடு 10 சதவீதத்தைவிடக் குறைவாக இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

மகேந்திரதேவ் என்ற பொருளியல் அறிஞர்

  • 1983 – 93 ஆகிய பத்தாண்டுகளில் வறுமை 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் அதிகப் பொருளாதார வளர்ச்சி அடைந்த
  • 1994 – 2004 ஆகிய பத்து ஆண்டுகளில் வறுமை 7.8 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.

எனவே பொருளாதார வளர்ச்சி எல்லோருக்கும் குறிப்பாக ஏழைகளுக்குச் சமமாகச் சென்றடையவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார். மேலும் 1994 – 2004 காலத்தில் உணவுப்பொருள்களின் விலையேற்றம் குறைவாக இருந்ததுதான் வறுமை விழுக்காடு குறைந்ததற்கு முக்கியக் காரணம் என்றும் பலர் கூறுகின்றனர்.

  • 2004 – 05ல் கிராம வறுமை விழுக்காடு 28 சதவீதமாகவும்,
  • நகர வறுமை விழுக்காடு 25 சதவீதமாகவும் உள்ளது.
  • மொத்தம் 30 கோடி பேர் வறுமையில் வாடுகின்றனர்.
  • இதில் 22 கோடி நபர்கள் கிராமங்களிலும்
  • 8 கோடி பேர் நகரங்களிலும் உள்ளனர்.

தேசிய வறுமை விழுக்காட்டை விட அதிக வறுமை விழுக்காடு உள்ள மாநிலங்கள் –

  • பிகார்,
  • சத்தீஸ்கர்,
  • ஜார்க்கண்ட்,
  • உத்தரப் பிரதேசம்,
  • உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களாகும். இந்தியாவின் ஏழைகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் இம் மாநிலங்களில் உள்ளனர். இவற்றில் மகாராஷ்டிரத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் அதிகப் பொருளாதார வளர்ச்சியை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எல்லா மாநிலங்களிலும் சமமாகச் சென்றடையவில்லை. எனவே வறுமை ஒழிப்பும் எல்லா மாநிலங்களிலும் சம அளவில் ஏற்படவில்லை.

வறுமையை முழுமையாக வரையறை செய்ய, எவ்விதமான புள்ளிவிவரங்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும்? பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பரவலாக்கி வறுமையைக் குறைக்க வேண்டும் ஆகியவை நம்முன் பல ஆண்டுகளாக உள்ள அறைகூவல்கள்.

(கட்டுரையாளர்: மாநில திட்டக்குழு உறுப்பினர்.)

———————————————————————————————-

ஏன் இந்த மௌனம்?

மத்திய அரசு 36 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இத்துடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 339 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான முறையான அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் 126 மண்டலங்களை அட்டவணைப்படுத்தியும் இருக்கிறது. இவற்றில் தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் ஆறு மண்டலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்துவரும் மத்திய அரசு, இன்னொருபுறம், இந்த மண்டலங்களுக்கான நிலத்தைக் கையகப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி எந்தவித அரசாணையோ, வழிகாட்டுதலோ, சட்டமோ இயற்றாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை.

சொல்லப்போனால், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (Rural Development Ministry்) நில ஆர்ஜிதச் சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து, அதை மத்திய அமைச்சரவை விவாதித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அமைச்சரவையின் முடிவுகள் அறிவிக்கப்படாமல், மத்திய அரசு மௌனம் சாதிப்பதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பிரச்னைக்குரிய விஷயமாக மாற்றி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். மேற்கு வங்காளத்தையும், மகாராஷ்டிரத்தையும் தொடர்ந்து விவசாயிகள் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது விரைவிலேயே எல்லா மாநிலங்களுக்கும் பரவ இருக்கும் ஆபத்து என்பது நிதர்சன உண்மை.

தரிசு நிலங்களில், இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து அந்த இடங்களில் தொழில்வளம் பெருக்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் பயன்படுத்தலாம். ஆனால், விளை நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு ஆர்ஜிதம் செய்வது என்ன நியாயம்?

ஒரு தேசத்தின் இறையாண்மையும், பாதுகாப்பும் அந்த நாட்டின் உணவு உற்பத்தியில் இருக்கும் தன்னிறைவைப் பொருத்துத்தான் அமையும் என்பது சரித்திரம் நமக்குச் சொல்லித் தந்திருக்கும் பாடம். தொழில்மயமாக்குகிறோம் என்கிற பெயரில் விவசாயம் புறக்கணிக்கப்படுவதும், வேண்டுமென்றே அழிக்கப்படுவதும் தெரிந்தே படுகுழியில் விழுவதற்கு ஒப்பான செயல். இதை மத்திய அரசில் இருப்பவர்கள் உணர்வது அவசியம்.

எந்த நில ஆர்ஜிதத்திலும் அரசு தலையிடாமல், லாப நோக்கில் நிறுவப்படும் சிறப்புப் பொருளாதார மண்டல அமைப்பாளர்கள், விவசாயிகளிடம் நேரடியாகப் பேசி அவர்கள் கேட்கும் விலையைக் கொடுப்பதுதான் நியாயமாகத் தெரிகிறது. விவசாயிகளிடம் நிலத்தை வாங்கித் தனியாருக்குக் குறைந்த விலையில் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு என்ன இருக்கிறது என்பது புரியாத விஷயமாக இருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அரசின் கருவூலத்துக்கு எந்தவிதப் பங்களிப்பும் செய்யப்போவதில்லை என்பது மட்டுமல்ல, இங்கிருந்து உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் மத்திய அரசுக்கு நிதியிழப்பும் ஏற்படும் என்பதை நிதியமைச்சரே சுட்டிக்காட்டி இருக்கிறார். எந்தவித தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு நல்லதுதானா என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகத் தெரிகிறது.

லாபகரமாக இல்லாத விவசாய நிலங்களும், தரிசு நிலங்களும் தொழில்வளத்தைப் பெருக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், லாபகரமாக விவசாயம் நடக்கும் இடங்களைத் தொழிற்சாலைகள் அமைக்கப் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். நில ஆர்ஜிதம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட விவசாயிக்கோ, உரிமையாளருக்கோ நியாயமான விலை கொடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலைவாய்ப்பு முன்னுரிமையும், சொல்லப்போனால் அந்த நிறுவனங்களில் பங்கும் (Shares) தரப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றியபோதே இதையெல்லாம் சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும். இத்தனை எதிர்ப்புக்குப் பிறகும் எந்தவித வரைமுறையும் விதிக்காமல், முறையான அறிவிப்பும் இல்லாமல் மத்திய அரசு மௌனம் சாதிப்பது அரசின் நோக்கத்தையே சந்தேகப்பட வைக்கிறது.

————————————————————————————————–

சரியான நேரத்தில் சரியான யோசனை

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நடைபெறும் கேலிக்கூத்துகளுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஆளும்கட்சி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.

அதைத்தான், சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றிய ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கையும் சமர்ப்பித்திருக்கும் நாடாளுமன்றக் குழுவும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தக் குழுவின் அறிக்கை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற ஆலோசனையையும் கூறியிருக்கிறது என்பதுதான் குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.

இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற யோசனை சீனாவைப் பார்த்து ஏற்பட்ட விஷயம். கம்யூனிச நாடான சீனாவில், நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்பதால் நிலத்தைப் கையகப்படுத்துவம் சிரமமில்லை; இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பது என்பதும் கடினமான விஷயமல்ல. மேலும், அந்நிய கலாசாரத்தின் தாக்கம் பொதுவுடைமை நாடான சீனா முழுவதிலும் பரவிவிடக் கூடாது என்கிற எண்ணத்தின் அடிப்படையில் ஏற்பட்டதுதான் இந்தத் திட்டம். இந்தியாவின் அரசியல் அமைப்புக்கும் நமது கொள்கைகளுக்கும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பொருந்துமா என்பதே சந்தேகம்.

நாடாளுமன்ற கமிட்டி சொல்லியிருப்பது போல் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதன் மூலம், விவசாயத் துறையின் அழிவில் நாம் தொழில் வளத்தைப் பெருக்க முயலுகிறோம் என்பதுதான் உண்மை நிலை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்கள் குறைந்த விலைக்கு அரசால் பெறப்பட்டு, தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றன. அப்படிப் பெறப்பட்ட இடத்தில், தொழிற்சாலைகள் 40% மட்டும்தான் இருக்கும். 20% இடத்தில் உணவகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவை அமையும். மீதி 40% இடமும் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு அதிக லாபத்துக்குப் பொதுமக்களுக்கு விற்கப்படும். மொத்தத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அடிப்படை நோக்கம் “ரியல் எஸ்டேட்’ என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

விவசாய நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யப்போகும் தனியாருக்கு அரசும் அதிகாரிகளும் ஏன் உதவ வேண்டும் என்பதுதான் பரவலான கேள்வி. அதுமட்டுமல்ல, இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் லாபம் ஈட்டித் தரும் பகுதிகளில்தான் நிறுவப்படுகின்றவே தவிர, பின்தங்கிய மாவட்டங்களில் நிறுவப்படுவதில்லை என்பதையும் நாடாளுமன்ற கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்த அறிக்கையில் குறிப்பிடும்படியான இன்னொரு விஷயம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு பற்றியது. அந்நியச் செலாவணி ஈட்டித்தரப்போகிறார்கள் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, அரசு தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய எல்லா வருமானங்களையும் இழக்க வேண்டுமா என்பதுதான் அது. தனிநபர் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்க, அரசு தனக்கு வரவேண்டிய வரி வசூலை நஷ்டப்படுத்திக்கொள்வது மட்டுமல்ல, ஏழை விவசாயிகளையும் நஷ்டப்படவைக்க வேண்டிய அவசியம் என்ன என்கிறது அந்த அறிக்கை.

சமச்சீரான பொருளாதார, தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் அரசு நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனை முன்னிறுத்தி மட்டும்தான் அரசின் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும் என்று கூறியிருக்கும் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சரியான நேரத்தில் சரியான ஆலோசனை. அரசு இப்போதாவது விழித்துக்கொண்டால் நல்லது!
————————————————————————————————–

Posted in Analysis, Backgrounder, Banks, Bihar, Calculations, Changes, Chattisgar, Chattisgarh, City, Consumer, Customer, Disparity, Divide, Economy, Education, Employment, Expenses, Finance, Food, GDP, Globalization, Govt, Healthcare, Hygiene, IMF, Improvements, Income, Industry, Inflation, Insights, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jobs, Luxury, maharashtra, Manufacturing, Metro, Mumbai, Necessity, Need, Needy, Numbers, Op-Ed, Percentages, Policy, Poor, Poverty, Power, Pune, Purchasing, Recession, Rich, Rural, Schemes, service, SEZ, Society, Stagflation, States, Statistics, Stats, Suburban, Survey, UP, Utharkhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, Village, WB, Wealthy, Welfare | Leave a Comment »

V Muthiah – State of Cooperative societies – Backgrounder, Elections, Law amendments

Posted by Snapjudge மேல் ஜூன் 8, 2007

தேவை மாதிரி கூட்டுறவு சட்டம்

வி. முத்தையா

இந்தியாவில் சுமார் 6 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 23 கோடி உறுப்பினர்கள் அங்கம் வகித்து வருகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

உலகிலேயே மிகப்பெரிய சமூக, பொருளாதார இயக்கமாக கூட்டுறவு இயக்கம் விளங்கி வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் குறிப்பாக வேளாண் கடன், இடுபொருள், உரம், மீன்வளம், பால்வளம், சர்க்கரை, வேளாண் விளைபொருள்கள் கொள்முதல் மற்றும் விற்பனை ஆகிய பல துறைகளின் வளர்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.

தமிழகத்தில் விவசாயிகளுக்குக் கடன் வழங்குவது, பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்துவது ஆகியவற்றில் கூட்டுறவு சங்கங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

தமிழகத்தில் 1.9 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 1.7 கோடி அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 27 ஆயிரம் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு பொதுநலநோக்கத்துடன் அறிவித்துவரும் மக்கள் நலத் திட்டங்களை சமூக அக்கறையோடும் செம்மையாகவும் செயல்படுத்துவதில் கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

அரசின் திட்டங்களை, அரசுக்கு அதிகமான நிதி இழப்பு ஏற்படாத வகையில் இவை செயல்படுத்தி வருகின்றன. அதேசமயம் தனக்கு இழப்பை ஏற்படுத்திக் கொண்டு அரசின் பிரதிநிதியாக நுகர்வோருக்கு சேவை செய்து வரும் இந்தக் கூட்டுறவுகளுக்குப் பதிலாக வேறு மாற்று முறை எதுவும் நிச்சயம் அரசுக்குக் கிடைக்க முடியாது.

இக் கூட்டுறவு சங்கங்கள் அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துகின்றன என்பது அகில இந்திய அளவில் பாராட்டப்படக் கூடிய விஷயமாகும்.

தமிழகத்தில் மக்கள் இயக்கமாக வளர்ந்த கூட்டுறவு இயக்கம் அரசியல்வாதிகளுக்கு வெஞ்சாமரம் வீசும் சில சுயநல அதிகாரிகளின் கைப்பிடியில் சிக்கி சீரழிந்து வந்தது. அரசியல் குறுக்கீடுகள், தலையீடுகள் காரணமாக கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயகப் பண்பை இழந்துவிட்டன.

பல கோடி மதிப்புள்ள சொத்துகளை தன்னகத்தே கொண்டு சிறப்பாகச் செயல்பட்ட பல கூட்டுறவு சங்கங்கள் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் தள்ளப்பட்டு தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. பணியாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, மறுக்கப்பட்டு செயல் இழந்த நிலையில் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கூட்டுறவு அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நல்ல செய்தியாகும். கடந்த 1999-ல் நடைபெற்ற தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்கிற புகார் எழுந்ததையும் கருத்தில்கொண்டு தற்போதைய தேர்தல் முறையில் மாற்றம் செய்யவேண்டியது மிக அவசியமாகும்.

அகில இந்திய கூட்டுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு தன்னாட்சியைக் கொண்டு வருவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதைச் செய்வோம் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.

தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் நிர்வாகம் செய்யும்போது அரசின் தேவையற்ற தலையீட்டைத் தடுக்க சட்டப்பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். தேவையானால் அரசியலமைப்புச் சட்ட உத்தரவாத்திற்காக மத்திய அரசிடம் முறையிட வேண்டும்.

மேலும் கூட்டுறவு சங்கங்களில் தன்னாட்சியை உறுதிப்படுத்த பிரகாஷ் குழுவினால் 1991-ல் உருவாக்கப்பட்ட “மாதிரி கூட்டுறவு சட்டம்’ தமிழகத்தில் உடனடியாக சட்டமாக்கப்பட வேண்டும். மாதிரி கூட்டுறவு சட்டத்தில் பல நல்ல அம்சங்கள் உள்ளன. இவை கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயகபூர்வமாக செயல்படுவதை உறுதிபடுத்துவதாக இருக்கும்.

கூட்டுறவு சங்கங்களில் பதிவாளரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. இது ஒரு ஒழுங்குமுறைச் சட்டம் என்பதைவிட இயக்குவிக்கும் சட்டமாக இருக்கும். தணிக்கை அறிக்கை அங்கத்தினர்களுக்கு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அனுமதியின்றி சங்கத்தைக் கலைக்க பதிலாளருக்கு அதிகாரம் கிடையாது.

மேலாண்மை, சட்டம், வங்கியியல், கணக்கியியல், விவசாயம், பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான புலமை பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளில் மூன்று பேர் இடம்பெற்றிருக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் அரசின் நிறுவனம் அல்ல என்பதை மாதிரி கூட்டுறவு சட்டம் தெளிவுபடுத்துகிறது. நிர்வாகிகள் மீது பொறுப்பு சுமத்தப்படுகிறது. கூட்டுறவு நிறுவனம் அங்கத்தினர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்கள் தேர்வு செய்யும் நபர்கள் பொறுப்பு ஏற்பவர்களாகவும், பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாகவும், அதிகாரம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.

சுயநல அரசியல் போக்கு வளர்ந்துவிட்ட இக் காலகட்டத்தில் கூட்டுறவு அமைப்புகளைப் பாதுகாக்க “மாதிரி கூட்டுறவு சட்டத்தை’ அவசியம் சட்டமாக்க வேண்டும்.

கூட்டுறவு அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற இருப்பதை வரவேற்கும் அதேநேரத்தில் “மாதிரி கூட்டுறவு சட்டத்தை’ சட்டமாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் பரந்து, விரிந்த கட்டமைப்புடன் இயங்கி அங்கத்தினர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் அமைப்பாக கூட்டுறவு அமைப்புகள் செயல்பட இயலும்.

(கட்டுரையாளர்: பொருளாளர், ஏ.ஐ.டி.யு.சி. கூட்டுறவு தொழிலாளர் கூட்டமைப்பு)

——————————————————————————————–

கூட்டுறவே நாட்டுயர்வு!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

இந்தியாவின் வளர்ச்சிக்கு, கூட்டுறவுத் துறை ஒரு முக்கிய காரணியாகத் திகழ்கின்றது. ஆனால் தமிழகத்தில் நடந்த கூட்டுறவுத் தேர்தல்களில் ஆளும் திமுகவின் அத்துமீறல்களால் முறையாகத் தேர்தல் நடக்கவில்லை என அதன் தோழமைக் கட்சிகள் தீவிரமாக எதிர்த்துப் போராடின. ஏற்கெனவே அதிமுகவும் மதிமுகவும் இந்தத் தேர்தலைப் புறக்கணித்தன. முதல்வர் அனைத்துக் கூட்டுறவுத் தேர்தல்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். இதுவே அந்தத் தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததற்கான ஆதாரமாகிவிட்டது. திரும்பவும் எப்போது தேர்தல் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மாவீரன் திப்புசுல்தான் காலத்தில் கூட்டுறவு முறையில் பண்டக சாலைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் பொருள்கள் நியாய விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டன. கூட்டுறவு அமைப்புக்கு தன்னுடைய குடிமக்களையே உறுப்பினர்களாக்கி அவர்களே முன்னின்று நடத்தும் கூட்டுறவு முறையைக் கொண்டு வந்தார் திப்புசுல்தான்.

இந்திய விடுதலைக்கு முன்பே – 1904-ம் ஆண்டில் இப்போதைய திருவள்ளுவர் மாவட்டத்தில் திரூர் என்ற கிராமத்தில் கூட்டுறவுச் சங்கம் இந்தியாவிலேயே முதன்முதலில் தொடங்கப்பட்டது. சர்.டி. ராஜகோபாலாச்சாரியார் என்ற அதிகாரி இச்சங்கத்தின் முதல் பதிவாளராகப் பொறுப்பேற்றார். தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பை உருவாக்கக் காரணமாக இருந்தவர் கூட்டுறவுத் தந்தை என்று அழைக்கப்படும் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் ஆவார்.

ஏழைகள் தன்னந்தனியாகத் தங்களின் நலனுக்காக காரியத்தைச் செய்ய இயலாது. அவர்கள் கூட்டுமுயற்சியாகச் செய்தால்தான் வெற்றிபெற முடியும். எனவே, கூட்டுறவு என்ற உறவுமுறை வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஊர்கூடி தேர் இழுத்தால் தேர் நகரும். சிறு உளியால்தான் சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. சிறுதுளிதான் பெரு வெள்ளம். இதன் அடிப்படையில்தான் கூட்டுறவு இயக்கம் பிறந்தது. இங்கிலாந்தில் முதன் முதலாக 1844-ல் ராக்டேல் என்ற பகுதியில் 28 நெசவாளர்கள் சேர்ந்து 28 பவுண்ட் மூலதனத்தில் கூட்டுறவு நுகர்வோர் அமைப்பை உருவாக்கினர்.

இன்றைக்கு கூட்டுறவு அமைப்பு சகல துறைகளிலும் இயங்கி வருகிறது. விவசாயிகள், நெசவாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், ஆடு வளர்ப்போர், கரும்பு உற்பத்தியாளர்கள், வீட்டுவசதி, கதர் கிராமத் தொழில், தொழிலாளர்கள், மீனவர்கள், மகளிர் என – அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய நலன், பாதுகாப்பு கருதி தங்களுக்குத் தாங்களே கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். நேருவின் கலப்புப் பொருளாதாரத்தில் கூட்டுறவு இயக்கம் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது.

நாடு விடுதலை பெற்றபின், கூட்டுறவுச் சங்கங்கள், அடிப்படையில் கிராமப்புற விவசாயிகளின் நலனை மனதில்கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கப்பட்டன. வேளாண் தொழிலுக்கு நீண்டகால, குறுகியகாலக் கடன்கள் வழங்கப்பட்டன. கூட்டுறவுத்துறை விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்கியது.

1904-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கூட்டுறவுச் சட்டம் 1961, 1963, 1983 என, பல காலகட்டங்களில் முக்கியத் திருத்தங்களைப் பெற்று இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் இந்த அமைப்பு செம்மையாகச் செயல்பட பலர் காரணமாகத் திகழ்ந்தனர்.

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தைத் தொடங்கிய வ.உ. சிதம்பரனார், கூட்டுறவு முறையில் அந்த அமைப்பை நடத்தினார். முன்னாள் முதல்வர் ராஜபாளையம் பி.எஸ். குமாரசாமி ராஜா, நெல்லை மேடை தளவாய் குமாரசாமி முதலியார், ஈரோடு ஏ.கே. சென்னியப்ப கவுண்டர், சென்னிமலை எம்.பி. நாச்சிமுத்து, சென்னை டாக்டர் நடேசன், மதுராந்தகம் வி.கே. ராமசாமி முதலியார், வேலூர் பி.எஸ். ராஜகோபால நாயுடு, தஞ்சை நாடிமுத்து பிள்ளை, வேலூர் பக்தவத்சல நாயுடு, மணலி ராமகிருஷ்ண முதலியார், பொள்ளாச்சி மகாலிங்கம் என பலர் கூட்டுறவு இயக்கம் சிறப்பாக இயங்க 1950களில் அரும்பாடுபட்டனர்.

மீனவர் நலனில் அக்கறை கொண்ட சிங்காரவேலர், தொழிலாளர்களின் நலனுக்காகப் போராடிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி. ராமமூர்த்தி, அனந்தநம்பியார், எம். கல்யாணசுந்தரம் போன்றோர் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வளர பெரும்பணியாற்றினர்.

கூட்டுறவுச் சட்டப்படி, சங்கத்தின் தலைவராக ஒருவர் இரண்டு முறைதான் பொறுப்பு வகிக்க முடியும் என்ற நிலை மாற்றப்பட்டது. 1983-ம் ஆண்டு சட்டம், கூட்டுறவுச் சங்கம் சுயஅதிகாரத்துடன் செயல்பட வழிவகுத்தது. 1988-ல் திருத்தப்பட்ட இச் சட்டம், செயல்படாத சங்கங்களை மாநில அரசு கலைக்கும் உரிமையை அளித்தது. கூட்டுறவு அமைப்புகள் ஆரம்ப காலங்களில் செயல்பட்ட மாதிரி தற்பொழுது இல்லை.

சுயநல விரும்பிகளின் பொறுப்புக்கு வந்தன. “”கூட்டுறவு அமைப்புகளுக்கு முழு சுயாட்சி அளிப்பதற்கான திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவரத் தயாராக உள்ளது” என்று கூட்டுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் உறுதி அளித்துள்ளார்.

இந்த அமைப்புகளுக்கு, பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தன்னாட்சி போன்ற உரிமைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். கலைக்கப்படும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு காலந்தாழ்த்தாமல் தேர்தல்களை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் கூட்டுறவு அமைப்புகள் திறம்படச் செயல்பட்டால் பொருளாதாரம், மக்களின் நலன், ஜனநாயகம் தழைக்கும். அரசியல் தலையீடு இல்லாமல் உறுப்பினர்களுடைய விருப்பத்தின்பேரில் கூட்டுறவு இயக்கங்கள் செயல்பட வேண்டும்.

கூட்டுறவு இயக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் அமைப்பு மட்டுமல்ல; கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு பல பாடங்களைப் போதிக்கும் போதிமரமுமாகும்.

கூட்டுறவின் வெற்றி, உறுப்பினர்களின் நாணயத்தைப் பொருத்து அமைகிறது; அது சங்கங்களின் எண்ணிக்கையைப் பொருத்ததல்ல என்றார் காந்தியடிகள். கூட்டுறவு அமைப்புகளின் ஊழல், அதிகார முறைகேடுகள், திட்டமிட்டு நடைபெறுகின்றன. இம்மாதிரியான சீர்கேடுகளைக் களையும்வண்ணம் கூட்டுறவு அமைப்புகள் செயல்பட, அரசு மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அக்காலத்தில், கூட்டுறவுத் துறையில் பொறுப்பேற்ற நிர்வாகிகள், தங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது தங்களுடைய சொந்தப் பணத்தையே பயன்படுத்தினர். ஈரோடு எஸ்.கே. சென்னியப்ப கவுண்டர் ஒன்றுபட்ட கோவை மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்தார்.

காந்தியவாதியான அவர், ஈரோட்டிலிருந்து கோவைக்குச் சென்று கூட்டுறவுப் பணிகளை ஆற்றும்பொழுது, தம்முடைய சொந்தப் பணத்தைக் கொடுத்து, எளிமையான உணவை வாங்கிவரச் சொல்வார். கூட்டுறவுத் துறை வாகனங்களில் தன் குடும்பத்தாரை ஏற்ற மாட்டார். இவரைப்போன்று, மேடைதளவாய் குமாரசாமி முதலியாரும், தமது உறவினர் ஒருவர், சட்டத்திற்குப் புறம்பாக உதவி கேட்டு வந்தபோது, அலுவலகத்தை விட்டு வெளியே செல்லுமாறு கண்டிப்புடன் கூறிவிட்டார். ஆனால் இன்றைக்குப் பொறுப்பில் உள்ளவர்கள், கூட்டுறவு அமைப்பின் கணக்கிலேயே தமக்கு மட்டுமல்லாமல், தம்முடைய பரிவாரங்களுக்கும் ஆடம்பரச் செலவுகளுக்காக மக்களின் பணத்தை வாரி இறைக்கின்ற காட்சிகளைப் பார்க்கிறோம்.

இப்போது, கூட்டுறவுத் துறையை அனைத்து வசதிகளையும் அள்ளித்தரும் காமதேனுவாகக் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறுகச் சிறுகச் சேர்த்து அமைக்கப்பட்ட அமைப்புகள், ஒழுங்கற்ற நிர்வாகிகள் பொறுப்பேற்பதால், சீரழிந்து வருகின்றன. எளியோர், வறியோர் எல்லோரும் சேர்ந்து சிரமப்பட்டு அமைத்த கூட்டுறவு முறையின் கண்ணியத்தைக் காக்க அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

Posted in Agriculture, amendments, Analysis, Backgrounder, Banks, channel, Citizen, Coop, Cooperative, Cooptex, Democracy, Distribution, Economy, Elections, Expenses, Farmer, Finance, Fish, Fishery, Grains, Help, Industry, Insights, Law, Leaders, Loan, Loss, Management, Members, milk, Op-Ed, Opinion, Paddy, Polls, Poor, Ration, RBI, revenue, sales, Society, solutions, SSI, Suggestions, TUCS | Leave a Comment »

How to improve the Quality of output from Educational Instituitions

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

தரமென்னும் தாரக மந்திரம்!

இரா. வெங்கடேஷ்

ஒவ்வொரு துறையிலும் நாள்தோறும் புதிய சிந்தனைகளும் புதிய வெளிப்பாடுகளும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.

இதை அறிவுசார் சமூகம் உணர்ந்து ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படை ஆதாரம் கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம் மதிப்புற்று இருப்பதுதான்.

நாட்டின் எதிர்காலம் உயர்கல்வி கற்றவர் கையில்தான் உள்ளது என்ற நிலைமாறிவிட்டது. உயர்கல்வியின் எதிர்காலம் உயர்கல்வி நிறுவனங்களின் கையில்தான் உள்ளது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெருகிவரும் கல்வி நிறுவனங்கள் தரமான உயர் கல்வியை வழங்குகின்றனவா? அக் கல்வி சமூகப் பயன்பாட்டைச் சார்ந்துள்ளதா போன்ற வினாக்கள் எழுகின்றன.

லட்சியத்தை அடைவதற்கு வழிகாட்டியாகத் திகழும் உயர்கல்விக்கும், அக் கல்வியை வழங்கும் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

2005 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி

  • 357 பல்கலைக்கழகங்கள்,
  • 17,625 கல்லூரிகள்,
  • 4.72 லட்சம் ஆசிரியர்கள்,
  • சுமார் 67 லட்சம் மாணவர்கள்

என்று இந்தியாவில் உயர்கல்விச் சேவை பல துறைகளில் தொடர்ந்தாலும்

  • உயர்கல்வி பெறுவோர் வெறும் 7 சதவீதம் பேர் மட்டுமே.

இதற்குக் காரணம் உயர்கல்வியின் தரமின்மை குறைபாடா? அல்லது உயர்கல்வியின் மீது நாம் உரிய கவனம் செலுத்தவில்லையா?
இன்று அறிவு வளர்ச்சிக்குத்தான் உயர்கல்வி நிறுவனங்கள் என்ற நிலை மாறி அதிக வருவாய் ஈட்டத்தான் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றன. தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற சமூக உணர்வு குன்றிய நிலையில்தான் பெரும்பாலும் உள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு ஒதுக்கிவரும் நிதியைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கல்வியின் தரம் உயர்ந்ததா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

உதாரணமாக, கடந்த ஆண்டு தமிழக அரசு உயர்கல்விக்கு ஒதுக்கிய தொகை ரூ. 892 கோடி. இந்த ஆண்டு ரூ. 1,052 கோடி. ஏறத்தாழ ரூ. 160 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்சம் மாணவர்களின் கல்வியறிவை சர்வதேசத் தரத்தில் உயர்த்துவது, குறைந்த செலவில் தரமான உயர்கல்வியை அளிப்பது, வேலைவாய்ப்பு சார்ந்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கல்வியை வழங்குவது, மாணவர்களை சுயசார்புடையவர்களாக உருவாக்குவது போன்ற அம்சங்களை நிறைவு செய்ய வேண்டும்.

ஆனால் இன்றைய கல்வி நிறுவனங்கள் மதிப்பெண்களை அளவுகோலாகக் கொண்ட மனப்பாடக் கல்வியை வழங்குகின்றனவே தவிர எதிர்காலச் சமுதாயத்தினரின் சுயசிந்தனை வளர்ச்சிக்கும் சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கும் வழிவகை செய்யாமல் தரம் குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது.

தரமான கல்வி வழங்குவது என்பது குழப்பம் நிறைந்ததாக உள்ளது. காரணம், நம் நாட்டில் பாடத்திட்டம் – நடைமுறை வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றிற்கிடையே பெரும் இடைவெளி உள்ளது. மாணவர்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்த வாய்ப்பில்லை.

கல்வி என்பது வெறுமனே பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டும் உதவும் காரணி அல்ல. வருங்காலச் சமுதாயத்தை வார்த்தெடுக்கும் ஒரு பண்பாட்டு மூலதனம் என்ற அளவில் உயர்கல்வியின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அரசின் தேவையற்ற குறுக்கீடும் அரசியல்வாதிகளின் தலையீடும் குறைக்கப்பட வேண்டும். உயர்கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். நிகழும் மாற்றங்களுக்கேற்ப பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். நடைமுறை வாழ்க்கைக்கும் – பாடத்திட்டங்களுக்கும் இடையிலான இடைவெளி அறவே நீக்கப்பட வேண்டும்.

திறமையான, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். கல்விக் கட்டண விகிதம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

உயர்கல்வியில் முறையான, தெளிவான கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். கல்வித் தரம் தொடர்பான சுய மதிப்பீட்டு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதும், அதனைச் சோதனைக்குட்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

தரமான உயர்கல்வி மட்டுமே நம்மைச் சிந்திக்கவும், திறமையான வகையில் செயல்பட வைக்கவும் முடியும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தரத்தை தாரக மந்திரமாகக் கொண்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட வேண்டும்.

உயர்கல்வித் துறையில் எண்ணற்ற சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன. தகவல் தொழில்நுட்பக் கல்வியில் இந்திய இளைஞர்களின் திறமை உலக நாடுகளை வழிநடத்துகிறது. ஆனால் உயர்கல்வி தரத்தில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை, நீடித்துவரும் குழப்பங்கள் இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடும் என அஞ்சப்படுகிறது.

எதிர்காலத்தில் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். அச்சூழலில் கல்வி நிறுவனங்களை நிறுவுவதும், மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம் முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுப்பதும் மட்டுமே தங்கள் தலையாய கடமை என்ற நிலையில் செயல்படக் கூடாது.

உயர்கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் இந்தியாவில் உயர்கல்வி உண்மையான பயன்பாட்டுக் கல்வியாக விளங்க முடியும்.

உயர்கல்வித்தரமும், மாணவர்களின் திறனும், செயலூக்கமும் பன்னாட்டு அளவில் ஒரு சவாலாக இருக்க வேண்டுமெனில் உயர்கல்வி நிறுவனங்கள் தரமென்னும் விதையை தகுதியான நிலத்தில் விதைத்தாக வேண்டுமே தவிர களர்நிலத்தில் அல்ல!

Posted in Admissions, Analysis, Backgrounder, College, Divide, Education, Expensive, Impact, Instituition, Instructor, Needy, Op-Ed, Opinion, Poor, Professor, Rich, School, solutions, Student, Teacher, University, Wealthy | Leave a Comment »