Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 7, 2007
வாலாஜா அருகே சோழர்கால அரிய தானிய உறை
வேலூர், ஆக. 8: வேலூர் மாவட்டம், வாலாஜா அருகேயுள்ள அவரைக்கரை-நவ்லாக் அருகில் எழுத்துகளுடன் அரிய சோழர்கால தானிய உறை கிடைத்துள்ளது.
நவ்லாக் அரசு தோட்டப் பண்ணை அருகே செங்கல் சூளைக்காக மண் எடுக்க பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது இந்த உறை 10 அடி ஆழத்தில் காணப்பட்டது.
உறையின் மேல்பகுதி நாலரை அடி சுற்றளவும், கீழ்ப்பகுதி 11 அடி சுற்றளவும், உயரம் 3 அடி கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இது சுடுமண்ணால் செய்யப்பட்டதாகும்.
உறையின் கழுத்துப் பகுதியை சுற்றிலும் அலைவரிகளும், சிறிய மணி வரிகளும் காணப்படுகின்றன. உறையின் விளிம்பில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. விளிம்புக்கு கீழே புடைப்புச் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன.
தற்போது உறையின் பாதி பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. மீதமுள்ள பகுதி பூமியில் புதைந்துள்ளது.
உறையின் 8 செ.மீ விளிம்பைச் சுற்றி சோழர்கால பாணியில் “ஸ்வஸ்திஸ்ரீ கடக்கங் கொண்டான் அகமுடையான் துக்கையாண்டி தன்மம்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
உறையில் காணப்படும் பெயருடையவர் ஊர்ப் பொதுமக்களுக்கோ அல்லது கோயிலுக்கோ இந்த தானிய சேமிப்பு உறையை தானமாக அளித்திருக்கக் கூடும். “அகமுடையான் துக்கையாண்டி’ என்பவர் சோழர் காலத்தில் அப்பகுதி படைத் தலைவராக விளங்கியதும் கல்வெட்டில் இருந்து தெரிகிறது.
உறையில் உள்ள புடைப்பு சிற்பங்கள் 5 தொகுதிகளாகக் காணப்படுகின்றன. முதல் தொகுதியில் அமர்ந்த நிலையில் விநாயகரும், வலப்புறத்தில் மூஞ்சூரும், இடப்புறத்தில் பக்தரின் உருவமும் இடம்பெற்றுள்ளன.
இரண்டாவது தொகுதியில் குதிரை வீரனும், மூன்றாவது தொகுதியில் தோளுடன்தோள் சேர்ந்த மங்கையர் மூவரும். அவர்களில் நடுவில் உள்ள மங்கையை கர்ப்பிணியாகவும் புடைப்பு சிற்பத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. மங்கையருக்கு வலப்புறம் நின்ற நிலையில் மாருதி ஒன்று காணப்படுகிறது.
நான்காவது தொகுதியில் வலப்புறமாக திரும்பி நிற்கும் யானை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 5-வது தொகுதியில் மத்தளம் கொட்டும் ஆடவன், நடனமாடும் மங்கை, தாளம் போடும் பெண் ஆகியன இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் எழுத்துப் பொறிப்புகளுடன் கிடைத்துள்ள முதல் தானிய உறை இதுவே என்கிறார் தொல்லியல் துறை, ஆர்க்காடு அகழ்வைப்பக காப்பாட்சியர் மா. கலைவாணன்.
Posted in Agriculture, Ancient, Anthropology, antiquarian, antique, antiques, archaeologist, Archaeology, Archive, Arts, Avaraikkarai, Brick, Cabinet, Chola, Choza, Chozha, Citizen, Cover, cultures, Dukkaiaandi, Dukkaiandi, dynasty, Elephant, evidence, Farmer, Farming, Ganapathy, Ganesha, Gods, Governor, Grain, Granary, History, Hold, inscriptions, Jacket, Kiln, Kings, Minister, Museum, Navlak, Navlaq, peasant, pottery, Protect, Rare, Recovery, Reside, rice, Rulers, Sand, Stone, Temple, Tools, Vallaja, Vallajah, Vellore, Vellur, Velore, Vinayak, Wallaja, Wallajah, Wheat | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007
முழுமையான அறிவியல் ஆய்வுக்குப் பின்பே சிந்துவெளி எழுத்து குறித்து ஆராய வேண்டும்
சென்னை, ஜன. 27: சிந்துவெளி எழுத்துகள் குறித்து அறிவியல் அடிப்படையில் முழுமையான ஆய்வு நடத்த வேண்டும்; அதன் பிறகே அந்த எழுத்துகள் எந்த மொழியுடன் தொடர்புடையது என்பது ஆராயப்பட வேண்டும் என்று தொல்லியல் வல்லுநரும் “தினமணி’ முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன் வலியுறுத்தினார்.
தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் ஓர் அங்கமாக சிந்துவெளி பண்பாட்டு ஆய்வு மையத்தை அவர் வியாழக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:
சிந்துவெளி எழுத்துகள் வலமிருந்து இடமாக அமைந்துள்ளது. அது இடமிருந்து வலமாக உள்ளதாகக் கூறுவது பொருத்தமற்றது.
திராவிட மொழிகளைப் போல் சிந்துவெளி எழுத்து வாசகங்களில் விகுதிகள் மட்டுமே உள்ளன என்பதை கம்ப்யூட்டர் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
தொல்லியல் கூறுகளைக் கருத்தில் கொண்டு, சிந்துவெளி எழுத்துகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும். கொள்கை சார்ந்த நிலையைத் தவிர்க்க வேண்டும்.
1) சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் போல் நகர்ப்புற நாகரிகம் சார்ந்தது. ஆரிய நாகரிகம் போல் கிராமப்புற நாகரிகம் சார்ந்தது அல்ல.
2) சிந்துவெளி இலச்சினைகளில் குதிரைகள் இடம்பெறவில்லை.
3) ஹரப்பா மத வழிபாட்டு முறையில் காணப்படும் பெண்தெய்வ வழிபாடு, அரச மர வழிபாடு, பாம்பு வழிபாடு போன்றவை ரிக் வேத வழிபாட்டில் இல்லாதவை.
இக்காரணங்களால் சிந்துவெளி எழுத்துகள் திராவிட எழுத்துகள் என்றும் குறிப்பிட இயலாது. எனினும் முழுமையான ஆய்வு தேவை.
இந்த ஆய்வு மையம் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் வல்லுநர்கள் பங்கேற்று ஆய்வுரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்படும்.
ஆய்வாளர்களின் ஆய்வேடுகள், நூல்களை தொகுத்து வெளியிட பண்பாட்டு ஆய்வு மையம் நடவடிக்கை எடுக்கும்.
இது போன்ற ஆய்வு மையங்கள் தங்களிடம் உள்ள ஆய்வேடுகள், ஆய்வு நூல்கள் ஆகியவற்றின் பிரதிகளை இந்த ஆய்வு மையத்துக்கு அனுப்பவேண்டும்.
மொழியியல் தொடர்பான ஆய்வுகளையும் இந்த ஆய்வு மையம் மேற்கொள்ளும் என்றார் ஐராவதம் மகாதேவன்.
ஆய்வு மையத்துக்கு நன்கொடை: இந்த ஆய்வு மையத்துக்கு ஐராவதம் மகாதேவன் தனது ஆய்வு நூல்களையும் இலச்சினைகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளார். அதைப் போல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் மறைந்த பேராசிரியர் கிஃப்ட் சிரோமணியின் ஆய்வுக் கட்டுரைகளை அவரது மனைவி ராணி சிரோமணி வழங்கினார்.
சிந்துவெளி பண்பாடு கி.மு.2600-ம் ஆண்டு முதல் கி.மு. 1900 வரை தழைத்தோங்கியது.
தமிழகத்தில் காவிரிப் படுகையில் மயிலாடுதுறை அருகே செம்பியன் கண்டியூர் கிராமத்தில் கிடைத்த கற்கோடரிகளில் சிந்துவெளி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. இது வணிகத் தொடர்பைக் காட்டுகிறது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பத்திரிகையாளர் என். ராம் ஐராவதம் மகாதேவனின் தொல்லியல் நிபுணத்துவதைப் பாராட்டினார். பத்திரிகை ஆய்வாளர் எஸ்.முத்தையா வரவேற்றார். ரோஜா முத்தையா நூலக அறங்காவலர் சுந்தர் நன்றி கூறினார்.
Posted in Archaeology, Civilizations, Culture, Dravidian Languages, Ervatham Mahadevan, Events, Evolution, History, Indus Valley, inscriptions, Iravatham Mahadevan, Research, Roja Muthiah Research Library, Sindhu Valley, Speech | Leave a Comment »