எகிப்தில் அரசியலமைப்பை மாற்றப் போவதாக அதிபர் முபாரக் கூறுகிறார்
![]() |
![]() |
அதிபர் முபாரக் |
எகிப்திய அதிபர் முபாரக் அவர்கள் அதிபர் தேர்தலில் எதிர்க் கட்சிகளும் போட்டியிட வழி விடும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
நாடளுமன்ற ஆண்டுக் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்துப் பேசிய அவர், தான் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள விரிவான சட்ட மறுசீரமைப்புகள் குறித்து விவரித்தார்.
முபாரக் அவர்களின் தேசிய ஜனநாயகக் கட்சிக்கு சவால் விடுமளவுக்கு எதிர்த்தரப்பினருக்கு சட்ட ரீதியாகப் பெரிய அளவில் நிலைமை கிடையாது என்கிறார் எமது கய்ரோ முகவர்.
தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு போன்ற எதிர்க் கட்சியினர் பயன்பெறும் வகையில் இந்த அரசியலமைப்புச் சட்ட மாற்றங்கள் செய்யப்படவில்லை.
ஐந்தாம் தடவையாக கடந்த 2005ம் ஆண்டு அதிபர் பதவிக்கு வந்த முபாரக் அவர்கள், தனக்கடுத்து தன்னுடைய மகன் ஜெமாலை அப்பதவியில் அமாத்துவதற்காகத் தான் இந்த சட்ட மாற்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்று அவரது விமர்சகர்கள் கூறுகின்றனர்.