ஈராக் நாட்டுக்கு வந்த இந்தியர்களை கொன்று விட்டோம்: அல்-கொய்தா அமைப்பு அறிவிப்பு
துபாய், செப்.25-
ஈராக் நாட்டில் சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு, அமெரிக்கப் படைகளும், ஈராக் ராணுவமும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளன.
இருந்தபோதிலும் அங்கு அல்-கொய்தா இயக்கத்தை சேர்ந்த சதாம் உசேன் ஆதரவு தீவிரவாதிகள் அடிக்கடி ஷியா முஸ்லிம்களையும், வெளிநாட்டினரையும் கொன்று குவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 10 பேர் ஈரான் நாட்டில் ஷியா முஸ்லிம் இயக்கத்துக்காக சிறப்பு பயணம் மேற்கொண்டனர். அங்கிருந்து அவர்கள் ஈராக் வழியாக சிரியா நாட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்
அவர்கள் 10 பேர்களையும், அல்-கொய்தா இயக்கத்தின் துணை அமைப்பான அன்சார்-அல்-சன்னா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், அல் அன்பர் மாகணத்தில் ஈவு இரக்கமற்ற முறையில் கொன்றனர்.
இந்த தகவலை அந்த தீவிரவாத இயக்கம் வெளியிட்டுள்ள இணையதள அறிக்கை தெரிவித்துள்ளது.