ரூ.99-ல் திருச்சிக்கு விமானம்: ஏர் இந்தியா சலுகை
சென்னையில் இருந்து திருச்சி மற்றும் மும்பைக்கு செல்லும் விமானங்களின் கட்டணத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிரடியாகக் குறைத்துள்ளது.
இதன்படி சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்ல ரூ.99 கட்டணமாக வசூலிக்கப்படும். வரிகளுடன் சேர்த்து இந்த கட்டணம் ரூ 1099-ஆக இருக்கும்.
இதேபோல், சென்னையில் இருந்து மும்பைக்கு செல்ல கட்டணம் ரூ.299 வரிகளுடன் சேர்த்து ரூ.1299-ஆக கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த சலுகைக் கட்டண விமானம், சென்னையில் இருந்து ஒவ்வொரு வியாழக் கிழமை மதியம் 2.25 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.25 மணிக்கு மும்பையை சென்றடையும். வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் சென்னையில் இருந்து பகல் 12.10 மணிக்கு மும்பை செல்லும் விமானத்திற்கும் இந்த சலுகைக் கட்டணம் பொருந்தும்.
திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சென்னையில் இருந்து காலை 11.40 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானத்தில், சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு 1412 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம். இதுதவிர www.airindiaexpress.in என்ற இணையதளத்திலும் தகவல்கள் அறியலாம்.
ஏர் இந்தியா பயணச் சீட்டு விற்பனை மேலாளர் ஜே.வி.ஜே. சுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.