Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Actors’ Category

Primary vs. General Election funds: USA & India Poll Finances: Madhavan

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஊழலின் ஊற்றுக்கண்!

செ. மாதவன்

சரியோ தவறோ, இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிச் செல்கிற நிலைமை. அதைப்போல, இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தல் நிதி, தேர்தல் செலவுகளிலும் அமெரிக்காவைப் பின்பற்றிச் செல்லாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் தொடங்க வேண்டும்.

அரசியல் செலவுகள் பெருகி வருகின்றன. இதன் விளைவாக அரசியல் லஞ்சம் பெருகி விடும். இன்றுள்ள நிலையே மோசமாக உள்ளது. அதிகாரம் செலுத்தும் சட்ட வலிமையுள்ள அனைத்து அரசு அமைப்புகளும், அதிகாரம் பெற்றுள்ள அரசியல்வாதிகளும், அரசு அலுவலர்களும் லஞ்சத்தில் மூழ்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.

விதிவிலக்காக உள்ள சிலர் மிகக் குறைவே. இதில் சதவீத வேறுபாடு இருக்கலாமே தவிர அதிக அளவில் லஞ்சம் பெருகி வருவது உண்மை.

அதிகாரம் செலுத்தும் வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சொத்துக் குவிப்பதில் உள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் நிறைந்த விதிமுறைகள் பயனற்றவைகளாக உள்ளன.

1959ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுப்படி, 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைச்சரவை பொறுப்பேற்றவுடன், அமைச்சர்கள் எந்தத் தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்ற சட்டவிதியை அமல்படுத்துமாறு அறிஞர் அண்ணா நடவடிக்கை எடுத்தார்.

அமைச்சர்கள் சொத்துகள் வாங்குவதை முறைப்படுத்தி பகிரங்கப்படுத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து அன்றைய முதல்வர் கருணாநிதி உத்தரவிடக் கூறினார். சில செய்திகள் வெளிவந்தவுடன் நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தனி நபர்களைப் பற்றி நினைப்பதைவிட இதுபோன்று அதிகாரங்களைப் பயன்படுத்திப் பணம் குவிப்பதைத் தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும்.

ஆட்சியின் அடித்தளத்தில் உள்ள ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளைப் பரிசீலிக்கலாம். வீடு கட்ட அனுமதி கொடுப்பதில் பணம் வாங்கும் நிலை உள்ளது. ஒரு அரிசி ஆலைக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனுச் செய்த ஒருவர், அனுமதி பெற இயலவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்காவிட்டால், மனுச் செய்த விவரங்கள் சரியாக இருந்தால் அனுமதி பெற்றுவிட்டார் என்று கூறி, அரிசி ஆலை நடத்தலாம் என்று நீதிமன்றத் தீர்ப்பை நான் பெற்றுக் கொடுத்த வழக்கு நினைவில் நிற்கிறது. அனுமதி வழங்கும் விதிகளில் தெளிவான விவரங்கள் வகுக்கப்பட்டு இருந்தால் அனுமதி பெறுவதில் நடமாடும் லஞ்சங்கள் தவிர்க்கப்படலாம்.

உள்ளாட்சி மன்றங்கள் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் முறைகளில் ஒரு பகுதி நிதி ஊழல் செய்ய வழி வகுக்கிறது. சாலைகள், கட்டடங்கள், தொழிற்சாலைகள் அரசின் பல திட்டங்கள் மூலம் நிதி செலவழிக்கும்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பல கட்டங்களில் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதியை பங்கிட்டுக் கொள்வது நடைமுறையாகிவிட்டது. ஒவ்வொரு மட்டத்திலும் சதவீத அடிப்படையில் மக்கள் வரிப்பணம் பாழடிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம்? ஆனால், அதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்த ஊழலின் தொடக்கம் தேர்தலில்தான் தொடங்குகிறது என்கிற நிலை அண்மைக்காலங்களில் தோன்றிய சரித்திரம். ஊராட்சித் தேர்தலில் லட்சக்கணக்கில் செலவழித்து விட்டேன், அதை ஈடு கட்டுங்கள் என்று ஊராட்சித் தலைவர்களாக வர விரும்புபவர்கள் கூறுகிற விசித்திரத்தைப் பார்க்கிறோம்.

பல லட்சங்கள் செலவழித்துத் தலைவர்களாக வருபவர்கள் கள்ளப் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களாக இருக்க வேண்டும். அல்லது பதவி கிடைத்தவுடன் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளை அடித்துப் பணத்தை ஈடுகட்ட முடியும் என்று நினைப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த உண்மைகள்தான் ஊராட்சித் தேர்தல்களிலும் லஞ்சம் தாண்டவமாடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த மோசமான தேர்தல் செலவுகள் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெருமளவில் நடைபெறத் தொடங்கிவிட்டன. இன்றைய தலைமுறையினருக்கு இது சாதாரணமான நிகழ்ச்சிகளாகத் தோன்றலாம்.

ஆனால் 46 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல்களைச் சந்தித்தவர்கள், தேர்தல்களை நடத்திய தலைவர்கள், அன்றைய நிலைமைகளுடன் இன்றைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், நாடும் மக்களும் சந்திக்கும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பார்த்திடும் தேர்தல் செலவுகள் நாடு எங்கே, எதை நோக்கிச் செல்கிறது என்று கேள்வி கேட்க வைக்கிறது.

1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. தேர்தலுக்குப் பணம் கட்டி எழுத்து மூலம் வேட்பாளராகக் கேட்கும் காலம் தோன்றவில்லை. கோவையில் ஒரு மாநாட்டில் தொண்டர்களோடு அமர்ந்து தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்டது. ஒரு சிலரோடு மட்டும் சென்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒரு வாடகைக் காரில் மட்டும் தொகுதி முழுவதும் சில தோழர்களுடன் சுற்றி வந்து மக்களைச் சந்தித்தேன். ஊரில் முக்கியமானவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்பது, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்பது என்ற முறைகள் பின்பற்றப்பட்டன. ஊர்ப் பெரியவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த ஊருக்குத் தேவையான பொது வசதிகளை, சாலை அமைத்தல், குடிதண்ணீர் வசதி, பள்ளிக்கூடம் கட்டுதல் போன்ற பொதுக் கோரிக்கைகளை முன்வைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காரைக்குடியில் எம்ஜிஆர் கலந்துகொண்ட சிறப்புக்கூட்டத்துக்கு கட்டணம் வசூலித்து, அதில் கிடைத்த 5,000 ரூபாயைத் தேர்தல் செலவுக்குப் பயன்படுத்திய காட்சி நினைவுக்கு வருகிறது. அறிஞர் அண்ணா கட்சியிலிருந்து ரூ. 200 டி.டி. அனுப்பினார். மொத்தத் தேர்தல் செலவு சில ஆயிரங்கள்தான். ஆங்காங்கே கட்சித் தொண்டர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் தேர்தல் வெற்றிக்குப் பாடுபட்டனர்.

அதே போல் 1967ஆம் ஆண்டு தேர்தலின்போதும் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட சிறப்புக் கூட்டத்தின் மூலம் ரூ. 5,000-ம் வசூல் செய்து கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற சிறப்புக் கூட்டங்கள் நடத்துவது அந்தக்கால அரசியல்.

1962ஆம் ஆண்டு தேர்தலைவிட சில ஆயிரங்கள் கூடுதலாகச் செலவழிந்தது. கட்சிக்காரர்களே முன்னின்று எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டாற்றி வெற்றி பெறச் செய்தனர். எதிர்த்து நின்றவர் ஒரு ஆலை அதிபர். அவர் வீட்டுக்கே சென்று வாக்குக் கேட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் அவருக்கே அரசின் மூலம் பல உதவிகள் செய்த நிகழ்ச்சிகள் அன்றைய நாகரிக அரசியல் பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது.

ஆனால் இன்று நடைபெறும் தேர்தல்களில் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிப்பது நடைமுறையாகிவிட்டது. தேர்தல் நிதி என்ற பெயரில் ஒவ்வோர் அரசியல் கட்சியும் கோடிக்கணக்கில் நிதி திரட்டுவது நடைபெறுகிறது. லஞ்சம் பெருகிவிட்டதற்குத் தேர்தல் செலவு பெருகிவிட்டதும் காரணமாக அமைந்துவிட்டது.

இப்போது அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலில் தேர்தல் நிதி திரட்டும் செய்திகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.

அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் ஒபாமா ஆகிய இருவரும், அதிபர் பதவி வேட்பாளராகத் தங்கள் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட, தங்களுக்குள் மக்கள் ஆதரவை நிரூபிக்கும் தேர்தல்தான் இப்போது நடைபெறுகிறது. இதற்கு நிதி சேர்க்கிறார்கள். 2008 ஜனவரி வரை ஒபாமா சேர்த்திருக்கும் நிதி 13,82,31,595 டாலர்கள் அதாவது 552,92,63,800 ரூபாய் என்றும், ஹில்லாரி கிளிண்டன் சேர்த்திருக்கும் நிதி 13,45,36,488 டாலர்கள் அதாவது 538,14,59,520 ரூபாய் என்றும் வெளிவந்துள்ளது. இவர்களைப்போல அந்தக் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் இன்னும் பல வேட்பாளர்களும் நிதி திரட்டியுள்ளனர்.

இந்தியாவிலும் அமெரிக்கா போல் பண ஆதிக்கம் தோன்றாமல் இருக்க வேண்டும். நாடாளுமன்றச் சட்டங்கள் இல்லாமலே அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவுகள் போடலாம். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களைப்போல் நடைமுறைகளைக் கொண்டு வரலாம். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், கார்கள் பயன்படுத்தும் முறைகளை விதிகள் மூலம் வகுக்கலாம். ஊர்வலங்களைத் தடுக்கலாம். பொதுக்கூட்டங்களைக் குறைக்கலாம்.

ஒரு வேட்பாளர் கடந்தகாலச் சாதனைகளைப் பற்றி, எதிர்காலத் திட்டங்கள் பற்றி வாக்காளர்களுக்கு வேண்டுகோளாக அச்சடித்துக் கொடுக்கும் முறையை மட்டும் அனுமதிக்கலாம். வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குகள் கேட்கலாம்.

46 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கட்சியினரும் இன்று போலத் தேர்தல் செலவு செய்யவில்லை. அதிகாரத்தைக் காட்டித் தேர்தல் நிதிகளைக் குவித்ததும் இல்லை என்பதுதான் உண்மை. அமெரிக்காவில் பிரசார நிதி என்று சட்டப்படி வசூலிப்பது தேர்தல் கமிஷனால் கண்காணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கறுப்புப் பணம் தேர்தலில் விளையாடுகிறது.

அரசியல் லஞ்சம் ஒழிந்தால், அதிகாரிகள் லஞ்சமும் ஒழியும். பண ஆதிக்கம் ஒழியும். தேர்தல் போர்வையில் லஞ்சங்களைக் குவிக்கும் அரசியல் அநாகரிகம் ஒழியும். ஏழைத் தொண்டர்களை ஆட்சிபீடத்தில் அமர்த்தும் காமராசர், அறிஞர் அண்ணா வளர்த்த அரசியல் மீண்டும் மலர்ந்திடும். அரசியல் தலைவர்கள் அனைவரும் புதிய சரித்திரம் படைப்பார்கள்.

நல்லாட்சி வேண்டுமானால் நல்ல அரசியல் வேண்டும். நல்ல அரசியல் வேண்டுமானால், தேர்தல் வெற்றிகள் மக்களின் செல்வாக்கின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பணபலத்தால் அமையக்கூடாது. மக்கள் சக்திக்கு மரியாதை கிடைக்கும் சூழ்நிலையை நமது தேர்தலில் ஏற்படுத்தும் கடமை இன்றைய அரசியல் தலைவர்களுக்கு உண்டு.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்)

Posted in Actors, AIADMK, America, Anna, Annadurai, Assets, Balance, Bribery, Bribes, Cinema, Clinton, Commission, Conferences, Corruption, DMK, EC, Elections, Expenditure, Films, Finance, Finances, Funds, Huckabee, Income, India, IT, JJ, kickbacks, KK, Madhavan, McCain, MGR, Mitt, Movies, Obama, Party, Polls, Poor, President, Primary, Rich, Romney, Tax, Taxes, US, USA, Wealthy | Leave a Comment »

How to be successful in the Tamil Film Industry – Tips & Backgrounders: Cinema Express

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

நேர்மை வேண்டும்

புரொடக்ஷன் மேனேஜர் கம் புரொட்யூஸர் பாபுராஜா

“”சினிமா…. ஒரு நல்ல தொழில். மற்ற எல்லா தொழில்களிலும் லாபத்தை மட்டும்தான் எதிர்பார்க்க முடியும். ஆனால் சினிமாவில் மட்டுமே லாபத்துடன் சேர்த்து நல்ல பெயரையும் சம்பாதிக்க முடியும்” என்றார் தயாரிப்பாளரான ஆர்.பி.செüத்ரி.

ஒரு படத்தின் தயாரிப்பாளர் ஆக வேண்டுமெனில் பெருமளவு முதலீடு போட வேண்டியிருக்கும். பணமிருந்தால் புரொட்யூஸராகி விடலாம். ஆனால் அந்த பணத்தைக் கொண்டு வராதவர்களும் கூட தயாரிப்பாளர் ஆகிவிடும் அதிசயம் சினிமாவில் மட்டுமே சாத்தியப்படும்! தொடர்ந்து நான்கு படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக (புரொடக்ஷன் மேனேஜர்) வேலை பார்த்தால் போதும். திறமையும், நேரமும் கூடும்பட்சத்தில் அவர்கள் தயாரிப்பாளர் ஆவது சகஜமானதுதான்.

ஆர்.பி. செüத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸில் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக புரொடக்ஷன் மேனேஜராகவும், ஜெ. ஜெ. குட் ஃபிலிம்ஸின் அதிபராகவும் இருந்து வருபவர் பாபுராஜா.

புரொடக்ஷன் மேனேஜரின் அசிஸ்டெண்ட் ஆக நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி இங்கே நமக்கு வழிகாட்டுகிறார் அவர்.

இந்த இதழில் பாபுராஜா சொல்வதைக் கேட்போம்.

“”நான் உதவி இயக்குனரா வரணும்னு நினைச்சேன். ஆனா வந்த இடத்தில் அப்படி ஆக முடியல. மலேசியா வாசுதேவன் சார் எடுத்த முதல் படமான “நீ சிரித்தால் தீபாவளி’யில் ஆஃபீஸ் பையனா வேலை பார்த்தேன். 1991-ம் வருஷம்னு நினைக்கிறேன். அப்புறம் ஒரு சில படங்கள் வொர்க் பண்ணிக்கிட்டிருந்தேன்.

டைரக்டர் ராஜகுமாரன் சார் மூலமா விக்ரமன் சார் நட்பு கிடைச்சது. அவர் என்னை செüத்ரிசார்கிட்டே அறிமுகப்படுத்தி, “பூவே உனக்காக’ படத்தில புரொடக்ஷன் மேனேஜரா வொர்க் பண்ண வச்சார். என்னோட வொர்க்கைப் பார்த்த செüத்ரி சார், விக்ரமன்கிட்டே, “இவரு இங்கேயே இருக்கட்டும்’னு கேட்டுக்கிட்டார். அதிலிருந்து இருபத்தி அஞ்சு படங்களுக்கு மேல சூப்பர் குட்ல புரொடக்ஷன் மேனேஜரா வொர்க் பண்ணிட்டிருக்கேன்.

“விண்ணுக்கும் மண்ணுக்கும்’ ஷூட்டிங் நடந்துகிட்டிருந்தபோதுதான் சரத்குமார் சாரும், செüத்ரி சாரும் நீங்க புரொட்யூஸர் ஆகிடுங்க’ன்னு சொன்னாங்க. “அரசு’ படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளரா அறிமுகமானேன். அப்புறம் “சத்ரபதி’ தயாரிச்சேன். இப்போ “நினைத்து நினைத்து பார்த்தேன்’னு ஒரு படம் பண்றேன்.

தயாரிப்பு நிர்வாகின்னா ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கும், டைரக்டருக்கும் பாலமா இருக்கிறவர். சினிமாவைப் பொறுத்தவரை எல்லாத்துக்கும் திறமை முக்கியம். இந்த வேலைக்கு மிகமிக முக்கியம் நேர்மை. அது இருந்தால்தான் லாங் லைஃப்பா நீடிக்க முடியும். சரியான உழைப்பும் அவசியம்.

உங்க மேல நம்பிக்கை இருந்தால்தான் நீங்க நிரந்தரமா ஒரு கம்பெனியில வொர்க் பண்ண முடியும். நம்பிக்கை இல்லைன்னா நீங்க யார்கிட்டேயும் வொர்க் பண்ண முடியாது. புரொடக்ஷன் மேனேஜர்னா நடுநிலைமை வகிப்பது நல்லது.

அதாவது நீங்க புரொட்யூசருக்கும் சப்போர்ட் பண்ணக்கூடாது. டைரக்டர், டெக்னீஷியன், ஆர்ட்டிஸ்ட்கள்னு யாருக்கும் சப்போர்ட்டா இருக்கக்கூடாது. ஒரு நடிகருக்கு இவ்வளவுதான் சம்பளம்னா அதை கரெக்ட்டா வாங்கிக் கொடுக்கணும். யாருக்காகவும் ஒருதலைபட்சமா செயல்பட்டால் பேர் கெட்டுப் போயிடும். நடிகர்- நடிகை, டெக்னீஷியன்கள் எல்லார்க்கும் சம்பளம் ஃபிக்ஸ் பண்றதும் நாங்கதான்.

எல்லா விஷயங்களையும் தயாரிப்பாளருக்கு சொல்வோம். ஒரு சில தயாரிப்பாளர்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து பார்ப்பாங்க. செüத்ரி சாரெல்லாம் ஒரு படத்துக்கு அதிகபட்சமே நாலஞ்சு தடவைதான் ஸ்பாட்டுக்கு வந்து பார்ப்பார். úஸô, நாங்க ஒரு தயாரிப்பாளர் மாதிரிதான் அங்கே வொர்க் பண்ணிட்டிருப்போம்.

நாங்க சரியா வொர்க் பண்ணலைன்னா அன்னிக்கு ஷூட்டிங்கே நடக்காதுன்னா பார்த்துக்குங்களேன். எங்களுக்கு அடுத்தபடியா அதிக நேரம் வொர்க் பண்றது டிரைவர்கள்தான்.

ஒரு படத்துக்கு, புரொடக்ஷன் மேனேஜர் மினிமம் மூணுபேரையாவது அசிஸ்டெண்ட்டா வச்சிருப்பார். எல்லார்க்கும் ஒவ்வொரு வேலைகள் இருக்கும். ஒருத்தர் கார் புரோக்ராம் பண்ணுவார். அதாவது ஆர்ட்டிஸ்ட்களுக்கு வண்டி அனுப்பி ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கொண்டு வரவைக்கிறது. அப்புறம் ஷூட்டிங் முடிஞ்சதும் அவங்களை ரூம்ல கொண்டு போய் ட்ராப் பண்ற வொர்க்கை கவனிப்பார்.

இன்னொருத்தர், லொக்கேஷனை பார்ப்பார். அதாவது மறுநாள் ஷூட்டிங்குக்கு… ஹீரோயின் கோவில்ல சாமி கும்பிடுற சீன் இருக்குதுன்னு டைரக்டர் எங்ககிட்டே சொல்லியிருப்பார். நாங்க, அதற்குத் தகுந்த மாதிரி கோவில் தேடி அதை டைரக்டர்கிட்ட காட்டி முதல்ல ஓ.கே. வாங்குவோம். அப்புறம் அது செட் ஆச்சுதுன்னா அங்கே பெர்மிஷன் சரியா ஏற்பாடு பண்ணி வச்சிருப்போம்.

சில நேரங்கள்ல என்னால வொர்க்கைக் கவனிக்க முடியலைன்னா ஆர்ட்டிஸ்ட்களுக்கு புரோக்ராம் சொல்றதிலிருந்து என்னோட வொர்க்கை எல்லாம் மூணாவது ஆள் கவனிச்சிக்குவார். பெரிய பட்ஜெட் படம்னாலும் மூணே மூணு அசிஸ்ட்டெண்ட் போதும்.

டைரக்டர்களுடைய தேவைகள் எல்லாத்தையுமே முழுமையா, அவர் கேட்ட நேரத்தில் அதாவது சரியான நேரங்களில் நடிகர்- நடிகைகளின் தேதிகள், டெக்னீஷியன்களின் தேதிகள், லொக்கேஷன் பெர்மிஷன் என எல்லாவற்றையும் அமைத்துக் கொடுப்பதுதான் எங்களின் வேலை.

ஆனால் டைரக்டர் சொல்வதை மட்டுமே கேட்டு, அதன்படி நடப்பது மட்டுமே வேலையின்னு நினைக்கக் கூடாது. படத்தோட முழுக்கதையையும் நாங்க தெரிஞ்சிருந்தால்தான் டைரக்டர் திருப்திபடக்கூடிய அளவிற்கு எங்களால் வொர்க் பண்ண முடியும்.

உதாரணமா, டைரக்டர் எங்ககிட்டே ஒரு லொக்கேஷன் கேட்கிறார்னா, நாங்க அவர் நினைக்கிற மாதிரியான ஏதாவது ஒரு லொக்கேஷனைத்தான் காண்பிக்க முடியும். ஆனா படத்தோட கதை எங்களுக்கும் தெரியும்போது, சரியான லொக்கேஷனை டக்குன்னு காண்பிச்சிடலாம். இப்ப உள்ள டைரக்டர்கள் யாரும் பாகுபாடு பார்க்கறதில்ல. அதனால எல்லாருமே அவங்களோட படத்தோட முழுக் கதையையும் எங்ககிட்ட சொல்லிடுறாங்க. அப்பத்தானே ஒரு கேரக்டருக்கு இவரை மாதிரி ஒரு ஆள் வேணும்னு டைரக்டர் கேட்கிறப்ப கொண்டு வர முடியும்?

புரொடக்ஷன் மேனேஜர் வேலைங்கறது ஒரு சின்ன வேலை கிடையாது. தயாரிப்பாளர் பணம் போடுறதோட சரி! சிலர் ஷூட்டிங் நடக்கற இடத்துக்கே வரமாட்டாங்க.
காலையில ஏழு மணிக்கு ஷூட்டிங் நடத்தணும்னா நாங்க அதிகாலை மூணு மணிக்கு எழுந்திரிச்சால்தான் அந்த ஷூட்டிங்கை நடத்த முடியும்.

புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ், புரொடக்ஷன் அசிஸ்டெண்ட்ஸ் என நாங்க எல்லாம் மூணு மணிக்கே எழுந்திரிச்சு, எல்லார்க்கும் வண்டிகள் அனுப்பிச்சிடுவோம். நடிகர்- நடிகைகள் எல்லாரையும் ஸ்பாட்டுல அசம்பிள் பண்ண வேண்டியிருக்கும். அப்படி கரெக்ட்டா ஷூட்டிங் ஏழு மணிக்கு தொடங்கிடுச்சின்னா, பல பிரச்சினைகளும் தொடங்க ஆரம்பிக்கும். சில ஆர்ட்டிஸ்ட்டுகள் மதியம் பனிரெண்டு மணிக்கு வரச் சொல்லியிருப்பாங்க.

அவங்களுக்கு தகவல் சொல்லி ரெடி பண்ணனும். அப்புறம் மறுநாள் ஷூட்டிங்கிற்கு தேவையானதையும் ரெடி பண்ணனும். கிட்டத்தட்ட நைட் பதினோரு மணி வரைக்கும் எங்க வொர்க் போயிக்கிட்டு இருக்கும்.

காலையில மூணு மணிக்கு எழுந்திரிச்சதிலிருந்து நைட்டுல பதினோரு மணிக்கு படுக்கப் போறவரைக்கும் நடைமுறை சிக்கல்களாகத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். நிம்மதியான சாப்பாடு சாப்பிட முடியாது. நிம்மதியா தூங்கிட முடியாது. டென்ஷன் இருந்துட்டே இருக்கும்.

டைரக்டர்தான் கேப்டன் ஆஃப் த ஷிப்னு சொல்லுவாங்க. úஸô, படம் ஜெயிக்கணும்ங்கற டென்ஷன்ல டைரக்டர் இருப்பார். ஒரு டைரக்டருக்கு அடுத்தபடியா அத்தனை டென்ஷன்களும் எங்களுக்குத்தான் இருக்கும். சரியான டயத்துல சரியா எடுக்கணுமேங்கற டென்ஷன் அவருக்கு… ஒரு ஆர்ட்டிஸ்ட் வர்றதுக்கு பத்து நிமிஷம் லேட் ஆனாக்கூட டைரக்டருக்கு நாங்க பதில் சொல்லி ஆகணும்.

காலையில உள்ள ஷூட்டிங்கிற்கு வர வேண்டிய நடிகருக்கு நாங்க கார் அனுப்பிச்சிருப்போம். ஆனா அது போய் எங்கேயாவது பிரேக் டவுன் ஆகி நிற்கும். அந்த நடிகர் வரலைன்னு டைரக்டர் எங்க மேல டென்ஷனாயிடுவார். அதுக்கு பதில் சொல்லணும்.

ஒரு லொக்கேஷனை ஃபிக்ஸ் பண்ணி வச்சிருப்போம். அங்கே ஏதோ ஒரு குழப்பத்துல வேற யாருக்காவது அன்னிக்கு அந்த லொக்கேஷனை கொடுத்து வச்சிருப்பாங்க. அதை க்ளீயர் பண்ணி வாங்க வேண்டியிருக்கும். úஸô, எல்லா வகையிலும் எங்களுக்கு டென்ஷன் இருக்கும்.

யூனிட்ல உள்ள யாராவது ஒருத்தர் வர லேட்டானாக்கூட சிரமம்தான். ஒரு படத்துக்கு நூறு பேர் வொர்க் பண்றாங்கன்னா அத்தனை பேரும் ஸ்பாட்டுல இருந்தால்தான் வொர்க் நடக்கும். டைரக்ஷன், எடிட்டிங், கேமரான்னு எல்லாத்தையும் நீங்க இன்ஸ்ட்டியூட்ல படிச்சிட்டு, இல்ல புத்தகங்களை படிச்சு தெரிஞ்சுகிட்டோ வந்திடலாம்.

ஆனா இதுக்கு அப்படி கிடையாது. அனுபவம்தான் அவசியம். இந்த தொழிலுக்கு மெமரி பவர் ரொம்ப முக்கியம். ரொம்பப் பேச வேண்டியிருக்கும். உதாரணமா, நமக்கு தேவைப்படுற லொக்கேஷனுக்கு ரொம்ப அமெüண்ட் கேட்பாங்க. பேரம் பேசி கம்மியான அமெüண்ட்ல அதை முடிக்கணும். செலவை சுருக்கணும்.

டைரக்டர் தன்னோட ஸ்கிரிப்ட் ரெடியானதும், அதை எத்தனை நாள்ல முடிச்சிடலாம்னு ப்ளான் பண்ணிட்டார்ன்னா… அந்த ஸ்கிரிப்ட்டுக்கு எவ்வளவு செலவு பண்ணவேண்டியிருக்கும்னு நாங்க கரெக்டா சொல்லிடுவோம். முன்னாடியெல்லாம் பட்ஜெட் போட்டு, படங்கள் பண்ணினாங்க. ஆனா இப்ப பட்ஜெட்ங்கறது யாரு கையிலேயும் கிடையாது. ஆனா டைரக்டர் நினைச்சா சாத்தியம்.

டைரக்டர் நினைச்சால்தான் பட்ஜெட்டை ஏத்தவோ, இறக்கவோ முடியும். புரொடக்ஷன் மேனேஜர் ஓரளவுதான் செலவுகளை மிச்சப்படுத்த முடியும். பட்ஜெட் அதிகமாகுறதும், கம்மியாகுறதும் டைரக்டர் கையிலதான் இருக்கு. இப்ப யாரும் பட்ஜெட் பத்தி பேசுறதில்ல. டைரக்டர்கிட்டே கதையை கேட்கிறப்பவே, இதை நம்பளால பண்ண முடியுமான்னு புரொட்யூசர்கள் யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க. டைரக்டர் சொன்ன கதைக்கு தகுந்த செலவுகளை பண்ணினால் மட்டுமே குவாலிட்டியை எதிர்பார்க்க முடியும்.

அதனால இப்ப செலவு பண்ணிதான் ஆகவேண்டிய கட்டாயம் இருக்கு. நியாயமா ஒரு படத்தோட கதைக்கு என்னென்ன தேவையோ அதற்கு செலவு பண்ணித்தான் ஆகணும். ஆனால் எங்கே பட்ஜெட்டைக் குறைக்க முடியும்னா…. நெகட்டிவ், அப்புறம் ஷூட்டிங் டேட்ஸ் இதுலதான் செலவை கம்மி பண்ண முடியும்.

அதாவது ஒரு படத்துக்கு பதிமூணாயிரம் அடி ஃபிலிம் போதும். ஆனா சிலர் லட்சக்கணக்கான அடி ஃபிலிமை வீணடிப்பாங்க. ஐம்பது சீன் இருக்கிற ஒரு ஸ்கிரிப்ட், கதையைப் பொறுத்து எழுபது நாளைக்குள்ள மொத்த ஷூட்டிங்கை முடிச்சிடலாம். ஆனா அதுக்கு மேல நாட்கள் போறப்பத்தான் பட்ஜெட்டும் மீறிப்போகுது.

ஒரு ஸ்கிரிப்ட் பக்காவா இருந்து, தேவையில்லாத எதையும் (பாட்டு, சீன்கள்) எடுக்காமல் இருந்தால் படத்தோட பட்ஜெட் பக்காவா குறையும். இந்த கேரக்டருக்கு குறிப்பிட்ட நடிகர்தான் வேணும்னு டைரக்டர் நினைச்சார்னா அந்த நடிகருக்கான சம்பளத்தை கொடுத்துத்தான் ஆகணும். எல்லாமே டைரக்டர் கையில தான் இருக்கு.

ஒரு நடிகருக்கு 5 லட்ச ரூபாய் சம்பளம்னு வச்சுக்குங்க. அதுக்குப் பதில் அவரை போடாமல் புதுமுகம் யாரையாவது நடிக்க வச்சுகூட அந்த அஞ்சு லட்ச ரூபாயை மிச்சப்படுத்துறது டைரக்டர் கையிலதான் இருக்கு. தொடர்ந்து படங்கள் எடுத்து வரும் கம்பெனிகள்ல புரொடக்ஷன் மேனேஜர் இருப்பாங்க.

ஆனா புதுசா படம் பண்ண வர்றவங்ககிட்டே படத்தோட டைரக்டர்தான் புரொடக்ஷன் மேனேஜரை சொல்லுவாங்க. காரணம் டைரக்டர்தான் அந்த புரொட்யூஸரை இண்டஸ்ட்ரிக்குக் கூட்டிட்டு வந்திருப்பார். அதனால யார் நல்லா வொர்க் பண்ணு வாங்கறது டைரக்டருக்குத் தெரியும்.

லொக்கேஷன்கள் சரியா ஃபிக்ஸ் பண்ணனும்னா, ஸ்கிரிப்ட், புரோக்ராம் லிட்ஸ்கள் பக்காவா இருக்கணும். புரோக்ராம் லிஸ்ட் சரியில்லைன்னாத்தான் கொஞ்சம் தடுமாற்றங்கள் இருக்கும். லொக்கேஷன்கள் கிடைக்கிறதில ஒருநாள், ரெண்டு நாள் தள்ளி போகலாம்.

கவர்மென்ட் லொக்கேஷன்கள் எல்லாம் முன்கூட்டியே சொல்லி, பெர்மிஷன் வாங்கணும். ரெயில்வே பெர்மிஷன் எல்லாம் ரெண்டு மாசத்துக்கு முன்பே அப்ளை பண்ணினால்தான் கிடைக்கும். அதை வாங்கி வச்சிருப்போம். ஆனா அன்னிக்கு யாராவது ஒரு ஆர்ட்டிஸ்ட்டோட டேட்ஸ் குழப்பமா வரும்.

úஸô, ஷூட்டிங்கை தள்ளிப்போடமுடியாது. காரணம் அப்ப அந்த லொக்கேஷன் பெர்மிஷனை வேற யாருக்காவது கொடுத்து வச்சிருக்கலாம். இந்த மாதிரி நடைமுறை சிக்கல்கள் வரும். அதே சமயம் பிரைவேட் லொக்கேஷன்னா சரி பண்ணிக்கலாம். ரெயில்வே, ஏர்போர்ட் லொக்கேஷன்கள்னா பெர்மிஷன் வாங்கறது கஷ்டமானது. இதெல்லாம் எங்களோட வேலைகள். இதுல குளறுபடி வந்தா ஷூட்டிங் கேன்சலாகக்கூட ஆயிடும்..

சினிமாவைப் பொறுத்தவரை எதற்குமே கல்வித் தகுதி தேவையில்லைன்னுதான் நான் சொல்லுவேன். அதுக்காக எழுதப் படிக்க தெரியாதுன்னு சொல்லக்கூடாது. தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தில உறுப்பினரா சேர்ந்தால்தான் நீங்க புரொடக்ஷன் அசிஸ்டெண்ட்டாக சேரமுடியும். ஒரு தயாரிப்பாளர் அல்லது டைரக்டரோட சிபாரிசு இருந்தால் மட்டுமே உங்களை புரொடக்ஷன் பாயாகவோ / எக்ஸிகியூட்டிவ்வாகவோ சேர்த்துக் கொள்வார்கள்.

அதாவது அதில் மெம்பரானால்தான் நீங்க படத்துக்கு வொர்க் பண்ண முடியும்.
நாங்க வொர்க் பண்ற படத்தோட அசிஸ்டெண்ட் டைரக்டர் தனியா படம் பண்ணும்போது எங்களை கூப்பிட்டுக்குவாங்க. அதனால எங்களுக்கு தொடர்ந்து வொர்க் பண்றதுக்கான வாய்ப்புகள் வரும். கிட்டத்தட்ட பதினேழு வருஷமா சூப்பர்குட்லதான் நான் வொர்க் பண்றேன்.

ஒவ்வொரு படத்துக்கும் நாங்க சிரமப்பட்டுத்தான் ஆகணும். படத்தோட டெக்னீஷியன்கள் படம் ஆரம்பிக்கிறதுக்கு நாலு நாளைக்கு முன்பிருந்து… படம் முடிஞ்சு, பூசணிக்காய் உடைச்சதுக்கு அப்புறம் போயிடலாம். கேமராமேன்னா ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு பத்து நாளைக்கு முன்பே லொக்கேஷன் பார்க்க அப்படி இப்படின்னு வொர்க் இருக்கும்.

ஆனா எங்க புரொடக்ஷன் வொர்க் எப்படின்னா நாங்க படம் தொடங்கறதுக்கு 3 மாசத்துக்கு முன்பே எங்க வொர்க்கை ஆரம்பிக்க வேண்டியிருக்கும். அதே மாதிரி படம் முடிஞ்சும் போஸ்ட் புரொடக்ஷன் அது இதுன்னு 3 மாசம் வொர்க் இருக்கும். ஒரு தயாரிப்பு நிர்வாகிக்குத்தான் அதாவது எங்களுக்குத்தான் சினிமாவில வேலை ஜாஸ்தி.

நான் சரியா வொர்க் பண்ணினதினாலதான் இன்னிக்கு நான் புரொட்யூஸரா புரொமோஷன் ஆகியிருக்கேன். பெரிய முதலீட்டோட வந்தால்தான் படத்தயாரிப்பாளர் ஆக முடியும். ஆனா என்னை மாதிரி மேனேஜர்கள் தயாரிப்பாளர்கள் ஆகுறதுக்குக் காரணம் எக்ஸ்பீரியன்ஸ்களும், சின்ஸியாரிட்டியும் தான்”.

Posted in Actors, Actress, Backgrounders, Chowdhry, Cinema, Directors, executives, Express, Faces, Films, Industry, Kollywood, Life, Managers, Movies, people, Producer, success, Supergood, Tips | Leave a Comment »

‘Sivaji – The Boss’ celebrations – 175th Day Event Coverage: Rajni speech

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2008

“சிலபேருக்கு கடவுளை பிடிக்காது; ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்”
கருணாநிதி முன்னிலையில் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை, ஜன.12-

“சிலபேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்” என்று ரஜினிகாந்த் பேசினார்.

வெள்ளி விழா

ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் சார்பில் எம்.சரவணன், எம்.எஸ்.குகன் ஆகிய இருவரும் தயாரித்த `சிவாஜி’ படம் 175 நாட்களை தாண்டி ஓடி வெள்ளி விழா கண்டது. இதையொட்டி அந்த படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பரிசளிக்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு `சிவாஜி’ படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார்.

ரஜினிகாந்த்

விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

“சிவாஜி படத்தில், சில அரசியல் விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்து பாராட்டிய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பெருமைக்குரிய படத்தில் நான் இருந்தது, பாக்கியம். ஏவி.எம்.சரவணன், ஷங்கர், படத்தில் வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பணம்

பணம் இருந்தால், உன்னையே உனக்கு தெரியாது. பணம் இல்லையென்றால் யாருக்கும் நீ தெரியமாட்டாய் என்று சொல்வார்கள். அந்த பணம் இருந்தபோதும், அது தலைக்கு போகாமல் தொழில்தான் முக்கியம் என்று அப்பா ஸ்தாபித்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்காக சரவணன் படும் சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் தலைவணங்குகிறேன்.

அவருடைய மிகப்பெரிய சொத்து, அவருடைய மகன் குகன். தாத்தா மாதிரி நீங்களும் பெரிய பட அதிபர் ஆக, என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கே.பாலசந்தர்

`சிவாஜி’ படம் பார்த்துவிட்டு என் குருநாதர் கே.பாலசந்தர் எப்படி இப்படி எல்லாம் நடித்தாய்? என்று கேட்டபோது, அவர்கள், மூன்று முடிச்சு, அபூர்வ ராகங்கள் ஆகிய படங்களில் நடித்தபோது, உங்களிடம் எப்படி நான் கேள்வி கேட்காமல் நடித்தேனோ, அதேபோல்தான் ஷங்கர் என்ன சொன்னாரோ, அதைத்தான் செய்தேன் என்று சொன்னேன்.

பாலசந்தர் சாருக்கு பின்னால், நான் புளோரில் ஒரு டைரக்டரை பார்த்தேன் என்றால், அது ஷங்கர்தான். இப்படி சொல்வதால் நான் மற்ற டைரக்டர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டதாக அர்த்தம் அல்ல. ஷங்கர், ஏகலைவன் மாதிரி. அது, பூர்வஜென்ம புண்ணியம்.

கபிலமுனி

நான் செய்யும் `சாங்கியோகா’வை கண்டுபிடித்த கபிலமுனி, “ஆசைப்படு…ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை…அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை சரியாக செயல்படுத்து…அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவி… அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள். மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு” என்று கூறியிருக்கிறார்.

சாப்பிட்டதை எல்லாம் உடம்பில் வைத்துக்கொண்டால், உடம்பு கெட்டுப்போய்விடும். சம்பாதித்ததை எல்லாம் நாமே வைத்துக்கொண்டால், வாழ்க்கை கெட்டுப்போய்விடும்.

ஆசைப்படுவதற்கு நமக்கு தகுதி இருக்கிறதா? என்று முதலில் பார்க்கணும். சைக்கிள் வாங்குவதற்கே கஷ்டப்படுகிற ஒருவன், கார் வாங்க ஆசைப்பட்டால் எப்படி? ஆசைப்பட்டதை அடைய வேண்டும் என்றால், சரியான ஆட்களை சேர்த்துக்கொள். அதன்பிறகு ஆகாயமே கீழே விழுந்தாலும், `காம்ப்ரமைஸ்’ ஆகாதே. நினைத்ததை செயல்படுத்திவிடு… இதைத்தான் ஷங்கர் செய்துகொண்டிருக்கிறார்.

`ரோபோ’

அடுத்து, நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யப்போகிற படம், `ரோபோ.’ மிகப்பெரிய படம்.

`ரோபோ’ படம், கடவுள் ஆசீர்வாதத்தில், சிவாஜி அளவுக்கு வெற்றிபெறவேண்டும்.

அடுத்து கே.பாலசந்தர் சாருக்காக ஒரு படம் நடிக்கிறேன். அதையடுத்து சவுந்தர்யா டைரக்ஷனில், `சுல்தான் தி வாரியர்’ படத்தில் நடிக்கிறேன். அதையடுத்து, `ரோபோ’ வரும்.

சாய் பாபா

சாய்பாபாவை நேரில் பார்க்க, நான் நான்கு முறை முயற்சி செய்தேன். பெங்களூரில் இரண்டு தடவை. புட்டபர்த்தியில் ஒரு தடவை. இங்கே சென்னையில் ஒரு தடவை. இங்கே வந்தபோது, அவரை நான் சந்தித்தேன். வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடுங்க, வருவார் என்று சொன்னார்கள். நானும் வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட்டேன். அவர், பெருந்தலைவர் காமராஜர் `டயலாக்’க்கை சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

கடவுளுக்கு பிடிக்கும்

ஆனால், அதே சாய்பாபா கலைஞர் வீட்டுக்கு வந்து, அவரை சந்தித்தார். நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். சில பேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால், கடவுளுக்கு அவர்களை பிடிக்கும்.

வேண்டுகோள்

இந்த சமயத்தில், கலைஞர் அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். கலையுலக விழாவாக இருந்தாலும் சரி, இலக்கிய விழாவாக இருந்தாலும் சரி, உங்களை தவிர யாரும் கண்ணுக்கு தெரியவில்லை. யாரும் கிடையாது. நீங்கதான் கலந்துகொள்ள வேண்டும்.

அதற்காக, உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

ஷங்கர்

டைரக்டர் ஷங்கர் பேசும்போது, “ரோபோ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டியிருக்கும். அதற்கு தமிழ் பட பட்ஜெட் தாங்காது என்பதால்தான், இந்தியில் படமாக்க முயன்றேன். சில காரணங்களால், அந்த திட்டம் நின்றுபோனது. `சிவாஜி’ படத்தின் வெற்றியும், வசூலும் `ரோபோ’ படத்தை தமிழில் எடுக்கலாம் என்ற நம்பிக்கையை எனக்கு தந்தது. ரஜினி, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப்பெரிய சக்திகள் ஒன்றாக சேர்ந்துள்ளதால், ரோபோவை மிக சிறந்த படமாக கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

வைரமுத்து

கவிஞர் வைரமுத்து பேசும்போது, “ஏவி.எம். நிறுவனத்தின் மகுடம், `சிவாஜி’ படம். நான் ரஜினியை பற்றி ஒரு விஷயம் பேசவேண்டும். ஒரு மனிதன் பேசுவதில்லை. ஆனால் பேசப்படுகிறார். அவர் விளம்பரத்தை விரும்புவதில்லை. ஆனால், அவர் இல்லாமல் விளம்பரம் இல்லை. அவருக்கு அரசியல் இல்லை. ஆனால், அவரை சுற்றி அரசியல் இல்லாமல் இல்லை. தமிழ்நாட்டுக்கு ரஜினி கொடுத்த உற்சாகம் கொஞ்சம் அல்ல. அவர் நினைத்தால், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விதம்விதமாக செய்திகள் சொல்லலாம்” என்றார்.

நடிகை ஸ்ரேயா பேசும்போது, “சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்தது என் அதிர்ஷ்டம். மீண்டும் அவருடன் நான் நடிக்க விரும்புகிறேன். மீண்டும் மீண்டும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்” என்றார்.

ஏவி.எம்.சரவணன்

நடிகர்கள் சுமன், விவேக், வி.எம்.சி.அனீபா, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, பேச்சாளர் ராஜா, கவிஞர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார், எழுத்தாளர் சுஜாதா, ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் ஆகியோரும் பேசினார்கள்.

ஏவி.எம்.சரவணன் வரவேற்று பேசினார். படத்தின் இணை தயாரிப்பாளரான டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் நன்றி கூறினார்.

Posted in 175, Actors, Actress, AVM, Baba, Celebrations, Cinema, Coverage, Events, Films, Functions, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KB, Loss, Movies, Profit, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Robo, Robot, Saibaba, Sankar, Shankar, Shivaji, Shreya, Shriya, Sivaji, Speech, Sreya, Sriya, Tax, The Boss, Vairamuthu | 1 Comment »

New Cinema Releases for Pongal – Tamil Film updates & Movie Reviews

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

பொங்கல் படங்கள் முன்னோட்டம்

இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு விக்ரம், மாதவன், சேரன், சிம்பு, பரத், அசோக், சத்யராஜ், வடிவேலு ஆகியோரின் எட்டு படங்கள் வெளியா கின்றன. அவற்றைப் பற்றிய முன்னோட்டம்…

காளை

சிம்பு, வேதிகா, நிலா நடித்துள்ள படம். “திமிரு’ படத்தை இயக்கிய தருண்கோபி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். காதல், ஆக்ஷன் கலந்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது வழக்கம்போல சிம்புவுக்கும் இயக்குநருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அது ஒரு வழியாகத் தீர்க்கப்பட்டவுடன் தயாரிப்பாளரின் ஃபைனான்ஸ் பிரச்னை தொடங்கியது. இளைஞர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.

இசை -ஜி.வி.பிரகாஷ்குமார். பாடல்கள் -வாலி. ஒளிப்பதிவு -ஆர்.டி.ராஜசேகர். சண்டைப் பயிற்சி -கனல்கண்ணன். படத்தொகுப்பு -ஆண்டனி. தயாரிப்பு -நிக் ஆர்ட்ஸ்.

பலம் -ஆக்ஷன்.

பிரிவோம் சந்திப்போம்

இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடிக்கும் இன்னொரு படம். சினேகா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை வலுவான கதை, திரைக்கதையின் பின்னணியில் உருவாக்கியிருக்கிறார் கரு.பழனியப்பன். “பார்த்திபன் கனவு’, “சிவப்பதிகாரம்’ படங்களுக்குப் பிறகு இவர் இயக்கும் படம் இது. முன்னது வெற்றியையும் பின்னது தோல்வியையும் சந்தித்ததால் இந்தப் படத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முனைப்புடன் கடுமையாக உழைத்திருக்கிறார் கரு.பழனியப்பன். பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளன.

இசை -வித்யாசாகர். பாடல்கள் -யுகபாரதி, கபிலன், ஜெயந்தா. ஒளிப்பதிவு -எம்.எஸ்.பிரபு. தயாரிப்பு -ஞானம் ஃபிலிம்ஸ் (பி) லிட்.

பலம் -இயக்கம்.

இந்திரலோகத்தில் நா.அழகப்பன்

“இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தையடுத்து வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் பிரமாண்டமான படம். இதில் பூலோகவாசி, இந்திரன், எமன் என வித்தியாசமான மூன்று வேடங்களில் நடித்துள்ளார் வடிவேலு. தீதா சர்மா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். பூலோகத்தில் வாழும் வடிவேலு இந்திரலோகத்துக்கும் எமலோகத்துக்கும் சென்று காமெடி கலாட்டா செய்வதுதான் கதை. படத்தை வடிவேலுவின் நண்பரும் அவருக்குக் காமெடி ட்ராக் எழுதுபவருமான தம்பி ராமையா இயக்கியுள்ளார். படத்துக்கு மிகப் பெரிய பலம் தோட்டாதரணி உருவாக்கியுள்ள பிரமிக்க வைக்கும் அரங்குகள். “சிவாஜி’யில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயா இந்தப் படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இசை -சபேஷ்முரளி. பாடல்கள் -புலமைப்பித்தன். ஒளிப்பதிவு -கோபிநாத். படத்தொகுப்பு -ஹர்ஷா. தயாரிப்பு -செவன்த் சேனல் நிறுவனம்.

பலம் -புதுமையான நகைச்சுவை.

வாழ்த்துகள்

“தம்பி’ வெற்றிப் படத்துக்குப் பிறகு இயக்குநர் சீமான்-மாதவன் கூட்டணி சேர்ந்துள்ள படம். தன்னைப் போல பிறரையும் நேசிக்க வேண்டும்; பெற்றவர்களைக் காப்பாற்றாதவன் மற்றவர்களைக் காப்பாற்ற முடியாது என்ற கருத்தை மையமாக வைத்து ஆபாசம், ஆங்கிலக் கலப்பில்லாமல் படத்தை உருவாக்கியிருக்கிறார் சீமான். “ஆரியா’ படத்துக்குப் பிறகு மாதவனுடன் பாவனா ஜோடியாக நடிக்கிறார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பாளர் சிவா இந்தப் படத்தை சாய்மீரா நிறுவனத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறார். சிவாவின் “அரவிந்தன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன்ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

பாடல்கள் -நா.முத்துக்குமார். ஒளிப்பதிவு -பெ.லோ.சஞ்சய். படத்தொகுப்பு -கா.பழனிவேல். தயாரிப்பு -அம்மா கிரியேஷன்ஸ்.

பலம் -வலுவான கதை.

பிடிச்சிருக்கு

“முருகா’ படத்தில் நடித்த அசோக், புதுமுகம் விசாகா நடித்துள்ள படம். சம்பத், சரண்யா, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லிங்குசாமியின் உதவியாளர் கனகு இயக்கியிருக்கிறார். காதலில் வெற்றி பெற கத்தியின்றி ரத்தமின்றி ஒரு புதுமையான வழியைக் காட்டும் படம். சண்டைக் காட்சிகள் இல்லாத குறையை இந்தப் படத்தின் திருப்பம் நிறைந்த திரைக்கதை நீக்கும் என்கிறார் இயக்குநர். இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் மூலம் மனு ரமேஷன் என்ற புதிய இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். கதாநாயகன் அசோக் மும்பையில் நடன இயக்குநராகப் பணியாற்றியதால் நடனக் காட்சிகள் புதுமையாக அமைக்கப்பட்டுள்ளன.

பாடல்கள் -யுகபாரதி, விவேகா, ச.ரமேஷன் நாயர். ஒளிப்பதிவு -த.வீ.ராமேஸ்வரன். படத்தொகுப்பு -கு.சசிகுமார். நடனம் -காதல் கந்தாஸ். தயாரிப்பு -கூல் புரொக்ஷன்ஸ்.

பலம் -திரைக்கதை.

பழனி

“திருப்பதி’ படத்துக்குப் பிறகு பேரரசு இயக்கும் படம். பரத், புதுமுகம் காஜல் அகர்வால், குஷ்பு ஆகியோர் நடித்துள்ளனர். அக்கா-தம்பி பாசத்தை மையமாக வைத்து காமெடி, சென்டிமெண்ட் கலந்து படத்தை உருவாக்கியுள்ளார் பேரரசு. வழக்கம்போல இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ள பேரரசு முதல்முறையாக இந்தப் படத்தில் சொந்தக் குரலில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். பரத் முதல்முறையாக முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். பாடல் காட்சிகள், பிரமாண்டமான க்ளைமாக்ஸ் காட்சி ரசிகர்களைக் கவரும். வழக்கமான பரத் படங்களை விட இந்தப் படத்தை அதிக பட்ஜெட்டில் தயாரித்துள்ளார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம்.

வசனம் -ரவிமரியா. இசை -ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு -விஜய் மில்டன். படத்தொகுப்பு -வீ.ஜெய்சங்கர். சண்டைப் பயிற்சி -தளபதி தினேஷ். தயாரிப்பு -சினிமா பாரடைஸ்.

பலம் -ஆக்ஷன், சென்டிமெண்ட்.

பீமா

லிங்குசாமி இயக்கத்தில் விக்ரம்-த்ரிஷா நடித்துள்ள படம். பல பிரச்னைகளால் இரண்டு வருடம் தாமதமாக வெளியாகிறது. நிழல் உலக தாதாக்கள் பற்றிய இந்தப் படத்துக்காக சுமார் 15 கிலோ எடையைக் கூட்டி முரட்டு இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ரம். த்ரிஷாவின் காஸ்ட்யூம்களுக்காகவே இந்தப் படம் பேசப்படும் என்கிறார்கள். ஹாலிவுட் தரத்துக்கு நிகரான சண்டைக் காட்சிகள் வித்தியாசமான கோணங்களில் படமாக்கப்பட்டுள்ளன. பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. லிங்குசாமி, விக்ரம் ஆகியோரை விட படத்தின் வெற்றியை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.

வசனம் -எஸ்.ராமகிருஷ்ணன். இசை -ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள் -தாமரை, நா.முத்துக்குமார், பா.விஜய், யுகபாரதி. ஒளிப்பதிவு -ஆர்.டி.ராஜசேகர். சண்டைப் பயிற்சி -கனல் கண்ணன். படத்தொகுப்பு -ஆண்டனி. தயாரிப்பு -ஸ்ரீசூர்யா மூவிஸ்.

பலம் -பெரிய கலைஞர்களின் கூட்டணி.

Posted in Actors, Actress, Alagappan, Ashok, Azhagappan, Barath, Bharath, Bhavana, Bhavna, Bhawana, Bhawna, Bheema, Cheran, Cinema, Films, INA, Indralogathil Naa Azhagappan, Kaalai, Kalai, Karu Pazhaniappan, Lingusami, Lingusamy, Madhavan, Mathavan, Movies, Nila, Palani, Palaniappan, Pazani, Pazhani, Pazhaniappan, Perarasu, Pidichirukku, Pongal, Privom Santhippom, Releases, Reviews, Sathyaraj, Satyaraj, Seemaan, Seeman, Seran, Simbu, SNEHA, Thambi, Thimiru, Thirupathi, Thirupathy, Thiruppathi, Thiruppathy, Thrisha, Trisha, Vaalthugal, Vaazhthugal, Vaazhthuhal, Vaazhthukkal, Vaazthukkal, Vadivelu, Vedhika, Vethika, Vikram | Leave a Comment »

Sun TV Top 10 Movies & Rights to a Cinema – Collusion, Mixing news with monetary interests

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

சர்ச்சை: டாப் 10… 20… 30..!

உலக அதிசயங்களை ஏழு என்று வகைப்படுத்தியதற்கு என்ன காரணமோ அதே காரணம்தான் “டாப் டென்’ என்று டி.வி. சானல்கள் வரிசைப்படுத்தியதற்கும். அதாவது ஏழு, பத்து என்பதெல்லாம் பழக்க தோஷம்தான். வார வாரம் டாப் டென் நிகழ்ச்சிகள் போக ஆண்டுக்கு ஒருமுறை டாப் டென் தேர்ந்தெடுக்கிறார்கள். சன் டி.வி., இப்போது கலைஞர் டி.வி. இரண்டிலும் இந்த வரிசைப்படுத்தல் நடக்கிறது.

சன் டி.வி.யில் நடக்கிற அரசியல் சுவாரஸ்யமானது. எப்போதும் விஜய் நடித்த படத்தை மட்டுமே டாப் டென்னில் முதலாவதாகக் கொண்டுவருவது அவர்கள் வாடிக்கை. வாரப் பட்டியலிலும் அவர்தான் எப்போதும் முதலிடத்தைப் பிடிப்பார். அப்படியில்லை என்றால் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரித்த படம் முதலிடத்தைப் பிடிக்கும். அல்லது ரஜினி படம் வெளிவந்தால் அது முதலிடத்தைப் பிடிக்கும்.

கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு “ஆட்டோகிராஃப்’ தேசிய விருது பெற்ற போது அதற்கு சன் டி.வி. போதிய விளம்பரம் செய்யவில்லை என்று வருத்தப்பட்டார் சேரன். விளைவு அடுத்த ஆண்டில் அவர் இயக்கிய “தவமாய் தவமிருந்து’ திரைப்படம் ஆண்டு டாப் டென்னில் இடம்பெறவேயில்லை. அடுத்து வெளியான “மாயக் கண்ணாடி’ முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது. ஒரு வழியாக சேரன் இறங்கிவந்து சன் தரப்பில் பேசி, பிறகு அந்தச் சானலிலும் அவருடைய பேட்டி இடம் பெற்றது. அந்த வகையில் புறக்கணிக்கப்பட்டு இப்போது பேட்டி கொடுக்க வைக்கப்பட்டிருப்பவர் அஜீத்.

விஜய் நடித்த “வசீகரா’ படத்தையும் நிராகரித்திருக்கிறார்கள். காரணம் அதை ஜெயா டி.வி. வாங்கியிருந்தது.

அவர்கள் முடிவு செய்தால் அது பட்டியலில் இடம் பெறும். வேறு சானல்களில் வாங்கப்பட்ட படங்களை அவர்கள் பட்டியலில் சேர்ப்பதில்லை. ரஜினி, விஜய், ஆஸ்கர் ஃபிலிம்ஸ் போக அவர்களுக்குப் படம் விற்றவர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறுவார்கள்.

ஜெயா டி.வி.யில் இவர்களில் இருந்து விடுபட்ட மற்ற படங்கள் இடம் பெறும். உதாரணத்துக்கு அவர்களுக்கு “பில்லா’, “சென்னை -28′ உள்ளிட்ட படங்கள் அவர்களால் சிலாகிக்கப்பட்ட படங்கள்.

செய்திகளே அப்படி அவரவர் வசதிக்கு ஏற்ப உருவாக்கப்படுவதும் ஒளிபரப்பப்படுவதுமாக இருக்கும்போது டாப்டென்கள் எம்மாத்திரம்.

கலைஞர் டி.வி.க்குத்தான் தர்மசங்கடம் அதிகம். அவர்கள் தற்போது வெளியாகும் எல்லா திரைப்படங்களையும் வெளியிடும் உரிமையை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம். அது தவிர திரைத்துறையினரை தம் வசம் வைத்திருப்பது அவர்களுக்கு மறைமுக ஆதரவாக நினைக்கிறார்கள். (கடந்த இரண்டாண்டு திரைத்துறை அரசு விருதுகள் பட்டியலிலேயே அனைத்துத் திரைப்படங்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் கெüரவித்தவர்கள் ஆயிற்றே?)

வாங்கிய படங்கள், பெரிய நடிகர்கள்- பெரிய இயக்குநர்களின் படங்கள் என எல்லோரையும் டாப் டென்னில் இடம் பெறச் செய்ய வேண்டும். “பெரியார்’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற “சன்’னால் புறந்தள்ளப்பட்ட படங்களுக்கு இங்கே ஆதரவு காட்ட வேண்டிய நெருக்கடி. கூட்டிப் பார்த்தால் படத்தின் பட்டியல் 17-ஐத் தாண்டியது. என்ன செய்வதென்று புரியவில்லை. எந்த ஏழு பேரை நீக்குவது என்று குழப்பம். இறுதியாக ஒரு உத்தி கண்டார்கள். ஏன் டாப் டென்? அது யார் போட்ட சட்டம்? இனி ஒரு விதி செய்வோம் என டாப்- 20 ஆக்கினார்கள். புத்தாண்டு படப்பட்டியலில் 20 படங்கள் இடம் பெற்றன. புதிதாக இன்னொரு மூன்று படத்தைச் சேர்ப்பதுதானா கஷ்டம்?

ஆக, டாப் இருபது இப்போது மட்டும்தானா என்பது தெரியவில்லை. தேவைப்பட்டால் “டாப் 25′, “டாப் 30′ என்று பெருகவும் வாய்ப்பு உண்டு.

இறுதியாக ஒரு கேள்வி… கலைஞர்களின் மனம் புண்படாத வண்ணம் இந்த ஆண்டு ரிஸீஸôன திரைப்படங்களின் பட்டியலை வாங்கி அத்தனை டாப்புகளையும் போட்டு புண்ணியம் கட்டிக் கொள்ளப் போகும் சானல் எது?

Posted in Actors, Actress, Ajith, Arrogance, Arts, Business, Cheran, Cinema, Corporate, Critic, Critique, deal, Distribution, Distributors, Economy, Films, Finance, Jaya, Jeya, K, K TV, Kalainjar, Lists, Maran, Media, Monetary, Money, Movies, MSM, News, Raj, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Reviews, Seran, Star, Star Vijay, Sun, Sun TV, Sunday, Top 10, TV, Vijay | 2 Comments »

Tamil Actor Pandiyan passes away: Anjali, Memoirs from Kollywood peers

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

பாண்டியன் ஓர் அப்பாவி!

பாரதிராஜா:

நான் அறிமுகப்படுத்திய ஒரு கலைஞன் இவ்வளவு சிறிய வயதிலேயே இறந்ததில் எனக்கு மிகவும் அதிர்ச்சி. பாண்டியன், சினிமா பற்றி ஒன்றுமே அறியாத ஓர் அப்பாவி. ஒரு கலைஞன் என்பதை விட பணிவான ஒரு நல்ல மனிதன்.

பாண்டியராஜன்:

“ஆண் பாவம்’ படத்தில் அவருடைய தம்பியாக நடித்தேன். நிழலில் ஏற்பட்ட அந்த உறவு நிஜத்திலும் எங்களுக்குள் தொடர்ந்தது. “ஆண் பாவம்’ படத்தில் முதலில் நான் நடிப்பதாக இல்லை. அந்த கேரக்டரில் நடிக்க இருந்தவர் கால்ஷீட் தர முடியாத சூழ்நிலையில் இருந்ததால் நான் நடிக்க வேண்டியதாகிவிட்டது. அப்போது பாண்டியன் முன்னணி நடிகராக இருந்தார். நான் நடிக்கக் கூடாது என்று சொல்லியிருந்தால் அன்றைய சூழ்நிலையில் என்னால் எதுவும் செய்திருக்க முடியாது. ஆனால் பெருந்தன்மையாக ஒத்துக்கொண்டதோடு இன்னும் அதிக சீன்களில் நடிக்கலாமே என்றும் கூறினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இயக்கிய “கை வந்த கலை’ படத்தில் கூட மீண்டும் பாண்டியன்-சீதா கூட்டணியை “ஆண் பாவம்’ தொடர்ச்சியாக நடிக்க வைத்தேன். அவரைப் பற்றி பல விஷயங்கள் சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் சினிமாத்துறையில் மாட்டிக்கொண்ட ஒரு வெகுளி. அவருடைய குடும்பத்துக்கு என்னால் இயன்ற உதவியை எப்போதும் செய்வேன்.

ரேவதி:

“மண் வாசனை’ படம் மூலம்தான் நாங்கள் இருவரும் தமிழில் அறிமுகமானோம். அப்போது எனக்குத் தமிழ் தெரியாது; அவருக்கு ஆங்கிலம் தெரியாது. இருந்தாலும் பாரதிராஜா சொன்னதை வைத்து எங்களுக்குள் ஏற்பட்ட புரிதலால் படத்தில் நடித்தோம்.

அதன்பிறகு “பொண்ணு பிடிச்சிருக்கு’, “புதுமைப் பெண்’ படங்களில் இணைந்து நடித்தோம். அந்தப் படங்கள் வெளிவந்து கிட்டத்தட்ட் 20 வருடங்கள் ஆனாலும், அவருடைய மறைவுச் செய்தி கேட்டபோது எல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கிறது.

எந்தச் சூழ்நிலையிலும் சிரித்துக்கொண்டே இருப்பார். அவருடைய குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

எஸ்.வி.சேகர்:

“திருமதி ஒரு வெகுமதி’ படத்தில் நடிக்கும்போதுதான் எனக்குப் பாண்டியனுடன் நல்ல அறிமுகம். இவர் எப்படி சினிமாவில் நீடிக்கிறார் என்று நினைக்கும் அளவுக்கு அப்பாவி. அவருடைய பேச்சில் மதுரை மண்வாசனை மணக்கும். மனதில் பட்டதை உடனே வெளிப்படுத்தி விடுவார். இதனால் பல பிரச்னைகளையும் சந்தித்தார்.

ரேகா:

“ஆண்களை நம்பாதே’ படத்தில் நானும் அவரும் இணைந்து நடித்தோம். அதன்பிறகு பல ஸ்டுடியோக்களில் படப்பிடிப்பின்போது சந்தித்துக்கொள்வோம்.

மிகவும் பாசமாகப் பழகக்கூடியவர். சின்ன வயதிலேயே இறந்தது மிகவும் சங்கடமாக இருக்கிறது.

அதனால் நாம் வாழும்வரை நமது உடல் நலத்தைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம் என்பதைத்தான் பாண்டியனின் மரணம் குறித்து என்னால் சொல்லமுடியும்.

Posted in Actors, Actress, Actresses, Cinema, Films, Kollywood, Movies, Paandian, Paandiyan, Pandian, Pandiyan | 1 Comment »

Tamil Cinema 2007 – Top Films, Movies, Flashback, Stars: Dinamalar

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

01_01_2008_006_001.jpg

Posted in 2007, Actors, Actresses, Cinema, Dinamalar, Films, Flashback, Flicks, Images, Movies, News, Stars, Tamil, Trivia | 1 Comment »

Tamil Cinema 2007 – Top Films, Notable Movies, Flashback, Star Actors: Dinamani Manoj Krishna

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

சண்டே சினிமா

ஃப்ளாஷ் பேக் 2007

மனோஜ்கிருஷ்ணா


தமிழ் சினிமாவைப் பொருத்தவரை 2007-ம் வருடம், ஒரு கொண்டாட்ட வருடம். ஒரு மினி ஃப்ளாஷ்பேக்…     

2007-ம் ஆண்டில் 10 மொழி மாற்றுப் படங்கள் உள்பட சுமார் 107 தமிழ்ப் படங்கள் வெளியாகின. அவற்றில் 100 நாள்களைத் தாண்டிய 11 படங்களில் சில, ரசிகர்களாலும் சில, சம்பந்தப்பட்ட நடிகர்களாலும் திரையரங்குகளாலும் ஓட்டப்பட்டுள்ளன. 50 க்கும் மேற்பட்ட படங்கள் 50 நாள்களைக் கடந்து தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் மினிமம் கியாரண்டி தந்தன.

உச்ச நட்சத்திரம்!

2007-ம் ஆண்டில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய படம் ரஜினிகாந்தின் “சிவாஜி’. காஸ்ட்யூம், ஸ்டைல் என பல அம்சங்களில் ரஜினிகாந்த் மிக அழகாகத் தோற்றமளித்தப் படங்களில் இதுவும் ஒன்று. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளிவந்த இந்தப் படம், இதுவரை தமிழ் சினிமாவில் மிக அதிக விலைக்கு விற்பனையான திரைப்படம் என்ற புகழைப் பெற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட படமும் இதுதான். “சிவாஜி’க்கு வெற்றியா அல்லது வீரமரணமா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

உலக நட்சத்திரம்!

2007-ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இன்னொரு படம் கமல்ஹாசனின் “தசாவதாரம்’. தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பட்ஜெட் படமும் இதுவே (சுமார் 70 கோடி). ஆனால் உலகத் தரத்திலான “பெர்ஃபெக்ஷன்’ இருக்க வேண்டும் என்பதற்காக படத்தின் வேலைகள் நீடித்து படம் வெளியாகவில்லை. ஒரு தமிழ் நடிகர் முதல்முறையாக 10 வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு இன்னும் நீடிக்கிறது. 14 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

சிறப்பு நட்சத்திரம்!

“அடாவடி’, “பெரியார்’, “கண்ணாமூச்சி ஏனடா’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ என நான்கு படங்களிலும் வித்தியாசமாக நடித்து 2007-ம் ஆண்டில் அதிகப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்ற பெயரைப் பெறுகிறார் சத்யராஜ். குறிப்பாக, “பெரியார்’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ படங்களுக்காக விருது பெற்றால் அது செய்தியல்ல; பெறாவிட்டால்தான் அது செய்தி.

சிரிப்பு நட்சத்திரம்!

கடந்த சில ஆண்டுகள் போலவே 2007-ம் ஆண்டும் அதிகப் படங்களில் நடித்த நகைச்சுவை நாயகன் வடிவேலு. எப்படிப்பட்டக் கதையாக இருந்தாலும் இவருடைய காமெடி தங்களது படத்தில் இடம்பெற்றால் போதும் படம் தப்பித்து விடும் என்று பல முன்னணி நடிகர்களும் தயாரிப்பாளர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். இவருடைய கால்ஷீட் கிடைக்காததால் பல படங்களின் படப்பிடிப்பையே தள்ளி வைக்கும் அளவுக்கு 2007-ல் பிஸியாக இருந்தவர்.

நம்பிக்கை நட்சத்திரம்!

கணேசனுக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற ஓர் அறிமுக நடிகர் இவராகத்தான் இருக்கும். இவர் கார்த்தி. அமீரின் இயக்கத்தில் இவர் அறிமுகமான “பருத்தி வீரன்’ படத்தின் விஸ்வரூப வெற்றி இவருடைய அடுத்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 375 நாள்களை நோக்கி (சென்னையில்) ஓடிக்கொண்டிருக்கும் “பருத்தி வீரன்’ மெகா ஹிட்டுக்குப் பிறகு அவருக்கு வந்த பல பட வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் உரிய கதையைத் தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருப்பது தமிழ் சினிமாவில் அவருக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடிப்பார் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

தொடர் நட்சத்திரம்!

2007-ம் ஆண்டு “ஆழ்வார்;, “கிரீடம்’, “பில்லா’ என மூன்று படங்களில் நடித்துள்ளார் அஜித். முதலாவது தோல்வியையும் இரண்டாவது மினிமம் கியாரண்டியையும் மூன்றாவது அவருக்குரிய மார்க்கெட்டையும் ஓபனிங்கையும் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளுமளவுக்கான வெற்றியையும் அடைந்துள்ளது.

சுடர் நட்சத்திரம்!

“போக்கிரி’, “அழகிய தமிழ்மகன்’ என 2007-ல் இரண்டு படங்களில் நடித்துள்ளார் விஜய். முதலாவது வெற்றியையும் இரண்டாவது ஓரளவே வரவேற்பையும் பெற்றுள்ளன. தயாரிப்பாளர்கள் விரும்பும் கமர்ஷியல் ஹீரோவாகத் திரையுலகில் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருப்பது அவருடைய பலம்.

துருவ நட்சத்திரம்!

“கற்றது தமிழ்’, “ராமேஸ்வரம்’ படங்களில் வித்தியாசமாக நடித்து பலருடைய பாராட்டுகளைப் பெற்றுள்ள ஜீவா, புதிய முயற்சிகளுக்கு அளிக்கும் ஆதரவைப் பாராட்டலாம். கமர்ஷியல் ஹீரோவாக வரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்களின் பாணியைப் பின்பற்றாமல் தனக்கென ஒரு பாணியைத் தேர்ந்தெடுத்து வித்தியாசமான இளம் நடிகராகத் திகழ்கிறார்.

ஒளிர் நட்சத்திரம்!’

வில்லன், குணச்சிர நாயகன் என 2007-ல் ஏழு படங்களில் நடித்துள்ள பிரகாஷ்ராஜ், தான் தயாரிக்கும் படங்களின் மூலமாகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரியவராக இருக்கிறார். பெரும்பாலான படங்களின் வெற்றிக்கு இவருடைய பங்களிப்பும் ஒரு காரணம். சினிமாவை நேசிக்கும் இவர், கமல்ஹாசன் போலவே தான் சம்பாதிக்கும் பணத்தைத் திரைப்படத் துறையில் முதலீடு செய்வது வரவேற்கத்தக்க சிறப்பான விஷயம்.

பெண் நட்சத்திரம்!

2007-ம் ஆண்டின் மிகச் சிறந்த நடிகை என்று ஜோதிகாவைக் குறிப்பிடலாம். “மொழி’ படத்தில் வாய் பேச இயலாத காது கேட்கும் திறன் அற்ற பெண்ணாக வந்து தன்னுடைய கண்களாலும் முகபாவனைகளாலும் அபாரமான நடிப்புத் திறனை வெளிக்காட்டியவர். திருமணத்துக்குப் பிறகு நடிக்காதது அவருடைய சொந்த விருப்பம் என்றாலும் அவரை என்றும் ஆதரிக்க ரசிகர்கள் தயாராக இருக்கும் அளவுக்கு தன்னுடைய கடைசிப் படத்தில் கலைக்கு மரியாதை செய்திருக்கிறார்.

வெள்ளி நட்சத்திரங்கள்!

விஷால் “தாமிரபரணி’, “மலைக்கோட்டை’ என இரண்டு வெற்றிப் படங்களில் நடித்து கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் ஒரே பாணியிலான நடிப்பு, இன்னொருவரைப் போல காப்பியடிக்கும் காட்சிகள் போன்றவற்றைத் தவிர்க்காவிட்டால் திரைத்துறையில் தனித்துவம் காட்ட முடியாது.

சரத்குமார் “பச்சைக்கிளி முத்துச்சரம்’, “நம் நாடு’ அர்ஜுன் “மணிகண்டா’, “மருதமலை’, தனுஷ் “பரட்டை என்கிற அழகுசுந்தரம்’, “பொல்லாதவன்’, பரத் “கூடல் நகர்’, “சென்னைக் காதல்’ என தலா இரண்டு படங்களில் நடித்துள்ளனர்.

சூர்யா “வேல்’ படத்திலும் ஜெயம்ரவி “தீபாவளி’ படத்திலும் நடித்துள்ளனர்.

விக்ரம், சிம்பு ஆகியோர் படங்கள் எதுவும் வெளிவரவில்லை.

கடந்த ஆண்டு “தீபாவளி’, “கூடல்நகர்’, “ஆர்யா’, “ராமேஸ்வரம்’ என நான்கு படங்களில் நடித்து அதிகப் படங்களில் நடித்த கதாநாயகி என்ற பெயரைப் பெறுகிறார் பாவனா. அனைத்துப் படங்களிலும் வழக்கமான நடிப்புதான்.

“போக்கிரி’, “ஆழ்வார்’, “வேல்’ என மூன்று படங்களில் நடித்துள்ளார் அஸின். “வேல்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

“சிவாஜி’க்குப் பிறகு ஸ்ரேயாவின் மார்க்கெட் அதிகமாகி, அவரைத் தங்களுடைய படங்களில் நடிக்க வைப்பதற்கு முன்னணி நடிகர்களும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் விரட்டிக்கொண்டிருக்கின்றன. அவர் பாலிவுட், ஹாலிவுட் அதிக சம்பளம் தந்தால் கோலிவுட் என்ற கொள்கையில் இருக்கிறார்.

நமீதா வழக்கம் போல அழகு காட்டி தன்னுடைய மார்க்கெட்டைத் தக்க வைத்திருக்கிறார். “பருத்தி வீரன்’ படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ப்ரியாமணிக்கு விருதுகள் காத்திருக்கின்றன. நல்ல கதையை விட்டுவிட்டு நளினமான காஸ்ட்யூம் பக்கம் இவருடைய பார்வை திரும்பியிருக்கிறது. இயக்குநரைப் பொருத்து நடிப்பாற்றலை உயர்த்திக்கொள்ளலாம். “பில்லா’வில் ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ஹாலே பெர்ரி ஆகியோரைப் போல காஸ்ட்யூமில் முதல்முறையாக அளவுக்கு அதிகமாக க்ளாமர் காட்டியிருக்கிறார் நயன்தாரா. ஒரு சாரார் ரசித்ததை மட்டும் கணக்கில் கொள்ளாமல் இன்னொரு சாரார் முகம் சுளித்தைதயும் கருத்தில் கொள்ளலாம்.

இசை நட்சத்திரங்கள்!

2007-ம் ஆண்டில் 11 படங்களுக்கு இசையமைத்து முன்னணியில் இருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. அனைத்துப் படங்களிலும் ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தாலும் மண்வாசனையுடன் கூடிய “பருத்தி வீரன்’ முதலிடத்தைப் பிடிக்கிறது. இவரையடுத்து ஸ்ரீகாந்த் தேவா 9 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தேவா 8 படங்களிலும் பரத்வாஜ், இமான், சபேஷ்முரளி ஆகியோர் தலா நான்கு படங்களிலும் இசையமைத்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று படங்களுக்கு ஹிட் பாடல்களைத் தந்துள்ளார். மேடைகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் பார்வையற்ற இசைக் கலைஞர் கோமகன் “முதல்முதலாய்’ என்ற படத்துக்கு முதல்முறையாக இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. பிரபல கர்நாடக இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமன் “சிருங்காரம்’ படத்துக்கு முதல்முறையாக இசையமைத்ததும் குறிப்பிடத்தக்கது.

நட்சத்திரத் திருமணங்கள்

பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் -வந்தனா ஆகியோரின் திருமணம் மட்டுமல்லாமல், திரையுலகை மகிழ்வித்த இன்னும் சில நட்சத்திரத் திருமணங்கள்…

நடிகர் ஜீவா-சுப்ரியா, நடிகை மாளவிகா-சுமேஷ், நடிகை பூமிகா-பரத் தாகூர், பாடகர் விஜய் யேசுதாஸ்-தட்சணா, நடிகர், நடன இயக்குநர் நாகேந்திரபிரசாத்-ஹேமலதா, நடிகர் நரேன்-மஞ்சு ஹரிதாஸ்

உதிர்ந்த நட்சத்திரங்கள்!

2007 உண்மையிலேயே திரையுலகில் மிகப் பெரிய இழப்புகளையும் சந்தித்தது. நடிகர் விஜயன், நடிகை ஸ்ரீவித்யா,நடிகை ஜோதி, நடிகர் குட்டி, இயக்குநர் ஜீவா, நடிகர் ஏ.கே.சுந்தர், இசையமைப்பாளர் எல்.சுப்பிரமணியம், வீன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனர் கோவிந்தராஜன், விஜயம் கம்பைன்ஸ் பழனிச்சாமி, தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ்.கண்ணப்பன், நடிகை லட்சுமியின் தாயாரும் பழம்பெரும் நடிகையுமான ருக்மணி, நடன இயக்குநர் வாமன் என்று பல வருடங்கள் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் கோலோச்சிய பலர் உதிர்ந்தனர். திரையுலகம் வருந்தியது.

வால் நட்சத்திரம்…

ஒரு சினிமாவைப் பற்றிய முறையான மதிப்பீட்டைக் காட்டிலும் சினிமாவே மிக முக்கியமானது. சினிமாவின் தலைவிதி, மக்கள் ரசனையைப் பொருத்தே அமைகிறது. அதற்குப் பொறுப்பானவர்கள் நாம்தான்.

மக்களின் ரசனையைக் கலை வளர்க்கிறது. வளர்ந்துவிட்ட அந்த மக்கள் ரசனை, கலையின் வளர்ச்சியைக் கோருகிறது. மற்ற எந்தக் கலையைக் காட்டிலும் சினிமாவுக்கு இந்த விஷயம் பல மடங்கு பொருந்தும்.

சினிமா ஒரு கூட்டுப் படைப்பாக இருப்பதால் எவ்வளவு பெரிய மேதைகளாக இருந்தாலும் தங்களுடைய காலகட்டத்தில் நிலவும் ரசனை மற்றும் முக்கிய விஷயங்களைத் தங்களுடைய படைப்புகளில் பதிவு செய்தல் அவசியம். இல்லாவிட்டால் அந்தக் கலைஞனும் கலைப் படைப்பும் அழிந்துவிடக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்.

“மக்கள் விரும்புகிறார்கள் நாங்கள் என்ன செய்ய’ என்று சப்பைக் காரணம் கட்டி மலிவான படங்களைத் தராமல் மக்களின் ரசனையை உயர்த்தும் படங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சம்பந்தப்பட்ட கலைஞர்களும் தயாரிப்பாளர்களும் முன்வர வேண்டும்.

அதேபோல திரைத்துறையில் கடும் முயற்சிக்குப் பிறகு வாய்ப்பு கிடைக்கப் பெறும் புதியவர்கள், சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய வலிமைதான் தங்களுக்கு வாய்ப்பாகக் கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்து தங்களது படைப்பில் கவனம் செலுத்தினால் “உலகத் தரம், உலகத் தரம்’ என்ற பதம் மறைந்து “தமிழ்த் தரம்’ என்ற வரம் வாய்க்கப் பெறும்.

மனோஜ்கிருஷ்ணா

Posted in 2007, Actors, Ajith, Cinema, Dinamani, EVR, Films, Flashback, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, ManojKrishna, Movies, Periyaar, Periyar, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajnikanth, Shivaji, Sivaji, Stars, Vadivel, Vadivelu, Vijai, Vijay | Leave a Comment »

MG Ramachandran: Politics, Cinema, Personality – MGR Biosketch by Panruti Ramachandhran

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

மறைந்தும் மறையாத தலைவர்

பண்ருட்டி ராமச்சந்திரன்

எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.

அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.

“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.

நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.

எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற பாட்டு ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.

1984-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா? உணர்வுடன் இருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.

அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார்.

அரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறு விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.

ஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது. அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.

எம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.

எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.

அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.

சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.

இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.

“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.

நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.

உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.

முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!

(கட்டுரையாளர்: அவைத்தலைவர், தேமுதிக)

Posted in Actors, ADMK, AIADMK, Anjali, Anna, Assembly, Biography, Biosketch, Children, Cinema, CM, DMDK, DMK, dynasty, EVR, Films, Food, Free, Freebies, Heartthrobs, Hero, Heroes, Incidents, Indhra, Indira, Indra, Iruvar, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kids, King, KK, Life, Manifesto, Meals, Memoirs, MGR, Midday Meals, Monarchy, Movies, Notes, Nutrition, Panruti, Periyar, Personality, Politics, Poor, PVNR, Ramachandhran, Ramachandran, Ramachanthiran, Ramachanthran, Rao, UN, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Tamil Actor Sathyaraj – Biosketch in Dhinathanthi

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(811)
சத்யராஜ் சினிமா தயாரிப்பு நிர்வாகி ஆனார்

நாடகத்தில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடினார் சத்யராஜ். ஆனால் கிடைத்ததோ தயாரிப்புத் துறையில் நிர்வாகம் பார்க்கும் வாய்ப்பு!

இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-

“கோமல் சுவாமிநாதன் இயக்கிய “ஆட்சி மாற்றம்”, “சுல்தான் ஏகாதசி”, “கோடுகள் இல்லாத கோலங்கள்” என்ற மூன்று நாடகங்களிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த மூன்று நாடகத்திலும் நடித்ததற்காக எனக்கு நாடகம் ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் 30 ரூபாய் தந்தார்கள்.

இந்த 30 ரூபாயில் 10 ரூபாய்க்கு சுவீட் வாங்கினேன். என்னை நாடகத்தில் சேர்த்துவிட்ட நடிகர் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போனேன். நடிப்புக்கு கிடைத்த என் முதல் சம்பளத்தில் அவர் வீட்டுக்கு சுவீட் வாங்கிப்போக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படிச் செய்தேன்.

நான் எம்.ஜி.ஆர். ரசிகன் அல்லவா! எம்.ஜி.ஆர். கொடுத்து கொடுத்து சிவந்த கரம் கொண்டவர். அதனால் 5 ரூபாயை, தர்மத்துக்கு கொடுத்தேன். மீதி பணத்தில் நண்பர்களுடன் சினிமாவுக்கு போனேன்.

சூர்யா, கார்த்தி

நான் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போன காலகட்டத்தில் சூர்யா, கார்த்தி இருவருமே குழந்தைகள். இந்தக் குழந்தைகளும் வளர்ந்து இன்றைக்கு நடிக்க வந்துவிட்டார்கள்! கார்த்தி நடிக்க வரும் முன்பாக ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறார். முதல் மாத சம்பளத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு `சுவீட்’ வாங்கிக்கொண்டு வந்தார்! அப்போதுதான் என் முதல் சம்பளத்தில் நான் அவர்கள் வீட்டுக்கு `சுவீட்’வாங்கிப்போனதை சிவகுமார் அண்ணன் தனது பிள்ளைகளிடம் சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

நாடகத்தில் அவ்வப்போது 10 ரூபாய் சம்பளம் வந்து கொண்டிருந்தது. பணம் குறைவாக இருக்கிறதே என்று நான் கவலைப்படவில்லை. அண்ணன் மாதம்பட்டி சிவகுமார் கொடுத்த பணம்தான் இருக்கிறதே. அதை முழுவதுமாக செலவழிக்க நாளாகும். அந்த அளவுக்கு, சிக்கனமாகவே என் செலவுப் பட்டியலை வைத்துக்கொண்டேன்.

விவேகானந்தா பிக்சர்ஸ் என்ற கம்பெனி சார்பில் “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” போன்ற படங்களை தயாரித்த திருப்பூர் மணி, அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் நண்பர். அவரது மைத்துனர் கே.பாலு, அந்த நாட்களில் என் நண்பராகி விட்டார். பின்னாளில் இவர் பிரபு நடிக்க மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த “சின்னத்தம்பி” படத்தை தயாரித்தார். பாலு என்னிடம் சினிமா வாய்ப்பு வரும்போது நிச்சயம் நடிக்க வைப்பதாக சொன்னார்.

வாடகை அறை

அப்போது நான் சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டில் மாதம் 85 ரூபாய் வாடகையில் ஒரு அறையில் இருந்தேன். என் சைசுக்குதான் அந்த அறை இருக்கும். காலை முழுசாக நீட்டி படுக்க முடியாத அளவுக்கு இருந்தது அந்த அறை.

ஒருநாள் என்னைப் பார்ப்பதற்காக என் தங்கை கல்பனாவும், தங்கை கணவர் அர்ஜ×ன் மன்றாடியாரும் அங்கே வந்துவிட்டார்கள். என் அறையை பார்த்த இருவருமே கண் கலங்கிவிட்டார்கள்.

அவர்கள் அப்படி கலங்கியதற்கு காரணம் இருக்கிறது. கோயமுத்தூரில் உள்ள எங்கள் வீடு 5 கிரவுண்டு கொண்டது. ஊரில் இருந்த செல்வாக்குக்கு தொழில் துறையில் ஈடுபடலாம். உறவு முறையில் யாரைக் கேட்டாலும் தொழில் தொடங்க உதவுவார்கள். இப்படி செல்வமும் செல்வாக்குமாய் இருக்க வேண்டியவன் இப்படி எங்கோ ஆறு அடி ரூமுக்குள் அரைகுறையாக முடங்கிக் கிடக்கவேண்டுமா என்ற கவலை அவர்களுக்கு.

என் சித்தி இந்திராணி (அம்மாவின் தங்கை) சித்தப்பா துரைராஜ். ஊரில் சித்தி குடும்பமும் எங்களுடன்தான் இருந்தது. அம்மா மாதிரியே என் மேல் அன்பு காட்டி வளர்த்தவர் சித்தி. நான் சென்னையில் சரியான இருப்பிடம்கூட இல்லாமல் சிரமப்படுவதாக சித்தப்பாவுக்கு சொல்லப்பட்டதும், அவர் உடனே சென்னைக்கு வந்து விட்டார். “கோவைக்கு வா! உனக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்கிறேன்” என்று அழைத்தார். நான்தான் சித்தப்பாவிடம் பிடிவாதமாக, “நிச்சயம் சினிமாவில் எனக்கு வாய்ப்பு வரும். அதுவரை முயற்சி செய்கிறேன்” என்று சொல்லிவிட்டேன்.

ஓவியப்போட்டி

நாடகத்திலும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் எழுத்தாளர் மணியன் நடத்திய பத்திரிகையில் சிறுகதைக்கு முக ஓவியப்போட்டி அறிவித்தார்கள். ஓரளவு நல்ல முகவெட்டு கொண்டவர்களை மாடலாக ஏற்றுக்கொண்டு அந்த முகங்களை தொடர் கதைக்குள் கொண்டு வருவார்கள். இப்படி பத்திரிகை மூலம் பிரபலமாகும் முகம், நாளடைவில் சினிமா வாய்ப்புக்கும் உரியதாகி விடும்.

சரி, இதாவது நடக்கட்டும் என்று என் மாதிரியே நல்ல வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்த நண்பர் ராஜ்மதனும் நானும் அந்த `ஓவிய முகத் தேர்வுக்கு போனோம். (இந்த ராஜ்மதன் ரஜினிக்கும் மிகச்சிறந்த நண்பர்) ஏராளமான பேர் திரண்டு வந்திருந்த இந்த போட்டியில் நாங்கள் முதல் ரவுண்டிலேயே ஓரம் கட்டப்பட்டோம்.

வெறுத்துப்போயிற்று எனக்கு. ஒரு பத்திரிகையில் படம் வரையக்கூட உதவாத நம் முகத்தை வைத்து சினிமாவில் எப்படி நடிக்கப்போகிறோம் என்றுகூட தோன்றியது. என்றாலும் சினிமா முயற்சியில் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை. முயன்று பார்ப்போம். ஆனது ஆகட்டும் என்ற மனநிலையில் சினிமா வாய்ப்புக்கு முயன்று கொண்டிருந்தேன்.

தயாரிப்பு நிர்வாகி

திருப்பூர் மணி விவேகானந்தா பிக்சர்ஸ் பட நிறுவனம் தொடங்கி சிவகுமாரை கதாநாயகனாக்கி “கண்ணன் ஒரு கைக்குழந்தை” படம் எடுக்க இருந்தார். படத்தில் அவருக்கு ஜோடி சுமித்ரா. சுருளிராஜன் – மனோரமாவும் படத்தில் இருந்தார்கள்.

இந்த படத்துக்கு என்னை புரொடக்ஷன் வேலை பார்க்கச் சொன்னார், திருப்பூர் மணி. சினிமாவுக்கும் எனக்கும் அதுவரை இருந்த இடைவெளியை இந்த வேலை குறைக்கும் என்ற நம்பிக்கையில் வேலையை ஒப்புக்கொண்டேன்.

இந்த சமயத்தில் பிரபல கேமிரா மேனாக இருந்த என்.கே.விஸ்வநாதனிடம் கே.பாலு உதவியாளராகச் சேர்ந்தார். பாலு மூலம் எனக்கு என்.கே.விஸ்வநாதன் சாரின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகம், பிறகு நட்பாகியது. அவரிடம், “நீங்க ஒர்க் பண்ற படங்களில் ஏதாவது ரோல் இருந்தா சொல்லுங்க” என்று கேட்டுக்கொண்டேன். `சரி’ என்றவர், “எதற்கும் உங்களை பல கோணங்களில் படம் எடுத்து போட்டோ ஆல்பம் ரெடி செய்து கொள்ளுங்கள். டைரக்டர் யாராவது அழைக்கும்போது உங்களை வெளிப்படுத்த இந்த ஆல்பம் உதவும்” என்றார்.

பிரபல கேமிராமேன் இப்படி சொன்னால் போதாதா? உடனே “ஸ்டில்ஸ்” ரவியிடம் விஷயத்தை சொல்லி, படங்கள் எடுத்தேன். அவர் போட்டுக்கொடுத்த படங்களை பார்த்ததும் நொந்துபோனேன். புகைப்பட கோணத்தில் என் படம் படுகேவலமாக இருந்தது. இந்த படங்களை சினிமா கம்பெனியில் கொண்டு போய் காட்டினால் கிடைக்கிற வாய்ப்பும் கிடைக்காது என்பது தெளிவாக புரிந்தது. அதனால் அந்தப் படங்களை தூர எறிந்துவிட்டு, பட சான்ஸ் தேடுவதை தொடர்ந்தேன். ஒருவேளை என் உயரம், அதற்கான பர்சனாலிட்டியை பார்த்துகூட ஒரு வாய்ப்பு வரலாம். போட்டோவைக் கொடுத்து, அதை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்!

சட்டம் என் கையில்

டைரக்டர் டி.என்.பாலு அப்போது “சட்டம் என் கையில்” என்ற படத்தை இயக்கினார். கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம். அந்த படத்தில் ஒரு சின்ன ரோல் இருப்பதாக கேமராமேன் என்.கே.விஸ்வநாதன் சார் என்னை அழைத்துப் போனார்.

அப்போது ஏவி.எம். ஐந்தாவது புளோரில் “சட்டம் என் கையில்” படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கமல் – ஸ்ரீபிரியா நடிக்க ஒரு பாடல் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தார், டைரக்டர்.

பாடல் காட்சியை முடித்து விட்டு என்னை அழைத்தார், டி.என்.பாலு. அப்போதுதான் கமலஹாசனை முதன் முதலாக நேரில் பார்த்தேன். “இவ்வளவு அழகாய் இருக்கிறாரே. இவரெல்லாம் நடிக்கும்போது நாமும் ஊரில் இருந்து நடிக்க வந்திருக்கிறோமே!” என்று எனக்குத் தோன்றியது.

என்னைப் பார்த்த டைரக்டர், போட்டோ எடுத்துப் பார்க்கவில்லை (பார்த்திருந்தால் அவ்வளவுதான்) என்னிடம், “கார் ஓட்டத்தெரியுமா?” என்று கேட்டார். ஊரில் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்ததால் “தெரியும் சார்” என்றேன்.

அப்போதே மனசுக்குள் ஒரு பயம். “நடிக்கத் தெரியுமா?” என்று கேட்காமல், “கார் ஓட்டத் தெரியுமா?” என்று கேட்கிறாரே, என்ன அர்த்தம்? ஒருவேளை படக்கம்பெனிகளுக்கு கார் ஓட்டும் டிரைவராக தேர்வு செய்யப் போகிறாரோ என்னவோ என்று உள் மனதில் உதறல் ஆரம்பித்தது.

ஆனால் டைரக்டர் அடுத்த கேள்வியாக “பைட் (சண்டை) தெரியுமா?” என்று கேட்டு உடனடியாக என் டென்ஷனை குறைத்தார். உடனே நான் “நான் `கராத்தே’யில் பிளாக் பெல்ட் சார்” என்றேன்.

உண்மையில் புரூஸ்லி நடித்து அப்போது வெளிவந்திருந்த “எண்டர் தி டிராகன்” படத்தை பார்த்த பிறகு, எல்லாருக்கும் வருகிற `கராத்தே’ ஆசை எனக்கும் வந்தது. அதனால் ஒரு ஆறு மாத காலம் கராத்தே கற்றுக்கொண்டேன். ஆனால் `பெல்ட்’ எல்லாம் வாங்கவில்லை. அந்த வகையில் டைரக்டரிடம் சொன்னது மட்டும் பொய்.

“டயலாக் பேசுவியா?” டைரக்டரின் அடுத்த கேள்வி.

“பேசுவேன் சார்!”

“சின்னதாய் ஒரு வில்லன் வேஷம் இருக்கு. நாளைக்கு காலையில் வந்துரு” என்றார், டைரக்டர்.

நாளை முதல் சினிமாவில் நடிகனாகப் போகும் சந்தோஷத்தில் அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

—————————————————————————————————–

திரைப்பட வரலாறு 812
கமல் நடித்த “சட்டம் என் கையில்”:
வில்லனாக சத்யராஜ் அறிமுகம்

டி.என்.பாலு டைரக்ட் செய்த “சட்டம் என் கையில்” படத்தில் கமலஹாசனுக்கு வில்லன் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்தார்.

முதல் படத்தில் அறிமுகமானது குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“டைரக்டர் டி.என்.பாலு என்னைப் பார்த்த பார்வையில் நான் வில்லனாக தெரிந்திருக்கிறேன். மறுநாள் நான் அவரை சந்தித்தபோது, ”விக்கி என்றொரு வில்லன் கேரக்டர் இருக்கிறது. சின்ன கேரக்டர்தான். பண்ணுங்கள்” என்றார்.

நானும் நடிக்கும் நேரத்துக்காக காத்திருந்தேன். முதல் நாள் எனக்கு டயலாக் எதுவும் இல்லை. மலையில் இருந்து ஓடிவருகிற மாதிரி எடுத்தார்கள்.

முதல் வசனம்

இந்தப்படத்தில் டைரக்டர் எனக்கு கொடுத்த முதல் வசனம் “எனக்கு இப்ப நேரம் நல்லா இருக்கு.”

வில்லனுக்குப் போய் இப்படியொரு டயலாக்கா என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். கதைப்படி, நான் செய்கிற கொலைக்கு கதாநாயகன் மாட்டிக் கொள்வார். அதனால், “இப்ப எனக்கு நேரம் நல்லா இருக்கு. அதனால்தான் நான் செய்த கொலைக்கு அவன் மாட்டிக்கிட்டான்” என்ற வசனத்தை தந்து பேசச் சொன்னார்கள்.

ஏற்கனவே டைரக்டர் டி.என்.பாலு என்னிடம், “பைட் தெரியுமா?” என்று கேட்டபோது, “தெரியும்” என்று சொல்லிவிட்டேன். நடிக்க வந்த மூன்றாவது நாளே சென்னை வளசரவாக்கத்தில் இருந்த `ஜெய்’ தோட்டத்தில் சண்டைக்காட்சி எடுப்பதாகச் சொன்னார்கள். அப்போதே எனக்கு உள்ளுக்குள் உதறல் ஆரம்பித்து விட்டது. நமக்குத்தான் `சினிமா பைட்’ தெரியாதே!

அதனால், ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா சங்கரை சந்தித்து உண்மையை சொல்லி விட்டேன். அவரும் பெருந்தன்மையுடன் தனது அசிஸ்டெண்டை என்னுடன் மெரினா பீச்சுக்கு அனுப்பி வைத்தார். அந்த உதவியாளர் எனக்கு பீச் மணலில் `சினிமா பைட்’ கற்றுக் கொடுத்தார். அதாவது கதாநாயகனிடம் அடிவாங்குவது போல் நடிக்கும்போது அடிவாங்காமல் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார்! அப்போதுதான், ஸ்டண்ட் காட்சியில் `டைமிங்’ எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

கமலுடன் சண்டைக்காட்சி

மறுநாள் படப்பிடிப்பில் கமல் சாருடன் சண்டைக்காட்சி. முந்தின நாள் பெற்ற பயிற்சி உதவியாக இருந்தது.

பொதுவாக, சண்டைக் காட்சியின்போது `வாட்ச்’ போட்டு நடிக்க மாட்டார்களாம். அது எனக்குத் தெரியாது. சண்டைக்காட்சி முடிந்த நேரத்தில், நான் போட்டிருந்த 600 ரூபாய் வாட்ச் உடைந்து போய்விட்டது! கமல் சார் இதைப் பார்த்ததும் `அடடா! உங்களிடம் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். கம்பெனி வாட்சை போட்டுக்கொண்டு சண்டைக்காட்சியில் நடித்திருக்கலாமே” என்றார்.

இப்படி 600 ரூபாய் வாட்சை உடைத்துவிட்டு, நடிப்புக்கு 500 ரூபாய் `செக்’ வாங்கினேன். 1975 வாக்கில் 500 ரூபாய் என்பது பெரிய தொகை. அந்த செக்குக்காக பாங்கியில் கணக்கு ஆரம்பித்தேன். முதல் சம்பளத்தில் அம்மா, சின்னம்மாவுடன் என் 5 தங்கைகளான கல்பனா, ரூபா, நந்தினி, அகிலா, அபராஜிதா ஆகியோருக்கும் புடவைகள் எடுத்துக் கொடுத்தேன்.

100-வது நாள்

முதல் படமே நூறாவது நாள் கண்டதில் எனக்கும் மகிழ்ச்சி. இந்த விழாவை சென்னை நிïஉட்லண்ட்ஸ் ஓட்டலில் கொண்டாடினார்கள். கலைஞர் தலைமை தாங்கி விருதுகள் வழங்கினார். எனக்கும் கேடயம் கிடைத்தது.

இதற்கிடையே, தயாரிப்புத் துறையில் நான் பணியாற்றிய “கண்ணன் ஒரு கைக்குழந்தை” படம் ரிலீஸ் ஆயிற்று. இந்தப் படத்தில் சிறு வேடத்தில் நடித்தும் இருந்தேன். அதனால் டைட்டில் கார்டில் நடிகர்கள் பட்டியலில் `நடிகர் சத்யராஜ்’ என்று வரும். டெக்னிஷியன் பட்டியலில் அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ரெங்கராஜ் பி.எஸ்.சி. என்று வரும்.

பெயர் மாற்றம்

பெற்றோர் எனக்கு வைத்த பெயர் ரெங்கராஜ்தான். சினிமாவில் அறிமுகமாகும் போது, எனக்கு நானாக வைத்துக்கொண்ட பெயர்தான் சத்யராஜ். அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் மகன் பெயர் சத்யன். (இப்போது சத்யனும் நடிகராகி விட்டார்) அந்த `சத்ய’னில் இருந்து `சத்ய’வையும் ரெங்கராஜில் இருந்து `ராஜை’யும் எடுத்துக்கொண்டு சத்யராஜ் ஆகிவிட்டேன்!

நடிகனாக சத்யராஜ் என்றிருந்தாலும், அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ஒரிஜினல் பெயரை கல்வித் தகுதியுடன் போட விரும்பினேன்.

இப்படி ஒரு படத்தில் 2 பெயரில் தனித்தனி பிரிவில் பெயர் வந்தது அனேகமாக எனக்கு மட்டும்தான் இருக்கும்.

“சட்டம் என் கையில்” படம் நன்றாக ஓடியும், தொடர்ந்து எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. நடிகர் சிவகுமார் சிபாரிசில் “முதல் இரவு”, “ஏணிப்படிகள்” போன்ற படங்கள் கிடைத்தன. டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் தனது “காதலித்துப்பார்” என்ற படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

“முதல் இரவு” படத்தை தயாரித்த கோவை செழியன் எனக்கு தூரத்து உறவினர். ஆனாலும் நடிகர் சிவகுமார் அண்ணன்தான் என்னை படக்கம்பெனிக்கு அழைத்துச் சென்று வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இதெல்லாம், திருப்பூர் மணி ஆபீசில் தங்கிக்கொண்டு, தயாரிப்பு வேலையையும் பார்த்துக் கொண்டிருந்தபோது நடந்தது.

டைரக்டர் பி.மாதவன் அப்போது “தங்கப்பதக்கம்”, “வியட்நாம் வீடு” என்று சிவாஜி படங்களை இயக்கி, பெரிய பெயரோடு இருந்தார். அவர் சிவகுமார் – ஷோபா நடித்த “ஏணிப்படிகள்” படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் நடிகர் சிவகுமார் அண்ணன் உபயத்தில் ஷோபாவின் அண்ணன் வேடம் எனக்கு கிடைத்தது. அதுவரை நான் நடித்த படங்களில், என்னை `பளிச்’சென்று வெளிப்படுத்திய படம் இதுதான்.

என்றாலும், இந்தப்படத்தில் நடித்த போது இன்னொரு காரியமும் செய்தேன். படத்தின் வில்லன் ஜெய்கணேஷின் “பைக்” சேஸிங் காட்சியில், அவருக்கு நான் `டூப்’ ஆக நடித்தேன். ஏற்கனவே கார் ஓட்டிய அனுபவம் எனக்கு இருந்ததால், இந்த `பைக்’ சேஸிங் சிறப்பாக அமைந்தது.

போராட்டம்

நான் பல போராட்டங்களைக் கடந்துதான் நடிகனானேன். வந்த பிறகும் கிடைத்ததோ வில்லத்தனமான வேடங்களே. அதிலும் `கொஞ்ச நேர’ வில்லன்தான் அதிகம்.

`இப்படியான கேரக்டர்களில் நடிக்கத்தான் சினிமா சினிமா என்று அலைந்தாயா!’ என்று என்னிடம் உறவினர்கள் வருத்தத்துடன் கூறினார்கள். அவர்களின் `அப்செட்’டுக்கு மத்தியிலும், தொடர்ந்து சினிமாவில் நான் நீடிக்கக் காரணம், அண்ணன் மாதம்பட்டி சிவகுமார்தான். என் வளர்ச்சியில் என் அளவுக்கு அவருக்கும் நம்பிக்கை இருந்தது.

திருமண ஏற்பாடு

சினிமாவில் சின்னதாய் ஒரு வளர்ச்சி நிலையில் நான் இருந்த சமயத்தில், வீட்டில் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். பெண் பார்க்க அவசியமில்லை. மாதம்பட்டி சிவகுமார் அண்ணனின் அக்கா மகள்தான் எனக்கு மணப்பெண் என்று, ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தார்கள்.

பெண்ணும் பிறந்தது முதலே எனக்குத் தெரிந்தவர். குழந்தை பிறந்து தொட்டிலில் போட்டிருந்தபோது, நான் போய் எட்டிப் பார்த்தேன். அப்போது பெண்ணின் அப்பா (என் மாமா சண்முகசுந்தரம்) என்னிடம், “மாப்பிள்ளை இப்போதே பெண்ணைப் பார்க்க வந்துவிட்டார்” என்று கிண்டல் செய்திருக்கிறார்.

இப்படி உறவு முறையில் பெண் இருந்தாலும், சினிமாவில் சொந்தக் காலில் நின்ற பிறகுதான் திருமணம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

திரைப்பட வரலாறு 814
மொட்டைத் தலையுடன் சத்யராஜ் நடித்த
“நூறாவது நாள்” மகத்தான வெற்றி
ஒரே ஆண்டில் 27 படங்களில் நடித்தார்

டைரக்டர் மணிவண்ணன் இயக்கிய “நூறாவது நாள்” படத்தில் மொட்டைத் தலை வில்லனாக நடித்து பிரபலமானார் சத்யராஜ். இதைத் தொடர்ந்து, அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. ஒரே ஆண்டில் 27 படங்களில் நடித்தார்.

தனது கலைப்பயணத்தின் வளர்ச்சி குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக இருந்த நேரம். அப்படிக் கிடைத்தாலும், திறமையை வெளிப்படுத்த முடியாத சின்ன ரோல்கள்தான் வந்து கொண்டிருந்தன.

சுந்தர்ராஜன் அறிமுகம்

இப்படி உள்ளும் புறமுமாய் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜனின் அறிமுகம் கிடைத்தது.

ஆர்.சுந்தர்ராஜன் அப்போது “பயணங்கள் முடிவதில்லை” என்ற பெரிய வெற்றிப்படம் கொடுத்திருந்தார். என்னை ஒரு நடிகனாக மட்டுமின்றி ஒரே ஊர்க்காரன் (கோவை) என்ற அளவிலும் என்னை அவர் தெரிந்து வைத்திருந்தார். ஒருமுறை கோவைக்கு ரெயிலில் போனபோது, மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம், அடுத்து எடுக்கப்போகும் படத்தின் கதையைக் கூறினார். நான் அந்தக் கதை தொடர்பாக எனது கருத்துக்களைக் கூறினேன். அப்போது அவர், `உங்களுக்கும் நல்ல கதை ஞானம் இருக்கிறதே’ என்று சொல்லி வியந்தார். அதோடு, `நீங்கள் ஏன் கதை விவாதத்தில் கலந்து கொள்ளக்கூடாது’ என்றும் கேட்டார்.

கதை விவாதத்தில் கலந்து கொண்டால், அதற்கென்று தனி சன்மானம் எதுவும் கிடையாது. என்றாலும் டைரக்டர் சொன்னது என்னை உற்சாகப்படுத்தி விட்டது. என்னாலும் கதையை உருவாக்க முடியும் என்று அவர் கருதியதால், மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

சினிமா கதை

இந்த சந்தோஷ வேகத்தில், சினிமாவுக்கான ஒரு கதையை நானே தயார் செய்தேன். கிரைம் – ஆக்ஷன் கதை. இதே காலகட்டத்தில் எனக்கு நண்பராகி இருந்த டைரக்டர் மணிவண்ணனிடம் இந்தக் கதையை சொன்னேன்.

அவர் என்னிடம் `நன்றாகத்தான் இருக்கிறது. இதை பிறகு திரைக்கதையாக தயார் செய்யலாம். என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அதை கேளுங்கள்’ என்று கூறி, ஒரு கதையை சொன்னார்.

ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம் ரெயிலில் சொன்ன கதை மோகன், நளினி, விஜயகாந்த் நடிக்க “சரணாலயம்” என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருந்தது. மணிவண்ணன் சொன்ன கதையை படமாக்க எஸ்.என்.திருமால் முன்வந்தார்.

இப்போது, எனக்குள் நடிப்பைவிட டைரக்ஷன் ஆர்வம் அதிகமாகி விட்டது. ஒரு கதை தயார் செய்யும் அளவுக்கு வந்துவிட்டேனே! இந்தக் கதையை டைரக்ட் செய்து, டைரக்ஷன் பக்கம் போய்விடலாம் என்று நினைத்தேன்.

நூறாவது நாள்

நண்பர் மணிவண்ணன் சொன்ன கிரைம் சப்ஜெக்ட்தான் “நூறாவது நாள்” என்ற பெயரில் படமானது. இந்தப்படத்தின் கதை விவாதத்துக்கு மணிவண்ணன் என்னையும் அழைத்திருந்தார். படத்தின் கிளைமாக்சில் ஒரு மொட்டை வில்லன் வருவதாக காட்சி வைத்திருந்தார். இந்த கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்ற பேச்சு வந்தபோது, அந்த வேடத்தில் நான் நடிப்பது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

நான்தான் டைரக்ஷன் கனவில் இருக்கிறேனே! அதனால் கொஞ்சம் தயங்கவே செய்தேன். விஜயகாந்த் “சரணாலயம்” படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரிடமும் நான் உருவாக்கிய கதையை சொன்னேன். அவருக்கும் கதை பிடித்துப்போய், அதைப் படமாக்கலாம் என்று சொல்லி விட்டார்.

இந்த நேரத்தில்தான் நூறாவது நாள் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தது.

நான் தயங்கினாலும் மணிவண்ணன் விடவில்லை. எனக்கு மேக்கப் போட்டுப் பார்த்தார். “ஆலிவுட் நடிகர் மாதிரி இருக்கீங்க, தலைவா!” என்றார்.

இதனால் நம்பிக்கை வந்தது, சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஒரு சலூனில் மொட்டை அடித்துக் கொண்டேன். மொட்டை கெட்டப்பில் என் கேரக்டர் படமாக்கப்பட்டபோதே, அந்த கேரக்டர் பேசப்படும் என்பது தெரிந்தது.

படம் வெளியானது. பெரிய வெற்றி. என் மொட்டை கேரக்டரும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்தப்படம் வெளிவந்த சமயத்தில், ஜெயப்பிரகாஷ் என்பவர் 7 கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர், “நூறாவது நாள் படத்தைப் பார்த்த பிறகே இப்படி கொலை செய்யும் எண்ணம் வந்தது” என்று சொல்லப்போக, படத்துக்கு இன்னும் `பப்ளிசிட்டி’ ஆகிவிட்டது! இந்தப்படம் வெளியான சமயத்தில் குழந்தைகள் என்னை நெருங்கவே பயப்பட்டார்கள்!

24 மணி நேரம்

இந்த வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் மணிவண்ணன் சூட்டோடு சூடாக அதே நிறுவனத்துக்கு, “24 மணி நேரம்” என்று ஒரு படம் பண்ணினார். இதிலும் மோகன் – நளினிதான் ஜோடி. ஆனால் இதன் கதையமைப்பு வில்லனுக்காகவே உருவான கதை மாதிரி அமைந்திருந்தது.

இந்தக் கதையில் வரும் வில்லன் கேரக்டரில் முதலில் நான் நடிப்பதாகவே இல்லை. நான் மணிவண்ணன் சாரிடம், “படத்தின் ஜீவனே இந்த வில்லன் கேரக்டர்தான். `வீணை’ பாலச்சந்தர் நடித்தால் நல்லா இருக்கும்” என்றேன்.

மணி சார் என்னைப் பார்த்தார். அவர் என்ன நினைக்கிறார் என்பது புரியாமல், “வீணை பாலச்சந்தர் இல்லாவிட்டால் நம்ம நம்பியார்சாமி நடிக்கட்டும்” என்றேன்.

அந்த கேரக்டரின் முக்கியத்துவம் தெரிந்து நான் இப்படி சொல்லிக் கொண்டிருக்க, அவரோ, `நீங்களே நடிச்சிருங்க தலைவா’ என்றார்.

அந்த கேரக்டரில் நான் நடித்தால் சரியாக இருக்கும் என்று அவர் எண்ணினாலும், அவர் என் மீதான அக்கறையில்தான் அப்படிச் சொல்கிறார் என்று நான் நினைத்தேன். அதனால் அவரது விருப்பத்தை மறுக்கும்விதமாக, `தயாரிப்பாளர் திருமால் சார் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். அந்த அளவுக்கு இது ஹீரோவுக்கு இணையான கேரக்டர்’என்றேன்.

அப்போதும் டைரக்டர் மணிவண்ணன் என்னை விடவில்லை. நேராக தயாரிப்பாளரை போய்ப் பார்த்தவர், `படத்தில் வரும் வில்லன் கேரக்டரில் சத்யராஜை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்’ என்று சொன்னார். தயாரிப்பாளரும், `தாராளமாக நடிக்கட்டும்’ என்று பச்சைக்கொடி காட்டினார்.

வில்லனுக்கு புது இலக்கணம் வகுத்த அந்த கேரக்டர்தான் என்னை ரசிகர்களிடம் முழுமையாக கொண்டு சேர்த்தது. இந்தப் படத்தில் நான் அடிக்கடி பேசும், “என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே” என்ற வசனம், பட்டித்தொட்டிவரை கூட பிரபலம் ஆனது.

ஒரே ஆண்டில் 27 படங்கள்

இந்த படத்துக்குப் பிறகு நான் பிஸி நடிகனாகி விட்டேன். காலை 7 மணி தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை தினமும் 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கு பிஸியாகி விட்டேன். 1985-ம் ஆண்டில் மட்டும், நான் நடித்து 27 படங்கள் ரிலீஸ் ஆயின.

இப்படி பிஸியாக இருந்தாலும் நான் உருவாக்கி வைத்திருந்த கதையை `அம்போ’ என்று விட்டுவிட முடியவில்லை. டைரக்டர் மணிவண்ணன் தெலுங்கில் படம் இயக்கப்போன நேரத்தில் என் கதையை இயக்கினார். `தர்ஜா தொங்கா’ என்ற பெயரில் (தமிழில் `கவுரவத் திருடன்’) உருவான அந்தப் படத்தில் சுமன் – விஜயசாந்தி நடித்தார்கள். இந்தப் படத்தில் நான் கதாசிரியர் மட்டுமே. படம் வெளியாகி 6 சென்டர்களில் நூறு நாட்களை தாண்டி ஓடியது.

இந்த வகையில், ஒரு சினிமா கதாசிரியராகவும் ஜெயித்த சந்தோஷம் எனக்கு.

இந்தப்படத்தின் கதைக்காக டைரக்டர் மணிவண்ணன் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தார். தமிழில் `மர்ம மனிதன்’ என்ற பெயரில் `டப்’ செய்யப்பட்டு வெளியானது.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

திரைப்பட வரலாறு 819
பாலாஜி தயாரித்த “காவல்”
சிறிய வேடத்தில் விரும்பி நடித்தார், சத்யராஜ்

சத்யராஜ் பிசியாக இருந்த நேரத்திலும், பாலாஜி தயாரித்த ஒரு படத்தில், சிறிய வேடத்தை கேட்டு வாங்கி நடித்தார். படத்தில் ஐந்து நிமிடமே வந்து போகிற வேடம் அது.

வெற்றிகரமான ஹீரோ என்ற நிலைக்கு வந்து விட்ட சத்யராஜ், நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜியின் படங்களிலும் நடித்தார். பாலாஜி தயாரித்த “மங்கம்மா சபதம்”, “அண்ணி” ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர், “விடுதலை” படத்தில் மட்டும் வில்லனாக நடிக்க மறுத்துவிட்டார்.

அதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-

“ஹீரோவாக வளர்ந்து விட்டேன். என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள் வந்துவிட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் இனி `வில்லன்’ வேடத்தையும் செய்தால், என்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் வியாபார ரீதியாக பாதிக்கப்படலாம் என்பதை உணர்ந்தேன். அதனால்தான் பாலாஜி சாரின் மங்கம்மா சபதம், அண்ணி படங்களில் வில்லனாக நடித்த நான், அடுத்து அவர் தயாரித்த `விடுதலை’ படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தபோது, அந்த வாய்ப்பை தவிர்த்து விட்டேன்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு

இத்தனைக்கும் அந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை லண்டனில்தான் எடுத்தார்கள். நான் அதுவரை லண்டனை பார்த்ததில்லை. “எந்த வேடமாக இருந்தால் என்ன! லண்டன் பயணத்தை அனுபவித்து விடுவோம்” என்று எண்ணியிருந்தால் ஒருவேளை அந்த வில்லன் வேடத்தை ஒப்புக் கொண்டிருந்திருப்பேன். ஆனால் நான் பாலாஜி சாரிடம், “நான் ஹீரோவாக நடித்த படங்கள் வரத் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில் வில்லனாக நடித்தால் சரியாக இருக்காது” என்று சொன்னேன்.

பாலாஜி சார் என்னை கூர்மையாகப் பார்த்தார். “இனி வில்லனாக நடிப்பதில்லை என்பதில் அவ்வளவு நம்பிக்கை வந்துவிட்டதா?” என்று கேட்டார்.

“ஆமாம் சார்! அதில் நான் தெளிவாக இருக்கிறேன்” என்றேன்.

“உங்கள் தன்னம்பிக்கை வெற்றி பெறட்டும்” என்று வாழ்த்தியவர், என் தன்னம்பிக்கைக்கு அவரும் கைகொடுக்கும் விதமாய் எனக்குத் தந்த படம்தான் “மக்கள் என் பக்கம்.” மலையாளத்தில் பாலாஜி சாரின் மருமகன் மோகன்லால் நடித்த “ராஜா வின்டெ மகன்” படத்தைத்தான் இந்தப் பெயரில் தமிழில் `ரீமேக்’ செய்தார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அந்தப்படம், தமிழிலும் பெரிய வெற்றி பெற்றது.

பாலாஜி சார், மற்ற எந்த நிறுவனத்திலும் செய்திராத ஒரு ஏற்பாட்டை தனது நிறுவனத்தில் கலைஞர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் செய்தார். நடிகர் – நடிகைகள், டைரக்டர் ஆகியோர், படப்பிடிப்பின்போது உட்காரும் நாற்காலியில், அவர்களின் பெயரை குறிப்பிட ஏற்பாடுசெய்தார். இதனால், ஒருவர் நாற்காலியில் பிறர் உட்கார்ந்து கொள்ள முடியாது.

கூடுதல் சம்பளம்

“மங்கம்மா சபதம்” படத்தில் நடித்தபோது என் வில்லன் நடிப்புக்கு பேசிய சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். ஆனால் எனக்கு வந்து சேர்ந்ததோ 40 ஆயிரம் ரூபாய்! கணக்கில் ஏதோ தவறு நடந்து விட்டது என்று நினைத்த நான், பாலாஜி சாரை பார்த்து மீதி 15 ஆயிரத்தை கொடுக்கப்போனேன். அவரோ, “நன்றாக நடித்திருந்தீர்கள். அதனால், பேசினதைவிட அதிகமாகக் கொடுக்கத் தோன்றியது. கொடுத்தேன்” என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டார்.

படத்தின் தரத்துக்காக செலவை பொருட்படுத்தாதவர் இவர். “மக்கள் என்பக்கம்” படத்தின் ஒரு காட்சியில் ஆட்டோக்கள் தேவை என்று டைரக்டர் கேட்டபோது, 100 ஆட்டோக்களை உடனடியாக ஏற்பாடு செய்து விட்டார். நான்கூட அவரிடம், “சார்! 20 ஆட்டோ போதுமே” என்றேன். “கதைக்கு தேவையான பிரமாண்டத்துக்கு 100 ஆட்டோக்கள் இருக்கட்டுமே” என்று சொல்லிவிட்டார். 28 நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிந்து இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

பாலாஜி சாரின் “திராவிடன்” படத்திலும் ஹீரோவாக நடித்தேன்.

ஐந்து நிமிட வேடம்

நடிக்க வந்த பிறகு, இந்தக் கேரக்டரில் நடிக்கிறேன் என்று நானாக கேட்டு வாங்கி நடித்தது “காவல்” படம் மட்டும்தான். பாலாஜி சாரின் தயாரிப்பான இந்தப்படம், ஒரு இந்திப்படத்தின் ரீமேக். அந்த இந்திப்படத்தில் ஹீரோவாக ஓம்புரியும், ஐந்து நிமிடமே வந்து போகிற போலீஸ்காரர் கேரக்டரில் நசுருதீன்ஷாவும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை நான் பார்த்தபோது, நசுருதீன்ஷா நடித்த அந்த கேரக்டர் என்னை மிகவும் கவர்ந்தது. அதே படம் தமிழில் ரீமேக் ஆகிறது என்று தெரிந்ததும், பாலாஜி சாரை நானே போய் சந்தித்தேன். “சார்! எனக்கு சம்பளம் வேண்டாம். இந்தியில் நசுருதீன் ஷா நடித்த அந்த கவுரவ கேரக்டரை தமிழில் எனக்கு கொடுத்து விடுங்கள்” என்றேன். அவரும், “தாராளமாய் நடியுங்கள்” என்றார்.

படத்தில் என் போர்ஷனை இரண்டே நாளில் எடுத்து முடித்தார்கள். நான் பாலாஜி சாரை சந்தித்து, என் `நடிப்பு விருப்பம்’ நிறைவேற்றியதற்காக நன்றி சொல்லி புறப்பட்டபோது, தடுத்து நிறுத்தி, என் கையில் 3 பவுன்களைத் திணித்தார். நான், “சார்! எனக்கு சம்பளமே வேண்டாம்” என்று கூற, அவரோ, “இது என் அன்பளிப்பு. சம்பளம் அல்ல. நீங்கள் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்” என்று கூறிவிட்டார். எனது 2 நாள் நடிப்புக்கு கிடைத்த 3 பவுனை கணக்கில் கொண்டால் அப்போது நான் படங்களுக்கு வாங்கிய சம்பள அடிப்படையில் அதிக சம்பளம் வாங்கியது இந்த படத்துக்குத்தான்!

டைரக்டர் பாசில்

தமிழ் சினிமாவில் அப்போது மலையாளத் திரையுலகில் இருந்து வந்து புரட்சி ஏற்படுத்தியவர் டைரக்டர் பாசில். தமிழில், ஜெய்சங்கர், பத்மினி, நதியா, எஸ்.வி.சேகர் நடித்த “பூவே பூச்சூடவா” படம் மூலம் ரொம்பவே பாப்புலராகி விட்டார். வித்தியாசமான கதைப் பின்னணிக்காக அந்தப்படம் பேசப்பட்டதோடு வெற்றியும் பெற்றது.

நான் அப்போது படங்களில் இரவு, பகலாக ஓய்வின்றி நடித்த நேரம். தனது அடுத்த படத்தில் நடிக்கும்படி பாசில் என்னிடம் கேட்டுக்கொண்டார். பாம்குரோவ் ஓட்டலில், ஒரு இரவில் கதையைச் சொன்னார். ஓய்வே இல்லாததால், களைப்பு அடைந்திருந்த நான், கதையுடன் ஒன்ற முடியவில்லை. கதை சொல்லி முடித்த பாசில், “கதை எப்படி இருக்கிறது” என்று கேட்டபோது கூட, உடனே நான் பதில் சொல்லவில்லை. பாசில் புறப்பட்டுப்போனதும் எனது மானேஜர் ராமநாதனிடம் “அவர் கதை சொன்னார். நான் களைப்பாக இருந்ததால், கதையுடன் என்னால் ஒன்ற முடியவில்லை. இந்தக் கதையில் நடிக்கவில்லை என்று கூறிவிடலாமா?” என்று கேட்டேன்.

அவரோ, “சார்! பாசில் மலையாளத்தில் பெரிய டைரக்டர். தமிழிலும் அவர் பெரிய அளவில் வருவார். நிச்சயம் அவர் வித்தியாசமான கதைக்குத்தான் உங்களைத் தேடி வந்திருக்கிறார். பேசாமல் `சரி’ என்று சொல்லிவிடுங்கள்” என்றார்.

அப்படி நான் ஒப்புக்கொண்ட படம்தான் “பூவிழி வாசலிலே.”

கேரள உணவு

இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ஆலப்புழையில் நடந்தது. எந்த மாநிலத்தில் படப்பிடிப்பு நடந்தாலும் எனக்கு சாப்பாட்டுப் பிரச்சினை கிடையாது. அந்தந்த ஊரில் உள்ள உணவுக்கு என்னை பழக்கப்படுத்திக் கொள்வேன். ஆனால் ஆலப்புழையில் மட்டும் எனக்கு கேரள உணவுக்குப் பதிலாக தமிழ்நாட்டு உணவு வகைகளையே தந்தார்கள். இரண்டொரு நாள் பொறுத்துப் பார்த்த பிறகு நானே தயாரிப்பாளரிடம் “உங்க ஊர் உணவையே எனக்கு கொடுங்கள்” என்று கேட்டு வாங்கி சாப்பிட்டேன். பிரவுன் கலர் அரிசி சாப்பாடு, புட்டு, மீன் குழம்பு, நேந்திரம் பழம் என்று படப்பிடிப்பு நடந்த நாட்களில் கேரள ஸ்பெஷல் உணவுகளுடனேயே ஐக்கியமாகிவிட்டேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை பார்க்க மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் வருவார்கள். செட்டே கலகலப்பாக இருக்கும். இந்தப் படத்தில் சிறுவனாக முக்கிய கேரக்டரில் நடித்த சுஜிதா, பெண் குழந்தை என்று முதலில் எனக்குத் தெரியாது. படப்பிடிப்பு தொடங்கி 10 நாட்களுக்குப் பிறகே தெரியும். குழந்தை என்றாலும் சுஜிதா நடிப்பில் மிரட்டியிருந்தாள். படம் “சூப்பர்ஹிட்” ஆனது.

சமீபத்தில் ஒரு டப்பிங் தியேட்டரில் டப்பிங் பேசப்போனபோது ஒரு அம்மா என்னிடம் ஒரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தினார். “சார்! இது என் பெண் சுஜிதா. நீங்கள் நடித்த “பூவிழி வாசலிலே” படத்தில் சிறுவனாக நடித்தது இவள்தான்” என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. குட்டிப்பெண் வளர்ந்து பெரியவளாக நிற்கும்போதுதான், நமக்கும் வயதாகியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது!

“பூவிழி வாசலிலே” படத்தில் நடித்த பிறகு, மறுபடியும் பாசில் டைரக்ஷனில் “பொம்முகுட்டி அம்மாவுக்கு” படத்திலும் நடித்தேன். இந்தப் படத்தில்தான் சுஹாசினி எனக்கு முதன் முதலாக ஜோடியானார். ஒரு சாதாரண குடும்பத் தலைவனாக என்னை நடிக்க வைத்து இந்தப் படத்தையும் வெற்றி பெறச்செய்தார், பாசில்.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(821)
சத்யராஜ் சிவாஜியுடன் இணைந்து நடித்த “ஜல்லிக்கட்டு”

சிவாஜிகணேசன் நடித்த “ஜல்லிக்கட்டு” படத்தில் இன்னொரு ஹீரோவாக சத்யராஜ் நடித்தார். இந்தப்படமும் வெற்றி பெற்றது.

சிவாஜியுடன் “ஜல்லிக்கட்டு” படத்தில் நடித்த சத்யராஜ×க்கு, படத்தில் முக்கியமான கேரக்டர். நீதிபதி ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை ஒரு அதிரடி இளைஞன் மூலம் சரி செய்து கொள்ளும் கதை. இதில் பாதிக்கப்பட்ட நீதிபதியாக சிவாஜியும், அவருக்கு உதவும் இளைஞராக சத்யராஜ×ம் நடித்தார்கள். வித்தியாசமான கதைக்கருவைக் கொண்ட இந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆர்.

இந்தப் படத்தின் வெற்றி விழாவில், அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களை வாழ்த்தினார்.

எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கடைசி சினிமா விழா இதுதான்.

சிவாஜியுடன் நடித்த “ஜல்லிக்கட்டு” அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“ஜல்லிக்கட்டு படத்தை நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். சித்ரா லட்சுமணன் தயாரித்தார்.

கதையைக் கேட்கும்போதே இது நன்றாக ஓடும் என்று தோன்றியது. சில கதைகளை கேட்டதுமே, அது வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியும். ஜல்லிக்கட்டு அப்படியொரு கதை.

தலைவா…!

அப்போதெல்லாம் நானும் மணிவண்ணனும் செட்டிலே ஒருவரை ஒருவர் `தலைவா!’ என்று கூப்பிட்டுக் கொள்வோம். இந்த `தலைவா’ பழக்கம் செட்டில் இருந்த மற்ற டெக்னீஷியன்களையும் தொற்றிக் கொண்டது.

இது எதில் போய் முடிந்தது தெரியுமா? செட்டில் சிவாஜி சாரிடம் போன டான்ஸ் மாஸ்டர் பாபு அவரிடம், “தலைவா! ஷாட் ரெடி” என்று சொல்லப்போக, பதிலுக்கு சிவாஜி சார் அவரை கேலி செய்யும் அளவுக்குப் போய்விட்டது. “ஏண்டா! உங்க `தலைவா’ என் வரைக்கும் வந்தாச்சா?” என்று கேட்க, மாஸ்டர் அவசரமாய் `எஸ்கேப்’ ஆகியிருக்கிறார்.

நானும் பிரபுவும் `தலைவரே’ என்று அழைத்துக் கொள்வதும் சிவாஜிசாருக்கு தெரிந்திருக்கிறது. இப்போது ëஅவரே செட்டில் “தலைவா” என்று அழைக்கப்பட்டு விட்டதால், அன்று படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனவர், பிரபு வரும் வரை காத்திருந்திருக்கிறார். பிரபு வீட்டுக்குப் போனதும் “வாங்க தலைவரே!” என்று அழைத்து அவரை வெலவெலக்க வைத்திருக்கிறார்.

மறுநாள் இதுபற்றி பிரபு என்னிடம் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு.

நேரத்தை மதிப்பவர்

நேரத்துக்கு மதிப்பு கொடுப்பதில் சிவாஜி சாருக்கு நிகர் அவரேதான். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 7 மணிக்கு செட்டில் இருப்பேன். ஆனால் அதற்கு முன்பே சிவாஜி சார் செட்டில் இருப்பார்.

ஒருநாளாவது அவரை முந்திவிடவேண்டும் என்று இன்னும் சீக்கிரம் வரத்தொடங்கினேன். அப்போதும் சிவாஜி சார் எனக்கு முந்தி வந்திருந்தார். நடிப்பில் மட்டுமின்றி, `பங்ச்சுவாலிட்டி’யிலும் சிவாஜி சாருக்கு இணையாக யாருமில்லை என்பதை நானும் இந்த நாட்களில் கண்கூடாக உணர்ந்தேன்.

“ஜல்லிக்கட்டு” படப்பிடிப்புக்காக பெங்களூரில் இருந்து மங்களூருக்கு விமானத்தில் போனோம். நான், மணிவண்ணன், கேமராமேன் சபாபதி, சித்ரா லட்சுமணன் எல்லோரும் ஒரே ரூமில் தங்கினோம். சிவாஜி சார் பக்கத்து ரூமில் தங்கினார்.

படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். காலை 6 மணிக்கு விமானம் ஏறவேண்டும். சிவாஜி சார் அதிகாலை 4 மணிக்கு விழித்தவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார். நாங்கள் முந்தின நாள் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கியிருக்கிறோம். அதிகாலையில் எங்களை வந்து பார்த்தவர், நாங்கள் படுத்திருந்த இடத்துக்கு அருகில் சிக்கன் எலும்புகள் கிடந்ததை பார்த்திருக்கிறார். அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் போனவர், நாங்கள் புறப்பட்டு தயாராகி வந்தபோது பிடித்துக்கொண்டார். “ஏண்டா! காலையிலேயே எழுப்பலாம்னு வந்தால் செத்துப்போன கோழியோட ஒண்ணா படுத்திருக்கீங்களே” என்று கிண்டல் செய்தார். அந்த கிண்டலில் ஒரு தந்தைக்கே உரிய அக்கறை இருந்தது.

அவசரப்பயணம்

விமான நிலையத்துக்கு புறப்பட சிவாஜி சார் அவசரப்படுத்தின தால், ஆளாளுக்கு சீக்கிரமே கிளம்பி விட்டோம். கமலா அம்மாளும் சிவாஜி சாருடன் வந்திருந்தார்கள். “மாமா இப்படித்தான் அவசரப்படுத்துவாங்க. நாமபோறப்போ விமான நிலைய கேட்டை திறந்திருக்க மாட்டாங்க” என்றார்.

கமலா அம்மாள் சொன்னதுபோலவே ஆயிற்று. நாங்கள் போய்ச் சேர்ந்த பிறகுதான் விமான நிலைய பயணிகள் கேட்டையே திறந்தார்கள்! அப்போது மங்களூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஒரு விமானம்தான். எனவே விமானத்தை தவறவிட்டால் தேவையில்லாமல் ஒருநாள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் சிவாஜி சாரின் `அவசரம்’ நியாயமானதுதான்.

பார்த்ததுமே “வாங்க கவுண்டரே!” என்பார். படப்பிடிப்பின்போது கிடைக்கிற இடைவெளி நேரத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவார். எங்கள் சித்தப்பா அவரது நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பம் பற்றி ஆர்வமாய் விசாரிப்பார். என் சிறுவயதிலேயே விவசாய நிலங்கள் விற்கப்பட்டதை தெரிந்து கொண்டவர், “நீ சம்பாதிச்சு சொந்த ஊர்லயே நிறைய தென்னந்தோப்பு வாங்கணும்” என்று சொன்னார். அவர் சொன்னதுபோலவே பொள்ளாச்சி பகுதியில் வாழவாடி ஊரில் 95 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கியிருக்கிறேன்.

“ஜல்லிக்கட்டு” படம் எதிர்பார்த்த மாதிரியே நன்றாக ஓடி, வெற்றி பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகே பாரதிராஜாவுடன் “வேதம் புதிது” படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(822)
நடிகர் சத்யராஜ் பாலுத்தேவராக வாழ்ந்த “வேதம் புதிது”
6 விருதுகளை வாங்கித்தந்த படம்

“வேதம் புதிது” படத்தில் பாலுத்தேவராக வாழ்ந்து காட்டினார், சத்யராஜ். பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான “வேதம் புதிது” படம் சத்யராஜை மிகச்சிறந்த குணசித்ர நடிகராகவும் வெளிப்படுத்தியது. அவருக்கு 6 விருதுகள் கிடைத்தன.

“முதல் மரியாதை” படத்தில் சிறு வேடத்தில் மட்டும் நடித்த சத்யராஜை, தனது கிராமத்துக் காதல் கதையான “கடலோரக் கவிதைகள்” படத்தில் கதாநாயகன் ஆக்கினார், பாரதிராஜா. “கடலோரக் கவிதைகள்” படத்தின் வெற்றிக்குப் பிறகு, “மதங்களை கடந்தது மனிதநேயம்” என்ற கருத்தை வெளிப்படுத்தும் “வேதம் புதிது” படத்திலும் சத்யராஜையே நடிக்க வைத்தார். பாலுத்தேவர் என்ற கம்பீரமான குணச்சித்திர வேடத்தில் சத்யராஜ் வாழ்ந்து, ரசிகர்களை பிரமிக்க வைத்தார். படமும் வெற்றி பெற்றது.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-

மைல்கல்

“என் நடிப்பு வரலாற்றில் நிச்சயம் ஒரு மைல்கல் `பாலுத்தேவர்’ கேரக்டர்.

பாரதிராஜாவின் “வேதம் புதிது” கதையை என்னிடம் சொல்லும்படி சித்ரா லட்சுமணனிடம் பாரதிராஜா கூறியிருக்கிறார். அவர் என்னிடம், “கதையின் அவுட்லைனை கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.

“நான் டைரக்டர் பாரதிராஜா சாரிடம் முதல் மரியாதை படத்தில் என் கேரக்டர் என்ன என்பது பற்றி கேட்கவில்லை. கடலோரக் கவிதைகள் படத்திலும் கதை கேட்கவில்லை. இந்தப் படத்திலும் கதை கேட்கப்போவதில்லை. நான் கதை கேட்டு முடிவு செய்கிற நிலையை கடந்தவர் அவர்” என்று சித்ரா லட்சுமணனிடம் கூறி, கதை கேட்க மறுத்துவிட்டேன்.

இந்தப் படத்தில் நடித்த பிறகு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மத்தியிலும், எனக்கு பெரிய அளவில் மரியாதை கிடைத்தது.

நான் அப்போது பெரியார் கொள்கைகளுக்குள் வந்திருந்த நேரம். படத்தில் வரும் பாலுத்தேவர் கேரக்டர் `நாத்திகர்’ என்பது எனக்கு மிகவும் வசதியாகி விட்டது.

அருமையான வசனம்

படத்துக்கு கண்ணன் என்பவர் வசனம் எழுதியிருந்தார். இந்தப்படத்துக்கு அவர் வசனம் எழுதிய பிறகு, `வேதம் புதிது கண்ணன்’ என்று அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு படத்துக்கு வசனங்களும் உயிர் நாடியாக அமைந்தன.

“பராசக்தி”, “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “மனோகரா” போன்ற படங்கள் வசனங்களுக்காகவும் பேசப்பட்டவை. “காக்கி சட்டை” படத்தில் நான் இரண்டு தடவை சொன்ன `தகடு தகடு’ வசனம் சினிமாவில் என் நடிப்புக்கு புதிய பாதையை உருவாக்கித் தந்தது.

இப்படி வசனங்கள் மூலம் கிடைக்கும் பெருமை, இந்தப் படத்தில் கண்ணன் வசனத்துக்கும் கிடைத்தது. கதைப்படி, என் மகன் தாமிரபரணி ஆற்றில் விழுந்து இறந்திருப்பான். அது தெரியாத உறவினர்கள், அவனைக் காணோம் என்று தேடிப்போயிருப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்ததும் நான் பதட்டத்திலும் பரபரப்பிலும் “கிடைச்சிட்டானா?” என்று கேட்பேன். அவர்கள் பதிலோ, “கிடைச்சிட்டுது” என்பதாக இருக்கும்.

மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த வசனம் நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி உணர்த்தி விட்டது.

ஆளுக்குத்தானே மரியாதை!

மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த ஒரு வரி வசனத்தில் சொல்லி, கதைக்கே ஒரு ஜீவன் கொடுத்திருந்தார், கண்ணன். படத்தில் இந்தக் காட்சிக்கு, காட்சியின் சோகம் தாண்டியும் கைதட்டிய ரசிகர்கள் அதிகம். என் படங்களில் நான் பேசிய வசனங்களிலேயே சிறந்த வசனமாக இதைக் கருதுகிறேன்.

ரஜினி புகழாரம்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்தபோது, ஊர்க்காவலன் படப்பிடிப்புக்காக ரஜினி சாரும் அங்கே வந்திருந்தார். அவர் நடித்த படப்பிடிப்பு முடிந்ததும் எங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார். 2 மணி நேரம் எங்களுடன் இருந்தார். என் `பாலுத்தேவர்’ கெட்டப் அவரை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. அதுபற்றிப் பேசி பாராட்டினார்.

படத்தில் நடிகை அமலா என் மருமகளாக நடித்திருந்தார். இதே அமலா என் அடுத்த படமான “ஜீவா”வில் என் ஜோடியாக நடித்தார்! அதுமாதிரி, `மிஸ்டர் பாரத்’ படத்தில் அம்பிகா எனக்கு மருமகள். அடுத்து வந்த “மக்கள் என் பக்கம்” படத்தில் என் ஜோடி! இரண்டு விதமான வேறுபாட்டையும், ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

6 விருதுகள்

“வேதம் புதிது” படத்தில் பாலுத்தேவராக நடித்த என் நடிப்புக்கு `பிலிம்பேர்’ பத்திரிகை உள்பட 6 பத்திரிகைகள் விருது கொடுத்து சிறப்பித்தன.

மத்திய அரசின் விருது கமிட்டியில் அப்போது ஜுரியாக இருந்தவர்களில் நடிகை லட்சுமியும் ஒருவர். இந்தப்படத்தில் என் நடிப்புக்கு விருது கொடுப்பதற்கான பரிசீலனையில், சின்ன விஷயத்துக்காக `விருது’ வாய்ப்பு தவறி விட்டதாக லட்சுமி என்னிடம் சொன்னார். அதாவது என் கேரக்டருக்கு `விக்’ பயன்படுத்தியிருந்தது விருதுக்கு தடையாக அமைந்திருந்ததை தெரிந்து கொண்டேன். ஆனாலும் ரசிகர்களின் பாராட்டை எனக்கு கிடைத்த பெரிய விருதாக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தேன்.

ஜெயலலிதா மேடம் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு தடவை அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது நான் பல படங்களில் நடித்திருந்தாலும் `பாலுத்தேவர்’ கேரக்டர் பற்றியே அதிகம் பாராட்டிப் பேசினார்கள்.

படத்தில் ஒரு காட்சியில் நானே ஆடிப்போய்விட்டேன். என் வளர்ப்பு மகனாக வரும் சிறுவனை நான் தோளில் தூக்கி வைத்தபடி கதை சொல்லிக்கொண்டே வருவேன். ஆற்றைக்கடக்கும்போது அந்த சிறுவன் என்னிடம், “உங்க பெயர் என்ன?” என்று கேட்க, “நான் பாலுத்தேவர்” என்பேன். “பாலு உங்கள் பெயர். தேவர் என்பது நீங்கள் படிச்சு வாங்கின பட்டமா?” என்று அந்த சிறுவன் கேட்பான்.

இந்தக் காட்சியை, தனக்கே உரிய ஆற்றலில் மிகத் திறமையாக இயக்கினார், பாரதிராஜா. இந்தக் கேள்வியால் அந்தச் சிறுவன் என்னை கன்னத்தில் அறைவதாக உணர்வேன். `ஜாதிய சமூகத்தை தாண்டியது மனித நேயம்’ என்பதை சொல்லாமல் சொல்கிற அந்தக் காட்சி, என் நடிப்பிலும் மறக்க முடியாத காட்சியாகி விட்டது.

எம்.ஜி.ஆர். பார்த்தார்

படம் தயாரான பிறகு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துவதாக ஒரு தகவல் உலாவந்து படத்துக்கு பிரச்சினையாக அமைந்தது. இதுபற்றி முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டபோது அவர் படத்தை பார்க்க விரும்பினார். ஏவி.எம். தியேட்டரில் படம் பார்த்தபோது என்னையும் அவர் அருகே அமர வைத்துக்கொண்டார். முழுப்படத்தையும் ரசித்துப் பார்த்தவர், “இந்தப்படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவும் இல்லையே!” என்றார். என் நடிப்பையும் பாராட்டினார்.

முதல்-அமைச்சர் பாராட்டிய பிறகு, படத்தின் வெளியீட்டுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ரசிகர்கள் உணர்ச்சி மயமாய் ரசித்ததோடு, படத்தையும் வெற்றி பெறச்செய்தார்கள்.

“வேதம் புதிது” பாலுத்தேவர் கேரக்டர் என்னை ரசிகர்களிடம் பெரிய அளவில் வெளிப்படுத்தியதால்தான் இன்றைக்கு “பெரியார்”, “ஒன்பது ரூபாய் நோட்டு” போன்ற படங்களிலும் நடிப்பில் என்னை நிலைநிறுத்த முடிந்தது.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

திரைப்பட வரலாறு 823
சத்யராஜ×க்கு எம்.ஜி.ஆர். அழைப்பு
“எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படத்தில் நடியுங்கள்”

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவரை சத்யராஜ் சந்தித்தார். அப்போது, “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடியுங்கள்” என்று எம்.ஜி.ஆர். அழைப்பு விடுத்தார்.

சினிமாவில் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்த சத்யராஜ×க்கு, கொஞ்சநாள் குடும்பத்துடன் ஓய்வெடுக்கலாமே என்று தோன்றியது.

அமெரிக்கா பயணம்

அவரது சகோதரிகளில் ஒருவரான ரூபா, தனது கணவர் சேனாதிபதியுடன் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் இருந்தார். இதனால், ஒரு மாதம் நடிப்புக்கு `லீவு’ கொடுத்துவிட்டு, குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு பறந்தார், சத்யராஜ்.

இந்த அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் சத்யராஜ் மிகவும் நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு வந்தது.

அந்த அனுபவம் பற்றி, சத்யராஜ் கூறியதாவது:-

“தங்கை வீட்டுக்கு அமெரிக்காவுக்கு போக முடிவு செய்து புறப்பட்ட நாளில் என் நண்பர் டைரக்டர் மணிவண்ணன், “தினத்தந்தி”யில் என்னை வாழ்த்தி முழுப்பக்க விளம்பரம் கொடுத்துவிட்டார். இது, என் மீதான அவரது அதிகபட்ச அன்பு என்றாலும், இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. “என் நண்பன் சத்யராஜின் அமெரிக்கப் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்ற அந்த ஒருபக்க வாழ்த்துதான் எனக்கும், எம்.ஜி.ஆர். சாருக்குமான நட்புக்கான அடித்தளம் அமைக்கப்போகிறது என்பது, அப்போது எனக்குத் தெரியாது.

எம்.ஜி.ஆர். தந்தி

அப்போதுநாங்கள் சென்னை வாலஸ் கார்டனில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தோம்.

ஒரு மாதம் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் கதவைத் திறந்ததுமே கண்ணில் பட்டது ஒரு தந்தி. பிரித்த மாத்திரத்தில் அது என் அமெரிக்க பயணத்தை வாழ்த்தி அனுப்பப்பட்ட தந்தி என்பதும், அதை எனக்கு அனுப்பியது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். என்பதும் தெரிந்தது!

அதிர்ந்து போனேன். தந்தி வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. நாங்கள் அமெரிக்காவுக்கு புறப்பட்டுப் போன கொஞ்ச நேரத்தில், அந்த தந்தி எங்கள் வீட்டுக்குள் போடப்பட்டிருக்கிறது. ஒரு மாதம் கழித்து அப்படியொரு தந்தி வந்திருப்பது தெரிந்ததும் மகிழ்ச்சியையும் தாண்டி அதிர்ச்சியே எனக்குள் ஏற்பட்டது.

பின்னே! என்னை வாழ்த்தி தந்தி அனுப்பியிருப்பது மதிப்பிற்குரிய முதல்வர். ஒரு மாதம் வரை அதற்கு பதில் நன்றிகூட சொல்லாமல் இருததால், தவறாக நினைத்துக் கொள்ளமாட்டாரா?

உடனே அவரை சந்தித்து, வாழ்த்துக்கு நன்றி சொல்வதுதான் பண்பாடு. ஆனால் அவர் அழைப்பில்லாமல் எப்படிப் போவது? அப்படிப் போனாலும் அவரை சந்தித்துப் பேசமுடியுமா?

இப்படியான குழப்பம் என்னை ஆட்கொண்டபோது, டைரக்டர் பாரதிராஜாவிடம் யோசனை கேட்டேன். அவரோ, “யாரிடமும் முன்கூட்டியே அனுமதி பெறத் தேவையில்லை. நேராக தோட்டம் (எம்.ஜி.ஆரின் ராமாவரம் இருப்பிடம்) போங்க! போய், வாழ்த்துக்கு நன்றி சொல்லிட்டு வந்துடுங்க” என்றார்.

எம்.ஜி.ஆர். வீட்டில்

அவர் சொன்னது நல்ல யோசனையாகப்பட்டது. மறுநாளே மனைவியுடன் தோட்டத்துக்கு கிளம்பினேன். காலை 8 மணிக்கு தோட்டத்தை நெருங்கும்போது இன்னொரு சந்தேகம். `ஒருவேளை கேட்டில் நிற்கும் காவலாளி தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விட்டால்?’

நான் சராசரி மனிதன் என்றால் பரவாயில்லை. என்னோடு அந்த விஷயம் முடிந்து விடும். நான் இப்போது நடிகன். பார்க்கிற எல்லோருக்குமே என்னைத் தெரியும். ஒருவேளை அப்படி திருப்பி அனுப்பிவிட்டால், “எம்.ஜி.ஆரை பார்க்கப்போன நடிகர் சத்யராஜ் திருப்பி அனுப்பப்பட்டார்” என்றல்லவா செய்தி வரும்!

ஆனால் அப்படியெல்லாம் எந்தத் தடையும் இருக்கவில்லை. கேட்டில் என் வருகைக்கு வரவேற்புதான் இருந்தது. அங்கிருந்தவர்கள் எங்களை வரவேற்பு அறைக்கு அழைத்துப்போய் உட்கார வைத்தார்கள். தோட்டத்தில் நிறைய குழந்தைகளை எம்.ஜி.ஆர். படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தைகள் என்னைப் பார்த்ததும் உற்சாகமாய் ஓடிவந்து `ஆட்டோகிராப்’ வாங்கினார்கள்.

கொஞ்ச நேரத்தில் நாங்கள் வந்திருந்த தகவல் எம்.ஜி.ஆர். சாருக்கு சொல்லப்பட்டு, எங்களை இன்னொரு வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது அங்கிருந்த ஒருவர் எங்களை நெருங்கி வந்து, “என்ன சாப்பிடறீங்க?” என்று கேட்டார்.”

நான், “வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு வந்து விட்டோம் என்றேன். “இந்த இடத்துக்கு வந்து அப்படியெல்லாம் சொல்லக்கூடாது” என்றார், அவர்.

எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு போகிறவர்களுக்கு முதலில் வயிறார சாப்பாடு. அதன்பிறகுதான் அவருடன் சந்திப்பு என்பதாக நானும் ஏற்கனவே அறிந்திருந்தேன். என்றாலும் காலை டிபன் முடித்துவிட்டுப் போனபிறகு, உடனே மறுபடி டிபன் சாப்பிட முடியுமா? எனவே `டீ` கொடுங்க போதும்” என்றேன்.

`டீ’ வந்த கொஞ்ச நேரத்தில் ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். சார் நாங்கள் இருந்த அறைக்கே வந்துவிட்டார். இருவருக்கும் கையோடு கொண்டு போயிருந்த மாலைகளை அணிவித்து ஆசி பெற்றுக்கொண்டோம்.

எங்களைப் பார்த்ததுமே எம்.ஜி.ஆர். சார் கேட்ட முதல் கேள்வி, “ஏன் குழந்தைகளை அழைத்து வரவில்லை?” என்பதுதான்! நான் விழிக்க, என் மனைவியை பார்த்த எம்.ஜி.ஆர், “உங்க வீட்டுக்காரருக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்காது. நீங்கதாம்மா குழந்தைகளையும் அழைச்சிட்டு வந்திருக்கணும்” என்றார்.

குழந்தைகளையும் நேசிக்கும் அவர் அன்பு புரிந்தது. பேச வார்த்தை வராமல் நின்றோம். அவரே, “அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா குழந்தைகளையும் அழைச்சிட்டு வரணும். சரியா?” என்று எங்கள் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அடுத்து அவர் கேட்ட கேள்வி இன்னும் பாசப்பிணைப்பானது.

“ஏன் இத்தனை நாளா வரலை?” என்பதே அவர் கேள்வி.

“அண்ணே! எப்படி திடீர்னு வர்றது? ஒருவேளை நான் வந்து கேட்டைத்தாண்டி உள்ளே விடமாட்டேன்னுட்டாங்கன்னா தமிழ்நாடு முழுக்க தெரிஞ்சிடுமே” என்றேன்.

நான் இப்படிச் சொன்னதை எம்.ஜி.ஆர். சார் ரொம்பவே ரசித்தார். என் தோளில் தட்டி சிரித்தார். பிறகு அவரே, “அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்க” என்றார்.

அமெரிக்கா அனுபவம்

பிறகு என் குடும்பம் பற்றியெல்லாம் ஆர்வமாக விசாரித்தார். வாஷிங்டனில் இருக்கும் தமிழர்கள் எனக்கு கொடுத்த சிறப்பான வரவேற்பு பற்றி அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.

“தொடர்ந்து படப்பிடிப்பு படப்பிடிப்புன்னு இருந்ததுக்கு ஒரு மாத ஓய்வு பயனுள்ளதாக இருந்திருக்குமே” என்றார், ஜானகி அம்மாள்.

உடனே எம்.ஜி.ஆர், “எங்கே ஓய்வெடுக்கிறது! அமெரிக்காவிலும் தமிழ்ச்சங்கம் வரவேற்பு அது இதுன்னு போய் வந்ததுல ஓய்வு எப்படி எடுக்க முடியும்?” என்று என் சார்பில் ஜானகி அம்மாளுக்கு பதில் கூறினார்.

தொடர்ந்து என் படங்களையெல்லாம் பார்த்ததாகவும், சிறப்பாக நடிக்கிறேன் என்றும் சொன்னபோது சந்தோஷத்தில் இறக்கையில்லாமல் பறந்தேன்.

நடிக்க அழைப்பு

திடீரென்று, “சத்யராஜ்! நீங்க எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படத்தில் நடிக்கிறீங்களா?” என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.

“நீங்க இப்படி கேட்டிருக்க கூடாதுண்ணே! உத்தரவே போட்டிருக்கணும். அப்படி உங்க எம்.ஜி.ஆர். பிக்சர்சில் நடிக்கிற வாய்ப்பு அமைந்தால் அது என் பாக்கியம்” என்றேன்.

இப்போது ஜானகி அம்மாள், “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மூலமா நாலைந்து படம் எடுத்திருக்கிறோம்” என்றார்கள்.

நான் உடனே, “3 படம்தான் எடுத்திருக்கீங்க. 1958-ல் “நாடோடி மன்னன்”, 1969-ல் “அடிமைப்பெண்”, 1973-ல் “உலகம் சுற்றும் வாலிபன்” என 3 படம்தான் எடுத்திருக்கீங்க” என்றேன்.

நான் இப்படி புள்ளி விவரங்களுடன் சொன்னது எம்.ஜி.ஆர் சாரை ஆச்சரியப்படுத்தி விட்டது. “சரி! எங்க கம்பெனிக்கு எப்ப நடிக்கிறே?” என்று கேட்டார்.

“நாளையில் இருந்தே ஷூட்டிங் வைத்தாலும் நான் ரெடி” என்றேன்.

உடனே எம்.ஜி.ஆர். சார் என் வார்த்தையை பிடித்துக்கொண்டார். “அப்ப, இப்போது உன்னை வெச்சு படம் எடுக்கிறவங்க கதி? அவங்க படத்தை முடிச்சிட்டு அப்புறமா நடி” என்றார்.

தயாரிப்பாளர்களை `முதலாளி ஸ்தானத்தில்’ வைத்து மரியாதை செய்யும் அவரது வார்த்தைகளில் தயாரிப்பாளர்கள் மீது எத்தனை கரிசனம் என்று எண்ணி வியந்தேன்.

“கண்டிப்பாக நடிக்கிறேன். ஆனால் நீங்களே டைரக்ட் பண்ணணும்” என்றேன்.

பதிலுக்கு அவர், “எனக்கும் விருப்பம்தான். ஆனால் `சி.எம்’ ஆயிட்டேனே!” என்றார். பிறகு அவரே, “படத்துக்கு நல்ல டைரக்டராக போட்டு விடுவோம். நான் எடிட்டிங் சமயத்தில் வந்து விடுகிறேன்” என்றார். சினிமாவை அப்போதும் அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது.

முத்தம்

விடைபெறும் நேரம் வந்தபோது கன்னத்தில் முத்தமிட்டு என்னை வாழ்த்தினார். அடுத்த தடவை குழந்தைகளோடுதான் வரணும் என்று அன்புக் கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு வந்த பிறகும் கூட எனக்கு எம்.ஜி.ஆர். சாரின் அந்த அன்பே கண்ணுக்குள் நின்றது. என் மனைவி என்னிடம், எம்.ஜி.ஆர். சார் கொடுத்த முத்தத்தை நினைவுபடுத்தி, “10 நாள் நீங்கள் உடம்புக்கு மட்டும்தான் குளிப்பீங்க. முத்தம் கிடைச்ச சந்தோஷத்துல முகம் கழுவப் போறதில்லை” என்று கிண்டல் செய்தார்.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

திரைப்பட வரலாறு 824
சத்யராஜ் தங்கைகள் திருமணம்
“எம்.ஜி.ஆர். நேரில் சென்று வாழ்த்து”

நடிகர் சத்யராஜின் 2 தங்கைகள் திருமணம் கோவையில் நடந்த போது,முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்.

எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சத்யராஜ் சந்தித்த பிறகு, அவர் எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவராகி விட்டார். இந்த சமயத்தில் சத்யராஜின் இரண்டு தங்கைகளுக்கு நடந்த திருமணத்திலும் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதுகுறித்து சத்யராஜ் கூறிய தாவது:-

தங்கைகள் திருமணம்

“எனது தங்கைகள் நந்தினி, அகிலா இருவருக்கும் கோவையில் திருமணம் நிச்சயமானது. “மலைக் கள்ளன்” “சிவகவி” போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த பட்சிராஜா ஸ்டூடியோ கோவையில் இருந்தது. பின்னாளில் இந்த ஸ்டூடியோ கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டது.

இந்த திருமண மண்டபத்தில்தான் தங்கைகள் திருமணம் நடந்தது. தங்கைகளின் திருமண பத்திரிகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க நான் ராமாவரம் தோட்டத்துக்கு போயிருந்தபோது அவர் கோட்டைக்கு போயிருந்தார். ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார். நான் ஜானகி அம்மாவிடம் திருமண பத்திரிகையை கொடுத்து, “அம்மா! இது அழைப்பிதழ் அல்ல. கோவையில் திருமணம் நடக்கிறது என்பதை சொல்லும் தகவல் மட்டும்தான். ஒரு சாதாரண நடிகனின் தங்கைகள் திருமணத்துக்காக 600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. கோவையில் திருமணம் முடிந்ததும், நானே மணமக்களை இங்கே அழைத்து வருகிறேன்” என்றேன்.

இதற்குப் பிறகு நான் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டேன். சித்தப்பா வகையில் சிவாஜி எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் நிச்சயம் வந்து விடுவார். நாமே வர வேண்டாம் என்று சொன்னதால், எம்.ஜி.ஆர். வரமாட்டார் என்றே எண்ணினேன்.

திருமணத்திற்கு முந்தின நாள், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். எனது தங்கைகள் திருமணத்துக்காக கோவை வருகிறார் என்ற தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கோவை மாவட்ட கலெக்டர் எனக்கு போன் செய்தார். “ஏன் சார்! சி.எம். வரப்போறார் என்பதை முதலிலேயே எனக்கு தெரிவித்திருக்கலாமே” என்றார்.

நாம் வரவேண்டாம் என்று சொல்லியும் முதல்வர் வருகிறாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனை அன்பு இருந்தால் அவராகவே வர முடிவு செய்வார்!

“எப்படி?”

மறுநாள் மதியம் கோவை விமான நிலையத்தில் காத்திருந்தேன். விமானத்தில் இருந்து முதல்வரும் ஜானகி அம்மாளும் இறங்கி வந்தார்கள். நான் பரவசமாய் வணங்கி நின்றபோது, என்னிடம் “எப்படி?” என்று குதூகலமாகக் கேட்டார், முதல்வர்.

அவர் “எப்படி?” என்று கேட்பதே தனி அழகு. அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு அந்த “எப்படி” வார்த்தையின் வல்லமை தெரியும். என்னிடம் சொன்ன “எப்படி”க்கு அர்த்தம், “நீ வரவேண்டாம் என்று சொல்லியும் வந்துவிட்டேன் பார்த்தாயா!” என்கிற அர்த்தம்.

நேராக சர்க்ïட் அவுசில் தங்கியவர், மறுநாள் காலை 5 மணிக்கு முகூர்த்தம் என்பதால் ஜானகி அம்மாளுடன் 4.45 மணிக்கே வந்து விட்டார்.

எம்.ஜி.ஆர். வரும் அதே நேரத்தில் சிவாஜியும் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார்! இப்போது யாரை வரவேற்பது என்பதில் எனக்கே சிறு தடுமாற்றம். நிலைமையை `சட்’டென்று புரிந்து கொண்ட சிவாஜி, என்னிடம், “டேய்! இது என் வீட்டுக் கல்யாணம். நீ அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கூடப் போ” என்றார். இந்த ஒரு வார்த்தையில் நான் ரிலாக்ஸ் ஆனேன்.

அம்மா எங்கே?

திருமண மேடையை நெருங்கிய எம்.ஜி.ஆர். என்னிடம், “உங்கம்மா எங்கே?” என்று கேட்டார். நான் பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் இருந்த அம்மாவிடம் அழைத்துப்போனேன். அம்மாவை பார்த்து “வணக்கம்மா” என்று கைகூப்பினார். அம்மா எழுந்து பதிலுக்கு கைகூப்ப, ஒட்டுமொத்த கூட்டமும் அம்மாவுடன் சேர்ந்து எழுந்து எம்.ஜி.ஆருக்கு வணக்கம் செய்தார்கள். இந்த வகையில் எம்.ஜி.ஆர். சாரால் என் தாய்க்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்தது.

திருமணம் நல்லபடியாக முடிந்து முதல்வர் சென்னை புறப்பட இருந்தார். விமான நிலையத்துக்கு சென்று அவரை வழியனுப்பினேன்.

என்ன வேண்டும்?

சிவாஜி சாருடன் நான் நடித்த “ஜல்லிக்கட்டு” பட விழாவுக்கு அவரை அழைக்க தோட்டத்துக்கு போன போதுதான், “உனக்கு ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டார்.

நான், “வேணாங்க! எந்தவித அப்பாயின்மெண்ட்டும் இல்லாம உங்களை வந்து பார்த்துப் போக முடியுதே! இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?” என்றேன்.

“நான் உனக்கு ஏதாவது பண்ணணுமா?” என்று மறுபடியும் கேட்டார்.

இதற்கும் “வேண்டாம்” என்றேன்.

“எதையாவது இப்ப நீ என்கிட்ட கேளு” என்றார், உறுதியான குரலில்.

அவர் கொடுக்க நினைப்பதும் நான் தவிர்ப்பதுமாய் ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்போது எதையாவது கேட்டே ஆக வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டு விட்டார்.

எனவே, “நீங்க உடற்பயிற்சி பண்ணுகிற கர்லாக்கட்டை வேண்டும்” என்றேன்.

நான் இப்படிக் கேட்டதும் தலையில் அடித்து சிரித்தார். உடற்பயிற்சியின் போது அவர் பயன்படுத்தி வந்த கர்லாக் கட்டையை எனக்கு வழங்கினார். இப்போதும் அவர் தந்த கர்லாக் கட்டையைக் கொண்டுதான் பயிற்சி செய்து வருகிறேன்.

“ஜல்லிக்கட்டு” நூறாவது நாள்

1987 டிசம்பர் 5-ந் தேதி “ஜல்லிக்கட்டு” படத்தின் நூறாவது நாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. படத்தின் விழாவுக்கு முதலில் வருவதாகச் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், நிகழ்ச்சி நாளன்று `வரவில்லை’ என்பதாக தகவல் அனுப்பி விட்டார். தோட்டத்தில் இருந்து வந்த போன் இந்த தகவலை உறுதி செய்ததும் அதிர்ந்துபோய் விட்டேன்.

இப்போது போல் அப்போது செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. அவர் வரவில்லை என்று சொன்னாலும் அவரை போய் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.

ஆனால் அவர் எப்படிப்பட்டவர்? எங்கே நான் போய் அவரை சந்தித்து மனதை மாற்றி விடுவேனோ என்று யோசித்தவர், மறுபடியும் வீட்டுக்கு போனில் தகவல் சொல்லச் சொல்லியிருக்கிறார். “முதல்வர் வரவில்லை என்பதற்காக, அவரை பார்க்க சத்யராஜ் வரவேண்டாம்” என்பதுதான் அந்த தகவல்.

ஆனால் வீட்டில் நான் ஏற்கனவே சொல்லி வைத்தபடி, “அவர் அப்பவே உங்களை பார்க்க வர்றதா சொல்லிட்டுப் போயிட்டாரே” என்று சொல்லி விட்டார்கள்.

நான் தோட்டம் போயிருந்தபோது என் வருகை தெரிவிக்கப்பட்டதும், மாடியில் இருந்த அவரது தனியறைக்கு அழைத்துப் போனார்கள். எம்.ஜி.ஆர். சட்டை, லுங்கியில் 10 நாள் ஷேவ் பண்ணாத முகமாய் தெரிந்தார். அவருடன் 5 அதிகாரிகள் இருந்தார்கள். பக்கத்தில் பைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததும் அவருக்கிருந்த வேலைப்பளுவும் தெரிந்தது; அவரது உடல் சோர்வும் புரிந்தது. என்னைப் பார்த்ததும், “இன்னிக்கு மழை வர்ற மாதிரி இருக்குல்ல!” என்றார்.

நான் என்ன பதில் சொல்வது? விழாவை தவிர்க்கப் பார்க்கிறார் என்பது புரிந்தது. “ஆமாண்ணே” என்றேன்.

இதற்குள் அவருக்கு பால் வருகிறது. எனக்கும் வருகிறது. சாப்பிடும்போது, “நான் வரலைன்னா வருத்தப்படுவியா?” என்று கேட்டார்.

“வருத்தமாகத் தான் இருக்கும். ஆனாலும் நாங்களே நடத்திக்கிறோம் அண்ணே!” என்றேன்.

ஒரு கணம் என்னையே கூர்மையாகப் பார்த்தார். என் ஏமாற்றத்தை முகத்தில் கண்டவர், “உனக்காக வர்றேன்” என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.

சொன்னது போலவே மிகச் சரியாக விழா தொடங்கும் மாலை 6 மணிக்கு காரில் வள்ளுவர் கோட்டத்தில் வந்திறங்கினார். அவரை வரவேற்றபோது, என்னை அருகில் அழைத்தவர் “எப்படி?” என்றார், உற்சாகமாக அதாவது சொன்னபடி வந்ததற்காக இந்த `எப்படி’ என்பது புரிந்து எனக்கும் மகிழ்ச்சி.

முத்தம்

இந்த விழாவில் அவருக்கு உற்சாகம் என்றால் அப்படி ஒரு உற்சாகம். சிவாஜியை கட்டிப் பிடித்து முத்தமிட்டார். விருது வாங்க வந்த எம்.என்.நம்பியார் தனக்கும் முத்தம் வேண்டும் என்றார். “முத்தமா? தர முடியாது. குத்துவேன்” என்றார், ஜாலியாக.

நம்பியாரோ, “அப்படியென்றால் எனக்கு ஷீல்டு வேண்டாம்” என்றார்.

இதனால் எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவரை அழைத்து, ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ஷீல்டை கொடுத்தார்.

நடிகர் திலகம் சிவாஜி பட வெற்றி விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்றார்கள். அதுவே முதலும் கடைசியுமாகி விட்டது. அவர் கலந்து கொண்ட கடைசி சினிமா விழாவும் அதுதான்.

டிசம்பர் 5-ந் தேதி இந்த விழா நடந்தது. அதற்கு 19 நாள் கழித்து, அதாவது டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர். அமரர் ஆனார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அவரது பொன்னுடலுக்கு `உப்பு’ போடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த `உப்பு’ வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஒரே நடிகன் நான்தான்.

ஒரு ரசிகனாக அவரை வியந்தவன், நடிகனான போது அவரது நேசத்துக்குரியவனானேன். இப்போதும் என்னுடைய உணர்வுகளில் கலந்து போயிருப்பவர் அவர்”.

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

————————————————————————————————————–

திரைப்பட வரலாறு :(835)
“பெரியார்” படம் உருவானது எப்படி?
சத்யராஜ் வெளியிட்ட ருசிகர தகவல்கள்

பெரியார் வேடத்தில் நடித்தது பற்றியும், படப்பிடிப்பின்போது நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும் நடிகர் சத்யராஜ் விவரித்தார்.

பல்வேறு கேரக்டர்களில் நடித்திருந்தாலும் சத்யராஜ் நடிப்பில் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்தது `பெரியார்’ படம். இந்த படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

ஞானராஜசேகரன் அழைப்பு

`பாரதி’ டைரக்டர் ஞானராஜசேகரன் என்னை சந்தித்தார். எடுத்த எடுப்பிலேயே, “சார்! பெரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களை படமாக எடுக்கலாம். நீங்கள் பெரியாராக நடிக்கிறீர்கள்” என்றார்.

எப்போதோ சொன்னது இப்போது நடந்துவிடும் போலிருக்கிறதே என்று உள்ளுணர்வு சொன்னாலும், பெரியார் வேடத்துக்கு நான் எந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பேன் என்பது தெரியவில்லையே! எனவே, என் சந்தேகத்தை கேள்வியாக்கி, “நீங்கள் பெரியார் படம் பண்றது நல்ல விஷயம். ஆனால் நான் பெரியார் தோற்றத்துக்கு எந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பேன் என்று தெரியவில்லையே” என்றேன்.

நான் இப்படிச் சொல்வேன் என்று எதிர்பார்த்தோ என்னவோ, சட்டென ஒரு புகைப்படத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார், ஞானராஜசேகரன்.

கம்பீரத் தோற்றத்தில் காணப்பட்ட ஒரு இளைஞரின் படம் அது. படத்தை பார்த்ததும், “யார் இந்த இளைஞர்? காக்கி சட்டை படத்தில் நான் இருந்த தோற்றத்தையொட்டி காணப்படுகிறாரே?” என்றேன், ஆச்சரியமாய்!

ஞானராஜசேகரனோ, “சார்! பெரியாரின் 25 வயதில் எடுத்த படம் அது. பெரியாரின் சாயல் உங்களிடமும் இருப்பதால், படத்துக்கு தாடி, மீசை வைத்து கிராபிக்ஸ் செய்து பார்த்தேன். உங்களுக்கு அச்சாகப் பொருந்துகிற மாதிரி அமைந்திருக்கிறது” என்றார். “எனக்கும் தந்தை பெரியார் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் உண்டு. அதைத்தான் மேடையிலும் வெளிப்படுத்தினேன். உங்கள் டைரக்ஷனில் நான் நடிக்கிறேன். தயாரிப்பாளரை தயார் செய்துவிடுங்கள்” என்றேன்.

தயாரிப்பாளர் யார்?

ஆனால் தயாரிப்பாளர்தான் கிடைத்தபாடில்லை. பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக தயாரித்தால் `சாமி கண்ணைக் குத்திவிடும்’ என்று தவறாக எண்ணிக் கொண்டு ஒதுங்கினார்களோ என்னவோ!

இதற்கிடையே நானும் மற்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் ஒருமுறை கி.வீரமணியை சந்தித்தேன். அவரை `ஆசிரியர் ஐயா’ என்றே அழைப்பேன். நான் அவரிடம் “பெரியார்” படம் தொடர்பாக டைரக்டர் ஞானராஜசேகரன் என்னை சந்தித்த விவரத்தை சொன்னேன். அதோடு தயாரிப்பாளர் கிடைக்காததால்தான் படம் தொடங்குவதில் தாமதம் என்பதையும் விவரித்தேன்.

“தயாரிப்பாளர் கிடைப்பதுதான் பிரச்சினை என்றால் நாங்களே தயாரிக்கிறோம்” என்று அவர் முன்வந்தார். “பெரியாரின் தொண்டர்கள் தயாரிப்பில் பங்கேற்பார்கள். எனவே பட வேலைகளை தொடங்கச் சொல்லுங்கள்” என்றார்.

ஆசிரியர் வீரமணி பற்றி நான் அவருடன் பழகிய நாட்களில் என் அனுபவத்தை சொல்லியாக வேண்டும். எப்போதுமே அவருடனான உரையாடலில் பெரியார் பற்றியும், திராவிடர் கழக செயல்பாடுகள் பற்றியுமே அதிகம் இடம் பெறும். அவரது ஒரு மகள் அருள் அமெரிக்காவில் குடும்பத்துடன் இருக்கிறார். மகளை பார்க்க அமெரிக்கா போய் வந்த நேரத்தில் அவரை சந்தித்தபோதுகூட, மகள் பற்றியோ மகளின் குடும்பம் பற்றியோ, அமெரிக்கா பற்றியோ அவர் பேசவில்லை. `அமெரிக்காவில் உள்ள இணையதளத்தில் கூட பெரியாரை பார்க்க முடிகிறது’ என்பதையே பரவசமாய் சொல்லிக் கொண்டிருந்தார்.

சிங்கப்பூர் பயணம்

சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் நேசத்துக்குரிய தமிழ்த் தலைவராக இருந்தவர் `தமிழ்வேள்’ கோ.சாரங்கபாணி. அவரது 125-வது ஆண்டு விழா சிங்கப்பூரில் கொண்டாடப்பட்ட நேரத்தில், தந்தை பெரியாரின் நினைவு நாளையும் இணைத்து கொண்டாடினார்கள். இதில் கலந்து கொள்ள ஆசிரியர் வீரமணி தனது மனைவியுடன் புறப்பட்டார். அப்போது என்னையும் குடும்பத்துடன் வருமாறு கேட்டுக்கொண்டதால் என் மனைவியுடன் பயணப்பட்டேன்.

சிங்கப்பூருக்கு போன பிறகுதான் அவருக்கு அங்கே கவிதா என்ற மகள் இருப்பதே எனக்குத் தெரியவந்தது. கவிதாவின் இல்லத்துக்குப் போனபோது அங்கேயும் பெரியார் பற்றிதான் அதிகம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெரியாராக நான் நடிப்பது பற்றி பேச்சு வந்ததும் ஆசிரியர் வீரமணியின் மனைவி என்னிடம், “பெரியார் வேஷத்துக்கு நீங்க பொருத்தமாகவே இருப்பீங்க. ஆனால் பெரியாரைவிட நீங்கள் உயரம் மட்டும் கொஞ்சம் அதிகம்” என்றார். (படத்தில் உயரம் தெரியாதபடி சரிசெய்து கொண்டு விட்டோம்)

படப்பிடிப்பில் பிரச்சினை

“பெரியார்” படத்தின் படப்பிடிப்பு ஒருவாறு தொடங்கியது. காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடந்தது.

காஞ்சீபுரம் கோவிலில் காலை 7 மணிக்கே பெரியார் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. ஆனால் `பெரியார்’ படத்துக்கான காட்சிகளை கோவிலில் எடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிற்பகல் 3 மணி வரை இதே நிலை நீடித்ததில் ரொம்பவே வருத்தமாகி விட்டது.

அப்போது படப்பிடிப்புக்கு உதவியாக வந்த பெரியார் தொண்டர்களில் சிலர் என்னிடம் வந்து, “கண்டிப்பாகப் படப்பிடிப்பு நடக்கும் `அன்பு’ பார்த்துக்குவார்” என்றார்கள்.

எட்டு மணி நேரம் முயன்றும் முடியாத ஒரு விஷயத்தை, `அன்பு’ என்பவர் வந்து முடித்து விடுவார் என்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டேன்.

அதுமாதிரியே அன்பு வந்தார். பேசவேண்டியவர்களிடம் பேசினார். அடுத்த ஒரு சில நிமிடங்களில் படப்பிடிப்பு தடையின்றி நடந்தது. என் ஆச்சரியம் இப்போது எல்லை தாண்டிவிட்டது. “யார் அந்த அன்பு” என்று விசாரித்தபோது என் ஆச்சரியம் இன்னும் பல மடங்கானது. ஆசிரியர் வீரமணியின் மகன்தான் அந்த அன்பு!

சமீபத்தில் ஆசிரியரின் 75-வது ஆண்டையொட்டி நடந்த விழாவின்போது முதல்-அமைச்சர் கலைஞர் கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு போயிருந்தபோது தான் அவருக்கு அசோக் என்றொரு மகன் இருப்பதும் தெரியவந்தது!

இப்படி தங்களை மறைத்து பெரியாரின் கொள்கைக்காகவே வாழுகிற ஒரு குடும்பம் “பெரியார்” படம் தயாரிக்க முன்வந்தது பொருத்தம்தானே.

5 வருட ஆராய்ச்சி

பெரியாரை டைரக்ட் செய்த ஞானராஜசேகரன் ஐ.ஏ.எஸ். முடித்தவர். `பாரதி’ படத்தின் மூலம் ஒரு `மகாகவி’யின் வாழ்க்கையை கவிதையாக திரைக்குத் தந்தவர் என்ற முறையில் அவர் மீது என் மரியாதை கூடியிருந்தது. இப்போது அவரே பெரியார் படத்தை உருவாக்கவும், தயாராகி இருந்தது வரலாற்றுத் தலைவர்கள் மீதான அவரது ஈடுபாட்டை உணர்த்தியது. அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பெரியார் படம் எடுக்கும் ஆர்வத்தில் பெரியார் பற்றி ஐந்தாறு வருடமாக பல்வேறு ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டதும் தெரியவந்தது. பெரியார் பற்றிய புத்தகம் எங்கே கிடைத்தாலும், அதை வாங்கி பெரியாரின் வாழ்க்கை தொடர்பான விஷயங்களை சேகரித்திருக்கிறார். அதுமாதிரி பெரியாருடன் பழகியவர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்திருக்கிறார்.

இப்படியெல்லாம் அவர் முழுமையாக தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் நான் பெரியாராக நடிக்கும் என் ஆர்வத்தை வெளியிட்டு இருக்கிறேன். இருவரின் ஒருமித்த சிந்தனையும் எங்களை `பெரியாருக்குள்’ இணைத்துவிட்டது.

இந்த நேரத்தில்கூட எனக்கு பெரியாராக நடிப்பதில் ஒரு சின்ன தயக்கம் ஓடிக்கொண்டிருந்தது. பெரியாருடன் பழகியவர்கள் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். `பெரியார் நடிப்பில்’ அவர்களை நான் திருப்திபடுத்தியாக வேண்டும். அதோடு பெரியார் வேடத்தில் நடிப்பதை நடிகர் திலகம் தனது லட்சியமாக வைத்திருந்தார். காலம் அந்த வாய்ப்பை அவருக்கு வழங்காமலே போய்விட்டது. இப்படி நடிகர் திலகம் விரும்பிய ஒரு கேரக்டரை நான் செய்யும்போது, ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் என் நடிப்பு அமையவேண்டும். இப்படி இரு தரப்பிலும் விரும்பும் விதத்தில் `பெரியாரை’ சரியாக நடிப்பில் பிரதிபலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

“சந்தோசங்க…”

பெரியார் இளைஞராக இருந்த காலகட்டம் பற்றி யாரும் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் முதிய தோற்றத்தில் அவரைப் பார்த்து உணர்ந்தவர்களுக்கு, என் நடிப்பு கொஞ்சம் மாறிப்போனால்கூட ஏமாற்றமாகி விடும். இப்படி நினைத்த நேரத்தில் 75 வயதில் பெரியார் நிகழ்ச்சி அடங்கிய கேசட்டை என்னிடம் தந்தார்கள். அதைப் போட்டுப் பார்த்தபோது பெரியாரின் குரல் நடுக்கம், அவர் உட்கார்ந்து பேசும் விதம் பற்றி கவனித்துக் கொண்டேன்.

அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது “சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க!” என்று சொல்வார் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். பெரியாருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற கலைஞரிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் பெரியார் உச்சரிக்கும் விதமாகவே இந்த `சந்தோசங்க’ வார்த்தையை சொல்லிக் காட்டினார்.

1967-ம் ஆண்டில் அறிஞர் அண்ணாவை தலைவராகக் கொண்ட தி.மு.கழகம் முதன் முதலாக தமிழகத்தில் ஆட்சி பீடம் ஏறியது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சர் அண்ணா தலைமையில் நாவலர், கலைஞர் உள்ளிட்ட அமைச்சர்கள் திருச்சியில் உள்ள பெரியார் மாளிகைக்குப் போய் பெரியாரை சந்தித்து அவரது வாழ்த்தைப் பெறுகிறார்கள்.

தன்னால் அரசியலில் உருவாக்கப்பட்டவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், மறக்காமல் தன்னைத் தேடி ஆசி பெற வந்ததை பார்த்தபோது பெரியார் மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். அதே உணர்வில் “சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க” என்று சொல்லி வாழ்த்தியிருக்கிறார்.

இதை கலைஞர் என்னிடம் நடித்தே காட்டியபோது, பெரியார் அவருக்குள்ளும் எப்படி உள்வாங்கியிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன்.

கலைஞர் சொன்ன இதே சம்பவத்தை முன்பு பெரியார் இருந்த அதே திருச்சி `பெரியார் மாளிகை’யில் படமாக்கியபோது, என்னையும் மீறி ஒரு பரவசம் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது பெரியாராக நடிப்பது நானல்லவா?”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

Posted in Actor, Actors, Biography, Biosketch, Cinema, Dhinathanthi, EVR, Faces, Films, Kalainjar, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Karunanidhi, Life, MGR, Movies, names, people, Periyar, Rajini, Rajni, Sathiaraj, Sathiyaraj, Sathyaraj, Satyaraj, Shivaji, Sivaji, Sivakumar | Leave a Comment »

Ki Parthibharaja’s Kaayatha Kaanagathey – Book Review in Unmai

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2007

நூல்: காயாத கானகத்தே
ஆசிரியர்: கி.பார்த்திபராஜா
வெளியீடு:ராகாஸ் அகமது வணிக வளாகம்,
12/293, இராயப்பேட்டை, நெடுஞ்சாலை,
சென்னை-14.

விலை:ரூ.100/-

தமிழ் நாடகத்தின் ஒரு கூறான இசை நாடகம் பற்றி பெரிய அளவில் ஆய்வுகளோ, பகுதிகளோ இல்லாத நிலையில் பார்த்திப ராஜாவின் காயாத கானகத்தே நூல் இசை நாடகம் பற்றிய ஒரு சிறந்த பதிவாகும்.

தென்மாவட்டங்களில் 20 பகுதி மக்களின் சமூக வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்த இசை நாடகங்கள், காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பால் அந்த நாடகங்கள் பற்றி நூல்கள் மூலமே. இளைய தலைமுறையினர் அறியக்கூடிய நிலையில், இந்நூல் மிகவும் பயனுள்ள வரவாகும்.
மற்ற நாடகங்கள் போலன்றி இசை நாடக கலைஞர்களுக்கு கற்பனைத் திறனும், நாட்டு நடப்பில் தெளிந்த கண்ணோட்டமும், சமயோசித திறனும் இருந்தால் தான் காட்சிகளில் பரிணமிக்க முடியும்.

நாடக கலைஞர்களின் பங்களிப்பு, அவர்களின் திறன் அவர்களின் வாழ்வியல் நிலைகள் ஆகியவற்றை நடிகர் சங்க அமைப்பாளர்களுடன் இணைந்து தொடர்ந்து நாடகத்தை பார்த்தும், அவர்களுடன் பழகியும் பல சுவையான தகவல்களை தொகுத்தளித்துள்ளார்.

கலைஞர்களின் திறனை வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட நடை சிறப்புடையது. அவற்றில் ஒரு சில துளிகள். வள்ளி நாடகத்தில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நடிகை தன்னை தர்க்கத்தில் வென்றால் நடிப்புத் தொழிலையே விட்டுவிடுவேன் என்று சவால் விடுவார். அவருடன் நடிப்பதற்கு ராஜபார்ட்டுகளே அஞ்சுவார்கள்.

அவரை வேறு பகுதியைச் சேர்ந்த ஒரு நடிகர் சூழ்ச்சியால் தர்க்கத்தில் வென்றுவிட அதன் பின்னர் அந்த நடிகை அரிதாரம் பூசுவதைவிட்டு நடிப்புத் தொழிலையே விட்டுவிட்டார்.

அதேபோல் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் எமன் வேடத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் குரலையும், ஆட்டத்தையும் பார்த்த அதிர்ச்சியில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கரு கலைந்து போனது. அதன்பிறகு அடுத்தடுத்த நாடகங்களில் அவர் எமன் வேடத்தில் வரும்போது கர்ப்பிணிகள் இருந்தால் சபையைவிட்டு வெளியே போய்விட்டு காட்சி முடிந்த பிறகு திரும்பிவரவும் என்ற அறிவிப்பு செய்துள்ளனர்.

அவர் நடித்த பிரகலாதன் நாடகத்தில், இரணியன் வேடம் கட்டி பிரகலாதனாக நடித்த சிறுவனை தூக்கி கீழே வீசியபடி கர்ஜனை செய்த காட்சியை பார்த்த பெண் மூர்ச்சையடைந்தார். அதிலிருந்து அவர் தொடர்ந்து நடிப்பை மேற்கொள்ள மறுத்துவிட்டார்.

அதன் பிறகு அவர் நடிக்கவேயில்லை.

இசை நாடக வரலாற்றில் பெண்களை புறந்தள்ளிவிட்டே தொடங்கியிருந்தது. அதனால் தான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, பாவலர் பாய்ஸ் கம்பெனி, தேசிகானந்தா பாய்ஸ் கம்பெனி என்ற பெயரிலேயே நாடக கம்பெனிகள் இருந்துள்ளன. பிறகு இசை நாடகங்களில் பெண்கள் பங்கேற்க ஆரம்பித்த பின், ஆண்கள் பெண் வேடமிடும் பழக்கம் குறைந்தது.

அப்படியும் நாடக நடிகைகளுக்கு சமூக அங்கீகாரம் பெரிய அளவில் கிடைத்துவிடவில்லை. சமூகம் தங்களை இழிவாக பார்க்கவில்லை என்றும் கூறும் நடிகைக்கள் கூட அதற்கு காரணம் பொருள் வசதியோடு இருப்பது தான் என்கின்றனர். இக்காலக் கட்டத்தில் தான் பழம்பெரும் நடிகை பாலாமணி அம்மாள் பெண்களைக்-கொண்டே நாடகக் குழுவை நடத்தி வந்துள்ளார்.

அவரது குழுவில் 50-க்கும் மேற்பபட்ட பெண்கள் இருந்துள்ளனர்.

கும்பகோணத்தில் அவர் நடத்திய தாரா சசாங்கம் என்ற நாடகத்தைப் பார்க்க, மாயவரத்திலிருந்து எட்டு மணிக்கு ஒரு ரயிலும், திருச்சியிலிருந்து எட்டரை மணிக்கு ஒரு ரயிலும் புறப்பட்டு கும்பகோணம் சென்று, நாடகம் முடிந்து நள்ளிரவு மூன்று மணிக்கு இருரயில்களும் திரும்பிச் செல்லும். நாடகம் பார்க்கும் ரசிகர்-களுக்காக விடப்பட்ட இந்த ரயிலுக்கு பாலாமணி ஸ்பெஷல் என்றே பெயரிட்டுள்ளனர்.

இன்றைய தமிழ் சினிமா ரசிகத் தன்மை, நடிகர், நடிகைகள் வழிபாடு, ரசிக வெறித்தனம் போன்றவை ஒன்றும் புதியதல்ல. அது ஏற்கனவே நாடக வரலாற்றில் காண முடிகிறது. முழுஇரவு நாடகங்கள் முற்றாக மறைந்துவிட்ட நிலையில், அவற்றை பற்றிய ஒரு தொகுப்பு நூல் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு வரலாற்றுப் பெட்டகமாகும். இந்த அளவுக்கு களப்பணி செய்து, ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு; சுவைபட எழுதப்பட்ட நூல் இது.

நூலாசிரியரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Posted in Actors, artists, Books, Cinema, Documents, Drama, Fieldwork, Films, History, Incidents, Literature, Movies, music, Paarthibharaja, Parthibharaja, Performance, Research, review, Shows, Stage, Theater, Theatre, Unmai | Leave a Comment »

Tamil TV Programmes – Diwali Specials in Sun, Kalainjar, Makkal, SS Music, Jeya and Vijay Televisions

Posted by Snapjudge மேல் நவம்பர் 8, 2007

சின்னத்திரையில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

தீபாவளியை முன்னிட்டு நேயர்களை எப்படியாவது கவர்ந்துவிட வேண்டும் என எல்லா டி.வி. சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு பல புதுமையான நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. அவற்றில் பெரும்பாலான நிகழ்ச்சிகள், வழக்கம்போல சினிமா நடிகர், நடிகைகளை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன. கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கக் கூடிய விதத்தில் ஒளிபரப்பாகவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் சில…

எஸ்.எஸ்.மியூசிக்

  • காலை 10.30 மணிக்கு பாவனா,
  • பிற்பகல் 1 மணிக்கு ப்ரியாமணி,
  • மாலை 5 மணிக்கு சந்தியா,
  • மாலை 6.45 மணிக்கு நதியா

ஆகியோரின் பேட்டிகள் ஒளிபரப்பாகின்றன. எஸ்.எஸ்.மியூசிக் தொகுப்பாளர்கள் சிவகாசியில் நேரடியாகப் பங்கேற்ற கலகலப்பான தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
விஜய் டி.வி.

பட்டிமன்றம்:

“குடும்ப வாழ்வில் மனநிறைவு பெற்றவர்கள் அன்றைய பெண்களா? இன்றைய பெண்களா?’ என்ற தலைப்பில் லியோனி தலைமையில் பட்டிமன்றம். காலை 8 மணி.

சூர்யா-ஏ.ஆர்.முருகதாஸ்:

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட சூர்யாவும் “தீனா’, “ரமணா’, “கஜினி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸýம் சிறப்பு காஃபி வித் அனு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். சூர்யா, முதல்முறையாக தன்னுடைய காதல் வாழ்க்கை பற்றி மனம்திறக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ், ஹிந்தி “கஜினி’ பற்றியும் அமீர்கான் பற்றியும் பேசுகிறார். காலை 9 மணி.

விஜய்:

கம்மாவான் பேட்டை என்ற பகுதியில் வசிக்கும் ராணுவ வீரர்கள் குடும்பத்துடன் விஜய் தீபாவளி கொண்டாடும் நிகழ்ச்சி “நாயகன்’ என்ற தலைப்பில் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கலக்கல் காமெடி:

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து திரையுலகுக்கு அறிமுகமாகி மலையாளத்தின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜெயராம் பங்குபெறும் சிறப்பு கலக்கப்போவது சாம்பியன்ஸ் நிகழ்ச்சி. காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் ஜெயராமும் மிமிக்ரி செய்து கலக்குகிறார்.

இவை தவிர்த்து

  • பகல் 12 மணிக்கு சிம்புவின் “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’,
  • மதியம் 1 மணிக்கு தனுஷின் “நான் பொல்லாதவன்’,
  • மதியம் 2 மணிக்கு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பங்கேற்ற பாலிவுட் சினிமா விழா,
  • மாலை 5 மணிக்கு புதிய படங்களின் சிறப்புக் கண்ணோட்டம் போன்ற பல நிகழ்ச்சிகள் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகின்றன.

சன் டி.வி.

நதியாவின் வணக்கம் தமிழகம்:

க்ளாமரை நம்பாமல் நடிப்புத் திறமையை மட்டுமே வைத்து தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் கதாநாயகியாகத் திகழ்ந்த நதியா பங்கேற்கும் “வணக்கம் தமிழகம்’ நிகழ்ச்சி காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கில்லி:

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்த சூப்பர் ஹிட் படம் “கில்லி’ மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

பாவனா:

இலங்கை அகதிக்கும் தமிழ்நாட்டுப் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து உருவான “ராமேஸ்வரம்’ படத்தைப் பற்றி ஜீவா, பாவனா ஆகியோரின் பேட்டி இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இவை தவிர்த்து காலை 10 மணிக்கு சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம், காலை 11 மணிக்கு மற்ற டி.வி.க்களில் ஒளிபரப்பாகும் படங்களைப் பொருத்து ஒரு “திடீர்’ புதுப்படம் உள்பட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

கலைஞர் டி.வி.

ஷோபனா:

காலை 6 மணிக்கு ஷோபானாவின் கர்நாடக இசை நிகழ்ச்சியுடன் தீபாவளி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்குகிறது கலைஞர் டி.வி.

சத்யராஜ்:

சத்யராஜின் கலகலப்பான பேட்டி. இதில் சத்யராஜ் இதுவரை சொல்லாத பல விஷயங்களைப் பற்றி மனம்திறக்கிறார். காலை 7 மணி.

  • காலை 9.30 மணிக்கு நடிகர் விஜய்,
  • 10 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்,
  • மதியம் 2 மணிக்கு விக்ரம்,
  • 2.30 மணிக்கு தனுஷ்,
  • 3 மணிக்கு வடிவேலு ஆகியோரின் பேட்டி ஒளிபரப்பாகிறது.
  • இதற்கிடையில் பகல் 10.30 மணிக்கு ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடித்த “ஈ’ படம் ஒளிபரப்பாகிறது.
  • மாலை 4 மணிக்கு முதல்வர் கருணாநிதி, கமல், ரஜினி உள்ளிட்ட பலர் பங்கேற்கும் தமிழக அரசின் விருது வழங்கும் விழாவும் நிகழ்ச்சி, கலைநிகழ்ச்சிகளோடு ஒளிபரப்பாகிறது.
  • இரவு 10.30 மணிக்கு பிரகாஷ்ராஜ்-த்ரிஷா ஆகியோரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

ஜெயா டி.வி.

நந்தாவின் சமையல்: பிரபல சமையல் கலை நிபுணர் சாந்தா ஜெயராஜ் நடிகர் நந்தாவுடன் இணைந்து விதவிதமான இனிப்புகளைச் செய்யும் நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

  • மாலை 6 மணிக்கு ஜீவன்,
  • 6.30 மணிக்கு பிரசன்னா,
  • இரவு 7 மணிக்கு ப்ரியாமணி,
  • 8.30 மணிக்கு “உன்னாலே உன்னாலே’ விநய் ஆகியோரின் பேட்டியும்
  • இரவு 11 மணிக்கு மாதவன், ஷாம், த்ரிஷா நடித்த “லேசா லேசா’ திரைப்படமும் ஒளிபரப்பாகின்றன.

மக்கள் டி.வி.

கவிதை:

கவிஞர்கள்

  • ஈரோடு தமிழன்பன்,
  • இன்குலாப்,
  • அறிவுமதி,
  • ஜெயபாஸ்கரன்,
  • மு.மேத்தா,
  • பச்சையப்பன்,
  • நா.முத்துக்குமார்,
  • யுகபாரதி,
  • கபிலன்,
  • இளம்பிறை,
  • வெண்ணிலா

ஆகியோரின் புதுமையான கருத்துகளைத் தாங்கிய கவிதை நிகழ்ச்சி காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஆழிக்கொண்டாட்டம்:

நாள்தோறும் கடலில் வாழ்க்கையைக் கண்டெடுக்கும் மீனவர்கள் கடலுக்குள் குதித்து வீர தீர விளையாட்டுகளும் கடலுக்குள்ளேயே வெடி கொளுத்திக் கொண்டாடும் சாகச விளையாட்டு நிகழ்ச்சிகளும் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகின்றன.

ஆத்தாடி உறியடி:

மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பங்கேற்கும் வித்தியாசமான நிகழ்ச்சி. வடம் இழுத்தல், உறியடித்தல் என்று மண்ணின் விளையாட்டுகளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மக்கள் நிகழ்ச்சி பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

தீபா”வலி’:

தீபாவளித் திருநாளைக் கொண்டாடாத கிராமங்களைப் பற்றிய நெகிழ வைக்கும் நிகழ்ச்சி. அந்த கிராமங்களுக்கே சென்று அதற்கான காரணங்களை அறியும் வரலாற்றுப் பதிவு. இந்த நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இவை தவிர்த்து

  • பகல் 1.30 மணிக்கு சத்குரு ஜகி வாசுதேவின் பேட்டி,
  • மாலை 4.30 மணிக்கு மரபு விளையாட்டுகளைப் பற்றிய “காசிக்கு போறேன் நானும் வாறேன்’,
  • மாலை 5.30 மணிக்கு மலேசியத் தமிழர்களின் “மலேசிய மத்தாப்பூக்கள்’,
  • இரவு 8 மணிக்கு ஈரானிய திரைப்படம் உள்பட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

Posted in Actors, Actress, Cinema, Deepavali, Diwali, Films, Jaya, Jeya, Kalainjar, Makkal, Movies, music, Programmes, Specials, SS Music, Sun, Tamil, Televisions, TV, Vijay | 1 Comment »

The importance of Karunanidhi’s time in Kalainjar TV – Dinamani op-ed

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 10, 2007

நியாயமான கவலை

கடந்த ஒரு மாத காலமாக முதல்வரின் கவனமெல்லாம் அவரது குடும்பத்தினர் தொடங்க இருக்கும் கலைஞர் தொலைக்காட்சியில்தான் இருக்கிறது என்றும், அதில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் அவருடன் விவாதிக்கப்பட்டுத்தான் முடிவாகின்றன என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. மக்கள் பிரச்னைகள் மலைபோலக் குவிந்திருக்கும்போது ஒரு மாநில முதல்வர் இதுபோன்ற விஷயங்களில் இந்த அளவுக்கு முனைப்புக் காட்ட வேண்டியது அவசியம்தானா என்றுகூடக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

தொலைக்காட்சி அலைவரிசைகள் தமிழுக்கும் தமிழனுக்கும் பெரிய அளவில் உதவவில்லை என்பதில் யாருக்குமே இரண்டு கருத்து இருக்க முடியாது. தமிழ் கலந்த ஆங்கிலத்தில் உரையாடும் வழக்கத்துக்கு அச்சாரம் போட்ட பெருமை, தொலைக்காட்சிகளுக்கு நிச்சயமாக உண்டு. அவரது உறவினர்களின் தொலைக்காட்சி நடத்தப்படும் விதத்தைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்தபோது, அவர்களது வியாபார விஷயங்களில் தான் தலையிடுவது இல்லை என்று கூறி ஒதுங்கிக் கொண்டார் முதல்வர்.

இப்போது அவரது குடும்பத்தினரே தொலைக்காட்சி ஒன்றைத் தொடங்க இருக்கின்றனர். அதுவும் அவரை முன்னிலைப்படுத்திக் கலைஞர் தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்குகிறார்கள். இந்தத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் ஜுர வேகத்தில் உயர்ந்துகொண்டு வருகிறது. போதாக்குறைக்கு, முதல்வரின உடன்பிறப்புகள் தமிழகம் முழுவதும் கலைஞர் தொலைக்காட்சியை வரவேற்று மூலைக்கு மூலை டிஜிட்டல் பேனர்களை வைத்து மக்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி வருகிறார்கள்.

சங்கத் தமிழையும், தொல்காப்பியத்தையும் சராசரித் தமிழனுக்கு அறிமுகப்படுத்தி, அவனது இலக்கிய ரசனையை அதிகப்படுத்தியவர் என்பதால், கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைய வேண்டும் என்பது இலக்கியவாதிகளின் எதிர்பார்ப்பு. திரையுலகுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் என்பதால், திரையுலகம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அதிகம் இருக்க வேண்டும் என்று அந்தத் துறையினர் எதிர்பார்ப்பதில் தவறில்லை. அடிப்படையில் அரசியல்வாதி என்பதாலும், திமுக என்கிற கட்சியின் தலைவர் என்பதாலும், அவரது பெயரில் தொடங்கப்படும் தொலைக்காட்சி, கட்சியின் கொள்கையைப் பரப்பும் விதத்தில் அமைய வேண்டும் என்பதுதான் உடன்பிறப்புகளின் எண்ணமாக இருக்கும்.

அதிமுகவின் ஜெயா தொலைக்காட்சியைப் பின்பற்றி முதல்வர் கருணாநிதியை முன்னிலைப்படுத்தும் கட்சி ரீதியான தொலைக்காட்சியாக கலைஞர் தொலைக்காட்சி இருக்குமா, வியாபாரம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் தொலைக்காட்சியாக இருக்குமா, இல்லை தமிழுக்கும் தமிழனின் பண்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் தொலைக்காட்சியாக இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது.

இந்த நிலைமையில், தனது பெயரில் தனது குடும்பத்தினரே தொடங்கும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி நினைப்பதிலும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவரே விவாதித்துத் தேர்ந்தெடுப்பதிலும் தவறு காண முடியாது.

கலைஞர் தொலைக்காட்சி ஒரு தரமான, அதே சமயம் ஜனரஞ்சகமான தொலைக்காட்சி அலைவரிசையாக அமைவது என்பது முதல்வர் கருணாநிதியின் கெüரவப் பிரச்னை. அதனால், அவரது கவலையில் நியாயமிருக்கிறது.

Posted in Actors, Actress, Channels, Cinema, CM, Dayaalu Ammal, Dayalu Ammaal, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Dhayaalu Ammaal, Dhayalu Ammal, Dhayanidhi, Dhinakaran, DMK, Films, Jaya, Jeya, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maran, Media, Movies, MSM, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, Murasoli, Murasoli Maran, Party, Politics, Propaganda, Serials, Sun, Tamil, Thayanidhi, Thayanithi, Thayanithy, TV | Leave a Comment »

Sanjay Dutt sentenced to 6 years in prison – Film fraternity rallies behind & to appeal against verdict

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

நெற்றிக்கண்: சஞ்சய் தத் – கோடே

IdlyVadai – இட்லிவடை: சஞ்சய் தத்துக்கு 6 ஆ�

சற்றுமுன்…: பத்திரிக்கைகளுக்கு நன்றி!: சஞசய் தத் சகோதரி அறிக்கை.

சற்றுமுன்…: சற்றுமுன்: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்திற்கு ஆறு வருட சிறை தண்டனை

சிவபாலன்: நீயூஸ் மீடியாக்களை எத


பாதியில் சினிமா படம்: சஞ்சய்தத்தண்டிக்கப்பட்டால் ரூ. 100 கோடி இழப்பு மும்பை, ஜுலை. 31-மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு இன்று மும்பை தடா கோர்ட்டு தண்டனை என்ன என்பதை அறிவிக்கிறது. அந்த தீர்ப்பை மும்பைபட உலகம் மிக, மிக ஆர்வமாக எதிர்பார்த்து உள்ளது.சஞ்சய்தத் கைவசம் தற்போது

  1. மெகபூபா,
  2. தாமால்,
  3. கிட்நாப்,
  4. அலிபாக்,
  5. மிஸ்டர் பிராடு

ஆகிய 5 படங்கள் உள்ளன. இதில் மெகபூபா படம் தீபாவளிக்கு வர உள்ளது. தாமால் படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரு படங்களும் ஏறக்குறைய முடிந்து விட்டன.
மிஸ்டர் பிராடு, அலிபாக், கிட்நாப் ஆகிய 3 படங்களும் தற்போது பாதி முடிந்த நிலையில்தான் உள்ளன. சஞ்சய்தத் தண்டிக்கப்பட்டால், இந்த 3 படங்களும் முடிவடை வதில் சிக்கல் ஏற்படும்.

இதனால் இந்த 3 படத் தயாரிப்பாளர்களும் கையை பிசைந்தபடி உள்ளனர். சஞ் சய்தத் ஜெயிலில் அடைக்கப் பட்டு விடுவாரோ என்று இவர்கள் 3 பேரும் கவலையில் உள்ளனர்.

மிஸ்டர் பிராடு படத்தின் சூட்டிங் 50 சதவீதமே முடிந் துள்ளது. அது போல கிட்நாப்படம் 60 சதவீதம் முடிந்த நிலையில் இருக்கிறது.

இந்த 3 படங்களையும் திட்டமிட்டப்படி முடிக்காமல் போனால் ரூ. 100 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் தண்டனை விதிக்கப்பட்டா லும் அப்பீல் செய்ய இருப்ப தாக சஞ்சய்தத் தரப்பில் கூறப் பட்டுள்ளது. எனவே குறிப் பிட்ட கால அவகாசத்துக்குள் 3 படத்தையும் முடித்துக் கொடுத்து விடுவேன் என்று சஞ்சய்தத் கூறி உள்ளார்.

இந்த 3 படங்கள் தவிர வேறு எந்த பட வாய்ப்பை யும் சஞ்சய்தத் ஒத்துக்கொள்ள வில்லை. கோர்ட்டு தீர்ப்பை எதிர் நோக்கியுள்ள அவர் சொந்தமாக “பீகேட்” எனும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.
———————————————————————————————————-

14 ஆண்டுகளாக நடந்த விசாரணை

எதிர்பாராத திருப்பங்களையும், பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வந்த 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 100 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை 1994 ஆம் ஆண்டில் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு வரை நீதிபதி ஜே.என்.படேல் இந்த வழக்கை விசாரித்து வந்தார். பிறகு நீதிபதி பி.டி.கோடே வழக்கு விசாரணையை ஏற்றார்.

257 உயிர்களை பலிகொண்ட இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் 100 பேர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது. இவர்களில் 47 பேர் மீது ஆயுதங்களை கடத்தியது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

குண்டு வெடிப்பு வழக்கில் மூளையாக இருந்து செயல்பட்ட டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமன் உள்ளிட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த 10 மாதங்களுக்குப் பிறகு புலன் விசாரணை மேற்கொண்ட சிபிஐ போலீஸôர் யாகூப், எஸ்ஸô, யூசுப் உள்ளிட்ட 44 பேருக்கு மரண தண்டனை வழங்குமாறு கோரினர். ஆனால் எஸ்ஸô, யூசுப் ஆகியோர் உடல் நலமில்லாமல் இருப்பதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளின் 13 ஆயிரம் பக்க வாக்கு மூலங்களும், 7 ஆயிரம் பக்க ஆவணங்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் 6,700 பக்க வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டன.

684 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். அப்போது 38,070 கேள்விகள் கேட்கப்பட்டன.

குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட 100 பேருக்கான தண்டனைகள் மே 18 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டன.

———————————————————————————————————-
சோதனை மேல் சோதனை முன்னாபாய்க்கு!

சுநீல் தத், நர்கீஸ் என்ற நட்சத்திர தம்பதிகளின் ஒரே புதல்வர்தான் சஞ்சய் தத். செல்வச் செழிப்பிலே, ஏவலாளிகளின் அரவணைப்பிலே வளர்ந்தாலும் சிறு வயது முதலே சாதுவாகவும், சில வேளைகளில் அடக்கவே முடியாத விஷமக்காரராகவும் இருந்திருக்கிறார்.

பாசத்தைப் பொழிய இரு சகோதரிகள் பிரியா, நம்ரதா. நெருக்கடி நேரத்தில் துணை நிற்க மைத்துனர் குமார் கெüரவ். அன்பு செலுத்த அமெரிக்காவில் உள்ள மகள் திரிஷலா என்று உறவினர்கள் அளிக்கும் ஆதரவினால் மனம் தளராமல் இருக்கிறார் சஞ்சய் தத் (48).

சிறு வயதிலேயே கெட்ட சகவாசத்தால் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட்டார். தந்தை சுநீல் தத்தின் அன்பான அரவணைப்பு காரணமாக அதிலிருந்து மீண்டார்.

பிறகு ரிச்சா சர்மாவை காதலித்து மணந்தார். அவர் புற்றுநோய் காரணமாக இறந்தார். அதற்கும் முன்னதாக தாய் நர்கீஸ் தத்தை அதே புற்றுநோய்க்குப் பலி கொடுத்தார்.

தாயின் மரணம், மனைவியின் மரணம் ஆகியவற்றால் மிகவும் மனம் உடைந்துபோன சஞ்சய் தத், ரியா பிள்ளையை மணந்தார். ஆனால் அந்த மண வாழ்க்கையில் நிம்மதி கிடைப்பதற்குப் பதிலாக நிம்மதி தொலைந்தது. இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்தது.

இந் நிலையில்தான், மும்பையில் வகுப்புக் கலவரம் வெடித்தபோது சஞ்சய் தத்தை வினோத பயம் கவ்வியது. நிழல் உலக தாதாக்களின் மிரட்டல் காரணமாக தங்களுடைய குடும்பத்தாருக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய சஞ்சய், யார் மூலமோ பிஸ்டலையும் ஏ.கே. 56 ரக துப்பாக்கியையும் வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார். சட்டவிரோதமாக ஆயுதத்தை வாங்கிய குற்றத்தோடு, அதை சமூகவிரோத கும்பலிடமிருந்து வாங்கியதே இந்த வழக்கில் அவரைச் சேர்க்கக் காரணமாக இருந்துவிட்டது.

அதன் பிறகு கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். தந்தை சுநீல் தத் பக்கபலமாக இருந்து அவரைத் தேற்றினார். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே முதல் எல்லா தலைவர்களையும் சந்தித்து தமது மகனின் விடுதலைக்கு பாடுபட்டார். அதற்குப் பலனும் கிடைத்தது. அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு சுநீல் தத் மரணம் அடைந்தார். சகோதரி பிரியா தத் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார். மைத்துனர் குமார் கெüரவ் வீட்டிலேயே தங்கி அவருக்கு உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார்.

முன்னாபாய்: அவருடைய திரை வாழ்விலும் மீண்டும் வசந்தம் துளிர்விட்டது. “”முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.” என்ற திரைப்படத்தில் அவருடைய நடிப்பும் வேடமும் அனைவருக்கும் பிடித்துப் போய்விட்டது. வசூலில் சக்கைபோடு போட்டது. அடுத்த படமும் அந்தக் கதையையொட்டியே வெளியானது. திரைவாழ்க்கையில் சாதனையின் உச்ச கட்டத்துக்கு சென்றுவிட்டார் சஞ்சய் தத். இந் நிலையில்தான் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

இப்போது சஞ்சயின் குடும்பத்தார் மட்டும் அல்ல, முன்னா பாயின் ரசிகர்களும் துணைக்கு இருக்கிறார்கள். இப்போதைக்கு இது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலையும் மன வலிமையையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

———————————————————————————————————-

கண்டிப்பான நீதிபதி, கனிவான கனவான்!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ள தடா நீதிமன்ற நீதிபதி பிரமோத் தத்தாராம் கோடே (54) கண்டிப்பான நீதிபதி, கனிவான மனிதர்.

ஒரே ஒரு வழக்கைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் விசாரித்தது, ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது, ஒரே நீதிமன்றத்தில் நீண்ட நாள்கள் நீதிபதியாக பணியாற்றியது போன்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அதுமட்டும் அல்ல, அவரைப் பற்றிய பல தகவல்கள் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞரையும்கூட கவர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.

இசட் பிரிவு பாதுகாப்பு:

இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தது முதலே அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. உருது மொழியில் எழுதப்பட்ட அந்தக் கடிதங்கள் அனைத்துமே, குற்றம்சாட்டப்பட்டவர்களை மன்னித்து விடுதலை செய்யுமாறு அவருக்குக் கட்டளை பிறப்பித்தன. எனவே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தரப்பட்டது. எனவே அவருடைய நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. சமூக வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவருடைய உயிரை 25 லட்ச ரூபாய்க்கு அரசே இன்சூர் செய்துள்ளது.

ஆர்தர் சாலையில் உள்ள சிறையில், பலத்த பாதுகாப்புக்கு உள்பட்ட கட்டடத்திலேயே இந்த விசாரணை முழுக்க 1996 முதல் நடந்து முடிந்துள்ளது. ஜே.என். படேல் என்ற நீதிபதியிடமிருந்து பொறுப்பை ஏற்றது முதல் விடாமல் விசாரித்து வந்தார்.

வேலையில் அக்கறை உள்ளவர்.

விடுமுறை எடுக்காதவர். 13,000 பக்கங்கள் வாய்மொழி சாட்சியங்களையும், 7,000 பக்கங்கள் ஆவண சாட்சியங்களையும், 6,700 பக்க வாக்குமூலங்களையும் படித்துப் பார்த்தும் 686 சாட்சிகளை விசாரித்தும் இந்தத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.

100 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் 67 பேருக்கு வெவ்வேறு விதமான தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

விடுமுறையே எடுக்கமாட்டார்:

விசாரணையை ஏற்றது முதல் விடுப்பு எடுத்ததே இல்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் குளியலறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதால் சில நாள்கள் மட்டுமே வராமல் இருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் கோடேவின் தந்தை இறந்தார். இறுதிச் சடங்கை முடித்துவிட்டு நேராக நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார். தாயார் இறந்த அன்று விடுப்பு எடுக்காமலேயே இறுதிச் சடங்கைச் செய்து முடித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் நோய்ப்படுக்கையில் இருக்கும் தனது உறவினரைப் பார்க்க வேண்டும் என்றாலோ, இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கோரினாலோ, அந்த நாள் விடுமுறையாக இருந்தாலும் நீதிமன்றத்துக்கு வந்து விசாரித்து, அவருடைய கோரிக்கையை ஏற்று அனுமதி தருவார். எனவே பல எதிரிகள் அவரை வாழ்த்திப் பாராட்டுகின்றனர். அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்த பிறகு நடந்த விசாரணைக்கு நடிகர் சஞ்சய் தத் வரவில்லை. அவருக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி கோடே, ஏன் வரவில்லை என்று கேட்டார். அமெரிக்காவிலிருந்துவர விமானம் கிடைக்காததால் தாமதம் ஆனது என்று கூறி வருத்தம் தெரிவித்தார் சஞ்சய் தத்.

சாய் பாபாவின் பக்தரான கோடே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரியபோது உடனே அளித்து அனுப்பிவைத்திருக்கிறார்.

ஹிந்தி திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார். கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது பிடிக்கும். ஆனால் மரண தண்டனை அளித்தபோது, இதைவிட பெரிய தண்டனை தர முடியாது என்பதால் மரண தண்டனை அளிப்பதாகக் கூறியிருக்கிறார்.

மும்பை அரசு சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞர் ஆனார். 1987-ல் அரசு வழக்கறிஞரானார். பிறகு சிவில், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியானார். நேர்மை, திறமை காரணமாக 1993-ல் முதன்மை நீதிபதியானார். 1996 மார்ச் முதல் சிறப்பு தடா நீதிமன்ற நீதிபதியானார்.

———————————————————————————————————-

சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல்

பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ.25,000 அபராதம் ஆகியவற்றை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது. பிறகு அவர் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

1993-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்துவரும் “தடா’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோடே இந்தத் தண்டனைகளை விதித்தார்.

“காவல்துறையின் உரிய அனுமதியின்றி ஆயுதச் சட்டத்துக்கு விரோதமாக, “பிஸ்டல்’ என்று அழைக்கப்படும் கைத்துப்பாக்கியையும், “”ஏ.கே. 56” ரக தானியங்கி இயந்திரத் துப்பாக்கியையும் வைத்திருந்தது, பிறகு அவற்றை 3 நண்பர்கள் மூலம் அழித்தது, மும்பை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகள் மூலம் மிகப்பெரிய நாசவேலைகளை நடத்திய சமூக விரோதி அனீஸ் இப்ராஹிமுக்கு நண்பனாக இருந்தது, அவருடைய சகோதரரான தாவூத் இப்ராஹிமை துபையில் நடந்த விருந்தின்போது சந்தித்தது போன்ற குற்றங்களைச் செய்ததாக சஞ்சய் தத் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. மும்பை கலவரத்தின் முக்கிய சதிகாரர்களிடமிருந்து ஆயுதங்களை சஞ்சய் தத் வாங்கியிருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அவர் 18 மாதங்களைச் சிறையில் கழித்திருந்தார்; அதன் பிறகு அவருடைய நடத்தை கண்காணிக்கப்பட்டு நல்ல நடத்தையுடன் இருப்பதாக சான்றும் பெறப்பட்டது. அத்துடன் சமூகத்தின் மிக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள 4 பிரமுகர்கள், அவருக்கு நற்சான்றுப் பத்திரங்களை வழங்கியிருந்தனர். இவ்வளவுக்குப் பிறகும் அவருக்குத் தண்டனை விதிப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.

தவறு செய்துவிட்டேன்: நீதிபதி இத் தீர்ப்பை வாசித்தபோது சஞ்சய் தத்தின் உடல் லேசாக நடுங்கியது. முகத்தில் அச்சம் தெரிந்தது. கண்களில் கண்ணீர் திரள, தான் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புவதாக நீதிபதியைப் பார்த்துக் கூறினார். அதை நீதிபதி அனுமதித்தார்.

குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்ற சஞ்சய் தத், நீதிபதியை நோக்கி கூப்பிய கைகளுடன், “”14 ஆண்டுகளுக்கு முன்னால் நான் தவறு செய்துவிட்டேன்; சரண் அடைய எனக்கு அவகாசம் தாருங்கள்” என்று உடைந்த குரலில் கூறினார். நீதிபதி கோடே அவரைப் பார்த்து, “”எல்லோருமே தவறு செய்கிறார்கள்” என்றார்.

நீதிமன்றத்தில் சரண் அடைய என்னுடைய கட்சிக்காரருக்கு (சஞ்சய் தத்) கால அவகாசம் தரக்கோரி விரிவான மனுவைத் தாக்கல் செய்ய விரும்புகிறேன் என்றார் சதீஷ் மணிஷிண்டே. அதுவரை சஞ்சய் தத்தைப் போலீஸôர் கைது செய்யவோ, சூழ்நது நிற்கவோ கூடாது என்று வேண்டிக்கொண்டார்.

அதை நீதிபதி ஏற்று, சஞ்சய் தத் அருகில் செல்ல வேண்டாம் என்று போலீஸôருக்கு அறிவுறுத்தினார். பிறகு வாதங்களைக் கேட்டுவிட்டு, அவ்விதம் ஜாமீன் தர சட்டத்தில் வழி இல்லை என்று கூறி, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்க வேண்டும் என்று சஞ்சய் கோரினார். அதை அரசு வழக்கறிஞர் எதிர்த்தார்.

நீதிபதி கோடே, சஞ்சயின் அந்த கோரிக்கையைத் தாற்காலிகமாக ஏற்பதாகக் கூறி, ஆர்தர் சாலை சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டார்.

சஞ்சய் தத்துடன் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரூசி முல்லா என்ற அவருடைய நண்பரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதே சமயம் அவரை ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்கு சொத்து ஜாமீன் அளிக்குமாறு கூறினார்.

யூசுப் நல்வாலா, கேர்சி அடஜானியா என்ற வேறு இரு நண்பர்களுக்கு சிறைத் தண்டனை விதித்தார்.

ஆயுதம் வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகளும், வழக்கின் முக்கிய சாட்சியமான அதை அழித்ததற்காக 2 ஆண்டுகளும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று யூசுப் நல்வாலா என்பவருக்குத் தண்டனை விதித்தார். இவ்விரு தண்டனைகளையும் ஒரே சமயத்தில் அனுபவிக்க வேண்டும் என்றார்.

கேர்சி அட்ஜானியாவின் பட்டறையில்தான் பிஸ்டலும் ஏ.கே.56 ரக துப்பாக்கியும் அழிக்கப்பட்டன. அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நல்வாலா, அட்ஜானியா ஆகிய இருவருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. நல்ல நடத்தையின் பேரில் தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் சஞ்சய் தத் கோரியிருந்தார். அதை நீதிபதி ஏற்க மறுத்தார்.

சட்டவிரோதமாக ஒன்றல்ல, இரண்டு ஆயுதங்களை வைத்திருந்தீர்கள், அதிலும் ஏ.கே. 56 ரக துப்பாக்கி தற்காப்புக்கானது அல்ல, மிகப்பெரிய நாசத்தை ஏற்படுத்தக்கூடிய நவீன கொலைக் கருவி; இவற்றை வைத்திருப்பது தவறு என்று தெரிந்தவுடன் போலீஸôரிடம் ஒப்படைக்காமல் 3 பேரை இதில் ஈடுபடுத்தி அவர்களிடம் தந்து அழித்திருக்கிறீர்கள். இதைச் சாதாரணமான செயலாகக் கருதிவிட முடியாது என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஜ்வல் நிகமைப் பார்த்து, உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.

“3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கும்படியான குற்றத்தைச் செய்த எவரையும் நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்ய சட்டத்தில் வழி இல்லை’ என்று உஜ்வல் நிகம் அவருக்குப் பதில் சொன்னார்.

வழக்கு முடிந்ததும் நடிகர் சஞ்சய் தத், உஜ்வல் நிகமிடம் சென்று, “”நன்றி ஐயா” என்று கூறி கையை குலுக்கினார்.

———————————————————————————————————-

சஞ்சய்தத்துக்கு ஜெயில் இந்தி சினிமா உலகில் ரூ.80 கோடி இழப்பு

மும்பை, ஆக. 1-

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய்தத் கைதாகி முன்பு ஜெயலில் இருந்த போது இந்தி சினிமா உலகில் பல கோடி இழப்பு ஏற்பட்டது.

இப்போது 6 ஆண்டு சிறை தண்டனை கிடைத்து ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பதால் அதே போன்ற இழப்பை மீண்டும் இந்தி சினிமா உலகம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சஞ்சய்தத் வாழ்க்கை யில் சோகமே தொடர் கதை யாக தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

இளைஞராக இருந்த போது அவரது வாழ்க்கையில் போதை பழக்கம் தொற்றிக் கொண்டது. இதில் அடிமை யாகி கஷ்டப்பட்ட அவர் அதில் இருந்து ஒரு வழியாக மீண்டு வெளியே வந்தார்.

இந்த நிலையில் திருமணம் நடந்தது. நடிகை ரிச்சாசர்மாவை திருமணம் செய்தார். அவர் இறந்து விட்டார். அடுத்து 2-வதாக ரீனா பிள்ளையை திருமணம் செய்தார். இந்த திருமணமும் அவருக்கு நிலைக்கவில்லை. ரீனா பிள்ளை விவாகரத்து ஆகி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவரது ஆரம்ப கால வாழ்க்கை அவரை மோசமாகவே சித்தரித்தது.

ஆனால் அவருடைய படங்கள் வெற்றிக் கொடி காட்டியதால் அவருக்கு இருந்த கெட்டப் பெயர் மறைந்து நல்லவர் என்ற இமேஜை ஏற்படுத்தியது.

இந்தி சினிமா உலகில் அவரது படங்களுக்கு என்று ஒரு மவுசு ஏற்பட்டது. ரசிகர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது. இதன் விளைவு அவர் நடித்து வெளிவந்த படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி ரூபாய்களை சம்பாதித்து கொடுத்தது.

இடையில் குண்டு வெடிப்பு வழக்கில் அவர் கைதாகி ஜெயிலில் இருந்த போது கூட அவர் மவுசு குறையவே இல்லை.

முதலில் அவருடைய கல்நாயக் படம் பெரும் வெற்றி பெற்றது போல மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி தவித்த நேரத்தில் நடித்த முன்னா பாய் படமும் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தில் மட்டும் ரூ.70 கோடி வரை லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது.

சஞ்சய்தத் படம் என்றால் எத்தனை கோடி வேண்டு மானாலும் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். அவர் நடித்த விளம்பர படங்களுக்கும் நல்ல மவுசு இருந்தது. இப்போது கூட அவர் விளம்பரம் என்றால் அதற்கு தனி மரியாதை இருக்கிறது என்று விளம்பர நிறுவனம் ஒன்றின் தலைவர் சந்தோஷ் தேசாய் கூறினார்.

அவரால் இன்னும் 10 வருடங்களுக்கு இந்தி சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால் இப்போதைய 6 ஆண்டு ஜெயில் தண்டனை பெரும் இழப்பை ஏற்படுத்தி விடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

தற்போது அவர் மிஸ்டர் பிராடு அலிபங்க், கிட்னாப் ஆகிய 3 படங்களில் நடித்து வந்தார். ஜெயிலில் அடைக்கப்பட்டதால் இந்த படங்கள் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் ரூ.70 கோடியில் இருந்து 80 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

ஒரு வேளை ஜாமீன் கிடைத்து வெளியே வந்தால் இழப்பை சரிகட்ட வாய்ப்பு உள்ளது.

இப்போதைய 3 படங் களையும் முடித்த பிறகு முன்னாபாய் சலே அமெ ரிக்கா என்ற படத்தில் நடிக்க இருந்தார். இதை பிரமாண் டமான முறையில் தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர். அதற்கும் ஆபத்து ஏற்பட் டுள்ளது.
—————————————————————————————————–
கடும் குற்றவாளி என்பதால் சஞ்சய் தத்துக்கு ஜெயிலில் வேலை: தினசரி ரூ.40 சம்பளம்

முப்பை, ஆக. 2-

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று முன்தினம் மும்பை தடா கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடிகர் சஞ்சய்தத் அடைக்கப்பட்டார். முதலில் அவருக்கு சிறைக்குள் 10-ம் நம்பர் செல் ஒதுக்கப்பட்டது. அதே பகுதியில் தீவிரவாதிகள் உள்ளதால், பாதுகாப்பு கருதி ஒன்றாம் நம்பர் செல்லுக்கு சஞ்சய்தத் மாற்றப்பட்டார்.

ஒன்றாம் நம்பர் செல் “புத்தர் செல்” என்றழைக்கப்படுகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு நடிகர் சஞ்சய் தத் சரியாக தூங்கவில்லை. மிக, மிக கவலையான முகத்துடன் இருந்த அவருக்கு ஜெயில் அதிகாரிகள் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்ததாக கூறப்படுகிறது.

யாருடனும் பேசாமல் வாடியபடி இருந்த சஞ்சய்தத் உணர்ச்சி வேகத்தில் ஏதாவது செய்து விடக்கூடாது என்பதற்காக அவரது அறைமுன்பு 4 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் சஞ்சய்தத்தை கண்காணித்தப்படி இருந்தனர். சஞ்சய்தத் தனக்கு பிடித்தமான மார்ல்போரோ லைட்ஸ் சிகரெட்டுகளை தொடர்ந்து பிடித்துக்கொண்டே இருந்தார்.

நேற்று காலை அவருக்கு கைதிகளுக்கான உடை கொடுக்கப்பட்டது. கண்கலங்கியபடி அதை வாங்கி சஞ்சய்தத் அணிந்து கொண்டார். காலையில் டீ, பிஸ்கட், ரொட்டி, ஆப்பிள் ஆகியவற்றை சாப்பிட்டார். காலை நேர ஜெயில் உணவை வேண்டாம் ன்று கூறி விட்டார். வழக்கமாக ஆர்தூர் ஜெயில் கைதிகளுக்கு தினமும் காலை யோகாசன பயிற்சி வழங்கப்படுகிறது. நேற்றும், இன்றும் சஞ்சய்தத் யோகாசன வகுப்புக்கு செல்லவில்லை.

நேற்று மதியம் சஞ்சய்தத்துக்கு 4 ரொட்டி, அரிசி உணவு, பருப்பு வகைகள் வழங்கப்பட்டது. அவற்றை சாப்பிட்ட பிறகு மதியம் அவர் சிறிது நேரம் தூங்கினார். மனச்சோர்வுடன் காணப்பட்ட அவர் தூங்கி முழித்த பிறகும் பதட்டமான நிலையில் தான் இருந்தார்.

நேற்று மாலை அவரை சகோதரிகள் பிரியா, நம்ரதா ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். உடைகள், டவல், சோப்பு, சீப்பு, பற்பசை, பவுடர், போன்றவற்றை கொடுத்தனர். சுமார் 15 நிமிடம் அவர்கள் சஞ்சய் தத்திடம் பேசி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். அவர்களிடம் சஞ்சய்தத், நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.

நேற்றிரவு சஞ்சய்தத் சற்று சகஜ நிலைக்கு திரும்பினார். நேற்று மதியம் வரை சஞ்சய்தத்துக்கு அவரது நண்பர் ïசுப் பேச்சுத் துணையாக இருந்தார். நேற்றிரவு சஞ்சய்தத் அடைக்கப்பட்டிருந்த செல் அருகே உள்ள பிரவீன் மகாஜன், சஞ்சய்தத்துக்கு கம்பெனி கொடுத்தார். பா.ஜ.க. தலைவர் பிரமோத்மகாஜனை கொன்ற வழக்கில் சிறைக்குள் இருக்கும் பிரவீன் மகாஜன் நேற்றிரவு சஞ்சய் தத்துக்கு ஆறுதல் கூறியபடி இருந்தார்.

நேற்று இரவு அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர். பிறகு தூங்கச் சென்ற போது சஞ்சய்தத் கண் கலங்கினார். அவர் வாய் விட்டு அழுததாகவும் கூறப்படுகிறது.

அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் மின் விசிறி வசதி இல்லை. கொசுவர்த்தியும் கொடுக்க வில்லை. பாய், தலையனை மட்டுமே கொடுக்கப்பட்டது. அதை ஒதுக்கி விட்டு சிமெண்ட் பெஞ்சில் அவர் நேற்றிரவு தூங்கினார். அவர் சரியாக தூக்கவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

சஞ்சய்தத் தற்போது அடைக்கப்பட்டுள்ள ஆர்தர்சாலை ஜெயில், விசாரணை கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கக் கூடிய ஜெயிலாகும். எனவே அவரை அந்த சிறையில் தொடர்ந்து வைத்து இருக்க இயலாது என்று கூறப்படுகிறது. அவரை வேறு ஜெயிலுக்கு மாற்றுவது குறித்து தடா கோர்ட்டு இன்று உத்தரவிடுகிறது. மராட்டிய மாநிலத்தில் உள்ள வேறு ஜெயிலுக்கு அவர் மாற்றப்படுவார் என்று தெரிகிறது. சஞ்சய்தத்துக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் ஜெயிலுக்குள் கண்டிப்பாக ஏதாவது வேலை பார்க்க வேண்டும் என்பது விதியாகும்.

கடுங்காவல் தண்டனை கைதிகள் சமையல், தச்சு, விவசாயம் மற்றும் கைத்தறி பணிகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு வேலையை தேர்வு செய்து செய்ய வேண்டும். சஞ்சய்தத் என்ன வேலை செய்யப்போகிறார் என்பது இன்னமும் தெரிய வில்லை. இப்படி வேலைபார்ப்பதற்கு சஞ்சய்தத்துக்கு தினசரி கூலியாக 40 ரூபாய் வழங்கப்படும்.

சஞ்சய்தத் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளார். அதில் அவருக்கு விடுதலை கிடைக்குமா என்பது உறுதியாக தெரியாது. எனவே ஜெயில் அதிகாரிகள், மற்ற வழக்கமான கைதிகளை நடத்துவது போல சஞ்சய்தத்தையும் நடத்த தொடங்கி உள்ளனர்.

சஞ்சய்தத் அடைக் கப்பட்டுள்ள சிறைக்குள் தற்போது மேலும் 2 கைதிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே கழிவறைதான். இது சஞ்சய்தத்துக்கு பெரும் அவதியை கொடுத்துள்ளது.

நள்ளிரவுக்கு பிரகே தூங்கி பழக்கப்பட்டவர் சஞ்சய்தத். ஆனால் நேற்றிவு 8 மணிக்கு சிறை விளக்குகள் அனைக்கப்பட்டதும் அவர் மிகவும் அவதிக்குள்ளானார்.
—————————————————————————————————–

சிறையில் என்ன செய்கிறார் சஞ்சய் தத்?

01 ஆகஸ்ட் 2007 – 14:43 IST

இதுவரை விசாரணைக் கைதியாக சிறையில் பல சலுகைகளை அனுபவித்து வந்த நடிகர் சஞ்சய் தத், தற்போது தண்டனை கைதியாகிவிட்டதால் அவற்றை இழக்கிறார்.

பாலிவுட் உலகில் கொடிகட்டு பறந்து, அகில இந்திய அளவில் பிரபலமானவராக திகழ்ந்த நடிகர் சஞ்சய் தத் தற்போது மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோடிக்கணக்காண ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் பெயரை உச்சரித்து சந்தோஷப்பட்ட நிலையில், சிறையில் சஞ்சய் தத் இனி அவருக்குறிய கைதி எண்ணால் மட்டுமே அழைக்கப்படுவார்.

பொதுவாக சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கும், தண்டனை கைதிகளுக்கும் அளிக்கப்படும் சலுகைகளில் வேறுபாடுகள் உள்ளன.

விசாரணை கைதிக்கு வீட்டில் இருந்து வரும் உணவு, உடைகள், வாரம் ஒருமுறை உறவினர்களை சந்திப்பது உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படும். இந்த சலுகைகளை தண்டனைக் கைதியான சஞ்சய் தத் இனி எதிர்பார்க்க முடியாது.

இரண்டு ஜோடி சிறை சீருடை மட்டுமே இனி அணிவதற்கு சஞ்சய் தத் அனுமதிக்கப்படுவார். மாதம் ஒருமுறை மட்டுமே உறவினர்கள் சந்திக்க முடியும்.

விசாரணை கைதிகள் ஒரு ரூபாய் கட்டணத்தில் ஆடைகளை சுத்தம் செய்து கொள்ள முடியும். ஆனால் தணடனை கைதிகள் தங்கள் உடைகளை தாங்களே துவைத்துக் கொள்ள வேண்டும்.

சிறையில் செலவிடும் காலத்தில் தச்சு வேலை, தோட்ட பராமரிப்பு, மெக்கானிக் வேலை உட்பட சில தொழில்களில் ஏதாவது ஒன்றை தண்டனை கைதி கற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு தினசரி சம்பளமாக துவக்கத்தில் ரூ.12ம் பின்னர் இது ரூ.20 ஆக உயர்த்தியும் வழங்கப்படும். இந்த வகையில் சேரும் தொகை, தண்டனை காலம் முடிந்து கைதி விடுதலையாகும்போது அவருக்கே வழங்கப்படும்.

தண்டனை கைதிக்கு காலை ஒரு கோப்பை டீ மற்றும் காலை உணவாக சிற்றுண்டி மற்றும் பழம் வழங்கப்படும். காலை 8 மணிக்கு பின் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை மாலை 4 மணி வரை இவர்கள் செய்ய வேண்டும்.

மதிய உணவு 12 மணிக்கு வழங்கப்படும். சப்பாத்தி, அரிசி உணவு வகைகள் மற்றும் காய்கறி இதில் இடம்பெறும். இரவு உணவு மாலை 6 மணிக்கு முன்னதாகவே வழங்கப்படும். இதுவும் மதிய உணவு வகைகளை ஒத்தே இருக்கும்.

—————————————————————————————————–

என்ன வேலை தேர்ந்தெடுப்பார் சஞ்சய் தத்…?

புணே, ஆக. 4: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு அவரது விருப்பத்துக்கு ஏற்ற வேலை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் (48) வியாழக்கிழமை புணே “ஏர்வாடா’ சிறைக்கு மாற்றப்பட்டார்.

சிறை விதிகளின்படி,

  • ஜவுளி,
  • சலவை,
  • பேக்கரி,
  • பேப்பர் பிரிண்டிங்,
  • தச்சு வேலை,
  • பெயிண்டிங் ஆகியவற்றில்

ஏதாவது ஒரு கூலி வேலையை அவர் செய்தாக வேண்டும்.
“பொதுவாக கைதிகளின் விருப்பத்தைக் கேட்டு அதற்கேற்ப அவர்களுக்கு வேலை ஒதுக்கப்படுவது சிறை வழக்கம். சஞ்சய் தத்திடமும் அவரது விருப்பம் கேட்கப்படும்’ என்றார் உயரதிகாரி ஒருவர்.

இரண்டு முக்கிய காரணங்களுக்காக, மும்பை சிறையிலிருந்து புணே சிறைக்கு சஞ்சய் தத் மாற்றப்பட்டுள்ளார்.

மும்பை ஆர்தர் சாலை சிறையில் பெரும்பாலும் விசாரணைக் கைதிகளே அதிகம் பேர் இருக்கின்றனர். எனவே அங்கு சஞ்சய் தத்துக்கு கட்டாயப் பணி அளிக்க முடியாது.

இரண்டாவது நடிகரின் பாதுகாப்பு. முட்டை வடிவிலான மும்பைச் சிறையில் பயங்கரவாதிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக அந்தச் சிறையில் கடுமையான விதிகள், பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

எனவே சஞ்சய் தத்தை அங்கு வைத்திருக்க முடியாது என்பதால், புணே சிறைக்கு மாற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரந்து விரிந்து காணப்படும் புணே சிறையில் தண்டனைக் கைதிகள் அதிகம் பேர் உள்ளனர். இவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்களை வெளிச்சந்தையில் விற்பது மூலம் நல்ல வருவாய் ஈட்டப்படுகிறது.

—————————————————————————————————–

ஜெயிலில் வேலை: பிரம்பு நாற்காலி செய்யும் நடிகர் சஞ்சய்தத்

புனே, ஆக. 8-

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் புனே ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கும் கைதிகள் ஜெயிலில் கொடுக்கப்படும் ஏதாவது வேலைகளை செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறது.

இதற்காக பல வேலைகள் உண்டு. இதில் எந்த வேலை செய்ய விருப்பமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ள லாம்.

அவரை தச்சு வேலை செய்யும்படி ஜெயில் அதிகாரி கள் கேட்டுக் கொண்டனர். அதில் அவருக்கு விருப்பம் இல்லை. பிரம்பு நாற்காலி செய்யும் வேலையும் அந்த ஜெயிலில் உள்ளது.

அதை செய்ய விருப்பம் தெரிவித்து இருப்பதாக சஞ்சய்தத் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே அவர் பிரம்பு நாற்காலி செய்ய அனுமதிக் கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக அவருக்கு தின மும் ரூ.40 சம்பளம் வழங்கப்படும்.

இந்தியின் முன்னணி நடிக ராக இருந்த அவர் பலகோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார். இன்று அவர் 40 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
———————————————————————————————————————–

சல்மான்கான், சஞ்சய்தத் கைது: இந்திபட உலகில் ரூ.200 கோடி முடக்கம்

மும்பை, ஆக. 30-

ஒரே நேரத்தில் இந்தித் திரையுலகமான பாலி வுட்டின் முன்னணி நடிகர் கள் இருவர் சிறை தண்டனை அடைந் திருப்பது அப்பட உலகை ஸ்தம்பிக்க செய்துள்ளது.

இரண்டு பேரையும் ஹீரோ வாக வைத்து தயாரிப்பில் உள்ள 10 படங்களின் தயாரிப் பாளர்கள் தாங்கள் போட்ட முதலீடு என்னாவாகுமோ என்று கலக்கத்தில் உள்ளனர். தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். சஞ்சய்தத், சல்மான்கான் கைதானதால் பாலிவுட்டில் சுமார் ரூ.200 கோடி முடங்கிப் போய் உள்ளது. அவர்களால் 10 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் நூற்றுகணக்கான தொழிலாளர்கள் வேலை யின்றி தவிக்கின்றனர் என்று தங்கள் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள் இந்தித்திரையுலகின் பெரும் புள்ளிகள். சஞ்சய்தத்தை கதாநாயகனாக வைத்து டஸ்கஹானியன், முன்னாபாய் சாலே அமெரிக்கா, அலிபாக், கிட்நாப், மிஸ்டர் பிராட் ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.

சல்மான்கான் நடிப்பில் மேராபாரட் மஹான், மெயின் யுவ்ராஜ், வாண்டட் டெட்அன்ட் அலைவ் (போக்கிரி ரீமேக்), ஹலோ, ஹாட்டுஸ்ஸி கிரேட் ஹோ ஆகியபடங்கள் தயாரிப்பில் உள்ளன.

இதில் வாண்டட் டெட் ஆர்அலைவ் படத்தை தயாரித்து வரும் பட வேலைகள் ஆரம்ப கட்டத்தில் இருந் தாலும் அதன் தயாரிப் பாளர் போனிகபூர் (நடிகை ஸ்ரீதேவியின் கணவர்) சல்மான்கானை அந்த படத்திலிருந்து நீக்க தயாரில்லை. “போக்கிரி ரீமேக் படத்தின் கதா நாயகன் வேடத்திற்கு சல்மான்கான் தான் பொருத்தமாக இருப்பார். எனவே படத்திலிருந்து அவரை நீக்கும் எண்ணம் இல்லை” என்கிறார் போனிகபூர்.

இரண்டு பாலிவுட் ஹீரோக்களும் ஒரே நேரத்தில் ஜெயில் தண்டனை பெற்றிருப்பதும் அவர்கள் படங்கள் முடங்கிப்போய் கிடப்பதும் இந்திய சினிமாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

“இது பாலிவுட்டிற்கு கெட்ட நேரம். சோனிபிக்ஸர்ஸ், வார்னர் பிரதர்ஸ் போன்ற பிரபல ஹாலிவுட் பட நிறுவனங்கள் இந்திய படஉலகில் முதலீடு செய்ய நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் பாலிவுட்டின் இரண்டு முன்னணி ஹீரோக் கள் சிறை தண்டனை பெற்றிருப்பது அந்நிறு வனங்கள் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டத்தை உண்டாக்கும் என்கிறார் இந்திப் படஉலகின் வர்த்தகத் துறையை சேர்ந்த டாரன் அதார்ஷ்.

Posted in abuse, Acquaintance, Actors, Actress, AK-47, AK47, Arms, Black, Blast, Bollywood, Bombay, Bombs, Bullets, cancer, Capital, case, Cash, Celebrity, Cinema, Cocaine, Compensation, Corrections, Cost, Courts, Crime, Currency, dead, Drugs, Dutt, Economy, Extremism, Extremists, Fame, Father, Films, Finance, Gode, Godey, guns, HC, Income, Jail, job, Judge, Justice, kalashnikov, Kodey, Kote, Law, Loss, Misa, Movies, MP, Mumbai, Munnabai, Munnabhai, Nargees, Nargis, Order, Police, POTA, Prison, Producer, Production, Profits, Punishment, release, revenue, Rifles, Rupees, Salary, Sanjai, Sanjay, SC, Sentence, Son, Sunil, Sunil Dutt, TADA, terror, Terrorism, terrorist, Terrorists, verdict, Violence, Weapons, Work | Leave a Comment »

Actors Activism – Is it for selfish purposes? (Dinakaran Survey)

Posted by Snapjudge மேல் மே 10, 2007

நடிகர்களுக்கு நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை…

சினிமா மீது தமிழர்களுக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு. நடிகர்களுக்காக எதையும் செய்ய பலர் காத்திருக்கிறார்கள். ஆனால் பதிலுக்கு நடிகர்கள்…?

ஆம்… அதை பற்றித்தான் தமிழக மக்களிடம் கேட்கப்பட்டது. நடிகர்களுக்கு, நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை எப்படி என்பதுதான் கேள்வி.

மக்களிடம் நடிகர்கள் அக்கறை கொண்டிருப்பதற்கு காரணம் தங்கள் படம் ஓட வேண்டும் என்பதற்குத்தான் என பெரும்பாலானவர்கள் கருத்துச் சொல்லியுள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் சரியாக பாதி பேர், அதாவது 50 சதவீதம் பேர் இப்படித்தான் சொல்கிறார்கள்.

  • நடிகர்களின் அக் கறையில், தங்கள் படம் ஓட வேண்டும் என்ற சுயநலம் கலந்து இருக்கிறது என்கின்றனர் மக¢கள்.
  •  Ôஅரசியலுக்கு வருவதற்காகத்தான்Õ மக்கள் மீது நடிகர்கள் அக்கறையை கொட்டுகின்றனர் என்பது 31 சதவீதம் பேரின் கருத்து.
  • நடிகர்களின் அக்கறை `உண்மையானது‘ என்று முழுமையாக நம்புபவர்கள் 14 சதவீதம் பேர் மட்டும்தான்.
  • இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்காதவர்கள¢ 5 சதவீதம் பேர்.

நடிகர்களின் அக்கறையை விளாசித் தள்ளியவர்களில் நாகர்கோவில் மக்களுக்குத்தான் முதலிடம். அங்கு 65 சதவீதம் பேர், படம் ஓடுவதற்காகத்தான் நடிகர்கள் அக்கறையாக இருக்கிறார்கள் என அதிரடியாக கூறி உள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக சென்னைவாசிகள் நடிகர்களை காய்ச¢சி எடுக்கிறார்கள். 58 சதவீத சென்னைவாசிகளுக்கு நடிகர்கள் அக்கறையின் பின்னணி புரிந்திருக்கிறதாம்.

வேலூர் (55 சதவீதம்), சேலம் (52), கோவை (48), திருச்சி (52), மதுரை (51), நெல்லை (43) பகுதிகளிலும் இந்த கருத்துதான் அதிகம் நிலவுகிறது.

புதுவை மக்களில் 30 சதவீதம் பேர் படம் ஓட வேண்டும் என்பதுதான் நடிகர்களின் அக்கறைக்கு காரணம் என கூறியுள்ளனர். 39 சதவீதம் பேர், அவர்களின் அரசியல் ஆசையை காரணம் காட்டுகின்றனர்.

நடிகர்களுக்கு மக்கள் மீது உள்ள அக்கறை Ôஅரசியலுக்கு வருவதற்காகத்தான்‘ என ஒரே போடாக போடுபவர்கள் கொங்கு மண்டலத்தினர்தான். கோவைவாசிகளில் 42 சதவீதம் பேர் இவ்வாறு கூறியுள்ளனர். சென்னையில் இப்படிச் சொன்னவர்கள் 30 சதவீதம் பேர். வேலூர் (37 சதவீதம்), சேலம் (27), திருச்சி (26), மதுரை (30), நெல்லை (30), நாகர்கோவில் (21 சதவீதம்).

நடிகர்கள் அக்கறை நிஜமானதுதான் என அதிகம் நினைப்பவர்கள் நெல்லை சீமையினர்தான். அங்கு 26 சதவீதம் பேர் நடிகர்களின் அக்கறையை பார்த்து நெகிழ்கின்றனர். அதற்கு அடுத்து திருச்சி மக்களில் 18 சதவீதம் பேர் இம்மாதிரி உருகுகின்றனர். நடிகர்கள் அக்கறை உண்மையானது என¢பதில் நம¢பிக்கையில்லாதவர்களாக வேலூர், கோவைவாசிகள் உள்ளனர். இப் பகுதிகளில், 8 சதவீதம் பேர்தான் நடிகர்களின் அக்கறையை நம்புகின்றனர்.

Posted in activism, Actors, Actress, Actresses, Cinema, Dinagaran, Dinakaran, Films, Movies, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Selfish, Society, Stars, Sun, Sun TV, Survey, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, TV, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Welfare | Leave a Comment »