Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007
மார்க்சிஸ்ட்டின் போபர்ஸ் இது!
கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியில், மாநில பொதுச்செயலர் பினராயி விஜயனுக்கும், முதல்வர் அச்சுதானந்தனுக்கும் உள்ள பகை, எல்லாருக்கும் தெரிந்தது தான். அச்சுவுக்கு டிக்கட் தராவிட்டால், நானும் நிற்காமல் இருக்கத்தயார் என்று மேலிடத்திடம் சண்டை பிடித்து, வெற்றி கண்டவர். ஆனால், அச்சுவை நிறுத்தினால் தான், ஆட்சியை பிடிக்க முடியும் என்று கட்சியில் பலரும் சொல்லவே, அச்சுவுக்கு “டிக்கட்’ தரப்பட்டு, கடைசியில், அவர் முதல்வராகவும் ஆகிவிட்டார். அப்படியும் விடவில்லை பினராயி. மூணாறு ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவரை சீண்டிய அச்சுவுடன், “தெருச்சண்டை’ பாணியில் சண்டை போட, அவர்கள் இருவரையுமே, நான்கு மாதம் தற்காலிகமாக கட்சிப் பதவியிலிருந்து நீக்கி வைத்தது தலைமை. சமீபத்தில் தான் அதை ரத்து செய்தது.
பினராயிக்கு அதனால் மகிழ்ச்சி ஏற்பட்டதை விட, அச்சுவின் அடுத்த “மூவ்’ தெரிந்தவுடன் பயம் கவ்விக்கொண்டு விட்டது. இந்த முறை, பினராயியை ஒதுக்கி, தன் வழிக்கே வர விடாமல் செய்ய கிடைத்துள்ள ஆயுதம் தான், 400 கோடி ரூபாய் “லாவலின்’ ஊழல் விவகாரம். முன்பு, மார்க்சிஸ்ட் ஆட்சி இருந்தபோது, மின்சார அமைச்சராக இருந்த பினராயி, கனடா நாட்டின் “லாவலின்’ நிறுவனத்திற்கு டெண்டர் அளித்தார். அதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக அப்போது புகார் கிளம்பியது. காங்., அரசு வந்தபோது, அதுகுறித்து விசாரிக்க வழக்கு பதிவு செய்யப்பட்டது. சொந்தக்கட்சியின் ஆட்சி இருக்கும் நிலையில், பினராயி, இந்த வழக்கில் இருந்து தப்ப முடியும். ஆனால், அச்சுவின் தனிப்பட்ட விரோ தத்தை சம்பாதித்து விட்டதால், அவர் தப்ப வழியில்லாமல் உள்ளது. வழக்கை துõசி தட்டி மீண்டும் சி.பி.ஐ., கையில் எடுத் துள்ளது. எந்த நேரத்திலும், பினராயி உட்பட சிலர் மீது குற்றப்பத் திரிகை தாக்கல் செய் யப்படலாம்.
பினராயி மீதான இந்த ஊழல் குறித்த ஆவணங்களை எல் லாம், கட்சி பொலிட்பீரோவிடம் அளித்துவிட்டார் அச்சு. “லாவலின்’ விவகாரம் பற்றி, கட்சி தேசிய பொதுச்செயலர் பிரகாஷ் கராத், சீதாராம் யெச்சூரி பேசாமல் நழுவி வந்தனர். ஆனால், விரைவில் அவர்கள் இது பற்றி கருத்து சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுவர்!
“பழி வாங்கும் குணம், மனிதனுடனே பிறந்தது சரிதான்’ என, அவர்களது கட்சிக்காரர்களே கூறுகின்றனர்.
Posted in Achudhanandan, Achuthanandhan, Achuthananthan, Assets, Bofors, Bribery, Bribes, CBI, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Corruption, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dada, Desabhimani, Desabimani, Don, encroachments, Headquarters, HQ, Investigation, KC(S), Kerala, Kerala State Electricity Board, kickbacks, KSEB, Land, lavalin, Levelin, lottery, mafia, Malayalam, Mallu, Mathrubhoomi, Mathruboomi, Matrubhoomi, Matruboomi, Moonaar, Moonar, Moonaru, Moonnaar, Moonnaaru, Munnaar, Munnaaru, Munnar, Munnaru, Pinarayee, Pinarayi, Politburo, Politics, Santiago, SNC Lavalin, Tehelka, Thalasserry, Thesabhimani, Thesabimani, Vigilance, Vijaian, Vijaiyan, Vijayan | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006
மத்திய அமைச்சரவையில் ஏ.கே.அந்தோணி கேரளாவுக்கு 2-வது மந்திரி
திருவனந்தபுரம், அக். 25-
மத்திய மந்திரிசபை நேற்று மாற்றம் செய்யப்பட்டது புதிய மந்திரியாக 3 பேர் பதவி ஏற்றனர். ஏ.கே.அந்தோணி ராணுவ மந்திரியாகவும், கன்னட நடிகர் அம்பரிஷ், ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவ் ஆகியோர் இணை மந்திரிகளாகவும் பதவி ஏற்றுள்ளனர்.
ஏ.கே.அந்தோணிக்கு மந்திரிபதவி வழங்கப்பட்டதின் மூலம் கேரளாவுக்கு 2-வது மத்திய மந்திரி பதவி கிடைத்துள்ளது. ஏற்கனவே வயலார்ரவி வெளிநாட்டு இந்தியர் விவகாரங்கள் மந்திரியாக உள்ளார். தற்போது ஏ.கே.அந்தோணிக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆலப்புழை மாவட்டம் சேர்தலையில் 1940 டிசம்பர் மாதம் 28-ந்தேதி எளிய குடும்பத்தில் பிறந்தவர் ஏ.கே.அந்தோணி. சட்டக்கல்லூரி பயின்று பட்டம்பெற்று காங்கிரஸ் ஆதரவு கேரள மாணவர் சங்கத்தை நடத்தி புகழ்பெற்றார்.
ஏ.கே.அந்தோணிக்கு தற்போது 65 வயது. 3 முறை கேரள முதல் மந்திரியாக இருந்துள்ளார். இரண்டு முறை முதல்வர் பதவியையும் மத்திய மந்திரி பதவியை ஒருமுறையும் ராஜினாமா செய்தவர். இவருக்கு தற்போதைய முதல் மந்திரி அச்சுதானந்தன் உள்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
Posted in Achuthananthan, AK Anthony, Cabinet, defence, Greet, Minister, NRI Ministry, Vayalar Ravi | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2006
கேரளத்தில் சிக்குன்குனியாவை கட்டுப்படுத்த அன்புமணி அறிவித்த உதவிகள் இதுவரை வரவில்லை: முதல்வர்
திருவனந்தபுரம், அக். 11: கேரள மாநிலத்தில் பரவி வரும் சிக்குன் குனியா நோயை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அமைச்சர் அன்புமணி அறிவித்த நிவாரண உதவிகள் இதுவரை வரவில்லை என அந்த மாநில முதல்வர் அச்சுதானந்தன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கேரள சட்டப் பேரவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அச்சுதானந்தன் இத்தகவலை தெரிவித்தார்.
ஆலப்புழை மாவட்டத்தில் சிக்குன்குனியா பாதிப்பு குறித்து அறிய கடந்த 6-ம் தேதி வந்த மத்திய அமைச்சர் அன்புமணி அறிவித்த உதவிகள் குறித்து பத்திரிகைகளில் பார்த்தேன். ஆனால், அத்தகைய உதவிகள் ஏதும் இதுவரை வரவில்லை.
இதுகுறித்து, தில்லியில் புதன்கிழமை நடைபெறும் மாநில சுகாதார அமைச்சர்களின் கூட்டத்துக்கு செல்லும் கேரள சுகாதார அமைச்சர், மத்திய அரசின் கவனத்துக்கு இவ்விவகாரத்தை கொண்டு செல்வார் என்றார். முன்னதாக ஆலப்புழை வந்த அன்புமணி, சிக்குன்குனியாவை பரப்பும் கொசுக்களைக் கட்டுப்படுத்த புகை அடிக்கும் இயந்திரம், கொசு வலைகள் ஆகியவற்றை சிறப்பு நிவாரணமாக கேரளத்துக்கு மத்திய அரசு அளிக்கும் என தெரிவித்திருந்தார்.
Posted in Achuthananthan, Anbumani, Chicken Kunya, Chiken Gunya, Chikun Kunya, Healthcare, Kerala, Outbreak, promises | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2006
சிக்குன்-குனியாவால் யாரும் சாகவில்லையா? அன்புமணிக்கு கேரள முதல்வர் கண்டனம்
திருவனந்தபுரம், அக். 6: சிக்குன்-குனியா காய்ச்சல் வந்து இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று அறிக்கை விடுத்ததற்காக மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணிக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார் கேரள முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன்.
மாநிலத்தின் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், கேரள காங்கிரஸ் (எம்) தலைவருமான கே.எம். மணி எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினைக்குப் பதில் அளித்து கேரள சட்டப் பேரவையில் வியாழக்கிழமை பதில் அளித்தபோது இக் கண்டனத்தை அவர் வெளியிட்டார்.
“கேரள அரசிடமிருந்து எந்தத் தகவலையும் கேட்டுப் பெறாமலே அமைச்சர் தில்லியில் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்; எதிர்காலத்தில் இப்படிச் செய்யக்கூடாது என்று பிரதமர்தான் அவருக்கு அறிவுறுத்த வேண்டும். கேரளத்தில் உள்ள நிலைமையை நேரில் அறிய மத்திய அரசு அனுப்பிய நிபுணர்கள் குழு புதன்கிழமைதான் திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளது. இப்படி இருக்கும்போது, சிக்குன் குனியாவால் யாருமே, எங்குமே சாகவில்லை என்று அமைச்சர் அன்புமணி எப்படி அறிக்கை வெளியிட்டார் என்று தெரியவில்லை’ என்றார் முதல்வர் அச்சுதானந்தன்.
முன்னதாகப் பேசிய கே.எம். மணி, “”அன்புமணியின் அறிக்கை குழப்பத்தையே தருகிறது; கேரளத்தில் என்ன நிலைமை என்று கேட்டுத் தெரிந்துகொண்டு அவர் அறிக்கை வெளியிட்டாரா என்று தெரியவில்லை” என்றார்.
அமைச்சரவை முடிவு: கேரள அமைச்சரவை புதன்கிழமை கூடி, சிக்குன்-குனியா, டெங்கு, எலிக் காய்ச்சல் ஆகியவை கேரளத்தின் 10 மாவட்டங்களில் பரவியிருப்பது குறித்து கவலையுடன் பரிசீலித்தது. (மொத்தமே 14 மாவட்டங்கள்தான்).
மாநிலம் முழுவதும் தீவிர சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இதற்கு முதல் கட்டமாக ஒரு கோடி ரூபாயை ஒதுக்குவது என்றும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அத்துடன் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என்று 400 பதவி இடங்களுக்கு உடனே ஆள்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
கேரளத்திலேயே, கிருமிகளைக் கண்டுபிடிக்கும் தனி ஆய்வகத்தை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
75 பேர் சாவு: இதுவரை கேரளத்தில் மட்டும் 75 பேர் சிக்குன்-குனியா காய்ச்சல் வந்த பிறகு இறந்திருக்கிறார்கள். அவர்களில் 68 பேர் ஆலப்புழை மாவட்டத்தில் இறந்திருக்கிறார்கள். இதுவரை ஒரு லட்சம் பேருக்கு இக் காய்ச்சல் வந்திருக்கிறது.
சுற்றுலாத் தொழிலும் பாதிப்படைந்திருக்கிறது. கேரளத்துக்கு வர சுற்றுலாப் பயணிகள் அஞ்சுகின்றனர். ஆலப்புழை, குட்டநாடு, குமரகம், கோவளம், கொல்லம் ஆகிய முக்கிய சுற்றுலா மையங்களில் சிக்குன்-குனியா பரவியிருக்கிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டம்: சிக்குன்-குனியா நோயைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிய முதல்வர் அச்சுதானந்தன், திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புதன்கிழமை இரவு கூட்டியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்கள் அதில் கலந்து கொண்டனர்.
முதலில் மாவட்ட அளவிலும் பிறகு வட்ட அளவிலும் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்ட முடிவெடுத்தனர்.
Posted in Achuthananthan, Anbumani, Chicken Kunya, Chikun Gunya, Chikun Kunya, Chikunkunya, dead, Healthcare, Kerala, Misinformed, Outbreak, Ramadoss, Toll | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006
கேரளத்தில் 2-ம் நாளாக கோக், பெப்சி பாட்டில்கள் அழிப்பு போராட்டம்
திருவனந்தபுரம், செப். 25: கோக கோலா, பெப்சி பான பாட்டில்களை அழிக்கும் போராட்டம் கேரளத்தில் இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு இளைஞர் அமைப்பான அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த தொண்டர்கள், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கடையில் புகுந்து, கோக், பெப்சி பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டிகளைத் தூக்கி தெருவில் வீசி, பாட்டில்களை உடைந்து அழித்தனர் என்று போலீஸôர் கூறினர்.
வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸôர் தெரிவித்தனர்.
கேரளத்தில் கோக், பெப்சி உற்பத்தி, விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது.
எதிர்ப்பு இயல்பானதே – அச்சுதானந்தன்: கோலா கம்பெனிகளால் தண்ணீர் பிரச்சினையை எதிர்நோக்கும் மக்கள் இது போல எதிர்ப்பு தெரிவிப்பது இயல்பானதே என கேரள முதல்வர் அச்சுதானந்தன் தில்லியில் நிருபர்களிடம் கூறினார்.
Posted in Achuthananthan, Agitation, Ban, Coke, Communist, CPI, destroy, High Court, Kerala, Pepsi, Soft Drinks, Tamil | Leave a Comment »