நாளிதழ் அலுவலகத் தாக்குதலில் 3 பேர் இறந்தது எப்படி?
மதுரை, மே 10: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் தீயில் சிக்கி 2 பொறியாளர்களும், காவலாளியும் புதன்கிழமை உயிரிழந்தனர்.
கம்ப்யூட்டர் பொறியாளர்கள்
- வினோத்குமார் (26),
- கோபிநாத் (25),
- காவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் அலுவலக அறைகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
அவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
வினோத்குமார்: பொறியாளர் வினோத்குமாரின் தந்தை முருகேசன். தாய் பூங்கொடி. மதுரை வானமாமலை நகர் நேரு தெருவில் வசித்து வருகின்றனர்.
முருகேசன் கட்டடங்களுக்கு மார்பிள் போடும் காண்டிராக்ட் தொழில் செய்துவருகிறார்.
கம்ப்யூட்டர் பிரிவில் பி.இ. பட்டம் பெற்ற வினோத்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தம்பி கார்த்திக்பாண்டியன் கேட்டரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
கோபிநாத்: ராமநாதபும் மாவட்டம், சக்கரைக் கோட்டையைச் சேர்ந்த கோபிநாத், கம்ப்யூட்டரில் பி.இ. பட்டம் பெற்றவர். இவரது சகோதரர் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
இவரது தந்தை கோகுலதாஸ் மின்வாரிய உதவிப் பொறியாளராக உள்ளார். தாயார் கோகுலவள்ளி.
இறந்தது எப்படி?: ஊழியர்கள் இறந்ததை நேரில் பார்த்த ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
கருத்துக்கணிப்பு வெளியானதை அடுத்து கும்பல் கும்பலாக வந்த பலர் எங்கள் அலுவலகத்தின் முன் பத்திரிகை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 10 மணிக்கு வந்த கும்பல் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால் பெண் ஊழியர்கள் பலரையும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம்.
பின்னர் 11 மணியளவில் அட்டாக் பாண்டி தலைமையில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை அலுவலகத்தின் வரவேற்பறை, கணினி அறை, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட 6 இடங்களில் வீசினர். இதனால், தீ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக வரவில்லை. போலீஸ் நடவடிக்கையும் தாமதமாக இருந்தது. இதனையடுத்து அலுவலகம் புகையால் சூழப்பட்டது. பலரும் தப்பி வெளியேறினோம். இந் நிலையில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் கோபிநாத், வினோத்குமார் ஆகியோர் தங்கள் அறையில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர்.
தீயணைப்புத் துறையினர் வந்து நீண்ட நேரத்துக்கு பிறகே 2 பேரையும் மீட்க முடிந்தது. காவலாளி முத்துராமலிங்கம் சடலத்தை மாலையில் தான் மீட்கமுடிந்தது என்றனர்.
பலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுஉதவி: கலாநிதி மாறன்மதுரை, மே 10 மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் தீயில் சிக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கும், தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தெரிவித்தார்.மதுரையில் புதன்கிழமை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்குள்ளான தினகரன் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, தாக்குதலில் இறந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும்வரை போராடுவோம். திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், இச் சம்பவம் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது.இது தனிநபர் மீது நடந்த தாக்குதல் அல்ல. பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.கருத்துக் கணிப்பு தேவையில்லை என்ற நோக்கில் முதல்வர் கருணாநிதியே கூறியுள்ளாரே? எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா? என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம்? எனக் கேட்டதற்கு, நீங்கள் (செய்தியாளர்கள்) நினைப்பதைத்தான் நாங்களும் நினைக்கிறோம் எனப் பதிலளித்தார் கலாநிதி மாறன்.
இச் சம்பவத்துக்கு மு.க அழகிரியின் தூண்டுதலே காரணம் என, சன் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எம். ரமேஷ் தெரிவித்தார்.
மதுரையில் மறியல்} 7 பஸ்கள் உடைப்பு: மேயர், துணை மேயர் உள்பட 200 பேர் மீது வழக்குமதுரை, மே 10: தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்பது தொடர்பாக தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அரசு பஸ்கள் உள்ளிட்ட 7 பஸ்கள் புதன்கிழமை சேதப்படுத்தப்பட்டன.இது தொடர்பாக 7 பேரை போலீஸôர் கைது செய்தனர். மதுரை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் புதன்கிழமை காலையிலிருந்தே மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தினகரன் நாளிதழ்களை எரித்துப் போராட்டம் நடத்தினர்.திமுகவின் 4-ம் பகுதிச் செயலர் எம்.ஜெயராமன் தலைமையில் சுமார் 40 பேர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கூடி அந்த நாளிதழ்களை எரித்தனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 அரசு பஸ்களை கல் வீசியும், கட்டையால் தாக்கியும் சேதப்படுத்தினர்.மேயர் கோ.தேன்மொழி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் அங்கிருந்த பஸ்ûஸ கல் வீசித் தாக்கி சேதப்படுத்தினர். உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற மறியல் சம்பவத்தில் தனியார் பஸ்ûஸயும், அரசு பஸ்ûஸயும் சிலர் சேதப்படுத்தினர்.இதேபோல், மணிநகரத்தில் திமுக பிரமுகர் சரவணன் தலைமையிலும், கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே 1-ம் பகுதிச் செயலர் ரவிச்சந்திரன், மகால் பகுதியில் தொண்டர் அணி அமைப்பாளர் வி.பி.பாண்டி தலைமையிலும், நேதாஜி சிலை அருகே 38-வது பகுதிச் செயலர் கே.பி.செல்வம் தலைமையிலும் மறியலில் ஈடுபட்டனர்.
மதுரையில் முனிச்சாலை, விரகனூர் சுற்றுச்சாலை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடைபெற்றது.
இதனால் ஆங்காங்கே கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மதுரை போலீஸ் கமிஷனர் ஏ.சுப்பிரமணியன் கூறியது: பல்வேறு இடங்களில் நாளிதழ்கள் எரிப்பு மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்ட மதுரை மேயர், துணை மேயர், சில கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்கட்ட நடவடிக்கையாக மதுரை நகரில் 7 பேரையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 பேரையும் கைது செய்துள்ளோம். மேலும், நகரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
It all started here with Dinakaran – Sun TV Network’s Survey Results from AC Nielsen
கலைஞரின் அரசியல் வாரிசு யார்? கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு தமிழக அளவில் 70 சதவீதம் மக்கள் மு.க.ஸ்டாலின் என்று பதிலளித்துள்ளனர். மு.க.அழகிரி என்று 2 சதவீதம் பேரும், கனிமொழி என்று 2 சதவீதம் பேரும் பதில் அளித்தனர். 20 சதவீத மக்கள் வேறு பெயர்களை பதிலாக தெரிவித்தனர். 6 சதவீதம் பேர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.“ஸ்டாலின்தான் கலைஞரின் அரசியல் வாரிசு’’ என அதிகம் பேர் சொல்லியிருப்பது
- கோவை பகுதியில்தான். அங்கு 78 சதவீத மக்களிடம் இந்தக் கருத்து காணப்படுகிறது. அதனையடுத்து
- வேலூர் பகுதியில் 77 சதவீதம் பேரும்,
- திருச்சி பகுதியில் 71 சதவீதம் பேரும் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். மாநில சராசரியை விட சற்று குறைவாக
- சென்னையில் 68 சதவீதம் பேர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டனர்.
- மதுரையில் இந்த சதவீதம் 67 ஆக,
- புதுச்சேரியில் 65 ஆக உள்ளது.
- சேலத்தில் 61%.
“அரசியல் வாரிசு அழகிரி’’ என்று கூறியிருப்பவர்கள் எண்ணிக்கை
- மதுரையை விட நெல்லையில் அதிகமாக இருக்கிறது.
- மதுரையில் 6 சதவீதம் பேரும்
- நெல்லையில் 11 சதவீதம் பேரும் அழகிரி பெயரை சொல்லியிருக்கிறார்கள்.
- புதுச்சேரியில் 2 சதவீதம் பேரும்,
- வேலூர்,
- கோவை,
- திருச்சி,
- நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தலா 1 சதவீதம் பேரும் அழகிரிதான் கலைஞரின் அரசியல் வாரிசு என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
- சென்னை மற்றும்
- சேலத்தில் அதற்கும் குறைவானவர்கள் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.
“கனிமொழியே கலைஞரின் அரசியல் வாரிசு’’ என்று
- மதுரையில் 5 சதவீத மக்களும்
- சேலத்தில் 4 சதவீதம் பேரும் கூறியிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை
- நெல்லையில் 3 சதவீதமாகவும்
- நாகர்கோவில் பகுதியில் 2 சதவீதமாகவும் இருக்கிறது.
- சென்னை,
- வேலூர்,
- புதுச்சேரி,
- கோவை பகுதிகளில் தலா 1 சதவீதம் பேர் கனிமொழி பெயரை குறிப்பிட்டனர்.
இந்த மூன்று பேரை தவிர வேறு பெயர்களை சொன்னவர்கள் சென்னையில் அதிகம். 31 சதவீத சென்னைவாசிகள் அத்தகைய கருத்து தெரிவித்தனர். சேலத்தில் 23, வேலூர், கோவையில் தலா 19, நாகர்கோவில் பகுதியில் 18, திருச்சியில் 16, புதுச்சேரி பகுதியில் 15 சதவீதம் மக்கள் இவ்வாறு வேறு பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தவர்களில் 33 சதவீதம் பேர் “அரசியலில் அவர் அனுபவசாலி’’ என்ற காரணத்தால் அவரை குறிப்பிட்டதாக சொல்கின்றனர். வேலூர் (40), புதுச்சேரி (38), கோவை (37) சேலம் (35) பகுதிகளில் மாநில சராசரியை விடவும் அதிகமானவர்கள் ஸ்டாலினின் அரசியல் அனுபவத்தை காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர். சென்னை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் தலா 32 சதவீதம் பேரிடம் இதே கருத்து வெளிப்பட்டது. “கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகளை வகித்திருப்பது ஸ்டாலினுக்குரிய பிளஸ் பாயின்ட்’’ என்று பெரும்பாலானவர்கள் சுட்டிக்காட்டினர்..
சிறப்பாக செயல்படும் மத்திய அமைச்சர்கள் யார்? தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் மிகவும் சிறப்பாக செயல்படுபவர் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
- தயாநிதி மாறன் என்று தமிழக அளவில் 64 சதவீத மக்கள் கூறியுள்ளனர்.
- 27 சதவீத மக்கள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.
- கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு பெயரை 7 சதவீதம் பேர் தேர்வு செய்தனர்.
- ஒரு சதவீதம் பேர் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பெயரை குறிப்பிட்டுள்ளனர்.
- வேலூரில் அதிகபட்சமாக 79% பேர் எங்கள் சாய்ஸ் தயாநிதி மாறன் என கூறியுள்ளனர்.
- சேலம்,
- கோவையில் தலா 73 சதவீதம் பேரும்,
- சென்னையில் 61 சதவீதம் பேரும் சிறந்த அமைச்சராக தயாநிதி மாறனை தேர்வு செய்துள்ளனர்.
- புதுச்சேரியில் 67%,
- திருச்சி,
- மதுரையில் தலா 58%,
- நாகர்கோவிலில் 57%,
- நெல்லையில் 53% பேர் தயாநிதி மாறன் மிகச் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.
அமைச்சர் சிதம்பரம் நன்றாக செயல்படுகிறார் என்று
- மதுரையில் 36 சதவீதம் பேரும்
- சென்னையில் 24 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
டி.ஆர்.பாலுவின் செயல்பாடு நன்றாக இருப்பதாக தெரிவித்தவர்கள்
- திருச்சி,
- நாகர்கோவிலில் தலா 12%.
- சென்னை மக்களில் 11 சதவீதம் பேர் பாலு சிறப்பாக செயலாற்றுவதாக கூறினர்.
- நெல்லை 9%,
- சேலம்,
- மதுரை தலா 4%,
- புதுச்சேரி 3%.
சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் செயல்பாடு பிடித்திருப்பதாக
- புதுச்சேரி பகுதியில் 4 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர்.
- சென்னையில் இந்த கருத்து கொண்டிருப்பவர்களின் சதவீதம் 2.
- வேலூர்,
- திருச்சி,
- நெல்லையில் தலா 1 சதவீதம்.
- சேலம்,
- கோவை,
- மதுரை,
- நாகர்கோவிலில் யாரிடமும் இக்கருத்து வெளிப்படவில்லை.
- ஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் போனில் பேசும் வசதி,
- செல்போன் கட்டணங்கள் குறைப்பு,
- பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தமிழக வருகை ஆகிய காரணங்களால் தயாநிதி மாறனின் செயல்பாட்டை சிறந்ததென குறிப்பிட்டதாக 73 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
- இளமைத் துடிப்புடன் அவர் செயலாற்றுவது தங்களைக் கவர்ந்ததாக 24 சதவீதம் பேர் குறிப்பிட்டனர்.
இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு சரியான வழி காட்டுகிறார் என்று சிதம்பரம் பெயரை வழி மொழிந்தவர்களில் 52 சதவீதம் பேர் கூறினர். நிதித் துறையை அரசியல்வாதி போல் அல்லாமல் நிபுணர்போல அவர் கையாள்வதாக 11 சதவீதம் மக்கள் கருத்து கூறினர்.
அமைச்சர் பாலு பெயரை குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானோர் சேது சமுத்திர திட்டத்தில் அவர் காட்டும் ஈடுபாட்டை காரணமாக கூறினர். சென்னை பகுதியில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவதில் அவரது ஆர்வத்தை சுட்டிக்காட்டினர்.
அமைச்சர் அன்புமணி சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் தங்களை கவர்ந்ததாக தெரிவித்தனர்.
கருணாநிதி பதவி விலக வேண்டும் } விஜயகாந்த்சென்னை, மே 10: மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதலில் மூவர் உயிரிழந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மதுரையில் புதன்கிழமை காலை “தினகரன்’ அலுவலகமும் சன் டி.வி. அலுவலகமும் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் வெளியே வர முடியாமல் மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.அவர்கள் தங்களைக் காப்பாற்ற சொல்லி கூக்குரலிட்டும் யாரும் முன்வரவில்லை. காவல்துறையினர் கைகட்டிக் கொண்டு இருந்தனர். அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களால் மதுரை மாநகரமே வெறிச்சோடி கிடக்கிறது.மதுரை மாநகரில் இவ்வளவு அத்துமீறிய செயல்கள் நடைபெற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அங்கேயே இருந்தும் யாரால் கைகள் கட்டப்பட்டு இருந்தன என்று மக்கள் அறிய விரும்புகிறார்கள்.மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புத் தர வேண்டியது ஒரு அரசின் கடமை ஆகும். தீ பரவாமல் தடுத்திருக்க வேண்டியது தீயணைப்புத்துறையின் கடமையாகும். ஆனால் எல்லாத் தரப்பினரையும் செயலிழக்க வைத்தது எது?
ஏற்கெனவே, மதுரையில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் படுகொலைக்குப் பிறகு மக்கள் நடக்கவே பயப்படுகிறார்கள். இன்றைய வன்முறை வெறியாட்டத்திற்குப் பிறகு மதுரையில் மக்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதோ, அதேபோன்று இந்த படுகொலையிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
தனது குடும்பப் பிரச்சினை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கையைப் போக்க, முதல்வர் கருணாநிதி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: காட்டுமிராண்டித் தனமான இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைத்துறையினருக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன்: மதுரையில் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களின் ஜனநாயக விரோதமான வன்முறை நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையாளர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மு.க. அழகிரி உள்ளிட்டோர் மீது புகார்மதுரை, மே 10: மதுரை தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசி தீவைத்ததில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக முதல்வரின் மகன் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.அழகிரிக்கு ஏற்கெனவே ஒரு வழக்கில் வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்யவேண்டும் என்றும் தினகரன் நாளிதழ் நிர்வாகம் கோரியுள்ளது.முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி 1980 -ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மதுரையில் குடியேறினார். முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனிக்கும் பணியில் ஈடுபட்டார்.இதையடுத்து கட்சியின் தென்மாவட்ட நிர்வாகத்தின் அதிகார மையமாகவும் அவர் விளங்கினார். இந் நிலையில் மூத்த நிர்வாகிகள் சிலருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து மீண்டும் 1984-ல் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றார்.பின்னர் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் மதுரையில் குடியேறிய அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களைத் தொடங்கினார்.இந் நிலையில் தினகரன் நாளிதழில் முதல்வரின் அரசியல் வாரிசு யார்? என வெளியான கருத்துக்கணிப்பில் அழகிரிக்கு 2 சதவிகிதம் மட்டுமே ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இச் செய்தி அவரது ஆதரவாளர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாளிதழைத் தீ வைத்தும், அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக அந் நிறுவனத்தினரே பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.
பத்திரிகை நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலர் மீது ஒத்தக்கடை போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் மூன்று பேர் பலி
தமிழகத்திலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் மீது இன்று நடத்தப்பட்டத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலிருந்து வெளியாகும் தினகரன் நாளிதழின் இன்றைய(புதன்கிழமை) பதிப்பில், தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்த கருத்துக்கணிப்புபின் முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் மதுரையில் 67 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினையும், 6 சதவீதம் பேர் மு.க.அழகிரியையும் குறிப்பிட்டிருந்தனர். இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு மதுரையில் தனது செல்வாக்கை குறைத்துவிட்டதாக அழகிரி அவர்கள் கருதியதாகவும், காலையில் பத்திரிகை வெளியானது முதலே தமது அலுவலகத்திற்கு மிரட்டல்கள் வந்ததாகவும் தினகரன் பத்திரிகையின் மதுரை பதிப்பின் ஆசிரியர் முத்துப்பாண்டியன் தெரிவித்தார்.
![]() |
![]() |
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மதுரை மேயர் |
இதையடுத்து மதுரை மேயர் தேன்மொழி உட்பட அழகிரி அவர்களின் ஆதரவாளர்கள் தமது அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி நடத்தியத் தாக்குதலில் மூன்று ஊழியர்கள் பலியானதாகவும் அவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரில் இருவர் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், ஒருவர் பாதுகாப்பு ஊழியர் எனவும் அவர் கூறினார்.
ஆனால், தாங்கள் எவ்விதமான தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பத்திரிகைகளை மட்டுமே எரித்ததாக தேன்மொழி கூறுகிறார். வன்முறைகள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது எனவும் அவர் கூறுகிறார். இன்றைய சம்பவங்களில் அழகிரி அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பத்திரிகைத துறை மீதான தாக்குதல் என்கிறார் தினகரனின் தலைமை நிர்வாகி
![]() |
![]() |
எரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள் |
சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக் கணிப்பை தினகரன் பத்திரிகைக்காக ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இது பற்றி கருத்து வெளியிட்ட தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ் அவர்கள், ஏ சீ நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பைத்தான் தினகரன் வெளியிட்டது எனக் கூறினார்.
இந்தத் தாக்குதல் தினகரன் பத்திரிகையின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் என்பதனை விட பத்திரிகைத் துறை மீது நடத்தப்பட்டத் தாக்குதலாகத்தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார். மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் எனவும் ரமேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பாக தங்களிடம் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன எனவும் அவர் கூறினார். இந்தியாவில் பல பத்திரிகைகள் கருத்துக் கணிப்பை நடத்தி கருத்துக்களை வெளியிடுவது வழக்கம்தான் என்பதால் இவ்வாறான ஒரு வன்முறை நிகழும் எனத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.
தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் கூறுகிறார்
![]() |
![]() |
இன்றைய வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று |
இன்றைய வன்செயல்கள் கருத்து வெளியிட்ட தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி, இன்று காலையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க நடைபெற்ற மூன்று முயற்சிகளின் போது போலீசார் அவர்களை விரட்டியடித்தனர் எனவும் ஆனால் நான்காவது முறையாக தாக்குதலை நடத்தவந்த கூட்டம் அந்த அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் தெரிவித்தார்.
போலீசார் மீது தவறு இருப்பது தெரியவந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வழக்கு விசாரணையில் இருப்பதால் இந்த வன்செயல்களில் யார் ஈடுபட்டிருந்தார்கள் என இப்போது கூறமுடியாது எனவும் முகர்ஜி கூறினார். நான்காவதாக நடைபெற்ற தாக்குதலில் மதுரை மேயர் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான முக்கிய வழக்கில் மூன்று பேர் பிடிபட்டுள்ளதாகவும், வன்முறை தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 25 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதாகியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தெரிவித்தார்.
தற்போது மதுரையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், வழக்கு விசாரணை சுதந்திரமாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
தனக்கு யார் வாரிசு என்கிற பேச்சுகே இடமில்லை என்கிறார் கருணாநிதி
![]() |
![]() |
தமிழக முதல்வர் கருணாநிதி |
மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி கண்டனம் வெளியிட்டுள்ளார். இத்தகைய தாக்குதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். பலியான ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
திமுக ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரு கட்சி என்றும், எனவே தனக்கு யார் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் தனது அறிக்கையில் ஒரு இடத்தில் கூட அழகிரியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றத் தவறிவிட்ட திமுக அரசை, மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெ ஜெயலலிதா கோரியுள்ளார். மதுரை போலீசார், முதல்வர் கருணாநிதிக்கு கட்டுப்படாமல் அவரது மகன் மு க அழகிரிக்கே கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தினகரன் மீதான தாக்குதலை சி பி ஐ விசாரிக்கும்; கருணாநிதி
தினகரன் நாளிதழ் தாக்குதல் குறித்து சி பி ஐ என்ற மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை தமிழக அரசு கோரும் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்தார்.
கருணாநிதியின் அரசியல் வாரிசு .யார் என்பது பற்றிய கருத்துக் கணிப்பு முடிவுகள் தினகரன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டதை அடுத்து மதுரையில் புதன்கிழமை பிரச்சினை உருவானது. வெறும் 2 சதவீத மக்களே கருணாநிதியின் மகனான அழகிரிக்கு ஆதரவு அளித்ததாக இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டது.
இதனால் கொதிப்படைந்த சிலர், மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தை தாக்கினர். இதில் அங்கு பணிபுரிந்து வந்த 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தப் பிரச்சனையில் தனது குடும்பம் சம்மந்தப்பட்டுள்ளதால், இதை தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு பதிலாக மத்திய அரசின் சி பி ஐ விசாரணை நடத்தும் என்று குறிப்பிட்டார்.
அதே நேரம், தனது யோசனையையும் மீறி தேவையில்லாத கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு தினகரன் நாளிதழ்தான் குழப்பத்துக்கு வழிவகுத்ததாக முதல்வர் தெரிவித்தார்.
தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக கோரியுள்ள நிலையில், அக் கட்சியைச் சேர்ந்த ஜெயகுமார், இது குறித்து பேசுகையில் குடும்பமும், உள் துறையும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலல்ல – ஞானி
![]() |
![]() |
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஸ்டாலினும், அழகிரியும் |
தினகரன் பத்திரிக்கையின் மீதான தாக்குதல் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் அல்ல குடும்பத்துக்குள் நடக்கும் ஆட்சி அதிகாரப் போட்டியின் விளைவு என்று அரசியல் விமர்சகர் ஞானி தெரிவித்தார்.
இதை கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று காட்டுவது, திமுகவின் அதிகார மையங்கள், தங்களின் அதிகாரப் போட்டிக்காக எத்தகைய கருவியையும் கைகொள்ளவார்கள் என்பதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று முதல்வர் மு கருணாநிதி கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்று குறிப்பிட்ட ஞானி, மாவட்ட அளவில் கூட திமுகவினர் தங்களின் வாரிசுகளை பதவிகளுக்கு கொண்டு வருவதாகக் கூறினார்.
மு க ஸ்டாலின் படிப்படியாக கொண்டுவரப்பட்டார் என்றால் தயாநிதி மாறன் எவ்வித அரசியல் கள அனுபவமும் இல்லாமல் நேரடியாக அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு மத்திய அமைச்சராக்கப்பட்டார் என்றும் ஞானி குறிப்பிட்டார்.
![]() |
|
இந்தப் பிரச்சனையில் சி பி ஐ விசாரணை என்பது அபத்தமானது என்று கருத்து வெளியிட்ட ஞானி, ஒரு குற்றத்தை யார் செய்தார்கள் என்பது குறித்து புலனாய்வு செய்ய முடியாத நிலையில் இருக்கும் பட்சத்திலோ அல்லது மாநில காவல் துறை நம்பகத் தன்மையை குறைந்து போய்விட்ட நிலையிலோதான் சி பி ஐ விசாரணை கோரப்படும் என்று அவர் கூறினார்.
தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்?: கைதானவர் வாக்குமூலம் மேலூர், மே 11: மதுரை தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணத்தை அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் புதன்கிழமை தாக்கப்பட்ட சம்பவத்தில் கைதான மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த பாட்ஷா (41) போலீஸôரிடம் அளித்துள்ள வாக்குமூலம் விவரம்:”நான் கீரைத்துறையில் வசித்து வருகிறேன். அட்டாக் பாண்டியிடம் மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் டிரைவராகப் பணிபுரிகிறேன்.அண்ணன் அழகிரியிடம் அட்டாக் பாண்டி மிக நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். 9.5.2007-ல் தினகரன் நாளிதழில் மக்கள் மனசு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவும், எங்கள் தலைவருக்கு ஆதரவே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது மிகுந்த வேதனை அளித்தது.
அதனால் அட்டாக் பாண்டியும் நீண்ட மனவேதனை அடைந்தார். தினகரன் பத்திரிகை அலுவலகத்தை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகத்தில் அங்கு சுமோ காரில் சென்றோம். எங்கள் பின்னால் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.
அங்கு பெட்ரோல் குண்டுகளை வீசி, அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தோம். வாகனங்களைத் தீயிட்டோம். பின்னர் கூட்டம் திரண்டதால் தப்பி ஓடிவந்து ரிங் ரோடு அருகே மறைந்து இருந்தோம்.
அதற்குப் பிறகுதான் 3 ஊழியர்கள் இறந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு என்ன நடக்கிறது என அறிய ரிங் ரோடு வழியாக காரில் வந்தபோது போலீஸôர் எங்களைக் கைது செய்து காரையும் கைப்பற்றினர்’ என்று போலீஸôரிடம் கூறியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
மு.க.அழகிரி பேட்டி:கருத்து கணிப்பில் என் பெயரை சேர்த்திருக்கவே கூடாது. கருத்து கணிப்பில் அமைச்சர்களைப் பட்டியலிட்டனர்; அவர்களின் செல்வாக்கை சொன்னார் கள். அது ஒருவகை ஒப் பீடு. ஆனால், இப்போது தம்பி ஸ்டாலின் அமைச்சராக இருக்கிறார்; நான் அமைச்சராகவா இருக் கிறேன்? இல்லையே!
நான் அவர் இடத்துக்கு வரவேண்டும் என என்றைக் காவது நினைத்திருக் கிறேனா? அதுவும் இல்லை. பதவிக்கு வர ஆசைப்படுபவனல்ல நான். அப்படி ஒதுங்கியிருக்கும் என்னை, ஏன் வீணாக இழுத்திருக்கின்றனர் என்பது தான் என் கேள்வி, ஆதங்கம் எல்லாம்…
தினகரன் அலுவலகம் மீது தாக்குதல் செய்தி விவகாரம்
‘தமிழ் முரசு’ மீது உரிமை மீறல்
சென்னை, மே 15: தமிழ் முரசு நாளிதழ் மீது உரிமை மீறல் பிரச்னையை, காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று கொண்டு வந்தனர். இதை உரிமைக் குழுவுக்கு பேரவைத் தலைவர் அனுப்பி வைத்தார்.சட்டப் பேரவையில் தமிழ் முரசு நாளிதழ் மீது, உரிமை மீறல் பிரச்னையை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஞானசேகரன், ஜெயக்குமார், இஎஸ்எஸ்.ராமன், கோவை தங்கம் ஆகியோர் எழுப்பினர்.
இதில், ஞானசேகரன் பேசியதாவது:
பத்திரிகைகளுக்கு நாங்கள் மதிப்பும், மரியாதையும் கொடுக்கிறோம். பேரவையில் சொல்லப்பட்ட கருத்தை அடிபிறழாமல் அப்படியே பத்திரிகையில் போட வேண்டும். சொல்லப்பட்ட கருத்தை திரித்து வெளியிடக் கூடாது.
கடந்த 9ம் தேதி மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த வன்முறையின் போது, தீ வைக்கப்பட்டதில் புகையில் சிக்கி 3 பேர் இறந்தார்கள்.
இது பற்றி அனைத்துக் கட்சியினரும், பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து 10ம் தேதி பேசினர்.
அப்போது முதல்வர் பதிலளிக்கையில்
“இந்த சம்பவத்தில், என் குடும்பத்தையும் சம்பந்தப்படுத்தி இருப்பதால், மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும்”
என்று அறிவித்தார்.
ஆனால், அன்றைய தமிழ் முரசு பத்திரிகையில்
“அழகிரி நடத்திய படுகொலைகள், சிபிஐ விசாரிக்கும், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு”
என்று செய்தி வந்துள்ளது.
அதே செய்தியின் லீடில்
“மதுரை தினகரன் அலுவலகத்தில் அழகிரி ஏவி விட்ட ரவுடி கும்பல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று தெரிவித்தார்”
என்று செய்தி வந்துள்ளது.
இது குறித்து முதல்வர் சொன்ன பதில் மட்டுமே வந்திருக்க வேண்டும். அது திரித்து சொல்லப்பட்டுள்ளது. இதற்கு நீதி வேண்டும். எங்கள் உரிமையையும் பேரவை உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்ற வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஞானசேகரன் பேசினார்.
இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், Ôமேலெழுந்த வாரியாக பார்க்கையில் இந்த பிரச்னையில் உரிமை மீறல் இருப்பது தெரிகிறது. எனவே, இதனை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன்Õ என்றார்.
அமைச்சர் பொன்முடி பேசியதாவது:என் வீட்டிற்கு இன்று (நேற்று) மதியம் செல்வம் வந்தார். அவர் என்னிடம் “தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் விபரீதம் உண்டாகும். உங்கள் நண்பர் ஸ்டாலினுக்காக கட்சியை விட்டு விடாதீர்கள். தயாநிதி சாதாரணமான ஆள் இல்லை. எல்லா மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க அவர் காரணமாக இருந்தார். அதை யாரும் மறந்து விடக் கூடாது. அவர் மீது தவறான முடிவு எடுத்தால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும். தயாநிதி என்ன தவறு செய்தார். கட்சிக் கட்டுப்பாட்டை அவர் எங்கே மீறினார்.
- கருத்துக் கணிப்பு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கலாம். ஏன் கலவரத்தை நடத்த வேண்டும்.
- தி.மு.க.,வில் அழகிரி என்ன பொறுப்பில் இருக்கிறார். கட்சியில் அவர் வட்ட செயலரா? அல்லது மாவட்டச் செயலரா?
- அவருக்கு எந்த பொறுப்பும் இல்லாத போது அவருக்கு ஏன் கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது’
என்று கேட்டார்.இதுமாதிரியான எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் தி.மு.க., பயப்படாது. தயாநிதியை கட்சியிலிருந்து நீக்குவோம்,” இவ்வாறு பொன்முடி பேசினார்.
மதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
மதுரை, ஆக. 7: தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 ஊழியர்கள் இறந்தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக “அட்டாக்’ பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர்.
இவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண்டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.
முதல்வர் விருந்து: அதிமுக, மதிமுக பங்கேற்கவில்லைசென்னை, மே 10: சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி புதன்கிழமை இரவு அளித்த விருந்தில், அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.ஆண்டுதோறும் பட்ஜெட் விவாதம் முடிவடையும் போது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் விருந்து அளிப்பது வழக்கம்.இதன் அடிப்படையில், புதன்கிழமை மாலை உறுப்பினர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.இதில் அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
- காங்கிரஸ்,
- பாமக,
- விடுதலைச் சிறுத்தைகள்,
- இந்திய கம்யூனிஸ்ட்,
- மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அனைத்துத்துறை செயலர்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.
விருந்தில்
- சிக்கன் பிரியாணி,
- மீன் வறுவல் மற்றும்
- தக்காளி ரசம்,
- மோர் குழும்பு,
- பாயசம்,
- குல்பி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.