ரூ. 75 கோடியில் தயாராகும் ரஜினி `அனிமேஷன்’ படம் `ஹரா’: மகள் சவுந்தர்யா இயக்குகிறார்
ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா வெளிநாட்டியில் `அனிமேஷன்’ படித்துள்ளார். `சந்திரமுகி‘, `நியூ‘ உள்ளிட்ட சில படங்களில் கிராபிக்ஸ் காட்சிகளை இவர் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ரஜினியின் முழுநீள `அனிமேஷன்’ படம் ஒன்றை உருவாக்க சவுந்தர்யா திட்டமிட்டுள்ளார். இதற்கான ஆரம்பகட்டப்பணிகளை ஓசையில்லாமல் செய்து வருகிறார்.
இந்த `அனிமேஷன்’ படத்துக்கு ரூ. 75 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முதலீடு செய்ய பிரபல கம்பெனிகள் முன்வந்துள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, போஜ்புரி 18 மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது.
ரஜினியின் நடைஉடை பாவனைகள் 40 நாட்கள் படம் பிடிக்கப்பட்டு அவர் தோற்றத்தில் `அனி மேஷன்’ ஹீரோவை உருவாக்குகிறார்கள். அவர் குரலும் இதில் சேர்க்கப்படுகிறது. சிவாஜி படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தை எடுக்க ரஜினி நேரம் ஒதுக்குகிறார்.
ஆஸ்திரேலியா, ஸ்பெயின், லண்டனில் இருந்து 240 `அனிமேஷன்’ நிபுணர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இவர்கள் சென்னையில் தங்க வசதி செய்யப்படுகிறது. இந்த படத்துக்காக ஜெமினி மேம்பாலம் அருகில் பிரத்யேக அலுவலகம் திறக்கப்படுகிறது. படத்துக்கு கதை வசனம் ரெடியாகிவிட்டது. 18 மொழிகளுக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
ரஜினி அனிமேஷன் படத்துக்கு `ஹரா‘ என்ற பெயர் சூட்ட சவுந்தர்யா முடிவு செய்துள்ளாராம். ஹரிஹரன் என்ற கடவுள் பெயரை ஹரா என்று சுருக்கி சூட்டுகிறார்.