‘இந்தியப் பொருளாதாரம் பத்து ஆண்டுகளில் உலகில் ஐந்தாவது இடத்தைப் பிடிக்கலாம்’- முன்னணி வங்கி கருத்து
![]() |
![]() |
இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தித் துறை உதவியுள்ளது |
பிரிட்டனை முந்திக் கொண்டு, ஒரு தாசாப்த காலத்துக்குள் இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக வந்துவிடும் என்று ஒரு முன்னணி முதலீட்டு வங்கி கூறுகிறது.
தற்போதைய வளர்ச்சி தொடருமானால், 2050 ஆம் ஆண்டில் இந்தியா, அமெரிக்காவையும் முந்திக்கொண்டு சீனாவுக்கு அடுத்ததாக பொருளாதாரத்தில் உலகில் இரண்டாவது இடத்தையும் பிடித்துவிடும் என்று கோல்ட்மான் சாக்ஸின் அறிக்கை கூறுகிறது.
ஒரு தசாப்த கால மறுசீரமைப்பு இந்தியாவை பெரும் போட்டியில் இறக்கிவிட்டுள்ளதுடன், இந்தியாவின் தொழில்துறை மிகவும் செயற்திறன் உள்ளதாக மாறியுள்ளதாகவும் அந்த வங்கி கூறியுள்ளது.
ஆனால் இந்தியாவின் மிகவும் மோசமான உட்கட்டமைப்பு ஏற்கனவே இந்தப் பொருளாதார வளர்ச்சியுடன் ஒத்துழைக்க முடியாமல் தடுமாறுவதால், இந்தியா பொருளாதாரத்தில் பிந்தங்கக் கூடிய சாத்தியமும் இருப்பதாக டில்லியில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.