தமிழக அரசு ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் அதிகரிப்பு: ஆண்டு விடுமுறை மொத்தம் 22 நாட்கள்
அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடந்த ஆட்சியில் 2004-ம் ஆண்டு முதல் அரசு அலுவலர்களுக்கான விடுமுறை நாட்களை ஆண்டு ஒன்றுக்கு 22 நாட்களில் இருந்து 17 நாட்களாகக் குறைக்கப்பட்டது,
இதனால் சில பண்டிகைகள் மற்றும் மத விழாக்களுக்கான விடுமுறைகள் வழங்கப்படாததால் பல்வேறு சங்கங்களின் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையேற்று, கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டிருந்த பின்வரும் விடுமுறை நாட்களை மீண்டும் விடுமுறை நாளாக கருதப்படும் என்று முதல் – அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் விடுமுறை ரத்து செய்யப்பட்டு தற்போது விடுமுறை நாட்களாக கூடுதலாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நாட்கள் வருமாறு:-
1. ஜனவரி 1 -ந் தேதி – புத்தாண்டு தினம்.
2. ஜனவரி 17 -ந் தேதி – உழவர் திருநாள்.
3. மார்ச் 19 – ந் தேதி – தெலுங்கு புத்தாண்டு தினம்.
4. மார்ச் 31 – ந் தேதி – மகாவீர் ஜெயந்தி.
5. ஏப்ரல் 1 – ந் தேதி – மிலாது நபி.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.