கட்டேகி சப்ஜி
Posted by Snapjudge மேல் மார்ச் 12, 2009
ஆர். லக்ஷ்மி,
கொல்கத்தா – 29
கட்டேக்கு தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு – 100 கிராம்
- பனீர் துருவல் – 75 கிராம்
- பொடிதாக நறுக்கிய வெங்காயம் – 50 கிராம்
- வெண்ணெய் – 25 கிராம்
- ஓமம், சோம்பு – லீ டீஸ்பூன்,
- மிளகாய்த்தூள் – லீ டீஸ்பூன்,
- உப்பு – ருசிக்கு
- சர்க்கரை – லீ டீஸ்பூன்
- வறுத்துப் பொடித்த நிலக்கடலை – 2 டீஸ்பூன்
கிரேவிக்கு
- வெங்காயம் – 100 கிராம்
- தக்காளி – 50 கிராம்
- கசகசா – 1 டீஸ்பூன்
- தேங்காய்த் துருவல் – லீ கப்
- இஞ்சி, பச்சை மிளகாய் – சிறிதளவு
- மிளகாய்த் தூள் – லீ டீஸ்பூன்
- சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
- எண்ணெய் உப்பு, மஞ்சள் தூள் – தேவைக்கு
- புளிக்காத கட்டித்தயிர் – லீ கப்
- கொத்தமல்லித் தழை – சிறிது
செய்முறை:
- வெண்ணெயை இளக்கி,
- மசாலா சேர்த்து,
- வெங்காயத்தைப் போட்டு வதக்கி பின்
- கோதுமை மாவைச் சேர்த்து நன்றாகக் கிளறி
- ஆற விடவும்.
- பின் பனீர்துருவல், கடலைப்பொடி சேர்த்துப் பிசைந்து
- சிறு உருண்டைகளாக உருட்டி
- ஆவியில் வேக வைக்கவும்.
- வெங்காயத்தை ஒரு குச்சியில் செருகி,
- இளம் தீயில் பதமாகக் காட்டவும்.
- வெந்ததும் தோல் உரித்து,
- எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
- வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, தாளித்து,
- அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இரண்டு கப் தண்ணீர் விட்டு,
- உப்பு சேர்த்துக்
- கொதிக்க விடவும்.
- கொதிக்கும் போது, உருண்டைகளை மெள்ள சேர்க்கவும்.
- அடுப்பை சிம்மில் வைத்து உருண்டைகள் கலையாமல் மெள்ள கிளறிக் கொடுக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து தயிரைச் சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.
கொத்த மல்லி, கரம் மசாலா தூவி கிளறிப் பரிமாறவும்.
சப்பாத்தி, பூரிக்கு சுவையான சைட் டிஷ்.
மறுமொழியொன்றை இடுங்கள்