- இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக ஜெயலலிதா 24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.
- இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக 1985-ல் செங்கல்பட்டில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். அதே பிரச்னைக்கு இப்போதும் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.
- முதல்வராக இருந்தபோது 1994-ல் காவிரி பிரச்னைக்காக மெரினா கடற்கரையில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அமைச்சர்கள் வந்து சமாதானம் செய்ததை அடுத்து போராட்டத்தை அவர் விலக்கிக் கொண்டார்.
Archive for மார்ச் 10th, 2009
List of fasts by AIADMK leader Jayalalitha Jeyaram
Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2009
Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: ADMK, AIADMK, Amma, Eelam, Eezham, Fast, GoSL, Jaya, Jayalalitha, Jeya, Jeyalalitha, JJ, LTTE, Satyagraha, SL, Sri lanka, Violenece | Leave a Comment »
Nielsen ORG Marg survey gives AP to Congress: Chiru gets only 30-35 seats: Andhra Pradesh Assembly Poll Surveys
Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2009
ஆந்திர சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கருத்துக்கணிப்பில் தகவல்
நகரி, மார்ச்.10-
ஆந்திர சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்து இருக்கிறது.
ஆந்திர சட்டமன்ற தேர்தல்
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது. இந்த தேர்தல் ஏப்ரல் 16, மற்றும் 23-ந் தேதிகளில், இரு கட்டமாக நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணி ஏதும் இன்றி தனியாக போட்டியிடுகின்றன. மார்க்சிஸ்டு, இந்திய கம்ïனிஸ்டு, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து, ஓரணியாக போட்டியிடுகின்றன.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
கருத்து கணிப்பு
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி நீல்சன் ஓ.ஆர்.ஜி. அமைப்பு, என்.டிவி.யுடன் இணைந்து, மக்களிடம் கருத்துக்களை கேட்டு, அதன் முடிவுகளை அறிவித்து இருக்கிறது.
அதன்படி, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களை கைப்பற்றி, மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
காங்கிரசுக்கு 155 இடங்கள்
மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சிக்கு 155 முதல் 169 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும், தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 92 முதல் 110 இடங்களும், சிரஞ்சீவியின் கட்சிக்கு 30 முதல் 35 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பு கூறுகிறது.
தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக்கு 4 முதல் 6 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
வட ஆந்திர பகுதியில்
காங்கிரஸ் கட்சிக்கு, வட ஆந்திர பகுதி எனப்படும் கடற்கரை பகுதியில் மட்டும் 77 முதல் 88 தொகுதிகளும், ராயல சீமா பகுதியில் 35 முதல் 41 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ராயல சீமா பகுதியில் தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 13 முதல் 15 இடங்களும், சிரஞ்சீவியின் கட்சிக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. வட ஆந்திர பகுதியில் தெலுங்கு தேசம் கூட்டணி 20 முல் 24 தொகுதிகளிலும், சிரஞ்சீவியின் கட்சி 21 முதல் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்றும் கருதப்படுகிறது.
Posted in India | குறிச்சொல்லிடப்பட்டது: Andhra, AP, Chiranjivi, Chiru, Congress, Naidu, PR, Praja Rajjiyam, Praja Rajyam, Prajaa Rajiyam, Rao, Reddy, Sirancheevi, TDP, YSR | Leave a Comment »
The former chief of the Swadeshi Jagran Manch, Muralidhar Rao appointed adivser to BJP chief Rajnath Singh
Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2009
பாஜக தலைவரின் ஆலோசகராக முரளீதர் ராவ் நியமனம்
புது தில்லி, மார்ச் 9: பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஆலோசகராக முரளீதர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ் கொள்கைகளில் அதீத ஈடுபாடு கொண்ட முரளீதர் ராவ், சுதேசி ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராவார்.
ஏற்கெனவே பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஆலோசகராக பிரபாத் ஜா உள்ளார், அவருடன் இணைந்து முரளீதர் ராவும் ஆலோசகராக செயல்படுவார் என பாஜக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக கடந்த மாதம் சேர்க்கப்பட்ட முரளீதர் ராவ், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் கட்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்.
மேலும் பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மிக நெருங்கிய சகாவாக விளங்கிய சுதன்ஷு மிட்டல், தற்போது பாஜகவின் வடகிழக்கு மாநிலங்களின் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்துடன் எஸ்.எஸ். அலுவாலியாவுக்குத் தேவையான உதவிகளையும் இவர் மேற்கொள்வார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் கண பரிஷத் கட்சியுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக உடன்பாடு எட்டுவதில் சுதன்ஷு, மிகச் சிறந்த பணியாற்றியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: Advani, BJP, Congress, Elections, Polls, RSS, VHP | Leave a Comment »